Search This Blog

17.2.15

கீதை யாருடைய நூல்?


கீதை யாருடைய நூல்?

  பிற இதழிலிருந்து
  கீதை யாருடைய நூல்?
  - பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்
  ஸ்ரீமத் பகவத்கீதா
  (தத்வவிவேசனீ - தமிழ் விரிவுரை)
  ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா எழுதிய விளக்க உரையின் தமிழ் வடிவம்
  கோபால் ஸேவா ட்ரஸ்ட், ஈரோடு.

  மகாபாரத்தில் அர்ச்சுனன் (பார்த்தன்) கிருஷ்ணன் என்ற இரு கதைமாந்தர்கள் இடம் பெற்றுள்ளனர். இவ்விரு கதைமாந்தர்களும் ஒருவருக்கொருவர் நெருக்கமானவர்கள். இவ்வகையில் இவர்களது உரையாடல்கள் மகாபாரதத்தில் இடம்பெறுவது இயல்பானதே. இதில் முக்கியமான உரையாடல் ஒன்றுண்டு.

  பாரதப் போர்க்களத்தில் அர்ச்சுனன் தனக்கு எதிரே அணிவகுத்து நிற்பவர்களை ஒருகணம் பார்க்கிறான். தன் சொந்தப் பெரியப்பாவின் மகன்கள், போர்ப் பயிற்சியளித்த பீஷ்மர், துரோணர் போன்ற ஆச்சாரியார்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் அவன் கண்களில் படுகின்றனர். ஆட்சியைப் பெற இவர்களையெல்லாம் கொன்றழிக்க வேண்டுமா என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் தோன்றுகிறது. இவ் எண்ணம் போர் செய்வது குறித்த தயக்கத்தை அவனிடம் ஏற்படுத்துகிறது. அவனது தயக்கத்தைப் போக்கி அவனைப் போரிடத் தூண்டும் வகையில் கிருஷ்ணன் அவனுக்கு உபதேசம் செய்கிறார். இதுவே கீதா உபதேசம் அல்லது பகவத்கீதை என்ற நூலாக விளங்குகிறது. இதன் ஆசிரியனாக பகவான் கிருஷ்ணர் குறிப்பிடப்படுகிறார்.

  ஒரு வினாவை சிலர் எழுப்புகிறார்கள். பாரதம் என்ற காவியத்தை எழுதிய வியாசர்தானே இவ்விரு பாத்திரங்களின் உரையாடலையும் எழுதியிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் கீதா உபதேசத்தின் ஆசிரியராக வியாசரைத்தானே கருத வேண்டும். ஒரு கதாபாத்திரத்தின் படைப்பாக அதை எப்படிக் கருதமுடியும் என்பதே வினாவாகும். இவ்வினாவுக்கு அம்பேத்கர் (1995:130) பின்வருமாறு விடை அளிக்கிறார்

  பகவத்கீதை மகாபாரதத்தின் ஒரு பாகமாகவே இருக்க வேண்டும். ஆனால் மகாபாரதத்தில் இது ஒரு பாகமாகவே காணப்படவில்லை. இதிலிருந்து இது தனிப்பட்ட நூல் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆயினும் இன்றுவரை இதன் ஆசிரியர் யாரென்று தெரியவில்லை.

  அருச்சுனனுக்கும் கிருஷ்ணனுக்குமிடையே நடந்த உரையாடலைத் திரிதராஷ்டிரனுக்குக் கூறும்படி சஞ்சயனை வியாசர் கேட்டுக் கொண்டாரென்பது நமக்குத் தெரிகிறது. இதை வைத்து வியாசர்தான் கீதையை எழுதினாரோ என்று சிலர் நினைக்கலாம்.

  இது தொடர்பாக, பல அய்ரோப்பிய அறிஞர்களின் கூற்றுகளையும் திலகர், கோசாம்பி ஆகிய இந்திய அறிஞர்களின் கூற்றுகளையும் முன்வைத்து பகவத்கீதையின் காலம் குறித்தும் அவர் ஆராய்கிறார். இதற்குள் நுழையாமல் பகவத்கீதையின் சாரமாக அம்பேத்கர் (1995:109) கூறுவனவற்றை மட்டும் காண்பது பயனுடையதாய் இருக்கும். அவர் குறிப்பிடுவது வருமாறு:

  1.    நானே நால்வகை (பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என மக்களை நான்கு வகையினராகப் பிரித்தல்) வருண அமைப்பினை அவரவர்களுக்குள்ள செயல் வேறுபாடுகளுக்கு ஏற்றவாறு படைத்துள்ளேன். எனவே நானே இந்த சதுர்வருணங்களை உருவாக்கியவனாவேன். - கீதை 4:13

  2.    ஒருவன் இன்னொரு வருணத்தானின் தொழிலைச் செய்வது எளிதாக இருப்பினும், ஒருவன் தன் வருணத்திற்குரிய தொழிலை மிகுந்த திறனோடு செய்ய முடியாத போதிலும் தன் வருணத்திற்குரிய தொழிலைச் செய்வதே மிகச் சிறந்தது. ஒருவன் தன் வருணத்திற்குரிய தொழிலைச் செய்தால் மரணமே நேர்வதாக இருந்தாலும் தன் வருணத் தொழிலைச் செய்வதே இனியது; ஆனால் பிற வருணத்தாரின் தொழிலைச் செய்வது ஆபத்தானது. கீதை 3:35.

  3.    மக்கள் தத்தமக்குரிய தொழில்களைச் செய்ய வேண்டும் என்று விரும்பும் அறிவாளியானவன், தம் தொழிலில் பற்றுடைய அறிவீனர்களுக்குப் புத்திக் குழப்பத்தை உண்டாக்கக் கூடாது. அவனவன் தமது வருணத்திற்குரிய தொழிலைச் செய்து மற்றவர்களையும் அவ்வாறே செய்விக்க வேண்டும். கற்றறிந்தவன் தன் தொழில் ஈடுபாடு இல்லாதவனாக இருக்கலாம். ஆனால் தம் தொழிலில் ஈடுபாடுடைய கல்லாதோரையும் மந்த புத்தியுள்ளவர்களையும் தம் தொழிலை விட்டு வேறு தொழிலைச் செய்வதற்குரிய கெட்ட வழியில் செல்வதற்குக் கற்றறிந்தவன் விட்டுவிடக் கூடாது. கீதை 3:26, 29.

  4.    அருச்சுனா! கடமைகளும் தொழில்களுமான இந்தத் தருமம் (நால் வருணமான இந்த மதம்) தளர்வுறும் போதெல்லாம், இந்த இழிவுக்குக் காரணமானவர்களை அழித்துத் தருமத்தை நிலைநாட்டுவதற்காக நானே பிறப்பேன் -

  - கீதை 4:7-_8.


   அம்பேத்கரின் இக்கருத்துகள் கீதைக்கும் வருணப் பாதுகாப்பிற்குமான உறவைச் சுட்டுகின்றன. நான்கு வருணக் கோட்பாட்டை வலியுறுத்தும், புருஷசூக்தம் என்ற நூல் குறித்து.


  இந்த புருஷசூக்தம் இரு அடிப்படைக் கொள்கைகளை அங்கீகரிக்கிறது. சமூகத்தை நான்கு பிரிவாகப் பிரிப்பதைச் சிறந்ததாக ஏற்கிறது. இந்த நான்கு பிரிவாருக்கும் இடையில் சமத்துவமில்லாமல் இருப்பதே சிறந்த உறவுமுறை என்பதையும் அது ஏற்கிறது.

  என்று குறிப்பிடும் அம்பேத்கர் (1995:108_-109) இக்கருத்துடன் இயைபுடையதாகவே கீதையைக் காண்கிறார். அத்துடன் மனுஸ்மிருதி எனப்படும் மனுதர்ம சாஸ்திரத்திற்கும், கீதைக்கும் இடையில் வேறுபாடில்லை என்பதை,

  கீதை மனுவின் சுருக்கம். மனுஸ்மிருதியை ஒதுக்கிவிட்டுக் கீதையில் புகலிடம் தேடுவோர், கீதையை அறியாதவர்களாக அல்லது மனுஸ்மிருதியை முற்றிலும் ஒத்துள்ளதும் கீதையின் உயிராக உள்ளதுமான பகுதிகளைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதற்குத் தயாராக இருப்பவர்களாக உள்ளனர்.

  என்று குறிப்பிடுகிறார் (மேலது 109). பகவத்கீதை, குறித்து அம்பேத்கர் முன்வைக்கும் கருத்துகளின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வது அவசியமான ஒன்று. இதற்கு ஒரே வழி பகவத்கீதையைப் படித்தறிவதுதான். தமிழில் பகவத்கீதைக்குப் பல மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. அவற்றுள் சிறந்த பதிப்பாக இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட நூல் அமைந்துள்ளது. 1997ஆம் ஆண்டு தொடங்கி 2001 வரை மொத்தம் இருபத்திமூன்று பதிப்புகள் இந்நூலுக்கு வந்துள்ளன. அய்ந்து ஆண்டுகளில் 2,95,000 பிரதிகள் விற்பனையாகியுள்ளன. இதற்குப் பின்னரும் பதிப்புகள் வந்துகொண்டுள்ளன.

  ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா என்பவர் தத்வவிவேசனீ என்ற பெயரில் இந்தியில் எழுதிய விளக்க உரையின் தமிழ் மொழிபெயர்ப்புடன் இந்நூல் வெளியாகியுள்ளது. பல தமிழ்ப் பதிப்பகங்கள் கீதையை வெளியிட்டிருந்தாலும், இந்து அமைப்பொன்று வெளியிட்ட நூல் என்பதன் அடிப்படையில் இந்நூல் இங்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இனி இந்நூலில் இருந்து கீதை சுலோகங்கள் சிலவற்றையும் அதற்கான விளக்கங்களையும் காண்போம்.

  நான்கு வர்ணங்கள் எவ்வாறு உருவாயின என்ற வினாவை எழுப்பி சமூகவியலாளர்கள் விடை தேடுகின்றனர். ஆனால், இத்தேடலுக்கான விடை மிக எளிதாக பகவத்கீதையில் காணப்படுகிறது. நான்காவது அத்தியாயத்தில் பதிமூன்றாவது சுலோகம் பகவான் கிருஷ்ணரின் கூற்றாக,

  சாதுர்வர்ணயம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகா என்று குறிப்பிடுகிறது.

  இதற்கு வேதியர், வேந்தர், வணிகர், வேளாளர் என்ற நான்கு வர்ணங்கள் கொண்ட ஸமூகம், குணங்களையும் கர்மங்களையும் ஒட்டிய பிரிவுகளாக என்னால் படைக்கப்-பட்டது என்று மேற்கூறிய உரையாசிரியர் உரை எழுதியுள்ளார். இதன்படி வருணவேறுபாடு என்பது சாட்சாத் கிருஷ்ண பகவானால் உண்டாக்கப்பட்டது என்பதாகிறது. இவ்வுண்மையை அவரே மேற்கூறிய சுலோகத்தின் வாயிலாகப் பிரகடனப்-படுத்தியுள்ளார். எனவே வருணப் பாகுபாடை எதிர்ப்பதென்பது கடவுளுக்கு எதிரான செயலாகிறது.
  அடுத்து வர்ணம் என்பது பிறப்பின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறதா? அல்லது செயலை வைத்து முடிவு செய்யப்படுகிறதா? என்ற வினாவை எழுப்பி அதற்கு இந்து தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில் உரையாசிரியர் பின்வரும் விளக்கத்தைத் தருகிறார்.

  பிறப்பு செயல் இரண்டுமே வர்ணப்-பிரிவிற்குத் துணை நிற்பவைதான். ஆகவே, ஒரு வர்ணத்தினர் என்று முழுமையாக நிர்ணயிக்க, பிறப்பு, செயல்கள் இரண்டையும் சேர்த்துத்தான் கணிக்க வேண்டும். ஆயினும் பிறப்பை வைத்துத்தான் ப்ராம்மணர் முதலிய வர்ணப்பிரிவு நடந்து வருகிறது என்று அறிய வேண்டும். ஏனெனில், இவை இரண்டில் பிறவிக்குத்தான் முதன்மை கொடுக்கப்பட்டு வருகிறது.

  எல்லோருக்கும் பொதுவான புலன் அடக்கம், மனவடக்கம் முதலியவற்றைக் கடைப்பிடித்து, நல்லொழுக்கம் உள்ள நான்காம் வர்ணத்தவன், யாகம் செய்ய ஆரம்பித்துத் தன் வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தால் அவனுக்குப் பாவம்தான் ஸம்பவிக்கும். முதலாவதாக, வர்ண ஏற்பாட்டில் சிறிது தளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், முழுமையாக அழிந்துவிட்டது என்று கூறமுடியாது. இரண்டாவதாக, ஜீவர்கள் முன்வினைப்பயனை அனுபவிக்க வேண்டும் என்று ஈசுவரன், அவர்களின் முன்வினைக் கேற்றவாறு அந்தந்த வர்ணங்களில் பிறப்பளிக்கிறார். பகவானின் இந்த ஏற்பாட்டை மாற்ற மனிதனுக்கு உரிமையில்லை. மூன்றாவது நடத்தையை மட்டும் வைத்து இன்ன வர்ணத்தவர் என்று தீர்மானிப்பதும் முடியாத செயல். ஒரே பெற்றோர்களுக்குப் பிறந்த பிள்ளைகளின் நடத்தையிலேயே மிகுந்த மாற்றத்தைக் காண்கிறோம். ஒரே மனிதன் ஒரு நாளில் ஒரு சமயம் ப்ராம்மணன் போலவும், வேறொரு சமயம் மற்ற வர்ணத்தவர் போலவும் நடந்து கொள்கிறான். இந்த நிலையில் எப்படி வர்ணத்தை நிர்ணயிப்பது? தாழ்வை எவர்தான் ஏற்றுக்கொள்வார்? இதனால் உணவுப் பழக்கத்திலும், திருமணம் முதலியவற்றிலும் குழப்பம் ஏற்படும். கடைசியில், வர்ண அமைப்பு தலைகீழாக மாறிவிடும். வர்ண ஏற்பாடு என்பதே குலைந்து போய்விடும். ஆகவே செயலினால் மட்டும் வர்ண வகுப்பைத் தீர்மானிப்பது சரியன்று.
  கீதையின் பதினெட்டாவது அத்தியாயத்தில் இடம் பெறும் 44ஆவது சுலோகத்தில் வைசியர்களும், சூத்திரர்களும் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் இடம் பெற்றுள்ளன. இச்சுலோகத்தில் இடம்பெறும் பரிசர்யாத்மகம் என்ற வடமொழிச் சொல்லுக்கு உரையாசிரியர் தரும் விளக்கம் வருமாறு:

  மேற்குறித்த இரு பிறப்பாளருக்கு அதாவது ப்ராம்மணர்கள், ஷத்திரியர்கள், வைசியர்களுக்கு ஸேவை செய்வது, அவர்களுடைய ஆணையை நிறைவேற்றுவது, வீடுகளில் நீர் நிரப்புவது, ஸ்நானத்திற்கு வகை செய்து வைப்பது, அவர்களுடைய வாழ்க்கைப் பணிகளில் வசதி செய்து கொடுப்பது, அவர்களுடைய அன்றாட வேலைகளில் முறைப்படி உதவி செய்வது, பசுக்களைப் பராமரிப்பது, அவர்களுடைய பொருட்களைக் காப்பது, துணி துவைப்பது, முடி திருத்துவது முதலிய அத்தனை ஸேவைகளையும் செய்து மகிழ்விப்பது அல்லது அவர்களுக்குத் தேவையான கருவிகளைத் தன் தொழில் திறமையால் தயார் செய்து கொடுத்து தன் வாழ்க்கையைக் கழிப்பது _ இவையெல்லாமே பரிசர்யை ஆகும்.

  மற்ற வர்ணத்தாருக்கு எப்படி அவரவர் இயல்புக்கு ஏற்ப கடமைகள் உள்ளனவோ, அவ்விதமே நான்காம் வர்ணத்தவருக்கும்கூட இந்த சேவை என்ற ஒன்றுதான் இயல்பானதாகும். மேலும் பிற வர்ணத்தவர்க்குத் தொண்டு செய்தலே அவர்களது ஒரே கடமை என்பதை இங்கே வலியுறுத்துகிறார். ஆகவே, அது அவர்களுக்கு இயல்பானதால் எளிதுமாகும்.

  இக்கருத்தை மேலும் வலியுறுத்த நான்காம் வர்ணத்தவருக்கு பகவான் ஒரு கடமையைத்-தான் விதித்தார். குறை காணாமல் மூவர்ணத்தாருக்கும் ஸேவை செய்வதே அது என்ற மனுதர்ம சுலோகத்தை (இயல் 1 சுலோகம் 91) மேற்கோள் காட்டுகிறார். இதே அத்தியாயத்தில் 46ஆவது சுலோகம் கூறும் கருத்து வருமாறு.

  தத்தம் இயல்பான கடமைகளில் முழு முனைப்புடன் ஈடுபட்டிருக்கும் மனிதன் பகவானை அடைதலாகிற ஸிதம்தியை அடைகிறான். தன்னுடைய இயல்பான கடமையில் கருத்துடையவன் தன் செயலை எப்படிச் செய்து பரமநிலையை அடைகிறானோ அந்த முறையை நீ கேள்.
  இச்சுலோகத்திற்கு உரையாசிரியர் தரும் நீண்ட விளக்கத்தில் நான்கு வருணத்தாரின் செயல்பாடு குறித்து,

  ஷத்திரியன் தண்டனை அளிக்கலாம். ஆனால் அதற்குரிய சட்டத்தை அவன் தானாக இயற்றமாட்டான். ப்ராம்மணர்கள் வகுத்த சட்டத்தின்படி நடக்க வேண்டும். வரி வசூலிக்க வேண்டும்: வசூலித்த வரியை மக்கள் நலனுக்காகச் சரிவரச் செலவழிக்க வேண்டும். விதிக்கப்பட்ட சட்டத்தை நடைமுறையில் அமல்படுத்தி, அதைப் பேணிக் காப்பது அவன் கடமை. சட்டத்தை இயற்றுதல் ப்ராம்மணனின் வேலை. பொது நிதியம் வைசியனிடம் உள்ளது. ஷத்திரியன் சட்டப்படி நிர்வாகம் செய்து பாதுகாப்பவன் மட்டுமே.

  இவ்விதம் குணங்களுக்கும், கடமைகளுக்கும் ஏற்ப வர்ணப்பிரிவினை ஏற்பட்டிருக்கிறது என்றால் தமக்குத் தோன்றிய கர்மங்களைச் செய்து தமது வர்ணநிலையை மாற்றிக் கொள்ளலாம் என்பது பொருள் அன்று. வர்ணத்தின் அடிப்படை பிறப்பு, அதன் தன்மையைக் காப்பதில் வர்ணத்தின் கர்மம் முதல் இடம் வகிக்கிறது. ஆகவே பிறப்பு, கர்மம் இரண்டுமே வர்ண அமைப்புக்குத் தேவைதாம். தானாக ஒரு கர்மத்தை ஏற்றுக் கடைப்பிடித்து இந்தக் கர்மத்தை நான் ஆற்றுவதால், தான் இன்ன வர்ணத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்பவர் உண்மையில் வர்ணதர்மத்தை மதிக்கவில்லை. செயலுக்கு ஏற்ப ஒருவனுடைய வர்ணத்தைத் தீர்மானிப்பது என்று ஆரம்பித்தால் ஒரு நாளில் அவன் எத்தனை தடவை வர்ணத்தை மாற்றுவான் என்று கணக்கிட முடியாது. அப்பொழுது ஸமுதாயத்தில் ஒரு பிணைப்போ, கட்டுப்பாடோ இருக்க முடியாது. எல்லா வகைகளிலும் குழப்பம்தான் மிஞ்சும்.

  இதே அத்தியாயத்தில் இடம்பெறும் 47ஆவது சுலோகம்,
  நன்கு முறைப்படி கடைப்பிடிக்கப்பட்ட பிறருடைய தர்மத்தைக் காட்டிலும், குணக்குறை உள்ளதாயினும், தன்னுடைய தர்மம் உயர்ந்தது. ஏனெனில் இயல்புக்கேற்ப விதிக்கப்பட்ட தன்னுடைய கடமையைச் செய்கிற மனிதன் பாவத்தை அடைய மாட்டான் என்று கூறி குலத்தொழிலை மேற்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. இதுவே ஸ்வதர்மம் எனப்படுகிறது. ஸ்வதர்மம் என்பதற்கு உரையாசிரியர்.

  வர்ணம், ஆசிரமம், இயல்பு, சூழ்நிலை இவற்றிற்கேற்ப எந்த மனிதனுக்கு எந்தக் கர்மம் விதிக்கப்பட்டுள்ளதோ, அது அவனுக்கு ஸ்வதர்மம்.
  நான்காம் வர்ணத்தவரின் கடமைகள் ஷத்ரிய, வைசியர்களின் கடமைகளைக் காட்டிலும் தரக்குறைவாக இருக்கின்றன. இது தவிர அந்தக் கடமைகளை ஆற்றுவதில்  ஏதாவது விட்டுப் போனாலும் அதுவும் குறைபட்ட கர்மம்தான். மேலே சொன்னவிதம் ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிப்பதில் குற்றம் குறை இருந்தாலும், அது பரதர்மத்தைக் காட்டிலும் சிறந்ததுதான்.

  குற்றமற்ற, குணம் பொருந்திய பரதர்மத்தைக் காட்டிலும் குற்றம் குறையுள்ள ஸ்வதர்மம் சாலச் சிறந்தது
  என்று விளக்கமளிக்கிறார். அம்பேத்கர், பெரியார் ஆகியோரும் மார்க்சியவாதிகளும் பகவத்கீதையைக் குறித்து முன்வைக்கும் விமர்சனங்களின் உண்மைத்தன்மை குறித்து பகவத்கீதையைப் படித்து எது உண்மை என்பதை அறிந்து கொள்ளலாம். விமர்சனங் களைவிட மூலநூல் அறிவு சிறந்ததுதானே!

  வீட்டின்  பூசை அறையிலும், வரவேற்-பறையிலும் கொலு வீற்றிருக்கும் பகவத்கீதை நூலை முறையாகப் படித்துச் சிந்தித்தால் கீதை யாருடைய நூல் என்பதைக் கண்டறியலாம். பழைய சூத்திரர்களும் இவர்களில் இருந்து தாம் வேறுபட்டவர் என்று காட்டிக் கொள்ளும் முகத்தான் சற்சூத்திரர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டோரும் கீதையைப் பூசிப்பதை விட்டுப் படித்துச் சிந்திக்க வேண்டும்.

  துணை நின்ற நூல்கள்:
  பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் (1995) தொகுதி_6 (1995) தொகுதி_7
                       ----------------------------------நன்றி: உங்கள் நூலகம் (ஜனவரி 2015)

  97 comments:

  தமிழ் ஓவியா said...

  இலங்கையில் எல்லா இனத்தவருக்கும்

  சமநீதி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்துகிறது

  இலங்கையில் எல்லா இனத்தவர்களுக்கும் சமநீதி கிடைக்கவும், அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும், அதிபர் மைத்ரிபால சிறி சேனா முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கவேண் டும் என்று சர்வதேச பொது மன்னிப்பு கழக இந்திய பிரிவு வலியுறுத்தி உள்ளது.

  இலங்கை அதிபர் மைத் ரிபால சிறிசேனா, 4 நாள் பயணமாக டில்லி வந்துள் ளார். பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கியத் தலைவர்களை சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இது குறித்து சர்வதேச பெது மன்னிப்புக் கழக இந்தியப் பிரிவு (ஆம்னஸ்டி இன்டர் நேஷனல் இண்டியா) திட்ட இயக்குநர் ஷமீர்பாபு நேற்று செய்தியாளர்களி டம் கூறியதாவது:

  இலங்கையில் சிங்கள வர்கள், தமிழர்கள் உட்பட எல்லா இனத்தவர்களும் இணக்கமாக வாழும் சூழ் நிலையை அந்நாட்டு அதி பர் சிறீசேனா ஏற்படுத்த வேண்டும். அவருக்கு இப் போது மிக அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்மூலம் எல்லோ ருக்கும் சமநீதி கிடைக்க வழி வகை செய்யவேண்டும். மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சீர்திருத்தங்கள், மறுவாழ்வு திட்டங்களை செயல் படுத்தவேண்டும்.

  சுதந்திரம், சம உரிமை, சுயமரியாதை ஆகியவற் றின் அடிப்படையில் மறு சீரமைப்புப் பணிகளை சிறீசேனா மேற்கொள்ள வேண்டும். அதிபர் சிறீ சேனா அறிவித்துள்ள 100 நாள் சீர்திருத்த திட்டம், மக்களிடம் அதிக நம்பிக் கையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், நீதித்துறை உள்பட முக்கிய துறைகள் சுதந்திர மாக செயல்படுவதற்கு அவர் எடுத்துவரும் நடவடிக்கை கள் வரவேற்கத்தக்கன. இலங் கையில் வாழும் மக்களி டம் பாரபட்சம் காட்டக் கூடாது. பேச்சு சுதந்தி ரத்தை உறுதிப்படுத்த வேண்டும். இலங்கையில் நீதியை நிலைநாட்டவும், நம்பிக்கையை ஏற்படுத்த வும் சிறீசேனாவுக்கு எல்லா உதவிகளையும் பிரதமர் மோடி செய்யவேண்டும்.

  விடுதலைப் புலிகளுட னான இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டிலேயே விசாரணை நடத்துவோம் என்று சிறீசேனா அறிவித் துள்ளார். அந்த விசா ரணை சுதந்திரமான, வெளிப்படையான, உண் மையான, நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். அதே சமயம் இலங்கையில் நடந்த மனித உரிமைகள் குறித்து அய்.நா. நடத்தி வரும் விசாரணைக்கு சிறீசேனா அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு ஷமீர் பாபு கூறினார்.

  Read more: http://viduthalai.in/e-paper/96372.html#ixzz3S0ktuHE6

  தமிழ் ஓவியா said...

  கர்மாவை நம்பினவன் கடைத்தேற மாட்டான். விதியை நம்பினவன் மதியை இழப்பான்.
  _ (குடிஅரசு, 12.4.1931)

  தமிழ் ஓவியா said...

  நீதிக்குள்ளுமா ஜாதி?

  இந்தத் தலைப்பில் தினமணி ஏடு நேற்று (16.2.2015) தலையங்கம் தீட்டியுள்ளது.

  நீதிபதி நியமனத்தில் ஜாதி அரசியல் புகுந்துவிட்ட தாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. அதிலும், குறிப்பாகப் பின்வருமாறு எழுதுகிறது தினமணி.

  1967-க்குப் பிறகு தமிழ்நாட்டில் தகுதிகள் இல்லா விட்டாலும் குற்றம் குறை இருந்தாலும், காவல்துறை சான்றொப்பத்தை ஏற்றவாறு பெற்று நீதிபதிகளைப் பணியமர்த்தினார்கள். அவ்வாறு பணியமர்த்தப்பட்ட நீதிபதிகள் அரசியல்வாதிகளுக்குப் பூங்கொத்துக் கொடுப்பதும், அவர்களது இல்லத் திருமணத்திற்குச் செல்வதும், இவர்களது இல்லத் திருமணத்திற்கு அரசியல் படை வருவதும் சர்வசாதாரணமானது.

  நாளடைவில், ஜாதிக் கட்சிகள் அரசியலுக்கு வந்த பின்னர், நம் கட்சியின் அனுதாபி என்ற நிலை மாறி, நம் ஜாதிக்காரர் என்பதாக பரிந்துரைகள் மாறத் தொடங்கின. நீதிபதி நியமனத்திலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. எல்லா மாநிலங்களிலும் இந்த நிலைமை உண்டு என்றாலும், தமிழ்நாட்டில் மட்டுமே மிக மோசமாக இருக்கிறது என்று எழுதுகிறது தினமணி.

  1967 என்று தினமணி குறிப்பிட்டுச் சொன்னதன் நோக்கம், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகுதான் இந்த நிலைமை என்று சொல்லுவதற்காகத்தான்!

  ஒரு காலகட்டத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் என் றாலே சர்வம் அக்ரகாரமயமாக இருந்தது என்பது எல் லோருக்குமே தெரிந்த ஒன்றே! இந்த நிலையை எதிர்த்துக் குரல் கொடுத்தால், போராடினால், அவர்கள் மொழியில் அதற்குப் பெயர் ஜாதிக் கண்ணோட்டம் - இதுதான் பார்ப்பனர்கள் தங்களுக்கு என்று வைத்துள்ள ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மப் பித்து என்பது.

  முதல் வருடத்தில் காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகிப்பார் - அடுத்த ஆண்டு அதே பார்ப்பனர் உயர்நீதி மன்ற நீதிபதியாக வந்துவிடுவார் - இதெல்லாம் தினமணிகளின் கண்களுக்குத் தெரியவே தெரியாது.

  சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஜஸ்டீஸ் இராமச்சந்திர அய்யர் (1964) தனது வயதைப் பதிவு ஏட்டில் திருத்திப் பதவியை நீட்டித்துக் கொண்டதும், அதனை தந்தை பெரியார் வெளிப்படுத்திய நிலையில், அவர்மீது எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காமல், ஒரு பைசா நட்டத்திற்கு இடம் இல்லாமல் பூர்ண கும்ப மரியாதையோடு அனுப்பி வைத்ததில் ஜாதீயக் கண்ணோட்டம் இல்லையா? அன்றைக்குக் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன்தானே அந்த வேலையைச் செய்தார் - மறுக்க முடியுமா?

