Search This Blog

18.1.11

பொங்கலோ பொங்கல்!


ஆரியச் செருக்கின் விலாவை உடைத்து
ஆர்ப்பரிப்பு நெருப்பினில் பொங்கலிடுவோம் !
சேரியில் விரட்டிய சிரங்குக் கூட்டத்தின்
சிண்டுகளை நறுக்கி சிறகாய்ப் போடுவோம் !
வேறு பண்பாடு வேதிய சுடுகாடு
வேண்டாம் அதுவென்று வீறுகுரல் கொடுப்போம் !
பாவத் தொழிலாம் பாங்கான பயிர்த் தொழில்
பார்ப்பன மனுதர்மம் பழித்துச் சொன்னது
ஆனாலும் அவாள் வயிற்றில் அறுத்து வைப்பதோ
அந்த ஏழை உழவனின் அரிசி பருப்பைத்தான்
ஆடு மாடுகளை ஓட்டி வந்தவன்
ஆட்டையும், மாட்டையும் நமக்குக் கொடுத்தான்
சாட்டையைக் கையில் எடுத்துக் கொண்டான்
சாறாய் நமது உழைப்பைத் தின்றான்
வாழும் உலகை மாயை யென்னும்
வழுக்கல் பாதையில் உருட்டி விட்டான்
பார்ப்பான் வளர்த்த பக்தி யாகத்தில்
பாவி தமிழன் பலிகிடாய் ஆனான்
அறிவுக்குச் சுளுக்கு வந்துவிட்டால்
ஆட்டம் காலிதான்; அப்புறம் என்ன?
அறிவை மீட்கும் அரிய பணியை
அரிமா பெரியார் தோளில் சுமந்தார்
கெஞ்சினால் மிஞ்சுவான் பார்ப்பான் என்பதால்
மிஞ்சும் வாளை சுழற்றி எழுந்தார்
மூலபலத்தின் முகவரி கண்டார்
மூச்சை அடக்கும் பெரும்போர் புரிந்தார்
விளைவு அதுதான் தை முதல்நாள்
வீரத் தமிழன் புத்தாண்டுப் பொன்னாள்
மானமிகு தமிழர் தலைவர் வீரமணி
மாண்புமிகு கலைஞரிடம் எடுத்துச் சொன்னார்
மாண்புக்குள் மறைந்திருந்த அந்த மானமிகு
மலர்ந்து எழுந்தது, ஆணையும் பிறந்தது.
பண்பாட்டுப் புரட்சிப் புரவியில் ஏறி
பாடுவோம், பாடுவோம், பகுத்தறிவு பாடுவோம் !
பெரியார் வாழ்க ! அண்ணா வாழ்க !
பெருமை மிகு கலைஞர் வாழ்க ! வாழ்க !!
மானமிகு தலைவர் வீரமணி வாழ்க !
மலைபோல எழுந்து மகிழ்ச்சியில் குளிப்போம் !
மதியெனும் பெண்ணை மணந்து களிப்போம் !
பொங்கலோ பொங்கல் ! பொங்கலோ பொங்கல்!!

- கவிஞர் கலி. பூங்குன்றன் ------"விடுதலை”14-1-2011

0 comments: