Search This Blog

29.10.12

வீண் வம்புதானே பிராமணாள் ஓட்டல் என்பது?

தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்தின் திருச்சி மாவட்டக் கூட்டம் சிறீரங் கத்தில் நடைபெற்றுள்ளது. எதற்காகவாம்?

சிறீரங்கத்தில் சமுதாயத்தின் பெயரோடு செயல்பட்டு வரும் டிபன் கடைக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் பிரிவினருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல திருச்சி யில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட் டம் நடத்துவது எனத் தீர் மானிக்கப்பட்டது. (தினமலர் 27.10.2012 - திருச்சி)

இந்தத் தீர்மானத்தி லேயே ஒன்றை ஒப்புக் கொண்டுள்ளனர். தங்கள் சமுதாயத்தின் பெயரோடு செயல்பட்டு வரும் டிபன் கடையாம் (இவர்கள் சமு தாயத்தினர் மட்டும் போய் சாப்பிட்டால் போதுமோ!)

ஒன்றை மறைத்து விட்டார்களே - மறையவர்கள்; இந்தக் கடைக்கு இவர்களின் சமுதாயப் பெயரான பிராமணாள் என்பது தொடக்க முதலே இருந்து வந்திருக்கிறதா? இல்லையே! திடீரென ஒரு மாதத்துக்கு முன் துள்ளிக் குதித்து முண்டா தட்டுவது ஏன்?

உங்கள் சமுதாயப் பெயர் என்பது உங்கள் அளவில் மட்டுமே முடித்துக் கொண்டால் பிரச்சினையல்லவே! அந்தப் பெயர் அடுத்தவர்களை அவமதிக் கக் கூடாதே! நீ பிராமணன் என்றால் நாங்கள் யார்? சூத்திரர்கள் தானே? சூத்திரர்கள் என்றால் யார்? உங்கள் மனுதர்ம சாத்திரம் (அத்தியாயம் 8 சுலோகம் 415) என்ன கூறுகிறது? சூத்திரர்கள் ஏழு வகைப்படுவர் அதில் ஒன்று வேசி மகன் என்று கூறப்பட்டுள்ளதே! இந்த இழிவை இந்த 2012லும் எங்கள் மீது மறைமுக மாகத் திணிக்கும் திமிரிடி தானே, வீண் வம்புதானே பிராமணாள் ஓட்டல் என்பது?

ஓட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவராக இருந்த திரு. எம்.பி. புருசோத்தமன் - எல்லா ஓட்டல் முதலாளிகளுக்கும் சுற்றறிக்கை வெளியிட வில்லையா? பிராமணாள் பெயர் நீக்கப்பட்டு விடும் என்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளருக்கு அதிகார பூர்வமாகக் கடிதம் எழுதிடவில்லையா? 1978ஆம் ஆண்டிலேயே முடிந்து போன கந்தாயத்துக்கு உயிரூட்ட முயற்சிப்பது ஏன்? அதன் பின்னணி என்ன? அதிகார அரசியல் தங்கள் கையில் வந்துவிட்டது என்ற நினைப்பா?

ஒரு கட்டத்தில் சென்னை போன்ற நகரங்களில்கூட சூத்திரர்கள் பஞ்சமர்கள் உள்ளே அமர்ந்து சாப்பிட முடியாத நிலை! எடுப்பு சாப்பாடு எடுத்த காலம் ஒன்று இருந்தது. போராடித்தானே ஒழித்தோம்!


இப்பொழுது இன்னொரு வகையில் பிராமணாள் பாம்பு தலை எடுத்தால் அதனை அனுமதிப்பது எப்படி? நூற்றுக்கு 97 விழுக்காடு மக்களை 3 சதவிகித மக்கள் இழிவு படுத்திட அனுமதிக்க முடியுமா? பிராமணாள் பன்றி இறைச்சிக் கடை - பிராமணாள் பசு மாமிசக் கடை, பிராமணாள் கருவாட்டுக் கடை என்று யாராவது வைக்க முன் வந்தால் என்ன செய்ய முடியும்?

புலியின் வாலை மிதிக்க ஆசைப்பட வேண்டாம் - உண்ணவிரதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை மேற் கொண்டால் அது எங்கள் போராட்டத்துக்கு, பிரச் சாரத்துக்கு நீங்கள் இலவசமாக எங்களுக்குச் செய்யும் பிரச்சாரப் பேரு தவிதான்! பார்ப்பானுக்கு ஏது முன் புத்தி?

------------------------ மயிலாடன் அவர்கள் 29-10-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

11 comments:

தமிழ் ஓவியா said...

மத்திய அரசை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது சரியான அணுகுமுறையில்லை


மின் தேவைக்காக கோரிக்கை வைத்தது நியாயமே! - ஆனால்

பிரதமரை முதல்வர் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டுமே தவிர

உச்சநீதிமன்றம் வழக்கு - அணுகுமுறை தவறானது!

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை


தமிழ்நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தினைப் பெறுவதற்கு தமிழ்நாடு முதல் அமைச்சர், பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்து சாதிக்க வேண்டுமே தவிர, மத்திய அரசை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது சரியான அணுகுமுறையில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு மின்வெட்டு 16 மணி நேரம் வரை சென்று கொண்டிருக்கிறது; இதனால் மக்களுக்குப் பல்வகைத் துன்பங்கள்.

தூக்கமின்மையில் தொடங்கி, டெங்கு காய்ச்சல் வரை பரவலாகி வரும் அவல நிலை ஓர்புறம்; மின்வெட்டு காரணமாக, தேர்வுக்கு மாணவர்கள் படிக்க முடியாது தவித்தல், சிறு, குறு தொழிற்சாலைகள் மின்வெட்டினால் மூடி, பல்லாயிரக்கணக்கில் வேலை வாய்ப்பை இழந்து வாடிடும் இளைஞர் கூட்டம் நாளும் பெருகுகிறது. காவிரி டெல்டா விவசாயிகளை - தற்காலிகமாக மழை பெய்து ஓரளவுக்கு காப்பாற்றும் என்று நினைத்து மகிழ்ந்தபோது, அதிகம் பெய்து சம்பா பயிர்கள் அழுகி ஏராளமான நட்டத்தை ஏற்படுத்தி விட்டது.

தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு இரண்டு மணி நேரம் தானே - இப்போது?

இந்நிலையில் தி.மு.க. ஆட்சியின் போது புதிய வேலை வாய்ப்புத் தந்த வெளிநாட்டவர் இங்கே துவங்கிய தொழிற்சாலைகள் காரணமாகவும், ஒன்றரை கோடி தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாக வழங்கியும், குடிசை நீங்கிய புதிய வீடுகள் வந்ததின் காரணமாகவும் மின் தேவை, உற்பத்தியை விட அதிகம் ஆன படியால் இரண்டு மணி நேர மின்வெட்டு வந்தது. அதைத் தேர்தலில் பயன்படுத்தியது அ.தி.மு.க. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதங்களில்இதனை மாற்றிக் காட்டுவோம்; மின் மிகை மாநிலமாக்குவோம் என்றெல்லாம் தேர்தல் வாக்குறுதிகளை வாரி வாரி வழங்கியதை மக்களும் நம்பினர்; வாக்களித்தனர்.

தமிழ் ஓவியா said...

ஒன்றரை ஆண்டுகளில் அத்தனையும் சாதிப்போம் என்றது அ.தி.மு.க. ஆட்சித் தலைமை - முதல்வர். இப்பொழுது ஒன்றரை ஆண்டுகள் ஓடிவிட்டனவே - சாதிக்கப்பட்டது என்ன? மந்திரத்தால் மாங்காய் விழாது என்பதற்கொப்ப, மின்வெட்டைப் போக்க, ஆக்க ரீதியான வழிவகையை நடைமுறைக்கேற்ற வழியில் - அதுவும் ஒரு கூட்டாட்சியைக் காண தமிழக ஆட்சியாளர் - முதலமைச்சர் முயற்சிக்க வேண்டும்.

முந்தைய தி.மு.க. ஆட்சியையே குறை கூறிக் கொண்டு அரசியல் லாவணியில் ஈடுபடுவது எந்த பயனையும் தராது; பொது மக்களின் வேதனையை தீர்க்க உதவாது. கூடங்குளம் பிரச்சினையில் முடிவெடுக்கத் தாமதம்!

மத்திய அரசுக்கு சில மாநிலங்களால் தரப்பட்ட சுமார் 900 மெகாவாட் மின்சாரத்தை எங்களுக்கு வழங்குங்கள் என்று கேட்பது நியாயமானதுதான்; கூடங்குளம் மின்உற்பத்தியை தாமதப்படுத்தாமல் முதலிலேயே தமிழக அரசு ஒரு திடமான நிலைப்பாட்டை எடுக்காமல், இரட்டை நிலைப்பாட்டை துவக்கத்தில் எடுத்ததால் போராட்டக்காரர்களுக்கும் ஒரு புதுத் தெம்பு கிடைத்தது; நம்பி ஏமாந்து இன்று சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் வரை அது கொண்டு போய் விட்டது.

கூடங்குளம் மின் உற்பத்தியை முழுவதும் தமிழ்நாட்டிற்கே வழங்க வேண்டும் என்று கேட்டார் முதல்வர்; நாமும் அது சரிதான் என்று அறிக்கை விடுத்தோம். மத்திய இணையமைச்சர் திரு. நாராயணசாமி அவர்களும்கூட அதை ஆதரிக்கிறோம் என்றார் கோரிக்கையில் உள்ள நியாயத்தைக் கருதி.

நீதிமன்றம் சென்றது சரியா?

அதுபோலவே இப்போது மத்திய அரசுக்குத் தரப்பட்டுள்ள அந்த மின்சக்தியை தமிழ்நாட்டில் மின்வெட்டு அதிகமாக இருப்பதால், தமிழ்நாட்டிற்கு அதைத் தர வேண்டும் என்று முதல் அமைச்சர் அவர்கள் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளது நியாயமானதுதான். அதை நாம் ஆதரிக்கிறோம்.

ஆனால் அதற்காக அவர் கடைப்பிடிக்க உத்தேசித்துள்ள முறை - உச்சநீதிமன்றத்திற்குச் சென்று வழக்குப் போட்டு, அதைப் பெற முயற்சிப்போம் என்பது சரியான அணுகுமுறை அல்ல. கூட்டாட்சியில் உள்ள ஒரு மாநில முதல்வர், பிரதமரை, மத்திய மின்துறை அமைச்சரை டெல்லி சென்று நேரில் வற்புறுத்திக் கேட்டு, வெற்றியடைய முயற்சிக்க வேண்டுமே தவிர, மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஓர் இணக்கச் சூழலை ஏற்படுத்தி, பிரச்சினையைத் தீர்க்க அந்த அணுகுமுறை ஒரு போதும் உதவாது.

பிரதமரை நேரில் சந்தித்து, ஆவன செய்ய கேட்டுக் கொள்ள வேண்டும்.

பிரதமரை நேரில் சந்திக்க வேண்டாமா?

குஜராத் அரசுடன் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போட்ட போதே, மின்தட வசதியில் மின்சாரத்தைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர சிக்கல் உள்ளது என்று அறிந்தவுடனேயே மத்திய அரசுக்கு, பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு நிறுத்திக் கொள்ளுவது எவ்வளவு தூரம் காரியசித்திக்கு உதவிடும் என்பதை எண்ணிப் பார்த்து, பிரதமரை நேரில் சந்தித்து இச்சிக்கலுக்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு, தமிழக அரசுக்குச் சாதகமாக அமையும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது. மாறாக அமைந்தால் தாங்களே இரட்டைத் தாழ்ப்பாள் போட்டதாக ஆகி விடாதா? நீதிமன்றங்களே எல்லா ஆணைகளையும் பிறப்பித்து விட முடியுமா என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.

எனவே முதல் அமைச்சர் கோரிக்கையில் உள்ள நியாயத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் செல்வதை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

காரியம் பெரிதே தவிர, வீரியம் பெரிதல்ல என்று சாதாரண மக்கள் மத்தியில் ஒரு சொலவடை உண்டு.

கர்நாடகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடுவதற்கு வழக்குப் போட்டது வேறு. மத்திய அரசு மீது மின்சாரம் வழங்க ஆணையிட வேண்டும் என்று வழக்குப் போட்டுத் தீர்ப்புக் கோருவது வேறு.

இது ஆரோக்கிய அரசியல் நடைமுறை ஆகாது. உறவுக்குக் கை கொடுத்து, உரிமைக்குக் குரல் கொடுப்பது நியாயம். ஆனால் மத்திய அரசைக் குற்றம் சுமத்தி, இவைகளைப் பெற வைப்பது என்பது நல்ல முன்னுதாரணம் ஆகாது. தவறான அணுகுமுறையாகும்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


சென்னை
28.10.2012

தமிழ் ஓவியா said...

பாவளி கொண்டாடும் தமிழர்களே அசுரன் யார் என்று தெரியுமா?திராவிடர்கள், வாழ்க்கை வசதிகள், பண்பாடுகள் நிறைந்த நாகரிக இனமாக வாழ்ந்து வந்தனர். கைபர், போலன் கண வாய் வழியாக ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு ஆரியர் கூட்டம் பிழைப்புக்கு வழிதேடி வந்தனர். செழிப்பான திராவிட நாட்டைப் பார்த்து இங்கேயே தங்கி விட்டனர். ஆரியர்கள் யாகம் என்ற பெயரால் சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளைக் குடித்தும், ஆடு, மாடு, மான், குதிரை முதலிய விலங்குகளைக் கொன்று தின்றும், காமக்களியாட்டங்களை நடத்தினர். புலால் உண்ணாமை, பண்பாடு, நாகரிகம் நிறைந்த திராவிடர்கள் யாகத்தைத் தடுத்தனர். ஆரியர்கள் திராவிட இனத்தாரில் சிலரை போதைப் பொருள்களையும் தங்கள் இனப் பெண்களையும் கொடுத்து வசப்படுத்த ஆரம்பித்தனர். ஆரிய இனப் பெண்களின் நிறத்தை யும், உடலையும் பார்த்து பலர் அவர் களின் வலையில் வீழ்ந்தனர். அந்த துரோகிகளை இந்திரர்கள் என்று கூறி, அவர்களின் துணை-யுடன், யாக எதிர்ப்பாளர்களைக் கொன்று யாகத்தை நடத்தினர். ஆரியர்கள் கூறிய வேதங்கள் என்பவை, யாக நடப்புகளையும் அவர் களுக்குக் கிடைத்த உதவிகளையும் தெரி விக்கின்றது. வேதங்களையும், கற்பனைக் கடவுள்களையும் சொன்னவர்கள் தேவர்கள் (சுரர்கள்) என்றும், வேதத்தை யும் கடவுள் வணக்கத்தையும் எதிர்த்த வர்கள் அசுரர்கள் என்றும் மதுவையும் சொல்லப்பட்டுள்ளது. ரிக், அதர்வண வேதங்களில் யாகத்தைத் தடுக்கும் அசுரர்-களை அழிக்கும்படி இந்திரன், சோமன், அக்னி என்பவர்களைக் கோரும் மந்திரங்-கள் பலவும் உள்ளன. அவர்களால் கொலை செய்யப்பட்டதாக சாஸன், அகி, விருத் திரன், சம்பரன், சகவசு, திருபீகன் உரன், சுக்கனன், சுவசன், விபம்சன், பிய்ரு, நமுசி,ருதிக்கிரமன், அதிதிக்கவன், குதச்சணி, ஆபுதி, கிருணகரு என்ற பலம் பொருந்திய அசுரர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் மேற்கண்ட அசுரர்களை அழித்த இந் திரன், சோமன், அக்னி முதலியவர்களை வணங்கி மேலும் அசுரர்களை அழிக் கும்படி வேண்டுகின்றனர். அதில் அசுரர் களின் மணிக்-கட்டை முறி, தோலைக் கிழி, முழங்-கால், முழங்கை, கழுத்துக்ளை முறி, கிழித்தெறி, சின்னா பின்னப்படுத்து, அக்னி சுவாலையால் சுடு, துண்டு துண் டாக வெட்டு, நீர்ப்பானையில் வைத்து வேகவை, பூமி விழுங்கட்டும், படு பாதாளத்தில் விழட்டும், மலை வெடித்து விழுங்கட்டும், நாசமாகட்டும், பசுவின்பால் அவர்களுக்கு நஞ்சாகட்டும், வாரிசு இல்லாமல் அழியட்டும், அவர்களது செல்வம், பசு முதலியவற்றை கொள்ளை-யடித்து எங்களுக்குக் கொடு என்று கேட்-கின்றனர். இவையனைத்தையும், தேவர்கள் குடி மயக்கத்தில்தான் செய்வர். அதனால் அவர்களுக்கு சோமரசத்தை திகட்டும் வரை கொடு என்கின்றனர். பின்னர் கற்பனையான இதிகாசங்களிலும் புராணங்களிலும் இந்த முறையே கடைப்பிடிக்கப்பட்டு திராவிடர்-களை அழித்ததாகக் கூறியுள்ளனர்.

அவற்றில் இரணியாட்சன், நரகாசுரன், கம்ஸன், சிசுபாலன், ஜராசந்தன், ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித்து, கவந்தன்; பெண்பாலர் தாடகை, சூர்ப்பனகை, சிம்மிகை என்ற திராவி டர்களின் பெயர்கள் வரு-கின்றன. அவர்களுக்கு உதவிய துரோகி-களை ஆழ்வார்கள் என்றுள்ளனர். திராவி டர்கள் பூர்வகுடிகள் என்பதை ரிக்வேதம் 2710 சுலோகத்தில் அசுரகுலத்தை, தாஸ இனத்தை, பழைமையாகவே தொன்று தொட்டு இங்கு வாழ்ந்து வருபவர்களை வேரோடு அழிக்கவும் என்றுள்ளது. திரா-விடர்களை வேதத்தில் அசுரர், அரக்கர், தஸ்யூ, தாஸர், சூத்திரன், தைத்ரியன், யதூ-தனர், பிசாசு, பூதம் என்று குறித்துள் ளனர். ஆயினும் பல இடங்களில் அசுரர் கள் வலிமை மிக்கவர்கள் யோக்கியர்கள் என்றுள்ளது.

அசுரர் என்பது காரணப் பெயரே. சுரன் என்றால் சுரபானம் (மது) அருந் துபவர். அசுரன் என்றால் மது அருந் தாதவர்கள். ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன. இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்-கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர். அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க திராவிடர்களையே குறிக்கிறது. அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர். இந்த உண்மையை, தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்கு எடுத்-துரைத்து, புராண இதிகாசங்களில் சொல்லப்-பட்டு நமது மக்கள் கொண்டாடும் பண்டி-கை-கள் நமது இன முன்னோர்களை அழித்த நாள்களே என்பதால், அவற்றைக் கைவிட்டு மானமும் அறிவும் உள்ள மக்களாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறிவும் இல்லாமல் தங்-களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும்.

- விடுதலை, 27.10.2005

தமிழ் ஓவியா said...


தீபாவளி - தமிழர் விழா அல்ல!


(பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்கள் ஆழ்ந்த ஆராய்ச்சியாளர் அவரது அறியப்படாத தமிழகம் நூலிலிருந்து இக்கட்டுரை வெளியிடப்படுகிறது - படியுங்கள் - சிந்தியுங்கள். - ஆசிரியர்)

இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப் பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி, எண்ணெய், மாவு, பட்டாசு ஆகிய பெருந் தொழில்களின் பொருளாதாரம் சார்ந்த தாகவும் இத்திருவிழா கொண்டாடப்படு கிறது. தகவல் தொடர்புச் சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் தேசியத் திருவிழா போலக் காட்டப்படுகிறது. ஆயினும் தைப் பொங்கல் திருவிழா போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாகவும் ஒரு திருவிழாவிற்குரிய உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் சடங்கு களோடும் கொண்டாடப் பெறுவதாகவும் தீபாவளி அமையவில்லை. தைப் பொங்கல் சமய எல்லையினைக் கடந்து நிற்கும் திருவிழா. இது பழந்தமிழரின் அறுவடைத் திருவிழா. எனவேதான் இன்று ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்களில்கூடத் தைப் பொங்கல் கொண்டாடப் பெறுகிறது. ஆனால் தீபாவளி தமிழரின் திருவிழாவாக அமையாமல் இந்துக்களின் திருவிழா வாக அமைகிறது.

தமிழர் திருவிழா - இந்துக்களின் திருவிழா என்ற வேறுபாட்டினை எவ்வாறு பிரித்தறிவது? - பழைய வழிபாட்டு முறைகளோடு கூடிய தொல் சமய வழிபாடுகள், இவற்றின் சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த சைவம், வைணவம் ஆகியவையே தமிழர்களின் பழைய மதங்களாகும். இவை காட்டும் திருவிழாக்களான கார்த்திகைத் திருவிழா, திருவாதிரைத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, மாசிக்களரி எனப்படும் சிவராத்திரித் திருவிழா, பங்குனி உத்திரம், சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப் பதினெட்டாம் பெருக்கு ஆகியன சைவமும் வைணவமும் பெருஞ்சமயங்களாக நிலை பெறுவதற்கு முன்னரே தமிழர்கள் கொண்டாடிய திருவிழாக்களாகும். பக்தி இயக்கத்தின் வளர்ச்சியில் இவை சைவ வைணவ மதங்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன.

தீபாவளி, தமிழ்நாட்டின் மரபு வழிப் பொருளாதாரத்தோடும் பருவ நிலை களோடும் சடங்குகளோடும் தொடர்பில் லாத ஒரு திருவிழா. பார்ப்பனியத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண் டாடப்படுவதில்லை. தீபாவளியின் அடை யாளமான வெடி, அதன் மூலப் பொருளான வெடி மருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்குப் பதினைந்தாம் நூற்றாண்டுவரை அறிமுக மாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீப+ஆவளி) என்னும் வடசொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை. தமிழர்களின் விளக்குத் திருவிழா என்பது திருக்கார்த்திகைத் திருவிழாவே. நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ் ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும். தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும். இந்தநாளே பிராமணிய மதத்தின் எதிரி யான சமண மதத்தின் இருபத்து நாலாம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த (இறந்த) நாளாகும். தான் இறந்த நாளை வரிசையாகத்தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுக் கொண்டார். ஆகவே, பிராமணிய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மகாவீரர் இறந்த நாளையே ஆகும். விசய நகரப் பேரரசான, இந்து சாம்ராஜ்ஜியம், தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தக் காரணம் பற்றியே தமிழ்ப் பிராமணர்களைவிட, தமிழ்நாட்டில் உள்ள தெலுங்குப் பிராமணர்களே தீபாவளியைப் பக்தி சிரத்தையுடன் கொண்டாடுகின் றனர். வடநாட்டு இந்துக்களிடமும் சமணர் களிடமும் இல்லாதபடி தமிழ்நாட்டில் இத்திருவிழா நாளன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது தமிழ் நாட்டில் நீத்தார் நினைவில் இறுதி நாளைக் குறிக்கும், சடங்காகும். தமிழ் நாட்டுப் பிராமணர்களும் இத்திருவிழாவை இறந்தார் இறுதிச் சடங்கு போல கங்கா ஸ்நானம் செய்துகொண்டாடுவது குறிப் பிடத்தக்கது. ஆகவே உண்மையில் இத் திருவிழா பார்ப்பனிய மதத்தின் திரு விழாவேயன்றித் தமிழர் திருவிழா ஆகாது.

நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா என்று பாரதிதாசன் பாடுவதும் இங்கே நினைவுக்குரியது.

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம் - ஆரியகுணம்


தினமணியின் உட்பிரிவாக தமிழ்மணி வருதலும், அதில் தமிழ் குறித்த செய்திகள் வருவதைக் காண மகிழ்வும், நன்றியும் தெரிவிக்கின்றோம். எனினும், தினமணி தமிழினத்திற்கு உடன்பாடா? என்ற வினா எழும்படியாக, தினமணியின் உள்முகம் என்பது என்ன? என்பதனை 20.10.2012 திருச்சிராப்பள்ளி பதிப்பு 6ஆம் பக்கத்தில், கோயில்களில் தமிழ்; காந்திஜி கூறியது என்ன? எனும் கட்டுரையை வெளியிட்டு, தமிழகத்தின் எதிரிகள் ஆரி யர்கள்! என்ற சொற்றொடர் அழியாது காத்துள்ளீர்கள். ஒரு வகையில் அதற்குக்கூட என் போன்றோர் நன்றி தெரிவிக்கக் கடப்பாடு கொண்டவராவோம். என்றோ ஒரு நாள் எங்கள் இனம் உங்களை எதிர்த்து வெல்லும். கட்டாயம் வெல்லும். எங்கள் இன எதிரி குழுமம் ஆனாலும், கட்டுரையாளரின் கருத்தினை நான் எதிர்க்கவோ, மறுக்கவோ இல்லை.

அதே நேரம், சில கருத்துக்களை இட நெருக்கடி காரணமாக சுட்ட வேண்டியவனாகி, அதற்கு நான் முரண் என்று தெரிவிக்கின்றேன். பண்டைய தமிழ் மன்னர்கள் தாங்கள் எழுப்பிய ஆலயங்களில், முழுக்க முழுக்க, தமிழ் வழிபாட்டு முறை மட்டுமே வேண்டும் என்று, முயற்சிக்கவில்லை என்கிறார். கட்டுரையாளர்.

அதற்கு என்ன சான்று? யாரோ ஆட்சிலிங்கம் என்கிற நபர் மனதுக்கேற்ப பூஜை முறைகளில், வழக்கொழிந்து, சிதைந்து, மொத்தமும் வீணாகி வரும் அபாயம் உள்ளது. என்கிறார். கடவுள் என்று இருந்தால், அபாயம் வராமல் அதனால் தற்காத்துக் கொள்ள இயலாதா? ஆரியம் வீணாகி விடும் என்றால், ஏற்கெனவே உலக வழக் கொழிந்துள்ள அது வீணாகித்தான் போகட்டுமே.

மேலும், தலைப்பிற்கேற்ப, காந்தியை சப்பைக் கட்டுக்கு இழுத்துள்ளார். காந்தி சொல்கிறார்: இந்து சமயச் சடங்குகளில் சமஸ்கிருதம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே எனதுஅபிப்பிராயம் என்கிறார்.

சமஸ்கிருதத்தில் ஒலி நயமா? - புனிதத் தன்மையா...? என்ற வினாக்களைத் துவக்கி, இந்த கட்டுரைக்கு சரியான பதிலடி கொடுக்க தமிழினத்தில் ஆளே இல்லையா? என் பது என் கவலை. நானாவது எழுதலாம் என எழுதியு ள்ளேன். எனினும் நாங்கள் நீறுபூத்த நெருப்பு.

- கருவூர் அன்பரசன்

குறிப்பு: தினமணிக்கு எழுதப்பட்ட கடிதம் இது

தமிழ் ஓவியா said...


தலை தூக்குவதேன்.. கடலோர பார்ப்பனீய நண்டுகள்?


சிறீரங்கத்திலும், அதனை அடுத்து பார்ப்பனர்கள் செழிப்போடு வாழும் கும்பகோணத்திலும்... இப்போது திடீரென கடலோர பார்ப்பன நண்டுகள் தலை தூக்குவதன் காரணம் என்ன?

தங்கள் இனத்தைச் சார்ந்தவர் ஆட்சியில் இருக்கிறார் என்பதாலா? இதுவரை இல்லாத புதுமையாக கும்ப கோணத்திலும் ஆரிய விலாஸ் ஹோட்டலும் அய்யங்கார் தங்கும் விடுதியும் திடீரென முளைத்திருப்பதன் மர்மமென்ன?

கலைஞர் ஆட்சிக் காலத்தில் இல்லாத துணிச்சல் இப்போது எப்படி வந்தது? அது நிரந்தரம் எனும் நினைப்பா?

பார்ப்பனீய சுரண்டலுக்கே அடிப்படையாக அவர்கள் பயன்படுத்தும் ஒரே ஆயுதம்.. சாதியும், கடவுளும்தானே!

இதைத்தான் தந்தை பெரியார் சாதி ஒழிந்தால் மதம் ஒழியும், மதம் ஒழிந்தால் கடவுள் ஒழியும், கடவுள் ஒழிந்தால் புராணம், இதிகாசம் ஒழியும். இவை ஒழிந்தால் பார்ப்பான் ஒழிந்தானே! என்று தெளிவாகச் சுட்டிக்காட்டி இருக்கிறார்!

கடவுள், மதம், சாஸ்திரம் இன்று எங்கே வாழ்கிறது? சங்கராச்சாரிகளும், மடாதிபதிகளும், தேவநாதன்களும் போதாதா பார்ப்பனீயத்தின் புனிதத்தை விளக்க!
இவ்வளவு பட்டதற்குப் பிறகும்... இன்னமும்.. இந்த அறிவியல் காலத்திலும் இப்படி சாதி வெறியோடு திரிவது தமிழனுடைய தன்மானத்தை சீண்டிப் பார்ப்பதாகாதா?

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தெளிவாக, அடக்கத்தோடு அறிவுபூர்வமாக சிந்திக்க அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறார்கள்!

முதல்வர் என்றால் பார்ப்பன குலத்துக்கு மட்டும் முதல்வரல்ல! தமிழ்நாட்டின் முதல்வர்!! தமிழர்களின் வரிப் பணத்தில் இயங்குகிற அரசு இந்த அரசு!...

எனவே, இப்படிப்பட்ட பார்ப்பனீய சேட்டைகளை அரசு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்!

இல்லையெனில் தமிழினமே கொதித்து எழும்! இது வரலாறு!

- நெய்வேலி க. தியாகராசன், (கொரநாட்டுக்கருப்பூர்)

தமிழ் ஓவியா said...

எங்கே பிராமணன்? எங்கே பிராமணன்?


நடிகர் ரஜினிகாந்துக்கும், அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவுக்கும் மிகவும் அக்கறையான பிரச்சினை என்ன தெரியுமா?

ஜெயா தொலைக்காட்சியில் திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாள் நடத்தி வந்த எங்கே பிராமணன்? என்ற தொடர் இடையில் நின்று போய் விட்டதே என்ற மிகப் பெரிய கவலைதான்.

மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி ஆகியோருக்குப் பாராட்டு விழா மற்றும் ஜெயா தொலைக்காட்சி 14ஆம் ஆண்டு விழா கடந்த 29ஆம் தேதி சென்னையில் நடந்தது.

முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த், இளையராஜா, கமலகாசன், கே. பாலசந்தர், ஏ.வி.எம். சரவணன் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.

திருவாளர் சோ. ராமசாமி பார்வையாளர் பகுதியில் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் பேச ஆரம்பித்தார். ஜெயா டி.வி.யில், சோ எழுதிய எங்கே பிரா மணன்? நிகழ்ச்சியை ரொம்ப ரசித்துப் பார்த்தேன் திடீரென்று அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விட்டது. என்ன காரணம் என்று விசாரித்தபோது சோ அதனைத் தொடராமல் இருப்பது தெரிய வர... அவரிடமே கேட்டேன். முதல்வர் ஜெயலலிதாவும் இதையே என்னிடம் கேட்டார். தொடர முடியாத காரணத்தை அவரிடம் சொல்லி விட்டேன் என்றார்.

இதில் இருந்து தெரிவது என்னவென்றால் முதல்வர் சொல்லியும் கேட்காத ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் சோ மட்டும்தான் என்று ரஜினி சொன்னபோது எதிரே உட்கார்ந்திருந்தார் சோ. ரஜினியைப் பார்த்து கையை நீட்டிவிட்டு அப்படியே சீரியஸாக தலையில் கை வைத்துக் கொண்டார் சோ. இதை அங்கே இருந்த திரையில் காட்ட... கூட்டத்தினர் ரசித்துத் சிரித்தனர்.

- ஜூனியர் விகடன் 5.9.2012 பக்கம் 6,7

இதில் இரண்டு மூன்று விடயங்கள் உள்ளன. நாட்டில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் இருக்க ரஜினிக்கும், முதல் அமைச்சருக்கும் கவலை எதைப் பற்றியது என்பது முதல் கேள்வி.

எங்கே பிராமணன்? இப்பொழுது எங்கே இருக்கிறான்? என்று சோ கேட்கிறாரா? அந்தக் கேள்வியில் பிரா மணன் இருக்க வேண்டும் என்று ஆசைப் படுவது தொக்கி நிற்கவில்லையா?

இதில் சோவுக்கே குழப்பம் உண்டு பிராமணன் என்பவன் பிறப்பால் வருவதல்ல. அவனின் குணம் வாழும் வகை ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்கள் இப்படி வகைப்படுத்தப்பட் டனர் என்று சோ எழுதியதுண்டு.

பிறப்பின் அடிப்படையில் பிரா மணன் பிறந்தான் என்கிறபோது அதனை நோக்கி வீசப்படும் அம்பு களின் சுணையைத் தாங்க முடியாமல் இப்படி விளக்கம் சொல்ல வேண்டியா யிற்று என்பதுதான் உண்மை. சோ குறிப்பிடும் யஜூர் வேதமாக இருந்தாலும் சரி, மனுதர்மம் ஆனாலும் சரி அவர் கூறும் கூற்றுக்கு எதி ராகவே இருக்கின்றன.

யஜூர் அத்தியாயம் 31 சுலோகம் 11 என்ன கூறுகிறது? ஃப்ராஹ் மணோஸ்ய முகமாஸீத் பாஹூ ராஜன்ய க்ருத:1 ஊருததஸ்மா யத்வைஸ்ய பத்யாம் சூத்ரோ அஜாயத் - 11.

பிரம்மனின் முகத்திலிருந்து பிராம ணன் பிறந்தான்; தோள்களினின்றும் சத்திரியன் பிறந்தான்; துடைகளி னின்றும் வைசியன் பிறந்தான்; பாதங்களினின்று சூத்திரன் பிறந்தான் என்பது இதன் பொருள்.

தமிழ் ஓவியா said...

மனுதர்மத்திற்கு வரிந்து வரிந்து வக்காலத்து வாங்கி எழுதிக் கொண்டி ருக்கிறாரே - சோ - அந்த மனுதர்மம் அத்தியாயம் ஒன்று சுலோகம் 87 என்ன கூறுகிறது?

அந்தப் பிர்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவை களினின்று உண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத் தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித் தனியாகப் பகுத்தார் என்று தானே மனுதர்மமும் கூறுகிறது.

பிர்மாவின் முகத்திலிருந்து பிரா மணன் பிறந்தான் என்று சொல்லி விட்ட பிறகு குணத்தின் அடிப்படை யில் பிராமணன் என்பதெல்லாம் பித்தலாட்டப் பேச்சு தானே!

சோவின் நேர்மையற்ற முடக் குவாதத்தில் மயங்கி எங்கே பிரா மணன்? தொடரில் அப்பாவித்தன மாக ரஜினி மயங்கி இருக்கக் கூடும்.

செல்வி ஜெயலலிதாவை அப்படி எடுத்துக் கொள்ள முடியாது - காரணம் சோவும், ஜெயலலிதாவும் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள்.

கடைசியாக ரஜினிக்கு ஒன்று, பிறப்பின் அடிப்படையில் உருவாகின் றவன் பிராமணன் அல்ல என்று சொல்லும் திருவாளர் சோவும் சரி மற்றும் குருமூர்த்தி போன்ற பார்ப் பனர்களும் சரி மறக்காமல் ஆவணி அவிட்டத்தன்று முப்புரி நூலான பூணூலைத் தரிப்பது தாங்கள் இரு பிறவியாளரான பிராமணர்கள் என்பதை அறிவிக்கத்தான்; சோ வரிந்து எழுதும் பிராமணத் தன்மை அவரிடம் உள்ளதா என்பதை அவரே திறனாய்வு செய்து கொள்ளட்டும்!

சரி அவர்கள் பிராமணர் ஆகி விட்டனர்.

திருவாளர் ரஜினிகாந்த் அவர் களே, அவர்கள் கூறும் அந்த வருணா சிரம அடிப்படையில் நீங்கள் யார்? (உங்கள் குடும்பத்தை இதில் சேர்க்காதீர்கள்!)

நாம் யார்! சூத்திரர்கள் தானே!

சூத்திரர்கள் என்றால் யார்? அதே மனுதர்மம் இவ்வாறு கூறுகின்றது.

சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்.

1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்

2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்

3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்

4) விபச்சாரி மகன்

5) விலைக்கு வாங்கப்பட்டவன்

6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன்

7) தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415)

தமிழ் ஓவியா said...

அவர்கள் பிராமணர்கள் என்றால், நாம் யார்? சூத்திரர்கள். சூத்திரர்கள் என்றால் இந்த ஏழு பொருளுக்குச் சொந்தக்காரர்கள்.

இவை எல்லாம் உள்ளபடியே ரஜினிக்குத் தெரிந்திருந்தால் எங்கே பிராமணன்? என்ற அந்தத் தொடரை ஏன் நிறுத்தினீர்கள் என்று சோவைக் கேட்டிருக்க மாட்டார்.

மாறாக - எங்களைச் சூத்திரர்கள், வேசி மக்கள் என்று கூறும் அந்தப் பிராமணன் எங்கே? என்று துப்பாக்கி யோடு புறப்பட்டு இருக்க மாட்டாரா?
ரஜினி ஒரு அப்பாவி - சோவின் சூது - வாது பேச்சில் மயங்கி இருப்பார்.

தந்தை பெரியாரைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாதபோது பெரியார் கொள்கை இந்தக் காலத் துக்கு ஒத்து வராது என்று சொன்ன ரஜினி, தந்தை பெரியாரைப் பற்றிப் புரிந்து கொண்ட பிறகு, அதுவும் பெரியார் திரைப்படத்தைப் பார்த்த பிறகு, தன் கருத்தை மாற்றிக் கொள்ள வில்லையா?

அதேபோல அந்தப் பிராமணா - சூத்திரா விடயத்தில் உண்மையைத் தெரிந்து கொண்டால் தோசையைப் புரட்டிப் போடக் கூடியவராகத்தான் ரஜினி இருப்பார் என்று நம்புவோம்! தொடர முடியாத காரணம், என்று சோ கூறினாராமே என்ன காரண மாம்? பார்ப்பனர்கள் எதிர்ப்பா? பார்ப்பனர் அல்லாதார் எதிர்ப்பா? அல்லது எடுத்துச் சொல்ல சரக்கு இல்லையா?

இதைத் தொடர முடியாத அள வுக்கு என்ன வெட்டி முறிக்கிறார்? இந்தத் தொடரின் மூலம் தேவை யில்லாமல் இந்தப் பிரச்சினையில் ஏன் சோ கை வைக்க வேண்டும் என்று அவாளின் அறிவு ஜீவிகள் சொல்லி விட்டாளா? முதல்வர் சொல்லியும் கேட்டகாத ஒருவர் சோ என்று ரஜினி சொன்னதும் சோ சீரியஸாக தலை யில் ஏன் கை வைத்துக் கொள்ள வேண்டும்! முதல் அமைச்சரின் அக்னிப் பார்வை சுட்டெரித்து விடுமே என்ற பயம்தான் காரணமாக இருக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...


பார்ப்பன சனாதனத்தை நிரந்தரமாக கட்டிக் காக்க பெங்களூரு அருகில் நவீன அக்ரகாரம்


பார்ப்பனர்கள் திருந்திவிட்டார்களா?

இதோ, பார்ப்பன சனாதனத்தை நிரந்தரமாக

கட்டிக் காக்க பெங்களூரு அருகில் நவீன அக்ரகாரம்

1800 வீடுகள் அனைத்தும் பார்ப்பனர்களுக்கே!

பெங்களூரு அக்.25- பார்ப்பனர்கள் மட் டுமே குடியிருக்கும் - வேறு யாருக்கும் அனு மதியில்லாத நவீன அக்ர காரம் பெங்களூரு அரு கில் அமைய உள்ளது.

இங்கு பார்ப்பனர்களின் வேதகால சனா தன தர்மங்கள் முற்றி லும் பின்பற்றப்படுமாம்; காப்பாற்றப்படு மாம். 150 ஏக்கரில் உருவாகும் இந்த நவீன அக்ரகாரத்தில் பார்ப் பனர்களைத் தவிர வேறு யாருக்கும் மனைகள் விற்கப்பட மாட்டா என்ற அறிவிப் பையும் பச்சையாக வெளியிட்டுள்ளனர்.

