Search This Blog

11.10.12

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராகாமல் தடுக்கும் பார்ப்பனர்கள்


உலகமயமாகிறார் பெரியார்!
அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராகாமல் தடுக்கும் பார்ப்பனர்கள்
ஆதிக்கத்தையும், பணத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை
லாஸ்ஏஞ்சல்ஸ், அக்.11- பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தையும், செல்வாக்கையும், பணத்தையும் விட்டுக் கொடுக்க விரும் பாததால் தமிழ்நாடு சட்டப் பேரவையில் (திமுக ஆட்சியில்) நிறைவேற்றப்பட்ட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் செயல்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கிறது என்று அமெரிக்கா விலிருந்து வெளிவரும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஏடு சுட்டிக்காட்டியுள்ளது.

கோயில் அர்ச்சகர் களாக ஏகபோக ஆதிக் கம் செலுத்திக் கொண்டு வந்திருக்கும் மேல்ஜாதி பார்ப்பனர்கள் நீதிமன் றத்தில் வழக்கு தொடுத் திருப்பதால், இந்தியா வின் தமிழ்நாடு மாநிலத் தில், இந்து கோயில் களில் அர்ச்சகர்களாக ஆவதற்காகப் பயிற்சி பெற்ற தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் இன்னமும் அர்ச்சகர் வேலை கிடைக் காமல் காத்திருக்கின் றனர்.
இதுபற்றி  10-10-2012 நாளிட்ட லாஸ் ஏஞ் சல்ஸ் டைம்ஸ் பத்தி ரிகை வெளியிட்டுள்ள செய்தியின் தமிழாக்கம் வருமாறு:
தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட சட்டம்
தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட பிரிவு சமூகத்தைச் சேர்ந்த தனது தோழர்கள் வந்து வழிபடும் உள்ளூர் தற்காலிக கோயில் ஒன் றில் நித்திய சடங்குகளைச் செய்து கொண் டும், மெழுகுவத்திகளை விற்றுக் கொண்டும் இருக்கும் அக்கோவில் அறங்காவலர்களான கேசவனது தந்தையும் தாத்தாவும் இருந்து வந்தனர்.  புனிதமாகக் கருதப்படும் வேப்ப, அரச மரங்களைச் சுற்றி யும், நடைபாதைகளி லும் போக்குவரத்தைத் தடை செய்து கொண்டு இருக்கும் ஏராளமான கோயில்களை இந்தியா வில் சர்வசாதாரணமாக எங்கும் காணலாம்.

அவர்களின் ஜாதி எதுவாக இருந்தாலும் சரி, அதனைப் பற்றி கவலைப்படாமல், அனைத்து ஜாதி இந்துக் களையும் கோயில் அர்ச் சகர்களாக ஆக்குவதற் கான பயிற்சியை அளிக்க தென்னிந்தியாவின் தமிழ்நாடு அரசு முன் வந்தபோது, கேசவன் இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ளத் துடித்தார். இதற்கான நீண்ட ஓராண்டுப் பயிற்சியை முடித்து நான்கு ஆண்டு கள் கடந்தும், கேசவ னும், அவரைப் போன்ற தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த அர்ச்சகர் பயிற்சி பெற்ற 206 பேரும், இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் இது பற்றி வழக்கு தொடுத் திருப்பதால்,  அர்ச்சகர் வேலை இதுவரை கிடைக்காமல் காத் திருக்கின்றனர்.  தமிழ் நாட்டின் பெரும்பாலான கோயில்களை மாநில அரசே நடத்தி வரும் நிலையில், அர்ச் சகரைத் தேர்ந்தெடுப்ப திலோ அல்லது கோயில் நிருவாகத்திலோ தலை யிட அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்று பார்ப்பனர்களின் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனால் வெறுப் பும், கோபமும் அடைந்திருக்கும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற தாழ்த்தப் பட்ட பிரிவு மக்கள்,  தங்களுக்கு வேலை கிடைப்பதில் இருக்கும் இத்தகைய நீண்டகால தாமதமே இந்திய சமூ கத்தில் பார்ப்பனர்கள் கொண்டிருக்கும் செல் வாக்கையும், அதிகாரத் தையும் காட்டுவதாகக் கூறுகின்றனர்.
அவ்வப்போது கிடைக்கும் சிறுசிறு கோயில் வேலைகளைச் செய்து கொண்டு நாங்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறோம். இது மிகவும் கடினமான வாழ்க்கைப் போராட் டம்தான் என்று 26 வயதாகும் கேசவன் கூறுகிறார்.

நான்காயிரம் ஆண்டு கால ஜாதிக் கட்டமைப்பு

நான்காயிரம் ஆண்டு காலமாக நிலவி வரும் ஜாதிக் கட்டமைப் பினை அழியாமல் காப் பாற்றியே தீருவது என்ற பார்ப்பனர்கள், இந்து தேசியவாதி அரசியல் வாதிகள், பாரம்பரி யத்தைப் போற்றி பின் பற்றி வருபவர்கள் ஆகி யோரின் முயற்சியினால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற இந்த தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் வெறுப் பும், சோர்வும் அடைந்துள்ளனர்.

சிக்கல் நிறைந்த இந்திய ஜாதி அமைப்புக் கட்டமைப்பில் தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் கீழான அடி மட்ட நிலையில் வைக்கப்பட் டுள்ளவர்கள் ஆவர்.  தூய்மையற்றவர்கள் என்று கருதப்படும் அவர்கள், மூன்றில் இரண்டு பங்கு மக்க ளுக்கு கழிப்பிட வசதிகள் அற்ற இந்திய நாட் டில்,  மனிதக் கழிவுகளை அகற்றும் பணிகளில் தள்ளப்பட்டனர்.  அண்மைக் காலமாக நகரங்களில் இத்தகைய ஜாதி பாகுபாடு வெளிப்படையாகக் காட்டப்படுவது குறைந்திருக் கிறது. என்றாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியலிலோ, வணிகத் திலேயோ ஈடுபடும் போது, அவர்களது ஜாதியும் மதமும் அவர் களுக்குப் பெரும் தடையாக இருக்கின்றன. சமூக அளவில் நிலவும்  பழக்க வழக்கங்களும், தாழ்த் தப்பட்ட மக்கள் மீது உயர்ஜாதி பார்ப்பனர் கள் கொண்டிருக்கும் வெறுப்பு, அவர்கள்பால் காட்டும் பாகுபாடு, குறிப்பாக கிராமப் புறப்பகுதிகளில், அவர்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றி யுள்ளன.

பார்ப்பனர்களின் அதிகாரம்

பார்ப்பனர்களின் அதிகாரத்துக்கு ஆணி வேராக விளங்குபவர்கள் இந்த அர்ச்சகப் பார்ப் பனர்கள்தான்     என்று கூறுகிறார், ஒரு துறைமுக நிருவாகியும், தங்களுடைய அங்கீகாரத்துக்காகப் போராடும் பயிற்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் வழக்குரைஞருமான கிருபானந்தசாமி. இந்தியாவில் உள்ள பெரும்பாலான கோயில் களைத் தாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதோ அல்லது பார்ப்பன அர்ச்சகர்களை ஒட்டு மொத்தமாக நீக்கிவிடுவதோ தங்களின் நோக்கமோ, விருப்பமோஅல்ல என்று இந்த தாழ்ந்த ஜாதி அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் கூறுகின்றனர்.  உண்மையைக் கூறுவதானால், இந்தியாவில் அர்ச்சகர்களுக்கான தேவை அதிகமாகவே இருக் கிறது என்று கூறலாம். வாழ்க்கை முறை மாற்றத்தினால், ஆயிரக்கணக்கான பெரிய, சிறிய கோயில்களில் போதுமான அர்ச்சகர்கள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை நிலை. ஜாதி, மற்றும் இதர பாகுபாடுகள் காட்டப்படுவது சட்டப்படி குற்றமாகக் கருதப் படும் நிலையில், தமிழ்நாடு அரசு பராமரித்து வரும் 34,000 கோயில்களில் தங்களுக்கு வேலை வேண்டும் என்பதே அவர்களது  கோரிக்கை.

அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பாத பார்ப்பனர்கள்

இதில் உள்ள முக்கியமான பிரச்சினையே தாழ்த்தப்பட்ட மக்களின் தூய்மையின்மையோ அல்லது பாரம்பரியமான பழக்க வழக்கங்களோ அல்ல. உண்மையில் இதில் இருக்கும் பிரச்சினையே கோயில்  அர்ச்சகர் என்ற முறையில் தங்களுக்குக் கிடைக்கும் பணத்தையோ, செல்வாக்கையோ, அதிகாரத்தையோ பார்ப்பனர்கள் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்பதுதான்.

அர்ச்சகர்களுக்கு அளிக்கப்படும் அதிகார பூர்வமான சம்பளம் என்னவோ மிகவும் குறைந்ததுதான். மாதம் 2500 ரூபாயிலிருந்து 7500 ரூபாய் வரை இருக்கலாம். ஆனால் திருமணங்கள், மற்ற குடும்ப விழாக்கள், மரணச் சடங்குகள் மூலம் கிடைக்கும் வருமானம் கணிசமானது. அரசியல்வாதிகள், வணிகர்கள், சமூகத் தலைவர்கள் ஆகியோருடன் மோதத் தயாராக உள்ள பெரும் நிலையில் உள்ள அர்ச்சகர்களுக்கு பல்வேறுபட்ட சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன.
பார்ப்பன அர்ச்சகர்கள் முக்கியப் பிரமுகர் களுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொள்கின்றனர். வேறு எவரையும் கோயிலுக்குள் விடுவதற்கு அவர்கள் விரும்புவதில்லை; தயாராக இல்லை என்று 28 வயது அர்ச்சகர் பயிற்சி பெற்ற தாழ்த்தப் பட்ட பிரிவைச் சேர்ந்த சத்குரு என்பவர் கூறுகிறார்.

செத்த மொழி சமஸ்கிருதம்
 
கோயில் வழிபாடுகளையும், மந்திரங்களையும் சமஸ்கிருதத்தில் செய்யாமல், மாநிலத் தாய்மொழி யான தமிழிலேயே செய்ய வேண்டும் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற தாழ்த்தப்பட்டவர்கள் விரும்புவது பாரம்பரியப் பிடிவாதம் கொண்ட பார்ப்பனர்களை மேலும் பதறச் செய்கிறது. சமஸ்கிருதம் பார்ப்பனர்களுக்குத் தங்களின் அதிகா ரத்தைத் தக்கவைத்துக் கொள்ள உதவுவதாக அவர்கள் கருதுகின்றனர். கடவுளிடம் என்ன மந்திரங்களை அவர்கள் கூறுகிறார்கள் என்பதை சாதாரண பாமர மக்கள் எவராலும் புரிந்து கொள்ள முடியாது. சமஸ்கிருதம் ஒரு செத்த மொழி என்று கிருபானந்தசாமி கூறுகிறார்.
             ------------------நன்றி:"லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்" - 10.10.2012 தமிழாக்கம் :  த.க.பாலகிருட்டிணன் - “விடுதலை” 11-10-2012

16 comments:

தமிழ் ஓவியா said...


நெய்வேலி முற்றுகை


கருநாடகத்திற்குச் செல்லும் நெய்வேலி மின்சாரத்தை நிறுத்தக்கோரி கழகத்தின் சார்பில் வருகிற 15 ஆம் தேதி நெய்வேலியில் தமிழர் தலைவர் தலைமையில் போராட்டம் நடத்துவது வரவேற்கத் தக்கது ஆகும். அதன் தொடர்பாக 14 ஆம் தேதி இரு குழுக்களாகப் பிரிந்து பிரச்சாரம் செய்வது அவசியமானதாகும். சிறுசிறு அமைப்புகள் எல்லாம் நெய்வேலியில் இக் காரணத்திற்காகப் போராட்டம் நடத்தும்போது, நாம் எப்பொழுது செய்வது என்ற ஏக்கம் இருந்தது. அந்த ஏக்கத்தைத் தலைவரின் அறிவிப்பு போக்கிவிட்டது.

அன்றாடம் கன்னடத் தொலைக் காட்சியில் செய்திகள் கேட்பது வழக்கம். கடந்த இரண்டு வாரங்களாக மைசூரு, மாண்டியா, சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற சாலை மறியல், மற்றும் நீர் மறியல் பார்த்து, அவர்களின் இன உணர்வைக் காண முடிந்தது. அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், காவிரி நம்முடை யதே வேறு யாருக்கும் உரிமையில்லை என்று முழங்கினர். அரசியல் வேறு பாடில்லாமல் எல்லா கட்சிகளும் ஓர் அணியில் திரண்டு ஒன்றாக அமர்ந்து இருந்தனர். தமிழகத்தில் இது போன்ற காட்சியைக் காண முடியவில்லையே என்ற ஏக்கம் மிகுந்தது.

நடுவண் அரசும், உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் தங்கள் ஆணையை மறுபரிசீலனை செய்யாத நிலையில், தண்ணீரை நிறுத்தியதற்கு எவ்வளவு துணிவு வேண்டும்? அங்குள்ள அனைத்துக் கட்சியினரும் விவசாயிகள் என்ற போர்வையில் இணைத்து, அணையை மூடுவதற்குச் செல்லும் காட்சியைக் கண்டோம். மைசூரு மாவட்டத்தில் உள்ள சிறீரங்கப்பட்டினம் என்ற இடத்தில் விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் காவிரி ஆற்றினுள் இறங்கி நீரைத் தடுக்கும் காட்சியைக் கண்டோம். தமிழகத்தில் இது போல் என்றைக்கு நடக்கும் என்ற ஏக்கம் உண்டாகிறது.

மாண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான எஸ்.எம். கிருஷ்ணா, அமெரிக்காவிலிருந்து தொலை நகல் மூலமாகக் கடிதம் அனுப்பி, காவிரி நீரை நிறுத்தச் சொல்கிறார். தமிழகத்திலிருந்து சென்றுள்ள காங்கிரஸ் அமைச் சர்கள் எங்கிருக்கிறார்களோ, காண வில்லை. தமிழக அரசோ, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், நானே ராஜா, நானே மந்திரி என்ற ஆண வத்தின் எல்லையில் உள்ளது. அவர்கள் எவ்வாறு காவிரியில் இறங்கி நீரைத் தடுத்தனரோ - அது போல நாமும் இங்கிருந்து செல்லும் மின்சாரத்தை நிறுத்துவதற்கும், அதற்கான பணிகளை உடனே செய்ய வேண்டும். மயிலே, மயிலே இறகு போடு என்றால் போடாது என்ற பழமொழியை நினைவில் கொள்ள வேண்டும்.

