Search This Blog

6.3.11

அய்யர் கேள்வியும்-அய்யா பெரியார் பதிலும்!


1928ஆம் ஆண்டு சிதம்பரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார். மதத்தைப் பற்றியும், அதன் ஊழல் பற்றியும் சும்மா பொழிந்து தள்ளினார். பொறுக்கவில்லை ஒரு பார்ப்பனருக்கு! மேடைப் பக்கம் வந்து கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்- அவ்வளவு ஆத்திரம் அவருக்கு!

நீங்கள் சாமியைக் கல் என்று சொன்னீர்களே! இது சரியா? என்று அய்யர் கேட்டார்.

ஆம்! வேண்டுமானால் எல்லோரும் என்னுடன் வாருங்கள், காட்டுகிறேன்! என்று மேஜை மீதிருந்த கைத் தடியைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டார் பெரியார். பார்ப்பனரைப் பார்த்து எல்லோரும் கை தட்டி நகைத்தனர்.

உடனே மற்றொரு பார்ப்பனர் சும்மா விட்டாரா? அது கல்தான் என்றாலும், அந்தக் கல்லுக்கு மந்திர உச்சாடனம் செய்யப் பட்டிருக்கிறது என்றார்.

அப்படியானால் மொட்டைப் பாறையில் உடைத்த கல்லுக்குச் செய்த உச்சாடனத் துக்கு உண்மையில் சக்தி இருக்குமானால் இதோ எதிரில் இருக்கும் உயிருள்ள மனிதருக்கும் கொஞ்சம் அதே மந்திரத்தை உபதேசம் செய்து அவரை அந்தக் கல்லுச் சாமிக்கும் பக்கத்திலிருந்து பூசனை செய்யும் படியாவது செய்யக் கூடாதா? என்றார் பெரியார்.

உடனே முதலாவது அய்யர் பெரியாரை மடக்குவதாக நினைத்துக் கொண்டு இந்து மதம் ஒன்று இல்லையென்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். நீங்களாவது ஒரு புது மதம் சொல்லக் கூடாதா? என்றார்.

அதற்குப் பெரியார் பதில் சொன்னார்:

நான் ஒரு புது மதத்தைப் போதிக்கவில்லை. ஒழுக்கத்திற்கு விரோதமான கொள்கைகளை மதமென்றும், சாமி என்றும், புராணம் என்றும் பின்பற்றாதீர்கள். ஒழுக்கமாகவும், உண்மையாகவும், மற்றவர்களிடத்தில் அன்பாகவும் இருந்தால் போதும் என்றுதான் சொல்கிறேன். அதற்குத் தகுந்த கொள்கைகள் எந்த மதமானாலும் சரி, அது மதம் இல்லா விட்டாலும் சரி என்று தான் சொல்லுகிறேன் என்றார்.

இருப்பதை ஒழிப்பதானால் வேறொன்றைக் காட்ட வேண்டாமா? என்று அய்யர் அடுத்த கேள்வியை அய்யாவிடம் போட்டார்.

வீட்டிற்குள் அசிங்கம் இருக்கின்றது, நாற்ற மடிக்கிறது; எடுத்து எறியுங்கள் என்றால், அதற்குப் பதில் அந்த இடத்தில் என்ன வைப்பது என்று கேட்பது சரியா? என்று கேட்டாரே பெரியார். பாவம் பார்ப்பனர் அசந்து போனார்.

--------------------தந்தை பெரியார் பிறந்தநாள் மலர் 1975




3 comments:

yasir said...

பார்ப்பனர்களை விரட்டியடிக்க பெரியாருக்கு இணை யாருமில்லை

Unknown said...

//பார்ப்பனர்களை விரட்டியடிக்க பெரியாருக்கு இணை யாருமில்லை

அப்ப துலுக்க நாய்களை விரட்டி அடிக்க...?

நம்பி said...

//Abdul said...

//பார்ப்பனர்களை விரட்டியடிக்க பெரியாருக்கு இணை யாருமில்லை

அப்ப துலுக்க நாய்களை விரட்டி அடிக்க...?
March 12, 2011 7:27 PM //

அதைப்பற்றி விரட்டியடிக்கப்பட்ட Abdul நாய் தான் கவலைப்படவேண்டும்.