Search This Blog

18.1.11

பார்ப்பனர்களின் உயர் ஜாதித் தன்மையும் - பக்தி மோசடியும்


தினமலரின் பேனா

பார்ப்பன தினமலர் ஏடு - ஒவ்வொரு நாளும் டவுட் தனபாலு என்ற பெயரில் பார்ப்பனர் கண்ணோட்டத்தில் மற்றவர்களைக் கிண்டலடிப்பது என்பதைத் தனது தொழிலாகக் கொண்டுள்ளது.

கொலை வழக்கில் சிக்கி, சிறையில் கம்பி எண்ணி, இப்பொழுது பிணையில் (ஜெயில் - பெயில்) நடமாடிக் கொண்டிருக்கும் சங்கராச்சாரி சம்பந்தமாக எல்லாம் இந்தப் பார்ப்பன ஏட்டின் பேனா கிண்டல் செய்யாது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்றாடம் நடக்கும் மோசடி, திருட்டுகள் பற்றி எல்லாம் மூச்சு விடாது.

பார்ப்பனர் அல்லாதார் தமிழர்கள் என்று சொன்னால் மட்டும் இதன் உச்சிக் குடுமியே பேனாவாக அவதாரம் எடுத்து நிர்வாணக் கூத்தாடும்.

பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டால் அதற்கொரு கிண்டல், தமிழ்ச் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டால் அதற்கொரு ஏகடியம்.

தமிழில் எழுதி, தமிழால் பிழைத்துக் கொண்டாலும் தமிழையும், தமிழர்களையும் கொச்சைப்படுத்துவது என்பது இந்தப் பார்ப்பனர்களின் பரம்பரைப் புத்தியாகும்.

தினமணியாக இருந்தாலும் சரி, தினமலராக இருந்தாலும் சரி, கல்கியாக இருந்தாலும் சரி, ஆனந்த விகடனாக இருந்தாலும் சரி, சோ அய்யர்வாளின் துக்ளக்காக இருந்தாலும் சரி. தமிழை, தமிழர்களைக் கொச்சைப்படுத்துவதைத்தான் தங்களின் பிறவிக் குணமாகக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது! பாழாய்ப் போன இந்தத் தமிழர்களுக்குத்தான் இனவுணர்வு இல்லையே! உதைத்த காலுக்கு முத்தமிடுவதுதானே இவர்களின் தாசர் புத்தி! அந்தத் தைரியத்தில்தான் பார்ப்பனர்கள் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள்.

இன்றைய தினமலரில் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களைக் கார்ட்டூன் போட்டு டவுட் தனபாலில் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறது.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: அந்தோ கொடுமை... அய்யப்ப சாமிக்கு வேண்டுதல் என்ற பக்தி மூடநம்பிக்கை காரணமாக, மகர விளக்கு வெளிச் சத்தைக் காண, தமிழகத்திலிருந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகுவது, இந்த அறிவியல் யுகத்தில் பெருமைப்படக் கூடியது அல்ல; வெட்கப்பட வேண்டிய ஒன்று.

டவுட் தனபாலு: அதே மாதிரி, ஆண்டுதோறும் ஹஜ் யாத்திரை போறவங்களோட எண்ணிக்கை அதிகரிச்சுட்டே போகுது.. அங்கே, சாத்தான் மேல கல்லெறியறாங்க... சட்டசபைத் தேர்தல் நேரத்துல, அதைப் பத்தியும் ஐயா திருவாய் மலர்ந்தருளினீங்கன்னா, நாங்களும் புகுத்தறிவுல இருந்து விடுபட்டு, பகுத்தறிவுப் பாதைக்குத் திரும்புவோம்...!

(தினமலர் 18.1.2011)

திராவிடர் கழகத் தலைவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் இல்லை; பதில் சொல்லத் துப்பில்லை -சரக்கு இல்லை! அதை விட்டு விட்டு இரு இரு, என்னை அடித்து விட்டாயா? நாளைக்கு என் தெருப் பக்கம் வா, என் அண்ணனை விட்டு உன்னை அடிக்க வைக்கிறேன்! என்று சொல்லும் கோழையைப் போல தினமலர் எழுதுகிறது.

எந்தக் கடவுளையும், எந்த மதத்தையும் திராவிடர் கழகம் ஏற்றுக் கொள்வது கிடையாது என்கிற சாதாரண உண்மையைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் அல்லது தெரிந்திருந்தாலும் வேண்டுமென்றே ஆத்திரத்தைக் கொட்டித் தீர்க்கும் தன்மையில்தான் ஆத்திரம் தொண்டையைக் கவ்விக் கொள்ள இப்படி வீண் வம்புக்கு வருகிறது தினமலர்.


ஒன்று மட்டும் தினமலர் கூட்டத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது.

மகர விளக்கு வெளிச்சத்தைக் காண தமிழகத்திலிருந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகுவது, இந்த அறிவியல் யுகத்தில் பெருமைப்படக் கூடியதல்ல என்ற கருத்தை தினமலர் மறுக்கவில்லை - மறுக்கவும் முடியாது - இந்த நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கூறிய கருத்தினை ஏற்றுக் கொண்டு விட்டதே! தினமலர் மனுவாதிக் கூட்டத்திற்கு அறிவு நாணயம் இருக்குமேயானால், மகர ஜோதி என்பது மோசடிதான்; செயற்கையாகக் காட்டப்படுவதுதான் என்று சம்பந்தப்பட்டவர்கள், முதல் அமைச்சர் முதல் தேவஸ்வம் போர்டு அமைச்சர் வரை ஒப்புக் கொண்டு விட்டனரே - அதைப் பற்றியல்லவா எழுதியிருக்க வேண்டும்; இந்த மோசடி மகரஜோதியைத் தடை செய்ய வேண்டும் என்று அல்லவா அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும்?

மோசடியான ஒன்றைத் தரிசிப்பதற்காகச் சென்றதால்தானே நூற்றுக்கணக்கான மக்கள் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்.


இந்த உண்மையை ஏன் வெளியிடுவதில்லை - ஏன் தயக்கம்? காரணம் இருக்கிறது. இந்தப் பக்தி மோசடியை முதலாக வைத்துத்தானே பார்ப்பனர்களின் வயிற்றுப் பிழைப்பு நடக்கிறது? பார்ப்பனர்களின் உயர் ஜாதித் தன்மை கட்டிக்காக்கப்படுகிறது?

இந்த உண்மையைப் பார்ப்பனர் அல்லாத மக்கள் அறியும் அந்தத் தருணத்திலேயே ஒட்டு மொத்த பார்ப்பனீயமும் தரைக்குள் புதைந்து விடும்; அந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதால்தான் பக்திப் புழுதியைத் தொடர்ந்து கிளப்பி விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தமிழர்கள் சிந்திப்பார்களாக!

-------------- “விடுதலை” தலையங்கம் 18-1-2011

1 comments:

தமிழ் ஓவியா said...

அட டவுட் தனபாலே!

தினமலர் செவ்வாயன்று ஒரு டவுட் தனபாலைப் பேச வைத்தது. நேற்றும் பேச வைத்துள்ளது. இரண்டுமே கழகத் தலைவர் மானமிகு வீரமணி அவர்களைப் பற்றிதான் -சுற்றிதான்!

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: தமிழகத்தில் தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை, பெரும்பாலும் வீட்டுக்கு வீடு சாமிகளும், கடவுள்களுக்கு கோவில்களும் உள்ளன. திருவிழாக்களுக்குப் பஞ்ச மில்லை. குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையாவது, குறிப்பிட்ட ஊர்களில் பக்தி வியாபாரம், கடவுளின் பெயரால் சுரண்டல், பிசின்ஸ் செழிப்பாக நடக்கிறது.

டவுட் தனபாலு: ஐயாவுக்கு அதுல என்ன வருத்தமோ...! திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகப் பொதுக் கூட்டங்கள்ல உண்டி யல் வசூல், துண்டு வசூல் நடத்தியும் ஒண்ணும் தேற மாட்டேங்குது.. கோவில்கள்ல மட்டும் கோடி கோடியா நிறையதேங்கிற வயித்தெரிச்சலோ..!

இதுதான் தினமலரின் டவுட் - கப்சா.

தி.க.வும், தி.மு.க.வும் உண்டியல் வசூல் பண்ணுவது கூட்டம் நடத்துவது என்பது மக்களிடத்தில் பிரச்சாரம் செய்யத்தான். அந்தப் பிரச்சாரங்கள்தான், சிதம்பரம் கோயில் நிருவாகத்திலிருந்து ஆதிக் கத்திலிருந்து தீட்சதர்ப் பார்ப்பனர்களை வெளியேற்றியது.

பார்ப்பனச் சுரண்டல்களை சந்தி சிரிக்க வைத்துக் கொண்டும் இருக்கிறது. ஆனால் தினமலரின் டவுட் தனபால் எடுத்துக் காட்டியுள்ள - திராவிடர் கழகத் தலைவர் சுட்டிக் காட்டிய அந்தக் கோயில் சமாச்சாரங்கள் என்ன?

சிதம்பரம் கோயில் தீட்சதப் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கோயிலின் ஆண்டு வருமானம் ரூ.37,199 என்றும், செலவு ரூ.37 ஆயிரம் மீதி ரூ.199 என்றும் நீதிமன்றத்திலேயே கூறினார்களா - இல்லையா? அதே சிதம்பரம் கோயில், திமுக ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ள நிலையில் அக்கோயிலின் உண்டியல் வசூல் மட்டும் என்ன தெரியுமா? 15 மாதங்களுக்கான வருமானம் ரூ.25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய். அப்படியென்றால் எத்தனை நூற்றாண்டு காலமாக எவ்வளவுக் கொள்ளை அடித்திருக்கும் - இந்தத் தீட்சதப் பார்ப்பனக் கூட்டம்? அது மட்டுமல்ல; இந்து அற நிலையத் துறையின் கட்டுப்பாட்டில் சிதம்பரம் கோயில் சென்று விட்ட நிலையில் கோயிலில் உள்ள உண்டியல்களில் நெய்யை ஊற்றி ரூபாய் நோட்டுகளை நாசப்படுத்தும் கைங்கரியத்தையும் செய்தவர்கள் இதே தீட்சதர்ப் பார்ப்பனர்கள் தாம். தங்களுக்குப் பயன்படாதது எதுவாக இருந்தாலும் அது நாசமாகப் போக வேண்டும் என்பதுதானே பார்ப்பனர்களின் கல்யாணக் குணங்களும், பரந்த உள்ளமும்! பக்தி வியாபாரம் கடவுளின் பெயரால் சுரண்டல் பிசினஸ் செழிப்பாக நடக்கிறது என்று திரா விடர் கழகத் தலைவர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை காலங் கடந்தாவது இப்பொழுதாவது தினமலர் அய்யருக்கு டவுட் தனபாலுக்குப் புரிந்தால் சரி!

---------- கருஞ்சட்டை 20-1-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை