Search This Blog

17.3.11

காஞ்சிசங்கரராமன் கொலையும் - சாதிக்பாட்சா தற்கொலையும்


சாதிக் பாட்சா தற்கொலைபற்றி அவசர கதியில் பேட்டி அளிப்போரே!


கொலைக் குற்றவாளி சங்கராச்சாரியார்கள் வழக்கில் உங்கள் நிலைப்பாடு என்ன?


சென்னையில் இருந்த தொழிலதிபர் சாதிக்பாட்சா அவர்கள் (2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.அய். விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்) நேற்று தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி வந்து, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு நடந்து முடிந்து அறிக்கை வருமுன்னரே,


அவசரம் அவசரமாக உடனே சில ஊடகங்கள், தொலைக்காட்சிகளில், துக்ளக் சோ இராமசாமியிடமும், சுப்பிரமணியசாமியிடமும் கருத்துக் கேட்டு, இது கொலைதான், தற்கொலை அல்ல என்றும், சில மணித் துளிகளிலேயே கூறியதை ஒளி, ஒலி பரப்புச் செய்தனர்.


ஜெயலலிதாவும் வழக்கமான அறிக்கையில் இதே கருத்தைக் கூறுவது - தேர்தல் அரசியலில் இதைத் தீனியாகப் பயன்படுத்தவேண்டுமென்று கருதித்தானே? தி.மு.க. அரசுக்கு மடியில் கனமில்லை; எனவே, சி.பி.அய். விசாரணைக்கே இதனை விட்டுவிட்டது!


இதில் இவ்வளவு அவசரம் காட்டிய இந்தப் பூணூல்கள் கூட்டம், காஞ்சியில் சங்கரராமன், வரதராஜப் பெருமாள் கோயிலில் பட்டப்பகலில் பதறப் பதற வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல், இரண்டாவது குற்றவாளியாகி, சிறையில் இருந்த 1 ஆவது, 2 ஆவது சங்கராச்சாரியார்களுக்காக எப்படியெல்லாம் பதறினார்கள்? அலறி ஆளுநரைப் பார்த்தனர். டில்லியில் முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமய்யர் உட்பட பதறிக் கதறினர்; உண்ணாவிரதம் இருந்தனர்.


இப்போது அதிகமான சாட்சிகளைக் கலைத்து, வழக்கினை ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிட, சட்டத்தை வளைக்கப்படும் முயற்சிகள் நடைபெறுகின்றனவே, அதுபற்றி மூச்சுவிட்டது உண்டா?

இது அப்பட்டமான மனுதர்மம் அல்லாது வேறு என்னவாம்?


சாதிக்பாட்சா தற்கொலையே இல்லை; படுகொலை என்று கோயபெல்ஸ் பிரச்சாரம் செய்வதன் நோக்கம் புரிகிறதா? அப்பட்டமான பார்ப்பன அதர்மம்தானே!


1971 - திரும்ப வேண்டாமா? உணர்ச்சியுள்ள மக்களே சிந்தியுங்கள்!
----------------------------”விடுதலை” 17-3-2011

5 comments:

Unknown said...

தமிழ் ஓவியரி நகைசுவை உணர்வு மிக சிறப்பு...
அது என்ன ஒவ்வொறு ஊழல் வழக்கு விசாரணைக்கு வரும்பொதும் தற்கொலை நடைபெறுகிறதே .. அது எப்படி... மேம்பால ஊழல் வழக்கில் ரமெசு குடும்பமாக தற்கொலை செய்துகொண்டார். 2க்ல் பாட்சா...

2 பேருக்கும் வயற்றுவலி காரணமா?

தேர்தலுக்கு பின் மாற்றுகட்சி ஆட்சியமைக்கும்போது... இன்னும் எத்தனை பேருக்கு வயற்று வலி வரபோகிறாது ...
இந்த பதிவை மறுபடியும் பல முறை வலையேற்ற வேண்டும் ... லிங்கை பாதுகாத்து வையும்...

ஒரு சந்தேகம்... சோனியா பிராமணரா?
அவர் தலைமையில் தானே சி.பி.ஐ 2ஜியை விசாரிக்கிறதே... பிராமண சதி என்று குறிபிடுகிரிரே.. அதான் கேட்டேன்..

rajuselvaraju49 said...

sir what hapen about the world tamils coment u made about congrees and dnk friction

Unknown said...

Blogger Vinoth said...

//மேம்பால ஊழல் வழக்கில் ரமெசு குடும்பமாக தற்கொலை செய்துகொண்டார்.//

மேம்பால ஊழல் வழக்கா? எப்போது..? நடைபெற்றது..? என்ன கண்டுபிடித்தார்கள்...? யார் சிறைக்கு போனார்கள்...? அப்போது என்ன பார்ப்பனரல்லாதோரா? ஆட்சி புரிந்தார்?

என்ன ஆணையாளர் முத்துக்கருப்பன் போட்டு அனைத்தையும் உடைத்துவிட்டாரே...செல்வி ஜெயலலிதா வற்புறுத்தலின் பேரில் தான் அந்த வழக்கு பொய்யாக புனையப்பட்டது என்று நீதிமன்றத்திலேய கூறினாரே? நடுஇரவிலும் முன்னால் முதலமைச்சரை கைது செய்ததும் அவர் வற்புறுத்தலின் பேரில் தான் என்று போட்டு உடைத்தாரே..? அவர் என்ன பார்ப்பனரல்லாதோருக்கா? பணி புரிந்தார்...?

ஏன்? முன்னாள் ஆணையாளர் நடராஜனும் ஆட்சியாளர் வற்புறுத்தலின் பேரில் பொய்யான வழக்கை ஜோடிக்க முனைந்தாரே, மேம்பாலத்துக்கு சம்பந்தபட்டவர் காவல் துறையினரை தாக்கியதாக பொய்ப்புகார் கொடுக்க துணை ஆணையரை வற்புறுத்தியும் கையொப்பம் இட மறுத்தாரே...என்ன வழக்குப் போடமுடிந்ததா?

பாலத்தை தோண்டி தோண்டி பார்த்தார்களே என்ன? ஊழல் கண்ணுக்கு தெரிந்ததா..? இன்னும் கண்ணுக்கே தெரியவில்லையே...அப்போது என்ன பார்ப்பனரல்லாதோர் ஆட்சியா நடந்தது..?

ஏன்? பிடிக்காதவரை கைது செய்யவேண்டுமென்றால் கஞ்சா போதுமே ? அவர் பெண்ணாக இருந்தாலும் கஞ்சா வைத்தால் மேட்டர் முடிஞ்சது...போயும் போயும் பெண்ணா? கஞ்சா கடத்துற வேலை பண்ணும்...? அவ்வளவு ரிஸ்க்கான வேலையை...?

யாராக இருந்தாலும், என்ன? சொந்த விருப்பு வெறுப்புகளுக்காகவா நாடு...? இல்லை மக்கள் என்ன ஆட்டு மந்தைகளா? என்ன செய்தாலும் நாங்கள் வாக்களிப்போம் என்று கூறிக்கொண்டிருக்க...?

ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லையே தேவையில்லாமல் உயிர்கள் தானே பலியாயின...ஒரு குடும்பத்தை குழந்தைகளுடன் தற்கொலை புரியும் அளவுக்கு நெருக்குதலை கொடுத்தும் உயிர் பலி வாங்கியும் கண்டுபிடிக்க முடியவில்லையே...

//சோனியா...பிராமணரா....?//

இதை நோண்டிகொண்டிருக்கும் சுப்பிரமணியசாமி பிராமணரா இல்லையா...? மெல்ல அவல் கிடைக்கும், மெல்லலாம் என்று ஆதாயம் அடையத்துடிக்கும் பார்ப்பன பத்திரிகைகள் உண்டா இல்லையா...?

அரசு நிலத்தை கையெழுத்து போட்டு விற்று விட்டு இது என் கையெழுத்து இல்லை என்றா கூறினார்...? இல்லை ஸ்பெக்டரம் ஏலத்துக்கு கையொப்பமே போடவில்லை என்று கூறினாரா? கூறிவிட்டு உச்சநீதிமன்றத்தின் விமர்சனத்திற்கு ஆளானாரா?

மேம்பாலம் கட்ட ஆணையிட்டுவிட்டு நான் ஆணையிடவில்லை என்று கூறினாரா...?

இன்னும் எல்லாம் புஸ்ஸூல தானே நிக்குது...வழக்கு போட்டதிலிருந்தே...

kanchi Jagadeesan said...

காஞ்சி தலைவன்


பெரியாரின் அண்ணாவின் கொள்கைள் மிது உங்களின் பிடிமானம் எங்களை பிரமிக்க வைக்கிறது. உங்களின் சுய மரியாதையும் அண்ணாவின் கொள்கைகளில் நீங்கள் உறுதியாக இருபது காங்கரசின் கால் அடியில் 63 தொகுதிகளை வைத்து விடு குடும்பத்துக்காக கழகத்தினரின் உணர்வுகளையும் அவர்களின் தன்மானத்தழும் சேர்த்து அவர்களின் கால் அடியில் விழுந்து வந்திர்களே அப்பொழுதே தெரிந்தது போனது அவர்களுக்கு உழல் என்றால என்னவென்றே தெரியாது என்றும் மதுரை சன் தொலைகாட்சி அலுவலகம் தீ பிடித்ததற்கும் பார்ப்பனர் சதியே காரணம் வாழ்கிறார் பெரியார் தி.மு.க கொள்கைபரப்பு செயலாளர் கி. வீரமணி வடிவிலே

நம்பி said...

//மதுரை சன் தொலைகாட்சி அலுவலகம் தீ பிடித்ததற்கும் பார்ப்பனர் சதியே காரணம் வாழ்கிறார் //

சன் தொலைக்காட்சி நிறுவனம் கூட இந்த அளவுக்கு கவலைப்படவில்லை...