Search This Blog

22.3.11

இராமாயணப் பிரச்சாரம் ஒழுக்கக் கேட்டுப் பிரச்சாரமாகும்!

இராம பக்தர்களின் ஈடற்ற இழிநிலை

ஒரு இராமாயணம் - இராமன் அழித்து ஒழிக்கப்பட்டு ஆகவேண்டும். இராமாயணப் பிரச்சாரம் ஒழுக்கக் கேட்டுப் (கிரிமினல் அண்டு இம்மாரல்) பிரச்சாரமாகும். எவ்வளவுதான் மத மவுடீகம் மக்களுக்கு இருந்தாலும் ஒரு மனிதன் தன்னைப் பெற்ற தாய் இரண்டணா ரேட்டுக்குக் குச்சுக்காரியாக இருந்து, தெருவில் போகிற சின்ன பையன்களை யெல்லாம் கையைப் பிடித்து இழுத்தால், மகன்காரனாகிய மனிதன் இழுக்கப்பட்ட பையனைப் பார்த்து ஏண்டா எங்கம்மா இழுத்தால் திமரிக்கிட்டு ஓடப்பார்க்கிறாய் என்று பையனை அடித்தால், அவன் தாய்ப்பற்று, தாய் அன்பு, அபிமானம், தாய்ப் பக்தி கொண்டவனாக ஆகிவிடுவானா?

உலகின் சாதாரண மக்களும் அந்த மகனைப் பற்றி என்ன கருதுவார்கள் என்பதைச் சிறிது சிந்தித்துப் பார்த்தால் இராம பக்தர்களான தமிழர்களுக்கு நான் இராமனை எரிக்கும் தன்மையின் உண்மை விளங்காமல் போகாது.

---------------------தந்தை பெரியார் - “விடுதலை” 2.8.1956

சோரம் போன சீதை பற்றி அண்ணா

சீதையைப்பற்றி கம்பர் கூறும்போது, ஒரு கவியிலே சீதை மனத்தாலும் வாக்காலும் குற்றம் செய்திலள் என்று கூறுகிறார். காயத்தை விட்டுவிடுகிறார். ஏன்? காயம் (உடல்) கெட்டு விட்டது என்ற பொருள் தொக்கி நிற்கவில்லையா? இவ்வளவு முக்கியமான பிரச்சினையிலே அவர் தவறுதலாகவோ, மறந்தோ, காயத்தைப் பற்றிக் கூறாமல் விட்டிருப்பாரா என்று கேட்டால் கோபித்துப் பயன் என்ன?

பதில் கூறித்தானே ஆகவேண் டும்? கவி தவறிழைத்தான் என்று கூறுங்கள், ஜானகியைக் காப்பாற்ற வேண்டுமானால்! கம்பனையா குறை சொல்வது என்று தோன்றினால், ஜானகியைக் கைவிடுங்கள்! இரண்டும் இஷ்டமில்லை என்றால், சிதம்பரநாதரிடம் சொல்லிப் பாடலை ரிப்பேர் ஷாப்புக்கு அனுப்பி வையுங்கள். உள்ளதை நாங்கள் சொல்லும்போது எங்கள் மீது கோபித்து என்ன பயன்?

- அறிஞர் அண்ணா
மறுமலர்ச்சி பக்கம் - 17

0 comments: