Search This Blog

2.10.12

காந்தியார் படுகொலைக்கான பின்னணி இந்துமத வெறி !

காந்தியார்



காந்தியார் - மகாத்மா காந்தியாரின் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள்!

ஆயிரம் கருத்து வேறு பாடுகள் எழுந்து நின்று திமிர் முறித்தாலும், காந்தியார் உலகத் தலைவர்களின்   பட்டியலில் உள்ளதை எவராலும் மறுக்க முடியாது.

காந்தியார் பிறந்த நாள் என்று நாடே கொண்டாடி னாலும், ஏனோ அவர்தம் மறைந்த நாளை நோக்கியும், அவர் மரணத்திற்கு ஆளாக்கப்பட்ட கொலை பற்றியும் தான் பாழும் மனம் தாவிச் செல்லுகிறது - பதைபதைக்கிறது! காந்தியார் படுகொலைக்கான பின்னணி இந்துமத வெறி என்பது வெளிப்படை! என்றைக்குக் கீதையிலிருந்து சுலோகங்களை எடுத்து நாதுராம் கோட்சே நீதிமன்றத்தில் நெற்றுத் தேங்காயை உடைத் தது போல் சொன்னானோ அன்றைக்கே அம்பலமாகி விட்டது இந்துத்துவாவின் பிண நாற்றம் - பார்ப்பனீ யத்தின் படுமோசம்!


ஆனாலும் அவர் மரணத்துக்குப் பின்னணியிலிருந்த முழு சதியும் இன்னும் நிலுவையில் தான் உள்ளது. நமக்கு மட்டுமல்ல - காந்தியாரின் மூன்றாவது மகன் மணிலால் அவரின் மகன் அருண்காந்தியின் மகன் துஷார்காந்தி.

அவர் எழுதிய ஒரு நூல் காந்தியைக் கொல்வோம்! என்பதாகும். (டுநவள முடைட ழுயனோ).

அந்த நூல் சென்னையில் 2007 மார்ச்சில் வெளியிடப் பட்டது. அப்பொழுது செய்தி யாளர் கேட்ட கேள்விக்குக் காந்தியாரின் பெயரன் சொன்னபதில் அதிர்ச்சிக்கு உரியதே! ஆறாவது முயற்சியில் தான் பாபுஜி சுட்டுக் கொல்லப்பட்டார். முந்தைய அய்ந்து முயற்சிகளிலும் கொலையாளிகள் சில துப்புகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவற்றைப் பின்பற்றி போயிருந்தாலே, பாபுஜி சுடப்படுவதற்குக் காரணமான முக்கிய குற்ற வாளிகளை மிகச் சுலபமாக கைது செய்திருக்கலாம்.


நாதுராம் கோட்சே மட்டும் மூன்று முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததற்கான ஆதா ரங்கள் கிடைத்துள்ளன.

பாபுஜி சுட்டுக் கொல்லப் படுவதற்கு 15 நாட்களுக்கு முன் பிர்லா மாளிகையில் கோட்சே கோஷ்டியினர் வெடிகுண்டு வீசினர்; அது தோல்வியானது. அப்போது டில்லி காவலரிடம் பிடிபட்ட மதன்லால் பாக்வா கொடுத்த தகவலின் பேரில் கோட்சே குழுவினர் தங்கியிருந்த மெனோ ஓட்டல் அறையைச் சோதனையிட்டு சூஏழு என்ற இனிஷியல் பொறித்த உடைகளைக் கண்டெடுத் தனர். அதன் மூலம் தடயம் கிடைத்து, உடனடியாக அந்த விசாரணைக் குழுவினர் பாம்பே சென்று, பாம்பே காவல்துறையிடம் கோட்சேயைக் கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டிருக்கிறார்கள். சரி என்று உத்தரவாதம் கொடுத்த பாம்பே காவல்துறை ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. அடுத்த 15ஆவது நாளில் பிர்லா மாளி கையில் அந்த கொலைக் குழுவினர் பாபுஜி யைக் கொன்று விட்டனர் என்றாரே!
சொன்னவர் காந்திஜியின் கொள்ளுப் பேரன்  -நினைவிருக்கட்டும்.


கோட்சேவுக்குத் தூக்கு! அவரின் குருநாதன் - சூத்ரதாரி சாவர்க்காரோ நாடா ளுமன்றத்தில் - நடுநாயகமாகச் சிரிக்கிறாரே  பிரதமர் உட்பட மாலை அணி விக்கிறார்கள் - என்ன சொல்ல!  

 ------------------------- மயிலாடன்  அவர்கள் 2-10-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

15 comments:

தமிழ் ஓவியா said...

அகில இந்திய நுழைவுத் தேர்வை எதிர்த்து ஓரணியில் தமிழ்நாடு

இளநிலை மருத்துவப் படிப்புக்கும், முதுநிலை மருத்துவப் படிக்கும் அகில இந்திய அளவில் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டார். (விடுதலை 27.9.2012)

இந்த அறிக்கை இப்பொழுது மிகவும் சூடு பிடித்து விட்டது. முன்னாள் முதல் அமைச்சர் - தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களும் இந்திய நுழைவுத் தேர்வை எதிர்த்து தம் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்ததுடன், அதற்காகப் போராடவும் தயார் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் இதுகுறித்துப் பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு கிடையாது. மேலும் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது - அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தினால் அந்த இடஒதுக்கீடு பாதிக்கப்படும். மேலும் கிராமப்புற ஏழை - எளிய மக்கள் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வசதிகள் பெற்றிடவும் இல்லை.

கிராமப் பகுதிகளில் 3 ஆண்டுகள் பணியாற்றி யவர்கள் குறிப்பாக மலை வாழ் மக்கள் பகுதிகளில் பணியாற்றும் இளங்கலை பட்டம் பெற்ற மருத் துவர்களுக்கு (ஆக்ஷக்ஷளு) முதுநிலை மருத்துவப் படிப்புக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் ஒதுக்கப்பட்டு வருகிறது. மத்திய தேர்வாணையம் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்தினால் இந்த வாய்ப்புகள் பறி போகக் கூடிய ஆபத்து இருப்பதையும்பற்றி மிகச் சரியாகவே முதல் அமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவதையும் முதல் அமைச்சர் சுட்டிக் காட்டத் தவறவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்னும் வேறுபாடு இல்லாமல் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்ப்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு நுழைவுத் தேர்வைக் கொண்டு வருவதற்கு முன்பாக மாநில அரசின் கருத்துக் கேட்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை உறுதி கொடுத்ததற்கு மாறாக இப்படி நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கதே!

நெருக்கடி நிலை காலத்தில் கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதைப் பயன்படுத்தி இப்படி தன்னிச்சையாக ஒரு தரப்பாக முடிவு செய்ய முடியும் என்று மத்திய அரசு கருதுமேயானால் அது மத்திய - மாநில அரசுகளின் மோதலில் தான் கொண்டு போய்விடும் என்பதைக் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

இதையும் கடந்து தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் கட்சிகளும் ஒன்று திரண்டு வீதிக்கு வந்து போராடும் நிலையையும் இது உருவாக்கும் என்பதில் அய்யமில்லை. தந்தை பெரியார் பிறந்த சமூகநீதி மண் - சமூகநீதிக்காகப் பாடுபட்டு நிலை நிறுத்திய திராவிடர் இயக்கம் வேரூன்றிய பூமியும்கூட! இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டதற்குக் காரணமாக இருந்ததும் தந்தை பெரியார் தலைமையிலான போராட்டங்கள்தான் என்பதை மறந்து விடக்கூடாது.

மண்டல் குழுப் பரிந்துரைகளை அமல்படுத்துவ தற்காக திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் நடத்தியது என்ற வரலாற்று உண்மையையும் நினைவூட்டுகிறோம்.
அகில இந்திய நுழைவுத் தேர்வு என்பது இந்திய அளவில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும், கிராமப்புற ஏழை - எளிய மக்களையும் பாதிக்கக் கூடியது என்பதால் இந்தத் திட்டத்தை அறவே ரத்து செய்வது தான் நல்லது; அல்லது நுழைவுத் தேர்வை விரும்பாத மாநிலங்களில் ரத்து செய்ய வேண்டும்.

ஏற்கெனவே ஆந்திர மாநிலம் மற்றும் காஷ்மீரில் அகில இந்திய நுழைவுத் தேர்வு கிடையாது. இப்பொழுது குஜராத்தும், மேற்கு வங்கமும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான நாடாளுமன்ற குழுவிடமும் திராவிடர் கழகம் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளது. நாடாளுமன்ற குழுவும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இந்தப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம் 2-10-2012

தமிழ் ஓவியா said...

