Search This Blog

5.10.12

கலைஞர் போட்ட கறுப்புச் சட்டை! பூணூல்களின் புழுக்கம்!
இன்றைய தினமணி ஏட்டில் 9ஆம் பக்கத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கறுப்புச் சட்டை அணிந்துள்ள படத்தைப் போட்டு, அவரது அறிக்கைக்கு இனி என்றும் கறுப்புச் சட்டைதான் அணிவேன் என்று தலைப்பிட்டு ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதே பக்கத்தின் முன் பத்தியில் கறுப்புச் சட்டை - பாசிசத்தின் அடையாளம்? என்று விஷமமாகப் போட்டு முறுக்கு மீசைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுப் பார்த்துள்ளார் ஆரிய வைத்தியநாத அய்யர்!


பூணூல் கூட்டத்தின் புதிய கொலம்பஸ், கறுப்புச் சட்டை என்றால் அது பாசிசத்தின் அடையாளம் என்று முசோலினியைத் தேடி இத்தாலிக்கு ஓடியுள்ளார்!

மற்ற வகையில் இத்தாலி என்றால் கடுமையாக விமர்சிக்கும் இவர்கள், இதற்கு மட்டும் இத்தாலியை நாடி ஓடி அந்த சரித்திரத்தைக் காட்டுகிறார்கள்!

அவர்களைக் கேட்கிறோம். திராவிடர் கழகத்தவரும் கலைஞரும், தி.மு.க.வினரும் கறுப்புச் சட்டை அணிந்தால் அவர்களை; பாசிஸ்டுகள் என்று வர்ணிக்கும் வர்ணாசிரம வாரிசுகளே,
மக்களுக்கு நீதி வழங்கும் நீதிமன்றங்களில் - உயர் நீதி மன்றம், உச்சநீதிமன்றம் வரையில் - வாதாடும் வக்கீல்களும், தீர்ப்பு எழுதிடும் நீதிபதிகளான நியாயவான்களும் கறுப்புடை அணிந்து அமர்ந்து விசாரணை செய்கின் றனரே - அவர்கள் எல்லாம் பாசிஸ்டுகளா?


மீசையும் தலையும்  வெளுத்தாலும் அது வெள்ளையாகத் தெரியக் கூடாது என்பதற்காக கறுப்புடையை அடித்து, மீசை முறுக்கி விட்டுக் கொள்ளும் மனிதர்கள் எல்லாம் கூட பாசிஸ்டுகள் தானா?

வைத்தியநாத அய்யர்கள் தூக்கிப் பிடிக்கும் கீதையும், மனு தர்மமும் போதிக்கும் வன்முறையை மீறிய பாசிஸ்ட் ஏடுகள்,  உடினந -கள் உலகில் உண்டா?

ஆர்.எஸ்.எஸ். துவக்கப்பட்ட நிலையில் அதன் கொடி, ஜெர்மனி நாட்டின் ஹிட்லரின் சுவஸ்திக் சின்னம் நாசிசம் அல்லவா?   அவரின் கூட்டாளிதான் முஸோலினி  என்பது வசதியாக மறந்து விட்டதா?

இத்தாலி வரலாற்றை, இரண்டாம் உலகப் போரில் இத்தாலியின் ஆட்சி பற்றி ஆராய்ந்து எழுதும் வைத்திய நாதர்கள் கொஞ்சம்  ஹிட்லரையும் ஜெர்மனியையும் கூட சிந்தித்து,

ஆர்.எஸ்.எஸ்.  கொடிய ஆரியத்தின் சின்னமாக சுவஸ்திக்கைத் தேர்வு செய்த கதை மறந்து விட்டதா? (பிறகு மாற்றியது வேறு விஷயம்).

யாருக்கு பாசிசம், நாசிசம் - அதிக உறவு -பூணூலிசத்துடன் தானே! இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் ஹிட்லர் வெற்றி பெறுவான் என்று எதிர்பார்த்து ஜெர்மன் மொழியை விழுந்து விழுந்து படித்த பார்ப்பனர்களா இசங்களைப் பேசுவது?

பூணூல் என்பது சமதர்ம - சமத்துவ - சமாதான -சாட்சாத் சகோதரத்துவ  - மனிதநேயத்தின் மறுபதிப்போ! ஹி... ஹி... இந்தப் பிறவிப் பூணூல் பாசிசத்தை ஒழிப்பதற்குத் தான் இந்தக் கருப்புச் சட்டை என்பதை மறவாதீர்!


கண்ணாடி வீட்டிலிருப்பவர்கள் கற்கோட்டையை நோக்கி கல் வீசலாமா?

      --------------- ஊசி மிளகாய் - அவர்கள் எழுதிய நெற்றியடிக் கட்டுரை “விடுதலை” 5-10-2012

37 comments:

தமிழ் ஓவியா said...

என்றும் கருப்புச் சட்டை அணிவேன்! தி.மு.க. தலைவர் கலைஞர் பிரகடனம்
சென்னை, அக்.5- இன்று மட்டுமல்ல; இனி என்றும் கருப்புச் சட்டை அணிவேன் என்று தி.மு.க. தலை வர் கலைஞர் அவர் கள் பிரகடனப்படுத்தி யுள்ளார். முரசொலி யில் இன்று அவர் எழுதிய அறிக்கையில் குறிப்பிட்டு இருப்ப தாவது:

சாலையோரத்தில் அமைதியாக மனிதச் சங்கிலியாக ஒரே இடத் தில் கருப்பு உடை அணிந்து நின்று அணி வகுப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்று தான் நாம் அனுமதி கோரினோம்.

இன்றைய தினம்கூட மத்திய அர சின் நுழைவுத் தேர் வினை எதிர்த்து மருத் துவர்கள் மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்தி, அந்தப் புகைப் படங்கள் எல்லாம் ஏடு களிலே வெளி வந்துள் ளன. எனவே மனிதச் சங்கிலிப் போராட்டம் என்பது அனுமதிக்கப் படாத ஒரு போராட்ட முறை அல்ல. அது போலவே கருப்பு உடை அணிந்து கொள்வது என்பதும் புதிதல்ல. அ.தி.மு.க.வைச் சேர்ந்த வர்கள், தி.மு. கழகம் ஆளுங்கட்சியாக இருந்த போது, பேர வைக்கே கருப்பு உடை அணிந்து வந்திருக்கிறார்கள்.

ஒருவேளை முதல மைச்சர் ஜெயலலிதா; இந்த அறவழி அறப் போராட்ட அணி வகுப்பு ஆர்ப்பாட்டத் திற்கு சென்னையில் கருணாநிதியே இந்த வயதிலே தலைமை தாங்கப் போகிறானே என்பதற்காக என் உடல் நிலை பற்றிப் பரிதாபப் பட்டு, அனுமதி கொடுக்கவில்லையோ என்னவோ? அப்படி யென்றால் வெளியூர்களி லாவது அனுமதி கொடுத்திருப்பார்களே? ஏன் கொடுக்க வில்லை? என்னைப் பொறுத்த வரையில் 5ஆம் தேதி ஒரு நாள்தான் இந்த ஆட் சியினரின் அவலங் களை எதிர்த்து கருப்பு உடை அணிவதாக இருந்தேன்.

ஒரு பழைய நிகழ்வை உங்களுக்கு ஞாபகப் படுத்த விரும்புகிறேன். திராவிடர் விடுதலைப் படை என்பதாக ஒரு தொண்டர் படை திரா விடர் கழகத்துக்குத் தேவை என்று திருச்சி மாநாட்டில் ஒரு தீர் மானம் நிறைவேற்றப் பட்டது. பெரியார் ஈரோடு திரும்பியதும், அதைப்பற்றி மேலும் சிந்தித்து, 1945 செப்டம் பர் 29ஆம் நாள் குடி அரசு இதழில், கருப்புச் சட்டைப் படை அமைப்பு என்பதாக ஓர் அறிவிப்பு வெளியிட் டார். ஈ.வி.கே. சம்பத், கவிஞர் கருணானந்தம் ஆகிய இருவரும் அதன் தற்காலிக அமைப்பா ளர்கள் என்று கூறும் அறிவிப்பு 22-12-1945 குடிஅரசு இதழ் வரை யில் தொடர்ந்து வெளி யானது.

தந்தை பெரி யார் விரும்பி அமைத்த அந்தக் கருப்புச் சட் டைப் படையின் முதல் தொண்டராக அப்போது ஈரோட்டில் பதிவு செய்து கொண் டது யார் தெரியுமா? இதே மு. கருணாநிதி தான். அந்த மு. கருணா நிதிதான், நாளைய மனிதச் சங்கிலி ஆர்ப் பாட்டத்திற்கு தலைமை தாங்குவதாக அறி வித்தேன். ஆம் நாளைய தினம் கருப்புச் சட்டை அணிந்து மனிதச் சங்கி லியில் கலந்து கொள் வதாக இருந்தேன். அதற்கு இந்த அரசு அனுமதி கொடுக்க வில்லை. பரவாயில்லை, இன்று முதலே இந்த ஆட்சியின் அவலங் களை எதிர்த்து கருப்புச் சட்டை அணிவேன், இன்றே அணிவேன்; இனி என்றும் அணிவேன்! என்றார். 5-10-2012

தமிழ் ஓவியா said...

சோதிடம் பார்க்கும் சோணகிரிகள்

கலைஞர் கருப்புச் சட்டை அணிவதுபற்றி மற்றவர் களை விட, அக்ரகார கூட்டத்துக்குத்தான் ஆர்வம் அதிகம். தினமலர் சோதிடக்காரனைத் தேடி ஓடியிருக் கிறது ரிஷபராசிக்கு ஆறில் சனியாம் அதற்காகத்தான் கருப்புச் சட்டையாம்! அதுசரி வாழ்நாள் முழுவதும் கருப்புச் சட்டை அணிந்து கொண்டிருந்தாரே - தந்தை பெரியார்! அது பார்ப்பனர்களுக்கு ராசியாகவா இருந்தது?

சோதிடக்காரனுக்கு தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்றாரே உங்கள் ராஜாஜி - மறந்து விட்டதா?
5-10-2012

தமிழ் ஓவியா said...

அப்பா - மகன்

முடிக்குச் சமம்!

மகன்: திருப்பதி கோயிலில் தலை முடி காணிக்கை ரூ.30 கோடிக்கு ஏலம் போயி ருக்கிறதே - அப்பா!

அப்பா: தலை முடிக்கு ஈடாவானா பக்தன் என்று சவால் விடுகிறார் கள் மகனே! 5-10-2012

தமிழ் ஓவியா said...

மஹோத்ஸவமா?

என்ன வேடம் போட் டாலும் இறுதியில் பார்ப் பனர்களின் வேடம் மட்டும் ஒரு இடத்தில் கலைந்து போய் விடும். எந்த சாமர்த் தியமும் அவாளின் பூணூல் கோத்திரத்தின்முன் மூடிக் கழன்று விழுந்து விடும்.

தினமணி வைத்திய நாதய்யர் ஒருவர் போதும். எடுத்துக்காட்டுக்கு -

தமிழ் என்பார், தமிழ்ச் சங்கம் என்பார்; திருவள் ளுவர் என்பார் - இதெல் லாம் வெறும் மேல் பூச்சு - ஊரை ஏமாற்றுவதற்கு அப்பாவித் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைப்பதற்கே! இன்றைய (5.10.2012) தினமணி ஏட்டில் வெளி வந்துள்ள ஒரு செய்தியின் தலைப்பைப் பாருங்கள்.

ஜெயிலுக்கும் பெயிலுக்குமாக அலைந்து கொண்டிருக்கும் ஓர் ஆசாமி; அவாள் பாஷை யில் ஜெகத் குருவாம்! அவர்மீதுள்ள கிரிமினல் சட்டப் பிரிவு குற்றச்சாற்று என்ன தெரியுமா? 302, 120-பி, 34, 201 கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப் பித்தல், கொலை (ஆதாரம் இதே தினமணிதான் - நாள் 13.11.2004)

இந்தப் பிரிவுகளின்படி 61 நாட்கள் வேலூர் சிறையிலும், கம்பி எண்ணி இருக்கிறார். இவரின் ஜூனி யர் விஜயேந்திர சரஸ்வதி 31 நாள் சிறையில் கம்பி எண்ணினார். இவ்வளவுக்குப் பிறகும் கொஞ்சமும் லஜ்ஜையின்றி ஊர் சுற்றுகிறார் - கும்பா பிஷேகம் நடத்துகிறார் - ஆசி வழங்குகிறார் என் றால் பார்த்துக் கொள்ளுங் களேன் - அவர்களின் பவிசின் தரத்தை. அது இருக்கட்டும்; மீண்டும் தினமணிக்கே வருவோம்!

கொலை குற்றம் சுமத் தப்பட்டு, சிறையில் இருந்த இந்த ஜெயேந்திரருக்கு நாளை பிறந்த நாளாம்.

வைத்தியநாதய்யர்வாள் தினமணியில் கொடுத்த தலைப்பு என்ன தெரி யுமோ?

ஜெயேந்திரரின் அவதார மஹோத் சவம்

இந்தக் காமக் கோடி (பதம் பிரித்து சிந்தித்துப் பார்க்கவும்) கொலைக் குற்றத்தின்கீழ் மாமியார் வீட்டுக்குச் சென்று வந் தவர் - அவதாரமாம்.. (புரா ணங்களிலும் அவதாரத் தின் யோக்கியதை இப்படித் தான் இருக்கிறது - கிருஷ் ணாவதாரம் ஒன்று போதாதா?)

அவதாரத்துடன் நிற்க வில்லை; அந்தப் பிறந்த நாள் விழாவுக்குப் பெயர் மஹோத்சவமாம்! நாம் ஆடினால் சதுர் அவாள் ஆடினால் பரதமாயிற்றே!

நம் கண்ணுக்கு எதிரே அசிங்கமாக நடமாடும் ஒருவரையே இப்படி பம்மாத்து செய்து படம் காட்டுகிறார்கள் என்றால், இதிகாசத்திலும், புராணங் களிலும் எப்படிப்பட்ட புளுகு களை எல்லாம் அள்ளி அள்ளிக் கொட்டியிருப் பார்கள்?

- மயிலாடன் 5-10-2012

தமிழ் ஓவியா said...

பெரியார் சொன்னது...இராமாயணம் - இராமன் அழித்து ஒழிக்கப்பட்டு ஆகவேண்டும். இராமாயணப் பிரச்சாரம் ஒழுக்கக் கேட்டுப் (கிரிமனல் அண்டு இம்மாரல்) பிரச்சாரமாகும். எவ்வளவுதான் மத மவுடீகம் மக்களுக்கு இருந்தாலும் ஒரு மனிதன் தன்னைப் பெற்ற தாய் இரண்டணா ரேட்டுக்குக் குச்சுகாரியாக இருந்து, தெருவில் போகிற சின்ன பையன்களையெல்லாம் கையைப் பிடித்து இழுத்தால், மகன்காரனாகிய மனிதன் இழுக்கப்பட்ட பையனைப் பார்த்து, ஏண்டா எங்கம்மா இழுத்தால் திமிரிக்கிட்டு ஓடப் பார்க்கிறாய் என்று பையனை அடித்தால், அவன் தாய்ப்பற்று, தாய் அன்பு, அபிமானம், தாய் பக்தி கொண்டவனாக ஆகி விடுவானா? உலகின் சாதாரண மக்களும் அந்த மகனைப்பற்றி என்ன கருதுவார்கள் என்பதை சிறிது சிந்தித்து பார்த்தால் இராம பக்தர்களான தமிழர் களுக்கு நான் இராமனை எரிக்கும் தன்மையின் உண்மை விளங்காமல் போகாது.

தமிழ் ஓவியா said...

கடவுள் நம்பிக்கை தேவையா? - அன்னை தெரசா

பல துயரங்களை மறைக்கும் பெரிய திரையாக என்னுடைய புன்னகை விளங்குகிறது. நான் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பதால் என்னுடைய மத நம்பிக்கை, என்னுடைய அன்பு ஆகியவை நிரம்பி வழிவதாகவும், கடவுளுடன் எனக்கு இருக்கும் நெருக்கமும், அவருடைய விருப்பத்துடன் ஒன்றி இருப்பதாகவும், என்னுடைய உள்ளத்தில் நிறைந்திருப்ப தாகவும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் உண் மையை அறியார். கடவுள் கடவுளேயல்லர். உண்மையில் அவர் இல்லை.
- தி இந்து, 30.11.2002

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

ராஜாங்கம்

செய்தி: பக்தனின் நிலையறிந்து உதவுபவன் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீசோரநாதப் பெருமான்.

- தினமணி (வெள்ளிமணி)

சிந்தனை: அப்படி என்றால் படையல் எதற்கு? பிரார்த்தனை எதற்கு? ஏன், அரசாங்கம்தான் எதற்கு? காவிரி நீருக்காக நீதிமன்றம் செல்லு வதும் எதற்கு?
ஸ்ரீசோரநாதப் பெருமான் ராஜாங்கம் ஜாம் ஜாம் என்று நடத்தவேண்டியதுதானே? 5-10-2012

தமிழ் ஓவியா said...

மணியான மணிச்சுடர் விழா!

இந்திய யூனியன் முசுலிம் லீக்கின் நாளேடான மணிச்சுடரின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா நேற்று மாலை சென்னை - பெரியார் திடலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி மணிச்சுடர் வெள்ளி விழா என்பதையும் தாண்டி அதிமுக்கியமான உணர்வு களையும், பிரகடனங்களையும் வெளிப்படுத்திய - வரலாற்றில் குறிப்பிடத்தக்க விழாவாக அமைந்துவிட்டது என்றே கூற வேண்டும்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தார். இந்த ஒரு நாளில் மட்டுமல்ல - நிரந்தரமாகக் கருப்புச் சட்டை அணிய விருப்பதாக வெளியிட்டது சாதாரணமான தல்ல - ஒரு பிரகடனம் என்றே கணிக்கத்தக்க தாகும். ஏதோ ஒரு வேகத்தில் சொல்லப்பட்ட கருத்தாக இதனை எடுத்துக் கொள்ள முடியாது. ஆழ்ந்து பல முறை சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவைத்தான் அவர் அறிவித்துள்ளார் என்பது - மானமிகு கலைஞர் அவர்களின் முழு உரையையும் பார்க்கும் பொழுது புரிந்து கொள்ள முடியும். தந்தை பெரியார் தன்னை ஆளாக்கினார். அவர் வழி காட்டியபடி குடிஅரசில் எழுதினேன். கருப்புச் சட்டைப்படை முதன் முதலில் அமைக்கப்பட்ட போது, அதில் முதல் கையொழுப்பம் போட்டவன் நான்!

திருவையாறில் தியாகராயர் விழாவில் தண்டபாணி தேசிகர் தமிழில் பாடியதால் (சித்தி விநாயகன் என்ற பாடல்தான் அது) சந்நிதானம் தீட்டுப்பட்டு விட்டது; அதில் பாட மாட்டேன் என்று (அரியக்குடி ராமானுஜ அய்யங்கார்) அடம் பிடித்த நிலையில் சந்நிதானம் சுத்தி கரிக்கப்பட்ட பிறகுதான் பாடினார். அது குறித்து தீட்டா யிடுத்து! என்று குடிஅரசில் (9.2.1946) தாம் எழுதியதையும், அண்ணாமலை தீபம்பற்றி அண்ணாமலைக்கு அரோகரா என்று தாம் எழுதியது (குடிஅரசு 17.11.1945) குறித்தும் நிரல் படுத்திக் கலைஞர் தம் உரையில் மணிமணியாக ஒலித்தார்.

கருப்புச் சட்டைக்குத் தேவை இன்று ஏற்பட்டுள்ளது; அதற்கான காரணங்கள் நிரம்பவே இருக்கின்றன என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட்ட கருத்து தமிழ்நாடு தழுவிய அளவில் மட்டுமல்ல; இந்திய அளவிலும் எதிரொலிக்கக்கூடியதே!

ஊடகங்களுக்கு நல்லதோர் தீனியைக் கொடுத்துள்ளார் - அதுவும் நல்லதே! தலைவர் கருப்புச் சட்டை அணிந்தால் தொண்டர்கள் பற்றிக் கேட்கவா வேண்டும்?

ஆன்மீக நம்பிக்கை கொண்ட தொண்டர்கள், நெற்றியில் மதக் குறி இடும் கட்சித் தோழர்கள் மத்தியில் கூட - இந்தக் கருப்புச் சட்டை அறிவிப்பு புதிய கிளர்ச்சியை ஏற்படுத்தவே செய்யும்.

டில்லியில் பெரியார் மய்யம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட மானமிகு கலைஞர் அவர்கள் கோயிலுக்குச் செல்லுவது போன்றவற்றைக் கட்சித் தோழர்கள் கைவிட வேண்டும் என்பதைக் கட்டளையாகத் தெரிவிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

90 வயதைச் சந்திக்கும் திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவரான கலைஞர் அவர்கள் முதலாவ தாகத் தம் கழகத் தோழர்களுக்கு வலிமையான, அவசியமான, சரியான வழிகாட்டும் கடமையினை கொண்டிருக்கிறாரே - அதனைத்தான் இப் பொழுது செய்திருக்கிறார் என்பதில் அய்யமில்லை.

மதச் சார்புள்ள ஆட்சி எக்காரணம் கொண்டும் வந்து விடக் கூடாது என்று கருப்புச் சட்டை அணிந்து சொல்லும் பொழுது அதற்குள்ள வலிமையே தனிதான்.

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கூறும் சிறுபிள்ளைத்தனத்துக்குச் சூடு கொடுத்துப் பேசினார் கலைஞர் அவர்கள்.

கலைஞர் அவர்களின் உரைக்கு முன், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் உரையும் பொருத்தமாகவே அமைந்து விட்டது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் முஸ்லீம் லீக்கின் மணிச்சுடர் வெள்ளி விழா - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்து விட்டது என்பதில் அய்யமில்லை.5-10-2012

தமிழ் ஓவியா said...

பெருஞ்சித்திரனாரின் வாழ்வியல் முத்துகள்!

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் அரிய, சிறந்த, கவிதைகள் சிலவற்றை வாழ்வியலுக்குப் பயன்படும் வகையில் சூலூர் தன்மானத் தோழர் புலவர் செந்தலை கவுதமன் அவர்கள் தொகுத்துள்ளார்.

அதையே தனது அன்பு மகள் செல்வி. க.தாய்மொழி அவர்களுக்கும் செல்வன் இளந்தமிழனுக்கும் நடை பெற்ற வாழ்விணையேற்பு விழாவின் போது அன்பளிப்பு நூலாக வந்தோ ருக்கும், வராதோருக்கும் தந்து மகிழும் வாய்ப்பை கோவை விஜயா பதிப்பகம் உரிமையாளர் பதிப்பக ஏறு தமிழ் இன உணர்வாளர் மு.வேலாயுதம் அவர்கள் வெளியிட்டு அளித்துள்ளார்.

மணவிழா நாள் 06-11-2011 ஏறத்தாழ ஓராண்டு கழித்து இது பற்றி எழுதிடும் நிலைக்குக் காரணம், நூல்கள் குவியலில் இது சிக்கி விடுதலை ஆனதால் இந்த தவக்கம்.

தன்மானப் புலவர் செந்தலை கவுதமன் அவர்கள் தந்தை செயல்வீரர் செந்தலை நடராசன் முழுக்க முழுக்க திராவிடர் கழகத்தவர். செந்தலையில் பல கால முன்பே வரகூர் நடராசனின் தோழராக இருந்து, கழகப் போராட் டங்களில் கலந்து கொண்ட கருஞ் சட்டையாளர். தந்தை பெரியார் காலம் முதல் இன்று வரை மாறாத கட்டுப் பாட்டின் சின்னம். அவரது குடும்பத் தவர்களும் சுயமரியாதை வீரர்களாகவே திகழ்வது அந்தக் கொள்கை ஆயிரம் காலத்துப் பயிர் என்பதைக் காட்டும்.

தமிழ் ஓவியா said...

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களை எனது பிறந்த ஊராகிய கடலூரில் அவர் அஞ்சல் துறையில் பழைய பெயருடன் இருந்தபோதே திராவிடர் இயக்கப் பற்றாளர் - எனது மூத்த சகோதரர் திரு.கோவிந்தராசனின் நெருங்கிய நண்பர். என்னையும் மாணவப் பருவம் முதல் அறிந்து பழகியவர்.

நறுக்குத் தெறித்தாற் போன்ற நயம் பொங்கும் சிந்தனை வீச்சுகளைக் கொண்ட அக்கவிதை வரிகள் வாழ்வியல் ஒளியை வையத்தவருக்கு அளிக்கும் வைரவரிகள்.

உள்ளம் விழைவதை

அறிவினால் ஓர்ந்து பார்!

தள்ளத் தகுவன உடனே தள்ளுவாய்!

தள்ளத் தகாதென்று அறிவு நேர்வதைக்

கொள்ள முயற்சி செய்! கொடுநினைவு அகற்று!

######################

இன்றைய நாள் நினை; இனிவரும் நாள் நினை;
என்றும் புதியன், நீ யாவும் புதியன!
அன்றன்றும் புதுநாள்! அனைத்தும் இனியன!
ஒன்று, கைபோகின் ஒன்றுடன் கைவரும்!

#####################

புகழ்ச்சியின் மயக்கறு! புன்மையை உதறு!
இகழ்ச்சியைத் தாங்கு; எள்ளலை எடுத்தெறி.
நிகழ்ச்சியை வரிசை செய்; நினைவை உறுதி செய்,
மகிழ்ச்சியும் துயரமும் மனத்தின் செயல்களே...

#####################

நகைப்பவர் யாவரும் நண்பர்கள் ஆகார்!
தொகைப் பெருக்கென்பதும் தோழமைக்கில்லை;
மிகைப்பட பழகுதல்
மிகுதுயர் செய்யும்!
பகைப்பவர் என்பவர் பழகி இருந்தவர்.

#####################

உன்றன் விழிகளை உயர்த்துக வானில்!
உன்றன் செவிகளை உலகெலாம் பரப்புக
குன்று பார்! கதிர்பார்! கோடி விண்மீன் பார்
நின்று பார்! நடந்து பார்! சிறுநீ, உலகம்!

######################

சாதிக் குப்பையைச் சாம்பலாக்கு!
பாதியை அறிவுப் பயிருக்கு உரமிடு!
மீதியை ஒற்றுமை மேன்மைக்கு உரமிடு
உலகம் எல்லாம் ஒரு குலம் என்றும்
உயர்ந்த கொள்கைக்கு உரமிட்டு வளர்க்க!

########################

உன்றனுக்கு முன்னும் பின்னும்
உலகம் உண்டாம் என்பதெண்ணி வாழ்வாய்! - செய்யும்
நன்றிருக்கும்! தீ செயின் தாழ்வாய்!

இப்படிப் பல முத்துக்கள்! மருந்துக் குப்பிகள்! (Capsules) வாழ்க்கைக்குப் பயன்படுபவையானவை!
படித்துப் பயன் பெறுங்கள்!
----கி.வீரமணி அவர்கள் வாழ்வியன் சிந்தனைகள் பகுதியில் எழுதிய கட்டுரை-”விடுதலை” 5-10-2012

தமிழ் ஓவியா said...

சென்னையில் கலைஞர், பேராசிரியர், மு.க. ஸ்டாலின் துண்டறிக்கை விநியோகம்சென்னை, அக்.5- அதிமுக அரசின் குறைகளை சுட்டிக்காட்டி தமிழகம் முழுவதும் திமுக தலை மையில் துண்டு பிரசுரம் வினியோ கிக்கும் போராட்டம் இன்று (5.10.2012) தொடங்கியது.

சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் பொதுமக் களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. இதை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:- தமிழகம் மின்னொளி இல்லாமல் இருண்டுள்ள சூழ்நிலையிலும் - விலைவாசிகள் மிகக் கொடுமையாக ஏற்றப்பட்டு வாங்கும் சக்தியை மக்கள் இழந்துள்ள வேதனையைச் சுட்டிக்காட்டவும் - ஒவ்வொரு நாளும் கொலை, தற்கொலை என்பது போன்ற அவலச் செய்திகள் சூழ்ந்து நடைபெறுகின்ற நிலைமைகளை எடுத்துக்காட்டவும் - சட்டம், ஒழுங்கு, அமைதி ஒரு மாநிலத்திலோ, நாட்டிலோ காப்பாற்றப்படா விட்டால் அங்கே அராஜகம்தான் தலை தூக்கும் என்பதற்கு எடுத்துக் காட்டாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளை எடுத்தால், எங்கே சுவர் இடிந்து விழுந்ததோ, எங்கே கட்டிடம் இடிந்து விழுந்ததோ? எங்கே விபத்தோ? எங்கே தற் கொலையோ? எங்கே கொலையோ? என்று அச்சத்தோடு பார்க்க வேண்டிய நிலைமை.

அந்தப் பத்திரிகைகளிலே உண்மையான செய்திகள் வந்தால், அந்தச் செய்திகளை நீ எப்படி வெளியிடலாம் என்று பத்திரிகை சுதந்திரத்தையே அடக்குகின்ற அவ லம் உள்ளது. இதைத் தட்டிக் கேட்க - இதை எடுத்துக்காட்ட - பொதுமக்களின் குரலை ஓங்கி ஒலிக்க இன்றையதினம் நான், அதைப் போலவே நம்முடைய கழகத்தின் தலைவர்கள், ஆங்காங்கு தலைமை யேற்று கருப்பு உடை அணிந்து அந்த அணி வகுப்புகளை நடத்துவதென்று திட்டமிட்டு, அதை அறிவித்திருந் தோம்.

ஆனால் முறைப்படி பெரியார் வழியில், அண்ணா வழியில், அமைதி யாக அந்தக் கிளர்ச்சியைக்கூட நடத்த வேண்டுமென்பதற்காக, நாம் அதற்கான அனுமதியைப் பெற வேண்டுமென்று மாவட்டங்களிலே உள்ள போலீஸ் அதிகாரிகள், மாநி லத் தலைநகரிலே உள்ள போலீஸ் அதிகாரி - இவர்களையெல்லாம் மிகுந்த பணிவோடு அவர்களுக்கும் பொறுப்பு உண்டு, அவர்களுக்கும் கட்டுப்பாட்டைக் காப்பாற்றுகின்ற அந்த அக்கறை உண்டு என்ற நம்பிக்கையோடு மனுக்கள் எழுதி ஒவ்வொரு மாவட்டத்திலும், சென்னை மாநகரத்திலும் உள்ள அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்து இறுதியாக நேற்று (4.10.2012) மாலை வரையிலே அனுமதி உண்டா இல்லையா என்று தெரியாத ஒரு நிலைமைக்கு நம்மை ஆளாக்கிய இந்த அரசு அதற்கு துணை நின்ற போலீஸ் அதிகாரிகள் திடீரென்று நேற்றையதினம் அனுமதி கிடையா தென்று அறிவித்து விட்டார்கள்.

அதைப்பற்றி நாம் கவலைப்பட வில்லை. ஏனென்றால் அவர்கள் அனுமதி கொடுத்திருந்தால், சென் னையிலே ஒரு இடத்திலே மட்டும் அணி வகுப்பு நடந்திருக்கும். அதைப் போல திருச்சியிலே, சேலத்திலே, மதுரையிலே, கோவையிலே என்று ஒவ்வொரு இடத்திலே தான் கருப்பு உடை அணிந்து நாம் நடத்தவிருந்த அணிவகுப்பு நடந்திருக்கும்.

முதல் அமைச்சரின் அன்பு!

என்னமோ தெரியவில்லை, முதல மைச்சருக்கு நம்மீது ஓர் அன்பு. இவர்களுடைய கிளர்ச்சி ஒரு இடத்தோடு நின்று விடக்கூடாது, தமிழ் நாட்டிலே பரவலாக நடை பெற வேண்டுமென்று எண்ணி னாரோ என்னவோ தெரியவில்லை. அவர்கள் அனுமதி மறுத்து விட் டார்கள். அனுமதி மறுத்த காரணத்தால் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் தலைமைக் கழகத்திலே கூடி எடுத்த முடிவின்படி, அனுமதி தராவிட்டாலும் பரவாயில்லை,

ஆங்காங்கு நம்முடைய கழகத் தோழர்கள் உரிய முறையில் அறவழியில் கருப்பு உடை அணிந்து இந்த அரசைப் பற்றிய குற்றம் குறைகளை, மக்களின் கொதிப்பை இன்றைக்கு தமிழ்நாடே இருண்ட கண்டமாக மாறியிருக்கின்ற நிலையை எடுத்துக்காட்ட ஆங்காங்கு துண்டறிக்கைகளை எழு தியோ, அச்சிட்டோ பொதுமக் களுக்கு வழங்குகின்ற ஒரு செயலில் ஈடுபட்டு நடத்துங்கள் என்று நான் விடுத்த அழைப்பையேற்று தமிழ் நாடு முழுதும் எல்லா இடங்களிலும் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் இந்தத் துண்டறிக்கை விநியோகம் நடைபெறுகிறது.

இதற்காக நான் எங்களுடைய போராட்டத்தைத் தடுத்து, இந்த வழியிலே போராடு கின்ற ஒரு நிலையை ஏற்படுத்திய முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, நீங்கள் இந்த நிகழ்ச்சியை அமைதியோடு நடத்திக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கலைஞர் பேசினார்.5-10-2012

தமிழ் ஓவியா said...

கடவுள்கள் இருக்க பயமேன்?திக்குவாய் குறை தீர்க்கும் திருப்பந்துறை முருகப் பெருமான் - (மதுரை மணி, 10.11.2007)

கணித அறிவை மேம்படுத்த வேண்டுமா? இன்னம்பூர் இறைவனை நாடுங்கள் - (குங்குமம், 3.5.2007)

குழந்தைப் பேறு அருள மருதூர் சிறீநவநீதி இருக்கிறார் (நெல்லை)

திருமணம் கை கூட வைக்கும் திருவீழிமிழலை அழகிய மாமுலையம்மை (திருவாரூர்) - (தினத்தந்தி, இலவச இணைப்பு, 27.7.2010)

திருமணம் கை கூடும் திருநீர்மலை பெருமாள் (சென்னைக்கு தென்மேற்கே) - (ராணி, 16.5.2010)

வழக்குகளில் வெற்றி பெற கொல்லங்குடி வெட்டுடையாள் காளி கோயில் (சிவகங்கை) - (ராணி - 7.3.2010)

வீடு கட்ட உதவும் கடவுள் திருப்புகளூர் அக்னீஸ்வரர் (குங்குமம், 16.7.2009)

இழந்த பொருளைப் பெற வேண்டுமா? தஞ்ச புரீஸ்வரர் கோயில் (திருவையாறு அருகில்) - (தினத்தந்தி, ஆன்மீகப்பகுதி, 26.2.2010)

கல்யாணம் நடக்க வேண்டுமா? கடன் தீர வேண்டுமா? வழக்கில் வெற்றி பெற வேண்டுமா? திக்குவாய் தீர வேண்டுமா? குழந்தை பேறு வேண் டுமா? வீடு கட்ட வேண்டுமா? இவைகளுக்கெல்லாம் ஒவ்வொரு கோயிலும், அதில் குடி கொண்டிருக்கும் சாமியும் துணை இருப்பது உண்மையானால் நாட்டில் அரசாங்கமே தேவைப்படாதே!

பக்தர்கள் உண்மையில் இவற்றை நம்பினால் அரசிடம் மனு போடுவார்களா? அரசாங்கத்தின் 108 எண்ணை கூப்பிடுவார்களா?

யாரை ஏமாற்ற இந்த விளம்பரப் பட்டியல்?

மக்களுக்கு தன்னம்பிக்கையையும், செயல் திறமையையும், புத்தறிவையும் ஊட்ட வேண்டிய ஊடகங்கள் மக்களை மண் புழுவாக ஆக்க நினைக்கிறார்களே - இது நியாயமா?
10-5-2012

தமிழ் ஓவியா said...

காண்டேகர்திரவுபதியின் மானத்தை காத்த கண்ணனுக்கு நாம் உற்சவங்கள் கொண்டாடுகிறோம். கவிகள் அவனைப்பற்றி காவியங்கள் பாடுகிறார்கள். தத்துவ ஞானிகள் அவனைப் பூர்ணாவதாரம் என்கிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில், திரவுபதியின் மானத்தைக் காப்பாற்ற ஓடி வந்த கண்ணன், இன்றைய தினம் உடுக்க ஒரு முழம் கந்தலுமின்றித் தவிக்கின்ற லட்சக்கணக்கான ஏழைப் பெண்களை காப்பாற்ற ஏன் வரவில்லை? தெய்வமே குருடாகி விட்டது என்று எனக்குத் தோன்றுகிறது.
5-10-2012

தமிழ் ஓவியா said...

இந்து மதம் பற்றி ரஜனீஷ்இந்து மதம் பாசிசத் தன்மை கொண்டது. அய்யாயிரம் ஆண்டுகளாக இந்து மதம் மக்களை அடிமைப்படுத்தியே வந்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களை தீண்டத்தகாதவர்களாகக் கருதி, அவர்களை மனிதனை விட கேவலமாக நடத்தி வருகிறது. ஜாதி இந்து என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனர்கள், தாழ்த்தப்பட்ட மக்களை கொடுமைப்படுத்தினர். இன்னும் அவர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். அவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு வருகிறது. ஜாதி இந்துக்களின் தெருவிலுள்ள கிணற்றிலிருந்துகூட தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றுங் கூட தண்ணீர் எடுக்க அனுமதிப்பதில்லை. இந்த மதப் பெண்களை ஆண்டாண்டு காலமாக அடிமைப்படுத்தி வருகிறது. இவற்றையெல்லாம் நான் எதிர்க்கிறேன். ஆண்களைப் போன்றே பெண்களையும் சமமாகக் கருதுகிறேன். என்னைப் பொறுத்த வரை பார்ப்பானும், தாழ்த்தப்பட்டவனும் ஒன்றே. மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிற அனைத்து கலாச்சாரத்தையும், இதிகாசங்களையும் அழிக்க வேண்டும், அவற்றிற்கு தீயிட வேண்டும்.

(ரஜனீஷ், ஆன்லுக்கர், 15.12.1970)

தமிழ் ஓவியா said...

ஆரியம் அலறுவது ஏன்?

தி.மு.க. தலைவர் கருணாநிதி: இந்த ஆட்சியின் செயல்பாட்டையும், ஜனநாயக விரோத நடவடிக்கையையும் எடுத்துக்காட்டும் வகையில், கறுப்புச் சட்டை அணிந்துள்ளேன். என் கட்சியினர், இன்று கறுப்பு உடை அணிந்து, ஆட்சியின் அவலங்களை விளக்கும் துண்டு பிரசுரங்களை வினியோகிப்பர்.

டவுட் தனபாலு: நீங்க நடத்துற கறுப்புச் சட்டை போராட்டத் தால, உங்க தொண்டர்கள் கறுப்புச் சட்டைகளை வாங்கிக் குவிச்சிருக்காங்க... இதனால, துணிக் கடைகளுக்கு நல்லாவே வியாபாரம் ஆகியிருக்கிறதை தவிர, மக்களுக்கு எந்த பலனும் இல்லைங்கிறதுல, எனக்கு டவுட்டே இல்லை...!

- தினமலர், 5.10.2012

கோயிலுக்குள் எருமை மாடு நுழைந்து விட்டது, திருப்பதியில் தாயாரம்மன் தாலி அறுந்து விழுந்தது. சிவன் கோபுரம் தலைகுப்புற விழுந்தது என்று ஏதோ ஏதோ கதைகளை அள்ளிவிட்டு, வருஷம் பொறந்த நேரம் சரியில்லை, சகோதரிகளுக்குப் பச்சைப் புடவை வாங்கிக் கொடுங்கள், சிகப்புப் புடவை வாங்கிக் கொடுங்கள் என்று கயிறு விட்டபொழுதெல்லாம் ஜவுளிக் கடை வியாபாரத்தைப் பற்றி எழுதாத தினமலர் கருப்புச் சட்டை அணிவது பற்றி கலைஞர் சொன்னதும் கடுகடுப்பது ஏன்?

கருப்புச் சட்டைக்குக் கிடைத்த முதல் வெற்றி இது!

தினமணிகளும், தினமலர்களும் அலறுவது ஏன்?

அவாளின் அலறல்தானே நமது வெற்றியின் அளவுகோல்? 5-10-2012

தமிழ் ஓவியா said...

இதே காவேரிப்பட்டணம் பள்ளியில்தான் அன்று பெரியார் பேசினார்!


14.2.1945 மாலை 5 மணிக்கு காவேரிப்பட்டணம் போர்டு உயர் நிலைப் பள்ளியில் மாணவர் என்.சங்கரன் அவர்கள் தலைமையில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் மேல் நாடும் - கீழ் நாடும் என்னும் பொருள் பற்றி விரிவுரையாற்றினார். தலைவர் முடிவுரைக்குப்பின் அங்கிருந்தே மாணவர் கள் புடைசூழ நூற்றுக்கணக்கான பொதுமக்களுடன் பெரியாரை சாரட் வண்டியில் அமர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. வழி நெடுக மாலை அணிவிக்கப்பட்டது. ஆற்றோரக்கரையில் தோழர் கே.ஜி. கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில் பொதுக் கூட்டம் ஆரம்பமாயிற்று. தோழர் சம்பத் அவர்கள் பேசியபின், பெரியார் அவர்கள் தற்கால அரசியல் நிலை, சமுதாய சீர்திருத்தம், திராவிட நாட்டுப் பிரிவினைமுதலியவற்றை விளக்கி 3 மணி நேரம் பேசியபின் தலைவர் வந்தனத்துடன் கூட்டம் முடிந்தது.

- குடிஅரசு 24.2.1945

காவேரிப்பட்டணத்தில்தான் தந்தை பெரியார் மேல் நாடும் - கீழ் நாடும் என்ற பொருள் பற்றி உரையாற்றினாரே - அதே உயர்நிலைப் பள்ளியின் முகப்பில்தான், நுழைவு வாயில் அருகில்தான் கல்விக்கண் திறந்த கதிரவனாம் உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் சிலை வரும் ஞாயிறன்று திறக்கப்பட உள்ளது.

தமிழர் தலைவர் திறந்து வைக்கிறார். பேரணியும் உண்டு. பெரு நதியாய் கருஞ்சட்டைக் குடும்பங்கள் பாய்ந்து வரட்டும்! பாய்ந்து வரட்டும்!!
5-10-2012

தமிழ் ஓவியா said...

பெரியார் சிந்தனை மய்யத்தின் சார்பில் சமூக மாற்றத்திற்கான மனித நேய கலந்துரையாடல்வல்லம், அக். 5- பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பெரியார் சிந்தனை மய்யத்தின் சார்பில் சமூக மாற்றத்திற்கான மனிதநேயம் என்ற தலைப்பில் சிறப்புக்கூட்டமும், கலந்துரை யாடலும் 1.10.12 அன்று நடை பெற்றன. இந்நிகழ்ச்சிக்கு பெரி யார் மணியம்மை பல்கலைக் கழக துணை வேந்தர் பேரா.நல். இராமச்சந்திரன் தலைமையுரை யாற்றினார்.

அவர் தமது உரையில் நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை பற்றியும், பெரியாரின் சிந்தனை கள் உலகளாவிய அளவில் பரந்து விரிந்திருப்பதையும் குறிப்பிட்டு குறிப்பாக பெண் கள் அடுக்களையிலிருந்து விடு பட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந் துள்ளார்கள் என்று குறிப்பிட் டார்கள். மனித நேய சிந்த னையே சமூக மாற்றத்திற்கு வழி கோலும், மனித நேயம் தழைத் தோங்கினால் மானிட சமூகம் சிறப்புறும் என்றும் எடுத்து ரைத்தார்கள். மேலும் பல்கலை யில் பன்னாட்டு மனிதநேயம் அறம் ஆகியவை தொடர்பான இருக்கை அமைய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத் தார். நிகழ்ச்சியில் பெரியார் சிந்தனை மய்ய இயக்குநர் முனைவர் பழனி அரங்கசாமி வரவேற்புரை நல்கி பெரியார் மேற்கு அய்ரோப்பிய நாடுகளில் பேசப்படுவார் என்றும் மனித நேயத்திற்கு தடையாக இருப் பவை பயங்கரவாதம், மதங்கள் குறுகிய எண்ணங்கள் ஆகியவை என்று கூறி இலங்கையில் நடை பெற்ற இனப் படுகொலையின் பயங்கரத்தை மனித நேயர்கள் தடுக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டார். பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வீ.கும ரேசன் பேசுகையில்:- பன் னாட்டு மனித நேய அமைப்பு கடந்த 60 ஆண்டுகளில் செயல் பட்டு வருவதை குறிப்பிட்டு தற்போது அதன் முதல் பெண் தலைவராக பேரா . சோனியா எக்ரிக் செயல்பட்டு வருவதை பெருமையாக குறிப்பிட்டார். அய்.நா. அமைப்பில் பன் னாட்டு மனித நேய அமைப்பு பங்கேற்றுள்ளதையும், மனித நேய பயிற்சி வகுப்புகள் நடத்தி வருவதையும் மனித நேய செய்தி மலர் வெளியிடப்படுவதையும் விரிவாக எடுத்துரைத்தார். திராவிடர் கழகம் பன்னாட்டு மனித நேய அறம் சார்ந்த அமைப் பில் பங்கேற்றுள்ளதையும் மனித நேய வளர்ச்சிக்கு அனை வரும் பாடுபடவேண்டும் என் றும் குறிப்பிட்டு பெரியார் மணியம்மை பல்கலை. மக்கள் பல்கலைக்கழகமாக சிறப்பாக செயல்பட்டு வருவதையும் குறிப்பிட்டார். இப்பல்கலை யில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வளாகத்திற்கு மட்டுமன்றி மக்களுக்கும் பயன் பட்டு வருவதற்கு பல்கலை நிர் வாகம் உதவுவது பற்றியும் சிறப் பாக விளக்கினார். பன்னாட்டு மனித நேய அற அமைப்பின் இயக்குநர் பாபு கோகினேனி தம் உரையில்:- சமூக அவலங் கள் பற்றி குறிப்பிட்டு அவை நீங்க நாம் அனைவரும் பாடு பட வேண்டுமென்றார். சமத்து வம் மலர சமூக மாற்றங்கள் வேண்டுமென்றார். வட மாநி லங்களில் நிலவும் தலிபான் செயல்பாடுகளைப் பற்றியும் குறிப்பிட்டார். நாட்டில் மறு மலர்ச்சி தோன்றவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்திய பகுத்தறிவாளர் இணையத்தலைவர், நரேந்திர நாயக் உரையாற்றுகையில்:- 21 வது நூற்றாண்டு அறத்தின் அடிப்படையில் அமைய வேண்டு மென்றார். பெரியாரால் பெண் களுக்கேற்பட்ட உயர்வையும் விளக்கினார்கள். பகுத்தறிவின் தேவையையும் வலியுறுத்தினார். கலந்துரையாடலில் கலந்து கொண்ட பன்னாட்டு மனித நேய அற அமைப்பின் தலைவர் பேரா. சோனியா எக்ரிக் அவர் கள் பல்கலையின் தூய்மை பெல்ஜிய நாட்டின் மனிதநேயர் ஹக்கின்ஸ் பற்றியும் விளக்கி னார்கள். தான் பணியாற்றும் பிரஸ்ஸல்ஸ் பல்கலை.யின் சிறப்பு மனித நேய மாண்பு ஆகியன பற்றி விரிவாக எடுத்துரைத்து அனைவரது ஒத்துழைப்பையும் கேட்டுக்கொண்டார். மாணவி என்.புயல் வரவேற்க மாணவர் எம்.தினேஷ்குமார் நன்றி நவில சிறப்பாக நடைபெற்றது.5-10-2012

தமிழ் ஓவியா said...

இதுதான் என் கடைசி ஆசை


புகழ் உச்சியில் இருந்தபோதும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த உடுமலை நாராயண கவியார், தம் 82ஆம் அகவையில் - தி.பி. 2012 (23.05.1981)ல் உயிர்துறந்தார். அவர்தம் இறப்பிற்கு முன்பு எழுதி வைத்த இறுதி ஆவணத்தில், தாம் இறந்தபிறகு என்ன செய்யவேண்டுமென்பதைக் குறித்துள்ளார்.

அந்த ஆவணத்தில், செத்த பிணத்தை வைத்துக் கொண்டு, இனிமேல் சாகும் பிணங்கள் கூத்தடித்துக் கொண்டிருப்பது அறியாமை; இந்த அறியாமையானது பணத்தின் அளவிலே விரிவடைகிறது, குறைகிறது.

என்னைப் பொறுத்தமட்டில் இந்த அறியாமை வேண்டாம். உடலைவிட்டு உயிர் பிரியுமானால் அப்போதே காலத்தை வீணாக்காமல் குழியைத் தோண்டிப் புதைப்பதோ அல்லது எரிப்பதோ இந்த இரண்டில் ஒன்றைச் செய்திடுங்கள்! வேறு எந்தவகையான சடங்குகளும் தேவையில்லை.

மீறிச் செய்வது அறியாமை. உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்காக ஒன்று செய்யவேண்டுமானால் அதை மட்டும் செய்யுங்கள்! உணவிலே எளிமை, உடையிலே எளிமை, கல்வியிலே மேன்மை இது போதுமானது. இதுதவிர வேறு எதையும் செய்யாதீர்கள்.

இந்த வீண்பெருமைகளை (டாம்பீகங்களை) எல்லாம் செய்து சீரழிந்து, மனத்துன்பங்களுக்கு ஆளாகி, என் பின்னோர்க்கு (வாரிசுகளுக்கு) இதைப் பழக்கி, அவர்களின் அறிவைக் கெடுத்துத் துன்பங்கட்கு ஆளாக்கி விட்டேன். இப்போது உணர்கிறேன். காலங்கடந்துவிட்டது. இனி ஒரு பயனும் இல்லை.

கடைசியாக ஏதோ வைத்திருக்கிறேன். அதைக்கொண்டு உங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்! இத்தனையும் கல்விக்குள்ளாக அடங்கியுள்ளது. ஆதலால் காலத்தை வீணாக்காமல் கவனத்தைக் கல்வியிலே செலுத்துங்கள்; இதுதான் என் கடைசி ஆசை!

- சந்திரன் வீராசாமி, திருச்சிராப்பள்ளி
1 15 2012

தமிழ் ஓவியா said...

அமாவாசை தர்ப்பணம் இரவிலா? பகலிலா?


இந்துமதமும் அதன் கடவுளர்கள்,சடங்குகள் அனைத்தும் பார்ப்பனீயத்தின் பிழைப்புக் கருவிகள் அல்லாமல் வேறில்லை என்பதைப் பார்ப்பனர்கள் காலந்தோறும் நிரூபித்து வருகிறார்கள். ஆடி மாதம் ஆகாத மாதம்; மார்கழி மாதம் பீடை மாதம் என்று சொல்லிவைத்துவிட்டார்கள்.

அதனை நம்பும் இந்துமதத்தைச் சுமக்கும் தமிழர்கள், அம்மாதங்களில் எந்த நிகழ்வுகளையும் நடத்துவ தில்லை. ஆனால்,பார்ப்பனர்கள் தங்கள் இல்லத் திருமணங்களை சிரமமில்லாமல் குறைந்த செலவில் நடத்திக் கொள்கிறார்கள். சடங்கு-சம்பிரதாயங்கள் எல்லாம் தாம் ஏற்படுத்தியவை என்பதால் அதனை தனக்காக எப்படிவேண்டுமானாலும் வளைத்துக் கொள்ள அவர்களால் முடிகிறது.பார்ப்பானர்கள் கடல் தாண்டக் கூடாது என்பது சம்பிரதாயம். ஆனால், மதன் மோகன் மாளாவியா என்ற வட இந்திய அரசியல்வாதி அயல்நாடு செல்லும் சூழலில் அதனைத் தவிர்க்கவில்லை. மாறாக என்ன செய்தார் தெரியுமா? கையோடு ஒரு மண் உருண்டையையும் கொண்டு சென்றார். அதாவது அயல்நாடு சென்றாலும் தன்னுடைய நாட்டில்தான் அவர் இருக்கிறாராம்.

ஆரியமொழியில் மிலேச்சர்களான வெள்ளைக்காரன் கண்டுபிடித்துக் கொடுத்த நவீனத் தொழில் நுட்பங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு, தம்முடைய ஆரிய இன ஆதிக்கக் கருவிகளான கடவுள், மதம், சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகளை இன்னும் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு தமிழர்களை மூடத்தனத்தில் வைத்திருக்கிறார்கள்.

கடந்த கல்கி (30.09.2012) இதழில் ஸ்ரீ ரங்கம் மாதவன் என்ற பூஜை செய்யும் தொழில் புரிபவரின் பேட்டி வெளியாகியுள்ளது. கணினி மூலம் இணையதளம் வழியாக பூஜை, தர்ப்பணங்களைச் செய்கிறாராம். முதலில் தொலைபேசி வழியாகச் செய்துகொண்டிருந்தாராம். இப்பொழுது இணையத்தில் காமிரா மூலம் அமாவாசை தர்ப்பணம்,ஆவணி அவிட்டம் பூஜைகளைச் செய்கிறாராம்.

இங்கே இரவில் இவர் கர்மத்தை செய்து வைக்க அமெரிக்காவில் இருப்பவர் பகலில் அதைத் திருப்பிச் சொல்கிறார். மந்திரங்களை இரவில் சொல்லலாமா என்று கேட்ட நிருபரிடம், மந்திரங்களை இரவில் சொல்வது தவறில்லை; கோவிலில் மட்டுமே ஒலித்த மந்திரங்கள் இப்போது செல்போன், டி.வி.டி, தொலைக்காட்சிகளில் ஒலிக்கின்றன; சாஸ்திரங்கள் தொழில்நுட்பங்களை எதிர்ப்ப தில்லை என்று கூறுகிறார் இந்த மாதவன்.

இங்கே இரவில் மந்திரங்களைச் சொல்ல அங்கே பகலில் நடக்கிறது. அப்படியானால் ஒரு நாளே கூட தள்ளிப் போகலாம். அமாவாசை நாள் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் வேறுவேறு நாள்தானே? அப்படியானால் எந்த நாளில் இங்கிருந்து சொல்லப்படுகிறது? அந்த நாள் தர்ப்பணத்துக்கு உகந்த நாளாக எப்படி இருக்கமுடியும்?

குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில்தான் சாஸ்திர சம்பிரதாயங்களைச் செய்ய வேண்டும் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு, இரவில் சொல்ல பகலில் தர்ப்பணம் செய்து காசு பறிக்கும் வேலையை இன்னொரு பக்கம் நியாயப்படுத்துவது எவ்வளவு பெரிய மோசடி.

தொழில் நுட்பங்களுக்கும் வேத சாஸ்திரங்களுக்கும் என்ன தொடர்பு? தொழில்நுட்பங்களை வேதங்களுக்குத் தெரியுமா?

உலக மாற்றங்களையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு, அறிவியல் வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய இனத்தின் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள ஆரியம் போடும் வேஷமல்லவா இது!

தான் பிழைக்க முன்னுக்குப் பின் முரணாக மட்டுமல்ல, எப்படியும் பேசும் ஆரியம் என்பது இதுதானோ?

- அன்பன்
1 15 2012

தமிழ் ஓவியா said...

ஆப்பிரிக்காவில் பெரியார்


தமிழகம் கடந்து இந்தியாவைத் தாண்டி பல நாடுகளில் உணரப்பட்ட பெரியாரின் தொண்டு இப்போது ஆப்பிரிக்காவிலும் உணரப்படத் தொடங்கிவிட்டது. ஆப்பிரிகாவின் கானா நாட்டு கிராமப்புற சமூக மக்களின் சமூக, பொருளாதாரச் செயல்பாடுகள் மேம்படுத்தப்படுவதற்கு உதவி செய்ய, பெரியார் - ஆப்பிரிக்க நிறுவனம் என்ற பெயர் கொண்ட ஓர் இந்திய அமைப்பு அக்காராவில் 2012 செப்டம்பர் 15 அன்று பெரியார் ஆப்பிரிக்க நிறுவனம் (PAF) என்ற பெயரில் தொடங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியாவுக்கான கானா நாட்டின் முன்னாள் தூதர் பென்டர்ன் வில்லியம்ஸ்,``கானா நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமூக மக்களிடையே நிலவும் வறுமைக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்ப விவசாயிகளுக்கு, நிதி மற்றும் தொழில் நுட்ப உதவிகளை அளிப்பது, கிராமப்புற சமூகத்திற்கு அதிக அதிகாரங்கள் அளிப்பது என்ற நோக்கத்தைக் கொண்டது இந்த அமைப்பு எனப் பாராட்டிப் பேசினார்.

ஜாதி நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வரவும், ஜாதி அடிப்படையிலான வேறுபாடுகள் என்னும் அடையாளமே இல்லாதபடி சமூகத்தை மாற்றி அமைக்கவும் சோர்விலாமல் பாடுபட்ட, நீதிக் கட்சியின் முன் னாள் தலைவராக இருந்த பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் கொள்கைகளை, பணிகளைப் பற்றி பரப்புரை செய்வதும் இந்த அமைப்பின் நோக்கமாகும் என்று தெரிவித்தார்.

லிபேரியா நாட்டு தூதர் கிளவண்டா பிரைட் பார்க்கர் பேசும்போது, ``அனைத்துலக மனித உரிமை மாநாட்டின் அடித்தளமாக விளங்கும் மனித உரிமைகளை நிலை நாட்டும் பணிக்கு தந்தை பெரியார் அவர்களின் முயற்சிகள் வழிகோலின. பெரியார் அவர்களின் சிந்தனைகள் இன்று அய்க்கிய நாடுகள் மற்றும் அதன் அமைப்புகள் பின்பற்றுவதற் கான ஓர் அடிப்படை ஆவணமாக விளங்கும் மனித உரிமைகள் பிரகடனத்தின் மூலம் வலியுறுத்தப் படுத்தப்பட்டுள்ளன, என குறிப்பிட்டார்.

