1796 இல் சென்னைக்கு அரசுத் துறைக்குப் பணி யாற்ற வந்த எல்லீஸ்துரை யவர்கள் தமிழ் படிக்க விரும்பினார். அவருக்குத் திருக்குறள் ஏட்டுச் சுவடியொன் றைத் தாம்வேலை பார்த்து வந்த வெள்ளைக்காரர் வழி சேர்ப்பித்தவர் அயோத்தி தாசரின் பாட்டனாரான கந்தசாமி என்பவர்.
எல்லீஸ் தனக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க வந்த பிராமணர்களிடம், கந்தசாமி திருக்குறள் கொடுத்தார் என்றார். அதற்கு அவர்கள், அவர் தீண்டத்தகாதவர், அவர் கொடுத்த திருக்குறள் தீண்டத்தகாதது என்றனர். காரணம் வள்ளுவர் புலச்சியரின் மகன் என்பது அவர்கள் எண்ணம்.
ஏன் இப்படி பிராமணர்கள் கருதுகிறார்கள் என்று கந்தசாமியை அழைத்து எல்லீஸ் கேட்க, எங்களுக்கும் இவர்களுக்கும் விரோதம்.
எங்கள் வீதிக்குள் பிராமணர்கள் வந்தால் உங்கள் பாதம்பட்ட இடம் பழுதாகி விடும் என்று சொல்லிக் கொண்டு இவர்களைத் துரத்தி பிராமணர்கள் வந்த வழியிலும் சாணத்தைக் கரைத்துத் தெளித்து சாணிச் சட்டியையும் உடைத்து வருகிறார்கள் என்று கூறினாராம்.
உண்மையான காரணத்தைப் புரிந்து கொண்ட எல்லீஸ்துரை திருக்குறளை ஆழமாகப் படித்து அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார்.
1819இல் துரை திடுமென மறைய நேர்ந்ததால் நூல் முழுவதும் மொழி பெயர்க்காமல் போயிற்று.
-------------(குறளும் அயோத்தி தாசரும் என்ற தலையங்கத் தில் செந்தமிழ்ச் செல்வி, மார்ச் 2000)
திருக்குறள் மிக உயர்ந்த கருத்துகளைக் கூறுவதால் அதை எழுதிய திருவள்ளு வரை பார்ப்பனராக்க முனைந்தனர். அவர் தோளில் பூணூல் தொங்கும் வகையிலும் சித்திரித்தனர்.
அது எடுபடாத நிலையில் திருவள்ளுவரையும், திருக்குறளையும் தீண்டாதப் பட்டியலில் வைத்து ஒதுக்கும் வேலையிலும் முனைந்தனர். திருக்குறள் என்பது கீதையி லிருந்து காப்பி அடிக்கப்பட்ட நூல் என்று புரளியம் செய்து வைத்தனர்.
மேலும் இதோ ஓர் எடுத் துக்காட்டு:
தமிழுக்கு எந்தப் பெருமையும் இல்லை. எல்லாப் பெருமையும் வடமொழிக்கே என்று வீண்வம்பு பேசத் தொடங்கினார்கள் வட மொழி அறிஞர்கள். இலக்கணக் கொத்து என்னும் நூலை எழுதிய சுவாமிநாத தேசிகர் என்னும் வடமொழி அறிஞர் இதை நிறுவுவதற் காக ஒரு போலி முயற்சி யிலும் ஈடுபட்டார். வட மொழி எழுத்துகளையும், தமிழ் எழுத்துகளையும் ஒப்பிட்டார். இரண்டுக்கும் பொதுவான எழுத்துகள் இத்தனை என்று கணக் கிட்டு அவை எல்லாம் வடமொழிக்கே சொந்த மானவை என்று கிறுக்கான முடிவு செய்து விட்டார். பிறகு வடமொழி இல்லாத எழுத்துக்களாகத் தமிழில் எத்தனை சிறப்பு எழுத்துகள் உள்ளன என்று கணக்கிட்டார். எ,ஒ என்ற இரண்டு உயிர்க்குறில் எழுத்துகளும் ற, ன, ழ என்ற மூன்று உயிர் மெய் யெழுத்துகளும் ஆகிய அய்ந்துமே வடமொழியில் இல்லா தவை; தமிழில் மட்டும் இருப்பவை. இந்த அய்ந்து எழுத்துகள் மட் டுமே இருப் பதால் தமிழ் ஒரு மொழி என்று பெருமை கொண்டாட முடியுமா என்று ஒரு சூத்திரம் எழுதிக் கிண்டல் செய்தார்.
அய்ந்து எழுத்தால் பாடையும்
ஆம் என்று
அறையவும் நாணுவர் அறிவுடையோரே
என்று எள்ளினார். தமிழுக்கு
அவ்வாறு பெருமை கூறிப்பேசவும்
அறிவுடையவர்கள் நாணம்
அடைவார்கள் என்றார்.
இது அந்தக் காலத்து வடமொழி அறிஞர்களின் தவறான மனப்போக்குக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்
(- டாக்டர் மு.வ. எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு)
டாக்டர் மு.வ. ஒன்றும் திராவிடர் இயக்கத்தவர் அல்லர் - பார்ப்பனர் எதிர்ப் பாளரும் அல்லர்; அத்தகையவரே பார்ப்பனர்கள்பற்றி இப்படிப் படம் பிடிக்கிறார் என்பதுதான் முக்கியமாகும்.
---------------- மயிலாடன் அவர்கள் 24-1-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment