பார்ப்பனர் உணர்வில்
இராமமூர்த்தி முதல் - பாண்டே - இராம. கோபாலன் வரை
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்!
பார்ப்பானையும் பாம்பையும் கண்டால்
முதலில் பார்ப்பானைக் கொல்லு
என்பது வடநாட்டு இந்தி பழமொழி; இதனை
(1944) இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்த பிரிட்டிஷ் பத்திரி கையாளர்
பீவர்லி நிக்கலஸ் என்ற எழுத்தர் எழுதிய இந்தியாவைப் பற்றிய தீர்ப்பு
‘Verdict of India’ 1944 பதிப்பு பக்கம் 32) எனும் நூல்
எடுத்துக்காட்டியுள்ளது.
இதோ அதே பகுதி:
The Brahmins, inspite of their lofty
position, have not attracted much love to themselves in the long history
of India. And ancient saying, still current, is ‘if you meet a snake
and a Brahmin kill the Brahmin’. Perhaps this is due to the preposterous
nature of their claims. For example, Manu, make of laws, ruled that to
accuse a Brahmin of a crime was sinful even if the Brahmin was guilty.”
(பார்ப்பனர்கள் தங்களை எப்போதும்
உயர்ந்தவர் களாக பாவித்து கொண்டனர். இந்திய வரலாற்றை பார்க்கும் பொழுது
அவர்கள் எந்த ஒரு காலகட்டத்திலும் பார்ப்பனர்களைத் தாண்டி பிற மக்கள் மீது
அன்பு கொண்டதாக சரித்திரம் இல்லை. இதனால் தான் தொன்றுதொட்டு ஒரு முதுமொழி உண்டு பார்ப்பானையும், பாம்பையும் கண்டால், முதலில் பார்ப்பானைக் கொல்லு என்று கூறுவார்கள்.
இந்த முதுமொழி பார்ப்பனர்கள் மூடத்தனத்தை
ஊராரிடம் திணித்து, தனது வயிறு வளர்ப்பை கொள்கையாக கொண்டதால் ஏற்பட்டது
ஆகும். மனு தர்மத்தில் பார்ப்பனர் தவறு செய்திருந்தாலும் அது தவறாக
கருதப்படக்கூடாது என்றும், எந்த ஒரு பார்ப்பனரையும் குற்றவாளி என்று
குற்றம் சுமத்துவது பாவகரமானது என்றும் எழுதி வைக்கப்பட்டது. அதாவது
பார்ப்பான் எந்த குற்றத்தைச் செய்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் இருக்க
வேண்டும் என்று பீவர்லி நிக்கலஸ் எழுதிய நூலில் கூறப்பட்டுள்ளது) தந்தி
டி.வி. செய்தியாளர் பெரியார் சொன்னார் என்று திரிபுவாதமாகக் கூறியதோடு
அறிவு நாணயம் சற்றுமின்றி பார்ப்பனரைக் கொல்லச் சொன்னார் பெரியார்
என்பதற்கு ஆதாரத்தைக் காட்ட முடியாமல் பார்ப்பனரை விரட்டச் சொன்னார் என்று
எடுத்துக் காட்டியது. (Misquote)
மகா மகா வெட்கக்கேடல்லவா?
இவருக்கு முன் இதேபோல கம்யூனிஸ்ட் தலைவர்
பி. இராமமூர்த்தி எழுதிய திராவிட மாயை நூலுக்குப் பதில் பேசி, எழுதிய
ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அதே விளக்கத்தை - மறுப்பை 1985லேயே பதிய
வைத்தார். (விடுதலைப் போரும், திராவிடர் இயக்கமும் - உண்மை வரலாறு) நூலில்
214-215 பக்கங்களில் கூறியுள்ளது கீழே தரப்படுகிறது!
திரு. ராமமூர்த்தி எழுதுகிறார்:
பிற்காலத்தில் பெரியார் பிராமணர்
எதிர்ப்பிலும் இறங்கி யிருக்கின்றார். இந்த எதிர்ப்பு, பாம்பையும்
பார்ப்பானையும் கண்டால், பாம்பை விட்டு விடு; பார்ப்பானை அடி என்று அவர்
பேசும் அளவுக்குப் போயிற்று என்கிறார் ராமமூர்த்தி.
இது ஒரு வடநாட்டுப் பழமொழி. தந்தை
பெரியார் இதை என்றைக்குமே பயன்படுத்தியதில்லை. எந்த இடத்தில் பாம்பையும்
பார்ப்பானையும் கண்டால், பாம்பை விட்டு விட்டுப் பார்ப்பானை அடி என்று
பெரியார் சொல்லியிருந்தார்?
ஆதாரம் காட்ட வேண்டாமா?
அப்படி அவர் சொல்லியிருந்தால்,
இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஒரு பார்ப்பான்கூட மிஞ்சியிருக்க மாட்டானே!
தந்தை பெரியார் பயந்து கொண்டு சொல்லாமலிருக்க வில்லை; அதையும் தெரிந்து
கொள்ள வேண்டும். இதை நாங்கள் சொல்லவில்லை. நீதிபதி சொல்கிறார். தந்தை
பெரியாரைத் தண்டித்த நீதிபதி குத்து - வெட்டு வழக்கில் தீர்ப்பில்
சொல்லும்போது, இப்போது குற்றமில்லையென்று சொன்னாலும், பெரியாரிடம் அவருடைய
சொல்லை வேத வாக்காகக் கொண்டிருக்கக் கூடிய மிகப் பெரிய கட்டுப்பாடான
லட்சக்கணக்கான தொண்டர்கள் நாட்டிலே இருக்கிறார்கள். அவர்கள் எப்படிப்
புரிந்து கொள்கிறார்கள் என்பது சந்தேகம். எனவே, அவர்கள் உடனே நாளைக்கே
ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது என்று தமது தீர்ப்பில்
எழுதியிருக்கிறார்.
இங்கே 153-ஆம் பக்கத்தில் பாம்பையும்
பார்ப் பானையும் கண்டால், பாம்பை விட்டு விட்டுப் பார்ப்பானை அடி என்று
பெரியார் பேசுகிற அளவுக்குப் போயிற்று என்று எழுதுகிற இதே தோழர்
பி.ராமமூர்த்தி, இன்னோர் இடத்தில் சொல்லும்போது, பெரியார் தனிப்பட்ட
முறையில் வெறுப்பைக் காட்டியதே கிடையாது. ரொம்பவும் பொறுப்புணர்ச்சியோடு
இருந்தார் என்றும் கூறுகின்றார்.
154ஆம் பக்கத்தில் என்ன சொல்லுகின்றார்
என்பதைப் பாருங்கள். ஈ.வெ.ரா. பெரியாருக்கு அந்தக் காலத்தில் சாதிப்
பாகுபாடுகளையும், வருணா சிரமத்தையும், அதில் பிராமணன் மற்றெல்லாரையும்
விடப் பிறப்பால் மேலோன் என்றுள்ள பார்ப்பனீயத்தின் மேல்தான் கடுங்கோபமும்
ஆவேசமுமே தவிர, தனிப்பட்ட எந்தப் பிராமணனிடமும் பகைமையோ துவேஷமோ இருந்த
தாகச் சொல்ல முடியாது என்கிறார் பி. இராமமூர்த்தி.
யாருக்காகவோ வாதாட ஹிந்துத்துவத்தின் புதிய ஏஜெண்டுகள் பெரியாரைக் கொச்சைப்படுத்த நினைத்து முகத்தில் சேறு பூசிக் கொள்ள வேண்டாம்!
தமிழர் நடத்தும் தந்தி டி.வி.க்கு பார்ப்பான் சம்பாதித்து தரும் நற்பெயரா இது!?
ஊடக நெறிக்கே முறைகேடாக நடக்கலாமா?
விரட்டுவதும் அடிப்பதும் கொல்லுவதும்கூட ஒரே பொருள்தானா? வெள்ளையனை
விரட்டுவோம் என்றார் காந்தியார்; அதற்குக் கொல்லுங்கள் என்று பொருள்
கூறலாமா?
அத்தோடு நின்றதா தந்தி டிவி? இந்து முன்னணி தலைவர் இராம. கோபாலனிடம் பேட்டி கண்டு ஒளிபரப்பியுள்ளதே!
இராம. கோபாலன் பேட்டி
பார்ப்பனனையும் பாம்பையும் கண்டால்,
பார்ப் பனனை அடி, பாம்பை விட்டு விடு என்று பெரியார் எழுதியிருக்கிறார்.
நான் இளைஞனாக இருந்தேன். அப்போது நான் அதை படித்திருக்கிறேன். மானமுள்ள
வராக இருந்தால் வீரமணி பதவி விலக வேண்டும்; அவர் விலக மாட்டார் என்பதுதான்
ராமகோபாலனின் பேட்டி.
பார்ப்பனர் அல்லாத மக்களை சூத்திரன்
என்றுகூறும் இந்துத்துவாவின் ஆணி வேரைச் சுட்டெரிக்கும் தன்மான
இயக்கத்தின் தலைவரைப் பார்த்து மானமி ருக்கிறதா என்று பார்ப்பானை விட்டு
ஒரு பார்ப்பனர் பேட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளாரே!
தந்தை பெரியாருக்கு பல வகைகளிலும் ஆதரவுக்
கரம் நீட்டிய சி.பா. ஆதித்தனாரின் நிறுவனம் இப்படி ஒரு நிலைக்குப்
போகலாமா? பார்ப்பான் பண்ணயம் ஆகலாமா?
இராமமூர்த்தி முதல் இராம கோபாலன் - பாண்டே
வரை திராவிடர் இயக்கம் என்றால் நெருப்பில் விழுந்ததுபோல் துடிக்கும்
காரணத்தை தமிழர்கள் புரிந்து கொள்வார்களாக!
---------------------------"விடுதலை” 31-03-2015