Search This Blog

24.1.11

மகர ஜோதி எனும் பொய் ஜோதி



எத்தனை முறை

சொன்னாலும் ஏன்

நம்பமறுக்கிறீர்கள் !


இல்லாத ஒன்றை

விடாப்பிடியாய்

நம்பித்தொலைக்கிறீர்கள்!


அருமையான உயிர்கள்

நூற்றிஆறு

அய்யகோ என

கதறி அழ

கதறிஅழ

மிதிபட்டும் அடிபட்டும்

பறிபோயிருக்கின்றன !


நாற்பது நாட்கள்

விரதமிருந்து

அய்யப்பா ! அய்யப்பா!

என அய்யப்பனைத்

தேடிப்போனவர்கள்

சாகும்நேரத்தில்

அழைக்காமலா

இருந்திருப்பார்கள்

அய்யப்பா!அய்யப்பா என்று!


சாகும்நேரத்தில் அழைத்த

பக்தர்களைக் காப்பாற்றாமல்

எங்கே ------ போனான்

உங்கள் அய்யப்பன் என்றால்

முறைக்கிறீர்கள் என்னை !


கல்லும் முள்ளும்

காலுக்கு மெத்தை என்று

சொன்ன களவாணிப் பயல்களை

நம்பி கால் நடையாய்ப்

போனீர்களே !


மோசடி செய்து

பணம் பறிக்கவே

கேரளஅரசும் தேவஸ்தானமும்

இணைந்து நடத்தும்

மகரஜோதி எனும்

பொய்ஜோதியை

நம்பிப் போய்

உயிரைத் தொலைத்தீர்களே

எமது உழைக்கும் மக்களே!


பட்டினிபோடு பாம்பை

வரும் பக்தர்களிடம்

சீறவிடு பாம்பை !

பாம்பைக் கடவுள் என்று சொல்!

உண்டியல் நிரம்பும் உனக்கு

என்றானாம் அரசனிடம்

சாணக்கியன் அந்நாளில் !


மின்வாரியத்து ஆளைப் பிடித்து

பொன்னம்பல மேட்டின் மேலே

தீபத்தை ஏற்று எனச்சொல்லி

கடவுள் ஏற்றும் ஜோதி

என்று பொய் பரப்பி

உண்டியலை நிரப்புகிறது

கேரள அரசாங்கம் இந்நாளில்!


உழைக்கும் மக்களின்

அரசாங்கம் பொய் சொல்லி

மக்களைக்கொன்று குவிக்குமா!

இனியாவது உண்மையைச்

சொல்லித் தொலைக்குமா?

நம்பிக்கை எனும் பெயரில்

ஓரிடத்தில் மொத்தமாய்க்

குவியும் மந்தை உணருமா!


- -----------------------------------பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா. நேரு அவர்கள் எழுதிய கவிதை

2 comments:

தமிழ் ஓவியா said...

மகரஜோதி - மனிதர்களால் ஏற்றப்படுவதுதான் கோவில் தந்திரி, பந்தள மகாராஜா ஒப்புதல்

சபரிமலை, ஜன.24- மகரஜோதி என்பது மனிதர்களால்தான் ஏற்றப்படு கிறது என்பதை கோவில் அர்ச்சகர் மற்றும் அய்யப்பன் கோயிலுடன் தொடர்பு கொண்டுள்ள பந்தளம் அரண்மனை நிருவாகக் குழுவின் தலைவர் ராமவர்ம ராஜா ஆகியோர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

சபரிமலையில் மகர விளக்கு பூஜையன்று மாலையில், அய்யப்பன் கோவிலுக்கு கிழக்கே, 8 கி.மீ. தொலை வில் உள்ள பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனம் கிடைக்கும்.
இந்த ஆண்டு மகர ஜோதி கடந்த 14 ஆம் தேதி நடந்தது. அன்றைய தினம் புல்மேட்டுப் பகுதியில் நெரிசல் ஏற்பட்டு 102 பேர் பலியானார்கள். இதையடுத்து, கேரள அரசு மீது குற்றம் சாற்றப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கேரள உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. முன்னெச் சரிக்கை ஏற்பாடுகள் குறைவாக இருந்ததற்குக் கண்டனம் தெரிவிக்கப் பட்டது.

