Search This Blog

21.10.12

கடவுளுக்கு நோட்டீஸ் கொடுங்கள்!-பெரியார்


இழிவுக்குக் கடவுள்தான் காரணம் என்று உங்களுக்குத் தோன்றினால் அந்தக் கடவுளுக்கு உடனே நோட்டீஸ் கொடுங்கள். இந்த நோட்டீஸ் விண்ணப்பத்தை அறிந்த இரண்டு வாரத்திற்குள் நீ ஏதாவது ஒரு முடிவான பதில் தெரிவிக்கா விட்டால் உன் கோயிலை இடித்து விடு வோம் என்று எச்சரிக்கை செய்யுங்கள்!

எவனாவது உங்களைப் பார்த்து, ஒதுங்கிப் போ என்று சொன்னால், ஏனப்பா, நான் ஒதுங்க வேண்டும்; என் காற்றுப்பட்டால் உனக்கு என்ன காலராவா  வந்துவிடும்? என்று கேளுங்கள். அவன் தானாகவே ஒதுங்கிப் போய் விடுவான். எவனாவது உங்களைக் கண்டு ஒதுங்கிப்போனால், அவனையும் சும்மா விடாதீர்கள்.

என்னப்பா என்னைப் பார்த்து தவளை மாதிரி எட்டிக் குதிக்கிறாய்? நான் என்ன மலமா, தொட்டால் நாற்றமடிக்க? அல்லது நான் என்ன நெருப்பா, தொட்டால் சுடும் என்று கூற; ஏனப்பா இப்படிப் பித்தலாட்டம் செய்கிறாய்? மலத்தைக் தொட்டால்கூட கையைக் கழுவிவிட்டால் சரியாய்ப் போகிறது என்கிறாய்; என்னைத் தொட்டால் உடுத்தியிருக்கிற வேட்டியோடு குளிக்க வேண்டுமென்று சொல்கிறாயே; இதற்கு என்னப்பா அர்த்தம்? என்று கேளுங்கள். நீங்களே சிந்தித்துப் பாருங்கள்  இவை யெல்லாம் கலப்பற்ற அயோக்கியத்தனமா, அல்லவா என்று! நீங்கள், உங்களது இந்த சமுக இழிவுபற்றிக் கவலைப்படாத - உங்கள் மூடநம்பிக்கை நடத்தை பற்றிக் கவலைப்படாத கிஸான் சபையை நம்பாதீர்கள். கூலி உயர்வால் மட்டுமே உங்கள் இழிவு போய்விடாது. எஜமான் கூலி என்கிற அந்த வேற்றுமையும் அதனால் மறைந்து விடாது. உழைக்காத சோம்பேறிக்கு ஏன் உடைமை இருக்க வேண்டும்? உழைக்கும் பாட்டாளி ஏன் அவனிடம் கூலி பெற்று வாழவேண்டும்? என்று நீங்கள் கேளுங்கள்.
 
 நீங்கள் முதலில் சரிசமம் ஆன மனிதனாகுங்கள்; பிறகு உடைமையைச் சரிசமமாக்கிக் கொள்ள நீங்கள் பாடுபடுங்கள். உடைமையில் அதிகமான உடைமைக்காரர்களாக இருந்தும் அனேகம் பேருக்கு இழிவு நீங்கவில்லை. உடைமை வரும்; போகும் தற்செயலாய். இழிவு அப்படி அல்ல.. ஆகவே, ஒரு காலணா கூலி உயர்வுக்காக அடிபட்டுச் சாவதைவிட, அவன் ஏன் மேல்ஜாதி, அவன் ஏன் முதலாளி, நான் ஏன் தொழிலாளி என்று கேட்பதில் உயிர் விடுங்கள். கிஸான் தலைவர்களும் அர சாங்கத்தின் ஏவலாளர்கள்; மிராசு தாரரின் கையாள்கள்; பெரிதும் சுயநலமி கள்; நீங்கள் உங்கள் அறிவு காட்டும் வழியைப் பின்பற்றி நடவுங்கள். அரசியலில் வோட்டுரிமை பெறவும், சமுக இயலில் இழிவு நீங்கவும், பொருளாதாரத்தில் முதலாளி ஒழியவும் நீங்கள் ஒன்றுபட்டுக் கிளர்ச்சி செய்யுங்கள்.

நமது மக்கள் மாத்திரம் பெரிதும் பலகாலமாகவே முன்னேற்றமடையாமல் இருக்கக் காரணம் என்ன என்று யோசிக்க வேண்டும். இப்படிப்பட்ட நாளை இவ்வாறு சிந்தனை செய்யத்தான் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெகுகாலமாகவே நம் மக்கள் அறிவு வளர்ச்சியடையாமல் இருந்துவரக் காரணம் கடவுள் இல்லாத குறையாலா? அல்லது அவைகளுக்குப் பூஜை சரிவர நடத்தி வைக்காததாலா? அல்லது அவற்றை மதிக்கத் தவறி விட்டதாலா? யாரேனும் பூஜை நடத்தி வைக்கவில்லை என்றோ, கடவுளை நாம் மதிக்கவில்லை என்றோ, அல்லது கடவுள்களுக்கு நம் நாட்டில் பஞ்சம் என்றோ நம்மீது குற்றம் கூற முடியுமா? அப்படியிருக்க, மற்ற சமு தாய மக்களுக்குள்ள வசதியும் வாய்ப்பும் நமக்கேன் இல்லாமற் போய்விட்டன? இவற்றை நீங்கள் சிந்திக்க வேண்டு மென்பதுதான் எனது முக்கிய கருத்து. எனது வாழ்நாளில் கிடைக்கும் வசதியை இந்தக் காரியத்திற்கே பெரிதும் பயன் படுத்த நான் ஆசைப்படுவதால், இதைப் பற்றித் திருப்பித் திருப்பிக் கூறுகிறேன்.

இழிவின் மூலகாரணத்தை நீக்குக

நமது இழிவின் மூலகாரணத்தைக் கண்டுபிடித்து அதை நீக்குவதில்தான் நாம் பூரா கவனத்தையும் செலுத்த வேண்டும். நம் ஊரில் காலராவோ, மலேரியாவோ வந்தால் நாம் எப்படி அவற்றுக்குக் காரணமாயிருந்து வரும் அசுத்தங்களை யும், கசுமாலங்களையும் நீக்கி, அந்நோய் பரவவொட்டாமல் செய்கிறோமோ, அதே போல் நமது இழிவுக்குக் காரணமாயிருந்து வரும் சில கசுமாலங்களையும் நீக்க வேண்டும். நம் குறைபாடுகளுக்கு நாம் தழுவி நிற்கும் மதந்தான் காரணமே தவிர, கடவுள் ஒருபோதும் காரணகர்த்தராக மாட்டார். கடவுள் மீது பழி போடுவது என்பது அற்பத்தனம் அயோக்கியத்தனம். ஏனப்பா திருடினாய்? என்று ஒரு மாஜிஸ்ட்ரேட் ஒரு திருடனைப் பார்த்துக் கேட்டால், நான் என்ன செய்யட்டுமுங்க; கடவுள் செயல் என்னை அப்படிச் செய்துட் டதுங்க என்று சொன்னால், மாஜிஸ்ட்ரேட் ஒப்புக் கொள்வாரா? எவனாவது ஒரு போக்கிரி உங்கள் பாக்கெட்டில் கைபோட் டால், எல்லாம் கடவுள் செயல் என்று நீங்கள் யாராவது சும்மா இருந்து விடுவீர்களா?
கடவுள் இருக்கிறார் எல்லாம் பார்த்துக் கொள்வார்  என்று எந்த பக்தனாவது தனது பெட்டியைப் பூட்டாமல் விட்டு விடு கிறானா? கடவுள் காப்பாற்றுவார் என்று நினைத்து எவனாவது காசு, பணம் தேடா மல் தெருவில் சோம்பித் திரிகிறானா? அப்படியிருக்க, நமது இழிவு நீக்கத்திற்கு மட்டும் ஏன், எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நாம் விட்டு வைக்க வேண்டும்? நமது இழிவுக்கும் கடவுளுக் கும் சம்பந்தமில்லை. யாரோ, சில சுயநல நயவஞ்சகக் கூட்டத்தார் தம் சுகபோக வாழ்வுக்காகத் தம்மை மேன்மைப்படுத்தியும், மற்றவரைத் தாழ்மைப்படுத்தியும்  சாஸ்திர புராணங்களை எழுதி வைத்துக் கொண்டு, அவற்றைக் கடவுள் வாக் கென்று கூறி, நம்மை ஒப்புக் கொள்ளும்படி சொன்னால்  நாமும் பேசாமல் ஒப்புக் கொண்டு விடுவதா? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? என்ன குற்றம் செய்தோம்?
நாம் என்ன குற்றம் செய்ததற்காக நம்மைக் கடவுள் சூத்திரனாகப் படைத்தார்? நாம்தானே கோயில் கட்டுவதும் கும்பாபிஷேகம் செய்வதும்? நம் முன்னோர்தானே சாமிக்குப் படியளந்து வந்தார்கள்? அப்படியிருக்க, நம்மவர் கொடுத்ததை வாங்கி வயிறு வீங்க உண்டு, சோம்பேறி வாழ்வு நடத்திய பார்ப்பான், எப்படி உயர்ஜாதியாக்கப்பட்டான்? பாடு பட்டு உழைத்த நம்மவர், எப்படி கீழ்ஜாதி யாக்கப்பட்டார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.

இந்த இழிவிற்குக் கடவுள்தான் கார ணம் என்று உங்களுக்குத் தோன்றினால், அந்தக் கடவுளுக்கு உடனே நோட்டீஸ் கொடுங்கள். கடவுளே, நாங்கள்தான் உனக்கும், உன்னைக் குளிப்பாட்டிவரும் உனது அர்ச்சகனுக்கும் அன்றாடம் படி அளந்து வருகிறோம்; அதை உணராமல் நீ நன்றி மறந்து எங்களை இழிஜாதியாய்ப் படைத்து விட்டாய். பாடுபடாத உன்னை யும், பாடுபடுகிற என்னையும் ஏமாற்றுகிற அவனை  உயர்ஜாதி ஆக்கிவிட்டாய்; ஆகவே  ஒன்று இனி மக்களில் உயர்வு தாழ்வு இல்லை என்றாவது கூறு; அல்லது நீயல்ல அதற்குக் காரணம் என்றாவது ஒப்புக் கொண்டுவிடு. இந்த நோட்டீஸ் விண்ணப்பத்தை அறிந்த இரண்டு வாரத்திற்குள் நீ ஏதாவது ஒரு முடிவான பதில் தெரிவிக்காவிட்டால் உன் கோயிலை இடித்து விடுவோம் என்று எச்சரிக்கை செய்யுங்கள். கடவுள் என்று ஒன்று அந்தக் குழவிக் கல்லில் அடைந் திருக்குமானால், அது வாய் திறந்து பேசட்டும்! இன்றேல் அதை உதறித் தள்ளுங்கள். கடவுள் நரகத்திற்கு அனுப்பி விடுவார் என்று நீங்கள் அஞ்சாதீர்கள்; அப்படி ஒன்று இருக்குமானால், அது அர்ச்சகருக்கே சரியாய்ப் போய்விடும். நரகம் என்பது வெறும் கற்பனைப் பூச் சாண்டி; மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள  அறிவாராய்ச்சியைத் தடை செய்து தமது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள  சூழ்ச்சிக்காரர்கள் செய்த ஒரு தந்திரம்.

---------------------------------------- தந்தை பெரியார் --  “விடுதலை”, 29.2.1948


34 comments:

தமிழ் ஓவியா said...


நவராத்திரியைத் தடை செய்வார்களா?


நவராத்திரி நவராத்திரி என்று இந்து மதத்தில் ஒன்பது நாள்கள் விழா கொண்டாடப்படுகிறதே தெரியுமா?

மூன்று நாள் சக்திக்கு (பார்வதிக்கு), மூன்று நாள் லட்சுமிக்கு, மூன்றுநாள் சரஸ்வதிக்கென்று கொலு வைத்துக் கும்மாளம் அடிக்கிறார்களே - அந்த ஒன்பது நாள்களில் நடக்கும் அசிங்கம், ஆபாசம் பற்றி அறியுமா இந்த இந்து முன்னணி சங்பரிவார் வட்டாரம்? மும்பையையே கதிகலங்க வைக்கும் இந்தக் கொண்டாட்டங்கள் மாலையில் தொடங்கி நள்ளிரவில் களை கட்டும். இவற்றில் 50 லட்சம் பேர் பங்கேற்று ஆட்டம் பாட்டத்தில் ஜமாய்ப்பார்கள். இவர்களில் 90 சதவிகிதம் பேர் இளைஞர் கள், இளம் பெண்கள். வழக்கமாக இரவில் நீண்ட நேரத்துக்கு வெளியே இருக்க இளம் பெண்களைப் பெற்றோர் அனுமதிப்ப தில்லை. ஆனால் தசரா கொண்டாட்ட சீசன் முழுதும் இந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதால் நள்ளிரவு இரண்டு அல்லது மூன்று மணி வரைகூட இளம் பெண்கள் வெளியே நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுண்டு.

இந்தக் கொண்டாட்டங்களின் போது இளசு களிடையே ஆண், பெண், தெரிந்தவர், தெரியாதவர், நல்லவர், கெட்டவர் என்ற வித்தியாசங்கள் பார்க்கப் படுவதில்லை. நடன நிகழ்ச்சிகளில் ஆண்களுடன் இளம்பெண்கள் கைகோத்து ஆடுவதும் கச்சேரிகளில் ஆடிப் பாடுவதும் சகஜம்.

இதனால் இரவில் நீண்ட நேரம் வெளியில் தங்கும் இளம் பெண்கள் அவர்களது காதலர்களுடன் ஊர் சுற்றுவதும், காதலர் வீட்டில் தங்குவதும் நடப்பதால் பெண்கள் கற்பிழக்கும் நிலை ஏற்படுகிறது. தவிர, மும்பை நகரெங்கும் கட்டுக் கடங்காத கூட்டத்தை இரவு நேரத்தில் பார்க்கும் விபச்சாரப் பெண்களும், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பணம் குவிப்பதில் ஈடுபடுகின்றனர். இந்தக் காரணங்களால் தசரா பண்டிகைக்குப் பிறகு கர்ப்பம் அடையும் திருமணம் ஆகாத இளம்பெண்கள் எண்ணிக்கையும் எய்ட்ஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக மும்பை மகப்பேறு இயல் அமைப்பு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு தசராவுக்குப் பிறகு திருமணமாகாமல் கர்ப்பம் அடைந்த இளம் பெண்கள் எண்ணிக்கை 30 முதல் 50 சதவிகிதம் அதிகரித்ததாக ஆய்வில் கூறப்பட்டுள் ளது. தசராவுக்குப் பிறகு மூன்று மாத கால கட்டத்தில், மருத்துவமனைகளில் நடந்த கருக்கலைப்பு களைக் கணக்கிட்டு இது தெரிவிக்கப்பட்டது. 16 முதல் 19 வயதுக் குட்பட்ட பெண்களே இதில் அதிகம்.

இவ்வளவு தகவல்களையும் வெளியிட்டது. விடுதலை ஏடு அல்ல. 26.9.2005 நாளிட்ட தினகரன் தான். கலாச்சாரத்தைக் காப்பதற்காகவே அவதாரம் எடுத் ததாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சிவசேனா என்ன செய்யப் போகிறது? இந்த ஆண்டு தசராவில் அகமதாபாத், சூரத், வடோதரா ஆகிய நகரங்களில் நிகழ்ந்த ஆபாசம் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை (25.11.2009) விரிவாகவே செய்தி வெளியிட்டதே. பெண்கள் மருந்துக் கடைகளுக்குப் போய் காண்டம் (Condoms) வாங்கு கிறார்களாம். இந்தக் கால கட்டத்தில் 50 சதவிகிதம் அளவுக்கு பெண்களுக் கான கர்ப்பம் தடுக்கும் காண்டம் விற்பனை அதிகமாம்

The sale of condoms has reportedly gone up by 25-50 per cent in Ahmadabad, Vadodara and Surat. And Chemists will tell you how the fair sex is unabashedly asking for branded stuff. ‘’The sale of condoms has doubles in the past three days of Navratri,’’ says Naitik Kapadia of Apollo Pharmacy, a 24-hour chemist shop close to the SG Highway.

‘’Condom companies are also offering special promotional schemes during Navratri,’’ says Jaswant Patel, Secretary of the Ahmedabad Chemists Association,who admits women have become bold enough to ask for condoms from chemists as well as panwallahs.

‘’The sale has already increased by two to three times during past week, ‘’said Sanjay Patel of Alkapuri Medicals, Vododara. The UInice of has also opened a counter at United Way of Baroda garba. In surat, sale of condoms is particularly high at shops located near garba grounds.

News form ‘’The Times of India’’ 25.11.2010

தமிழ் ஓவியா said...


சேதுசமுத்திரத்திட்டம் -முழக்கங்கள்! (22-10-2012)


நாளை நடக்க இருக்கும் அனைத்து ஜாதியி னருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தி ஆர்ப் பாட்டத்தில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும். சேர்த்துக் கொள்ளப் பட வேண்டிய ஒலி முழக்கங்கள்:

(1) தமிழக அரசே, தமிழக அரசே
முடக்காதே முடக்காதே
சேது சமுத்திரத்திட்டத்தை
சேது சமுத்திரத்திட்டத்தை
முடக்காதே, முடக்காதே!

(2) பெரியார் அண்ணா பெயரைச் சொல்லி
பெரியார் அண்ணா பெயரைச் சொல்லி
ராமன் பாலம் என்று கூறி
ராமன் பாலம் என்று கூறி
மக்கள் நலத் திட்டத்தை
மக்கள் நலத் திட்டத்தை
முடக்காதே, முடக்காதே!
(3) இரண்டு தேர்தல் அறிக்கையிலும்
இரண்டு தேர்தல் அறிக்கையிலும்
சேதுத்திட்டத்தை வலியுறுத்தி
சேதுத்திட்டத்தை வலியுறுத்தி
அண்ணா திமுக, அண்ணா திமுக
வெளியிட்ட கருத்து
வெளியிட்ட கருத்து
என்னாச்சு? என்னாச்சு?
முரண்பட்ட தேன்?
முரண்பட்ட தேன்?
(4) மத்திய அரசே மத்திய அரசே விரைவுபடுத்து விரைவுபடுத்து
சேது சமுத்திரத்திட்டத்தை
சேது சமுத்திரத்திட்டத்தை
விரைவுபடுத்து
விரைவுபடுத்து!

(5) இதிகாச ராமனை
இதிகாச ராமனை
அறிவியல் திட்டத்தில்
அறிவியல் திட்டத்தில்
நுழைக்கலாமா? நுழைக்கலாமா?
திணிக்கலாமா? திணிக்கலாமா?

(6) தேவை தேவை
சேது சமுத்திரத் திட்டம்
சேது சமுத்திரத் திட்டம்
அவசரமாக அவசரமாக
தேவை! தேவை!!-திராவிடர் கழகம்.

தமிழ் ஓவியா said...


இதுதான் அண்ணா தி.மு.க.வா? அய்யா, அண்ணா, அம்பேத்கர் படங்களைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்


சேலம், அக். 21- தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அண்ணல் அம் பேத்கர் படங்கள் அ.தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், அவர்களின் ஆணைப்படி ஆதிதிரா விடர் விடுதியிலிருந்து தூக்கி எறியப் பட்டன.

தனியாக ஜெ. படம் மட்டும்

அண்ணா பெயரைக் கட்சியிலும், உருவத்தைக் கொடியிலும் வைத் துள்ள ஒரு கட்சிதான் இந்த வேலை யைச் செய்திருக்கின்றது.

படங்களை அகற்ற வரும் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள்

அரசு திட்டங்கள் சரியாக நடக் கிறதா?' என மதிப்பிட சேலத்திற்கு அக். 18ஆம் தேதி சட்டமன்ற மதிப் பீட்டு குழுவினர் வந்தனர். இக்குழுவை தி.மு.க, கம்யூனிஸ்ட்டுகள், தே.மு.தி.க உட்பட்ட கட்சிகள் புறக்கணிக்க பவானி எம்.எல்.ஏ பி.ஜி. நாராயணன் தலைமையில் தேனி தங்க தமிழ் செல்வன், காமராஜ், தன்சிங், நீலகண் டன் ஆகிய அ.தி.மு.க வினர் மட்டும் பங்கேற்ற ஆளும்கட்சி மதிப்பீட்டு குழுவாக ஒவ்வொரு இடங்களாக பார்வையிட்டனர்.

சேலம் சங்கர் நகரில் உள்ள ஆதி திராவிடர் மகளிர் விடுதியில் ஆய்வு செய்த போது ஒவ்வொரு அறையாக உள்ளே நுழைய உள் அறையின் சுவரில் மாட்டப்பட்டிருந்த படங் களை கண்டதும் எரிச்சலடைந்தனர்....

அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் படங்களை அகற்றும் காட்சி...

யார் இவங்கல்லாம் எங்கம்மா பக்கத்துல இவங்கல்லாம் இருக்க கூடாது' என்றார் தங்க தமிழ்செல்வன். அவர் இருக்க கூடாது என சொன்ன படங்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா. 'எங்க புரட்சி தலைவி அம்மா தமிழ் இனத்திற்காக பாடுபட்டு கொண்டு இருக்குற பெரிய தலைவி அவங்க படத்தை சின்னதா வச்சுட்டு இவங்க படத்தை எல்லாம் பெருசா வச்சு அவமானபடுத்துறீங்களா?!

அதுவும் திமுக கட்சிக்காரங்க கொடுத்த படத்தை வச்சா நாங்க சும்மா விடுவோமா' என ஏகத்துக்கும் கொந் தளித்த குழுவினர் 'அதெல்லாம் தூக்கி கெடாசுங்க' என கூட வந்தவர்களை அதட்ட மளமளவென மேலே ஏறி அண்ணாவை பிடித்து இழுத்தனர். சுவரில் இருந்து வர மறுத்த அண்ணல் அம்பேத்கரை வெடுக்கென பிடுங்க ஆணியோடு வெளியே வந்தது அண்ணலின் படம்.

ஜெ. அருகே இருந்த தந்தை பெரி யாரின் படத்தையும் இதே போல பிடுங்கி தூக்கி எறிந்தனர். எங்க அம் மாவையே சிறுமைபடுதுறியா எப்படி பார்க்கணுமோ அப்படி பார்த்துக்குறோம்' என விடுதி பொறுப்பாளரை மிரட் டியபடியே கிளம்பியது அ.தி.மு.க குழு.

இத்தனையையும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது மாவட்ட ஆட்சியர் மகரபூசணத்தால். 'முன் அறையிலேயே முதல்வர் அம்மா படம் வச்சுருக்கோம் அது இல்லாம உள் ளேயும் இங்க வச்சுருக்கோம் இது ஆதி திராவிடர் விடுதி அதனால் விடுதி மாணவியருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று ஒடுக்கப் பட்ட மக்கள் விடுதலைக்காக அய ராது உழைத்த தலைவர்கள் படத்தை வைத்தோம் அது தி.மு.கவை சேர்ந்த வர்கள் போன ஆட்சியிலேயே கொடுத்த படம்...

தி.மு.க வினர் பெயர் அந்த படத் தின் கீழே அச்சிடப்பட்டு இருந்தது. அது பிடிக்கவில்லை என்றால் அங்கு ஏதாவது பேப்பர் ஒட்டி மறைத்து இருக்கலாம் அதைவிட்டு குண்டர்கள் போல செயல்பட்டு தேசிய தலைவர் களையே அப்புறப்படுத்தி அவமானப் படுத்தலாமா?'என்றனர் அங்கிருந்த சில மாணவிகள்.

அண்ணல், தந்தை, அறிஞர் கொள் கைகளோடு எங்கள் அம்மாவிற்கு எந்த தொடர்பும் இல்லை என சொல் வதாக தான் அமைந்தது இந்தச் செயல்...

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்கள் வலியுறுத்தி தமிழ்நாட்டுக்கு நிறைந்தபயன்களைக் குவிக்கும்

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முதலமைச்சர் முடக்குவது முறைதானா?

தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை

சென்னை, அக்.21- தமிழ்நாட் டுக்குப் பல வகைகளிலும் பலன் தரக் கூடிய பயனான திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தேவையில்லை என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் கூறுவது முறைதானா என்ற வினாவை எழுப்பியுள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர்.

முரசொலியில் இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:

16-10-2012 அன்று நான் விரிவாக எழுதிய அறிக்கையில், சேது சமுத்திரத் திட்டம் தேவையில்லை என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு, தமிழகத்திற்கு இழைக்கப் படும் மாபெரும் துரோகம் என்பதை விளக்கி யிருந்தேன். கழக மாணவர் அணி சார்பிலும், மற்றும் பல மாவட்டக் கழகங்களின் சார்பிலும் அந்த அறிக்கையினை துண்டு நோட்டீசாக அச்சடித்து தென் மாவட்டங்களில் விநியோகம் செய்யப் போவதாகவும் என்னிடம் தெரிவித் தார்கள். சேது சமுத்திரத் திட்டம் தமிழகத்திற்கு எத்தனை அவசிய மானது என்பதைப்பற்றி திராவிடர் கழகத் தலைவர் இளவல் வீரமணி அவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் ஜி. ராம கிருஷ்ணன் அவர்களும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் தா. பாண்டியன் அவர்களும், பா.ம.க. சார்பில் நிறுவனர் டாக்டர் திரு. ராமதாஸ் அவர்களும் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.

தமிழ் ஓவியா said...

சேது சமுத்திரத் திட்டத்திற்காக எழுச்சி நாள் கொண்டாடும்படி 1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போதே ஆணையிட்டு, அதனை நிறைவேற்றியவர்கள் நாம்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

முதலமைச்சராக அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தபோது, 1985-1990ஆம் ஆண்டுக்கான ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தைச் சமர்ப்பித்த போது சேது சமுத்திரத் திட்டம் மன்னார் வளைகுடாவை பாக் ஜல சந்தியுடன் இணைப்பதற்கு பாம்ப னுக்கு அருகே உள்ள குறுகிய பகுதி யில் கப்பல் போக்குவரத்துக் கால் வாயை வெட்டுவதற்கு வகை செய்யும் திட்டம் என்றும், பயண தூரம், பயண நேரம் ஆகியவை குறையும் என்றும் எடுத்துக் கூறி அத்திட்டத்தை நிறை வேற்றியே தீரவேண்டுமென்றும் கூறி யிருக்கிறார்.

1981ஆம் ஆண்டு சேது சமுத்திரத் திட்டம் பற்றி ஆராய எச்.ஆர். லட்சுமி நாராயணன் தலைமையில் அமைந்த குழு தமிழகத்திற்கு வந்த போது, எனது கோரிக்கையினை ஏற்று, அன்றைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., அந்தக் குழுவிடம் சேது சமுத்திரத் திட்டத்தின் முக்கியத்துவம் பற்றிப் பேசினார். அந்தக் குழு மதுரைக்கும் நெல்லைக்கும் சென்ற போது, கழகத்தின் சார்பில் திரு. வைகோ அவர்கள் அந்தக் குழுவினரைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். நாடாளுமன்ற விவாதங்களின் போதும் முரசொலி மாறனும், அவரைத் தொடர்ந்து திரு. வைகோ வும் வாதாடி, 2004ஆம் ஆண்டு தேர்தலில் கழகம் ஆதரவு தெரிவித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியிலே அமைந்த போது கப்பல், சாலை போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற தம்பி டி.ஆர். பாலு இத்திட்டத்திற்கு முழு வடிவம் தந்து மிக வேகமாக திட்டப் பணிகள் நடந்தன. இதற்கிடையே, 8-5-2002 அன்று இந்தியப் பிரதமர் அவர்களுக்கு நான் ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் வருமாறு :-

எழுச்சி நாள்

அன்புள்ள பிரதமர் அவர்களுக்கு, வணக்கம்.

தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான சேது சமுத்திரத் திட்டத்தை உடனே நிறைவேற்றக் கோரி இக்கடிதம் தங்களுக்கு எழுதுகின்றேன். இத்திட் டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகம் கிட்டத்தட்ட அரை நூற் றாண்டுக் காலமாக வலியுறுத்தி வருகிறது. நான் பல சமயங்களில் பொறுப்பில் இருந்த பல பிரதமர் களிடம் இதைக் குறித்து வலியுறுத்தி உள்ளேன். 23-7-1967இல் சேது சமுத்திரத்தின் ஒரு பிரிவாக உள்ள தூத்துக்குடி துறைமுகத் திட்டம், சேலம் இரும் பாலைத் திட்டம் ஆகிய திட்டங்களை நிறை வேற்றக் கோரி முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் எழுச்சி நாளை அறிவித்தார். இத்திட்டம் உலகளவில் உள்ள சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் போன்று சிறப்பைப் பெறும் என்பதை அறிந்து இத்திட்டத்தை ஆராய பல குழுக்கள் அமைக்கப்பட்டும், இத்திட்டம் நீண்ட நாளாக கிடப்பில் போடப்பட்டது என்பது கவலைக்குரிய செய்தியாகும். மத்தியில் ஆளும் நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இத்திட்டத்தை நிறைவேற்றிடவும், இத் திட்டத்தின் சாத்தியக் கூறினை ஆராய பண ஒதுக்கீடு செய்தது குறித்தும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இந்தச் சேதுக்கால்வாய் திட்டம் விரைவாகச் செயல்படுத்த வேண்டுமென்ற அடிப்படையில் இக்கடிதம் மூலமாக தங்களை வலியுறுத்துகிறேன்.

சேதுக் கால்வாயால் ஏற்படும் பலன்கள்

சேது கால்வாய் பற்றிய விவரங் களையும், அதனால் பொதுவாக இந்தியா விற்கு குறிப்பாக தமிழகத்திற்கு ஏற்படும் பயன்களையும் தங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். சேதுக் கால்வாய் திட்டம் என்பது, பாக் ஜலசந்தியையும் மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத் தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயராகும். இத்திட்டத்தை ஆங்கில அரசாங்கத் தின் கப்பல் படையைச் சேர்ந்த கமாண்டர் டெயிலர் என்பவர் 1860ஆம் ஆண்டு உருவாக் கினார். அன்றைக்கு அதனுடைய மதிப்பீடு ரூபாய் அய்ம்பது இலட்சமாகும். பின்பு டவுண்ட்ஸ்டன் மற்றும் சரி. ஜான்கூடே என்பவர்கள் இத்திட்டத்தி னுடைய முக்கியத்துவத்தை அறிந்து, இத்திட் டத்தை நிறைவேற்ற வேண்டு மெனப் பல வழிகள் வகுத்தனர். ஆனால், ஒரு சாரார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இத்திட்டம் கிடப்பில் போடப் பட்டது. மறுபடியும் 1921ஆம் ஆண்டு சென்னை மாநில அரசு இத்திட்டத்தை வகுத்தும், ஆங்கில ஆட்சியாளர்களின் உதவி யின்மையால் நிறை வேற்றப்படவில்லை.

தமிழ் ஓவியா said...

1945ஆம் ஆண்டு மறுபடியும் ஆங்கில அரசாங் கம் இத்திட்டத்தைப் பற்றி அறிய ஒரு குழுவை அமைத்தது. ஆனால், இந்தக் குழுவின் அறிக்கை வெளியிடப் படவில்லை. இந்திய விடுதலைக்குப் பிறகு 1955ஆம் ஆண்டு டாக்டர் சர். ஏ. இராமசாமி முதலியார் தலைமையில், சேதுக் கால்வாய் திட் டத்தைப் பரிசீலிக்க ஒரு குழு இந்திய அரசாங் கத்தால் அமைக்கப்பட்டது. சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால், இந்தியாவிற்கு அன் னியச் செலாவணியும், கிழக்கு கடற்கரையோரமாய்க் கப்பல் போக்குவரத்தும் எளிதாக இருக்கும் என இக்குழு தனது அறிக்கையில் கூறியதோடு, உடனே இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டு மெனவும் தெளிவாக இந்திய அரசுக்கு தெரிவித்தது. அதற்கு ரூ.9.98 கோடி திட்ட மதிப்பையும் அக்குழு வெளி யிட்டது. சர். ஏ. இராமசாமி முதலியார் குழுவின் அறிக் கையின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இந்திய அரசாங்கம் விட்டு விட்டது. 1963ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் நான்காவது திட்டக் காலத்தில் இந்தச் சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டுமென முடிவு செய்தும், இத்திட்டம் செயல்வடிவம் பெறாமல் போய் விட்டது. அதன் பிறகு டாக்டர் நாகேந்திர சிங் குழு வும் (1963ல்) சி.வி. வெங்கடேஸ்வரன் குழுவும் (1965ல்) அமைக்கப்பட்டது. 1965ஆம் ஆண்டு சி.வி. வெங்கடேஸ்வரன் தலைமையில் ஒரு குழு இத்திட்டத்தை அறிய நியமிக்கப் பட்டது. இந்தக் குழு இந்தத் திட்டத்தை நிறைவேற்ற சுமார் 37 கோடி ரூபாய் செலவாகும் என்றும், ஆனால் இத் திட்டத் தின் மூலம் ஆண்டுக்கு ஒன்றரைக் கோடி வருவாய் உள்ளதெனவும் கூறியது. அதன் பின்பு இறுதியாக எச்.ஆர். இலட்சுமி நாராயணன் தலை மையில் ஐவர் குழு ஒன்றும் மத்திய அரசால் 1981-82ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது. இக்குழு தமிழக மெங்கும் சென்று இத்திட்டத்திற்கான பல்வேறு தரப்பாளர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தது.

மத்திய அரசின் ஆய்வு
இத்திட்டத்தின் பயனைப் பற்றி 1981-82ஆம் ஆண்டு மத்திய அரசின் குழு பின்வருமாறு ஆராய்ந்து மதிப்பிட்டது.

1.இந்தியாவின் கிழக்குக் கடற்கரை யோரத் தில் தொடர்ச்சியான கடல் வழிப் போக்குவரத்திற்கு தற்போது வழி யில்லை. இத்திட்டத்தை செயல் படுத்தினால் இந்து மகா சமுத்திரமும் வங்கக் கடலும் இணைய வாய்ப்புள்ளது. பாறைகளால் அமைந்த ஆடம்ஸ் பாலத்தை வெட்டி இணைத் தால் கடல் வழிப் போக்குவரத்திற்கு மிகவும் வசதியாக இருக்கும்.

2.சேது கால்வாய்த் திட்டமும், தூத்துக்குடித் துறைமுகத் திட்டமும் ஒருங்கிணைந்தவை களாகும். சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தினால் தூத்துக்குடி துறைமுக வளர்ச்சியும் முழு அளவு அதிகரிக்கும். தூத்துக் குடியிலிருந்து பின்வரும் துறைமுகங்களுக்குப் பயணம் செய்யும் நேரமும் குறையும்.

அ. தூத்துக்குடியிலிருந்து சென்னை 434 மைல் (மிச்சப்படும் தூரம்)

ஆ. தூத்துக்குடியிலிருந்து விசாகப்பட் டினம் 376 மைல் (மிச்சப்படும் தூரம்)

இ) தூத்துக்குடியிலிருந்து கல்கத்தா - 340 மைல் (மிச்சப்படும் தூரம்)

3. இக்கால்வாயினால் பயணம் செய்யும் தூரம் குறைவதால் கப்பலின் எரி பொருள் மிச்சப்படும். இதனால் இந்தியாவின் அன்னியச் செலாவணி செலவில் சுமார் 130 கோடி ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் மிச்சப்படும்.

4. இந்தியாவிற்கு அன்னியச் செலாவணி கணிச மான அளவு உயரும். இந்தக் கால்வாயின் மூலம் தமிழகத்தின் குளச்சல், முட்டம், தூத்துக்குடி, இராமேசுவரம், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், பாண்டிச்சேரி, சென்னை மற்றும் விசாகப் பட்டினம், கல்கத்தா வரையுள்ள கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் வளர்ச்சி அடையும்.

5. இக்கால்வாய் வெட்டப்பட்டால் தூத்துக் குடித் துறைமுகத்தின் வளர்ச்சி ஏற்பட்டு அதன்மூலம் பொருளாதார ரீதியாக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், காரைக்குடி, திருப்பத்தூர், மதுரை, நாகர்கோவில் ஆகிய பிற்படுத்தப்பட்ட பகுதிகள் முழுதும் தொழில் ரீதியாக வளர்ச்சி பெறும்.

தமிழ் ஓவியா said...

6. இந்தக் கால்வாய் வெட்டப்பட்டால், இந்தி யாவின் தென் பகுதியில் அன்னியச் சக்திகள் ஊடு ருவாமல் அது ஓர்அரணாக விளங்கும்.

7. இக்கால்வாயின் மூலம் மீன் பிடித் தொழில் தென்னிந்தியாவில் வளர்ச்சி பெறும். மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு வளையமாகத் திகழும்.

8. நிலம் வழியாகச் செல்லும் நிலக்கரி, சிமெண்ட், உப்பு, உரங்கள், கடல் உணவு வகைகள், பருப்பு வகைகள், பருத்தி போன்ற பொருள்களைக் கிழக்குக் கடற்கரை மார்க்கமாக இந்தியாவின் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்ல இக்கால்வாய் மிகவும் உதவியாக இருக்கும்.

9. சேதுக் கால்வாய் மூலமாக கப்பல்கள் சென் றால், புயல் அபாயம் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை.

10. இக்கால்வாய் ஒரு சுற்றுலா மையமாக அமைந்து உலகின் பல பகுதிகளில் இருந்து பயணிகளை ஈர்க்க வாய்ப் புள்ளது.

11. ஏற்றுமதி, இறக்குமதித் தொழில்கள் இக்கால் வாயினால் பெருகி, இந்தியா வின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

தமிழ் ஓவியா said...

12. இக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் ஏற்படும் செலவை சுமார் பத்து அல்லது பனிரெண்டு ஆண்டுகளில் ஈடு செய்து விடலாம்.

13. இத்திட்டம் பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சாதக மானதாகும். இந்தியாவின் நலன் கருதி உடனடியாக இத்திட்டம் நிறை வேற்றப்பட வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தின் கப்பல் மற்றும் கடல் வழிப் போக்கு வரத்து அமைச்சகத்தின் 1981-82ஆம் ஆண்டின் மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கை தெளிவாகக் கூறுகிறது.

எனவே பொருளாதார ரீதியாக எவ்வாறெல்லாம் இத்திட்ட தாமதத்தினால் இழப்பு ஏற்படுகிறது என்பதை என் கடிதம் மூலம் தாங்கள் அறிவீர்கள். எனவே பொருளாதார வளர்ச்சியுடன் வேலை வாய்ப்புகள் வழங்கிடும் இத்திட்டத்தை நாட்டு வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு தாங்கள் தலையிட்டு தாமத மில்லாமல் நிறைவேற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.

என்று, விளக்கமாகவும், விரிவாகவும் எழுதினேன். தினமணி பாராட்டியது

இக்கடிதத்தை நான் எழுதிய போது தி.மு. கழகம் தமிழகத்திலே ஆளுங்கட்சி அல்ல. இருந்தாலும் தமிழகத்தின் நலன் கருதி இந்தக் கடிதத்தை பிரதமருக்கு நான் எழுதினேன். அந்தக் கடிதம் பற்றி 11-5-2002 தேதிய தினமணி ஒரு தலையங்கத்தை தூங்காத கருணாநிதி என்ற தலைப்பில் எழுதியி ருந்தது. அதன் சுருக்கம் வருமாறு :-

கருணாநிதியின் சுறுசுறுப்பு அலாதியானது. அது எத்தகையது என்பதை அவருடைய அரசியல் எதிரிகளும்கூட நன்றாக அறிவார்கள். ஆட்சியைப் பறி கொடுத்து ஓராண்டு ஆகிறது. ஆயினும் கருணா நிதியின் வேகமான அரசியல் தடைப்பட்டு விட வில்லை. அநேகமாக நாள்தோறும் ஏதாவது ஒரு பிரச் சினை மீது அறிக்கையை அவர் வெளி யிடத் தவறுவ தில்லை. அதோடு புதிய புதிய பிரச்சி னைகளை ஆட்சி யாளர்களுக்குக் கிளப்பி விடுவ திலும் அவர் பின் வாங்குவதில்லை. இதற்கிடையே திடீரென சேது சமுத் திரத் திட்டம் கருணா நிதிக்கு நினைவுக்கு வந்து விட்டிருக்கிறது. அவ்வளவுதான், உடனடியாக பிரத மருக்கே நேரிடையாகக் கடிதம் எழுதிவிட்டார். இத்திட்டம் விரைந்து நிறைவேற்றப் பட்டால் இந்தி யாவின் கப்பல் போக்குவரத்து மற்றும் தொழில் வணிக வளர்ச்சிக்குப் பெரிய வாய்ப்பு ஏற்படுவதுடன் தென் தமிழகத்தின் பல முனை முன்னேற்றத் திற்கும் வரப்பிர சாதமாக அமையும் என்பதையும் நினைவுபடுத்தியி ருக்கிறார். கருணாநிதி இப்பொழுது ஆட்சிப் பொறுப்பில் இல்லாமல் இருக்கலாம். ஆயினும் பொறுப்புள்ள மூத்த தலைவர்களில் ஒருவர் அல்லவா? அவரால் எப்படி தமிழக நலன்களை மறக்க முடியும்? அதோடு இங்கு அதிகாரத்தில் தி.மு.க. இல்லாவிடி னும், தில்லியில் வாஜ்பாய் அரசில் அங்கம் வகிக் கிறது அல்லவா? எனவே சேதுத் திட்டம் வேகமாக நிறைவேற்றப்படு வதில் தி.மு.க. வும் தனி அக்கறை இருப்பதை கருணாநிதி யால் நியாயப்படுத்த முடியும். தூங்காத கருணா நிதியால் சும்மா இருக்க முடியாது. ஆட்சியில் இருந்தால் எதிர்க் கட்சிகளைத் தூங்க விடமாட்டார். எதிர் வரிசையில் இருந்தால் ஆட்சியாளர் - நண்பர்கள் ஆகிய இரு தரப்பையுமே தூங்க விடமாட்டார். தூங்காமை, கல்வி, துணிவு டைமை ஆகிய மூன்றும் ஆட்சியாளர்களுக்கு அவசியமான பண்புகள் என்று திருவள்ளுவர் இலக்கணம் வகுத்து இருக்கிறார் அல்லவா? எனவேதான் இந்த அபார சுறுசுறுப்பு!

முதல் அமைச்சரின் முடிவு முறைதானா?

உடன்பிறப்பே, இந்தக் கடிதம் என்னைப் பாராட்டி எழுதியிருந்தது என்பதற்காக இப்போது நான் கூறவில்லை. இந்தத் திட்டம் எவ்வளவு முக்கிய மான திட்டம், அது நிறைவேற்றப்பட வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை வலியுறுத்துவதற் காகத் தான் எடுத்துக்காட்டினேன்.

ஆனால் இந்தத் திட்டம் தேவை யில்லை என்று தமிழக அரசின் முதல் அமைச்சரே உச்ச நீதிமன்றத்திலே, அதுவும் பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை செலவு செய்து திட்டத்தின் 75 சதவிகிதப் பணிகள் முடிவடைந் துள்ள நிலையில் அறிக்கை கொடுத்திருப்பது முறைதானா என்பதை அரசியல் கட்சி வேறுபாடு களை யெல்லாம் மறந்து, தமிழ் நாட்டு மக்களின் நல்வாழ்வை ஒருக்கணம் எண்ணிப் பார்த்து அனைவரும் சிந்திக்க வேண்டும் என்பதற் காகவே இக்கடிதம்!

அன்புள்ள,
மு.க

தமிழ் ஓவியா said...


ஊழல் அவதாரங்கள் பற்றிய பல உண்மைகள்


- ஊசி மிளகாய்-


ஊழலை ஒழிக்க ஒரு அரசியல் கட்சியைத் துவங்கியுள்ள ஹசாரே கம்பெனியிலிருந்து வெளியேறிய அர்விந்த கஜ்ஜிரிவால் என்பவர் மீடியாக்களின் வெளிச்சத்தில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் குளித்து மகிழ்ந்து வருகிறார்!

அவரிடம் பலரும் புகார் காண்டத்தில் பங்குபெற - அதிருப்தியாளர்கள், எதிர் பார்த்து ஏமாந்தவர்கள், ஊழல் லஞ்சம் இவரால் ஒழியும் என்று நம்பும் அப்பாவி களான பரம பாமரர்கள், விளம்பரம் தேடிகள் - இப்படிப் பலரும் சென்று தங்களுக்குக் கிடைக்கும், கிடைத்த, அல்லது தயாரிக்கும் பல வகை பதார்த்தங்களும் பரிமாறப்பட்டு சில காலம் அவரது வண்டி ஓடி பிறகு நிற்கும் என்று நினைத்த பல மீடியா மன்னர்களுக்குப் பெருத்த ஏமாற்றம்; காரணம் எதிர்பார்த்ததை விட அவரது பலூனின் காற்று மிக வேகமாக ஓட்டைகளால் - இறங்க ஆரம்பித்துவிட்டது!

காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக் விஜய சிங், சில கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.

இதற்கு எப்படி, என்ன பதில் சொல்லப் போகிறார் திருவாளர் வால் அவர்கள் என்பது அவரது தளர்பதிகளில் பலருக்குப் புரியவில்லையாம்.

திக்விஜயசிங் கேட்ட கேள்விகள் இதோ:

1. உங்கள் தொண்டு நிறுவனத்துக்குக் கிடைத்திருக்கும் நன்கொடையாளர்கள் பற்றியோ, அல்லது கார்ப்பரேட் நிறுவன நன்கொடைகள் பற்றியோ உங்கள் தொண்டு நிறுவன இணையதளங்களில் எந்த விவரங்களும் இடம் பெறாதது ஏன்?

2. உங்களுடன் நெருங்கிய தொடர்புடைய கபீர் என்ற தொண்டு நிறுவனம் கடந்த 2005ஆம் ஆண்டு 1,72,000 அமெரிக்க டாலர்களும், 2009ஆம் ஆண்டு 1,97,000 அமெரிக்க டாலர்களும் ஃபோர்டு பவுண்டேஷனிடம் இருந்து நன்கொடை பெற்றது உண்மையா?

தமிழ் ஓவியா said...

3. அவாஸ் என்ற அமெரிக்க தொண்டு நிறுவனத்துடன் உங்களது தொடர்பு என்ன? அந்த நிறுவனம் லிபியா, துனீஷியா, எகிப்து, சிரியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற புரட்சிக்கு நிதி உதவி செய்தது தெரியுமா? அந்த நிறுவனத்திடமிருந்து உங்கள் இயக்கம் பெற்ற ஆதரவு என்ன?

4. மத்திய அரசு மீது மட்டும் ஊழல் புகார் கூறும் நீங்கள் பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களில் நடக்கும் ஊழல் பற்றி பிரச்சினை எழுப்பாதது ஏன்?

5. ஜனலோக்பால் சட்டத்துக்காக நீங்கள் பேசாதிருக்கிறீர்கள். ஆனால் குஜராத்தை ஆளும் நரேந்திர மோடி, கடந்த 10 ஆண்டுகளாக அங்கு லோக் அயுக்தா அமைக்கவிடாமல் தடுத்து வருகிறாரே - அது பற்றி நீங்கள் ஏதும் கேட்காதது ஏன்?

6. நீங்கள் இந்திய வருவாய்த்துறை (IRS) துறையில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்கிறீர்கள். ஒரே இடத்தில் 3 ஆண்டு களுக்கு மேல் பணிபுரிய விதிகள் அனுமதிப்பது இல்லை. இருப்பினும் 20 ஆண்டுகளாக நீங்கள் டெல்லியிலேயே தொடர்ந்து பணிபுரிந்தது எப்படி?

மேலும் அந்தப் பணியில் இருந்தபோது மேற்படிப்புக்காக முழு சம்பளத்துடன் விடு முறையில் செல்ல நீங்கள் அனுமதி பெற்றது எப்படி? அந்த விடுமுறைக் காலத்தில், விதிமுறையை மீறி, தொண்டு நிறுவனம் தொடங்கியது எப்படி?

- இப்படி பலப்பல கேள்விகள் கேட்டு இவர் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சியில் வேட்பாளராக இவரோ, இவரைச் சார்ந்தவர்களோ, தேர்தல் ஆணையம் விதித் துள்ள சட்ட விதிகளுக்குள் தான் தேர்தல் செலவுகளைச் செய்வர் என்று உறுதியை நேர்மையான முறையில் - மனசாட்சிக்கு துரோகம் இழைக்காமல் இவரால் கூற முடியுமா?

********

ஏமாறதீர்! ஏமாற்றாதீர்!

ரூ.100 கோடியை எண்ணி கடைக் கோடிக்கு வரலாமா?

ஏமாந்து விழித்துக் கொண்டேன் என்கிறார் மதுரை ஆதினம். பலே! பலே!! காலம் கடந்த ஞானேதாயம்!!!

லவுகீக அய்.டெக் ஆன்மீக திருக்கோயில் வாரிசு நித்தியானந்தாவை தனது வாரிசாக நியமிக்கும்படி பார்வதியும் பரமசிவனும் வந்து ஆதீனம் கனவில் சொன்னார்களாம்! இப் போது இவர் அவர்கள் ஆணையை மதிக் காமல் தமிழக அரசின் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை ஆணையை மதித்தாக வேண்டிய கட்டாயத்தினாலோ என்னவோ அல்லது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவோ என்னவோ திடீரென்று நித்தியை - யாராலும் எங்களைப் பிரிக்க முடியாது என்று முன்பு கூறியவர் திடீர் முடிவுக்கு வந்து வெளியே அனுப்பி விட்டார்.

மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியை நீக்கினேன் என்று கூறியுள்ளார். நித்தியின் வரவால் மடம் சிறுமை அடைந்தது என்று ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமா?

ஆதீன வளர்ச்சிக்கு ரூ.100 கோடி கொடுப்பதாகவும் முதல் தவணையாக 5 கோடி ரூபாய் தருவதாகவும் நித்தியானந்தா கூறினார். ஆனால் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. அவர் சொன்னதெல்லாம் முழுப் பொய்.

- இவ்வாறு மதுரை ஆதினம் அருணா கிரிநாதர் கூறினார் (தினத்தந்தி, 21.10.2012 (பக்கம் 5))

ரூ.100 கோடிக்கு ஆசைப்பட்டு இப்படி கடைக்கோடிக்கு வந்து நிற்கலாமா? மூவாசைகளில் பணத்தாசை அடங்காதோ ஆதினங்களுக்குத்தான் வெளிச்சம் என் கிறது ஒரு ஆன்மீகப் புளி (புலியல்ல) ஒன்று!

அய்யய்யோ சொல்ல வெட்கமாகுதே!21-10-2012

தமிழ் ஓவியா said...


தமிழாசிரியர்


அந்தக் காலத்தில் பள்ளித் தமிழ் ஆசிரியர் களுக்கு மற்றைய ஆசிரியர் களைவிட மிகக் குறை வான ஊதியமே கொடுத் தனர். எல்லா ஆசிரியர் களையும் போன்று தமிழ் ஆசிரியர்களும் சமமாக ஊதியம் பெறச் செய்த பெருமை அவினாசிலிங்கம் செட்டியாரைச் சேரும் என்று தினமணியின் நடுப்பக்க கட்டுரையில் (16.10.2012) திரு. மா.பா. குருசாமி அவர்கள் எழுதியுள்ளார்.

அவினாசிலிங்கம் செட்டியாரை நன்றாகப் பாராட்டட்டும் அதில் ஒன்றும் நமக்குச் சங்கட மில்லை; இன்னும் - சொல் லப் போனால் அன்றைய சென்னை சட்டமன்றத்தில் ஒரு கேள்வி எழுப்பப்பட் டது (21.4.1948). ராகவய்யா, பிராமணர், பிராமணரல்லாதார் வேற்றுமையை சர்க்கார் அதிகார பூர்வமாக அங்கீ கரிக்கிறதா? என்பது கேள்வி. கல்வி அமைச்சர் அவினாசிலிங்கனார் பதில் என்ன தெரியுமா?

பிறப்பு முதல் இறப்பு வரை - இவ்வேற்றுமை இருக்கும் வரை அவற்றைச் சர்க்கார் எப்படி அங்கீ கரிக்காமல் இருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை? என்று பதில் சொன்னவர்தான். அவர் ஒன்றும் ஈரோட்டார் சீடர் அல்ல. உண்மையை நேசிப் பவர்கள் எவரும் சொல்லக் கூடியதுதான் இந்த உண்மை.

அதே தினமணியின் நடுப்பக்கத்தில் வெளியான கட்டுரையில் ஓர் உண்மை மறைக்கப்பட்டுள்ளது. அவினாசி லிங்கனாருக்கு முன்பே இந்தப் பிரச்சினை யில் கொடி ஏற்றியது நீதிக்கட்சி ஆட்சியே!

சென்னை பிரசிடென்சி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த கா. நமச்சிவாய (முதலியார்) அவர்களுக்கு மாதச் சம் பளம் ரூ.81 ஆகவும், அதே நேரத்தில் அக்கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராக வேலை பார்த்து வந்த குப்புசாமி சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300 ஆகவும் இருந்த கொடு மையை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் குடி அரசில் எழுதிட, நீதிக்கட்சி யின் சார்பில் ஆட்சி நடத்திய பிரதம அமைச்சர் பனகல் அரசர் அந்த வேறு பாட்டை நீக்கி உத்தரவு பிறப்பித்தார் என்ற வர லாற்றை மறைக்கக் கூடா தல்லவா!

இதைவிட இன்னொரு சாதனையும் உண்டு. சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழைக் கற்பிப் பதற்கே போராட வேண்டி இருந்ததே! அதில் போராடி வெற்றி பெற்றவர்கள் யார்?

நீதிக்கட்சிப் பிரமுகர் கள் ஆர். வெங்கடரத்தினம் நாயுடு, டி.என். சிவஞானம் பிள்ளை, எஸ். முத்தையா முதலியார், டாக்டர் ஏ. இராம சாமி முதலியார் போராடி தான் அந்த உரி மையை நிலைநாட்ட வேண்டியிருந்தது.

தமிழ்நாட்டில்தான் இந்த நிலை! தினமணி வகையறாக்கள் தெரிந்து கொள்ளட்டும்!

-மயிலாடன் 21-12-2012

தமிழ் ஓவியா said...
மகன்: கிங் ஃபிஷர் விமானத்தின் உரிமம் ரத்தாகி இருக்கிறதே அப்பா!

அப்பா: அப்படியா? இப்பொழுதுதானே உள்ளூர் கோயில் ஒன் றுக்கு 80 லட்சம் ரூபாய் செலவில் தங்கத்தினால் ஆன கதவை அளித்து நேர்த்திக் கடன் செலுத் தினார். மகன்: ஓ, கடவுள் சக்தி அவ்வளவுதானா அப்பா?

தமிழ் ஓவியா said...

மோசம்/// மோசம்///


ஊடகங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?

மோசமாக... மிக மோசமாக... மிகமிக மோசமாக இருக்கிறது. உண்மை, நேர்மை, நடுநிலைமை என்பதெல்லாம் கேள்விக்குறி ஆகிவிட்டது. விளம்பரம் கொடுப்பவர்களுக்கு ஆதரவாகச் செய்தி வெளியிடுவது, பணம் வாங்கிக்கொண்டு தவறான செய்திகளைப் பிரசுரிப்பது என மோசமான திசையில் ஊடகங்கள் பயணிக்கின்றன. அதுவும் அரசியல்வாதிகளும் கட்சிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் சொந்தமாக மீடியா ஹவுஸ் வைத்திருப்பதால், அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அல்லது தங்களைப் பற்றிய என்ன பிம்பம் பரவ வேண்டும் என்று நினைக்கிறார்களோ... அவற்றை எல்லாம் செய்தி ஆக்குகிறார்கள். அதுவும் மின்னணுச் சாதனங்களின் வருகை... ஊடக உலகுக்கு ஏற்பட்ட சோதனை என்றே சொல்லலாம். பரபரப்புக்காகத் தவறான செய்திகளையும் திட்டமிட்டுத் திரிக்கப்பட்ட செய்திகளையும் வெளியிடு கிறார்கள். அதில் துளியும் உண்மை இருக்காது. மொத்தத்தில் இன்றைய மீடியா, மக்கள் வெறுக்கும் ஒன்றாக மாறி வருகிறது.

இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார்

நன்றி : ஆனந்த விகடன்

தமிழ் ஓவியா said...

மனு தர்மத்திற்கும் மனித தர்மத்திற்கும் போராட்டம்


நூல்: திராவிடர் இயக்க நூறாண்டு வரலாற்றுச் சுவடுகள்...
ஆசிரியர்: கி.வீரமணி
வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு
பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை -600 007. பக்கங்கள்: 112 ரூ.40/-

கடந்த ஆகஸ்டு மாதம் திராவிடர் இயக்க நூறாண்டு வரலாற்றுச் சுவடுகள் என்ற புத்தகம் எனக்கு கிடைத்தது. ஏற்கனவே பெரியாரியல்பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த எனக்கு இத்தொகுப்பு ஒரு பெரும் உதவியாக அமைந்திருந்தது. படித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் தமிழின மக்களின் மீது பார்ப்பனிய ஆதிக்கத்தையும் உயர்சாதி மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கொண்ட அடக்குமுறைகளையும் மீண்டும் மீண்டும் என் கண்முன்னே நிகழ்வது போன்ற உணர்வைத் தோற்றுவித்தது இந்நூல்.

நான் அண்ணாவைப் பார்த்தவன் அல்ல! பெரியாரைப் பார்த்தவன் அல்ல! இருந்த பொழுதிலும் அவர்களின் உணர்வினையும் அவர்களின் செயல்களையும் வாசகர்களுக்கு உணர்த்துகின்ற அளவில் இந்நூல் ஆசிரியர் கி.வீரமணி அப்படியே பிரதிபலிக்கச் செய்திருக்கிறார்.

இன்று திராவிடம்பற்றியும் திராவிட உணர்வுபற்றியுமான சிந்தனைகள் மீண்டும் மீண்டும் முகிழ்த்தெழ வேண்டிய காலச் சூழல் எழுந்துள்ளது.

இக்கால மனிதர்களுக்குக் கடந்து வந்த பாதையினை மறந்து விடுவது என்பது சாதாரண நிகழ்வாக உள்ளது. எனவே திராவிட இனத் தலைவர்கள் நல்ல சமூகத்தை உருவாக்கப் போராடிய போராட்டங்களை நினைவுபடுத்துகின்ற வகையில் ஒவ்வொரு மேடையிலும் கி.வீரமணி அவர்கள் பேசும்போதும் - பெரியார், அண்ணா, நீதிக்கட்சி, திராவிடர் கட்சியை நினைவு கூர்கின்றவகையில் உரையாற்றுவார்கள். அந்த வகையில் 27.02.2012 அன்று திராவிட இயக்கத்தின் நூறாவது ஆண்டு விழாவில் பேசிய உரையை மனு தர்மத்திற்கும் மனித தர்மத்திற்குமிடையே மிகப்பெரும் போராட்டம் என்ற தலைப்பிட்டு பஞ்சமனுக்குப் பொது இடங்களில் அளிக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டுகின்றார்.

கீழ்நிலையில் தள்ளப்பட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவன் உயர்பதவிக்குச் சென்றாலும் அவனை இழிவானவனாகப் பார்க்கும் ஆதிக்கப்பார்வை நிலைகளையும் சிறப்பாக உணர்வுபொங்கச் சுட்டிக்காட்டுகின்றார்.

மார்ச் 1 அன்று தி-.மு.க. இளைஞரணியினர் கொண்டாடிய இளைஞர் எழுச்சி நாளில் பேசிய உரை 06.03.2012 அன்று சென்னை லயோலா கல்லூரி வரலாற்றுத் துறையில் பேசிய உரைகள் அனைத்தும் பழமையான சமூக இன்னல்களை சுட்டுவதாகவும் அவற்றை ஒழித்த திராவிட இனத் தலைவர்கள் பற்றி எடுத்தியம்புவதாகவும் இந்நூல் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நூலைப் படித்தால் திராவிடர் இயக்கம் பற்றிய செய்திகளைத் தெளிவாக்கிக் கொள்ள _ திராவிட சமூகமே படித்துப் பயன்பெற வேண்டிய ஒரு நூலாக இந்நூல் அமைகின்றது.

- ம. புகழேந்திர சோழன்,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி

தமிழ் ஓவியா said...

பக்தியின் பலன் - ஆயுத பூஜையால் அழிந்த ராஜ்யம்


தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னன் செங்கமலதாசன் என்பவனை வீழ்த்த வேதியர் வெங்கண்ணா என்பான் பீஜப்பூர் சுல்தானின் படைத் தலைவர் வெங்காஜி என்பானை வேண்டினான். வெங்காஜியும் வெங்கண்ணாவின் தூண்டுதலின் பேரில் தஞ்சை மீது படையெடுத்து வந்தான். அவன் படை எடுத்து வந்த சமயமானது ஆயுதபூஜை சமய மாகும். படை வீரர்களது படைக் கலங்கள் எல்லாம் ஆயுதபூஜைக்காக கொலுவில் வைக்கப்பட்டிருந்தன.

மன்னன் செங்கமலதாசனுக்கு என்ன செய்வ தென்றே புரியவில்லை. மனக்கலக்கம் அடைந்த வனாய் பார்ப்பன மந்திரிகளையும் பார்ப்பனக் குருமார்களையும் அழைத்து ஆலோசனை கேட்டான். அதற்கு அந்தப் பார்ப்பனர்கள், மன்னா! கவலைப்படாதீர்கள். ஆயுதபூஜையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை எடுத்தால் சாஸ்திர விரோதம். நம் நாட்டின் மீது படை எடுத்து வருபவன் முகமதியன் அல்லன். படையெடுத்து வருபவன் அவனது தளபதியான வெங்காஜி யாவான். அவனோ ஓர் இந்து, மேலும் பரம வைணவன்.

ஆகவே, திருமாலுக்கு மிகவும் உகந்த திருத் துழாய்களை (துளசி செடிகளை) நமது நகரின் எல்லையில் தூவிவிட்டால், அவன் அதனைத் தாண்டி படைகளைச் செலுத்திக் கொண்டு வரமாட் டான் என்று சொன்னார்கள்.

மன்னனும் அவர்களின் கூற்றினை ஏற்று, துளசிச் செடிகளை நகரின் எல்லையில் ஏராளமாகக் குவிக்கச் செய்துவிட்டு, தான் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு ஹரிபஜனை செய்து கொண்டிருந்தான். வெங்காஜியின் படைகளின் குதிரைகளோ, குவித்திருந்த துளசிச் செடிகளைப் புல்லென எண்ணி, அதிவிரைவாகவும் அனாயசமாகவும் துளசிச் செடிகளை வாயில் கவ்விக்கொண்டு நகருக்குள் புகுந்தன. இதனைக் கேள்வியுற்ற மன்னன் செங்கமலதாசன், வெங்காஜி சத்தியம் கெட்டவன்; திருமாலின் திருத்துழாயினை மதிக்கவில்லை. ஆகவே அவனுடன் போர் செய்தல் கூடாது என்று கூறி யாரும் அறியாமல் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டான்.

வெங்காஜியின் படைகள் செங்குருதி சிந்தாமலும், வாளை எடுக்காமலும், வேலைத் தூக்காமலும் எளிதில் தஞ்சையினைக் கைப்பற்றின. இதனால்தானே பார்ப்புப் பெருத்தல்லோ நாயக்கத் துரைத்தனம் கெட்டது என்ற பழமொழி ஏற்பட்டது போலும்.

ஆயுத பூஜையால் ஆட்சியும் அரண்மனையும் அழிந்த கொடுமையைப் பார்த்தீர்களா?

தமிழ் ஓவியா said...

You are here: Home நமக்கு நாமே மின்சாரம் வழிகாட்டுகிறது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்


செப்டம்பர் 24 முதல் மார்ச் 21 வரை பகல் நேரம் குறைந்து இரவு நேரம் அதிகமாக இருக்கும் என்கிறது அறிவியல். ஆனால் கடந்த சில மாதங்களாகவே தமிழகம் இருண்டுதான் கிடக்கிறது. இரண்டு மணி நேரம் மின்வெட்டு என்று கொதித்தெழுந்து, அதற்கா கவே ஆட்சியை மாற்றினோம் என்று சொன்ன மக்கள் 16 மணி நேரத்தைத் தாண்டிக் கொண்டி ருக்கும் மின்வெட்டைக் கண்டு மிரண்டுபோய்

இருக்கிறார்கள். தொழில் நகரங்களெல்லாம் மின் விடுமுறை விடுவதென்று தீர்மானித் தால் வாரத்தின் 6 நாட்கள் விடுமுறை விட்டாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளன. மிக்சி, கிரைண்டர், பேன், லேப்டாப் என மின்சாரத்தில் இயங்கும் பொருட்களெல்லாம் இலவசமாகத் தருவதாகச் சொன்ன அரசு, இவற்றை இயக்க மின்சாரம் தராததால், வாங்கிய மிக்சி,கிரைண்டரை மூலையில் கிடத்தி விட்டு, மூலையில் கிடந்த ஆட்டுக் கல்லை எடுத்து அம்மிகொத்தித் தயார்செய்து வைத்திருக்கிறார்கள்.

அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று தனது விற்பனையை விரிவாக்கியிருப்பதாகக் கூறுகிறார் ஓம்சக்தி ஆட்டுக்கல் விற்பனையாளர்.

செய்முறைத் தேர்வு நேரத்தில் மின் துண்டிக்கப்படாததால், தங்கள் மதிப்பெண்களைக் குறித்துக் கவலைப்பட்ட மாணவ, மாணவியர் தேர்வுக்குப் படிப்பதற்கே விளக்குகளற்று விழிபிதுங்கி நிற்கின்றனர். இன்வெர்ட்டர்களில் மின்சாரத்தைச் சேமித்துப் பயன்படுத்தி வந்தவர்கள்; சேமிப்பதற்கும் மின்சாரம் இல்லாததால் வீணாக்கிப்போன பேட்டரிகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

பெருகும் மின் தேவையை எப்படி நிறைவு செய்வது என்ற திட்டமிடல் இல்லாமல் 2001-_06 அ.தி.மு.க. அரசு செயல்பட்டதன் காரணமாக, 2006ல் அமைந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தின் மின் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது.

2008க்குப் பிறகு மின் பற்றாக்குறை ஒரு பிரச்சினையாக எழுந்த நேரத்தில், பிற மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்கி, தற்காலிகமாகப் பிரச்சினையைக் - குறைத்த கலைஞர், நிரந்தரத் தீர்வுக்காக புதிய மின் திட்டங்களை

தொடங்கினார். அவை 2013ல் பயன்தரத் தொடங்கும் என்ற நிலையில் மீண்டும் 2011ல் வந்தது அதிமுக அரசு! தி.மு.க.வின் மின்திட்டங்களை மனதில் வைத்து 6 மாதத்தில் தடையில்லா மின்சாரம் தருவேன் என்று சொன்ன ஜெயலலிதா அரசு, அந்தத் திட்டங்களையும் காலத்தே முடித்து பயனுக்குக் கொண்டுவரத் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறது.

தமிழ் ஓவியா said...

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளும் வழக்கம்போல் மின்வெட்டில் தவிக்கின்றன. மாற்று மின்சக்தியை முன்னிறுத்த வேண்டிய அரசு அதனைப் பெரிதும் கண்டு கொள்ளாமலே இருக்கிறது. கொஞ்ச காலமே சூரிய ஒளி இருக்கும் அய்ரோப்பிய நாடுகளே அதனை மின் ஆற்ற லாக மாற்றி தங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய முயலும்போது, தினமும் வெய்யில் கொளுத்தும் இந்தியாவில் அதற்கான முன்னெ டுப்புகள் பரந்த அளவில் செய்யப் படவில்லை. கழிவுகள் குவிந்து கிடக்கும் இந்நாட்டில் அவற்றிலிருந்து மின்சாரம் எடுக்கும் தொழில்நுட்பமோ ஆராய்ச்சிகளோ அதிகளவில் செய்யப்பட்டுள்ளனவா?

பெருகிவரும் மின் தேவை, குவிந்துவரும் குப்பைகள், கழிவுகள் இவற்றை ஒருசேர சிந்திக்கும் அறிவியலாளர்கள் நம்மிடம் இல்லையா? அந்தப் பொறுப்பு அரசுக்கு இல்லையா? இக்கேள்விக்கு விடை தருகிறது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம். கழிவுப் பொருள் மேலாண்மை, மாற்று மின்சாரத் தயாரிப்பு இரண்டையும் திறம்பட நிர்வகிக் கிறது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம். காய்கறிக் கழிவுகளையும், திரவக் கழிவு களையும் பல்லுயிரி வளர்ப்புக்கு உணவாக்கியும், மண்புழு உரமாக மாற்றியும் ஏற்கெனவே பயன் படுத்தி வந்தது.

சாண எரிவாயு தயாரிக்கும் முறையையும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்திவந்தது. கடந்த 2011 ஜூலை 27 அன்று நடைபெற்ற பசுமைத் தொழில் நுட்பத்திற்கான பன்னாட்டு மாநாட்டில், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் முன்னிலையில், பல் வகைக் கழிவுகளையும் எரிவாயு வாக மாற்றி அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும், பயோ மீதேனேசன் பிரிவைத் தொடங்கி வைத்தார் இந்தியக் குடியரசின் மேனாள் தலைவரும் அறிவியலாளரூமான டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம். உயிர் எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணி பல படிநிலைகளில் நடைபெறுகிறது. மாட்டுச் சாணம், மனித திடக் கழிவு, காய்கறிக் கழிவுகள், வீணான உணவுப் பொருட்கள், சானிடரி நாப்கின்கள் உள்ளிட்ட அனைத்து விதமான கழிவுப் பொருட்களும் இதற்கு உள்ளீடாகப் பயன்படுகின்றன. ஒவ்வொரு நாளும் இதன் மூலம் 500 கனமீட்டர் எரிவாயு தயாரிக்கப்படுகிறது .

இந்த எரிவாயுவைக் கொண்டு ஒரு மணிநேரத்திற்கு 60 கிலோவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது. இது எரிவாயு தயாரிக்க மட்டுமே பயன்படுவதில்லை; கூடுதலாக இதன் எஞ்சிய பொருள் மண்ணை வளப்படுத்தும் (Soil conditioner) பொருளாகவும் பயன்படுகிறது. இந்த கலவைக் கலன் 18. மீட்டர் விட்டமும், 5.7 மீட்டர் உயரமும் கொண்டது. ஒரு நாளைக்கு திடக்கழிவு - 2 டன், காய்கறிக் கழிவு - 4 டன்; சாணம் - 3.5 டன், உணவுக்கழிவு - 0.5 டன் என மொத்தம் 10 டன் மூலப் பொருட்கள் இந்த திட்டத்துக்குத் தேவை. மனித திடக் கழிவுக்கென்று ஒரு குழாயும், பிற கழிவுப் பொருட்களுக்கென ஒரு குழாயுமாக இரண்டு குழாய்கள் இந்த டைஜஸ்டருக்கு உள்ளீடு குழாய்களாகும்.

தமிழ் ஓவியா said...

சரிசெய்யப்பட்ட கழிவுகள் வெளிவர ஒரு குழாய் என இதன் அமைப்பு இருக்கும். உணவுக் கழிவும், காய்கறிக்கழிவும் பொடியாக்கப்பட்டு கலவைக் கலனுக்குள் அனுப்பப்படும். செங்குத்தான உந்தித்தள்ளியின் மூலம் இது கலவைக் கலனைச் சென்றடையும். இதே கலவைக் கலனுக்குள் மாட்டுச்சாணமும் கலக்கப்படுகிறது. இந்த கலவையிலிருந்து எரிவாயு வெளியாக 42 நாட்கள் ஆகும். அவ்வாயு வெளியேறிவிடாமல் இருக்க, டைஜஸ்டர் தார்ப்பாய் கொண்டு பராமரிக்கபட்டுள்ளது .

கழிவு நுரை படிந்துவிடாமல் இருக்க மீண்டும் மீண்டும் அது சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. இதன் பிறகு பெறப்படும் கார்பன் டை ஆக்ஸைடு, ஹைட்ரஜன் சல்பைடு ஆகிய வாயுக்கள் பலூனில் சேகரிக்கப்படுகின்றன. இது மின் தயாரிப்புக்கு அனுப்பப்படுகிறது. வாயு சேகரிக்கப்படுவதைன் அளக்கவும், உள்ளீடு மற்றும் வெளியீடு செய்யப்படும் கழிவுகளைச் சோதிக்க பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. அழுத்தமானி, வாயு அளக்கும் கருவி, அமிலக் காரக் குறியீட்டைக் குறிக்கும் கருவி ஆகியனவும் பயன்படுத்தப்படுகின்றன.

வாயு தயாரிக்கப்பட்டது போக எஞ்சிய கழிவுகள் மண்புழு உரமாகத் தயாரிக்கப் பயன்படுத்தபடுகிறது. இவ்வாறு கழிவுப் பொருட்கள் முறைப்படி பயன்படுத்தப்பட்டு பயனுள்ள மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இது மட்டுமே அல்லாமல், பல்கலைக் கழகத்தின் வெளியரங்குகளில், சாலைகளில் வைக்கப்பட்டி ருக்கும் மின் விளக்குகள் சூரிய வெப்பத்தினால் இயங்குமாறு வைக்கப்பட்டுள்ளன. அதற்காக சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யும் கருவி ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு உருவாகும் 500 கன மீட்டர் கழிவைக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 60 கிலோ வாட் மின்சாரம், அதாவது ஒரு நாளைக்கு 480 யூனிட் மின்சாரம் தயாராகிறது.

இவ்வாறு ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவு ரூ.5.21; அரசு வழங்கும் மின்சாரத்திற்கான கட்டணம் ரூ.7.75. இம்முறையினால் பல்கலைக் கழகம் தனக்குத் தேவையான மின்சாரத்தில் 60 விழுக்காட்டிற்கும் மேலாக நிறைவு செய்யப் படுகிறது. மாற்று முறையில் மின்சாரம் தயாரிக்க வேண்டியது அவசர அவசியமாகும். இதற்கான உதவித் தொகைகளை மக்களுக்கு அரசு வழங்குமேயானால், நிச்சயமாக மக்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராகவே இருப்பார்கள்.

சூரிய ஒளி மின்சாரமும், இதர மாற்று மின்சாரங்களும் நிச்சயம் இந்தியாவுக்கு பெரும் பயனளிக்கக் கூடியனவாக இருக்கும். எதற்கும் வழிகாட்டும் பெரியார், இதோ மின் பற்றாக்குறை தீரவும் வழிகாட்டுகிறார். அவர் வழியில் நடைபோட்டால் நாடு நலம்பெறும்; வளம் பெறும்.

- சமா இளவரசன்

தமிழ் ஓவியா said...

சுயசிந்தனையை முடக்குபவை எவை??


ஒவ்வொரு மனிதனும் சுயமாக சிந்திக்கவும், சிந்தனைகளைச் செயல்படுத்தவும் ஆற்றல் படைத்தவன். எனினும், பெரும்பான்மை மக்கள் தங்களது சிந்தனைத் திறனைப் பல முக்கியமான விஷயங்களில் பயன்படுத்துவதில்லை. தங்களால் ஆய்வுக்கு உட்படுத்தாத கடவுள், மதம் போன்ற விஷயங்கள் தங்களது வாழ்வை வெகுவாகப் பாதிப்பதை உணராமலிருக்கிறார்கள். அதன் காரணமாக, மக்கள் மனங்களில்

மூடநம்பிக்கைகள் ஆட்சி செய்கின்றன. அறிவிற்குப் பொருந்தாத பல சடங்குகள், சம்பிரதாயங்கள் மனித சமுதாயத்தில் கடைபிடிக்கப்படுகின்றன. மதிப்புமிக்க மனித சக்தியும், இயற்கைச் செல்வங்களும் வீணடிக்கப்படுகின்றன.அர்த்தமற்ற இலக்குகளுக்கான மக்கள் வாழ்வு பாழாகின்றது. ஆகவே, இது மனித சமுதாயத்தின் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, மக்களுடைய சிந்தனைத் திறனை முடக்கும் காரணிகளைக் கண்டறிவோம்.

பொதுவாக மக்கள் காலங்காலமாக நிலவிவரும் நம்பிக்கைகளை, பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து பிரச்சனைகளின்றி வாழவே விரும்புகிறார்கள். தங்களுக்குப் பழக்கமான பழைய பாதைகளே ஆபத்தற்றவை என்று நினைக்கிறார்கள். அவற்றையே பின்பற்றுகிறார்கள். எவற்றிலும் மாற்றங்கள் செய்யப் பயப்படுகிறார்கள். இம்மனநிலை சுயசிந்தனையை முடக்கும் ஒரு சக்தியாக இருக்கிறது.

சுயசிந்தனையை முடக்கும் மற்றொரு சக்தியாக சம்பிரதாயங்கள் இருக்கின்றன. எவ்வாறெனில், தனி நபர்கள் பல்வேறு நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் குடும்ப அங்கத்தினர்களிடமிருந்தும், சுற்றுப்புற மக்களிடமிருந்தும் கிரகித்துக் கொள்கிறார்கள். அவர்கள் காலப்போக்கில் பல விழுமியங்களுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் பாதுகாவலர்களாக மாறிவிடுகிறார்கள். அச்சம்பிரதாயங்களும், பழக்க வழக்கங்களும் மனிதர்களை மனதளவில் அடிமைகளாக்கி விடுகின்றன. ஆய்வு மனப்பான்மையை மழுங்கடித்து விடுகின்றன.

நவீன போக்குவரத்து வசதிகளும், தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியும் பல்வேறு கலாச்சாரங்களைத் தெரிந்து கொள்ளும் நல்வாய்ப்பை மக்களுக்கு அளிக்கின்றன. ஊடகங்களின், இணையத்தின் பங்களிப்பு மிகப் பெரியது. இத்துடன் இலட்சக்கணக்கான மக்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்கிறார்கள். மேலும், தற்சமயம் அதிகமான மக்கள் தொகையினர் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். மாறுபட்ட கலாச்சாரத்தைப் பின்பற்றும் மக்களுடன் பழகி வாழ்கிறார்கள். இவை மக்கள் மனதில் நல்ல மாற்றங்களை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட நல்ல மனமாற்றங்கள் எதிர்பார்த்த அளவிற்கு உலகில் ஏற்படவில்லை. பழமையைக் கட்டிக் காக்கும் மனநிலைதான் பரவலாகி மேலோங்கி நிற்கிறது. முன்னோர்களிடமிருந்து சுவீகரித்த பல்வேறு நம்பிக்கைகளுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் அடிமைகளாக இருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

இப்பழமை காக்கும் மனநிலை பரவலாக நிலவக் காரணங்கள் எவை? இதுபற்றி ஆராய்ந்தால், சமூகப் பிணைப்பு ஒரு காரணமாக உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் ஒரு சிறு கூட்டத்தின் அங்கத்தி னராக அடையாளப்படுத்திக் கொள் கிறான். அதன்மூலம் சமூகப் பாதுகாப்பை உணர்கிறான். சக சமூக அங்கத்தினர் களுடன் நட்புடன் உறவு கொண்டிருக்க விரும்புகிறான். அந்த உணர்வு மனிதனை ஒரு சிறு வட்டத்திற்குள் அடைத்து விடுகிறது. சக மனிதர்கள் விரும்பாத காரியத்தைச் செய்யும் தைரியத்தை இழந்து விடுகிறான். சக மனிதர்கள் அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி மந்தை உணர்வுக்கு அடிமையாகி விடுகிறான்.

மந்தை மனப்பான்மை மனிதர்களின் மூளைக்கு விலங்கு போட்டு மனிதனது தனித்துவம் வளர்ச்சியுறாமல் செய்து விடுகிறது. தாங்கள் கடைப்பிடிக்கும் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் தவறானவை என்று உணர்ந்தும் கூட அவைகளை வெளி யிடும் துணிவை இழக்கிறார்கள். எவை சரியானவை, நியாயமானவை என்பதைத் துணிந்து வெளியிடுவதற்கான தன்னம்பிக்கையை இழந்து விடுகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் மெய்காண்பவனாக இருத்தல் வேண்டும். மெய் காண முற்படாமல், வழி வழியாக வரும் விழுமியங்களையும், பழக்க வழக்கங்களையும் அப்படியே பின்பற்றுவது நாகரிகத்தின் நற்பண்பு அன்று. அவை அடிமைப் பண்பாகும். எதையும் ஆய்வு செய்யாமல் பின்பற்றுதல் நல் ஒழுக்கம் அன்று. எதையும் அறிவுப் பூர்வமாக சிந்தித்து, அதன் முடிவிற்கேற்ப விழுமியங்களையும், பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொள்வதே உண்மையான ஒழுக்கமாகும். சிந்திக்க மறுப்பதும், சுயசிந்தனையின் மூலமாகச் சரியென்று உணர்ந்ததை வெளியிடத் தயங்கு வதும் கோழைத்தன மாகும். ஆய்வு முடிவுகளின்படி செயல்படத் தயங்கு வதும், செயல்படா மலிருப்பதும் நேர்மை யின்மையாகும்.

மனிதனின் சிந்தனையைக் கட்டுப்படுத்தும் முக்கிய சக்தியாக இருப்பது கடவுள் பற்றிய கருத்து. வெவ்வேறு சமுதாயங்கள் கடவுளுக்கு வெவ்வேறு குணாதிச யங்களை, பண்பு களைக் கற்பிக்கின்றன. அதுபோல, சமுதாயத் திற்கு சமுதாயம் வழிபாட்டுச் சடங்குகள், முறைகள் மாறுபடுகின்றன. ஆனால், அனைவரும் கடவுள் என்பவர் தற்புகழ்ச்சியையும், புகழ்ச்சியையும் விரும்புவதாகக் காட்டுகிறார்கள். அத்துடன் கடவுள் மனிதனின் தன்னல மறுத்தலையும், பலியிடுதலையும், சடங்குகளையும் விரும்பி ஏற்று அவர்களுக்கு நற்பயன்களை அளிப்பதாகச் சொல்கிறார்கள். இம்மாதிரிக் கற்பனைக் கதைகள் மக்கள் மனதில் குழப்பம் விளைவிக்கின்றன. எதையும் சந்தேகிக்கத் தூண்டுகின்றன. கடவுள் பற்றிய கருத்தையே மக்கள் சந்தேகிக்கிறார்கள்.

ஆனால், மதங்களும் புரோகிதர்களும் அர்ச்சகர்களும் மக்களை கடவுள் என்ற கருத்து பற்றி சிந்திக்க விடுவதில்லை. கடவுள் பிரார்த்தனைகளுக்கு செவிசாய்த்து மனிதர்களுக்கு நல்வாழ்வு இவ்வுலகில் அளிப்பார் என்றும், மோட்சத்தில் இடமளிப்பார் என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள். செய்த பாவங்களுக்கு எளிய பரிகாரங்களைச் சொல்கிறார்கள். மேலும் கடவுளையும், மதத்தையும் சந்தேகித்தால் நரகம் கிடைத்துவிடும் என்று பயமுறுத்துகிறார்கள். இப்பிரச்சாரங்கள் மனிதர்களின் சிந்தனையை மழுங்கடித்து விடுகின்றன. உண்மையான மதத்தின் இலக்கு மனிதனை ஊக்கப்படுத்தி செயல்படவைப்பதுதான் மதத்தின் நோக்கமாக இருக்கவேண்டும். மனித சமுதாயத்தின் முன்னேற்றம் இயற்கையை அறிவுப் பூர்வமாக ஆராய்ந்து அதைக் கட்டுப்படுத்தியதால்தான் ஏற்பட்டிருக்கிறது என்பதனை சரித்திரம் விளக்குகிறது. மனிதர்களின் வாழ்க்கைத் தரம் மனிதர்களது அறிவுப் பூர்வமான ஆய்வுகளால், உழைப்பால் உயர்ந்திருக்கிறது. பிரார்த்தனைகள் சடங்குகள், பலி யாகங்கள் செய்ததால் மக்கள் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் தெய்வீகத்தின் பங்களிப்பு எதுவுமில்லை. உண்மை இவ்வாறிருக்க, உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் கடவுளின் செயல்பாடுகள் என்று தவறாக விமர்சனம் செய்வது மனிதன் விதியை நம்பும்படி செய்து விடுகிறது. மனிதனிடம் முயற்சியின்மையைப் புகுத்தி விடுகிறது. அறிவியல் தாகத்தைத் தகர்த்து விடுகிறது. சுயசிந்தனையை முடக்கி விடுகிறது.

சுய சிந்தனையை முடக்கிவிடும் இன்னொரு காரணி வாழ்க்கை முறைகளை மாற்றி அமைக்கத் தயங்கும் பய உணர்வாகும். தத்துவஞானிகள் மெய்ம்மை காண்பது கடினமான செயலல்ல; மெய்ம்மையைக் கண்ட பின்னர் அதைக் கடைப்பிடிக்காமல் ஓடாமலிருப்பதுதான் கடினமான செயல் என்கிறார்கள்.


தமிழ் ஓவியா said...

மெய் என்பது அறியாமை என்ற இருளில் ஏற்றப்படும் ஒளி விளக்காகும். மெய் காண்பது ஆய்வு, பரிசோதனை, சான்று, காரணம் என்பவற்றின் மூலமாக உணரப்படுகிறது. மெய் காணுதல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை அறிய பிரார்த்தனை என்ற பொருளையே மெய் காணும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். அது சம்பந்தமாக தர்க்க ரீதியாகவும், காரணத்தின் அடிப்படையிலும் பல கேள்விகளை எழுப்பி அவைகளுக்குப் பதில்கள் பெற வேண்டும். பெற்ற பதில்கள் மூலம் அறிவு பூர்வமான முடிவு எடுப்பதே மெய் காண்பதாகும். பிரார்த்தனை பற்றி மெய் காண முற்படும்போது இரண்டு அடிப்படைக் கேள்விகள் எழுகின்றன. மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி பிரார்த்தனைகளை ஏற்று, அதற்குப் பிரதிபலனாக ஏதாவது செய்கிறதா என்பது முதல் கேள்வி. தெய்வீக சக்தி விடையளிக்கிறதென்றால், அதற்குச் சான்று உள்ளதா என்பது இரண்டாவது கேள்வியாகும். சரித்திரச் சான்றுகளின்படி கடவுள் பிரார்த்தனைகளுக்கு எந்தவித விடையளிக்கவுமில்லை, பலனையும் அளிக்கவில்லை. இது சம்பந்தமாக அமெரிக்க நாட்டின் பகுத்தறிவுவாதி இங்கர்சால் (1833_1899) கூறும்போது தெய்வீக சக்தி பசித்தவனுக்கு உணவளிக்கவில்லை; ஏழைகளுக்கு உடை கொடுக்கவில்லை, எந்த அடிமையையும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கவில்லை, அடிமைக்கு விடுதலையையும் சுதந்திரத்தையும் அளிக்கவில்லை என்று கூறுகிறார். மனித சமுதாயத்தின் முன்னேற்றம் மனித முயற்சியாலும், செயல்பாடுகள்மூலமும்தான் ஏற்பட்டது. இச்சான்றுகள் தெய்வீக சக்தி பிரார்த்தனைகளுக்கு பலன் அளிப்பதில்லை என்பதனை உறுதி செய்கிறது. சமுதாயத்தில் விடுதலையும், சுதந்திரமும் நிலவும்போதுதான் மெய்காணும் செயல்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. மக்கள் அறிவியல் ஆர்வத்தோடும், மெய் காணும் தேடல் உணர்வோடும் செயல்படும்போதுதான் மெய்ம்மை உணர்தல் சிறப்பாக நடைபெறுகின்றன. இவ்வாறு கருத்துச் சுதந்திரமும், மெய் காணும் தேடல் உணர்வும் முக்கிய பங்களிப்பை வகிக்கும்போது, இவைகள் மனித சமுதாயத்தில் சிறப்பான நிலையில் நிலவவில்லை.

தமிழ் ஓவியா said...

இன்றைய நிலையில், மக்கள் சுதந்திரமாகவும் இல்லை. சுயசிந்தனையாளர்களாகவும் இல்லை. பெரும்பான்மை மக்கள் மனதில் மத நம்பிக்கைகளும், தப்பெண்ணங்களும், வெறுப்புணர்ச்சிகளும் நிரம்பியிருக்கின்றன. சுதந்திரமாக இருக்கிறோம் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள்தான் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் என்றுஅறிஞர் கோதே விமர்சனம் செய்கிறார். உலகில் வாழும் பெரும்பான்மை மக்கள் மதம், இனம், சாதி, தேசீயம் என்பவற்றின் பெயரால் பல்வேறு தப்பெண்ணங்களையும், வெறுப்புணர் வையும் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனங்கள் சுதந்திரமாக இல்லை. அவர்கள் மூளை கட்டுண்டு கிடக்கிறது. இந்நிலையைப் பார்த்துத்தான் மக்கள் சுதந்திரமாகப் பிறக்கின்றார்கள். ஆனால் எங்கும் சங்கிலிகளால் கட்டுண்டு கிடக்கிறார்கள் என்று பிரான்சு நாட்டு அறிஞர் ரூசோ (1712_1770) விமர்சனம் செய்தார். இது இக்காலத்திற்கும் பொருத்தமாக இருக்கிறது.

நம்முடைய பகுத்தறியும் திறனை எல்லாக் காரியங்களுக்கும் உபயோகப்படுத்த வேண்டும். சிந்தனைகள்தான் இயற்கையைப் புரிந்து கொள்ளவும், கட்டுப்படுத்தி சமுதாய நலனுக்குப் பயன்படுத்தவும் உதவுகின்றன. மேலும், மனித சக்திகளும் இயற்கைக் செல்வங்களும் பயனற்ற காரியங்களில் வீணாவதைத் தடுக்க உதவுகின்றன. மெய் காண்பதின் முக்கியத்துவத்தை விமர்சனம் செய்யும் அமெரிக்கப் பகுத்தறிவுவாதி இங்கர்சால் (1833_1899) தவறுகளுக்கும், குழப்பங்களுக்கும் மத்தியில் ஒளிர்கிற மெய்ம்மையைக் கண்டுபிடிப்பது மிகவும் உன்னதமான செயலாகும். அதைவிட சிறந்தது எதுவுமில்லை என்கிறார்.

மெய்ம்மையைக் கண்டவுடன், அதைத் துணிவுடன் செயல்படுத்த வேண்டும். தனிநபரின் பொறுப்பு சுயசிந்தனையாளராக இருப்பதுதான். அதன் அர்த்தம் எல்லாத் துறைகளிலும் சிந்தனையை உபயோகப்படுத்துவதாகும். அதனால்தான், ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோம் நாட்டின் தத்துவ ஞானி போத்தீயஸ் ஒவ்வொரு தனி மனிதனும், சுய சிந்தனையும் பிரிக்க முடியாத பொருள் என்று கூறுகிறார். சுயசிந்தனையின் முக்கியத்துவத்தை இங்கர்சால் மிகவும் வலியுறுத்துகிறார். அவ்வாறு வலியுறுத்தும்போது அவர் கூறுகிறார், மனிதன் சிந்திக்க வேண்டும்; எல்லா புலனுணர்வுகளையும் உபயோகப்படுத்த வேண்டும். எதையும் பரிசோதிக்க வேண்டும். எதையும் ஆய்வு செய்ய வேண்டும். சிந்திக்கத் தெரியாதவன் கீழான மனிதனாவான். சிந்திக்காதவன் அவனுக்கே விரோதியாவான். சிந்திக்க பயப்படுபவன் மூடநம்பிக்கையின் அடிமை என்கிறார். இதே கருத்தைத்தான் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களும் சொன்னார்கள்.

மனிதர்களது ஊசலாடும் மனதைக் கண்டு கவுதம புத்தர் கீழ்க்கண்டவாறு புத்திமதி கூறுகிறார். மனிதர்கள் தங்களுடைய மனங்களை அங்கிங்கும் அலையாதபடி நெறிப்படுத்த வேண்டும். நன்கு நெறிப்படுத்தப்பட்ட மனம் என்பது உறவினரைவிட, தந்தையையும் தாயையும் விடச் சிறந்த துணையாக இருக்கும். ஏனெனில், அது தூய சிந்தனைகளை சிந்திக்கும். எவருக்கும் தீமை பயக்காது என்கிறார். ஆகவே, மக்கள் மனதைப் பண்படுத்துவதே சிறந்த தொண்டாகும். கடவுளைத் திருப்திப்படுத்த நாம் செய்ய வேண்டியவை எதுவுமில்லை என்ற கருத்தைப் பரப்பி, அறிவியல் ஆய்வு மனப் பான்மையை வளர்த்தெடுப்பதே சுயசிந்தனை வளர்ந் தோங்க நாம் செய்ய வேண்டிய காரியமாகும்.

- ந.ஆனந்தம்

தமிழ் ஓவியா said...

காங்கிரஸ் சோசலிசம் என்னவாயிற்று?


பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில், மத்தியில் உள்ள மன்மோகன்சிங் அரசு, பல்வேறு மக்கள் நலவிரோதத் திட்டங்களை தனது கொள்கை முடிவுகளாக அறிவித்து வருகிறது.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலாளிகளை கைலாகு கொடுத்து வரவேற்கும் முடிவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அந்நிய மூலதன முதலீடு (FDI) என்பது பன்னாட்டுத் தொழில் துறை திமிங்கிலங்களின் பச்சாதாபப்படாத சுரண்டல்களுக்குக் கதவு திறந்து விடுவது என்று கூட்டணியில் உள்ள கட்சிகளே சுட்டிக் காட்டியும் அதுபற்றி மத்திய அரசு கேளாக் காதுடன் செயல்படுகிறது.

இப்போது ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போன்று, அதற்கு மேலும் அடுத்த கட்டமாக, இன்ஷூரன்ஸ் - காப்பீட்டுத்துறை, ஓய்வூதியத்துறை - இவை இரண்டிலும் அந்நிய முதலாளிகளை வரவழைக்க ஆயத்தமாவோம் என்று அறிவித்துள்ளது!

இன்ஷூரன்ஸ் துறையில் 26 சதவிகிதமான வெளிநாட்டு முதலீடுகள் பங்கு இனி 49 சதவிகிதமாக உயரும் என முடிவு செய்து பச்சைக் கொடி காட்டுகிறது.

அதைவிடக் கொடுமை - ஓய்வூதியத் துறையிலும் வெளிநாட்டு மூலதனக் கம்பெனிகளுக்குக் கதவு திறக்கப்பட்டுள்ளதாகும்.

நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு முற்றிலும் மாறானது இது. உள்நாட்டிலேயே தேவையான முதலீட்டைத் திரட்டலாம் என்பதே அதன் யோசனை.
சில புள்ளி விவரங்கள் மத்திய ஆட்சியின் முடிவை நியாயப்படுத்துவதாக இல்லை.

எடுத்துக்காட்டாக,கடந்த 10 ஆண்டுகளில் 6300 கோடி ரூபாய்கள் வெளிநாட்டு அந்நிய முதலீடாக வந்துள்ளது; ஆனால் எல்.அய்.சி. மட்டும் ரூ.7000 கோடி ஈவுத் தொகை வழங்கியுள்ளது.

11ஆவது அய்ந்தாண்டு திட்டத்திற்கு 7 லட்சத்து 415 கோடி ரூபாய் வழங்கியுள்ளது!

பொதுத்துறை நிறுவனத்தை முற்றாக தனியார் மயமாக்குவதற்குரிய முதற்கட்ட முயற்சியே இது!

1.83 கோடி பாலிசிதாரர்களைக் கொண்ட எல்.அய்.சி. 99 விழுக்காடு பாலிசிதாரர்களுக்கு முறையாக பணத்தை வழங்கியுள்ளது. ஆனால் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், தங்கள் பாலிசிதாரர்களில் 60 முதல் 80 விழுக்காடு மட்டுமே வழங்கி வருகின்றன.

இது எதைக் காட்டுகிறது? பொதுத்துறை நிறுவனம், தனியார் துறையைவிட சிறப்பாக திறமையாகச் செயல்படுகிறது என்பதைத்தானே!

நமது அரசியல் சட்டத்தில் உள்ள சோசலிசம் வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா?

ஓய்வூதியத்திலும் இந்த ஒட்டகத்தை நுழைய விடுவது மிகப் பெரிய மக்கள் விரோதம். ஓய்வூதியதாரர்களின் எதிர்காலம் இருண்டுவிடக் கூடிய ஆபத்து அறவே இல்லை என்று மத்திய அரசு உத்தரவாதம் கொடுக்க முடியுமா?

தற்போதுள்ள அமைப்பில் - ஓய்வூதியத் திட்டம் 1995இல் ஒரு ஊழியர் இறந்தால் - அது ஆயுள் முழுமைக்கானது என்ற காரணத்தால், அவரின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் அல்லது 100 மாதங்களுக்கான மொத்த ஓய்வூதியம் கொடுக்கப்படும் ஏற்பாடு நடைமுறையில் உள்ளது.

இதே போன்று தனியார் நிறுவனங்கள் செயல்படுத்துமா? இடையில் மூடப்பட்டால் (என்ரான் போன்ற நிறுவனங்கள் முன்மாதிரி) இன்சால்வென்ட் ஆனால் யாரைப் போய் கேட்க முடியும்? அரசு உரிமையாளர் என்றால் நிலை அப்படி அல்லவே!

இன்னொரு திடுக்கிடும் புள்ளி விவரம் இந்த முடிவை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது!

தற்போது இந்திய தொழிலாளர் வைப்பு நிதி செயல்படாத கணக்குகள் உள்ள தொகை ரூ.22,636 கோடி. (சந்தா செலுத்தாமை, மூடப்பட்ட நிறுவனங்கள் போன்றவைகளால்)

அதுபோல கேட்பாரில்லாத நிதி ரூ.4000 கோடி (நாலாயிரம் கோடி).

இந்நிலையில் எதற்கு அந்நிய முதலீடுகள் மேலும் உயர்த்தப்பட வேண்டும்?

பிரிட்டிஷ்காரனின் சுரண்டல் ஒழிக என்று கூறியவர்கள் ஆளும் காங்கிரசார்!

அந்நிய துணிகள் பகிஷ்காரம் என்றுகூறி பதவிக்கு வந்தவர்கள்!

“Be Indian, Buy Indian”,

இந்தியனாக இரு; இந்திய சாமான்களையே வாங்கு என்றெல்லாம் நெருக்கடி காலத்தில் தத்துவ முழக்கம் இட்டவர்கள் இப்படி தாறுமாறாக பன்னாட்டு முதலாளிகள் சுரண்டலுக்கு பகிரங்க அனுமதியும் அழைப்பும் தரலாமா?

இவை எல்லாவற்றைவிட, இன்னும் இரண்டே ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தலைச் சந்திக்கவிருக்கும் ஆளும் கூட்டணி - (இடையில் கவிழ வாய்ப்பில்லை என்பதை ஒப்புக் கொண்டே) வாக்கு வங்கி பற்றியும், ஏழை, எளிய, பாமர, விவசாய, வியாபாரிகள் கண்ணோட்டம் ஆதரவு பற்றியும் சிந்திக்க வேண்டாமா?
மதவெறி ஆட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர இப்படிப்பட்ட முடிவுகள் மூலம், தங்களை அறியாமலேயே வழிவகுக்கலாமா?

மான்டேக்சிங் அலுவாலியாக்களும், ரங்கராஜ அய்யங்கார்களும், கெல்கர்களும் இதர ஜோல்னாப்பை அறிவு ஜீவிகளுமா வந்து வாக்கு கேட்கப் போகிறார்கள்? சோனியா காந்தியும், மன்மோகன்சிங்கும்தான் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அரசியல் சாதுர்யம் கூட இல்லையே!

வேதனை! வேதனை!!

கி.வீரமணி
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


திருச்சி மலைக்கோட்டை கோயில் நுழைவுக்கு ஆதி திராவிடர்களை அழைத்துக் கொண்டு சென்ற நீதிக்கட்சியின் தலைவர்கள் கே.வி.ராமனாதன், டி.வி.சுப்பிரமணியன் ஆகியோர் அந்த மலைப் படிக்கட்டுகளில் உருட்டிவிடப்பட்டு மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

மூடனே!


கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிச் சோம்பித் திரிந்துகொண்டு, தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழிபோட்டுத் திரிகின்றவன் ஒரு மூடனே!

-பெரியார்- (விடுதலை, 1.2.1969)

தமிழ் ஓவியா said...


மருத்துவ நுழைவுத் தேர்வு தேவையா?

எதிர்வரும் 2012ஆம் ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பட்டப் படிப்பினை மேற்கொள்வ தற்கான மாணவர்கள் தேர்விற்கும், எம்.டி., எம்.எஸ். போன்ற பட்ட மேற்படிப்பினை மேற்கொள்வதற்கான மாணவர்கள் தேர்விற்கும், தேசிய அளவில் பொது வானதான நுழைவுத் தேர்விற்கும் (Common Entrance Test - CET) முறையே, டெல்லியிலமைந்த உயர்நிலைப் பள்ளி களுக்கான மத்திய அமைப்பு(Central Board of Secondary Education - CBSE) மற்றும் அகில இந்திய மருத்துவக் கழகத்தின் (All India Institute of Medical - Science - AIIMS) வழிகாட்டுதலோடு நடத்தும் என்கிற இந்திய மருத்துவக் குழாமின் (Medical Council of India - MCI) முடிவாக செய்தி வெளியாகி இருப்பது மக்கள் தொகையில் எண்பது சதவீதத் திற்கும் (80) மேலாக இருக்கும் கிராமப் புற மற்றும் வசதி, வாய்ப்புகளற்ற ஏழை - எளிய மாணவச் சமுதாயத்திற்கு பேரிடியாக அமைந்து சமுதாயச் சீரழி விற்கு வழிவகுக்கும்; அநீதியாகவும் அமையும்.

ஏழை மாணவர்களாலும் நுழைவுத் தேர்வில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது...

தமிழ் ஓவியா said...

ஏனெனில், தேசிய அளவில், அதுவும், அய்.சி.எஸ்.சி., கல்வி, சி.பி.எஸ்.சி கல்விப் பாடத் திட்டத்தை மேற்கொள்ளும் மாணவர்களால் மட்டுமே தேசிய அளவிலான பொதுவான நுழைவுத் தேர்வில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும்; வசதி வாய்ப்புகளற்ற கிராமப்புற மாணவர்களாலும் நகர்ப்புற ஏழை மாணவர்களாலும் நுழைவுத் தேர்வில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது.

மருத்துவக் குழாமின் தன்னிச் சையான முடிவா அல்லது மத்திய அரசின் கொள்கை முடிவா?

இந்திய மருத்துவக் குழாமின் அறிவி ப்பாக செய்தி வெளியாகி இருப்பது, இந்திய மருத்துவக் குழாமின் தன்னிச் சையான முடிவா அல்லது மத்திய அரசின் கொள்கை முடிவா எனத் தெரியவில்லை.

ஏனெனில், இந்திய மருத்துவக் குழாமிற்கு தன்னிச்சையாக செயலாற்றக் கூடிய அதிகாரம் கொடுக்கப்பட்டிருந் தாலும், பொதுவான நுழைவுத் தேர்வினை நடத்தி எம்.பி.பி.எஸ். பட்டப் படிப்பிற்கும், எம்.டி.எம்.எஸ். போன்ற பட்ட மேற்படிப் பிற்கும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்கிற அறிவிப்பு தான்தோன்றித் தனமானது மட்டுமின்றி ஏழை - எளிய மக்களுக்கு வாய்ப்புகள் கிட்டாமல் செய்வதற்கான சூழ்ச்சி வலைகளோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
ஏழை, எளிய மக்களுக்கு பெரும் பாதகமாக அமையும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை போகிறதா அல்லது அலட்சியம் காட்டுகிறதா என்று தெரிய வில்லை.

தாறுமாறானதும் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தக் கூடியதுமான அய்.சி.எஸ்.சி. கல்வி, சி.பி.எஸ்.இ. கல்வி ஆங்கிலோ இந்தியக் கல்வி, ஓரியண்டல் கல்வி, மாநில மெட்ரிக் முறை கல்வி என்று மாறுபட்ட, வேறுபட்ட கல்வி முறைகளைக் களைந்து சமச்சீர் அளவிலான உயர் கல்வியை நாடு முழுவதும் அளிக்க வேண்டுமென்றும்; கிராமப்புற மாணவர் களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் போக்கிக் கிராமப்புற மாணவர்கள் நலனைப் பாதுகாத்திட வேண்டுமென்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

பொதுவான நுழைவுத் தேர்வு என்கிற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது...

தேசிய அளவில், அனைத்துப் பள்ளிகளிலும், குறிப்பாக, அரசுப் பள்ளி களிலும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும். தனியார் கூட்டமைப்புப் பள்ளிகளிலும், கிராமப்புறப் பள்ளிகளிலும், நகர்ப்புறப் பள்ளிகளிலும் மாணவர்கள் பயிலக்கூடிய உயர்தரப் பள்ளி அமைப்புகள் செம்மையான ஆசிரியர்கள், பயிற்சிக் கூடங்கள், இன்னபிற வசதிகளை உருவாக்கி ஒரே சீரான கல்வி, அதுவும் தரமான சமச்சீர் கல்வியைத் தாய் மொழி அல்லது வட்டார மொழியிலும், ஆங்கிலத் திலும் ஒரே சீராக அளிக்கப்பட்டால்தான் நாட்டளவில் பொதுவான நுழைவுத் தேர்வு பற்றி சற்றே பரிசீலனை மேற்கொள்ளலாம். அந்த நாள்வரை தேசிய அளவில் பொதுவான நுழைவுத் தேர்வு என்கிற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது.

ஒன்று திரண்டு போராடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை...

அதற்குப் இந்தியப் பிரதமர் மாண்புமிகு டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற் கொண்டு, இந்திய மருத் துவக் குழாம் மேற்கொள்ளவிருக் கின்ற தேசிய அளவில் பொது வான நுழைவுத் தேர்வு என்கிற முடி வினை விலக்கி முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
இல்லையேல் நாடு தழுவிய அளவில் ஏழை - எளிய மக்களும், மாணவர் சமு தாயமும் பிற்படுத்தப்பட்ட மக்களும், ஒடுக்கப்பட்ட மக்களும், சிறுபான்மை யினரும் ஒன்று திரண்டு போராடுவதைத் தவிற வேறு வழி தெரியவில்லை.

அந்த அறப்போராட்டத்தை ஒத்த மனமும் செயல்பாடுகளும் கொண்ட அரசியல் கட்சிகள், சமுதாய அமைப் புகள், மருத்துவர்கள் - மருத்துவத் துறையினர், ஆசிரியர் அமைப்புகள் - ஆசிரியர் கூட்டமைப்புகள், மாணவச் சமுதாயம், பொது மக்கள் உள்ளிட் டோரை ஒன்று திரட்டி நாடு தழுவிய அளவில், தேசிய பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் சிறுபான்மை யினர் கூட்டமைப்பு நடத்தும்.

குறிப்பிட்டுள்ள அமைப்புகளும், தத்தமக்கே உரிய எழுச்சியோடும் வேகத் தோடும், முனைப்போடும் போராட்டங் களை ஒன்றுபட்டு நடத்தி, உரிமைக்குப் போராடி, சமூக நீதி காத்து, சமுதாய நலன் காப்போம்! - இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


கழக ஏடுகள், இதழ்கள்பற்றி...


நெடுநாள் வாசகர் நெடுமாறன்

மதிப்பிற்குரிய பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேசனலிஸ்ட், உண்மை, விடுதலை ஆசிரியர் குழுமம் மற்றும் பங்களிக்கும் அனைவருக்கும் வணக்கம். நீண்ட நாட்களாகவே நம் கழகத்தின்பால் ஈடுபாட்டுடன் இருப்பவன் என்ற முறையிலும், கழக வெளியீடுகளைத் தொடர்ந்து படித்து வருகின்றவன் என்ற முறையிலும் நம் வெளியீடுகளின் அறிக் கைகளைப் பாராட்டி எழுத வேண்டும் என்று எண்ணம் கொண்டி ருந்தேன். தாமதம் ஆகிவிட்டதற்கு மன்னிக்கவும்.

விடுதலையில் வரும் தமிழர் தலைவர் அவர்களின் பேச்சுக்கள், வாழ்வியல் சிந்தனைகள், ஞாயிறு மலரில் கேள்வி - பதில் போராட்ட அழைப்புகள் என்று என்றும் தலைவருடன் நேரில் பழகும் வாய்ப்பைப் போல அமைந்துள்ளது.

விடுதலையில் ஒவ்வொரு நாளும் நாட்டில் உலகில் நடக்கின்ற முக்கிய நிகழ்வுகள், இடஒதுக்கீடு சம்பந்தப்பட் டவை பார்ப்பனர் சூழ்ச்சி சம்பந்தப்பட்டவை, விளையாட்டு அரங்கம், வணிகச் செய்திகள், மருத்துவ தகவல்கள், இளைஞர் அரங்கம், அறிவியல் அரங்கம், பகுத்தறிவுக் களஞ்சியம், ஒற்றைப் பத்தி, கழக நிகழ்வுகள், மாநாட்டு அழைப்பு, தலைவர் சுற்றுப் பயணம் மற்றும் பல அறிவுபூர்வமான கட்டுரைகளுடன் என்று எட்டுப் பக்கங்களுடன் புது மெருகுடன் வருகிறது. எந்த ஒரு பத்திரிகையிலேயும் இவ்வளவு தகவல்கள் வருவதில்லை என்பதே உண்மை - பாராட்டுக்கள்.

பெரியார் பிஞ்சு பற்றிச் சொல்ல வேண்டுமானால் நாம் பிஞ்சாக இருந்து தெரிந்து கொள்ள முடியாமல் போனதை எல்லாம் இப்போது தெரிந்து கொள்ள வாய்ப்பாக உள்ளது. அறிஞர்களின் வாழ்க்கையாகட்டும், உலக நாடுகளைப்பற்றிய தகவல்களாகட்டும் பகுத்தறிவைப் புகட்டும் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று பலப்பல அணுகுமுறைகளில் பிஞ்சுகளை அறிவுப் பிஞ்சுகளாக, பெரியார் பிஞ்சுகளாக ஆக்கும் பணி மிகச் சிறப்பு. மேலும் பிஞ்சுகள் கற்றுக் கொள்ள மகிழ வரைந்து பழகுவோம், சுடோகு, யோசிங்க யோசிங்க, கேள்வி பதில் போன்ற எண்ணற்ற தலைப்புகளில் பிஞ்சுகளை மெருகேற்றும் பணியும் அபாரம்!

மாடர்ன் ரேசனலிஸ்ட் பற்றிச் சொல்ல வேண்டுமானால் கல்லூரிக் காலங்களில் ஆங்கில இதழ்களைப் படித்த ஆர்வம், தற்போது இன்றைய அரசியல் அவலங் களால் குறையத் தொடங்கியபோது மாடர்ன் ரேசனலிஸ்ட் மூலமாகத்தான் மறுபடியும் அந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. உலக நாட்டு சமகால மக்கள், தலைவர்கள், அன்பர்களின் கட்டுரைகள் படிக்க படிக்க உற்சாகம் ஏற்படுகிறது. தந்தை பெரியார் அவர்களின் உரைகள், கட்டுரைகள், ஆங்கிலத்தில் படிக்கும் போது புதியதாக படிப்பதுபோல் உள்ளது. நாத்திகக் கருத்துக்கள் உலகளவில் சென்றடைய மாடர்ன் ரேசனலிஸ்ட் ஓர் உலக மக்களுக்கான பாலம். வெல்க!

உண்மை இதழைப் பற்றிக் கூறுகையில், தமிழர்களைப் பற்றி எழுதும் பேரா சிரியர் ந. வெற்றியழகன் தந்தை பெரி யாரின் அரிய உரைகள், பேரறிஞர் அண்ணாவின் புகழ்மிக்க கட்டுரைகள், பெரியாரைப் போற்றும் கவிதைகள், ஆசிரியரின் கேள்வி பதில்கள், மடமை களை வெளிச்சம்போட்டுக் காட்டும் - மஞ்சை வசந்தன், அயல்நாட்டு நாத்திகர் களின் உண்மைவாதிகளின் வாழ்க்கைக் குறிப்புகள், தமிழ்ச்செல்வன் கட்டுரைகள் முகநூல் Facebook சாட்டையடிகள், பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் முரட்டு நாத்திக செயல்பாடுகள் - பெரி யாரின் முக்கிய போர்வாள், பேராசிரியர் மங்கள முருகேசன் அவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் பல பேராசிரியர்கள், முனைவர்கள், அறிஞர்களின் கட்டுரை கள், கவிஞர் கலி. பூங்குன்றன் அவர் களின் கணக்கிலடங்கா எண்ண ஓட்டங் கள், வரலாற்றுப் பதிப்புகள் என உண்மை படிக்கும்போது உண்மையிலே உண்மை தெரிந்து கொள்ள உண்மைதான் படிக்க வேண்டும்.


தமிழ் ஓவியா said...

இவ்வளவையும் பாராட்டி எழுது வதற்குத்தான் தாமதம் ஏற்பட்டது என்பதையும், இனி தாமதிக்கக் கூடாது என்ற எண்ணம் வந்தது எதனால் தெரியுமா? உண்மை அக்டோபர் 1-15 இதழில் வெளி வந்துள்ள மதம் நீங்கிய மதவாழ்வு நார்வே நாட்டின் அமைதி வாழ்க்கை என்ற கட்டுரைதான்.
இனி வருவது பெரியார் திடலில் 05.08.2012 அன்று நார்வே நாட்டு மனிதநேய சங்கத்தின் தலைவர் ஈவன் கிரான் ஆற்றிய ஆங்கிலச் சொற்பொழி வின் தொகுப்பும் - தமிழாக்கமும் என்று பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செய லாளர் வீ. குமரேசன் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்ட கட்டுரையைப்பற்றிய என் எண்ணங்கள்.

நான் பல மொழி பெயர்க்கப்பட்ட கட்டுரைகளைப் படித்துள்ளேன். ஆனால் இவ்வளவு சிறப்பாக, நேர்த்தியாக கோர்வையாக வடிக்கப்பட்ட கட்டுரை என் நினைவில் இல்லை. திரு. குமரேசன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள், பாராட்டுகள் மட்டுமல்ல என் தலை தாழ்ந்த வணக்கங்கள்.

நார்வே நாட்டு மனிதநேய சங்கத்தின் தலைவர் ஈவன் கிரான் ஆற்றிய ஆங் கிலச் சொற்பொழிவினைத் தவற விட்ட தற்கு மனம் வெகுவாக வருத்தமடை கிறது. பெரியார் திடலில் நடக்கும் நிகழ்ச்சிகளை இனிவரும் காலங்களில் தவற விடக் கூடாது என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டது இக்கட்டுரை.

நார்வே நாட்டில் ஒரே மதம், ஒரே பிரிவு இருந்தும் அந்நாடு கடவுள் மறுப்புக் கொள்கையை மதக் கொள்கைகளை விட்டு விலகி மனிதநேயக் கொள்கை களுக்கு, கடவுள் பிடியில் இருந்து விடுபட எடுத்துக் கொண்ட காலம் இரண்டு, மூன்று நூற்றாண்டுகள் என்று அறியும் போது, நம் நாட்டை நினைத்தால் மலைப் பாகவும் களைப்பாகவும் இருக்கிறது.

பல மதம், பல இனம், பல மொழி, பல கடவுள்கள் என்று எண்ணும்போது இன்னும் எவ்வளவு காலம் உழைக்க வேண்டும். நார்வே நாட்டின் நன்மையை அடைவதற்கு? பெரியார் என்ற ஒருவர் இல்லையானால் நாம் அவரால் எடுத்து வைத்திருக்கிற ஒரு படியைக் கூட நாம் எட்டியிருக்க முடியாதே என்று உள்ளம் பதைக்கிறது. இன்னும் எவ்வளவு உழைக்க வேண்டும், கட்டுப்பாடாக இருக்க வேண் டும் என்பதை இக்கட்டுரை, இப்பேச்சு நமக்கு எடுத்துரைக்கிறது.

திரு. ஈவன் கிரான் அவர்களின் பேச்சில் நாம் பெரியாரால் பெருமைப்பட்டுக் கொள்ள ஒரு முக்கிய சேதி என்னவென் றால் நாத்திகத் தன்மையை பொறுத்துக் கொள்ள, சகித்துக் கொள்ள பெரியார் நம் நாட்டில் உள்ளவர்களை பழக்கி வைத்துள் ளார், அவர் தைரியத்தால் மக்களை அந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளார் என்றே நான் சொல்வேன். ஏனெனில் திரு ஈவன்கிரான் அவர்கள் தந்தை பெரியார் சிலைக்குக் கீழே எழுதி வைத்துள்ள வாசகங்கள் -

கடவுள் இல்லை

கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்

கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்

கடவுளைக் கும்பிடுகிறவன் காட்டுமிராண்டி

போன்றதொரு வாக்கியத்தை தங்கள் நாட்டில் எழுதி வைக்க முடியாது என்று கூறியுள்ளார்.

ஆரம்பத்திலேயே அதிரடியாய் ஆரம் பித்துள்ள நம் தந்தை பெரியார்தான் உலகுக்கே வழிகாட்டப் போராடுவார் என்பதை உணர்த்துவதாக அவர் பேச்சு உள்ளது. அதுதான் உண்மை. அதுதான் நம் மக்களுக்கு விடுதலை என்று என் கடிதத்தை முடிக்கிறேன். நன்றி.

- வேல். சோ. நெடுமாறன்
பொறியாளர், சென்னை

தமிழ் ஓவியா said...


டில்லி எய்ம்ஸில் பார்ப்பன தர்பார்!


ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநீதி 54 எம்.பி.கள் புகார்

புதுடில்லி, அக்.22- டில்லியிலிலுள்ள, அகில இந்திய மருத்துவ விஞ் ஞானக் கழகத்தில், தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியின மாண வர்களுக்கு எதிராக வேறுபாடு காட்டப்படு கிறது' என, 54 எம்.பி.கள் கோரிக்கை விடுத்துள் ளனர். டில்லி யில் அகில இந்திய மருத்துவ விஞ் ஞானக் கழகம்(எய்ம்ஸ்) உள்ளது. இங்கு மருத்து வர்கள் மற்றும் இதர மருத்துவ ஊழியர்கள் நியமனத்தில், இட ஒதுக் கீடு கொள்கை கடைப் பிடிக்கப்படுவ தில்லை. குறிப்பாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கான இடங்கள், நீண்ட நாட்களாக காலி யாக உள்ளதாக புகார் கள் எழுந்தன. குறிப்பாக, எய்ம்ஸ்' மருத்துவ மனையில், தாழ்த்தப் பட்ட மற்றும் பழங் குடியின வகுப்பு, இதர பிற்படுத்தப்படுத்தப் பட்ட வகுப்பு மாணவர் களுக்கு எதிராக வேறு பாடு காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டது.

தேசிய அளவில், பல்கலைக்கழகங் கள், கல்வி நிலையங்களில், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மற்றும் இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக வேறுபாடு காட் டப்படுகிறது: ஜாதிப் பாகுபாடு உள்ளது: இதைத் தடுக்க வேண் டும் என, பல எம்.பி.,கள் புகார் தெரிவித்து வந் தனர். இத்தகைய வேறு பாடு, எய்ம்ஸ்' மருத்துவ மனை நிர்வாகத்தில் அதிக முள்ளது என, பல்வேறு கட்சிகளை சேர்ந்த, எம்.பி.,கள் ஒன் றிணைந்து பிரத மருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து, லோக் சபா எம்.பி., மாங்கனி லால் மண்டல் செய்தி யாளர்களிடம் கூறிய தாவது:

இட ஒதுக்கீடு: எய்ம்ஸ்' மருத்துவ மனை நிர்வாகத்தில், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கு எதி ராக வேறுபாடு காட் டப்படுவது தீவிரமாக உள்ளது.

இங்கு மருத்துவர் களை நியமிக் கும்போது, இட ஒதுக்கீட்டு கொள்கை பின்பற்றுவது இல்லை. இது தொடர் பாக, அரசு நியமித்த குழுக்கள் அளித்த பரிந் துரைகளை யும் கடைப் பிடிப்பது இல்லை. இது தொடர்பாக, பிரதமருக்கு நாங்கள் எழுதியுள்ள கடிதத்தில், எய்ம்ஸ் நிர்வாகத்திடம் இருந்து, முழுமையான அறிக்கை கேட்க வலி யுறுத்தியுள்ளோம். இந்த விஷயத்தில், பிரதமர் தலையிட்டு நடவ டிக்கை எடுக்க வேண் டும். எய்ம்ஸ் துறையில் தொடர்ந்து தாழ்த்தப் பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்து வரு கின்றனர். பழங்குடி யின மாணவர் ஒருவர், தனக்கு ஏற்பட்ட தொடர் ஏமாற் றத்தை தாங்கி கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
எய்ம்ஸ் நிர்வாகத்தில் ஜாதி பாகுபாடு காட்டப் படுகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தாழ்த் தப்பட் டோருக்கான தேசிய கமிஷன் நியமித்த கமிட்டி, தன் அறிக்கை யில் பரிந்துரை செய்து இருந்தது என்பது குறிப் பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


வழிகாட்டுகிறார் காவல்துறை ஆணையர்


சென்னை, அக்.22- இந்தாண்டு காவல் நிலையங்களில் ஆயுத பூஜையை கொண்டாடக் கூடாது என்ற சுற்றறிக் கையை சென்னை காவல் துறை ஆணையர் எஸ். ஜார்ஜ் அனுப்பியுள்ளார். அரசு அலுவலகங்களில் மதச் சார்பின்மையை நிலைநிறுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு தினங் களுக்கு முன்பு பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அரசுத் துறையினரே அரசிலயமைப்புச் சட்டத்தை மீறலாமா? என்று தலைப்பிட்டு அரசு அலுவலகங்களில், வளாகங்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனத் தெரிவித்து அரசுத் துறை செயலாளர்கள், இயக்குநர்கள், ஆட்சியாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


உள்நோக்கம் புரிகிறதா?


கேள்வி :- ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சரே, அந்த மாநில மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக் கூடிய சேது சமுத்திரத் திட்டம் போன்ற ஒன்றை தேவையில்லை என்று சொல்வதன் உள்நோக்கம் தான் என்ன?

கலைஞர் :- ஜெயலலிதாவின் அந்த முடிவினை தமிழக மக்களின் நல் வாழ்விலே அக்கறை உள்ள கட்சிகள் எல்லாம் கண்டிக்கும் நிலையில், இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் ராம. கோபாலன் அவர்களும், விசுவ இந்து பரிஷத் அமைப்பின் ஆலோசகர் எஸ்.வேதாந்தம் அவர் களும்; ஜெயலலிதாவின் இந்த முடிவுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்களே; அதுதான் உள் நோக்கம் என்று புரியவில்லையா? - தி.மு.க. தலைவர் கலைஞர்

(முரசொலி 22.10.2012)

தமிழ் ஓவியா said...


மத்திய நுழைவுத் தேர்வு! ஆந்திராவைப் பார்க்கட்டும் தமிழ்நாடு


ஆந்திராவைப் பார்க்கட்டும் தமிழ்நாடு

கேள்வி :- மத்திய அரசு நடத்தப் போவதாக அறிவித்துள்ள மருத்துவ பொது நுழைவுத் தேர்வினை ஆந்திராவில் நடத்துவதற்கு ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதே?

கலைஞர் :- தமிழகத்தில் நுழைவுத் தேர்வு என்பதை ஒழித்த பிறகும், மருத்துவக் கல்வியில் மத்திய அரசு அளவில் நுழைவுத் தேர்வினைத் திணிக்க இருப்பதைப் பற்றி? என்ற கேள்விக்கு சில நாட்களுக்கு முன்பு நான் பதிலளித்தபோது, தமிழகத்தில் நுழைவுத் தேர்வு முறையை ஒழித்தது கழக ஆட்சிதான் என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் மருத்துவக் கல்வியில் மத் திய அரசு அளவில் நுழைவுத் தேர்வினை நடத்தப் போவதாக செய்திகள் வருகின்றன. அதில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, நுழைவுத்தேர்வு முறையை அறவே ஒழிப்பதற்கு அனைத்து முயற்சி களையும் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் நமது கருத்து. ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 15 சதவிகித இடங்களை மத்தியத் தொகுப்புக்கு எடுத்துச் சென்று, அந்த இடங்களை நிரப்ப அகில இந்திய அடிப்படையில் நுழைவுத் தேர்வு நடத்து கிறார்கள். அதுபோலவே மருத்துவக் கல்லூரி களில் முதுநிலைப் பிரிவில், அதாவது எம்.டி., எம்.எஸ்., போன்ற வகுப்புகளில் சேருவதற்கும் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு வைக்கப்படுகிறது. இவ்வாறு மத்திய தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படும் இடங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கு தனி ஒதுக்கீடும் அறவே இல்லை. இந்தப் பிரச்சினை பற்றிஅய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடனடியாக தலையிட்டு, இதிலே நுழைவுத் தேர்வு முறையை ஒழித்தும், இதர பிற்படுத்தப்பட்டோருக்குரிய இட ஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்தும் நல்லதோர் முடிவு காண வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்று கூறியிருந்தேன். தமிழக அரசின் சார்பிலும் மத்திய அரசுக்கு இதைப்பற்றி எதிர்ப்பு தெரிவித்து எழுதியிருந்தார்கள். மத்திய அரசிடம் இருந்து இந்தக் கோரிக்கைக்கு பதில் வருவதற்கு முன்பு ஆந்திர மாநில அரசு, கெட்டிக்காரத்தனமாக, விவேகத்துடன் அந்த மாநில உயர் நீதி மன்றத்தில் மத்திய அரசு நடத்தும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கு தடை கோரி வழக்கு தொடுத்து - அந்த வழக்கில் இரண்டு நாட்களுக்கு முன்பு 2013-2014ஆம் கல்வியாண்டில் ஆந்திர மாநிலத்தில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்த தடை விதித்து உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டிருக்கிறார்கள். தமிழக அரசு பழி வாங்கும் நடவடிக்கைகளிலேயும், அவதூறு வழக்குத் தொடுப்பதிலேயும் சிந்தனையைச் செலுத்தாமல், இந்த வழியில் ஆக்கபூர்வமாக இனியாவது முயற்சி எடுத்து தமிழக மாணவர் களைக் காப்பாற்றிட முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

- தி.மு.க. தலைவர் கலைஞர் (முரசொலி 22.10.2012)

தமிழ் ஓவியா said...


கழிப்பறை இல்லாத வீட்டில் திருமணம் செய்யாதீர்! பெண்களுக்கு ஜெய்ராம் ரமேஷ் அறிவுரை
கோட்டா (ராஜஸ்தான்), அக். 22-கழிப்பறை இல் லாத வீட்டை சேர்ந்த ஆணுக்கு கழுத்தை நீட் டாதீர்கள் என்று பெண் களுக்கு மத்திய அமைச் சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவுரை கூறினார்.

வீடுதோறும் கழிப் பறை திட்ட விழிப் புணர்வு யாத்திரை ராஜஸ் தான் மாநிலம் கோட்டா நகரில் நேற்று நடந்தது. யாத்திரையை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தொடங்கி வைத் தார். அப்போது அவர் பேசியதாவது:

பெண்களுக்கு மாப் பிள்ளை பார்க்கும் போது ஜோதிடர்களி டம் ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்கள். ஆனால், இதைவிட சுத்தம், சுகா தாரம் முக்கியம். எனவே, புகுந்த வீட்டில் கழிப் பறை இருக்கிறதா என் பதைத்தான் எல்லா பெண் களும் பார்க்க வேண்டும். கழிப்பறை இல்லாத வீட்டைச் சேர்ந்த ஆணுக்கு கழுத்தை நீட்ட மாட்டேன் என்று பெண்கள் உறுதி ஏற்க வேண்டும். கழிப்பறை இல்லாவிட்டால், பெண் இல்லை என்ற புதிய முழக்கம் நாடெங்கும் ஒலிக்க வேண்டும்.

கழிப்பறைகள் அமைப் பதில் ராஜஸ்தான் பின் தங்கிள்ளது. இங்குள்ள 9,177 கிராம பஞ்சாயத்து களில் 321இல் திறந்த வெளியை கழிப்பிட மாக பயன்படுத்துவது அடியோடு ஒழிக்கப் பட்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் திறந்த வெளியை கழிப்பிட மாக பயன்படுத்துவதை மாநிலம் முழுவதும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் வாறு ஜெய்ராம் ரமேஷ் பேசினார்.22-10-2012