Search This Blog

25.10.12

இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்


நவம்பர் முதல் தேதி அய்.நா.வின் மனித உரிமைக் கூட்டத்தில், இலங்கை அரசுக்கு எதிராக பல முனைகளிலும் நெருக்கடி கொடுக்கப்படும் ஒரு சூழ் நிலையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஈழத் தமிழர் வாழ்வுரிமைகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு:

நவம்பர் ஒன்றில்
அய்.நா. மனித உரிமைகள் பேரவையில், வரும் நவம்பர் முதல் நாளன்று இடம் பெற உள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்திற்காக இலங்கை சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக பல்வேறு நாடுகளும் நியாயமான சில கேள்விகளை எழுப்பியுள்ளன.

ஸ்பெயின், கனடா, மெக்சிகோ, இங்கிலாந்து, அமெரிக்கா, செக் குடியரசு, நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளே இலங்கையின் அறிக்கை தொடர்பாக ஏற்கெனவே கேள்விகளை எழுப்பியுள்ளன.

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள்

வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் தாமதிக்கப் படுவது, உயர் பாதுகாப்பு வளையங்கள், ஊடகவியலா ளர்களுக்கான அச்சுறுத்தல்கள், 2005-இல் திரிகோண மலையில் அய்ந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படாமை, மூதூரில் 17 தொண்டு நிறுவனப் பணியாளர்களின் படுகொலை, கேலிச் சித்திர ஓவியர் (cartoonist) பிரகீத் எகினொலி கொட  காணாமல் போனது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக இந்த நாடுகள் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.

அமெரிக்காவும், இங்கிலாந்தும்

சாட்சிகள், மற்றும் பாதிக்கப்பட்டோரைப் பாதுகாப்ப தற்கான சட்ட மூலம், சேனல் 4 காணொலி தொடர்பான விசாரணை, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஆன இரு தரப்புப் பேச்சு வார்த்தைகளில் இரு தரப்பிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படாமை ஆகிய செய்திகள் குறித்து அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது.

அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந் துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயல் திட்டத்தில், உள்ளடக்கப்படாத பரிந்துரைகளின் நிலை என்ன என்று அமெரிக்காவும், இங்கிலாந்தும் கேள்விகளை எழுப்பியுள்ளன.

உள்நாட்டுப் போரின்போது, இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் தொடர்பான ஒரு முறைப்படியான சுதந்தர விசாரணை நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசாங்கம் எப்போது பொறுப்புக் கூறப் போகிறது என்று கனடா அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தக் கட்டத்தில் இலங்கை பல முனைகளில் நெருக்கடிகளை எதிர்நோக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


இந்த அய்.நா. மனித உரிமைகள் பேரவையில் வரும் நவம்பர் முதல் நாள் நடக்கவுள்ள இலங்கைத் தொடர்பான விவாதத்தையடுத்து நவம்பர் 5ஆம் நாள் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.
மற்ற வெளிநாடுகளில் இப்படி ஒரு மனிதநேயம், மனித உரிமை காப்பு உணர்வு ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை மீட்டெடுக்கப்பட முயற்சிகளும் கேள்விகள் வாயிலாக வெடித்துக் கிளம்பும் செய்திகள் வரும்போது, ஈழத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களின் தமிழ்நாட்டினை உள்ளடக்கி ஆளும் இந்திய அரசு என்ன  செய்து கொண்டிருக்கிறது?



இதை தி.மு.க. போன்ற ஆளுங் கூட்டணிக் கட்சிகள் வற்புறுத்திட வேண்டும். பிரதமரைப் பார்த்தும், அய்க்கிய முற்போக்கு முன்னணி தலைவர் திருமதி சோனியா காந்தி அம்மையாரை நேரில் கண்டும் பேசி, இந்தியப் பிரதிநிதிகள் இப்பிரச்சினைகள் மேலும் எப்படி இன்னும் முள்வேலிகள் அகற்றப்படாமல், சிங்களக்குடியேற்றமாக தமிழர் வசித்த பகுதிகள் மாற்றப்பட்டு அங்குள்ள தமிழர்கள் வாழவும் வசதியற்று Homeless வீடற்றவர் களாகவும் (ஏற்கெனவே நாடற்றவர்களாக்கப்பட்டு விட்டு) உள்ளநிலை, வடகிழக்கு மாகாணங்களில் இராணுவம் தான் சகல சர்வ அதிகாரிகள் என்ற நிலை போர் முடிந்த 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் இப்படி ஒரு கொடுமையா - வாழ்வுரிமைப் பறிப்பா என்று கேட்க வேண்டும் - இந்தியா பிரச்சினை எழுப்பிட வேண்டும் அந்த நவம்பர் கூட்டத்தில்.

அய்.நா. சென்ற வெளி உறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா அவசர அவசரமாக காவிரித் தண்ணீரை தமிழ் நாட்டுக்குத் தராதீர் என்று பிரதமருக்கு எழுதுவதில்தான் முனைப்பு காட்டப்படுகிறது. இது மகா வெட்கக் கேடு அல்லவா!

ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண 1) மத்திய (இந்திய) அரசு முயற்சிகள்

2) உலக மாமன்றமான அய்.நா.வும், அதன் பல்வேறு அங்கங்கள் மூலம்தானே வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து பரிகாரம் காண முடியும்?
நாம் அழுத்தங்கள் தரலாமே தவிர, ஆக்க ரீதியான பாதுகாப்பும் மீட்டுரிமையும், பெற்றுத் தர மேற்கண்ட இரண்டு அமைப்புகளின் பங்கும் பணியும் கடமையும் தானே முக்கியம்?

எனவே வாக்கெடுப்பிலும் இந்தியாதானே இலங் கையை வழிக்குக் கொண்டுவர தக்கதோர் நிலை எடுக்க வேண்டும்?

மத்திய அரசுக்கு நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தாக வேண்டும்!


3. விடுதலைப்புலிகளை- தமிழர்களை அழித்த இடத்தில் போர் வெற்றிச் சின்னம் ஒன்றினை இராஜ பக்சே அரசு நிறுவி, சிங்களவர்கள் கூட்டம் கூட்டமாய் வடக்குப் பகுதிக்குச் சென்று கண்டுகளித்து வருவதற்கு ஏற்பாடு செய்கிறது என்பது எவ்வளவு ஆணவ அகங்காரச் செயல்!
போர் வெற்றிச் சின்னமா? ஈழத் தமிழர் வாழ்வுரி மையை அழித்த வெறிச் சின்னமா? நடுநிலை நாடுகள் கண்டிக்க வேண்டும். இப்படி ஒரு பழி வாங்கும் மிருக உணர்ச்சி தமிழர்கள்மீது சிங்கள அரசால் நிரந்தரமாகக் காட்டப்பட்டால், அங்கு பழைய - சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதோ சம வாய்ப்பு என்பதோ, பரஸ்பர அன்பு என்பதோ ஏற்படுமா?


இறுதியில் தீர்வு தனி ஈழம்தான் என்று தமிழர்கள் எண்ணிட அவர்களைத் துரத்துவது அல்லாமல் வேறு என்ன?
புலியும், ஆட்டுக் குட்டியும் சர்க்கஸ் கூடாரத்தின் காட்சி வரையில் நட்பாக இருப்பதாகக் காட்ட முடியும் - அது நிரந்தரமாக மாறிவிட்டது என்று எவராவது கூறினால் அதைவிட கேலிக் கூத்து ஏமாளித்தனம் வேறு உண்டா?
உலக நாடுகள் பார்வை ஈழத் தமிழர்பால் அனுதாபத் தோடு விழுகிறது. இந்திய அரசே, உங்கள் கடமை என்ன?


சிங்கள இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளித்து நீங்காப் பழியால்  தேர்தல்களில் மீளாத் தோல்விகளையும் சுமக்கத் தயாராகப் போகிறதா காங்கிரஸ்?
யோசிக்க வேண்டிய தருணம் இது!

12 comments:

தமிழ் ஓவியா said...


வெற்றிகரமான ஆர்ப்பாட்டம்!


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டச் செயல்பாடு - இரண் டையும் முன்னிறுத்தி, திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அளவில் மாவட்டத் தலைநகரங் களில் கடந்த 22 ஆம் தேதி எழுச்சியுடன் நடை பெற்றுள்ளது.

இதுபற்றிய விவரம் மாநில, மத்திய அரசின் கவனத்திற்குச் சென்றிருக்கும். இந்த ஆர்ப்பாட்டம் என்பது சிறிதும் அரசியல் கலப்பற்றது - யாரும் உள்நோக்கம் கற்பிக்கவும் முடியாது.

இந்த இரண்டு கோரிக்கைகளிலும் உள்ள நியாயம், நேர்மை இவற்றை எவரும் சந்தேகிக்கவும் முடியாது.

முதல் கோரிக்கை மனித உரிமை பற்றியது. தாழ்த்தப்பட்டவர்கள் பொது வீதிகளில் நடக்கக் கூடாது; பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாது; கோவிலுக்குள் நுழைய முடியாது என்கிற சமூக அமைப்பு இருந்ததே - அவை மாற்றப்படவில்லையா?

தீண்டாமை என்பது சாஸ்திர ரீதியாகத்தானே அங்கீகரிக்கப்பட்டு இருந்தது. தீண்டாமை க்ஷேமகர மானது என்று ஜெகத்குரு என்று சொல்லப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் திரு. சந்திரசேகரேந்திர சரஸ்வதி சொல்லவில்லையா? காந்தியார் நேரில் சென்று அவரைச் சந்தித்து உரையாடியபோதும், தீண்டாமையை விட்டுக் கொடுக்க அவர் முன்வரவில்லையே!

இருந்தாலும் இவற்றில் எல்லாம் மாற்றம் ஏற்பட்டு வந்ததா - இல்லையா? அந்த மாற்றத்தின் அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சிதானே கோவில் கருவறைக்குள் ஜாதி வேறுபாடின்றி தாழ்த்தப்பட்டவர் உள்பட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது.

இந்த நியாயத்தை, மனித உரிமையை மறுதலிப்பவர் கள் யார்? இதற்காகச் சட்டம் இயற்றப்பட்டும் முட்டுக் கட்டை எங்கே இருக்கிறது? இந்த முட்டுக்கட்டையைப் போட்டு வருபவர்கள் யார் என்பதைத் தெரிந்து கொண்டால், திராவிடர் கழகம் எடுத்துக் கூறிவரும் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்ற உண்மையின் நியாயம் எளிதில் விளங்குமே!

பார்ப்பனத்தனம் முன்புபோல் இல்லை; மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று சமாதானம் சொல்பவர்கள் கூட அனைத்து ஜாதியினருக்குமான அர்ச்சகர் பிரச்சினை யில் பார்ப்பனர்கள் நடந்துகொள்ளும் முறையைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். நாம் கூறுவதில் உள்ள நியாயத்தை உணரக்கூடிய கட்டாயத்துக்குத் தள்ளப்படு கிறார்கள்.

இன்றுகூட இந்தப் பிரச்சினையில் உள்ள நியாயத்தை எந்த ஒரு பார்ப்பன ஏடாவது ஆதரித்து எழுதுகிறதா? கட்டுப்பாடாக இந்தப் பிரச்சினையை திசை திருப்பும் கேவலமான முறையைத்தானே கையாளுகிறார்கள்!

இதில் வருந்தத்தக்கது என்னவென்றால், திராவிடர் கழகம் கையில் எடுத்துக்கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினை குறித்து தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் வரவேற்று அறிக்கை கொடுத்துள்ளார்களே தவிர, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அமைப்பின் தலைவர்கள், சமூகநீதிச் சிந்தனை யாளர்கள் ஏன் ஆதரவு கரத்தை உயர்த்த முன்வர வில்லை? இது ஓர் அடிப்படைப் பிரச்சினையல்லவா? தீண்டாமை ஒழிக என்பவர்களும், ஜாதி ஒழிக என் பவர்களும் திராவிடர் கழகத்தின் இந்த ஆர்ப்பாட்டத் துக்கு ஓடோடி வந்து ஆதரவு காட்டியிருக்கவேண்டாமா?

இதுபோன்ற பிரச்சினைகள் என்றால் அது ஏதோ திராவிடர் கழகத்துக்கு மட்டும் என்று நினைத்து, ஒதுங்கிவிடவேண்டுமா?

திராவிடர் கழகம் இதுபோன்ற அடிப்படை சமூகப் புரட்சிப் பணியை எடுத்துக்கொள்ள முடிவதற்குக் காரணம், அது மக்களின் வாக்குகளை எதிர்பார்க்க அவசியம் இல்லாத சமூகப் புரட்சி இயக்கமாகும். அது உண்மைதான்.

என்றாலும் நேரிடையாக களத்தில் குதிக்கா விட்டாலும், பக்க பலமாக நிற்கலாமே!

இந்த இடத்தில் இன்னொன்றையும் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம். இன்றைய நீதிமன்றத்தின் போக்குக் குறித்ததாகும். பல பொதுப் பிரச்சினைகளில் சட்டங்களைக் கடந்து கருத்துத் தெரிவிக்கும் உச்சநீதி மன்றம், இந்த அடிப்படை மனித உரிமைப் பிரச்சினையில் முற்போக்கான கருத்துகளைச் சொல்லத் தயங்குவ தேன்? எந்தக் காலத்திலோ எவராலோ கிறுக்கி வைக்கப் பட்டதற்கெல்லாம் மதிப்புக் கொடுக்க ஆரம்பித்தால், சமூக மாற்றம் எப்படி நிகழும்? மனித உரிமையில் வளர்ச்சிக் கட்டங்கள் எப்படி ஏற்பட முடியும்.

ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல, நீதிமன்றத்திற்கும் சமூகப் பொறுப்பு இருக்கவில்லையா? இட ஒதுக்கீடுப் பிரச்சினையில் சட்டத்தைத் தாண்டி ஆணைகளைப் பிறப்பிக்கும் உச்சநீதிமன்றம், இந்த மனித உரிமைப் பிரச்சினையில் - இதற்கான வழக்கில் தீர்ப்பைச் சொல்லாமல் நிலுவைப் பெட்டியில் பூட்டி வைப்பது ஏன்? இதுபற்றிய விவாதங்கள் நாடு தழுவிய அளவில் நடக்கட்டும்! நடக்கட்டும்!! 24-10-12

தமிழ் ஓவியா said...


இலங்கையின் போர்க்குற்றம் பற்றிய அறிக்கை மறைக்கப்படுகிறதா?


அய்.நா. அக். 24- இலங்கையில் இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக் கான பொதுமக்கள் உயிரிழந்து கொண்டிருந்த போது, அய்.நா.வின் செயற்பாடுகள் எவ்வாறு இருந்தன?

என ஆராய்வதற்காக நியமிக்கப் பட்ட தனிநபர் விசாரணை குழு அறிக்கை தற்போது அய்.நா.வினால் மறைக்கப்பட்டு விட்டதாக இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் குற்றம் சுமத்தி யுள்ளது.

எகிப்தைச் சேர்ந்த தொராயா ஒபெய்ட் எனும் உயர் அதிகாரியை இது தொடர்பில் ஆராய்வதற்காக ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் நியமித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இவ்விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. நான்கு மாத காலக்கெடுவை விதித்து அதற்குள் இந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என பான் கீ மூன் கோரி யுள்ளார். எனினும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவே இல்லை. தனிப் பட்ட காரணங்களுக்காக அவரால் அந்த பணியை செய்ய முடியவில்லை என அறிவிக்கப்பட்டதை அடுத்து, சார்லஸ் எனும் மற்றுமொரு உயர் அதிகாரி அப்பணிக்கு நியமிக்கப் பட்டார்.

எனினும் குறிப்பிட்ட கால எல்லை முடிவடைந்து 9 மாதங் களான பின்னர் இன்னமும் இந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. இது குறித்து அய்.நா பொதுச் செயலாளரின் பேச்சாளர் மார்டின் நெஸ்ர்க்கியிடம் கேள்வி எழுப்பப் பட்ட போது, விரைவில் இந்த அறிக்கை வெளியிடப்படும் என பதில் வந்துள்ளது.

அறிக்கை இறுதி செய்யப் பட்டுள்ள போதும் இன்னமும் வெளியிடப்படாது இழுத்தடிப்பு செய்வது, தமக்கு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் வேண்டு மென்றே அய்.நா. இந்த அறிக்கையை மறைக்கப்பார்க்கிறதா எனவும் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பி யுள்ளது.

முன்னதாக இலங்கையின் இறுதி யுத்தம் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அய்.நா.வின் விசேட பிரதிநிதிகள் குழு தயாரித்த நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்பட்ட போது அதில் கூறப்பட்ட பெரும் பாலான பரிந்துரைகளை இலங்கை அரசு நிராகரித்திருந்ததுடன், தமது நல்லிணக்க ஆணைக்குழுவை கொண்டு வெளியிட்ட அறிக்கைப் படி தாம் தற்போது நடந்து வருவதாக தெரிவித்துவருகிறது. இதனால் அய்.நா. குறிப்பிட்ட போர்க்குற்றங் கள் தொடர்பான அறிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. 24-10-12

தமிழ் ஓவியா said...


கருத்துரிமைக்கு இவ்வாட்சியில் இடமில்லையா? உரிய முறையில் தீர்வு காணப்படும்!


பிராமணாள் பெயர் போர்டு - எதிர்ப்பு!

சிறீரங்கத்தில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு

கருத்துரிமைக்கு இவ்வாட்சியில் இடமில்லையா?

உரிய முறையில் தீர்வு காணப்படும்!

சிறீரங்கத்தில் கிருஷ்ணய்யர் என்பவ ரால் நீண்ட காலமாக நடத்தப்பட்டு வந்த உணவு விடுதியில் திடீரென்று பிராமணாள் முளைத்துள்ளது - திணிக்கப்பட்டுள்ளது! இதுகுறித்து கழகத் தோழர்கள் நேரில் கேட்டுக்கொண்டும், பிராமணாளை நீக்க முடியாது; உங்களால் ஆனதைப் பாருங்கள் என்று முரட்டுத்தனமாகப் பேசி இருக் கிறார் உணவு விடுதி உரிமையாளர்.

இந்த நிலையில், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் முதலமைச்சர் கவனத்துக்காக அறிக்கை ஒன்றினையும் விடுதலையில் (19.10.2012) வெளியிட்டார்.

திராவிடர் கழகத்தின் சார்பில் வரும் 28 ஆம் தேதி ஜாதி ஒழிப்பு எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டு, அதில் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் உரையாற்றுவதாக அறிவிக்கப் பட்டது.

அக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என்று சிறீரங்கம் காவல் நிலைய ஆய்வாளர் அதிகாரப்பூர்வமாகக் கடிதம் கொடுத்துள்ளார்.

இதற்குச் சொல்லப்படும் காரணம் விசித்திரமானது. இதே பிரச்சினைக்காக வேறு சிலரால் நடத்தப்பட்ட போராட்டத் தால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்ட தையும் காரணம் காட்டி, திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பது சரியானதுதானா? நியாய மானதுதானா?

திராவிடர் கழகம் நடத்திய - நடத்து கின்ற எந்தப் பொது நிகழ்ச்சியிலாவது சட்டம்-ஒழுங்குக்கு குந்தகம் விளை விக்கப்பட்டதுண்டா? இதுகுறித்து தந்தை பெரியார் அவர்கள் காட்டிய அந்த நெறி முறை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறதே.

இந்நிலையில், யாரோ சிலர் செய்தனர் என்பதைக் காரணம் காட்டி கழகத்தின் கருத்துரிமைக்குத் தடை போடுவது சரியானதுதானா?

இந்தப் பிரச்சினையைக் கழகம் கைவிட்டுவிடாது; முறைப்படி சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுக்கூட்டம்மூலம் மக்களுக்கு உரிய முறையில் விழிப்புணர்வூட்டி, தொடர்ந்து பிராமணாள் பெயர் நீக்கப்படும்வரை கழகத்தின் அறப்போராட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்படுகிறது!

24-10-12

தமிழ் ஓவியா said...


மதிமயக்கம் என்பது இதுதானோ?


- ஊசி மிளகாய் -


தினமணி நாளேட்டின் கார்ட்டூனிஸ்ட் மதி அவர்கள் உளுந்தூர்பேட்டை அருகில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு கிளைபோல நடத்தப்பட்டு வருகிற ஸ்ரீ சாரதா ஆஸ்ரமத்தில் பேசும்போது பெரிய பெரிய தத்துவங்களையும், அருளுபதேசங் களையும் கூட உதிர்த்திருக்கிறார்! தினமணியில் (23.10.2012) படத்துடன் வெளிவந்துள்ளது.

தாய்மையின் பெருமையை இந்து மதம் எவ்வளவு உயர்த்தியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது என்று சிலாகித்திருக்கிறார் - கேலி சித்திரக்காரர்.

பெண்களைப் பாப யோனிகள் என்று வர்ணித்த பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்த மதம் எது மதி அவர்களே? கண்ணனின் கீதை தானே அதைச் சொல்லுகிறது?

அதுமட்டுமா? பாரதத்தில் இன்னும் எப்படி யெல்லாம் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதைப் படிக்கவேண்டாமா?

தாய்மையை ஹிந்து மதம் மதித்திருந்தால் அவதார புருஷன் இராமன் தனது மனைவியை தீக்குளிக்க வைத்திருப்பானா? இவன் கால் பட்டவுடன் கற்பைப் பறிகொடுத்த அகலிகைக்கு சாப விமோசனம் வரும்போது, இன்னொரு காலின்மூலம் எளிதில் சீதையை கற்பு திரும்பிய வராக சந்தேகத்திற்கு அப்பால் ஆக்கியிருக் கலாமே - நெருப்பில் குளித்துவரக் கட்டளை தேவையில்லையே!

நிறைமாத கர்ப்பணி சீதையை காட்டுக் கனுப்பிய இராமனைக் கடவுள் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் இராமாயணம் தானே இந்து மத இதிகாசம் எல்லாம்?

இதுமட்டும் பழைய காலத்தைவிட்டுத் தள்ளுங்கள் எங்கள் மாதாஜிக்களை பாருங்கள் என்று ஹிந்து மத இதோபதேசம் செய்யும் மதி மன்னர்களே!

இராஜஸ்தானத்தில் கணவன் இறந்தவுடன் 26 வயது கூட நிரம்பாத ரூப்கன்வார் எனும் பெண்ணை கணவனுடன் வலுக்கட்டாயமாகக் கட்டி, எரித்துக் கொன்று, தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கனவு காணும் பா.ஜ.க. ஆட்சியில் - சதிமாதா கோவில் கட்டி வழிபடும் ஸ்தலமாக்கியுள்ளார்களே, அதுதான் ஹிந்து மதம் தாய்மையைப் போற்றுவதற்கான அடையாளமா?

திருவிளையாடல் புராணத்தில் தன் தாயையே மனைவியாக அனுபவித்த (அருவருப்பான கதை) பார்ப்பனனுக்கு மோட்சம் கொடுத்த மாபாதகம் தீர்த்த படலம் பற்றி படித்துள்ளீர்களா?

அதையும் தாங்கள் ஓவியமாக்கலாமே! இன்னொரு கருத்திலும் சர்வமதவாதியாகத் தன்னைக் காட்டிக் கொள்ள முயன்றுள்ளார்.

கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர் சொன்னாராம், தமிழ் இறைமொழி; ஆங்கிலம் வர்த்தக மொழி என்று. இறைமொழியான தமிழ், வர்த்தக மொழியான ஆங்கிலம் இரண்டையும் நாம் புறக்கணித்துவிட முடியாது!

நாம் இறைவனிடம் தாய்மொழியான தமிழில் வேண்டுகிறோம். கீதையில் கிருஷ்ணன் கூறியதுபோல், கடமையைச் செய்யவேண்டும்; அதற்கான பலனை இறைவன் கொடுப்பான் என்று கூறுபவர்; கிருஷ்ணன் எந்தக் கடமையைச் செய்ய இப்படி உபதேசித்தான் என்பதை கீதையின் மறுபக்கம் புத்தகம் ஒன்றை வாங்கிப் படித்தால் புரியும்!

இறைமொழியாக தமிழில் கோவிலில் மந்திரங்கள் சொல்லக் கூடாது என்று கூறி உங்கள் தினமணி ஏட்டில் - 20.10.2012 (நான்கு நாள்களுக்கு முன்பு) கோவில்களில் தமிழ்; காந்திஜி கூறியதென்ன? என்று ஒரு கட்டு ரையை நடுப்பக்கத்தில் வெளியிட்டு, சமஸ் கிருதத்தில் மந்திரம் கோவில் வழிபாடு இருக்க வேண்டும்; தமிழ் வேண்டும் என்று கூறுவது கூடாது.

கோவில் பூஜைகள், குட முழுக்கு, வாழ்வியல் சடங்குகள் அனைத்தையும் தமிழ் மயமாக்கும் முயற்சியில் இப்போது ஆத்திகத் தமிழ்ப் பெருந்தகைகள் தமிழ் வழிபாட்டு வெற்றி விழா என்ற பெயரில் இறங்கியுள்ளனர்!

சங்ககாலத் தமிழ்ப் புலவர்களோ, சைவ சமயத் திருக்குரவர்கள் நால்வருமோ அல்லது வேறு யாருமோ வடமொழி வழிபாட்டை ஆட்சேபித்த தாகக் கூட தகவல்கள் இல்லை. பிற மாநிலங் களில் தாய்மொழி அபிமானிகளோ, மலை யாளிகளோ, கன்னடியர்களோ, தெலுங்கர்களோ கூட தாய்மொழியில்தான் வழிபாடு வேண்டும் என்று வாதாடவில்லை என்று கூறி, காந்திஜியைத் துணைக்கு அழைத்தனர். கோவில்களைப்பற்றி அவை விபச்சார விடுதிகள் என்று சொன்னவர் காந்தியார் என்பதை வசதியாக மறைத்துவிட்டு, அதை உங்கள் ஏடு மகிழ்ச்சி பொங்க - தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதை மறுத்து மகிழ்ந்ததைப்போல வெளியிட்டுள்ளது!

மதி அவர்களே, நீங்கள் தினமணியில் எந்தக் கட்சி? தமிழா, சமஸ்கிருதமா? அல்லது இறைவன் விட்ட வழியா?

மதியை மதிக்கலாம்; ஆனால், பரிதாபத்திற் குரிய மதியின் மதி, மதிக்கக் கூடிய நிலையில் இல்லையே!

அந்தோ பரிதாபம்!!

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


சரிதானா!

செய்தி: தண்ணீர் இல்லாத கழிவறைகளால் திரு நீர்மலை பக்தர்கள் தவிப்பு. சிந்தனை: கோயில்கள் முக்கியமல்ல; கழிவறை தான் முக்கியம் என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சொன்னது சரிதானே!

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நினைவுச்சின்னமா? தாய்த்தமிழகம் பதைக்கிறதே!


-தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை



சென்னை, அக்.24-ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்காக இலங்கை சிங்கள அரசு நினைவுச்சின்னம் எழுப்புவதா? என்ற வினாவை எழுப்பிய தி.மு.கதலைவர் கலைஞர் அவர்கள் இதுகண்டு தாய்த்தமிழகம் பதைக்கிறது என்ற வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து இன்றைய முரசொலியில் தாய்த்தமிழ கத்தின் தவிப்பு எனும் தலைப்பில் எழுதியுள்ள தாவது:

இலங்கையிலே தமிழர்கள் பல ஆண்டுகளாகப் படுகின்ற எல்லையில்லாத - எண்ணற்ற துயரங்கள் குறித்து, நம்மைப் பற்றி யார் குறை சொன்ன போதி லும், மற்றவர்களின் பாராட்டுக்காக நாம் காத்திருக் காமல், என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வகையில், 1956ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலே இருந் தாலும், இல்லாவிட்டாலும், தொடர்ந்து நம்மால் முடிந்த அளவிற்கு குரல் கொடுத்து வருகிறோம் என்பதை உண்மையை நேசிப்பவர்கள் உணர்ந்தே இருப்பார்கள்.

நமது பல்வேறு கோரிக்கைகளுக்கு இந்திய அரசு உதவிட முன் வருவதாக உறுதி கூறிய போதிலும், உலக நாடுகளின் மத்தியில் நடுநிலை நாடுகளில் ஒன்று இந்தியா என்ற பெயரைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவாவது, சிலவற்றில் விட்டுக் கொடுத்துப் போகிறதோ இந்திய அரசு என்று சிலர் சந்தேகம் கொள்ளக் கூடிய அளவிலே தான் செயல்படுகிறது. உதாரணமாக இலங்கைத் தமிழர்களைக் கொல் வதற்குக் காரணமாக இருக்கும் இலங்கை ராணு வத்தினருக்கு இந்தியாவிலே பயிற்சி அளிக்கக் கூடாது என்பதுதான் தமிழகத்திலே உணர்வுள்ள தமிழர்களின் கோரிக்கை, வேண்டுகோள். அந்த வேண்டுகோளை இந்திய அரசிடம் நாம் பல முறை விடுத்துள்ளோம்.

தமிழ் ஓவியா said...

சிங்கள அரசின் அமைச்சரே சவால் விடுகிறார்! ஆனால் சிங்கள அரசின் அமைச்சரே நம்மிடம் சவால் விடுகின்ற அளவிற்கு, இலங்கை ராணுவத் திற்கு இந்தியாவிலே பயிற்சி அளிக்கச் செய்தே தீருவோம், முடிந்தால் தமிழகத்திலே உள்ளவர்கள் தடுத்துப் பார்க்கட்டும் என்கிறார். இந்திய அரசும் சிங்கள அமைச்சருக்கு நேரடியாகப் பதில் சொல்ல முன் வரவில்லை. இந்தியாவிலே இலங்கை ராணு வத்திற்கு பயிற்சி அளிக்க மாட்டோம் என்று இந்திய அரசின் சார்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்க அவர்களால் இயலவில்லை. இலங்கையில் படு கொலைக்கு ஆளான பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களும், இந்தியர்கள்தான் என்று ஏற்றுக் கொள்ள இந்திய அரசு இன்னமும் தயாராக இல்லைபோலும்!

இந்தியாவின் சலுகைகளைப் பெற்றுக் கொள் ளும் சிங்கள அரசு, மறைமுகமாகவோ அல்லது தெரிந்தும் தெரியாமலோ சீனாவின் உதவியை, பாகிஸ்தானின் துணையை தொடர்ந்து பெற்றுக் கொண்டுதான் உள்ளது. எந்த அளவிற்குச் சிங்கள அரசு இலங்கைத் தமிழர்களுக்கு விரோதமாகச் செயல்படுகிறது என்பதற்கு மற்றுமோர் எடுத்துக் காட்டாக 22-10-2012 இந்து நாளிதழில் முதல் பக்கத்தில் ஒரு கட்டுரையை பிரபல பத்திரிகை யாளர்கள் நிருபமா சுப்ரமணியனும், ஆர்.கே. ராதாகிருஷ்ணனும் எழுதியிருக்கிறார்கள். அந்தக் கட்டுரைக்கான தலைப்பே, விடுதலைப் புலிகள் இறுதியாக போரிட்ட இடத்திற்கு அருகிலேயே - தமிழர்களை வெறுப்பேற்றும் வகையில் அமைக்கப் பட்டுள்ள வெற்றி நினைவுச் சின்னம் என்பதாகும். அதிலே உள்ள சில செய்திகள் வருமாறு :-

அப்பாவி தமிழர்கள் படுகொலை

இலங்கையில் வடக்குப் பகுதியின் மையத்தில் - 2009ஆம் ஆண்டு நடந்த உச்சக்கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படு கொலை செய்யப்பட்ட ரத்தம் தோய்ந்த பூமிக்கு அருகில் - அந்தப் போரில் இலங்கை அரசு பெற்ற வெற்றியை உணர்த்திடும் வகையில் ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள் ளது. 2009ஆம்ஆண்டு போரின் போதுகொடு மையான நிகழ்ச்சிகள் நடந்த இடத்தில் கருங்கல் குன்று ஒன்றின் மீது இலங்கை ராணுவத்தின் ராணுவ வீரர் ஒருவர் முகத்தில் பெருமகிழ்ச்சியோடும், பெரு மிதத்தோடும் ஒரு கையில் துப்பாக்கி ஏந்தியபடி - மற்றொரு கையில் இலங்கையின் தேசியக் கொடியை ஏந்தியபடி சிலை ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தின் ஒவ்வொரு மூலையிலும் கருங் கல்லால் செதுக்கப்பட்ட இலங்கை அரசின் தேசிய விலங்கான சிங்கம் நிறுவப்பட்டுள்ளது. இந்தப் போர் நினைவுச் சின்னத்திற்கு அருகில், போர் அருங் காட்சியகம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் பார்ப்பதற்காக சிங்களச் சுற்றுலா பயணியர் நாள்தோறும் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். போர் அருங்காட்சி யகத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றிய துப் பாக்கி உள்ளிட்ட போர் ஆயுதங்கள், படகுகள் போன்றவை காட்சிப் பொருள்களாக வைக்கப் பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபா கரன் தங்கியிருந்த மறைவிடமும், கடல் புலிகள் பயிற்சிக்காகப் பயன்படுத்திய நீச்சல் குளமும் காட்சிப் பொருள்களாக ஆகியிருக்கின்றன. நீர் மூழ்கிக் கப்பல்கள், விடுதலைப் புலிகள் கைப்பற்றிய ஜோர்டான் நாட்டுக் கப்பல் போன்றவையும் அங்கே காட்சி அளிக்கின்றன.

படுகொலைக்கு நினைவுச் சின்னமா?

புதுக்குடியிருப்பு சந்திப்பிலிருந்தே போர் நினைவுச் சின்னத்திற்கு போவதற்கு ராணுவத்தினர் தாங்களே பயணிகளை வழிகாட்டி அழைத்துச் செல்கின்றனர். இந்தச் சந்திப்பிலிருந்து 4.5 கிலோ மீட்டர் தொலைவில் முல்லைத் தீவுக்குச் செல்லும் சாலையில், போர் அருங்காட்சியகத்தைப் பற்றிய அறிவிப்புப் பலகை ஒன்றும் அமைக்கப்பட்டுள் ளது. அந்த நினைவுச் சின்னத்திற்கும், போர் அருங் காட்சியகத்திற்கும் சென்றால், சிங்கள ராணுவ வீரர்களே ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கத்தையும், பின்னணியையும் சிங்கள மொழியிலே விவரிக் கிறார்கள். சில காட்சிப் பொருள்கள், ஒரு கூடத் திலும்; சில பொருள்கள் ஓர் அறையிலும்; மற்றவை திறந்தவெளியிலும்வைக்கப்பட்டுள்ளதாம். நினைவுச்சின்னத்திற்கு அருகில் உள்ள பெட்டிக் கடையை நடத்தும் சிங்கள ராணுவ வீரர் ஒருவர், நாள்தோறும் 500 முதல் 700 பேர் அங்கு வருவ தாகவும், வார இறுதியில் 2000 பேர் வருவதாகவும் தெரிவித்தார். 250 கிலோ மீட்டர் தொலைவி லிருந்து நினைவுச் சின்னத்தைப் பார்க்க வந்திருந்த சிங்களக் கல்லூரி மாணவர் ஒருவர், எங்களுடைய ராணுவத்தைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள் கிறோம். அதனாலே தான் நாங்கள் இங்கு வந்தி ருக்கிறோம் என்றாராம்.

தமிழ் ஓவியா said...

போர் நினைவு சின்னத்திலிருந்து முல்லைத் தீவு வரையில் உள்ள சாலையின் இருமருங்கிலும் போரின் காரணமாக இடம் பெயர்ந்த தமிழர்கள் அவசரம் அவசரமாக விட்டுச் சென்ற துணிமணிகள், பாத்திரப் பண்டங்கள் போன்ற அனைத்தும் கீழே தாறுமாறாக இன்னமும் இறைந்து கிடக்கின்றன வாம். இந்தப் போர் நினைவுச் சின்னம் தமிழர் களின் கண்களில் விரலை விட்டுக் குத்துகின்ற அளவில் வேண்டுமென்றே திட்டமிட்டு அமைக்கப் பட்டுள்ளதாம். இப்படிச் சொன்னவர், போரின் போது பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ்க் குடும் பத்தைச் சேர்ந்தவர். அவர் தன்னுடைய தந்தையை சிறையிலிருந்து விடுவிப்பதற்கு நிறைய பணத்தைச் செலவு செய்ய வேண்டியிருந்ததாம். எவ்வளவோ தியாகங்களைச் செய்தும் கூட, தமிழர்களாகிய நாங்கள் எங்கிருக்கிறோம் என்றே தெரியாத நிலை யில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று அவர் கண்ணீரோடு புலம்பினார்.
இலங்கையின் நாகரிகமற்ற செயல்

போரில் பலியாகி, அழிந்து போன அப்பாவித் தமிழர்களுக்கு எந்த நினைவுச் சின்னமும் அங்கே கிடையாது. ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர் கள் போரின் போது கொல்லப்பட்டதையே இலங்கை அரசு ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. போர் நினைவுச் சின்னமும், போர் அருங்காட்சி யகமும் இலங்கை அரசின் நாகரிகமற்ற செயல். இலங்கை அரசு மேற்கொண்டு வருவதாகச் சொல்லிக் கொள்ளும் சமாதான முயற்சிக்கு, இந்தச் சின்னங்கள் எந்த வகையிலும் உதவிகரமாக இல்லை. இலங்கையின் வடக்குப் பகுதியில் சிங்கள ராணுவம் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் இன்னமும் இருந்து வருகிறது என்பதற்கு அடை யாளம்தான், இந்தப் போர் நினைவுச் சின்னமும், அருங்காட்சியகமும் ஆகும். இது கண்டு போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்கள் அனைவரும் பெரும் துயரத் தில் ஆழ்ந்துள்ளார்கள். இலங்கை ராணுவத்தின் 19 பிரிவுகளில், 14 பிரிவுகள் வடக்குப் பகுதியில் மட் டும் இருந்து வருகின்றன.

ராணுவ முகாம்கள் அனைத்தும் கண்டோன்மென்ட் பகுதிகளாக மாற்றப்பட்டு அங்கே ராணுவ வீரர்கள் தமது குடும்பங்களோடு குடியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழர்கள் வாழ்ந்து வரும் பகுதிகள் இப்படி சிங்களர்களின் ஆக்கிர மிப்புக்கு உள்ளாவது கண்டு, தமிழர்கள் கவலை மிகக்கொண்டு கண்ணீர் சிந்துகின்றனர். புதுக்குடி யிருப்பு - முல்லைத் தீவு - ஏ.9 நெடுஞ்சாலை போன்ற வற்றில் காணப்படுவதைப் போல இலங்கை ராணு வத்தின் நடமாட்டம் யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் வெளிப்படையாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் பலாளி விமான தளத்திற்கு அருகிலே உள்ள கடும் கண்காணிப்புப் பகுதிக்கு இடம் பெயர வைக்கப்பட்டுள்ளார்கள். அகதிகள் முகாம்களில் வாடிக் கொண்டிருக்கும் இந்தத் தமிழர்கள் என்றாவது ஒரு நாள் தங்க ளுடைய சொந்த இடத்திற்குத் திரும்ப மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்க ளுக்குச் சொந்தமான நிலங்களில் இலங்கை ராணு வத்தினர் விவசாயம் செய்து காய்கறிகள் போன்ற வற்றை விளைவித்து, பலனடைந்து பரவசப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துத் தமிழர்கள் குமுறுகின்றனர்.

தமிழ் ஓவியா said...

புதிய புத்த விகாரங்கள்!

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்குச் செல்லப் பயன்படும் ஏ.9 நெடுஞ்சாலை முழுதும் புத்தவிகாரங்கள் புதியதாக முளைத்திருக்கின்றன. இலங்கை ராணுவத்தினரால் நடத்தப்படும் ஓட்டல் களும், கடைகளும் வழிநெடுகத் தோன்றியி ருக்கின்றன. உடன்பிறப்பே, எந்த அளவிற்கு ராஜ பக்ஷே தலைமையிலான இலங்கை அரசு, இன்ன மும் தமிழர்களை அவமானப்படுத்தி அடக்குவது என்ற எண்ணத்தோடு; விடுதலைப்புலிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து முப்பதாண்டுகளுக்கு மேலாக போரிட்ட இடத்திலே - அப்பாவித் தமிழர்கள் கால்நடைகளைப் போல வேட்டை யாடப்பட்ட இடத்திலே - தங்கள் வெற்றியை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்ற அளவிற்கு நினைவுச் சின்னம் அமைத்து, அவற்றை அன்றாடம் நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் வந்து பார்த்துப் பரவசப்படுகிறார்கள் என்பதையெல்லாம் படிக்கும் போதே நம்முடைய நெஞ்சம் பதறுகிறது என்றால், அந்தக் கொடுமையை அங்கே அன்றாடம் காணுகின்ற ஈழத் தமிழர்களின் மனம் என்ன பாடுபடும்? இப்படிப்பட்ட செயல்கள் எல்லாம் அங்கேயுள்ள தமிழர்களை ஒற்றுமைப் படுத்தி வாழச் செய்யும் முயற்சிகள்தானா? உலக நாடுகள் ஒருபோதும் அங்கீகரிக்க ஒப்புக் கொள்ள முடியாத போர்க் குற்றங்கள் அனைத் தையும் மனசாட்சி உறுத்தல் சிறிதுமின்றிப் புரிந்து விட்டு; அய்.நா. போன்ற சர்வதேச மன்றங்கள் கொஞ்சங்கூடச் சகித்துக் கொள்ளவியலாத மனித உரிமை மீறல்களை எல்லையில்லாத அளவுக்குச் செய்து விட்டு; மனித மனமோ - மனித நேயமோ சிறுதுளியுமின்றி மிகப் பெரிய இனப் படு கொலையை நிறைவேற்றிவிட்டு; பல்லாயிரக் கணக்கான தமிழ் இளம் பெண்டிரை விதவை யராக்கி விட்டு; நீண்ட நெடிய வரலாறும், பண் பாட்டுப் பாரம்பரியமும் கொண்ட தமிழ் தேசிய இனத்தை தரணியெங்கும் தெருக்களிலே அலைய வைத்து விட்டு; போரில் வெற்றி பெற்று விட்ட தாகக் கருதிக் கொண்டு, போலிப் பூரிப்போடு, போர் நினைவுச் சின்னம் எழுப்பியிருக்கிறது சிங்களப் பேரினவாதம்!

உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் நெருப்பைக் கொட்டுவதா?

ஈழத் தமிழர்களின் தியாக பூமியில் சிங்களர்கள் எழுப்பியுள்ள இந்த நினைவுச் சின்னம், உலகத் தமிழர்களின் நெஞ்சங்களிலெல்லாம் நெருப்பைக் கொட்டும் என்று தெரிந்தே, வேண்டுமென்றே அவர்களின் உள்ளங்களையெல்லாம் நோகச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு இந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது என்பது தான் உண்மை. இலங்கையிலே ஒற்றுமையும் அமைதியும் ஏற்பட வேண்டுமென்று பெரிதும் விரும்புகின்ற அய்.நா. மன்றம் போன்ற சர்வதேச நிறுவனங்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கடந்த மாதம் நாம் நடத்திய டெசோ மாநாட்டிலே இந்தக் கருத்து களை யெல்லாம் உள்ளடக்கித்தான் பதினான்கு தீர்மானங்களை நிறைவேற்றினோம்.

தாய்த் தமிழகத்தின் தவிப்பு! நமது டெசோ மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானங்களைத் தான் இந்த மாதக் கடைசியிலே நமது கழகப் பொரு ளாளர் தம்பி மு.க. ஸ்டாலினும், நாடாளுமன்றக் கழகக் குழுவின் தலைவர் தம்பி டி.ஆர்.பாலுவும் எடுத்துச் சென்று அய்.நா. சபையிலே ஒப்படைக்க விருக்கிறார்கள். இதற்குப் பிறகாவது, இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்காதா, அவர் களின் நல்வாழ்வுக்காக நாளும் நாளும் ஏங்கிக் கொண்டிருக்கும் உலகத் தமிழர்களின் துயரம் நீங்காதா என்ற ஏக்கத்தோடு தான் தாய்த்தமிழகம் தவித்துக் கொண்டிருக்கின்றது!

அன்புள்ள,
மு.க 24-10-2012

தமிழ் ஓவியா said...

மிழ்நாடு முதல் அமைச்சரின் முக்கிய கவனத்துக்கு சிறீரங்கத்தில் திடீர் "பிராமணாள் ஓட்டல்!"


தமிழர் தலைவர் அறிக்கை

சிறீரங்கத்தில் உணவு விடுதி ஒன்றில் திடீரென்று பிராமணாள் பெயர் முளைத் திருப்பது குறித்து முதல் அமைச்சருக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுக்கும் வேண்டுகோள் வருமாறு:

தந்தை பெரியார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் உள்ளிட்ட திராவிடர் இயக்கம் அடிப்படையில் வருணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொள்ளாத தாகும். ஜாதி ஒழிப்பை முக்கிய கொள்கையாகக் கொண்ட இயக்கமாகும்.

எத்தனையோ போராட்டங்கள்!

அதற்காக எத்தனை எத்தனையோ போராட்டங்கள்! இந்திய அரசமைப்புச் சட்டத்தைக்கூட கொளுத்தும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்து, 10 ஆயிரம் தொண்டர்கள் ஈடுபட்டனர். மூவாயிரம் கருஞ்சட்டையினர் மூன்றாண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர்; சிறைச்சாலையில் பலரும் மாண்டதுண்டு.

ஒரு காலகட்டத்தில் சென்னை நகர உணவு விடுதிகளில் பஞ்சமர்களும், நாய்களும், பெரு நோய்க் காரர்களும் நுழையக் கூடாது என்று பார்ப்பனர்கள் நடத்திய உணவு விடுதியில் விளம்பரம் செய்யப்பட்ட துண்டு (குடிஅரசு 3.5.1936).

தந்தை பெரியார் அவர்களின் பிரச்சாரத்தாலும், திராவிடர் இயக்கமாகிய நீதிக்கட்சி ஆட்சியாலும் அது ஒழிக்கப்பட்டது.

ரயில்வே உணவு விடுதியில் பிராமணாள் - சூத்திராள் பேதம்

ரயில் நிலைய உணவு விடுதிகளில் பச்சையாக பிராமணாள் - இதராள் என்று போர்டு போட்டிருந்த நிலையும் உண்டு. மேட்டுப்பாளையம் ரயில்வே உணவு விடுதியில் ஒருபடி மேலே சென்று, சூத்திரர்களுக்கு என்று வெளிப்படையாக எழுதப்பட்டு இடமும் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து விடுதலையில் (27.1.1941) இந்திய கவர்ன்மென்ட் கவனிப்பார்களா? என்று தலைப்பிட்டு தந்தை பெரியார் தலையங்கம் தீட்டினார்.

வெள்ளைக்கார அரசு தந்தை பெரியார் அவர்களின் கோரிக்கையில் இருந்த நியாயத்தை உணர்ந்து, அந்தப் பேதத்தை ஒழித்து உத்தரவிட்டது (8.2.1941).

ரயில்வே நிலையங்களில் இருந்த எல்லா உணவு விடுதிகளிலும் 20.3.1941 முதல் பிராமணாள் - சூத்திராள் பேதம் ஒழிக்கப்பட்டது. அதற்காக ரயில்வே உணவு விடுதிகளில் பேதம் ஒழிந்த நாளாக ஒரு நாளே கொண்டாடப்பட்டது. தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் அத்தகைய விழாவில் சேலத்தில் கலந்து கொண்டனர் (30.3.1941).

1957இல் தந்தை பெரியார் அறிவித்து நடத்திய போராட்டம்!

இன்னொரு கால கட்டத்தில் 1957இல் தந்தை பெரியார் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். உணவு விடுதி களில் பெயர்ப் பலகைகளில் பிராமணாள் என்று இருந்த பெயரை நீக்கக் கோரும் அறிவிப்பு அது (27.4.1957).

பலர் தாங்களாகவே நீக்கிக் கொண்டனர். சில இடங்களில் தார் கொண்டு அழிக்கப்பட்டது. சென்னை யில் திருவல்லிக்கேணி பகுதியில் முரளீஸ் கபே முரளி பிராமணாள் கபே உரிமையாளர் மட்டும் நீக்க மறுத்தார்!

தமிழ் ஓவியா said...

முரளீஸ் கஃபே

தந்தை பெரியார் வன்முறைக்கு இடம் அளிக்காமல் நாள்தோறும் தோழர்களைக் கொண்டு மறியல் போராட்டத்தை நடத்தச் செய்தார். தொடர்ந்து எட்டு மாத காலம் நடந்தது. 1010 திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையும் சென்றனர். பிறகு வேறு வழியின்றி அந்த உணவு விடுதி உரிமையாளர் தந்தை பெரியாரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு பிராமணாள் பெயரையும் அகற்றிக் கொண்டார் (22.3.1958). அய்டியல் கபே என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது!

1970-லும் பெரியார் அறிவிப்பு!

மீண்டும் சிற்சில இடங்களில் உணவு விடுதிகளில் பிராமணாள் பெயர் தலை தூக்கியபோது, 1970இல் மீண்டும் பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டத்தை அறிவித்தார் தந்தை பெரியார். போராட்டத்துக்கு வேலை யின்றியே அவரவர்களும் பெயர்களை நீக்கிவிட்டனர்.

1978இல் ஓட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எழுதிய கடிதம்

1978ஆம் ஆண்டிலும் போராட்டத்திற்கு வேலை ஏற்பட்டது. ஓட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் திரு எம்.பி. புருஷோத்தமன் அவர்களுக்கு இதுகுறித்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் என்கிற முறையில் கடிதம் எழுதினேன் (20.9.1978).

தமிழ் ஓவியா said...


இரண்டே நாட்களில் (22.9.1978) அவரிடமிருந்து பதில் கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் அவர் எழுதியிருந்த தாவது:

பேரன்புடையீர்,

வணக்கம். தங்களுடைய 20.9.1978 தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றோம். அதில் குறிப்பிட்டபடி உணவு விடுதிகள் பிராமணாள் என்ற சொல்லை வியாபார ரீதியாக சுத்த சைவமான (Pure Vegetarian) உணவு விடுதி என்று பொது மக்களுக்குத் தெரிவதற்காக உபயோகிக்கப்பட்டு வந்து இருக்கிறது. உயர் ஜாதித் தன்மையைக் குறிக்கும் நோக்கத்துடன் போர்டுகள் எழுதப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்பு கிறோம்.

மேலும் தற்கால ஜாதி சமயமற்ற சமதாய நோக்கோடு பெரும்பாலான உணவு விடுதிகள் பிராமணாள் என்ற சொல்லை தாங்களாகவே நீக்கி இருக்கிறார்கள்.

தற்போது பிராமணாள் என்ற வார்த்தை அடங்கிய பெயர்ப் பலகை கொண்ட உணவு விடுதிகளைக் காண்பது மிக மிக அரிது. தங்களின் கடிதத்தையொட்டி எங்கள் சங்கம் ஒரு சுற்றறிக்கையில் எந்த உணவு விடுதியிலாவது பிராமணாள் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கு மானால், தற்கால நிலைமைக்கு ஏற்ப அந்தச் சொல்லை நீக்குமாறு கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.

இவ்விஷயத்தில் எங்கள் சங்கத்தின் முழு ஒத்து ழைப்பை தரத் தயாராக இருக்கிறோம் என்று தமிழ்நாடு ஓட்டல் சங்கத் தலைவர் திரு எம்.பி. புருசோத்தமன் அவர்கள் எழுதிய கடிதம் 24.9.1978 நாளிட்ட விடுதலையில் முதல் பக்கத்தில் வெளியிடவும் பட்டது.

ஒரு நீண்ட வரலாறுண்டு

இந்தப் பிராமணாள் எதிர்ப்பு - எழுத்து அழிப்பு என்பதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இதனை இப் பொழுது விளக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பது முக்கியமாகும்.

சிறீரங்கத்தில் திடீர் பிராமணாள்!

தாங்கள் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள சிறீரங்கத்தில் பழைய பேருந்து நிலையத்தின் அருகில் திரு. கிருஷ்ண அய்யர் என்பவர் நடத்தும் உணவு விடுதியில் திடீரென்று பிராமணாள் பெயர் முளைத்திருக்கிறது.

திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் தலைமைக் கழகத்திற்குத் தெரிவித்ததன் பேரில், உரிமையாளரை நேரில் அணுகிக் கேட்டுக் கொள்ளுங்கள். எடுக்க மறுக்கும் பட்சத்தில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்பற்றி அறிவிக்கலாம் என்று கூறியி ருந்தோம்.

காவி அமைப்புகளின் துணையோடு...

அதுபோன்றே திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் நேரில் கேட்டுக் கொண்டதற்கு உணவு விடுதி உரிமை யாளர் பிடிவாதமாக பிராமணாள் பெயரை நீக்க மறுத்துவிட்டார். சில காவி அமைப்புகள் அவருக்கு உற்சாகத்தை ஊட்டிக் கொண்டு இருப்பதாகத் தெரிய வருகிறது. இந்தப் பிரச்சினையில் முதல் அமைச்சராகிய தங்களின் பெயர்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் தெரிய வந்தது.

2012-லும் பிராமணாளா?

2012ஆம் ஆண்டிலும் பிராமணாள் - சூத்திராள் பேதத்தை நினைவூட்டி வலியுறுத்தும் போக்குகள் தேவைதானா?

திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி யுள்ளோம். (13.10.2012).

தாங்கள் தலையிடுக!

முதல் அமைச்சர் என்பதைவிட, தங்களின் தொகுதி என்ற முன்னுரிமையில் தாங்கள் தலையிட்டு, இந்தப் பிரச்சினையில் சுமுக சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். முயற்சிப்பீர்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். அதன் மூலம் எங்கள் போராட்டத் திற்கும் அவசியம் இல்லாத ஒரு நிலை ஏற்படக் கூடும்.

சில வாரங்களுக்கு முன்பு திருச்சி உறையூரில் இதுபோல பிராமணாள் ஓட்டல் என்று இருந்ததை, எங்கள் கழகத் தோழர்கள் கேட்டுகொண்டதன் பேரில், பிராமணாள் பெயரை நீக்கிவிட்டனர் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

சட்டம், ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல; தந்தை பெரியார் முன்பு கையாண்ட வழிமுறைப்படி அறப்போராட்டம் நடத்துவது தவிர்க்க இயலாதது என்பதைத் தங்களுக்கு தெரியப் படுத்திக் கொள்ளுகிறோம்.

வரும் 28ஆம் தேதி சிறீரங்கத்தில் திராவிடர் கழகத் தின் சார்பில் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் நான் கலந்துகொள்ள இருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்கள்,

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
19.10.2012