இது தொடர்பாக அறிக்கை தரவேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து உரிய ஏற்பாடுகள் செய்யாத வரையில் புல்மேடு பகுதியை அனுமதிக்கக் கூடாது என்று நீதிமன்றம் கூறியது.

அத்துடன், மகர ஜோதி இயற்கை யில் தோன்றுகிறதா அல்லது மனிதர் களால் ஏற்றப்படுகின்றதா என்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.

மக்களின் நம்பிக்கை பற்றிய விஷ யத்தில் விசாரணை நடத்த முடியாது என்று கேரள முதல்வர் அச்சுதானந் தன் கூறிவிட்டார், இருந்தாலும், திருவாங்கூர் தேவஸ்தானத்தின் சார்பில் அறிக்கை அளிக்கப்படவுள் ளது. இப்படிப்பட்ட நிலையில், மகர ஜோதி மனிதர்களால் தான் ஏற்றப் படுகின்றது என்ற கோவில் அதிகாரி கள் தெரிவித்துள்ளார்கள்.

திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் ராஜகோபாலன் நாயர் கூறியதாவது: பொன்னம்பல மேட்டில் தெரியும் விளக்கு மனிதர்களால் தான் ஏற்றப்பட்டு வருகின்றது. முற்காலத் தில் இங்கு ஆதிவாசிகள் வாழ்ந்தார் கள். இவர்கள், மகர விளக்கு திரு விழாவை கொண்டாடி வந்தனர்.
அன்றைய தினம் மாலையில் தீபம் ஏற்றுவது வழக்கம், இப்போது, ஆதி வாசிகள் இல்லை. இருந்தாலும், அந்த வழக்கம் இன்னும் தொடர்கின்றது. இது பற்றி நீதிமன்றத்தில் அறிக்கை அளிப்போம். - இவ்வாறு ராஜகோபாலன் நாயர் தெரிவித்தார்.
---தொடரும்

தமிழ் ஓவியா said...

பந்தளம் அரண்மனை மகாராஜா பேட்டி

அய்யப்பன் கோவிலுடன் தொடர் புடைய பந்தளம் அரண்மனை நிரு வாக கமிட்டியின் தலைவர் பி.ராம வர்ம ராஜா கூறியதாவது: பொன்னம்பல மேட்டில் ஆதி வாசிகளால்தான் மகர தீபம் ஏற்றப்பட் டது. இது அவர்களுடைய விழா, இதற்கும் அய்யப்பன் கோவிலுக்கும் சம்பந்தம் இல்லாமல்தான் இருந்தது. பின்னாளில்தான் கோவிலுடன் இணைந்து விட்டனர்.

மகர விளக்கு பூஜையன்று அய்யப் பன் கோவிலில் நடக்கும் தீபஆரா தனை தான் முக்கியமானது. அதற்காக பந்தளம் அரண்மனையில் இருந்து திரு ஆபரணங்கள் எடுத்து வரப்படும்.

இந்த ஆபரணங்கள் யாவும், மகர விளக்கு பூஜையன்று மாலையில் அய்யப்பனுக்குச் சாத்தப்படும். அதன்பிறகு, தீப ஆராதனை நடக்கும். இதுதான் மிகவும் முக்கியமானது.

ஆனால் இதன் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் மகர ஜோதி அமைந்துவிட்டது. ஆகவே, பந்தளம் அரண்மனை இதற்கு முக்கியத்துவம் அளிக்காது. மலையாளத்தில் முன்பு கோவில் திருவிழாவுக்கு விளக்கு என்று அழைக்கப்பட்டது. மகர சங்கிரமம் அன்று சபரிமலையில் விழா நடப்ப தால் இதற்கு மகர விளக்கு என்று பெயர். இவ்வாறு ராமவர்ம ராஜா தெரிவித்தார்.

சபரிமலை தலைமை பூசாரி (தந்திரி) கண்டரரு மகேஷ்வரரு கூறுகையில், மகர விளக்கு பூஜை அன்று, கிழக்கு அடிவானத்தில் மகர நட்சத்திரம் பிரகாசமாகத் தெரியும். கோவிலில் இருந்து பார்க்கும்போது, பொன்னம்பலமேடு இருக்கும் திசை யில் தெரியும்.

ஆகவே, நாம் அதைத்தான் மகர ஜோதியாகக் கருத வேண்டும். மனிதர் களால் ஏற்றப்படும் தீபத்தைப் பற்றி யது அல்ல என்று குறிப்பிட்டார்.

அய்யப்ப சேவாசங்கம்

அய்யப்பா சேவாசங்கத்தின் தேசியத் துணைத் தலை வர் டி.விஜயக்குமார் கூறுகையில் மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப்படுவது என்பது எங்களுக்குத் தெரியும். இருந்தாலும் இதை நாம் பக்தர்களின் நம்பிக் கையின் அடையாள மாகத்தான் பார்க்க வேண்டும். இந்த தீபம் கோவில் நிர்வாகத்தால் ஏற்றப்பட்டாலும், இதைக் காண வரும் பக்தர்களுக்கு கோவில் நிருவாகமும், அரசாங்க மும் தான் பாதுகாப்புத் தர வேண்டும்.
மக்களின் மத நம்பிக் கையில் அரசோ அல்லது நீதிமன்றமோ தலையி டுவது ஆரோக்கியமான தாக இருக்காது என்று கருத்து தெரிவித்தார்.
இந்து அய்க்கிய வேதிசங்க பொதுச்செய லாளர் கும்மனம் ராஜ சேகரன், மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப் படுகிறதோ இல் லையோ, ஆனால் ஒவ் வொரு அய்யப்ப பக்த னின் மனதிலும் கடவுள் தான் காட்சி தருகிறார் என்ற நம்பிக்கை பதிந் துள்ளது என்று குறிப் பிட்டார்.

மேலும் அவர் கூறு கையில், பொன்னம்பல மேட்டில்தான் முதன் முதலாக அய்யப்பன் கோவில் அமைந்திருந் ததாக கூறப்படுகின்றது. பின்னாளில்தான் இப் போதுள்ள இடத்துக்கு கோவில் மாற்றப்பட் டிருக்கின்றது. ஆகவே தான் பொன்னம்பல மேட்டில் அங்கு வசித்த ஆதிவாசிகளால் தீபம் ஏற்றப்பட்டு வந்துள் ளது. அது இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. புல்மேடு சம்பவத்தை காரணம் காட்டி பக்தர்களின் நம்பிக்கையை யாரும் திசை திருப்ப முயற்சிக்க வேண்டாம் என்று கூறினார். நாயர் சங்கச் செய லாளர் சுகுமாரன் நாய ரும் இதே கருத் தைத்தான் தெரிவித்துள் ளார். பொன்னம்பல மேட்டில்தான் அய்யப் பனின் மூலஸ்தானம் இருந்ததால் அதன் நினைவாக ஜோதி ஏற்றப்படுவதை யாரும் பிரச்சினையாக்கக் கூடாது என்று குறிப்பிட்டார்.

மேலும், சிறீநாராயண தர்ம பதிவாளர் சங்கப் பொதுச் செயலாளர் வேளப்பள்ளி நடேசனும் இது போன்ற கருத்தையும் தெரிவித் துள்ளார்.

காங்கிரிட் மேடை

பொன்னம்பல மேட்டில் மகர தீபம் ஏற்றுவதற்காக 1990 களில் திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் காங்கிரிட் மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில்தான் மகர தீபம் தெரிகிறது.

----”விடுதலை” 24-1-2011