காந்தியார் பிறந்த நாளில் சில முக்கிய சிந்தனைகள் - கி.வீரமணி


இன்று காந்தி அடிகளாரின் 144ஆவது பிறந்தநாள்.

ஒரு தலைவரின் பிறந்த நாளைக் கொண் டாடுவோர் எவராயினும் அவர் போதித்த கொள்கை, லட்சியங்கள், நடைமுறைகள் பற்றி சிறிதாவது சிந்தித்துச் செயல்பட முனைவதே உண்மையாக அவருக்கு மற்றவர் காட்டும் மரியாதையாகும்.

ஆனால் நம் நாட்டில் தலைவர்கள் பலருக்கும் பிறந்த நாள் விழாக்களில் படத்திற்கு மாலை, சிலைகளுக்கு மாலை - அவர்கள் போதித்த சீலங்களுக்கு விடை கொடுக்கும் ஓலை! இதுதான் இன்றைய யதார்த்தம் - (வரலாற்றுக் குறிப்புக்காகச் செய்யப்பட வேண்டியதுதான்).

அதே நேரத்தில் படங்களுக்கு மாலையிடு வதைவிட அவர்களிடமிருந்து கற்ற பாடங்களைக் கொண்டொழுகுவது அல்லவா சிறந்த அறிவு நாணயம்?

காந்தியாரின் தொண்டராயிருந்த பெரியார்

தந்தை பெரியார் போன்ற காந்தியாரிடம் ஈர்க்கப்பட்ட தொண்டர் - வேறு எவரையும் காட்ட முடியாது 1920-களில்!

மதுவிலக்குக்காக 500 தென்னைகளை தன்தோப்பில் வெட்டி வீழ்த்தினார்.

ஒத்துழையாமை, மற்றும் கள்ளுக்கடை மறியலில் தனது குடும்பப் பெண்களையே ஈரோட்டில் தலைமை தாங்க வைத்தது! (இதனால் தான் அப்போது அப்போராட்டத்தை நிறுத்துவது ஈரோட்டில் இருந்த இரு பெண்மணிகளின் கைகளில் (நாகம்மையார், கண்ணம்மையார்) உள்ளது என்று பெருமிதம் பொங்கக் கூறினார் காந்தியார்)

தந்தை பெரியார் தம் கதர் பரப்பலுக்கும், நூற்றலுக்கும் பாராட்டு வழங்கி, பெரியார் தம் கைகள் வீங்கியதால் 6 மாதம் நூல் நூற்க வேண்டாம் என்று காந்தியாரேகூறி, விலக்கு அளித்துப் பெருமை செய்தார்!

கோர்ட் பகிஷ்காரமும் - பெரியாருக்கு இழப்பு ரூ.50 ஆயிரமும்

கோர்ட் பகிஷ்காரத்தின்போது, தனக்கு வர வேண்டிய ரூ.50 ஆயிரம் சிவில் பிராமிசரி நோட்டைப் புதுப்பிக்காது காலாவதி ஆனாலும் பரவாயில்லை என்று இழப்புக்கு ஆளானார் (நீங்கள் வசூலிக்காவிட்டாலும் பரவாயில்லை நாயக்கர் வாள்! எனக்கு Made Over செய்து கொடுங்கள், நான் வசூலித்துக் கொள்ளுகிறேன் என்று பிரபல வழக்குரைஞர் - காங்கிரஸ்காரர் சேலம் விஜயராகவ ஆச்சாரியார் அவர்கள் கூறியதையும் ஏற்காமல் மறுத்தவர் தந்தை பெரியார்.)

தனக்கு வர வேண்டிய வைக்கம் வெற்றியின் மரியாதையையும் தனது தலைவரான காந்தி ஜிக்கே கிடைக்கட்டும் என்று சற்று தள்ளியே நின்ற அடக்கத்தின் பேருருவம் அய்யா அவர்கள்.
தந்தை பெரியார் காங்கிரசை விட்டு காஞ்சீபுரம் மாநாட்டிலிருந்து வெளியேறிய பின்பும், பெங்களூருக்கு அழைத்து, மிகவும் நீண்ட நேரம் விவாதித்து மறு அழைப்புக் கொடுத்தவர் காந்தியார்!
மிகுந்த பணிவுடன் அதனை மறுத்தவர் தந்தை பெரியார்.

காங்கிரசிலிருந்தபோதே, பெரியாரின் பார்வை, பார்ப்பனர்கள் பக்கம் கூர்மையான தாகத்தான் இருந்து வந்தது!

காந்தியாரின் வருண நம்பிக்கை - பெரியாரின் மாறுபாடு

காந்தியார் தீண்டாமை ஒழிய வேண்டு மென்றார், ஆனால் வர்ணாசிரமத்தில் ஆழ்ந்த பற்றும், நம்பிக்கையும் கொண்டவராயிருந்தார்.

தீண்டாமை ஒழிய தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனி கிணறு, தனிக்கோயில், தனிப்பகுதி ஒதுக்குவதை பெரியார் கடுமையாக எதிர்த்தார். காங்கிரசிலேயே கருத்து வேறுபாடு அரும்பியது.

வைக்கம் போராட்டம் - பெரியாரும் - காந்தியாரும்

1924இல் வைக்கம் போராட்டத்திற்கு முதலில் காந்தியார் ஆதரிக்கவில்லை - கழுதையும், நாயும், பூனையும், பன்றியும் வைக்கம் தெருக்களில் நடமாடுகின்றபோது ஆறறிவு படைத்த மனிதனுக்கு நடமாட உரிமை இல்லையா? அவன் கீழ்ஜாதி - புலையன், தீயன், ஈழவன் என்ற காரணங்காட்டி அந்த மனித உரிமையை மறுக்கலாமா? அந்தப் பிராணிகள் என்ன சத்தியாகிரகம் செய்தா அவ்வுரிமைகளைப் பெற்றன? என்று கடுமையாக காந்திஜிக்குப் பெரியார் வைக்கத்திலிருந்து கடிதம் எழுதிய பிறகுதான் - எதிர்ப்பைத் தணித்தார் காந்தியார். (ஆதாரம்: பேராசிரியர் டி.கே. இரவீந்திரன் Gandhi & Vaikam Satyagraha - Book)

சேரன் மாதேவி குருகுலப் போராட்டமும் -காந்தியாரின் நிலைப்பாடும்

தமிழ் ஓவியா said...

சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தில் வ.வே.சு. அய்யரின் வர்ணாசிரம நடத்தையைக் கண்டித்து தந்தை பெரியார், திரு. வரதராஜூலு நாயுடு, திரு.வி.க. போன்றவர்கள் தீர்மானம் போட்டபோது, சமரசம் செய்ய முனைந்த காந்தி யார் - சமையலுக்குப் பிராமணரை சமையல் காரராக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதை டாக்டர் பி. வரதராஜுலு, (தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்) கடுமையாக மறுத்தார். (ஆதாரம்: Hindu நூற்றாண்டு மலர்)

மதத்தினை அரசியலுக்குள் கலந்ததால் காந்தியாரைவிட்டு விலகி கடுமையாக எதிர்த் தார் தந்தை பெரியார்.

1946-க்குப்பின் காந்தியாரின் சிந்தனை மாற்றம்

ஆனால் அதே காந்தியார் 1946முதல் பார்ப் பனீயத்தின் விஷமத்தை - விஷத்தை உணரத் தொடங்கினார்.

வகுப்புவாரி உரிமைபற்றி ஓமந்தூரார் குறித்து அவர் ஆட்சியைப்பற்றி காந்தியிடம் பார்ப்பனர்கள் மனு கொடுத்த நிலையில், அவர் முதலமைச்சர் ஓமந்தூராரிடம் கேட்க, அவர் தந்த புள்ளி விவரம் காந்தியாரின் அகக் கண்களையும், புறக் கண்களையும் திறந்தது!

பார்ப்பனர்களைக் கண்டித்தார்! வேதம் ஓதுதல் தானே வேதியர்க்கழகு? வர்ண தர்மத்தை ஆதரிக்கும் நீங்கள் (பார்ப்பனர்கள்) மெடிக்கல், இஞ்சினீயர் படிப்புக்கு ஏன் செல்ல வேண்டும் என்று பளிச்செனக் கேட்டார்!
மதத்தை அரசியலில் கலப்பதை விரும்ப மாட்டேன்; அரசாங்கம் வேறு - மதம் வேறு என்றார்!

இப்படிக் கூறியது 1947 இறுதியில். சொல்லிய ஒரு சில மாதத்திற்குள் காந்தியார் கோட்சே என்ற மராத்தியப் பார்ப்பனனால் (சதி நடத்தி - பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்தபோது) சுட்டுக் கொல்லப்பட்டார் - 30.1.1948இல் காந்தி நாடு தந்தை பெரியார், மதவெறிக்குப் பலியான காந்தியாருக்கு மரியாதை செய்யும் வகையில் இந்தியாவை காந்தி நாடு என்று அழையுங்கள் என்று அறிக்கை விட்டார்.

முன்பு காந்தியை கடுமையாக எதிர்த்த நீங்கள் இப்போது இப்படிக் கூறுவது முரண்பாடல்லவா? சந்தர்ப்பவாதம் அல்லவா? - என்று கேட்டபோது குடிஅரசு ஏட்டில் தெளிவாக எழுதினார்.

முன்பு வாழ்ந்த காந்தியார் வேறு; பின்பு கொலை செய்யப்பட்ட காந்தியார் வேறு!

தமிழ் ஓவியா said...


இரு வேறு காந்தியார்கள் என்றார்; இன்னும் கூட வேடிக்கையாகவும், வேதனையாகவும் ஒருமுறை சொன்னார் பெரியார்.

கோட்சே விட்டு வைக்கவில்லையே!

காந்தியார் 125 ஆண்டுகள் வாழ்வேன் என்றார் (இல்லாத) எமன் விட்டு வைத்தான். ஆனால் பார்ப்பான் விட்டு வைக்கவில்லையே என்ன கொடுமை என்றார்.

வானொலியில் பெரியார்

காந்தியார் கொலையைச் சாக்காக வைத்து இஸ்லாமியர்கள் வாணியம்பாடி, திருவண்ணா மலை போன்ற சில ஊர்களில் தாக்கப்பட்டனர். வானொலி மூலம் - அன்றைய முதல் அமைச்சர் ஓமந்தூரார் வேண்டுகோளை ஏற்று - ஒரு அப்பீல் அறிவுரை மக்களுக்குச் சொல்லி, மதக் கலவரமாக மாறாமல் இருக்கப் பார்த்துக் கொண் டார் தந்தை பெரியார். தமிழ்நாடு மற்றொரு நவ காளியாகாமல் தடுத்தாட் கொண்டார் அய்யா.

கொன்றவன் கோட்சே - ஒரு மராத்தியப் பார்ப்பனர் என்றவுடன் மராத்தியத்தில் பார்ப்பனர் தாக்குதலுக்கு ஆளானார்கள்; அக்ரஹாரங்கள் சூறையாடப்பட்டன.
ஆனால் பார்ப்பனரல்லாத இயக்கம் உச்சத் தில் இருக்கும் தமிழ்நாட்டில் - கலவரமே இல்லை - எந்தப் பார்ப்பனருக்கும் ஆபத்து இல்லை; காரணம்...?
சுடப்பட்டதன் பின்னணியில்..

தந்தை பெரியார் கூறினார்: சுட்டவன் ஒரு தத்துவத்தின், கொள்கையின் துப்பாக்கி; அதற் காக அச்சமூக மக்களை - தனிப்பட்டவர்களைத் தாக்கிடுவது கூடாது என்று பேசினார். (நன்னிலம் பொதுக் கூட்டப் பேச்சு ஆதாரம்)

இந்தச் சிந்தனைகள் பரவட்டும்!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


காந்தியார் கொல்லப்பட்டது ஏன்?
இந்தியா சுதந்திரம் பெற்றது 15.8.1947இல் காந்தியார் கொல்லப்பட்டது - 30.1.1948இல் அதாவது சுதந்திரம் பெற்ற 168ஆம் நாள் கொல்லப்பட்டார்.

காந்தி, இந்தியாவை மதச் சார்பற்ற நாடு என்று சொன்னது. 7.12.1947-இல்; காந்தி கொல்லப்பட்டது 30.1.1948-இல். அதாவது அவர் நம் நாடு மதச் சார்பற்றது என்று சொன்ன 53ஆம் நாள் கொல்லப்பட்டார். காந்தி, இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பார்ப்பனரின் நடத்தையைப் பார்த்து அவர் சுயமரியாதைக்காரராகிவிட்டார். அவர் கொல்லப்படாவிட்டால், இந்தியா சுயமரியாதைக் கொள்கை நாடாகி விடும் என்று பயந்தே அவரைக் கொன்றார்கள்.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

பிற்போக்கான மதச் சார்பான ஆட்சி வந்துவிடக் கூடாது!

செய்தியாளர்களிடம் கலைஞர் பேட்டி



சென்னை, அக்.2- இன்றைய மத்திய ஆட் சியைத் தொடர்ந்து ஆதரிப்பதற்குக் கார ணம் - ஒரு பிற்போக் கான மதச் சார்பான ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் என்று திமுக தலை வர் கலைஞர் அவர்கள் நேற்று அண்ணா அறி வாலயத்தில் செய்தி யாளர்களிடம் கூறினார். செய்தியாளர் :- போராட்டத் தீர்மானத் தின் மீது எடுத்த முடி வைப் பற்றி கூறுங்கள்?

கலைஞர் :- அனைத்து வகையிலும் செயலிழந்து விட்ட அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக் கைக் கண்டித்து சென்னை மாநகரில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலு வலகத்திலே இருந்து, கடற்கரைச் சாலை வழியாக, கடற்கரைச் சாலையிலே உள்ள கலங்கரை விளக்கம் வரையில் - அக்டோபர் 5ஆம் தேதி வெள்ளிக் கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையில் கறுப்புடை அணிந்த மனிதச் சங்கிலி யும் - அதுபோலவே தமி ழகம் முழுவதும் மாவட் டத் தலைநகரங்களிலும் அதே நாளில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையில் அவ் வாறே கறுப்புடை அணிந்த மனிதச் சங்கிலி யும் அமைத்து ஆர்ப் பாட்டம் நடத்துவ தென்று இந்தச் செயற் குழு தீர்மானித்துள்ளது.

செய்தியாளர் :- சென்னையில் நடைபெ றும் கறுப்புடை அணிந்த மனிதச் சங்கிலி ஆர்ப் பாட்டத்திற்கு யார் தலைமை ஏற்கிறார்கள்?

கலைஞர் :- சென் னையிலே நடைபெறும் கறுப்புடை அணிந்த மனிதச் சங்கிலி ஆர்ப் பாட்டத்திற்கு நானே தலைமை வகிக்கிறேன். மற்ற மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப் பாட்டங்களைப் பற்றி மாவட்டக் கழகச் செய லாளர்கள் கலந்து பேசி முடிவெடுத்து அறிவிப் பார்கள்.

செய்தியாளர் :- டீசல் விலை உயர்வு பற்றி?

கலைஞர் :- அதை யெல்லாம் உள்ளடக்கித் தான் தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறோம். ஏழு தீர்மானங்களில் அவைகள் எல்லாம் அடங்கும்.

செய்தியாளர் :- மத்திய அமைச்சரவை யில் புதிதாக சேர மாட் டோம் என்று சொல்லி யிருக்கிறீர்கள். அதற்கு என்ன காரணம்?

கலைஞர் :- பங்கு பெற மாட்டோம் என் பது தான் காரணம்.

செய்தியாளர் :- அ.தி.மு.க. பொறுப் பேற்றதிலிருந்து அதி காரிகள் எல்லாம் அடிக் கடி மாற்றப்படுகிறார் கள். அமைச்சர்கள் மாற்றப்படுகிறார்கள். பேரவைத் தலைவரே

இப்போது பதவி விலகியிருக்கிறார். அதைப்பற்றி தி.மு.க. வின் கருத்து?

கலைஞர் :- நிறைவேற்றப்பட் டுள்ள ஏழு தீர்மானங்களில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் அடங்கியிருக்கிறது.
அந்நிய முதலீடு

செய்தியாளர் :- அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் நீங்கள் இடம் பெற்றிருக்கிறீர்கள். அந்நிய நேரடி முதலீட்டினை எதிர்த்து எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத் திலே தீர்மானம் கொண்டு வந்தால், அதை தி.மு.க. ஆதரிக்குமா?

கலைஞர் :- ஆதரவு அளிப் போம்.

செய்தியாளர் :- இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?

