Search This Blog

20.1.12

அவதாரங்கள் அழிவு வேலைக்கே! - பெரியார்

அவதாரங்கள் அழிவு வேலைக்கே!

அவதாரங்கள் அழிவு வேலைக்கே! கடவுள் அவதாரங்கள் என்பதெல்லாம் எதற்காகத் தோன்றின! எதற்காகக் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன! என்பதெல்லம் தெரியுமா?
அவதாரங்கள் எல்லாம் அழிவு வேலைக்கே தோன்றியவை என்பது முதலாவது உணரப்பட வேண்டும்!

திராவிடர்களை ஒழிக்க:

அவையாவும் ஆரியத்தை எதிர்த்து நின்ற திராவிடர்களை ஒழிக்கவே எதிர்ப்பு சக்திகளை ஒழிக்கவே தோன்றியவை! அல்லது தோற்று விக்கப்பட்டவை - அல்லது வேண்டுமென்றே கற்பனை செய்யப்பட்டைவை என்பது இரண்டாவதாக உணரப்பட வேண்டியதாகும்.


தசாவதார தத்துவமே அழிவு தத்துவந்தான். திராவிட கலாச்சார அழிவு தத்துவந்தான்! - திராவிட கலாச்சார ஒழிப்பு தத்துவந்தான்.

நம்மையும் ஒழித்திருப்பார்கள்:

மச்சாவதாரம் எடுக்கப்பட்ட காரணம் யாரோ ஒரு ராட்சதன் சாஸ்திரங்களை கொண்டுபோய் சமுத்திரத்தில் மறைத்துக் கொண்டான் என்பதுதான் நரசிம்ம அவதாரத்துக்குக் காரணம்!


இரணியன் - விஷ்ணுவின் தலைமையில் புகுத்தப்பட்ட ஆரிய கலாச்சாரத்தை ஒப்புக் கொள்ள மறுத்தான். இராம. அவதாரத்துக்குக் காரணம் இராவணன் ஆரிய பண்புகளான யாகத்தை தடைசெய்தான் ஆரியர்களின் பரவுதலைத் தடுத்தான் என்பதுதான்! இப்படியாக ஒவ்வோர் அவதாரமும் ஆரிய கலாச்சார எதிர்ப்புகளை ஒழிப்பதற்கென்றே ஏற்பட்டவையாகும். அதுபோலவே சிவன், கந்தன், முதலியவர்களும், இவர்களைப் பயன்படுத்தி அவர்களை ஒழித்ததுபோல் நம்மையும் ஒழித்திருப்பார்கள்!

----------------10.1.1950 இல் சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு

6 comments:

தமிழ் ஓவியா said...

மோடியின் பகுத்தறிவற்ற, தவறான தன்உணர்வு! குஜராத் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!


நீதியரசர் ஆர்.ஏ.மெஹ்தாவை லோக ஆயுக்தாவாக நியமித்த குஜராத் ஆளு நரின் அதிகாரத்தைப் பற்றி கேள்வி எழுப் பியிருந்த குஜராத் அரசின் மனுவை தள்ளுபடி செய்த குஜராத் உயர்நீதிமன்றம், ஊழலுக்கு எதிரான இந்த அமைப்புக்கான நியமனத்தைத் தடுத்து நிறுத்த முதல் அமைச்சர் நரேந்திர மோடி மேற்கொண்ட முயற்சிகளுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்து உள்ளது. அவரது செயல் மிகுந்த வெறுப்பால் விளைந்தது என்றும், எவருமே தன்னை எதிர்க்க முடியாது என்ற தவறான உணர்வை அவர் கொண்டிருப் பதை வெளிப்படுத்துவது ஆகும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்தை ஏற்றுக் கொள்ள முதல மைச்சர் தெளிவாக மறுத்துள்ளது. மக் களாட்சியின் சாரமான சட்டத்தின் ஆட்சி யில் உள்ள நம்பிக்கையையும், லோகாயுக்தா அமைப்பின் நேர்மையையும் சுக்கு நூறாக நொறுக்கியுள்ளது என்று நீதியரசர் வி.எம்.சகாய் 18 ஆம் தேதியன்று தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

முதல் அமைச்சரின் தலைமையிலான அமைச்சரவை பகுத்தறிவுக்குப் புறம்பாக இவ்வாறு துணிவுடன் நடந்து கொண் டிருப்பதைப் பார்க்கும்போது, ஆளுநர் கம்லா பேனிவால் அரசமைப்பு சட்டத்தின் 163 ஆவது பிரிவின்படி தனது அளிக்கப் பட்டுள்ள, தனது முடிவின்படி செயல்படும் அதிகாரத்தின் கீழ் ஓய்வு பெற்ற நீதிபதி மேதாவை லோகாயுக்தாவாக நியமித்தது சரிதான் என்று தான் கருதுவதாக தனது தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

யதேச்சதிகார செயல்!

யதேச்சதிகாரமாக செயல் பட்டதன் மூலம் முதல் அமைச் சர் ஒரு சிறிய அரசமைப்பு சட்ட நெருக்கடியை ஏற்படுத்தி விட்டார் என்று கூறிய நீதி பதி சஹாய் அமைச்சரவை யின் ஆலோசனையுடனோ, இல்லாமலோ நீதிபதி மேதாவை லோகாக்யுக்தாக நியமித்த ஆளுநரின் செயல், நமது மக் களாட்சி முற்றுகையிடப்படா மல் இருக்கவும், கொடுங்கோ லாட்சியைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட் டதே ஆகும் என்று நீதிபதி சஹாய் கூறினார்.

தமிழ் ஓவியா said...

நீதிபதி மேதா லோகாயுக்தாக நியமிக் கப்படுவது தனக்கு ஏற்புடையது அல்ல என் பதால் வேறொரு பெயரை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரைக்கக் கேட்டு முதலமைச்சர் நரேந்திர மோடி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், குஜராத் ஆளுநருக்கும் 2011 ஆகஸ்ட் 18 ஆம் தேதி கடிதம் எழுதியதை அவர் ஒப்புக் கொண் டுள்ளது, சட்டத்தின் ஆட்சி முழுமையாக செயல் இழந்து போகும் ஒரு நிலையை ஏற்படுத்துவதும், மக்களாட்சிக் கொள் கைகளை அழிப்பதும் ஆகும் என்று நீதிபதி சஹாய் கூறினார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதியன்று இரண்டு நீதிபதிகள் இருவேறு விதமான தீர்ப்பினை வழக்கியிருந்த நிலை யில், லோகாயுக்தாவாக நியமிக்கப்படுவ தற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிந்துரைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதையும், அரசுக்கோ எதிர்கட்சித் தலைவருக்கோ புதியதாக மற்றொரு பெயரைப் பரிந்துரைக்க வேண்டும் என்று கூறும் வீடோ அதி காரம் இல்லை என்பதையும், நீதிபதி சஹாயின் உத்தரவு நிலை நிறுத்திவிட்டது.

நீதிபதி சஹாயின் கருத்து கேட்கப்பட்ட, இரு நீதிபதி களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட மூன்று விஷயங்களில் முதல் அமைச் சர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோருக்கிடையேயான கலந்தாலோ சித்தல் முடிவுக்கு வந்துவிட்டதா என்பதும், ஆளுநர் தன்னிச்சையாக நீதிபதி மேதாவை நியமனம் செய்ததால் இந்த விவகாரத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டதா என்பதும், அமைச்சரவையின் உதவியும் ஆலோசனை யும் இல்லாமல் லோகாயுக்தா நியமன அறிவிப்பை வெளியிட ஆளுநர் அதிகாரம் பெற்றுள்ளாரா என்பதும், அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டுமா என்பதும் அடங்கும். தலைமை நீதிபதியின் முடிவு

தலைமை நீதிபதி ஒரு முறை பரிசீலனை செய்து, ஆட்சேபணைகளை நிராகரித்து விட்டு, ஒரு முடிவை மேற்கொண்ட பிறகு, தலைமை நீதிபதியின் முடிவை ஏற்றுக் கொள்வதைத் தவிர முதல் அமைச்சருக்கு வேறு வழியில்லை என்பதால், நீதிபதி மேதாவின் பெயரை முறைப்படி ஆளுநருக் குப் பரிந்துரைத்திருக்க வேண்டும்.

எதிர்கட்சித் தலைவரும் ஏற்றுக் கொண்டு விட்ட நீதிபதி மேதாவின் பரிந்துரைக்கும் முறையான கருத்துருக்களை அனுப்புமாறு முதல்வரைக் கேட்டு ஆளுநர் கடிதம் கூட எழுதியிருக்கிறார். ஆனால், குஜராத் லோகாயுக்தா சட்டத்தின் 3 ஆவது பிரிவின் படியும், அரசமைப்புச் சட்டத்தின் 163 ஆவது பிரிவின்படியும், தனது கட மையை நிறைவேற்றுவதற்கு மாறாக, புதிய பெயர் ஒன்றைப் பரிந்துரைக்குமாறு தலைமை நீதிபதிக்கு முதல் அமைச்சர் கடிதம் எழுதி விட்டு, தலைமை நீதிபதியின் பரிந்துரையை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஆளுநருக்கும் கடிதம் எழுதிவிட்டார்.

தமிழ் ஓவியா said...

1980 ஆண்டு முதல் உள்ள அனைத்து லஞ்ச ஊழல் குற்றச்சாற்றுகள் பற்றி விசாரிக்க நீதிபதி எம்.ஆர்.ஷா ஆணையம் நியமிக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் ஆளுநரின் கையெழுத் திற்காக அனுப்பப்பட்ட அவசரச் சட்டங் களும், முதல் அமைச்சர் ஏற்றுக் கொள்ளும் கடமை கொண்டுள்ள, தலைமை நீதிபதி யின் கருத்து பெற்றிருக்கும் உயர் அதிகாரத் தையும், முதன்மைத் தன்மையையும் ஏற்றுக் கொள்ளாமல் தான் நிராகரிக்கலாம் என்ற தவறான எண்ணத்தை முதல் அமைச்சர் கொண்டிருப்பதையே காட்டுகிறது என்று நீதிபதி சஹாய் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.
தற்போது எழுந்துள்ள இந்த வழக்கு தனித் தன்மை வாய்ந்த வழக்காகும். அசாதாரணமான சூழ்நிலைகளில் அசாதா ரணமான தீர்வுகள் தேவைப்படுகின்றன. தலைமை நீதிபதியின் கருத்தின் முதன் மைத் தன்மையை ஏற்றுக் கொள்ளாமல்முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை வெளிப்படையாக எதிர்த்தது ஒரு நெருக்கடியான சூடிநநிலையை உருவாக்கியுள்ளது என்று அந்த தீர்ப்பு கூறுகிறது. இந்த நியமனத்திற்கு நீதிபதி ஜே.ஆர்.வோராவின் பெயரைப் பரிந்து ரைக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்ட முதல் அமைச்சரின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், அது ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதுடன், லோகாயுக்தாவின் பரிசீலனைக்கு உள்ளாகக் கூடிய பொதுப்பதவிகளில் இருப்பவர்களை மனநிறை வடையச் செய்வதாகவும், சட்டத்தில் கூறப்பட்டுள்ள இந்த அமைப்பின் நேர்மையை அழிப்பதாகவும் அமைந்திருக்கும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

முதல் அமைச்சரின் கோபமூட்டும் கருத்துகள்

நீதிபதி மேதாவுக்கு எதிரான முதலமைச்சரின் ஆட்சேபணைகள் தகுதி நிறைந்த ஆதாரங்களின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்ட பிறகு அதற்கு முதல் அமைச்சர் தெரிவித்த கோபமூட்டும் கருத்துகள் அவரது இணக்கமற்ற அணுகுமுறையைக் காட்டுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் குறும்புச் செயல்கள் நமது மக்களாட்சியை அழிக்கும் நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருந்தன. நீதிபதி மேதாலோகாயுக்தாவாக நியமிக்கப்பட்டதைத் தடுத்து நிறுத்திய கேள்விக்குரிய செயல்சட்டத்தின் ஆட்சியையே அச்சுறுத்துவதாகும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டப்படியான தனது அரசமைப்புச்சட்ட கடமைகளை நிறைவேற்ற முதலமைச்சர் மறுத்ததும், லோகாயுக்தா சட்டத்தைத் திருத்த அவசர சட்டம் பிறப்பித்து,நீதிதிபதி மேதா லோகாயுக்தாவாக நியமிக்கப் பட்டதைத் தடுத்து நிறுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளும் ஒழுக்கக்கேடான, கொடுங் கோன்மையான செயல்களாகும். மேற்கூறப்பட்ட அசாதாரணமான உண்மைகள் மக்களாட்சியை சிதைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது என்பதை நிலை நாட்டுகின்றன.முதலமைச்சரின் செயலால் உருவாக்கப்பட்டுள்ள தவறான எண்ணம் போக்கப்படவேண்டியதும், மக்களாட்சி சிறப்பாக
செயல்படுவதற்காக பொறுப்பு நிறைந்த அரசமைப்பு சட்ட முடிவை ஆளுநர் மேற்கொள்ள வேண்டியதும் அவசியமானதாகும்.முதல் அமைச்சர் மற்றும் அமைச்சரவையின் செயல்களும் நடத்தையும் நமது மக்களாட்சிக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் கேடு விளைவிப்பதாக இருந்தகாரணத்தால் முற்றுகையிடப்படுவதில் இருந்து நமது மக்களாட்சி காப்பாற்றப்படுவதற்கும், கொடுங் கோலாட்சியைத்தடுத்து நிறுத்தவும், முதல் அமைச்சரின் தலைமையிலான அமைச்சரவையின் பரிந்துரை அல்லது ஆலோசனைக்கு
மாறாக, நீதிபதி மேதாவை லோகாயுக்தாவாக நியமிக்க தனது உசிதம் போல் முடிவெடுக்கும் அரசமைப்பு சட்டத்தின் 163 ஆவது பிரிவில் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை ஆளுநர் பயன்படுத்தவேண்டியது தவிர்க்க இயலாதபடிமுற்றிலும் இன்றியமையாததாக ஆகிவிட்டது என்று நீதிபதி சஹாய் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

(நன்றி: தி ஹிந்து 20-1-2012,
மனாஸ் தாஸ்குப்தா - தமிழில்: த.க.
பாலகிருட்டிணன்)

தமிழ் ஓவியா said...

வாய் திறந்தது இந்தியா: ஈழத்தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு


இலங்கையில் ஆட்சி அதிகாரத்தில் தமிழர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் அதிகாரப் பகிர்வு அளிக்க வேண்டியது அவசியம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வாய் திறந்தார்.

இதற்காக 13ஆவது அர சியல் சாசனப் பிரிவை வெளிப் படையான வகையில் அமல் படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். இலங்கை யில் நான்கு நாள் பயணத்தை முடித்துக் கொண்ட அவர், சிறப்பு விமானத்தின் மூலம் வியாழக்கிழமை நாடு திரும் பினார். வழியில் தன்னுடன் விமானத்தில் வந்த செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார். தனது பயணத்தின்போது அதிபர் மஹிந்த ராஜபக்சே உள்ளிட்டோருடன் நடத்திய பேச்சுகள் திருப்தியளிப்பதாக அவர் தெரிவித்தார். இலங்கை யில் அரசியல் ரீதியிலான தீர்வுகளுக்காக அந்நாட்டு தலைவர்கள் எடுத்துவரும் நடவடிக்கை இந்தி யாவுக்கு மகிழ்ச்சி யளிக்கும் வகையில் இருக்கிறதா, மேலும் தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறதா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த கிருஷ்ணா, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வகை செய்யும் இலங்கை அரசியல் சட்டத்தின் 13ஆவது பிரிவு அமல்படுத் தப் பட வேண்டும்' என்றார்.

சந்தேகம்!

இனப் பிரச்சினைக்குத் அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் குறித்து சில தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தேகம் எழுப் பினர். அதனால் இது தொடர் பாக ராஜபக் சேவுடன் பேச வேண்டிய அவசியம் ஏற்பட் டது. அதிகாரப் பகிர்வு அளிக்கும் வகை யில் 13ஆவது அரசியல் சாசன சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவோம் என்று ராஜ பக்சே என்னிடம் உறுதி யளித்தார்' என்று கிருஷ்ணா தெரிவித்தார். இலங்கைப் பயணத்தின் போது கிருஷ்ணாவை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த வர்கள், அரசியல் ரீதியான தீர்வை எட்டுவதில் இலங்கை அரசு அக்கறையுடன் செயல் படவில்லை என்று குற்றம்சாட்டினர். இதையே கிருஷ்ணா தனது பேட்டியின் போது குறிப்பிட்டார். இந்தியா சார்பில் இலங்கையில் செய்யப் பட்டுவரும் வளர்ச்சிப் பணி களில் திருப்தியளிக்கும் வகையில் முன் னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் செய்தி யாளர்களிடம் கிருஷ்ணா தெரிவித்தார். ஒட்டுமொத்தமாகக் கூறுவதென்றால், பிரதமர் மன்மோகன் சிங்கால் அறிவிக் கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தீவிர மாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்கிற திருப்தி எனக்கு ஏற்பட்டிருக் கிறது என்றார் அவர்.

கல்வி உதவித் தொகை

இலங்கைக்கு அளிக்கப் படும் கல்வி உதவித் தொகையை ரூ. 100 கோடியாக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். இதன்படி இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான உதவித் தொகை 270 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இலங்கை எதிர்க்கட்சியின் சந்தேகம்!

தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடர்பாக அளித்த உறுதிமொழியை ராஜபக்சே நிறைவேற்ற மாட்டார் என்று ரனில் கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

இலங்கையின் எதிர்க் கட்சியாக, ரனில் விக்கிரம சிங்கேவின் அய்க்கிய தேசி யக்கட்சி உள்ளது. இதன் துணைப் பொதுச்செயலா ளராக உள்ள ஜெயலத் ஜெயவர்த்தனே விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- இலங்கை வந்துள்ள இந் திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, அதிபர் மகிந்த ராஜபக் சேவை சந்தித்தார். அதன் பின்னர் அவர், செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்த போது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்லத் தயார் என்று அதிபர் தம்மிடம் தெரிவித் ததாக கூறியிருந்தார்.

இதேபோன்றே யுத்தம் நிறைவடைந்த அதாவது 19.5.2009 ஆம் தேதி இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்லத் தயார் என்று இந்தியாவிடம் உறுதிமொழி அளித்திருந்தார். அதிபர் ராஜபக்சே வழங் கிய இந்த உறுதிமொழியை அடுத்தே யுத்தத்திற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங் கியது. அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இப்போதும், அதை போலவே 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி அதற்கு அப்பாற்சென்று அரசியல் தீர்வுகாண இணக்கத்தை வெளியிட்டு உள்ளார் அதிபர். எனினும் அர சாங்கத் தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சி களான ஜாதிக்க ஹெல உறுமய மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் இதற்கு ஒத்து ழைப்பு வழங்குவார்களா என்ப தில் சந்தேகம் எழும்பியுள்ளது.

எனவே, அரசின் இவ் அறி வித்தலானது இலங்கைத் தமி ழர் மட்டுமின்றி இந்தியாவை யும் ஏமாற்றும் செயற்பாடா கவும் மாறலாம். 13ஆவது திருத் தத்தை நடைமுறைப் படுத்தும் நிலைப்பாட்டிலேயே அய்க்கிய தேசியக் கட்சி உள்ளது. எனவே, 13ஆவது திருத்தத்தின் ஊடாக இனப் பிரச்சினைக் குத் தீர்வொன்றை வழங்க அரசுக்கு இதுவே சிறந்த தருணம். - இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

செய்திச் சிதறல்கள்!

உயர் கல்வி மற்றும் ஆராய்ச் சிக்கான மசோதாவை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச் சகம் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவை எதிர்த்து இன்று எதிர்ப்புத் தினம் கடைப்பிடிக் குமாறு பார் கவுன்சில் அறிக்கை வெளியிட் டுள்ளது.

உயர்கல்வி என்பதில் எல்லாப் பிரச்சினைகளிலும் மத்திய அரசு மூக்கை நுழைக்கிறது.

அகில இந்திய நுழைவுத் தேர்வு களைத் திணிக்கின்றது. சட்டம் படித்து பட்டம் பெற்ற பிறகு அவர்கள் அகில இந்தியத் தேர்வு ஒன்றை எழுத வேண்டுமாம்.

அப்படி என்றால் சட்டக் கல்லூரி யில் பயின்று தேர்வு எழுதி பல்கலைக் கழகம் பட்டம் வழங்குகிறதே அதற்கு மரியாதையே கிடையாதா?

பொதுவாக அகில இந்தியா என்று சொன்னாலே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது - உயர்ஜாதி யினருக்குப் பச்சை கொடி காட்டுவது என்று பொருள்.

கல்வி மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதுதான் ஒரே தீர்வு. டபிரதமர் முன்னிலையில் தமிழ்நாடு - கேரள மாநில முதல் அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தி முல்லைப் பெரியாறு பிரச் சினைக்குத் தீர்வு காண வேண்டும்.

- மத்திய அமைச்சர் வயலார் ரவி

நல்ல மனசுதான். முதல் அமைச் சர்கள் பேச்சு வார்த்தை நடத்துவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் ஏற்பட்ட பலன் என்ன? விளக்கெண்ணெய்க் குக் கேடாக முடிந்திருக்கிறதே தவிர, பிள்ளை பிழைத்த பாடில்லையே. உச்சநீதிமன்றத் தீர்ப்பையே குப்பைக் கூடையில் தூக்கியெறியத் தயாராகி விட்டவர்கள் - பேச்சு வார்த்தைக்கு எப்படி கட்டுப்படுவார்கள்? உண்மையிலே தூங்கியவர்களை எழுப்பி விடலாம், பாசாங்கு செய்பவர்களை எழுப்ப முடியுமா? டதிருமணங்களுக்கு நிழற்படம் எடுக்கும் துறையில் இறங்கி வெற்றி பெற்றுள்ளேன்.

- ஜெயந்தி

சில துறைகளில் பெண்கள் கால் வைப்பதில்லை; அதில் ஒரு துறை இந்த நிழற்படத் துறை. இதில் எங்கு பார்த்தாலும் ஆண்கள் ஆதிக் கம்தான். எந்த நிகழ்ச்சியிலாவது பெண்கள் நிழற்படம் எடுத்தால் அதனை ஆச்சரியமாக வேடிக்கை பார்க்கிறார்கள்.
ஓட்டுநர் தொழிலும் இதில் ஒன்று. இப்பொழுதுதான் அரச புரசலாக ஒன்றிரண்டு தலைகாட்டு கிறது. ஆணுக்கு நிகர் பெண் என்பது வார்த்தையால் ஆகக் கூடியதல்ல. செயல்பாடுகளால் உறுதிபடுத்தப்பட வேண்டும்.

மதுரை மீனாட்சி அம்ம னுக்கு ரூ.1.50 கோடி செலவில் வைரக் கிரீடம். நேற்று உபயமாக வழங்கப்பட்டது. உருவமற்றவர் கடவுள் என்று சொல்லுவது - பிறகு உருவங்களை உருவாக்குவது. எங்கும் நிறைந்தவர் கடவுள் என்பது - பிறகு கோவில் களைக் கட்டி இங்கு தான் கடவுள் இருக்கிறார் என்பது. வேண்டுதல் - வேண்டாமையுடையோன் கடவுள் என்பது. பிறகு அந்தக் கடவுளுக்கு ஆறு வேளை பூஜை படையல் வைர முடிகள்..

இத்தியாதி இத்தியாதி கூத்துகள்.

வறுமைக்கோட்டுக்கும் கீழ் 40 சதவிகித மக்கள்; நாள் வருவாய் வெறும் 20 ரூபாய் என்ற நிலையில் 77 சதவிகிதம் உள்ள நாட்டில் குழவிக் கல்லுக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்பில் வைர முடியாம்! என்னே மனிதநேயமற்ற செயல்!
--”விடுதலை” 20-1-2012

மாசிலா said...

அவதாரம் என்பது (ஆங்கி)இலத்தீன் மொழி AVATAR அதாவது கற்பனை உருவம்/நபர் என ஏற்றுக் கொள்ளாமா? என்னை பொறுத்தவரை அதுவும் இதுவும் ஒன்றே. அதாவது அனைத்தும் கற்பனையில் உறுவாக்கப்பட்ட பொய் பாத்திரங்களே.
பகிர்வுக்கு நன்றி.