உண்மையான வேதிக் கிராமத்தை உரு வாக்கிடவும், பல்வேறு சம்பிரதாயங்களைச் சேர்ந்த பிராமணர் களுக்குத் தகுந்த சூழ் நிலைகளைத் தோற்று வித்திடவும் திட்டமிடப் பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

அமையப் போகும் அக்ரகார மனைகளின் முக்கிய நோக்கங்கள்

தற்கால இந்தி யாவில் பிராமண அக்ர கார சம்பிரதாயங்கள் முழுமையாக மறைந்து விட்டன. அவற்றை மீண்டும் புதுப்பித்து நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

பல்வேறு சம் பிரதாயங்களைச் சேர்ந் தவர்களுக்கு, அவர்கள் எந்த ஆச்சாரங்களையோ அல்லது குருக்களையோ பின்பற்றுபவர்களாக இருந்தாலும் தங்கள் கருத்துகளை எடுத்துக் கூறிட மேடை அமைத் துத் தர வேண்டும்.

பிறரை நம்பி இராமல் தன் சொந்தக் காலில் நிற்றல், தொடர்ந்து மதச் சடங்குகளை நிறை வேற்றுதல், சனாதன தர் மத்தின் கொள்கையின் படி வாழ்தல்; ஆன்மீகம், வேதம் இவற்றின்படி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளல்.

உடல் நலனைப் பேணிட மருத்துவமனை அமைத்தல்.

தர்ம ஸ்தாபனங்களை நிறுவுதல்

இந்த அறங்காவல் குழு சங்கர அக்ரகாரம் எனும் வேத கால கிரா மத்தை அமைக்க உள்ளது.

இந்த வேதகால கிராமம் பிராமண குலத்தினர்க்கென்றே அமைக்கப்படுகின்றது.

இந்த கிராமம், பெங் களூருவுக்குப் புறத்தே யுள்ள இடத்தில் அமைய இருக்கிறது.

இந்த அக்ரகார நக ரியத்தில் திட்டமிடப் பட்டுள்ள குடியிருப்பு மனைகள் பிராமண குலத்தைச் சேர்ந்தவர் களுக்கு மட்டுமே விற் பனை செய்யப்படும்.

இந்த வேதகால கிராமத்தில் வசிக்கப் போகும் பிராமணர்கள், எந்தப் பிரிவினராகவும், உட்பிரிவினராகவும், சம்பிரதாயத்தினராகவும், பழக்க வழக்கங்களைக் கொண்டவராகவும், எம் மொழிப் பேசுபவராக வும் இருக்கலாம்.

நகரியம் ((Township))

ஒன்றிணைக்கப் பட்ட சமூகம்

பரப்பளவு 150 ஏக்கர்

இதற்குள் கல்வி நிலையங்களின் பிரிவு, குடியிருப்புப் பிரிவு ஆகியன இருக்கும். ட பசுமைச் சூழ் நிலை மிளிர்ந்திடும்.

அமைதியான சூழ் நிலை நிலவிடும்.

கல்வி நிலையங் களின் பிரிவில் மதம், ஆன்மீகம், தர்மம், உடல் நலம், வேதப் பாட சாலைகள் ஆகியன அடங்கி இருக்கும்.

ஆலயங்கள் பிரிவில் சிறீ சங்கரமடம், திரு வைகுந்தம், சிறீ இராகவேந்திரா மடம், குரு பவனம், நிர்வாக அலுவலகம், மதக் குருக் களுக்கான இருப்பிட வசதிகள், பிரவசன மந் திரம், திறந்தவெளி அரங் கம், நிகழ்ச்சி மண்டபம் ஆகியன அடங்கி இருக் கும்.

முதியோர் இல் லங்கள் இதில் அடக்கம்.. இங்கு சனாதன தர்மம் பின்பற்றப்படும்.

இயற்கை மருத் துவம், ஆயர்வேத மருத் துவமனை ஆகியவை அமைக்கப்படும். ஒரு சிறந்த மருத்துவமனை யில் இருக்க வேண்டிய அனைத்துப் பிரிவுகளும் இருக்கும்.

மாற்று மருத் துவ முறைகளும் பின் பற்றப்படும். நல்லுணர் வுக்கான மருத்துவ முறை களும் இதில் அடக்கம்.

முதியோர் களுக்கு அவர்களின் குறைகள் நீங்கிட, போக்கிட உதவிகள் செய்யப்படும் அவர் களின் உடல் நலம், மன நலம் பேணப்படும்.
முதியவர்களுக்கென்று தனி மருத்துவமனை ஏற்படுத்தப்படும்.

இந்நகரியத்தில் மொத்தமாக 1800 குடியிருப்பு மனைகள் உருவாக்கப்படும்.

அதற் கான சாலைகள் வசதி, கழிவுநீர் நீக்க வசதி, மின் ஆற்றல் வசதி ஆகியன செய்துத் தரப்படும்.

அக்ரகார நகரியத் தில் உள்ள அனைத்து மனைகளும் பிராமணர் களுக்கு மட்டுமே விற்கப்படும். அவர்கள் எந்தப் பிரிவினராகவும், சம்பிரதாயங்களைச் சேர்ந்தவர்களாகவும், எம்மொழியினராகவும் இருக்கலாம். முதலில் வருபவர்களுக்கு முதல் உரிமை வழங்கப்படும்.

முதலில் 600 மனை களும், அடுத்து 1200 மனைகளும் விற்பனை செய்யப்படும்.

இதன் அங்கத்தினர் கள் எப்பாடுபட்டாவது சனாதன தர்மத்தை நிலை நிறுத்துபவர் களாக இருக்க வேண் டும். இனி வரப் போகின்ற பல தலைமுறையினருக் குப் பின்னரும் பெருமை யும் சேர்க்கப்படுவதாக அது விளங்கும்.

அய்தராபாத் நெடுஞ் சாலையில் இருந்து (என்.எச்.202) 4 கி.மீ. தொலைவில் இருக்கும் தேவனஹல்லி விமான நிலையத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் இருக் கும் சிக்பல்பூர் நகரத்தி லிருந்து 30கி.மீ. தொலை விலும், பாகேபல்லி நகரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும் இருக் கும்.

தாலுகா: பகே பல்லி

மாவட்டம்: சிக்பல்பூர்

பதிவு அலுவலகம்: குடிபண்டா