Search This Blog

5.3.11

பார்ப்பனர்கள் தமிழர்களுக்கு ஜென்ம விரோதிகள்!

திராவிடர் பக்கமா, ஆரியர் பக்கமா?


தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் 13 என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.இ.அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்ட ணியும் அமையப் போகிறது.

இதில் அகில இந்திய ஆரிய தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்து விட வேண்டும், மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்பதிலே பார்ப்பனர்கள் பத்தியமாக இருக்கிறார்கள்.

தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க உள்ள கட்சிகளிடையே மித்திரபேதம் செய்து பார்க்கலாம். சிண்டு முடிவதில் தங்களுக்கே உரித்தான சிங்காரக் கலையைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்பதிலே பார்ப்பன ஏடுகள் (குறிப்பாக தினமணி, தினமலர்) அவிட்டுத் திரியை அவிழ்த்து விட்டு ஆடிப்பார்க்கின்றன.

எல்லாவற்றையும் பக்கத்தில் இருந்து பார்த்தது போல எழுதுகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைப் படிக்கும்பொழுது, அது .அவர்களின் ஜென்மத்துடன் பிறந்தது அதனை எது கொண்டு அடித்தாலும், அவர்களை விட்டுப் போகாது என்ற பழமொழிதான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் ஒவ்வொரு கட்சியின் மீதும் ஒரு சந்தேகத்தை உண்டாக்கவேண்டும் என்னும் எத்து வேலையில் ஈடுபடுகின்றன இந்த அக்கிரகார ஏடுகள். தி.மு.க.வுடன் காங்கிரஸ் உறவு முறியப் போகிறது. அணி மாறுகிறதா விடுதலைச் சிறுத்தைகள்?

பா.ம.க.வின் தயக்கம், - தி.மு.க.வின் வியூகம்;- அதிமுகவுடன் கூட்டணி வைத் தால் மட்டுமே எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பா.ம.க.வினர் கருது கிறார்கள்.

இப்படியெல்லாம் எழுதுகிற தினமணி என்னும் ஆர்.எஸ்.எஸ். ஏடு இவற்றிற்கு ஏதேனும் ஆதாரத்தைத் தருகின்றதா என்றால்... என்று தெரிய வருகிறது என்கிறார் ஒரு மூத்த பத்திரிகையாளர்.

தில்லி வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன. காங்கிரசின் எண்ணம் என்கின்றனர் பார்வையாளர்கள்.

அமைச்சர் எ.வ. வேலு இல்லத்திருமணத்தில் கமெண்ட் அடித்ததாகத் தெரிகிறது. குமுறுகிறார்கள் அண்ணா காலத்திய தி.மு.க. மூத்த தலைவர்கள்.

போட்டு உடைத்தார் ஒரு முன்னாள் ஜனதா கட்சித் தலைவர்.

- இவைதான் தினமணி உள்ளிட்ட பார்ப்பன ஏடுகளில் அசைக்கவே முடியாத உலக்கைக் கொழுந்து ஆதாரக் குவியல்கள்!

இந்த வகையறாக்களின் மூக்கை உடைக்கும் வகையில் பா.ம.க. - தி.மு.க. வுடன் கூட்டணியை உறுதிப்படுத்தி விட்டது.

பார்ப்பன ஏடுகளின் பம்மாத்து முகத்திரையைக் கிழிக்கும் வகையில் விடுதலைச் சிறுத்தைகளும் திமுகவுட னான கூட்டணி அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்தத் தில்லுமுல்லுக் கூட்டம் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இனிமேல் தேர்தல் ஆரூடம் சொல்லப் போகிறது?

ஊர் பேசுகிறது, - ஊரார் பேசிக் கொள்கிறார்கள் என்று இந்தப் பார்ப் பனக் கூட்டம், அவற்றின் ஊடகங்கள் பேசுகின்றனவே - எழுதுகின்றனவே - இதைப் படிக்கும் பொழுது புகழ் பெற்ற பொறியாளர் பா.வெ. மாணிக்க நாயக்கர்தான் நினைவுக்கு வருகிறார். அவரைப் பற்றிய ஒரு தகவலை இதோ தந்தை பெரியார் கூறுகிறார்: சுமார் 70 வருடங்களுக்கு முன் திரு. பா.வெ. மாணிக்க நாயக்கர் அவர்கள் ஈரோடு கரூர் டிவிஷனில் அஸிஸ் டெண்ட் இன்ஜினீயராக நியமிக்கப் பட்டபோது, ஒரு ஓவர்சீயரிடம் வேலை கற்க அமர்த்தப்பட்டார். பிறகு அவர் அஸிஸ்டெண்ட் இன்ஜினீயர் வேலை ஏற்றுக்கொண்டார். அப்போது அந்த ஓவர்சீயர் மாணிக்க நாயக்கரின் கீழ் வேலை பார்க்க வேண்டியவரானார். இவரின் நடத்தையை மாணிக்க நாயக்கர் வேலை பழகும்போது தெரிந்து இருந்ததினால், சந்தேகப்பட்ட ஒரு காரியத்தைக் கண்டித்தார். இது அந்த ஓவர்சீயருக்குப் பிடிக்கவில்லை. நம்மிடம் வேலை பழகின பையன் நம்மைக் கண்டிக்கிறானே! என்று கருதி மாணிக்க நாயக்கருக்குப் புத்தி சொல்லுகிற மாதிரி, நீங்கள் சிறுவயது; உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். உடனே மாணிக்க நாயக்கர், என் பெயர் ஏன் கெடும்? என்று கேட்டார். உங்களைப் பற்றி மக்கள் கண்டபடி பேசுகிறார்கள். இதற்கு இடம் வைத்துக் கொள்ளாதீர்கள் என்று ஓவர்சீயர் சொன்னார். என்ன பேசுகிறார்கள்? சொல்லுங்கள் என்று மாணிக்க நாயக்கர் கேட்டார். நீங்கள் பணம் வாங்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று பேசுகிறார்கள் என்றார் ஓவர்சீயர். அந்தப்படி யார் சொன்னார்? சொல்லுங்கள் என்று சற்று கோபமாகக் கேட்டார் மாணிக்க நாயக்கர். அதற்கு ஓவர்சீயர், ஜனங்கள் அப்படி பேசிக் கொள்கிறார்கள் என்று சொன்னார். உடனே மாணிக்க நாயக்கர், வாழாமல் உன் வீட்டிற்கு வந்திருக்கும் உன் மகளுக்கும், லஸ்கர் நாராயணசாமிக்கும் சம்பந்தம் உண்டு என்று ஊரெல்லாம் பேசிக் கொள்ளுகிறார்களே? அப்படி நீ வைத்துக் கொள்ளலாமா? என்று கேட்டார். உடனே அந்த ஓவர்சீயர் கோபப்பட்டு, எந்த அயோக்கியப் பயல் அப்படிச் சொன்னான்? சொல்லு; முட்டாள் தனமாகப் பேசாதே என்றார். உடனே மாணிக்க நாயக்கர் தன் காலில் இருந்ததைக் கழற்றி அந்த ஓவர்சீயரின் தலையில் இரண்டு, மூன்று போட்டார்; பக்கத்திலிருந்தவர்கள் தடுத்து, ஓவர்சீயரைப் பார்த்து, நீங்களும் ஊரில் பேசிக்கொள்கிறார்கள் என்று சொன்னீர்கள்; அவரும் ஊரில் பேசிக் கொள்ளுகிறார்கள்; என்று சொன்னார். இதில் தப்பென்ன? உங்களைச் சொன்னதால் உங்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. நீங்கள் அவரைச் சொன்னது அவர் வேலைக்கே ஆபத்தாய் முடியுமே என்று சொல்லி ஓவர்சீயரை மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும்படி செய்தார்கள். இது, கரூர் அக்கால T.B., யில் நடந்த நிகழ்ச்சி. இதை ஏன் எழுதுகிறேன் என்றால், அரசியலில் எதிர்க் கட்சி மீது, எதிரிகள் மீது குறை கூறுவதற்காகச் சிலர் எதையும் சொல்லிவிட்டு, அழுத்திக் கேட்டால், மக்கள் அப்படிப் பேசிக் கொள்ளுகிறார்கள் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளுகிறார்கள். அவர்களுக்குப் புத்தி வருவதற்காக உண்மையாய் நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டேன். ஊரில் பேசிக்கொள்ளுகிறார்கள் என்பது மிகக் கீழ்த்தரமான மக்கள் தன்மையாகும் என்று எழுதியுள்ளார் தந்தை பெரியார்.
----------------(அறிக்கை - விடுதலை 26-.3.-1969)

