Search This Blog

16.10.12

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை-அக்டோபர் 22 அன்று ஆர்ப்பாட்டம்!


தந்தை பெரியார் அவர்களின் இறுதி ஆணையை நிறைவேற்றிட வலியுறுத்தி
அக்டோபர் 22 அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
நேற்றைய முரசொலி ஏட்டில் தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம் நிறைவேற்றப்பட்டு, பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க முயன்றதுபற்றியும், அத்தகைய சட்டம் பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் சில ஆண்டுகளாகவே நிலுவையில் இருப்பது பற்றியும் மிகத் தெளிவான, விரிவான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்கள். இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய அறிக்கையாகும்.

அந்த அறிக்கையில்....

தமிழக அரசின் அர்ச்சகர் சட்டம் கண்டு வெகுண்ட சமத்துவம் விரும்பாத சனாதனிகள், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். அந்த வழக்கில் 1972ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் நாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கோயில் அர்ச்சகர்களை நியமிப்பது வகுப்பு வேறுபாடற்ற நடவடிக்கை. அந்த நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிட உரிமை உண்டு. மனுதாரர்களால் தவறு என்று கூறப்படும் இச்சட்டம், மத சம்பந்தமான நடவடிக்கைகளிலோ, விவகாரங்களிலோ தலையிடவில்லை. எனவே தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் செல்லுபடியானதே என்று தீர்ப்பிலே கூறப்பட்டிருந்த போதிலும்; அந்தச் சட்டத்தின்படி காரியங்கள் நடைமுறைக்கு வர முடியாத அளவுக்கு முடக்கப்பட்டு விட்டன. அது நடைமுறைக்கு வர வேண்டுமென்றால், அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடிப்படையாக வைத்து, திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் எனது இளவல் கி.வீரமணி அவர்கள், விடுதலையில், அறுவை சிகிச்சை வெற்றி - ஆனால் நோயாளி மரணம் என்று தலைப்பிட்டு அருமையான தலையங்கம் ஒன்றினைத் தீட்டியிருந்தார்.

பெரியார் நெஞ்சில் தைத்த முள்

கழக அரசின் சார்பில், நாம் எவ்வளவோ முயன்றும், அரசியல் சட்டத்தில் தக்க திருத்தம் கொண்டு வரப்படவே இல்லை என்பதைக் கண்டு கொதிப்படைந்த தந்தை பெரியார் அவர்கள், 1973ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில், நாடு தழுவிய ஒரு போராட்டத்தை நடத்தப் போவதாக தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் அந்தப் போராட்டத்தை நடத்தாமலேயே, 1973ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் பெரியார் அவர்கள் மறைந்து விட்டார்கள். அர்ச்சகர் சட்டம் முடமாக்கப்பட்ட நிலையில், அதன் காரணமாக தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளோடுதான் மறைந்தார்.

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள்

2006ஆம் ஆண்டு கழக அரசு அமைந்த உடன் தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் தைத்திருந்த அந்த முள்ளை  அகற்றும் பணியில் ஈடுபட்டது. சட்ட நிபுணர்களைக் கலந்தாலேசித்து, தகுதியும், திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும், ஜாதி வேறுபாடின்றி திருக்கோயில்களில் அர்ச்சகராகலாம் என 23.5.2006 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும்; சென்னை, திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவப் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்பட்டன. இப்பயிற்சி நிலையங்களில்  மாணவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியன இலவசமாக அளிக்கப்பட்டன.

ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ஒன்றுக்கு 500 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் உள்பட மொத்தம் 207 மாணவர்கள் ஓராண்டு கால (இளநிலை அர்ச்சகர் சான்றிதழ்) பயிற்சியை முடித்து, சான்றிதழ் பெற்றனர்.

மீண்டும் வழக்கு!

2006ஆம் ஆண்டு கழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டு, அது உச்சநீதிமன்றம் வரை சென்றது.... என்று விளக்கமாக எழுதி, தற்போதுள்ள தமிழக அரசால் விரைவுபடுத்தப்படக் கூடிய முயற்சிகள் உச்சநீதிமன்றத்தில் எடுக்கப்படல் வேண்டும் என்பதையும், யாருக்காக (தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள்) கழக ஆட்சியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டதோ, அவர்களும் அது குறித்துக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை என்றும் உரிமைகளில் உயர் உரிமையாக மனித சமத்துவ சமவாய்ப்பு உரிமையை ஈட்டிட அந்த ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் அரசுக்கு அழுத்தந்தரவும் கடமைப்பட்டுள்ளனர் என்பதையும் விளக்கமாக எழுதியுள்ளார் கலைஞர் அவர்கள்.

தெளிவுபடுத்தப்பட வேண்டிய கருத்து

இதில் நாம் ஒரு முக்கிய கருத்தைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
1970ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த சட்டம் செயல்படுத்தப்படாமல் முடக்கப்பட்டதுபற்றி, சேஷம்மாள் வழக்கு என்ற அந்த 1970ஆம் ஆண்டு வழக்குத் தீர்ப்பைப் பற்றி அப்போது ஏடுகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் தான் தலையங்கம் எழுதிய நாமும், அதுபற்றி விவாதித்தபோது சில அரசியல் சட்ட நிபுணர்களும் கூறிய வியாக்யானம் (Interpretation of the Supreme Court Judgement) காரணமாக, முடக்கப்பட்ட சட்டம் மீண்டும் செயல்பட இந்திய அரசியல் சட்டத் திருத்தம் தேவை என்று கருதி எழுதினோம்.

எம்.ஜி.ஆர். ஆட்சியில்...

தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை முதல் அமைச்சராக இருந்து கொண்டாடிய திரு எம்.ஜி.ஆர். அவர்களிடம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக ஆணை பிறப்பிக்க நாம் வற்புறுத்தியபோது, அவரது அரசு (1) ஜஸ்டீஸ் மகராஜன்   (2) ஜஸ்டிஸ் கிருஷ்ணசாமி ரெட்டி ஆகியோர் தலைமையில் இரண்டு குழுக்கள் அமைத்து அதன் பரிந்துரைகளையும் செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டது. அதில் மகராஜன் குழு இந்திய அரசியல் சட்டத் திருத்தம் இருந்தால் மேலும் வலிமை சேர்க்கும் என்பது போல ஒரு கருத்தை பரிந்துரையாகவும் எழுதினார்.

அதற்கு முன்பு தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் ஒரு முறை என்னைச் சந்தித்துப் பேசும் போது, அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பற்றிய முழு தீர்ப்பை முழுவதும் படித்துப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததா என்று கேட்டார்கள். உடனே முழுத் தீர்ப்பையும் (ஏடுகளில் வந்த பகுதிகள் மட்டுமல்லாது) படித்துப் பார்த்தபோதுதான், சட்டத்தினை செயல்படுத்த அரசியல் சட்டத் திருத்தம் தேவைப்படாது என்று கருத்து விளங்கியது. இதே கருத்தை தவத்திரு அடிகளாரும் கொண்டிருந்தார்கள்.

நீதியரசர் பி. வேணுகோபால் கருத்து

உடனே ஜஸ்டீஸ் பி. வேணுகோபால் அவர்களிடம் கலந்து பேசினோம். அவர் மிக அருமையான குறிப்பு ஒன்றை சட்ட ரீதியாக தயாரித்துத் தந்தார். இதை ஏற்று, எம்.ஜி.ஆர். அவர்களின் அரசில் இந்து அறநிலையத் துறை அமைச்சராக அப்போது இருந்த திரு ஆர்.எம். வீரப்பன் அவர்கள் மூலம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆணை விரைவில் வரும் என்று மானியக் கோரிக்கை - கேள்வி - பதில்களில் அளிக்கச் செய்தார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாகப் பெற்றுப் படித்து, சட்ட விளக்கம் வியாக்யானம் பெற்ற பிறகு,  அரசியல் சட்டத் திருத்தம் வந்தால் தான் செய்ய முடியும் என்ற நிலை ஏதும் இல்லை; எனவே ஒரு அரசு ஆணையை  தமிழக அரசு நிறைவேற்றினால் போதும் என்று கருதிய நாம் அன்றைய ஆட்சியாளரான அ.தி.மு.க.வையும், எதிர்க்கட்சியான தி.மு.க.வையும் கேட்டுக் கொண்டோம். தேர்தலில் தமது ஆதரவை திராவிடர் கழகம் அரசியல் கட்சிக்குத் தருவதற்கே கூட  அதனை முன் நிபந்தனையாக வைத்தோம்.
 
மானமிகு கலைஞர் அளித்த உறுதிமொழி

தி.மு.க. அதன் தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் அதனை ஏற்று, ஆட்சிக்கு வந்தால் இதனைச் செய்வோம் என்று வாக்குறுதி அளித்து, அதன்படியே ஆட்சிக்கு வந்தவுடன் ஆணை பிறப்பித்து செயல்பட்டார்கள்.
பார்ப்பனர்கள் அதனை எதிர்த்தும் 2006இல் உச்சநீதிமன்றத்திற்கே சென்றனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

அப்போது இருந்த சில உயர் அதிகாரிகள் அதுவரை அர்ச்சகப் பயிற்சியாளர்களை நியமனம் செய்ய மாட்டோம் என்று  அன்றைய அரசின் கருத்தறியாமலேயே தேவையில்லாமல், ஒப்புக் கொண்டனர்.  அதனால் பயிற்சி பெற்றவர்களை நியமிக்க இயலாமல் ஓர் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது என்ற போதிலும்கூட, நிலுவையில் உள்ள வழக்கை - தற்போதுள்ள அரசு எம்.ஜி.ஆர். அரசு என்று பிரகடனப்படுத்தப்படும் நிலையில் - ஏற்கெனவே ஆதி திராவிடர்கள் உட்பட அனைத்து ஜாதியினரையும் 69 சதவிகித அடிப்படையில் நியமிப்போம் என்று செல்வி ஜெயலலிதா முன்பு ஆட்சியிலிருந்தபோது கூறியிருப்பதாலும் (17.10.1991) உச்சநீதிமன்றத்தில்  உள்ள வழக்கினை விரைவுபடுத்தி நடத்திட முன்வர வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

அக்டோபர் 22 அன்று ஆர்ப்பாட்டம்!

தமிழக அரசுக்கு இதனை வற்புறுத்திட,  ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு அம்சமாக உள்ள பெரியாரின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றி, அச்சட்டத்தைச் செயல்பட வைக்க வருகின்ற 22.10.2012 திங்கள்கிழமையன்று காலை மாவட்ட தலைநகரங்களில் ஓர் ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழகம் நடத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


சென்னை                                                                                                    கி. வீரமணி
15.10.2012                                                                                  தலைவர், திராவிடர் கழகம்                                                                                                                              

26 comments:

தமிழ் ஓவியா said...


கருவிழி - கணினியின் ரகசிய குறியீடாகிறது


கணினி உபயோகிப்பாளர்கள் ஒரு சில வலை தளங்களுக்குள் நுழைய பாஸ்வேர்டு எனப்படும் ரகசிய குறியீடுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை அறிந்து கொண்டு ஒருவரின் தகவல்களை அறியவும், மோசடி செய்யவும் அதிக வாய்ப்பு உள்ளது.

இதை தடுக்க தற்போது, நவீன தொழில் நுட்ப புரட்சி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கணினியில் சம்பந்தப்பட்டவரின் கண் கருவிழிப் படலங்களின் பார்வை ரகசிய குறியீடாக பயன்படுத்தப்பட உள்ளது.

இது விரைவில் அமலுக்கு வர உள்ளது. அமெரிக்காவின் டெக்காஸ் மாகாணத்தில் உள்ள சான்மார்கோ பல்கலை கழகத்தை சேர்ந்த கணினி விஞ்ஞானி ஓலெக் கொமோ, கோர்ட்சேவ் இதை கண்டுபிடித்துள்ளார். ஒரு பொருளை 2 பேர் ஒரே மாதிரியாக பார்க்க முடியாது.

ஒரு படத்தை பலர் பல கோணங் களாகதான் பார்க்க முடியும். ஆனால் ஒவ்வொருவரின் பார்வை யும் மாறாது. அதன் அடிப்படையில் இது உருவாக்கப்பட்ட தாக விஞ்ஞானி கொமோ கோர்ட் சேவ் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


சிங்கள அரசின் பாசிசம் அம்பலமாகிறது!


இலங்கைத் தீவில் சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்த கொடூரம் நடந்து மூன்று ஆண்டுகள் ஓடி விட்டன. உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவி, தப்பி விடலாம் என்று மனப்பால் குடித்த இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு இப்பொழுது திரும்பும் இடமெல்லாம் மொத்துதல்தான்.

அதன் உச்சக் கட்டம்தான் அய்.நா.வே தலையிட்டு மூவர் குழுவை நியமித்ததும், அந்தக் குழு ஈழத்தில் இனப்படுகொலை (Genocide) நடைபெற்றது உண்மைதான் என்பதற்கான ஆதாரங்களை காரணக் காரியத்துடன் வெளியிட்டு விட்டதுமாகும்.

பிரிட்டன் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட படங்கள் உலகையே குலுக்கி விட்டன. இலங்கைக் கொலைக்களங்கள் - தண்டிக்கப்படாத போர்க் களங்கள் (Sri lanka Killing Fields - War Crimes Unpunished) என்ற பெயரில் ஆவணப் படங்களாக வெளிவந்து வெளி உலக வெளிச்சத்தில் சிங்களக் கொடிய அரசின் கோர முகம் அம்பலப்படுத்தப்பட்டு விட்டது.

உலக மக்களின் குருதியையே உறையச் செய்துவிட்டன. அய்.நா. நியமித்த மூவர் குழுவும் இதனையும் கணக்கில் எடுத்துக் கொண்டது.

இந்தப் படங்கள் எல்லாம் போலி என்று வழக்கம் போலவே சிங்கள அரசு மறுத்தது. ஆனால் அந்தச் சித்திரவதைப் படங்கள் உண்மையானவை தான் என்று பிரபல தடயவியல் நிபுணர் பேராசிரியர் டெரிக் பவுண்டர் அறுதியிட்டுக் கூறிவிட்டார்.

அடுத்து அய்.நா.வின் மனித உரிமைச் சட்டத்தில் சிங்கள அரசின்மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முக்கியமானது. அந்தத் தீர்மானத்தை வர விடாமலும், வந்தாலும் நிறைவேற்றப்படாமலும் ஆக்க வேண்டும் என்று இலங்கை அரசு எடுத்த கடும் முயற்சியும் படுதோல்வி அடைந்தது.

ஜெனிவாவில் நடக்க இருந்த அய்.நா. கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த மனித உரிமையாளர்கள், பத்திரிகையாளர்களைத் தாக்குவதற்காக இலங்கையிலிருந்து ரவுடிகளை அனுப்பியிருந்தனர் என்றால் இந்தப் பாசிஸ்டுகளை என்னவென்று நினைப்பது!

இலங்கைப் பாசிச ஆட்சியின் எல்லா நடவடிக்கை களும் உலக நாடுகள் மத்தியில் அம்பலமாகி வரு கின்றன. இலண்டனுக்குச் செல்லும் பொழுதெல்லாம் ராஜபக்சே விரட்டியடிக்கப்படுகிறார் - அமெரிக்கா சென்றபோதும் இதே பரிதாப நிலைதான்!

இலங்கையில் ஈழத் தமிழர் பகுதிகளை சிங்கள இராணுவம் ஆக்ரமித்து, சிங்களவர்களை திட்டமிட்ட வகையில் குடியேற்றும் கொடுமையை எதிர்த்து பிரான்சில் வாழும் ஈழத் தமிழர்களால் பிரான்சு நாட்டு நாடாளுமன்ற முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இப்பொழுது அடுத்த கட்டமான முக்கிய நிகழ்வு பிரிட்டனில் நடந்துள்ளது. அந்நாட்டின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பிரிட்டனில் வாழும் தமிழர்களைக் கொண்ட உபகட்சி (British Tamils Conservative BTC) ஒன்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்து மிகப் பெரிய அங்கீகாரம் ஒன்றை அளித்துவிட்டது. (பிரிட்டனைச் சேர்ந்தவர்களும் இதில் உள்ளனர்).

இன்னொரு செய்தி இப்பொழுது; இலங்கையில் நடைபெற்ற போரின்போது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தனிக் குழு அமைத்து சுதந்திரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2013 சனவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக இச்சேல் கிரிம் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தத் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படக் கூடாது என்பதற்கான அனைத்து முயற்சிகளையும் சிங்கள ராஜபக்சே அரசு மேற்கொண்டு வருகிறது. கடைசியில் இதிலும் மூக்கு உடையப்படத்தான் போகிறது.

உண்மையைச் சொல்லப் போனால் சிங்கள ராஜபக்சே அரசின் மனித விரோத நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு வரும் ஒரு கால கட்டத்தில், மனித உரிமைக்காகக் குரல் கொடுப்பதில் இந்தியா முன்னுதாரணமானது என்று சுட்டிக் காட்டப்பட்டு வந்த பெருமைக்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் இந்தியா நடந்து கொள்கிறது என்கிற அவப் பெயர்தான் விஞ்சும் போல் தெரிகிறது.

ஈழத் தமிழர்களுக்கு வெகு தொலைவில் உள்ள நாடுகள் காட்டும் அக்கறையில் - பாத்தியதை உடைய இந்தியா ஒரு சதவிகிதம்கூட நடந்து கொள்ளாதது தலை குனிவானதுதான்.16-10-2012

தமிழ் ஓவியா said...


சக்தி யாருக்கு அதிகம்? இடிக்கா? கோயிலுக்கா?


பந்தலூர், அக்.16: பந்தலூர் அருகே இடி தாக்கி கோயில் கோபுரம் இடிந்து விழுந்தது. இதற்கு பரிகாரமாக பெண்கள் கோயிலுக்கு வர 13 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங் களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. பந்தலூரை அடுத்த சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட சரகம் எண்.1 பகுதியில் 20 ஆண்டு பழைமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்று முன் தினம் மாலை இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. அப் போது பலத்த சத்தத்துடன் கோயில் கோபுரத்தை இடி தாக்கியது. கோபு ரம் 5 அடி வரை முற்றிலுமாக சேதம் அடைந்தது.

கோபுர கலசம் இரண்டாக பிளந்து விழுந்தது. வெடி குண்டு வீசியது போன்று கோபுரத்தில் இருந்து புகை மண்டலம் கிளம்பியது. இதனால், அப்பகுதி சில நிமிடங் கள் வரை புகையாக காட்சி யளித்தது. கோயில் கோபுரத்தில் இடி விழுந்த தால் கவலை அடைந்த அப்பகுதி மக்கள், கோயில் நிர்வாகிகள் உடனடியாக கோயில் பூசாரி முருகன் என்பவரிடம் ஜோதிடம் கேட்டனராம்.

இதில், பெண்கள் 13 நாட்களுக்கு கோயிலுக்கு வரக்கூடாது. உடனடியாக புதிதாக கோபுரம் கட்ட வேண்டும் என பரிகாரமாக ஜோதிடர் தெரிவித்தாராம். நேற்று காலை பரிகார பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் யாரும் வரவில்லை. இடிந்த கோயில் கோபுரத்தை கூடலூர் எம்எல்ஏ திராவிடமணி பார்வையிட் டார். இந்து சமய அற நிலைய ஆட்சித் துறைக்கு இதுபற்றி தகவல் தெரி விக்கப்படும் என்று தெரிவித்தார். 16-12-2012

தமிழ் ஓவியா said...


பிரிட்டிஷ் தமிழர்களின் கன்சர்வேடிவ் கட்சி உதயம் விடுதலை ஏட்டை எடுத்துக்காட்டி கலைஞர் வரவேற்பு


சென்னை, அக். 16- பிரிட்டனில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தனது கட்சிக்கான உப கட்சியாக பிரிட்ட னின் தமிழர்களைக் கொண்டு பிரிட் டிஷ் தமிழர்களின் கன்சர்வேடிவ் கட்சி என்ற அமைப்பினை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது பற்றி விடுதலையில் (12.10.2012, பக்கம் 1) வெளிவந்துள்ள செய்தியை எடுத்துக் காட்டி திமுக தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைய முரசொலியில் கலைஞர் பதில்கள் பகுதியில் எழுதி இருப்பதாவது:

கேள்வி:- இலங்கைத் தமிழர்களுக்கு இலங்கை அரசு உரிய முக்கியத்துவம் கொடுக்காத நிலையில், இங்கிலாந்தில் உள்ள ஆளுங்கட்சி தமிழர்களுக்கு சிறப்பான தகுதி நிலை அளித்திருப் பதாக வந்துள்ள செய்தி பற்றி உங்கள் கருத்து?

கலைஞர்:- இந்தச் செய்தி நமது விடுதலையில் வந்துள்ளதைப் பார்த்து நான் மகிழ்ச்சி கொண்டேன். இங்கி லாந்தில் ஆளுங் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி, தனது கட்சிக்கான உப கட்சி யாக பிரிட்டானியத் தமிழர்களைக் கொண்டு பிரிட்டிஷ் தமிழர் களின் கன்சர்வேடிவ் கட்சி என்ற அமைப் பினை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது என்ற செய்தி, தமிழகத்திலே விடுதலை நாளிதழிலே மட்டுமே வந்து உள்ளது. இந்தச் செய்தி உலகம் முழு வதும் வாழக்கூடிய தமிழர்களுக்கு பெருமை அளிக்கின்ற செய்தியாகும். ஆனால் தமிழ்நாட்டிலே உள்ள பல ஏடுகளில் இந்தச் செய்தியே காணப் படவில்லை.
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ள இந்தக் கட்சியில் பிரித்தா னிய தமிழர்கள் மட்டுமல்லாமல், இங்கிலாந்தில் ஆளுங்கட்சியின் பாரா ளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் கள் மற்றும் ஐரோப்பிய பாராளு மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் அங்கம் வகிக்கின்றனர். பிரிட்டனில் அமைக்கப்பட்டுள்ள தமிழர்களுக் கான இந்தப் புதிய கட்சியின் வாயிலாக உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான உந்து தல் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் கருத்து - கலைஞர் மகிழ்ச்சி

கேள்வி:- இலங்கைத் தமிழ் தேசி யக் கூட்டமைப்பினர் டெல்லியில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களையும், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் அவர்களையும் சந்தித்து உரையாடி யது பற்றி?

கலைஞர்:- வடக்கு, கிழக்கு மாநிலங் களில் தொடர்ந்து நடந்து வரும் ராணுவ மயமாக்கலைத் தடுப்பதற்கு இந்திய அரசு, இலங்கை அரசுக்கு முறைப்படி அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இந்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதி காரப் பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டிய இலங்கை அரசு, 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் வழங்கப் பட்டுள்ள அதிகாரங்களையே பறித்து வருவதாகவும் அவர்கள் இந்திய அரசிடம் தெரிவித்திருக்கிறார்கள். 2011ஆம் ஆண்டு அரசாங்கத்துடன் ஓராண்டு காலம் பேச்சுவார்த்தை நடத் தியதாகவும், ஆனால் 2012 ஜனவரி மாதத்தில் இலங்கை அரசு இந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக் கொண்டதாகவும், அதிகாரப் பகிர்வு குறித்து இலங்கை அரசாங்கம் அக் கறையற்ற தன்மை யோடுதான் இருப் பதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார் கள். அதிகாரப் பகிர்வு கோருகின்ற இந்த நேரத்தில், இலங்கை அரசு அவசரச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் பறித்து வருவ தாகவும் அவர்கள் முறையிட்டிருக் கிறார்கள். இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், இலங்கை யில் தமிழர்கள் அமைதி யான சூழ் நிலையில் கவுரவத்துடனும் சுயமரியா தையுடனும் வாழ வேண்டும் என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு என்றும், இதிலிருந்து இந்தியா ஒரு போதும் பின்வாங்காது என்றும் உறுதியளித்ததாகவும், இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் கூட்ட மைப்பின் தலைவர் திரு. ஆர். சம்பந் தன் செய்தியாளர்களிடம் கூறியிருப் பது நமக்கு மன நிறைவைத் தருகிறது.

டெசோ மாநாட்டில் நாம் நிறைவேற் றிய தீர்மானங்கள் அனைத்துமே இந் தக் கருத்துக் களை உள்ளடக்கித்தான் அமைந்திருக்கின்றன. அந்தத் தீர்மா னங்களை இந்திய அரசும், ஐ.நா. மன் றமும் முன்வந்து நிறைவேற்றினாலே இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு பெருமளவுக்கு தீர்வு காண முடியும் என்பது எனது நம்பிக்கையும் எதிர் பார்ப்புமாகும்.

தமிழ் ஓவியா said...

சுயமரியாதைத் திருமண பெருவிழா

மூடநம்பிக்கை - சடங்குகள் நீங்கிய (புரோகிதர் அல்லாத), ஜாதி மறுப்பு, மத மறுப்பு, மணவிலக்கு பெற்றவ ருக்கு வாழ்வளிப்பு, மறுமணம் புரிதல் ஆகிய திருமண முறையினை 1928ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியார் நடத்திப் பரப்புரை மேற்கொண்டார். சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் உள்ள நிலைமைகள் இன்று நிலவுகின்றன. சுயமரியாதைத் திருமணங்களில் பெரும்பாலானவை ஜாதி மறுப்புத் திருமணங்களாக இருக்கின்றன. இருப்பினும் ஜாதி சங்கங்கள் தங்களது ஜாதி அடையா ளங்களைக் காத்திட, நீடித்திட ஜாதி மறுப்புத் திருமணங் களுக்கு எதிர்ப் பாக செயல்பட முற்பட்டு உள்ளன. இதனை முறியடித்து, சுயமரியாதைத் திருமணத் தினை, மனிதநேய அடிப் படையில் பறை சாற்றிட, ஒரு பிரச்சார வாய்ப்பாக பலதரப்பட்ட இணை யர்கள், வாழ்விணையர்களா கும் வாய்ப்பினை நல்கிடும் வண்ணம் நவம்பர் 25ஆம் நாள் சென்னையில் சுயமரியாதைத் திருமண பெருவிழா நடத்தப்பட உள்ளது.

பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் உரை

பெரியார் இயக்கம் மேற்கொள் ளும் பிரச்சாரப் பணியின் மகத்துவம் - பிரச்சாரம் மக்களை வெற்றிகரமாக சென்றடைவதுதான். பல்வேறு அணுகு முறைகளைக் கையாண்டு பகுத்தறிவுக் கொள்கைகள் பாமர மக்களுக்கும் கொண்டு செல்வதில் பெரியார் இயக்கத்தின் சாதனை மிகப் பெரியது. பிரச்சார அணுகுமுறையின் ஒருகூறு - பிரம்மாண்டமான ஏற்பாடாகும். மக்கள் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் பிரம்மாண்டமாக பிரச்சார அணுகு முறை மேற்கொள்ளப்படல் வேண் டும். ஜாதி சங்கங்கள் ஜாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராகக் கிளம்பி யுள்ள வேளையில், வெறும் பேச்சுப் பிரச்சாரம் மக்களிடம் தாக்கத்தினை ஏற்படுத்தாது. எனவே பெருமளவில் இணையர்கள், வாழ்விணையராக மாறிடும் சூழ்நிலைக்கு ஏதுவாக சுயமரியாதைத் திருமண பெருவிழா சென்னையில் நடத்தப்பட உள்ளது. நவம்பர் 25ஆம் நாளில் நடைபெறும் இந்தப் பெருவிழாவில் சுயமரியாதைத் திருமணம் மேற் கொள்ள விரும்பும் இணையர்கள் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து கலந்து கொள்ளலாம். இதற்கு சட்ட ரீதியான ஆலோசனையும் முன்கூட்டியே வழங்கப்படும். இது குறித்து தங்களது எதிர்கால இணையரைப் பற்றிய தேடுதலுக்கு சுயமரியாதைத் திருமண நிலைய பதிவுகள் பயன் அளிக்கும். சுயமரியாதைத் திருமண பெருவிழா, ஜாதி மறுப்பு நிலையினை வேரறுக்கும் அணுகுமுறையின் வெற்றி விழாவாக நடத்தப்படல் வேண்டும். பெரியார் இயக்கத்தின் பல்வேறு அணியின் பொறுப்பாளர்கள் இந்தப் பணியில் முழுமையாக ஈடுபட்டு இதுபற்றிய செய்தியைப் பரப்பிட வேண்டும்.

துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை

அய்யா காலத்திலிருந்து ஆசிரியர் காலத்திலும், இயக்கம் நடத்திடும் பிறந்தநாள் விழாக்கள் அனைத்தும் கொள்கைப் பிரச்சார விழாக்களாகும். வெறும் கொண்டாட்டத்திற்காக நடத்தப்படும் விழாக்கள் அல்ல அவை. தமிழர் தலைவரின் 80ஆம் ஆண்டு பிறந்தநாள் (டிசம்பர் 2, 2012) விழாவும் மிகப் பெரிய அளவில் கொள்கைப் பிரச்சார விழாவாகவே நடத்தப்பட உள்ளது. பகுத்தறிவு, கலை, இலக்கிய பிரச்சார அணுகுமுறையாக கவியரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படல் வேண்டும்.

இயக்க இதழ்களான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடன் ரேசனலிஸ்ட் ஆகியவற்றுக்கு சந்தா சேகரிப்பதன் மூலம் நீடித்த நிலைத்த பரந்துபட்ட கொள்கைப் பிரச்சாரத்தை நடத்திட முடியும். இயக்கத்தின் ஒவ்வொரு அணியினரும், ஒவ்வொரு இதழின் சந்தா சேகரிப்புப் பணியினை முனைப்பாக மேற்கொண்டு தமிழர் தலைவரின் 80ஆம் ஆண்டு பிறந்தநாளில், சந்தா தொகையினை மிகப்பெரிய அளவில் அளிப்பதில்தான் பிறந்தநாள் விழா ஏற்பாடு வெற்றியடைய முடியும். சுயமரியாதைத் திருமண பெருவிழா பற்றியும் பெரிய அளவில் பிரச்சாரம் செய்து மிக அதிக அளவில் இணையர்கள், வாழ் விணையர்களாக மாறிடும் வாய்ப்பினை ஏற்படுத்திட வேண்டும். இயக்கத்தின் ஒவ்வொரு செயல்பாடும் கொள்கை பிரச்சாரம் என அச்சாணியில் பயணப்பட வேண்டும். தமிழர் தலைவரின் 80ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, கொள்கைப் பிரச்சார பெருவிழா வாக நடத்திட இயக்கத்தின் ஒவ்வொரு அணியின் பொறுப்பாளர்களும் தங்களது அணிக்கு அளிக்கப் பட்ட பணியினை விரைந்து முடித்திட வேண்டும். முனைப்புடன் பணியாற்றி குறித்த கால வரையறைக் குள் முடித்திட வேண்டும்.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டுக் குத் தண்ணீர் தர மறுக்கும் கரு நாடகத்துக்கு நெய்வேலி மின் சாரத்தைக் கொடுக்காதே! - நெய்வேலியில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற முற்று கைப் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பல வாகனங் களில் ஏற்றப்பட்டு 27ஆவது வட்ட திருமண மண்டபத்தில் வைக்கப் பட்டிருந்தனர். அந்த மண்டபமே கழக மாநாடு நடைபெறுவது போல ஏராளமான கருஞ்சட்டை தோழர் கள் நிறைந்து காணப்பட்டது. கிடைத்த நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்ற தமிழர் தலைவரையும் அறி வுரையின் பேரில் கழகத் தோழர்கள் ஏராளமானோர் கழக கொள்கை விளக்கப் பாடல்களை உற்சாக பாடினர். உணவு வேளையைத் தவிர மற்ற நேரங்களில் கழகப் பிரச்சார கருத்தரங்க கூடாரமாகக் காட்சி அளித்தது. தமிழர் தலைவர் அவர்கள் நூல்கள் வாசிப்பது பிரச்சாரத் திட்டம் போராட்டக் களம் போன்றவற்றை எடுத்துக்கூறி இப்போது இங்கே நமது தோழர்கள் காவல்துறையினருக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் ஒழுக்கமாக நல்ல முறையில் நடந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது என்றார்.

இதேபோல அடுத்ததாக நாம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சம்பந்தமான போராட்டத்திலும் ஏராளமானோர் பங்கேற்று சிறை செல்ல அஞ்சக்கூடாது என பல் வேறு கருத்துகளை தோழர்கள் மத்தியில் எடுத்துக் கூறினார். கழகக் கொள்கை பிரச்சார கருத்து மழையில் நனைந்த தோழர்கள் காவல்துறையினர் மாலை 5 மணிக்கு அனைவரையும் விடுதலை செய்கிறோம் என்று அறிவித்த பிறகு தமிழர் தலைவரை விட்டு பிரிய மனமில்லாமல் விடைபெற்றுச் சென்றனர்.

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திரத் திட்டம் தேவையில்லையா? மாபெரும் துரோகம்! முதல் அமைச்சருக்கு கலைஞர் கண்டனம்


சென்னை, அக். 16- சேது சமுத்திரத் திட்டம் தேவையில்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் உச்சநீதிமன்றத்தில் கூறியிருப்பது தமிழ்நாட்டுக்குச் செய்யும் துரோகம் என்று கருத்துக் கூறினார் திமுக தலைவர் கலைஞர். இன்று (16.10.2012) வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:

சேது சமுத்திரத் திட்டம் தி.மு.கழகமும், தமிழக நல்வாழ்விலே அக்கறை உள்ள மற்றக் கட்சிகளும் தொடர்ந்து குரலெழுப்பி, வாதாடிப் போராடி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதற் காகவும், அந்தத் திட்டம் வந்தால் தி.மு. கழகத்திற் கும், மற்ற இயக்கங்களுக்கும் பேரும் புகழும் வந்து விடும் என்பதற்காகவும், சேது சமுத்திரத் திட்டத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க. இரட்டை வேடம் போட்டு கடைசியாக அந்தத் திட்டமே தேவையில்லை என்று தற்போது உச்ச நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமாகத் தெரிவித்திருக் கின்றது.

ஒரு மாநில அரசிலே இருப்போர், அந்த மாநிலத் திலே புதிய புதிய திட்டங்கள் வர வேண்டும், மாநில மக்கள் அதன் மூலம் நலம் பெற வேண்டும் என்றுதான் நினைப்பார்கள், அதற்காகத்தான் பாடுபடுவார்கள். சேது சமுத்திரத் திட்டம் இல்லாவிட்டாலும் பரவா யில்லை, அந்தத் திட்டம் வந்து, அதனால் மற்றக் கட்சிகளுக்குப் பெயர் வந்து விடக் கூடாது என்று அ.தி.மு.க. எண்ணுகிறது.

அதிலும் தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய நிலையிலே உள்ள தென்மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு நல்ல வாழ்வாதாரத்தையும், சமூகப் பொருளாதாரத் தையும் தேடித் தரும் என்ற எண்ணத்தோடுதான் அறிஞர் அண்ணா அவர்கள் காலத்திலிருந்து 150 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் கனவாக இருந்து வந்த திட்டத்தை ஒரேயடியாக மூடுவதற்கான முயற்சியிலே அ.தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளது. அதிமுகவின் தேர்தல் அறிக்கை என்ன கூறுகிறது?

2001 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பக்கம் 83-84இல் என்ன குறிப்பிட்டார்கள் தெரியுமா? இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாகக் கிழக்கு நோக்கிக் கப்பல்கள் செல்லவேண்டுமானால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டி யுள்ளது. இதற்குத் தீர்வாக அமைவதுதான், சேது சமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக் கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் அகற்றி ஆழப் படுத்தி கால்வாய் அமைப்பது சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்

-என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

தேர்தல் அறிக்கையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் என்றும், மணல் மேடுகள் என்றும் அன்று கூறிய ஜெயலலிதா, இன்று திடீரென்று ராமர் பாலம் என்றும், அதனை பாரம்பரியம்மிக்க புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டு மென்றும் கூறுவது எப்படி? இராமன், இராமாயணம் பற்றி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இதுவரை தாக்கல் செய்த பதில் மனுக்களில் உண்மைக்கு மாறான எத்தகவலும் யாரையும் புண்படுத்தும் வகையில் சொல்லப்படவில்லை.

மேலும் அதே தேர்தல் அறிக்கையில்,

சேது சமுத்திரத் திட்டத்தால் நம் நாடு மட்டும் அல்ல, தென் கிழக்கு ஆசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடையும். வாணிபமும் தொழிலும் பெரு கும். அந்நிய முதலீடு அதிகரிக்கும். அந்நியச் செலா வணி அதிகம் கிடைக்கும். கப்பலின் பயணத் தூரம் பெருமளவுக்குக் குறையும். எரிபொருளும் பயண நேரமும் மிச்சமாகும்.

ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும். குறிப்பாக, ராமநாதபுரம் போன்ற மிகப் பிற்பட்ட தமிழக தென் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். வேலை வாய்ப்புப் பெருகும். தூத்துக்குடி துறைமுகம் சர்வ தேச அளவில் விரிவடையும். சுற்றுலா வளர்ச்சி அடை யும். இன்ன பிற நன்மைகளைத் தர இருக்கும் இத் திட்டத்தின் தேவையை முக்கியத்துவத்தை உணர்ந்து, நிதி நெருக்கடியை ஒரு சாக்காகக் கூறிக் கொண்டிருக்காமல், உலக வங்கி போன்ற சர்வ தேச நிறுவனங்களுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு, வேண்டிய நிதியைத் தேடி இத்திட்டத் திற்கு முன்னுரிமை கொடுத்து ஒரு காலக் கெடுவுக் குள் இத்திட்டத்தை நிறை வேற்றும்படி மைய அரசை விடாது தொடர்ந்து வலியுறுத்தும்

-என அ.தி.மு.க. 2001 தேர்தல் அறிக்கையில் கூறியது.

உச்சநீதிமன்றத்திலே முதல் அமைச்சர்

சேது சமுத்திரத் திட்டம் தேவையென்று அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கையிலே விரிவாகச் சொல்லிவிட்டு - எவ்வாறு கூடங்குளம் அனல் மின் நிலையத் திட்டம் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிறகு - திடீரென்று அந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று அமைச்சரவையிலே தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் ஜெயலலிதா அனுப்பிவைத்தாரோ - அதைப் போலவே சேது சமுத்திரத் திட்டத்திற்காக பல கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்பட்ட பிறகு - தற்போது திடீரென்று சேது சமுத்திரத் திட்டமே தேவையில்லை என்று அந்தப் பகுதி மக்களை யெல்லாம் பாதிக்கக் கூடிய அளவிற்கு முடி வெடுத்து, அந்த முடிவினை உச்ச நீதி மன்றத்திலே நேற்றையதினம் திடீரென்று அ.தி.மு.க. அரசு தெரிவித்துள்ளது. 2001 தேர்தல் அறிக்கையிலும் அதிமுக என்ன சொல்கிறது?

தமிழ் ஓவியா said...

2001ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலே மாத்திரமல்ல; 2004 ஆண்டு நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலையொட்டி, 10.5.2004 அன்று வெளியிடப்பட்ட அ.தி.மு.க. நாடாளு மன்றத் தேர்தல் அறிக்கையில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி யிலும், நாட்டின் ஒட்டுமொத்தத் தொழில் மேம்பாட்டிலும் முக்கியப் பங்காற்றவிருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக் கைகளை எடுக்க, மைய ஆட்சியில், அமைச்சுப் பொறுப்பில் ஐந்தாண்டு காலம் இருந்த தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் தவறி விட்டதை இந்த நாடு நன்கறியும். இத் திட்டத்திற்குப் போதிய நிதியினை உடனடியாக ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டு மென்று அமைய இருக்கும் மைய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும்.

-என்று கூறியிருந்தது. அந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் அந்தக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தி.மு.கழகமும், மற்றக் கட்சிகளும் மத்திய அரசை பெரிதும் வலியுறுத்தியதன் விளைவாக சேது சமுத்திரத் திட்டம் 2,427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படுவதற்கு மத்திய அரசினால் அனுமதி வழங்கப்பட்டது.

ஏறத்தாழ 150 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறக் கூடிய நாளாக 2.7.2005 அமைந்து, அன்றையதினம் மதுரையில் நடைபெற்ற - நானும் கலந்து கொண்ட மாபெரும் விழாவில் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். ஐக்கிய முற்போக் குக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் திருமதி சோனியா காந்தி அம்மையார் அவர்களும், தமிழகத் திலே உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித் தார்கள். அதன் பிறகு சேது சமுத்திரக் கால்வாய் வெட்டும் பணியும் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.

சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கூறியது என்ன?

தமிழ் ஓவியா said...

சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்க விழா வையே தடுக்க வேண்டும் என்பதற்காக மதவாதிகள் சிலர் நீதிமன்றத்தின் மூலமாக தடை பெற முயன்றனர். அது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி அவர்களின் பெஞ்ச்,

தேசிய நலனுக்காகக் கொண்டு வரப்படும் சேது சமுத்திரத் திட்டத்தை தடை செய்யும் நோக்கத் தோடு மனுதாரர் நீதிமன்றத்துக்கு விரைந்து வந்து வழக்குத் தொடுத்துள்ளார்.

சேது சமுத்திரத் திட் டம் நாட்டிற்கு நல்ல பலனை கொடுக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஏனென்றால் தற்போது கப்பல்கள் இலங்கை நாட்டைச் சுற்றி வங்காள விரிகுடா கடலுக்கு வரவேண்டியுள்ளது. பாக் ஜலசந்தி யிலே குறுக்காக கப்பல் கால்வாய் அமைத்தால் பெருமளவு பணமும், நேரமும் சேமிக்கப்பட ஏதுவாகும். இந்தக் கால்வாய் திட்டம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே விழாவுக்கு தடை கிடையாது. - என்று கூறி தீர்ப்பளித்தது.

சேது சமுத்திரத் திட்ட சுற்றுச் சூழல் கண்காணிப்புக் குழுத் தலைவர் டாக்டர் எஸ். கண்ணையன், 25-4-2007 அன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ராமர் பாலம் என்றழைக்கப் படும் ஆதாம் பாலத்தின் 70 இடங்களில் 20 மீட்டர் ஆழத்துக்கு பாறை மாதிரிகளை ஜியோ கெமிக்கல் முறையில் சோதனை செய்தோம். அதில், கடலில் உள்ள படிமங்கள்தான் உள்ளன. அறி வியல் ரீதியாக ராமர் பாலத்தை எவரும் உருவாக் கியதற் கான எந்த அடையாளங்களும் இல்லை.

பாலம் இருக்கும் இடத்திற்குப் பதிலாக வேறு இடத்தில் கால்வாய் தோண்டினால், மன்னார் வளைகுடா பகுதியில் இருக்கும் 26 தீவுகளும் அழிந்து விடும் வாய்ப்பு அதிகம் என்று தெரிவித்திருந்தார். அறிவியல் ரீதியாகவோ - ஆழ் கடல் வேதியியல் பகுப்பாய்வு மூலமாகவோ - மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாலம் எதுவும் அங்கே இருந்த தற்கான எவ்வித அடிப் படையோ, ஆதாரமோ கிடையாது என்பது தான் உண்மை. இந்திய தீபகற்பம் முழுவதிலும், 3,554 கடல் மைல் தூரத்திற்கு கடற்கரை அமைந்துள்ளது.

தமிழ் ஓவியா said...

எனினும், இப்பகுதியில் தொடர்ந்து கப்பல்கள் செல்வதற் குரிய வசதி அமையப் பெறவில்லை. இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இருந்து கிழக்குக் கடற்கரைப் பகுதியில் தூத்துக்குடி செல்வதற்குக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றி வரவேண்டியுள்ளது. ஏனெனில், இந்தியாவின் தென்கிழக்குக் கடல் பகுதியில் உள்ள இராமேஸ்வரத்திற்கும் இலங்கை யின் தலைமன்னாருக்கும் இடையில் மணல் பாறைப் பகுதிகள் அமைந்துள்ளன. அது, ஆதாம் பாலம் என அழைக்கப்படுகிறது.

மாபெரும் துரோகம்

இந்தப் பகுதியில் கடலின் ஆழம் ஏறத்தாழ 11 அடி அளவுக்கே உள்ளது. இந்த குறைந்த ஆழம் காரணமாக கப்பல்கள் இலங்கையைச் சுற்றி வரவேண்டியுள்ளது.

கப்பலின் பயண தூரத்தைக் குறைப்பதற்காக இந்திய கடற்பகுதிக்குள் கப்பல் போக்குவரத்திற்குப் பயன்படும் வகையில், `சேது சமுத்திரக் கால்வாய் வெட்டுவதற்கு 1860ஆம் ஆண்டு முதல் 1860இல் கமாண்டர் ஏ.டி. டெய்லர் திட்டம்;

1861இல் டவுன்ஸ்சென்ட் திட்டம்; 1862இல் பிரிட்டிஷ் பாராளுமன்றக்குழு திட்டம்; 1863இல் சென்னை மாகாண ஆளுநர் மேதகு சர் வில்லியம் டென்னிசன் திட்டம்; 1871இல் ஸ்டோட்டர்ட் திட்டம்; 1872இல் துறைமுகப் பொறியாளர் ராபர்ட்சன் திட்டம்;

1884இல் சர் ஜான் கோட் திட்டம்; 1903இல் தென்னிந்திய ரயில்வே பொறியாளர் திட்டம்; 1922இல் இந்திய அரசின் துறைமுகப் பொறியாளர் சர் இராபர்ட் பிரிஸ்டோ திட்டம் - எனப் பல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப் பட்டு எந்த ஒரு திட்டமும் செயல் படுத்தப்படாத நிலையில்தான்; அறிவியல் ரீதியாகவும், பூகோள ரீதியாகவும், பொருளியல் ரீதியாகவும் ஆதாம் பாலத்தின் வழியாகத் திட்டத்தினை நிறைவேற்று வதே உகந்தது என்ற நிபுணர்களின் கருத்தினை ஏற்று சேது சமுத்திரத் திட்டம் செயலாக்கத்திற்கு வந்தது.

இவ்வாறு கடந்த 150 ஆண்டுகளாகத் திட்ட மிடப்பட்டு பல அறிஞர்களும், சான்றோர்களும், விஞ்ஞானிகளும் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்து, மத்திய அரசும் விரிவான பரி சீலனை செய்து, பல கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கிச் செலவிட்ட பிறகு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒரே நாள் ஆராய்ச்சியில், அந்தத் திட்டமே தேவையில்லை என்று முடிவுக்கு வந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

இப்போது புரிகிறதா? கட்சிகள் எதுவாயினும் அவற்றில் அங்கம் வகிக்கும் தமிழர்களைக் கேட்டுக் கொள்கிறேன்; தமிழகத்தை வாழ வைக்கப் போகும் பிரம்மாண்ட மான திட்டத்திற்கு சமாதி கட்ட தமிழகத்தின் முதல் அமைச்சரே முனைந்து நின்று உச்ச நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் அல்லவா?

- இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


உணவு விரயம் - தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்


இன்று (அக்டோபர் 16) உலக உணவுப் பாதுகாப்பு நாள்! இதை யொட்டி கலைஞர் செய்தி தொலைக் காட்சியில் இன்று காலை ஒரு நல்ல தகவல்

- அறிவுரை ஒளிபரப்பப்பட்டது.

திருமணம், விருந்துகள் போன்ற வற்றினால் நமது (இந்திய) நாட்டில் சுமார் 950 டன்களுக்கு மேற்பட்ட சமைத்த உணவுகள், தூக்கி எறியப் பட்டு, விரயமாகின்றனவென்றும் இதன் மதிப்பு சுமார் 350 கோடி ரூபாய் என்றும் குறிப்பிட்டு, உணவை இப்படி குப்பைத் தொட்டியில் போட்டு வீணடிக் கலாமா? இது தவிர்க்கப்படுதல் அவசியம் என்று குறிப்பிட்டு, இதிலும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று மிக அருமையாக அந்த செய்தியாளர் விளக்கினார்!

பொதுவாக நம் நாட்டுத் திருமணங் கள் மிக மிக ஆடம்பரங்களாகக் காட்சி அளிக்கின்றன. இதைக் கண்டு வெட்கப்பட வேண்டியதற்குப் பதிலாக, பலரும் - பணக்காரர்கள் மட்டுமல்ல நடுத்தர வர்க்கத்தினர்கூட இந்த போலி ஆடம்பர போதை மயக்கத்திற்கு ஆளாகின்றனர். இதைப் பார்த்த ஏழைகளாய் இருப்பவர்களில் பலர்கூட கடன் வாங்கியாவது தம் பிள்ளை களின் திருமணங்களை ஆடம்பர மாகவே நடத்திடவே ஆசைப்படுகிறார் கள்! கடனில் மூழ்கி தற்கொலைக்கு ஆளாகினர்.

பெரும்பாலான திருமணங்களில் காலைச் சிற்றுண்டியே ஏக தடபுடல், இரண்டு இனிப்பு, மற்றபடி எத்தனை அதிகப்படியான பலகார வகைகள் உண்டோ அதன் நளபாகங்கள் அத்தனையும் போட்டு காலை 9.30 மணி வரை இந்த விருந்து. திருமணம் காலை 10 மணிக்குத் துவங்கி (அது வைதிக புரோகித, சுயமரியாதைத் திருமணம் - எதுவாக இருந்தாலும்) 11 மணிக்கு முடிந்துவிடும். சில திருமண வைதீக மூடநம்பிக்கை யாளர்கள் வீட்டுத் திருமணம் காலை 9 மணி - ராகுகாலம் முகூர்த்த நேரம் இத்தியாதி! இத்தியாதி பார்த்து ஒரு மணிக்குள் முடித்து விடுவதுண்டு.

உடனே பலமான விருந்து - பலவகை பதார்த்தங்கள் - இனிப்புகள், அய்ஸ் கீரிம், பழங்கள் என்றால் 1 மணி இடை வெளியில் ஒருவர் என்னதான் அவர் சாப்பாட்டு ராமன்ஆக இருந்தாலும் எவ்வளவு சாப்பிட முடியும்? அதனால் உட்கார்ந்து சாப்பிட்டு எழுகின்றபோது - அவர்கள் தேவை அறிந்து பரிமாற முடியாத அளவுக்குக்கூட்டம் - பந்தி பரிமாறுகிறவர்கள் ரோபோக்கள் போல கடகடவென்று வாரி வாரிக் கொட்டிக் கொண்டே போவர்!

விளைவு...? இலையில் ஏராளமான வீணாக்கிய பண்டங்கள், சோறு, மற்றும் பல அய்ட்டங்கள் ஒரு இலை இப்போது ரூ.150 முதல் 200 வரை; இதில் மூன்றில் ஒரு பங்கோ அல்லது 50 சதவிகிதமோ கூட வீண் விரயம் - பசியின்றி, புசிக்கும் பரிதாப ஜம்பக் காட்சி!

வேறு முறையில் - Buffet (விருப்பத்துக்கேற்ப விருந்து) என்ற முறையில்கூட பலவற்றை அடுக்கி விருப்பப்பட்டதை எடுப்பவர்களில் பலர்கூட கொஞ்சம் கொஞ்சமாக எடுக்காமல், ஆசை அளவை அறியாது என்பதுபோல் அள்ளி அள்ளிக் கொண்டு, பிறகு சாப்பிடாது தட்டிலேயே தள்ளித் தள்ளி வைத்து விட்டு போய் விடுவதும் காணும் காட்சியே!

நாட்டில் ஒரு புறத்தில் உணவுப் பஞ்சம், பசி, பட்டினி, இவ்வகை உணவையே பார்த்திராத பரிதாபத்திற்கு பாட்டாளி, ஏழை, எளிய குடும்பங்கள் - சிறார்களிலிருந்து பெரியவர் வரை ஏராளம் இருக்கையில், மறுமுனையில், இப்படி ஒரு வெட்கப்படத்தக்க விருந்து - வீண் விரயர்களா?

இதைவிடப் பெரிய தேசியக் குற்றம் (National Crime) வேறு உண்டா?

வீட்டில்கூட தேவைக்கு ஏற்ப கேட்டு வாங்கி இலையிலோ, தட்டிலோ வைத்து, விரயமாக்காது பரிமாறக் கற்றுக் கொள்ள வேண்டும்.

பல வீடுகளில் அன்பால் கொல்லும் அநாவசிய ஆடம்பர உபசரிப்புகள் அறவே தவிர்க்கப்படல் வேண்டும்.

பசித்துப் புசித்தால்தானே உடல் ஆரோக்கியமாக அமையும்? ஆயுள் வளரும். முக்கால் வயிறு உண்டு கால் வயிற்றைக் காலியாக வைத்திருக்கும் பழக்கமுடையோர்க்கு ஆயுள் வளருவது உறுதி!

வறுமைக்கோட்டிற்குக் கீழ் பல கோடி மக்கள் வாழும் இந்தப் பரந்த நாட்டில் ஏன் இப்படி ஆடம்பரத் திரும ணங்களும், பசியற்ற விருந்துகளும்! பசை உள்ளதை பகிரங்கப்படுத்தப் பல நல்ல அறப் பணி வழிகள் உள்ளனவே. அதைச் சற்று எண்ணிப் பார்க்கக் கூடாதா?

முன்பு 1976இல் நெருக்கடி நிலை காலத்தில் 50 அல்லது 100 பேர்கள் மட்டும் தான் திருமணங்களுக்கு அழைத்தல் வேண்டும் என்ற சட்டக் கடுமை - அது இப்போது அவசரமாகத் தேவை போலும்!

அரசு அதிகாரிகள் சாப்பிட்ட இலை களை ஆள்களை விட்டு எண்ணி அபராதம்; சிறை விதித்த நிலைபோல் மீண்டும் வருவதுகூட வரவேற்கப்பட வேண்டியவையே!

ஆடம்பரம் என்பது மனித குல நோய்களில் மிகவும் அருவருக்கத்தக்க ஆபத்தானதொரு நோய். இதற்கு சிக்கன மருந்து தேவை! தேவை!! -கி.வீரமணி16-10-2012

தமிழ் ஓவியா said...


அயல் மாநிலங்களுக்கு நெய்வேலி மின்சாரத்தை வழங்குவது - ஏன்? - போராட்டக் களத்தில் தமிழர் தலைவர் தொடுத்த வினா!

தமிழ்நாட்டின் தேவைக்குப் பாதியளவுக்குக் கூட மின் உற்பத்தி செய்யாத நிலையில்தான் தமிழ்நாடு இருக்கிறது

இந்த நிலையில் அயல் மாநிலங்களுக்கு நெய்வேலி மின்சாரத்தை வழங்குவது - ஏன்?

- போராட்டக் களத்தில் தமிழர் தலைவர் தொடுத்த வினா!


நெய்வேலி, அக்.16-தமிழ்நாட்டுக்குத் தேவையான அளவுக்கு மின் உற்பத்தி இல்லாத நிலையில், நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தி லிருந்து பிற மாநிலங்களுக்கு மின்சாரத்தை விநி யோகிப்பது - ஏன்? என்ற வினாவைத் தொடுத்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

நெய்வேலியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று நடத்தப்பட்ட முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொள்ள அணிவகுத்து நின்ற கருஞ்சட்டைத் தோழர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய, இந்த நெய்வேலி - கருநாடகத்திற்குத்தரக்கூடிய மின்சா ரத்தைத் தடுத்து நிறுத்தி, தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்யவேண்டும். அதன் மூலமாக வாடுகின்ற பயிரையெல்லாம் கண்டபோது வாடினேன் என்று சொன்ன வடலூர் வள்ளலார் - அவருடைய உணர்வை நாம் இப்பொழுது பெற்றிருக்கிறோம் என்கிற உணர்வோடு இங்கே குழுமியிருக்கிற எனது அருமை கருஞ்சட்டை குடும்பத்தினரே, போராட்ட வீரர்களே, வீராங்கனைகளே, தோழர்களே! தோழியர்களே! அன்பான, ஆதரவான பெரு மக்களே! விவசாயிகளே உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கம்.

