Search This Blog

10.3.11

இந்து மத சாமியார்களின் கதை அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறது


சந்தி சிரிக்கும் சாமியார்கள்

இந்து மத சாமியார்களின் கதை அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறது.

அமெரிக்காவில் - டெக்சாஸ் பகுதியில் ஸ்ரீ ஸ்வாமிஜி என்று அழைக்கப்படும் பிரகாஷனந்த் சரஸ்வதி எனும் இந்து மத சாமியார்; அவருக்கு அங்கே 200 ஏக்கர் அளவில் ஆசிரமம் உள்ளது. வெளி நாடுகளிலும் கோவில்கள், மருத்துவ மனைகள் உண்டாம்.

தனது ஆசிரமத்தில் இருந்த இரு பெண்களிடம் பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்குமுன் சம்பந்தப்பட்ட இரு பெண்களும் காவல் துறையிடம் புகார் கொடுத்தனர். வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. முடிவில் இந்து மத சாமியாருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 45 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இப்பொழுது சாமியாருக்கு வயது 82; உயர் இரத்த அழுத்தம், முதுகுவலி முதலிய தொந்திரவும் சாமியாருக்கு உண்டாம்; நீதிமன்றத்தில் கெஞ்சுகிறார் சாமியாரின் வழக்குரைஞர்.

இந்து மத சாமியார்களுக்குக் காமக் கலை என்பது கைவந்த ஒன்றாகும். லோகக் குரு என்று சொல்லப்படும் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயயேந்திர சரஸ்வதியின் யோக்கியதை என்ன? ஊரே நாற்றம் எடுக்கிறதே. கொஞ்சம்கூட கூச்ச நாச்சம் இல்லாமல் உலா வருகிறாரே - கேட்டால் அவர்களிடம் பதில் கூறத் தயாராகவே இருக்கிறது. பல தகவல்கள். இந்து மதத்தில் முழு முதற்கடவுளான சிவபெருமான் யார்? தாருகாவனத்து ரிஷி பத்தினிகளின் கற்பைச் சூறையாடியவன்தானே! முனிவர்கள் கொடுத்த சாபத்தினால் சிவனின் சிசுனம் (ஆண் குறி) அறுந்து விழ - அதனைப் பார்வதி தேவி தன் பெண் உறுப்பால் தாங்கிப் பிடிக்க அமைந்ததுதானே சிவலிங்கம்? அந்த உருவத்தை வைத்துத் தானே இந்து மதப் பக்தர்கள் சாமி கும்பிடுகின்றனர் - கண்களில் ஒத்திக் கொள்கின்றனர்? இந்து மதத்தின் படைப்புகள் கடவுளான பிர்மாவின் யோக்கியதாம்சம்தான் என்ன? பெற்ற மகள் சரஸ்வதியையே மனைவியாக்கிக் கொண்டவன் அல்லவா? இந்து மதத்தின் காத்தல் கடவுளான மகாவிஷ்ணு காமக் களியாட்டத்துக்கென்றே ஒரு தனி அவதாரத்தையே எடுத்து இருக்கிறானே - அந்த அவதாரம்தானே கிருஷ்ணாவதாரம். இந்து மதத்தின் தேவலோக அரசனாகிய இந்திரனின் யோக்கியதை தான் என்ன? கவுதம முனிவர்போல மாறுவேடம் தாங்கிச் சென்று முனிவரின் மனைவியாகிய அகலிகையைக் கெடுத்தவன் அல்லவா? முனிவரின் சாபத்தால் உடல் முழுவதும் ஆயிரம் கண்களை (பெண் குறிகளை) சுமந்து திரிந்த வெட்கம் கெட்டவனாயிற்றே! இதே போல இந்து மதத்தில் ஆயிரம் ஆயிரம் எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த தடிப் பார்ப்பானுக்கே மோட்சம் கொடுத்தார் சிவன் என்றால், இந்து மதத்தில் ஒழுக்கத்தோடு வாழ்பவன் தான் பயித்தியக்காரனாகக் கருதப்பட முடியும். இந்து மத இதிகாசங்கள், புராணங்கள் எல்லாம் ஆபாசக் குட்டைகள். அவற்றைப் படிக்கும் சாமியார்கள் அவற்றையெல்லாம் செயல்படுத்த முனைகிறார்கள் போலும்.

தமிழ்நாட்டில் உலா வரும் சாமியார்களின் காமக் குரோத நடவடிக்கைகள் குறித்து தக்க ஆதாரங்களுடன் திராவிடர் கழகம் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளதே. சாமியார்களின் திருவிளையாடல்கள் என்பது அந்த நூலின் பெயர்.

பக்கத்துக்குப் பக்கம் காவிகளின் காம வேட்டைபற்றி ஆதாரங்களுடன் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதனை வாங்கிப் படித்து விட்டு அதற்குப் பின் இந்து மதவாலாக்கள் பேச வேண்டும். அதுதான் முறை.

கோவில் அர்ச்சகப் பார்ப்பானே கோயில் கர்ப்பக் கிரகத்தில், கோயிலுக்குச் சாமி கும்பிட வரும் பக்தைகளை மயக்கி, கருவறையையே படுக்கையறை யாக்கிய கேவலம் கூவத்தைவிட மூக்கைத் துளைக்க வில்லையா? அர்த்தமுள்ள இந்து மதம் என்று கனைக்கும் ஆசாமிகள் சங்பரிவார்க் கூட்டம் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளவே கொள்ளாது. ஒழுக்கத்தைப் போதிக்கும் மதம் கிடையாது. ஒழுக்கத்துடன் நடந்துகொண்ட கடவுள் இல்லை. ஒழுக்கத்தை வலியுறுத்தும் புராணங்கள், இதிகாசங்கள் இல்லை - அதன் விளைவுதான் சாமியார்களின் திருவிளையாடல்கள். அமெரிக்க சாமியாருக்கு 14 ஆண்டுகள் தண்டனை கிடைத்துவிட்டது. காஞ்சிபுரத்து சாமியாருக்குத் தண்டனை எப்போது?

---------------------" விடுதலை” தலையங்கம் 10-3-2011

1 comments:

Shanker P Shyam Sundhar said...

DMK - Congress Alliance....Ippo ongoyya yenna solla poraru?? Suyamariyadhai yenna pochu???