திருக்குறளை இருட்டடிப்பு செய்து பார்த்தார்கள்; இழித்தும் சொல்லிப் பார்த்தார்கள் - திரிபுவாதம் செய்து பார்த்தார்கள் பார்ப்பனர்கள். அவற்றை யெல்லாம் தாண்டி உலகக் கிரீடத்தில் ஓகோ என்று ஒளிர்கிறது வள்ளுவர் ஆசான் தந்த குறள். ஒரு கட்டத்தில் இவ்வளவு உயர்ந்த கொள்கைகளை எழுதி யிருக்கும் ஆசாமி ஒரு பார்ப்பனராகத்தான் இருக்க முடியும் என்று சொல்லிப் பார்த்தார்கள் - நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டனர்.
கொலை வழக்கில் சிக்கி நீதிமன்றத்துக்கும், வீதிக்குமாக அலைந்து திரிந்து கொண்டிருக்கும் (மாஜி) காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி குறளைப் பற்றிச் சொன்னதைத் தமிழர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மதுரை தொழிலதிபர் ஒருவர், அவரின் பெயர் சீதாராமனாம்; அவருக்கு நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் இந்த சங்கராச்சாரி ஜெயேந்திர அய்யரும் சென்று கைங்கரிய சிரோண்மணி பட்டம் வழங்கினார். அந்நிகழ்ச்சியில் இந்த சங் கராச்சாரியார் என்ன பேசினார்?
திருக்குறளில் உள்ள அறத்துப்பால் கிட்டதட்ட பகவத் கீதையின் தமிழாக்க மேயாகும் (தினத்தந்தி 15.4.2004) என்று கூறினாரே பார்க்கலாம்.
இருள் என்றால் என்ன பொருள் தெரியுமா? வெளிச்சம் என்று பொருள் கூறுவது போன்ற மூர்க்கத்தனமும், மூடத்தனமும்தான் இது.
பிறப்பின் அடிப்படையில் பேதம் சொல்லும் கீதை எங்கே? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்லும் திருக்குறள் எங்கே? திருக்குறள் பற்றி வேறு ஒரு இடத்தில் அலர் பேசியதற்குத் தெரிவிக்கப்பட்ட கண்டனம் வருமாறு:
ஈரோட்டில் திருக்குறளார் முனுசாமி அவர்களின் தலைமை யில் திருக்குறள் பேரவை 4ஆம் ஆண்டு மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் இதோ:
திருக்குறளில் உள்ள அறத்துப்பாலை, அதிலும் முதல் 10 குறட்பாக்களை மட்டும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு பொருட்பாலை, காமத்துப் பாலை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று காஞ்சி மடத் தலைவரான தவத்திரு ஜெயேந் திர சரஸ்வதி துறவியார் திருக்குறளைப் பற்றி திரிபான முறையில் தம் கருத்தைக் கூறியிருப்பது, அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருகிறது.
காஞ்சி மடத்தார் அடுத்தடுத்து திருக்குறளைப்பற்றி புறங்கூறி வருவதற்குக் கண்டனம் தெரிவிப்பதோடு அக்கருத்துகளை திரும்பப் பெற வேண்டுமென காஞ்சி மடத்தை ஈரோடு திருக்குறள் பேரவைக் கேட்டுக் கொள்கிறது என்ற தீர்மானம் காஞ்சி சங்கராச் சாரியார்களின் திருக்குறள் துவேஷத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
இவர் இப்படி என்றால் இவரின் குருநாதரான மூத்த சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி குறள் பற்றி என்ன கூறுகிறார்?
ஆண்டாளின் திருப்பாவையில் ஒரு பாடல் -நெய் உண் ணோம் என்று தொடங்கும் பாடலில், செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் என்ற ஒரு வரி வருகிறது. இதற்கு என்ன பொருள் கூறினார் இந்த மூத்தவாள் தெரியுமா? தீய திருக்குறளை - ஓத மாட்டோம் என்று பொருள் கூறினார். உண்மைப் பொருள் என்ன?
குறளை என்ற சொல்லுக்கு குள்ளம், கோட்சொல், குற்றம் என்று மதுரைத் தமிழ்ப் பேரகராதி பொருள் குறிப்பிடுகிறது. புறங்கூற மாட்டோம் என்பது அதன் பொருள்.
ஆனால்,அதுவா முக்கியம்? பெரியவாள்களுக்கு தங்கள் உள்ளத்தில் உள்ள குமுறும் அந்தக் காழ்ப்புணர்வு - பார்ப்பன உணர்வு - தமிழர்களின்மீதான துவேஷ உணர்வு தானே முக்கியம்?
--------------------- மயிலாடன் அவர்கள் 23-1-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
3 comments:
ஏங்க இந்த மீனவன சுட்டுக்கொன்னாங்களே அது ஏதும் உங்களுக்கு தெரியுமா..?
ஏதோ மடையன் கீதாவில் பிறப்பின் அடிப்படையில் ஜாதி கூறப்பட்டுள்ளது என்று கூறியதை எடுத்து ஆண்டிருக்கிறீர்கள். தங்களைத் தவறாக வழிகாட்டியிருக்கிறார்கள்.
चातुर्वर्ण्यं मया सृष्टं गुण-कर्म-विभाकशः ।
तस्य कर्त्तारमपि मां विद्ध्यकर्त्तारमव्ययम् ।। गीता ४ : १३ ।।
சாதுர்வர்ண்யம் மயா ஶ்ருஷ்டம் குணகர்ம-விபாகஶஹ
தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்தி அகர்த்தாரம் அவ்யயம் (கீதா ௪ :௧௩)
நான்கு வர்ணங்கள் என்னால் குணத்தின் அடிப்படையில் படைக்கப்பட்டன. அவற்றை நான் படைப்பது போல் தோன்றினாலும், நான் படைக்கவில்லை. (இந்த குணத்தைச் சாரந்தவர்கள் இந்த வர்ணம் என்பது பகவானின் சட்டம். அவரவர்களே தங்கள் குணங்கள் மூலமாக ஓரொரு வர்ணத்தைச் சார்ந்தவர்களாகிறார்கள். பள்ளிக்கூட மாணவனுக்கு வெற்றி மதிப்பெண்ணோ, தோல்வி மதிப்பெண்ணோ போடுவது ஆசிரியரானாலும் அது மாணவனின் படிப்பின் அடிப்படையிலேயே இடப்படுவதால் மாணவனே தனது வெற்றி, தோல்வியை முடிவு செய்கிறான்.)
ब्राम्हण-क्षत्रिय-विशां शूद्राणां च परन्तप ।
कर्माणि प्रविभक्तानि स्वभाव-प्रभवैर्गुणैः ।। गीता १८ : ४१-४४ ।।
ப்ராம்ஹண-க்ஷத்ரிய-விஶாம் ஶூத்ராணாம் ச பரந்தப
கர்மணி ப்ரவிபக்தானி ஸ்வபாவ-ப்ரபவைர்குணைஹீ (கீதா ௧௮ :௪௧-௪௪)
ப்ராம்ஹணர், க்ஷத்ரியர், வைஶ்யர் மற்றும் ஶூத்ரர்களின் செயல்கள் அவர்களுக்கு இயல்பாயமைந்த குணங்களின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.
ब्राम्हणः क्षत्रियो वैश्यस्त्रयो वर्णा द्विजातयः ।
चतुर्थ एकजातिस्तु शूद्रो नास्ति तु पञ्चमः ।। मनु १० : ४ ।।
ப்ராஹ்மணஹ க்ஷத்ரியோ வைஶ்யஸ்த்ரயோ வர்ணா த்விஜாதயஹ
சதுர்த்த ஏகஜாதிஸ்து ஶூத்ரோ நாஸ்தி து பஞ்சமஹ (மநு ௧௰ :௪)
ப்ராம்ஹணர், க்ஷத்ரியர், வைஶ்யர் ஆகிய மூவரும் த்விஜர்கள். நான்காவது ஶூத்ரர். ஐந்தாவது ஒரு வர்ணம் என்பது கிடையாது.
ஆயிரக்கணக்கில் இருக்கும் ஜாதிக்கும், நான்கேயான வர்ணத்திற்கும் முடிச்சு போடுவது மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல உள்ளது.
கீதாவைச் சொன்னவனும் ப்ராம்ஹணன் அல்லன். கேட்டவனும் ப்ராம்ஹணன் அல்லன். எழுதினவனும் ப்ராம்ஹணன் அல்லன். அதைப் படிப்பவனும் ப்ராம்ஹணனாக இருக்கவேண்டியதில்லை. யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.
//ஆயிரக்கணக்கில் இருக்கும் ஜாதிக்கும், நான்கேயான வர்ணத்திற்கும் முடிச்சு போடுவது மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல உள்ளது.//
இதைத்தான் பல பார்ப்பனர்கள் இணையத்தில் வைத்து வர்ணாசிரமம் சரி என்று சுப்பிரமணிய சேகர் என்ற பாரத ஸ்டேட் வங்கி பார்ப்பன அதிகாரி முன்வைக்கிறார்...எல்லாவற்றையும் அவர் வெளியிட்டுக்கொண்டது தான். இணையத்தில் வெளியிட்டால் பொதுப் பார்வை தானே. (அனைவரும் யார் என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கில் தானே வைக்கப்படுகிறது)...அவர் தலித் வாடிக்கையாளருக்கு வங்கியில் கடன் தரமாட்டார் என் நினைக்கிறேன்..இவரே இணையத்தில் ஆதாரப்பூர்வமாக தெரிவிட்டார்... சரி விஷயத்திற்கு வருவோம்....
நாட்டில் ஆயிரக்கணக்கில் சிறிய சிறிய கொலைகள் எல்லாம் நடந்து கொண்டுதானிருக்கிறது. அதையெல்லாம் விட்டு விட்டு நாங்கள் செய்த மிகப்பெரிய தலைமைக்கொலையான ''நான்கே நான்கு ஈவுஇரக்கமற்ற பெரிய கொலைகளை'' மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்கிறீர்களே...? தண்டனை கொடுக்கவேண்டும் என்று வாதிடுகிறீர்களே...? என்று நாகரிகத்துடனும், வன்மத்துடனும் கேட்கப்படும் கேள்விக்கு பொருள் தான் என்ன? இன்றும் அதை ஆதரித்து கொண்டு எழுதும் நோக்கம் தான் என்ன?
இதை தான் விவேகானந்தர் கூறினாரா...? இல்லை வலியுறுத்திக்கொண்டிருந்தாரா? இல்லை ''இது (வர்ணம்) பரவாயில்லை...அது தான் தவறு...என வீட்டில் குப்பை (வர்ணம்)இருந்தால் பரவாயில்லை அடுத்தவன் வீட்டு (சாதியை) குப்பையைத்தான் கவனிப்பேன். என்பதின் நோக்கமென்ன...? இது தான் கொடுமை...இதுதான் எங்கே நீர் பிறந்தீர் என்று சுட்டிக்காட்டப்படுகிறது...வர்ணம் தான் பிறப்பையே கேவலப்படுத்துவது...ஜாதி ஒருவருக்கு ஒருவராக பிரித்து கொள்வது..உட்பிரிவு. நீர் அந்த உட்பிரிவையெல்லாம் ஒன்றாக ஆக்கி வேசிமகன் என்று முதலிலேயே பட்டம் சூட்டிவிட்டீர்கள்...சண்டாளன் (கண்ணால் பார்க்க கூடாதவன்) என்று பட்டம் கட்டி விட்டாகிவிட்டது. இதையும் பார்ப்பனன் தான் செய்தான்.
இதை உருவாக்கியவன் சண்டாளன்...இதை உருவாக்கியவன் பஞ்சமன்...இதை கையெலெடுத்துக் கொண்டு ஆதரிப்பவன் கொலைகாரன்...மொத்தத்தில் அவனே மனித நேயமற்றவன்.
//இந்த குணத்தைச் சாரந்தவர்கள் இந்த வர்ணம் என்பது பகவானின் சட்டம். //
இது பார்ப்பனன் பகவானின் பெயரைச் சொல்லி போட்டுக்கொண்ட சட்டம். அவனின் சோம்பேறி வாழ்க்கைக்காக போட்டுக்கொண்ட சட்டம். பகவான் பெயரை சொன்னால் தான் கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் பார்ப்பனன் போட்டத் திட்டம்.
இதை உருவாக்கியவன் கொலைகார வர்ணத்தை சார்ந்தவனாகிறான்.
//பள்ளிக்கூட மாணவனுக்கு வெற்றி மதிப்பெண்ணோ, தோல்வி மதிப்பெண்ணோ போடுவது ஆசிரியரானாலும் அது மாணவனின் படிப்பின் அடிப்படையிலேயே இடப்படுவதால் மாணவனே தனது வெற்றி, தோல்வியை முடிவு செய்கிறான்//
விடைத்தாளின் உள்ள பதிலின் சரி தவறு என்ற அடிப்படையில் போடப்படுவது...படித்தது மறந்து போயிருக்கலாம்...அன்று குறிப்பிட்ட பாடத்தை மறந்து விட்டிருக்கலாம்...அல்லது அந்த குறிப்பிட்ட கேள்விக்கு விடை மறந்து போயிருக்கலாம்...அல்லது அன்று உடல் நிலை சரியில்லாமல் இருந்திருக்கலாம்...உடனே படிப்பின் அடிப்படை என்று முழுவதுமாக ஒதுக்கி விடமுடியாது. அடுத்த தேர்வில் வெற்றி பெருவான்....மாணவனுக்கு படிப்பில் ஈடுபாடு இல்லை என்று உடனடியாக ஆசரியர் முடிவுக்கு வந்து விடக்காடது. மாணவன் தான் முடிவு செய்பவன் என்று...அவனை ஊக்கப்படுத்த வேண்டும் அவன் குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும். அது தான் ஆசிரியரின் கடவமை...விபத்தில் சிக்கியவனுக்கு ரத்தம் தேவைப்பட்டால் உடனிடியாக ரத்தம் கொடுக்க வேண்டும்...அவன் தலைவித அவ்வளவு தான் என்று ரத்தம் கொடுக்காமல் நழுவுவதற்கு சாக்கு போக்கு வைத்துக்கொள்ளக் கூடாது. அப்பறம் நாளைக்கு உன்க்கும் இதே நிலைமை வரும். அப்படி கொடுக்கும்பொழுது யோசிக்கவேண்டும் நமக்கு ரத்தம் கொடுத்தவன் எந்த வர்ணத்தை சேர்ந்தவனோ...? என்ற பார்த்தோமா..? நமக்கு உயிர் கொடுத்து காப்பாற்றினானே, என்று தானே பார்த்தோம்... ஆனாலும் இன்று வரை நாம் மனிதநேயமற்ற ''வர்ணத்தை'' கையில் பிடித்து கொண்டு ''தீண்டாமையை'' வலியிறுத்தி கொண்டு, அவன் உழைப்பையும் ஊதியத்தையும் பிடுங்கி கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருந்தோமே! நாமும் ஒரு மனிதானா? என்று நினைத்து வெட்கப்படவேண்டும். இனி இதை பற்றி பேசுவதில்லை...இதை முற்றிலும் ஒழிக்கப் பாடுபட வேண்டும் என்று குறைந்த பட்சம் உறுதிமொழியாவது எடுக்கவேண்டும். சும்மா சும்மா இதற்கு சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்க கூடாது என்ற நிலைக்கு வரவேண்டும். அப்பத்தான் "Well-Wisher" இல்லையென்றால் "Selfish-ர்"
Post a Comment