Search This Blog

27.1.11

மத மாற்றம் செய்யும் ஒரு கடவுள்!


இந்து மதம், சைவ சமயம் தவிர்த்த பிற மதங்களில் மத மாற்றம் என்பது அந்தந்த மதத்தைச் சேர்ந்த பக்தர்களால், தொண்டர்களால் நிகழ்த்தப் பெறுகிறது. அவர்கள் தங்கள் மத நன்மைகளையும், சீர்களையும், சிறப்புகளையும் எடுத்துச் சொல்லி, அறிவுரைகள் வழங்கி, அதன் அடிப்படையில் மத மாற்றம் செய்ய முனைகிறார்கள்.

மேலும் சிறப்பாகவும், குறிப்பாகவும், கிறித்துவ மதத்தினர் மக்களுக்குக் கல்வி தந்து - மருத்துவ வசதிகள் செய்து, பால் மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கி, அதன் அடிப்படையில் மக்களை நேசித்துக் கவர்ந்து தங்கள் மதத்திற்கு ஈர்க்கிறார்கள். இதுதான் உலக நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால், எந்த மதத்திலும், அந்த மதக் கடவுளே முன்னின்று மத மாற்றத்திற்குக் காரணமாக இருந்ததாக வரலாறு இல்லை. இந்நிலையில், சைவ சமயத்தில்தான், சைவ சமயக் கடவுளான பரமேஸ்வரன் என்னும் சாட்சாத் சிவபெருமானே முன்னின்று மதமாற்றம் நடைபெற காரணமாக இருந்துள்ளார் என்பது தெரிய வருகிறது.

அதாவது அறிவுரை வழங்கியோ, நன்மைகளை எடுத்துரைத்தோ, மத மாற்றம் செய்ததாக தெரியவில்லை. மாறாக அடித்தும், மிரட்டியும், உதைத்தும், பயன்படுத்தியும் வழிப்பறி கொள்ளை நடைபெறுவது போல, பிற மதத்தைச் சேர்ந்தோருக்கு நோயைக் கொடுத்து மிரட்டி, அச்சப்படுத்தி தன் சமயத்திற்கு ஈர்த்ததாக வரலாறு அமைகிறது.

சைவ பக்த அடியார்கள் மிகப் பெருமையாகக் கீழ்கண்டவாறு கூறுவதை நாம் அடிக்கடி கேட்கலாம். எங்கள் சிவபெருமான் பாலைக் கொடுத்து ஞான சம்பந்தரையும், ஓலை கொடுத்து சுந்தரமூர்த்தியாரையும், நூலைக் கொடுத்து மாணிக்க வாசகரையும் தடுத்தாட்கொண்டு மீட்டது போல, - சூலைக் (சூலை என்று சொல்லக் கூடிய கடுமையான வெப்ப வயிற்று வலியை) கொடுத்து திருநாவுக்கரசரை ஆட்கொண்டார் அதாவது சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றினார்.

இதற்கு மத மாற்றம் தவறு; கூடாது என்று கூச்சல் போட்டு குழப்பமும், குதர்க்கமும் செய்யும் இந்து முன்னணித் தலைவர் ஆரியப் பார்ப்பன இராம. கோபால அய்யர்வாள்தான் விடை இறுக்க வேண்டும்; பதில் சொல்ல வேண்டும்!

இதே ஆதாரம்: சமண மதம் புகுந்து, பின் சிவபெருமான் தந்த சூலை நோயால் மீண்டும் சைவ சமயம் சேர்ந்தார் திருநாவுக்கரசர்.

(மறைமலை அடிகள் எழுதிய சாதி வேற்றுமையும் போலிச் சைவமும் எனும் நூலில் பக்கம் 75, தகவல்: குடந்தை கும்பலிங்கன்)

3 comments:

சக்தி கல்வி மையம் said...

உண்மையான வார்த்தைகள்,
இந்த பதிவு பலரையும் சென்றடைய ஓட்டு போடவும்....
அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_27.html

siddhar palaniappa swamigal said...

மதமாற்றம் - தீவிரவாதம் இரண்டும் ஒன்றே

வேலையில்லாத இளைஞர்களின் தேவைகளை பூர்த்திசெய்து அவர்களை தேச துரோகிகளாக மாற்றும் தீவிரவாத கும்பலுக்கும்

வறுமை,வேலையின்மை,நோய்துன்பம் இவற்றை நிறைவேற்றி மதம்மாற்றும் கும்பலுக்கும் என்ன வித்யாசம்,

சேவை என்ற பெயரில் கிறிஸ்த்துவர்கள் மதமாற்றம் செய்கின்றனர் ஏன் இவர்கள் இந்துக்களுக்கு மட்டுமே சேவை செய்கின்றனர்,
மற்றவர்கள் கண்களுக்குத் தெரியவில்லையா

இங்கு சேவை(மதமாற்றம்) செய்ய வாட்டிகனில் இருந்து ஆள் வருகிறார்கள்.

இதே சேவையை பாக்கீஸ்தானில் செய்ய இவர்கள் தயாரா

அன்னை(அன்னிய) தெரசா அவர்கள் இந்த சேவையிலே மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள் இவர்மீது நான் கூட பெரியஅளவில்
மதிப்பு வைத்திருந்தேன் ஆனால் இவரைப்பற்றி இப்போது தான் தெரிந்து கொண்டேன்.

ஆம் இவர் மதமாற்றம் செய்வதற்காகவே வாட்டிகனில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டவர் இவர் ஒன்றும் சேவை செய்யவில்லை

மதமாற்றத்திற்கு சேவையை கருவியாகப்பயன்படுத்தியவர், ஆம் மதமாற்றத்தடைச்சட்டம் கொண்டு வந்த போது அதை எதிர்த்து உண்ணாவிரதம்
இருந்த முதல் அம்மையார் இவரே ஆவார்.

சேவை செய்யவந்த அம்மையாருக்கு மதமாற்றத்தடைச்சட்டம் எந்த வகையில் இடையூரானது என்று தெரியவில்லை

இப்படி மதவெறிபிடித்த அம்மையார் அன்னை என்ற சொல்லுக்குத் தகுதி அற்றவர்

ஏன் எனில் அன்னை என்பவள் சுயநலமற்ற மதவெறிஅற்ற அன்பு மற்றும் இரக்கத்தை மட்டுமே உடையவள்
இப்படி கிறிஸ்த்துவ மதத்தினருக்கு மட்டும் அன்னையாக விளங்கிய இவரை
மற்றவர் அன்னைதெரசா என்று அழைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்,
இவர் என்றுமே அன்னியதெரசாவாகவே எங்களால் பார்க்கப்படுகிறார்,����

நம்பி said...

//இப்படி கிறிஸ்த்துவ மதத்தினருக்கு மட்டும் அன்னையாக விளங்கிய இவரை
மற்றவர் அன்னைதெரசா என்று அழைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்//

இந்து பார்ப்பன மதம் பார்ப்பனர்க்கு கூட நல்ல மதமாக இருந்ததில்லை...அதிலேயே ஆயிரெத்தெட்டு சாதி மாறுபாடுகள்...அது என்ன மத்ததிற்குள்ளேயே சைவம்....வைணவம்...அப்ப இரண்டு கடவுள்களா...இந்த கடவுள் பக்தர்களை இந்த கடவுள் அழித்துவிடுவரா...? என்ன இழவுடா...இது...?

அன்னைத்தெரசா அந்த மதத்தின் பெயரில் தொண்டாவது புரிந்தார்...பார்ப்பன சங்கராச்சரியார் யாருக்கு தொண்டு புரிந்தார்..கொலைக்குற்றம் தான் புரிந்தார்....இப்போது தாங்கள் யாருக்கு தொண்டு புரிந்து கொண்டிருக்கிறீர்கள்...அனைத்து இந்து மக்களுக்கா? யார் இந்து..? இந்து என்றால் திருடன் என்று சொல்லும் பார்ப்பன இந்துவுக்கா...வர்ணபேதமில்லாமல் திறந்த புத்தகமாக தொண்டு புரிந்து இருக்கிறீர்களா...? இல்லை பார்ப்பனீயத்திற்காக மட்டுமா...?

உமது இந்து மதத்தில் நல்ல விஷயங்கள் இருந்தால் கிருத்துவ மதத்தில் இருந்து இங்கே நிறையப்பேர் வரப்போகிறார்கள்..ஆனால் யாரும் அங்கிருந்து வருவதில்லை....அப்படி என்றால் இந்த திருட்டு இந்து மதத்தில் எந்த நல்ல விஷயமும் இல்லை என்று தானே அர்த்தம். 6000 சாதிகளை வைத்து கொண்டு தீவிரவாதத்தை பற்றி ரொம்ப கவலைப்படுவராக காட்டிகொண்டு எப்படி இதை பேச முடியும்....அதுவும் மகாத்மா காந்தியை போட்டுதள்ளிவிட்டு...தீவிரவாதத்தை பற்றி கவலையுடன் பேசுவது படுகேவலம்...

அவர்களால் மதமாற்றம் முடிந்தது ஏன் இந்த பார்ப்பன இந்து மதத்தால் அங்கிருந்து ஒருவரையும் கொண்டு வர முடியவில்லை....

எதற்கு இங்கிருந்து மாறுபவர்களை கண்டு பார்ப்பனர்கள் அஞ்சவேண்டும். இங்கேயிருந்து எல்லோரும் போய்விட்டால் மாடு மேய்க்கவேண்டிவருமே!....உழைத்து சாப்பிட வேண்டுமே! என்ற அந்த அச்சம் தானே....அது சரி! இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இந்த சோம்பேறி வாழ்க்கை கிடைக்கும் என்ற பயம் தானே....