Search This Blog

1.10.12

பள்ளிகளில் சர்வ சமய வழிபாடா?
தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அரசாணையினை கல்விக் கூடங்களுக்கு அனுப்பி உள்ளார். (தனியே காண்க)

இப்படி ஓர் ஆணைக்கு அவசியம் என்ன? சர்வ சமய வழிபாடு என்ற ஒன்று சரியானது தானா? அப்படி ஒரு திட்டம் அவசியமானது தானா?

இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதன் பின்னணி என்ன? முதல் அமைச்சர் அல்லது வேறு அமைச்சர் யாராவது இப்படி ஓர் ஆணையைப் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினரா?

சமயவழிபாடு கட்டாயம் என்றால், எந்தச் சமயத்தையும் சாராத பிள்ளைகளின் நிலை என்ன?

சமய நம்பிக்கையுள்ள மாணவன் அல்லது மாணவிதான் பள்ளிக்கூடம் செல்லவேண்டுமா?

இந்த நம்பிக்கை இல்லாதவர்களின் வீட்டுப் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லக்கூடாதா?

மதச் சார்பற்ற ஓர் அரசின் இத்தகு ஆணை சட்டப்படி சரியானதுதானா?

சர்வசமய வழிபாட்டின் மூலம்தான் ஒழுக்கத்தைக் கற்பிக்க முடியுமா?

பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது அறிவைக் கூர்மைப்படுத்துவற்கா அல்லது மழுங்கச் செய்வதற்கா?

இந்திய அரசமைப்புச் சாசனம் 51 -கி(லீ) விஞ்ஞான ரீதியான சிந்தனை, அணுகுமுறை, மனிதாபிமானம்,  ஆய்வு, சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப் பது காப்பாற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று சொல்லவில்லையா?

அதற்கு மாறாக சர்வசமய பிரார்த்தனை நடத்துவது சட்டத்தையே அவமதிப்பதாக ஆகாதா?

இந்திய அரசமைப்புச் சாசனத்தில் கூறப்பட் டுள்ள மேற்கண்ட கடமைக்காக எந்த செயல் திட்டம் கல்வித் துறையிடம் உள்ளது?

தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த ஆணையின் கர்த்தா யார்?

இதில் காவிகளின் - ஆர்.எஸ்.எஸ்.சின் ஊடுரு வல் ஏதாவது இருக்கிறதா?

இது குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும். தன்னிச்சையாகச் செயல்பட்டிருந்தால் அவர்கள் மீதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த ஆணை உடனடியாக விலக்கிக் கொள்ளப் படவும் வேண்டும்.

இல்லையென்றால் பகுத்தறிவாளர்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்படும்!

எச்சரிக்கை!  எச்சரிக்கை!!


(குறிப்பு: யோகா பயிற்சி என்ற பெயரால் கடைப் பிடிக்கப்படும் மூடநம்பிக்கைகளும் கைவிடப்பட வேண்டும்.).

தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அரசாணை

சுருக்கம்

பள்ளிக் கல்வித்துறை- அனைத்து வகை அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளிகள், மாநகராட்சி, மெட்ரிக், ஆங்கிலோ- இந்தியன் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2012-2013ஆம் கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவப் பாடநூல் முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையும் நடைமுறைப்படுத்தி ஆணை வெளியிடப்பட்டது திட்டங்கள் சிறப்பாக அமைய பள்ளி நடைமுறையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளல் ஆணை வெளியிடப் பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் (இ1) துறை

அரசாணை (1டி) எண்.264    நாள்:06.07.2012 படிக்கப்பட்டது:

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநரின், கடித ந.க.எண்.796/ஈ2/2012 நாள் 16.05.2012.
---------
ஆணை:

2012- 2013 ஆம் கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பு எட்டாம் வகுப்பு வரை முப்பருவப் பாடநூல் முறையையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையையும் நடைமுறைப் படுத்த ஆணையிடப்பட்டுள்ளது எனவும், இத்திட்டத்தின் முதன்மையான நோக்கம் மாணவர்களுக்குப் புத்தகச் சுமை, பாடச் சுமையைக் குறைத்து, மன அழுத்தமின்றிப் பாடங்களை மனப் பாடம் செய்யாமல், செயல்பாடுகள் வாயிலாகப் புரிந்து கொண்டு கற்பித்தல் ஆகும் என்றும், இம்முறைமூலம் மாணவர்கள் அறிவை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, மாணவர்களின் அனைத்துத் திறன்களையும் முழுமையாக வெளிக்கொணர்ந்து நல்ல பண்புகளை உடைய ஆளுமைத் திறன் பெற்றவர்களாக உருவாக்க இயலும் என்றும் தெரிவித்து, மேற்கண்ட நோக்கங்கள் முழுமை யாகவும், சிறப்பாகவும் அமைய, பள்ளி நடைமுறையில் சில மாற்றங்களை மேற்கொள்வது குறித்து ஆணை வெளியிடுமாறு மேலே படிக்கப்பட்ட கடிதத்தில்  மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அரசிடம் வேண்டியுள்ளார்.

2) மேற்காணும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநரின் கருத்துருவினை நன்கு பரிசீலிக்கப்பட்டு பின்வருமாறு அரசு ஆணையிடுகிறது.

அனைத்து பள்ளிகளிலும் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் கீழ்வரும் செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று பொது காலை வழிபாட்டுக் கூட்டமும் மற்ற நாட்களில் அது வகுப்பறை நிகழ்வாகவும் அனைத்து மாணவர்களும் சுழற்சி முறை யிலும் அமைக்குமாறும், சான்றாகப் பட்டியலில் உள்ள நிகழ்வான தமிழ்த்தாய் வாழ்த்தை ஒவ்வொரு மாணவனும் தன்முறை வரும்போது பாட வேண்டும். இச்செயல்பாடுகளை மேற்கொள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள கையேட்டினைப் பள்ளிகள் பின்பற்றுதல் வேண்டும்.* வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை மட்டும் செயல்படுத் தப்பட வேண்டும் மற்ற நாள்களில் செயல்படுத்த தேவையில்லை.
தியானம் 5 நிமிடம்

(i)  மதிய உணவு இடைவேளைக்கு 30 நிமிடத்திற்கு முன்னதாக

எளிய யோகா பயிற்சி - 15 நிமிடங்கள்.

அடுத்த 15 நிமிடங்களில் கையேட்டில் உள்ளவாறு பின்வரும் பாட இணைச் செயல்பாடுகளை மேற்கொள்ளப்பட வேண்டும்.

1. விழுமக் கல்வி

2. உடல் நலக்கல்வி

3. கலைக்கல்வி

4.    பணி அனுபம்

5.    சுற்றுச்சூழல் கல்வி

6.    முதல் உதவி மற்றும் தற்காப்பு விதிகள்

(ii)  மதிய உணவு இடைவேளைக்குப் பின்

1. வாய்ப்பாட்டை செலுத்துல்.

2.    ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரண்டு இரண்டு சொற்களை சொல்வதை எழுதச் சொல்லுதல்.

3.    ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரண்டு இரண்டு சொற்களை சொல்வதை எழுதச் சொல்லுதல், வாக்கியமாக அமைத்தல்...

ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை யன்று இறுதி ஒரு மணி நேரம்.

(III) மாணவர்களின் பன்முகத் திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், நடித்தல், ஆடுதல், பாடுதல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு கூறுதல், பொன்மொழிகள் கூறுதல், பழமொழிகள் கூறுதல், படைப்பாற் றல் போன்ற செயல்பாடுகளை ஒவ் வொரு மாணவரும் மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3) மேற்கூறிய செயல்பாடுகளை, அனைத்து வகை அரசு மேல் நிலை, உயர் நிலை, நடுநிலை, மற்றும் தொடக்கப் பள்ளிகள், மாநகராட்சி, மெட்ரிக், ஆங்கிலே - இந்தியன் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முழுமையாக செயல்படுத்திட இவ்வாணையினை சுற்றறிக்கையாக அனுப்புமாறு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

(ஆளுநரின் ஆணைப்படி)

த.சபிதா
அரசு முதன்மைச் செயலாளர்

பெறுநர்:

மாநில கல்வியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர், சென்னை-6

பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை -6

தொடக்கக் கல்வி இயக்குநர்,  சென்னை -6

மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர், சென்னை - 6

நகல்:

மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சரின் நேர்முக உதவியாளர், சென்னை -9

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சென்னை - 9 பிற்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சென்னை - 9.

//ஆணைப்படி அனுப்பப்படுகிறது//
பிரிவு அலுவலர்----------------- மின்சாரம் அவர்கள் 29-9-2012”விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை54 comments:

தமிழ் ஓவியா said...

நாடாளுமன்ற குழுவும் நமது கோரிக்கையும்

பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான பி.பி. மண்டல் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் வரவேற்று, கோரிக்கைகளை முன் வைத்தது போலவே, பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளுமன்றக் குழுவினை - திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சந்தித்து (29-9-2012 மாலை) முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித் துள்ளார்.

சமூக நீதிக்கான வரலாற்றில் இந்த நிகழ்வு ஒரு மைல் கல்லாக போற்றப்படும் என்பதில் அய்யமில்லை.

1950 ஜனவரி 26 இல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டப்படியே தாழ்த்தப்பட்ட வர்களுக்கு அளிக்கப்பட்டது போலவே பிற்படுத்தப் பட்டோருக்கும் இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

ஆளும் வர்க்கம், நிர்வாகம் பெரும்பாலும் பார்ப்பனர்களின் கரங்களில் பத்திரமாக இருந்த தால், தாழ்த்தப்பட்டவர்கள் - பிற்படுத்தப்பட்டவர் களுக்கு இடையே எப்பொழுதும் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கைக் கொள்ளத்தான் செய்தார்கள்.

மண்டல்குழுப் பரிந்துரை தொடர்பான வழக்கில் (இந்திரா சகானி) கூட தேவையில்லாமலும், சம்பந்தமே இல்லாமலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கிடையாது என்று தீர்ப்பில் நுழைத்துக் கூறியதன் காரணமாக தாழ்த்தப்பட்டவர்கள் - பிற்படுத்தப்பட்டவர்களுக் கிடையே மனக் கசப்பை ஏற்படுத்தியது.

அதைச் சரிப்படுத்தி மீண்டும் தாழ்த்தப் பட்டவர்களுக்குப் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு எனும் சட்டம் கொண்டு வரப்பட்ட பொழுது பிற்படுத்தப் பட்டவர்களைத் தனிமைப்படுத்தும் சூழ்ச்சியையும் கவனிக்கத் தவறக்கூடாது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கான தேசிய ஆணையத் திற்கு வழங்கப்படும் சட்டரீதியான உரிமைகளை, அதிகாரங்களை பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்திற்கு இதுவரை வழங்கப்படவே யில்லை.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் சங்கடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர் களுக்கு ஏற்படும் சங்கடங்களில் தாழ்த்தப் பட்டவர்களும் இணைந்து குரல் கொடுக்கும் பொழுதுதான் - போராட்டக் களத்தில் நிற்கும் பொழுதுதான் - பொது எதிரிகளிடமிருந்து இட ஒதுக்கீட்டை - சமூக நீதியைக் கட்டிக்காக்க முடியும் என்பது கல்லின் மேல் எழுத்தாகும்.

மத்திய அரசுக்குரிய 40-க்கு மேற்பட்ட துறைகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்கிற ஒரு மசோதாவை - அவசரம் அவசரமாக - 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் கடைசியாக நடைபெற்ற மாநிலங்களவைக் கூட்டத்தில் எந்தவித விவாதமும் இல்லாமல் கூட்டத்தோடு கூட்டமாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் ஒன்றாக நுழைத்து நிறைவேற்றிக் கொண்டனர்.

இந்தச் சூழ்ச்சியை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நுண்மையாக அறிந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தினார். (24.2.2009).

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் திருமாவளவன் அவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு, அந்த ஆர்ப்பாட்டத்தில் தம் தோழர்களுடன் பங்கேற்றார்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை தாழ்த்தப் பட்டோர் பிரச்சினையானாலும் சரி, பிற்படுத்தப் பட்டோர் பிரச்சினையானாலும் சரி ஒரே அளவுகோலில் கண்ணோட்டம் செலுத்தி பாடுபடும் சமூகப் புரட்சி - சமூக நீதி இயக்கமாகும்.
அந்த முறையில்தான் நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளுமன்றக் குழு மத்திய அரசால் அமைக்கப்பட்டு, அந்தக் குழு முதன் முறையாக தமிழ்நாட்டுக்கு வந்த நிலையில், சமூக நீதித் துறையில் முக்கியமான கடமையினைத் திராவிடர் கழகம் ஆற்றியுள்ளது.

குழுவிடம் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கண்ட அம்சங்கள் மிகவும் முக்கியமானவை - அதுகுறித்து நாளை பார்ப்போம்! 1-10-2012

தமிழ் ஓவியா said...

நாடாளுமன்ற குழுவிடம் திராவிடர் கழகத் தலைவர் அளித்த மனுவின் முழு விவரம்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவர் டி. அனுமந்தராவ் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்தார். (சென்னை - 29.9.2012)

சென்னைக்கு 29-9-2012 அன்று வருகை தந்த பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் நலன்களுக்கான நாடாளுமன்றக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணி அவர்கள் அளித்த கோரிக்கை மனுவின் தமிழாக்கம்:

பிற்படுத்தப்பட்டோர் நலன்களுக்கான நாடாளுமன்றக் குழு பொது மக்கள் மற்றும் அமைப்புகளின் கருத்துகளைக் கேட்டறிவதற்காக மேற்கொண்ட பயணத் தில், பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு 50%, தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவு மக் களுக்கு 19% இட ஒதுக்கீடு அளித்துள்ள பெரியார் பிறந்த மண்ணாகிய தமிழ் நாட்டை முதலில் தேர்ந்தெடுத்து வந்தி ருப்பதற்கு எங்கள் மனம் நிறைந்த பாராட் டுதல்களைத் தெரிவித்துக் கொள்கி றோம்.

பிற்படுத்தப்பட்டோர் நலன்களுக்காக ஒரு நாடாளுமன்றக் குழு உருவாக்கப்பட வேண்டும் என்ற பத்தாண்டு காலத்திற் கும் மேலான கோரிக்கையைப் பரிசீ லித்து, தற்போதைய அய்க்கிய முற்போக் குக் கூட்டணி அரசு, நாடாளுமன்றத்தின் முழுமையான ஒப்புதலுடன், பிற்படுத் தப்பட்ட பிரிவு மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 27% இடஒதுக்கீடு சட்டம் முறையாக நடைமுறைப்படுத்து வதையும், பிற்படுத்தப் பட்ட பிரிவு மக் களின் ஏனைய முன்னேற்றத்தையும் கண் காணிக்க நாடாளுமன்றக் குழு என்ற அமைப்பை உருவாக்கியிருப்பது ஒரு குறிப் பிடத் தக்க முன்னேற்ற நடவடிக்கையாகும்.

தேசிய பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கான தேசிய ஆணையத்திற்கு அரசமைப்பு சட்ட அதிகாரங்கள் அளித்தல்: பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கான தேசிய ஆணையத்திற்கு அரசமைப்பு சட்டப்படியான அதிகாரங்களை அளிப்பது பற்றி, ஒரு மிகக் குறுகிய காலத்திற்குள் ளாகவே, பிற்படுத்தப்பட்டோர் நலன் களுக்கான நாடாளுமன்றக் குழு விவாதித்து, நாடாளுமன்றத்திற்கு ஓர் அறிக்கை அளித்திருப்பதைக் கண்டு நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் முன்னேற்றத்திற்காக பயன் நிறைந்த வகையில், பிற்படுத்தப்பட்ட பிரிவு மக் களுக்கான தேசிய ஆணையத்தைச் செயல்படச் செய்ய மேற்கண்ட பரிந் துரைகளை விரைவில் நடைமுறைப்படுத்த தக்க தொடர் நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும் என்று இக்குழுவை யும், உறுப்பினர்களையும் நாங்கள் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

தேசிய பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் சங்கங்களுடன் விவாதித்தல்

சில கொள்கைப் பிரச்சினைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது மட்டுமன்றி, இட ஒதுக்கீடு கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவது பற்றியும் அதனுடன் இணைந்த மற்ற பிரச்சினைகள் பற்றியும், துறை அலுவலர்களுடன் கலந்துரையாடுவதற்காக, அவர்களை சந்திக்க சில மய்யங்களுக்குத் தாங்கள் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் நாங்கள் அறிகிறோம்.


தமிழ் ஓவியா said...

இம்முயற்சியைப் பாராட்டும் நாங்கள், அத்தகைய கலந்துரையாடல் கூட்டங் களுக்கு முன்னதாக, தொடர்புடைய துறைகளில் இட ஒதுக்கீடு கொள்கை நடைமுறைப்படுத்துவது பற்றி தங்களுக்கு உள்ள குறைகளையும், தங்கள் கருத்து களையும் தெரிவிக்க வாய்ப்பளிக்கும் முகத்தான் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் நலச் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவது மிகவும் இன்றிய மையாதது என்று நாங்கள் கருதுகிறோம். இதனால் அவர்களின் குறைகள் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டு முறை யாகத் தீர்க்கப்பட இயலும். சில துறைகளில் நமது பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் பொதுப் போட்டி பிரிவில் தேர்ச்சி பெறும் அளவுக்கு மதிப் பெண்களைப் பெற்றிருந்த போதிலும், அவர்கள் பொதுப்போட்டிப் பிரிவு இடங்களின் பட்டியலில் சேர்க்கப்படாமல், 27% இட ஒதுக்கீட்டு இடங்களின் பட்டி யலில் மட்டுமே சேர்க்கப்படுகின்றனர் என்று நாங்கள் அறிகிறோம். துறையினர் பராமரித்து வரவேண்டிய இனச்சுழற்சி ஆவணங்களை பரிசீலனை செய்து, இத் தவறினை நாடாளுமன்றக் குழு சரி செய்ய வேண்டிய ஒரு தீவிரமான பிரச்சினையாகும் இது. பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் நலச் சங்கங்களின் பிரதி நிதிகளை அழைத்துப் பேசினால், துறை களில் இட ஒதுக்கீட்டினை நடை முறைப் படுத்துவதில் செய்யும் இது போன்ற தவறுகளைக் கண்டுபிடித்து சரி செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

பிற்படுத்தப்பட்ட பிரிவு பணியாளர்களுக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு அளித்தல்

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பணி யாளர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பதைத் தடை செய்து அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, பதவி உயர்வில் இத் தகைய இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டமசோதா ஒன்றை அரசு மாநிலங் களவையில் தாக்கல் செய்துள்ளது; இன்னமும் அந்த மசோதா நிறைவேற்றப் படவில்லை. அதே போன்று பிற்படுத்தப் பட்ட பிரிவு பணியாளர்களுக்கும் பதவி உயர்வில் இது போன்ற இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக் கையை பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் நலன்களுக்கான நாடாளுமன்றக் குழு எழுப்பி உள்ளது. பிற்படுத்தப்பட்ட பிரிவு பணியாளர்களும் அரசின் உயர்பதவி களில் அதிக எண்ணிக்கை கொண்டவர் களாக இல்லை என்பதால், இதற்காக அரசு கொண்டு வரும் சட்ட மசோதாவில் பிற்படுத்தப்பட்ட பிரிவு பணியாளர் களுக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கும் பிரிவும் சேர்க்கப்பட வேண்டும். இந்த நியாயமான கோரிக்கையை அரச மைப்பு சட்ட 16(4) பிரிவின் விதிகளுக்கு ஏற்ப இதற்கான ஒரு சட்டமசோதாவை விரைவில் கொண்டு வரவேண்டும் என்று அரசுக்கு நாடாளுமன்றக் குழு பரிந் துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் ஓவியா said...

நீதித் துறையிலும் இடஒதுக்கீடு

நீதித் துறையில், குறிப்பாக உயர் நீதிமன்றங்களிலும், குறிப்பாக உச்ச நீதிமன்றத்திலும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் பிரதிநிதித்துவம் மிகமிகக் குறைந்த அளவிலேயே உள்ளது என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. தங் களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் என்று இந்நாட்டு மக்கள் எதிர் பார்த்து நம்பி யிருக்கும் ஒரு நடைமுறையில், மக்களின் பல்வேறுபட்ட பிரிவினர் பிரதிநிதித்துவம் பெற்றிருக்க வில்லை என்பது மற்றொரு மாபெரும் அநீதியாகும். இந்த குறைபாட்டை விரைவில் போக்குவது பற்றி நாடாளுமன்றக் குழு வரும் நாட்களில் தீவிரமாகவும், விரிவாகவும் விவாதித்து, அதனைப் போக்குவதற்கான வழிவகைகளைக் காணவேண்டும் என்று கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு:

பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் சிறிது சிறிதாகக் குறைந்து வரும் இக் கால கட்டத்தில், கூடுதலான வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு மக்கள் நம்பி எதிர்பார்க்கும் துறை தனியார் துறை ஒன்றே. ஆனால், இந்த தனியார் துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் அனைத்து உயர் பதவி களில் இருக்கும் உயர்ஜாதியினர்களும், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவு மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் கொள்கையைப் பின்பற்றுவதில்லை. தகுதி, திறமை என்ற பெயர்களில், தங்களின் சமூகக் கடமைகளை நிறைவேற்றாமல் தட்டிக் கழிக்கவே அவர்கள் முயலுகின்றனர். அதே நேரத்தில், அரசிடம் இருந்து கடன் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளையும், வரிச்சலுகை போன்றவைகளையும் அவர்கள் முழுமையாக அனுபவித்துக் கொள்ளவும் தவறுவதில்லை. எனவே, நாடாளுமன்றக் குழு இந்தப் பிரச் சினையைத் தீவிரமாகப் பரிசீலனையில் எடுத்துக் கொண்டு தனியார் துறை களிலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினத்தவர் ஆகியோ ருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்தை இயற்றி நிறைவேற்றச் செய்யுமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்து, நிறைவேற்றச் செய்ய வேண் டியதே இந்த காலகட்டத்தின் மிகப் பெரிய தேவையாகும். இட ஒதுக்கீட்டு அளவை மாநில அரசுகளே நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்

நமது சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவு, இதர பிரிவுகள் போன்ற பல்வேறுபட்ட பிரிவு மக்கள் மொத்த மக்கள் தொகையில் கலந்திருக்கும் அளவும், அவர்களின் வரலாற்றுப் பின்னணி, புவியியல் அமைப்பு, மொழி, பண்பாடு ஆகியவற்றிடையே உள்ள இயல்பான வேறுபாடுகளின் காரணமாக அவர்களிடையே காணப் படும் சமூக மற்றும் கல்வி அளவிலான பிற்படுத்தப் பட்ட தன்மையும் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்தில் வேறுபட்டே இருப்பவையாகும். எனவே, பிற்படுத் தப்பட்ட பிரிவு மக்களுக்கான இட ஒதுக்கீட்டு அளவை அந்தந்த மாநில அரசுகளே நிர்ணயித்துக் கொள்ள அனுமதிப்பதே பொறுத்தமானதாகவும், நியாயமானதாகவும் இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ள 50% இட ஒதுக்கீட்டு அளவை, அரசமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் நீக்குதல்

தமிழ் ஓவியா said...


தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினத் தவர், பிற்படுத்தப்பட்டோர் எனும் ஒடுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப்பட்ட அனைத்துப் பிரிவு மக்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிக்க அதிக அளவாக 50ரூ என்று உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. இது நியாயமானது அல்ல. பல மாநிலங்களிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப் பட்ட மக்களின் மொத்த மக்கள் தொகை அம்மாநில மொத்த மக்கள் தொகையில் 80ரூ க்கும் மேலாக உள்ளது. மேலும், இச்சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் ஆயிரக் கணக்கான ஆண்டு காலமாக மறுக்கப் பட்டே வந்துள்ளது. மொத்த மக்கள் தொகையில் வெறும் 20ரூ என்ற அளவில் சிறுபான்மையினராக மட்டுமே உள்ள உயர்ஜாதிப் பிரிவு மக்களே கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பெரும் பகுதியை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரு கின்றனர். இத்தகைய சூழ்நிலைகளில், இந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களுக் கான இட ஒதுக்கீட்டில் எந்த உச்ச வரம்பையும் நிர் ணயிப்பது என்பது சரியானதும் அல்ல; நியாயமானதும் அல்ல. இந்த இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை நீக்குவதற்கு, தேவைப்பட்டால் அரசமைப்புச் சட்டத் திருத்தம் ஒன்றை கொண்டு வந்தாகிலும், தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று நாங்கள் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
இடஒதுக்கீட்டுப் பயன் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான உச்ச வரம்பு (கிரீமிலேயர்) முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்:

பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டினை மத்திய அரசு 1993 முதலும், கல்வி நிறுவன சேர்க்கையில் இட ஒதுக்கீடு 2007 முதலும்தான் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் பல நூறாண்டு காலமாக சமூக அளவிலும், கல்வியிலும் பின்தங்கியவர்களாக பாரம்பரியமாக வைக்கப் பட்டிருப்பவர்கள் ஆவர். அவர்கள் பொருளாதார அளவில் உயர்ந்தி ருக்கிறார்கள் என்ற காரணத்தினால் மட்டுமே, கல்வி மற்றும் சமூக அளவு பிற்போக்குத்தன்மையிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர் என்று கருத முடியாது. இடஒதுக்கீடு பெறுவதற்கு அவர்களுக்கு வருமான உச்ச வரம்பு நிர்ணயிப்பதன் மூலம், இட ஒதுக்கீட்டுப் பயன்களை அவர்களுக்கு மறுப்பதோடு, அவர்களும் அவர்களது சந்ததியினரும் சமூக, கல்வி பிற்போக்குத் தனத்திற்கே மறுபடியும் தள்ளப்பட்டு விடுவர். எனவே இடஒதுக்கீட்டுப் பயன் பெறுவதற்கு பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள வருமான உச்ச வரம்பு (கிரீமிலேயர்) முற்றிலுமாக நீக்கப்படவேண்டும் என்று நாங்கள் விரும்பி வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.

பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு மத்திய அரசு அளித்துள்ள 27% இட ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும்:
நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில், பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் மக்கள் தொகை 65% முதல் 70% வரையிலும் இருப்பதால், ஆயிரக் கணக்கான ஆண்டு காலமாக வாய்ப்புகள் மறுக்கப் பட்டதன் காரணமாக நீண்டகாலமாக அவர்கள் அடைந்து வந்துள்ள துயரங்களைக் கருத்தில் கொண்டால், அவர்களுக்கு தற்போது அளிக்கப்பட்டுள்ள 27% இட ஒதுக்கீடு, மிகவும் பொருத்தம் அற்றதும், போதுமானது அல்லதும் ஆகும். எனவே அவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவு தற்போதுள்ள 27% லிருந்து குறைந்ததாக 50% அளவுக்காவது உயர்த்தப்பட வேண் டும் என்று நாங்கள் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

தொழிற் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய அளவில் பொதுத் தேர்வு நடத்தும் முடிவைக் கைவிடல்:

பல்வேறுபட்ட பல்கலைக் கழகங்கள், இடைநிலைக் கல்விக் கழகங்களின் கீழ், பல்வேறுபட்ட வட்டார மொழிகளில் பயின்ற மாணவர்களை ஒருவருடன் ஒருவர் போட்டியிட வைப்பது சரியானதும், நியாயமானதும் அல்ல. ஒரு பொது நுழைவுத் தேர்வின் மூலம் அவர்களை சமன்படுத்தவும் இயலாது; சமன் படுத்தவும் கூடாது. எனவே, தொழில் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வை நடத்தும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் முடிவும், குறிப்பாக மருத்துவக் கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் ஒரு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற தேசிய மருத்துவக் கவுன்சிலின் முடிவும் முழுமையாகக் கை விடப்பட வேண்டும்.

அனைத்திந்திய மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்காக பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

தமிழ் ஓவியா said...

அனைத்திந்திய மருத்துவக் கல்வி நிறுவனங் களுக்கான மாணவர் சேர்க்கையில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் நிலையில், பிற்படுத்தப் பட்ட பிரிவு மாணவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு அளிக்கப் படுவதில்லை. அனைத்து உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையில் 27% இடஒதுக்கீடு பிற்படுத்தப் பட்ட பிரிவு மாணவர்களுக்கு 2007 ஆம் ஆண்டு முதல் அளிக்கப் பட்டுள்ள நிலையில், இவ்வாறு மருத்துவக் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாண வர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க மறுப்பது மிகமிக நியாயமற்ற செயலாகும்.

இந்தியா முழுவதிலும் மாநில அரசுகளாலும், தனியாராலும் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மத்திய தொகுப்பிற்கு 15% அளவில் பெறப்படும் மருத்துவப் பட்டப் படிப்பு இடங்களிலும், 50% அளவில் பெறப்படும் எம்.எஸ்., எம்.டி.போன்ற முதுகலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான இடங்களிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் போது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை. இது சற்றும் நியாயமானது அல்ல. மாணவர் சேர்க்கையில் 27% இடஒதுக்கீடு பிற்படுத்தப் பட்ட பிரிவு மாணவர்களுக்கு 2007 ஆம் ஆண்டு முதல் சட்டப்படி அளிக்கப் பட்டு வரும் நிலையில், இவ்வாறு மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மத்திய தொகுப்பில் இருந்து அளிக்கப்படும் மாணவர் சேர்க்கையில், பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க மறுப்பது மிகமிக நியாயமற்ற செயலாகும். மத்திய தொகுப்பில் இருந்து மருத்துவக் கல்லூரி களில் பட்டப் படிப்புக்கும், முதுகலை பட்டப் படிப்புக்கும் செய்யப்படும் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு அளிக்க ஆவன செய்ய வேண்டுமென்று விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர் களுக்கான 27% இட ஒதுக்கீடு உடனடியாக முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப் பட்ட பிரிவு மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு அளிப்பது என்ற கொள்கை முடிவை 2007 இல் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியதை எதிர்த்து உயர்ஜாதி மக்கள் போராட்டம் மேற்கொண்டதுடன், உச்ச நீதி மன்றத்திலும் வழக்கு தொடுத்தனர். ஒரு நீண்ட நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகும், பொது விவாதம் மற்றும் கலந்துரையாடலுக்குப் பிறகும், ஆண்டு ஒன்றுக்கு 9% வீதம் இந்த 27% இடஒதுக்கீட்டை 3 ஆண்டு காலத்தில் தவணை முறையில் நிறைவேற்றுவது என்று மத்திய அரசு முடிவு செய்தது. உயர்ஜாதி மாணவர்கள் பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக ஆண்டு தோறும் 9% இடங்களைக் கூடுதலாக ஏற்படுத்துவது என்றும் முடிவு செய்து ஆணையிடப்பட்டது. இவை அனைத்துக்கும் பிறகும், இந்த 9ரூ இட ஒதுக்கீடு முறையாகவும், முழுமையாகவும் பல மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த 27% இட ஒதுக்கீட்டை மேலும் காலதாமதமின்றி உடனடியாக முழுமையாக நடைமுறைப்படுத்தத் தேவையான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பி வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் ஓவியா said...

பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான 27% இட ஒதுக்கீட்டுக் கொள்கையை எந்த வித தவிர்ப்பும் இன்றி அனைத்து இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களிலும், இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்:

அனைத்து மத்திய உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையிலும் 27% இடஒதுக்கீடு பிற்படுத்தப் பட்ட பிரிவு மாணவர்களுக்கு 2007 ஆம் ஆண்டு முதல் அளிப்பது என்ற கொள்கை முடிவை மத்திய அரசு மேற்கொண்டு நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில், மத்திய பல்கலைக் கழகங்கள், இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள் IITs, இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் IIMs ஆகியவற்றில் இத்தகைய பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதில் தவிர்ப்பு அளித்திருப்பது எந்த வகையிலும் நியாயமானது அல்ல. எனவே, பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் 27% இட ஒதுக்கீடு அளிப்பது என்ற மத்திய அரசின் கொள்கை முடிவை எந்த விதத் தவிர்ப்பும் இன்றி, அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும், இந்திய தொழில்நுட்பக் கல்விநிறுவனங்களிலும் IITs, இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களிலும் IIMs உடனடி யாக நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

டில்லி அனைத்திந்திய மருத்துவக் கல்வி அறிவியல் நிறுவனம், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சண்டிகர் முதுகலை மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் ஆகியவற்றிற்காக தனித்தனி நுழைவுத் தேர்வுகள் நடத்துவது கைவிடப்பட வேண்டும்

தமிழ் ஓவியா said...

டில்லி அனைத்திந்திய மருத்துவக் கல்வி அறிவியல் நிறுவனம், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவ மனை, சண்டிகர் முதுகலை மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் ஆகியவற்றிற்காக தனித்தனி நுழைவுத் தேர்வுகள் நடத்துவதன் மூலம், மருத்துவக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக முயலும் மாணவர்களை, பலவித நுழைவுத் தேர்வுகளை எழுதவைக்கும் செயல் நியாயமானது அல்ல. இந்த மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு தனித்தனியே நுழைவுத் தேர்வு நடத்துவதைக் கைவிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

டில்லி அனைத்திந்திய மருத்துவக் கல்வி அறிவியல் நிறுவன பட்டப்படிப்பு மாணவர் களுக்கு முதுகலை மருத்துவ பட்டப் படிப்பு இடங்களில் 30% அளிக்கப்படும் நடைமுறை கைவிடப்படவேண்டும்.

மத்திய தொகுப்பில் இருந்து முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு இடங்களில் 30% இடங்களை டில்லி அனைத்திந்திய மருத்துவக் கல்வி அறிவியல்நிறுவன பட்டப்படிப்பு மாணவர்களுக்கு அளிக்கும் நடைமுறை கைவிடப்படவேண்டும். ஒரு தனிப்பட்ட நிறுவனத்திற்காக இவ்வாறு 30% அளவு முதுகலை மருத்துவப் பட்டப் படிப்புக்கான இடங்கள் அளிக்கும் நடைமுறையைக் கைவிட இந்திய அரசுக்கு தக்கபடி எடுத்துக் கூறி மனநிறை வடையச் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக மண்டல் குழு அளித்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துதல்:

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப் பட்ட பிரிவு மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது பற்றி மட்டுமன்றி, அவர்களின் மற்ற பொருளாதார மேம் பாட்டுக்காக பல மேம்பாட்டுத் திட்டங்களையும் மண்டல் குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. அத் தகைய பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த மத்திய அரசைக் கேட்டுக் கொள்ள வேண்டுமென நாங்கள் விரும்பி வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.

மத்திய பணித் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பொதுப்போட்டிப் பிரிவில் தங்களின் தகுதியினால் இடம் பெறும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பொதுப் போட்டிப் பட்டியலில் இடம் கொடுக்காமல், பிற்படுத்தப்பட்டோருக்கான பட்டியலில்இடம் கொடுக்கும் சட்டத்திற்குப் புறம்பான நடை முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

மத்திய அரசின் பணி நியமனங்களுக்காக மத்திய பணித் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில், தகுதியின் அடிப்படையில் அதிக மதிப்பெண்கள் பெற்று பொதுப் போட்டிப் பிரிவில் இடம் பெறும் பிற்படுத்தப் பட்டவர்கள் பொதுப் போட்டிப் பிரிவுப் பட்டியலில்தான் இடம் பெறவேண்டும்; ஆனால் சட்ட விரோதமாகஇவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் இதுவரை சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதனால் இடஒதுக்கீட்டுப் பட்டியல்படி வேலைவாய்ப்பு பெறவேண்டிய மற்ற பிற்படுத்தப் பட்டவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப் படுகிறது. எனவே பொதுப் போட்டிப்பிரிவில் தகுதியின் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்று இடம் பெறும் பிற்படுத்தப்பட்டவர்களை இடஒதுக்கீட்டுப் பட்டியலில் சேர்க்காமல், பொதுப் போட்டிப் பட்டியலிலேயே சேர்க்க வேண்டும் என்ற சட்டப்படியான நடைமுறையை மத்திய அரசுப் பணித் தேர்வாணையம் தவறாமல் பின்பற்றச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மென்று விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

சென்னைக்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் மறுபடியும் நாங்கள் வரவேற்றுப் பாராட்டு கிறோம். இங்கு அலுவலர்களுடனும், பிற்படுத்தப்பட்ட மக்கள் நல அமைப்புகளின் பிரதிநிதி களுடனும் தாங்கள் மேற்கொண்ட கலந்துரையாடல் பயன் நிறைந்ததாக, குறிப்பாக பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு மிகுந்த பயன் அளிப்பதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

மிக்க மரியாதையுடனும், மனம் நிறைந்த வாழ்த்துகளுடனும்.

தங்கள் அன்புள்ள
கி.வீரமணி

(29.9.2012)

தமிழ் ஓவியா said...

கிளிநொச்சியில் தமிழர்கள் போராட்டம் குறித்து கலைஞர்கேள்வி :- சிங்கள ராணுவத்திற்கு எதிராக கிளி நொச்சியில் தமிழர் கள் மீண்டும் போராட்டம் நடத்தியதாக செய்தி வந்திருக்கிறதே?

கலைஞர் :- 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கைப் போருக்குப் பிறகு தமிழர் பகுதி முழுவ திலும் சிங்கள ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. கிளி நொச்சி பகுதி முழுவதுமே இன்னமும் ராணுவத்தின் கட்டுப்பாட் டில்தான் உள்ளது. இந்த ராணுவ வீரர்கள் தங்கள் பகுதியை விட்டு வெளியேற வேண்டுமென அங்குள்ள தமிழர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் சிங்கள ஆட்சியினர் அதை காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. 27-9-2012 அன்று கிளி நொச்சியில் தமிழர்கள் ஒன்று திரண்டு இதற்காகவே போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். வரும் 3ஆம் தேதி நடை பெறவுள்ள டெசோ கலந்துரையாடல் கூட்டத்தின் போது, இதுபோன்ற பிரச்சினைகளையும், கழகத்தின் சார்பில் விரைவில் ஐ.நா. மன்றத்தில் அளிக்கப்பட வுள்ள மகஜர் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும்.

- முரசொலி கலைஞர் பதில்கள் 1.10.2012

தமிழ் ஓவியா said...

சிங்கப்பூரில் சிந்தனைச் சிற்பியாம் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா விருந்துடன் சிறப்பான கொண்டாட்டம்!தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடிய சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தினர்....

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பிறந்த நாளை ஆண்டுதோறும் சிங்கப்பூரில் சிறப்பாக கொண்டாடி வருகிறது. இந்தாண்டு செப்டம்பர் 17ஆம் தேதி தந்தை பெரியார் 134ஆம் ஆண்டு பிறந்த நாளன்று சிங்கப்பூர் தமிழ்முரசு நாளிதழில் அறிவுலக ஆசான் படத்துடன் வாழ்த்து விளம்பரம் செய்து சிங்கை தமிழர்களிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை மாலை சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள ஹோட்டல் ஆனந்தபவனில் பிறந்த நாள்விழாவை விருந் துடன் கூடிய கலந்துரையாடலாக கொண் டாடியது.

மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல்வம் தலைமையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கேசரியுடன் விருந்து அளிக்கப்பட்டது. அதன்பின் நடைபெற்ற கலந்துரை யாடலில் நாம் கல்வியறிவு, வேலை வாய்ப்பில் முன்னேறி, இன்று நம்மில் பல பேர் வேற்றுமை பாராமல் ஜாதி, மதமின்றி கலப்புத் திருமணம் புரிந்து மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என்றால் அந்த அரிய வாய்ப்பு தந்தை பெரியாரால் ஏற்பட்டது என்பதை மகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார்கள்.

ஆண்டுதோறும் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மனிதநேயப் பணியாக முதியோர் இல்லம் சென்று உதவுவதை வழக்கமாக கொண்டு உள்ள அம்மன்றம், இந்த ஆண்டு ஆகஸ்டு மாதமே ளுரடேடிஎந ழடிஅந என்ற சீன முதியோர் இல்லம் சென்று திருக்குறள் புத்தக விற்பனையில் கிடைத்த முழுத் தொகையையும் அளித்ததை எடுத்துக் கூறி, மேலும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக முன்னாள் மாணவர்களுடன் சேர்ந்து பெரியார் பிறந்த நாள் இரத்ததான முகம் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

விழாவில் மன்றத்தின் துணைத் தலைவர் மூ. மதியரசன், செயலாளர் க. பூபாலன், பொருளாளர் நா. மாறன், உறுப்பினர்கள், மலையரசி, கவிதாமாறன், ராஜராஜன், தமிழ்ச்செல்வி, இனியநிலா, வானதி, வளவன், பர்வீன்பானு, இராஜக்குமாரி, பிரசாந்து, மனோகர், பிரேமா, பழனி, அத்திவெட்டி ஜோதி, மதியழகன், சங்கர், ராசப்பா, ரமேஷ்குமார் - கார்த்திகாயினி குடும்பத்தினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.1-10-2012

தமிழ் ஓவியா said...

பெண்ணுரிமைபற்றி பெரியார் பேசியதற்குமேல் ஒன்றும் இல்லை
எழுத்துரு அளவு
பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த பன்னாட்டு மனிதநேய அமைப்பின் தலைவர் சோனியா எக்கரிக்ஸ் பெருமிதம்!பெல்ஜியம் நாட்டு மனிதநேய அமைப்பின் தலைவர் சோனியா எக்கரிக்ஸ் தந்தை பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்துகளை எடுத்துரைத்தார். உடன் பேராசிரியர் நரேந்திரநாயக், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வீ.குமரேசன், பாபுகோகினேனி ஆகியோர் உள்ளனர். (சென்னை பெரியார் திடல், 30.9.2012)

சென்னை, அக்.1-பெண்ணுரிமைபற்றி பெரியார் எடுத்துக் கூறியுள்ள கருத்துகளுக்கு மேலான பெண் ணுரிமை சிந்தனை வேறு எதுவும் இல்லை என்றார் பெல்ஜியம் நாட்டு சிந்தனையாளர்.

பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக மகளிரும் மனிதநேயமும் (Women and Humanism) எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் உரைவீச்சு - கலந்துரை யாடல் நடைபெற்றது.

சென்னை - பெரியார் திடல் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் மன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக், பன்னாட்டு மனிதநேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் (International Humanist and Ethical Union) பன்னாட்டு இயக்குநர் பாபு கோகினேனி உரையாற்றிய பின்பு நிகழ்ச்சியின் சிறப்புரையினை பன்னாட்டு மனிதநேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் தலைவர் சோனியா எக்கரிக்ஸ் (Sonja Eggerickx) வழங்கினார்.

பார்வையாளர்கள் எழுப்பிய வினா மற்றும் விளக்க வேண்டுதல்களுக்கு சிறப்புப் பேச்சாளர் பதிலுரை வழங்கினார். கூட்டத்திற்கு வருகை தந்தோரை வரவேற்று பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ. குமரேசன் உரையாற்றினார். நிகழ்ச்சி முழுவதையும், திராவிடர் கழக ஊடகத் துறை மாநிலச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் தொகுத்து வழங்கினார். சிறப்புரைக்குப் பின் கலந்துரையாடல் நிகழ்ச்சியினை வழக்குரைஞர் அருள்மொழி தொகுத்து அளித்தார். கூட்டத்தில் கலந்துகொண்டோர் உரையாற்றியதன் சுருக்கம் பின்வருமாறு:

தமிழ் ஓவியா said...

வரவேற்புரை - வீ. குமரேசன்

தந்தை பெரியார் மத உணர்வு எதிர்ப்பு அனைத்து மதங்களைப் பொறுத்த அளவில் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. ஏனெனில், ஒவ்வொரு மதமும் மக்களை அடக்கி அடிமைப்படுத்துவதின் - குறிப்பாகப் பெண்களை அடிமைப்படுத்துவதின் அழுத்தத்தைப் பொறுத்தே அந்த மத எதிர்ப்பு அளவும் இருக்கும். இந்நாட்டுச் சூழலில் மகளிரை அதிகமாக அடிமைப்படுத்திடும், மனிதநேயமற்ற முறையில் நடத்திடும் இந்துமதம் அதிகமாக எதிர்ப்புக்கு உள்ளாக்கப்படுதல் இயல்பான செயலாகும்.
கணவன் இறந்த பின்பு எரியூட்டப்பட்ட சிதையிலேயே உயிருடன் உள்ள மனைவியை எரித்திடும் உடன்கட்டை ஏறும் மனிதநேயமற்ற காட்டுமிராண்டித்தனமான வழக்கம் அந்நாளில் மத நிகழ்வுகளாக நடைபெற்றது. 1833ஆம் ஆண்டு அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த வில்லியம் பெண்டிங் முயற்சி எடுத்துக் கொண்டதன் பேரில் உடன்கட்டை ஏறும் கொடிய வழக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது. லண்டனிலிருந்து பெறப்பட்ட தடை உத்தரவினை அச்சடித்து நாடு முழுவதும் பரப்பிடும் பணியினை கிறிஸ்தவ மதப் பாதிரியரான வில்லியம் காரேவிடம் அளிக்கப்பட்டது. காரணம் அந்நாளில் அச்சுக் கூடம், அச்சடிக்கும் வசதிகள் கிறிஸ்தவ சபையினர் வசம்தான் இருந்தன. தடையாணை ஞாயிற்றுக் கிழமை பெறப்பட்டது. அதனை அச்சடிக்கும் பணியில் முனைப்புடன் ஈடுபட்ட கிறிஸ்தவ மதப் பாதிரியார்; இன்று ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் எனக்கு மத நடவடிக்கையில், பிரார்த்தனைக் கூட்டம் நடத்துவதில் நாட்டம் இல்லை. எவ்வளவு விரைவில் தடையாணை அச்சடித்துப் பரப்பப்படுமோ அவ்வளவு விரைவில் பணி முடிக்கப்பட வேண்டும். அச்சடிக்கும் பணியில் ஏற்படும் ஒவ்வொரு மணிநேர தாமதமும் கணவனை இழந்த பெண் உடன்கட்டை ஏறுதல் வழக்கத்தால் ஆயிரக்கணக்கில் மகளிர் உயிர் துறக்க நேரிடும் எனக் கூறி மத உணர்வினை புறந்தள்ளி மனிதநேய அடிப் படையில் செயலாற்றினார். இது வரலாற்றுக் குறிப்பு. ஆனால் தடை ஆணை பிறப்பிக்கப்பட்ட செய்தியினைக் கேட்டதும் பார்ப்பன புரோகிதர்கள் ஒன்றாகக் கூடி, உடன்கட்டை ஏறும் வழக்கம் நீடித்திட வேண்டும் என வைஸ்ராய்க்கு கோரிக்கை மனுவினை அளித்தனர். மனிதநேயத்தை மறுத்த மத உணர்வுப் போக்கு இது. இந்த இரண்டுவித மத உணர்வு களையும் ஒரே அளவில் எதிர்ப்பது, பகுத்தறிவு ஆகாது. மத உணர்வு எதிர்ப்புகளும் அளவில் வேறுபடுத்தப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். இத்தகைய அணுகுமுறையினைத்தான் பெரியார் இயக்கம் கடைப்பிடித்து வருகிறது. மகளிர் உரிமையினை மதங்கள் மறுக்கின்ற மாறுபாட்டு நிலைகளை விளக்கி, கூட்டத்திற்கு வருகை தந்தோரை வரவேற்றார்.தமிழ் ஓவியா said...

தலைமை உரை - வீ. அன்புராஜ்

இன்றைய கலந்துரையாடலுக்கான தலைப்பு மகளிரும் - மனிதநேயமும் விரிவாக, பரந்துபட்டு பேசப்பட வேண்டிய கருத்தாழம் கொண்டதாகும். காரணம், மகளிர் மனிதநேயமற்ற தன்மையில் ஆண்டுகள் பலவாக அடக்கப்பட்டு வந்துள்ளனர். பெண் விடுதலைக்கு ஆதரவாக போராடுவதே பெரியாரின் தனித்துவம் மிக்க பணியாகும். பெரியார் கடைப்பிடித்த, பரப்புரை மேற்கொண்ட பெண்ணுரிமை பேணும் போக்கு மற்ற சமூக சீர்திருத்தவாதிகளிடமிருந்து பெரியாரை வேறு படுத்திக் காட்டுகிறது. ஒரு முறை பெரியாரிட மும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது: பெண் உரிமைபற்றி பேசும்பொழுது பெண்களுக்கு என்னென்ன உரிமைகள் வழங்கப்பட வேண்டும்? பெரியார் சற்றும் தாமதிக்காமல் பதிலிறுத்தார். அதிகமான உரிமைகள் எதுவும் பெண்களுக்கு அவசியமில்லை. ஆண்களுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் பெண்களுக்கு வழங்கப்பட்டால், அதுவே போதும். எளிமையான, எதார்த்தமான பெரியாரின் பதில் பாமரரையும் சிந்திக்க வைத்தது.

அடக்கப்பட்டு வரும் மகளிர் தாங்கள் அத்தகைய அடக்குமுறைக்கு ஆளாகிறோம் என்ற உணர்வே இன்றி இருக்கின்றனர். அடக்கு முறையினைச் சுட்டிக் காட்டினால், தங்களுக்கு அத்தகைய செயல்கள் பழக்கப் பட்டுவிட்டன என சமாதானம் அடைகின்றனர். கடவுளும் தலைவிதியும் அத்தகைய வாழ்க்கையினைத் தங்களுக்கு வழங்கி விட்டதாக வடிகால் மனப்பாங்குடன் வாழ் கின்றனர். சீரிய சமூக சீர்திருத்தக்காரர்கள் பலரும் பெண்விடுதலை பற்றிப் பேசியுள்ளனர். ஆனால் பெரியாரின் பெண்ணுரிமைக் கொள்கையோ அதனை நடை முறைப்படுத்தும் அணுகுமுறையோ செயல்தன்மை செரிவு கொண்டது. விதவை மறுமணம் என்பது சமூக விலக்காக கருதப்படும் நிலை அந்நாளில் இருந்தது. பெண் விடுதலை யினை தனது இல்லத்தி லிருந்தே துவக்கினார் பெரியார். மிகவும் சிறிய வயதில் விதவையான தனது தங்கையின் பெண் ணிற்கு, குடும்ப உறுப்பி னர்களின் விருப்பத்திற்கு மாறாக மறுமணம் செய்து வைத்தார். குடும் பத்தில் எழுந்த எதிர்ப்பு களைக் கண்டு அவர் சஞ்சலப் படவில்லை. தைரியமாக பெண்ணுரிமைக் கொள்கையினை பெரியார் நடை முறைப்படுத்தினார்.

பெரியாரின் இயற்பெயர் ஈ.வெ.ராமசாமி என்பதாகும் (வெளிநாட்டவருக்கான விளக்கம் இது) பெரியார் என்பது அவரது பொதுவாழ்க்கைப் பணியின் மகத்துவம் அறிந்து அளிக்கப்பட்ட அடைமொழி. பெரியார் என்றால் சிறந்த மனிதர் என்பது பொருள். பெண்கள் நடத்திய மாநாட்டில் பெண்கள் அனைவரும் சேர்ந்து அளித்த பாராட்டு அடைமொழி பெரியார் என்பதாகும். பெரியார் எனும் அடைமொழியினை மகளிரே வழங்கியது பெண் உரிமை, மேம்பாடு, விடுதலை என்பதில் பெரியாருக்கு இருந்த ஈடுபாட்டை, அக்கறையினை வெளிப்படுத்துவதாக விளங்குகிறது. பெரியார் எனும் அடைமொழியே இயற்பெயரையும் தாண்டி அடையாளப்படுத்தும் அழைப்பு மொழியாக மாறி மாண்பாக அமைந்தது.

பன்னாட்டு மனித நேயம் மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் தலைவர் சோனியா எக்கரிக்ஸ் அவர்களது உரையினை அடுத்த விவாதம் பொருள் நிறைந்ததாக இருக்கும். இந்த விவாதத்தின் விளக் கங்கள் பன்னாட்டு அள வில் பலரையும் சென்ற டையும் சிறப்புச் செய்தி யாக இருக்கும் என்பதில் அய்யமில்லை. பெரியா ரின் பெண்ணுரிமைக் கொள்கைகள் திக்கெட் டும் பரவட்டும்!

பேராசிரியர் நரேந்திரநாயக் உரை

இந்த மண்ணில் பெண்ணடிமைத்தனத்தை உருவாக்கியதில் பார்ப்பனர்களுக்குப் பெரும் பங்கு உண்டு இந்து மதத்துக்கு பங்கு உண்டு என்பதைவிட பார்ப்பனர்களுக்கு பங்கு உண்டு எனச் சொல்வதே சாலச்சிறந்தது. இந்து மதம் என்பது அடிப்படையில் கிடையாது. மதம் சார்ந்த சிந்தனைகள் மறையத் தொடங்கினால் - மகளிர் அப்படிப்பட்ட எண்ணங் களை மறக்கத் தொடங்கினால், பெண் விடுதலையின் முழுமை என்பது வெகு தூரத்தில் இல்லை. பழக்கத்தின் அடிப்படையில் கைக் கொள்ளப்படும், மகளிரை இழிவுபடுத்திடும் மதச் சடங்குகளை மகளிர் புறக்கணிக்க வேண்டும். மத உணர்வுகள் மத வெறியாக மாறி உள்ள சூழலில் பெண் விடுதலை என்பது விவேகத்துடன் வென்றெடுக்க வேண்டிய செயலாகும். மகளிர்தம் முழுமையான ஈடுபாட்டால், உண்மை நிலை உணர்ந்த தன்மையினால் மட்டுமே அவர்கள் சமூகத்தில் மேம்பாடு அடைந்திட முடியும். ஆண்களுக்கு நிகரான சமஉரிமை படைத்த மனிதராக வாழ்ந்திட முடியும். அத்தகைய நிலைக்கு மகளிர் தங்களை அணியப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ் ஓவியா said...

பாபு கோகினேனி உரை வீச்சு

அமெரிக்க நாட்டு நாத்திக அறிஞர் ராபர்ட் ஜி.இங்கர்சால் தான் எழுதிய ஒரு புத்தகத்தை தனது மனைவி ஈவான் அம்மை யாருக்கு அர்ப்பணிப்ப தாகக் குறிப்பிட்டுள்ளார். தனது மனைவியின் பெயரைக் குறிப்பிட்டு A woman without superstition (மூடநம்பிக்கை அற்ற பெண் மணி) எனக் குறிப்பிட்டுள்ளது மேன்மைக்காகக் கருதப்படக் கூடிய குறிப்பு அல்ல. மகளிரின் மாண்பு மூடநம்பிக்கைத் தளையிலிருந்து விடு படுதலே ஆகும். ஆனால் இந்நாட்டில் மூட நம்பிக் கையில்தான் குறிப்பாக மதம் சார்ந்த நடவடிக் கைகளில்தான் தங்களது உரிமைகளை மறந்து, இழந்து வாழ்ந்து மகளிர் வருகின்றனர். மதம் நீங்கிய வாழ்க்கையினை வாழ மகளிர் கற்றுக் கொள்ள வேண்டும். இது குறித்த பரப்புரைகள் பகுத்தறிவு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட வேண்டும். பில்லி சூனியம், மந்திரமோசடி, சாமியார்கள் இவை பற்றிய நம்பிக்கைகள் தகர்க்கப்பட வேண்டும். காரணம், இத்தகு மூட நம்பிக்கைகளுக்குப் பெரிதும் ஆளாகின்றவர்கள் மகளிரே.

சோனியா எக்கரிக்ஸ் சிறப்புரை

கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன்பு பெரியார் நினைவிடத்தினைப் பார்த்துவிட்டு வந்தேன். பெரியாரின் பொன்மொழிகள் ஆங்கிலத்தில் பொறிக்கப் பட்டுள்ளதை ஒவ்வொன்றாக அருகில் நின்று படித்து விட்டு வந்தேன். பெரியாரின் பெண்ணுரிமை பற்றிய கருத்துகள் என்னை மெய் சிலிர்க்க வைக்கின்றன. பெரியாரின் கருத்துகளை விட என்ன புதிய கருத்தினை பெண்ணுரிமை பற்றி நான் சொல்லிவிட முடியும் என்ற நினைப்பே என்னுள் இருக்கிறது.

பன்னாட்டு மனித நேய மற்றும் நன்னெறி ஒன்றியம் 1952இல் அமைக்கப்பட்டது. அந்த அமைப்பின் தலைவராக ஒரு பெண் 2006இல்தான் வரமுடிந்தது. 54 ஆண்டுகள் கடந்துதான் பெண் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. இதுபோல ஒவ்வொரு துறையிலும் பெண் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. காரணம் பெண்கள் குடும்பப் பணிகளையும், கடமைகளையும் செய்து விட்டு அலுவலகப் பணிக்கு வரவேண்டி உள்ளது. மகளிருக்குத் தேவை பாதுகாப்பு அல்ல. உரிமை களே. விபச்சாரம் செய்பவர்களும் பொருளாதார சமூகத் தளத்தில் வளமடைந்தால் தங்களது உடலை விற்று பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மனிதநேயர் - ஆண்கள் முதலில் தங்க ளது பெண்களை சமமாக நடத்திட முன்வர வேண்டும். ஆண்டாண்டு காலமாக பழக்கப்பட்ட பெண் அடிமைத்தனத்திலிருந்து பெண்கள் விடுபட வேண்டும். கூட்டுப் புழுவைப் போல கூட்டுக் குள்ளேயே முடங்கிவிடக்கூடாது. பெண்களின் உயர்வு பெண்களின் வசம்தான் உள்ளது. ஆண்கள் அதற்குத் துணை புரிவதில் பெண் விடுதலைக்குப் பங்களிக்கலாம்.

சிறப்புரைக்குப் பின்னர் வருகை தந்தோரின் கேள்விகளுக்கு , கருத்துகளுக்கு சோனியா எக்க ரிக்ஸ், பாபு கோகினேனி விளக்கம் அளித்தனர். விவாத நேரம் கருத்துச் செரிவான, பெரியாரின் பெண் விடுதலைக் கொள்கையின் மேன்மையினை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.

நிகழ்ச்சியின் நிறைவாக பணி நிறைவு பெற்ற நீதிபதி ஆர். பரஞ்சோதி நன்றி கூறினார். 1-10-2012

தமிழ் ஓவியா said...

அருந்ததியர் இட ஒதுக்கீடு முக்கிய தீர்ப்பு
மதுரை, அக். 1- அருந் ததியர் இட ஒதுக்கீட் டுக்கு ஆட்கள் இல்லாத போது ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த வர்களை நியமிக்கலாம் என்று மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள் ளது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டத்தி லுள்ள கோட்டைகருங் குளத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய முதலியார் நடுநிலைப்பள்ளியின் செயலாளர் எஸ்.அண் ணாத்துரை, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனு வில் கூறி இருப்பதாவது: எங்களது பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாகும். மொத்தம் 6 ஆசிரியர்கள் பணி யாற்றி வருகிறார்கள். கடந்த 16.7.2009 அன்று பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். இதைத்தொடர்ந்து ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியானது. இந்த பணியிடத்தை அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மூலம் நிரப்ப மாவட்ட கல்வி அதிகாரி 16.2.2010 அன்று அனுமதி அளித்தார். அருந்ததியர் சமூ கத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் விண்ணப்பிக்கா ததால் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த தனபால் என்பவரை தேர்வு செய்து, கல்வி அதிகாரியிடம் அங்கீகா ரம் அளிக்க கேட்டோம். ஆனால் அவர் அங்கீகா ரம் அளிக்க மறுத்து 27.5.2011 அன்று உத்தர விட்டார். இந்த உத்த ரவை ரத்து செய்து விட்டு, தனபால் என்பவரை தேர்வு செய்ய அங்கீகா ரம் அளிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி வினோத்குமார்சர்மா முன்னிலையில் விசார ணைக்கு வந்தது. மனு தாரர் சார்பில் வழக் குரைஞர் கே.கே.கண் ணன் ஆஜராகி வாதாடி னார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது: அருந்ததியர் இட ஒதுக்கீட்டுக்கு ஆட்கள் இல்லாத போது ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்களை தேர்ந் தெடுக்கலாம் என்று ஏற் கெனவே அரசு உத்தர வில் கூறப்பட்டுள்ளது. அதுபோன்று அரசு உத்தரவு இருக்கும் போது, மனுதாரர் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரி யர் பணிக்கு கல்வி அதி காரி அங்கீகாரம் அளிக்க மறுப்பது சரியல்ல. அங் கீகாரம் அளிக்க மறுத்த கல்வி அதிகாரியின் உத் தரவு ரத்து செய்யப்படு கிறது. பள்ளி நிர்வாகம் தேர்வு செய்த தனபாலை ஆசிரியராக நியமிக்க கல்வி அதிகாரி அங்கீகா ரம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத் தரவில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

இனியவை நாற்பது

ஐ வாய வேட்கை அவா அடக்கல் முன் இனிதே;
கைவாய்ப் பொருள் பெறினும், கல்லார்கண் தீர்வு இனிதே;
நில்லாத காட்சி நிறை இல் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது.
(பாடல் -25)
ஐம்பொறி மற்றும் புலன்களை அடக்குதல் இனியது. தொடர்பு கொண்டால் பொருள் கிடைக்க வாய்ப்பிருந்தாலும், கல்லாதவருடன் சேராது இருத்தல் இனியது. கொள்கை லட்சியம் இல்லாதவருடன் நட்பு கொள்ளாமல் விலகி இருத்தல் இனியது.

- _ பூதஞ்சேந்தனார்

தமிழ் ஓவியா said...

பல்கலைக் கழகங்கள்

7 கோடி மக்களைக் கொண்ட தமிழ்நாட்டில் 53 பல்கலைக் கழகங்கள் மட்டுமே இருக்கின்றன. அதில் நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் 28. இந்தி யாவில் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப பல்கலைக் கழகங்கள் கல்லூரிகள் இல்லை.

நாடு மக்கள் தொகை பல்கலைக் கழகங்கள்

அமெரிக்கா 27 கோடியே 60 லட்சம் 2,500

ஜப்பான் 12 கோடியே 70 லட்சம் 726

ஜெர்மனி 8 கோடியே 20 லட்சம் 350

இங்கிலாந்து 6 கோடி 125

இந்தியா 110 கோடி 415

தமிழ் ஓவியா said...

தூக்கம் - தூக்கத்தில் நடப்பதேன்?தூங்காதே தம்பி! தூங்காதே!

வகுப்பில் ஆசிரியர் பாடம் கற்பிக் கும் போது மாணவன் தூங்குகிறான்.

அலுவலகத்தில் கோப்புகள் குன்றுபோல் குவிந்திருக்க அதன் பின்னால் அலுவலர் தூங்குகிறார்.

பேருந்தை ஓட்டுநர் ஓட்டிச் செல்கின்றார். பயணிகள் சிலர் தூங்கு கின்றனர். ஆனால் ஓட்டுநரும் தூங்கு கிறார்.

இரவு நேரத்தில் வங்கி பாதுகாப் புக்காக காவலாளி இருக்கிறார். அவர் தூங்குகிறார்.

இவர்களுக்கு, இந்த தூங்காதே தம்பி! தூங்காதே! என்ற பாட்டு ஏற்ற தாக அமையும்.

இரவில் நல்லா தூங்கனீங்களா? மருத்துவர் வினவுகிறார்.

அதாங்க! தூக்கமே வர மாட் டேங்குதுங்க டாக்டர்! வந்தவர் விடை யளிக்கிறார்.

இயற்கை அளிக்கும் பெரிய நன் கொடை தூக்கம் இந்த நன்கொடை யைப் பெறும் வாய்ப்பை இழந்தவர்கள் மன உளைச்சல் அடைகின்றனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களா கின்றனர்.

கட்டுமானப் பொருள்களின் விலை, கட்டுக் கடங்காமல் உள்ளதால், அந்த எண்ணத்தை தூங்க போட்டுட்டேன் என்கிறார் புத்திசாலியான பத்மநாபன்.

எங்க மாவட்டத்துக்கு 5000 விடுதலை சந்தா என்று சேர்த்து முடிக்கும் வரை எனக்கு தூக்கமே வராதுங்க இது பெரியார் தொண்டரின் துணிச்சல் உரை.

இந்த இருவரையும் சுட்டும் வகையில் திருவள்ளுவர்.
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை என்ற திருக்குறளில் கருத்தை வழங்கி யுள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க, தூக்கத் தில் இயங்கும் ஒரு நிலையும் உள்ளது. ஒருவர் நன்றாக தூக்கத்தில் இருக்கிறார். ஆனால் படுக்கையில் படுத்து இல்லை. தூக்க நிலையிலேயே நடக்கிறார். இது ஒரு வியாதியின் பாற் பட்டதாகக் கூறுகின்றனர். இந்த வியாதியை சோம்னரம்பிலிசம் (ஷிமீனீஸீணீனீதீறீவீனீ) என்று குறிப்பிடு கின்றனர். திஃபேம்லி டாக்டர் (ஜிலீமீ திணீனீவீறீஹ் ஞிஷீநீஷீக்ஷீ) என்ற இதழில் இந்த வியாதியைப் பற்றிய குறிப்பு கூறுவதைப் பார்ப்போம்.

அய்ந்து லட்சத்துக்கு மேல், அதாவது பிரிட்டிஷ் தீவின் ஒரு சதவீத மக்களுக்கு மேல் தூக்கத்தில் நடக்கும் பிணியால் பாதிக்கப்பட்டுள் ளனர். இவர்களில் பெரும்பாலானவர் கள் சிறுவர்களாவார்கள். பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளை களே பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். இதற்கு உளவியல் காரணம் கூறப்படுகிறது.

பள்ளியில் தேர்வு நடத்தும் பருவத்தின் போது, மாணவர்களுக்கு ஒரு வகை பயம் ஏற்படுகிறது. அந்த பயம் ஒரு காரணமாக அமைகிறது. (பள்ளி தேர்வு காலத்தில், பள்ளியில் வெடிகுண்டு உள்ளது என்ற பீதியை உண்டாக்கும் செய்தி வருவதையும் காண முடிகிறது.)

வீட்டில் பெற்றோர்களிடையே பூசலும், சண்டையும், கூச்சலும் இருந்தால் இந்த வியாதி தோன்றலாம். வீட்டில் உடல் நலம் பாதிக்கப்பட்ட வர்கள் இருந்து கவனிக்கப்படாது வரும் சூழல் இருந்தால் இந்த பிணி வரும் வாய்ப்புள்ளது. வீட்டில் உள்ள பையன், பெண்ணுக்கு, தங்கையோ, தம்பியோ பிறந்தாலும் இந்த மனநிலை ஏற்படும். உளநிலை அடிப்படையில் ஏற்படும் பிணிக்கு, மூடநம்பிக்கைக் காரணம் கூறுவதையோ, காத்து கறுப்பு வேலை என்று நினைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...


விஞ்ஞானிகளின் குழப்பமிகு கூற்றுக்கள்!


05-.07.-2012ஆம் நாள் தினசரி நாளிதழ்களில் கடவுளின் அணுத்து கள் கண்டுபிடிப்பு என்கிற தலைப்பில் விஞ்ஞானிகள் செய்தியொன்றினை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இக்கருத்தின் உடன்பாட்டில், கருத்துச் சொல்பவர் யார் என்பதைப் பார்க்காமல், சொல்லப் படுகிற கருத்து என்ன? என்று பார்ப்பதுதான் சரியான நிலைப்பாடாகும். உயரத்தி லிருந்து சொல்லப்பட்ட கருத்து. அதனால் கண்டிப்பாக ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்பது உடன்பாட்டுக்குரியதாக அமையாது.

பிக் பேங்க் (ஙிவீரீ ஙிணீஸீரீ) என்கிற பெருவெடிப்பு 1370 கோடி ஆண்டு களுக்கு முன் ஏற்பட்டு, அதன் காரணமாக பேரண்டப் பொருள்கள் சூரியன் (நட்சத்திரம்) மற்றும் கோள்கள் உட்பட அனைத்து விண்பொருட்களும் உருவாயின என்ற கருத்தைக் கூறி, அதற்கான சான்றுகள் தற்போது கிடைத்துள் ளன. அதுதான் கடவுளின் அணுத் துகள் என்று மிக அழுத்தமாகக் கூறியிருக்கிறார்கள்.


தமிழ் ஓவியா said...


ஏதோ வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவதைப் போல 1370 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய துன் பேரண்டம் என்ற கருத்தை உறுதிபடக் கூறியிருப்பதன் மூலம், இதுதான் பிரபஞ்ச உருவாக்கத்தின் ஆணி வேர்; இதுவே சரியான நிலைப் பாடு; என்று முடித்திருக்கிறார்கள்.

இதே கருத்தில், 1370 கோடி ஆண்டுகள் என்கிற அடையாளத்தை இவர்கள் எங்கிருந்து வரையறுக் கிறார்கள்? என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.

நாம் அறிந்தவரை, பூமியின் 365 சுற்றுக்கள் கொண்டது ஓர் ஆண்டு. இதன்படி 365 ஜ் 1370 கோடி என்கிற பெருக்கத்தின்படி பார்ப்பதனால் 365 ஜ் 13700000000 அய்ந்து லட்சத்து அய்ம்பது கோடி சுற்றுக்கள் சுற்றி முடித்த இறுதிச் சுற்றின் விளிம்பில் இக்கருத்தை ஒப்புக் கொண்டிருக் கிறார்கள்.

பேரண்டம் (பிரபஞ்சம்) தோன் றியதற்கு முன்பே பூமி தோன்றி விட்டதா? பேரண்டம் தோன்றியதற்கு முன்பே பூமி தோன்றி, அது சுற்றி வந்ததன் இந்த இறுதிச் சுற்றின் விளிம்பில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள் என்ற கருத்து நிலை நாட்டப் படுகிறது.

இது எந்த வகையில் சாத்தியப் படும்? என்பது கேள்விக்கு உரிய ஒன்று. தயவு செய்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எனது பெற்றோர்களின் திரு மணத்தின்போது, நான் பந்தல் அலங்காரம் செய்தேன் என்று ஒருவன் கூறுவானேயானால், நாம் அவனை எப்படி எடுத்துக் கொள்வோம். அதைப் போன்று இருக்கிறது இக்கூற்று.

தமிழ் ஓவியா said...

பேரண்டம் உருவானதற்கு பூமியின் சுழற்சிக் கணக்கை வைத்து அளவீடுகள் சொல்வது சரியான நிலைப்பாடு உடையதா? பேரண்ட உருவாக்கத்தின் தொடரைத் தொடர்ந்துதானே பூமி உருவாகி இருக்க முடியும்? (இதனை அறிந்து வரும் மனித உயிர்கள் அப்போது இருந்தனவா என்கிற கேள்வியைக் கூடத் தவிர்த்துவிடுவோம்.) இந்நிலையில் இதன் சுழற்சியைக் கொண்டு அளவீடுகள் கூறுவது எந்த வகையில் உடன் பாட்டுக்குரியதாகும்.

மேலும், மனித இயல்புகளுக்கு உட்பட்ட சிற்சில இயற்பியல் நிகழ்வுகளை அடையாளப்படுத்திப் பார்ப்பதானால், ஒரு பொருளை சற்று அழுத்தமாகத் தேய்த்தாலே அதில் எலக்ட்ரான் என்று குறிப் பிடக் கூடிய துகள் வெளிப்படுகிறது. இதன் மூலம் நாம் மிதமான வெப்பத்தை உணர்கிறோம். இந்த வெப்பம் வெளிப்படுத்தப் படுதலே எலக்ட்ரான்கள் வெளிப்படுவதாக அறிவியலின் அடையாளத் தைக் காண்கிறோம்.

இன்றைய நிலையில் உலகில் மிதமிஞ்சிய வேகம் என்பது ஒளியின் வேகம் மட்டும்தான். நொடிக்கு 1,86,000 மைல்கள் என்ற கருத்து இன்று அறிவியல் உலகத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. சூடேற்றப்படும் பொருட்கள் எதுவானாலும் அவைகளின் சிதைவு வெளிப்படும் வேகம் இதற்கு மிஞ்சிய வேகம் என்பது எதுவுமே கிடையாது. அறிவியலில் வரையறுக்கப்பட்ட நிலைப்பாடும் இதுவே. இதையும் மிஞ்சிய வேகத்தில் புரோட்டான் களை மோதவிட்டு புதிய அணு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதின் நிலைப்பாடே இந்த ஹிக்ஸ் போசான் என்கிற துகள் என்று கண்டு கொண்டதின் நிகழ்வில், அறிவியலில் புதியதொரு மைல் கல்லைத் தொட்டுவிட்டோம் என்கிற உண்மையை வெளிப்படுத்தியுள் ளதைப் பாராட்டிப் பெருமிதத்துடன் வரவேற்போம்.அதே கருத்தில், நமது வாழ்வியல் முறையில் சில பரிசோதனைகள் மூலம் கிடைக்கப்பெறும் நடப்பு உண்மைகள் நம்மைச் சுற்றிலும் நிகழ்ந்து வரும் இயற்பியல் உண்மை களாகும்.

சாதாரண ஒரு குவளையை எடுத்து அதில் நன்கு சூடேற்றப்பட்ட கொதிநீரை ஊற்றுங்கள். இதன்பின், அதனின் வெளிப்பகுதியில் உங்கள் விரலைக் கொண்டு செல்லுங்கள். குவளையின் தடுப்பு அரணையும் தாண்டி வெப்ப சலனத்தை உங்கள் விரல் மூலம் உணருவீர்கள்.
குவளையில் ஊற்றப்பட்ட நீர் சூடேற்றப் பட்டதனால் அதன் அணுக்கள் குவளையின் தடுப்பு அரணைச் சிதைவு படுத்தி அந்தத் தடுப்பு அரணின் துகள்களையும் இணைத்துக் கொண்டு வெப்பம் வெளிப்படுதலின் நிகழ்வு சாதாரண நிகழ்வாக இருக்கலாம். என்றாலும், அது ஓர் இயற்பியலின் அடையாளம் காட்டும் அறிவியல் நிகழ்வு. இந்த நிகழ்வை உணரும் நமது விரலும் சற்றேறக்குறைய சிதைவுற்று சூடு ஏற்படும் நிலையை உணர்கிற நிலையைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சாதாரணமாக இருந்த நீர், சூடேற்றப்பட்ட நிகழ்வில் ஏற்படும் அணுச்சிதைவு, இதன்பின், அது குவளையில் ஊற்றப்பட்டு, குவளையின் தடுப்பு அரணையும் சிதைத்து, அதன் துகள்களையும் இணைத்துக் கொண்டு துகள் சிதைவு வெளியேற்றப் படும்போது, ஏற்படும் சிதைவு. இதையும் தாண்டி வெளிப்புற புறவெளியில் வியாபிக்கும் வெற்றிடத்திலும் இருக்கக்கூடிய அணுக்களையும் (விண் நிறைத் தனிமங்களை) சிதைவுபடுத்தும்போது ஏற்படும் வெப்பத்தையும் நம் விரல் நுனி மூலம் அறிகிறோம்.

ஆக, அணுச்சிதைவு மற்றும் அதன் இணைப்பு என்பது பேரண்டத்தில் இடைவிடாது நடைபெறும் உருப் பெருக்கம் என்ற நிகழ்வைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் தொடர் செயலாகும். அணு உருவாவதும், அது ஒன்று சேர்வதும், பின்பு அழுத்தம் மிகுதியால் வெடித்துச் சிதறுவதும் இடையறாது நடைபெற்று வரும் சுழல்களமாகும். நிறுத்தம் இல்லாமல் இயங்கும் இக்களத்தின் பல்வேறு துகள்களின் நடுவே அங்கம் வகிக்கும் நாம், ஏன்? எப்படி? எதற்காக? என்கிற வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியில் சிந்திக்கும் திறனை மேலும் மேலும் வலுப்படுத்தும் இடத்தில் இருக்கிறோம்.- சிற்பி பாமா

தமிழ் ஓவியா said...

வெண்டிதாடி வேந்தருக்கு பிறந்த நாள்அது என்ன வெங்காயம்
அது எதுக்கு என்கின்றேன்
அய்யா நும் சொல் காதில் விழுகிறது.
அய்யா, உமக்கில்லை,
சுயமரியாதைக்கு அன்றோ
இன்று பிறந்த நாள்!
பகுத்தறிவுக்கு அன்றோ பிறந்த நாள்!!
அய்யா நாங்கள் தினமும்
அய்யமில்லாமல் பேசுவது ஒரு
பெரியாரால் பிழைத்தோம் என்று.
என்றாவது பேசுவதுண்டு,
பெரியார் இன்னும் எத்தனை தரம்
பிறக்க வேண்டுமென்று!
அய்யா உங்கள் கொள்கையில் வேறுபாடா
அய்யா உமக்கு அதைப்பற்றி அன்று கவலை இல்லை.
போனவன் போகட்டும்
வந்தவன் எல்லாம் வளரட்டும் என்றீர்கள்.
வாழும் பெண்கள் உம்மை
வாழ்த்தாத நாள் இல்லை.
வாழ்வு வந்தது உம்மால்!
வேலையா அது உம்மால்!
ஆடையா அது உம்மால்!
ஆரணங்குகள் சிக்கன
சிகைமுடிப்பா - அது உம்மால்!
உண்மையில் உம்மாலேயே
உடையை வைத்து
உடுத்தியவர் ஆணா? பெண்ணா?
உண்மையில் உரைக்க முடியாது.
வென்றது வெண்தாடி
வேந்தரே உம் புரட்சி!
வாழ்ந்தது பெண்மை
சுயமரியாதையுடன்!

- வழக்குரைஞர் வசந்தகுமாரி செல்லையா,சென்னை

தமிழ் ஓவியா said...

இங்கல்ல சீனாவில்!

சீன நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் முன்னாள் துணைத் தலைவர் ஜங் ஜிங்கிலிக்கு (Zhang Jingli) லஞ்சம் பெற்றது. முறையற்று வாழ்ந்தது ஆகிய குற்றங்களுக்கு சீன நீதிமன்றம் 17 வருட சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித் திருக்கிறது.

இந்த வருடம் சீன நாட்டில் அரசியல் தலைமை மாறிய பிறகு லஞ்சம் ஒழிப்பு நடவடிக்கைக்காக எடுக்கப்பட்ட மிகப் பெரிய முடிவு இது என சொல்லப்படுகிறது. 2007ஆம் வருடம் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது தேசிய மாநாடு நடைபெற்றது. 2007 வருடம் இதே துறையின் தலைவராக இருந்த ஜெங் ஜியாயூ, தவறான மருந்துகளுக்கு அனுமதியளிக்க லஞ்சம் வாங்கியதற்காக மரண தண்டனை வழங்கப்பட்டார்.

ஜங்ஜிங்கிலி, தனது மேலதிகாரிமீது தவறான குற்றச்சாட்டுக்களைக் கூறி மேலதிகாரிகளுக்கு 1,300 கடிதங்கள் எழுதும்படி அவருக்கு கீழ் உள்ள அதிகாரிகளை நிர்ப்பந்தம் செய்திருக்கிறார். 2010ல் Heaven of Earth (பூமியில் சொர்க்கம்) என்ற இரவு விடுதியில் ஜங் உல்லாசமாக இருந்ததற்கான சலனப்பட ஆதாரத்தை காவல்துறை கண்டுபிடித் திருக்கிறதாம்.

2007ஆம் ஆண்டு நடைபெற்ற 17ஆவது தேசிய கம்யூனிஸ்ட் மாநாட்டுக்குப் பிறகு இதுவரையிலும் 6 லட்சம் அரசு ஊழியர்கள் ஊழல் குற்றச்சாட் டுக்காக தண்டிக்கப்பட்டுள்ளார்களாம்.

சீன அரசியல் தலைவர்களில் ஒருவரான Boxilai யின் மனைவி குகைலாய் மற்றும் அவரது உறவினர்ஆகிய இருவர்மீதும் பிரிட்டிஷ் தொழிலதிபதிர் ஒருவரைக் கொலை செய்த வழக்கும் நடந்து வருகிறது.

சீனாவில் லஞ்சம், ஊழலை ஒழிப்பதற்காக அந்நாட்டில் ஆண்கள் இரண்டாம் திருமணம் செய்வதையும், சட்டப்படியில்லாத துணைவிகளை வைத்திருப்பதையும் தடுப்பதற்காக தேசிய திருமணத் தகவல் திட்டம் ஒன்றைக் கொண்டுவர இருக்கிறது. இது, இரண்டாம் மனைவியும், ரகசிய மனைவியும் வைத்திருக்கும் செல்வாக்கு மிக்க சீனர்கள் பலரை பாதிக்கும். சீன அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்களின் மனைவிகள் அவர்கள் சார்ந்த துறைகளில் அதிக செல்வாக்கு செலுத்துகிறார்களாம். இதனால்தான் சீனாவில் லஞ்சம், ஊழல் பெருகிவிட்டதாம். வரும் டிசம்பர் மாதத்திற்குள் பீஜிங், ஷாங்காய் நகரங்களில் திருமணம் குறித்த தகவல் பதிவுகள் கிடைத்துவிடுமாம். 2015க்குள் சீனா முழுமைக்கும் இந்தத் தகவல் பதிவு ஏற்படுத்தப்பட்டு விடும் என்கின்றனர் சீன அதிகாரிகள்.

கடந்த இரண்டு வருடங்களில், ஊழல் தடுப்பு விசாரணைகளுக்கு அதிக அளவில் ஆதாரங்களை இரண்டாம் மனைவிகள் மற்றும் துணைவிகள் சமர்ப்பித்திருக்கின்றனராம். இதன்படி சீனாவின் மிக முக்கியமான அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்கள் நீதிமன்றங்களால் விசாரிக்கப்பட்டுள் ளனர். இந்தத் தகவல்களின் அடிப்படையில் சிலர் மரண தண்டனையும் வழங்கப்பட்டுள்ளனராம்.

தொழில் அதிபர்களில் பலர் இரண்டாம் மனைவி யின் பெயரில் தொழில் உரிமை பெற்றிருக் கிறார்கள்.

மக்கள் உரிமை - 2012 ஆகஸ்டு 24 - 30) பக்கம் 10

தமிழ் ஓவியா said...

87 வயது இளைஞர் சிதம்பரம் புலவர் சி. இராசாங்கம்திராவிடர் கழகத்தின் பொதுக் குழு உறுப்பினராக இருக்கும் சிதம்பரம் புலவர் சி.இராசாங்கம் கொள்கையில் தீவிரப் பற்றும், இயக்கத்தில் அதிக ஈடுபாடும் கொண்டவர். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆகியோர் மீது அளவி டற்கரிய பற்றுதல் கொண்டவர். 87 வயதிலும் இளைஞரைப் போல இயக்க நிகழ்வுகளில் ஈடுபட்டு வருபவர். அவருடன் நேர்காணலுக் குச் சென்ற போது . . .

உங்கள் சொந்த வாழ்க்கை பற்றி . . .

ஆண்டிமடம் அருகிலுள்ள வடுகர் பாளையத்தில் சின்னத்தம்பி - பாக்கியத்தம்மாள் ஆகியோருக்குப் பிறந்தேன். சிறுவயதில் சிதம்பரம் வந்து வாழத் தொடங்கினோம். 1947இல் கல்யாணசுந்தரம் தலைமை யில் எனது திருமணம். ஆர்.பிச்சை யம்மாள் என் வாழ்வு இணையர்.

1952 முதல் 1957 வரை திருவெண்ணெய்நல்லூர் காந்தி நினைவு பள்ளியிலும், 1958 முதல் 1985 வரை சிதம்பரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியிலும் தமிழ் ஆசிரியராகப் பணி புரிந்தேன். என் துணைவியாரும் ஆசிரியர் பணி செய்து ஓய்வு பெற்றவர்தான். அன்பரசன், பொய்யாமொழி, நச்சினார்க்கினியன் எனும் மூன்று மகன்கள் எங்களுக்கு.

இயக்கத் தொடர்பு எது முதல்?

15 வயது முதலே கொள்கை உணர்வு என்று சொல்லலாம். முதன் முதலாக தந்தை பெரியார் உரையை சிதம்பரம் டவுன்ஹாலில் கேட்டதும், அதனால் ஈர்க்கப்பட்டு இயக்கவாதியாய் ஆனேன். பெரியார் பெருந்தொண்டர்கள் என்.வி.இராமசாமி, கு.கிருட்டிணசாமி ஆகியோர் நெருங்கிய பழக்கம். சப்ரிஜிஸ்திரார் பூவராகன், விடுதலை முகவர் கல்யாண சுந்தரம் ஆகியோருடைய சந்திப்பும், கொள்கை அளாவலும் எனக்கு உரமூட்டின.

சிதம்பரம் நகர தி.க. தலைவராகவும், தற்போது பொதுக் குழு உறுப்பினராகவும் இயக்கப் பொறுப்பில் இருந்த வாய்ப்பு.

மறக்க முடியாத நிகழ்ச்சி . . .

சிதம்பரத்தில் அய்யா பெரியாருக்கு வேன் அளித்த நிகழ்ச்சி மறக்க முடியாதது. உச்சநீதி மன்ற நீதிபதிகள் கொடும்பாவி எரித்து கடலூர் மத்திய சிறையில் 14 நாட்கள் இருந்ததும் மறக்கமுடியாத நிகழ்ச்சியே.

கழகத் தலைவர் - தமிழர் தலைவர் பற்றி . . .

இன்று பெரியார் அய்யா பெயர் விளங்குவதற்கு தமிழர் தலைவரே காரணம். உலகத்தின் பல நாடுகளில் பெரியார் பற்றிய செய்திகள் பரவிடவும், பெரியார் கொள்கை பரவிடவும் நமது தமிழர் தலைவரின் ஓய்வறியா உழைப்பே காரணம். அவரின் உழைப்புக்கு ஈடு இணை இல்லை என்பேன்.
வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

இயக்கத்தின் பால் ஏராளமாக இளைஞர்களை, மாணவர்களைச் சேர்க்க வேண்டும். பகுத்தறிவுப் பிரச் சாரம் பரவிட விடுதலை ஏடு நிரம்ப விற்கப்பட வேண் டும். விடுதலை பரவப் பரவ தமிழர்கள் கெடுதலையி லிருந்து விடுபடுவர் என்பது உறுதி. என் பொறுப்பில் 10 சந்தா தருகிறேன். அய்யாவின் கொள்கை பரவிட, தமிழர் தலைவரின் எண்ணம் ஈடேறிட ஒவ்வொரு கழகத் தோழரும் தன்னாலான பணியினை ஒவ்வொரு நாளும் இயக்கத்துக்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்பதே எனது விருப்பம்.

நேர்காணல்: முனைவர் துரை.சந்திரசேகரன் தி.க.பொதுச் செயலாளர்

உடன் மாவட்ட தி.க. தலைவர் ஜெ.கி.அருள்ராஜ் செயலாளர் கா.கண்ணன், நகர தலைவர் கோவி. குணசேகரன் ஆகியோர்.

தமிழ் ஓவியா said...

நீதிக்கட்சி முதல் மந்திரிசபை வகுப்புரிமை -சிறு வரலாறு


17.12.1920இல் சர்.பி. தியாகராயரால் சிபாரிசு செய்யப்பட்டு கடலூர் எ. சுப்பராயலு ரெட்டியார் பிரதமராக சென்னை மாகாண முதல் சட்டமனற கூட்டம் 12.1.1921இல் நடைபெற்றது.

1921இல் நீதிக்கட்சி இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்தும் சுமார் 7 வருடங்களாகச் செயல்பட முடியாமல் நிலுவையில் இருந்தது.

அடுத்து நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் பி. சுப்பராயன் தலைமையில் பிரதமராக சென்னை மாகாண அமைச்சரவை ஏற்பட்டது. சர். முத்தய்யா முதலியார் சேது ரெத்தினம் அய்யர் அமைச்சர்களாக இருந்தனர். அப்போது பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருந்த சர். முத்தையா முதலியார் பெரு முயற்சியில் தமது துறையினர்க்கு பொது 744 அரசாணை 15.9.1928 ஆம் நாளிட்ட வகுப்புரிமை ஆணையை நிறைவேற்றி அமல் படுத்தினார் பெரியார் பெரிதும் பாராட்டினார்.அதோடு எல்லா துறைகளிலும் வகுப்புரிமையை நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்தார் அதன்படி நிறைவேறியது டாக்டர் பி. சுப்பராயன் அவர்கள் அமைச்சரவை எல்லாத் துறைகளிலும் அமல் செய்ய உத்தரவிட்டார். பார்ப்பனரல்லாதார் அரசு அலுவல்களில் வேலை வாய்ப்புகள் பெற்றனர் கல்வி வாய்ப்பு பெற்றனர். அதன்பிறகு சென்னை மாநில மத்திய அரசு துறைகளில் வேலை பார்க்கும் பார்ப்பனரல்லாதார் பயன் பெறும் வகையில் நீதிக்கட்சி பிரதமர் 1935இல் பொப்பிலி ராஜா சர். ஆர்.கே. சண்முகம், சர் ஏ. ராமசாமி ஆகியோர் முயற்சியினால் Home Department Establishment Special Order Seperate Reservation for Madras Non Brahmin 15.3.1935
இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது.

தென்னிந்திய ரயில்வே அஞ்சல் துறை துறைமுகம் போன்ற மத்திய அரசு ஊழியர்களும் பயனடைந்தார் கள். இதில் பார்ப்பனரல்லாதாரில் பிற்படுத்தப்பட்டவர் தாழ்த்தப்பட் டவர் வகுப்புகளும் பயனடைந்தனர். 15.8.1947இல் இந்தியா சுதந்திரம் பெற்றதும் பார்ப்பனர்கள் முயன்று மேற்கண்ட மத்திய அரசு உத்திரவை 30.9.1947இல் ரத்து செய்யும்படி செய்து விட்டார்கள். அதன்பிறகு இந்திய அரசியல் சட்ட வரைவு குழுவில் பார்ப்பனர் இருந்ததால் இந்தியா 26.1.1950இல் குடியரசு நாடாக ஆனதும் இடஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்குத் தொடுத்தது 28.7.1950இல் சென்னை உயர்நீதிமன்றமும் செப்டம்பரில் உச்சநீதிமன்றமும் இடஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பு அளித்தன.

நீதிக்கட்சி 1928முதல் 22 ஆண்டு காலம் பார்ப்பனரல்லாதாருக்கு வழங் கப்பட்ட சலுகை நிறுத்தப்பட்டது பெரியார் வெகுண்டு எழுந்து மக்களை யும் மாணவர்களையும் திரட்டி மாபெரும் கிளர்ச்சி செய்தார். திருச்சி யில் 3.12.1950இல் வகுப்புரிமை கோரி சர். எஸ். முத்தய்யா முதலியார் தலை மையில் மாநாடு நடத்தினார். அப் போது சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் பிரதமர் ஜவகர்லால் நேரு தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் காமராஜ் அவர்கள் முயற்சி செய்து டில்லி பாராளுமன்றத்தில் இந்திய அரசியல் சட்டம் வகுப்புரிமை சட்டம் முதலில் திருத்தப்பட்டு 1951ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகின்றது.

தற்போது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் முயற்சியால் 69 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகின்றது. மேலும் உச்ச நீதிமன்றமும் 69 சதவீதம் இடஒதுக்கீடு தொடரும் என தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

- இனியன் பத்மநாதன்

தமிழ் ஓவியா said...

சிறப்பான வாழ்வுக்கு சீரிய சிந்தனைகள்


இந்த நாட்டுப் பத்திரிக்கைகள் யாவும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் உள்ளன. பார்ப்பனர்கள் நினைத்தால் கழுதையையும் கூட மகாத்மா வாக்கி விடுவார்கள். நல்லவனை அயோக்கியன் என்று மக்கள் நம்பும் வகையில் கட்டுப்பாடாக எழுதிப் பிரச்சாரம் செய்வார்கள் . - தந்தை பெரியார்
இன உணர்ச்சி ஏற்பட்டு, ஆரிய மாயை அகன்றால் நாடு நலம் பெறும்! - அறிஞர் அண்ணா

இந்தியாவில், நம்ப முடியாத பல கட்டுக்கதைகளையும் புகுத்தி தொல்லைகளைத் துவக்கி வைத்தவர் பார்ப்பனர்களே! - காரல் மார்க்ஸ்

திராவிடத்தில் இருள் சூழக் காரணம் ஆரியமே! - கால்டுவெல்

வரலாற்றில் இடையில் தோன்றிய பார்ப்பனீயம் காலமென்னும் மணல் வெளியில் எண்ணற்ற இரத்தம் தோய்ந்த காலடிகளைப் பதித்த பின்பும் தொடர்ந்து இந்துக்களின் மீது அதிகாரம் செலுத்தி கொள்ளையடித்தே வருகின்றது - பாபுராவ் படேல்

ஆரியர்கள் என்றைக்கு இந்த நாட்டில் காலெடுத்து வைத்தார்களோ, அன்று முதல் தமிழையும் தமிழரின் கலையையும், கலாச்சாரத்தையும் ஒழிப்பதிலேயே கண்ணுங்கருத்துமாயிருந்து வருகின்றார்கள் - மறைமலை அடிகளார்

பார்ப்பனர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக ஆக்கிக் கொண்டு அந்த நிலைமையத் துஷ்பிரயோகப் படுத்தித் தங்கள் இஷ்டம்போல் எல்லாம் தங்களுக்கு அனுகூலமான சகலவிஷயங்களையும் உட்படுத்திக் கட்டுக் கதைகளை எழுதி வைத்துக் கொண்டார்கள் - ஹென்றி பெரிட்ஜ்

அய்யாவின் கருத்துக்கள் அகிலத்தையே வெல்லும் நாள். வெகுதொலைவில் இல்லை!.. என...பகுத்தறிவுப் பாதையில்..... எழுக! இளைஞர்களே....எழுக!

தொகுப்பு: நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

கடன்காரக் கடவுள்!

செய்தி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவ நாளில் ஒரு நாள் உண்டியல் வசூல் ரூ. இரண்டரை கோடி.

சிந்தனை: திருவாளர் ஏழுமலையான் தனது கலியாணத்துக்காக குபேரனிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காகத்தான் இந்த உண்டியல் வசூலாம்.
ஓ, நம்ம கடவுள்கூட கடன்காரன்தானா?

தமிழ் ஓவியா said...

சமூக நீதியாளர்களின் முக்கிய கவனத்துக்கு: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கைஇடஒதுக்கீட்டு உரிமையை மத்திய மருத்துவக் கவுன்சில் சட்ட விரோதமாக வழிப்பறி செய்யும் வேலையில் இறங்கி இருப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதன் கொடுமையை மாநிலங்கள் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசில் பார்ப்பனீயம்!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நுழைவுத் தேர்வு என்பது சட்டப்படி ஒழிக்கப்பட்டுள்ளது என்றாலும், மருத்துவக் கல்வியில் மத்திய அரசு மிகப் பெரிய பார்ப்பனீயத்தைச் செய்து வருகிறது.

இளநிலை மருத்துவக் கல்வி

இளநிலை மருத்துவக் கல்லூரிகளில் (எம்.பி.,பி.எஸ்.,) இரு பால் மாணவர்களைச் சேர்த்திட அகில இந்திய அடிப்படையில் தேசிய நுழைவுத் தேர்வு ஒன்றை நடத்துகிறது இந்திய மருத்துவக் குழு (Medical Council of India) . ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 15 விழுக்காடு இடங்களை மத்தியத் தொகுப்புக்கு எடுத்துச் சென்று, அந்த இடங்களை நிரப்ப நுழைவுத் தேர்வு நடத்துகிறது.


பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடையாது

இந்திய அளவில் இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் இடங்கள் 2503 (தமிழ்நாட்டில் இருந்து எடுத்துச் செல்லப்படும் இடங்கள் 320). நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்படும் இந்த இடங்களில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு 15 விழுக்காடு, மலைவாழ் மக்களுக்கு ஏழரை விழுக்காடு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அறவே கிடையாது என்கிற கொடுமையை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இந்த 2503 இடங்களில் திறந்த போட்டிக்கான இடங்கள் (பெரும்பாலும் உயர்ஜாதிக்காரர்கள்) 1848. தாழ்த்தப்பட்டவர்களுக்கு 364 இடங்கள். பழங்குடி மக்களுக்கு 181 இடங்கள் கிடைக்கும். 27 விழுக்காடு அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 675 இடங்கள் கிடைக்கவேண்டும். ஆனால் கிடைப்பதோ வெறும் 37 இடங்கள் மட்டும்தான். அதாவது ஒரே ஒரு சதவிகிதம்தான். 27 சதவிகிதம் எங்கே? ஒரு சதவிகிதம் எங்கே?


முதுநிலை மருத்துவக் கல்வியிலும் . . .

இதே போல மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மற்றும் டிப்ளோமா வகுப்பில் (எம்.டி., எம்.எஸ்., போன்றவை) சேர்வதற்கும் அகில இந்திய அளவில் ஒரே ஒரு நுழைவுத் தேர்வு வைக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு மாநிலத்தி லிருந்தும் 50 விழுக்காடு இடங்கள் மத்திய தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
தமிழ்நாட்டிலிருந்து மத்திய தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படும் இடங்கள் 1000. இதிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அறவே இல்லை.

வஞ்சக நடவடிக்கை

இந்தக் கொடுமையை அனுமதிக்கலாமா? போராடிப் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டு உரிமையை மத்திய மருத்துவக் கவுன்சில் மத்திய அரசின் துணையோடு வஞ்சகமாக, சட்ட விரோதமாக வழிப்பறி செய்யும் ஒரு வேலையில் இறங்கி இருப்பதைத் தடுத்து நிறுத்தவேண்டாமா?

பொய்யான தகவல்!

இதில் மேலும் ஒரு கொடுமை என்ன தெரியுமா? இப்போதுள்ள நிலையில் முதுநிலை மருத்துவம் படிப்பதற்கு பல நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது; இது மாணவர்களுக்கு பெரும் சுமையாக இருப்பதால் ஒரே ஒரு நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துகிறோம் என்று சமாதானம் சொல்லப் படுகிறது. மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது நியாயந்தானே என்று நினைக்கக் கூடத் தோன்றும்.
இதாவது உண்மையா? இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வு டில்லியில் உள்ள எய்ம்ஸ், சண்டிகரில் உள்ள பி.ஜி.அய். புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் இவற்றுக்குப் பொருந்தாதாம். இந்த மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்குத் தனித் தனியாகத்தான் நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமாம்.
எப்படிப்பட்ட மோசடியான - தந்திரமான அணுகு முறைகள் பார்த்தீர்களா?

தமிழ் ஓவியா said...


மற்றொரு அதிர்ச்சித் தகவல்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவம் படிக்கும் (எம்.பி.,பி.எஸ்.,) மாணவர்களுக்கு முதுநிலைப் பட்டம் பெறுவதற்கு 30 விழுக்காடு இடங்கள் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டுமாம்! நுழைவுத் தேர்வில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண்களை தாழ்த்தப்பட்டவர்களோ, பிற்படுத்தப் பட்டவர்களோ பெறாத பட்சத்தில் அந்த இடங்களும் திறந்த போட்டிக்குக் கொண்டு போகப்படுகின்றன.

இளங்கலை மருத்துவக் கல்லூரியில் சேர மத்திய தொகுப்புக்கு 15 விழுக்காடு இடங்கள் போக மீதி இடங்கள் +2 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தான் தமிழ்நாட்டில் இருபால் மாணவர்களும் சேர்க்கப் படுகின்றனர். தமிழ்நாட்டில்தான் நுழைவுத் தேர்வு கிடையாதே. இப்பொழுது அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. இனி அந்த இடங்களுக்கும் சேர்த்து இந்திய அளவில் தேசிய நுழைவுத் தேர்வை நடத்துவார்களாம். மாநில உரிமைகளைக் கேள்வி கேட்பாரின்றி அபகரித்துக் கொள்ளும் அநியாயம் அல்லவா இது?
என்ன கொடுமை இது! விழித்திருக்கும் பொழுதே விளையாடும் போக்கிலித்தனமான செயல் பாடுகளை முறியடித்தாக வேண்டும். தாழ்த்தப்பட்டவர் களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு அளித்து, பிற்படுத்தப் பட்டோருக்கு அளிக்காதது பிரித்தாளும் சூழ்ச்சியாகும். இதற்கு யாரும் பலியாகிவிடக்கூடாது.


முதல் அமைச்சர் கவனத்துக்கு . . .

தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, இட ஒதுக்கீட்டில் தலைக்கு மேல் தொங்கும் கொ(டு)லை வாளினை அகற்றும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு அறவேயில்லை என்பதை அழுத்தமாகச் சுட்டிக்காட்டி தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணுக்கான சமூக நீதி உணர்வை வெளிப்படுத்தவேண்டும்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பங்கு வகிக்கும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் (சமூக நீதி உணர்வில் யாருக்கும் சளைத்தவர் அல்லர் கலைஞர் அவர்கள்.) இதில் தலையிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

சமூக நீதியில் அக்கறை உள்ள கட்சிகளும் இதனை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். அடுத்து அனைவரையும் ஒன்று திரட்டி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியில் திராவிடர் கழகம் ஈடுபடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை
27.9.2012

கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

எதுதான் சமூகநீதி?

இதுவல்ல சமூகநீதி? - எனும் தலைப்பில் தினமணி தலையங்கம் தீட்டியுள்ளது (26.9.2012).

1992 இல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினூடே சொல்லப்பட்ட ஒரு வாசகத்தைப் பிடித்துக் கொண்டு இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பாளர்கள், தங்கள் எதிர்ப்பு ஏவு கணையை ஏவிக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 69 சதவிகித இட ஒதுக்கீடு என்பது சட்ட ரீதியாகப் பாதுகாக்கப்பட்டு விட்டது.

76 ஆவது சட்டத் திருத்தம் செய்யப்பட்டு 9 ஆவது அட்டவணையிலும் பாதுகாப்பு செய்யப்பட்டு விட்டது. இந்தப் பாதுகாப்பு என்பதே - நீதிமன்றம் தலையிடக் கூடாது என்பதற்காகத்தான். (அதில் கூட தலையிட முடியும் என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருப்பது என்பது - நாடாளுமன்றம், நீதிமன்றம் இவற்றிற்கிடையே ஒரு மோதல் போக்கை உருவாக்கக் கூடியதாகும்).

50 சதவிகிதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்று கறாராக உச்சநீதி மன்றம் சொல்லவில்லை. மாநிலத்திற்கேற்ற சூழலில் விதிவிலக்குகள் உண்டு என்று உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டும் இருக்கிறது.

குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் பெரும் எண்ணிக்கையில் மலைவாழ் மக்கள் இருப் பதைக் கணக்கில் கொண்டு 80 சதவிகிதம் வரை கூட இட ஒதுக்கீட்டின் அளவு சென் றுள்ளதே!

உச்சநீதிமன்றம் காலங்காலமாக வலியுறுத்தி வரும் கிரீமிலேயர் பிரிவினரை இந்த இட ஒதுக்கீட்டிலிருந்து நீக்கும் திட்டத்தை எந்த அரசும் வாக்கு வங்கி அரசியலுக்காக ஏற்கத் துணிவில்லாமல் இருக்கின்றன என்று நச்சுப் பொடி தூவுகின்றது தினமணி!

காலங்காலமாக உச்சநீதிமன்றம் சொல்லி வருகிறதாமே? நூறு ஆண்டுகளாகவா? 150 ஆண்டுகளாகவா?

உண்மையைச் சொல்லப் போனால் காலாகாலமாக கல்வியைத் தங்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு செய்துகொண்ட பார்ப்பனர்களுக்காகத்தானே தினமணி இப்படி பேனா நர்த்தனம் ஆடுகிறது?

இந்தக் கிரீமிலேயர் சரியான அளவுகோல் அல்ல என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை.

தொடக்கத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சம் என்று ஆரம்பித்து இப்பொழுது நாலரை இலட்சம் ரூபாய் என்று மாற்றியமைக் கப்பட்டுள்ளதே! இதனை எப்படி நிலையான அளவுகோலாகக் கருத முடியும்?

வாக்கு வங்கி அரசியல் இருப்பதால்தான் கிரீமிலேயர் அளவுகோலை அரசியல் கட்சிகள் ஏற்க மறுப்பதாக தினமணி தலையங்கம் தீட்டுகிறதே - அப்படியே பார்த்தாலும் பெரும் பாலான வாக்கு வங்கி என்பது தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்தானே? அவர் களின் நலன்களுக்கு எதிராக செயல்பட எந்த அரசியல்வாதிக்குத்தான் துணிவு ஏற்பட முடியும்?

பயனடைந்தோர் மீண்டும் மீண்டும் சலுகைகளை அனுபவிக்கிறார்களாம் - இது ஒரு நவீன வர்ணாசிரமமாம்! வர்ணாசிரமம்பற்றி தினமணி வைத்தியநாதய்யர்கள் பேசலாமா?

இந்தத் தலையங்கம்கூட வர்ணாசிரம வெறியின் ஊற்றுக்கண் பீறிடல் தானே?

இந்தப் பிரச்சினை தீருவதற்கு மிக எளிதான வழிமுறை இருக்கவே இருக்கிறது.

நூற்றுக்கு மூன்று சதவிகிதமாக இருக்கிற பார்ப்பனர்களாகிய எங்களுக்கு அந்த மூன்று சதவிகிதம் மட்டும் இட ஒதுக்கீடு செய்தால்போதும் என்று ஒரு வரி எழுதட்டுமே! பார்ப்பன சங்கத்தைக் கூட்டித் தீர்மானமும் போடட்டுமே - ஒரு நொடியில் பிரச்சினை தீர்ந்துவிடுமே!

முன்வருமா தினமணி, துக்ளக், தினமலர் வகையறாக்கள்? 29-9-2012

தமிழ் ஓவியா said...

சேது கால்வாய்த் திட்டம் மேலும் தாமதிக்கக்கூடாது! : திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கைசேது சமுத்திரக் கால்வாய் திட்டப் பணிகள் மீண்டும் துவக்கி நடத்திட தமிழ்நாட்டு நலன் நாடுவோரை ஒன்று திரட்டி அழுத்தம் கொடுத்து, குரல் கொடுக்க முன் வருதல் அவசியம் தேவை தேவை என்று தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நேற்று (27-9-2012) புதுடில்லியில் திருமதி சோனியா காந்தி அவர்களது தலைமையில் கூடிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (U.P.A) யின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முக்கிய முடிவுகளைப் பற்றி செய்தியாளர்களிடம் அறிவித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டப் பணிகளை மீண்டும் துவக்கி நடத்திட உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்யும், இது பற்றி விரைவில் மத்திய அமைச்சரவை முடிவு எடுக்கும் என்று அறிவித்துள்ளார்.

இதை கட்சிக்கப்பாற்பட்ட அனைத்து மக்களும், தமிழ்நாட்டு வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்டுள்ள கட்சிகளும் அமைப்புகளும் வரவேற்கும் என்பது உறுதி.
இதற்கு முன் சுமார் 2000 கோடி ரூபாய்களைச் செலவழித்த பிறகு, இராமன் பாலம் அங்கே இடிபடுகிறது என்று கூறி, மதவாத மூடநம்பிக்கையைக் குறுக்கே கொண்டு வந்து போட்டு உச்சநீதி மன்றத்தில் நிறுத்தச் சொல்லி வாதாடிய பார்ப்பனீயத்தின் போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது.

தனது கட்சியின் இரண்டு, மூன்று தேர்தல் அறிக்கைகளில், ஏன் விரைவாக சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு முடிக்கவில்லை என்று குற்றம் சுமத்திய அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்கள், அதற்கு நேர்மாறாக இராமன் பாலம் உடையும் எனவே, அது கூடாது என்றும் கூறியதை என்னவென்று சொல்வது? அதிலும் சுப்பிரமணிய சுவாமி ஒருபுறம், இவர் இன்னொரு புறம் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அதன் விளைவாக உச்சநீதிமன்றம் ஒரு நிபுணர் ஆய்வுக் குழுவிடம் வேறு வழித்தடங்களில் திருப்ப வாய்ப்பு உள்ளதா என்று ஆராயும்படி கேட்டது. அந்த நிபுணர் பச்சோரி 3 ஆண்டுகள் ஆன நிலையில் ஆராய்ந்து ஆறாம் வழித்தடம்தான் - தற்போது ஆடம்ஸ் பாறைகள் உள்ள - (கற்பனையான இராமன் பாலம் பகுதி) பகுதிதான் உகந்தது. வேறு தடங்களில் மாற்றினால் வேறு சிக்கல் வரும். பணிகள் எளிதில் முடியாது என்று திட்ட வட்டமாகவே கூறிவிட்டது.

இனியும் காத்திராமல், தென் மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டின் தென் மாவட்ட மக்களுக்கும் வேலை வாய்ப்பினையும் பொருளாதார வளர்ச்சியையும் தரும் சேது கால்வாய்த் திட்டத்தை முடிக்கும் பணியை - உச்ச நீதிமன்றத்தினை உடனே அணுகி, வழக்கை முடித்து செயல்பாட்டைத் துவக்கிட வேண்டியது அவசரமும் - அவசியமும் ஆகும்!

எனவே உண்மையான தமிழ்நாட்டு நலன் நாடுவோரை ஒன்று திரட்டி அழுத்தம் கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.ஒத்த கருத்துள்ள அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க முன்வருதல் தேவை! தேவை !!

தமிழர்களின் 150 ஆண்டு கால கோரிக்கையும் தேவையுமான இத்திட்டம் - மக்கள் வரிப்பணம் ரூ.2000 கோடி செலவு செய்யப்பட்டும் முழுமையடையாமல் இருப்பது வேதனைக்குரியது என்பதாலும் அதன் மூலம் கிடைக்கும் பயன் மிகவும் முக்கியம்.
இலங்கைக்கு உதவிடும் வகையில் இத்திட்டத்தின் எதிர்ப்பாளர்கள் நடவடிக்கை அமைகிறதோ என்ற அய்யத்தையும் எவரும், எளிதில் புறக்கணித்துவிடமுடியாது!

எனவே விரைந்த செயல் தேவை!

சென்னை
28.9.2012

கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

நம்மை நோக்கியல்ல - மக்களை நோக்கிச் செல்வோம் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு மற்றும் சோதனைகளை மேற்கொள்வோம்! செய்தியாளர்களிடம் கழகத் தலைவர்திருச்சி, செப். 28- கிராமப் பகுதி களில் புற்றுநோய்ப் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில், நடமாடும் வாகனத்தின் மூலம் புற்று நோயைக் கண்டறிந்து குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் ஒரு திட்டத்தை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் (23.9.2012) கூறினார்.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற நிறுவனம் பதிவு செய்யப்பட்டு, பெரியார் அவர்களால் தொடங்கப்பெற்ற சுயமரியாதை இயக்கத்தின் சொத்துக்கள் இவை களையெல்லாம் பாதுகாத்து, அந்த அறக்கட்டளை சிறப்பாக இயங்கு கின்ற வகையிலே, இப்போது 60 ஆவது ஆண்டு விழா நிறைவு விழா - சரியாக 60 ஆண்டுகளுக்கு முன்னாலே இதே திருச்சியில்தான் தந்தை பெரியார் அவர்கள், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் என்ற இந்த நிறு வனத்தை பதிவு செய்தார்கள்.

இந்நிறுவனத்தை அறக்கட்டளை யாக அங்கீகரிக்கமாட்டோம் என்று வருமான வரித்துறையினர் உட்பட பல வகையிலும் தடைகள் இருந் தாலும், அதையெல்லாம் தாண்டி ஒரு மிகச் சிறப்பான அறக்கட்டளையாக வருமான வரித்துறையே அங்கீகரிக்கக் கூடிய வகையில், தந்தை பெரியார், அதற்குப் பிறகு தலைமை தாங்கிய அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் இவர்கள் காலத்திலே 60 லட்சம் ரூபாய், 80 லட்சம் ரூபாய் என்றெல் லாம் வரி போடப்பட்டு, பிறகு அதை எதிர்த்து Income Tax Appellate Tribunal (ITAT) மேல்முறையீட்டுக் கழகத்தின் சார்பாக இந்நிறுவனம் அங்கீகரிக்கப் பட்டு, அதன் பிறகு மிகப்பெரிய அறக்கட்டளையாக வளர்ந்தது.

இன்றைக்கு 60 ஆண்டு நிறைவு விழாவை குறிக்கக் கூடிய வகையில், ஆக்க ரீதியான பணிகளைச் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு அறக்கட்டளையின் டிரஸ்டிகளாகிய நாங்கள் எல்லோரும் வந்தோம்.

கடவுளை மற - மனிதனை நினை

காரணம், தந்தை பெரியார் அவர் களை கடவுள் மறுப்பாளராக மட் டுமே வெளியே காட்டுகிறார்கள். அவரை விட தலைசிறந்த மனிதநேயர் வேறு யாரும் கிடையாது.

கடவுளை மற என்று சொன்ன தந்தை பெரியார், மனிதனை நினை என்பதை வலியுறுத்தினார். அந்த அடிப்படையிலே இன்றைக்குக் கூட மிகப்பெரிய அளவில் மக்களை மிரட்டிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நோய் - கொடிய நோய் என்று கருதக் கூடிய நோய் - புற்றுநோய் ஆகும். இந்நோயைக் கண்டுதான் எல்லோரும் அஞ்சுகிறார்கள்.

தமிழ் ஓவியா said...


இந்நோய் ஆரம்பக் கட்டத்தில் குணப்படுத்தக் கூடியதாக இருந்தா லும்கூட, அந்நோயைக் குணப்படுத் தாமல் விட்டால், அந்நோய் இருபால் மக்களுக்கும் உயிர்க்கொல்லி நோயாக அமைகிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

எளிதாக முதலில் இந்நோயை அடையாளம் கண்டால், குணப்படுத் திவிட முடியும் என்பதை எல்லோருக் கும் தெரியும் வகையில், விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். நம்முடைய ஊடகங்கள் அதனை தெளிவுபடுத்த வேண்டும்.

நாங்கள் இன்றைய தினம் ஒரு தனி வேன் மூலம் ஏற்பாடு செய்துள்ளோம். நகரும் மருத்துவமனையாய் அது இயங்கும். புற்றுநோய்க்கான ஆராய்ச் சியை மேற்கொள்வோம் - இந்நோ யைக் கண்டுபிடிக்கக் கூடிய வகையில் எளிய முறையில் பரிசோதனை செய்து ஆண் - பெண் இருபாலரும் செய்து கொள்ளலாம். குறிப்பாக பெண்கள் அதிகமாகப் பயன்படுத்திக் கொள் ளலாம்.

புற்றுநோய் - தொடக்கத்தில் கண்டு அறிவோம்!

ஒவ்வொரு மாதமும் சுற்று வட் டாரத்தில் உள்ள கிராமத்திற்குச் செல்லும், ஏனென்றால், நகர மக் களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதனால்தான் கிராமத்திற் குச் செல்லுகிறோம். மருத்துவம னைக்குப் போய் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்றால், பல பேர் தயங்குவார்கள். இந்நோய் இருக் கின்றது என்று சொல்வதற்கே பலர் கூச்சப்படுகிறார்கள், வெட்கப்படு கிறார்கள். மற்ற நாட்டவர் எல்லாம் நோயை சொல்வதிலே கூச்சப்படுவ தில்லை.

ஆகவே, எல்லோருக்கும் சோதனை என்ற முறையிலே ஆய்வு செய்வதற்குத் தான் இந்த வேனை பயன்படுத்தவிருக் கிறோம்.

கணினிப் பயிற்சி

அதுபோலவே, அறிவியல் முறை யிலே இன்றைக்குக் கணினி யுகமாக இருக்கிறது. எவ்வளவுதான் மெத்த படித்த மேதாவிகளாக இருந்தாலும், கணினியைப் பயன்படுத்தத் தெரிய வில்லை என்றால், தற்குறிகள்தான்.

எனவே, புது வகை தற்குறிகள் இப்போது உருவாகிக் கொண்டிருக் கிறார்கள். ஆகவே, அதனைப் போக்க வேண்டும். எந்த வயதினராக இருந் தாலும், ஒரு வாரம், பத்து நாள், ஒரு மாதம் முயற்சித்தால், இன்றைக்குக் கணினியைப்பற்றி கற்றுக்கொள்ள முடியும். கணினி அறிவைப் பெருக்க வேண் டும் என்பதற்காக ஒரு வேனை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

புற்றுநோய்க்கான வேனை நம் முடைய ஜெகதீஷ் சந்திரபோஸ் அவர் கள் ஒரு சிறந்த டாக்டர்; அவர்கள் இதனைத் தொடங்கி வைத்திருப்பது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியைத் தருகிறது. அதேபோல, கணினி யுகத் திலே மிகப்பெரிய அளவிற்கு குபேரன் அவர்கள் நல்ல பணியைச் செய்து கொண்டு வருபவர். அவர்கள் இங்கே வந்து மிகச் சிறப்பாக செய்தார்கள்.

பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்) அதிலே இருக்கக் கூடிய தலைசிறந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் அருணன் அவர் கள் இங்கே அறிவியல் கண்காட்சி யைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள்.

எல்லா கிராமங்களுக்கும் சென்று வருங்காலத்தில் பிரச்சாரம் செய்து, மக்களை மூட நம்பிக்கைகளிலிருந்து வெளிக்கொணர்ந்து அறிவியல் மனப் பான்மை (Scientific Temper) என்பதை உருவாக்கும் என்பதற்காக இந்த ஆக்கப் பணிகளையெல்லாம் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தின் 61 ஆம் ஆண்டு தொடக்க விழா விலும், 60 ஆம் ஆண்டு நிறைவு விழா விலும் நாங்கள் செய்கின்றோம்.

மக்களை நோக்கிக் கல்வி

நாட்டிலே கல்வி என்பது கல்விக் கூடங்களிலே மட்டும்தான் சொல்லிக் கொடுக்கப்படும் என்பதைத் தவிர, கல்விக் கூடங்களே மக்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று சொல்லக் கூடிய அளவிற்கு, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் இன்றைக்கு ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கி இருக்கிறது. அதனை ஊடகங்களின் ஒத்துழைப்போடு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உரையாற்றினார்.

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வைர விழா திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் நடைபெற்றபோது பேட்டி அளித்தார். இந்திய அறிவியல் கழக பேராசிரியர் இ.அருணன், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப குழுமத்தின் தலைவர் ப.குபேரன், பிரபல மருத்துவர் எஸ்.ஜெகதீஸ் சந்திரபோஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

29-9-2012

தமிழ் ஓவியா said...

மோடியின் முகம்!

குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடியின் ஆட்சிபற்றி பார்ப்பன ஊடகங்கள் புகழும் வார்த்தைகளைச் சொல்லி மாளாது. தொழிற்புரட்சி என்றால் குஜராத்தைப் போய் அல்லவா பார்க்க வேண்டும் என்று பராக்குப் பாடுவார்கள்.

மோடி ஆட்சிக்கு முன்பிருந்தே குஜராத் தொழில் வளம் மிக்க மாநிலம்தான். இந்தியா முழுமையும் குஜராத்திகள் தங்கள் வியாபார சாமராஜ்ஜியத்தை நிறுவியவர்கள் தாம்.

அப்படியே மோடி ஆட்சியின் காரண மாகத்தான் குஜராத் தொழில் வளம் கொழிக்கிறது என்று வைத்துக் கொள்வோம்! அதற்காக அவரின் எல்லாவிதமான வெறி பிடித்த முஸ்லிம் எதிர்ப்பு ஒழிப்புக் கொள் கைகளையும், நடவடிக்கைகளையும் சகித்துக் கொள்ள வேண்டுமா? சிறுபான்மையின மக்களுக்கு இந்திய அரசமைப்புச் சாசனத்தில் அளிக்கப்பட்டுள்ள வாய்ப்புகளை எல்லாம் புறந்தள்ளக் கூடியவர் -சட்ட ரீதியாகவே தேர்தலில் நிற்கவோ ஆட்சியில் அமரவோ எப்படி அருகதை உடையவராக இருக்க முடியும்?

திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாளைக் கேட்டால் பதில் சொல்லுவார். குஜராத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மோடிக்குத்தான் ஆதரவாக வாக்களித்தார்கள் என்று சிலாகிக்கிறார்.

மூவாயிரம் முஸ்லீம் மக்களைக் கொன்று குவிப்பதற்குக் காரணமான முரடர் ஒருவர் ஆட்சியில் இருந்தால், சிறுபான்மை மக்கள் அச்சத்தின் காரணமாகக்கூட அந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கக் கூடும்.

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு - அதன் தொடர்ச்சியான அவலங்கள் பற்றிக் குறிப் பிடும்பொழுது முதல் அமைச்சர் என்ற பொறுப்பில் உள்ளவர் என்ன சொன்னார்? எந்த ஒரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்று தத்துவம் பேசவில்லையா? நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாடு செல்லுவேன் என்று பிரதமர் வாஜ்பேயி புலம் பினாரே - குஜராத் கலவரத்தின் பின்னணியில் இதன் பொருள் என்ன? ராஜ தர்மத்தைக் காக்க வேண்டும் என்று மோடிக்கு பிரதமர் வாஜ்பேயி குத்திக் காட்டியதன் நிலைப்பாடு என்ன?

இன்றுவரை திருந்தியிருக்கிறாரா இந்த நவீன இட்லர் மோடி?

முஸ்லீம்களின் கல்வி நலனுக்கென ஒரு பள்ளிக்கு 50 லட்சம் ரூபாய் வீதம் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்குகிறது. இதில் 90 சதவீதத்தை மத்திய அரசு கொடுக்கிறது. 10 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்ற நியாயமான நிபந்தனைதான் இது.

இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளும் இதனை வரவேற்று ஏற்றுக் கொண்டிருக்க குஜராத் முதல் அமைச்சர் மோடி மட்டும் முரண்டு பிடிப்பானேன்?

நாங்கள் பத்து சதவீதம் பணம் கொடுத்தால்தானே நீங்கள் 90 சதவீதம் கொடுப்பீர்கள்! என்று எதிர் வினா போடுகிறார்.

இது ஒரு முதல் அமைச்சர் வாயில் இருந்து வரக் கூடிய சொல் தானா? வரலாமா?

இந்த யோக்கியதையில் உள்ள ஒருவர் தான் ஒரு மாநிலத்தில் சிறுபான்மை மக்களை அரச பயங்கரவாதமாக நர வேட்டை ஆடியது போதாது என்று, இந்திய பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்து அந்த நரவேட்டையை இந்தியத் துணைக் கண்டம் அளவுக்கு நடத்தி முடிக்க நாக்கை நீட்டிக் கொண்டு அலைகிறது பார்ப்பன ஓநாய்க் கூட்டமும், காவிப் பயங்கரவாதக் கும்பலும்.

மோடியின் ஆட்சியில் நடைபெற்ற படுகொலைகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கொடுக்கும் பருவம் தொடங்கி விட்டது. மோடியின் அமைச்சரவை சகாக்கள் கூட இதில் தப்பவில்லை. இதற்கு மேலும் இவர் வீராப்புப் பேசுகிறார் என்றால் இவரை எந்தப் பட்டியலில் சேர்ப்பது? இதைவிட இவரைத் தூக்கிச் சுமக்க ஆசைப்படுவோரைக் குறித்துத்தான் என்ன நினைப்பது? 29-9-2012

தமிழ் ஓவியா said...

மத நம்பிக்கையே இல்லாமல் வாழும் மக்கள்

உலகின் ஒன்பது நாடுகளில் சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில், அந்நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கையே இல்லாமல் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

இதனால், அவற்றில் தற்போது இருக்கும் மதங்கள் விரைவில் காணாமல் போய்விடும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, செசன்ய குடியரசு, பின்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஒன்பது நாடுகளில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்தநாடுகளில் கடந்த 100 ஆண்டுகளுக்குமேல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, அங்குள்ள மக்களின் மத விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி, இந்நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கை இல்லாமலேயே வாழந்து வருவது தெரியவந்துள்ளது.

இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் அங்கு மதங்களே இல்லாமல் போய்விடும் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் டல்லஸ் நகரில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டது. அதன்படி, மிகக் குறைந்தபட்சமாக நெதர்லாந்தில் 40 சதவிகிதம் பேரும், அதிகபட்சமாக செசன்ய குடியரசில் 60 சதவிகிதம் பேரும் மதநம்பிக்கை அற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நிபுணர்கள் சிலர், இது ஒரு சாதாரண கணக்குதான். அதாவது, நாம் மேற்கொள்ளும் ஒரு காரியத்தால் ஏதாவது பயன் விளைந்தால் அக்காரியத்தையும் நாம் தொடர்ந்து செய்வோம்.

உதாரணமாக, ஸ்பானிய மொழி பேசுவதால் விளையும் பயன், பெரு நாட்டில் தற்போது வழக்கழிந்து வரும் கொச்சுவான் மொழி யைப் பேசுவதால் விளையும் பயனைவிட மிக அதிகம்.

இதே கணக்கை மத நம்பிக்கையிலும் நீங்கள் வைத்துப் பார்க்கலாம் என்று தெரிவித்தனர்.

தினமலர், 27.3.2011, பக்கம் 12

தமிழ் ஓவியா said...

கல்விக் கண்களைத் திறந்தது நீதிக்கட்சி


குற்றாலம், செப்.28- திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த இரண்டாவது வகுப்பில் நீதிக்கட்சியின் தோற்றமும், சாதனைகளும் என்ற தலைப்பில் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு உரையாற்றினார். வள்ளல் வீ.கே.யென் மண்டபத்தில் நேற்று தொடங்கிய முதல் வகுப்பில், திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியார் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில், பயிற்சி மாணவர்களுக்கு பெரியாரைப் பற்றிய எளிய முறையில் அறிமுகம் செய்து வைத்தார்.

முதன் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை

பெண்களுக்கு முதல் முதலாக வாக்குரிமை கொடுத்ததும் சூத்திரர், பஞ்சமர் என்று அரசு அலுவலக ஆவணங்களில் இருந்த கொடுமையை தீர்மானம் போட்டு நீக்கியதும், 10, 039 பள்ளிகளை திறந்ததும், மதிய உணவு திட்டம் கொண்டு வந்ததும் இலவச படிப்பு தந்ததும் நீதிக்கட்சி தான் என்று நீதிக்கட்சியின் சாதனைகளை பட்டியலிட்டார்.

தாழ்த்தப்பட்டவர்கள் வளர்ச்சியில் திராவிடர் இயக்கத்தின் பங்கு

7,36,000 ஏக்கர் தரிசு நிலத்தில் 4,40,000 ஏக்கர் நிலத்தை ஆதிதிராவிடர்களுக்கு பட்டா போட்டு கொடுத்தது நீதிக்கட்சிதான். வீடு இல்லாதவர்களுக்கு கல் வீடு கட்டிக் கொடுத்தது நீதிக்கட்சிதான். 1928இல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 8 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது நீதிக்கட்சிதான் என்று வரலாற்று புள்ளி விவரங்களை எடுத்துரைத்தார்.

கம்பன் அடகு வைத்த இனமானம்

தொடர்ந்து வேத இதிகாச புராணப் புரட்டு என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து வகுப்பு எடுத்தார். அதில் வேத இதிகாச புராணங்களில் இருக்கும் புரட்டுகளை ஆதராங்களோடு மாணவர்கள் முன் எடுத்து வைத்தார். வால்மீகியின் இராமா யணத்தை கம்பன் தமிழில் மொழிபெயர்த்தபோது நமது இனமானத்தை அடகு வைத்து விட்டதை காரண காரியத்தோடு எண்பித்தார்.

தமிழ்ப்புத்தாண்டு என்ற போர்வையில் நம்மீது திணிக்கப்பட்ட பார்ப்பன பண்பாட்டு 60ஆண்டுக் கணக்கை மாணவர்களின் புத்தியில் பதிய வைத்தார்.

மதிய உணவுக்குப் பிறகு, மீண்டும் திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு சுயமரியாதை இயக்கத்தின் தோற்றமும் சாதனைகளும் என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார்.

1929இல் நடந்த சுயமரியாதை மாநில மாநாட்டில் பெரியாரால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் இன்று இந்தியா முழுவதிலும் சட்டங்களாக ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக சொல்லிக் கொடுத்தார்.

இனமானம், மொழிமானம் காத்தது சுயமரியாதை இயக்கம்தான்

தொடர்ந்து அடுத்த வகுப்பில் பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பு என்ற தலைப்பில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வகுப்பெடுத்தார்.

நமது ஊர்ப்பெயர்கள், நமது சந்ததிகளின் பெயர்கள் எப்படி சமஸ்கிருதமாகிறது என்பதை சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்தார். சோமசந்திர பாரதியார் எப்படி திருமணத்தில் கருமாதி மந்திரத்தை புரோகிதர் ஓதியதை கண்டுபிடித்து நிறுத்தியவர் என்ற வரலாற்றின் நிகழ்வை மாணவர்கள் முன் எடுத்து வைத்தார்.

கீழாத்தூர் சீனிவாச சாஸ்திரி மொழிபெயர்த்த விவாக மந்திரார்த்த போதினி என்ற புத்தகத்தை சுட்டிக் காட்டி, பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்புக்கு ஆதாரமாக, பார்ப்பனர் எழுதியதையே எடுத்துக் காட்டினர். அதில் இருக்கும் சோம பிரதமோ விவிதே, காந்தர்வோ விவிதே, உத்தர திருதியோ, அகனிஸ் டோபதி துரியஸ்தே, மனுஸ்யஜா - என்ற மந்திரத்தின் பொருளை பார்ப்பனர் எழுதிய புத்தகத்தில் இருந்தே நிறுவினார்.

கே.பி.கே. மேனனும், ஜார்ஜ் ஜோசப்பும்

கவிஞரைத் தொடர்ந்து, இயக்கப் போராட் டங்கள் என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் டாக்டர் துரை.சந்திரசேகரன், திராவிடர் கழகத்தின், தந்தை பெரியாரின் போராட்ட உத்தியையும், இறுதியில் வெற்றி பெற்றதையும் உணர்ச்சியோடு மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். அவர், தனது உரையில், வைக்கம் போராட்டம், சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், மொழிப்போர், ஹிந்தி, எழுத்துகளை அழிக்கும் போராட்டம், ஜாதி ஒழிப்பு போராட்டம் என்று ஒவ்வொன்றையும் விளக்கமாக கூறினார்.

கணினிப் பயிற்சி

தொடர்ந்து, கணினி தொடர்பான அடிப்படை செய்திகளையும், மாணவர்களின் கேள்விகளுக்கு, பதிலளித்து, பெரியார் வலைக்காட்சியில் அலு வலகத்தில் பணிபுரியும் இணைய மேம்படுத்துநர் தமிழ்ச்செல்வன் உரையாற்றினார்.

பெரியார் திரைப்படம்

முதல் நாள் பயிற்சியில் இறுதியில் பெரியார் திரைப்படம் திரையிடப்பட்டது. இதற்கு கீழச்கரண்டை பொன்னுதுரை, இதற்கான கருவிகளை, கொடுத்து உதவினார். மாணவர்கள் பெரியார் திரைப்படத்தை ஆர்வத்துடன் பார்த்தனர்.

தமிழ் ஓவியா said...

அறிவியல்23.1.1938 அன்று ஆயக்கவுண்டன் பாளையத்தில் கூடிய மாநாட்டில் தந்தை பெரியார் குறிப்பிட்டதாவது:-

மக்கள் பிறப்பது கூட இனி அருமையாகத்தான் போய்விடும். அதுபோலவே சாவும் இனி குறைந்து விடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டுகள் வாழ முடியும். யாரும் சராசரி ஒன்று, இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற மாட்டார்கள். ஆண் - பெண் புணர்ச்சிக்கும், பிள்ளை பேறுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும்.

வேலை செய்கிற குதிரைகள் வேறு. குட்டி போடுகிற, போடச் செய்கிற குதிரை வேறு என்கிற மாதிரி மனித சமூகத்தில் இருக்கும். பிள்ளைப் பெறும் தொல்லை, வளர்க்கும் தொல்லை, அதற்குச் சொத்து சுகம் தேடும் தொல்லை ஒழிந்து போகும் என்கிற நம்பிக்கை உண்டு.

- குடிஅரசு, 30.1.1938

தமிழ் ஓவியா said...

கடவுளைப்பற்றிய மக்களின் நினைவு மறதி: போப்பின் புலம்பல்கடவுளைப்பற்றி நமது நவீன சமூகத்துக்கு ஒரு குறிப்பிட்ட அளவு நினைவு மறதி ஏற்பட்டிருக்கிறது என்று கூறி, மக்களிடையே குறைந்து வரும் கடவுள் நம்பிக்கை பற்றி, தனது ஸ்பெயின் நாட்டுப் பயணத்தின் போது, 16ஆம் பெனடிக்ட் போப் புலம்பியிருக் கிறார். ஒரு காலத்தில் தீவிர கத் தோலிக்க கிறித்துவ நாடாக இருந்த ஸ்பெயினில், பாசிச சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோவுக்குப்பின் மக்களின் மீதான தேவாலயத்தின் பிடி வியக்கத்தக்க வகையில் வெகுவாகத் தளர்ந் துள்ளது.

ஸ்பெயின் நாட்டு தலைநகரி லிருந்து வடகிழக்கே 50 கி.மீ. தொலைவில் உள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நினைவுச் சின்ன மான, எல் எஸ்கோரியல் துறவிகளின் மடத்தில் சில நூறு இளம் கன்னித் துறவிகளிடம் பேசும்போது, மேற்கு நாடுகளில் மதச்சார்பின்மை பலமான பிடிமானத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி யுள்ளது என்று பொதுவான முறையில் போப் பேசினார்.

உலக இளைஞர் தினத்தையொட்டி கத்தோலிக்க கிறித்துவ மதத்தின் சார்பில் ஸ்பெயினில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பேசும்போது, தங்களின் வாழ்க் கையைத் தங்களின் மத நம்பிக்கைகாக அர்ப்பணிப்பது என்ற அவர்களது முடிவு இன்றைய உலகிற்கு தெரிவிக்கப்படும் பொருள் நிறைந்த செய்தியாகும் என்று அவர் கூறினார்.

கடவுள் நம்பிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட கிரகணம் போல இன்று உலகில் இடம் பெற்றிருப்பதை நாம் காணும்போது, நம்மில் ஆழமாகப் பொதிந்துள்ள நமது அடையாளத்தை இழக்க வழிகோலும் அளவுக்கு, நம்பிக் கை என்னும் நமது கருவூலத்தை மறுத்து, கிறித்துவ மதத்தை ஒட்டு மொத்தமாக மக்கள் நிராகரித்து விட வில்லையென் றாலும், கடவுளைப் பற்றிய நினைவுமறதி மக்களிடையே ஒரு வகை யில் இன்று நிலவுவது அனைத்திலும் மிகவும் முக்கிய மானதாகும் என்று அவர் கூறினார்.

அவர் முன்னுரிமை அளித்து மேற்கொண்டிருக்கும் முக்கியமான செயல்திட்டம் ஸ்பெயின் போன்ற நாடு களில் கிறித்துவ மதத்தை விழித்தெழச் செய்ய முயல்வதே! ஸ்பெயின் நாட்டுக்கு அண்மையில் தொடர்ச்சியாக மூன்று முறை பயணமாக போப் வந்தது, தமது கிறித்துவ பாரம்பரியத்தை அய்ரோப்பிய நாடுகளுக்கு நினைவூட்டுவது மற்றும் அந்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் கடவுளை இடம் பெறச் செய்வது என்ற பணிக்கு, ஒரு முக்கியமான போர்க்கள மாக ஸ்பெயின் நாட்டை அவர் கருதுவதையே காட்டுகிறது.

பெரும்பாலான அய்ரோப்பிய நாடுகளில் ஏற்பட்டதைப் போலவே ஸ்பெயின் நாட்டிலும் கடந்த சில பத்தாண்டு காலத்தில், தேவாலயத்தின் செல்வாக்கு பெருமளவில் சரிந்து வருகிறது. பெண்களின் உரிமைகள், சமத்துவம், ஓரின பாலியல் பழக்கம், கருக்கலைப்பு போன்றவற்றுக்கு எதிரான கத்தோலிக்க கிறித்துவ மதத்தின் நிலைப் பாடுதான் படித்த மத்திய தர மக்களில் பெரும்பாலோரை அம்மதத்தில் இருந்த நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது.

நன்றி: தி இந்து 21.8.2011 செய்தி

தமிழ் ஓவியா said...

கம்பம் அழைக்கிறது!கம்பத்தில் மாநாடு தேனி மாவட்டத்தின் திராவிடர் கழக மாநாடு வரும் திங்கள் கிழமையன்று (1-10-2012) மாலை நடைபெற உள்ளது.

பேரணியும் சேர்ந்து மாநாட்டின் எழுச்சியைப் பறைசாற்றப் போகிறது கம்பம்.

இரண்டு மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட மாநாடு இது. இப்பொழுது வட்டியும் முதலுமாகச் சேர்ந்து பேரெழுச்சியோடு நடைபெற உள்ளது.

தேனி, பெரியகுளம், போடி, கம்பம் போன்ற பகுதிகள் இன்று நேற்றல்ல - நீதிக்கட்சிக் காலம் தொட்டு - திராவிடர் இயக்கத்துக்கு நெருக்கமான பகுதிகளாகும்.

மறைந்தாலும் தம் தொண்டின் மூலம் மறக்க முடியாத எண்ணற்ற சுயமரியாதைச் சுடரொளி களைத் தந்த சிறந்த பகுதிகள் இவை.

பெரியகுளம் பகுதியை எடுத்துக் கொண்டால் மாவட்டச் செயலாளர் தொண்டின் இலக்கணமாம் மறைந்த நமது மானமிகு ச.பெ. அழகிரியை மறக்க முடியுமா? மாவட்டக் கழகத் தலைவராக பல்லாண்டு பணியாற்றிய மானமிகு ம.வெ. முத்துக் கருப்பையன் அவர்களைத்தான் மறக்க முடியுமா? கழகத்தில் மட்டுமல்ல, அரிமா சங்கத்திலும் தம்மை இணைத்துக் கொண்டு தம் முத்திரையைப் பொறித்தவராயிற்றே!

தமிழ் ஓவியா said...

அவர்தம் அருமைச் செல்வன் அன்புக்கரசன் கழகப் பொதுக் குழு உறுப்பினர்.

மானமிகு தோழர்கள் உ.மு.சங்கர், மானமிகு வெங்கிடுசாமி என்பவர்கள் சாதாரணமானவர்களா? தம் மறைவுக்குப் பிறகும் தமது உடலை மருத்துவ மனைக்கு ஒப்படைத்த தொண்டறச் செம்மல்கள் பெத்து, இராமசாமி ஆகியோர் மறைந்தும் மறையாத மாணிக்கங்கள் அல்லவா?

தோழர்கள் ரங்கராசு, சுப்பையா, சடகோபன் ஆகியோர் என்றென்றைக்கும் நமது நிரந்தர நினைவுக்குரிய செம்மல்களே!

கோட்டூர் ஓரி, ரங்கசாமி, கே.கே.பட்டி பி. இராசேந்திரன், லோயர் கேம்ப் ராசு, கம்பம் எஸ்.எஸ். ஆண்டி, வி.என்.முத்து என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டே!

இத்தகு கொள்கைச் சீலர்கள் வீரநடை போட்ட பகுதியிலே, கம்பம் நகரிலே கறுஞ்சட்டைக் குடும்பங் களின் சங்கமம் வரும் அக்டோபர் முதல் தேதி.

சமூக நீதித் திசையில் ஏராளமான இடிகள் விழுந்து கொண்டே இருக்கின்றன.

குறுக்கு வழியிலே, சமூக நீதியின் குரல் வளையை இறுக்கும் கொலைகார சதிகள் திட்டமிட்ட வகையிலே நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

தேனி மாவட்டத்தின் பெரும்பகுதி விவசாயம் - முல்லைப் பெரியாறு நீர்த் தேக்கத்தை உயிர் நாடியாகக் கொண்டு அதனை நம்பியே உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

கேரள மாநில அரசு அதிரடியாக, முரட்டுத் தனமாக, சட்ட விரோதமாகவும், நியாய விரோதமாகவும் அப்பகுதி மக்களின் வயிற்றிலடிக்கும் பொல்லாக் காரியத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றது.

இந்தியத் துணைக் கண்டத்தில் வஞ்சிக்கப்படும் ஒரு மாநிலம் உண்டென்றால், அது தமிழ்நாடுதான்.

தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை; எல்லோரும் இங்கே தனித் தனிதான்! சாவு வீட்டில் கூட ஒன்று சேர முடியாத அரசியல் நெடி ஒரு புறம், ஜாதி சச்சரவுகளை ஆங்காங்கே உண்டாக்கும் சக்திகள் மற்றொரு புறம்.

இந்த நிலையில் தமிழா இனவுணர்வு கொள்! தமிழா, தமிழனாக இரு!! என்ற இலட்சிய முழக்கங்களோடு பெரியார் பேரணி அக்டோபர் முதல் தேதி கம்பத்தில்! எழுச்சிமிக்க மாவட்ட மாநாடும் அங்கே!

ஆம். கம்பத்தில் கழகக் கொள்கைக் கொடியை ஏற்றுவோம் - வாருங்கள், தோழர்களே!

தமிழர் தலைவர் இன முரசம் கொட்டுகிறார். கழக முன்னணியினர் பங்கேற்கின்றனர்.

விடுமுறை நாட்கள்தான். குடும்பம் குடும்பமாகக் கம்பம் நோக்கி வாரீர்! வாரீர்!!

மாவட்டக் கழகத் தலைவர் போடி ச.இரகுநாக நாதன் தேனி மாவட்டத்தின் தொண்டறச் செம்மல்! பல பொதுப் பணிகளிலும் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் ஆற்றலாளர்.

பெரியார் சேவை மய்யம், பெரியார் சமத்துவ மின் மயானம், தந்தை பெரியார் குருதிக் கொடைக் கழகம் போன்றவற்றிலும் தம் முத்திரையைப் பொறித் துள்ளவர். அவர்தம் இணையர் - கழகப் பொதுக் குழு உறுப்பினர் பேபி சாந்தா, போடி அரிமா சங்கத்தின் தலைவர். பெண் ஒருவர் இத்தகு பொறுப்புக்கு வருவது எல்லாம் அரிதல்லவா?

போடி என்றால் நகர செயலாளர் முருகன் நம் நெஞ்சில் நிழலாடக் கூடியவர். கருத்துக் கருவூலம் என்று கணிக்கப்பட்டவர். ஒடுக்கப்பட்ட மக்களின் வேலை வாய்ப்புக்காக வங்கித் தேர்வுப் பயிற்சி, எல்.அய்.சி. பயிற்சிகளை நடத்தியவர். தமிழர் தலைவர் அவர்களின் பிறந்த நாளில் தொடர்ந்து பத்தாண்டுக் காலம் குருதிக் கொடை இயக்கத்தை நடத்தியவர்!

பெரியார் சமத்துவம் எனும் பெயரில் நகரில் நவீன எரியூட்டும் சுடுகாட்டினை நிர்மாணித்தவர் திம்மன் நாயக்கப்பட்டி வெள்ளைச்சாமி, வீரபத் திரன், சின்னமனூர் ராசு மாயாண்டி, மாவட்டச் செயலாளர் தமிழ்ச் செல்வன்- கே.கே.பட்டி தோழர் கே.கே.பட்டி தோழர்கள் என்றாலே துடிப்பு மிக்கவர்கள் ஆயிற்றே!

கோயில் தீக்குண்டத்திலேயே நுழைந்து கடவுள் இல்லை! இல்லவே இல்லை! என்று முழங்கி தீ மிதித்துக் காட்டி பக்தர்களையே சிந்திக்க வைத்த சீர்மிகு தோழர்களாயிற்றே!

மாவட்ட அமைப்பாளர் பாஸ்கர், மாவட்ட இளைஞரணி தலைவர் போடி சுருளிவேல் என்று ஆற்றல் மறவர்கள் நிறைந்த கோட்டம் அது!

அனைத்துத் தோழர்களின் அருமையான ஒத்துழைப்போடு ஓகோ என்று நடக்கும் கம்பம் மாநாடு கைநீட்டி அழைக்கிறது - வாருங்கள், தோழர்களே - தமிழர்களே!

- மின்சாரம் 29-9-2012

தமிழ் ஓவியா said...

மருத்துவக் கல்வியில் நுழைவுத் தேர்வு முறையை அறவே ஒழிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளவேண்டும் மத்திய அரசுக்குக் கலைஞர் கோரிக்கைசென்னை, செப். 29- தமிழகத்தில் நுழைவுத் தேர்வு முறையை ஒழித்தது தி.மு.க. ஆட்சிதான் என்பதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். ஆனால், மருத்து வக் கல்வியில் மத்திய அரசு அளவில் நுழைவுத் தேர்வினை நடத்தப் போவதாகச் செய்திகள் வருகின் றன. இந்தப் பிரச்சினைபற்றி அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடனடியாகத் தலையிட்டு, இதிலே நுழைவுத் தேர்வு முறையை ஒழித்தும், இதர பிற் படுத்தப்பட்டோருக்குரிய இட ஒதுக்கீட்டு வழி வகை செய்தும் நல்லதோர் முடிவு காண வேண்டு மென்று வலியுறுத்துகிறேன் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று (28.9.2012) இது தொடர்பாக வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேள்வி : தமிழகத்தில் நுழைவுத் தேர்வு என்பதை ஒழித்த பிறகும், மருத்துவக் கல்வியில் மத்திய அரசு அளவில் நுழைவுத் தேர்வினைத் திணிக்க இருப் பதைப் பற்றி?

கலைஞர்: தமிழகத்தில் நுழைவுத் தேர்வு முறையை ஒழித்தது தி.மு.க. ஆட்சிதான் என்பதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். ஆனால் மருத்து வக் கல்வியில் மத்திய அரசு அளவில் நுழைவுத் தேர் வினை நடத்தப்போவதாக செய்திகள் வருகின்றன. அதில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, நுழைவுத் தேர்வு முறையை அறவே ஒழிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண் டும் என்பதுதான் நமது கருத்து.

ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 15 சதவிகித இடங்களை மத்தியத் தொகுப்புக்கு எடுத்துச் சென்று, அந்த இடங்களை நிரப்ப அகில இந்திய அடிப்படையில் நுழைவுத் தேர்வு நடத்துகிறார்கள். அதுபோலவே மருத்துவக் கல்லூரிகளில் முது நிலைப் பிரிவில், அதாவது எம்.டி., எம்.எஸ்., போன்ற வகுப்புகளில் சேருவதற்கும் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு வைக்கப்படுகிறது. இவ்வாறு மத்திய தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக் கீடும் அறவே இல்லை.

இந்தப் பிரச்சினை பற்றி அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடனடி யாக தலையிட்டு, இதிலே நுழைவுத் தேர்வு முறையை ஒழித்தும், இதர பிற்படுத்தப்பட்டோருக் குரிய இட ஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்தும் நல்ல தோர் முடிவு காணவேண்டுமென்று வலியுறுத்து கிறேன்.

கேள்வி: பேரவை வைர விழா அக்டோபர் 29 ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடக்கம் - மறு நாள் 30ஆம் தேதி காலை 11 மணிக்குத் தொடக்கம் - என்ன காரணம்?

கலைஞர்: அக்டோபர் 29ஆம் தேதி திங்கட் கிழமை காலையில் 7.30 மணி முதல் 9 மணி வரை ராகுகாலம், அதனால் காலை 10 மணிக்கு வைர விழா தொடக்கம். 30ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரை எமகண்டம். அதனால் பேரவை 11 மணிக்குத் தொடக்கம். வாழ்க அண்ணா! பெரியார் நாமம் வாழ்க! நாங்கள்தான் அ.இ.அ.தி.மு.க.!

கேள்வி: தி.மு.க. ஆட்சியில் திட்டமிடப்பட்டது என்றோ, அதில் உள்ள சூழ்ச்சி குறித்தோ தெரியாமல், முதல்வர் திறந்து வைக்கப் போகிறார் எனத் தெரிவித்ததால், ஏமாந்து, அண்ணா பவள விழா வளைவை இடிக்க அனுமதிக்கும் தீர் மானத்தை நிறைவேற்றியதற்காக வெட்கப்படு கிறேன், வேதனைப்படுகிறேன் என்று சென்னை மாநகர மேயர் சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: எப்படியோ, அண்ணா பவள விழா வளைவை இடிக்க அனுமதிக்கும் தீர்மானத்தை அவர்கள்தான் நிறைவேற்றினார்கள் என்பதை ஒப்புக் கொண்டுவிட்டார்கள். மேலும் முதல்வர் திறந்து வைக்கப் போகிறார் என்றால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயல்படுவார்கள் என்பதையும் மேயரே ஒப்புக் கொண்டுவிட்டார்! கழக ஆட்சியில் திட்டமிட்டது; மேம்பாலம் கட்டு வதுதான்! அண்ணா பவள விழா வளைவை இடிப் பது அல்ல! அதில் எந்தச் சூழ்ச்சியும் கிடையாது என்பதுதான் உண்மை.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.29-9-2012


தமிழ் ஓவியா said...

இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அடிப்படைக் கடமை ஆற்றிடும் குடிமக்கள் அனைவரும் நாத்திகரே!
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற சரஸ்வதி கோரா நூற்றாண்டு நினைவு விழாவில் தமிழர் தலைவர் எழுச்சிப் பிரகடனம்!


விஜயவாடாவில் நடைபெற்ற சரஸ்வதி கோரா நூற்றாண்டு நிறைவு விழாவில் பகுத்தறிவு எழுத்தாளர் ஜிம் ஹெர்ரிக் எழுதிய ‘‘The Atheist Centre: Unbound by Cages’’ நூலை தமிழர் தலைவர் கி. வீரமணி வெளியிட்டார் (28.9.2012)

விஜயவாடா, செப். 29- ஆந்திர மாநிலம், விஜயவாடா வில் நாத்திகப் பெண் போராளி சரஸ்வதி கோராவின் நூற்றாண்டு நிறைவு விழா செப்டம்பர் 28 மற்றும் 29 ஆகிய இரு நாள்களும் ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

முதல் நாள் நடைபெற்ற நூற்றாண்டு நிறைவு விழா தொடக்க நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி தலைமையேற்று எழுச்சிப் பேருரை ஆற்றினார்.

ஆந்திர நாத்திக அறிஞர் கோரா அவர்களின் துணைவியார் சரஸ்வதி கோராவின் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சிகள், விஜயவாடாவில் உள்ள சித்தார்த்த கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்று வரு கின்றன. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியா வின் பிற மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த நாத்தி கர்களின் சங்கமமாக நூற்றாண்டு விழா அமைந்துள்ளது.கோரா மற்றும் சரஸ்வதி கோரா பன்னாட்டு ஆய்வு மய்யத்தினை பன்னாட்டு மனிதநேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் தலைவர் சோனியா எக்கரிக்ஸ் திறந்து வைத்தார். தமிழர் தலைவர் கி. வீரமணி முன்னிலை வகித்தார்.

முதல் நாள் (செப்.28) நடைபெற்ற நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தருமான தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்தார்.

கோரா குடும்பத் தலைவரான, மருத்துவர் டீமாஸ் கோராவின் வரவேற்பு நாட்டியத்துடன் தொடக்க விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த கல்வியாளரும், பன்னாட்டு மனிதநேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் தலைவருமான சோனியா எக்கரிக்ஸ் (Sonja Eggereikx) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.சரஸ்வதி கோரா நூற்றாண்டு நிறைவு விழாவினை ஜெர்மன் சுதந்திர சிந்தனையாளர் மன்றத்தின் தலைவர் டாக்டர் வோல்கர் முல்லர் தொடங்கி வைத்தார். தமிழர் தலைவர் கி. வீரமணி தலைமை வகித்தார் (28.9.2012).

பெரியார் இயக்கத்திற்கு மிகவும் தொடர் புள்ளவரும் ஜெர்மனி நாட்டு சுதந்திர சிந்தனையாளர் சங்கத்தின் தலைவருமான முனைவர் வோல்கர் முல்லர் (Dr.Volker Muller) மற்றும் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சிறந்த பத்திரிகையாளரும், பகுத்தறிவு எழுத்தாளரும், மனிதநேயர் இதழின் மேனாள் ஆசிரியருமான ஜிம் ஹெர்ரிக் (Jim Herrick), டில்லியிலிருந்து வருகை தந்த காந்தி அமைதி நிறுவனத்தின் தலைவர் ராதாபட், நாகார் ஜுனா பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் வி. பாலமோகன் தாஸ் ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் கி. வீரமணி தலைமை உரை

தொடக்க விழாவினை தலைமையேற்று நடத்திய தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்

பெரியார் இயக்கமும், கோரா இயக்கமும் சமூக மாற்றத்திற்காகப் பாடுபட்டுவரும் இருபெரும் நாத்திக இயக்கங்களாகும். ஒரே நாணயத்தின் இரு பக்க பகுத்தறிவு அமைப்புகளாகும். வெளிநாட்டில் நாத்திகர், பகுத்தறிவாளர், மனிதநேயர் எனும் சொல் பயன்பாடு கருத்தியல் அடிப்படையில் வேறுபட்டு பொருள் கொள்ளப் படும் சூழல்கள் நிலவுகின்றன. ஆனால், இந்திய நாட்டைப் பொறுத்த அளவில் பகுத்தறிவாளர், மனிதநேயர் என்பவர்கள் அடிப்படையில் நாத்திகர்களாகத்தான் இருந்திடல் வேண்டும். அத்தகைய கருத்தியல் தன்மை, செயல்பாட்டுப் பக்குவத்தினை தந்தை பெரியாரும், கோராவும் உருவாக்கிவிட்டனர்.

அவர்கள் உருவாக்கிய அந்த கருத்தியல் தன்மைகள் பகுத்தறிவு அமைப்பு களுக்கு வழிகாட்டுபவையாக உள்ளன. விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் நிறுவனர் கோராவின் பணிகளுக்கு உறுதுணையாக இருந்து அவரது மறைவிற்குப் பின்னர் மய்யத்தின் செயல்பாடுகளை தலைமையேற்று நடத்திய அவரது துணைவியார் சரஸ்வதி கோராவின் நூற் றாண்டு நிறைவு விழாவில், கலந்துகொள்வது ஒரு குடும்ப விழாவில் பங்கேற்பதற்கு ஒப்பானதாகும். தந்தை பெரியாருக்குப் பின் இயக்கத்தினை தலைமையேற்று நடத்திய அன்னை மணியம்மையாரைப் போன்று கோரா வின் மறைவிற்குப் பின் அவர்தம் அமைப்பினை நடத்திய நாத்திகப் பெண் போராளி சரஸ்வதி கோரா அவர்களா வார்கள்.

அறிவியல் மனப்பான்மையினை வளர்த்திட வலியுறுத்தும் இந்திய அரசமைப்புச் சட்டம்

இந்திய அரசமைப்புச் சட்டம் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளதுபோல, குடிமக்கள் ஆற்றிட வேண்டிய அடிப்படைக் கடமைகளையும் வலியுறுத்துகிறது. அப்படிப்பட்ட அடிப்படைக் கடமைகளில் ஒன்றாக விதி 51ஏ(எச்) வலியுறுத்திக் கூறுவதாவது:

ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மை யினை, கேள்வி கேட்டு உண்மை அறியும் உளப்பாங்கினை, சமூக சீர்திருத்தத்தை, மனிதநேயத்தினை வளர்த்திட வேண்டும்.

Art 51a(h) says, ‘‘It shall be the duty of every Citizen to develop scientific temper, humanism and the spirit of inquiry and reform.’’

அறிவியல் மனப்பான்மையினை வளர்த்திட, எதையும் கேள்வி கேட்டு உண்மை நிலை அறியும் உளப்பாங்கு அவசியம். உண்மை நிலை அறிந்து கொண்டால், சுற்றி யுள்ள சமூகச் சூழல்களை சீர்திருத்தும் எண்ணம் உருவாகும். இந்தப் பணியில் மனிதநேய உணர்வுகளும் உள்வாங்கப்பட்டால் மானிடம் செழித்திடும்.துவக்க நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமை உரை ஆற்றினார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்திடும் அடிப்படைக் கடமையினை ஆற்றிட ஒவ்வொரு குடிமகனும் தலைப்பட்டால், சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள், மூடநம்பிக்கைகள் அகன்று புத்துலகம் பிறந்துவிடும். இந்த அடிப்படைக் கடமையினை ஆற்றிட முற்பட்டால், அதன் நிறைவு நிலை ஒவ்வொரு குடிமகனும் நாத்திகராக மாறிடும் நல்ல நிலைமை உருவாகிடும். காரணம், மத உணர்வுகளுக்கும், அறிவியல் மனப்பான்மைக்கும் தொடர்பு இல்லை;

மூட நம்பிக்கையின் அடிப்படையில் உருவானவை கடவுள், மத உணர்வுகள்; எதையும் கேள்வி கேட்டு அறிந்து உண்மை நிலை உணருவது அறிவியல் மனப்பான்மை ஆகும். நீரும் நெருப்பும் ஒன்றாதல் இயலாது. அதுபோல, அறிவியல் மனப்பான்மையும், கடவுள் நம்பிக்கையும் ஒருங்கே அமைந்திட முடியாது. அந்த வகையில் இந்திய அரச மைப்புச் சட்டம் வலியுறுத்தும் அடிப்படைக் கடமையினை ஆற்றிடும் குடிமக்கள் அனைவரும் நாத்திகர்களே.

நாத்திகர் என்பது பெருமையுடன் சொல்லக்கூடிய சமுதாயக் கடமை ஆற்றிடும் அடையாளம் ஆகும், வெளிநாட்டில் உள்ள பல்வேறு பகுத்தறிவாளர்களும், மனிதநேய அமைப்பினைச் சார்ந்தவர்களும் தம்மளவில் கடவுள் மறுப்பாளர்களாக இருந்தாலும், நாத்திகர் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள தயங்கும் நிலையே உள்ளது.தமிழ் ஓவியா said...

ஜெர்மன் நாட்டு பகுத்தறிவாளர் டாக்டர் வோல்கர் முல்லர் அவர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

ஆனால், இந்த நாட்டில் கடவுள் தத்துவம், மத நம்பிக்கைகள் அனைத்தும் மனிதநேயத் தன்மை களுக்கும், செயல்களுக்கும் புறம்பாக இருக்கும் நிலையில், ஒரு நல்ல குடிமகன் கடவுள் மறுப்பாளராக தான் இருக்க முடியும். கடவுளை மறுக்கும், கடவுள் தத்துவத்தை எதிர்க்கும் பகுத்தறிவு நிலையினை இந்த மண்ணில் உருவாக்கியவர்கள், தந்தை பெரியாரும், கோராவும் ஆவார்கள். இந்தச் சமூக மாற்றப் பயணத்தில் போராடிய சரஸ்வதி கோரா அவர்களின் நினைவுகள், செயல்பாடு கள் போற்றுதலுக்குரியவை; பின்பற்றி கடைப்பிடிக்கப்பட வேண்டியவை. எதையும் பகுத்தறிந்து அறியும் மனப்பாங்கு, செயல்பாங்கு மக்களிடம் வளர்ந்திட வேண்டும்.

பகுத்தறிவுபற்றி அறிஞர் அண்ணா விளக்கம்சரஸ்வதி கோரா நூற்றாண்டு புகைப்படக் கண்காட்சியினை தமிழர் தலைவர் கி.வீரமணி முன்னிலையில் தென் குஜராத் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பி.ஏ.பாரிக் திறந்து வெத்தார்

தந்தை பெரியாரின் தலைமை மாணாக்கரும், தமிழகத்தின் அரசியல் தளத்தில் தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கு ஆக்கம் கூட்டியவருமான தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் சிதம்பரம் - அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரையில், பகுத்தறிவு என்பதற்கு செயல்பாட்டு தன்மை மிக்கதொரு விளக்கத்தினை அளித்தார்.

‘‘Rationalism does not mean repudiation of basic and fundamental truths and maxims, but the annihilation of dubious modes of thought and action.

பகுத்தறிவுக் கொள்கை என்பது அடிப்படை மதவாதக் கொள்கை கோட்பாடுகளை மறுப்பது மட்டும் ஆகாது. போலித்தனமான, உண்மைக்கு மாறான எண்ணம் மற்றும் செயல்களை எதிர்த்து அவைகளை அழித்திடும் ஆக்கப் பூர்வமான பணி ஆகும்.

அப்படிப்பட்ட பகுத்தறிவுக் கொள்கையினை ஏந்திச் செல்லும் போராளிகளாக நாம் இருந்திடவேண்டும் என்பது அறிஞர் அண்ணாவின் பேரழைப்பு. பகுத்தறிவு பற்றிய இப்படிப்பட்ட தொடர் சிந்தனை, சமூக மாற்றத் திற்கான செயல்களை உருவாக்கிட ஆரம்பகாலத்தில் வித்திட்டவர்கள் தந்தை பெரியாரும், கோராவும் ஆவார்கள்.

சரஸ்வதி கோராவிற்கு நூற்றாண்டு நினைவு தபால்தலை வெளியிடக் கோரிக்கை!இங்கிலாந்து நாட்டுப் பகுத்தறிவாளர், சீரிய எழுத்தாளர் ஜிம் ஜெர்ரிக் அவர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி சால்வை அணிவித்து சிறப்பு செய்கிறார்.

தந்தை பெரியாருக்கும், கோராவிற்கும் நூற்றாண்டு நினைவு தபால்தலைகளை இந்திய அரசு வெளியிட்டது. நினைவு தபால்தலைகளை வெளியிடுவது அந்தத் தலைவர்களுக்குப் பெருமை சேர்ப்பது என்பது மட்டும் அடிப்படை ஆகாது. சமூக மாற்றத்திற்குப் பாடுபட்ட அந்தத் தலைவர்களுக்கு நினைவு தபால் தலை வெளியிடுவதால் இந்திய அரசு தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்கிறது என்பதே உண்மையான நிலையாகும்.

அப்படிப்பட்ட செயலாக நூற்றாண்டு விழா காணும் நாத்திகப் போராளி சரஸ்வதி கோராவின் நினைவிற்கு சிறப்புத் தபால் தலை வெளியிட்டு இந்திய அரசு தனக்குப் பெருமை சேர்த்துக்கொள்ளவேண்டும். இந்த வேண்டுகோளை இந்திய நாத்திகர் மற்றும் அமைப்பின் சார்பாக இந்திய அரசுக்கு கோரிக்கையாக, இந்த நூற்றாண்டு நிறைவு வேளையில் வைத்திடுகிறோம். சமூக மாற்றத்திற்காகப் பாடுபட்ட தலைவர்களுக்கு சிறப்புத் தபால் தலை வெளியிடுவது சமூக மாற்றத்தினை விரைவுபடுத்திடும் செயலாகும். அத்தகைய செயல்களை நிறைவேற்ற இந்திய அரசு முன்வரவேண்டும்.விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநர் டாக்டர் விஜயம் அவர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பாராட்டு தெரிவித்தார்

வாழ்க நாத்திகக் கொள்கை! பெருகிடுக பகுத்தறிவு!

இவ்வாறு உரையாற்றினார் தொடக்க விழா நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று நடத்திய தமிழர் தலைவர்.

வெளிநாட்டு நாத்திகப் பெருமக்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

தந்தை பெரியாரின் கொள்கைக் குடும்பமும், கோராவின் கொள்கைக் குடும்பமும் சமூக மாற்றத் திற்காகப் பாடுபட்டுவரும் ஒரே விதமான அமைப்பு களாகும். அந்த நிலையில், சரஸ்வதி கோரா நூற்றாண்டு விழாவிற்கு வருகை தந்துள்ள பன்னாட்டு மனிதநேயர் மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் தலைவர் திருமதி சோனியா எக்கரிக்ஸ், ஜெர்மன் நாட்டு சுதந்திர சிந் தனையாளர் அமைப்பின் தலைவர் டாக்டர் வோல்கர் முல்லர், இங்கிலாந்து நாட்டு பகுத்தறிவு எழுத்தா ளர், பத்திரிகையாளர் ஜிம் ஹெர்ரிக் ஆகியோருக்கு பெரியார் இயக்கத்தின் சார்பில் சிறப்பு செய்யப்படுகிறது எனக் கூறி அவர் கள் அனைவருக்கும் தமி ழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் சால்வை அணி வித்து பாராட்டு தெரிவித் தார். நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநர் கோரா வின் மைந்தர் டாக்டர் விஜ யம் அவர்களுக்கும் சால்வை அணிவித்து சிறப்புச் செய்தார்.

நூற்றாண்டு விழா புத்தக வெளியீடுகள்

தமிழ் ஓவியா said...


தொடக்க விழாவில், பகுத்தறிவு கொள்கை சார்ந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இங்கிலாந்து நாட்டு பகுத்தறிவு எழுத்தாளர் ஜிம் ஹெர்ரிக் எழுதிய ‘‘The Atheist Centre: Unbound by Cages’’ எனும் புத்தகத்தினை தமிழர் தலைவர் டாக்டர் கி. வீரமணி வெளியிட்டார். ‘‘My Life with Gora’’ (கோராவுடன் எனது வாழ்க்கைப் பயணம்) எனும் சரஸ்வதி கோராவின் தன் வலராறு நூலினை அய்தராபாத் திறந்தவெளி பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.வி.ஆர். சந்திரசேகரராவ் வெளியிட்டார். ‘‘Women Visionaries and Activists’’ (பெண் சிந்தனையாளர்களும் மற்றும் போராளிகளும்) எனும் தொகுப்பு நூலை டில்லி காந்தி அமைதி நிறுவனத்தின் தலைவர் ராதாபட் வெளியிட்டார்.

விகாஸ் கோரா எழுதிய ‘‘Life and Work of Saraswathi Gora’’ (சரஸ்வதி கோராவின் வாழ்வும், பணியும்) எனும் நூலை நாகார்ஜுனா பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தர் பேராசிரியர் பாலமோகன்தாஸ் வெளியிட்டார்.

சரஸ்வதி கோரா நூற்றாண்டு புகைப்படக் கண்காட்சிபன்னாட்டு மனித நேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் தலைவர் சோனியா எக்கரிக்ஸ் அவர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.

சரஸ்வதி கோராவின் வாழ்க்கைப் பயணத்தின் பல்வேறு கட்டங்களைப் பிரதிபலிக்கும் ஒளிப்படங்களின் தொகுப்பாக அரியதோர் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

தொடக்க விழா நடைபெறும் முன்பு புகைப்படக் கண்காட்சியினை பெரியார் மணிம்மை பல்கலைக் கழக வேந்தர் தமிழர் தமிழர் டாக்டர் கி. வீரமணி அவர்களது முன்னிலையில், தென் குஜராத் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பி.ஏ. பாரிக் திறந்து வைத்தார். புகைப்படக் கண்காட்சியில், கோராவின் 101 ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சியில் விஜயவாடாவில் தமிழர் தலைவர் பங்கேற்ற நிகழ்வு, சரஸ்வதி கோரா சென்னை- பெரியார் திடலுக்கு வருகை தந்த நிகழ்வுகளை நினைவூட்டும் ஒளிப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

பிற மாநிலங்களிலிருந்து பல்வேறு நாத்திக, பகுத்தறிவு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றனர். சரஸ்வதி கோராவின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளச் சென்ற தமிழர் தலைவருடன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ. குமரேசன், திராவிடர் கழக ஊடகத் துறையின் மாநிலச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், புகைப்படக் கலைஞர் பா. சிவகுமார் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். 29-9-2012

தமிழ் ஓவியா said...

காரைக்கால் முதல் மேட்டூர்வரை

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமைக்கான விழிப் புணர்வுப் பிரச்சாரத்தை அக்டோபர் 2 முதல் காரைக் காலில் தொடங்கி அக்டோபர் 8 இல் மேட்டூரில் நிறைவு பெற செய்ய இருக்கிறது திராவிடர் கழகம்.

காவிரி நீர் பிரச்சினையில் ஒவ்வொரு கட்டத் திலும் திராவிடர் கழகம் முன்னின்று, தன் முக்கிய கடமையினை ஆற்றி வந்திருக்கிறது.

அதே கடமையினைத்தான் இப்பொழுதும் ஆற்றிட முன் வந்தும் உள்ளது.

காவிரி நீர் கருநாடக மாநிலத்தில் உற்பத்தியா கிறது என்கிற ஒரே காரணத்தால், அம்மாநிலத்துக்கு மட்டுமே அது உரிமையானது என்று பொருள் கிடையாது.

நதிநீர் தொடர்பான சட்டங்களும், விதிகளும் உலகம் தழுவிய அளவில் உள்ளன. எந்த ஒரு நாடும் கருநாடகம் நடந்துகொள்வதுபோல் நடந்துகொள்ள முடியாது.

தனக்கு விஞ்சிதான் தானதருமம் என்று நினைக்கிறதோ கருநாடகம் என்று எண்ணத் தோன்றுகிறது.

கருநாடகம் தமிழ்நாட்டுக்குத் தருவது, தானமும் அல்ல - தருமமும் அல்ல. சட்டப்படி தமிழ்நாட்டுக்கு உரிய நீரைத்தான் தமிழ்நாடு கேட்கிறதே தவிர, மடிப்பிச்சை ஒன்றும் ஏந்திவிடவில்லை.

மத்திய அரசு நினைத்தால், கருநாடகத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கையை எடுக்க முடியும். உச்சநீதிமன்றத்தின் ஆணையையே கருநாடகத் தால் மீற முடிகிறது; அப்படி மீறினாலும் கரு நாடகத்தின் மீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை என்பது எவ்வளவு பரிதாபகர மான நிலை!

இன்னும் சொல்லப்போனால் அரசமைப்புச் சட்ட நெருக்கடி என்று கூட இதனைக் கூற முடியும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் கூடத் தொடர முடியும். ஆனால், எதுவும் நடைபெறவில்லை.

காவிரி நதி நீர் ஆணையத்தின் தலைவராக இருக்கக்கூடிய பிரதமர் பிறப்பித்த ஆணைக்குக் கருநாடகம் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்றைய தீர்ப்பில் கூறி இருக்கிறது.

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி நாசமாகப் போய்விட்டது. சம்பா சாகுபடியாவது நடக்க வேண்டும். நாளொன்றுக்கு 2 டி.எம்.சி தண்ணீர்த் தேவை என்று உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்று தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

வினாடிக்கு 9000 கனஅடி நீர் என்ற பிரதமரின் ஆணையையே மதிக்காத மாநிலம் ஆயிற்றே கருநாடகம். பிரதமரின் அந்த ஆணையை உச்சநீதிமன்றம் வழிமொழிந்து இருக்கிறது.

கருநாடகம் என்ன செய்யப் போகிறது?

இதற்குக் கருநாடக அரசு கட்டுப்படவில்லை யென்றால் மத்திய அரசோ, உச்சநீதிமன்றமோ அடுத்து என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறது? இந்தியாவே எதிர்பார்க்கிறது.

கருநாடகத்தைப் பொறுத்தவரை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், காவிரி நீர்ப் பிரச்சினையில் ஒரு மோதல் போக்கைத்தான் கடைப்பிடிக்கிறது. அது சட்டத்தையோ, நியாயத்தையோ, நியதியையோ கடைப்பிடிப்பதில்லை.

ஒன்றை ஒப்புக்கொள்ளவேண்டும் தேசியத் திலகங்கள். இந்தியா ஒரே நாடு; தேசிய ஒருமைப் பாடு, தேசிய நீரோட்டம் என்றெல்லாம் வாய்கிழியப் பேசுபவர்கள் அப்படிப் பேசுவதெல்லாம் உதட்டளவில் தான் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.

நதிநீர்ப் பிரச்சினை, இந்தியாவைத் துண்டு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தேசியம் பேசும் அண்ணாச்சி, காவிரி நீர் என்னாச்சு என்று திராவிடர் கழகம் பேரணிகளில் முழக்கமிடுவதுண்டு. அது ஒன்றும் வெற்று முழக்கமல்ல என்பதை இப்பொழுதாவது சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

கட்சிகளைக் கடந்து தமிழ்நாட்டு மக்கள் ஓரணியாய் எழுந்து நின்று குரல் கொடுக்க வேண்டும். சட்ட விரோத - நியாய விரோத காரியங் களில் எல்லாம் கருநாடகம், கேரளம் போன்ற மாநிலங்கள் கைகோத்து நிற்கும்போது சட்டமும், நியாயமும் நம் பக்கம் இருக்கும் பிரச்சினையில்கூட தமிழ்நாட்டு மக்கள் ஒன்று சேரவில்லை என்றால், தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுக் கொண்டே தானிருக்கும் என்பதில் அய்யமில்லை.

திராவிடர் கழகம், காரைக்கால்முதல் சேலம் வரை மேற்கொள்ளும் எழுச்சிப் பயணத்தை வெற்றி யாக்கிக் கொடுப்பது நம் அனைவரின் கடமையாகும். 29-9-2012

தமிழ் ஓவியா said...

அகில இந்திய நுழைவுத் தேர்வை எதிர்த்து ஓரணியில் தமிழ்நாடு

இளநிலை மருத்துவப் படிப்புக்கும், முதுநிலை மருத்துவப் படிக்கும் அகில இந்திய அளவில் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டார். (விடுதலை 27.9.2012)

இந்த அறிக்கை இப்பொழுது மிகவும் சூடு பிடித்து விட்டது. முன்னாள் முதல் அமைச்சர் - தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களும் இந்திய நுழைவுத் தேர்வை எதிர்த்து தம் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்ததுடன், அதற்காகப் போராடவும் தயார் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் இதுகுறித்துப் பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு கிடையாது. மேலும் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது - அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தினால் அந்த இடஒதுக்கீடு பாதிக்கப்படும். மேலும் கிராமப்புற ஏழை - எளிய மக்கள் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வசதிகள் பெற்றிடவும் இல்லை.

கிராமப் பகுதிகளில் 3 ஆண்டுகள் பணியாற்றி யவர்கள் குறிப்பாக மலை வாழ் மக்கள் பகுதிகளில் பணியாற்றும் இளங்கலை பட்டம் பெற்ற மருத் துவர்களுக்கு (ஆக்ஷக்ஷளு) முதுநிலை மருத்துவப் படிப்புக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் ஒதுக்கப்பட்டு வருகிறது. மத்திய தேர்வாணையம் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்தினால் இந்த வாய்ப்புகள் பறி போகக் கூடிய ஆபத்து இருப்பதையும்பற்றி மிகச் சரியாகவே முதல் அமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவதையும் முதல் அமைச்சர் சுட்டிக் காட்டத் தவறவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்னும் வேறுபாடு இல்லாமல் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்ப்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு நுழைவுத் தேர்வைக் கொண்டு வருவதற்கு முன்பாக மாநில அரசின் கருத்துக் கேட்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை உறுதி கொடுத்ததற்கு மாறாக இப்படி நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கதே!

நெருக்கடி நிலை காலத்தில் கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதைப் பயன்படுத்தி இப்படி தன்னிச்சையாக ஒரு தரப்பாக முடிவு செய்ய முடியும் என்று மத்திய அரசு கருதுமேயானால் அது மத்திய - மாநில அரசுகளின் மோதலில் தான் கொண்டு போய்விடும் என்பதைக் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

இதையும் கடந்து தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் கட்சிகளும் ஒன்று திரண்டு வீதிக்கு வந்து போராடும் நிலையையும் இது உருவாக்கும் என்பதில் அய்யமில்லை. தந்தை பெரியார் பிறந்த சமூகநீதி மண் - சமூகநீதிக்காகப் பாடுபட்டு நிலை நிறுத்திய திராவிடர் இயக்கம் வேரூன்றிய பூமியும்கூட! இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டதற்குக் காரணமாக இருந்ததும் தந்தை பெரியார் தலைமையிலான போராட்டங்கள்தான் என்பதை மறந்து விடக்கூடாது.

மண்டல் குழுப் பரிந்துரைகளை அமல்படுத்துவ தற்காக திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் நடத்தியது என்ற வரலாற்று உண்மையையும் நினைவூட்டுகிறோம்.
அகில இந்திய நுழைவுத் தேர்வு என்பது இந்திய அளவில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும், கிராமப்புற ஏழை - எளிய மக்களையும் பாதிக்கக் கூடியது என்பதால் இந்தத் திட்டத்தை அறவே ரத்து செய்வது தான் நல்லது; அல்லது நுழைவுத் தேர்வை விரும்பாத மாநிலங்களில் ரத்து செய்ய வேண்டும்.

ஏற்கெனவே ஆந்திர மாநிலம் மற்றும் காஷ்மீரில் அகில இந்திய நுழைவுத் தேர்வு கிடையாது. இப்பொழுது குஜராத்தும், மேற்கு வங்கமும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான நாடாளுமன்ற குழுவிடமும் திராவிடர் கழகம் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளது. நாடாளுமன்ற குழுவும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இந்தப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம் 2-10-2012

தமிழ் ஓவியா said...

காந்தியார் கொல்லப்பட்டது ஏன்?
இந்தியா சுதந்திரம் பெற்றது 15.8.1947இல் காந்தியார் கொல்லப்பட்டது - 30.1.1948இல் அதாவது சுதந்திரம் பெற்ற 168ஆம் நாள் கொல்லப்பட்டார்.

காந்தி, இந்தியாவை மதச் சார்பற்ற நாடு என்று சொன்னது. 7.12.1947-இல்; காந்தி கொல்லப்பட்டது 30.1.1948-இல். அதாவது அவர் நம் நாடு மதச் சார்பற்றது என்று சொன்ன 53ஆம் நாள் கொல்லப்பட்டார். காந்தி, இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பார்ப்பனரின் நடத்தையைப் பார்த்து அவர் சுயமரியாதைக்காரராகிவிட்டார். அவர் கொல்லப்படாவிட்டால், இந்தியா சுயமரியாதைக் கொள்கை நாடாகி விடும் என்று பயந்தே அவரைக் கொன்றார்கள்.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

பிற்போக்கான மதச் சார்பான ஆட்சி வந்துவிடக் கூடாது!

செய்தியாளர்களிடம் கலைஞர் பேட்டிசென்னை, அக்.2- இன்றைய மத்திய ஆட் சியைத் தொடர்ந்து ஆதரிப்பதற்குக் கார ணம் - ஒரு பிற்போக் கான மதச் சார்பான ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் என்று திமுக தலை வர் கலைஞர் அவர்கள் நேற்று அண்ணா அறி வாலயத்தில் செய்தி யாளர்களிடம் கூறினார். செய்தியாளர் :- போராட்டத் தீர்மானத் தின் மீது எடுத்த முடி வைப் பற்றி கூறுங்கள்?

கலைஞர் :- அனைத்து வகையிலும் செயலிழந்து விட்ட அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக் கைக் கண்டித்து சென்னை மாநகரில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலு வலகத்திலே இருந்து, கடற்கரைச் சாலை வழியாக, கடற்கரைச் சாலையிலே உள்ள கலங்கரை விளக்கம் வரையில் - அக்டோபர் 5ஆம் தேதி வெள்ளிக் கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையில் கறுப்புடை அணிந்த மனிதச் சங்கிலி யும் - அதுபோலவே தமி ழகம் முழுவதும் மாவட் டத் தலைநகரங்களிலும் அதே நாளில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையில் அவ் வாறே கறுப்புடை அணிந்த மனிதச் சங்கிலி யும் அமைத்து ஆர்ப் பாட்டம் நடத்துவ தென்று இந்தச் செயற் குழு தீர்மானித்துள்ளது.

செய்தியாளர் :- சென்னையில் நடைபெ றும் கறுப்புடை அணிந்த மனிதச் சங்கிலி ஆர்ப் பாட்டத்திற்கு யார் தலைமை ஏற்கிறார்கள்?

கலைஞர் :- சென் னையிலே நடைபெறும் கறுப்புடை அணிந்த மனிதச் சங்கிலி ஆர்ப் பாட்டத்திற்கு நானே தலைமை வகிக்கிறேன். மற்ற மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப் பாட்டங்களைப் பற்றி மாவட்டக் கழகச் செய லாளர்கள் கலந்து பேசி முடிவெடுத்து அறிவிப் பார்கள்.

செய்தியாளர் :- டீசல் விலை உயர்வு பற்றி?

கலைஞர் :- அதை யெல்லாம் உள்ளடக்கித் தான் தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறோம். ஏழு தீர்மானங்களில் அவைகள் எல்லாம் அடங்கும்.

செய்தியாளர் :- மத்திய அமைச்சரவை யில் புதிதாக சேர மாட் டோம் என்று சொல்லி யிருக்கிறீர்கள். அதற்கு என்ன காரணம்?

கலைஞர் :- பங்கு பெற மாட்டோம் என் பது தான் காரணம்.

செய்தியாளர் :- அ.தி.மு.க. பொறுப் பேற்றதிலிருந்து அதி காரிகள் எல்லாம் அடிக் கடி மாற்றப்படுகிறார் கள். அமைச்சர்கள் மாற்றப்படுகிறார்கள். பேரவைத் தலைவரே

இப்போது பதவி விலகியிருக்கிறார். அதைப்பற்றி தி.மு.க. வின் கருத்து?

கலைஞர் :- நிறைவேற்றப்பட் டுள்ள ஏழு தீர்மானங்களில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் அடங்கியிருக்கிறது.
அந்நிய முதலீடு

செய்தியாளர் :- அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் நீங்கள் இடம் பெற்றிருக்கிறீர்கள். அந்நிய நேரடி முதலீட்டினை எதிர்த்து எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத் திலே தீர்மானம் கொண்டு வந்தால், அதை தி.மு.க. ஆதரிக்குமா?

கலைஞர் :- ஆதரவு அளிப் போம்.

செய்தியாளர் :- இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?

கலைஞர் :- அதற்கான முயற்சி களிலே சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை அந்த அணியைப் பற்றியே சிந்திக்காமல் இருக்கின்ற எங்களிடம் கேட்பது நியாயமல்ல.

செய்தியாளர் :- பா.ஜ.க. உள் ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத் திற்கு முன் கூட்டியே தேர்தல் வரும் என்று சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?

ஜோசியத்தில் நம்பிக்கை இல்லை

கலைஞர் :- நான் ஜோசியம் சொல்ல விரும்பவில்லை. பொது வாக ஜோசியத்திலே நம்பிக்கையும் இல்லை.

செய்தியாளர் :- காங்கிரசுடன் தி.மு.க. விற்கு உறவு எவ்வாறு உள்ளது?

கலைஞர் :- உறவு என்பது வேறு. அதற்கிடையே இது போன்ற சில பிரச்சினைகளை பேசித் தீர்ப்பது என்பது வேறு. ஆகவே இந்தப் பிரச்சினைகளுக்காக உறவு பாதிக்காது.

செய்தியாளர் :- அய்க்கிய முற் போக்குக் கூட்டணியின் ஒருங் கிணைப்புக் கூட்டத்தில் தி.மு. கழகம் தன்னுடைய மாறுபட்ட பிரச்சி னைகளை முன் வைத்ததா?

கலைஞர் :- கட்சி வேறுபாடு எதுவும் இல்லை. பிரச்சினைகளின் மீது எங்களுடைய கருத்துக்களை தி.மு.க. சார்பிலே கலந்து கொண்ட வர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

செய்தியாளர் :- அய்க்கிய முற் போக்குக் கூட்டணியில் தி.மு.க. தன்னுடைய எதிர்ப்புகளைத் தெரி வித்த பிறகும், பிரதமர் எடுத்த முடிவில் மாறுதல் இருக்காது என்று சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- உடனடியாக அந்தக் கருத்தைப் பற்றி சவால் முறையில் எதுவும் செவதற்கில்லை. மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் எங் களுக்குள்ள அக்கறையின் காரண மாக பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் மேலும் இவைகளைப் பற்றிச் சிந்திப்பார் என்ற நம்பிக் கையில் இருக்கிறோம்.
கூடங்குளம் பிரச்சினை

தமிழ் ஓவியா said...


செய்தியாளர் :- கூடங்குளம் பிரச்சினையில் தற்போது போராட் டம் தீவிரம் அடைந்திருக்கிறது. இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு நீங்கள் சொல்கின்ற கருத்து என்ன?

கலைஞர் :- மத்திய அரசு, மாநில அரசைப் போல இருதலைக் கொள்ளியாக செயல்படக் கூடாது என்பது தான் என்னுடைய கருத்து. கூடங்குளம் பற்றிப் பேசுவதென்றால், அது பெரிய வரலாறு. உங்கள் மொழியிலே, உங்களுக்குத் தெரிந்த மொழியிலே சொல்லவேண்டுமேயா னால், அது பெரிய ராமாயணம். ஏனென்றால் கூடங்குளம் தொடங் கிய போது, அதனால் மின்சார உற்பத்தி அதிகமாகும், நாட்டிற்குப் பயன்படும் என்றெல்லாம் சொன்ன போது அதை வரவேற்றவர்கள் நாங்கள். இப்போதும் வரவேற்பவர் கள் தான். ஆனால் அதனால் மக் களுக்கு ஆபத்து ஏற்படும், வாழ்வா தாரமே சீர் குலையும் என்றெல்லாம் குரல் கிளம்பிய போது அதைப் பற்றி முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உடனடியாக - அவருடைய கட்சிக் கூட்டத்திலே அல்ல, ஆட்சியின் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, கூடங்குளத்தில் பணிகளை யெல்லாம் நிறுத்தி வைக்கவேண்டு மென்று தீர்மானத்தை நிறைவேற்றி, அதை டெல்லிக்கு அனுப்பி வைத் தார். அதன் பிறகு இப்போது, கூடங் குளத்தால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கிப் போராடு கின்ற மக்களை அழைத்துப் பேசியோ அல்லது அரசின் மூலமாகவோ சமாதானப் படுத்துகின்ற - அவர்களுக்குத் தெளிவு ஏற்படுத்துகின்ற எந்த முயற்சிகளிலும் ஈடுபடாமல், அடக்குமுறையால் அதை ஒடுக்கி விடலாம் என்று கருதி செயல்படுகிறார். அதைத் தான் நாங்கள் கண்டிக்கிறோம்.

செய்தியாளர் :- கிரானைட் குவாரி விஷயத்தில் முன்னாள் அமைச்சர் மீதும், இப்போதுள்ள அமைச்சரின் மகன் மீதும் வழக்கு தொடுத்து காவல்துறையினர் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதை அரசியல் பழிவாங்கும் போக்கு என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

கலைஞர் :- அரசியல் பழி வாங்கும் செயல் இன்று சர்வ சாதாரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது தொடுக்கப்படுகிறது என்பதை நான் நன்றாக அறிவேன். இந்த கிரானைட் குவாரி பிரச் சினையில் சம்பந்தப்பட்ட வர்கள் என்று யார் யார் மீது குற்றம் சாட்டி யிருக்கிறார்களோ, அவர்களைப் பற்றி யெல்லாம் பத்திரிகைகளிலே செய்தி கள் வருகின்றன. சிக்கியவர்களில் யார்யார் உண்மையான தவறு செய்த வர்கள், தவறு செய்யாதவர்கள் யார் என்பது என்பதெல்லாம் இப்போது தெரியாது. ஏனென்றால் இந்தத் தொழிலிலே ஈடுபட்டவர்கள் யார் யார் என்பதை கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியிலேயிருந்து கணக்கிட்டு, அதைப் பற்றி பரிசீலிக்க சி.பி.ஐ. விசாரணை வைப்பது தான் உசிதமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

செய்தியாளர் :- தலைமைச் செய லகத்திற்கு முன்னால் இருந்த கல்வெட் டில் இருந்த உங்கள் பெயரை அழித்திருக்கிறார்கள். பக்கத்திலேயே ஜெயலலிதாவின் பெயர் தாங்கிய கல்வெட்டினை புதிதாக வைத்திருக் கிறார்கள்.

கறுப்புச் சட்டை மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் அந்த வழியாகத் தான் செல்கிறது.
உங்கள் தொண்டர்கள் கல்வெட் டினைப் பார்த்து விட்டு கோபப்பட மாட்டார்களா?

கலைஞர் :- இதெல்லாம் சாதா ரண விஷயம்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.பிற்போக்குத்தனமான, மதச் சார்புள்ள ஆட்சி வந்துவிடக் கூடாது

செய்தியாளர் :- பல்வேறு முரண்பாடுகளோடு மத்திய அரசு செயல்படும் இந்த நிலையில், தொடர்ந்து தி.மு.க. அவர்களுக்கு ஆதரவு அளிப்பதின் காரணம் என்ன?

கலைஞர் :- இந்தியாவிலே ஒரு பிற்போக்குத்தனமான, மதச் சார்புள்ள ஆட்சி வந்து விடக் கூடாது என்பது தான் முக்கிய காரணம். 2-10-2012

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர் பிரச்சினைகள்பற்றி கலைஞர் கடிதத்திற்கு பிரதமர் எழுதியுள்ள பதில்

தி.மு.க. தலைவர் மானமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் 20-8-2012 அன்று ஈழத் தமிழர் பிரச்சினைகள் பற்றி இந்தியப் பிரதமருக்கு எழுதி இருந்த கடிதத்திற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் 25-09-2012 அன்று பதில் கடிதத்தை கலைஞர் அவர்களுக்கு எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு:

அன்புள்ள டாக்டர் கருணாநிதிஜி,
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி நீங்கள் 20-8-2012 அன்று எழுதிய கடிதத்திற்கு பதிலான இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்.

உங்கள் கடிதத்தில் எழுப்பப்பட்டிருந்த அனைத்துப் பிரச்சினைகள் பற்றியும் நான் கவனத்தில் எடுத்துக் கொண்டேன்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த போதிலிருந்து, இலங்கை வாழ் தமிழ் குடிமக்களின் நலன்களின் மீது இந்திய அரசு தனது கவனத்தைச் செலுத்தி வருகிறது. புலம் பெயர்ந்த தமிழர்களை மறுபடியும் அவர்களின் குடியிருப்புகளி லாவது அல்லது வேறு இடங்களிலாவது குடியமர்த்துவது என்பதற்கே நமது அரசு முக்கியமாக அதிக அளவில் முன்னுரிமை அளித் துள்ளது. அதிகாரப் பங்கீடு பற்றி இலங் கைத் தமிழர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசுக்கு நாங்கள் தெரிவித்துள்ளோம். சமத்துவம், கவுரவம், நீதி மற்றும் சுயமரியாதையுடன் கூடிய வாழ்க்கையை இலங்கை தமிழ் சமூகத்தினருக்கு எதிர்காலத்தில் அளிப்பது பற்றி நாங்கள் தொடர்ந்து இலங்கை அரசுடன் பேசிக் கொண்டிருக்கிறோம்.
மிக்க மரியாதையுடன்,
தங்கள் உண்மையுள்ள,
ஒப்பம். மன்மோகன்சிங் 2-10-2012

தமிழ் ஓவியா said...

வரவேற்கத்தக்க முயற்சி!

மருத்துவக் கல்லூரிகளில் சேர தேசிய நுழைவுத் தேர்வு

தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது - ரத்து செய்க!

தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம்சென்னை, அக். 2- மருத்துவக் கல்லூரிகளில் சேர அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவை தமிழ்நாடு அரசு எதிர்க் கிறது; அதனைக் கண்டிப்பாக ரத்து செய்ய வேண் டும் என்று பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். கடிதம் வருமாறு:

கடந்த ஜூலை 30ஆம் தேதி அன்று நான் எழுதிய கடிதத்தில், மருத்துவக் கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித் திருந்தேன். தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்திருந் தும், கல்வியாண்டு 2013-ல் ஆனு, ஆளு மற்றும் முதுகலை பட்டயப் படிப்பில், மாணவ - மாணவியர் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை நடத்த தேசிய தேர்வு வாரியத்திற்கு மத்திய அரசு உத்தர விட்டுள்ளது குறித்து எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

தொழில்முறை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்வதை தமிழக அரசு ஏற்கெனவே ஒரு கொள்கை முடிவாக அறிவித்துள்ளது என்பதை எனது முந்தைய கடிதத்தில் உறுதிபடத் தெரிவித் துள்ளேன். சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள கிராமப்பகுதி மாணவர்கள், தங்கள் பகுதிகளிலிருந்து, நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கும் கல்வி மையங்களுக்குச் செல்வதற்கோ, தேவையான புத்தகங்களை வாங்குவதற்கோ, அவர்களின் பொருளாதார நிலை பெரும் தடையாக அமைந்துள்ளது என்பது, நிபுணர் குழு நடத்திய விரிவான ஆய்வில் தெரிய வந்தது.

தமிழ் ஓவியா said...

இதனையடுத்து, தொழில் முறை படிப்புக்கான நுழைவுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது. மேலும், கிராமப் பகுதிகளில் 3 ஆண்டுப் பணியை நிறைவு செய்த மருத்துவர்களுக்கு மருத்துவ முதுநிலைப் பட்டப்படிப்பில் 50 விழுக்காடு இடங்களை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. அதிலும், மலைப் பகுதி மற்றும் பழங்குடியினர் வசிக்கும் இடங்களில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

முதுகலைப் பட்டப் படிப்பை முடித்த மருத்து வர்கள், குறைந்தபட்சம், ஒரு குறிப்பிட்ட காலம் வரை, அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்று வதற்காக அவர்களிடமிருந்து உறுதிப் பத்திரங் களைப் பெறுவதிலும், தமிழக அரசு வெற்றி பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை, நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதில் பேருதவியாக அமைந்தது. பொது நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டால், இப்படிப்பட்ட முனைப்பான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சட்ட ரீதியிலான சிக்கல் ஏற்படும். தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு விதிமுறைகளின் அடிப்படையில் நடத்தப்படும். பொது நுழைவுத் தேர்வு முறையில், கிராமப்பகுதி மருத்துவ சேவை, குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்பவற்றிற்கெல்லாம் வழிவகை இல்லாமல் போய்விடக் கூடும்.

மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி அவற்றின் கருத்துகளை அறிந்த பின்னர்தான், அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்த கொள்கை முடிவு எடுக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் மாநில அரசுகளுக்கு உறுதியளித் திருந்தார். இதுகுறித்த கருத்துகளை தமிழக அரசும் மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தது. அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம், கல்வி முறையை நிர்வகித்து வரும் மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் நடவடிக்கை.

தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் தனித் தன்மை வாய்ந்த இடஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில், சிக்கல்களை ஏற்படுத் தும், மீண்டும் மீண்டும் தமிழக அரசு விடுத்திருந்த வேண்டுகோள்களை பொருட்படுத்தாமல், தற் போது, நுழைவுத் தேர்வு குறித்து மத்திய அரசு வெளி யிட்டுள்ள அறிவிப்பு, தமிழகத்தின் கருத்துகளை மத்திய அரசு அலட்சியப்படுத்தியுள்ளது என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது. பொது நுழைவுத் தேர்வை நடத்தும் முடிவிலிருந்து மத்திய அரசு பின்வாங்கத் தயாராக இல்லை என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. மருத்துவக் கல்லூரிகளில் ஆனு, ஆளு முதுகலை பட்டயப் படிப்பு ஆகியவற்றில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, கட்டாயம் என்பதும், மத்திய அரசின் அறிவிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது. தமிழக அரசின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசு தன்னிச்சையாக வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு, பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதையும் மத்திய அரசு அலட்சியப் படுத்தியுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பொது நுழைவுத் தேர்வு நடத்துவதில் தமி ழக அரசுக்கு விதிவிலக்கு அளித்து, தற்போதுள்ள நிலையே தொடர அனுமதிஅளிக்க வேண்டும்.
- இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்து உள்ளார் 2-10-2012

தமிழ் ஓவியா said...

[தந்தை பெரியார்] இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம்


சட்டத்திலே சாதியைக் காப்பாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார்கள்; அந்தப்படி செய்ததற்கு அடிப்படைக் காரணம் காந்தி. காந்தி பெயரைச் சொல்லித்தான் சாதிக்குப் பாதுகாப்பான ஏற்பாடு செய்ய முடிந்தது. எனவே, இந்த நாட்டில் காந்தி சிலை இருப்பது அவமானம் என்கிறேன். இன்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுகிறார்களே, "வெலிங்டன் சிலை இருக்கக் கூடாது; விக்டோரியா ராணி சிலை கூடாது; நீலன் சிலை கூடாது' என்று; அதுபோல காந்தி சிலை எங்கள் நாட்டில் இருக்கக் கூடாது என்று சொல்ல எனக்கும் உரிமையுண்டு. ஒரு வெலிங்டனும், நீலனும் செய்யாத அக்கிரமத்தை எங்களுக்கு காந்தி செய்துள்ளார்.

காந்தி மனதார ஏமாற்றி, சாதியைக் காப்பாற்றப் பலமான சட்டம் செய்து கொண்டு, பார்ப்பானுக்குப் பாதுகாப்புக் கொடுத்து, நம்மை என்றும் அடிமையாக இருக்க ஏற்பாடு செய்துவிட்டுப் போய்விட்டார். நம்மவனோ நான் நாயக்கனாயிற்றே, நான் கவுண்டனாயிற்றே என்று நினைத்துக் கொண்டு சூத்திரன் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறானே தவிர, வேறு என்ன? தெரியாமல் தொட்டால், நெருப்பு சுடாமல் விடுமா? தெரியாதது போலவே இருந்து விட்டால், சூத்திரப் பட்டம் இல்லாது போய்விடுமா?

ராசகோபாலாச்சாரியார் மதுரையில் பேசும்போது, "சிலர் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றதைத் தப்பாகப் புரிந்து கொண்டு, சாதியே ஒழிய வேண்டுமென்கிறார்கள். காந்தி ஒருக்காலும் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை; சாதி காப்பாற்றப்பட வேண்டுமென்றார்' என்று பேசினார். சாதி ஒழியக் கூடாது என்று சொல்லத் தைரியம் வந்துவிட்டதே, என்ன சங்கதி என்று பார்த்தால் ஒவ்வொன்றாகத் தெரிகிறது. காந்தி வருணாசிரம தர்மத்தை (சாதியை) காப்பாற்ற வேண்டும் என்று சொன்னதை ஆதாரமாக வைத்துக் கொண்டு அதன்படியே சாதியை அசைக்க முடியாதபடி சட்டம் செய்து விட்டார்கள். இது, காந்தி மனதாரச் செய்த துரோகம். இந்தப் பித்தலாட்டம் உங்களுக்குத் தெரியாது.

டாக்டர் அம்பேத்கர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இதில் காந்தி செய்த பித்தலாட்டங்களை நல்லபடி எடுத்துப் போட்டுள்ளார். "தீண்டாமை ஒழிப்புக்குக் காங்கிரசும் காந்தியும் செய்தது என்ன?' என்பது அந்தப் புத்தகம்.

நான் காங்கிரசில் இருந்தபோதே சமுதாயத் துறையில் சமத்துவம் ஏற்படுத்த வேண்டும் என்று நிறையப் பேசியிருக்கிறேன். அப்போது காந்தி, "தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாவிட்டால் வேறு தனிக் கிணறு கட்டிக் கொடு. கோவிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோவில் கட்டிக் கொடு' என்றார்; பணமும் அனுப்புகிறேன் என்றார். அப்போது நாங்கள்தான் அந்த ஏற்பாட்டை எதிர்த்தோம். "கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுபடுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால் அவன் தண்ணீரில்லாமலே சாகட்டும்' என்றேன்.

"அவனுக்கு இழிவு நீங்க வேண்டும் என்பது முக்கியமே தவிர, தண்ணீரல்ல' என்றேன். கோயில் பிரவேசம் வேண்டுமென்று கூப்பாடு போட்டோம். என் கூக்குரலுக்குக் கொஞ்சம் மரியாதை உண்டு என்பது ராஜாஜிக்குத் தெரியும். கோயில்களுக்குள் தீண்டப்படாதவர்கள் என்பவர்களை அழைத்துக் கொண்டு நுழைந்தோம். கேரளத்தில் பெரிய ரகளையாகிக் கொலையும் நடந்து விட்டது. ராஜாஜி, காந்தியிடம், "ராமசாமி பேச்சுக்கு மரியாதை உண்டு; ரகளை ஆகும். ஆதலால் கோவிலில் நுழைய விட்டுவிட வேண்டியதுதான்' என்றார். அதற்குப் பிறகும், "சூத்திரன் போகின்ற அளவுக்குப் பஞ்சமன் போகலாம்' என்றார்கள். நான், "சூத்திரனும் பஞ்சமனும் ஒன்றாகி, நாங்கள் இன்னும் கொஞ்சம் மட்டமானோமே தவிர, பார்ப்பான் அப்படியேதானே இருக்கிறான். சாதி ஒழிய வேண்டுமா, வேண்டாமா? என்றேன்.

அப்போதிருந்தே காந்தி, சாதி காப்பாற்றப்பட வேண்டும் என்ற முயற்சியில் பார்ப்பனருக்கு உடந்தையாகவே இருந்து பல மோசடிகள் செய்து, நம்மை ஏமாற்றி விட்டார். காந்திக்கு இருந்த செல்வாக்கு, நம்மைப் பார்ப்பானுக்கு அடிமையாகவும் பார்ப்பான் பார்ப்பனனாகவே இருக்கவும்தான் பயன்பட்டது. இன்னும் சாதி ஒழிப்புக்கு விரோதமாக "காந்தி சொன்னது; காந்தி மகான் காட்டிய வழி' என்று கூறிச் சட்டத்திலும் பாதுகாப்புச் செய்து கொண்டார்கள்.

காந்தி செய்த மோசடி மக்களுக்குத் தெரிய வேண்டும். அதனால்தான், "காந்தியின் படத்தை எரிப்போம்; எங்கள் நாட்டில் காந்தி சிலையிருப்பது கூடாது அகற்ற வேண்டும்' என்று சொல்லுகிறோம். காந்தியின் பெயரைச் சொல்லித்தானே பிழைக்கிறோம்; காந்திக்கு மரியாதை கெட்டுவிடும் போலிருக்கிறதே என்று நினைத்து அரசாங்கத்திற்கு சாதியை ஒழிக்க உணர்ச்சி வரலாம். "ஆகா! காந்தி படத்தை எரித்தால் ரத்தக் களறி ஆகும்!' என்கிறார்கள். ஆகட்டுமே என்ன நஷ்டம்?

(தர்மபுரியில், 19.9.1957 அன்று ஆற்றிய உரை. "விடுதலை' 9.10.1957)