திருவள்ளுவர் பார்ப்பனராக இருந்திருந்தால்தான் இத்தகைய அறிவார்ந்த குறளை உருவாக்கியிருக்க முடியும் என்று பார்ப்பனர்கள் கருதுவது - அவர்களின் அகந்தையையும், ஜாதி உணர்வையும்தான் வெளிப் படுத்துகிறது.
பரிமேலழகர் என்ற பார்ப்பனர் - மனுதர்மக் கண் ணோட்டத்தோடு பார்ப்பனக் கண்கொண்டு குறளுக்கு உரை எழுதியுள்ளார்.
உரைப்பாயிரம் என்ற பகுதியின் தொடக்கத்திலேயே பரிமேலழகர் தம் பார்ப்பனப் புத்தியைக் கூர் தீட்டிக் காட்டிவிட்டார்.
இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தமில் இன்பத்து அழிவில் வீடும், நெறியறிந்து எய்து தற்கு உரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற் றுள் வீடு என்பது சிந்தையும், மொழியும் செல்லா நிலை மைத்து ஆதலின், துறவறமா கிய காரண வகையாற் கூறப் படாமையின், நூல்களால் கூறப்படுவது ஏனை மூன் றுமே ஆம்.
அவற்றுள் அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக் கியன ஒழிதலும் ஆம் என் றெல்லாம் பார்ப்பனப் போக்கில் எழுதித் தள்ளியுள்ளார் பரிமேலழகர்.குறளில் கடவுள் என்ற சொல்லோ, கோயில் என்ற சொல்லோ கிடையவே கிடை யாது. அப்படியிருக்க, இந்திரன் எங்கிருந்து வந்தான்? அவனின் பதம் எங்கிருந்து குதித்தது?
அறம் என்று சொல்லும் போது மனுதர்மத்தை அதில் கொண்டு திணிப்பது எவ் வளவு பெரிய மோசடி?
ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மம் - வர்ணாசிரம தர்மம் எங்கே? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற குறள் எங்கே? இரு துருவங்களைப் பார்ப்பனியத்தோடு ஒட்ட வைக்கும் எத்து வேலையை நாம் கவனிக்க வேண்டும்.
மக்கட்பேறு என்பதை புதல்வரைப் பெறுதல் எனும் தலைப்பாக்கி, மக்கள் செல் வம் என்றால் அது ஆண் குழந்தைகளே எனும் பொருள்பட விளக்கம் சொல் கிறார். புதல்வர் என்று பரி மேலழகர் தலைப்பு அளித்ததில்கூட ஒரு நச்சு எண்ணம் உண்டு.
புத் என்னும் நரகத்திலிருந்து தந்தையைக் காப்பாற்றுவதால் புத்திரன் என்பது பார்ப்பனர் போக்கு. அதனால்தான் மக்கட்பேறு அதிகாரத்துக்கு - புதல்வரைப் பெறுதல் என்று தலைப்பை மாற்றுகிறார் பரிமேலழகர்.
இரு பிறப்பாளர் மூவராயினும் இயல்பாக இறுக்கப் படூஉங்கடன் மூன்றனுள் முனிவர்கடன் வேள்வியானும் தேவர் கடன் வேள்வியானும், தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லது இறுக்கப்படாமையா னும், அக்கடனிறுத்தற் பொருட்டு நன் மக்களைப் பெறுதல் என்று புதல்வரைப் பெறுதல் அதிகாரத்துக்கு விளக்கம் தருகிறார்.
இதில் இரு பிறப்பாளர் என்பது பார்ப்பனர், சத்திரியர், வைசியர் ஆவர். நான்காவ தான சூத்திரர்கள், பெண்களுக்குச் சிரார்த்தம் செய்ய அதிகாரம் கிடையாது. மேலும் சிரார்த்தம் செய்ய பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் இல்லை - பார்ப்பன மதமான இந்து மதத்தில்.
பார்ப்பனர்களின் மோசடிக்கு திருவள்ளுவர் கூடத் தப்பவில்லை என்பதைத் தமிழர்கள் உணர்வார்களாக!
குறிப்பு: இது குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ள மானமிகு புலவர் மு. தமிழ்க் கூத்தன் (மதுரை) எழுதிய பரிமேலழகரின் பார்ப்பனீயத் திணிப்பு எனும் நூலைப் படித்திடுக!
---------------- மயிலாடன் அவர்கள் 19-1-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment