Search This Blog

14.10.12

ராஜராஜன் ஆரிய அடிமை?


தினமலர் நாளிதழில் +2 தமிழ் முதல்தாள் பொதுத் தேர்வுக்கான மாதிரி வினா - விடை வெளியாகியுள்ளது (10.10.2012) அதில் இராஜராஜசோழனின் வில் ஒரு அம்பினை விடுத்து பெருங்கடலே வற்றும் படிச் செய்தது என்றும், அவனது வாள் காவிரி ஆறு சோழ நாடு செல்வதற்காக சைய மலையை வெட்டி வழி விட்டதோடு, வானத்தில் அசைந்த அசுரர்களின் நகரத்தையே அழித்தது என்றும் குறிப்பிடப்பட் டுள்ளது.

ஆரியர்களின் கற் பனைப் புராணங்களில் கற்பிக்கப்படும் கதாநாய கர்களுக்கு வேண்டுமா னால் அறிவுக்குப் பொருந் தாத அற்புதங்களை கட்டுக் கதைகளாக எழுதியிருக்கலாம். மேக வாயு வாஸ்திரம், சித்து முதலிய ஜாலங்களை சலங்கைகட்டி ஆட விட்டிருக்கலாம். இராமன் எறிந்த அம்பு அனுமான் எறிந்த மலைகள் என்று அபத்தமான கதையளக் கலாம்; பக்திப் போதை ஏறியோர் அவற்றைப் பாயா சம் என்றும் பருகலாம்.

இராஜ ராஜசோ ழனோ கற்பனைப் புராணப்  பாத்திரம் அல்ல. வாழ்ந்த வரலாற்று மனிதன்; அத்தகு ஒருவனைப் பற்றிப் பேசும் பொழுதும் எழுதும் பொழுதும் அறி வுக்குப் பொருந்துப வற்றை உண்மையான வற்றை உள்ளது உள்ளபடி எழுத வேண்டாமா?

பாடத் திட்டத்தில் இப்படி அபத்தமாக எழுத லாமா? இதனை எழுதி யவர் யார்? மேற் பார்வை செய்வோர்கள் யார்? இதுபோல இன்னும் என்னென்ன ஓட்டைகள் பாடப் புத்தகத்தில் புகுந்துள்ளனவோ என்று தெரியவில்லை.
மன்னன் இராஜ ராஜன் ஆரிய அடிமை தான். அருண்மொழி தேவன் என்ற அழகு தமிழ்ப் பெயரை மாற்றி ராஜராஜன் என்று சமஸ் கிருத சாணத்தை சந் தனம் என்று எண்ணி அள்ளிப் பூசிக் கொண்ட வன்தான்.

இறையிலி மங்கலங் களைப் பார்ப்பனர்களுக் குக் கண்களை மூடிக் கொண்டு வாரி வழங் கியவன் தான். மங்கலம் என்றுவரும் ஊரின் பெயர்கள் எல்லாம் ராஜ ராஜன் பார்ப்பனர்க ளுக்கு வழங்கிய கிராமங் கள்தாம்.
நீடாமங்கலம், கதிரா மங்கலம், மாதிரிமங்கலம் மேக்கிரிமங்கலம் என் பவை எல்லாம் இந்தப் பட்டியலில் வரக் கூடியன தான். நான்கு வேதங்கள் படித்திருந்தால் அந்தப் பார்ப்பனர்களுக்கு அளிக் கப்படுவது சதுர்வேதி மங்கலமாகும்.

ராஜராஜன் ஆரிய அடிமை என்பதால் அவன் மீது இந்தப் பாடத் திட்ட கட்டுக் கதைகளும் உள்ளே புகுந்து விட்டனவோ!

ஆனாலும் இதன் பின்னணியை வெளியில் கொண்டு வர வேண்டி யது அவசியமே! 

-------------------------- மயிலாடன் அவர்கள் 14-10-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

34 comments:

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் சட்டம்: தி.மு.க. தலைவர் கலைஞர் கடிதம்


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் சட்டம்:

ஆதிக்க சக்திகளை எதிர்த்து உரிமையை மீட்க வேண்டும்

தி.மு.க. தலைவர் கலைஞர் கடிதம்

சென்னை, அக்.14- அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகராகும் சட்டம் உச்சநீதிமன் றத்தில் முடக்கப்பட் டுள்ளது. அதிலிருந்து விடுவித்து உரிமை களை மீட்க வேண்டும் என்று தி.மு.க. தலை வர் கலைஞர் அவர் கள் இன்று முரசொலி யில் எழுதியுள்ள கடிதம் வருமாறு:

உடன்பிறப்பே,

தி.மு.கழக ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட அனைத்துச் சாதியின ரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் செயல் படுத்தப்படாமல் முடங் கிக் கிடக்கிறது என்று அமெரிக்காவிலிருந்து வெளிவரும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஏடு சுட்டிக்காட்டியுள்ளதை; தமிழாக்கம் செய்து11-10-2012அன்றுவிடுதலை நாளேட்டில் வெளி யிட்டிருக்கிறார்கள்; அதுகுறித்துத் தலை யங்கமும் தீட்டியிருக் கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட பிரிவு சமூகத்தைச் சேர்ந்த தனது தோழர்கள் வந்து வழிபடும் உள்ளூர் தற்காலிகக் கோயில் ஒன்றில் நித்திய சடங்கு களைச் செய்து கொண் டும், மெழுகுவர்த்தி களை விற்றுக் கொண் டும், அக்கோவில் அறங் காவலர்களான கேச வனது தந்தையும் தாத் தாவும் இருந்து வந்தனர். அவர்களின் சாதி எது வாக இருந்தாலும், அதனைப் பற்றிக் கவ லைப்படாமல் அனைத்து சாதி இந் துக்களையும் கோவில் அர்ச்சகர்களாக ஆக்கு வதற்கான பயிற்சியை அளிக்க, தென்னிந்தி யாவின் தமிழ்நாடு அரசு முன்வந்தபோது கேச வன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண் டார். இதற்கான நீண்ட ஓராண்டுப் பயிற்சி முடித்து நான்கு ஆண்டு கள் கடந்தும் கேசவ னும், அவரைப் போன்ற தாழ்த்தப்பட்ட பிரி வைச் சேர்ந்த அர்ச்சகர் பயிற்சி பெற்ற 250 பேரும், இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் பார்ப்பனர் சிலர் இது பற்றி வழக்குத் தொடுத் திருப்பதால், அர்ச்சகர் வேலை இதுவரை கிடைக்காமல் காத் திருக்கின்றனர். இத் தகைய நீண்டகாலத் தாமதமே இந்திய சமூகத் தில் பார்ப்பனர்கள் கொண்டிருக்கும் செல் வாக்கையும் அதிகாரத் தையும் காட்டுவதாகக் கூறுகின்றனர். கோயில் வழிபாடுகளையும், மந்திரங்களையும் சமஸ் கிருதத்தில் செய்யாமல், மாநிலத் தாய்மொழி யான தமிழிலேயே செய்ய வேண்டுமென்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற தாழ்த்தப்பட்டவர்கள் விரும்புவது பாரம் பரியப் பிடிவாதம் கொண்ட பார்ப்பனர் களை மேலும் பதறச் செய்கிறது. - என்று அமெரிக்க ஏடு வெளி யிட்டுள்ளதை, படித்த போது, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் கள் ஆவதற்கு கழக ஆட்சியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், அந்த முயற் சிகளுக்கு ஏற்பட்ட விளைவுகள் ஆகிய நிகழ் வுகளைச் சுற்றி எனது நினைவு சுழல ஆரம் பித்தது.

பெரியாரின் கிளர்ச்சி யும் - திமுக ஆட்சியில் சட்ட நிறைவேற்றமும்

1970ஆம் ஆண்டு, அப்போது கழகம் ஆட் சியில்; தமிழக முதல மைச்சராக நான். அந்த ஆண்டு ஜனவரித் திங்கள், தந்தை பெரியார் அவர் கள் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கப்போவதாக அறிவித்தார்கள். ஆல யங்களில் கர்ப்பக்கிரகம் வரையில் சாதிப் பாகு பாடு இன்றி அனை வரும் சென்று ஆண்ட வனைத் தொழுதிட வேண்டும் என்றும், அனைவருக்கும் சாதி உயர்வு தாழ்வு இன்றி அர்ச்சகராகும் உரிமை வேண்டும் என்றும் வலியுறுத்துவதற்காக அந்தக் கிளர்ச்சி நடை பெறும் என்று பெரியார் போர்முரசு கொட்டி னார். அப்படி ஒரு கிளர்ச்சி நடத்தாமலே, பெரியார் அவர்களின் விருப் பத்தை நடைமுறைக்குக் கொண்டு வரச் சட்டம் இயற்றப்படும் என்று உறுதியளித்து நான், தந்தை பெரியார் அவர் களுக்கு வேண்டுகோள் விடுத்தேன்.

அந்த வேண்டு கோளில், குறிப்பிட்ட வகுப்பினர்தான் அர்ச்ச கராக வேண்டுமென்று யாரும் இந்த நூற் றாண்டில் வாதாடு வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. காலம் வேகமாகச் சுழன்று, மனிதனுக்கு மனிதன் பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்ற கொள்கை வலுப் பெற்று வரும் இந் நாளில், அப்படிப்பட்ட ஒரு பிற்போக்கு எண் ணத்தை யாரும் முரட் டுப் பிடியாக பிடித்துக் கொண்டிருக்க மாட் டார்கள். அர்ச்சகர் களுக்கென ஒரு சில தகுதிகள் இருக்க வேண்டும். அதற்குரிய பயிற்சிகளை அவர்கள் பெற்றாக வேண்டும். அதில் எனக்குக் கருத்து வேறுபாடில்லை. அப்படிப் பயிற்சி பெறுகிறவர் கள் எந்த வகுப்பினராக இருந்தாலும் அவர்கள் அதில் தேர்வு பெற்று அர்ச்சகராக ஆகலாம். இந்த நல்ல நிலை ஏற்பட - ஆலயங்களில் ஆண்ட வன் முன்னே, சாதியின் பெயரால், மற்றவர் களுக்கு இழைக்கப்படும் இழிவான அநீதி அகன் றிட, விதிமுறைகள் செய் திட அரசு முன் வரு கிறது என்ற உறுதி மொழியினை ஏற்று, பெரியார் அவர்கள், திட்டமிட்டிருந்த கிளர்ச்சியினை நிறுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று நான் குறிப் பிட்டிருந்ததை ஏற்றுக் கொண்டு, தந்தை பெரியார் அவர்கள், அவர் நடத்த இருந்த போராட்டத்தைத் தள்ளி வைக்கச் சம்மதித்தார்.

பெரியார் அவர்களுக்கு நான் கொடுத்த உறுதிமொழியினை நிறைவேற்றிடும் வகையில், தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் ஆலோசனையையும் பெற்று, 2-12-1970 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் அர்ச்சகர் சட்டம் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப் பட்டது. அர்ச்சகர் தேர் வில் வெற்றி பெறும் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்துப் பெருமகனும் கர்ப்பக்கிரகத்தில் நுழைந்து ஆண்ட வனைப் பூஜை செய்ய லாம் என்ற உரிமையை வழங்கும் அந்த சட்டத்தைப் புரட்சிகரமான சட்டமென சமத்துவம் விரும்பும் சான்றோர் அனைவரும் பாராட் டினர்.

தமிழ் ஓவியா said...

உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சனாதனிகள்

ஆலயங்களில் நியமிக்கப்படும் அறங் காவலர்களில் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் ஒருவரையும் நியமிக்க வேண்டும் என் பதை மரபாக மட்டுமே கொண்டிருந்த நிலையை மாற்றி; எந்தவொரு ஆலயத்து அறங்காவலர் குழுவிலும் நிச்சயம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் இடம் பெற்றாக வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தமிழக அரசின்அர்ச்சகர் சட்டம் கண்டு வெகுண்ட சமத்துவம் விரும்பாத சனாதனிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். அந்த வழக்கில் 1972ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் நாள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கோயில்களில் அர்ச்சகர்களை நியமிப்பது வகுப்பு வேறுபாடற்ற நடவடிக்கை. அந்த நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிட உரிமை உண்டு. மனுதாரர்களால் தவறு என்று கூறப்படும் இந்தச் சட்டம்,மதசம்பந்தமான நடவடிக்கைகளிலோ, விவகாரங்களிலோ தலையிட வில்லை. எனவே தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் செல்லுபடி யானதே என்று தீர்ப்பிலே கூறப்பட்டிருந்த போதிலும்; அந்தச் சட்டத்தின்படி காரியங்கள் நடைமுறைக்கு வரமுடியாதஅளவுக்கு முடக்கப்பட்டு விட்டன. அதுநடைமுறைக்கு வரவேண்டுமென்றால், அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப் பட வேண்டும்.

இளவல் வீரமணியின் தலையங்கம்
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடிப்படையாக வைத்து திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர், எனது இளவல் கி. வீரமணி அவர்கள், விடுதலையில் அறுவை சிகிச்சை வெற்றி - ஆனால் நோயாளி மரணம் என்று தலைப்பிட்டு அருமையான தலையங்கம் ஒன்றினைத் தீட்டியிருந்தார்.

தமிழ் ஓவியா said...


கழக அரசின் சார்பில், நாம் எவ்வளவோ முயன்றும், அரசியல் சட்டத்தில் தக்க திருத்தம் கொண்டுவரப்படவே இல்லை என்பதைக் கண்டு கொதிப்படைந்த தந்தை பெரியார் அவர்கள், 1973ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில், நாடு தழுவிய ஒரு போராட்டத்தை நடத்தப் போவதாகத் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் அந்தப் போராட்டத்தை நடத்தாமலேயே, 1973ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் பெரியார் அவர்கள் மறைந்துவிட்டார்கள். அர்ச்சகர் சட்டம் முடமாக்கப்பட்டிருந்தநிலையில், அதன் காரணமாகத் தந்தை பெரியார் நெஞ்சில் ஒரு முள்ளோடுதான் மறைந்தார்.

பெரியார் நெஞ்சில் தைத்த முள்!

2006ஆம் ஆண்டு கழக அரசு அமைந்த உடன், தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் தைத்திருந்த அந்த முள்ளை அகற்றும் பணியில் ஈடுபட்டது. சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசித்து, தகுதியும் திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் சாதி வேறுபாடின்றி திருக்கோயில்களில் அர்ச்சக ராகலாம் என 23-5-2006 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து, பழனி, திருச் செந்தூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங் களும்; சென்னை, திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங் களும் தொடங்கப்பட்டன. இப்பயிற்சி நிலையங் களில் மாணவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியன இலவசமாகஅளிக்கப்பட்டன.ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ஒன்றுக்கு 500 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாண வர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் உள்பட மொத்தம் 207 மாணவர்கள் ஓராண்டு கால இளநிலை அர்ச்சகர் சான்றிதழ் பயிற்சியை முடித்து, சான்றிதழ் பெற்றனர்.

2006ஆம் ஆண்டு கழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டு, அது உச்சநீதிமன்றம் வரை சென்றது. வழக்கை விரைவுபடுத்திட கழக அரசின் சார்பில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால், அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக தமிழகத் திருக் கோயில்களில் முறைப்படி நியமனம் செய்து பணி ஆணையை விரைந்து வழங்க இயலாமல் போய்விட்டது.

ஆதிக்க சக்திகள் விரிக்கும் வலை!

இவ்வாறு அனைத்துச் சாதியினரும் அர்ச்ச கர்கள் ஆவதற்கு உருவாக்கப்பட்ட சட்டச் சிக்கல்களைக் களைந்து, பெரியார் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை அகற்றி, ஆரம்ப நோக்கத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேதான்; 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல்கள் வந்தன. தேர்தல்கள் நடைபெற்று, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்குப் பிறகு, அதைப் பற்றி யாரும் அக்கறை எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை; யாருக்காக கழக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டதோ அவர்களும் அது குறித்துக் கவலைப்படுவதாகத் தகவல் இல்லை. ஆதிக்க சக்திகள் விரிக்கும் வலையை அறுத்து அப்பாவி மக்களை மீட்க நாம் கடுமையாக முயற்சிப்பதும்; அதிகாரம் கைமாறியதும், ஆதிக்க சக்திகளின் மாயவலையில் அவர்கள் மாட்டிக் கொண்டு வதைபடுவதும்; தொடர்கதையாக நீண்டு நம் நெஞ்சைத் துளைக்கிறது!

அன்புள்ள,
மு.க.
.

குறிப்பு: மானமிகு கலைஞர் அவர்களின் இந்தக் கடிதம் குறித்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எழுதியுள்ள அறிக்கை நாளை வெளிவரும்.

தமிழ் ஓவியா said...


நெய்வேலியில் முற்றுகை - ஏன்?


தமிழ்நாட்டின் கையிருப்பில் உள்ள மொத்த மின் உற்பத்தி நிறுவுதிறன் 10,365 மெகாவாட். இதில் புனல் மின்சாரத்தின் மூலம் 2,223 மெகாவாட், அனல் மின்சாரத்தின் மூலம் 2,970 மெகாவாட், காற்று மூலமான மின்சாரத்தில் 516 மெகாவாட் நிறுவுதிறனாக உள்ளது.

ஆனால், போதிய மழையின்மையின் காரணமாக, காவிரி நீர்வரத்து தடைப்பட்ட காரணத்தினாலும் நிறுவுதிறனில் 50 சதவிகிதம்கூட உற்பத்தி செய்யமுடியாத அவலநிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளது.

இதைத்தவிர, மத்திய தொகுப்பின் மூலமாக 2,956 மெகாவாட், தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாக 1,180 மெகாவாட், வெளிப்புற உதவியாக 305 மெகாவாட் மற்றும் இதர இனங்களின் மூலமாக 214 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கவேண்டும். ஆனால், தமிழகத்தின் மின் தேவையோ 12,000 மெகாவாட்டாக உள்ளது. இதில் ஏறத்தாழ 4,000 மெகாவாட் முதல் 5,000 மெகாவாட் வரை பற்றாக்குறையாக உள்ளது.

இதில் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் 2000 மெகாவாட் - கூடங்குளத்தில் உற்பத்தியாகத் திட்டமிடப்பட்டது 2000 மெகாவாட் - கல்பாக்கம் அணுமின் நிலைய உற்பத்தியான 340 மெகாவாட்.

இவை முழுமையாக தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் பட்சத்தில், மழை பொழிந்தாலும், பொழியாவிட்டாலும், காற்றடித்தாலும், அடிக்காவிட்டாலும் தமிழ்நாட்டில் மின்வெட்டு அறவே இருக்காதே.

கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு ஆசைப்படும் நிலைமை - பரிதாபம் - அறவே இருக்காதே. இதனை எடுத்துக் காட்டவும் உணர்த்தவுமே - தமிழர் தலைவர் தலைமையில் நாளை என்.எல்.சி. முற்றுகைப் போராட்டம் - தமிழர்களே மின்சாரம் போல் பாய்ந்து எழுக! எழுகவே!!14-10-2012

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்

ஜோதிடர் பலி!

ஆவடியையடுத்த பட்டாபிராம் அணைக் கட்டுச்சேரி எம்.ஜி.ஆர். தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 37) இவர் ஒரு ஜோதிடர்! பெருமாள் கோயில் விழாவுக்கு வந்த யானையின் வாலை ஜோதிடர் கணேசன் பிடித்ததால் யானையடித்து ஜோதிடர் மரணம்! பாவம் ஜோதிடர்தன் பலனை அறிந்திருக்கவில்லையே! கஜேந்திரமோட்சம் என்பது இது தானோ!

ஜோதிடருக்கு விருது

குருவாயூர் ஜோதிடர் கே.கே. நாயருக்கு டெல்லி தமிழ்ச் சங்கம் விருது வழங்கிச் சிறப்பு செய்தது. தமிழ்ச் சங்கம் செய்ய வேண்டிய வேலையா இது! தினமணி வைத்தியநாதய்யர் டில்லி சென்றது இதற்காகத்தானோ!

எப்படி இருக்கு? (முதல் செய்தியையும் கொஞ்சம் இணைத்துப் பார்க்கலாமே!)

ரூபாய் 8 கோடியாம்!

பிரபல இந்தி நடிகை கரீனா கபீர். முதன் முதலாக தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க வருகிறாராம். அதற்காக படம் ஒன்றுக்கு அவர் கேட்கும் கூலி அதிகம் இல்லை. ரூபாய் 8 கோடியாம். உருப்படுமா நாடு? அப்பாவி ரசிகர்கள் இருக்குமட்டும் அவர்கள் காட்டில் மழைதான்.

எங்கே போகிறோம்?

இங்கிலாந்தில் இளவரசர் ஹாரி சமீபத்தில் ஒரு கிளப்புக்கு சென்றபோது நிர்வாணமாக இருந்ததாக நிழற்படம் (போட்டோ) எடுத்து வெளியிடப்பட்டு 15 கோடி பேர் பார்த்தனராம். 500 கோடி ரூபாய் அளவுக்கு விளம்பரம் கிடைத்துள்ளதாம். தேவநாதன் பார்ப்பனர்கள் காஞ்சிபுரத்தில் மட்டுமா - இருக்கிறார்கள்? இங்கிலாந்திலும் இருக்கிறார்கள் என்று அக்ரகாரவாசிகள் ஆறுதல் அடையலாம்.

அதி....காரம்!

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி. விட்டல் ராடியா என்பவர் சுங்கசாவடியில் 80 ரூபாய் கேட்டதற்காக சுங்கச்சாவடி ஊழியரை துப்பாக்கியால் மிரட்டியுள்ளார். இதற்குப் பெயர்தான் அதி...காரப் போதை என்பதோ?

வசூல் மன்னர்கள்

பள்ளி மாணவர்களுக்கு பேருந்துகளில் பயணம் செய்ய இலவச அட்டை (பாஸ்) வழங்குகிறது அல்லவா? சில பள்ளிகள் அந்த அட்டைகளை மாணவர்களுக்கு அளிக்கும் பொழுது ஒவ்வொரு அட்டைக்கும் 25 ரூபாய் வசூல் செய்கிறார்களாம். கடைந்த மோரில் வெண்ணெய் எடுப்பது என்பது இதுதானோ!

ப்பூ... 2 நாள்தானா?

இலங்கையில் சந்தேகப்படும் நபர்களை 2 நாட்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் காவல்துறையினர் விசாரிக்கலாம் - இதற்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் என்பது செய்தி.

திருவாளர் சோ.ராமசாமி, இந்துராம், குருமூர்த்திகளைக் கேட்டுப் பாருங்கள். இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு எவ்வளவு மனிதாபிமானம் பாருங்கள் வெறும் இரண்டே நாள்தான் காவல் துறையினர் விசாரிக்கலாம் என்கிறாரே ராஜபக்சே - அவரைப் போய் குறை சொல்லலாமா என்று எழுதுவார்கள்.

செருப்பு வீச்சாம்!

வடகிழக்கு டெல்லியில் விழா ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற டில்லி முதல் அமைச்சர் ஷீலா தீட்சித்தை நோக்கிக் கூச்சலிட்டனர். விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வை எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். பெண் ஒருவர் செருப்பையும் வீசினார் என்பது செய்தி.

சாலையோரத்தில் வேலையற்றதுகள் - அவர்களின் விழிகளில் விபரீதக் குறி என்ற அண்ணாவின் வசனம்தான் நினைவிற்கு வருகிறது. மெகா திட்டங்களைக் கிடப்பில் போட்டு, வயிற்றுப் பசிக்கு வழி காணப்படவேண்டும் என்பதுதான் இதற்குப் பொருள்? இடையில் ஓராண்டுதான் தேர்தலுக்கு - உஷார்! உஷார்!!

காய்ச்சல்!

டெங்குக் காய்ச்சலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - கலைஞர் குற்றச்சாற்று.
மின்வெட்டுக் காய்ச்சலால் அரசே உறைந்து கெடக்குது.. இந்த லட்சணத்தில் டெங்குக் காய்ச்சலாவது டங்குக் காய்ச்சலாவது! 14-10-2012

தமிழ் ஓவியா said...


மின்சார வாரியம் என்ன செய்கிறது?


கடும் மின்வெட்டால் தமிழ்நாடே காரிருளில் மூழ்கிக் கிடக்கிறது. இந்த லட்சணத்தில் நவராத்திரி என்ற பெயரால் ஊரெல்லாம் எங்கு பார்த்தாலும் சரஸ்வதி, லட்சுமி கட்அவுட்டுகள் - மின்மயமாக ஜொலிக்கின்றன. மின் கம்பத்தில் திருட்டுத்தனமாகக் கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கப்படுவது கண்ணுக்குத் தெரியவில்லையா? மின்வாரியமும், அரசும் என்ன செய்கின்றன? மின்வெட்டால் இருளில் மூழ்கிக் கிடக்கின்றனவா?
14-12-2012

தமிழ் ஓவியா said...


தேவை எச்சரிக்கை!


தமிழ்நாடு தேர்வாணையம் உருவாக்கப்பட்ட காலந்தொட்டு அதன் தலைவராக ஒரு பார்ப்பனர் கூட நியமிக்கப்படவில்லை. முதன் முதலாக அந்த நிலையைத் தகர்த்த சாதனைக்குரியவர்(?) மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா (வாழ்க திராவிட உணர்வும் அண்ணா நாமமும்!)

திறமைக்கே பெயர் போன - பிரம்மாவின் முகத்தில் உதித்தவர் தலைவரான நிலையில் இதுவரை இவ்வளவுப் பெரிய தவறு நடந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு குரூப்-2 தேர்வில் எங்கு பார்த்தாலும், கேள்வித் தாள்கள் வெளியாகின (Out) ஊரே சிரித்தது. ஆனாலும் ஊழலை ஒழிப்பதற்காகவே அவதாரம் எடுத்ததாக சண்டி யர்த்தனம் செய்யும் ஊடகங்கள் (பெரும்பாலும் பார்ப்பனர்கள் கையில்தானே!) இதைப்பற்றி மூச்சு விடவேண்டுமே!

இதற்குமுன் இருந்தவர்கள் ஊழல் செய்தார்கள் என்று சொல்லித்தான் இந்த பிராமணோத்தமர் அந்த இடத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.

இவரின் நிருவாக லட்சணம் பல்லிளித்துப் போய்விட்டது.

8 லட்சத்து 40 ஆயிரம் பேர் மீண்டும் தேர்வு எழுதவேண்டிய அவல நிலை! இதற்கு ஆகும் செலவை யார் கணக்கில் எழுதுவதோ! நடராஜ் அய்யர்களுக்குத்தான் (சிதம்பர ரகசியம் என்றும் கூறலாம்) வெளிச்சம்!!

குரூப் நான்கு தேர்வை நடத்தினார்களே - அதாவது ஒழுங்காக நடத்தப்பட்டதா? தருமபுரியில் எழுதியவர்களுக்கு அளிக்கப்பட்ட வினாத்தாளில் 200 கேள்விகளுக்குப் பதிலாக 105 கேள்விகள் மட்டும்தான் வினாத்தாளில் இடம்பெற்றிருந்தன. பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றம் சென்றதன் காரணமாக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இப்பொழுது அந்தத் தடை நீக்கப்பட்டு, பாதிக்கப் பட்ட 13 பேர்களுக்கு மட்டும் தனித் தேர்வு நடத்தப்பட்டது (ஒரே தேர்வுக்கு இருவகையான வினாத்தாள் என்பதுகூட எப்படி நியாயம்?).

பார்ப்பனத் தலைவரின் தகுதி - திறமை இந்த அளவில்தான் இருக்கிறது. இதே இடத்தில் தாழ்த் தப்பட்டவரோ, பிற்படுத்தப்பட்டவரோ இருந்திருந் தால் எப்படியெல்லாம் தூற்றித் திரிந்திருப்பார்கள் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கட்டும்!

இது இப்படியென்றால், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில் 50 வினாக்களுக்குத் தவறான விடைகள் அளிக்கப்பட்டு இருந்தன. தேர்வு செய்யப்பட்ட வகையிலும் இட ஒதுக்கீடு முறையில் தவறு நேர்ந்திருக்கிறது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் தேர்வை ரத்து செய்துள்ளது. ஆசிரியர்கள் தேர்வு வாரியம் இந்தத் தரத்தில் செயல்பட்டுள்ளது.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் களுக்கான (28,596 இடங்கள்) தேர்விலும் ஏகப்பட்ட குளறுபடிகள் - சென்னை உயர்நீதி மன்றம் தமிழ்நாடு அரசின் பணியமர்த்த ஆணையை ரத்து செய்து விட்டது. அதிலும் இட ஒதுக்கீடு முறை ஒழுங்காகப் பின்பற்றப்படவில்லை என்பது முக்கியமான குற்றச்சாற்றாகும்.

சட்டப்படியான இட ஒதுக்கீட்டு முறையை ஏதோ ஒரு வகையில் பயனற்றதாக்கிட வேண்டும் என்ற சூழ்ச்சி ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

மத்திய தேர்வாணையத்திலேயே திறந்த போட்டியில் இடம் அளிக்கப்படவேண்டியவர்களை இட ஒதுக்கீட்டுப் பிரிவுக்குக் கொண்டு வந்து, திறந்த போட்டிக்குரிய அத்தனை இடங்களையும் உயர்ஜாதிக்காரர்களின் வயிற்றில் அறுத்து வைத்துக் கட்டவில்லையா?

அதனால்தான் திரு. சுதர்சனம் நாச்சியப்பன் அவர்களின் தலைமையில் செயல்பட்ட நாடாளு மன்ற நிலைக் குழு- இட ஒதுக்கீடு முறையில் தவறு செய்பவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரை என்னாயிற்று என்றே தெரியவில்லை.

போராடிப் போராடிப் பெற்ற இட ஒதுக்கீடு முறை சூழ்ச்சிகளால் பறிக்கப்படுகிறது ஒடுக்கப்பட்ட மக்களும், தலைவர்களும் மிகவும் விழிப்புணர் வுடன் இல்லாவிட்டால் பெற்ற உரிமைகளைத் தக்க வைத்துக்கொள்ள முடியாத பரிதாபத்துக்குத் தள்ளப்பட்டு விடுவோம் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

14-10-2012

தமிழ் ஓவியா said...


தெய்வ வாக்கு?


பிற ஸ்திரீகளைத் தாயார் களாக மதிக்க வேண்டும். - - ஜெகத்குரு காஞ்சிகாமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
(கல்கி 7.10.2012)

இந்த அறிவுரை இன்றைய ஜெகத்குரு ஜெயேந்திருக்குப் பொருந் தவே பொருந்தாதா?

தமிழ் ஓவியா said...


தேச பக்தியும் தெய்வ பக்தியும்!

காவிரியில் தண்ணீர்! தமிழனின் வாழ்வில் அதுகண்ணீர்!! பிரதமர் ஆணையிடுகிறார். உச்சநீதிமன்றம் உத்தரவிடுகின்றது. கர்நாடகத்தில் ஒன்றும் பலிக்கவில்லை. ஷெட்டர் அங்கே ஷட்டரை மூடுகிறார். கிருஷ்ணா அபயக்குரல் கொடுக் கிறார். கவுடா கவிழ்ந்து கிடக்கிறார். தேசபக்த திலகங்களெல்லாம் கர்நாடகத் தண்ணீர் கர்நாடகத் துக்கே என்கிறார்கள். அவர்கள் எல்லோரும் தேசிய நீரோட்டம் பேசுகிறார்கள்.

அவர்களின் சொந்தக்காரர்கள் தமிழ் நாட்டிலும் இருக்கிறார்கள். அவர்களும் வந்தே மாதரம் என் கிறார்கள். இவர்களும் வந்தேமாதரம் என்கிறார்கள். அவர்களும் பாரத் மாதாகீ ஜெய் என்கிறார்கள். இவர்களும் பாரத் மாதாகீ ஜெய் என்கிறார்கள். அவர்களும் தேசபக்தி; தெய்வபக்தி என்கிறார்கள். இவர்களும் தேசபக்தி; தெய்வபக்தி என்கிறார்கள்.ஆனால் எந்ததேசம்? எந்தமாதா? எந்த தெய்வம்? என்பதுதான் தெரியவில்லை. அங்கே இருப்பவர்களிடம் உணர்வு இருக் கிறது. இங்கே இருப்பவர்களிடம் என்ன இருக்கிறது. இன்னும் எவ்வளவு நாளைக்கு வந்தே மாதரத்தையும் பாரதமாதாவையும் சொல்லி ஏமாற்றுவார்களோ தெரிய வில்லை.

எல்லோரும் ஒரு விசயத்தை வசதியாக மறைத்துவிடுகிறார்கள். அங்கே உள்ளவனும் பிள்ளையாரை நம்புகிறான்; இங்கே உள்ளவனும் பிள்ளையாரை நம்புவதாக சரடு விடுகிறான். இவர்கள் அனைவரும் புராணங்களை நம்புகிறார்களோ இல்லையோ மற்றவர்களை நம்பச் சொல்கிறார்கள்.இவர்கள் சொல்லும் பிள்ளையார் புராணம் திருவிளை யாடல் புராணம் எல்லாம் பிள்ளை யார்தான் காவிரியைத் தமிழ் நாட்டுக்குக் கொண்டுவந்தவர் என்கிறது. எப்படி? பரமசிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம். எங்கே? உலகத்தின் வடகோடி(?)யான கைலாயத்தில். அந்தக் கல்யாணத்தைக் காணமுப் பத்து முக்கோடிதேவர்கள் நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகள் கின்னரர்கிம்புருடர் அஷ்டதிக்குப் பாலகர்கள் நந்தி நாரதர் எல்லோரும் ஒரு இடத்தில் குவிந்துவிட அந்த பாரம் தாங்காமல் தென்கோடி(?) யானகன்னியாகுமரி உயர்ந்து வட கோடியான இமயமலை தாழ்ந்து விட்டதாம் தராசுத்தட்டு மாதிரி (உலகம்). இதனால் பயந்துபோன முனிவர்கள் ரிஷிகள் தேவர்களெல் லாம் பரமேஸ்வரனிடம் முறையிட பரமேஸ்வரன் கட்டைவிரல் உயர முள்ள அகத்தியனை அனுப்பிசமப் படுத்தச் சொன்னானாம். அவன் சிவன் தலையில் அமர்ந்துள்ள அவனின் வைப்பாட்டி கங்கா தேவியின் ஜலத்தைக் கமண்டலத்தில் பிடித்துக்கொண்டு உலகத்தை சமப்படுத்தப் புறபட்டானாம். வரும் வழியில் குடகுமலையில் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தானாம். அங்கு காக்கைவடிவில் வந்தபிள்ளையார் அந்தக் கமண்டலத்தைத் தட்டிவிட அதுதான் ஆடுதாண்டுகாவிரியாய்ப் மாறிஅகண்ட காவிரியாய்ப் பெருகிவந்து தமிழ்நாட்டை வளப் படுத்தியதாம் இந்தப் புராணங்களும் அப்படியே இருக்கிறது. இதைப் பரப்புபவன் பரப்பிக் கொண்டே யிருக்கிறான். இதைநம்பி கோயில்கள் ஊர்வலங்கள் வெகுஜோராக நடக்கிறது. எவனும் அந்தப் பிள்ளை யாரிடம் போய் அந்தக் காலத்தில் காக்கைவடிவெடுத்துக் கமண்ட லத்தைத் தட்டிவிட்டு காவிரியை பெருக்கெடுத்துஓடச் செய்தாயாமே! இப்பொழுது குறைந்தபட்சம் பெருச்சாளி உருவெடுத்து கிருஷ்ண ராஜசாகரிலும் கபினியிலும் போய் எவனும் அடைக்கமுடியாத ஒரு ஓட்டையைப் போட்டு தஞ்சைத் தரணியைச் செழிக்கவைக்கக் கூடாதா? என்றுகோரிக்கை வைப்ப தில்லையே! ஏன்?ஓ! பெரியார் சொன்னது நினைவுக்குவருகிறதா? கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; பரப்புகிறவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி!

இவண் : திராவிடர் தொழிலாளர் கழகம், திருவெறும்பூர்

இதற்குப் பிறகும் பிள்ளையார் கோயில்பிள்ளையாஸ் ஊர்வலம் அறுபதடிப் பிள்ளையார் அய்ம்ப தடிப் பிள்ளையார் என்றால் தேச பக்தி தெய்வபக்தி என்றுசொல்பவர் களுக்கு வெட்கம் இருக்கிறதா? என்று தானே கேட்கத் தோன்றுகிறது? 13-11-2012

தமிழ் ஓவியா said...


மனந்திறந்த மடல்


- கலைமகளா? கலவி மகளா?

கலைமகள்,

மே பிரம்மன், தேவலோகம்,

என்னுயிர்த் தோழி,

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கணம் போல அழகியல் நுணுக்கங்கள் உடைய அழகியாய் பிறந்தவள்நான் அறிவாய்

நீ.

காமக் கண்ணனுக்கு என்ன தெரியும்? செல்வியைத் தெரியுமா? இல்லை அந்த நாயைத் தான் தெரியுமா?

என்னைப் படைத்தவனே ஒரு நாள் என்னை படுக்கைக்கு அழைத்தான்.

மறுத்தேன், வழக்காடினேன், அவன் மனம் இளகவில்லை.

பொன் மகளும், ஆருயிர் உருக்கொண்டு ஓடிப் பார்த்தேன்.

திசைக்கொரு ஆறாக தலையைக் கொண்டு திசை தோறும் என்னைத் தேடி வந்தான் என் தந்தை.

ஆறாகி ஓடியும் அந்த நாயிடமிருந்து நான் தப்ப முடியவில்லை.

கலைமகளா? கலவி மகளா?

பிடித்தென்னை மறுபடியும் பெண்ணாக்கி பதம் பார்த்து விட்டான் அந்தப் பதர்!

தன் மாமியாராகிய பார்வதியைப் பெண்டாளப் போன போதே அவனின் ஐந்து தலையில் ஒரு தலையைக் கிள்ளி எறிந்த சிவன் அப்போதே

அவனைக் கொன்றிருந்தால் இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?

தோழி,

என்னைப் பெற்ற பிரம்மனோ வன்புணர்ச்சி யாளனாய் மாறி என்னிடத்தில் இன்பத்தைப் பெற்றான்.

அவனிடமிருந்து நான் என்ன பெற்றேன்? அவனோடு ஒரு நூறு தேவ வருடங்கள் ஓடி விட்டன.

வாழ்க்கையின் எச்சமாய் பேர் சொல்ல ஓர் பிள்ளை இல்லாமல் போனதே மிச்சம்!

விருப்பம் போல என்னைப் பயன்படுத்திக் கொண்ட அவனை இறுதியில் என் தம்பி சுயாம்பு விற்கே என்னை மணஞ் செய்வித்துவிட்டான் அந்த மாபாவி!

இனிய தோழியே!

ஈரோட்டுப் பெரியார் காலத்தில் நான் பிறந் திருந்தாலாவது உன்னைப்போல பெண் விடுதலை பெற்றவளாய் இருந்திருப்பேன்.

கலைமகளா? கலவி மகளா?

என்ன செய்வது.. வேதகாலத்தில் அல்லவா நான் பிறந்து தொலைத்து விட்டேன்.

ஏடீ என்னைப் போய்க் கலைமகள் கல்வித் தேவதை என்று கொண்டாடலாமா உன் தோழி யர்கள்?

கலைமகளா நான்? கலவி மகளாய்? அல்லவா ஆக்கி விட்டான் அந்தக் கழிசடைப் பிரம்மன் என்னை!

அன்பிற்கினிய தோழி,

என் கண்ணீர்க் கதையை எல்லோர்க்கும் எடுத்துச் சொல்.

என்னை யாரும் வணங்க வேண்டாமென என் சார்பில் அவர்களைக் கேட்டுக் கொள்!

அதுவே நீ எனக்குச் செய்யும் அன்பான பேருதவி!

உனக்கு என் புரட்சி வாழ்த்துக்கள்.

அன்பு தோழி
கலைமகள் 13-10-2012

தமிழ் ஓவியா said...

புரட்சிக் கவிஞர் பார்வையில் திராவிடர் கழகமும், திராவிடர் கழக தொண்டர்களும்!


- முனைவர் துரை.சந்திரசேகரன்


புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படைத்தளித்த புரட்சிப் பாக்கள் அனைத்தும் பெரியாரின் கொள்கையை அப்படியே மறுபதிப்பாக கவித்துவ நடையில் தந்ததே ஆகும். மனிதர்களை பிரிக்கும் ஜாதியை, ஜாதியைப் பாதுகாத்திடும் மதத்தை, மதத்தின் காப்பு அரணான கடவுளை எதிர்த்தும், கண்டித்தும் அவரின் பாடல்கள் பேசும். தமிழ் மொழியின் மாண்பை, மன் பதையில் தமிழின் சிறப்பை வெளிப்படுத் துவனவாயும் மிளிர்ந்தன கவிஞரின் பாக்கள்.

தமிழனின் பெருமையைப் பறைசாற் றியதோடு, சிறுமையை வேரறுத்து ஒற்றுமைக்கு அழைப்பு விடுப்பதாகவும் அவை அமைந்தன. அழகின் சிரிப்பாக இயற்கையை நேசிக்கும். இயற்கையைத் தாண்டி இனத்தை நேசிப்பதாயும் பாரதி தாசனின் பாடல்கள் இருப்பதை அறியலாம்.

சமுதாய சமத்துவத்துடன், பொரு ளியல் சமத்துவத்தையும், ஆண்-பெண் சமத்துவத்தையும் எடுத்தியம்பக் கூடிய பாடல்கள் நிரம்ப உண்டு. திராவிடர் பெருமை பேசியதோடு, தந்தை பெரியாரை பல நிலைகளிலே, பல கோணங்களிலே படம் பிடித்துக் காட்டியுள்ளார் புரட்சிக் கவிஞர். தமது குயில் ஏட்டைத் திராவிடர் கழக ஏடாக சில காலம் நடத்தியும் உள்ளார். திராவிடர் கழகத்தின் நோக்கத்தை, தமிழர் தாகம் தீர்க்கும் திராவிடர் கழகத்தின் சிறப்புகளை, அருமை, பெருமைகளை வெகுநேர்த்தியாக எழுதியுள்ள பாங்கும், திராவிடர் கழகத்தின் தொண்டர்களுக்குரிய ஆளுமையை, செயலாற்றலை வெளிப் படுத்தியுள்ள பாங்கும் நம்மை பெருமிதம் கொள்ளச் செய்கிறது. அவற்றில் சிலவற்றை எடுத்துத் தருவதே - தொகுத்து உரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

தமிழ் ஓவியா said...


நல்ல திராவிடர் கழகம் மிக நல்ல இயக்கம்!

தமிழர்கள் தங்களை எந்தக் கட்சியில், இயக்கத்தில் இணைத்துக் கொள்ளலாம் என்பதை புரட்சிக் கவிஞர் வெகு சிறப்பாக எடுத்துரைக் கிறார். எத்தனையோ கட்சிகள் நாட் டில் உள்ளன. காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ம.பொ.சி. கட்சி என பல உள்ளன. ஒவ்வொரு கட்சியும் எப்படிப்பட்ட கட்சிகள், அவற்றின் தன்மை என்ன . . . என்பதையெல்லாம் பட்டியல் போட்டுக் காட்டி அவையெல்லாம் திராவிடர்களுக்குரிய கட்சிகள் அல்ல என்பதைச் சுட்டிக் காட்டி திராவிடர் கழகம் மட்டுமே நல்ல இயக்கம் - அதில் தான் சேர வேண்டும் என வலியுறுத் துகிறார்.

வினா: எந்தக் கட்சி அய்யா? நீவிர் எந்தக் கட்சி அய்யா?

விடை: எந்தக் கட்சியில் நல்ல கொள்கை இருக்கின்றதோ மெய்யா அந்தக் கட்சி அய்யா - நான் அந்தக் கட்சி அய்யா! . . . . வினா: பார்ப்பனரின் கட்சியிலே பற்றுண்டோ உமக்கே?

விடை: காப்பான நம் தமிழை இன்பத் தமிழ்நாட்டைத் தீர்ப்பாரை நத்துபவர் செந்தமிழர் ஆகார்!

வினா: நல்ல திராவிடர் கழகம் பிடிப்பதுண்டோ உமக்கே?

விடை: நல்ல திராவிடர் கழகம் மிகநல்ல இயக்கம்! எல்லோரும் ஒன் றென்று தொண்டு செய்யும் இயக்கம்!

என்பதோடு நிறுத்தாமல்,

வாழ்க திராவிடர் கழகம்! வாழ்க தமிழ்நாடு! யாழும் ஒரு பாய்புலியும் இவன் என்னும் தமிழ்தான் வாழ்க! கொள்கை வெல்க! என்றும் முழக்கமிடுகிறார்.

எந்த வட்டாரத்தில் தி.க. கொள்கை பரவ வில்லை?அந்த வட்டாரத்தில் விரைவில் பணி தொடங்குதல் வேண்டும்.

எந்த வட்டாரத்தில் தலைவரிட முள்ள உறுப்பினர் பட்டியல் குறுகலாய் இருக்கின்றது? அந்தத் தலைவர் அப் பட்டியலை விரிவு படுத்த வேண்டும்.

எந்தப் பகுதியில் கழகக் கொடி பறக்கவில்லை? அங்குக் கழகக் கொடியைப் பறக்கச் செய்ய வேண்டும்.

எந்தப் பகுதியில்விடுதலை பரவ வில்லை? அங்கு விடுதலையைப் பரப்பக் கண்ணும் கருத்துமாய்ப் பணி செய்ய வேண்டும்.

எந்தப் பகுதியில் கழகக் கொள்கை பற்றிய நூற்கள் பரவவில்லை? அங்கு நல்லெண்ணத்தோடு பொறுப்போடு பரப்ப வேண்டும். (குயில்: 1-.7.-1958)

மேற்கண்ட செய்தி குயில் ஏட்டில் தலையங்கமாக, ஆசிரியர் உரையாக புரட்சிக் கவிஞரால் தீட்டப் பெற்றவை. திராவிடர் கழகக் கொள்கை பரவ வேண்டும். . . திராவிடர் கழக உறுப் பினர் அதிகமாக சேர்க்கப்பட வேண்டும் . . . திராவிடர் கழகக் கொடி எங்கும் பறக்கச் செய்ய வேண்டும் . . . இயக்கத்தின் நூல்கள் விற்பனை அதிகரிக்கப்பட வேண்டும் . . . எல்லாவற்றிற்கும் மேலாக கழகத்தின் ஏடான விடுதலை பரவச் செய்திட வேண்டும். அதற்காக கண்ணும் கருத்துமாய் தோழர்கள் பணி செய்திட வேண்டும் என்று புரட்சிக் கவிஞர் இயக்கத்தின் தொண்டர்களுக்கு உரிய கடப்பாடாக சொல்கிறார்.

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்தின் உறுப்பினர் களான செயல் நிறை தொண்டர்கள் எப்படிப்பட்டவர்கள், பெரியார் ஆணையை, நிறைவேற்றுவதில் சளைக் காத தோழர்கள் என்பதையும், மனம் வைத்துப் பணியாற்றினால் வெற்றி கரமாக செயலை நிறைவேற்றக் கூடியவர்கள் என்பதையும் புரட்சிக் கவிஞர் எப்படிச் சுட்டுகிறார் பாருங்கள்!

இன்று இந்த உலகத்தில் தி.க. உறுப்பினர் போன்ற தன்னலம் மறுத்த தவத்திருவாளர்களைக் காண முடியாது; உடல், பொருள், ஆவி மூன்றையும் கழக முன்னேற்றத்திற்குத் தமிழர்களின் பொதுநலத்திற்கு அளித்த - அளிக்கின்ற தவத்திருவாளர்களைப் பெரியார் விலாப் புறத்திலன்றி வேறு எங்குக் காண முடியும்? (குயில் 1-.7.-1958)

இவ்வளவு சிறப்பு வாய்ந்த தன்னலம் மறுத்த தொண்டர்கள், ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகள் என்போர் சில நேரங்களில் சோர்வடைவதும், தங்கள் பொறுப்பினை உணர்ந்து செயலாற்றா திருத்தலும், கழகத் தலைமையின் கட்டளைகளை முழுவீச்சில் நிறை வேற்றாதிருப்பதையும் புரட்சிக் கவிஞர் தமக்கே உரிய பாணியில் சுட்டிக் காட் டுவதையும், இன்னும் சிறப்பாகச் செயலாற்றிட அறிவுறுத்துவதையும் தொடர்ந்து பாருங்கள்.

இத்தகைய மேன்மைப் பண்புடை யவர்கள் சிறிது சோர்வு கொண்டது கண்டு நினைவுறுத்தினால் வருத்தமோ அடைவார்கள்? மகிழ்ச்சியல்லவா கொள்வார்கள்!

ஒரு வட்டாரத்தில் கூட்டம் நடக்கிறது, இருபத்தையாயிரம பேர் ஆர்வத்தோடு ஆடாமல் அசையாமல் இருந்து கேட்கின்றார்கள். கூட்டம் முடிகிறது. அந்தக் கூட்டத்தைக் கூட்டிய வட்டாரத் தலைவரை நோக்கி உங்கள் தலைமையின் கீழ் எத்தனை உறுப் பினர்கள் இருக்கிறார்கள்? என்று கேட்டால், அவர், நான் ஒருவன்தான் இருந்து தொண்டு செய்து கொண்டு இருக்கிறேன் என்கிறார். இன்னும் சில தலைவர்கள் அய்ந்துபேர், பத்து பேர் இருப்பதாகக் கூறுகிறார்கள். உறுப் பினர்களுக்கு இப்படியென்றால் எப்படி நல்ல பார்வையான இடத்தில் பல கட்சிகளின் கொடிகள் காட்சியளிக் கின்றன. தி.க. கொடிகள் எங்கே என்றால் நிறைய இடங்களில் எதற்கு என்று திருப்பிக் கேட்கிறார்கள்.

கொடிக் கணக்கு இப்படி ஆனால், விடுதலை கணக்கு எப்படி என்றால், தலைவரை நோக்கி, ஊர்ப் புகைவண்டி நிலையத்தில்தான் விடுதலை கிடைக்கவில்லை. இங்கிருந்தால் ஒன்று கொடுங்கள்என்றால் ஏஜண்டு இந்த ஊரில் இல்லை என்கிறார்.

தலைவர் என்போரும் கழக உறுப் பினர் என்போரும், இரவு வரக் கண்ட வுடன், இன்று நாம் கழகத்திற்கு என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டாமா? (குயில் 1-.7-.1958)

தொண்டர்களின் பொறுப்பினை எவ்வளவு பொறுப்புணர்வோடு புரட்சிக் கவிஞர் எடுத்தியம்புகிறார். நன்றே செய்க! அதையும் இன்றே செய்க என்ற தலைப்பிலான தலையங்கத்தில் இத்துணை அரிய செயல்பாட்டுச் செய்திகள். புரட்சிக் கவிஞரால் எழுதப் பெற்றுள்ளதை படிக்கும்போது இயக்கத்தின் வளர்ச்சியில், விடுதலையின் வளர்ச்சியில் அவரின் ஈடுபாடு எந்த அளவு இருந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
திராவிடர் கழகம் சிறிய கட்சி அல்ல. ஒட்டு மொத்த தமிழர்களின் உடைமை அஃது. இயக்கம் நடத்தும் போர் புதியதோர் உலகத்தை உருவாக்கிடவே செய்யும். எழில் தமிழ் நாடே திராவிடர் கழகத்தின் பின்னால் திரளுக என்று அழைப்பு விடுக்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

எல்லா மக்களும் இரும்புக் குண்டு போல் ஒன்று படுதல் வேண்டும் இன்றே! நன்று பெறுதல் வேண்டும் அனைவரும் திராவிடர் கழகம் சிறியதன்றே
அஃது பெரியார்க் குரியதன்றே
சாற்றுவேன்! அஃது தமிழரின் உடைமை! பொதுவாம் இயக்கம்! பொதுவாம் நிறுவனம்! அங்கிருந்து கிளம்பும் அரும்போர் பொதுப் போர்! புதுப்போர்! எழுக எழுக. புதியதோர் தமிழ் உலகம் இதோ! இதோ! வெல்க எழிற்றமிழ் நாடே! (குயில் -8.-7.-1958)

நெருப்பில் துடித்திடும் மக்கட்கெல் லாம் நல்ல -காப்பு நல்கும் நீதச் சுயமரியாதையென்னும் குளிர்தோப்பு! அங்குச் சுமப்பதெல்லாம் இன்பமாகிய தண்புனல் ஓடை-நீவிர் சுகித்திடவோ அறிவான இயக்கத்தின் வாடைஎன்றும் சுயமரியாதை இயக்கத்தின் சிறப்பு செப்புகின்றார் கவிஞர்.

பார்ப்பன ஆதிக்கத்தின் ஆணிவேர் களான கடவுள், மதம், வேதம், இதிகாச-புராணங்கள், மனுதர்மம் என்பனவற் றிற்கு எதிரான பெரியாரின் - திராவிடர் கழகத்தின் போரில் ஆரியம் தோற்றது என்றே சொல்லும் அளவுக்கு ஆட்டம் கண்டது - நிலை குலைந்தது. வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் திராவிடர் கழகத்தை ஒழித்திட ஆரியம் முயன்றது. அவற்றையெல்லாம் முறியடித்து திராவிடர் கழகம் ஓங்கி உயர்ந்து நிற்கின்றது. இதனை புரட்சிக் கவிஞர்,

தமிழ் ஓவியா said...

பார்ப்பார் தாமும், பார்ப்பார் கையைப் பார்ப்பார் தாமும், பழியிலாத் திராவிடர்

கழகம் அழியக் கருதுகின்றார்கள். திராவிடர் கழகம் இராவிடில் தங்கள்

நெடுநாள் நரிச்செயல் நிலைக்கும் என்கின்றார்; ஆதலால் தங்கள் அரசியல் செல்வாக்கைத்

திராவிடாக் கின்னல் செய்வதில் செலவிட்டுக் கலாம் விளைவிக்கின்றார், எலாம் இனி அடக்குக!

(புகழ் மலர்கள்-- _ பாரதிதாசன்) திராவிடர் கழகத்தை அழியாது காத் திட வேண்டும் என்கிறார்.

திராவிடர் கழகம் எப்பேர்ப்பட்ட இயக்கம் என்பதை ஒரு வரியில் புரட்சிக் கவிஞர் பதிவு செய்துள்ளார். புதுச் சேரியில் 31-.8-.1958 அன்று காலை 10 மணிக்கு புதுவை கழக இல்லத்தில் கழகக் கொடியினை ஏற்றி வைத்து கூடியிருந்த தோழர்களிடையே பேசும் போதுதான் கழகத்தின் பெருமையை வெளிப்படுத்தினார். உலகத்திலே தலை சிறந்த கொள்கையை வைத்திருப்பது திராவிடர் கழகம் ஒன்றுதான். அதில் யாவரும் சேர்ந்து ஒத்துழைப்பதுடன் கழகப் பணிகளை மேன்மேலும் உயர்த்த வேண்டும் என்கிறார் பாரதிதாசன்.

தொண்டுக்கு இடமே திராவிடர் கழகம்தான். தொண்டு செய்ய ஆசைப் படுவோர் எவராயினும் திராவிடர் கழகத்தில்தான் சேரவேண்டும் என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பறை சாற்றினார்.

திராவிடர் கழகம் என்பது தமிழி னத்தின் உள்ளப்பாங்கின் மறுபெயர். இப்படி ஒரு படைப்பு! பெரியார் செயற்கரியது செய்தார் என்றால் - அவர் திராவிடர் கழகத்தைத்தான் செய்தரு ளினார் என்பதுதான்!

திராவிடர் கழகம் இனமீட்சிக்குப் போர் தொடங்கிவிட்டது. எந்தத் தமிழன் மறுப்பான்? எந்தத் தமிழன் அஞ்சுவான்?

ஒவ்வொரு தமிழனும் இன்று தொண்டுக்கு முந்துகின்றான். தமிழி னம் தொண்டு செய்யத் துடிக்கின்றது. தொண்டுக்கு இடம் திராவிடர் கழகந்தான்!

இவை மட்டுமா? திராவிடர் கழகத் தின் தொண்டனே உண்மைத் தமிழன். மண்டிக்கிடக்கும் அறியாமை இருள கற்றி அறிவுச் சுடர் ஏற்றுபவன். குற்றங்குறைகளை நீக்குபவன். ஜாதி ஒழிய வேண்டும் என்பவனும் அவனே. மொழி வாழ இந்தியை எதிர்த்து ஈகம் செய்யத் துணிபவன் அவனே. . . இப்படியாய் திராவிடர் கழகத் தொண் டனின் பெருமையை தமது குயில் ஏட்டின் மூலம் பாரறியச் செய்யும் புரட்சிக் கவிஞரின் எழுத்தோவி யத்தைப் படியுங்கள். . .

தி.க. தொண்டன்தான் உண்மைத் தமிழன். அவனிடந்தான் தமிழர் தன்மை மிளிர்கின்றது. அவன்தான் கறைபடுத் தப்பட்டு வரும் தமிழ்த் தன்மைகளைக் கறை நீக்கி நிலை நிறுத்த அல்லும் பகலும் பாடுபட்டு வருகின்றான்.

தமிழ்நாட்டைத் தமிழன் அடைய வேண்டும் என்று எண்ணுகின்றவன் வேறு எவன்? தமிழ் மொழி வாழ வேண்டும், இந்தி தொலைய வேண்டும் என்று உயிரைப் பணயம் வைத்துப் போரில் இறங்க வேறு எவன் முன் வரு கின்றான்?

சாதி ஒழியவேண்டும்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று இறப்பு வரும் நேரத்தும், இன்னா நேரும் நேரத்தும் இயம்புவோன் தி.க. தொண்டனை விட வேறு எவன் உள்ளான்? எங்கே பார்க்க முடிகின்றது?
(குயில் 30.12.-1958)

நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருக்கலாம். அவற்றிற்கு தொண்டர் களும் இருக்கலாம். ஆனால் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரை ஈர்த்த இயக்கம் திராவிடர் கழகமே. அவரின் பாராட்டுக்களை, சீராட்டுக்களை பெற்றவர்கள் திராவிடர் கழகத் தொண்டர்களே! என்றால் மிகையல்ல.

ஆளாக வந்தவர் ஆள்வதும் ஆண்டவர்
ஆட்பட்டிருப்பதும் வெட்கம் அலலவா?
மறத்தோளா இருந்தவை தோலாயின என்று
சொன்னால் இவ்வையம் சிரிக்காதா?
தூளாய்ப் பறந்திடும் வஞ்ச நெடுங்குன்றம்
தூங்கும் தமிழர் விழித்தால் என்பது புரியாதா?
ஆளப் பிறந்தவர் ஆளுகின்றாரென
அறிவோர் வரைவார் எழுத்தால் என்பதை உணர்க.
வாழ்க்கையிலோர் சுவை, வையத்திலோர் புகழ்!
வாரீரோ தமிழ்ச் சிங்கங்காள்!
வெந்தீக்காட்டில் வாழ்கின்ற செந்தமிழ் நாட்டன்னை
மீட்க நமை அழைக்கின்றாள் வருக!
வீழ்ச்சி அறிந்ததில்லை வேங்கைகளே எழுவீர்!
வீரம் நமைப் பிரிந்ததில்லை வாருங்கள்
தன்மானப் போருக்கு!

தத்துவப் பேராசான் தந்தை பெரியாரின் இலட்சியங்களை புரட் சிக் கவிதைகள் மூலம் விதைத்திட்ட புரட்சிக் கவிஞரின் வரிகளை மெய்ப் பிக்க தமிழர் தலைவரின் தலைமை யிலே பணி முடிப்போம் வாருங்கள்!
13-10-2012

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர் வசூலிக்கும் வரிகள்


1. ருது மங்கள ஸ்நான - தேதி வைக்க வரி
2. முகூர்த்த தேதி - வைக்க வரி
3. விவாக சுப முகூர்த்த (திருமண) வரி
4. சாந்தி முகூர்த்த நாள் வைக்க வரி
5. சீமந்த (வளைகாப்பு) வரி
6. ஜனன முகூர்த்த ஜாதகம் எழுத வரி
7. புண்ணியதானம் தொட்டிலில் போட வரி
8. நாமகரண (பெயர் சூட்டும்) வரி
9. அட்சராப்பியாச (பள்ளியில் சேர்க்க) வரி
10. கர்ணபூஷண (காது குத்த) வரி
11. உபநயன (பூணூல் போட) வரி
12. நல்லேர் பூட்ட நாள் குறிக்க வரி
13. குதிரில், பத்தாயத்தில் நெல் போட வரி
14. சொத்துகள் பத்திரம் செய்ய நாள் பார்க்க வரி
15. மனை அஸ்திவாரம் போட வரி
16. முகூர்த்தக்கால நடுவதற்கு வரி
17. கிரஹகப்பிரவேச வரி
18. சஷ்டியப்தபூர்த்தி வரி
19. கருமாதி வரி
20. திவச வரி... முதலிய வரிகள் செலுத்துவதன் மூலம் முட்டாள்தனமும் அடிமைத்தனமும் உறுதி செய்யப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


செய்திச் சிதறல்கள்!


பலே சரியான தீர்ப்பு!

டில்லி கோகுல்புரி - சூரஜ் - மாயா இணையருக்கு ஆஷா என்ற மகள் (வயது 19). யோகேஷுக்கும் அவ்வூரைச் சேர்ந்த ஆஷாவுக்கும் காதல் ஏற்பட்டது. தாழ்த்தப்பட்டவர் மணமகன் என்பதால் மணமகளின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆனால் அந்தக் காதலர்களோ வீட்டை விட்டு வெளியேறி திரு மணம் செய்து கொண்டுவிட்டனர். விடுமா ஜாதிவெறி? ஆஷாவின் பெற்றோர்களும் உறவினர்களும் (மொத்தம் 5 பேர்) அந்தக் காதல் இணைகளைக் கண்டுபிடித்து மின் சாரத்தைப் பாய்ச்சி சாகடித்துள்ளனர். இது நடந்தது 2010 ஜூன் மாதம்.

வழக்கு விசாரணையில் டில்லி கூடுதல் அமர்வு நீதிபதி ரமேஷ் குமார் - குற்றவாளிகள் அய்வருக் கும் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறினார்.

பலே, பலே! தூக்கு தண்டனை என்பது இருக்கும் வரைக்கும் இது போன்ற ஜாதி வெறி பிடித்தவர்கள் மீது இத்தகைய தண்டனை பாயவேண்டியதுதான்.

ஆஷாவின் பெற்றோர்களையோ, ஒத்துழைத்த உறவினர்களையோ அவர்கள் நம்பும் ஜாதி, குலம், கோத்திரம் காப்பாற்ற ஓடி வந் திருக்கின்றனவா?

மதமும், ஜாதியும் மனிதத் தன்மைக்கும் நம் உறவுகளுக்கும் எவ்வளவு பெரிய கேடாக இருக் கின்றன என்பதை இது போன்ற தண்டனைகளுக்குப் பிறகாவது உணர்வார்களா?

காதல் என்பது ஜாதி பார்த்து வரக் கூடியதா? காதல் என்பது உயிர் இயற்கை. அது கட்டில் அகப்படும் தன்மையதோ என்றாரே புரட்சிக் கவிஞர் - அதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது.

மனிதர்களுக்குத் தூக்குத் தண் டனை கொடுப்பதன் மூலம் ஜாதியை சமூகத்திலிருந்தும் விலக்கத் தூக்குத் தண்டனை தேவையே.

இருட்டறையில் உள்ளதடா உலகம்

ஜாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே

என்றாரே புரட்சிக் கவிஞர் - அதனை நினைவு கூர்வோம்.

கொலைவாளினை எடடா,

சில கொடியோர் செயல் அறவே என்ற வரிகள் டில்லி நீதிபதியின் தீர்ப்பை நினைவூட்டுகின்றன.

மீன் கொத்திப் பறவை


மீன்கொத்திப் பறவை தமிழில் - ஆங்கிலத்திலே King Fisher இந்தப் பெயரில் விமான நிறுவனம் ஒன்று இருக்கிறது. அது நிதி நெருக்கடி யில் தள்ளாட்டம் போடுகிறது. 4000 பேர் இந்த நிறுவனத்தில் பணி யாற்றுகின்றனர். கடந்த ஆறு மாதங் களாக ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 280 பொறியாளர் கள் இந்த நிறுவனத்தை விட்டு விலகி விட்டனர். ஆறுமாதமாக தமது துணை வருக்குச் சம்பளம் இல் லாமையால் நிதி நெருக்கடியால் மனைவி தூக்கு மாட்டிக் கொண் டார் என்ற சேதிகள் எல்லாம் ஊட கங்களில் ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் என்ன தெரியுமா? இவ்வளவு நிதி நெருக் கடியால் நாக்குத் தொங்கிப் போனா லும், இந்த நிறுவனத்தின் உரிமை யாளர் மல்லையா என்ன செய்துள் ளார்? கருநாடகாவில் உள்ள சுப்பிர மணியன் கோயிலுக்கு இரண்டரை கிலோ தங்கத்தைக் கொண்டு 80 லட்சம் ரூபாய் செலவில் தங்கக் கதவு செய்து கொடுத்துள்ளாராம்.

கடவுளை மற - மனிதனை நினை என்று தந்தை பெரியார் சொன்ன கருத்து எவ்வளவு உன்னதமானது என்பது இப்பொழுது தெரியவில் லையா?
எங்கும் நிறைந்த கடவுள் - உருவ மற்றவர் என்று ஒரு பக்கத்தில் சொல் லிக் கொண்டு இன் னொரு பக்கத்தில் கடவுளுக்கு உருவம் கொடுத்து, அதனைக் காப்பாற்ற கதவுகள் - அதுவும் தங்கத்தால் என்றால் இந்தக் கடவுள் நம்பிக்கை மனிதனிடமிருந்து மனித நேயத்தை மீன்கொத்திப் போல கொத்தித் தின்று கடவுள் பொம்மைகள் மீது காருண்யம் காட்ட வைத்துள்ளதே! மனித குலத்துக்கு இந்தக் கடவுள் நம்பிக்கை எத்தகைய எதிரி என்பது இப்பொழுது விளங்குகிறதா - இல்லையா?

விவேகானந்தர் இல்லம்


சென்னை காமராசர் கடற்கரை சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தின் குத்தகைக் காலத்தை மேலும் 99 ஆண்டு காலம் நீட்டித்து ஆணை பிறப்பித்துள்ளார் தமிழ்நாடு முதல் அமைச்சர்.

1997 இல் சில நிபந்தனைகளின் அடிப்படையில் குறுகிய கால அள வுக்கு குத்தகைக்கு விடப்பட்டி ருந்தது.

இடையில் அந்த இடத்தில் செம்மொழி அலுவலகம் வரப்போகிறது என்ற நிலையில், சோ உட்பட பார்ப்பன ஏடுகள் தாண்டிக் குதித் தன. அந்தத் தாண்டிக் குதித்தலுக்கு மேலும் ஒத்தடம் கொடுக்கும் வகை யில், அமெரிக்கா வரை சென்று இந்து மதத்தைப் பரப்பிய விவே கானந்தரின் இல்லத்திற்கான குத்தகையை மேலும் 99 ஆண்டுக் காலம் நீட்டித்து உத்தரவாம். அண்ணாவின் பெயரால் நூலகம் என்றால் கசக்கிறது - விவேகானந் தர் இல்லம் என்றால் இனிக்கிறதோ!

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்றால் கூடாது, முஸ் லிம்களுக்கு மெக்காவுக்குப் போக உதவி என்றால் உடனே இந்துக் களுக்கு மானோசரவர் மற்றும் முத்திநாத் கோவில்களுக்குச் செல்லத் தனிச் சலுகைகள்.

பி.ஜே.பி. என்ற கட்சிதான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்ற அவசியத்திற்கு இடமில்லாமல் நடந்து வருகிறாரோ தமிழ்நாடு முதலமைச்சர்?14-12-2012

தமிழ் ஓவியா said...


சிக்கனத்தின் தத்துவமும், சிறப்பும்


தமிழகக் கல்வி நெறிக் காவலராகத் திகழ்ந்த, பெரியாரின் பேரன்புக்குப் பாத்திரமாகி, கல்வி வள்ளல் காமராசரால் கல்வித் துறை இயக்குநராக்கப்பட்ட நேர்மையாளர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று (12.10.2012) சென்னையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

சான்றோர்கள், கல்வியாளர்கள் பலரும் கலந்துகொண்ட அவ்விழாவில் புரட்சியாளர் பெரியார் என்ற தலைப்பில், சென்னைப் பல்கலைக் கழகத்தில், பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவு கள் ஆற்றிய அதன் மேனாள் துணை வேந்தரான நெ.து.சு. அவர்கள் பிறகு அப்பொழிவுகளை மேலும் விரிவாக்கி அதே தலைப்பில் ஒரு பொத்தகமாகவும் எழுதி, அவர்கள் மன்றத்திற்குப் பயனுறு வகையில் அளித்தார்கள்.

தமிழ் ஓவியா said...

அந்நூல் இப்போது மீண்டும் சென்னை சாந்தா பப்ளிஷர்ஸ் மூலம் நேற்று அவ்விழாவில் இரண்டாம் பதிப் பாக வெளியிடப்பட்டது.

தந்தை பெரியார் அவர்களின் வாழ்வு, வாக்கு, அறப்பணி, தொண்டூழியம்பற்றி அரிய பல தகவல்களின் அற்புதமான திரட்டான அந்நூலில் தந்தை பெரி யாரின் எளிமையும், சிக்கனமும் எத்தகை யது என்பதை மிக அருமையான இரண்டு தன் வாழ்க்கை நிகழ்வுகள் மூலம் மிக அருமையாக எடுத்துக் கூறி யுள்ள நெ.து.சு. அவர்கள், அந்நிகழ்வு களைவிட மிகச் சிறப்பானது அதன் உண்மைத் தத்துவம் என்ன என்பதையும் விளக்கியுள்ளார்கள்.

பெரியாரின் தனித்தன்மை என்ற தலைப்பில், அந்நூல் (பக்கம் 191 இல்)

பெரியார் சிக்கனத்திற்குப் பெயர் பெற்றவர். அவர் தன்னுடைய செலவைப் பொறுத்தமட்டும் சிக்கனத்தை கடைப் பிடிக்கவில்லை. பிறர் தனக்குச் செலவு செய்தபோதும் அதே துலாக்கோலைப் பயன்படுத்தினார்.

மண்ணோடு மண்ணாக, கண்டவர் களுக்கெல்லாம் மண்டியிட்டுக் கிடந்த தமிழ்ச் சமுதாயத்தை அடி தெரியக் கலக்கிய, தன்மான இயக்கத்தின் தந்தை ஈ.வெ.ராமசாமியை 1935 இல் நான் தற்செயலாகக் காண நேர்ந்தது.

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் 403 எண் வீட்டில் குடியிருந்த நண்பர், குத்தூசி குருசாமியைக் காணச் சென் றேன். வழியில் கண்ட நண்பரொருவர், ராமசாமிப் பெரியார் அவ்வேளை அங்கு இருப்பதாகக் கூறினார்.

அருகில் இருந்த பழக்கடைக்குச் சென்றேன். நாலணா கொடுத்து ஆஸ்திரேலிய ஆப்பிள் பழம் ஒன்றை வாங்கிக் கொண்டு, குருசாமி வீட்டுக்குப் போனேன்.

குருசாமி என்னை பெரியாருக்கு அறிமுகப்படுத் தினார். பெரியார் எழுந்து நின்று கை குலுக்கினார். பழத்தைப் பெரியாரிடம் கொடுத்தேன். வாங்கிக் கொண்டதும், என்ன மணம் என்று பாராட்டினார். அடுத்த நொடி,
என்ன விலைங்க அய்யா என்று அவருக்கே உரிய அடக்கத்தோடு கேட் டார்.

அதிகம் இல்லை என்றேன். விட வில்லை. மூன்று முறை கேட்ட பிறகு, நாலணா என்றேன். பெரியாருக்குச் சினம் பொங்கிற்று.

என்ன ஜம்பம்; நாலணாவுக்கு ஒரு பழம். அந்தப் பணத்துக்கு இரண்டு சீப்பு வாழைப் பழம் வாங்கியிருக்கலாம். இத்தனை பேருக்கும் கொடுத்திருக்க லாம். ஒரு பழத்திற்கு நாலணா என்ன அநியாயம் என்று பெரியார் கடிந்து கொண்டார். அதிர்ச்சியடைந்தேன்; ஆனால், அடங்கியிருந்தேன். ஏன்? அவருடைய சிந்தனை ஓட்டத்தின் சிறப்பு புரிந்தது. அது என்ன?

இருப்பது சிறிதே ஆயினும் அதை எவ்வளவு அதிகமானவர்களுக்குப் பயன்படுத்த முடியுமோ அந்த வகையில் செலவிட வேண்டும் என்பதே பெரியாரு டைய எண்ணம். அது நொடியில் எனக்கு விளங்கிவிட்டது. அப்புறம் அதே தவறைச் செய்யவில்லை.

அடுத்து 1940 ஆம் ஆண்டு அக் டோபர் திங்கள் 25 ஆம் நாள், செல்வி காந்தம்மாவும், நானும் எங்கள் திரு மணத்தைப் பதிவு செய்வதைப் பார்க்க, பெரியார் சென்னைக்கு வந்திருந்தார். பெரியார், பதிவாளர் அலுவலகத்திற்கு எங்களுடன் வந்தால், அங்கே கூட்டம் கூடிவிடுமென்று இயக்கத் தோழர்கள் கூறியதால், பெரியாரை திருவல்லிக் கேணியில் என் மாமனார் திரு. சுப்ர மணியம் இல்லத்திலேயே இருக்கும்படி வேண்டிக் கொண்டோம். பெரியார் பெருந்தன்மையோடு இசைந்தார்.

திருமணத்தைப் பதிவு செய்தபின், நாங்கள் இருவரும் மட்டும், வழியில் புகைப்படம் எடுக்கும் நிலையத்திற்குச் சென்றோம். புகைப்படம் எடுப்பதில் சற்றுக் காலதாமதம் ஆயிற்று. காலந்தாழ்த்தி வீட்டிற்குத் திரும்பிய எங்களைப் பார்த்து, பெரியார், ஏன் இவ்வளவு நேரம்? புது மணமக்கள் எங்கே போய்விட்டீர்கள் என்று கேட்டார்.

புகைப்படம் எடுத்துக்கொள்ளக் காலதாமதம் ஆனதைக் கேள்விப்பட்ட பெரியார், புகைப்படம் எடுக்க என்ன கட்டணம்? என்று கேட்டார்.

நான் மூன்று ரூபாய்கள் என்றேன். எத்தனைப் படங்களுக்கு என்று கேட்டார் பெரியார்.

தமிழ் ஓவியா said...

நான் ஒரு படத்திற்கே என்றதும் பெரியார் வெகுண்டார்.

உடனே அவர் ரூபாய்க்கு மூன்று படம் கொடுக்கிற கடைகள் ஏராளம் இருக்கையில், எப்படி ஒரு படத்திற்கு மூன்று ரூபாய்கள் கொட்டிக் கொடுக் கலாம்? என்று கனல் கக்கக் கேட்டார்.

பதில் சொல்ல விரும்பாது திகைத் தேன். உடனிருந்த பொன்னம்பலனார், இவ்வளவு சிக்கனமாகத் திருமணஞ் செய்துகொண்ட அத்தான் மூன்று ரூபாய்கள்தானே பாழாக்கி விட்டார். நீங்கள் செலவு செய்ய முன்வந்த ஈராயிரம் ரூபாய்களை மிச்சப்படுத்தி விட்டாரே அய்யா! என்று சொல்லவும் பெரியாரின் சினம் தணிந்தது!

இப்படிப் பல பல உண்டு.

தம் வாழ்வில் சிக்கனத்தைக் கடைப் பிடிக்கும் சிலர் பிறர் பொருளைச் செல வழித்தால் அதை தாராளமாக ஓடவிட்டு மகிழும் இரட்டை வேடம் அவரிடம் இல்லாதது எவ்வளவு சிறப்பான - நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறி பார்த்தீர்களா?

நேற்றைய விழா இறுதியில், நிறைவுரை ஆற்றிய இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் பெரியாரின் இச்சிக்கனத்தை விளக்கி மேலும் இரண்டு சம்பவங்களை மகிழ்ச்சிப் பெருக்குடன் நினைவு கூர்ந்தார்.

எனது மாமா மாயூரம் நடராசன் வீட்டில் அக்காலத்தில் மாயவரம் என்ற மயிலாடுதுறைக்கு வரும்போது தங்கு வார்கள். நான் மாணவனாக இருந்து கண்டு களித்திருக்கிறேன். சாப்பிட்டு முடிந்தவுடன், ஒருவர் சொம்பைக் கொண்டு, தந்தை பெரியார் கைகளை கழுவுவதற்காக ஊற்றினார். சிறிது நேரத்தில் நிறுத்து என்றார்; ஊற்றிய வர் சரியாகத்தானே செய்தோம் என்ற சங்கடத்தோடு நிறுத்தினார். ஏன் இப்படி ஊற்றுகிறீர்கள் என்றார் பெரியார்.

தண்ணீர் தானே என்றார் என் மாமா! தண்ணீர் என்றால் வீணாக்க லாமா? - அதையும் சிக்கனத்தோடு பயன்படுத்தவேண்டாமா? என்றார் பெரியார்.

தமிழ் ஓவியா said...

அது இன்று எப்படிப்பட்ட தொலை நோக்குப் பார்த்தீர்களா? காசு கொடுத்து குடிதண்ணீர், வழக்குப் போட்டும் கிட்டாத காவிரி நீர் - இப்படி உள்ள நிலை இன்று!

அதோடு இன்னொரு அனுபவத்தை யும் கூறினார். தந்தை பெரியார் வேனில் நாங்கள் செல்லுவோம் சில வேளை களில், திருச்சியிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வரும்போது, வாலி கண்டாபுரம் என்ற ஊரில் வண்டியை நிறுத்தச் சொல்லி, டிரைவரை அழைத்து டிபன்கேரியரைக் கேட்டு, பிறகு 2 ரூபாய் எடுத்துக் கொடுத்து, எங்களில் ஒருவரிடம், அதோ அந்த மரத்தடியில் ஒரு அம்மா இட்லி சுட்டு விற்பார், அங்கே சென்று இதற்கு இட்லி, சட்னி வாங்கி வாருங்கள், எல்லோரும் சாப்பிடுவோம் என்றார்.

இதை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், பெரியார் மகா கஞ்சர் போலும்; இவ்வளவு பெரிய தலைவர் இப்படியா? என்று சிலர் எண்ணக்கூடும்.

ஆனால், இதில் குறைந்த செலவில், மொத்தம் உள்ளவர்கள் பசியாறுகிறோம் என்பது மட்டுமா? அந்த அம்மையார் இதை விற்றால்தானே அவருக்கு அன்றாட ஜீவனம்; அவருக்கும் எவ்வளவு மகிழ்ச்சி; வாழ்வளிப்பதாகவும் அமை கிறதே என்பதைப் புரிந்துகொண்டால், நாமும் வாழவேண்டும்; நம்மால் பிறரும் வாழவேண்டும் என்கிற தத்துவம் அல்லவா நமக்கு அவரால் - அச்சம்பவம்மூலம் போதிக்கப்படுகிறது!

எனவே, சிக்கனத்தின் மற்றொரு பக்கம் பிறரை வாழ வைப்பது - பண்டங் களை வீணாக்கக் கூடாது என்பதற் காகவே கையில் மூட்டை கட்டி எடுத்து பிறருக்குத் தர, பயன் விளையும்படிச் செய்ய அவர் கூச்சப்பட்டதே இல்லை.

இதன்மூலம் போலி ஆடம்பரம், போலி கவுரவம் தகர்க்கப்பட்டுள்ளதே!

எல்லாவற்றையும்விட இச்சிக் கனத்தை வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டால், மனிதன் கடன் வாங்கி, மானங்கெட்டு, மறைந்து திரியவேண்டிய அவசியம் இராதே! சுயமரியாதையின் சொக்கத்தங்கமாக அவன் வாழ்வு மிளிர, சிக்கனமும், எளிமையும் சிறந்த படிக்கட்டுகள் அல்லவா?

சிக்கனம் தேவைக்கேற்ப செலவழித்தல்,

கருமித்தனம் தேவைக்கே செல வழிக்க மறுத்தல்,

ஆடம்பரம் தேவைக்குமேல் செல வழித்தல்! மறவாதீர்! 14-102012

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வு?

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களில் இடைநிலை,பட்டதாரி ஆசிரி யர்கள் அனைவரும், மாவட்ட அள விலும், பின்னர் மாநில அளவிலும், பதிவு மூப்பு அடிப்படையில் கடந்த ஆட்சிக்காலம் வரை நியமிக்கப்பட்டு வந்தனர். மத்திய அரசு கொண்டு வந்த இலவச கட்டாய கல்விச் சட் டத்தின் மூலம், ஒன்று முதல் எட்டா வது வகுப்பு வரை ஆசிரியர் நியமனத் திற்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாய மாக்கப்பட்டது.

தமிழக அரசால் அண்மையில் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் ஆறு லட்சத்து அய்ம்பதா யிரம் பேர் தேர்வு எழுதியதில் வெறும் இரண்டாயிரத்து அய்நூறு பேர் மட்டுமே தேர்ச்சிபெற்றனர்!. ஆசிரியர் தகுதித்தேர்வு தேவை யற்றது என்பதை சுட்டிக்காட்டி, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுதலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். பல்வேறு சமூக அமைப்புகளும் குரல் கொடுத்தன.

ஆசிரியர் சங்கங்களும் ஆசிரியர் தகுதித்தேர்வை எதிர்த்து வீதிக்கு வந்து போராடின!. ஆசிரியர் பணிக்கென தனிப்பயிற்சி கல்லூரியை ஏற்படுத்தி, அதற்கென்று பட்டயமும் தமிழக அரசால் வழங்கப்பட்டுவரும் நிலையில், மேலும் ஒரு தகுதித்தேர்வு அவசியம்தானா? அரசால் நடத்தப் படும் ஆசிரியப்பயிற்சி தேர்வுகள் மீது அரசுக்கே நம்பிக்கையின்றி போய் விட்டதா?

பட்டயத்தகுதி போது மானதாக இல்லை என்று அரசு கருதும் பட்சத்தில், பட்டயத்தேர்வை தரம் உயர்த்தலாமே! அரசு நடத்தும் தகுதித்தேர்வில் வரும் வினாக்களை ஆசிரியப்பயிற்சி தேர்விலேயே இணைக்கலாமே! ஒவ்வொன்றிற்கும் இப்படி தகுதித்தேர்வு என்று ஆரம் பித்தால் இந்த தகுதித்தேர்வு வினாக் களை தேர்வு செய்தவர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டார் கள்? அவர்களுக்கு ஏதேனும் தேர்வு நடைபெற்றதா?

பல ஆண்டுகளாக அரசால் நடத்தப்பட்ட பட்டயப் படிப்பை முடித்து, வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் எதிர் காலம் என்னாவது? என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன. தமிழக அரசு தகுதித்தேர்வை அடிப்படையாகக் கொண்டு ஆசிரி யர் பணி நியமனம் செய்வதை எதிர்த்து, சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

தமிழக அரசோ, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தலைமையில் கல்வித் துறை முதன்மை செயலாளர் டி. சபீதா, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி, பள்ளிக் கல்வி இயக்குநர் கு.தேவராஜன் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு அமைத்திருப்பதாகவும் அக்குழு ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக முடிவு செய்யும் என்றும் உயர்நீதிமன் றத்தில் அறிவித்தது!.

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர் மட்டக்குழு ஆசிரியர் பணி நியமனம் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை இன்றைய நாளிதழ்களில் வெளி வந்துள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் நிய மனத்திற்கு மொத்தம் 100 மதிப் பெண் கள் வரையறுக்கப்படும் என்றும், ஆசிரியர் தகுதித்தேர்வில் எடுக்கப் படும் மதிப்பெண்கள் 60 சதவீதத் திற்கும், ஆசிரியர் பட்டயத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் 25 சதவீதத் திற்கும், மேல்நிலைப்பள்ளி பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் 15 சதவீதத்திற்கும்,கணக்கில் கொள்ளப் படும் என்றும் குறிப்பிடப்பட்டுள் ளது.

அதேபோன்று பட்டதாரி ஆசி ரியர் நியமனத்தைப் பொறுத்தவரை ஆசிரியர் தகுதித் தேர்வில் எடுக்கப் படும் மதிப்பெண்கள் 60 சதவீதத்திற் கும், பி.எட். தேர்வில் எடுத்த மதிப் பெண்கள் 15 சதவீதத்திற்கும், பட்டப் படிப்பில் எடுத்த மதிப்பெண்கள் 15 சதவீதத் திற்கும், மேல்நிலைப்பள்ளி பொதுத் தேர்வில் பெற்ற மதிப் பெண்கள் 10 சதவீதத்திற்கும், கணக் கில் கொள்ளப்படும். என்று குறிப் பிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி, உயர்நிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி, தொழிற்கல்வி என்று ஒவ்வொரு நிலையை கடக்கும் போதும் தமிழக அரசால் நடத்தப் படும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தான் அவர்கள் மருத்துவர்களாகவோ பொறியாளர் களாகவோ விஞ்ஞானி களாகவோ ஆசிரியர்களாகவோ விளங்குகின்ற னர். பள்ளிக் கல்வியில் தோல்விய டைந்தவர்கள் கூட பலர் இன்று சிறந்த விஞ்ஞானிகளாகவும் தலைசிறந்த மருத்துவர்களாகவும் பல்வேறு துறை வல்லுநர்களாகவும் விளங்குவதை எடுத்துக்காட்டமுடியும்.

அப்படி இருக்கையில் தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளை தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும் செய்து வருவது ஏன்? ஆசிரியர்பணி நிய மனத்திற்கான, ஆசிரியர் பட்டயத் தேர்வையும் அவர்களின் பதிவு மூப் பையும் மட்டும் கணக்கில் கொள்ளா மல், அடுத்தடுத்து அவர்கள் பெற் றோர்களின் தகுதி என்ன? அவர்கள் பரம்பரையினர் என்ன செய்து கொண் டிருந்தார்கள்?

பிறப்பிலேயே இவர் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்தானா? என்கிற மனு தர்ம ஆராய்ச் சிக்கு தமிழக அரசு தயாராகி விட்டதோ? என்கிற முடிவிற்குத் தான் வரவேண்டியுள்ளது!

- கி.தளபதிராஜ், மயிலாடுதுறை

தமிழ் ஓவியா said...


ஆச்சாரியார் ஆட்சியிலே!


முஸ்லிம்கள் பெற்ற பரிசு - வந்தேமாதரம்

தமிழர்கள் பெற்ற பரிசு - இந்தி மொழி

விவசாயிகள் பெற்ற பரிசு - பணமுடை மிராசுதாரர்கள் பெற்ற பரிசு - கடன் தொகை சுவாஹா

தொழிலாளிகள் பெற்ற பரிசு - தடியடி, வேலைநிறுத்தம்

சமதர்மிகள் பெற்ற பரிசு - 144, 124ஏ, சிறைவாசம்

பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர் பெற்ற பரிசு - சம்பள வெட்டு

பொதுமக்கள் பெற்ற பரிசு - வரி உயர்வு (ரெஜிஸ்டிரேஷன் கட்டணம்)

ஆதிதிராவிடர் பெற்ற பரிசு - தலைமொட்டை, அடி (நீடாமங்கலக் கொடுமை)

பத்திரிகைகள் பெற்ற பரிசு - ஜாமீன்தொகை

ஆனால், பார்ப்பனர் பெற்ற பரிசு - பத்தில் நாலு மந்திரி. 26இல் 19 உத்தியோகம்

இவ்வளவிற்கும் பதிலாக நீங்கள் ஆச்சாரியாருக்கு என்ன பரிசு அளிக்கப் போகிறீர்கள்?

குடிஅரசு - 06.02.1938

தமிழ் ஓவியா said...


தேவசகாயம் பேச்சு!

ஆண்டமாரே!

நாங்கள் நீடாமங்கலம் காங்கிரஸ் கூட்டத்திற்கு வேடிக்கை பார்க்கப் போனோம். அங்கு எல்லோரும் சாப்பாட்டிற்கு போகும் போது எங்களையும் கூப்பிட்டார்கள்.

நாங்களும் சாப்பாட்டுக்குப் போனோம். பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எங்களை ஒரு சபாபதி உடையார் என்பவர் வந்து தலை மயிரைப் பிடித்து இழுத்து, ஏண்டா பள்ளப் பயல்களா? உங்களுக்கு இவ்வளவு ஆணவமா, இந்தக் கூட்டத்தில் வந்து உட் கார்ந்து சாப்பிடலாமா? என விறகுக் கட்டையால் அடித்தார்கள்.

அடி பொறுக்கமாட்டாமல் சிலர் ஓடி ஆற்றில் விழுந்து அக் கரைக்குப் போய்விட்டார்கள். நாங்கள் சிலர் அடிப்பட்டுவிட்டு வீட்டுக்குப் போய்விட்டோம். மறுநாள் நாங்கள் வயலில் அறுவடை அறுத்துக் கொண்டிருக்கும் போது, கூட்டத்தில் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டது யார்? அவர்களைக் கொண்டுவா என்று கிருஷ்ணமூர்த்தி அய்யர் வந்து சொன்னார். நான் போனேன்.

அப்போது அய்யர் , அவனை சும்மா கொண்டு வருகிறாயா? அடி படவாவை என்று சொன்னார். தலையாரி மாணிக்கம் தடிக் கம் பால் அடித்துக் கொண்டு வந்தார். அடி பொறுக்கமாட்டாமல் ஓட ஆரம்பித்தேன். என்னைப் பிடித்துக் கொண்டுவந்து விளா மரத்தில் கட்டி வைத்து மறுபடி 10 அடி தடிக்கம்பால் அடித்தார்.

நாட்டாமைக்கார அடைக்கலம், நாட்டாமை ராமன் ஆகியவர் களை அய்யர் கூப்பிட்டு, இவனை அவிழ்த்துக் கொண்டு போய் மொட்டை அடித்து சாணியை ஊத்தி விடு என்று சொன்னார். அந்த பிரகாரம் பரியாரி கதிர்வேல் மகன் ஆறுமுகம் மொட்டை அடித்தார். தலையாரி மாணிக்கம் சாணி ஊத்தினார். பிறகு நான் தலையை முழுகி விட்டு வீட்டுக்குப் போய்விட்டேன்.

நாலுநாள் சென்றபிறகு எங்களைப் பற்றி ஏதோ பேப்பரில் வெளிவந்ததாக நாட்டாமைக்கார அடைக்கலம், நாட்டாமைக்கார ராமன் ஆகியவர்கள் வந்து என்னையும் கதிர்வேல் மகன் ஆறு முகம், பட்டி அருளானந்தம் மகன் சூசை ஆகியவர்களையும் ஆத்துக்கு அக்கரைப் புறமாக அய்யர் கூப்பிடுவதாகக் கூட்டிக் கொண்டு போனார்கள்.

உடையார் பங்களாவைச் சேர்ந்த வாழைக் கொல்லையில் எங்கள் மூன்று பேரையும் வைத்து போட்டோ படம் எடுத்தார்கள். அதன்பிறகு பங்களாவுக்கு கூட்டி வந்து எழுதாத காகிதத்தில் ஒவ்வொருவரிடமும் ஆறு கையெழுத்து வாங்கி னார்கள். ஏதோ எழுதின காகிதம் சிலவற்றில் கையெழுத்துப் போட்ட பிறகு அய்யர் எங்களுக்கு மொத்தமாக 14 அணா கொடுத்தார்.

பிறகு உடையார் 1 ரூபாய் கொடுத்து, போய் கள்ளுக் குடித்து விட்டு வீட்டில் படுத்துக் கொள்ளுங்கள். வீடுபோய்ச் சேருங்கள் என்று சொன்னார். நாங்கள் போய்விட்டோம். எங்களுக்கு ஆளுக்கு 0-4-3 அணா வந்தது என்று பேசினார்.

(நீடாமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி பாதிக்கப்பட்ட தோழர் தேவசகாயம் 28.01.1938 அன்று ஈரோட்டில் ஆற்றிய உரை)
குடிஅரசு - சொற்பொழிவு - 30.01.1938

தமிழ் ஓவியா said...


இது தேசியமா? வகுப்புவாதமா?


அக்ரகார மந்திரிகள் காலத்தில் நடக்கும் அட்டூழியம்

அக்ரகார மந்திரிகள் ஆட்சியில் மிருக வைத்தியர்கள் பதவிக்கு பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பெயர் விவரம்:

பார்ப்பனரல்லாதவர் 05.01.1938

1. பி.பாலகிருஷ்ணமேனோன்,

2. ஆர்.பூமலிங்கம்பிள்ளை

3. ஆர்.விஜயரங்கம்,

4. ஜே.சீதாராமன்

5. ஆர்.நாராயணசாமி

பார்ப்பனர்:

1. டி.சுப்பராவ்,

2. கெ.பாலகிருஷ்ணஅய்யர்,

3. ஜி.தண்டபாணி அய்யர்,

4. எம்.ராமகிருஷ்ண அய்யர்,

5. டி.ஆர்.சிறீநிவாச அய்யர்,

6. எஸ்.நடராஜ அய்யர்,

7. ஆர்.சுப்பிரமணிய அய்யர்,

8. வி.கிருஷ்ணராவ்,

9. எம்.அனுமந்தராவ்,

10. மு.க.வி. பார்த்தசாரதி அய்யர்,

11. கெ.வைத்தியநாத அய்யர்,

12. எம்.எஸ்.ஆர்.ஆஞ்சனேய பந்துலு,

13. எஸ்.சங்கர அய்யர்,

14. வி.சுப்பிரமணிய அய்யர்,

15. பி.ஆர்.தியாகராஜ அய்யர்,

16. பி.மோகனராவ்,

17. யு.எஸ்.அசுவநாத நாராயணய்யர்,

18. கெ.ராமராவ்,

19. வி. கிருஷ்ணமூர்த்தி அய்யர்

முகம்மதியர்:

1. ஆக.முகமது ஹூசேன் ஷெராகி

கிறிஸ்தவர்:

1. எ.மங்களநாதன்

11.01.1938 போர்ட் சென்ட் சார்ஜ் கெஜட்

குடிஅரசு - 23.01.1938

தமிழ் ஓவியா said...


புது காங்கிரஸ் தலைவர் யோக்கியதை!


சுபாஷ் சந்திரபோசுக்கு பார்ப்பனர்களின்
(ஆனந்தவிகடனின்) சர்ட்டிபிகேட்:

சுபாஷ் போஸுக்கு ஒரே ஒரு குறை மட்டும் உண்டு. சுபாஷ் போசுக்கு மற்ற தேசத் தலைவர்களுடன் ஒத்துழைக்கும் இயல்பு அவ்வளவு போதாது. தேசபந்து காலஞ்சென்றதும், உடனே தாம் வங்காளத்தின் தலைவராக வரவேண்டுமென்பதில் கொஞ்சம் அவசர புத்தி காட்டினார்.

இதன் பயனாக, உரிய காலத்தில் வங்காளத்தின் ஒப்பபற்ற தலைவராக வரவேண்டியவர் ஒரு கும்பலின் தலைவர் ஆனார். வங்காளத்தில் காங்கிரஸ்காரர்கள் பிளவுபட்டு, காங்கிரஸ் வேலைகள் ரொம்பவும் சீரழிந்து போயிருந்ததற்கு சிறீ சுபாஷ் போஸ் பெரிதும் பொறுப்பாளி என்பதை தேசம் மறந்து விட முடியாது ஜவஹர்லாலுக்கு இதே பார்ப்பனர்கள் (சுதேச மித்திரன்) கொடுத்த நற்சாட்சி பத்திரம் முன்னமே எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது.

எனவே, எந்தத் தலைவரானாலும் சரி, பார்ப்பன அடிமையாய் இருந்தால் விளம்பரப்படுத்தி மகாத்மா ஆக்குவதும் சுதந்திர புத்தி கடுகளவாவது இருந்தால் அவர் எப்படிப்பட்ட தியாகியானாலும் இழிவுபடுத்தி ஒழிப்பதும் பார்ப்பன இயற்கை - ஆரிய தர்மம் என்பதை உணர்வோமாக.

குடிஅரசு - கட்டுரை - 23.01.1938

தமிழ் ஓவியா said...


ஆபத்து! ஆபத்து! புரோகித ஆட்சியால் பார்ப்பனரல்லாதாருக்கு ஆபத்து!!!


1. காலேஜ் கமிட்டியை எடுத்து விட்டார்கள். இதனால் நமது பிள்ளைகளுக்குக் காலேஜ்களில் சரியான இடம் கிடைக்காது.

2. பப்ளிக் பிராசிகூட்டர்களை வக்கீல்கள் தெரிந்தெடுக்க வேண்டுமாம். அப்படியானால் பார்ப்பனரல்லாதார்கள் பப்ளிக் பிராசிகூட்டர் ஆகமுடியாது. ஏனெனில் பார்ப்பன வக்கீல்கள் 100-க்கு 90-பேர். அவர்கள் ஓட்டுகள் பார்ப்பனருக்குத்தான் போகும்.

குடிஅரசு - 06.03.1938

தமிழ் ஓவியா said...


1892ஆம் ஆண்டு காவிரி நதிநீர் ஒப்பந்த நகல் பெங்களூர் ஆவண காப்பகத்தில் காணவில்லையாம்


பெங்களூரு, அக். 13- காவிரி நதிநீர் பங்கீடு குறித்து மைசூர் அரசுக் கும், மதராஸ் மாகாணத் துக்கும் இடையே 1892 ஆம் ஆண்டு போடப் பட்ட ஒப்பந்த நகல் பெங்களூரு ஆவண காப்பகத்தில் இருந்து மாயமாகியுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின்போது மத ராஸ் மாகாணத்துக்கும், மைசூரு அரசுக்கும் இடையே 1892ஆம் ஆண்டு காவிரி நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் போடப் பட்டது. இதுதான் காவிரி பங்கீடு தொடர் பாக ஏற்படுத்தப்பட்ட முதலாவது ஒப்பந்தம். இதில், கர்நாடகாவை விட தமிழகத்துக்குதான் காவிரி தண்ணீரில் அதிக உரிமை உள்ளதாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தப்படி தமிழகம் தனது நீர் பாசன திட் டங்களை விரிவுபடுத்திக் கொள்ள வாய்ப்பு கொடுக்கப் பட்ட நிலையில், கர்நாட காவுக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தின் பிரதி, கர்நாடக அரசின் ஆவணக் காப்பகத்தில் இல்லை. நாளிதழ் ஒன்று அந்த பிரதியை ஆவணக் காப்பக அதிகாரிகளி டம் கேட்டு விண்ணப் பித்துள்ளது. ஆனால், தீவிரமாக தேடிய பிறகு ஒப்பந்த பிரதி இல்லை என்று அதிகாரிகள் கைவிரித்துள்ளனர்.

இது குறித்து அதி காரி ஒருவர் கூறுகையில், அரிதான ஆவணங்களை ஆவணக் காப்பகத்தின் வரலாற்று முக்கியத்து வம் பெற்ற பாதுகாப்பு பிரிவில் வைத்திருப்போம். ஆனால், 1892ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. 1892ஆம் ஆண்டைய அரசிதழி லும் அந்த ஒப்பந்தம் குறித்த தகவல்கள் இடம் பெறவில்லை என்றார். 14-10-2012

தமிழ் ஓவியா said...

நெ.து.சு. நூற்றாண்டு நிறைவு விழாவில் பேராசிரியர் க.அன்பழகன், ஞானதேசிகன் நீதியரசர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்பு
நெ.து.சுவால் பலர் அறிஞர்களாக உயர்ந்திருக்கிறார்கள்: தமிழர் தலைவர் உரை

கல்விநெறிக் காவலர் நெ.து.சுந்தரவடிவேலு நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழர் தலைவர் உரை...

சென்னை, அக். 13- பள்ளிக்கல்வி இயக்குநராகவும், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பணியாற்றி மறைந்தவர் நெ.து.சுந்தரவடிவேலு. அவருடைய நூற்றாண்டு விழா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.திருமலாச்சாரி தேசிய பெண்கள் கல்வியியல் கல்லூரி வளாக அரங்கத்தில் நடைபெற்றது. விழாவுக்கு குஜராத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பு.ரா.கோகுல கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

தமிழ் ஓவியா said...


சமூக சேவகி டாக்டர் சரோஜினி வரதப்பன், முன்னாள் துணைவேந்தர் எஸ்.வி.சிட்டி பாபு, பேராசிரியர் எஸ்.என். சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினார்.

தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன், நெ.து.சுந்தரவடிவேலுவின் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நெ.து.சுந்தரவடிவேலுவின் புரட்சியாளர் பெரியார் என்ற புத்தகத்தை வெளியிட்டார். கல்வித்தந்தை நெ.து.சு என்ற நூலை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் எம்.பி.வெளியிட்டார்.

தமிழ் ஓவியா said...

நூற்றாண்டு விழாக்குழு தலைவர் மு.நாகநாதன், முன்னாள் எம்.பிக்கள் பீட்டர்அல்போன்ஸ், கார்வேந்தன், முன்னாள் அய்.ஏ.எஸ் அதிகாரி ஏ.எம். சாமிநாதன், பேராசிரியர் எஸ்.என்.சொக்கலிங்கம் உள்பட பலர் பேசினார்கள்.

ஏ.கோபண்ணா, ஆசிரியர் ரெங்கசாமி, இரா.வில்வ நாதன், மயிலை சேது, தி.மு.க பிரமுகர் கணேசன், மாம்பலம் சந்திரசேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேசிய கப்பல் வாரிய உறுப் பினர் ஆர்.ராஜ் மோகன் வரவேற்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்ட தாவது: மிகுந்த நன்றி உணர்வோடும், எழுச்சியோடும் நடைபெறக்கூடிய தமிழ்நாட்டின் கல்விபுரட்சி செய்த தலைச்சிறந்த ஒரு மாமேதை நெ.து.சுந்தரவடி வேலுவின் நூற்றாண்டு நிறைவு விழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.

இந்த விழாவிலே மிகச்சிறப்பான பணி எனக்கு அளித்தமைக்காக விழாக் குழுவினருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நெ.து.சு. அவர்களுடைய நூற்றாண்டு விழா மிகப் பெரிய அளவிலே நன்றி காட்டக்கூடிய அளவிலே நடத் திருக்க வேண்டும் ஆனால் நம்முடைய சமுதாயம் நன்றி காட்டுவதிலே அரிதிலும் அரிதானது.

இந்த அரங்கத்திலே அவர்களாலே பயன் பெற்ற வர்கள் நிறைந்திருப்பது மிகப்பொருத்தமானதாகும். பெரியார் திடலில் நெ.து.சு. நூற்றாண்டு துவக்கம் நடந்தது. அதற்கடுத்து பல இடங்களில் நடந்தாலும் கூட அவரை நினைவு கூரக் கூடியவர்கள் அவரால் முன்னுக்கு வந்தவர்கள் என்று சொன்னால் லட்சணக்கிலே இருப்பார்கள்.

அந்தவகையில் மிகப் பெரிய தொண்டறச் செம்மலாக, கல்வி வள்ளலாக அவர் அமைந்திருந்தார். இங்கே எனக்கு நூலை வெளியிட ஆணையிட்டு இருக்கிறார்கள். அதன்படி செய்தேன். நான் அமெரிக்கா, வாசிங்டனில் அந்த நாட்டு விடுதலை நாள் விழாவினை காண நண்பர் களோடு சென்றிருந்தபோது இரவு நேரத்திலே என்னை ஒருவர் சந்தித்தார். அவர் இப்போது அந்த நாட்டில் மிகப்பெரிய விஞ்ஞானியாக இருக்கிறார்.

அப்போது அவர் என்னிடத்திலே சொன்னார். நாங்கள் அமெரிக்காவிற்கு வந்து பெரிய விஞ்ஞானி யாக இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு காரணம் 3 பேர்தான். ஒருவர் தந்தை பெரியார், மற்றொருவர் பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட பச்சைத் தமிழர், கல்வி வள்ளல் காமராசர். அவருக்கு அடுத்தப்படியாக ஏழை எளியோருக்கு எல்லாம் கல்வி கிடைக்க வழிவகுத்த நெ.து.சுந்தரவடிவேலு ஆவார்கள். எனக்கு அட்மிசன் கொடுத்தது நெ.து.சுந் தரவடிவேலு அவர்கள்தான்.

ஆகையால்தான் நான் இன்றைக்கு அமெரிக்காவில் இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறேன். என்னை யாரென்றே அவருக்கு தெரியாது ஆகையால் அவர்களுடைய வழியிலே வரக்கூடிய உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினாரே அதுதான் நெ.து.சு அவர்களுக்குப் பெருமை.

நெ.து.சு கொள்கையில் உறுதியானவர். நேர்மை யானவர், அப்பழுக்கற்றவர். அதே நேரத்தில் நெருப்பாகவும் இருந்தவர் தந்தை பெரியார் அவர்களிடத்திலே நேர்மையாக இருந்தவர். ஒடுக்கப்பட்டோருக்கு முன்னுரிமை அளித்தவர். பத்தாண்டுகளுக்கு முன்பே திருச்சியிலுள்ள பெரியார் கல்வி வளாகத்திலே பெரியார் மருந்தியல் கல்லூரியில் அமைந்துள்ள மிகப்பெரிய கட்டடத் திற்கு நெ.து.சுந்தரவடிவேலு- காந்தம்மையார் கட்டடம் என அவர் நினைவைப் போற்றும் வகையில் பெயர் வைத்துள்ளோம்.

எத்தனையோ பேரை அவர் உயர்த்தி இருக்கிறார். கல்வியாளர் களாக யார் யார் இருக்கிறார்களோ அவர்கள் இருக் கும்வரை நெ.து.சு அவர்களின் நினைவு இருக்கும் என மேலும் பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார்.

நிகழ்ச்சியில் இறுதியாக செயலாளர் பி.ரத்தின சபாபதி அனைவருக்கும் நன்றி கூறினார்.

தமிழ் ஓவியா said...


அறிவியலைப் போல அழியாதது திராவிடர் இயக்கம்!


சென்னை, அக். 13- இயல், நாடக, நூல் வெளியீடு என்று முப்பெரும் விழா வாக 11.10.2012 அன்று இயல் விழாவாக வும், சனிக் கிழமை (13.10.2012) அன்று நாடக விழாவாகவும் அழ கர் சாமியின் குதிரை திரைப் படத்தை திரை யிட்டும் தந்தை பெரியார், அறி ஞர் அண்ணா பிறந்த நாளை பெரியார் நூலக வாசகர் வட்டம் கொண் டாட திட்டமிட்டிருந்தது. அதன்படி முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் 1930 ஆவது நிகழ்வாகவும் அமைந்த இந்த நிகழ்ச்சி, வியாழன் (11.10.2012) மாலை பெரியார் திட லில் உள்ள அன்னை மணியம்மை யார் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச் சியை, வாசகர் வட்டத் தின் துணைச் செய லாளர் த.சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற் றுப் பேசினார். தொடர்ந்து அதன் தலைவரான மயிலை நா.கிருஷ்ணன் தலைமை யுரையாற்றினார். முரசொலி நாளிதழின் பொறுப்பாசிரியர் பி.டி.சக்திவேல் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா இருவரும் இணைந்திருக்கும் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.

திரைப்பட பின்னணிக் குரல் கலைஞர்களுக்குப் பாராட்டு

வெள்ளை சுப்பையா, சுப்புலெட்சுமி சிவராமன் ஆகியோர்க்கு சிறப்பு...

தமிழ் ஓவியா said...

பின்னணியில் இருப் பவர்களை முன்னணிக் குக் கொண்டு வரும் சிந்தனையைத் தூண்டும் வகையில், திரைப்படப் பின்னணிக் குரல் கலை ஞரும் நடிகருமான வெள்ளை சுப்பையா, திருமதி சுப்புலெட்சுமி சிவராமன் ஆகிய இரு வருக்கும் தமிழர் தலை வர் பரிசு வழங்கிச் சிறப் பித்தார்.

நீண்ட ஆயுளுக்கான உணவு முறைகள்

பரிசளிப்பைத் தொடர்ந்து, அவர்களால் வாசகர் வட்டத்தில் ஆற்றிய உரை நூலாக தொகுக்கப்பட்டு தமிழர் தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டது. அவர் தமதுரையில், பரிசு பெற்ற அனைவரையும் பாராட்டிப் பேசிவிட்டு, பெரியாரையும், அண் ணாவையும் சுட்டிக் காட் டிப் பேசினார். அப்பொழுதுதான், திராவிடர் இயக்கம் அறி வியல் போன்றது. அதனை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது என்று பலத்த கைதட்டலுக் கிடையே குறிப்பிட்டார்.

பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் கி.சத்தியநாராயணன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். பொருளாளர் கு.மனோகரன் இணைப் புரை வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில், திராவிட இயக்க மூத்த ஆய்வாளர் கு.மனோகரன் க.திருநாவுக் கரசு, புலவர் வெற்றிய ழகன், திரைப்பட நடிகர் குமரி முத்து, முன்னாள் மேயர் சா.கணேசன் மற்றும் திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...

பெரியார் 1000 வினா விடை போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடத்தப் பட்ட பள்ளி மாணவர்களுக் கான பெரியார் 1000 வினாடி வினா எழுத்துத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு 11-10-2012 அன்று நடைப் பெற்ற விழாவில் தமிழர் தலைவர் அவர்களால் பரிசு வழங்கப் பட்டது.

சென்னையில் நடைபெற்ற பெரியார் 1000 வினாடி வினா போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு. கடைசி படம்: வேலம்மாள் பள்ளி மாணவி யாழினி நாகம்மையார் இல்லத்துக்கு ரூ.ஆயிரம் நன்கொடை அளித்தார்.

முதல் பரிசு ரூ. 5000/- கலிகி அரங்கநாதன் மாண்ட் போர்ட் பள்ளி யைச் சார்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஆர். பத்மநாபன் பெற்றார். இரண்டாம் பரிசு ரூ. 3000/- கலிகி அரங்கநாதன் மாண்ட் போர்ட் பள்ளி யைச் சார்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி த.கிறி டினா ஜுலி பெற்றார். மூன்றாம் பரிசு ரூ. 2000/- கிரேஷ் மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சார்ந்த ஆறாம் வகுப்பு மாணவி இரா.சுவேதா பெற்றார்.

முதல் பரிசினை கரிகாலன் அவர்களும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரி சினை ஆதம்பாக்கத்தைச் சார்ந்த தோழர் சபேசன் அவர்களும் வழங்கினர். இருவரை யும் தமிழர் தலைவர் அவர்களால் பயனாடை போர்த்தி சிறப்பித்தார்.

வேலம் மாள் மெட்ரிக்குலேசன் பள்ளி யில் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவி யாழினி, தான் பெற்ற பரிசுத் தொகை யான ரூ.ஆயி ரத்தை நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு தமிழர் தலைவரிடம் அளித்து மகிழ்ந்தார்.

நிகழ்வில் வட சென்னை மாவட்ட பகுத் தறிவாளர் கழகத்தின் தலைவர் இரா. தமிழ்ச் செல்வன், செயலாளர் கோவி.கோபால், துணைத் தலைவர் வெங்கடேசன், தென் சென்னை மாவட் டச் செயலாளர் திரா விடப் புரட்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர். போட்டியில் அதிக மாணவர்களை கலந்து கொள்ளச் செய்த கலிகி அரங்கநாதன் மாண்ட் போர்ட் பள்ளி ஆசிரியை டெய்சி மணியம்மை அவர் களும் கலந்து கொண்டார்.13-10-2012