- பேரா. பூ.சி. இளங்கோவன் -
(அமைப்புச் செயலர், பகுத்தறிவாளர் கழகம்). 11-10-2012

தமிழ் ஓவியா said...


குல்தீப் நய்யாரின் எச்சரிக்கை


ஆனந்தவிகடன் இதழில் (3.10.2012) பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் அளித்த பேட்டி ஒன்று வெளியாகியுள்ளது.

கேள்வி: இந்திய ஜனநாயகத்துக்குச் சவா லான விஷயம் என எதைச் சொல்வீர்கள்?

பதில்: பசி இன்றைய இந்தியாவில் அரங்கே றும் அத்தனைப் பயங்கரங்களுக்குப் பின்னணி யில் பட்டினியோடு தூங்கப் போகிறவனின் பழிக்குப் பழி குணம் இருக்கிறது. அதேபோல சாதி, மதம், மொழி, இனம் உள்ளிட்டவற்றின் பெயரால் எழும் எண்ணற்ற பிரிவினை வாதங்கள் இந்தியா முழுக்கத் தலைவிரித் தாடுகின்றன. இது இந்தியாவைக் கண்ட துண்டமாக வெட்டிப் போட்டு விடும். இன் னொரு முக்கிய காரணம் இந்துத் தாலிபான் செயல்பாடுகள். அதுதான் மகாத்மா காந் தியையே பழி வாங்கியது. திட்டமிட்டு அரங் கேற்றப்பட்ட பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனக் கலவரம் ஆகியவை இந்து தாலிபான் களால் உருவாக்கப்பட்டவைதானே. சமீப காலமாக திரைக்குப் பின்னால் தென்படும் இந்துத் தாலிபான் அரசியல் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்துவிடும் என்று கூறியுள்ளார் பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யார்.

பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பது பட்டறிவோடு கூடிய உண்மையாகும்.

வன்முறைக்குக் கத்தியைத் தீட்டக் கூடிய வெறியை அது கிளப்பி விடும் என்பதில் அய்ய மில்லை. அரசின் வளர்ச்சித் திட்டங்கள்மூலம் அந்தப் பசியைக் கப்பலேற்றி விடலாம்.

இரண்டாவதாக குல்தீப் நய்யார், இந்துத் தாலிபான்கள் பற்றி அதன் கோரத்தைப் பற்றி மிகச் சரியாகவே வலியுறுத்திக் கூறியுள்ளார்.

காந்தியாரின் குருதியையே அது குடித் திருக்கிறது என்பது சாதாரணமல்ல; அந்த நிகழ்வுக்குப் பிறகு, அந்தக் கொடியோர்கள் எப்படி நாட்டில் நடமாடுகிறார்கள் - அமைப்பையும் வைத்துள்ளனர்; ஏன் மத்தியிலும் ஆட்சிக்கு வந்துள்ளனர் என்பது உள்ளபடியே அதிர்ச்சிக் குரியது தான்.

காந்தியாரைச் சுட்டுக் கொன்று பசியாறிய அந்த காவிக் கூட்டம் 1992இல், 450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களான முசுலிம்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியை ஒரு பட்டப் பகலில் ஆயிரக்கணக்கில் கூடி அடித்து நொறுக்கவில்லையா?

அதற்குத் தலைமை தாங்கியவர்கள் சாதாரண மானவர்களல்லர். அக்கட்சிகளின் பெருந் தலைவர்கள்; பிற்காலத்தில் துணைப் பிரதமராக, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக, மாநில முதல் அமைச்சர்களாக ஆகியிருக்கின் றனர்.

இவற்றையெல்லாம் மனதிற் கொண்டுதான் குல்தீப் நய்யார். இந்தப் போக்கு இந்தியாவைக் கண்ட துண்டமாக வெட்டிப் போட்டு விடும் என்று அபாய அறிவிப்பினைக் கொடுத்துள்ளார்.

குஜராத் இனக் கலவரத்தையும் எடுத்துக் காட்டியுள்ளார். முதல் அமைச்சராக இருக்கக் கூடிய ஒருவரே தன் சட்டப் பேரவை உறுப்பினர் களை அழைத்து மூன்று நாட்கள் உங்களுக்கு அவகாசம் தருகிறேன் - அதற்குள் சிறுபான்மை மக்களை வேட்டையாடுங்கள் - கொன்று குவியுங்கள் என்று உத்தரவிடுகிறார் என்றால் இந்த அநாகரிக, காட்டுவிலங்காண்டித்தனத்தை என்னவென்று சொல்லுவது!

இன்னும் சொல்லப் போனால் கோத்ரா ரயில் பெட்டி எரிப்புக் காரணமாக தீயில் எரிந்து பிணமானவர்களை அவரவர் ஊர்களுக்குக் கொண்டு செல்லுவது என்ற முடிவை மாற்றி, அத்தனைப் பிணங்களையும் ஊர்வலமாக எடுத்துச் செல்லுவது என்ற முடிவை எடுத்தவரே முதல் அமைச்சர் நரேந்திரமோடிதான் - அதனுடைய பாரதூர விளைவுகளை அறிந்துதானே, வேண்டுமென்றே, திட்டமிட்டு ஏற்பாடு செய்தார்?

இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் குல்தீப் நய்யார் தன் மனதைத் திறந்து காட்டியுள்ளார். அவர் எந்த அரசியல் கட்சியையும் சாராத பொது நிலையாளர் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

2014ஆம் ஆண்டு நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் இவற்றை நாட்டு மக்கள் மறக்கக் கூடாது என்பதே நமது கனிவான வேண்டுகோள்.11-10-2012

தமிழ் ஓவியா said...


நடவடிக்கை

பார்ப்பனர்களுக்கு விரோதமாக எவர் நடக்க ஆரம்பித்தாலும் அவர்களை ஒழித்துக்கட்டவே பார்ப்பனர் சதி செய்வார்கள். புராண கால முதலே இதுதான் அவர்கள் நடவடிக்கையாக இருந்து வந்திருக்கிறது.

பெரியார் -(விடுதலை, 14.7.1961)

தமிழ் ஓவியா said...


ஓர் அதிசயம்!


இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவின் தென்பகுதியில் ஓர் ஆறு பின்னோக்கி ஓட ஆரம்பித்தது. அய்சக் என்று பெயரிடப்பட்ட கடும் புயல் தாக்கியதால் மிசிசிபி நதி 24 மணிநேரம் பின்னோக்கி ஓடியது.

தமிழ் ஓவியா said...


கடத்தப்பட்ட கடவுள்களும், கைதான அர்ச்சகரும் கூட்டாளிகளும்!


பெரிய குளத்தில் பெரிய மீன்கள்!
கடத்தப்பட்ட கடவுள்களும், கைதான அர்ச்சகரும் கூட்டாளிகளும்!தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாலசுப்ரமணியர், கோவில், மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் ஆகிய இரு கோவில்களில் உள்ள கடவுளர்கள், விசா வாங்காமலேயே சிங்கப்பூர் மலேசிய நாடுகளுக்கு (ஏற்றுமதி) சென்று விட்டதைக் காவல்துறை கண்ட றிந்து கடத்தப்பட்ட அக்கடவுள்களை மீட்டெடுத்துக் கொண்டு வந்துள்ளனர் இந்தச் செய்தியை பார்ப்பன ஏடான தினமலரே (11.10.2012) வெளியிட்டுள்ளது.

19 அய்ம்பொன் சிலைகளைக் கடத்தி, குறைந்த விலைக்கு விற்றுள்ளனர். அது மட்டுமா? கோவிலுக்குச் சொந்தமான மற்றொரு கோவிலில் 6 சிலைகள் ஆக 25 - இரண்டு டஜன் கடவுள்களும் அவர்களது பொன் நகை கிரீடம், தங்க அங்கி, உத்ராட்சை உட்பட 87 கிராம் தங்கப் பொருட்கள் - வெள்ளி 272 கிராம் எல்லாம் திருடப்பட்டுள்ளன!

அர்ச்சகப் பார்ப்பனரின் அரிய திருப்பணியைப் பார்த்தீர்களா?

சுற்றுலா செல்ல பாலசுப்ரமணியருக்கும் சுந்தர ரேசுவரருக்கும் எவ்வளவு ஆசை பார்த்தீர்களா?

கடவுள் கடவுள் என்று வாழ்நாள் முழுவதும் காசைச் செலவு செய்து பக்திப் போதையில், வாழ்நாளைப் பாழ் நாளாக்குவோருக்குச் செய்திகள் கண் திறக்க உதவுமா?

அர்ச்சகப் பார்ப்பனர்கள்தான் கடத்தலுக்கும், கடவுள் களவு போவதற்கும் மூலகாரணஸ்தர்கள் என்ற உண்மை புரிகிறதா? முன்பு காஞ்சிபுரம் கோயில் அர்ச்சகப் பார்ப்பனர் தேவநாதனின் கர்ப்பக்கிரக லீலா விநோதங்கள் மறந்து விட்டதா? கோவிலுக்குள்ளே, கோபிகைகளைக் கொஞ்சி மகிழ்ந்த திருவிளையாடலை அன்றாடத் திருப்பணியை பக்தி கைங்கர்யமாகச் செய்தவர் என்பது பக்த கோடிகளுக்கு என்றும் பசுமை நினைவாக இருக்குமே!

டடட

ஹரியானா மாநிலத்தில் தொடரும் கூட்டு வன் புணர்ச்சி - பாலியல் கொடுமைகள் சர்வ சாதாரண மாகிவிட்டன!

டெல்லித் தலைநகருக்கு அருகில் உள்ள மாநிலம் ஹரியானா?

அதற்குத் தீர்வு சொல்லுகிறார்: முன்னாள் ஹரியானா முதல் அமைச்சர் ஓம்பிரகாஷ் சவுதாலா. என்ன தெரியுமா?

குழந்தைகள் மணம் நடைபெற்றால் இதனைத் தடுக்கலாமாம் - என்னே, மூடத்தனத்தின் முடை நாற்றம்!

திருமண வயதை 16 ஆகக் குறைக்க வேண்டுமாம்!

இந்த பிரகஸ்பதிகள் அரசியல்வாதிகள் எப்படிப் பட்ட புர்ர்ரட்சி சிந்தனாவாதிகள் பார்த்தீர்களா?

இம்மாதிரியானவர்களை அரசியலிலிருந்தே விரட்டுவதைத்தவிர நாடு முன்னேற, சமுதாயம் உருப்பட வேறு வழி உண்டா?

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு தீர்வு என்பது நோயைவிடக் கொடியதாக இருக்கக் கூடாது என்பது. அதன்படிதானே இது உள்ளது?

இன்னொரு வடநாட்டுப் பார்ப்பன மத்திய அமைச்சர் ஒரே மனைவியுடன் இருந்தால் கசப்பு ஏற்பட்டு விடுகிறது என்று அபத்தமாக உளறி தாய்க் குலத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

பா.ஜ.க., அமைச்சர்களோ சட்டமன்றம் நடக்கும் போதே, அதைவிட முக்கியமாக கைப்பேசியில் சில படங்களைப் பார்த்து ரசிக்கின்றனர்.

நாட்டினை ஆளும் நாயகர்கள் புத்தி எப்படி விசாலமாக இருக்கிறது பார்த்தீர்களா?

இதற்குப் பெயர்தான் ஞானபூமி - பாரதமாம்!

காவிகள் கொட்டம் ஒருபுறம்; காவி அணி யாமலேயே கயமைக் குணக் கேடர்கள் கூற்று மறுபுறம்!

என்று ஒழியும், இந்த அறியாமையும், கேவலமும்?

- ஊசி மிளகாய் -
விடுதலை 11-10-2012

தமிழ் ஓவியா said...

அமெரிக்காவரை துர்நாற்றம்!இந்தியாவில் பார்ப்பனர்களின் ஆதிக்க வெறியும், ஜாதி மனப்பான்மையும் அமெரிக்காவரை துர்நாற்றம் வீசுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஏடு இந்தியப் பார்ப்பனர்களின் சுயநல ஜாதி வெறியை அம்பலப்படுத்தியுள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டம் இயற்றப் பட்டும், அதனைச் செயல்படுத்த விடாமல் பார்ப் பனர்கள் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.

அதிகாரப் பூர்வமாக அர்ச்சகர் பயிற்சியைப் பெற்ற 206 பேர்கள் நான்கு ஆண்டுகளாக அர்ச்சகர் பணிக்காகக் காத்துக் கிடக்கின்றனர்.

தங்களுக்கு எப்படியும் அர்ச்சகர் பணி கிடைத்து விடும் என்று எதிர்பார்த்து இருந்தவர்கள் பார்ப்பனர்களின் சூழ்ச்சியினால் பணியின்றித் தவித்துக் கொண்டுள்ளனர். எந்த அளவுக்கு இங்குள்ள பார்ப்பனர்கள்பற்றி அமெரிக்கா வரை எட்டப்பட்டுள்ளது என்பது - லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஏடு விளக்கியுள்ள கருத்திலிருந்து எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

இதில் உள்ள முக்கியமான பிரச்சினையே தாழ்த்தப்பட்ட மக்களிடம் தூய்மை இன்மையோ, அல்லது பாரம்பரியமான பழக்க வழக்கங்களோ அல்ல.

உண்மையில் இதில் இருக்கும் பிரச் சினையே கோவில் அர்ச்சகர் என்ற முறையில் தங்களுக்குக் கிடைக்கும் அதிகாரத்தையோ, செல்வாக்கையோ, பணத்தையோ பார்ப்பனர்கள் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை - என்று நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல அமெரிக்க ஏடு அம்பலப்படுத்தி யுள்ளதே.

இதனை நாம் சொன்னால் பார்ப்பனத்துவேஷம் என்று எகிறிக் குதிக்கும் பார்ப்பனர்கள் அமெரிக்க ஏட்டின் இந்தக் கருத்துக்கு என்ன உள் நோக்கத்தைக் கற்பிக்க முடியும்?

தாழ்த்தப்பட்ட சமூகத் தோழர் மயிலாப்பூர் கபாலீசுவரன் கோவில் அர்ச்சகரானால், மயிலாப் பூர் மதனகோபாலய்யரோ பட்டு மாமியோ அர்ச்சனை செய்ய அந்தக் கோவிலுக்குச் செல்லு வார்களா? கடவுளுக்கு முன் வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியாது - தெரியக் கூடாது என் கிற தத்துவார்த்த விசாரணையில் ஈடுபடு வார்களா?

நந்தன் நாயன்மார்களில் ஒருவராக இல்லையா? என்று - நாம் கேட்கும் கேள்விக்குச் சாமர்த்திய மாகப் பதில் சொல்லுவார்கள்.

அந்த நந்தன் கோவில் கருவறைக்குள்ளா வைக்கப்பட்டுள்ளார்?

அவர்கள் சொல்லுகிறபடி வாதத்துக்காக ஒப்புக் கொள்வதாக இருந்தாலும், நந்தனை ஏற்றுக் கொண்டபின், அந்தத் தோழரின் பாரம்பரியத் தினரை ஏற்றுக் கொள்வதில் என்ன தயக்கம் என்ற வினா எழாதா?

இன்னொன்றையும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் சுட்டிக் காட்டியுள்ளது.

கோவில் வழிபாடுகளையும், மந்திரங் களையும் சமஸ்கிருதத்தில் செய்யாமல், மாநில தாய்மொழியான தமிழிலேயே செய்ய வேண்டும் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற தாழ்த்தப் பட்டவர்கள் விரும்புவது பாரம் பரியப் பிடிவாதம் கொண்ட பார்ப்பனர்களை மேலும் பதறச் செய்கிறது. சமஸ்கிருதம் பார்ப்பனர்களுக்குத் தங்களின் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுவதாக அவர்கள் கருதுகின் றனர். கடவுளிடம் என்ன மந்திரங்களை அவர்கள் கூறுகிறார்கள் என்பதை சாதாரண பாமர மக்கள் எவராலும் புரிந்து கொள்ள முடியாது. சமஸ்கிருதம் ஒரு செத்த மொழி - என்று அந்த ஏடு மட்டைக்கு இரண்டு கீற்றாகக் கிழித்தெறிந்து விட்டதே!

லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் எழுதுகிறதா? திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுதலையில் எழுதுகிறாரா என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா!

என்னதான் ஊடகத் துறையிலும், நீதித் துறையிலும், நிருவாகத் துறையிலும் பார்ப்பனர் களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்தாலும் தந்தை பெரியார் கொள்கையின் வெற்றியை, அதன் வீச்சை வெகு காலத்திற்குத் தடுத்து நிறுத்திட முடியாது - பெரியார் உலகமயமாவதைத் தடுக்கவும் முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் அமெரிக்க ஏட்டின் கருத்துக்களும், தகவலும் ஆகும்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! 12-10-2012

தமிழ் ஓவியா said...


காவிரி நீர் பிரச்சினையில் மேலும் மேலும் குட்டு!

கருநாடகத்தின் மறுஆய்வு மனுவை பிரதமர் நிராகரித்தார்
கருநாடக விவசாயிகள் மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி!

புதுடில்லி, அக்.12- காவிரி நீர்ப் பிரச்சினை யில் கருநாடகத்தின் கோரிக்கையை மீண்டும் பிரதமர் நிராகரித்தார். கருநாடக மாநில விவ சாயிகளின் மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளு படி செய்துவிட்டது.

தமிழகத்திற்கு தின மும் 9 ஆயிரம் கன அடி நீர் அக்.15வரை கருநாடகா வழங்க வேண்டும் என்று நதிநீர் ஆணையத் தீர்ப் புக்கு தடைவிதிக்க முடி யாது என்று கூறி கரு நாடகா கோரிக்கையை பிரதமர் மன்மோகன்சிங் நிராகரித்தார்.

டில்லியில் பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையக் கூட் டம் 19.9.2012 அன்று நடைபெற்றது. அக்கூட் டத்தில் தமிழகம், கரு நாடகா, புதுச்சேரி மாநில முதல்வர்களும் கேரள பொதுப் பணித் துறை அமைச்சரும் கலந்துகொண்டனர்.

அக்கூட்டத்தில் தமிழகத்துக்கு செப்.21 முதல் தினமும் 2 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடும் படி கருநாடகாவுக்கு உத்தரவிட முதல் அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தினார். கரு நாடகாவில் இப்போ துள்ள சூழ்நிலையில் தமிழகத்துக்குச் சொட்டு தண்ணீர்கூட தர முடி யாது என்று கருநாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பிடிவாதம் பிடித்தார்.

இதைத் தொடர்ந்து ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் பிரதமர் பிறப்பித்த உத்தரவில் செப்.21ஆம் தேதி முதல் அக்.15ஆம் தேதி வரை தமிழகத்துக்கு கருநா டகா தினமும் 9 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதை இரு மாநில முதல்வர்களும் ஏற்க மறுத்தனர். மேலும் இந்த உத்தரவை எதிர்த்து கூட் டத்தில் இருந்து கர் நாடக முதல்வர் வெளி நடப்பு செய்தார்.

உச்சநீதிமன்ற உத்தரவு

காவிரி நதி நீர் ஆணைய உத்தரவுப்படி கருநாடக அரசு செயல் படாததால் தமிழக அரசு செப்.25-இல் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக் கல் செய்தது. இம் மனுவை செப்.28-ல் விசா ரித்த உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு காவிரி யில் உடனடியாக தண் ணீர் திறந்துவிட வேண் டும்; இல்லையென்றால் கடுமையான விளைவு களை சந்திக்க நேரிடும் என்று கருநாடக அர சுக்கு எச்சரிக்கை விடுத் தது.

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தமிழகத்துக்கு கருநாடக அரசு செப்.28 நள்ளிரவு முதல் காவிரியில் தண் ணீர் திறந்து விட்டுள் ளது. அதுவும் 3 நாட் களுக்குதான் தண்ணீர் திறந்து விடப்படும் என்று அம்மாநில முதல் வர் அறிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் உத்தரவுக்கு தடை கோரி கருநாடகா உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக் கல் செய்தது. இம் மனுவை விசாரித்த நீதி பதிகள் பிரதமர் உத்தர வுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

இதற்கிடையே காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கரு நாடகா அக்.8 அன்று இரவு திடீரென நிறுத்தி விட்டது.

இந்நிலையில் மாநில அரசு நதி நீர் ஆணைய உத்தரவுக்கு தடைகோரி பிரதமருக்கு மனு செய் தது. மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உள் ளிட்ட கருநாடகாவை சேர்ந்த மத்திய அமைச் சர்களும் பிரதமரை சந்தித்து நதி நீர் ஆணைய உத்தரவுக்கு தடை கோரினார். நதிநீர் ஆணையத் தீர்ப்புக்கு தடைவிதிக்க முடியாது என்று கூறி கருநாடகா கோரிக் கையை பிரதமர் மன் மோகன்சிங் நிராகரித் துள்ளார். விவசாயிகள் மனு தள்ளுபடி தமிழகத்திற்கு தண் ணீர் திறந்துவிடுவதில், கருநாடகாவிற்கு காவிரி நதிநீர் ஆணையத்தின் முடிவுக்கு தடை கோரி மாண்டியா மாவட்ட விவசாயிகள் உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி யானது. கருநாடகாவின் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 9000 கன அடி திறந்து விட வேண்டும் என காவிரி நதிநீர் ஆணை யம் உத்தரவிட்டது. இதனை பிரதமரும் வலியுறுத்தினார். இதற்கு கருநாடக மாநில விவ சாயிகள் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர்.

காவிரி நதிநீர் ஆணை யம் பிறப்பித்த உத்தர விற்கு தடை கோரி, கருநாடகா மாநில மாண்டியா மாவட்ட விவசாயிகள் அமைப் பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தனர்.இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன். பி.லோகூர் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அதில், காவிரி நதிநீர் ஆணையத்தின் விவகாரங்களில் மாநில அரசு தான் அப்பீல் செய்ய வேண்டும், தனி நபரோ, அமைப்போ வழக்கு தொடர முடி யாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 12-10-2012

தமிழ் ஓவியா said...


தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்


- சா. காந்தி (தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு)

தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு (1). இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்குச் சொந்தமான மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக் கடியான காலகட்டத்திலும் மின்சா ரத்தை உற்பத்தி செய்யவிடாமல் தமிழ் நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்த மான குத்தாலம் (தஞ்சை மாவட்டம்), வழுதூர் 1 மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலை யங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக் கையாக இருக்கிறது. குத்தாலம் மின் நிலையம் 101 மெகா வாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 92 மெகாவாட் திறனைக் கொண்டிருக்கின்றன. இந்த மூன்று மின் நிலையங்களுமே முழுமை யாக செயல்பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற் றின் மின் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. அவற்றில் உள்ள பழுதை நீக்க பல மாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சா ரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.

இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கை எரி வாயுவிற்காக, மின் உற்பத்தி செய்யப் படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத் திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின் வாரியம் நிறுவனத் திற்குக் கட்டிக்கொண்டிருக்கிறது. 2007 இல் வட சென்னை மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் 2 X 600 மற்றும் 1 X 600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்தி அலகு களை அமைக்க நிறுவனத்தின் உதவி யுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் துவங்கியது.

அதன் கட்டுமானப் பணி 2011 மே மாதத்தில் நிறைவு பெற வேண்டும். அது போலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 2008 ஆகஸ்டில் தொடங்கியது. 2011 நவம்பர் மாதம் அது முடிவடைய வேண்டும். வடசென்னை திட்டத்தைப் போலவே, மேட்டூர் மின் நிலையத்தில் திட்டமிடப் பட்ட 600 மெகாவாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம் தொடங்கியது. 2011 செப்டம்பரில் அது நிறைவு பெற வேண்டும்.

தமிழ் ஓவியா said...

இவை அனைத்தும் ஏற்கெனவே உள்ள மின் நிலையங்களில் மேற்கொள் ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் (expansion plans) என்பதால் இவற்றை அமைத்து, இயக்க குறைந்த காலமே போதுமானது. சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3 X 500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான NTPC துணையுடன் நிறுவ 2002 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் உற்பத்தித் திறனான 1500 மெகாவாட்டில் 1041 மெகாவாட் மின்சாரம் தமிழகத் திற்குக் கிடைக்கும் என்பது உடன் படிக்கை.

ஆனால் இந்தத் திட்டம் 2007 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போடப் பட்டது. கடைசியில், 2007 ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2010 அக்டோபரில் முதல் அலகும், 2011 மார்ச்சில் இரண்டாவது அலகும், 2012 செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். இன்றைய தேதியில், மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும், வடசென்னை யின் இரண்டாவது அலகான 600 மெகா வாட்டும், வள்ளூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந் துள்ளன. 2012 மார்ச் - மே மாதங்களில் அவை முழுமையாக பரிசோதனை செய் யப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (syndronised).. எனினும் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அவற்றில் இருந்து மின் சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, நாம் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம். ஆக, தமிழக அரசு நினைத்தால் இன்றே 1835 மெகாவாட் மின் சாரத்தை (1547 + 288) உடனடியாக உற்பத்தி செய்ய முடியும்.

தமிழ் ஓவியா said...

இந்த மின்சாரம் அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாதலால், தனியாரிடம் இருந்து வாங்கும் கொள்ளை விலை மின்சா ரத்தைப் போலல்லாமல் குறைந்த விலை யில் கிடைக்கும் மின்சாரமாகும். எனி னும், தமிழக அரசு இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது. நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷ னும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2 X 500 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில் துவக்கின. முதலாவது அலகு ஜூன் 2013 இலும், இரண்டாவது அலகு மார்ச் 2012 இலும் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது. நெய்வேலியில் உள்ள முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 2 X 250 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 225 மெகாவாட் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் இந்த மின் உற்பத்தி அலகுகளை துரித மாக முடிக்க வேண்டும் என்ற கோரிக் கையை இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருக்கிறது. ஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை (காட்கில் ஃபார்முலா) சட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசானது ஆந்திர மாநிலத் திற்கே தாரை வார்த்திருக்கிறது. எனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற இன்றளவும் முயற்சி செய்யவில்லை. ஆக, தமிழக அரசின் எதிர்மறை நடை முறை காரணமாக, இன்று நாம் கிட்டத் தட்ட 2025 மெகாவாட் (1835 + சிம்மத்ரி 190) மின்சாரத்தை இழந்து நிற்கிறோம். இந்தத் திட்டங்களை சரியாக கையாண்டாலேயே இன்றைய பற்றாக் குறையான 4000 மெகாவாட்டில் பாதியை சரிசெய்துவிட முடியும்.

தமிழ் ஓவியா said...

என்றாலும்கூட, இதற்கான நடவடிக்கைகளை எடுக் காமல் பிரச்சினையை முற்றவிட்டு, தமிழக மக்களைக் கடும் துயரில் ஆழ்த்தி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தனக்கு சொந்தமான மின் நிலை யங்களில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல், கூடுதல் விலையில் தனியாரால் விற்கப்படும் மின்சாரத்தை வாங்கினால் ஒழிய தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாது என்ற வாதத்தை அது முன் வைத்து வருகிறது. இதோடு சேர்த்து, கூடங்குளம் அணு மின் நிலையம் நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்க முடியாமல் இருப்பதற் கான காரணம் என்றும் கூறி வருகிறது. தமிழக அரசின் இந்த வாதம் தவ றானது. கூடங்குளத்தில் உள்ள வி.வி.இ.ஆர் 1000 வகை அணு உலையின் அதிக பட்ச இயங்கு திறன் 80 ஆகும். அதாவது பிரச் சினைகளின்றி அது இயங்கினால் 800 மெகாவாட் மின்சாரத்தையே அதனால் உற்பத்தி செய்ய முடியும்.

இவ்வாறு உற் பத்தி செய்த மின்சாரத்தில் அதன் கடல் நீர் உப்பகற்றி ஆலைகளை இயக்குவ தற்கே சுமார் 100 மெகா வாட் மின்சாரம் தேவைப் படும். அணு உலையின் இயக்கத்திற்கும், அது தொடர்பான மின் இயந் திரங்களின் இயக்கத் திற்கும் (auxillary consumption) மேலும் ஒரு 100 மெகாவாட் தேவைப்படும். எனவே, அணு உலையில் இருந்து கிடைக்கப் போவது என்னவோ 600 மெகாவாட் மின்சாரம் தான். இதில் தமிழகத்திற் குக் கிடைக்கவேண்டிய பங்கு 46.25% என்பதால் இதில் இருந்து இறுதியில் கிடைக்கப்போவது 277.5 மெகாவாட்தான். மின்சாரம் கடத்தப்படும் போது ஏற்படும் கம்பி இழப்பான 22% போக, கடைசியில் வெறும் 216 மெகாவாட் மின்சாரத்தைத்தான் இந்த அணு உலையில் இருந்து தமிழகம் பெற முடியும். இந்த 80% உற்பத்தித் திறனை அணு உலையினால் அது இயங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே அடைந்துவிட முடி யாது. அந்த நிலையை எட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும் என்பது தான் உலகின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் அனுபவம். எனவே. கூடங்குளம் அணு மின் நிலையமானது முதல் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2015 ஆம் ஆண்டுவரை, அதன் 30-40% உற்பத்தித் திறனிலேயே இயங்க முடியும்.

இதன்படி, தமிழகத்தின் பங்கான 46.25% என்பதை வைத்துக் கணக்கிட்டால், ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் சுமார் 138 இல் இருந்து 185 மெகாவாட் மின்சாரத்தைத் தான் 2015 ஆம் ஆண்டு வரையிலுமே தமிழகத்தால் பெறமுடியும். இதில், கம்பி இழப்பான 22ரூ கழித்து விட்டால் கிடைக்கப் போவதென்னவோ 108 இல் இருந்து 145 மெகாவாட்தான். இரண்டு அணு உலைகளும் இணைந்தே மின்சா ரத்தை அளித்தாலும் கூட, தமிழகத்திற்கு வெறும் 216 இல் இருந்து 290 மெகா வாட்தான் கூடங்குளம் அணு மின் நிலை யத்திலிருந்து கிடைக்கப் போகிறது (2). எனவே, உற்பத்தி தொடங்கப்படாமல் தமிழக அரசால் (ஏதோ காரணத்தால்) நிறுத்தி வைக்கப்படப்பட்டுள்ள 2025 மெகாவாட் திறனுள்ள மின் நிலையங் களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற் கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு போர்க்கால ரீதியில் உடனடியாக எடுக்க வேண்டும்.
*************
கடுமையான மின்சாரப்

தமிழ் ஓவியா said...

பற்றாக்குறைக் கான மற்றொரு காரணமாக இருப்பது, மின்சாரத்தினை சமுதாயத்தின் அனைத் துத் தரப்பினருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் equitable distribution) மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கையாகும். மின் பற்றாக்குறை இருக்கும் காலத் தில் மின்சாரத்தினைப் பங்கிட்டுக் கொடுக்கும் அதிகாரத்தினை மின்சாரச் சட்டத்தின் பிரிவு 23 ஆனது மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கியுள்ளது. மின்வெட்டு மற்றும் மின் விடுமுறைக் கான காலம் தொடர்பான அரசின் அறிவிப்புகள் பயனீட்டாளர்களைக் கட்டுப்படுத்தாது; மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இருந்தாலன்றி அந்த உத்தரவுகளை அமல் படுத்த முடியாது. 2012 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மின்விடு முறை மற்றும் 40 -க்கு உயர்த்தப்பட்ட மின்வெட்டை எதிர்த்து உயர்நீதி மன்றத் தில் 600-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. அத்தனை வழக்கு களையும் ஒழுங்குமுறை ஆணையத்தின் விசாரணைக்கே உயர்நீதி மன்றம் திருப்பி அனுப்பிவிட்டது. அதுபோன்றே, 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழக அரசு 40ரூ மின் வெட்டை முதல்முறையாக அமல்படுத்திய போது ஒழுங்குமுறை ஆணையம் அதற் கான அனுமதியை வழங்கவில்லை. இதன்காரணமாக அய்ந்து வார காலத் திற்குத் தமிழ்நாடு மின்வாரியம் தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடிய வில்லை. இறுதியில், அரசின் உத்தரவில் பல மாற்றங்களைச் செய்து ஒழுங்குமுறை ஆணையம் மின்வெட்டிற்கான உத்தர விற்கான அனுமதியை அளித்தது. அரசின் தலையீடு இல்லாமலேயே மின்சாரத்தினைப் பங்கீடு செய்து கொடுப்பதற்கான அதிகாரத்தினை ஒழுங்குமுறை ஆணையம் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தில் நிலவும் பார பட்சமான மின்வழங்கு முறையில் ஒழுங்கு முறை ஆணையம் சுயமாகவே தலை யிட்டுத் தன் கடமையை நிறைவேற்றி யிருக்க வேண்டும்.

ஆனால், அது தன் கடமையை ஆற்றவில்லை. பாரபட்சமான மின்வழங்குதல் என்பதைக் கீழ்க்கண்ட காரணங்களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்:

தமிழ் ஓவியா said...

1. சென்னை மாநகரம் மட்டுமே தமி ழகத்தின் மொத்த மின்சாரத்தில் 25%க்கும் மேலாக எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகள் 14-16 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பொழுது சென்னை மாநகரத்தில் மட்டும் 23 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

2. மிக உயர் மின் அழுத்த இணைப்பு களைப் பெற்றுள்ள (110 மற்றும் 230 கே.வி.) மின் இணைப்புகள் 800 மெகாவாட் வரை மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. இவற்றிற்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

3. 31 பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் அளிக்கப் பட்டு வருகிறது. இதற்காக பகிர்ந்தளிக்கப் படுவது 218 மெகாவாட் மின்சாரமாகும்.

4. பெரிய வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்காகவும், அலங்காரத் திற்காகவும் அதிக அளவு மின்சாரத் தினை எவ்விதக் கட்டுப்படும் இன்றி பயன்படுத்தி வருகின்றன. அதுபோன்றே குளிர்சாதன வசதியையும் அவசியத்திற் கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றன.

5. உயர்மின் அழுத்த மின் இணைப் புகளுக்கு 40% மின் வெட்டு உள்ளது. மேலும், மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை உள்ள காலத்தில் 10ரூ க்கும் மேல் மின் பளுவை எடுக்கக் கூடாது என்பதற்கான தடையும் உள்ளது. இதன்மூலம் 2200 மெகாவாட் அளவிற்கு மாலை நேரத்தில் மின்பளு குறைந்திருக்க வேண்டும். அப்படியானால், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை தமிழகத்தில் மின்வெட்டு (load shedding) இருக்கக் கூடாது.

6. திரைப்பட அரங்குகள், அய்ஸ் ஃபேக்டரிகள் மற்றும் டீ எஸ்டேட்டு களுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

7. புதிதாக வரும் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் ஒவ்வொன்றும் முழுமையான குளிர் சாதன வசதிக்காக 5 மெகாவாட் அளவிற்கான மின்சாரத்திற் கான மின் இணைப்பைக் கேட்கின்றன. இது தடையின்றி வழங்கப்பட்டும் வருகிறது. சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சிறு-குறு தொழில்கள் 16 மணி நேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்டன. வழங்கப்படும் 8 மணி நேர மின்சாரமும் மனம்போன போக்கில் அரை மணி நேரத்திற்கும், ஒரு மணி நேரத்திற்கும் வழங்கப்பட்டு வருவ தால் இந்த 8 மணி நேர மின்சாரத்தையும் சிறு-குறு தொழில்களாலும், விவசாயத் தாலும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. இந்த நிலை, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு சீரழித்து விட்டது. இதன் பிரதிபலிப்புதான் இன்று பல்வேறு இடங்களில் மக்கள் போராட் டங்களாக வெடித்திருக்கின்றது.

அரசும், ஆணையமும் இது எதையும் இன்றுவரை பொருட்படுத்தவில்லை. இப்பிரச்சினையைத் தீர்க்க, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்க வேண்டு கிறோம்:

1. பழுதடைந்த மூன்று எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களையும், உற்பத்தி தொடங்கத் தயாராயுள்ள மூன்று அனல் மின் நிலையங்களையும் எந்தவித சாக்குப் போக்கும் கூறாமல் உற்பத்தி தொடங்க தமிழக அரசையும், மின்வாரியத்தையும் வலியுறுத்த வேண்டும்.

2. இருக்கும் மின்சாரத்தைத் தமிழக மக்களிடையே நியாயமான அடிப்படையில் பிரித்தளிக்க இனி மேலாவது ஒழுங்கு முறை ஆணையம் செயல்பட்டு தன் கடமையை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும். தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர் கள் அமைப்பு இப்பிரச்சினையில் தமிழக மக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராயிருக்கிறது. 12-10-2012

தமிழ் ஓவியா said...


இலங்கை அரசிற்கு சாட்டை அடி! பிரிட்டனில் தமிழர்களுக்கு ஆளும் கட்சியில் தனித்துவ தகுதி!


இலண்டன், அக்.12- பிரிட்டனில் பிரித்தானியாவின் ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சி (Conservative) தனது கட்சிக்கான உப கட்சியாக பிரிட்டானியத் தமிழர் களைக் கொண்ட உபகட்சியாக British Tamils Conservative (BTC) எனும் அமைப்பை அதிகாரப் பூர்வமாக பிரிட்டானியா அறிவித்துள்ளது.

இப்புதிய கட்சியில் பிரித்தானியத் தமிழர்கள் மட்டு மல்லாது ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அய்ரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் அங்கம் வகிக்கின்றனர். கடந்த செவ்வாய்க் கிழமை (09.10.2012) நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். குறிப்பாக Rt. Hon. Thersa Villeris, MP & Minister (Secretary of Stae for Northern Ireland), Lee Scott MP (Chairman, All party group for Tamils), Dr. Syed Kamal MEP, Rt Hon. Grant Shapps, MP (Conservative party Chairman), Jackie Doyle-Price MP, Robert Halfon, MP for Harlow, Rt. Hon., Dr. Rachel Joyce, Roger Evans (GLA member), Dr. Charles Tannock, MEP, Liam Fox, MP ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

இந் நிகழ்வில் தமிழர் தரப்பு British Tamils Conservative பிரதிநிதிகளாக.

Mr. Karan Paul, Dr. Rajah, Dr. Archuna Sivanthan, Mr. patrick Ratnaraja, Mr. Vijay Jeyanthan, Mrs. Thaksha Ravikulan, Mr. Ruthirapathy Seker, Mr. Vasi ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். பல்லின மக்கள் வாழும் பிரிட்டனில் தமிழர்தரப்பிற்கு கிடைத்த முதலாவது உரிமை என்று இதனை சொல்லலாம்.

இவ்வாறான கட்சியை உருவாக்குவதற்கும், அதனூடான தமிழர்கள் தரப்பு விடையங்களை பிரிட்டன் பாராளுமன்றம் வரை கொண்டுசென்று அதனூடாக இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதியை தடுத்து நிறுத்தவும், அரசியல் தீர்விற்கான பிரிட்டன் அரசின் அழுத்தத்தைக் கொடுக்கும் முயற்சிக் காகவும் நீண்ட காலமாக அயராது உழைத்து வந்த MRS. Hazel Weinberg k‰W« MR. KARAN PAUL ஆகியோரின் முயற்சிக்கு கிடைத்த பெரு வெற்றியாகவும் இக் கட்சியின் அங்கீகார அறிவிப்பு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறீலங்கா அரசோடு கூட்டுச் சேர்ந்து இதுவரை காலமும் தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்டுவந்த Liam Fox - MP - தற்போது இக்கட்சியில் இணைந்திருப்பது அனை வரையும் நண்பர்களாக மாற்றி தமிழர்களின் இனப்பிரச் சனைக்கு தீர்வுகாண முனையும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் முயற்சிக்கு வலுச்சேர்த்துள்ளது எனலாம்.

பிரிட்டனில் வாழும் தமிழர்கள், குறிப்பாக இளையோர் கட்சி வேறுபாடுகளைக் கடந்து இப் புதிய British Tamils Conservative (BTC) குழுவில் இணைந்து செயற்படவும், தமது சிந்தனை, செயற்திறன் ஊடாக சர்வதேச நாடுகளை வென்று அதனூடாக இலங்கையில் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க வைக்க முன்வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

12-10-2012

தமிழ் ஓவியா said...


தீயில் நடக்கலாம்


முகமதியர் தமது நோன்பிலே, பெருந்தீயில் இறங்கிச் செல்கின்றனர். இது தெய்வத் திருவருளா! அல்லது ஏதேனும் சூழ்ச்சியினாலா? என்றால், அருளும் அன்று! சூழ்ச்சியும் அன்று, முகமதியர் மட்டும் அல்லர்.

இந்துக்களும் திரவுபதை கோயில், முருகக்கடவுள் கோயில் முதலிய இடங்களில் தீயில் இறங்கிச் செல்கின்றனர். தீ அவர்களைச் சுடுவதில்லை. இது தெய்வச் செயல் என்று நீங்கள் எண்ணுதல் வேண்டா.

கையால் தீயை எடுக்கலாம். ஆனால் அதனை வைத்துக் கொண்டிருக்க முடியாது. கை ஒரு மாத்திரை நேரம் அளவு சூட்டைப் பொறுக்கும் காலில் தீயின் வெம்மை சிறிது நேரம் தாழ்ந்தே சுடுமாதலின் அஃது இரண்டு மாத்திரை சூடு பொறுக்கும். தீயில் நடந்து செல்லலாம்.

தீயின் சாம்பல் காலில் ஒட்டிக் கொண்டால் சுடும். தீயில் சாம்பல் உண்டாகாமல் பாதுகாத்து நடப்பின் சுடாதிருக்கும்.

- பாம்பன் குமரகுருதாச அடிகள் (1878 ஆம் ஆண்டில்)

தமிழ் ஓவியா said...


கோவிலுக்குள் மூலஸ் தானம்


கோவிலுக்குள் மூலஸ் தானம் தவிர மற்ற எல்லா இடங்களிலும் இந்து மதத் தை நம்பாதவர்களும், அதற்கு எதிரிடையாயுள் ளவர்களும் சுற்றித் திரிய இடங் கொடுத்துவிட்டு, இந்து மதத்தைக் கொண் டாடுவதோடு அல்லாமல், இந்து மதத்தில் பிறந்து அதையே நம்பி, அதிலே இருந்து அதற்காகவே இறந்து கொண்டு இருக்கிற இந்து மக்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்பது பொல்லாத தலைவிதியாயிருக்கிறது.

என்னுடைய அபிப்பிராயத்தில் இது தீண்டா மையை விடக் கேவலமான தாயிருக்கிறது.

- பி.டி.ராஜன் (9.6.1928)

(லால்குடி தாலுகா முதலாவது சுயமரியாதை மாநாட்டின் தலைமை உரையில்)
தகவல்: மன்றவாணன்