பின்னர் உரையாற்றிய பெரியார் ஆப்பிரிக்க அமைப்பின் செயலாளர் சாலை மாணிக்கம் அம்மையார்,``கிராமப்புற சமூக விவசாயிகள் எதிர்கொள்ள வேண்டியுள்ள அனைத்துப் பிரச் சினைகளுக்கும் தீர்வு காண ஆக்கபூர்வமான, நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகள் இந்த அமைப்பினால் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

கானா நாடு இந்தியாவுக்கு ஒரு நல்ல நட்பு நாடாக விளங்குகிறது. கானாவின் கிராமப் புற சமூகங்களிடையே முன்னேற்றத்தை ஏற்படுத்தத் தேவையான உதவிகளை அவர்களது வீட்டு வாசல் களுக்கே கொண்டு சென்று அளிப்பது எங்களது பொறுப்பாகும் ,என்று அவர் கூறினார்.

தனது எழுத்துகள், பேச்சுகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய தந்தை பெரியார், சுதந்திரமாக சிந்தித்து, பகுத் தறிவு சிந்தனை, அனுபவம் மற்றும் சமூக நலன் ஆகி யவற்றை சீ தூக் கிப்பார்த்து எது ஒன்றையும் மதிப் பிட வேண்டும் என்று அவர் களுக்கு அறி வுறுத்தினார்.

புத்துலகின் தீர்க்கதரிசி அவர் என்று யுனெஸ்கோ நிறு வனம் மிகவும் பொருத்தமாக வும், சரியாகவும் விவரித்துள்ளது. தனது செல்வம் பொதுமக்கள் வழங்கிய நன் கொடைகள் ஆகிய அனைத்தையும் ஒரு பொது அறக் கட்டளை நிறுவி மனித குல நலனுக்காகவே ஈந்தவர் தந்தை பெரியார் அவர்கள் என்றும் குறிப்பிட்டார். தி.க. தலைவர் கி.வீரமணி அவர்களின் வாழ்த்துச் செய்தியை காணொளி மூலம் தரப்பட்டது.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


பொதுக் கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைந்து வழிபடக்கூடாது; அவர்கள் வழிபடுவதற்கென்றே தனிக் கோயில்கள் கட்டப்படவேண்டும் என்று காந்தியார் எழுதியதையும் பேசினதையும் கண்டித்து 1929 நவம்பர் 26 ஜஸ்டிஸ் ஆங்கில நாளேடு கட்டுரை எழுதியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா? 5-10-2012

தமிழ் ஓவியா said...

உண்மையின் தனிப் பெரும் பணி


திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மய்யத்தில் வாரந்தோறும் முனைவர் பட்ட ஆய்வாளர் சந்திப்பு நிகழ்கிறது. அதில் கடந்த மாதம், செப்டம்பர் 16-30 உண்மை இதழ் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதுபோது உண்மை இதழின் சமூக அக்கறையும் பெரியாரின் கருத்தியல் களும் எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வாளர் ம.புகழேந்திர சோழன் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் ஒரு பகுதி.

தமிழினம், மனிதநேயம், சமூகநீதி போன்ற பண்புகளின் வெளிப்பாட்டை இது உரிமை; பிச்சை அல்ல! என்னும் கி.வீரமணி அவர்கள் எழுதிய கட்டுரையின் மூலம் உரை முடிகின்றது.

இக்கால கட்டத்தில் வெகுசன ஊடகங்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் விடுதலை குறித்து பேசுவதில் மௌனம் சாய்க்கின்றபொழுது தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்தும் தமிழினம் குறித்தும், தமிழரின் சமூக விடுதலை குறித்தும் தொடர்ந்து முழங்கும் இதழாகவும் அமைந்துள்ளதை உணரலாம். இவ்வாறான பெரியாரியக் கருத்தியல் நிறைந்த கட்டுரைகளை வெளியிடுவதில் உண்மை இதழ் முதன்மை பெறுகிறது.

மதம் குறித்த பெரியாரின் கொள்கைகளுள் ஒன்றான கடவுள் இல்லை என்ற கோட்பாட்டை கடவுளால் ஆகாதது எனும் டி.கே.சீனிவாசன் அவர்களின் சிறுகதை வழியும் வடை எனும் அனு கலைமகள் எழுதிய கதை வழியும் விளங்கிக் கொள்ள முடிகின்றது. அதாவது ஒருவன் தன் இயலாமையால்தான் அவன் நினைத்த காரியத்தில் வெற்றிபெற முடியவில்லை என்பதனையும் கடவுளால் எதுவும் நிகழாது.

முயற்சி செய்தால் பகுத்தறிவோடு திகழ்ந்தால் மட்டுமே எண்ணியதைச் செய்ய முடியும் என்பதனை கடவுளால் ஆகாதது எனும் சிறுகதையின் மூலம் விளக்குகின்றார். வடை என்ற கதையில், சிறுவனின் வடை ஆசையை நிறைவு செய்யாத பெற்றோரின் நிலையையும் அவர்களின் மடத்தனமான கடவுள் கொள்கையையும் இவ்விதழ் சுட்டிக் காட்டுகின்றது.

இவ்வாறு பெரியாரின் கடவுள் பற்றிய, மதம் பற்றிய கொள்கைகளை பரப்புவதாக உண்மை இதழ் விளங்குகிறது. அறிவு சார்ந்த பெரியாரின் கொள்கைகளுள் ஒன்றான அறிவியல் கோட்பாட்டை படித்த _ படிக்காத பாமரர்கள் எனும் மணிமகன் எழுதிய கட்டுரையின் வழி விளங்கிக்கொள்ள முடிகின்றது.

அறிவியல் வளர்ந்த இந்த நூற்றாண்டில் அறிவியல் உண்மைகளைப் பகுத்தறிவோடு நம்புதல் வேண்டுமே தவிர அறிவியலை சாமிக்கு இறையாக்கக் கூடாது என்ற கருத்தை இவ்விதழ் வெளிக்கொணர்கிறது.

உண்மை வெளியிடும் இத்தகு படைப்புகளானது. பெரியாருக்குப் பின்பும் அவர்தம் கருத்துக்களையும் பொருள்முதல் வாதக் கொள்கைகளையும் அவர்தம் அறிவியல் சார்ந்து இருப்பதற்கு மக்களைத் தூண்டிய பணியினையும் இன்றைய சூழலில் உண்மை இதழ் பகிர்ந்து கொண்டு வருகிறது என்பதற்கு இக்கட்டுரை சான்றாக அமையும்.

பெரியாரின் பெண்ணியச் சிந்தனை என்ற கருத்தியல்களை சிந்தனையில் விடுதலை என்னும் இரா.உமா எழுதிய கட்டுரையின் வழி இவ்விதழ் விளக்குகின்றது.

மக்களின் ஆழ் மனதில் படிந்து கிடக்கும் பழமைவாய்ந்த மூடப்பழக்க வழக்கங்களை அகற்றுவதற்கு அன்றாடம் நிகழும் செய்திகளின் அடிப்படையிலான நிகழ்வுகளைச் சுட்டி அதன் தன்மைகளை எடுத்து விளக்கும் பகுதியாக முகநூல் என்ற பக்கம் செயல்படுகின்றது.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு எனும் கி.தளபதிராஜ் எழுதிய கட்டுரையின் வழி ஆன்மீகம் என்ற பெயரில் போலிச் சிந்தனைகளையும் மூடநம்பிக்கைகளையும் பரப்பிவரும் சாமியார்களின் உண்மை உருவத்தை தோளுரித்து காட்டுகிறார்.

பெரியாரியத்தின் வழி மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பதிலும் உலகப் பகுத்தறிவாளர்களின் வழி சான்றுரைத்து விளக்குவதிலும் தனிப்பெரும் பணியினைக் கொண்டு தமிழ் ஊடகச் சூழலில் பெரும்பணி ஆற்றிவருகிறது உண்மை இதழ்.
1 15 2012

தமிழ் ஓவியா said...

கேள்வி கேட்கத் தயங்கக் கூடாது

சோஷலிசத்தையும், கம்யூனிசத்தையும் அப்பா நேரடியாக எனக்கு கத்துக் கொடுக்கலைன் னாலும், நடைமுறையில அவரோட சில கொள்கைகள் எனக்கு இன்ஸ்பிரேஷனா அமைஞ்சிருக்கு.

பெரியவங்களை மதிக்கணும். பணிவா இருக்கணும்... ஆனா, உனக்கு சரியாக புரியாதவரைக்கும் ஏன்? எதுக்கு? எப்படி?ன்னு கேள்வி கேக்கத் தயங்கக்கூடாதுன்னு அப்பா சொல்லுவார். அந்த ஆலோசனையும் அறிவுரைகளும் என்னை செதுக்கி இருக்கு.

ஸ்கூல் படிச்சிட்டிருக்கும்போது ஒருநாள் முடி வெட்டிக்கறதுக்காக பியூட்டி பார்லர் கிளம்பினேன். வீட்ல வேலை செய்யிறவங்க, இன்னைக்கு செவ்வாய் கிழமை... முடி வெட்டக் கூடாதுன்னு சொன்னாங்க. சரின்னு நானும் வீட்லயே இருந்துட்டேன். அப்பா வந்து, ஏன் முடி வெட்டப் போகலை?ன்னு கேட்டார்.

செவ்வாய்க்கிழமை வெட்டக் கூடாதாம்!னு சொன்னேன். எதுக்காக வெட்டக் கூடாதுன்னு அவங்ககிட்ட கேள்வி கேட்டியா?ன்னார். அப்போதான் எனக்கு சுரீர்னு உரைச்சுது. அன்னைக்குத் தொடங்கிய என்னோட கேள்விகளை இப்பவும் கேட்டுக் கிட்டிருக்கேன். ஜாதி, மதம், கடவுள்னு எதுலயும் எனக்கு நம்பிக்கை ஏற்படலை...

- திவ்யா (நடிகர் சத்யராஜின் மகள்)
நன்றி : குங்குமம்

தமிழ் ஓவியா said...

கோயில் கடவுளால் பயனில்லை! கோல்வால்கர் கூறுகிறார்!


- மஞ்சை வசந்தன்

கடவுள், மதம், சாத்திரம் என்றால் அவை அனைத்தும் புனிதமானவை, மேலானவை, அவற்றிற்காக உயிரையும் கொடுக்க வேண்டும் என்று உலகிற்கெல்லாம் உணர்வு ஊட்டுகின்றனர் (வெறி ஏற்றுகின்றனர்) மனிதர்களை மறந்த மதவாதிகள்.

அதிலும் குறிப்பாக இந்துமதத்தை ஏந்திப் பிடிக்கும் இந்துத்வாவாதிகள் அதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டு செயல்படுகின்றனர்.

இல்லாத ஒரு மதத்தை ஏற்றிப் போற்றும் அறியா மக்களின் கூட்டம் பெரும் பகுதியாய் இருக்க, இந்து மதத்தை வைத்து தன் ஆதிக்கத்தை இருபத்தோறாம் நூற்றாண்டிலும் நிலைநாட்டிக் கொள்ளத் துடிக்கும் இந்துமத வெறியர்கள் பல பரிமாணங்களில், பரிவாரங்களில் அலைந்து கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட வெறிக் கூட்டத்திற்கு சிந்தனைகளைக் கொத்துக் கொத்தாய்க் கொடுத்து, சிந்தாந்தம் நல்கி அவர்களை உசுப்பி விட்டவர்தான் கோல்வால்கர்.இந்த கோல்வால்கர்களுக்கும், அவர் வழிச் செல்லும் இந்துமத வெறியர்களுக்கும் கடவுளும் இல்லை; மதமும் இல்லை. அவற்றின் மீது அவர்களுக்கு நம்பிக்கையும் இல்லை. அவையெல்லாம் அவர்களுக்குக் கருவிகள். அவர்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள அவையெல்லாம் அவர்களுக்குத் தேவைப்படுகின்றன. மற்றபடி அவர்கள் கடவுள் நம்பிக்கையுடையவர்களும் அல்ல; மதப்பற்று உடையவர்களும் அல்ல.

இப்படிக் கூறும்போது பலருக்கு வியப்பாகக்கூட இருக்கும். ஆனால் உண்மை அதுதான். ஆம். அதை கோல்வால்கரே கூறுகிறார் பாருங்கள்.

மக்கள் கோயில்களுக்குச் சென்று, அங்குள்ள சிலைகளையே எல்லாம் வல்ல தெய்வத்தின் சின்னங்களாகக் கருதி அவற்றின்மீது கவனம் குவிக்கின்றனர். ஆனால், இவையெல்லாம் கர்மயோகிகளான (செயல் நிறைந்தவர்களான) எங்களுக்கு (உடன்பாடான தல்ல) நிறைவு தருவது அல்ல. எங்களுக்குத் தேவை (வேண்டியது) ஓர் உயிருள்ள கடவுள். கோயில்களுக்குச் செல்கின்றவர்கள் கூறுவதை மட்டும் கேட்கக்கூடிய, ஆனால் பதில் சொல்லாத ஒரு கடவுளால் என்ன பயன்? இந்தச் சிலைகள் (சின்னங்கள்) அழுவதுமில்லை சிரிப்பதுமில்லை, எதிர்வினை ஏதும் புரிவதும் இல்லை என்கிறார் கோல்வால்கர்.

(Quoted by Anderson and Damle, Ibid, P.16 தரவு: இந்து இந்தியா -_ எஸ்.வி.இராஜதுரை, பக்கம் 100)

இந்துமதம் என்று சொல்லப்படும் ஒரு கற்பனை மதத்தின் (தொகுக்கப்பட்ட கதம்பத்தின்) அடிப்படைத் தத்துவமே சிலை வழிபாடுதான். சிலை வழிபாடு இல்லையென்றால் கோவில் இல்லை, அபிஷேக ஆராதனை இல்லை, அதற்கான மந்திரங்கள் இல்லை, அர்ச்சகர் இல்லை, கருவறை இல்லை, கருவறை புனிதம் இல்லை, தீட்டு இல்லை.

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியயே சுற்றிவந்து மொணமொணன்று சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ? என்று நமது தமிழர்கள் சொன்னதை அப்படியே ஏற்று கோல்வால்கர் சொல்லிவிட்டபின் மதம் ஏது? உருவ வழிபாட்டை மறுத்து, மதத்தை வெறுத்து வள்ளலார் சொன்னதை கோல்வால்கரும் ஒப்புக் கொண்ட பின் மதம் ஏது?

உருவ வழிபாட்டையே மறுக்கும் இஸ்லாம் மதத்தின் கொள்கையை கோல்வால்கரும் கூறிவிட்டபின் இந்துமதம் ஏது? பின் மத மோதல்கள் ஏன்?

தமிழ் ஓவியா said...

