Search This Blog

1.3.11

2 ஜி அலைக்கற்றையின் பின்னணி என்ன? உறைய வைக்கும் தகவல்கள் - 2

குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கை எப்படி வெளியானது? ஏன் கைது செய்யவில்லை?

தமிழர் தலைவர் ஆதாரத்துடன் கேள்வி


குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கை எப்படி வெளியானது? ஏன் இதைப் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை? ஏன் வெளியிட்டவர்களை கைது செய்யவில்லை? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.

திண்டுக்கல்லில் 17.2.2011 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஜெயலலிதா தொலைக்காட்சியில்...

ஜெயலலிதா தொலைக்காட்சியில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி என்று சொல்லுவார்கள். இன்னொருவர் சு.சாமி என்று இருக்கிறார். அவர் அவ்வளவு, இருக்காது என்று சொல்லுவார். இன்னொருவர் குருமூர்த்தி அய்யர் என்பவர் இண்டியன் எக்ஸ்பிரசில் இருக்கின்ற ஆர்.எஸ்.எஸ்.காரர், அவர் சொல்லுகிறார் 24 ஆயிரம் கோடிக்கு மேல் சொல்லக்கூடாதுங்க என்று சொல்லுகின்றார்.

பா.ஜ.க வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஷோரிக்கு சி.பி.அய் சம்மன் அனுப்பியிருக்கிறது. அவர் சென்னைக்கு வந்து ஒரு பேட்டியில் சொன்னார். 24 ஆயிரம் கோடி 30 ஆயிரம் கோடிக்கு மேல் சொல்லக்கூடாது. அதற்குள்ளேதான் சொல்ல வேண்டும். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்று சொல்லாதீர்கள் என்று அவர் சொன்னார்.

சி.பி.அய்யினுடைய எஃப்.அய்.ஆரில் போடப் பட்டது என்ன? 12 ஆயிரம் கோடி என்று போடப்பட்டது. இவற்றை எல்லாம்காட்டி ஏதாவது குறை சொல்லப் பார்க்கிறார்கள். தி.மு.க ஆட்சி ஒழிக்க முடியாத ஆட்சியாக இருக்கிறது. இந்த ஆட்சியை ஊழலோ ஊழல் என்று சொல்லிப் பார்க்கிறார்கள்.

இவர்கள் என்ன பரிசுத்தமானவர்களா?

இவர்கள் எல்லாம் பரிசுத்தமானவர்கள் அல்ல என்பது வேறு செய்தி. இதோ என்னுடைய கையில் இருப்பது சி.ஏ.ஜி ரிப்போர்ட். இது கணக்குத் தணிக்கையாளர் ரிப்போர்ட்.

எங்களுக்கும், மற்றவர்களுக்கும் என்ன தொல்லை என்றால், நாங்கள் எதையும் ஒழுங்காகப் படித்துத் தொலைக்கிறவர்கள். அதுதான் சங்கடமே (கைதட்டல்).

நாங்கள் பெரியாரிடம் இருந்ததாலே எதையும் ஆதாரத்தோடு சொல்ல வேண்டும். படித்துச் சொல்ல வேண்டும். புரிந்து சொல்ல வேண்டும், தெளிவாகச் சொல்ல வேண்டும்; நியாயமாக இருப்பதைச் சொல்ல வேண்டும்.

நிறையப் புத்தகங்கள் இங்கே விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கிப் பாருங்கள். எல்லா செய்திகளையும் குறுகிய நேரத்தில் சொல்லிவிட முடியாது. சுருக்கமாக செய்தியைச் சொல்லு கின்றேன்.

முதல் குற்றவாளியே ஜெயலலிதாதான்!

ஆகா, இராசவைக் கைது செய்து விட்டார்களே, இன்றைக்கு அவர் திகார் சிறைச் சாலைக்குப் போய் விட்டாரே என்று சொல்லுகிறார்கள்.

பொது வாழ்க்கையில் இருக்கிறவர்கள் சிறைக்குப் போவதாலேயே குற்றவாளி என்று சொன்னால் முதல் குற்றவாளியாக இருக்க வேண்டியவர் எதிர்க்கட்சித் தலைவர்தான் (கைதட்டல்). அந்த அம்மையார் மீது சொத்து குவிப்பு வழக்கு என்று எத்தனையோ வழக்கு- சி.பி.அய் வழக்கு இருக்கிறது.

அன்றைக்கும் நாங்கள் இதைத்தான் சொன்னோம். இன்றைக்கும் நாங்கள் இதைத்தான் சொல்லுகின்றோம். எங்களுக்கு எங்கள் நிலையில் ஒன்றும் மாறுதல் இல்லை. குற்றவாளி என்று தீர்ப்பு வரவேண்டும். அதுவும் இறுதியாக வழங்கக்கூடிய தீர்ப்பு. அதிலேகூட பல நேரங்களில் தவறுகள் நடப்பது உண்டு.

ஆ.இராசா சொல்கிறார்...!

இன்றைக்கு ஆ.இராசா அவர்கள் எவ்வளவு தெம்போடு, துணிவோடு-ஒன்றும் பயப்பட வில்லை. மற்றவர்கள் மாதிரி இல்லை. திகார் ஜெயிலுக்குப் போகிறார் என்றால் என்ன அர்த்தம்?

ஆ. இராசா சொல்லுகிறார், என்னுடைய குற்றமற்ற தன்மையை நிரூபித்துக் காட்டி வெளியே வருவேன் என்று. இப்படி துணிச்சலாக பத்திரிகையாளரிடம் சொல்லிவிட்டுத்தான் அவர் சிறைக்குப் போயிருக்கிறார்.

ஆ.இராசா இருக்கின்ற திக்கு நோக்கி உண்மையான திராவிடர் இயக்கத் தோழர்கள் வாழ்த்துகிறார்கள், வரவேற்கிறார்கள். ஏனென்றால் அவர் தவறு செய்யவில்லை.

பிரதமர் சொல்லியிருக்கின்றார்

தவறு பண்ணவில்லை என்று நான் சொல்லவில்லை. பிரதமர் சொல்லியிருக்கின்றார். பிரதமருடைய அந்தப் பேட்டியில் ரொம்பத் தெளிவாக பதில் சொல்லியிருக்கின்றார்.

தி.மு.க மீது அபவாதம், தி.மு.க மீது பழி இவற்றைதான் சொல்லுகிறார்கள். முதலில் இந்த உண்மைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

தணிக்கையாளர் அறிக்கை

தணிக்கையாளர் அறிக்கையில் முன்னுரையில் சொல்லுகிறார். இங்கே மேடையிலே வழக்குரைஞர்கள் இருக்கிறார்கள். எதிரிலேயும் நிறைய நண்பர்கள் இருப்பார்கள்.

என்னுடைய உரையையும் கேட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு நான் சொல்லுகின்றேன்- அரசியல் சட்ட விதிப்படி, 151ஆம் பிரிவின்படி. இவர் இந்தத் தணிக்கை அறிக்கையைத் யாருக்காக தயாரிக்கிறார்? குடியரசுத் தலைவருக்காகத் தயாரிக்கிறார். குடியரசுத் தலைவரிடம் இந்த அறிக்கையை ஒப்படைக்கின்றார்-கையெழுத்துப் போட்டு.

எப்படி வெளியானது?

குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது எப்படி வெளியே வந்தது? நாடாளுமன்றத்திலே தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னாலே எப்படி வெளியே வந்தது என்பதை இதுவரை மத்திய அரசோ, சி.பி.அய்யோ ஏன் கண்டு பிடிக்கவில்லை? ஏன் அந்த முயற்சியிலே ஈடுபாடு காட்டவில்லை? அது இன்றைக்கும் நிற்கக் கூடிய கேள்வி, பதில் கிடைக்காத கேள்வி. அதுதான் ஏன் என்று தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்க வேண்டுமா- இல்லையா?

எம்.ஜி.ஆர் காலத்தில் வழக்குப் போட்டாரே!

பால் கமிசன் அறிக்கையை வெளியே விட்டார் என்று எம்.ஜி.ஆர் காலத்தில் வழக்கு போட்டார்களா- இல்லையா? ஏற்கெனவே முன்னுதாரணம் இருக்கிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இது சி.ஏ.ஜி ஆடிட் ரிப்போர்ட். 2 ஜி ஸ்பெக்ட்ரத்தைப் பற்றி இதில் ஊழல் என்றால் 2004இலிருந்து சொல்ல வேண்டுமா, இல்லையா? 2003,2004 ஆம் ஆண்டைப்பற்றிச் சொல்லவே இல்லையே! இராசா எந்தக் காலத்தில் இருந்தாரோ அதைப் பற்றி மட்டும் சொல்லுகிறார் என்று சொன்னால், இது உள்நோக்கத்தோடு செய்யப் பட்டதா, இல்லையா? தயவு செய்து நடுநிலையா ளர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். விருப்பு, வெறுப்பு இல்லாமல் பார்க்க வேண்டும். அதற்கடுத்து பல செய்திகள் இருக்கின்றன. கடைசியாக இந்த அறிக்கையை முடிக்கும்பொழுது 1,76,000 கோடி நட்டம் என்று உறுதியாகச் சொல்லியிருக்கின்றாரா? தயவு செய்து ஆளுக்கு ஆள் சொல்ல வேண்டிய அவசியமென்ன?

நட்டம் ஏற்பட்டிருக்கலாம்!

பக்கம் 59இல் சொல்லுகிறார். 2ஜி அலைக் கற்றையில் நட்டம் ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லிவிட்டு, அடுத்த வாக்கியம்-என்றாலும், எவ்வளவு நட்டம் வந்தது என்பதை நாம் பேசி முடிவு பண்ணிக்கொள்ளலாம். இன்றைக்குப் பத்திரிகை யாளர்களும், மற்றவர்களும் என்ன சொல்லு கிறார்கள். மத்திய அமைச்சர் கபில்சிபல் சொன்னார்-ஒன்றும் இதில் நட்டமே கிடையாது. ஏனென்று கேட்டால் இது கற்பனையில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஏலம் விட்டிருந்தால்...

ஏலம் விட்டிருந்தால்... ஆனால் ஏலம் விடவில்லை. ஏன் ஏலம் விடவில்லை? காரணம் இருக்கிறது. அதற்கு உள்நோக்கம் எதையும் சொல்ல முடியாது. ஏலம் விட்டிருந்தால் முதலாளிகள் அதிகம் எடுத்திருப்பான்.

பல பேருக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்திருக்க முடியாது. இப்படி போட்டி வந்திருக்க முடியாது. இதற்கு முன்பு செல்ஃபோன் கட்டணம் ஒரு ரூபாய் என்று இருந்தது. ஆ.இராசா காலத்திற்குப் பிறகுதான் 20 காசு, 30 காசு என்று வந்தது.

கொள்கை முடிவை எடுத்தது யார்?

அது மட்டுமல்ல; இந்தக் கொள்கை முடிவை யார் எடுத்தது? அமைச்சர் ஆ.இராசா எடுத்ததல்ல. இன்னும் கேட்டால் யு.பி.ஏ என்று சொல்லக்கூடிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த முடிவல்ல. 2003ஆம் ஆண்டிலிருந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது. அப்பொழுது வாஜ்பேயி பிரதமர். அப்பொழுது தகவல் துறையிலே பிரமோத் மகாஜன் அமைச்சராக இருந்திருக்கின்றார்.

பிரமோத் மகாஜனுக்கு அடுத்து அருண்ஷோரி அமைச்சராக இருந்திருக்கிறார். அதற்குப் பிறகு தயாநிதி மாறன் அமைச்சராக இருந்திருக்கிறார். அதற்குப் பிறகு இராசா அமைச்சராக வருகிறார்.

பி.ஜே.பி. ஆட்சியில் எடுத்த முடிவு!

ஆகவே, பி.ஜே.பி ஆட்சியில் 2003இல் என்ன முடிவு எடுத்தார்களோ அதுதான் தொடருகிறது. அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டும். மக்களுக்கு ஒன்றுமே புரியாது என்று நினைத்துக் கொண்டு சொல்லுகிறார்கள்.

ஆகா! 1,76,000 கோடி ஏதோ மூட்டை கட்டி தூக்கிக்கொண்டு போன மாதிரி சொல்லுகிறார்கள். ஆகா ஒவ்வொரு ரூபாயாக நோட்டை அடுக்கினால் அது எவ்வளவு தூரம் வரும் என்று சொல்லுவது இருக்கிறது பாருங்கள். அது நடைமுறைக்குப் பயன்படுமா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

விவாதம் பண்ணி முடிவெடுப்பதா?

ஏலம் விட்டிருந்தால் இவ்வளவு கிடைத்திருக்கும் என்று ஒரு கட்டம் கட்டி சொல்லுகிறார் என்றால், அதை நாம் விவாதம் பண்ணி முடிவுபண்ணிக் கொள்ளலாம் என்று வந்தால் இரண்டும், இரண்டும் நான்கு என்றால் நான்குதான்.

இரண்டும், இரண்டும் எட்டு என்று ஒருவர் சொல்லுகிறார். என்னங்க ஒருத்தர் நான்கு என்று சொல்லுகின்றார். இன்னொருத்தர் எட்டு என்று சொல்லுகின்றாரே என்று கேட்டால், விவாதம் பண்ணி எந்த விடை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம் என்று சொன்னால் என்ன அர்த்தம்?

அது மாதிரியான, அவ்வளவு மோசடியான சூழல். இதை வைத்துக்கொண்டு ஒரு பழியைச் சுமத்துவதற்கு வாய்ப்பாக இன்றைக்கு அதைப் பயன்படுத்துகின்றார்கள்.

1 ஜி என்றால்...

இந்த நேரத்தில் ஒன்றைச் சொல்லுகின்றேன். நான், நமது சுப.வீ., மற்ற நண்பர்கள் எல்லாம் எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்தோம். அதில் அவர் சொன்னார்.

1 ஜி என்பது முதல் தலைமுறை- First Generation;

2 ஜி என்பது இரண்டாவது தலைமுறை- Second Generation.

3 ஜி மூன்றாவது தலைமுறை,

4 ஜி நான்காவது தலைமுறை. எதை வைத்து நிர்ணயம் செய்கிறார்கள் என்று சொன்னால், அலைக்கற்றை வேகம், அதன் தன்மையை வைத்து நிர்ணயம் செய்கிறார்கள். டெலிஃபோன் துறையில் இருக்கக் கூடிய பொறியாளர்கள் இங்கே இருக்கிறார்கள்.

1 ஜி என்றால் என்ன விளக்கம்? போலீஸ்காரர்கள் கையில் வாக்கி டாக்கி வைத்திருக்கிறார்கள். மேல் அதிகாரி கேட்பார்- வீரமணி மேடைக்கு வந்து விட்டாரா? இங்கே வாக்கி டாக்கி வைத்திருப்பவர் நான் வந்துவிட்டதைப் பார்த்துவிட்டு இவர் ஓவர் என்று சொல்லுவார். இவர் ஓவர் என்று சொல்லி முடித்த பிற்பாடுதான் அவர் பேச முடியும். அவர் சொல்லி முடித்த பிற்பாடுதான் இவர் பேச முடியும். இதுதான் 1 ஜி இது முதற்கட்டம்.

இரண்டாவது தலைமுறை-2 ஜி

இரண்டு பேரும் இதில் டைரக்டாகப் பேச முடியாது. இந்த இரண்டு பேரும் சேர்ந்து பேசுவது. அதுதான் 2 ஜி-அதுதான் இந்த செல்ஃபோன் வேறொன்றுமே இல்லை. நாம் ஹலோ என்று சொன்னவுடனே அடுத்த முனையில் இருக்கிறவரும் ஹலோ என்று சொல்லுகின்றார்.

2ஜி யில் இரண்டு பேரும் டைரக்டாகப் பேசலாம். இதனுடைய வேகத் தன்மைவேறு. இதைவிட சக்தி வேண்டும். இதைவிட வேகம் வேண்டும். ஏனென்றால் வியாபாரம் வளருகிறது. ஒவ்வொரு நிமிடமும் ரொம்ப மிக முக்கியம். அறிவியல் வளர்ந்திருக்கிறது. இப்பொழுது அணுவையே துளைக்கிறான்- ஹவடிஅ என்பதை உடைத்துதான். இது நானோ டெக்னாலஜி. இப்படி உடைத்து, உடைத்து தொழில் நுட்பம் வளருகிறது.

3 ஜி என்பது முகம் பார்த்துப் பேசுவது

இது 4 மெகாஹெர்ட்ஸ் என்றால் 3 ஜிக்கும் மெகாஹெர்ட்ஸ் வரும். முதலில் ஓவர்-1 ஜி. இரண்டு பேரும் பேசினால் அது 2ஜி. மூன்றாவது ஜி இருக்கிறது பாருங்கள், ஏலம் விட்டார்களே, லாபம் வந்ததே-அது என்னவென்றால் முகத்தைப் பார்த்துப் பேசலாம். கலைஞர் சென்னையிலிருந்து கால்டுவெல்லுக்கு நினைவுச் சின்னத்தைத் திறக்கிறார். வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக-காணொலி மூலமாக தொடங்கி வைக்கிறார். பாளையங்கோட்டையில் நிகழ்ச்சி நடக்கிறது.

60 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்

இந்தச் செய்தியை 60 ஆண்டுகளுக்கு முன்னாலே தீர்க்கதரிசனமாக பெரியார் அவர்கள் சொன்னார். இனிமேல் வருகிற காலத்தில் ஒவ்வொருவருடைய கையிலும் தொலைபேசி இருக்கும். அதுமட்டு மல்ல; ஆளுக்கு ஆள் உருவம் காட்டிப் பேசுவார்கள்.

ஒரு வகுப்பில் ஓர் ஆசிரியர் இருந்தால் போதும் எல்லா வகுப்பு மாணவர்களும் அதைக் கேட்கலாம். வீடியோ கான்ஃபரன்சிங்கில் நேரடி யாகப் பேசலாம். 3ஜி டெலிஃபோன் வாங்கினால் அதில் உங்க ளுடைய உருவம் வரும். முகத்தைப் பார்த்துப் பேசலாம். ஒரே ஒரு வசதி குறைவு. நம்மாள் ஃபோனை எடுத்து வைத்துக்கொண்டு சொல்லு வான்:

ஓ அவர்தானுங்களே! அவர் இல்லிங்களே! என்று அவரே சொல்லிவிடுவார். இப்பொழுதுதான் வெளியே போனாருங்க என்று இவரே சொல்லுவார்.

நீங்கள் யாருங்க என்றுகேட்டால், நான் வேலைக்காரன் என்று சொல்லுவார். இதுதான் 3ஜி என்று பெயர். உருவத்தை நேரடியாகப் பார்த்துப் பேசுவது.

அதைவிட இன்னும் வேகமாகப் போவது என்னவென்றால் இஸ்ரோவுக்கெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றார்களே, இதெல்லாம் நான் காவது ஜெனரேஷன். வளர்ச்சி என்று சொல்லக் கூடிய அளவுக்கு இருக்கிறது.

இந்த 2 ஆவது ஜி.யில் எப்படிக் கொண்டு போவது? அமைச்சர் நினைத்தால் உடனே உத்தரவு போட முடியாது. டிபார்ட்மென்ட் ஆஃப் டெலி கம்யூனிகேசன் என்று இருக்கிறது-தொலைத் தொடர்புத் துறை என்று இருக்கிறது.

டிராய் அமைப்பு

இன்னொன்று டிராய் என்கிற அமைப்பு. தொலைத் தொடர்புத் துறைக்கு ஆலோசனை கூறுகின்ற அமைப்பு. கூநடநயீடிநே சுநபரடயவடிசல ஹரவாடிசவைல டிக னேயை கூசுஹஐ இதை எப்படி கொடுக்க வேண்டும்? எப்படி நடத்த வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

இதில் எல்லா நிபுணர்களும் இருக்கிறார்கள். எல்லா அமைப்பைச் சார்ந்தவர்களும் இருக்கி றார்கள். அதுதான் முடிவெடுக்கக் கூடிய அமைப்பு. அதையும் மீறி அமைச்சர் முடிவெடுக்க முடியாது. இந்த அம்சங்களை மக்களுக்கு யாரும் விளக்கு வதில்லை.

பிரதமர்கூட அப்படிச் சொல்ல முடியாது

இது ஏதோ அவரே சுதந்திரமானவர் மாதிரியும் அவரே முடிவெடுக்கிற மாதிரியும் நினைக்கக் கூடாது. யார் முன்னாலே வருகிறார்களோ அவர்களுக்கும் முன்னுரிமை முதலில் கொடுக்கப் படும். இது எனக்குத் தெரியாது என்று பிரதமர் சொல்லியிருந்தால்கூட-அது இவருடைய காலத்தில் எடுக்கப்பட்ட முடிவல்ல.

அந்த முடிவு யாருடைய காலத்தில் எடுக்கப் பட்டது? வாஜ்பேயி காலத்திலேயே எடுக்கப்பட்ட கொள்கை முடிவு-ஏனென்றால் எல்லா இடத்திற்கும் பரவலாகப் போக வேண்டும். எல்லா கிராமங்களுக்கும் டெலிஃபோன் போக வேண்டும்.

எல்லோர் கையிலேயும்...

எல்லோருடைய கையிலேயும் வரவேண்டும். அது நிறைய பேருக்குக் கிடைக்கக் கிடைக்க, பயன்பாடு அதிகமாக வர, வர அதனுடைய செலவு குறையும். செலவு குறையக் குறைய போட்டிகள் வரும்.

போட்டிகள் வரும்பொழுது கட்டணத்தினுடைய விகிதம் குறைந்தால்தான் அவர்கள் அந்தத் தொழிலை நடத்த முடியும்.

------------------- தொடரும் ............."விடுதலை” 1-3-2011

8 comments:

Unknown said...

கேட்கிறவன் கேனையனா இருந்த மயிருமணி என்ன வேணா சொல்வாரு.
மின்சாரமே இல்லாத பொது TV கொடுத்த மாதிரிதான் இதுவும்.
நாடு மிகப்பெரிய நிதிநெருக்கடியில இருக்கும் பொது குறைந்த செலவுல பேசாட்டிதான் என்ன?

தமிழ் ஓவியா said...

உங்களைப் போன்ற அறிவு(ம)டையவனை இதுநாள் வரை உலகம் கண்டதில்லை. உங்களின் மயிறுபிளக்கும்வாதத்தைக் கண்டு அடுத்த நோ”பல்” பரிசு உங்களுக்குத்தான்.
Tamil

Kartheesan said...

இழப்பு என்பதை வீரமணி ஒத்துகொள்கிறார், இதில் ஆயிரம் ருபாய் என்ன? கோடி என்ன? எந்த வழக்கிலாவது அரசியல்வாதிகள் தண்டனை பெற்றிருக்கிறார்களா? இவருக்கு எப்போது தீர்ப்பு வந்து ராசாவை தண்டிக்க? இதெல்லாம் நடக்க கூடியதா? முந்தைய ஆட்சியிலும் இது நடந்தது என்று இவர்கள் சொல்கிறார்கள் என்றால் முதலில் இவர்களை கட்டிவைத்து உரிக்க வேண்டும், அவர்கள் மேல் ஏன் நீதிமன்றத்தில் வழக்கு செய்யவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் எதை புடுங்கி கொண்டு இருந்தாரகள். இதனை ஆயிரம் கோடி இழப்பு அரசியல் சொறி நாய்களுக்கு இல்லை, பொதுமக்களாகிய எங்களுக்குத்தான். மேலும் மேலும் பணக்காரனாகும் இந்த அரசியல் வியாதிகள் மக்கள் புரட்சி என்னும் ஒரு நாள் போராட்டத்தில் இருந்த இடம் தெரியாமல் போய் விடுவார்கள். மற்றபடி வீரமணி எதற்கு கலைஞருக்கு ஜால்ரா அடிக்கிறார் என்று உங்களுக்கு தெரியாதா? அல்லது ஊருக்குதான் தெரியாதா? முதலில் ஒழிக்கவேண்டியது இதுபோன்ற ஜால்ராக்கள் மட்டுமே, மற்றவை தானாக அடங்கிவிடும்.

Kartheesan said...

இழப்பு என்பதை வீரமணி ஒத்துகொள்கிறார், இதில் ஆயிரம் ருபாய் என்ன? கோடி என்ன? எந்த வழக்கிலாவது அரசியல்வாதிகள் தண்டனை பெற்றிருக்கிறார்களா? இவருக்கு எப்போது தீர்ப்பு வந்து ராசாவை தண்டிக்க? இதெல்லாம் நடக்க கூடியதா? முந்தைய ஆட்சியிலும் இது நடந்தது என்று இவர்கள் சொல்கிறார்கள் என்றால் முதலில் இவர்களை கட்டிவைத்து உரிக்க வேண்டும், அவர்கள் மேல் ஏன் நீதிமன்றத்தில் வழக்கு செய்யவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் எதை புடுங்கி கொண்டு இருந்தாரகள். இதனை ஆயிரம் கோடி இழப்பு அரசியல் சொறி நாய்களுக்கு இல்லை, பொதுமக்களாகிய எங்களுக்குத்தான். மேலும் மேலும் பணக்காரனாகும் இந்த அரசியல் வியாதிகள் மக்கள் புரட்சி என்னும் ஒரு நாள் போராட்டத்தில் இருந்த இடம் தெரியாமல் போய் விடுவார்கள். மற்றபடி வீரமணி எதற்கு கலைஞருக்கு ஜால்ரா அடிக்கிறார் என்று உங்களுக்கு தெரியாதா? அல்லது ஊருக்குதான் தெரியாதா? முதலில் ஒழிக்கவேண்டியது இதுபோன்ற ஜால்ராக்கள் மட்டுமே, மற்றவை தானாக அடங்கிவிடும்.

Kartheesan said...

இழப்பு என்பதை வீரமணி ஒத்துகொள்கிறார், இதில் ஆயிரம் ருபாய் என்ன? கோடி என்ன? எந்த வழக்கிலாவது அரசியல்வாதிகள் தண்டனை பெற்றிருக்கிறார்களா? இவருக்கு எப்போது தீர்ப்பு வந்து ராசாவை தண்டிக்க? இதெல்லாம் நடக்க கூடியதா? முந்தைய ஆட்சியிலும் இது நடந்தது என்று இவர்கள் சொல்கிறார்கள் என்றால் முதலில் இவர்களை கட்டிவைத்து உரிக்க வேண்டும், அவர்கள் மேல் ஏன் நீதிமன்றத்தில் வழக்கு செய்யவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் எதை புடுங்கி கொண்டு இருந்தாரகள். இதனை ஆயிரம் கோடி இழப்பு அரசியல் சொறி நாய்களுக்கு இல்லை, பொதுமக்களாகிய எங்களுக்குத்தான். மேலும் மேலும் பணக்காரனாகும் இந்த அரசியல் வியாதிகள் மக்கள் புரட்சி என்னும் ஒரு நாள் போராட்டத்தில் இருந்த இடம் தெரியாமல் போய் விடுவார்கள். மற்றபடி வீரமணி எதற்கு கலைஞருக்கு ஜால்ரா அடிக்கிறார் என்று உங்களுக்கு தெரியாதா? அல்லது ஊருக்குதான் தெரியாதா? முதலில் ஒழிக்கவேண்டியது இதுபோன்ற ஜால்ராக்கள் மட்டுமே, மற்றவை தானாக அடங்கிவிடும்.

நம்பி said...

//இதனை ஆயிரம் கோடி இழப்பு அரசியல் சொறி நாய்களுக்கு இல்லை, பொதுமக்களாகிய எங்களுக்குத்தான்.//

எங்க எல்லோரும் கருக்கா வருமான வரிகட்டியாச்சா...? இல்லை ஆடிட்டர் கிட்ட குடுத்து திருட்டு கணக்கை ஏத்தி காட்டியாச்சா...? இதெல்லாம் எவன் பணம்...மக்கள் பணமில்லையா...? இது நாட்டை ஏமாத்துர வேலை இல்லையா...? இது திருட்டு வேலை இல்லையா...? இது ஊழல் இல்லையா...?

ஒரு நாளைய வரிஏய்ப்பு எவ்வளவு தெரியுமா?...2300000 கோடி....

வரிகட்டாத ஒவ்வொருத்தனையும் கட்டி வைத்து உதைக்கலாமா...?

சரி என்ன ராசா என்ன ஊழலாய்யா பண்ணார்...ஏற்கனவே இருந்த வழிகாட்டுதலின் படி ஏலம் விட்டார்...இதனால் தனியாக ஆதாயம் அடைந்தாரா...செல்வி ஜெயலலிதா போல அரசு நிலைத்தை தனியாருக்கு விற்றாரா...? நிலக்கரி பேர ஊழல் நடத்தினரா...? நூறு கோடி ரூபாய் வளர்ப்பு மகன் திருமணத்தை உட்ன பிறவா சகோதரியிடம் சேர்ந்து கொண்டாடினாரா...?

அரசு திட்டங்கள் அனைத்துமே வருவாய் இழப்புத் தான்.....பார்ப்பனன் கையிலெடுத்து ஊதுகிறான் அவ்வளவு தான்...

சாதாரண ஒட்டைக்கடை வைத்து முடிதிருத்துபவன் ஒழுங்கா வருமான வரிக்கணக்கு காட்டுகிறான்...வேறு எவன் காட்டுகிறான்?...நல்லவன் போல பாவ்லா காட்டுகிறான்.

//Blogger Tamil said...

கேட்கிறவன் கேனையனா இருந்த மயிருமணி என்ன வேணா சொல்வாரு.
மின்சாரமே இல்லாத பொது TV கொடுத்த மாதிரிதான் இதுவும்.
நாடு மிகப்பெரிய நிதிநெருக்கடியில இருக்கும் பொது குறைந்த செலவுல பேசாட்டிதான் என்ன?

March 1, 2011 10:54 AM//

மசிரு தமிலா...உன் தொப்பை நிறைந்து போச்சுன்னா போதும் அடுத்தவ சாப்பிட்டா என்ன? சாப்பிடாட்டி என்ன? ஏன் சாப்பிடனும் பட்டினிதான் கிடக்கட்டுமே என்று சொல்லுகிற குரூப் தானே நீ....

Blogger Tamil said...//நாடு மிகப்பெரிய நிதிநெருக்கடியில இருக்கும் பொது குறைந்த செலவுல பேசாட்டிதான் என்ன?//

போய் நேர்மையா வரியைக்கட்டி நிதி நெருக்கடியை குறையுமே பார்ப்போம். இதுவரைக்கும் நேர்மையா மனசாட்சி தொட்டு சொல்லு ஒருமுறையாவது உண்மையான கணக்கை காட்டிருப்பியா...காட்டினா எதற்கு? ஆடிட்டர். நீ வேலை செய்யர கம்பெனி ஒழுங்கா வரிகட்டியிருக்கிறதா என்று பார்த்தா வேலைக்கு சேர்ந்த...இல்லை நேர்மையா வரிகட்டுற கம்பெனில தான் வேலை செய்வேன் என்று வேலையை விட்டு ஓடியாந்துட்டியா..? இல்லை அங்கிருக்கிற வரிஏய்ப்பை எல்லாம் காட்டி கொடுத்துட்டியா....?

நிதி நெருக்கடி இப்படித்தான் வருது புடலாங்கா....வரிஏய்ப்பு தான் மூலக்காரணம்.

நிதி நெருக்கடி பத்தி ரொம்ப தான் அக்கறை படராறாரம்மா!...இப்படித்தானே தன் முதுகுல ஆயிரத்தெட்டு அழுக்கை வைத்து கொண்டு ஏசி ரூம்லேயே அரசியல் பேசற கூட்டம் தானே நாட்டில இருக்கு....எனக்கு பணம் வந்துடுச்சு...அவன் எக்கேடு கெட்டால் கெடட்டுமே என்று இலவச திட்டங்களை இப்படித்தான் பணக்காரன் பேசிக்கொண்டிருப்பான்...தொழிலாளிக்கு 500 ரூபா சம்பளம் ஏத்திக்கொடுக்க மாட்டான்...வரி ஏய்ப்புக்கு லஞ்சமா லட்சகணக்குல வருமான வரித்துறையினருக்கு கொடுப்பான்...இந்த பாவத்துக்கு பரிகாரமா திருப்பதி பாலாஜிக்கு ஒரு பங்கை கொடுத்து சரிகட்டுவான். இதுதானே உமது உளுத்துப்போன, உதவாத அரசியல் பார்வை.

நம்பி said...

//வீரமணி எதற்கு கலைஞருக்கு ஜால்ரா அடிக்கிறார் என்று உங்களுக்கு தெரியாதா? அல்லது ஊருக்குதான் தெரியாதா? முதலில் ஒழிக்கவேண்டியது இதுபோன்ற ஜால்ராக்கள் மட்டுமே, மற்றவை தானாக அடங்கிவிடும்.

March 2, 2011 3:35 PM//
ஹி ஹி ஜால்ரா வை வைச்சே....எழுதுவோம்..

நீ இப்ப யாருக்காக ஜால்ரா அடிச்சு இத எழுதின...சத்தியமா சொல்லு நாட்டு மேல அக்கறை பட்டா இத எழுதின...? மண்ணாங்கட்டி அக்கறையும் கிடையாது....அது நல்லாத் தெரியுது... ஜெயலலிதா ரொம்ப நல்லவங்க...என்று சொல்லியிருந்தா ரொம்ப சந்தோசப்பட்டிருப்ப...இல்ல நீ ஜால்ரா அடிக்கிற வேறு யாரையாவது இல்லை ஜாதிக்காரனை சொல்லியிருந்தா சந்தோசப்பட்டிருப்ப...

இப்படித்தானே பார்ப்பன பத்திரிக்கைகள் ஒருவரை நோக்கியே ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கின்றன..எதற்கு? (உஷாரா,,,சங்கராச்சாரியரை பத்தி நல்லா எடிட் பண்ணி எழுதுவானுங்க...அதே மாதிரி ஜெயலலிதா விஷயத்தை ஓரங்கட்டி பாதுகாப்பா எழுதுவானுங்க...உங்க திருக்கசு வேலையைப்பத்தி தான் ஊருக்கே தெரியுமே)...பார்ப்பன ஜாதியை தூக்கி உட்காரவைக்க..உட்காரவைச்சு என்ன பண்ணப்போற...அது ஊருக்கே தெரியும்...உமது ஜால்ரா கோட்பாட்டின் படியே அனைவரும் இருக்க முடியுமா...?

//அவர்கள் மேல் ஏன் நீதிமன்றத்தில் வழக்கு செய்யவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் எதை புடுங்கி கொண்டு இருந்தாரகள். //

அப்போது ராசா என்ற ஆதி திராவிடர் அமைச்சராக இல்லையே...

இந்த அறிக்கையும் அப்போது தாக்கல் செய்யப்பட்டதா...?

இந்த மாதிரி அமைச்சர் இருந்தா புடுங்கியிருக்க முடியும்...? இல்லைன்னா புடுங்கியிருக்க முடியாது...ஏன் பாரதிய ஜனதா கட்சித் தலைவரா...ஒரு தலித் நியமிக்கப்பட்டபோது லஞ்சம் வாங்கினார் என்று வீடியோ எடுத்து புடுங்க வில்லை...அது என்ன டெகல்காவா...? அது சாதாரண விஷயம் ஏற்கனவே கட்சி தலைவர்கள் வழக்கமாக வாங்குகின்ற நிதி தான்...வாங்கியது தலித் ஆயிற்றே...

நம்பி said...

சின்ன லெவல் வருவாய் இழப்பிலிருந்து ஆரம்பிப்போம்..(இது சின்ன லெவலா அல்லது பெரிய பெரிய லெவலா...யார் இதை செய்யாமல் இருக்கிறார்கள்? என்பது தன்னாலேயே தெரியும்)..ஒரு எழுத்தாளர் சொன்னார்...இந்த நடுத்தர, மேல்தட்டு வர்க்கங்களாக இருப்பவர்களை போல இரக்கமற்றவர்கள் நாட்டிலேயே இல்லை...
(கடந்தவாரம் ஒரு தனியார் தொலைக்காட்சியில் விலைவாசி உயர்வுக்கு காரணம் யார்? இது சரியா? என்ற விவாதத்தின் போது அந்த எழுத்தாளர் தெரிவித்தது...)

சரி இப்பொழுது...கேள்வி...

எங்கே? சொத்து வரி சரியா கட்டிட்டியா..?
இல்லை...
எங்கே? வீட்டு வாடகை எவ்வளவு பெறுகிறாய் என்ற கண்க்கை உண்மையாக தாக்கல் செய்து விட்டியா...? அதுக்கான வரியை கட்டிட்டியா...? வாடகைக்கு பில் தர்றியா...?

ஹி ஹி இல்லை...

உண்மையான அசையும் அசையா சொத்துக்கான வரிகள் முழுவதும் கருக்கா பைசா பாக்கியில்லாமல் கட்டிட்டியா...?

ஹி ஹி இல்லை...

வாங்கிய சொத்திற்கான உண்மையான ஸ்டாம்ப் டூட்டி கட்டிட்டியா....சரியாக வாங்கிய விலைக்குத்தான் பத்திரம் பதிவு பண்ணியா...?

ஹி ஹி இல்லை...

முதலீடுகள் என அனைத்தையும் ஓன்று கூட விடாமல் அரசாங்கத்துக்கு கணக்கு காட்டிட்டியா...?

ஹி ஹி அதெப்படி முடியும்...?

.....
......
.......இல்லை இல்லை இல்லை...

வரி விலக்கு என்பது பற்றியாவது தெரியுமா....?
ஹி ஹி தெரியாது...

அது எதற்காக வழங்கப்படுகிறது...என்பதாவது தெரியுமா...? உண்மையில் அந்த வரிவிலக்கில் என்ன நடக்கிறது என்பதாவது தெரியுமா...?

ஹி ஹி தெரியவே தெரியாது...எனக்கு வேண்டியது கிடைச்சு போச்சு இல்லை...

அப்பறம் எந்த புடலங்காவுக்கு வருவாய் இழப்பு பற்றி கவலைப்படற..இதெல்லாம் என்ன வருவாய் வரவா...?.....ஊரை குறை சொல்லறதுக்கு முன்னாடி நீ யோக்கியவானா? என்று உள்ளாய்ந்து கொண்டாயா...?

அப்புறம் நாங்க எப்படி ராசு மேல குறை சொல்ல முடியும்...எங்களுக்கு இது தானே சான்ஸ்...

அது தான் தெரியுதே...அது எதுக்காகவும் தெரியுதே...?