Search This Blog

2.3.11

ஊழலைப்பற்றிப் பார்ப்பனர்களா பேசுவது?

பட்டுக்கோட்டைப் பாசறை அழைக்கிறது!

பட்டுக்கோட்டை என்றாலே சுயமரியாதை இயக்கத்தின் கோட்டை என்று பொருள். இந்தக் கோட்டையிலிருந்து கிளம்பிய சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள் ஏராளம், ஏராளம்! கருஞ்சட்டைக் காளையர்கள் கணக்கற்றவர்கள்!

அஞ்சா நெஞ்சன் அழகிரி என்ற சொல்லை உச்சரிக்கும் போதே உடலின் ஒவ்வொரு அணுவும் புல்லரிக்கும். அரிமாவின் கர்ச்சனை என்பார்களே, அது அவருக்கே பொருந்தும்.

ரத்தம் கக்கக் கக்க தன்மான எரிமலைக் குழம்பை யொத்த உரையை, மரத்துப் போன தமிழர்களின் உடலில் சூடேற்றும் வண்ணம் பொழிந்தவர் அவர். ஆண்டு அரை நூறு அடைவதற்கு முன்பே இயற்கை அவரைக் கொத்திக்கொண்டு போய்விட்டதே!

இன்னும் எத்தனை எத்தனையோ மாவீரர்கள் உண்டு. இன்று நூறு வயதைத் தொட்டுக்கொள்ளத் துடிக்கும் மாமுண்டி என்று அன்போடு அழைக்கப்படும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நா.இராமாமிர்தம் அவர்கள் வரை எடுத்துச்சொல்ல ஆரம்பித்தால் அதுவே ஒரு தொகுப்பாக வளரும்.

இந்த ஊரிலே எத்தனை எத்தனையோ மாநாடுகள்!

அதிலே ஒரு குறிப்பிடத்தக்க மாநாடுதான் 1929ஆம் ஆண்டு மே மாதம் 25, 26 நாள்களிலேயே நடைபெற்ற முதலாவது தமிழர் மாகாண சுயமரியாதைத் தொண்டர் கள் மாநாடாகும். தொண்டர்களை முன்னிறுத்தி நடத்தப்பட்ட முதல் மாநாடு என்ற மகுடத்திற்குரியது அந்த மாநாடு. அந்த மாநாட்டில் பங்கேற்ற பெருமக்கள் யார் யார்? குடிஅரசு (12.5.1929) பட்டியலிடுகிறது-இதோ,

26ஆம் தேதி மகாநாடன்று தஞ்சை திருச்சி ஜில்லா சுயமரியாதை மகாநாடு பட்டுக்கோட்டையிலேயே நடைபெறும். சர்வகட்சி பார்ப்பனரல்லாதாரும் மகா நாட்டுக்கு விஜயமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாகாண முழுவதுமுள்ள சங்கங்கள் மற்ற கட்சி நண்பர்கள் தங்களூரிலிருந்து எத்தனைப் பிரதிநிதிகள் விஜயமாகின்றார்கள் என்ற விவரத்தை வரவேற்புக் கழகத்திற்கு அறிவிக்கக் கோருகிறோம்.

மகாநாட்டிற்கு சென்னை அரசாங்க சட்ட மெம்பர் கனம் திவான் பகதூர் எம்.கிருஷ்ணன் நாயர் அவர்கள் வைக்கம் வீரர் திரு.ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் திருஉருவப்படத்தைத் திறந்து வைப்பார்.

அவ்வைபவத்திற்கு இரண்டாவது மந்திரி கனம் எஸ்.முத்தையா முதலியார் அவர்கள் தலைமை வகிப்பார். மகாநாட்டுப் பந்தலில் சட்ட மெம்பர் திவான்பகதூர் எம். கிருஷ்ணன்நாயர், திரு.ஈ.வெ.ராமசாமியார் திரு.பி.டி. ராஜன் முதலிய தலைவர்களுக்கு வரவேற்பளிக்கப்படும். உபசாரப் பத்திரமளிப்புக் கூட்டத்திற்கு தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் ராவ் பகதூர் ஏ.டி.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார்.

சுயமரியாதைத் தொண்டர்கள் மாகாண மாநாட்டிற்கு ரிவோல்ட் உதவி ஆசிரியர் திருவாளர் எஸ்.குருசாமி அவர்கள் தலைமை வகிப்பார். காரைக்குடி குமரன் ஆசிரியர் திரு.சொ.முருகப்பர் மாநாட்டைத் திறந்து வைப்பார்.

திருச்சி திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் சுயமரியாதைக் கொடியை உயர்த்துவார்.

உயர்திரு. கைவல்ய சாமியாரின் திருஉருவப்படத்தை திரு.கே.வி.அழகர்சாமி திறந்து வைப்பார்.

அவ்வைபவத்திற்கு திரு.சாமி சிதம்பரனார் தலைமை வகிப்பார்.

மகாநாட்டிற்குக் கட்டணம் அடியிற்கண்டவாறு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

வரவேற்பு அங்கத்தினர் ரூ.5

பிரதிநிதி ரூ.2

மாகாண சுயமரியாதைத் தொண்டர்கள் மகாநாட்டு பொக்கிஷதார் திரு.எஸ்.கே.சிதம்பரம் அவர்கள் மகாநாட்டின் நன்கொடை வசூலிக்கவும், வரவேற்புக் கழக அங்கத்தினர்கள் சேர்க்கவும் வெளி ஜில்லாக்களில் சுற்றுப் பிரயாணம் செய்கிறார். 5,6 நாட்கள் வரையில் திருச்சி, நாமக்கல், சேலம் தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர் முதலிய இடங்களுக்குச் செல்வார். அந்தந்த ஊர் சகோதரர்கள் தக்க ஆதரவு காட்ட வேண்டுகிறோம்.

---------------வரவேற்புக் கழகத்தார்.

மாநாடு முடிந்தவுடன் பொதுக்கூட்டம் நடைபெற்றது பொதுக்கூட்டத்திற்கு சிவகங்கை வழக்குரைஞர் இராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

காரைக்குடி குமரன் இதழின் ஆசிரியர் சொ.முருகப்பா உரையில் கேலியும், கிண்டலும் பீறிட்டுக் கிளம்பின. இந்து மதத்தின் ஆபாசமும், பார்ப்பனர் ஏற்படுத்திய புரட்டும் என்பது தலைப்பானால் முருகப்பா போன்றோர்களின் பேச்சைப் பற்றிக் கேட்கவும் வேண் டுமோ! பேச்சின் கால அளவு இரண்டு மணிநேரம்.

அந்தப் பேச்சு வெறும் கேலி, கிண்டலோடும், சிரிப்பை வரவழைத்ததோடும் நின்று விட்டதா? அதுதான் இல்லை.

அது பற்றி குடிஅரசு (2.6.1929) எழுதுகிறது:

முருகப்பாவின் பிரசங்கத்தைக் கேட்டுக் கொண் டிருந்தவர்களில் நாமத்தை அழித்தவர்கள் பலரும், ருத்திராட்சத்தைப் பிடுங்கி எறிந்தவர்கள் பலரும், கூட்டத்தில் பிடுங்கி எறிய சங்கோஜப்பட்டு மறைத்துக் கொண்டவர்கள் பலரும், நாமக்காரர்களையும், விபூதிக் காரர்களையும், பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பவர்கள் பலரும், விஷயங்களை எங்கு வினயமாய்க் கவனித்து இதுவரையிலும் தாங்கள் மவுடிகத் தன்மானவும், மூடத் தனமாகவும் நடந்து வந்ததையும் மாற்றிக்கொண் டவர்கள் பலருமாய் இருந்த காட்சி அற்புதக் காட்சியாக இருந்தது,

கலப்பு மணம், விதவை மணம் சம்பந்தமான தீர்மானம் வந்தபோது தலைவர் அத்தீர்மானத்தை நடவடிக்கையில் நடத்தக்கூடியவர்களை எழுந்து நிற்கும்படி கேட்டபோது சுமார் 200 வாலிபர்களும் 2,3 பெண்களும் எழுந்து நின்ற காட்சி, எல்லாக்காட்சிகளையும் விட மேலான காட்சி யாயிருந்தது என்று குடிஅரசு குறிப்பிட்டிருப்பதைப் படிக்கும்பொழுது விம்மிதம் கொள்கிறோம்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாகக் குருதியில் குடைந்து ஊறிக்கிடந்த பழக்க வழக்கங்களை அதன் அடிவேர், சல்லிவேர் வரை சென்று ஒரு மாநாடு-ஒரு பொதுக்கூட்டம் பிடுங்கி வெளியில் எறிகிறது என்றால், இந்தச் சாதனைக்கு நிகரானதை எந்த நிகண்டுவில் தேடிக் கண்டுபிடிக்க முடியும்?

அந்த உணர்வு இன்றைக்கும் கூடத் தேவைப்படுகிறது. பார்ப்பனீயம் பல வகைகளில் மாறுவேடம் தரித்து தன் அற்பப் புத்தியை அரங்கேற்றிக் கொண்டுதானிருக்கிறது. அதற்கு அவ்வப்போது சூடு கொடுக்கவும், நம்மக்களுக்குச் சூடு, சொரணையை ஏற்படுத்தவும் கழகத்தின் மாநாடுகளும், பிரச்சாரங்களும் தேவைப் பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இந்தக் காலகட்டத்தில் கழகத்தின் சார்பில் அலை அலையாக மாநாடுகள் நடத்தப்பட்டது வேறு எந்தக் காலகட்டத்திலுமே கிடையாது.

2011ஆம் ஆண்டு தொடக்கமே களை கட்டியது!

உலக நாத்திகர்கள் மாநாட்டை திருச்சி மாநகரில் நடத்திக்காட்டி (2011, சனவரி 7,8,9) உலகத்தையே நம்மை நோக்கிப் பார்க்க வைத்தோம்.

இதோ மார்ச் 5ஆம் தேதி பட்டுக்கோட்டையில் மகத் தான பேரணியுடன்கூடிய தஞ்சை மண்டல இளைஞரணி மாநாடு. கழகப் பாரம்பரிய மிக்க பட்டுக்கோட்டைப் பாசறையில் கழக இளைஞர்கள் கூடி எக்காளமிட இருக்கின்றனர்.

தேர்தல் களம் சூடு கிளம்பும் ஒரு காலகட்டத்தில், தமிழ் மண்ணை இனமான நெருப்புச் சூளையாக வார்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு நமது கழகத்திற்கு இருக்கிறதே!

ஆரியர்- திராவிடர் போர் என்று அரசியல் களத்தில் நின்று கொண்டிருக்கும் கலைஞரே ஆவேசத்துடன் அறிவித்துவிட்ட நிலையில், நமது மாநாட்டுக்குக் கூடுதல் உத்வேகமும் பொறுப்புணர்ச்சியும் தானாகவே வந்து சேர்ந்துவிட்டது.

ஊழலைப்பற்றிப் பார்ப்பனர்களா பேசுவது? அவர் களின் பிறப்பே ஊழல் தன்மையானது. (அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்றால், அதன் பொருள் இதுதானே?).

அவர்கள் நடப்பே ஊழல் மயமானது! கடவுளிடம் காணிக்கை என்னும் லஞ்சம் கொடுத்து கரையேறப் பார்க்கும் கயமைத்தனமானது.

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப் பானுக்கே மோட்ச லோக டிக்கெட் கொடுப்பதற்கு-பசுமாட்டுக்குப் புல் போட்டாலேபோதும் என்கிற அளவுக்குக் கையூட்டுக்குப் பெயர் போனது.

இந்து மதமே ஊழல்மயம்தானே?

மதத்தையும், ஜாதியையும், கடவுளையும், மூடநம்பிக் கைகளையும் விமர்சிக்கும் ஒரே ஒரு முதல்வர் உலகி லேயே நமது மானமிகு கலைஞர்அவர்கள்தாம்!

தமிழர் தலைவர் மிக நேர்த்தியாகச் சொன்னது போல நெருக்கடி கால எரிமலையையே விழுங்கி ஏப்பமிட்டவர் அவர்!

இளைஞர்களைத் தயார் செய்ய வேண்டும். சினிமா மாயை என்னும் தொற்று நோய்க்குப் பலியாகாமல், பகுத்தறிவுத் தடுப்பூசி போடும் கடமை சமுதாய மருத்துவப் பாசறையாம் நம்மைச் சார்ந்தது.

பட்டுக்கோட்டையில் ஒரு திட்டத்தோடு சந்திப்போம். பட்டுக்கோட்டை கொடுக்கும் குரல் தமிழ் மண்ணையே அதிரச் செய்யட்டும்!

அரிமாக்களே, அவசியம் வாருங்கள்! தமிழர் தலைவர் அழைக்கிறார். தன்மான முரசு கொட்டுவோம், தவறாமல் கூடுங்கள்! கூடுங்கள்!!

என்ன தைரியம் இருந்தால் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் தெய்வத்தைத் துணை கொண்டு தேர்தலில் குதிப்போம் என்று கூப்பாடு போடுவார்கள்?

அந்த ராமன் தெய்வத்தைத்தான் சேலத்திலேயே பார்த்தோமே! ராமன் கை கொடுத்தானா? - பெரியார் ராமசாமி (ராமனுக்கே சாமி) கை கொடுத்தாரா? என்பது நாட்டுக்குத் தெரியுமே!

கருஞ்சட்டைக் கடலே,
கை வரிசையைக் காட்ட வருக! வருக!!
பட்டுக்கோட்டையாம் பாடி வீடு
அழைக்கிறது! அழைக்கிறது!!
தங்கள் வருகையைத் தருக! தருக!!

------------------மின்சாரம் அவர்கள் 1-3-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

தமிழ் ஓவியா said...

பட்டுக்கோட்டை-இளைஞரணி மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் தேர்தல் ஆரியர் - திராவிடர் போராட்டமே!
பட்டுக்கோட்டை-இளைஞரணி மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

பட்டுக்கோட்டை, மார்ச் 6- தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலானது - ஆரியர் திராவிடர் போராட்டமே என்று பட்டுக்கோட்டையில் நேற்று (5.3.2011) நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

5.3.2011 சனியன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற தஞ்சை மண்டல திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தீர்மானம் எண் 1:

கல்வி வளர்ச்சிக்காக நிதி நிலை அறிக்கையில் மாநில, மத்திய அரசுகள் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 2:

(அ) இளைஞர்களை, குழந்தைகளைச் சீரழிக்கும் திரைப்படத்துறை, சின்னத் திரைகளை ஒரு ஒழுங்குக் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வர ஆவன செய்யவேண்டுமாய் இம்மாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

(ஆ) அறிவியல் சிந்தனையையும், தன்னம்பிக்கை யினையும் ஊக்குவிக்க வேண்டிய அறிவியல் சாதனமான தொலைக்காட்சிகள் மூடநம்பிக் கைகளில் மக்களை ஆழ்த்தும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதும், வாலிப வயதுடையோரை வக்கிரமான திசைக்கு இழுத்துச் செல்லு வதையும் இம்மாநாடு வன்மையாகக் கண்டிக் கிறது.

பிரிட்டன் தொலைக்காட்சியில் ருத்திராட்ச மூடநம்பிக்கை விளம்பரம் பிரிட்டன் அரசால் தடை செய்யப்பட்டது (செய்தி 23.2.2008) என்ற தகவலை மத்திய அரசுக்கு இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது.

மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டியது - ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51A) கூறியுள்ள நிலையில், அதற்கு எதிராக மின்னணு ஊடகங்களும், பத்திரிகை ஊடகங்களும் செயல்படுவதைத் தடை செய்ய வேண்டும் என்றும் திராவிடர் கழக இளைஞரணி மண்டல மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 3:

ஜாதி ஒழிப்புக்கு ஜாதி மறுப்புத் திருமணம் என்பது ஒரு முக்கியமான கரணியம் என்பதால், இளைஞர்கள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வதை மிக முக்கிய கொள்கையாகக் கருதி செயலில் காட்ட வேண்டும் என்று இளைஞர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. ஜாதி ஒழிப்பு திருமணத் தம்பதிகள் - பிள்ளைகள் ஆகியவர்களுக்கு இடஒதுக்கீடு (ஐஊ ஐவேநச ஊயளவந ணுரடிவய) 5 சதவிகிதம் முதல் துவங்கி தர வேண்டும் என்றும் ஜாதி ஒழிப்பு இலக்கை நோக்கிய பயணத்திற்கு இது வழி வகுக்கும் என்றும் இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4:

மதவாதம் உலகம் முழுவதும் தலைதூக்கி சமுதாயத்தின் அமைதியையும், சீர்மையையும் நாசப் படுத்துவதால், அதன் பிடிகளிலிருந்து மக்களை விடுவிக்க - மதமற்ற பகுத்தறிவு ஒப்புரவு உலகமே மாச்சரியங்களுக்கு இடம் இல்லாத - மனிதநேய - சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றைக் கொண்ட நாத்திக நன்னெறியை மக்கள் மத்தியில் பரப்புவது என்றும், குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பரப்பிட எல்லா வகையான முயற்சிகளையும் மேற்கொள்வது என்றும் இம்மாடு தீர்மானிக்கிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் எண் 5:

இளைஞர்கள் வன்முறையின் பக்கம் இழுத்துச் செல்லப்படுவதற்கும், கலாச்சாரச் சீரழிவுக்குப் பலியாவதற்கும் முக்கிய காரணங்களுள் ஒன்று படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதம் இல்லாததுமாகும்.

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்றும், வேலை வாய்ப்பு என்பது அடிப்படை உரிமையாக ஆக்கப்பட வேண்டும் என்றும், அரசுத்துறை, பொதுத்துறை, தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு, சமூக நீதிக் கண் ணோட்டத்துடன் இது விரிவாக்கப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 6:

சபரிமலையில் மகரஜோதி என்பது உண்மையானதல்ல - பொய்யானது - மக்களை மோசடி செய்யும் திட்டமிட்ட ஏற்பாடு என்ற உண்மை வெளிப்படையாகத் தெரிந்த நிலையில், முன்னாள் முதல் அமைச்சர் ஈ.கே. நாயனார், கேரள தேவசம் போர்டு நிருவாகிகள் உள்ளிட்டோரும் இதனை ஒப்புக் கொண்ட நிலையில், மகரஜோதியை மாநில அரசு சட்டப்படி தடுக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. அவ்வாறு செய்யா விட்டால் ஒரு அரசே மோசடிக்குத் துணை போகிறது என்றும், வெறும் வருமானத்தைக் கருதியே கேரள அரசு இதனை ஊக்குவிக்கிறது என்றும் இம்மாநாடு மாநில அரசைக் குற்றம் சாற்றுகிறது.

இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாததற்கும் இம்மாநாடு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 7:

தமிழர் வீட்டுக் குழந்தைகளுக்குக் கண்டிப்பாக சமஸ்கிருதத்துக்கும், பிற மொழிகளுக்கும் இடம் கொடுக்காத வகையில் தமிழில் பெயர் சூட்டுவதை முக்கியக் கடமையாகக் கொள்ளவேண்டும் என்று தமிழர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

அயல் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க இது மிகவும் அடிப்படையானது என்பதையும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 8

ஒருங்குறி (Unicode) என்ற பெயரால் தமிழில் சமஸ்கிருத - கிரந்த - எழுத்துகளை ஊடுருவச் செய்தும், தமிழ் எழுத்துகளை சமஸ்கிருதத்தில் கடன் பெற்றுப் புது மணிப்பிரவாள நடையைத் தமிழில் உருவாக்கும் மோசடியை முளையிலேயே தடுத்து நிறுத்துமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்வதுடன், தமிழர்கள் ஒவ்வொருவரும் இப்பிரச்சினையில் மிக விழிப்புடன் இருந்து தடை செய்ய வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 9:

ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற திராவிடர் கழகத்தின் தொடர் வற்புறுத்தல் செயலாக்கம் பெறும் வகையில், மத்திய நிதி அமைச்சரும், உள்துறை அமைச்சரும் நாடாளு மன்றத்தில் உத்தரவாதம் கொடுத்துள்ளதை இம்மாநாடு பாராட்டி வரவேற்கிறது. கல்வி பொருளாதாரம் பற்றிய விவரங்களும் அதில் இணைதல் அவசியம் என்பதையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 10:

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டத்தின் அடிப்படையில் நடைபெறுவதைப் புரிந்துகொண்டு, திராவிடத் தமிழர்கள் திமுக தலைமையிலான அணியை வெற்றி பெறச் செய்ய தீர்க்கமான முறையில் பாடுபட வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

18 வயது நிறைந்த அனைவருக்கும் வாக்குரிமை இருப்பதால் இருபால் இளைஞர்களும் இதில் மிகக் கவனமாய் இருந்து கடமையாற்ற வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 11:

ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை இன்னமும் கேள்விக்குறியாகவே நிற்கிறது. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்த நிலையிலும் ராஜபக்சேயின் ஆட்சியில் எந்த அரசியல் தீர்வும் எட்டப்படவில்லை. முள் வேலிக்குள் முடங்கிக் கிடக்கும் தமிழர்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். தமிழர்களின் பூர்விகப் பகுதிகளில் சிங்களவர்களின் குடியேற்றம், அரசு உதவியோடு திட்டமிட்ட வகையில் நடந்து வருகிறது. தமிழர்களின் அடையாளத்தை முற்றிலும் அழிப்பதுதான் சிங்கள அரசின் நோக்கமாக இருந்து வருகிறது. இவற்றைப்பற்றியெல்லாம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தும், போராடி வந்தும் இந்தியாவின் மத்திய அரசு மவுனம் சாதித்து வருவதற்கு இம்மாடு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.