கடவுளுக்கு உருவம் இல்லை என்று ஏற்றுக்கொண்டபின் கடவுளுக்கு உடல் இல்லையென்று உறுதியாகிறது. உடலில்லா கடவுள் என்றால் முகத்தில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் ஷத்திரியன், இடையில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன் என்ற கொள்கை நொறுங்கிப் பொடியாகிறது. அப்படியாயின் பிராமணன் ஏது? பூணூல் ஏது? மனுதர்மம் ஏது? மற்றவை ஏது? அப்படியாயின் பிராமணன் உயர்ந்தவன் என்ற சித்தாந்தம் சிதறிப் போகிறது.

ஆனால், இவர்கள் இந்து மதத்தை ஏந்திப் பிடிக்கிறார்கள், பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கிறார்கள்.

ஆக, இவர்களுக்கு கொள்கை கிடையாது. கோட்பாடு கிடையாது; தெளிவு கிடையாது; திடமான வரையறை கிடையாது. ஆனால், ஒன்றில் மட்டும் உறுதியாய் நிற்கிறார்கள். அது, பிராமணன் மட்டுமே உயர்ந்தவன்; அனைத்துக்கும் உரியவன்; அவனே அறிவின் கர்த்தா; அனைத்தையும் ஆளவும் அனுபவிக்கவும் பிறந்தவன்.

மற்றவர்களெல்லாம் அவர்கள் நலத்திற்கு அடிமை வேலை செய்யப் பிறந்தவர்கள்; விலங்கு போன்றவர்கள். இதில் அவர்கள் அன்றும் உறுதியாக இருந்தார்கள். இன்றும் உறுதியாய் நிற்கிறார்கள். இதையும் கோல்வால்கர் தனது சிந்தனைக் கொத்து என்ற நூலில் ஓர் நிகழ்வை எடுத்துக் காட்டி விளக்குகிறார்.

உருவ வழிபாடு பயனற்றது என்கிறார். ஆனால், அதன் அடிப்படையில் பிராமணர்களுக்குக் கிட்டிய அனைத்து பலன்களும் வேண்டும் என்கிறார். இதுதான் பார்ப்பனப் பித்தலாட்டம் என்பது.

எனவே, கோல்வால்கருக்கும் இந்துத்வாவாதி களுக்கும் பிராமண ஆதிக்கம் வேண்டும். மற்றபடி மதம், கடவுள் என்பதெல்லாம் கருவிகள்.

அதனால்தான் பேசாத சிலை வேண்டாம். உயிருள்ள கடவுள் வேண்டும் என்கின்றனர்.

உயிருள்ள கடவுள் ஏது? இல்லையே! இது அவர்களுக்கும் தெரியும். பின் ஏன் கேட்கிறார்கள்? எதைக் கேட்கிறார்கள்.

அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் சகல அதிகாரமும் கொண்ட ஆரிய பார்ப்பன இனத் தலைவன் ஒருவன் இந்தியாவுக்கு தேவை! இதுவே இவர்கள் வேட்கை. அன்றைக்கு இராமன் செய்ததை இன்றைக்கு செய்ய ஓர் ஆட்சியாளனும் ஆட்சி அமைப்பும் வேண்டும். மற்றபடி அவர்களுக்கு கடவுள்களும் வேண்டாம், கோயில்களும் வேண்டாம்.

இவையெல்லாம் நம்மை ஏமாற்ற ஏற்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் அவ்வளவே. எனவே, நட்ட கல்லை சுற்றிவரும் நம் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும்!

தமிழ் ஓவியா said...

சிந்தனைக் (கவி)த் துளிகள்


- உடுமலை நாராயண கவி

உண்ணாத உபவாச விரதங்கள் கொள்ளுறார
ஒருசட்டி உப்பு மாவை உள்ளுக்குத் தள்ளுறார்
முன்னுக்கும் பின்னுக்கும் முரணாக நடக்கிறார்

கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு! - இது
களைப்பபை நீக்கிக் கவலையைப் போக்கி
மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு!

உலகம் வாழ வானம் மழை
பொழிந்திட வேண்டும் - வானம்
பொழிந்திட நாம் வனமரங்கள்
வளர்த்திட வேண்டும்.

தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
காசுமுன் செல்லாதடி - குதம்பாய்
காசுமுன் செல்லாதடி.

துன்ப வாழ்விலும் இன்பம் காணும்
விந்தை புரிவது சிரிப்பு! - இதைத் துணையாய்க் கொள்ளும் மக்களின் முகத்தில்
துலங்கிடும் தனிச் செழிப்பு!

அறிவேதரும் பெருமை சிறுமை!
அவரவர்பால் அமைந்த திறமை!
உறவுடன் யாவரும் வேற்றுமை
நீக்கிட முயல்வது கடமை!

ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே - குதம்பாய்
காசுக்குப் பின்னாலே

ஆளையேச்சுத் தின்பா ரெல்லாம்
வேலை செஞ்சேயாகணும் - இனி
அதிர்ஷ்டம் யோகம் என்ற சொல்லை - அக
ராதிவிட்டே எடுக்கணும்.

நெனைச்சதை எல்லாம் எழுதி வச்சது
அந்தக் காலம்; - எதையும்
நேரில் பார்த்தே நிச்சயிப்பது
இந்தக் காலம்

10. மழைவரு மென்றே மந்திரம் ஜெபிப்பது
அந்தக் காலம்; - மழையைப்
பொழிய வைக்கவே யந்திரம் வந்தது
இந்தக் காலம்!

வரவு செலவு எண்ணிப் பார்க்கணும் - வீட்டு
வாழ்வின் தேவைக்கண்டு கேக்கணும் - போலி
மரியாதை மதிப்புக் காக
அல் டாப்புகளை நீக்கணும்!

ஓடி யோடிப் பல வேலைகள் செய்பவன்
உடம்பது திடமாகும் - செய்யாவிடில்
உறுப்புகள் முடமாகும் - அல்லாமலும்
உற்சாகம் குறைவாகும்!

பிறவியிலே குலபேதமும் ஏது?
பெண்களைக் குறை சொல்வது பெருந் தீது!
அறநெறி யதற்கிது அணுவுந் தகாது;
அரி ஹரி யென் திருச்செவி கேளாது.

மழை கொறஞ்சா விளைவுயராது - நம்ம நாட்டில் ஜாதி
மதமிருந்தாப் பகமை மாறாது;
எதையும் சுத்தப் படுத்தணும்!

அன்பே கடவுள் என்ப தெதனாலே? - அதில்
ஆன்ம சக்தி இன்பம் இருப்பதாலே!
சாத்திரங்கள் பொய்யென்ப தெதனாலே?- ஏமாத்துகிற
வார்த்தையு மிருப்பதாலே!

ஜாதிமதம் இல்லையென்ப தெதனாலே? - மனம்
சமத்துவம் தானடைந்த தன்மையாலே!
பொதுவுடைமை கேட்ப தெதனாலே? - தொழில்
புரிந்தும் புசிப்பற்றுப் போனதாலே!

ஒட்டிக்கு ரெட்டியாக வட்டிக்குப் பணம் கொடுத்து
ஊரார் முதலைக் கொள்ளையடிப்பார் - இவர் அதை
ஊதுபத்தி சாம்பிராணி சூடம் வாங்கி எரிப்பார்
உண்ணாமலே செலவழிப்பார்!
பட்டம் பதவிக் கிறைப்பார் - கோயில்
கட்டுவதற்கும் செலவழிப்பார்

தமிழ் ஓவியா said...

நாடு கலந்த காதலர்களின் சுயமரியாதை திருமணம்


செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த அலைஸ் யான்ஸ் டோவா தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்பு மகேஷைக் காதலித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன், செப்டம்பர் 17இல், சென்னை பெரியார் திடலில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார்கள். இந்தத் திருமணத்தின் பின்னணி குறித்து அறிந்து கொள்ள இருவரையும் சென்னை கலைஞர் நகரிலுள்ள அன்பு மகேஷின் வீட்டில் உண்மை இதழுக்காக சந்தித்தோம்.

உண்மை: அலைஸ்யான்ஸ் டோவா, வணக்கம். உங்களைப்பற்றிச் சொல்லுங்கள்?அலைஸ்: நான் செக் ரிபப்ளிக்கின் தலைநகரான பிராஃக்கு என்ற நகரத்தில் பிறந்தவள். எனது தாய் மார்ச்சிலா மிக்கே கோவா. அவர் ஆசிரியராக இருக்கிறார். தந்தை வாக்ஸ்டவ் யான்டா கணக்காளராக இருக்கிறார். (யான்ஸ்டோவா என்றால் `பெண்`என்றும் யான்ஸ்டா என்றால் `ஆண்`என்றும் பொருள்) நான் நடன ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.

உண்மை: தமிழ்நாட்டுக்கு வந்ததன் பின்னணியைப் பற்றி சொல்லுங்கள்?

அலைஸ்: கல்லூரியில், இன்டோலஜி துறையில் முதன்மைப் பாடங்களாக தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம், பெங்காலி ஆகிய மொழிகள் இருந்தன. தமிழ் மிகப் பழைய மொழிகளுள் ஒன்று. ஆகவே, தமிழைத் தேர்ந்தெடுத்தேன். முதலில், கற்றுக் கொள்வதற்கு கடினமாக இருந்தது. கற்றுக் கொள்ள கற்றுக்கொள்ள மிகவும் ஆச்சர்யாக இருந்தது. முன்று மாதங்கள்தான் கற்றுக்கொண்டேன்.

அதற்குள், தமிழர் பண்பாட்டின் மீது ஆர்வம் அதிகரித்தது. ஆகவே, தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் என்று விரும்பினேன். Chouch Surfing (Internet Community Website) மூலமாக இவர் (அன்பு மகேஷை சுட்டுகிறார்) எனக்கு அறிமுகமானார். கல்லூரியில், பொங்கல் திருவிழா தமிழர் கலாச்சார விழாவைப் பார்க்குமாறு சொல்லியிருந்தார்கள். எனது விருப்பத்தை அன்பு மகேஷ் நிறைவேற்றிக் கொடுத்தார். அங்கு சென்றபின், தமிழர் கலாச்சாரத்தின் மீதான பற்று அதிகரித்தது.

தமிழ் ஓவியா said...

உண்மை: அன்பு மகேஷ் நீங்கள் ஒரு கடவுள் மறுப்பாளர் ஆனது எப்படி? பெரியாரின் அறிமுகம் உண்டா?

அன்பு: சிதம்பரத்தில் குமராட்சி பக்கத்தில் வெல்லுர் என்னும் சிறிய கிராமம்தான் நான் பிறந்த ஊர். இயற்கை வளம் நிறைந்த கிராமம். எனது அப்பா, மாவட்ட பதிவாளராக பணிபுரிகிறார். அம்மா பானுமதி வீட்டைக் கவனித்துக் கொள்கிறார். என்னைத் தவிர, வீட்டில் எல்லோரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்.

எனது அம்மா வீட்டில் ஓம் சக்தி கோயிலே வைத்து நடத்தி வந்தார்கள். அதனாலேயே எனக்கு கடவுள் நம்பிக்கை தகர்ந்து கொண்டே வந்தது. ஒருமுறை அண்ணா பல்கலைக்கழகத்துக்-கு எதிரில் உள்ள காந்தி மண்டபத்தில் மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளுக்கு ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதற்கு நானும் சென்றிருந்தேன். கொடுமையா இருந்தது. அந்த நிமிடத்தில் இருந்து நான் நாத்திகம் ஆனேன். கடவுள் இல்லை. இருந்தாலும் அவர் நல்லவரில்லை. ஆகவே, கடவுள் தொடர்பான விசயங்களில் நான் நேரத்தைக் கடத்த விரும்பவில்லை. முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்து வாழவேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். பெரியார் பற்றி அறிவேன். அவரின் பகுத்தறிவுப் பிரச்சாரம் பெரிய வெற்றியடைந்திருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான் அலைஸ் எனக்கு அறிமுகமானார். 2012 ஜனவரி 7ஆம் தேதிதான் அவரைச் சந்தித்தேன். அவர் விருப்பப்படி பொங்கல் திருவிழாவிற்கு அழைத்துச் சென்றிருந்தேன். மிகவும் ரசித்தார். பழகப் பழக இருவருக்கும் பிடித்துப் போனது. பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைத்தேன். அவர்களுக்கும் பிடித்துப் போனது. பிறகு, திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம்.

உண்மை: சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எப்படி முடிவு செய்தீர்கள்?

அன்பு: திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால், சட்டங்களும், சம்பிரதாயங்களும் எங்களை அடிமைப்படுத்திவிட்டன. எளிமையாய் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று நினைத்தேன். எனது நண்பர் முரளிதரன் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்தது. அலைசைப் பொறுத்தவரையில், அவருக்கு மதம் கிடையாது. செக் குடியரசில் திருமணங்கள் ஏறக்குறைய இப்படித்தான் நடக்கும். செக்கில் ஏறக்குறைய மத நம்பிக்கையே கிடையாது. ஆகவே, இது மிகவும் சுலபமாயிற்று.

உண்மை: திருமணத்தை பதிவு செய்து கொண்டீர்களா?

அன்பு: சட்ட ரீதியிலான பிரச்சனைகள் இன்னமும் எங்களை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த கெடுபிடி சரிதான். காரணம், தவறுகளும் நடந்து விடுகிறது. இங்கு பதிவு செய்வதற்கு, செக் குடியரசிலிருந்து, அலைஸ் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற சான்று தேவைப்படுகிறது. அது வருவதற்கு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிடும். ஆகவே, அலைஸின் அடையாள அட்டையில் அந்த குறிப்பு இருக்கிறது. அதை ஒரு நோட்டரி பப்ளிக் மூலம் மொழி மாற்றிய சான்று பெற்று பிறகு பதிவு செய்து கொள்ளவேண்டும்.

உண்மை: நீங்கள் எண்ணியபடியே திருமணம் நடந்துவிட்டது. எதிர்கால வாழ்க்கை தமிழ்நாட்டிலா? செக் குடியரசிலா?

அலைஸ்: இப்போதைக்கு செக் குடியரசுக்கு திரும்ப இருக்கிறோம். இங்கே சில மாதங்கள் இருப்போம். இந்தக் கேள்வி மிகவும் கடினமானது. இரண்டு பக்கம் இருப்பவர்களையும் தவிர்க்க இயலவில்லை. இருவரும் சேர்ந்து முடிவு செய்வோம்.

நேர்காணல்: உடுமலை வடிவேல்

தமிழ் ஓவியா said...

கோயில் கடவுளால் பயனில்லை! கோல்வால்கர் கூறுகிறார்!- மஞ்சை வசந்தன்

கடவுள், மதம், சாத்திரம் என்றால் அவை அனைத்தும் புனிதமானவை, மேலானவை, அவற்றிற்காக உயிரையும் கொடுக்க வேண்டும் என்று உலகிற்கெல்லாம் உணர்வு ஊட்டுகின்றனர் (வெறி ஏற்றுகின்றனர்) மனிதர்களை மறந்த மதவாதிகள்.

அதிலும் குறிப்பாக இந்துமதத்தை ஏந்திப் பிடிக்கும் இந்துத்வாவாதிகள் அதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டு செயல்படுகின்றனர்.

இல்லாத ஒரு மதத்தை ஏற்றிப் போற்றும் அறியா மக்களின் கூட்டம் பெரும் பகுதியாய் இருக்க, இந்து மதத்தை வைத்து தன் ஆதிக்கத்தை இருபத்தோறாம் நூற்றாண்டிலும் நிலைநாட்டிக் கொள்ளத் துடிக்கும் இந்துமத வெறியர்கள் பல பரிமாணங்களில், பரிவாரங்களில் அலைந்து கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட வெறிக் கூட்டத்திற்கு சிந்தனைகளைக் கொத்துக் கொத்தாய்க் கொடுத்து, சிந்தாந்தம் நல்கி அவர்களை உசுப்பி விட்டவர்தான் கோல்வால்கர்.இந்த கோல்வால்கர்களுக்கும், அவர் வழிச் செல்லும் இந்துமத வெறியர்களுக்கும் கடவுளும் இல்லை; மதமும் இல்லை. அவற்றின் மீது அவர்களுக்கு நம்பிக்கையும் இல்லை. அவையெல்லாம் அவர்களுக்குக் கருவிகள். அவர்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள அவையெல்லாம் அவர்களுக்குத் தேவைப்படுகின்றன. மற்றபடி அவர்கள் கடவுள் நம்பிக்கையுடையவர்களும் அல்ல; மதப்பற்று உடையவர்களும் அல்ல.

இப்படிக் கூறும்போது பலருக்கு வியப்பாகக்கூட இருக்கும். ஆனால் உண்மை அதுதான். ஆம். அதை கோல்வால்கரே கூறுகிறார் பாருங்கள்.

மக்கள் கோயில்களுக்குச் சென்று, அங்குள்ள சிலைகளையே எல்லாம் வல்ல தெய்வத்தின் சின்னங்களாகக் கருதி அவற்றின்மீது கவனம் குவிக்கின்றனர். ஆனால், இவையெல்லாம் கர்மயோகிகளான (செயல் நிறைந்தவர்களான) எங்களுக்கு (உடன்பாடான தல்ல) நிறைவு தருவது அல்ல. எங்களுக்குத் தேவை (வேண்டியது) ஓர் உயிருள்ள கடவுள். கோயில்களுக்குச் செல்கின்றவர்கள் கூறுவதை மட்டும் கேட்கக்கூடிய, ஆனால் பதில் சொல்லாத ஒரு கடவுளால் என்ன பயன்? இந்தச் சிலைகள் (சின்னங்கள்) அழுவதுமில்லை சிரிப்பதுமில்லை, எதிர்வினை ஏதும் புரிவதும் இல்லை என்கிறார் கோல்வால்கர்.

(Quoted by Anderson and Damle, Ibid, P.16 தரவு: இந்து இந்தியா -_ எஸ்.வி.இராஜதுரை, பக்கம் 100)

தமிழ் ஓவியா said...

இந்துமதம் என்று சொல்லப்படும் ஒரு கற்பனை மதத்தின் (தொகுக்கப்பட்ட கதம்பத்தின்) அடிப்படைத் தத்துவமே சிலை வழிபாடுதான். சிலை வழிபாடு இல்லையென்றால் கோவில் இல்லை, அபிஷேக ஆராதனை இல்லை, அதற்கான மந்திரங்கள் இல்லை, அர்ச்சகர் இல்லை, கருவறை இல்லை, கருவறை புனிதம் இல்லை, தீட்டு இல்லை.

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியயே சுற்றிவந்து மொணமொணன்று சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ? என்று நமது தமிழர்கள் சொன்னதை அப்படியே ஏற்று கோல்வால்கர் சொல்லிவிட்டபின் மதம் ஏது? உருவ வழிபாட்டை மறுத்து, மதத்தை வெறுத்து வள்ளலார் சொன்னதை கோல்வால்கரும் ஒப்புக் கொண்ட பின் மதம் ஏது?

உருவ வழிபாட்டையே மறுக்கும் இஸ்லாம் மதத்தின் கொள்கையை கோல்வால்கரும் கூறிவிட்டபின் இந்துமதம் ஏது? பின் மத மோதல்கள் ஏன்?

கடவுளுக்கு உருவம் இல்லை என்று ஏற்றுக்கொண்டபின் கடவுளுக்கு உடல் இல்லையென்று உறுதியாகிறது. உடலில்லா கடவுள் என்றால் முகத்தில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் ஷத்திரியன், இடையில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன் என்ற கொள்கை நொறுங்கிப் பொடியாகிறது. அப்படியாயின் பிராமணன் ஏது? பூணூல் ஏது? மனுதர்மம் ஏது? மற்றவை ஏது? அப்படியாயின் பிராமணன் உயர்ந்தவன் என்ற சித்தாந்தம் சிதறிப் போகிறது.

ஆனால், இவர்கள் இந்து மதத்தை ஏந்திப் பிடிக்கிறார்கள், பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கிறார்கள்.

ஆக, இவர்களுக்கு கொள்கை கிடையாது. கோட்பாடு கிடையாது; தெளிவு கிடையாது; திடமான வரையறை கிடையாது. ஆனால், ஒன்றில் மட்டும் உறுதியாய் நிற்கிறார்கள். அது, பிராமணன் மட்டுமே உயர்ந்தவன்; அனைத்துக்கும் உரியவன்; அவனே அறிவின் கர்த்தா; அனைத்தையும் ஆளவும் அனுபவிக்கவும் பிறந்தவன்.

மற்றவர்களெல்லாம் அவர்கள் நலத்திற்கு அடிமை வேலை செய்யப் பிறந்தவர்கள்; விலங்கு போன்றவர்கள். இதில் அவர்கள் அன்றும் உறுதியாக இருந்தார்கள். இன்றும் உறுதியாய் நிற்கிறார்கள். இதையும் கோல்வால்கர் தனது சிந்தனைக் கொத்து என்ற நூலில் ஓர் நிகழ்வை எடுத்துக் காட்டி விளக்குகிறார்.

உருவ வழிபாடு பயனற்றது என்கிறார். ஆனால், அதன் அடிப்படையில் பிராமணர்களுக்குக் கிட்டிய அனைத்து பலன்களும் வேண்டும் என்கிறார். இதுதான் பார்ப்பனப் பித்தலாட்டம் என்பது.

எனவே, கோல்வால்கருக்கும் இந்துத்வாவாதி களுக்கும் பிராமண ஆதிக்கம் வேண்டும். மற்றபடி மதம், கடவுள் என்பதெல்லாம் கருவிகள்.

அதனால்தான் பேசாத சிலை வேண்டாம். உயிருள்ள கடவுள் வேண்டும் என்கின்றனர்.

உயிருள்ள கடவுள் ஏது? இல்லையே! இது அவர்களுக்கும் தெரியும். பின் ஏன் கேட்கிறார்கள்? எதைக் கேட்கிறார்கள்.

அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் சகல அதிகாரமும் கொண்ட ஆரிய பார்ப்பன இனத் தலைவன் ஒருவன் இந்தியாவுக்கு தேவை! இதுவே இவர்கள் வேட்கை. அன்றைக்கு இராமன் செய்ததை இன்றைக்கு செய்ய ஓர் ஆட்சியாளனும் ஆட்சி அமைப்பும் வேண்டும். மற்றபடி அவர்களுக்கு கடவுள்களும் வேண்டாம், கோயில்களும் வேண்டாம்.

இவையெல்லாம் நம்மை ஏமாற்ற ஏற்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் அவ்வளவே. எனவே, நட்ட கல்லை சுற்றிவரும் நம் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும்!

தமிழ் ஓவியா said...

மேடைத் துளிகள்


ஒருமுறை சென்னை கால்நடைக் கல்லூரி விழாவுக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதாவை அக்கல்லூரி மாணவர்கள் அழைத்திருந்தனர். எம்.ஆர்.ராதாவும் வந்துவிட்டார். நிகழ்ச்சி நடப்பது எங்கே என்று கேட்டார்.

முதல் மாடியில் உள்ள அரங்கத்தில் என்று மாணவர்கள் சொல்ல, மேல் மாடிக்குச் செல்ல எனது உடல் நிலை இடம் கொடுக்காதுப்பா... என்றார் ராதா. மாணவர்களுக்கோ நிகழ்ச்சி ஏற்பாடுகளை எல்லாம் மேலே செய்துவிட்டதால் கீழே மாற்றமுடியாத நிலை. நாங்கள் அழைத்துச் செல்கிறோம் வாருங்கள் என்று கூறி ராதாவைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றுவிட்டனர்.

சிரமத்துடன் ராதாவும் மேல் மாடிக்கு வந்துவிட்டார். அவரைப் பேச அழைத்தனர்.ராதா மைக் பிடித்தார். மாணவர்கள் ஆர்வத்துடன் கைத் தட்டினார்கள். எனக்கு ஒடம்பு சரியில்லன்னு சொன் னேன்; ஆனாலும் என்னைக் கஷ்டப்படுத்தி மேலே கூட்டிட்டு வந்துட்டீங்க.

மனுஷனோட கஷ்டத்தையே உங்கனால புரிஞ்சுக்க முடியலையே? எப்படிப்பா மாட்டோட கஷ்டத்தைப் புரிஞ்சுக்கு வீங்க? என்று எடுத்த எடுப்பிலேயே ஒரு போடு போட்டார். என்னை மாதிரி கூத்தாடியக் கொண்டாடாதீங்க; பெரியார் மாதிரி அறிவாளியக் கொண்டாடுங்க; அப்பதான் நாடு உருப்படும் என்று அறிவுரை கூறி அவருக்கே உரிய கலகலப்புடன் பேசினார்.

சென்னை பெரியார் திடலில் 2012 செப் 17ல்
நடந்த பெரியார் பிறந்தநாள் கருத்தரங்கில்
சொன்னவர்: வழக்குரைஞர் ராமலிங்கம்

தமிழ் ஓவியா said...

இன்றே அணிவேன் என்றும் அணிவேன்!
கலைஞர் கடிதம்

உடன்பிறப்பே,

ஒரு ஜனநாயக நாட்டில், எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கை களையும், குறைகளையும் சுட்டிக்காட்டி அமைதியான முறையில் சட்டரீதியாகப் போராட்டம் நடத்துவது என்பது அனுமதிக்கப்பட்ட முறையாகும். தி.மு. கழகம் ஆளுங்கட்சியாக இருந்தபோது, அதை விமர்சித்து ஜெயலலிதாவின் அறிக்கைகள் வெளிவராத நாட்களே கிடையாது. எடுத்துப் பார்த்தால், “வடசென்னை மாவட்டத்தில் தண்டையார் பேட்டையில் துணை மின் நிலையத்தை செயல்பாட்டிற்குக்கொண்டு வராத, மைனாரிட்டி தி.மு.க.அரசைக்கண்டித்து வடசென்னை மாவட்டக்கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” - இது 29-4-2010 அன்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை! அந்தப்போராட்டத்திற்கு ஆட்கள் வருகிறார்களோ இல்லையோ, அது நடக் கிறதோ இல்லையோ, ஆனால் ஜெயலலிதாவின் ஆர்ப்பாட்ட “போர்”ப்பாட்டு அறிக்கை கள் வராத நாட்களே இல்லை.

அப்போது மிகச்சாதாரணப்பிரச்சினை களுக்கெல்லாம் ஆர்ப்பாட்டம், மறியல் எல்லாம் நடைபெற்றது. இப்போதோ மாநிலம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 16 மணி நேரத்திற்கு மேல் மின்சாரமே இல்லை. மாநிலமே இருண்டு கிடக்கிறது. எந்த நாளிதழைப்பிரித்தாலும் திருப்பூரில் மின்வெட்டைக்கண்டித்து போராட்டம், பந்த் - 1000 கோடி ரூபாய் தொழில்கள் பாதிப்பு - கோவையில் போராட்டம் - 800 கோடி ரூபாய் தொழில்கள் பாதிப்பு என்ற செய்திகள்.

சட்டம், ஒழுங்கு என்று எடுத்துக்கொண்டால் இந்த இரண்டு நாட்களில் மட்டும், ராமேசுவரம் அருகே ஒரே குடும்பத்தில் ஆறு பேர் எரித்துக்கொலை - திருப்பெரும்புதூர் அருகே சினிமா தயாரிப்பாளர் பி.பி.ஜி குமரன் கொலை, இந்த வழக்கில் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் குற்றவாளி என்று கைதாகி இருக்கிறார் - காசிமேட்டில் பிரபல ரவுடி பிரான்சிஸ் வெட்டிக் கொலை - சென்னைப் பல்கலைக்கழக காவலாளி பாபு அடித்துக் கொலை - மதுராந்தகத்தில் சாராய வியாபாரி கங்காதரன் வெட்டிக் கொலை - வெள்ளக் கோவில் அருகே கணவன், மனைவி, மாமியார் கொலை - தேவகோட்டை அருகில் மண்வெட்டியால் அடித்துக்கணவன் கொலை - தஞ்சையில் முன்னாள் காவலர் தர்மன் படுகொலை - நேற்றும் இன்றும் நடைபெற்ற கொலைகளின் பட்டியல் இது.

எட்டாவது முறையாக அமைச்சர்கள் மாற்றம் - இந்த ஆட்சியில் இந்நாள் அமைச்சர்களின் எண்ணிக்கையை விட முன்னாள் அமைச்சர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும் போலும்!. பேரவைத் தலைவரே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்ற நிலைமை. தேர்தல் நேரத்தில் தோழமைக்கட்சிகளாக இருந்த வர்களே இன்று எதிர்க் கட்சியாகி விட்டார்கள். யாரையும் மதிக்காத போக்கு. அதிகாரி களின் நிலைமையோ தர்ம சங்கடம். “ஆமாம்” போடுபவர்களே, பதவியில் நீடிக்க முடியுமென்ற நிலை. காவல் துறையோ ஏவல் துறையாகச்செயல்படுகிறது. சென்னை மாநகர ஆணையரே ஒன்றரை ஆண்டிற்கு மேல் நீடிக்க முடியவில்லை.

தமிழ் ஓவியா said...

பத்திரிகைச் சுதந்திரம் என்றால் என்ன என்று கேட்கும் நிலை. எத்தனை பத்திரிகைகள் மீது அவதூறு வழக்குகள் என்ற எண்ணிக்கையே தெரியவில்லை. அதன் காரணமாக எந்தப் பத்திரிகையும் இந்த ஆட்சியைக்குறை கூறி, மக்கள் பிரச்சினைகளை விளக்கித் தைரியமாக எதையும் எழுத முடியாத நிலை. எதிர்த்து எழுதினால் அரசின் விளம்பரம் கிடைக்காது. பிரதான எதிர்க்கட்சியில் தீவிரமாகச் செயல் படுவோர் மீதெல்லாம் பொய் வழக்குகளைப்போட்டு சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாகச் சிறைக்கு அனுப்பிடும் கொடுமை. அவர் களிலும் தீவிரமாகச் செயல்படுபவர்கள் மீது குண்டர் சட்டம். கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களையெல்லாம், திறந்து வைத்துப் பயன்படுத்தாமல், கடந்த ஆட்சியின் திட்டங்களை குப்பைக்குழிக்கு அனுப்புவதைப்போலவே, காழ்ப்புணர்ச்சியோடு செயல்படும் தன்மை. என்னுடைய பெயர் இடம் பெற்றிருக்கிறது என்பதற்காகவே அகற்றப்படும் கல்வெட்டுகள். ஒவ்வொரு நாளும் இந்த ஆட்சியைப் பற்றி நீதிமன்றங்களிலே நீதிபதிகள் தெரிவிக்கும் கண்டனக்கணைகள். காவிரிப் பிரச்சினையில் கர்நாடகாவில் இந்த ஒரு மாத காலத்தில் மூன்று அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டங்களை நடத்திச் செயல்படுகின்ற அரசு இருக்கையில், தமிழகத் திலோ எந்தக் கட்சித்தலைவர்களின் கூட்டத்தையும் கூட்டவே இல்லை. அண்டை மாநிலங்களையும், எதிர்க்கட்சியினரைப் போல நடத்துகின்ற காரணத்தால் இரண்டு மாநிலங்களுக்கும் இடையே சுமூக உறவு கெட்டு 6ஆம் தேதியன்று கர்நாடகாவில் “பந்த்” அறிவிப்பு. அதன் காரணமாக அந்த மாநிலத்தில் பிழைப்புக் காகச் சென்றிருக்கும் தமிழர்கள் தங்கள் நிலை என்னவாகுமோ என்று அச்சத்தில் உறைந்திருக்கின்ற நிலைமை. தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கோ, கர்நாடகாவி லிருந்து தமிழகத்திற்கோ பேருந்துகளே வர முடியாத சூழ்நிலை.

ஒன்றரை ஆண்டுக் காலத்தில் மின் வாரியத்திற்கு நான்கு தலைவர்கள். கூடங் குளத்தில் உரிய நேரத்தில் உரிய முடிவுகளை எடுக்காத காரணத்தால் ஒன்றரை ஆண்டுகளாக நீடிக்கும் போராட்டம். அங்கே இரண்டு மீனவர்களை சுட்டுக் கொல் கின்ற கொடுமை. பரமக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஆறு உயிர்கள் கொல்லப்பட்ட சோகம்! பஞ்சம், பட்டினி காரணமாக அங்கே கொள்ளை, இங்கே வழிப்பறி, பெண்ணிடம் சங்கிலிப் பறிப்பு என்ற செய்திகள்! எதற்கெடுத்தாலும் போலீஸ் தடியடி. பேச்சுவார்த்தைகளின் மூலமாகத்தீர்க்க வேண்டிய பிரச்சினைகளிலே கூட, போலீஸ் படையை அனுப்பி அடக்குமுறை.

தமிழ் ஓவியா said...

விலைவாசியைப்பற்றியோ கேட்கவே வேண்டியதில்லை. சுமார் இருபதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் டாஸ்மாக் மூலமாக வருமானம் வந்த நிலையிலே கூட, பால் விலை உயர்வு, பஸ் கட்டணம் உயர்வு, இல்லாத மின்சாரத்திற்கு பொல்லாத மின் கட்டணம், வரலாறு காணாத அளவிற்கு உயர்வு என்று ஏழையெளிய நடுத்தர மக்கள் படாத பாடு படுகிறார்கள்.

அரசு அலுவலர்களின் நிலையோ சொல்ல முடியாது. மத்திய அரசு அகவிலைப்படி உயர்வினை அறிவித்துப்பல நாட்களாகியும், தமிழகத்திலே இன்னும் அரசு மூச்சு விடவே இல்லை. அங்கன்வாடிப்பணியாளர்கள், சத்துணவுப்பணியாளர்கள் நியமனத்தில் ஆளுங்கட்சியினரின் பரிந்துரைகள் காரணமாக முட்டுக்கட்டை. பரிந்துரைகளுக்குச் செவி சாய்க்காமல் நியாயமாகச் செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மூன்று மாதங்களி லேயே மாற்றப்பட்டு விட்ட கொடுமை. சத்துணவுப் பணியாளர்கள் 29 ஆயிரம் பேரைத் தேர்வு செய்ததை உயர்நீதிமன்றமே ரத்து செய்துள்ள வெட்கக் கேடு. அதற்கடுத்த நாளே 3 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. குடி தண்ணீர், குடம் எவ்வளவு என்று ஏடுகளில் செய்தி. குடிநீர் வாரியம் ஒரு லாரி குடிநீர் விலை எவ்வளவு என்று தானாக அறிவிக்கின்றது.

உடன்பிறப்பே, இப்படி எழுதிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இந்தக்கொடுமை களையெல்லாம் சுட்டிக்காட்டி ஆளுங்கட்சியின் அராஜகப் போக்கைக்கண்டித்து, அமைதியாக அறவழியில் கருப்பு உடை அணிந்து மனிதச் சங்கிலி அணிவகுப்பு நடத்தப் போகிறோம் என்று கழகச் செயற்குழு விலே முடிவெடுத்து, முறைப்படி அதற்கு அனுமதி கோரி, காவல் துறையினரிடம் எழுதிக் கொடுத்தால் அதற்குக் கூட இந்த ஆட்சியிலே அனுமதி கிடைக்கவில்லை. கழகத்தின் சார்பில் கேட்கப்படும் வழி சரியில்லை என்று சொன்னதால், மூன்று மாற்று வழிகளைக்குறித்துக்கொடுத்து, இதிலே ஒன்றைக் கொடுங்கள் என்று கேட்டால் அதற்குக்கூட இந்த ஆட்சியினர் அனுமதி தரவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்?
ஒரே நாளில் ஒரு சில மணி நேரங்களில் மட்டுமே தமிழக மக்கள் பிரச்சினைகளுக்காக நடத்தவிருந்த மனிதச்சங்கிலி ஆர்ப்பாட்டத்தை தற்போது மூன்று நாட்களில் நடத்தக் கூடிய அளவிற்கு இந்த ஆட்சியினர் நம்மைக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு சில மணிகள் சாலையோரத்தில் கருப்பு உடை அணிந்து நிற்பதோடு முடிந்து விடுகின்ற நிலையை - கருப்பு உடை அணிந்து வீடு வீடாகச்சென்று இந்த ஆட்சியினரின் அவலங்களை எடுத்துச்சொல்லக்கூடிய அளவிற்கு நம்மைக்கொண்டு போய் விட்டிருப்பது ஆளுங்கட்சியினரே தவிர நாமல்ல.

கழகம் நடத்தவிருந்த மனிதச்சங்கிலிக்கான அனுமதியை ரத்து செய்து காவல் துறை பிறப்பித்த ஓர் ஆணையை தற்போது என்னிடம் காட்டினார்கள். அந்த ஆணையின் தொடக்கத்தில், “அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் நிலவும் கடும் மின்வெட்டைக்கண்டித்தும், தொடர்ந்து தி.மு.க. வினரைப் பழி வாங்குவதைக் கண்டித்தும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில்” போராட்டம் என்று எழுதியிருக்கிறார்கள். எனவே காவல் துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையிலேயே அ.தி.மு.க. ஆட்சியிலே கடும் மின்வெட்டு இருப்பதையும், தி.மு.க.வினர் பழிவாங்கப்படு வதையும் ஒப்புக் கொண்டிருப்பது நமக்கு நன்றாகவே தெரிகிறது. எனவே இன்றையதினம் அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் தருகிற அளவிற்குத் தமிழகம் இருண்ட கண்டமாகவே காட்சியளிக்கிறது.

தமிழ் ஓவியா said...


இந்த அவலங்களை மக்களுக்குத்தெரிவிக்கும் வகையிலேதான் 5ஆம் தேதியன்று சென்னையிலும், 6ஆம் தேதியும், 7ஆம் தேதியும் மற்ற மாவட்டங்களில் மாநகர், ஒன்றியம், சிற்றூர், பேரூர் போன்ற அனைத்துப் பகுதிகளிலும், கருப்பு உடை அணிந்து “முரசொலி”யிலே வெளிவந்துள்ள வாசகங்களை துண்டுப்பிரசுரங்களாக அச்சியற்றி, வீட்டுக்கு வீடு எடுத்துச்சென்று சாதாரண, சாமான்ய, ஏழை, எளிய, நடுத்தர மக்களிடம் வழங்க வேண்டுமென்று கழகத்தினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். இந்தப் பணியினை மிகவும் அமைதியாக, அற வழியில், எந்தவிதமான பிரச்சினைக்கும் இடம் தந்து விடாமல் நடத்திட வேண்டுமென்று பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

சாலையோரத்தில் அமைதியாக மனிதச்சங்கிலியாக ஒரே இடத்தில் கருப்பு உடை அணிந்து நின்று அணிவகுப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றுதான் நாம் அனுமதி கோரினோம். இன்றையதினம்கூட மத்திய அரசின் நுழைவுத்தேர்வினை எதிர்த்து மருத்துவர்கள் மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்தி, அந்தப்புகைப்படங்கள் எல்லாம் ஏடுகளிலே வெளி வந்துள்ளன. எனவே மனிதச்சங்கிலிப்போராட்டம் என்பது அனுமதிக் கப்படாத ஒரு போராட்ட முறை அல்ல. அது போலவே கருப்பு உடை அணிந்து கொள்வது என்பதும் புதிதல்ல. அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள், தி.மு. கழகம் ஆளுங்கட்சியாக இருந்த போது, பேரவைக்கே கருப்பு உடை அணிந்து வந்திருக்கிறார்கள். ஒருவேளை முதலமைச்சர் ஜெயலலிதா இந்த அறவழி அறப்போராட்ட அணிவகுப்பு ஆர்ப்பாட்டத்திற்கு சென்னையில் கருணாநிதியே இந்த வயதிலே தலைமை தாங்கப் போகிறானே என்பதற்காக என் உடல்நிலை பற்றிப் பரிதாபப்பட்டு, அனுமதி கொடுக்கவில்லையோ என்னவோ? அப்படியென்றால் வெளியூர்களிலாவது அனுமதி கொடுத்திருப் பார்களே? ஏன் கொடுக்கவில்லை?

என்னைப் பொறுத்தவரையில் 5ஆம் தேதி ஒரு நாள்தான் இந்த ஆட்சியினரின் அவலங் களை எதிர்த்து கருப்பு உடை அணிவதாக இருந்தேன். ஒரு பழைய நிகழ்வை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். திராவிட விடுதலைப்படை என்பதாக ஒரு தொண்டர் படை திராவிடர் கழகத்துக்குத்தேவை என்று திருச்சி மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியார் டவ ரோடு திரும்பியதும், அதைப்பற்றி மேலும் சிந்தித்து, 1945 செப்டம்பர் 29ஆம் நாள் “குடி அரசு” இதழில், கருப்புச்சட்டைப்படை அமைப்பு என்பதாக ஓர் அறிவிப்பு வெளியிட்டார். டவ .வி.கே. சம்பத், கவிஞர் கருணானந்தம் ஆகிய இருவரும் அதன் தற்காலிக அமைப்பாளர்கள் என்று கூறும் அறிவிப்பு 22-12-1945 “குடிஅரசு” இதழ் வரையில் தொடர்ந்து வெளியானது. தந்தை பெரியார் விரும்பி அமைத்த அந்தக் கருப்புச் சட்டைப்படையின் முதல் தொண்டராக அப்போது டவ ரோட்டில் பதிவு செய்து கொண்டது யார் தெரியுமா? இதே மு. கருணாநிதி தான். அந்த மு.கருணாநிதிதான், நாளைய மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்குவதாக அறிவித்தேன். ஆம் நாளையதினம் கருப்புச் சட்டை அணிந்து மனிதச்சங்கிலியில் கலந்து கொள்வதாக இருந்தேன். அதற்கு இந்த அரசு அனுமதி கொடுக்கவில்லை. பரவாயில்லை, இன்று முதலே இந்த ஆட்சியின் அவலங்களை எதிர்த்து கருப்புச்சட்டை அணிவேன், இன்றே அணிவேன் இனி என்றும் அணிவேன்!

அன்புள்ள,
மு.க

Saravanan said...

கலைஞரை பாராட்டாமல் அல்லது தூற்றாமல் பத்திரிகை நடத்த முடியாது.
இப்படியாவது பிழைக்கட்டுமே.

Tamil Online

தமிழ் ஓவியா said...

யாரவது, ‘ என்னடா, இழவுக்கு போகின்றவன் மாதிரி கறுப்புடை அணிந்திருகிறாயே; அல்லது நீ என்ன திருட்டு பயலா?’ என்று கேலி செய்தால், ‘இது ஒன்றும் அப்படி அல்லப்பா; கறுப்புடை அணிந்து கொள்வதற்காக என்னை சாவுக்கு போகின்றவன் என்றோ, திருடப்போகின்றவன் என்றோ கூறினால், கறுப்புடை அணிந்து கோர்ட்டுக்கு செல்லும் வக்கீல் எல்லாம் என்ன இழவுக்கா போகிறார்கள்? அல்லது, திருடத்தான் போகிறார்களா? கோர்ட்டில் கறுப்புடை அணிந்து நீதி வழங்கும் நீதிபதிகள், வெயிலுக்கு கறுப்புக் குடை பிடித்து செல்வோர் – பள்ளி ஆசிரியர் இவர்கள் எல்லாம் என்ன, இழவுக்கு போகிறார்களா? கருப்புடையணிந்து பட்டம் பெரும் பட்டத்தாரிகள் எல்லாம் திருட்டுத்தனத்திற்காகவா பட்டம் பெறுகிறார்கள்?’ என்றெல்லாம் கேளுங்கள் என்று கூறினோம். அதை கேட்ட மக்கள் பெருவாரியாகக் கருஞ்சட்டை அணிய ஆரம்பித்தனர். குறிப்பாக இளைஞர்கள் பலர் உற்சாகத்தோடு அணிந்துகொண்டனர். கறுப்புச் சட்டை அணிந்து செல்வதை ஒரு பெருமையாகக் கூட பலர் கருத ஆரம்பித்துவிட்டனர்.

- தந்தை பெரியார் (விடுதலை 11.03.1948)