Search This Blog

23.10.12

திராவிடர் கழகத்தில் ஏன் சேர வேண்டும்?

திராவிடர் கழக உறுப்பினர் சேர்க்கை திராவிடர் கழகத்தில் ஏன் சேர வேண்டும்? 




தோழர்களே,

திராவிடர் கழக உறுப்பினர் சேர்க்கைப் பணி தொடங்கப்பட்டு விட்டது. கழகத்தின் அமைப்புச் செயலாளர் மானமிகு இரா.குணசேகரன் அதற்கான களப்பணியில் ஈடுபட்டுள்ளார். அவருக்குக் கழகத் தோழர்கள் போதிய ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.

கழகத்தில் ஏன் சேரவேண்டும்? கறுப்புச் சட்டை ஏன் அணிய வேண் டும்?

இது ஒன்றுதான்

 1. பிறவியில் பேதம் எந்த வகையிலும் இருக்கக் கூடாது என்று கூறுகிறது!

2. பிறவிப் பேதத்தைக் கட்டிக் காப்பது கடவுளா? மதமா? வேதமா? உபநிஷத்துக்களா? இதிகாசங்களா? புராணங்களா? ஏன் அரசமைப்புச் சட்டமா?  நீண்ட காலமாக பழக்கத்தில் இருந்து வந்தது என்பதற்காகவா?

எதுவாக இருந்தாலும் பேதமற்ற மானுட சமூக உருவாக்கத்திற்காக அவற்றைத் தகர்த்தெறியக் கூடிய ஒரே இயக்கம் இது. மண்ணுக்கு ஒருமைப் பாடு என்பதைவிட மனிதனுக்குள் ஒருமைப்பாடு என்ற உயரிய தத்து வத்தை உள்ளடக்கமாக கொண்ட ஒப்பரிய கழகம்.

இதற்காக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யக்கூடிய இயக்கம் இது!

இதற்காகப் போராட்டங்களை நடத் தக்கூடிய அமைப்பு இது. இதற்காகச் சிறைச் சாலைகளை சந்தித்த - சந்திக்கக்கூடிய இயக்கம் இது.

கொள்கையைப் பிரச்சாரம் செய்கிறபடி, சொல்லுகிறபடி செயல்பாட்டில் வாழ்ந்து காட்டக்கூடிய கழகம் இது.
3. பாலியல் நீதிக்காகப் பாடுபடக் கூடிய பாசறை இது. ஆணுக்கு நிகர் பெண் என்பதை எடுத்துக்கூறும் இயக்கம் இது. இதற்காக 80 ஆண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்த தலைவர் தந்தை பெரியார்.

மாநாடுகளில் தீர்மானங்களை நிறைவேற்றிய நீதிக்குக் குரல் கொடுக்கும் பேரியக்கம் இது.

4. சூத்திரனுக்கு எதைக் கொடுத் தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற கொடுமையான மனுதர்மத்தைத் தீயில் போட்டு எரித்த எழுச்சிகரமான இயக்கம் இது.

குலக்கல்வித் திட்டத்தைத் திணித்து அரை நேரம் படித்தால் போதும்; மீதி அரை நேரம் அவனவன் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று ஆச்சாரியார் (ராஜாஜி) கொண்டு வந்த குலக்கல்வித் திட் டத்தைக் குழி தோண்டிப் புதைத்த இயக்கம் இது.

5. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் கல்வி யிலும், வேலை வாய்ப்பிலும், பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று அயராது ஒலி முழக்கமிட்டு உழைத்து வரும் ஒப்பரிய கழகம் இது; அதனை வெற்றி மலர்களாக்கி - ஒடுக்கப்பட்ட மக்கள் பல வகைகளிலும் இன்று ஓங்கி நிற்பதற்கு உரிமை கொண் டாட நூற்றுக்கு நூறு தகுதி உடைய தன்மான இயக்கம் இது!

6. சமூகநீதிக்காக முதல் சட்டத் திருத்தம் வந்ததும், 69 சதவிகிதம் நிலைப்பதற்காக 76ஆவது சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதும் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோர் பயன் பெற மண்டல் குழுப் பரிந்துரை களை செயல்படுத்துவதற்காக 42 மாநாடு களையும், 16 போராட்டங்களையும் நடத்தி வெற்றி பெற்றது. திராவிடர் கழகம் அல்லவா! தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அல்லவா!

7. வெறும் தீண்டாமை ஒழிக - என்று வெற்றுக் கூச்சல் போடும் கட்சியல்ல; தீண்டாமையின் மூலம் ஜாதி - அதனை ஒழிக்க வேண்டும்; இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று இருப்பதற்குப் பதில் ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று மூல பலத்தை நோக்கி போர் புரியக்கூடிய ஒரே ஒரு புரட்சிப் பாசறை இந்தியாவிலேயே திராவிடர் கழகம்தான்.

8. பதவி பக்கம் தலைவைத்துப் படுக்காமல், பதவிக்குச் சென்றால் கொள்கையில் சமரசம் செய்து கொள்ள நேரிடும் என்பதைத் தெள்ளிதிற் உணர்ந்து, பதவிகளின் பக்கம் பார் வையைச் செலுத்தாமல், இலட்சியத்தை மட்டுமே குறி வைத்து இலக்கு நோக்கிப் பயணிக்கும் இலட்சியப் பாசறை இது.

9. எல்லார்க்கும் எல்லாம் என்கிற சமநிலை சமதர்மத் தத்துவத்தை உள்ள டக்கிய திட்டத்தை உலகுக்கு அறிவித்த வரும் உலகத் தலைவர் தந்தை பெரியார் தான் (1933 - ஈரோடு சமதர்மத் திட்டம்).

முதலாளி - தொழிலாளி என்ற பேதமே இருக்கக் கூடாது. தொழிலாளி பங்காளியாக்கப்பட வேண்டும் என்ற - யாரும் சொல்லாத புதிய சிந்தனை வெளிச்சத்தை தொழிலாளர்கள் உணர் வின் மீது பாய்ச்சிய பாசறை இது.

பொதுவுரிமை இல்லாத இடத்தில் பொதுவுடைமை பூக்காது என்ற மார்க்ஸ் சொல்லாத புதுக்கருத்தைக் கூறியவர் அறிவுலக ஆசான் பெரியார்!  10. தமிழ், தமிழன், தமிழ்நாடு எனும் களத்தில் பண்பாட்டுப் புரட்சிக் கொடியைப் பறக்கவிடும் தாய் கழகம் இதுவே! தமிழன் வீட்டு நிகழ்ச்சிகள் தமிழிலேயே நடக்க வேண்டும்; அதற்குத் தமிழன் தான் தலைமை தாங்க வேண்டும் என்ற உணர்ச்சிகளை ஊட்டியது மட்டு மல்லாமல், அவற்றை நடைமுறைக்கும் கொண்டு வந்த பெருமைக்குரிய வரலாறு இதற்கு மட்டுமேதான் உண்டு.

11. ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கியது இன்று நேற்றல்ல - அது 1939இல் தொடங்கப்பட் டது - இந்த இயக்கத்தின் முன்னோடி களால்! மதுரையில் ஈழ விடுதலை மாநாட்டையே நடத்தி (1983) உலகத் தமிழர்கள் மத்தியில் மகத்தான உணர்வை ஊட்டியதும் திராவிடர் கழகமே!

12. நமஸ்காரம் வணக்கமானதும்,  உபந்நியாசம் சொற்பொழிவானதும், வந்தனோபசாரம் நன்றியாக மலர்ந்ததும், ஸ்ரீ திருவானதும் இந்த இயக்கத் தாலேயே!

13. மூடநம்பிக்கைகளைத் தூக்கி எறியச் செய்து தமிழர் விழா தை முதல் நாள் தமிழ்ப் பொங்கல். அதுதான் நமது உழவர் திருநாள் - அறுவடைத் திருநாள் பண்பாட்டுத் திருநாள் என்று பறை சாற்றியதோடு, ஊருக்கு ஊர் விழா எடுக்கக் கால்கோள் போட்ட கழகமும் இதுவே! இதுவே!!

14. பார்ப்பன சமஸ்கிருதக் குடும்பத் தின் குழந்தை யாகிய இந்தியை இந்த நாட்டில் ஆரியம் - முறுக்கேறி திணித்த போது திரண்டு வாருங்கள் திராவிடத் தமிழர்களே - என்று அழைப்புக் கொடுத்து இந்தி என்னும் பார்ப்பனீய இருளை விரட்டிய வீரங்கொள் படைக்குத் தலைமை வகித்து வழி நடத்தி வென்றவர் வெண்தாடி வேந்தர் பெரியார் அல்லவா!

15. தமிழ்நாடு வஞ்சிக்கும் பொழு தெல்லாம் புலிப்படை யென சீறி எழுந்து, உரிமை மீட்பது கருஞ்சட்டைப்படை என்பது இந்த உலகிற்கே தெரியும்.

தமிழர்கள் கல்வியில் விளக்கமுறுவ தும், பதவிகளை அலங்கரிப்பதும், பல்துறை தமிழர் பிற்காலத்தில் ஒளி வீசித் திகழ்ந்தனர் என்றால், அதற்கான நாற்றாங்காலாக இருந்ததும்,  இருந்து வருவதும் அதற்கான அடையாள முத்திரை கொடுத்ததும் தந்தை பெரியாரும் அவர் கண்ட தன்மானக் கழகமும் தானே!

எதை விலக்கித் திராவிடர் கழகத்தைப் பார்க்க முடியும்? - விளக்க முடியுமா எவராலும்?

அரசியல் பக்கம் போகாத, பதவிப் படிக்கட்டுகளை மிதிக்க விரும்பாத தலை வருக்கே இந்த அரசு காணிக்கை என்று பிரகடனப்படுத்தப்பட்டது எந்த நாட்டில்?

இந்த அரசு சூத்திரர்களுக்காகச் சூத்திரர்களால் ஆளப்படுவது என்று சொல்ல வைத்தது சாதாரணமா? சொன்னவர் தான் சாதாரணமானவரா?

எடை போட்டுப் பாருங்கள், தோழர்களே, கணக்குப் போட்டுப் பாருங்கள் தமிழர்களே; பட்டியல் போட்டுப் பாருங்கள் பகுத்தறிவோடு - அப்பொழுது புரியும் - திராவிடர் கழகமே உரிமைகளுக்கும், வளர்ச்சிக்கும் தாய்வீடு - மூலவேர் - அடிப்படை அஸ்திவாரம்!

16. பகுத்தறிவைச் சொல்லும் இயக்கம் மட்டுமல்ல; பண்பாட்டை - ஒழுக்கத்தை வலியுறுத்தும் இயக்கம் - அழிக ஒழிக என்று ஆர்ப்பரிக்கும் அமைப்பு மட்டுமல்ல - வாழும் ஒப்பற்ற நெறியை வகுத்துக் கொடுத்துள்ள நேரிசை இயக்கம். மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு (நான்கு சொற்கள்).

கடவுளை மற மனிதனை நினை (நான்கு சொற்கள்).

சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு (நான்கு சொற்கள்)

(திருவள்ளுவரின் குறளில் கூட ஏழு சொற்கள் உண்டு)

- என்று வாழ்வை வசந்தமாக்கிக் காட்டும் வழி நெறியைக் கொண்ட மனிதநேய மார்க்கம் - பெரியார் காட்டும் - வாழ்க்கை நெறி!

17. பிறர்க்கு உதவி செய்வதன் மூலம் மகிழ்ச்சி அடைதல் வேண்டும்; மனிதன் தானாகப் பிறக்கவில்லை, எனவே தனக்காக வாழக் கூடாதவன் என்ற புது வெளிச்சத்தை, தொண் டறத்தை உலகுக்குக் கொடுத்த பகுத்தறிவுப் பகலவன் கண்ட உலக இயக்கம்; புது நெறி காட்ட வந்த புத்தொளி!

18. மதக் காரணங்களுக்காக மனித ரத்தம் சிந்தப்பட்டது போதும், போதும்!

மதமற்ற உலகமே உலகை வாழ்விக்கும் என்ற புதுப் பொருளைத் தரும் தத்துவக் கழகம் திராவிடர் கழகமே!

இவற்றிற்கு மேல் என்ன வேண் டும்? என்னதான் தேவை? ஒப்பரிய இயக்கம் - இதில் சேர என்ன தயக்கம்?

கழகத்தில் சேருங்கள்; கறுப்புச் சட்டை அணியுங்கள். ஆனால் சேரு முன் கழகக் கொள்கைகளை அசை போடுங்கள் - அதற்குப் பின் துணி யுங்கள்! இப்படி சிந்தனைக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடியதும் கூட இந்த இயக்கம்தான் என்பதை மறவாதீர்!

பேதமற்ற இடம்தான் மேலான, திருப்தியான இடமாகும்!

                ---------------------- தந்தை பெரியார் (குடிஅரசு, 11.11.1944)


சுயமரியாதை இயக்கம் கூறுவதென்ன?

1. மக்கள் சமூக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு - தாழ்வும் இருக்கக்கூடாது.

2. மனித சமூகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் ஏழை, பணக்காரன் என்கின்ற வித்தியாசமில்லாமல், எல்லாப் பொருளும் பூமியில் எல்லோருக்கும் சரிசமமாக இருக்க வேண்டும்.

3. மனித சமூகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும்.

4. மனித சமூகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்கள் அறவே ஒழித்து உலக மனித, சமூக நேய ஒருமையே நிலவவேண்டும்.

5. உலகில் உழைப்பாளி என்றும், முதலாளி என்றும் பிரி வினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களுக் கும் சரி சமமமாகப் பாடுபட்டு, அவற்றின் பயனை எல்லோரும் சரிசமமாக அனுபவிக்க வேண்டும்.

6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்திலும் அடிமையாகாமல் அவனவன் அறிவு ஆராய்ச்சி உணர்ச்சி, காட்சி ஆகியவை களுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும்.

            ---------- தந்தை பெரியார் (குடிஅரசு, 6.12.1947)

                  --------------------- கருஞ்சட்டை - 23-10-2012 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை

11 comments:

தமிழ் ஓவியா said...

மதச் சார்பின்மை


சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் காவல் நிலையங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்படக் கூடாது என்று சொன்னதாக நேற்று பல ஏடுகளிலும் செய்தி வெளி வந்தது. விடுதலையிலும் முதல் பக்கத்தில் அவரின் படத்தோடு வெளியிட்டோம். வழிகாட்டுகிறார் ஆணையர் - என்றுகூட தலைப்புக் கொடுத்திருந்தோம்.

அது தவறு - நான் அவ்வாறு சொல்லவில்லை; நானே ஆயுத பூஜை நடக்கும் சில காவல் நிலையங் களுக்கு நேரில் சென்று கலந்து கொள்வேன் என்று இப்பொழுது குறிப்பிட்டுள்ளார். ஏனிந்த நிலை என்று தெரியவில்லை. நான் அவ்வாறு சுற்றறிக்கை வெளியிடவில்லை என்று ஒரு வரியில் மறுத்திருக்கலாம் - காவல்துறை ஆணையர்; அதனைக் கூடப் புரிந்து கொள்ள முடியும்.

காவல் நிலையங்களில் ஆயுத பூஜை கொண்டாடலாம்; நானும் கலந்து கொள்வேன் என்று ஒரு அய்.பி.எஸ். அதிகாரி கூறலாமா? சட்டப்படி இது சரியானதுதானா? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கண்டுள்ள மதச் சார்பற்ற தன்மையை மீறலாம் என்று ஒரு அதிகாரி கூறுவதாக ஆகி விடாதா? அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் எல்லாம் குளறுபடிகள்தானா?

சட்டப்படி, ஆணைப்படி நடக்க வேண்டிய அவசியம் அதிகாரிகளுக்கு இல்லை என்ற ஒரு நிலையை ஏற்படுத்தினால், அது எங்கே கொண்டு போய்விடும்?

ஆயுத பூஜை கொண்டாடலாம் என்றால், நாட்டில் பல மதங்களுக்கு உரிய எண்ணற்ற பண்டிகைகள் உள்ளவே - அவற்றை எல்லாம் அரசு அலுவலகங்களில் கொண்டாடலாமா? ஆயுத பூஜை மட்டும்தான் கொண்டாட வேண்டும் என்று தனி ஆணை ஏதாவது இருக்கிறதா? இப்படி ஒவ்வொரு மதக்காரரும் பூஜை நடத்தலாம் என்று ஆரம்பித்தால் அலுவலகங்களில் வேலையா நடக்கும்? - பூஜை மடங்களாகத்தான் மாறும் - இந்த நிலை நல்லது தானா?

அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக வந்த நிலையில் வெளியிட்ட சுற்றறிக்கையில் அரசு அலுவலகங்கள் மதச் சார்பற்ற தன்மையோடு செயல்பட வேண்டும். எந்த மத சம்பந்தமான கடவுள் கடவுளச்சிகள் படங்களும் அரசு அலுவலகங்களில் இடம் பெறக் கூடாது என்று திட்டவட்டமாக அறிவித்தாரே!

அதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது கூட முதல் அமைச்சர் அண்ணா அவர்கள், எந்த அரசு அலுவலரும் இது கூடாது என்று சொல்லவில்லையே - பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு என்ன அப்படி ஓர் அக்கறை என்று எதிர் கேள்விப் போட்டு மடக்கியதை இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.

தமிழ் ஓவியா said...

ஆனாலும் அண்ணா பெயரில் கட்சியை வைத்துக் கொண்டுள்ள ஒரு முதல் அமைச்சர் நவராத்திரிக்கு ஆயுத பூஜைக்கு, சரஸ்வதி பூஜைக்கு வாழ்த்துச் சொல்லும் அளவுக்குச் சென்றுள்ளார் என்பது பரிதாபமே!

அரசியலில் கொள்கையைக் குழி தோண்டிப் புதைத்து அந்த அஸ்திவாரத்தின்மீது நின்று கொண்டு ஆலாபணம் செய்யலாம் என்பது அவலச் சுவையே!

இதுபற்றி அண்ணாவின் கருத்து என்ன? இதோ படியுங்கள்:

மேனாட்டான் கண்டுபிடித்துத் தந்த அச்சு இயந்திரத்தின் உதவி கொண்டு உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து அக மகிழ்கிறாயே!

அவன் கண்டுபிடித்த இரயிலில் ஏறிக் கொண்டு உன் பழைய, அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறோயே!

அவன் கண்டுபிடித்துக் கொடுத்த ரேடியோவிலே உன் பழைய பஜனைப் பாட்டைப் பாட வைத்து மகிழ்கிறாயே!

எல்லாம் மேனாட்டான் கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு அவைகளை உபயோகப்படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே, சரியா, யோசித்துப் பார்.

சரசுவதி பூஜை - விமரிசையாக நடைபெற்றது என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே! அது நாரதர் சர்வீஸ் அல்லவே! அசோசியேடட் அல்லது இராயட்டர் சர்வீஸ் - தந்தி முறை - அவன் தந்தது. தசரதன் வீட்டிலே இருந்ததில்லையே! இராகவன் ரேடியோ கேட்டதில்லை. சிபி, சினிமா பார்த்ததில்லை! தருமராசன், தந்திக் கம்பம் பார்த்ததில்லை! இவைகளெல்லாம் மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது அனுபவிக்கிறோம்.

அனுபவிக்கும்போது கூட, அரிய பொருள்களைத் தந்த அறிவாளர்களை மறந்து விடுகிறோம், அவர்கள்

சரஸ்வதி பூஜை; ஆயுத பூஜை

செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவிலே இராகவனைப் பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்ரவர்த்தி கதையும் கேட்டும், பார்த்தும் ரசிக்கிறோம். இது முறைதானா?

பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந்த சரசுவதி பூஜை; ஆயுத பூஜை நமக்குப் பலன் தரவில்லையே. அந்தப் பூஜைகள் செய்தறியாதவர், நாம் கூறும் நமது அவதார புருடர்கள் காலத்திலேகூட இல்லாத அற்புதங் களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே என்று யோசித்தால் முதலில் கோபம் வரும். பிறகு வெட்கமாக இருக்கும். அதையும் தாண்டினால் விவேகம் பிறக்கும்.

யோசித்துப் பார் - அடுத்த ஆண்டுக்குள்ளாவது!

- திராவிட நாடு 26.10.1947
- என்கிறார் அறிஞர் அண்ணா.

இதனைச் சுட்டிக் காட்டினால் அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ ஏடான Dr. நமது எம்.ஜி.ஆர். ஏட்டுக்கு மூக்கின்மேல் கோபம் பொத்துக் கொண்டு கிளம்புகிறது. அண்ணாவை வெறும் முத்திரையாகப் பொறித்துக் கொண்டவர்களுக்குக் கோபம்தானே வரும்.

அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? முடிந்தால் அய்யாவையும், அண்ணாவையும் மறுத்து வெளியில் வரச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

எல்லாவற்றையும் விட அறிவு நாணயம் என்பதுதான் மிகவும் முக்கியமானது.23-10-2012

தமிழ் ஓவியா said...

ஆனாலும் அண்ணா பெயரில் கட்சியை வைத்துக் கொண்டுள்ள ஒரு முதல் அமைச்சர் நவராத்திரிக்கு ஆயுத பூஜைக்கு, சரஸ்வதி பூஜைக்கு வாழ்த்துச் சொல்லும் அளவுக்குச் சென்றுள்ளார் என்பது பரிதாபமே!

அரசியலில் கொள்கையைக் குழி தோண்டிப் புதைத்து அந்த அஸ்திவாரத்தின்மீது நின்று கொண்டு ஆலாபணம் செய்யலாம் என்பது அவலச் சுவையே!

இதுபற்றி அண்ணாவின் கருத்து என்ன? இதோ படியுங்கள்:

மேனாட்டான் கண்டுபிடித்துத் தந்த அச்சு இயந்திரத்தின் உதவி கொண்டு உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து அக மகிழ்கிறாயே!

அவன் கண்டுபிடித்த இரயிலில் ஏறிக் கொண்டு உன் பழைய, அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறோயே!

அவன் கண்டுபிடித்துக் கொடுத்த ரேடியோவிலே உன் பழைய பஜனைப் பாட்டைப் பாட வைத்து மகிழ்கிறாயே!

எல்லாம் மேனாட்டான் கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு அவைகளை உபயோகப்படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே, சரியா, யோசித்துப் பார்.

சரசுவதி பூஜை - விமரிசையாக நடைபெற்றது என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே! அது நாரதர் சர்வீஸ் அல்லவே! அசோசியேடட் அல்லது இராயட்டர் சர்வீஸ் - தந்தி முறை - அவன் தந்தது. தசரதன் வீட்டிலே இருந்ததில்லையே! இராகவன் ரேடியோ கேட்டதில்லை. சிபி, சினிமா பார்த்ததில்லை! தருமராசன், தந்திக் கம்பம் பார்த்ததில்லை! இவைகளெல்லாம் மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது அனுபவிக்கிறோம்.

அனுபவிக்கும்போது கூட, அரிய பொருள்களைத் தந்த அறிவாளர்களை மறந்து விடுகிறோம், அவர்கள்

சரஸ்வதி பூஜை; ஆயுத பூஜை

செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவிலே இராகவனைப் பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்ரவர்த்தி கதையும் கேட்டும், பார்த்தும் ரசிக்கிறோம். இது முறைதானா?

பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந்த சரசுவதி பூஜை; ஆயுத பூஜை நமக்குப் பலன் தரவில்லையே. அந்தப் பூஜைகள் செய்தறியாதவர், நாம் கூறும் நமது அவதார புருடர்கள் காலத்திலேகூட இல்லாத அற்புதங் களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே என்று யோசித்தால் முதலில் கோபம் வரும். பிறகு வெட்கமாக இருக்கும். அதையும் தாண்டினால் விவேகம் பிறக்கும்.

யோசித்துப் பார் - அடுத்த ஆண்டுக்குள்ளாவது!

- திராவிட நாடு 26.10.1947
- என்கிறார் அறிஞர் அண்ணா.

இதனைச் சுட்டிக் காட்டினால் அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ ஏடான Dr. நமது எம்.ஜி.ஆர். ஏட்டுக்கு மூக்கின்மேல் கோபம் பொத்துக் கொண்டு கிளம்புகிறது. அண்ணாவை வெறும் முத்திரையாகப் பொறித்துக் கொண்டவர்களுக்குக் கோபம்தானே வரும்.

அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? முடிந்தால் அய்யாவையும், அண்ணாவையும் மறுத்து வெளியில் வரச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

எல்லாவற்றையும் விட அறிவு நாணயம் என்பதுதான் மிகவும் முக்கியமானது.23-10-2012

தமிழ் ஓவியா said...


கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டில் பெரியார் சொன்ன கட்டுப்பாடே மிக முக்கியமானது

கட்சித் தோழர்களுக்கு கலைஞர் அறிவுரை


சென்னை, அக்.23- கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் தந்தை பெரியார் சொன்ன கட்டுப்பாடு என்பதே மிக முக்கியம் - அதை தி.மு.க. தோழர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியுள்ள கடிதம் வருமாறு:- உடன்பிறப்பே,

நான் அடிக்கடி ஒன்றைச் சொல்லியிருக்கிறேன்; தந்தை பெரியார் அவர்கள் வலியுறுத்திச் சொல்வார் என்று குறிப்பிட்டே அதைச் சொல்லியிருக்கிறேன். அதுதான் கழகத்தின் தாரக மந்திரங்களான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பவற்றுள் கட்டுப்பாடு தான் முக்கியம்! அதைத்தான் விழுப்புரம் முப்பெரும் விழாவில் நமது இனமானப் பேராசிரியர் நினைவூட்டி விரிவாக உரையாற்றினார்.

திராவிட முன்னேற்றக் கழகம் பல முறை தேர்தலில் தோற்றிருக்கலாம். பல முறை வெற்றி பெற்றிருக்கலாம்.

வெற்றி, தோல்வி பற்றி நாம் எந்தக் காலத்திலும் முறையே வெறி யாட்டம் போட்டதோ, வீழ்ந்து பட்டதாக நினைத்த தோ இல்லை. ஆனால் கட்டுப்பாடு குலைந்தாலோ - சேதாரம் ஏற்பட்டாலோ பிறகு கழகத்தைக் காப் பாற்ற முடியாது! என்னுடைய வயது 89; பேரா சிரியரின் வயது 90; இருவருமே மாணவர்களாக இருந்த காலந்தொட்டு, இப்போது வரை ஓய்வின்றி உழைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் ஓய்வெடுத்துக் கொண்டு ஒரு நாள் கழக அலுவலகத் திற்கு வராமல் இருந்தால் எங்களைக் கேட்பவர்கள் யாரும் இல்லை. இருந்தாலும் காலையிலும், மாலை யிலும் கழக அலுவலகத்திற்கு வந்து கொண்டுதான் இருக்கிறோம். கழகம் தற்போது ஆளுங்கட்சி அல்ல. ஏடுகளின் போக்குகள் தமிழகத்தில் கடந்த ஆண்டு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், நாம் எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாத அளவிற்கு தோல்வியைக் கண்டு விட் டோம்.

நான் அதற்காக துவண்டா போய் விட் டேன்? கழகப் பணி ஆற்றாமல் இருந்து விட்டேனா? இந்த வயதிலும் எதற்காக அன்றாடம் எழுதுகிறேன்? காலையில் சாப்பிடுகிறேனோ, இல்லையோ, எத்தனை நாளிதழ்களைப் படிக்கின்றேன்? அத்தனை பத்திரி கைகளையும் உன்னால் வாங்கிப் படித்திட இயலாது என்பதால், அந்த இதழ்களையெல்லாம் படித்து விட்டு, அதிலே நீ தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை யெல்லாம் - நீ மக்களுக்கு விளக்கி எடுத்துரைத்திட வேண்டியவற்றையெல்லாம் தேடிப் பிடித்து, ஆளுகின்ற அரசைப் பற்றி எப்படிப்பட்ட செய்திகள், விமர்சனங்கள் எல்லாம் வருகின்றன, உச்ச நீதிமன்றத்தில், உயர் நீதி மன்றத்தில் இந்த ஆட்சியினரைப் பற்றி எப்படிப்பட்ட கருத்துக்கள், கண்டனங்கள் எல்லாம் வெளிவருகின்றன என்பதை யெல்லாம் தொகுத்து இடுப்பு ஒடிய ஒடிய சலிப்பின்றி எழுதுகிறேன். ஆனால் அந்த என்னுடைய கருத்துக் களை தமிழகத்திலே உள்ள நாளேடுகள் வேண்டா வெறுப்பாக, ஏதோ நாங்களும் வெளியிட்டோம் என்கிற அளவிற்கு, நடுநிலை நாளேடு என்று காட்டிக் கொள்வதற்காக இரண்டு பத்தி, மூன்று பத்தி என்று வெளியிடுகிறார்கள்.

முழுமையாக வெளியிட்டு, அந்தக் கருத்துக்கள் பரவினால், கழகத்தின் செல் வாக்கு கூடுதலாகி விடுமோ என்று ஆட்சியாளர் களைவிட, நமது இதழாளர்களுக்கு அக்கறையும், ஆர் வமும் அதிகமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் கழகத்திற்கு எதிர்ப்பான செய்திகள் என்றால் அதற்கு எவ்வளவோ முக்கியத்துவம் கொடுத்து, ஒரு வரி விடாமல் வெளியிட்டு, ஆட்சியாளர் களுக்கு அர வணைப்பு காட்டிட, அரசியல் ரீதியாக உதவிட முன் வருகிறார்கள். என்ன காரணம்? நம்மீது உள்ள வெறுப்பு என்பதை விட; ஆட்சியாளர்களைக் காப் பாற்றிட வேண்டு மென்பதிலே உள்ள முனைப்புதான் காரணம்.

தினமலர் ஏட்டின் நச்சு வேலை

நேற்று (21-10-2012) ஒரு நாள் தினமலர் நா ளேட்டில் மட்டும் கழகத்திற்கு எதிர்ப்பாக எத்தனை செய்திகள் என்று பாருங்கள்!
உடன்பிறப்புகள் குமுறல் : வட சென்னைக்கு பஞ்சாயத்து எப்போ?

கோவை மாநகர தி.மு.க. வின் மாநில திருமண மேளா?

நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை டி.ஆர். பாலுவுக்கு மத்திய இணை அமைச்சர் அட்வைஸ்

கொட்டை எழுத்துக்களில், அரைப்பக்கம், முழுப் பக்கம் என்ற அளவிற்குக் கழகத்தைப் பாதிக்கும் இத்தனைச் செய்திகள் - ஆனால் சேது கால்வாய்த் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து நான் ஒன்றரைப் பக்கத்திற்கு விளக்கமாக எழுதிய கட்டுரையில் நாங்களும் வெளியிடு கிறோம் என்ற அளவிற்கு இரண்டே இரண்டு பத்திகள் மட்டுமே; நடுநிலை (?) நாளேடாம்!

தமிழ் ஓவியா said...

இன்றைய (22-10-2012) தினமலர் இதழில் முதல் பக்கத்தில் பேனர் செய்தி - எட்டு பத்தி தலைப்பு செய் தியே - என்ன தெரியுமா? லடாய்! - தி.மு.க. மந்திரி - எம்.பி., நேருக்கு நேர் மோதலின் பின்னணி - கோஷ்டி பூசலின் பலப் பரிட்சையால் கருணாநிதி அப்செட்! என்பதுதான்! பழனிமாணிக்கம் பேட்டி கொடுத்ததே 21ஆம் தேதிதான். ஆனால் தினமலர் இந்த மோதலால் அதிருப்தி அடைந்துள்ள கருணாநிதி கடந்த நான்கு நாட்களாக அறிவாலயத்திற்கு வராமல், தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் என்று புளுகியுள்ளது. விளம்பரம் பறி போகுமே! நம்மீது சேற்றை வாரி இறைக்க என்ன காரணம்? அடுப்பில் எரியும் விறகை வெளியே இழுத்தால் கொதிப்பு அடங்கும் என்பார்களே! அதைப் போல தினமலர் இப்படி எழுதாவிட்டால், இந்த மாதத்திற் கான அரசு விளம்பரம் குறைந்து விடும்! கடந்த மாதமே அந்த இதழுக்கான விளம்பரத் தொகையைக் குறைத்து விட்டார்களாம்! என்ன காரணம்? அண் ணா நகர், அண்ணா வளைவினை அகற்றுவதில் ஆட்சியாளர்களின் குளறுபடிகள் பற்றிப் பெரிய அளவில் அந்த இதழ் செய்தி வெளியிட்டது என்பதற் காகவே விளம்பரங் களை கட் பண்ணக் கூறி விட் டார்களாம்! எனவேதான் லடாய் என்று பேனர் வெளியிடுகிறது தினமலர். விளம்பரக் கொழுக் கட்டை என்னென்ன விநோதத்தைச் செய்கிறது பார்த்தாயா?

இந்து - ஆங்கில நாளேடு! அந்த இதழின் மீது அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் கடுமையாக நடவடிக்கை எடுத்தபோதெல்லாம், அந்த இந்து இதழுக்கு ஆதரவாக - பாரம்பரியம் மிக்க அந்த இதழைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக; பக்கம் பக்கமாக எழுதியவன் நான். அகில இந்தியப் புகழ் பெற்ற அந்த நாளேடு நேற்றையதினம் கொட்டை எழுத்துக்களில் வெளியிட்டுள்ள செய்தி என்ன தெரியுமா? ஞயடயஅயஉமயஅள ளயீயவ றவை க்ஷயயடர உடிஅநள டிரவ டியீந என்ற தலைப்பில் டி.ஆர். பாலுவைப் பற்றி, மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம் புகார் கூறி கொடுத்த பேட்டியினை அரைப்பக்க அளவிற்கு வெளியிட் டுள்ளது. இந்து பத்திரிகைக்குத் திடீரென்று பழனிமாணிக்கம் மீது அன்பு பெருக்கெடுத் தோடி, அவருடைய பேட்டியை அந்த அளவிற்கு பெரிதாக வெளியிட்டு விட்டார் களா? தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக சேது சமுத்திரத் திட்டம் வேண்டு மென்று கழகத்தின் தலைவனாகிய நான் அவ்வளவு பெரிய அறிக்கையை எழுதி யிருக்கிறேனே, அதிலே ஒரு சிறு பகுதியையாவது இந்து வெளியிட்டிருக் கிறதா? கிடையாது.

டைம்ஸ் ஆப் இந்தியா - ஆங்கில நாளேடு - எவ்வளவு பெரிய இதழ்? அந்த இதழின் சென்னைப் பதிப்பை நான்தான் தொடங்கி வைத்தேன்.

அதில், கூறடி னுஆமு டுநயனநசள டடிஉமநன வரசக யெவவடந - க்ஷயயடர, ஞயடயஅய உமயஅ ளுயீயச டீஎநச சுயடை ஞசடிதநஉவள என்று தலைப்பிட்டு, இவர்களின் மோதலைப் பற்றி அரைப் பக்கத்திற்கு செய்தி வெளியிடுகிறது என்றால், நம் இயக்கத்தின் மீதுள்ள பற்றா காரணம்? இல்லை, இல்லவே இல்லை. கழகத்திற்கு எதிரான அந்தச் செய்தியை அந்த அளவிற்கு ஆவலோடு வெளியிடுகிறார்கள். எந்தப்

பதவியும் எதிர்ப்பார்க்காத கடைக்கோடி தொண்டனைப் பார்

இந்தச் செய்திகளைப் படிக்கின்ற கடைக்கோடித் தொண்டன் இருக்கிறானே, எந்தப் பதவியையும் எதிர்பார்க்காமல், என் வீட்டு வாசலில் காலையி லிருந்து ஒரு மாலையை கையிலே ஏந்திக் கொண்டு, அய்யா எனக்கு 27 வயது, உங்கள் வாழ்த்துக்காகக் காத்திருக்கிறேன் என்று ஒவ்வொரு நாளும் கூறிக் கொண்டு காத்திருக்கிறார்களே அவர்கள் எல்லாம் திசை திருப்பும் இந்தச் செய்திகளைப் படித்து விட்டு கண்களிலே கண்ணீரைச் சிந்தவில்லை; ரத்தத்தை அல்லவா சிந்துகிறார்கள்?

நேற்று காலையிலே ஒரு உடன்பிறப்பு - சேப் பாக்கம் ராஜு - அவருடைய வளர்ப்பு மகனுக்கு என் வீட்டிலே திருமணத்தை நான் நேற்று நடத்தி வைத்தேன். சேப்பாக்கத்தில் நான் தேர்தலில் போட்டியிட்ட போது இரவும் பகலும் உழைத்தவர் ராஜு. திருமணம் முடிந்து மணமக்கள் எல்லாம் போய் விட்டார்கள். ஆனால் ராஜு மட்டும் மேலே தாழ்வாரத்தில் அமர்ந்திருந்த என்னிடம் வந்து என் கால்களில் விழுந்தார். என்ன? என்றேன்.

அய்யா, என் வாழ்நாளில் எனக்கு எந்தப் பதவியும் தேவை யில்லை, தங்கள் கையால் தாலி யெடுத்துக் கொடுத்து, என் மகனை வாழ்த்தினீர்களே, அதுவே எனக்குப் போதும். இந்தப் பிறவியின் பயனை அடைந்து விட்டேன் என்றார். இப்படிப்பட்ட தன்னலமற்ற, தலை வணங்கத்தக்க உடன்பிறப்புகள் எல்லாம் - கழகத்திலே பதவிச் சுகம் கண்டு, முன்னணித் தலைவர்களாக இருப்பவர்கள் - ஒருவரோ டொருவர் திறந்தவெளி மைதானத்தில் மோதிக் கொள்வதைக் கண்டு, ரத்தக் கண்ணீர் வடிக்காமல் என்ன செய்வார்கள்?

தமிழ் ஓவியா said...

ஏனிந்த குழு மனப்பான்மை

என்னைச் சந்திக்க வருகிற நமது இயக்க முன் னோடிகள் மாத்திரமல்ல, தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் கழகத்திற்கு எந்த அளவிற்கு செல்வாக்கு கூடியிருக்கிறது என்பதைப் பற்றியும், ஆளுங்கட்சி மீது ஒன்றரை ஆண்டுக் காலத்திலேயே எந்த அளவிற்கு வெறுப்பும் விரக்தியும் ஏற்பட் டிருக்கிறது என்பதைப் பற்றியும், மின்வெட்டின் காரணமாக மக்கள் எந்த அளவிற்கு கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றியும் விளக்கி, என்னிடம் எடுத்துக் கூறும்போது; என் மனதிலே ஆளுங்கட்சிக்கு மக்களின் எதிர்ப்பு பெருகுகிறது என்ற செய்தியைவிட, இரண்டு கழக முன்னோடிகள் ஒருவரோடொருவர் குழு சேர்த்துக் கொண்டு இந்த மாவட்டத்திலே மோதிக் கொள்கிறார்கள்.

ஒரு குழுவினர் துண்டுப் பிரசுரங்களை பொது மக்களிடம் கொடுத்து விட்டுச் சென்ற சிறிது நேரத்திற்குப் பிறகு, நமது கழகத்தைச் சேர்ந்த இன்னொரு குழுவினர் தனியாக வந்து அதே துண்டுப் பிரசுரங்களைக் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் கேள்விப் படுகிறேனே, அந்தச் செய்திதான் என்னைப் பெரிதும் வருந்தச் செய்கிறது. அந்த வருத்தம், என்னை உண்ண விடாமலும் இரவு முழுவதும் தூங்க விடாமலும் செய்து விடு கிறது. 1967ஆம் ஆண்டு முதன் முதலாகக் கழகம் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, நாமெல்லாம் பெருமகிழ்ச்சியிலே ஆழ்ந்திருந்த போது, அண்ணா மட்டும் அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இல்லை. அமைப்புச் செயலாளர் என்.வி. நடராசன் அப்போது அண்ணாவிடம், என்ன அண்ணா? உங்கள் முகத் திலே மகிழ்ச்சி இல்லையே என்று கேட்ட போது, ஆட்சி வந்து விட்டது, ஆனால் கட்சி போச்சே என்று அண்ணா சொன்னார். அவர் என்ன அர்த்தத்தில் அப்படிச் சொன்னார் என்பதை நான் இப்போது அனுபவ ரீதியாக உணருகிறேன்.

இரவு 11 மணி வரை கழக முன்னணியினரோடு அமர்ந்து பேசிக் கொண் டிருந்து விட்டு, படுக்கச் சென்றால், உள்கட்சியை அரித்து வரும் இத்தகைய குழுக்களைப் பற்றிய வேதனைதான் என்னை சூழ்ந்து கொள்கிறது. தூங்க விடாமல் செய்கிறது. நேற்று மாலையில் மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம் அளித்த பேட்டி பற்றி அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங் கோவனும், தம்பி முரசொலி செல்வமும் என்னிடம் வந்து கூறியவுடன், இன்றிரவு என் தூக்கம் போச்சு என்றுதான் கூறினேன். இளவல் வீரமணியின் பதைபதைப்பு அதுபோலவே இரவு முழுவதும் நான் உறங்க வில்லை. இன்று காலையில் தாய்க் கழகமான, திராவிடர் கழகத்தின் தலைவர், தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்கள் என்னிடம் நேரடியாகப் பேசுவதற்குத் தயங்கிய நிலையில், என் செயலாளரிடம் தொலைபேசியில் தன்னுடைய மன வேதனையை யெல்லாம் கொட்டித் தீர்த்திருக்கிறார். நம் கழகத்தில் இப்படியெல்லாம் கிடையாதே, இதென்ன புதுப் பழக்கம் என்று பதறியிருக்கிறார். அண்ணா சொன் னாரே; குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்று! அதெல்லாம் மறந்து போய் விட்டதா? அதுவும் தஞ்சை மாவட்டத் திலா? கடந்த சில நாட்களுக்கு முன்பு, தஞ்சை மாவட்டத்தில் கீழ் மட்டத்திலே இரண்டு பிரிவினருக்கு இடையே உள்ள பிரச்சினை யைச் சமாதானப்படுத்துவதற்காக, கழக அலு வலகத்திற்கே அழைத்து நானும், பேராசிரியரும் இரண்டு மணி நேரம் செலவிட்டோம். தம்பி துரைமுருகன் அந்தக் கூட்டத்தில் பேசும்போது தஞ்சை, திருவாரூர், நாகை மாவட் டங்கள் இணைந்த மாவட்டம், நம் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அவருடைய சொந்த மாவட்டம். அங்கே அவர் கூறுவதுதான் வேதவாக்கு என்றெல்லாம் தெரிவித்து, அங்கே குழு உருவா கலாமா என்று கண்ணீர் மல்கக் கேட்டாரே! அந்த மாவட்டத்திலா இந்தத் தலைக்குனிவு? மன்னையும், தஞ்சை நடராசனும், தாழையும், குடந்தை நீலமேகமும், மாயூரம் கிட்டப்பாவும், விளநகர் கணே சனும், முத்துப்பேட்டை தர்மலிங்கமும், பேராவூரணி கிருஷ்ண மூர்த்தியும், நாடியம் ராமையாவும், குடவாசல் கிருஷ்ண மூர்த்தியும், டி.கே. கோவிந்தனும் உயிரோடு இருந்திருந்தால் இந்த நிலை ஏற் பட்டிருக்குமா? ஏன், என் இனிய உடன்பிறப்பு கோ.சி. மணி பழைய உடல் நிலையோடு உத்வேகமாக இருந்திருந்தால், இப்படியொரு செய்தி ஏடுகளில் வந்திருக்குமா? என்னுடைய குணம் முக தாட் சண்யம்! யாரிடமிருந்து கட்சியை காப்பாற்றுவது?

தமிழ் ஓவியா said...

சில கட்சிகளின் தலைமையைப் போல எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், கட்சிக்காக உழைத்தவர்களாக இருந்தாலும், மூத்தவர் களாக இருந்தாலும் கணநேரத்தில் கட்டம் கட்டி விடு கிறார்கள்? என்னால் அப்படி - இத்தனை ஆண்டு களுக்குப் பிறகும் - இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு, கடினமாக இருக்க முடிவதில்லை. அதையே காரணமாகக் கொண்டு, தாங்கள் எது வேண்டு மானாலும் செய்யலாம் என்று கருதினால் பிறகு நான் என்ன தான் செய்ய முடியும்? இரண்டு நாட்களுக்கு முன்பு பழனிமாணிக் கம் என்னைச் சந்தித்தார். அவருடைய தொகுதியிலே நடை பெறுவதைப் பற்றி யெல்லாம் என்னிடம் கூறினார். பொறுத்திருங்கள், தலைமைக் கழகத்திற்குப் புகாராக எழுதிக் கொடுங்கள், என்று சொன்னேன். அதற்குள் என்ன அவசரம்? எதற்காக இந்தப் பேட்டி? நான் அனை வருடனும் எளிதில் கலந்து, அன்போடு பழகுகிறேன் என்பதற்காகவே - அதையே பலவீனமாக எடுத்துக் கொண்டு, எது வேண்டுமென்றாலும் செய்வதா? மறப்போம்; மன்னிப்போம் என்று அண் ணா சொன்னபடி, நான் எல்லாவற்றையும் மன்னித்து விடு கிறேன், மறந்து விடுகிறேன் என்பதற்காக எதையும் செய்யத் துணிவதா? எதிர்க் கட்சிகளிட மிருந்து கட்சியைக் காப்பாற்றுவதா? நமக்குள்ளேயே உலவு கின்ற இத்தகைய குழு பேதத்தைப் போக்குவதா? இலை நிறைய பண்டங்களையும், பதார்த்தங்களையும் பரிமாறி விட்டு, அதன் மூலையிலே சாணத்தையும் சிறிது வைப்பதற்குப் பெயர் விருந்தோம்பலா? எதற்காக நான் இருக்கிறேன்? எதற்காகக் கழகத் தலைமை இருக்கிறது? மாவட்டத்திற்கு மாவட்டம் இது போன்றதொரு நிலைமை உருவானால் அதற்கு எங்கே எல்லை? தம்பி பழனிமாணிக்கம் தஞ்சை யிலே பேட்டி கொடுத்து விட்டு, அவரது மனச் சாட்சியே உறுத்திய காரணத்தால் நேற்றிரவே அவசர அவசரமாகச் சென்னை வந்து என்னைச் சந்தித்து என்ன காரணத்தால் அந்தப் பேட்டியைக் கொடுக்க நேரிட்டது என்பதை என்னிடமும், துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகனிடமும், அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவனிடமும் விளக்கினார்.
நீர் இடித்து நீர் விலகாது

இந்தத் தம்பிகள் இருவருமே ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் - இன்னும் சொல்லப் போனால் நாடாளுமன்றத்தில் நீண்ட கால அனுபவம் உள்ளவர்கள் - இருவருமே தம்பி முரசொலி மாறனின் தயாரிப்புகள்! கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம் - அதாவது தமிழகத்திற்கு வர வேண்டிய ஒரு திட்டம் மேற்கு வங்கத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்பதைப் பற்றி தம்பி டி.ஆர். பாலு காரசாரமாக ஆளுங் கட்சியைத் தாக்கிப் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மூன்றாவது வரிசையிலே இருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், முதல் வரிசையிலே இருந்த தம்பி டி.ஆர். பாலுவைத் தாக்குவதற் காக வேகமாக வருகிறார்கள். ஆனால் அவர்கள் பாலுவை நெருங்குவதற்கு முன்பாக, அய்ந்தாவது வரிசையிலே அமர்ந்திருந்த பழனிமாணிக்கம் முதல் வரிசைக்கு ஓடி வந்து, டி.ஆர். பாலுவிற்கு அரணாக அவர் முன்பு நின்று கொண்டு மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தடுத்தார்! அந்த உணர்வு இன்று எங்கே போய் விட்டது? ஊரிடத்துப் பகை என்றால் உறவிடத்துப் போயுரைப்பேன்; உறவிடத்தே பகை என்றால், யாரிடத்துப் போயுரைப்பேன்? என்ற நிலையில் நான் நிம்மதி இழந்திருக்கிறேன்! பாலுவிற்காக பழனி மாணிக்கம் அல்ல - பழனிமாணிக்கத்தைத் தாக்குவதற்கு அங்கே யார் முற்பட்டிருந்தாலும், பழனிமாணிக் கத்தை விட வேகமாக ஓடி வந்து பாதுகாக்கக் கூடியவர் தான் டி.ஆர். பாலு! என்ன செய்வது? அதைத் தான் அண்ணா குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்றார். நீர் இடித்து நீர் விலகாது என்பது முதுமொழி அல்லவா? மறந்து விடாமல் அதை நினைப்போம்; மறந்திருந்தாலும் மீண்டும் அதை நினைப்போம்! கட்டுப்பாடு போற்றி, கழகத்தை உயிரெனக் காப்போம்!
அன்புள்ள,

மு.க. (நீர் இடித்து நீர் விலகுவதா) எனும் தலைப்பில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியது - முரசொலி 23.10.2012)

தமிழ் ஓவியா said...


எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பார்ப்பனர் ஆதிக்கம்


இடஒதுக்கீடு புறக்கணிப்பு, ஒடுக்கப்பட்டவர் மீது ஓரவஞ்சனை
54 எம்.பி.க்கள் புகார் மீது பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுத்திடுக!
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

தலைநகர் டில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான - மிகப் பெரிய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் - மருத்துவக் கல்லூரி இணைந்த அமைப்பு எய்ம்ஸ் என்ற அமைப்பில், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவர்களான தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டவர்களைச் சார்ந்த மருத்துவப் பணியாளர்கள் நியமனத்தில், இடஒதுக்கீடு கொள்கை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றும்,

குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இடஒதுக்கீடு நிரப்பப்படாமல் வேண்டுமென்றே நீண்ட நாள்களாக அவை காலியாக வைக்கப்பட்டுள்ளன என்ற புகாரும்,

ஏற்கெனவே பதவிகளில் உள்ள எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. என்ற அனைத்து சமுதாயத்தைச் சார்ந்தவர்களிடம் மிகுந்த வேறுபாடு காட்டி, அங்கு பொறுப்பில் உள்ள உயர்ஜாதி அதிகாரிகள், மருத்துவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்றும் குற்றஞ் சுமத்தி, 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) கையெழுத்திட்டு, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

சமூகநீதிக்கு எதிராக இன்னமும் - சட்ட ரீதியான கட்டாயங்கள் விதிகளாக இருந்தபோதிலும், அவைகளைச் சட்டை செய்யாத செய்ய மனமில்லாத ஆதிக்க உயர்ஜாதி வர்க்க அதிகாரிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க, வரும் நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரில் இந்த எம்.பி.க்கள் ஒரே குரலில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. என்று தனித்தனியாகக்கூட இல்லாது ஒன்றுபட்டு, குரல் கொடுத்து சமூக நீதியை வென்றெடுக்க ஆயத்தமாக வேண்டும் என்பதே நமது அன்பான வேண்டுகோள் ஆகும்!

இடஒதுக்கீட்டை சட்டப்படி செயல்படுத்தாதவர்களுக்கு சிறைத் தண்டனை உள்பட தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்ற திரு. சுதர்சனம் நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரையை அரசு செயல்படுத்தாதவரை சமூகநீதிக்கு எதிரான சக்திகள் தன் நச்சு வேலையை நடத்திக் கொண்டு தானே இருக்கும்.

தேவை உடனடி கவனம்!

சமூகநீதியை உதட்டளவில் உச்சரிக்காது, உண்மையிலே உள்ளத்தில் நிறுத்தும் அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் தத்தம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து, இதில் சிறப்புக் கவனஞ் செலுத்திட ஆணையிட வேண்டியது அவசர - அவசியம் ஆகும்!

ஏற்கெனவே திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள் மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தபோது அங்கு பச்சைப் பூணூல் மனப்பான்மையோடு சமூகநீதிக்கு எதிராக நடந்து கொண்ட வேணுகோபால் என்ற ஒரு பார்ப்பன இயக்குநரான டாக்டரை மாற்றி, ஒரு தாழ்த்தப்பட்டவரை நியமித்ததை எதிர்த்து பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் மற்ற உயர் ஜாதி ஊதுகுழல்களும் நீதித்துறையில் ஒரு சிலர்கூட எப்படியெல்லாம் நடந்து கொண்டனர் என்பது மறக்க முடியாத ஒன்றாகும்!

சுதந்தரம் வந்து 65 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த அக்கிரமம், அப்பட்டமான சமூக அநீதி தலைநகரின் மிகப் பெரிய மருத்துவமனையிலேயே (மக்கள் வரிப்பணம் பல நூறு கோடி ரூபாய்கள் செலவழிக்கப்படும் நிறுவனம்) இப்படி பார்ப்பன மற்ற உயர்ஜாதியினர் பண்ணையமாக நடைபெறுகிறது என்றால் மற்ற பொதுத் துறை நிறுவனங்களில் பச்சையாக நடைபெறும் இடஒதுக்கீட்டு முறைக்கு மாறான செயல்பாடுகள் பற்றி விளக்கவும் வேண்டுமா?

பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் இந்த 54 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குமுறல் கடிதத்தின்மீது உடனடியாக அவசர நடவடிக்கைகளையும், பரிகாரத்தையும் எடுக்க முன்வர வேண்டியது மிக மிக அவசியமாகும்.

இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல, பிச்சை அல்ல; தர்மம் போடுவதும் அல்ல.

கோடானு கோடி ஒடுக்கப்பட்ட வாக்காளர்களான குடி மக்களின் விலைமதிப்பற்ற, பறிக்கப்பட முடியாத அடிப்படை உரிமையாகும். வரும் நாடாளுமன்ற தொடரில் இந்த அநீதியை மாற்றிட ஓங்கிக் குரல் கொடுக்க நாடாளுமன்ற உறுப்பினர்களே, ஒன்று திரளுவீர்!


கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


ஆயுத பூஜை சாலையில் பூசணிக்காய் உடைத்தால் அபராதம்!


சென்னை, அக். 23- ஆயுத பூஜை விழாவின் முக்கிய அம்சமாக கடை கள், வர்த்தக நிறுவனங் கள், தொழிற்சாலை களில் திருஷ்டி பூச ணிக்காய் உடைப்பது வழக்கம்.

இதனால் ரோடுகளில் ஏராளமான பூசணிக்காய் சிதறிக் கிடக்கும். இது பொது மக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற் படுத்தி வருகிறது. இது தொடர்பாக மாநக ராட்சி ஆணையர் கார்த் திகேயன் கூறியதாவது:-

பெரிய மற்றும் சிறிய கடைகளில் பூசணிக்காய் மற்றும் தேங்காயை உடைத்து சாலைகளில் அப்படியே போட்டு விடுகிறார்கள். இதனால் வாகன ஓட்டிகள் விபத் துகுள்ளாகிறார்கள்.

பொதுமக்களும் நடப் பதற்கு சிரமப்படுகிறார் கள். ஆயுத பூஜை விழா வின் போது வர்த்தக நிறு வனங்கள் மற்றும் கடைக்காரர்கள் உடைக் கும் பூசணிக்காயை அவர் களே அப்புறப்படுத்தி குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும். மீறி சாலைகளில் போட்டு வைத்தால் மாநகராட் சியின் மூலம் அபராதம் விதிக்கப்படும்.

பொதுமக்கள் நலன் கருதி பொது மக்களும், கடைக்காரர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். - இவ்வாறு ஆணையர் கார்த்திகேயன் கூறினார்

தமிழ் ஓவியா said...


கோயில் கோபுரத்தில் ஒலிபெருக்கி: கழக வழக்குரைஞர் தலையீட்டால் நிறுத்தம்

கரூர், அக்.23- கோயில் கோபுரத்தில் ஒலி பெருக்கிக் கட்டி சுப்ரபாதம் ஒலிபரப்பப்பட்டதை எதிர்த்து கழக வழக் குரைஞர் மேற்கொண்ட முயற்சிக்குப் பலன் கிடைத்தது.

கரூரில் உள்ள தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான் தோன்றி மலையில் உள்ள வெங் கட்ரமணர் கோயிலில் சனிக் கிழமையன்று கூட்டம் அதிகம் காணப்படும். தான்தோன்றிமலை கரூர் நகராட்சியோடு சேர்க்கப் பட்டதால் பெரு நகராட்சியாக உள்ளது.

இங்கு கோயிலை சுற்றி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, அரசு கலைக் கல்லூரி என மாணவர்கள் படிக்கக் கூடிய கல்விக் கூடங்கள் என அதிகம் உள்ளன.

தான்தோன்றி மலையில் உச்சியில் கோபுரம் உள்ளது. அந்த கோபுரத்தில் அதிகாலை 4 மணிக்கே கூம்பு வடிவ ஒலிபெருக்கி மூலம் சுப்ரபாதம் மற்றும் பஜனைப் பாடல்கள் ஒலிபரப்பப்படும்.

இதனால் அப்பகுதியைச் சுற்றி வசிக்கும் பொது மக்கள் மற்றும் வயதானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள். அருகில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள நோயாளிகள் என அதிகம் பேர் பாதிப்பு அடைகின்றார். தேர்வுக் காலங்கள் மற்றும் காலை நேரங்களில் படிக்கும் மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

பொது மக்கள் பலமுறை கோயில் நிர் வாகத்திடம் ஒலி அளவை குறைக்கச் சொல்லியும் அவர்கள் அதைப் பொருட் படுத்தவில்லை.

கழக வழக் குரைஞரும், பகுத் தறிவு சிந்தனை யாளருமான இரா. குடியரசு அவர்கள் பொது மக்கள் புகாரையும் கோயில் அருகே வசிக்கும் அவர்தம் மகள் படிப்பு பாதிக்கும் வகையில் செயல்பட்ட கோயில் அறங் காவலர்க்கு கோயில் கோபுரத்தில் விதிமுறை களுக்கு மாறாக நான்கு பக்கங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்தக் கூடாது என்றும் மீறினால் அரசு விதி களுக்கு உட்பட்டு வழக்கு தொடரப்படும் என்று எச்சரித்து வழக் குரைஞர் கடிதம் அனுப் பினார்.

அதன் பிறகு இப்போது சுப்ரபாதமோ, பாடல்களோ ஒலி பரப்பு செய்வதில்லை, இதனால் கோபமடைந்த இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய் தன. காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வழக்குரைஞர் குடியர சுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டன.

தமிழ் ஓவியா said...


அரியக்குடி


இசை உலகின் பேரரசர் அரியக்குடி ராமானுஜம் அய்யங் கார்! பால முரளி கிருஷ்ணா புகழாரம் என்ற தலைப்பில் ஆர்.எஸ்.எஸ். அபி மானியாகிய திருவாளர் வைத்திய நாதய் யரை ஆசிரியராகக் கொண்ட தினமணி ஏட்டில் (17.10.2012 பக்கம் 2) 5 பத்தி தலைப்புச் செய்தி வெளியிடப்பட் டுள்ளது.

யார் இந்த அரியக்குடி ராமானுஜம் அய்யங்கார்? இவரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் 66 ஆண்டு களுக்கு முன் நாம் பயணிக்க வேண்டும்.

அப்பொழுது வெளிவந்த தந்தை பெரியார் அவர்களின் குடிஅரசு இதழை (19.2.1946 பக்கம் 7) புரட்டினால் துணைத் தலையங்கம் ஒன்று தென்படும் அதன் தலைப்பு என்ன தெரியுமா?

தீட்டாயிடுத்து!

என்ன சொல்லுகிறது அந்தத் துணைத் தலையங்கம்?

இதோ:

இந்த ஆண்டு திருவை யாற்றில் நடைபெற்ற தியாகராஜ அய்யர் உற்சவத்தில், இசையரசு தண்டபாணி தேசிகர் ஆரம்பத் தில் சித்தி விநாயகனே என்ற பாட்டைப்பாடினாராம். அடுத்த படி கச்சேரி செய்ய வந்த அரியக் குடி ராமானுஜ அய்யங்கார் தேசிகர் தமிழ் பாடி சன்னி தானத்தைத் தீட்டுப்படுத்தி விட்டார். நான் இந்த மேடையில் பாட மாட்டேன் என்று கூச்ச லிட்டுத் தாம்தோம் எனத் தாண்டிக் குதித்தாராம்.

இது இன்று நேற்றல்ல, மனு மந்தாதா காலத்திலிருந்து தமிழ் பாஷை நீச்ச பாஷை என்றும், பிராமணாள் ஸ்நானம் செய்து விட்டு சாப்பிடும்வரை தமிழ் பேசக்கூடாது என்றும், வீட்டில் விசேஷ காலங்களில் தமிழ் வாயில் நுழையக் கூடா தென்றும் கூறி வந்ததோடு அனுஷ்டானத்திலும் இருந்து வருகிறது.

அகத்திலும், அக்கிர காரத்திலும் இருந்துவந்த இந்த அகம்பாவம் அய்யர்வாள் உற்சவத்திலும் புகுந்து விட்டது. தமிழ்நாட்டிலே - தமிழர்கள் உயிரோடு வாழும் நாட்டிலே - தமிழர்களுடைய மொழிக்குத் தடையுத்தரவு ஆங்கில அரசாங் கமல்ல - ஆரிய அரசாங்கத்தின் ஆணை! தமிழ் மொழியில் பாடியதால் மேடை தீட்டாகி விட்டது என்ற ஆணவப் பேச்சு கிளம்பியதற்குக் காரணம் தமிழர்கள் அடிமைகளாக - அனுமார்களாக வாழ்வதுதான்.

தமிழர் இனம் சூத்திர இன மாகவும், தமிழர் மொழி தீட்டுப் பட்ட மொழியாகவும் போய் விட்டது. தியாகராஜர் திரு நாளுக்கு நன்கொடை வழங்கும் முட்டாள் தமிழர்களும், தொண் டர்க்குத் தொண்டராம் சிஷ்ய கோடிகளின் வரிசையிலுள்ள அழகப்ப செட்டியார் போன்ற விபீஷணர்களும் உள்ளவரை அரியக்குடிவர்க்கம் அகம் பாவத்தோடு தான் வாழும்.

அரியக்குடிகள் அங்கலாய்ப்புக்கு அவர் இனபந்து காந்தி மகாத்மா(?)வின் விஜயமும் ஒரு காரணமாகும்.

பெரியார் அவர்களின் சொற்பொழிவுகள் தேசிய தினசரிகளில் பெரும்பாலும் திரித்தும், மறைத்தும் கண்டபடி பிரசுரிக்கப்படுகின்றன. எங்கும் பார்ப்பனர்களே நிருபர்களா யிருப்பதே இதற்குக் காரணம். ஆகையால் அவைகளை நம்ப வேண்டாம் என்று எச்சரிக் கிறோம். ஒவ்வொன்றுக்கும் சமாதானம் எழுதிக் கொண்டி ருக்க முடியாததால் இதை எழுத நேர்ந்தது.

இதை எழுதியவர் யார் தெரி யுமா? முனா கானா! ஆம் நமது கலைஞர் மு. கருணாநிதிதான்.

அக்ரகாரம் கொண்டாடும் - இந்த அரியக்குடியைத் தெரிந்து கொள்வீர்!


- மயிலாடன் 23-10-2012