கலைஞர் :- அதற்கான முயற்சி களிலே சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை அந்த அணியைப் பற்றியே சிந்திக்காமல் இருக்கின்ற எங்களிடம் கேட்பது நியாயமல்ல.

செய்தியாளர் :- பா.ஜ.க. உள் ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத் திற்கு முன் கூட்டியே தேர்தல் வரும் என்று சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?

ஜோசியத்தில் நம்பிக்கை இல்லை

கலைஞர் :- நான் ஜோசியம் சொல்ல விரும்பவில்லை. பொது வாக ஜோசியத்திலே நம்பிக்கையும் இல்லை.

செய்தியாளர் :- காங்கிரசுடன் தி.மு.க. விற்கு உறவு எவ்வாறு உள்ளது?

கலைஞர் :- உறவு என்பது வேறு. அதற்கிடையே இது போன்ற சில பிரச்சினைகளை பேசித் தீர்ப்பது என்பது வேறு. ஆகவே இந்தப் பிரச்சினைகளுக்காக உறவு பாதிக்காது.

செய்தியாளர் :- அய்க்கிய முற் போக்குக் கூட்டணியின் ஒருங் கிணைப்புக் கூட்டத்தில் தி.மு. கழகம் தன்னுடைய மாறுபட்ட பிரச்சி னைகளை முன் வைத்ததா?

கலைஞர் :- கட்சி வேறுபாடு எதுவும் இல்லை. பிரச்சினைகளின் மீது எங்களுடைய கருத்துக்களை தி.மு.க. சார்பிலே கலந்து கொண்ட வர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

செய்தியாளர் :- அய்க்கிய முற் போக்குக் கூட்டணியில் தி.மு.க. தன்னுடைய எதிர்ப்புகளைத் தெரி வித்த பிறகும், பிரதமர் எடுத்த முடிவில் மாறுதல் இருக்காது என்று சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- உடனடியாக அந்தக் கருத்தைப் பற்றி சவால் முறையில் எதுவும் செவதற்கில்லை. மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் எங் களுக்குள்ள அக்கறையின் காரண மாக பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் மேலும் இவைகளைப் பற்றிச் சிந்திப்பார் என்ற நம்பிக் கையில் இருக்கிறோம்.

தமிழ் ஓவியா said...

கூடங்குளம் பிரச்சினை

செய்தியாளர் :- கூடங்குளம் பிரச்சினையில் தற்போது போராட் டம் தீவிரம் அடைந்திருக்கிறது. இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு நீங்கள் சொல்கின்ற கருத்து என்ன?

கலைஞர் :- மத்திய அரசு, மாநில அரசைப் போல இருதலைக் கொள்ளியாக செயல்படக் கூடாது என்பது தான் என்னுடைய கருத்து. கூடங்குளம் பற்றிப் பேசுவதென்றால், அது பெரிய வரலாறு. உங்கள் மொழியிலே, உங்களுக்குத் தெரிந்த மொழியிலே சொல்லவேண்டுமேயா னால், அது பெரிய ராமாயணம். ஏனென்றால் கூடங்குளம் தொடங் கிய போது, அதனால் மின்சார உற்பத்தி அதிகமாகும், நாட்டிற்குப் பயன்படும் என்றெல்லாம் சொன்ன போது அதை வரவேற்றவர்கள் நாங்கள். இப்போதும் வரவேற்பவர் கள் தான். ஆனால் அதனால் மக் களுக்கு ஆபத்து ஏற்படும், வாழ்வா தாரமே சீர் குலையும் என்றெல்லாம் குரல் கிளம்பிய போது அதைப் பற்றி முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உடனடியாக - அவருடைய கட்சிக் கூட்டத்திலே அல்ல, ஆட்சியின் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, கூடங்குளத்தில் பணிகளை யெல்லாம் நிறுத்தி வைக்கவேண்டு மென்று தீர்மானத்தை நிறைவேற்றி, அதை டெல்லிக்கு அனுப்பி வைத் தார். அதன் பிறகு இப்போது, கூடங் குளத்தால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கிப் போராடு கின்ற மக்களை அழைத்துப் பேசியோ அல்லது அரசின் மூலமாகவோ சமாதானப் படுத்துகின்ற - அவர்களுக்குத் தெளிவு ஏற்படுத்துகின்ற எந்த முயற்சிகளிலும் ஈடுபடாமல், அடக்குமுறையால் அதை ஒடுக்கி விடலாம் என்று கருதி செயல்படுகிறார். அதைத் தான் நாங்கள் கண்டிக்கிறோம்.

செய்தியாளர் :- கிரானைட் குவாரி விஷயத்தில் முன்னாள் அமைச்சர் மீதும், இப்போதுள்ள அமைச்சரின் மகன் மீதும் வழக்கு தொடுத்து காவல்துறையினர் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதை அரசியல் பழிவாங்கும் போக்கு என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

கலைஞர் :- அரசியல் பழி வாங்கும் செயல் இன்று சர்வ சாதாரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது தொடுக்கப்படுகிறது என்பதை நான் நன்றாக அறிவேன். இந்த கிரானைட் குவாரி பிரச் சினையில் சம்பந்தப்பட்ட வர்கள் என்று யார் யார் மீது குற்றம் சாட்டி யிருக்கிறார்களோ, அவர்களைப் பற்றி யெல்லாம் பத்திரிகைகளிலே செய்தி கள் வருகின்றன. சிக்கியவர்களில் யார்யார் உண்மையான தவறு செய்த வர்கள், தவறு செய்யாதவர்கள் யார் என்பது என்பதெல்லாம் இப்போது தெரியாது. ஏனென்றால் இந்தத் தொழிலிலே ஈடுபட்டவர்கள் யார் யார் என்பதை கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியிலேயிருந்து கணக்கிட்டு, அதைப் பற்றி பரிசீலிக்க சி.பி.ஐ. விசாரணை வைப்பது தான் உசிதமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

செய்தியாளர் :- தலைமைச் செய லகத்திற்கு முன்னால் இருந்த கல்வெட் டில் இருந்த உங்கள் பெயரை அழித்திருக்கிறார்கள். பக்கத்திலேயே ஜெயலலிதாவின் பெயர் தாங்கிய கல்வெட்டினை புதிதாக வைத்திருக் கிறார்கள்.

கறுப்புச் சட்டை மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் அந்த வழியாகத் தான் செல்கிறது.
உங்கள் தொண்டர்கள் கல்வெட் டினைப் பார்த்து விட்டு கோபப்பட மாட்டார்களா?

கலைஞர் :- இதெல்லாம் சாதா ரண விஷயம்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.



பிற்போக்குத்தனமான, மதச் சார்புள்ள ஆட்சி வந்துவிடக் கூடாது

செய்தியாளர் :- பல்வேறு முரண்பாடுகளோடு மத்திய அரசு செயல்படும் இந்த நிலையில், தொடர்ந்து தி.மு.க. அவர்களுக்கு ஆதரவு அளிப்பதின் காரணம் என்ன?

கலைஞர் :- இந்தியாவிலே ஒரு பிற்போக்குத்தனமான, மதச் சார்புள்ள ஆட்சி வந்து விடக் கூடாது என்பது தான் முக்கிய காரணம். 2-10-2012

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர் பிரச்சினைகள்பற்றி கலைஞர் கடிதத்திற்கு பிரதமர் எழுதியுள்ள பதில்

தி.மு.க. தலைவர் மானமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் 20-8-2012 அன்று ஈழத் தமிழர் பிரச்சினைகள் பற்றி இந்தியப் பிரதமருக்கு எழுதி இருந்த கடிதத்திற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் 25-09-2012 அன்று பதில் கடிதத்தை கலைஞர் அவர்களுக்கு எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு:

அன்புள்ள டாக்டர் கருணாநிதிஜி,
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி நீங்கள் 20-8-2012 அன்று எழுதிய கடிதத்திற்கு பதிலான இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்.

