Search This Blog

2.1.11

நாம் காட்டுமிராண்டி என்பதற்கு இது ஒன்றே போதாதா?


நம்மைப் போன்ற எல்லா குணமும் உணர்ச்சியும், நடப்பும் உள்ள மனிதனைக் கடவுள் என்கின்றோம்; கடவுள் அவதாரம் என்கின்றோம். அதற்கு ஆதாரங்கள் வேறு தேடி, அதற்கு அற்புதங்கள் கற்பித்து நாம் காட்டுமிராண்டிகள் ஆவதோடு மற்ற மக்களையும் காட்டுமிராண்டிகளாக ஆக்கு கின்றோம்.

இது எதற்கு? பாமர மக்களை ஏய்ப்பதற்குத் தானே? இந்த குணம் காட்டுமிராண்டித் தன்மை உடையது அல்லவா? ஒவ்வொருவரும் சிந்தித்துப் பாருங்கள்.

முஸ்லிம் யாருக்குமே கடவுள் தன்மை கொடுக்க மாட்டான். யாருக்குமே கடவுளுக்கு ஒப்பானவன் என்பதாகக் கூடக் கொடுக்க மாட்டான் நமக்குத்தான் குரங்கு. பாம்பு, காக்காய், கழுகு, ஆடு, மாடு, யானை, குதிரை எல்லாம் கடவுள்களாகி விடுகின்றன.

தினமும் பூசை ஆராதனைகள் கூட செய்யப்படுகின்றன. இவை போதாதா நாம் காட்டுமிராண்டிகள் என்பதற்கு?

-----------தந்தை பெரியார் ----------"விடுதலை" 6.11.1967


மக்கள் யாவருமே மனிதர்கள்தான்!

பேசும் சக்தியோடு கை, கால், கண், மூக்கு வாய்களான பஞ்சேந்திரியங்களோடு காணப்படும் மக்கள் யாவருமே மனிதர்கள் தான். இவர்களைக் கடவுள் என்றாலும், தேவர் என்றாலும், அரக்கர், அசுரர், ராக்கதர் என்றாலும் ரிஷிகள் முனிவர்கள் தவசிரேஷ்டர் என்றாலும், மனிதர் என்றாலும், தெய்வப்பிறப்பு தேவாம்ஸம் என்றாலும் மற்றும் பேய் பிசாசு என்றாலும், மற்றும் எந்தப் பெயராலும் அழைக்கப்பட்டாலும், இப்படிப்பட்ட எல்லோருமே மனிதர்கள்தான்; மனிதப் பிறவிதான்; மனித சுபாவ குணம் உள்ளவர்கள்தான்; இப்படிப்பட்ட இவர்களிடம் எந்தவித பேதங்களும் உயர்வு, தாழ்வுகளும் கிடையாது. கண்டிப்பாய் கிடையாது. இருக்கிறது என்றால் அது வேதசாஸ்திர புராண இதிகாச இலக்கியங்கள், புலவர்கள், ஆசாரியார்கள், முதலியவர்கள் கற்பனைப் புரட்டுகள்தான். இது வாய்மை, மெய்மை, உண்மை, சத்தியம், தத்துவம் ஆகும். நம்புங்கள்!

---------------தந்தை பெரியார் ----------"விடுதலை" 27.10.1967

1 comments:

சக்தி கல்வி மையம் said...

பதிவுலக நண்பர்களே..
பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...