ஏற்கெனவே நண்பர்கள் இங்கே மிக சிறப்பாக எடுத்துக்கூறியதைப் போல, நாம் வழக்கமான உரிமையோடு, காவிரி நீரை பெற்றுத்தரவேண்டும் என்பதற்காக கடந்த பல ஆண்டுகளாக, ஏறத்தாழ ஒரு 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிக் கொண்டு வந்த நிலையிலே, நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, அதையொட்டி 205 டி.எம்.சி. தரவேண்டும் என்று இடைக்காலத் தீர்வையும் தாண்டி இறுதித் தீர்ப்பையும் அது வழங்கி 410 டி.எம்.சி.க்கு மேலே கொடுக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய அந்த நிலையை உருவாக்கியும் கூட, இங்கே எனக்கு முன்னாலே பேசிய நண்பர்கள் சுட்டிக்காட்டியதைப் போல, கருநாடகத்தாலே நமக்கு தரப்பட்டிருக்கிற நீர் என்பது மிக மிகக் குறைவான அளவுதான். அதுமட்டுமல்ல, அங்கே மிகப்பெரிய அளவுக்கு நீங்கள் நீரைக் கொடுக் காதீர்கள் என்று சொல்வதிலே அத்துணைப் பேரும் ஒத்துப் போயிருக்கிறார்கள். பிரதமர் காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவராக இருந்து, 9000 கன அடி தண்ணீரைக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் உத்தரவு போட்டு, உச்சநீதிமன்றமும் உத்தரவு போட்டு, அதையும் நாங்கள் கடைப்பிடிக்க மாட்டோம் என்று தெளிவாக - உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மதிக்காது - காவிரி நதிநீர் ஆணை யத்தின் தலைவர் பிரதமர் ஆணையையும் மதிக்காது. அத்துணை பேரும் ஒரே குரலில் சொல்லுகிறார்கள். கருநாடக மத்திய அமைச்சர்களும் அப்படியே பேசுகிறார்கள். அங்கே இருக்கிற ஆளுங்கட்சி சொன்னால், புரிகிறது. ஆனால் மத்தியிலே எதிர்க் கட்சியாக இருந்து கொண்டு, மத்திய அமைச்சராக இருக்கும் காங்கிரஸ் உறுப்பினர்கள், குறிப்பாக இங்கே சொன்னார்கள் எஸ்.எம்.கிருஷ்ணாவைப் பற்றி, அதுபோலவே வீரப்ப மொய்லி, அது போலவே கார்கே, அய்ந்து மந்திரிகள் இருக் கிறார்கள் என்றால், அத்துணை மந்திரிகளும், வெளிப்படையாகவே பிரதமருக்கு எதிராக, இந்திய தேசியத்தினுடைய ஒருமைப்பாடு, ஒருமைப் பாடு என்று பேசுகிறார்களே அதற்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ், காங்கிரஸ் என்று பேசு கிறார்களே அதற்கு எதிராக, இனிமேல் அகில இந்திய காங்கிரஸ் கிடையாது. மாநில காங்கிரஸ் தான் ஆங்காங்கே உண்டு என்று சொல்லக்கூடிய வகையிலே தனித்தனியே அவர்கள் இருக்கிறார்கள். இங்கே இருக்கிற காங்கிரசுக்கு ஒரு நிலை. அங்கே இருக்கிற காங்கிரசுக்கு ஒரு நிலை. இங்கே இருக்கிற பா.ஜ.வுக்கு ஒரு நிலை. அங்கே இருக்கிறவர்களுக்கு ஒரு நிலை என்று சொல்லக்கூடிய அளவுக்கு வந்தபோது, இனிமேல், நம்மைப் பார்த்து மாநிலக் கட்சிகள் என்று சொல்லக்கூடிய அந்த நிலையை அவர்கள் இழந்திருக்கிறார்கள் என்றுதான் மிக முக்கியமான ஒன்று (கைதட்டல்).


தமிழ் ஓவியா said...

நெய்வேலி உற்பத்தி என்ன?

அந்த அடிப்படையிலே, தெளிவாக நாம் இந்தப் போராட்டத்தை ஏன் நடத்துகின்றோம். இங்கே, நெய்வேலியில் உற்பத்தியாகிற மின்சாரம் இருக் கின்றதே, இயற்கை தந்த மின்சாரம் அல்ல. அங்கே காவிரி தலைக்காவிரியிலிருந்து வருகின்ற நீர் இருக்கின்றதே அது இயற்கை கொடுத்த வளம். ஆனால், இங்கே நம் தோழர்கள் கொடுத்த உழைப்பு, ஒத்துழைப்பு, நெற்றி வியர்வை, இரத்தம் சிந்தி உழைத்து, அதன் மூலமாக அனல் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏறத்தாழ 2,500 கிலோ மெகா வாட் தயாரிக்கிறார்கள்-(2490)-அதை 2500 என்று வைத்துக்கொள்ளலாம். அப்படித் தயாரிக்கின்ற நிலையிலே, எவ்வளவு தூரம் மற்றவர்களுக்குத் தருகின்றார்கள் என்று சொல்கிற போது, நேற்றைய ஆங்கில நாளேட்டிலே இந்த புள்ளி விவரம் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலே அவர்கள், இங்கே உற்பத்தியாகிற மின்சாரம் என்பது எவ்வளவு என்று தெளிவாக சொல்லியிருக் கிறார்கள்.

எந்த மாநிலத்திலிருந்து எவ்வளவு?

2490 கிலோ மெகாவாட். அதாவது 2,500 கிலோ மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது. இங்கிருந்து மற்றவர்களுக்கு அனுப்பப்படுகிறது. நம்முடைய நெய்வேலியில் இருந்து நம்முடைய தோழர்களின் கடும் உழைப்பு. அதை வைத்துக் கொண்டுதான், அந்த அனல் மின்சாரம் தயாரிக்கும் போது, தமிழ்நாட்டுக்கு 1189.2. இதுதான் தமிழ் நாட்டுக்கு, அதாவது 47 சதவிகிதம் தமிழ் நாட்டுக்குக் கொடுக்கிறார்கள். அதே நேரத்திலே கருநாடகம் 304.4 , 305 என்று வைத்துக் கொள்ள லாம். அதே போல ஆந்திரத்திற்கு 264, கேரளாவிற்கு 211, புதுச்சேரிக்கு 92.2 மற்றவர்களுக்கு 283 என்.எல்.சி.யின் தேவை என்பதற்கு 154 ஒதுக்கியிருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

அதனால்தான், மற்ற பகுதிகளில் இருக்கிற மின்வெட்டு இந்த பகுதிகளில் இல்லை. ஆனால், வந்திருக்கிறவர்களெல்லாம், இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார்கள். இருட்டிலிருப் பார்கள் எப்போது இருட்டில் இருக்க மாட்டார் கள். அவர்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள் என் பதற்கு அடையாளம்தான் இந்த போராட்டம். இந்த சூழலில், மொத்தம் 100 விழுக்காடு என்று சொன் னால், ஏறத்தாழ எல்லா மாநிலங்களுக்கும் அடுத்த படியாக ஒப்பிட்டுபார்க்கும்போது, கேரளத்தை விட, ஆந்திரத்தைவிட, கருநாடகத்தை விட, புதுச் சேரியை விட, மற்ற மற்ற இடங்களை விட இங்கே ஒதுக்கப்பட்டிருப்பது - நெய்வேலியில் ஒதுக்கப் பட்டிருப்பதைவிட, அதிகமாக யாருக்கு ஒதுக்கப் பட்டிருக்கிறது என்றால், கருநாடகத்திற்குத் தான் கொடுக்கப்படுகிறது. எந்த கருநாடத்திற்கு, மேட்டூ ரிலே இன்னும் 13 நாட்களுக்கு கூட தண்ணீர் இல்லை. கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லை. ரொம்ப கீழே இறங்கிவிட்டது. அங்கே தண்ணீர் தர மாட்டோம் என்று சொல்லுகிறார்கள். சட்டப்படி போராடினோம். காவிரி நதி நீர் ஆணையம் பிரதமர் ஆணை கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அந்த ஆணையை செயல்படுத்தவில்லை. மறுபடியும் ஒரு புது வழக்கு போடுகிறார்கள். கருநாடகத்தின் சார்பிலே, உச்சநீதிமன்றத்திலே, கொடுத்ததும் கூட பாதி கொடுத்துவிட்டு, பாதியை நிறுத்திவிட் டார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் அவர்கள் மனிதாபிமான மற்று நடந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு மின்சாரத் தட்டுப்பாடு என்பது நம்மளவுக்கு கிடையாது. அதே நேரத்தில், அவர் களுக்கு விவசாயம் எப்படி அந்த ஒப்பந்தப்படி என்று சொன்னார்கள் அல்லவா? ஒப்பந்தப்படி 10 லட்சம் ஏக்கர் என்பதை 19 லட்சம் ஏக்கராக அதிக ரித்திருக்கிறார்கள். நம்மப் பகுதியில் பாத்தீங்கன்னா குறுவைக்கு வழியில்லை. அது போச்சு, இப்ப சம்பாவும், ஹர ஹர சம்போ அவ்வளவுதானே. தவிர வேற ஒன்னுமில்லை. நம்முடைய விவசாயிகள் எல்லாம், ஈரத்துண்டை வயித்திலே காய வைக்க வேண்டிய அளவுக்கு நிலைமைகள் இருக்கிறது. அவர்களுடைய அடுப்படியில் பூனை தூங்கக்கூடிய அளவுக்கு வந்துவிட்டது. வறுமையினாலே அவதிப் படக்கூடிய அளவுக்கு. இனிமேல் காவிரி நீர் என்பது கனவில்தான் என்று சொல்லுமளவுக்கு இவர்கள் நெருக்கடியிலே சிக்கியிருக்கிறார்கள். அதற்கு உதாரணம் என்னென்ன? இரண்டு மாநிலத்திற்கும் வறட்சியைப் பார்ப்பதற்காக, மத்திய அரசிலே யிருந்து நிபுணர்கள் குழு போனது. அதற்குப்பிறகு, அவர்கள் வேகமாக சென்று அறிக்கை கொடுத் தார்கள். அந்த அறிக்கைக்குப்பிறகு, காவேரி வாட்டர் மானிட்டரி கமிட்டி என்று அந்தந்த மாநிலத்தினுடைய தலைமைச் செயலாளர்களைக் கொண்ட ஒரு குழு இரண்டு நாளைக்கு முன்னாலே டில்லியிலே நடந்தது.

தமிழ் ஓவியா said...

அந்தக் குழுவில், தமிழ்நாட்டினுடைய தலை மைச் செயலாளர், கருநாடகத்தினுடைய தலைமைச் செயலாளர், கேரளத்தினுடைய தலைமைச் செய லாளர், புதுச்சேரியினுடைய தலைமைச் செயலா ளர், இந்தப் பகுதியைச் சார்ந்தவர்களாக இருக் கிறாங்க;. தமிழ்நாடு, கருநாடகம், புதுச்சேரி, கேரளா என்று சொல்லக்கூடிய அளவுக்கு, இவர்களெல்லாம் சேர்ந்த சூழலில், இந்த அறிக்கையை விளக்கிபிறகு, என்ன செய்திருக்கிறார்கள்? 9000 கன அடியைக் கூட கொஞ்சம் குறைத்திருக்கிறார்கள். ஆனால், அதைக்கூட நாங்கள் கொடுக்க மாட்டோம் என்று இன்றைக்கு மனு கொடுத் திருக்கிறார்கள். இது அடாவடித்தனம் மட்டுமல்ல. நிச்சயமாக அவர்கள் வேண்டுமென்றே செய்கின்ற ஒரு போக்கு. மத்திய அரசு இதை பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது. மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் கட்டுப்பட மாட்டோம். காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவர் பிரதமரே இருந்து சொன்னாலும் நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்று எல்லோரும் சேர்ந்து குரல் கொடுத்தால் அவர்கள் தனிநாடு என்று பிரகடனப் படுத்துகிறார்களா? அதைக்கேட்க வேண்டாமா? இதே நிலை தமிழ்நாட்டில் இருந்திருந்தால் எவ்வளவு துள்ளிக் குதித்திருப்பார்கள்? தமிழ்நாட்டின் ஊடகங்கள் எவ்வளவு வேகமாக பேசியிருப்பார்கள்? ஆகா! பிரிவினைவாதிகள்? ஆகா! பிற்போக்குவாதிகள் என்று சொல்லி யிருக்கமாட்டார்களா? இன்றைக்கு அவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவேதான் நண்பர்களே! இந்தப் புள்ளிவிவரப்படியே பல்வேறு செய்திகளை எடுத்துச்சொல்லும்போது, தமிழ் நாட்டில் இருக்கும் நிலவரம் என்ன? நாமென்ன மின்சாரத்தில் ரொம்ப வசதியாக இருக்கிறோமா? மின்சாரத் தேவை நமக்கு இல்லை. அவர்கள் மாதிரி நீரை வைத்துக்கொண்டு, தர முடியாது என்பது போல, அவர்களுக்கு மின்சாரம் கொடுக்க முடியாது என்று ஏட்டிக்குப்போட்டியாக நாம் சொல் கிறோமா? அல்ல. அதற்கு அவசியமும் இல்லை. நம்முடைய நாட்டில் நிலைமை என்ன? நாம் அனைவரும் இருளில் இருந்து கொண்டிருக் கிறோம். இங்கே 16, மணிநேரம் 18 மணி நேரம். இன்னும் அதிகமாகக்கூட ஆகக்கூடிய நிலைமைகள் இருக் கின்றது. இந்த நிலையிலே, தமிழ்நாட்டிலே இருக் கின்ற மொத்த உற்பத்தித்திறன் 10,365 மெகாவாட். இதுதான் தற்போது இருக்கின்ற மின்சக்தி உற்பத்தி. புனல் மின்சக்தி. அதாவது, ஹைட்ரோ எலக்ட்ரிக் என்று சொல்லக்கூடிய நீர்விசை மின்சாரம். அதன்மூலமாக, 2223 மெகாவாட் கிடைக்கிறது. அனல் மின்சாரத்தின் மூலமாக, சுமார் 3000. 2970 மெகாவாட். காற்று மூலமாக 516 மெகாவாட் உள்ளது. ஆனால், போதிய மழையின்மை காரண மாக, காவிரி நீர்வரத்து தடைப்பட்ட காரணத் தாலும் உற்பத்தித்திறனில் 50 சதவிகிதம் கூட உற்பத்தி செய்ய முடியாத அவல நிலையில், தமிழ்நாட்டின் மின்சார வாரியம் இருக்கிறது.

- தொடரும்

தமிழ் ஓவியா said...

விஜயவாடா நாத்திகர் மய்யம் நடத்திய நூற்றாண்டு விழா
நாடு தழுவிய நாத்திகப் பிரச்சாரத்திற்குப் புரவலர் அமைப்பு பெரியார் இயக்கமே! பறைசாற்றிய தமிழர் தலைவரின் பங்கேற்புப் பயணம்

நாத்திகம் எனும் சொல்லாடல் பன்னெடும் காலமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இல்லாத கடவுளை, இருப்பதாகக் கருதிக் கொண்டு, ஆரம்பக் கால மனிதன் இயற்கையின் அச்சுறுத்தல்களுக்கு, ஏற்படுத்திய அழிவு களுக்கு விளக்கம் காண இயலாத சூழலில் தனக்கு ஒரு பற்றுக்கோடு வேண்டும் என நினைத்து கடவுள் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தான்.

நாள்கள் செல்லச் செல்ல, ஆண்டுகள் பல கடந்திட எந்த ஒன்றை உயர் வானதாகக் கருதினானோ அதன் பெயராலே ஏற்றத் தாழ்வுகள், மூட நம்பிக்கைகள் பரப்பப்படும் சூழலுக்கு பலியாகிப் போனான். உயர்வாக நினைத்து வந்த ஒன்றைக் குறித்து அய்யப்பாடு கொள்வதா! அதுபற்றிய விளக்கம், வேண்டுதலை அந்த உயர் தன்மைக்கு அளிக்கப்படும் அவமரியாதை என நினைத்தான்; ஒருவித பய உணர்வும் கொண்டான்.

இந்நிலையில், உண்மை நிலையினை விளக்கி, இல்லாத கடவுளை, இல்லை என உரக்கச் சொல்லும் மனநிலை மனிதரிடம் எழுந்தது. கடவுள் மறுப்பை ஒரு செய்தியாகச் சொல்லா மல், கருத்து விளக்கமாக எடுத்துக் கூறும் கால நிலை மைகள் உருவாகின. தத்துவ ரீதியான விளக்கங் களுக்கும், நாத்திகச் சிந்தனைகள் ஆளாயின.

கடவுள் இல்லை, கடவுள் என்பது எப்படி சக்தி வாய்ந்ததாக இருக்க முடியும்? கடவுள் என்பது எப்படி எல்லாவற் றையும் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டதாக அமைய முடியும்? என்பது போன்று, இயல்பாகக் கருதப்படும் மனப்போக்கிற்கு எதிரான நாத்திகச் சிந்தனைகள் பெருகிடத் தொடங்கின.

நாத்திகம் ஆக்கம் கூட்டிடும் சிந்தனை

கற்பனையில் மூழ்கி, மூட நம்பிக்கையில் திளைத்து மனித ஆற்றலை மட்டுப்படுத்தி மானுட வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்ட, கடவுள் தத்துவத்திற்கு எதிரான, நாத்திகம் என்பது அடிப்படையில் ஆக்க ரீதியான வாழ்வியல் தத்துவம் ஆகும். நேரிடையான சிந்தனை வடிவமாகும். மனித முயற்சி, ஆற்றலை முழுமையாக வெளிக் கொணர்ந்து, முட்டுக் கட்டைகளை உடைத் தெறிந்து மானுட மேம்பாட்டிற்கு அளப்பரிய ஆக்கம் கூட்டிடும் உன்னதத் தத்துவம்.

கடைப்பிடித்த காரணத்தால் மட்டுமே தாம் நினைப்பதே உண்மை யானது; உயர்ந்தது எனும் ஒருவித மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் பெரும் பாலான மக்களைப் பொறுத்த அளவில், நாத்திகம் என்பது நிலவுகின்ற நடைமுறை யினை நிர்மூலமாக்கிடும் சிந்தனை என்பதாகவே கருதப்படுகிறது. இதற்கு மாற்றாக நாத்திகம் என்பது ஆக்க ரீதியான சிந்தனை என்பதை சமுதாயத்திற்கு எடுத்துச் சொன்னவர்கள் பல பேர்.

இருப்பினும் நாத்திகச் சிந்தனைகளைத் தாங்கி பகுத்தறிவுக் கண் ணோட்டத் துடன் மனிதன் வாழவேண்டும் என்பதை வெறும் செய்தியாகச் சொல்லாமல், நீடித்த, நிலைத்தப் பிரச் சாரமாக மேற்கொண்டு அமைப்பு ரீதியில் செயல் பட்டு களம் இறங்கி, மக்கள் கருத்தையும் திரட்டி கணிச மான வெற்றியினையும் பெற்ற ஒரே சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் மட்டுமே.

தந்தை பெரியாரால் தமிழ்நாட்டு சமூக அரசியல், கல்வித் தளங்களில் ஏற்பட்ட மாறுதல்களைக் கண்டு, வடபுலத்தில் உள்ளவர்கள், தங்களுக்கும் பெரியார் தேவை என எண்ணத் தலைப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டன. அந்த எண்ணங்கள் வடபுலத்தவரிடம் ஊன்றிட, தந்தை பெரியாரின் சீரிய சிந்தனை வழி முறைகளை, காலச் சமூக, அரசியல் சூழல்களுக்கு ஏற்றவாறு கொண்டு சென்றவர் தமிழர் தலைவர் கி. வீரமணி ஆவார்.

நாத்திகப் பிரச்சாரப் பணியில் தமிழ் மாநி லத்தைத் தாண்டிய ஒரு செயல்பாட்டு வீச்சாக தமிழர் தலைவரின் அண்மைக்கால, ஆந்திர மாநில விஜயவாடா பயணம் அமைந்தது. நாத்திகர் என்பவர் யார்? என்பதற்கு தமிழர் தலைவர் வெளியிட்ட புதுப்பிரகடனம் பெரும் பிரச்சாரத் தாக்கமாக அமைந்தது.

விஜயவாடா - நாத்திகர் மய்யம்

ஆந்திர மாநிலத்தில் நாத்திகப் பிரச்சாரப் பணியில் அமைப்பு ரீதியாக செயல்படும் அமைப்பு விஜயவாடா வில் அமைந்துள்ள நாத்திகர் மய்யம் (Atheist Centre) ஆகும்.

ஆந்திர நாத்திகர் கோரா (1902 - 1975) நிறுவிய அமைப்பு நாத்திகர் மய்யம் ஆகும். கோரா அவர்களது காலத்திற்குப் பின் நாத்திகர் மய்யத்தின் செயல்பாடு களை முன்னின்று நடத்தியவர் அவரது துணைவியார் சரஸ்வதி கோரா (1912-2006) ஆவார்கள். சரஸ்வதி கோரா நூற்றாண்டு விழாவினை நாத்திகர் மய்யம் சிறப்பாக நடத்தியது.

தமிழ் ஓவியா said...

சரஸ்வதி கோரா நூற்றாண்டு தொடக்க விழாவில் சென்ற ஆண்டு பங்கேற்று, நிகழ்வுகளை தமிழர் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு செப்டம்பர் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்ற நூற்றாண்டு நிறைவு விழாவின் தொடக்க நிகழ்ச்சியிலும், தமிழர் தலைவர் பங்கேற்றுச் சிறப்பித்தார்.

திராவிடர் கழகம் செப்டம்பர் 27ஆம் நாள் குற்றா லத்தில் நான்கு நாள் பகுத்தறிவுப் பயிற்சி முகாமை, தொடங்கிவிட்டது. ஒவ்வொரு முறை பயிற்சி நடக்கும் நாள்கள் முழுவதும் தமிழர் தலைவர் பங்கேற்று பயிற்சி யாளர்களுக்கு வகுப்பெடுப்பது வழக்கம். இந்த முறை அப்படிப் பங்கேற்க இயலாதவாறு பிற பணிகள் தமிழர் தலைவரை ஆட்கொண்டன.

செப்டம்பர் 27 - இரவு விஜயவாடா நூற்றாண்டு விழாவிற்கு சென்னையி லிருந்து பயணப்படவேண்டும். ரஷ்ய நாட்டு பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி வல்லுநர்கள் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தைப் பார்வை யிட்டு, இணைந்து பணியாற்றும் வழிமுறைகளை முடிவு செய்திட வருகை தந்திருந்தனர்.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் என்ற பொறுப்பில் ரஷ்ய நாட்டு அறிஞர்களைச் சந்திக்க செப்டம்பர் 26 - இரவு, தமிழர் தலைவர் சென்னை யிலிருந்து தஞ்சைக்குப் பயணமாகி செப்டம்பர் 27-முற்பகல் முழுவதும் பல்கலைக் கழகம் சார்ந்த பணிகளை ஆற்றிவிட்டு, பிற்பகல் திருச்சி வந்து விமானம்மூலம் மாலை 5 மணியளவில் சென்னை வந்தடைந்தார்.

மூன்று, நான்கு மணி நேர இடைவெளி யில் பணிகளை முடித்துவிட்டு, இரவு 11 மணிக்கு விஜயவாடாவிற்கு அவுரா விரைவு ரயிலில் பயணமாகிட சென்னை- சென்ட்ரல் ரயில் சந்திப்பிற்கு வந்துவிட்டார். உடன் பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ. குமரேசன், திராவிடர் கழக ஊடகத் துறை மாநில செயலாளர் ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார், புகைப்படக் கலைஞர் பா.சிவக்குமார் ஆகியோர் பயணித்தனர்.

விஜயவாடா சென்றடைவு

28 ஆம் நாள் காலை 6.30 மணி அளவில் விஜயவாடா சென்றடைந்தோம். நாத்திகர் மய்யப் பொறுப்பாளர்கள், வரவேற்று அழைத்துச் செல்ல, ரயிலடிக்கு வருகை தந்திருந்தனர். வருகை தந்த பொறுப்பாளர்கள் தமிழர் தலைவரை நன்கு அறிந்தவர்கள்; ஆசிரியர் அவர்க ளுக்கும் அவர்களை நன்கு தெரியும். 10 நிமிட பயணத்தில் விஜயவாடா பென்ஸ் வட்டம் (Benz Circle) வந்தடைந் தோம்.

நாத்திகர் மய்யத்தில் கோரா - சரஸ்வதி நாத்திகர் தம்பதியினரின் பிள்ளைகள் லவணம், முனைவர் விஜயம், டாக்டர் சமரம், நியாந்தா மற்றும் குடும்பத்தினர் தமிழர் தலைவரை வரவேற்றனர். நலம் விசாரித்து உரையாடினர். அவர்களது பெற்றோர் கோரா - சரஸ்வதி காலம் தொட்டு நாத்திகர் மய்யத்திற்கு தமிழர் தலைவர் வருகை தந்த நிகழ்ச்சிகளை நினைவுபடுத்திப் பேசிக்கொண்டு இருந்தனர். பெரியார் இயக்கமும், நாத்திகர் மய்யமும் ஒரு தலைமுறையினைத் தாண்டிய கொள்கை உறவு கொண்டு செயல்படுவதை பெருமையுடன் நினைவு கூர்ந்தனர்.

தமிழர் தலைவருடன் வெளிநாட்டு, உள்நாட்டு நாத்திகப் பெருமக்கள் உரையாடல்

தமிழ் ஓவியா said...

நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முன்னரே வருகை தந்திருந்த ஜெர்மன் நாட்டு நாத்திகர், டாக்டர் வோல்கர் முல்லர் (Dr. Volker Muellar) ஆசிரியருக்கு மரியாதை தெரிவித்து உரையாடிக் கொண்டிருந்தார். தஞ்சையில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்பட்ட விழாவில் பங்கேற்ற அறிஞர் டாக்டர் வோல்கர் முல்லர் ஆவார்.

தோற்றத்தில் உடல் பருமன் கொண்டவர். எடைக்கு எடை தங்கம் எனும் பொழுது தன்னைப் போலவே ஆசிரியர் அவர்களும் உடல் பருமனாக இருந் தால் எடைக்கு எடை கூடுதலாக தங்கம் கிடைத்திருக் குமே என தஞ்சை நிகழ்ச்சியில் தான் கூறியதை நினைவு கூர்ந்தார் டாக்டர் வோல்கர் முல்லர்.

அடுத்து லண்டன் மாநகரிலிருந்து வருகை தந்திருந்த நாத்திக எழுத்தாளர், இதழாளர் ஜிம் ஹெர்ரிக் (Jim Herrick) ஆசிரியரை சந்தித்து மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டார். உரையாடிக் கொண்டிருக்கும்போதே நாத்திக அறிவியல் அறிஞரும், தேசிய அறிவுக் குழுவின் (National Knowledge Commission) மேனாள் துணைத் தலைவரும், அய்தராபாத் நகரிலுள்ள புகழ் பெற்ற மூலக்கூறு உயிரியல் மய்யத்தின் (Centre for Molecular Biology) நிறுவனத் தலைவருமான டாக்டர் பி.எம். பார்கவா அவர்களின் உதவியாளர், நாத்திகர் மற்றும் திரைப்பட, தொலைக்காட்சி ஊடகக் கலைஞர் சந்தனா சக்கர வர்த்தி, ஆசிரியரைச் சந்தித்துப் பேசினார்.

டாக்டர் பார்கவாவின் உடல்நலத்தினை தமிழர் தலைவர் சந்தனா சக்ரவர்த்தியிடம் விசாரித்தார். சென்னையில் பகுத்தறி வாளர் கழகம், பரிணாமக் கோட்பாட்டுத் தந்தை சார்லஸ் டார்வினின் 200 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை வெகு சிறப்பாகக் கொண்டாடிய வேளையில், சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றவர்கள் டாக்டர் பி.எம். பார்கவா மற்றும் சந்தனா சக்ரவர்த்தி ஆகியோர்.

நாத்திகப் பெருமக்கள் குழாமுடன் சற்று நேர உரையாட லுக்குப் பின்னர், அறைக்குச் சென்று குளித்து முடித்து, காலை உணவிற்கு ஏற்பாடு செய்திருந்த அறைக்கு தமிழர்தலைவர் வந்தபொழுது பிற மாநிலங் களிலிருந்து வருகை தந்த நாத்திகர் பகுத்தறிவாளர் அமைப்பினைச் சார்ந்த பொறுப்பாளர்கள் ஆசிரியருக்கு வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்தனர். சரியாக காலை 10 மணிக்கு சரஸ்வதி கோராவின் நூற் றாண்டு நிறைவு விழா நடைபெறவிருந்த சித்தார்த்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கிற்கு வருகை தந்தார் தமிழர் தலைவர். டாக்டர் விஜயம் தமிழர் தலைவரை வரவேற்றார்.

IHEU தலைவருடன் தமிழர் தலைவர் சந்திப்பு

தமிழ் ஓவியா said...

நூற்றாண்டு விழாவிற்கு தலைமையேற்க, பெல்ஜியம் நாட்டிலிருந்து வருகை தந்த பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியத்தின் (International Humanist and Ethical Union - IHEU) தலைவர் திருமதி சோனியா எக்கரிக்ஸ் (Sonja Eggerickx) தமிழர் தலைவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். IHEU அமைப்பில் திராவிடர் கழகமும் ஓர் அங்கம். அதன் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள சோனியா எக்கரிக்ஸ் முதன் முறை யாக தமிழர் தலைவரைச் சந்திக்கின்ற நிகழ்வாக அது அமைந்தது.
விஜயவாடா நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், சென்னை - பெரியார் திடல் மற்றும் தஞ்சை - வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு வருகை தரவிருந்த சோனியா எக்கரிக்ஸ் அம்மையாரை வரவேற்ற தமிழர் தலைவர், அவர்களது வருகையின் பொழுது அந்த நிகழ்வுகளில் தான் பங்கேற்க இயலாவண்ணம் பிற பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள நிலைமையினை எடுத்துக் கூறினார். உடன் வந்திருந்த IHEU அமைப்பின் பன்னாட்டு இயக்குநர் பாபு கோகினேனி தமிழர் தலைவரிடம் நலம் விசாரித்தார்.

அரங்கத்தில் அமர்ந்திருந்த தமிழர் தலைவரை இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப் பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக், செயலாளர் யு.கலாநாதன், கேரள யுக்தி வாதி சங்கப் பொறுப்பாளர் சுகுமாரன், ஒரிசா மாநில பகுத்தறிவாளர் மன்றத்தின் தலைவர், தத்துவப் பேராசிரியர் தானேஸ்வர் சாகு, ஒரிசா சாதி மறுப்பு திருமண நிறுவனத் தலைவர் சி.எஸ்.டி. வால்டேர், பிற மாநில பகுத்தறிவாளர் அமைப்புகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் ஏராள மானோர் சந்தித்து அளாவளாவி மகிழ்ச்சி அடைந்தனர்.
ஒளிப்படக் கண்காட்சி திறப்பு

நிறைவு விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு முன்னர், நூற்றாண்டு நினைவு ஒளிப்படக் கண்காட்சியினை தமிழர் தலைவரின் முன்னிலையில், தெற்கு குஜராத் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர், உளவியல் அறிஞர், பேராசிரியர் பி.ஏ. பரிக் (B.A. Parikh) திறந்து வைத்தார். நாத்திகர் மய்ய செயல்பாடுகள், கோரா காலம் தொடங்கி, சரஸ்வதி கோரா கால நிகழ்வுகளைக் காட்டும் ஒளிப் படங்கள் பலவற்றை கால வரிசைப் படி கொண்டதாக கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.

சென்னை - பெரியார் திடலுக்கு சரஸ்வதி கோரா வருகை தந்த நிகழ்வு, பெரியார் காட்சியகத்தினை பார்வையிட்ட நிகழ்வு குறித்த ஒளிப்படங்கள் கண்காட்சி யில் இடம்பெற்றிருந்தன. 2003ஆம் ஆண்டு விஜய வாடாவில் நடைபெற்ற கோராவின் 101 ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சியின்பொழுது சிறப்பு விருந்தினராக வருகை தந்த தமிழர் தலைவருடன் சரஸ்வதி கோரா வீற்றிருந்த ஒளிப்படம் கடந்தகால நிகழ்வுகளை நினைவூட்டிய வண்ணம் இடம் பெற்றிருந்தது. கண்காட்சியில் உள்ள ஒவ்வொரு ஒளிப்படத்தினையும் உன்னிப்பாகக் கவனித்த வண்ணம், படங்கள் முழுவதையும் தமிழர் தலைவர் பொறுமையுடன் பார்த்தார்.
நூற்றாண்டு நிறைவு தொடக்க விழா
சரஸ்வதி கோராவின் நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு வருகை தந்தோரை கோரா குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் டீமாஸ் கோரா (Demos Gora) நாட்டிய நிகழ்ச்சியின் மூலம் வரவேற்றார். அதைத் தொடர்ந்து தொடக்க நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த விருந்தினர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.
விழாவினைத் தொடங்கி வைக்கவிருந்த தமிழர் தலை வரை, மேடைக்கு வருகை தர விழாக்குழுவினர் அழைப்பு விடுத்த பொழுது அரங்கத்தில் அமர்ந்திருந்தோர் கையொலி எழுப்பி வரவேற்று மகிழ்ந்தனர்.

நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநர் மற்றும் கோராவின் புதல்வர் முனைவர். விஜயம் நூற்றாண்டு முன்னுரைக் குறிப்பினை வழங்கி, அனைவரையும் வரவேற்றார். அதன் பின்னர். தமிழர் தலைவர் நூற் றாண்டு நிறைவு விழாவினை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

தமிழர் தலைவரின் நாத்திகர் விளக்க பிரகடன உரை

பெரியார் இயக்கமும், கோராவின் நாத்திகர் மய்யமும், மனிதநேய மேம்பாட்டிற்கு பாடுபட்டு வரும் நாத்திக அமைப்புகளாகும். செயல்பாட்டை பொறுத்த அளவில் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள். அந்த வகையில் இந்த நூற்றாண்டு விழா, எங்களது விழா - எங்களது குடும்ப விழா என்ற உணர்வுடன் வருகை தந்துள்ளோம் எனக் கூறி பகுத்தறிவு பற்றி அறிஞர் அண்ணா கூறிய ஆழமான, அறிவார்ந்த விளக்கத்தினை அரங்கத்தினர் மனம் கவரும் வண்ணம் எடுத்துரைத்தார்.

தமிழ் ஓவியா said...

இந்திய அரசமைப்பு சட்டம் வலியுறுத்தும் அடிப்படைக் கடமை

குடிமக்கள் ஆற்றிட வேண்டிய கடமைகளை இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. அடிப்படைக் கடமைகளுள் ஒன்றாக அறிவியல் மனப்பான்மையினை பெருக்குதல், எதையும் கேள்விக்கு உள்ளாக்கும் நெறி முறை, மனிதநேயம், சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த் தெடுப்பது வலியுறுத்தப்படுகிறது. அறிவியல் என்பது எதனையும் கேள்விக்கு உள்ளாக்கி விடை காணும் அணுகுமுறை சார்ந்தது. கடவுள், மதம், என்பது வெறும் நம்பிக்கையின் பாற்பட்டது. கடவுளை, மதத்தை கேள்விக்கு உள்ளாக்கியதால் கிடைத்த விடைதான் கடவுள் மறுப்பு நிலை.

அரசமைப்புச் சட்டம் வலியுத்தும் அறிவியல் மனப்பான்மையினை கைக் கொண்டு அதனை வளர்த்திடும் பணியினை அடிப்படைக் கடமையாக மேற்கொள்ளும் ஒவ்வொரு குடிமகனும் கடவுள் மறுப்பு நிலைக்கு - நாத்திகர் நிலைக்குத்தான் வரநேரிடும். இந்திய அரசமைப்பு சட்டம் வலியுறுத்தும் அடிப்படைக் கடமையினை ஆற்றிடும். ஒவ்வொரு குடிமகனும் நாத்திகர் நிலையினை அடைவர் என புதிய தோர் விளக்கத்தினை அளித்தார். இந்திய அரசமைப்பு சட்டம் வலியுறுத்தும் அடிப்படைக் கடமையினை மேற்கொள் ளும் ஒவ்வொரு குடிமகனும் நாத்திகரே என புதுப் பிரகடனத்தை தமிழர் தலைவர் வெளி யிட்டார்.

குடும்ப உணர்வோடு நூற்றாண்டு விழா நிகழ்வில் பங்கு கொள்வதின் வெளிப்பாடாக, நாத்திகர் மய்யம் நடத்திய விழாவாக இருந்தாலும் - பெரியார் இயக்கத் தின் சார்பாக விழாவில் பங்கேற்ற பன்னாட்டு மனித நேய நன்னெறி ஒன்றியத்தின் தலைவர் திருமதி. சோனியா எக்கரிக்ஸ், ஜெர்மன் நாட்டு நாத்திக அறிஞர் டாக்டர் வோல்கர் முல்லர் மற்றும் இங்கிலாந்து நாட்டு நாத்திக இதழாளர் ஜிம் ஹெர்ரிக் ஆகியோருக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து சிறப்புச் செய்தார்.

சரஸ்வதி கோராவிற்கு நூற்றாண்டு விழா நடத்திடும் நாத்திகர் மய்யத்தினைப் பாராட்டுகின்ற வகையில், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்திப் பாராட்டும் வகையில் முனைவர் விஜயம் அவர்களுக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

புத்தக வெளியீடுகள்

நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சியில் ஜிம் ஹெர்ரிக் எழுதிய The Atheist Centre : Unbound by Cages எனும் ஆங்கிலப் புத்தகத்தினை தமிழர் தலைவர் வெளியிட்டார். பெண் தொலை நோக்காளர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் (Women Visionaries and Activists) எனும் தொகுப்பு நூலை டெல்லி காந்தி அமைதி கட்டளையின் தலைவர் திருமதி ராதாபட் வெளி யிட்டார். அந்தத் தொகுப்புப் புத்தகத்தில் அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையார் மற்றும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பற்றிய குறிப்புகள் இருந்தன.

தொடக்க விழா நிறைவுக்குப் பின் நண்பகல் உணவருந்தி விட்டு, சற்று நேர ஓய்வுக்குப் பின்னர் சென்னை திரும்பிட மாலை 4 மணியளவில் விஜயவாடா ரயில் சந்திப்பிற்கு வந்தடைந்தோம். வந்த பின்னர்தான், பயணம் செய்திட வேண்டிய உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரிலிருந்து கிளம்பிய ராப்தி சாகர் விரைவு வண்டி 2 மணிநேரம் தாமதமாக வருகின்ற செய்தியினை அறிவித்தார்கள்.

தாமதம் ஆன இரண்டு மணி நேரத்தினை தமிழர்தலைவர் பயணிகள் அறையில், பயணிகளோடு அமர்ந்திருந்து ராம் புன்னியன் எழுதிய Fundamantalism எனும் ஆங்கில நூலை முழுமையாகப் படித்திடப் பயன்படுத்திக் கொண்டார். இரயில் தாமதத்தையும் புத்தகம் படிக்கின்ற வாய்ப்பு கிடைத்ததாக கருதி தமிழர் தலைவர் மனநிறைவுற்றார்.

தமிழ் ஓவியா said...

மாலை 6.30 மணிக்கு விஜயவாடாவிலிருந்து கிளம்பிய இரயில் நள்ளிரவையும் தாண்டி அதிகாலை 2 மணியளவில் சென்னை - சென்ட்ரல் நிலையம் வந்த டைந்தது. விஜயவாடா நாத்திகர் மய்யம் நடத்திய எத்தனையோ நாத்திகர் மாநாடுகளில், கூட்டங்களில் தமிழர் தலைவர் கலந்து கொண்டிருந்தாலும் இந்த நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று, பிற நாத்திகர் அமைப்புகளை நேர் கொண்ட விதம், பொறுப்பாளர்களுடனான உரையாடல், விழாவில் உரையாற்றிய செரிவு - இவைகளின் அடிப்படையில் தமிழர் தலைவர் கலந்து கொண்ட விதம் பெரியார் இயக்கத்தின் பரிமாண விரிவாகவே தென்பட்டது. பங்கேற்றவர் பார்வையிலும் பண்பட்ட விரிவாகவே இருந்தது.

நடுநிசி தாண்டிய வேளையிலும் அன்பான வெளிப்பாடு

சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கடற்கரைச் சாலை வழியாக தமிழர் தலைவரின் இல்லம் நோக்கி வாகனம் சென்று கொண்டிருந்த பொழுது, சாலையில் இரவு ரோந்து காவல் படையினர் வாகனங் களைச் சோதனையிட்டபடி இருந்தனர். வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருப்பதை பார்த்து தமிழர் தலைவரின் ஓட்டுநரும் வாகனத்தை நிறுத்தினார். வாகனத்தில் கழகக் கொடி இருப்பதை பார்த்த காவல்துறை அதிகாரி அருகில் வந்து மரியாதையுடன் சல்யூட் அடித்து விட்டு அன்பாக, அய்யா! நல்லா இருக்கீங்களா? என்று கேட்டு விட்டு வாகனத்தை போக அனுமதித்தார்.

தமிழர் தலைவர் எந்த அரசுப் பதவியில் இருந்தார். எந்த அதிகாரத்தைப் பயன்படுத்தினார்? - இத்தகைய அன்பொழுகும் மரியாதை கலந்த சூழல்தான் பெரியார் இயக்கத்திற்கும், அதன் இன்றைய தலைவரான தமிழர் தலைவரின் சமூக அர்ப்பணிப்பிற்கும் மக்கள் மன்றத்தில் நிலவிடும் மாசற்ற மதிப்புறு நிலை.

இந்த எண்ண அலைகள் அதிகாலை வேளையிலும் கடல் அலை வீச்சினைவிட பரந்துபட்டு பெருமிதமாகவே வீசின. தமிழர் தலைவர் இல்லம் வந்து சேர்ந்த பொழுது அதிகாலை 3மணி.

தமிழ் ஓவியா said...

இன்றைய தலைமுறையினருக்கு, தந்தை பெரியாருடன் இருந்து இயக்கப்பணியும் ஆற்றி வாழ்ந்து வரும்
முழுமையான கொள்கைப்பூர்வ, ஆதாரபூர்வ ஒரே இணைப்பு நீங்கள்தான்!
தமிழர் தலைவரிடம் விஜயவாடா நாத்திகர் மய்யத் தலைவர் விஜயம் வேண்டுகோள்

சரஸ்வதி கோராவின் நூற்றாண்டு நிறைவு விழாவின் தொடக்க நிகழ்ச்சி முடிந்த பின்னர் நண்பகல் உணவருந்திக் கொண்டே, கோராவின் புதல்வர், விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநர் முனைவர் விஜயம் அன்பும் உரிமையும் கலந்த முறையில் தமிழர் தலைவரிடம் ஒரு வேண்டு கோளை வைத்திட்டார். உங்களுக்கு வயது 80அய் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இளை ஞரைப் போல வெகுதூரம் பயணம் செய்து கொள்கைப் பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறீர்கள். எங்களுக் கெல்லாம் மிகவும் பெருமை யாக இருக்கிறது. நீங்கள் இப்படி பயணம் செய்வதை வெகுவாகக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதே எங்களின் அன்பான வேண்டுகோள். இது உங்களது உடல் நலம் சார்ந்தது மட்டுமல்ல. உங்களின் பங்களிப்பினையும் எதிர் நோக்கியே வேண்டுகிறோம்.

ஆம். நீங்கள் பயணத்தைக் குறைத்துக் கொண்டு ஏராளமாக உங்களது எண்ணங்களை அனுபவங்களை, நினைவுகளை, பதிவு செய்யும் விதமாக எழுத்துப் பணியில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். இன்றைய சமுதாயத்தினருக்கு, தந்தை பெரியாருடன் இருந்து இயக்கப்பணியும் ஆற்றி வாழ்ந்து வரும் நீங்கள்தான் இந்த தலைமுறையினருக்கு பெரியாருடனான முழு மையான கொள்கைப் பூர்வ ஒரே இணைப்பு. (You are the sole ideological authentic link to the contemporary generation, of Periyar and his Mission)

தந்தை பெரியாரது எண்ணங்களை முழுமையாக பதிவு செய்வதற்கு நீங்கள் தான் ஆதாரப்பூர்வமான தலைவர். இனி வரும் காலங்களில் அத்தகைய பணிகளை அதிகமாக மேற்கொண்டு இயக்கப்பணி ஆற்றி வழிகாட்டிட வேண்டும். இப்பணியினை செய் வதற்கு உங்களைவிட உரிய தகுதியானவர் யாரும் இல்லை என்பது எங்களது எண்ணம்.

அருள்கூர்ந்து பயணங் களைக் குறைத்துக் கொண்டு பெரியாருடன் பழகிய நாட்களை, அவரது சிந்தனைகளை பதிவு செய்யுங்கள். இதுவே இந்த நூற்றாண்டு விழா நேரத்தில் எங்களது வேண்டுகோளாக வைக்கிறோம்

பிற நாத்திகர் அமைப்பினரும் பெரியார் இயக்கத் தின் அருமை தெரிந்து தமிழர் தலைவரின் பணிப் பெருமை உணர்ந்து, அதனை வெளிப்படுத்திவேண்டு கோள் விடுத்த விதம் பெருமிதம் கொள்ள வைத்தது.


பெரியார் இயக்கமே புரவலர் அமைப்பு

நூற்றாண்டு விழாவினை தொடங்கி வைத்து சிறப்புவிருந்தினராக தமிழர் தலைவர் அழைக்கப்பட்டு இருந்தாலும், விருந்தோம்பும் மாண்பாளராக இருந்து வருகை தந்திருந்த பன்னாட்டு நாத்திகப் பெருமக்களை வரவேற்ற விதம் அனைவரது பாராட்டுதலையும் பெற்றது.

நாத்திகர் அமைப்பினர் பலதரப் பிரிவாக இருந்தாலும் அவர்களுக்கு புரவலர் அமைப்பு பெரியார் இயக்கமே எனச் சொல்லாமல் தெரியப்படுத்தி பெரியார் இயக்கத் தின் பெருமையினைப் பறைச்சாற்றுவதாக தமிழர் தலை வரின் தொடக்க விழா பங்கேற்பு நிகழ்வு அமைந்தது.

தமிழர் தலைவரின் தொடக்க உரையினை அடுத்து IHEU தலைவர் திருமதி சோனியா எக்கரிக்ஸ், ஹைதராபாத் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.பி.ஆர்.சந்திரசேகராவ் மற்றும் ஆந்திர மாநில நாகார்ஜுன பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலமோகன் தாஸ் ஆகியோர் பேசினர்.

அவர்களது பேச்சில் தமிழர் தலைவர் உரையினைக் குறிப்பிட்டு மற்றும் பெரியாரைப் பற்றி அமைந்தது குறிப்பிடத்தக்கது.

(முற்றும்)

தமிழ் ஓவியா said...


தமிழ்நாடு வரலாற்றுக் காங்கிரசில் தந்தை பெரியார், நாகம்மையார் புகழ் முழக்கம்!

தமிழ்நாடு வரலாற்றுக் காங்கிரசு (Tamilnadu History Congress) தமிழகத்தில் உள்ள கல்லூரி, பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், வரலாற்று மாணவர்கள் உறுப் பினராக உள்ள அமைப்பு. இந்த அமைப்பு ஆண்டுதோறும் ஆண்டு மாநாட்டினைப் பல்கலைக்கழகங்கள், கல்லூரி களில் நடத்தி வருகிறது.

அதன் 19ஆவது ஆண்டு மாநாடு இந்த ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், வரலாற்றுத் துறையின் சார்பில் அக்டோபர் 13, 14, 15 ஆகிய நாள்களில் நடைபெற்றது.

இதன் தொடக்க விழா 13.10.2012 அன்று சாஸ்திரி கூடத்தில் நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்து உறுப்பினர்களும், பார்வையாளர்களும் பங் கேற்றனர். தொடக்க விழாவில் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ராமநாதன் தலைமையேற்றார். மாநாட்டினை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சிறீதர் தொடக்க உரையாற்றினார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மூத்த ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் கோவிந்தசாமிக்குப் பாராட்டு விருதும், சிறப்பாடையும் அணிவித்தனர்.

வரவேற்புரையினை பாரதிதாசன் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவரும் தமிழ்நாடு வரலாற்று காங்கிரசின் செயலாளருமான முனைவர் நா.இராமச்சந் திரன் நிகழ்த்தினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் ஷீலா உதயசந்திரன் நன்றி கூறினார்.

13.10.2012 அன்று மாலை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளரும் வரலாற்றுப் பேராசிரியருமான முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் அவர்கள் கோவை அரசு கலைக்கல்லூரி அறக்கட்டளைச் சொற் பொழிவினை நிகழ்த்தினார்.

திராவிட இயக்க மகளிர் தோழர் ஈ.வெ.ரா. நாகம் மையார் எனும் தலைப்பில் ஒரு மணி நேரம் நாகம்மை யாரின் சிறப்புகளை, தேசிய இயக்கத்திற்கு ஆற்றிய பங்கு, தாலி மறுப்பு, சுயமரியாதைத் திருமணம் நடத்திய பெருமை, பத்திரிகைகள் குடிஅரசு, ரிவோல்ட் ஆகியவற்றின் வெளி யீட்டாளராக ஆற்றிய சிறப்பு ஆகியவற்றை எடுத்துக் கூறிய போது, பார்வையாளர்கள் அதிலும் குறிப்பாக மாணவர்கள் கைதட்டி வரவேற்றனர்.

நாகம்மையாரின் புகழ், தந்தை பெரியாரின் புகழ் பல்கலைக்கழக மேடைகளிலும் ஒலிப்பது திராவிட இயக்கம் பெற்ற வெற்றியாகும். கருத்தரங்கச் சொற்பொழிவிற்குப் பேராசிரியர் முனைவர் சிவப்பிரகாசம் தலைமையேற்று நாகம்மையாரின் பெருமைகள் குறித்து அறிய பெருமிதம் கொள்வதாகக் கூறினார். செயலாளர் முனைவர் நா.இராமச்சந்திரன் நன்றி கூறினார்.

அன்னை நாகம்மையார் மறைந்தபோது அய்யா அவர்கள் குடிஅரசில் எழுதிய இரங்கலுரை அனைவரின் நெஞ்சைத் தொட்டு நெகிழ்வித்தது.

தமிழ் ஓவியா said...

பார்ப்பன எதிர்ப்பு ஏன்?


பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரி டத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன். இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது.

மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக்குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந் தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத் தான் நான் மற்ற வலுக்குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு தான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

உண்மையிலேயே பார்ப்பனர் கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட்டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது.

நான் காங்கிரஸில் இருந்த காலத்தில் - அதாவது எனது நல்ல நடுத்தர வயதான 40-வது வயது காலத்தில் - நான் ஒரு சுயநலமும் எதிர்பாராமல், எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் (உயர்ந்த அந்தஸ்தில்) இருக்கும் போதே, பார்ப்பன சமுதாயத்தில் இரண்டறக் கலந்து, எவ்வளவு தொண்டு செய்திருக்கிறேன் என்பது எல்லாப் பார்ப்பனர்களுக்கும் தெரியும். நான் காங்கிரஸிலிருந்து பிரிந்ததே, பார்ப்பன வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுத்தான் பிரிந்தேனேயொழிய, மற்றபடி எந்தவிதமான சுயநலம் காரணமாகவும் பிரியவில்லை. பிரிந்த பிறகு பார்ப்பன வெறுப்புணர்ச்சியோடு தொண்டாற்றுகிறேன் என்றால், அத்தொண்டில் எனக்குச் சுயநலம் என்ன இருக்கிறது? அல்லது எனது தொண்டில் நான் வெளிப்படையாகச் சொல்லுகின்ற கருத்தல்லாமல் வேறு உட்கருத்து என்ன இருக்கிறது?

தமிழ் ஓவியா said...

என்னைப் போலவே என் கருத்துகளுக்கெதிரான கொள்கைகளின் மீது உண்மையாகப் பாடுபடுகிற இராஜாஜி அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். எப்படியோ நாங்கள் இரு பிளவாகப் பிளந்து ஒன்றுக் கொன்று ஒட்டமுடியாத அளவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம்.

எனக்கு, "நான் தோல்வியடைய மாட்டேன்; நிதானமாகவாவது வெற்றியடைவேன்" என்கிற நம் பிக்கை உண்டு. இராஜாஜியோ, எப்படியோ யோசனையின்றி ஆத்திரப்பட்டுத் தவறான வழியில் இறங்கிவிட்டார். உண்மையிலேயே வருணாசிரம சாதி முறையைப் புதுப்பித்து நிலைநிறுத்துவது சாத்தியமாகுமா? காந்தி இப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டார் என்றால், அது இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முந்திய காலம். இந்தக் காரணத்தினால் தான், அவர் கொல்லப்பட்டதற்குத் தமிழர்கள் அவ்வளவாக வருந்தவில்லை. இன்றைய இராஜாஜியின் கருத்தை, என்னை அவர் காங்கிரஸில் இழுத்த காலத்தில் சொல்லியிருப்பாரேயானால், அவருக்கு ஏற்பட்ட பெருமையும், பதவி வாய்ப்பும், செல்வ வளர்ச்சியும் ஏற்பட்டு இருக்க முடியுமா? ஆகவே அவருடைய இன்றைய நிலைமை மக்களை ஏய்த்து வளர்த்தவர் என்றுதானே பொருள்? நான் அப்படியொன்றும் ஏய்க்கவில்லையே; உளறவும் இல்லையே?

நான் - எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் - என்னுடைய 10 ஆவது வயதிலிருந்தே நாத்திகன்; சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில் கூட, மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்பு கொடுத்தவனும் அல்லன். பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசி இருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன்.

இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.

தாங்கள் அப்படி இல்லையென்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால் நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வர என்னால் முடிந்திருக்கும்.

நம் நாடு இன்று அடைந்திருக்கிற இந்தப் போலி சுதந்திரம் என்பது ஒன்றைத் தவிர - மற்ற எல்லா வளர்ச்சிக்கும் பார்ப்பன சமுதாயம் எதிரியாக இருந்திருக்கிறது. இதுமாத்திரம் அல்லாமல், நாட்டில் சமயம், தர்மம், நீதி, அரசியல் என்னும் பேரால் இருந்து வளர்ந்து வரும் எல்லாக் கேடுகளுக்கும் பார்ப்பன சமுதாயம் ஆதரவளித்தே வந்தி ருக்கிறது, வருகிறது. அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்துத்தான் இந்த நாடும் இந்தச் சமுதாயமும் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இனி வளர்ச்சியை மெதுவாக்கலாமே தவிர, யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைமையைக் காண்கிறேன். -பெரியார்