உங்கள் கடிதத்தில் எழுப்பப்பட்டிருந்த அனைத்துப் பிரச்சினைகள் பற்றியும் நான் கவனத்தில் எடுத்துக் கொண்டேன்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த போதிலிருந்து, இலங்கை வாழ் தமிழ் குடிமக்களின் நலன்களின் மீது இந்திய அரசு தனது கவனத்தைச் செலுத்தி வருகிறது. புலம் பெயர்ந்த தமிழர்களை மறுபடியும் அவர்களின் குடியிருப்புகளி லாவது அல்லது வேறு இடங்களிலாவது குடியமர்த்துவது என்பதற்கே நமது அரசு முக்கியமாக அதிக அளவில் முன்னுரிமை அளித் துள்ளது. அதிகாரப் பங்கீடு பற்றி இலங் கைத் தமிழர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசுக்கு நாங்கள் தெரிவித்துள்ளோம். சமத்துவம், கவுரவம், நீதி மற்றும் சுயமரியாதையுடன் கூடிய வாழ்க்கையை இலங்கை தமிழ் சமூகத்தினருக்கு எதிர்காலத்தில் அளிப்பது பற்றி நாங்கள் தொடர்ந்து இலங்கை அரசுடன் பேசிக் கொண்டிருக்கிறோம்.
மிக்க மரியாதையுடன்,
தங்கள் உண்மையுள்ள,
ஒப்பம். மன்மோகன்சிங் 2-10-2012

தமிழ் ஓவியா said...

வரவேற்கத்தக்க முயற்சி!

மருத்துவக் கல்லூரிகளில் சேர தேசிய நுழைவுத் தேர்வு

தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது - ரத்து செய்க!

தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம்



சென்னை, அக். 2- மருத்துவக் கல்லூரிகளில் சேர அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவை தமிழ்நாடு அரசு எதிர்க் கிறது; அதனைக் கண்டிப்பாக ரத்து செய்ய வேண் டும் என்று பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். கடிதம் வருமாறு:

கடந்த ஜூலை 30ஆம் தேதி அன்று நான் எழுதிய கடிதத்தில், மருத்துவக் கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித் திருந்தேன். தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்திருந் தும், கல்வியாண்டு 2013-ல் ஆனு, ஆளு மற்றும் முதுகலை பட்டயப் படிப்பில், மாணவ - மாணவியர் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை நடத்த தேசிய தேர்வு வாரியத்திற்கு மத்திய அரசு உத்தர விட்டுள்ளது குறித்து எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

தொழில்முறை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்வதை தமிழக அரசு ஏற்கெனவே ஒரு கொள்கை முடிவாக அறிவித்துள்ளது என்பதை எனது முந்தைய கடிதத்தில் உறுதிபடத் தெரிவித் துள்ளேன். சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள கிராமப்பகுதி மாணவர்கள், தங்கள் பகுதிகளிலிருந்து, நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கும் கல்வி மையங்களுக்குச் செல்வதற்கோ, தேவையான புத்தகங்களை வாங்குவதற்கோ, அவர்களின் பொருளாதார நிலை பெரும் தடையாக அமைந்துள்ளது என்பது, நிபுணர் குழு நடத்திய விரிவான ஆய்வில் தெரிய வந்தது.

இதனையடுத்து, தொழில் முறை படிப்புக்கான நுழைவுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது. மேலும், கிராமப் பகுதிகளில் 3 ஆண்டுப் பணியை நிறைவு செய்த மருத்துவர்களுக்கு மருத்துவ முதுநிலைப் பட்டப்படிப்பில் 50 விழுக்காடு இடங்களை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. அதிலும், மலைப் பகுதி மற்றும் பழங்குடியினர் வசிக்கும் இடங்களில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

முதுகலைப் பட்டப் படிப்பை முடித்த மருத்து வர்கள், குறைந்தபட்சம், ஒரு குறிப்பிட்ட காலம் வரை, அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்று வதற்காக அவர்களிடமிருந்து உறுதிப் பத்திரங் களைப் பெறுவதிலும், தமிழக அரசு வெற்றி பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை, நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதில் பேருதவியாக அமைந்தது. பொது நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டால், இப்படிப்பட்ட முனைப்பான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சட்ட ரீதியிலான சிக்கல் ஏற்படும். தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு விதிமுறைகளின் அடிப்படையில் நடத்தப்படும். பொது நுழைவுத் தேர்வு முறையில், கிராமப்பகுதி மருத்துவ சேவை, குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்பவற்றிற்கெல்லாம் வழிவகை இல்லாமல் போய்விடக் கூடும்.

மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி அவற்றின் கருத்துகளை அறிந்த பின்னர்தான், அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்த கொள்கை முடிவு எடுக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் மாநில அரசுகளுக்கு உறுதியளித் திருந்தார். இதுகுறித்த கருத்துகளை தமிழக அரசும் மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தது. அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம், கல்வி முறையை நிர்வகித்து வரும் மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் நடவடிக்கை.

தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் தனித் தன்மை வாய்ந்த இடஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில், சிக்கல்களை ஏற்படுத் தும், மீண்டும் மீண்டும் தமிழக அரசு விடுத்திருந்த வேண்டுகோள்களை பொருட்படுத்தாமல், தற் போது, நுழைவுத் தேர்வு குறித்து மத்திய அரசு வெளி யிட்டுள்ள அறிவிப்பு, தமிழகத்தின் கருத்துகளை மத்திய அரசு அலட்சியப்படுத்தியுள்ளது என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது. பொது நுழைவுத் தேர்வை நடத்தும் முடிவிலிருந்து மத்திய அரசு பின்வாங்கத் தயாராக இல்லை என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. மருத்துவக் கல்லூரிகளில் ஆனு, ஆளு முதுகலை பட்டயப் படிப்பு ஆகியவற்றில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, கட்டாயம் என்பதும், மத்திய அரசின் அறிவிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது. தமிழக அரசின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசு தன்னிச்சையாக வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு, பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதையும் மத்திய அரசு அலட்சியப் படுத்தியுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பொது நுழைவுத் தேர்வு நடத்துவதில் தமி ழக அரசுக்கு விதிவிலக்கு அளித்து, தற்போதுள்ள நிலையே தொடர அனுமதிஅளிக்க வேண்டும்.
- இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்து உள்ளார் 2-10-2012

தமிழ் ஓவியா said...

காந்தி ஜயந்தி

கிருஷ்ண ஜயந்தி ஒழிந்து 8 நாள்கூட ஆகவில்லை. அதற்குள் காந்தி ஜயந்தி தோன்றிவிட்டது. “தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்” என்பது போல் ஜனங்களின் மூடத்தனத்தை ஆயுதமாக வைத்துக் கொண்டு அநேக அக்கிரமங்கள் நாட்டில் நடைபெறுகின்றன.

தோழர் காந்தியவர்கள் இந்திய அரசியலில் தலையிட்டு இன்றைக்கு ஏறக்குறைய 15 வருஷங்கள் ஆகின்றன. இந்தப் பதினைந்து வருஷ காலங்களில் அவர் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்து செலவு செய்யச் செய்தார். பதினாயிரக்கணக்கான நபர்களை அடி, உதை, வசவு முதலியவைகள் படச்செய்தார். 40 ஆயிரம் 50 ஆயிரக்கணக்கான பேர்களை சிறை செல்லச் செய்தார். இந்திய அரசியல் உலகில் மிதவாதிகள், அமித வாதிகள், ஜஸ்டிஸ்காரர்கள், இந்து, முஸ்லீம்கள், சீக்கியர்கள் முதலிய எல்லாக் கூட்டத்தாரிடமும் சர்வாதிகாரப் பட்டமும் பெற்றார். மேல்ஜாதிக்காரர்கள், ஏழைகள், பணக்காரர்கள் முதலிய எல்லோருக்கும் தாமே தர்ம கர்த்தாவாக கருதப்பட்டார். காங்கிரஸ் ஸ்தாபனம் என்பதைத் தனது கால் சுண்டுவிரலால் மிதித்து அடக்கித் தனது இஷ்டம் போல் ஆட்டிவைத்தார் என்கின்றதான பெருமைகளை எல்லாம் பெற்றவர் என்பவராவார்.

அன்றியும் (ஆத்மா என்பதாக ஒன்று உண்டா? இல்லையா? என் கின்ற வாதம் தலை நிமிர்ந்து நிற்கின்ற காலத்தில்கூட) பெரும்பான்மை மக்க ளால் மகாத்மா என்று கொண்டாடப் படும்படியாகவும் செய்துகொண்டார்.

இன்னும் அநேக காரியம் செய்தார் என்றும் வைத்துக்கொள்ளலாம். இவையயெல்லாம் சாதாரண (அதாவது சராசரி) மனிதனால் செய்துகொள்ள முடியாத காரியம் என்றும் ஒப்புக்கொள்ளுவோம். ஆனால் இவ்வளவு செய்தும் இவ்வளவு சக்திஉடையவராய் இருந்தும், இவ்வளவு பெருமை பெற்றும் இவரால் மனித சமூகத்துக்கு நடந்த காரியம் என்ன? இதனால் எல்லாம் ஏற்பட்ட பலன் என்ன? என்பதே அறிவியக்கக்காரர்கள் கவனிக்க வேண்டிய விஷயம். இதுஒருபுறமிருக்க,

இப்போது அப்படிப்பட்ட காந்தியாரின் ஆட்ட பாட்டமெல்லாம் அடங்கி கடைசியில் “எல்லாம் கடவுள் செயலில்” வந்து நின்று “எனக்கு ஒன்றும் புரியவில்லையே” “என்னை இருள் சூழ்ந்து கொண்டதே” “மேலால் என்ன செய்வது என்பது எனக்கு விளங்கவில்லையே” “கடவுள் ஒரு வழிகாட்ட வேண்டியிருக்கிறதே” என்கின்ற பல்லவியில் வந்து விட்டார்.

இவ்வளவோடு மாத்திரமல்லாமல் அவரிடம் உள்ள கடைசி ஆயுதத் தையும் காட்ட ஆரம்பித்துவிட்டார். அதாவது பொதுவுடமைப் பூச்சாண்டி யைக் காட்டுவது. எப்படியெனில் தன் வாயால் ஒன்றும் சொல்லாமல் தன்மீது எவ்வித பொறுப்பும் போட்டுக்கொள்ளாமல் தோழர் ஜவகர்லால் அவர்கள் வாயினால் பொருளாதாரத்தைப் பற்றிப் பேசுவதன் மூலம் பொதுவுட மையை ஜாடைகாட்டச் செய்து ஓரளவுக்கு அதை ஒத்துக்கொள்ளுவது போல் (பின்னால் எப்படி வேண்டுமானாலும் பேசுவதற்கு இடம் வைத்துக் கொண்டு) பேசி சர்க்காரை மிரட்டுகிறார்.

அதாவது தன்னுடன் சர்க்கார் ராஜிக்கு வரவில்லையானால் “பொது வுடமைக் கிளர்ச்சிக்கு இடம் கொடுத்து விடுவேன்” என்கின்ற ஜாடை. இதைப் பற்றி மற்றொரு சமயம் விவரிப்போம்.

இதை ஏன் அடிக்கடி சொல்லுகிறோம் என்றால் தோழர் காந்தியார் முன்பு பட்டினியினிமித்தம் வெளி வந்து பூனா மகாநாடு நடத்தி விட்டு மறு படியும் தனிப்பட்ட சத்தியாக்கிரகம் செய்து சிறை செல்லும் போது சர்க்கா ருக்குக் கொடுத்த ஒரு ஸ்டேட்மெண்டில் இதே மாதிரி சர்க்காரை மிரட்டு வதற்குப் பொதுவுடமை ஜாடையை உபயோகித்துக் கொண்டார்.

தமிழ் ஓவியா said...

அதாவது “ஜனங்களிடம் நான் கலந்து பார்த்ததில் மேல் ஜாதிக் காரருக்கும், கீழ்ஜாதிக்காரருக்கும், பணக்காரருக்கும், ஏழைகளுக்கும், பெண் களுக்கும், ஆண்களுக்கும் இடையில் சீர்கெட்டு இருக்கிறதாக அறிந்தேன். இதனால் சொத்துக்கும், உயிருக்கும் ஆபத்து வந்து விடுமோ என்று அவர வர்கள் பயப்படுகிறார்கள். இந்த சமயத்தில் அஹிம்சாவாதியான நான் ஜெயிலில் இருப்பதே முறை” என்று சொல்லியிருக்கிறார். இதற்கு ராஜ கோபாலாச்சாரியாரும் ஒத்துப்பாடி இருக்கிறார்.

இப்பொழுது ஜெயிலில் இருந்து வந்த பிறகும் முன்காட்டியபடி தோழர் ஜவகர்லாலின் பொருளாதாரத் திட்டத்தை ஒப்புக்கொள்ளுவ தாகவும் ஆனால் அவ்வளவு தூரம் போக முடியாதென்றும் சொல்லுகிறார். எவ்வளவோ முக்கியமானதும் அவசியமானதும், கட்டாயம் நடந்து தீர வேண்டியதுமான ஒரு கொள்கையைக் காரியத்தில் நடத்துவிக்கின்றதற்கு வேண்டிய ஏற்பாடு செய்யாமல் அல்லது அதுசெய்ய முடியாவிட்டால் பேசாமல் வாயை மூடிக்கொண்டாவது இருக்காமல் அதை வீண்மிரட்டலுக் கும் தனது சுயநலத்துக்கும் உபயோகப்படுத்தி “அதில் பலாத்காரம் வந்து விடும் ரத்தக்” களரி ஏற்பட்டுவிடும் என்றெல்லாம் பேசி கெடுக்கச் செய்வது என்றால் யார் தான் இச்செய்கையை பொருக்கமுடியும்?

அன்றியும் மனித சமூகத்திய இயற்கை சக்திகளையெல்லாம் பாழாக்கி இயற்கையான வழிகளையெல்லாம் அடைத்துச் செல்வவான் களையும், சூட்சிக்காரர்களையும் (பார்ப்பனர்களையும்) சுவாதீனப்படுத்திக் கொண்டு காரியத்துக்கு உதவாத வழிகளில் மக்களைத் திருப்பி மனித சமூகத்தைப் பாழாக்கி வைத்த பெருமையை என்றென்றும் கொண்டாடு வதற்கு அறிகுறியாய் காந்தி ஜயந்தி வருஷா வருஷம் கொண்டாடுவ தென்றால் இதன் அக் கிரமத்திற்கு எப்படித்தான் பரிகாரம் செய்வது என்பது நமக்கு விளங்க வில்லை. தோழர் காந்தியாருக்கு இன்று ஜயந்தி கொண்டாடு வதற்கு வேண்டிய யோக்கியதை வந்ததற்குக் காரணம் (இவரால் இதுவரை மக்களுக்கு யாதொரு பயனும் ஏற்படவில்லை என்றாலும்) பார்ப்பனர் களுக்கு அனுகூலமாய் இருந்து வந்த காரணமே ஜயந்தி கொண்டாடும் யோக்கியதையை சம்பாதித்து கொடுத்து விட்டது. நமது நாட்டுப் பார்ப்பனர் களுக்கு இருக்கும் அபார சூழ்ச்சித் தன்மைக்கும் அற்புத புரட்டுத் தன்மைக்கும் இந்த காந்தி ஜயந்தி ஒரு பெரும் உதாரணமாகும். இன்று ஜயந்தி கொண்டாடத்தக்க “பெரியார்கள்” எல்லாம் இந்த யோக்கியதை அடைந்தவர்கள் தான் என்பதும் விளக்க இது ஒரு உதாரணமாகும்.

தமிழ் ஓவியா said...


கம்ப ராமாயணத்தில் ஆரம்பத்தில் கம்பன் பார்ப்பனர்களுக்குச் சொன்ன காப்பு விருத்தத்தின்படியே தோழர் காந்தியாரும் பார்ப்பனர்களை உயர்த்தி அவர்களுக்கு அடி பணிந்து வந்ததாலேயே இன்று காந்தி ஜயந்தி நடந்து வருகிறது. அதாவது,

“உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்,

நிலை பெறுத்தலும் நீங்கலு நீங்கிலா,

அலகிலா விளையாட்டுடையா ரவர்,

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே”

என்ற பாட்டுப்பாடியே தூணைத் துரும்பாக்கவும், துரும்பைத் தூணாக் கவும் உள்ள பார்ப்பன சக்தியில் இன்று எவ்வளவோ காரியங்கள் அஸ்தி வாரம் சிறிதுகூட இல்லாமல் நடந்துவருகிறது. அதில் ஒன்றுதான் இந்த காந்திஜயந்தி. இதுபோலவே மற்றொரு விஷயம் என்னவென்றால்,

தோழர் அன்னிபெசண்டம்மையார் செத்து பத்து நாள்கூட ஆக வில்லை. ஆனாலும் அந்தம்மையாரின் சூக்ஷம சரீரம் அதற்குள் பூலோக ஜனங்களோடு பேச ஆரம்பித்து விட்டது. இந்த அம்மையாருக்கும் இவ் வளவு யோக்கியதை ஏற்பட்டதின் காரணம் அந்தம்மாளும் பார்ப்பனீய தாச ராய் இருந்து பார்ப்பனப் பிரசாரம் செய்து வந்து செத்ததேயொழிய வேறு ஒன்றுமில்லை.

தவிர, தோழர் காந்தியாருக்கு ஜெயந்தி கொண்டாடும் விஷயத்தில் பார்ப்பனரல்லாத மக்களுக்கு கடுகளவு புத்தியோ சுயமரியாதை உணர்ச்சியோ இருந்திருக்குமானால் பார்ப்பனரல்லாதார் இதில் கலந்து கொள்ளமுடியுமா? என்பதை வாசகர்கள் தான் யோசித்துப் பார்க்க வேண்டும். ஜாதி பாகுபாடு (வருணாச்சிரமம்) விஷயத்தில் தோழர் காந்திய வர்கள் பார்ப்பனரல்லா தாருக்கு நிரந்தர இழிவை உண்டாக்கி இருக்கும் விஷயமும், ஹரிஜன இயக்கம் என்னும் பேரால் செய்துவரும் சூட்சியும் பார்ப்பனரல்லாத மக்கள் தெரியாது என்று சொல்லிவிடமுடியாது. வருணாச் சிரம தர்மத்தை ஆதரிப்ப தினாலும் உறுதிப்படுத்துவதினாலும் பார்ப்பன ரல்லாதார் நிலை என்னவா கின்றது?

அன்றியும் “ஹரிஜன முன்னேற்ற” விஷயத்தில் காந்தியார் தனது வாக்கு மூலத்தில் குறித்தது என்னவென்றால்,

“கோவில், குளம், கிணறு, பள்ளிக்கூடம் முதலியவைகளில் பிராமணரல்லாதவர்களுக்கு ஏற்பட்டுள்ள சலுகைகள் அனைத்தும் தீண்டப் படாத வர்களுக்கு ஏற்படவேண்டும்”.

“இதுவரை தீண்டப்படாதவர்களாகக் கருதப்படுபவர்கள் இனி சூத்திரராகக் கருதப்படுவார்கள்”

“தீண்டாமை ஒழிந்தபின் பிராமணர்களுக்கும் தீண்டாதவர்களுக்கும் எப்படிப்பட்ட சம்மந்தம் எப்படிஇருக்குமென்றால் பிராமணர்களுக்கும், பிராமணரல்லாதார்களுக்கும் இருந்துவரும் சம்மந்தம் போலிருப்பார்கள்”.

“வருணாச்சிரமதர்மத்தை மதத்தின் தத்துவக் கொள்கைகளுக்கு ஏற்றபடி சீர்திருத்தம் செய்யப்படவேண்டும்”

என்று சொல்லியிருக்கிறார்.

இது “ஜெயபாரதி” என்னும் பத்திரிகையின் காந்தி ஜெயந்தி மலர் 9ம் பக்கத்தில் காந்தியாரின் வாழ்க்கைச் சம்பவ நிகழ்ச்சி என்ற தலைப்பின் கீழ் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.

இதைப்பற்றி முன்பு ஒருதடவை எழுதியும் இருக்கிறோம். பார்ப்பன ரல்லாத தேசீயவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் இரண்டொருவர்கள் இடமும் இதைப்பற்றிப் பிரஸ்தாபித்தும் இருக்கிறோம். ஆனால் அவர்கள் தேசம் பெரியதேயொழிய தேசத்தில் தன்னுடைய நிலைமை எப்படி இருந்தாலும் கவலை இல்லை என்ற உணர்ச்சி உள்ளவர்கள் போலவே காட்டிக்கொண்டார்கள்.

மானத்தை விற்று மனிதத்தன்மையை இழந்து வாழ்ந்து தீரவேண்டிய அளவு சோம்பேறிகளும், கோழைகளுமானவர்களுக்குத் “தேசம் பெரிது” என்கின்ற சாக்கு ஒரு உற்ற தோழனாய் இருந்து வருகின்றது, வந்தும் இருக்கிறது என்று கருதிக்கொண்டு அந்த சம்பாஷணையை நிறுத்திக் கொண்டோம்.

ஆகவே இப்படிப்பட்ட நிலையில் பார்ப்பனரல்லாதவர்களை நிரந்தரமாய் வைக்கப் பாடுபட்ட ஒரு “மகானின்” ஜெயந்திக்குப் பார்ப்பன ரல்லாதார் கூடியிருந்து கொண்டாடுவதென்றால் இதற்கு என்னபேர் வைப்பது என்பது நமக்கு விளங்கவில்லை. விஷயம் இவ்வளவோடு முடியவில்லை. ஏனென்றால் காந்தி ஜயந்தியை விட மானமற்றதும், இழிவா னதும் மடமை யானதுமான ஒரு காரியமாகிய தீபாவளி என்னும் ஒரு பண்டிகையையும் நாளை கொண்டாடப்போகும் சுயமரியாதை அற்ற தன்மை, காந்தி ஜயந்திக்கு ஒரு உதாரணமாகும்.

குடி அரசு - தலையங்கம் - 15.10.1933

தமிழ் ஓவியா said...

நுழைவுத் தேர்வா?

ஒருமுறை நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் கல்வி அமைச்சராகவிருந்த கால கட்டத்தில் நுழைவுத் தேர்வு குறித்து கூறினார் என்பதற்காக தந்தை பெரியார் கடுமையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

பாஸ் செய்த பிறகு, பின்பு தகுதி, திறமை, தரம் எதற்காகப் பார்க்கப்படுகிறது? அது எதற்காக வேண்டும்? அதன் அர்த்தம் என்ன? அதன் பயன் என்ன? என்ற வினாக்களை தந்தை பெரியார் எழுப்பினார்.

இந்த நுழைவுத் தேர்வைத் திணித்தவர் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.தான் என்பதைப் புரிந்து கொள்ளாமல், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் நீட்டி முழங்குவது வேடிக்கையாகும். அதனை அப்பொழுதே எதிர்த்துக் களம் கண்டது திராவிடர் கழகமே!

நீதிக்கட்சி காலத்தில் கல்லூரிகள் சேர்க்கைக்கு குழுக்கள் அமைக்கப்பட்டன. மாணவர்களின் கல்விச் சூழல், சமூகச் சூழல்களை நேரில் தெரிந்துகொள்வதற்கு நேர்முகத் தேர்வுதான் சரியானது அதனை ஆச்சாரியார் இடையில் ஒழித்துக் கட்டினார்.

ஆச்சாரியார் காலத்தில் நேர்முகத் தேர்வுக்கு 50 ஆகக் குறைக்கப்பட்டு இருந்ததை, கல்வி வள்ளல் காமராசர் 150 ஆக உயர்த்தினார். செய்தியாளர்கள் இதுகுறித்து முதலமைச்சர் காமராசர் அவர்களைக் கேட்டபோது, எந்தக் காரணத்துக்காக, 50 ஆக இந்த மதிப்பெண்களை ராஜாஜி குறைத்தாரோ, அதே காரணத்துக்காகத்தான் 150 ஆக உயர்த்தி னேன் என்று மட்டையடியாகப் பதிலடி கொடுத்தார்.

கல்லூரி சேர்க்கை என்ற பிரச்சினையில் எத்தகைய பின்னணிகள் எல்லாம் இருந்தன அதன் வரலாறு என்ன என்பதெல்லாம் மிக முக்கியமாகும்.

இந்த வரலாற்றினைத் தெரிந்தவர்தான் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக இருக்கக் கூடிய முதலமைச்சர் கலைஞர். இவர் ஆட்சிக்காலத்தில்தான் நுழைவுத் தேர்வு முறை ஒழிக்கப்பட்டு, சரியான சட்ட அணுகுமுறைகளால் உயர்நீதிமன்றத்திலும் வெற்றி பெற முடிந்தது.

இதன் காரணமாக கிராமப்புறத்தில் மாணவ, மாணவிகள், முதல் தலைமுறையாகக் கல்வி கூடங்களில் காலடி எடுத்து வைத்தார்கள்கல்லூரிகளில் அலை அலையாக நுழைந்தனர்.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கைக்கான மதிப்பெண்களைக் குறைத்த தாலும், பட்டதாரி அல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கட்டண ரத்து என்பதாலும் இவ்வாண்டில் மட்டும் பொறியியல் கல்லூரிகளில் புகுந்த மாணவர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியுள்ளது என்பது சாதாரணமா?

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு என்பதில் மத்திய அரசு மேற்கொண்ட முடிவுக்கு எதிர்ப்புத் தெரி வித்து, உடனடியாக முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்வதாகவும் (ஐஅயீடநயன) தெரிவித்துள்ளார்.

முதல்வர் கலைஞரின் எதிர்ப்புக் காரணமாக இப்பிரச்சினையில் மத்திய அரசு பின்வாங்கியுள் ளதே இது கலைஞர் அவர்களின் ஆளுமைக்கு எடுத்துக்காட்டல்லவா!

வேகமாகவும், விவேகமாகவும் செயல்படக் கூடிய சமூகநீதிச் சிந்தனையாளர் கலைஞர் என்பதற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக் காட்டவேண்டும்?

இதனையும் அரசியலாக்கத் துடிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதா. இவர் காலத்தில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு இருந்தாலும், உயர்நீதிமன்றத்தில் அது ஏன் ரத்து செய்யப்பட்டது; அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்ததால்தானா?

கிராமப்புறத்தில் இருந்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீடு என்று கலைஞர் ஆட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த நிலையில், கலைஞரைவிட தாம் தீவிரம் என்று காட்டிக் கொள்வதற்காக அதை 25 சதவிகிதமாக உயர்த்தப் போய், உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா என்ற பழ மொழிக்கு இணங்க, ஒட்டுமொத்தமாக அந்த வாய்ப்பையே உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதே!

எதிலும் அரசியல், சமூகநீதியிலும் அரசியல் என்பது ஆபத்து! ஆபத்து!! தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னென்ன குறுக்கு வெட்டுகள் எல்லாம் நடக்குமோ யார் கண்டது? 20-8-2010

kk said...

நல்ல தகவல் ஆனால் பொண்ட்டின் கலரை மாற்றவும் கண் குற்றுகின்றது

தமிழ் ஓவியா said...

[தந்தை பெரியார்] இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம்


சட்டத்திலே சாதியைக் காப்பாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார்கள்; அந்தப்படி செய்ததற்கு அடிப்படைக் காரணம் காந்தி. காந்தி பெயரைச் சொல்லித்தான் சாதிக்குப் பாதுகாப்பான ஏற்பாடு செய்ய முடிந்தது. எனவே, இந்த நாட்டில் காந்தி சிலை இருப்பது அவமானம் என்கிறேன். இன்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுகிறார்களே, "வெலிங்டன் சிலை இருக்கக் கூடாது; விக்டோரியா ராணி சிலை கூடாது; நீலன் சிலை கூடாது' என்று; அதுபோல காந்தி சிலை எங்கள் நாட்டில் இருக்கக் கூடாது என்று சொல்ல எனக்கும் உரிமையுண்டு. ஒரு வெலிங்டனும், நீலனும் செய்யாத அக்கிரமத்தை எங்களுக்கு காந்தி செய்துள்ளார்.

காந்தி மனதார ஏமாற்றி, சாதியைக் காப்பாற்றப் பலமான சட்டம் செய்து கொண்டு, பார்ப்பானுக்குப் பாதுகாப்புக் கொடுத்து, நம்மை என்றும் அடிமையாக இருக்க ஏற்பாடு செய்துவிட்டுப் போய்விட்டார். நம்மவனோ நான் நாயக்கனாயிற்றே, நான் கவுண்டனாயிற்றே என்று நினைத்துக் கொண்டு சூத்திரன் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறானே தவிர, வேறு என்ன? தெரியாமல் தொட்டால், நெருப்பு சுடாமல் விடுமா? தெரியாதது போலவே இருந்து விட்டால், சூத்திரப் பட்டம் இல்லாது போய்விடுமா?

ராசகோபாலாச்சாரியார் மதுரையில் பேசும்போது, "சிலர் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றதைத் தப்பாகப் புரிந்து கொண்டு, சாதியே ஒழிய வேண்டுமென்கிறார்கள். காந்தி ஒருக்காலும் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை; சாதி காப்பாற்றப்பட வேண்டுமென்றார்' என்று பேசினார். சாதி ஒழியக் கூடாது என்று சொல்லத் தைரியம் வந்துவிட்டதே, என்ன சங்கதி என்று பார்த்தால் ஒவ்வொன்றாகத் தெரிகிறது. காந்தி வருணாசிரம தர்மத்தை (சாதியை) காப்பாற்ற வேண்டும் என்று சொன்னதை ஆதாரமாக வைத்துக் கொண்டு அதன்படியே சாதியை அசைக்க முடியாதபடி சட்டம் செய்து விட்டார்கள். இது, காந்தி மனதாரச் செய்த துரோகம். இந்தப் பித்தலாட்டம் உங்களுக்குத் தெரியாது.

டாக்டர் அம்பேத்கர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இதில் காந்தி செய்த பித்தலாட்டங்களை நல்லபடி எடுத்துப் போட்டுள்ளார். "தீண்டாமை ஒழிப்புக்குக் காங்கிரசும் காந்தியும் செய்தது என்ன?' என்பது அந்தப் புத்தகம்.

நான் காங்கிரசில் இருந்தபோதே சமுதாயத் துறையில் சமத்துவம் ஏற்படுத்த வேண்டும் என்று நிறையப் பேசியிருக்கிறேன். அப்போது காந்தி, "தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாவிட்டால் வேறு தனிக் கிணறு கட்டிக் கொடு. கோவிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோவில் கட்டிக் கொடு' என்றார்; பணமும் அனுப்புகிறேன் என்றார். அப்போது நாங்கள்தான் அந்த ஏற்பாட்டை எதிர்த்தோம். "கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுபடுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால் அவன் தண்ணீரில்லாமலே சாகட்டும்' என்றேன்.

"அவனுக்கு இழிவு நீங்க வேண்டும் என்பது முக்கியமே தவிர, தண்ணீரல்ல' என்றேன். கோயில் பிரவேசம் வேண்டுமென்று கூப்பாடு போட்டோம். என் கூக்குரலுக்குக் கொஞ்சம் மரியாதை உண்டு என்பது ராஜாஜிக்குத் தெரியும். கோயில்களுக்குள் தீண்டப்படாதவர்கள் என்பவர்களை அழைத்துக் கொண்டு நுழைந்தோம். கேரளத்தில் பெரிய ரகளையாகிக் கொலையும் நடந்து விட்டது. ராஜாஜி, காந்தியிடம், "ராமசாமி பேச்சுக்கு மரியாதை உண்டு; ரகளை ஆகும். ஆதலால் கோவிலில் நுழைய விட்டுவிட வேண்டியதுதான்' என்றார். அதற்குப் பிறகும், "சூத்திரன் போகின்ற அளவுக்குப் பஞ்சமன் போகலாம்' என்றார்கள். நான், "சூத்திரனும் பஞ்சமனும் ஒன்றாகி, நாங்கள் இன்னும் கொஞ்சம் மட்டமானோமே தவிர, பார்ப்பான் அப்படியேதானே இருக்கிறான். சாதி ஒழிய வேண்டுமா, வேண்டாமா? என்றேன்.

அப்போதிருந்தே காந்தி, சாதி காப்பாற்றப்பட வேண்டும் என்ற முயற்சியில் பார்ப்பனருக்கு உடந்தையாகவே இருந்து பல மோசடிகள் செய்து, நம்மை ஏமாற்றி விட்டார். காந்திக்கு இருந்த செல்வாக்கு, நம்மைப் பார்ப்பானுக்கு அடிமையாகவும் பார்ப்பான் பார்ப்பனனாகவே இருக்கவும்தான் பயன்பட்டது. இன்னும் சாதி ஒழிப்புக்கு விரோதமாக "காந்தி சொன்னது; காந்தி மகான் காட்டிய வழி' என்று கூறிச் சட்டத்திலும் பாதுகாப்புச் செய்து கொண்டார்கள்.

காந்தி செய்த மோசடி மக்களுக்குத் தெரிய வேண்டும். அதனால்தான், "காந்தியின் படத்தை எரிப்போம்; எங்கள் நாட்டில் காந்தி சிலையிருப்பது கூடாது அகற்ற வேண்டும்' என்று சொல்லுகிறோம். காந்தியின் பெயரைச் சொல்லித்தானே பிழைக்கிறோம்; காந்திக்கு மரியாதை கெட்டுவிடும் போலிருக்கிறதே என்று நினைத்து அரசாங்கத்திற்கு சாதியை ஒழிக்க உணர்ச்சி வரலாம். "ஆகா! காந்தி படத்தை எரித்தால் ரத்தக் களறி ஆகும்!' என்கிறார்கள். ஆகட்டுமே என்ன நஷ்டம்?

(தர்மபுரியில், 19.9.1957 அன்று ஆற்றிய உரை. "விடுதலை' 9.10.1957)