தெய்விக மகர ஜோதி என்ற மோசடிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!
சபரிமலையில் மகரஜோதியை நின்று பார்ப்பதற்கு ஏற்ற இடமாக விளங்கிய புல்மேடு என்ற இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஜனவரி 14 ஆம் தேதியன்று 100-க்கும் மேற்பட்ட யாத்திரீகர்கள் இறந்துள்ளனர். அதே போல் மகர ஜோதியைக் காண பம்பாவின் ஓரிடத்தில் கூடிய ஆயிரக் கணக்கான யாத்திரிகர்கள் கூடியதால் தாங்காத மண்மேடு சரிந்ததால் 52 யாத்திரீகர்கள் உயிரிழந்துள்ளனர்.
மகரஜோதி என்னும் இந்த நிகழ்ச்சிக்குத் தெய்விகத் தன்மையைக் கற்பித்துக் கூறிவருவதால், சபரி மலை மீதும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின் றனர். மகர சங்கராந்தி அன்று அய் யப்பன் கோவில் நடை தீபாராத னைக்காகத் திறக்கப்படும்போது, கோயிலின் கிழக்குப் பகுதியில் இருக் கும் பொன்னம்பலமேட்டில் தெய்விகத் தன்மை பொருந்திய மகரஜோதி தானாகவே தோன்றுவதாகக் கதை கூறப்படுகிறது.
தெய்விகத்தன்மை வாய்ந்த இந்த மகரஜோதி மிகப் பெரிய மோசடி என்று 2009 இல் சபரிமலை தந்திரியே கூறியுள்ளார். இந்த அற்புதமான மகரஜோதி பொன்னம்பல மேட்டில் பழங்குடி மக்கள் பெரும் அளவில் குவிக்கப்பட்ட ஒரு கற்பூரக் குவியலை எரியவிடுவதன் மூலமே இந்த ஜோதி தெரிகிறது என்று அந்த தந்திரி விளக்கிக் கூறியுள்ளார்.
அதே சமயம், தந்திரி கண்டரேரு மகேசுவரரு, மகரஜோதி மற்றும் மகர விளக்கு இரண்டிற்கும் இடையே ஒரு புத்திசாலித்தனமான வேறுபாட்டைக் கூறு முயல்கிறார். மகர சங்கராந்தி அன்று கிழக்கு வானில் தோன்றும் நட்சத்திரம் மகரஜோதி என்றும், பழங்குடி மக்கள் கொண்டாடும் விளக்கு வழிபாடு மகர விளக்கு என்றும் கூறுகிறார். ஓர் அறிக்கையில் தந்திரி இந்த வேறுபாட்டை விளக்கியுள்ளார்.
அன்றைய தேவஸ்வம் அமைச்சர் மற்றும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிகாரிகளின் ஒப்புதலுடன் வெளிப் படுத்தப்பட்ட இந்த உண்மை, பல பத்தாண்டு காலமாக ஏதுமறியாத சபரி மலை யாத்திரீகர்களையும், மற்ற பக்தர் களையும் ஏமாற்றி வந்த மிகப் பெரிய மோசடிக்கு முற்றுப் புள்ளி வைக்க கேரள அரசுக்கும், தேவஸ்வம் போர்டுக்கும் ஒரு பொன்னான வாய்ப்யை அளித்தது.
கிழக்கு வானத்தில் மூன்று முறை தோன்றும் வெளிச்சம் தெய்விக ஜோதி என்றே அதுவரை ஏதுமறியாத யாத்திரீ கர்கள் நம்பியிருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை மகரஜோதியும், மகர விளக்கும் ஒன்றுதான். உண்மையைக் கூறுவதானால், இந்த ஜோதி தெய்வத் தன்மை வாய்ந்தது என்று யாத்திரீகர்களை நம்பவைக்க சிலர் கட்டாயப்படுத்தி உள்ளனர்.
இந்த மகரஜோதியைப் பற்றி ஊட கங்கள் பெரிதுபடுத்தி பிரபலமாக்கு வதையும் அலட்சியப்படுத்திவிட முடியாது. ஒவ்வொரு ஆண்டும், மகரசங்கராந்திக்கு அடுத்த நாள், மகரஜோதியைப் பற்றி பெரியதாக தலைப்பிட்டு நாளிதழ்கள் செய்திகளை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. தொழில்நுட்ப முன்னேற் றம், இந்த நிகழ்ச்சியைப் பற்றிய வண்ண மிகு படங்களை வெளியிட உதவுகிறது.
இந்த விளம்பரத்தின் முழு பெருமையும் அகில இந்திய வானொலிக்கே உரியது. முதல் முறையாக மகரசங்கராந்தி அன்று மாலை மகரஜோதி பற்றிய ஒரு நேரடி ஒலிபரப்பைத் தொடங்கியது.
தொலைக்காட்சி ஊடகங்களும் இந்த மகரஜோதி பற்றிய உண்மையை மறைத்து பெரிய தெய்விக நிகழ்ச்சி போன்று நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. சபரிமலை சந்நி தானத்துக்கோ, பம்பா மலை உச்சிக்கோ செல்ல முடியாதவர்கள், தெய்விக மகர ஜோதியைக் காண தங்கள் தொலைக் காட்சி முன் கைகளைக் குவித்து வணங் கிக்கொண்டு உட்கார்ந்து கொள்கிறார் கள்.
இந்த அரிய நிகழ்ச்சியைக் காண யாத்திரீகர்கள் தங்கள் கண்களைக் கூர்மையாக்கி கிழக்குப் பக்கத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்; அய்யப்பன் கோயிலின் கருவறையில் நடந்து கொண்டிருக்கும் தீபாராதனையைப் பற்றி கூட அவர்கள் கவலைப்படுவ தில்லை.
தமிழ்நாடு, கருநாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்து சபரி மலைக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் சரிமலை மற்றும் பம்பாவைச் சுற்றி, மகரஜோதியை ஒரு முறை தரிசிப்பதற்கு ஏற்ற இடங்களில் சங்கராந்திக்கு ஒருவாரத்திற்கு முன்பே வந்து முகாமிட்டும் தங்கு கின்றனர். நூற்றுக் கணக்கான யாத்திரீகர்கள் உயிரிழந்த இந்த நிகழ்ச்சிக்கு யாரைக் குற்றம் சுமத்த முடியும்? இந்த மோசடி தொடர்ந்து நீடிக்க சதி செய்தவர்களுக்கு எதிராக கொலைக் குற்றம் சுமத்தப்பட வேண் டும். ஆனால் எவர் மீது குற்றம் சுமத்த முடியும்?
பெருங்கூட்டம் கூடும் நிலையில் எளிதாகப் பணம் சம்பாதிக்க உள்ள வாய்ப்பை பம்பை முதல் சந்நிதானம் வரை உள்ள சில்லறை வியாபாரிகள் தவறவிட்டுவிடுவதே இல்லை.
1 comments:
well said..
Post a Comment