இதைவிட எந்த எடுத்துக் காட்டைச் சொல்லி இந்தப் பார்ப்பன மந்தைக்குச் சூடு போட முடியும்?

நடக்க இருக்கும் தேர்தலில் மானமிகு கலைஞர் ஓர் அணியின் தலைவர். எதிர் அணியின் தலைவர் செல்வி ஜெயலலிதா.

கலைஞர் யார்?

தந்தை பெரியாரின் தொண்டர். அண்ணாவின் தம்பி. பதினைந்து வயது முதற்கொண்டு தன்மானக் கொடியை ஏந்தியவர். பொது, வாழ்வில் பல களங்களைக் கண்டவர். கஷ்ட, நஷ்டம் என்னும் விலையைத் தந்தவர். உழைப்பால் உயர்ந்தவர் பகுத்தறிவாளர்; இனவுணர்வாளர்.


ஜெயலலிதா யார்?


தமிழரா? திராவிடரா? பகுத்தறிவாளரா? தன்மான இயக்க வழி வந்தவரா? களம் கண்டவரா? காராக்கிரகம் சென்றவரா? தந்தை பெரியார் கொள்கையை உணர்ந்தவரா? அறிஞர் அண்ணாவின் இலட்சி யங்களை அறிந்தவரா? - ஏற்றுக் கொள்பவரா?

இந்த இரு தலைமைகளுள் எது வேண்டும்? தோழனே சொல்!

மனுதர்மத்துக்கு மறு பிறவி கிடை யாது என்று கூறும் கலைஞர் எங்கே?

மனுதர்மத்திற்கு மகுடம் சூட்டுவோம் என்று மமதையுடன் செயல்படும் ஜெயலலிதா எங்கே?

ஒரு தகவல் தெரியுமா தோழர்களே?

திராவிட இயக்கப் பாரம்பரியம் என்று சொல்லிக் கொண்டு அண்ணா பெயரைக் கட்சியிலும், உருவத்தைக் கொடியிலும் பொறித்துக் கொண்டுள்ளார்;- திராவிட என்ற சொல்லையும் சேர்த்துக் கொண்டு அண்ணா தி.மு.க. வின் அதிகாரப் பூர்வமான நாளேடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளேட்டில் நாள்தோறும் இராசி பலன் வெளியிட்டு வருகிறார்களே - தெரியுமா உங்களுக்கு?

புத்த மார்க்கத்தை ஆரியம் ஊடுருவிச் சிதைத்தது.

திராவிட இயக்கத்திலே ஆரிய மாது ஊடுருவி உருக்குலைத்திருக்கிறாரே?

இதனை ஏற்கலாமா? ஆட்சி பீடத்தில் அமர வைக்கலாமா?

அய்யாவை நினைத்து முடிவு செய்யுங்கள்.

அண்ணாவை எண்ணி ஒரு முடிவுக்கு வாருங்கள்.

கலைஞரை ஜென்ம விரோதி என்கிறாரே ஜெயலலிதா, இதன் பொருள் என்ன? ஆம், ஜென்ம விரோதம்தான்! பார்ப்பனர்கள் தமிழர்களுக்கு ஜென்ம விரோதிகள்தானே! அந்த ஜென்ம விரோதி ஆட்சி சிம்மாசனம் ஏற அனுமதி கேட்கிறார். தமிழர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்.? சாதாரண தேர்தல் அல்ல இது. ஆரியர் -- திராவிடர் போராட்டம். நீங்கள் ஆரியர் பக்கமா? திராவிடர் பக்கமா?

இதுதான் இன்றைய கேள்வி.

*********************************

கட்சியின் பெயருக்கு என்ன பொருளோ?

ஆன்மீக _ அ.தி.மு.க.வாக மாற்றிய ஜெயலலிதாவோடு கூட்டணி சேரக் கூடிய ஒருவர் விஜயகாந்த்.

தெய்வத்தோடும், மக்களோடும்தான் தன் கூட்டணி என்றவர் ஜெயலலிதாவோடு கூட்டு சேர்ந்துள்ளார்.

ஒருக்கால் ஜெயலலிதாவைத்தான் தெய்வமாகக் கருதுகிறார் போலும்!

அதுசரி, கட்சியின் பெயரை தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று வைத்துள்ளாரே, இந்தப் பெயருக்கும் அவர் நடத்தைக்கும் என்ன உறவு?

முற்போக்கு என்றால் என்ன?

திராவிட கழகம் என்றால் என்ன?

இதுவரை அவர் விளக்கம் கொடுத்ததுண்டா?

கட்சியின் கொடியை திருப்பதி சென்று ஏழுமலையான் காலில் வைத்து வந்து கட்சியை ஆரம்பிப்பவர் எந்த முற்போக்கைச் சேர்ந்தவர்? திராவிட கழகம் என்பதற்கு இதுதான் பொருளா?

மக்களை ஏமாற்ற முனைந்தால் அந்த மக்கள் தக்க நேரத்தில் ஏமாற்றத்தை அளிப்பார்கள்.

*****************************************


--------------------- மின்சாரம் அவர்கள் 5-3-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

7 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

முதலிடம் எனக்குத்தான் படித்துவிட்டு வருகிறேன்

சிந்தையின் சிதறல்கள் said...

vote போட்டாச்சு ஆனா இன்னும் படிக்கல்ல

Unknown said...

"கலைஞர் யார்?

தந்தை பெரியாரின் தொண்டர். அண்ணாவின் தம்பி. பதினைந்து வயது முதற்கொண்டு தன்மானக் கொடியை ஏந்தியவர். பொது, வாழ்வில் பல களங்களைக் கண்டவர். கஷ்ட, நஷ்டம் என்னும் விலையைத் தந்தவர். உழைப்பால் உயர்ந்தவர் பகுத்தறிவாளர்; இனவுணர்வாளர்."

கலைஞர் ஒரு மானங்கெட்ட இனதுரோகி , இவரை பெரியாரின் தம்பி என்று கூறி பெரியாரின் பெயருக்கு களங்கம் கற்பிக்காதீர்கள் . ஒரு நல்ல தலைவர் இல்லாமல் தமிழகம் தடுமாறுகிறது . சினிமாகாரர்களின் பின்னல் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு அறிஞர் அண்ணாவும் ஒரு காரணம் . சினிமா, சினிமாகாரர்கள் மூலம் கொள்கைகளை பிரபலபடுத்ட எடுத்த முடிவு எம்ஜியார் ஜெயலலிதா இன்று விஜயகாந்த் என்று பொய் கொண்டிருக்கிறது . இந்த கொள்ளைகாரர்களை நம்பி சில ஜன்மங்கள் இருக்கிறது.

நம்பி said...

//"கலைஞர் யார்?

தந்தை பெரியாரின் தொண்டர். அண்ணாவின் தம்பி. பதினைந்து வயது முதற்கொண்டு தன்மானக் கொடியை ஏந்தியவர். பொது, வாழ்வில் பல களங்களைக் கண்டவர். கஷ்ட, நஷ்டம் என்னும் விலையைத் தந்தவர். உழைப்பால் உயர்ந்தவர் பகுத்தறிவாளர்; இனவுணர்வாளர்."

கலைஞர் ஒரு மானங்கெட்ட இனதுரோகி , இவரை பெரியாரின் தம்பி என்று கூறி பெரியாரின் பெயருக்கு களங்கம் கற்பிக்காதீர்கள் . ஒரு நல்ல தலைவர் இல்லாமல் தமிழகம் தடுமாறுகிறது . சினிமாகாரர்களின் பின்னல் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு அறிஞர் அண்ணாவும் ஒரு காரணம் . சினிமா, சினிமாகாரர்கள் மூலம் கொள்கைகளை பிரபலபடுத்ட எடுத்த முடிவு எம்ஜியார் ஜெயலலிதா இன்று விஜயகாந்த் என்று பொய் கொண்டிருக்கிறது . இந்த கொள்ளைகாரர்களை நம்பி சில ஜன்மங்கள் இருக்கிறது.

March 6, 2011 4:38 PM//

யாருப்பா? இந்த இனப்பாதுகாவலர்...என்னத்தை இதுவரை இவரு பாதுகாத்து கிழிச்சாராம்...? எந்த ஊரு இனத்தை பாதுகாத்து கிழிச்சாராம்..? கொஞ்சம் ஆதாரத்தோடு செப்புமே பார்ப்போம்....அப்புறம் ....பதிலுக்கு ஆதாரத்தோடு செப்பு செப்புனு செப்பலாம்.

dondu(#11168674346665545885) said...

//சுமார் 70 வருடங்களுக்கு முன் திரு. பா.வெ. மாணிக்க நாயக்கர் அவர்கள் ஈரோடு கரூர் டிவிஷனில் அஸிஸ் டெண்ட் இன்ஜினீயராக நியமிக்கப் பட்டபோது, ஒரு ஓவர்சீயரிடம் வேலை கற்க அமர்த்தப்பட்டார்.//
மாணிக்க நாயக்கர் என முழு சாதிப்பெயருடன் சொன்னார் ஈ.வே. ராமசாமி நாயக்கர். ஆனால் ஓவர்சீயர் என மொட்டையாக எப்படி சொல்லப் போச்சு? அவர் பெயர் என்ன? அவர் பார்ப்பனரா அல்லது வேறு ஏதாவது சாதியா? வேறு ஏதாவது சாதி என்றால் அந்த சாதியை கூற தில் இல்லையா?

கோபாலகிருஷ்ண நாயுடுவின் பெயரையும் அப்படித்தானே தனது சவசவ அறிக்கையில் மறைத்தார் இந்த பலீஜா நாயுடு?

எனது இப்பின்னூட்டத்தை எனது இந்தப் பதிவிலும் போட்டு வைக்கிறேன், பார்க்க: பெரியார் திடலில் டோண்டு ராகவன் http://dondu.blogspot.com/2009/08/blog-post.html

டோண்டு ராகவன்

ரிஷி said...

//கட்சியின் கொடியை திருப்பதி சென்று ஏழுமலையான் காலில் வைத்து வந்து கட்சியை ஆரம்பிப்பவர் எந்த முற்போக்கைச் சேர்ந்தவர்? திராவிட கழகம் என்பதற்கு இதுதான் பொருளா?//

தமிழ் ஓவியா!
கடவுளுக்கும் திராவிடத்திற்கும் என்ன சம்பந்தம்??

Unknown said...

//கடவுளுக்கும் திராவிடத்திற்கும் என்ன சம்பந்தம்??

March 7, 2011 9:06 AM//

இந்த கேள்வியை விஜய் காந்திடம் தான் கேட்கவேண்டும்.

தேசியம் என்றால் ஒருவேளை காலை சுழற்றி சுழற்றி அடிப்பதாக இருக்கும்...

எழுந்து நிக்கமுடியாதவன் எல்லாம் தேர்தல்ல நிக்கறான் என்று ஆசிரியர் வீரமணி சொன்னது போல் தான் உள்ளது.