  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் சமூகநீதிப் பார்வை தேவை என்பது எப்படி ஜாதி வாதக் கண்ணோட்டமாம்? அதேநேரத்தில், 18 நீதிபதிகள் பதவி யிடம் காலியாக உள்ள நிலையில், முதற்கட்டமாக 9 நீதி பதிகள் நியனத்தில் 6 பேர்கள் பார்ப்பனர்கள் இடம் பெற்றுள்ளனர் என்றால், இது ஜாதீயக் கண்ணோட்டம் அல்லவாம்!

  எப்படி இருக்கிறது தினமணிகளின் கண்ணோட்டம் என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

  தென்னாட்டுப் பார்ப்பனர்களைப்பற்றி லாலாலஜபதி ராய் ஒருமுறை சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.

  இவர்களே வகுப்புத் துவேஷிகளாக இருந்துகொண்டு, மற்றவர்களைப் பார்த்து வகுப்புத் துவேஷிகள், வகுப்புத் துவேஷிகள் என்று கூறுவார்கள் என்று சொன்னதுதான் இந்த நேரத்தில் நினைவிற்கு வந்து தொலைக்கிறது!

  தமிழ் ஓவியா said...


  சென்னை உயர்நீதிமன்றம் தோற்றுவிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகியும், ஒரு தாழ்த்தப்பட்டவர் நீதிபதியாக வரவில்லையே - ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் என்ன கோவில் கர்ப்பக்கிரகமா? என்ற வினாவைத் தொடுத்தவர் தந்தை பெரியார்தான் (1973).

  ஜோலார்ப்பேட்டையைச் சேர்ந்த - அப்பொழுது கடலூரில் மாவட்ட நீதிபதியாக இருந்த திரு.ஏ.வரதராசன் அவர்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக அமர்த்த முயற்சி எடுத்துச் செயல்படுத்தியவர் அன்றைய முதல மைச்சர் கலைஞர் அல்லவா! அந்த ஜஸ்டீஸ் ஏ.வரதராசன் அவர்கள்தான் உச்சநீதிமன்றத்திலும் அடியெடுத்து வைத்த முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதி என்ற வரலாறு தெரியுமா?

  வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கோருவது ஜாதீய வாதமா? இப்படி சொல்லுகிறவர்கள் யார் என்றால், ஒவ்வொரு ஆண்டும் ஆவணி அவிட்டம் என்ற பெயரில் பூணூலைப் புதுப் பித்துக் கொள்ளும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.

  சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு, இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்த நிலையில், அதனை எதிர்த்து சிதம்பரம் தீட்சதர்கள் உச்ச நீதிமன்றம் சென்றபோது, வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி என்ன கூறினார்? நான் இன்னும் இரண்டொரு நாளில் பதவியிலிருந்து ஓய்வு பெறப் போகிறேன். அதற்குள் ஒரு நல்ல காரியம் செய்துவிட்டுப் போகிறேன் என்று திறந்த நீதிமன்றத்தில் வெளிப்படையாகச் சொல்லவில்லையா? சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து அறநிலையத் துறை எடுத்துக்கொண்டது தவறாம்? அது தீட் சதர்களுக்குச் சொந்தமானதே என்று தீர்ப்பு வழங்கினாரே அந்த நீதிபதி - இதற்குள் குடியிருப்பது ஜாதீயக் கண்ணோட்டம் அல்லவா?!

  இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றை யெல்லாம் மீண்டும் எடுத்து நினைவூட்டவேண்டிய அவசியத்தைத் தினமணி ஏற்படுத்திவிட்டது.

  நாளை மறுநாள் (19.2.2015) சென்னையிலும், மதுரை யிலும் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு தேவை; இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கு வாய்ப்புகள் அளிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறும். பார்ப்பனர் அல்லாத வழக்குரைஞர்களும், சமூகநீதி ஆர்வலர்களும் திரண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தினமணி களுக்கு இதன்மூலம்தான் பதிலடி கொடுக்க முடியும்.

  Read more: http://viduthalai.in/e-paper/96379.html#ixzz3S0lIL6Sj

  தமிழ் ஓவியா said...

  மகிழ்ச்சிபற்றி ஒரு புதுக்கண்ணோட்டம்

  அண்மையில் சிங்கப்பூருக்குச் சென்ற குறுகிய கால நான்கு நாள் பயணத்தில், வழக்கமாகச் சென்று புத்தங்களைப் பார்க்கும் கினோ குனியா (kinokuniya) புத்தகக் கடைக்குச் சென்று சில புத்த கங்களை வாங்கிப் படித்தேன்; மகிழ்ந் தேன்.

  அதில் ஒரு புத்தகம் மகிழ்ச்சி (Happiness) என்பதாகும்.

  நம்மைப் பொறுத்தவரையில் புதிய புத்தகங்களை வாங்குவதும், படிப்பதும், படித்ததை மற்ற நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதுமே மகிழ்ச்சிதான்.

  அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு
  விசாலப் பார்வையால் விழுங்கு உலகத்தை

  என்ற புரட்சிக்கவிஞரின் அறிவுரைக் கேற்ப இந்த நூல்கள் நமது மனச் சுமையைக் குறைத்து அல்லது அகற்றி ஒரு புத்துணர்ச்சியை, புத்தாக்கத்தைத் தருவதாக அமைந்துள்ளது என்பது உண்மை.

  பயணச் சுமையைக் குறைத்து, துணைவனாக இருப்பது - தனிமையில் பயணிக்கும்போது - இத்தகைய புத்தகங்களே!

  ஆஸ்திரேலியாவிலும், அமெரிக் காவிலும், இங்கிலாந்திலும் வெளியிடப் பட்டு, மகிழ்ச்சிபற்றி பல்வேறு தத்துவ அறிஞர்கள் வெளியிட்ட பலதரப்பட்ட கருத்துக்களையும் ஒரு புதிய கோணத் தில் தொகுத்தளித்து ஆய்வு செய்துள்ள இந்நூல், ஒரு நல்ல தொகுப்புக் களஞ்சியம் - சிறு கைப் புத்தகம் ஆகும்.

  வில் பக்கிங்காம் என்ற தத்துவ கர்த்தாவும், புதின எழுத்தாளருமான இவர் இந்த அருமையான நூலை எழுதியுள்ளார்.

  உலகின் ஆதிகால கிரேக்கத் தத்துவ மேதைகள் தொடங்கி, இந்தியாவின் புத்தர், சீனத்துக் கன்ஃபூஷியஸ், ஸுவாங் சீன, மெனிக்யூயஸ் போன்ற அறிஞர் கள் கருத்தையெல்லாம் வாழ்க்கையில் பரிசோதனைக்குட்படுத்தி, வாழ்வில் மகிழ்ச்சியை வெறும் தத்துவமாகப் பார்க்காமல், படிக்காமல், நடைமுறைக்கு உகந்ததாக்குவதுதான் முக்கியம் என் பதை நன்கு விளக்கியுள்ளார் - இந் நூலாசிரியர் வில் பக்கிங்காம் என்ற தத்துவ சிந்தனையாளர்.

  இரு வேறு அணுகுமுறைகள்பற்றிய சிறந்த ஆய்வும் சிந்தனைக்கு விருந் தாக அமைந்துள்ளன.

  1. வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது தான் பொது விதி. துன்பம் என்பது இடையில் ஏற்படுவது, அதை ஏற்கும் பக்குவம் இன்றியமையாதது - அது விதிவிலக்கு.

  மற்றொன்று 2. துன்பம்தான் நம் வாழ்க்கையில் பொது விதி. எப்போதாவது ஏற்படு வதால், மகிழ்ச்சி என்பதுதான் விதிவிலக்கு.

  இப்படி இரு மாறுபட்ட அணுகு முறைகளும் அலசி, வாதப் பிரதிவாதங் களோடு ஜெர்மானியத் தத்துவ அறிஞர் களின் கருத்துகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தக்க தரவு களாக மேற்கோள்கள் காட்டப்பட்டுள் ளன.

  இன்பம் விழைதல், உயிர்களின் பொது வியற்கை; மனித குலத்தின் ஆறாவது அறிவு அவ்வின்பத்திற்கு அவ்வப்போது புதுப்புது பொருள் கண்டு, கொண்டு, சமூகத்திற்கு வழங்குவதற்குத் தயங்குவதில்லை.

  உடல் இன்பத்தால் விளையும் மகிழ்ச்சியை உருவாக்கும் காரண மானதை காமம் என்று வர்ணிக் கின்றனர். சொல்லாடலில் பயன்படுத்து கின்றனர்.

  வள்ளுவரின் காமத்துப் பால் என்று முப்பாலில் ஒரு முக்கிய பகுதி அது பற்றித்தானே என்று வாதாடுகின்றனர்.

  கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பதில் உள்ள காமுறுவர் எதைக் குறிக்கிறது?

  குறுகிய பொருள் அல்ல காமத்திற்கு.

  கைவிடப்படாத, விட முடியாத, நினைத்து நினைத்து மகிழ்ச்சியைப் பெருக்கத்தான் காமுறுதல் என்பதற்கு முழுப் பொருள் என்று கொள்ளலாமே!

  உடலுக்கும், உள்ளத்திற்கும் இரண்டுக்கும் மகிழ்ச்சி - உள்ளத்தில் ஊறிய உணர்ச்சிக்கு உடலின் வடிவம் ஏற்படுவதுதானே காமம்?

  இப்படி மகிழ்ச்சியை 2500 ஆண்டு களுக்குமுன்பே தோன்றிய தத்துவ ஞானிகளின் பட்டியலில் திரு வள்ளுவரையும் இணைக்கவேண்டும்.

  மேலைநாட்டுத் தத்துவ அறிஞர் களில் ஆல்பர்ட் ஷைவட்சர்தான் இதில் பெரும் சாதனை செய்தவர். ஜி.யூ.போப் அவர்களுக்குப் பிறகு.

  நம்மில் பலரும் வாய் வீச்சு, எழுத்து வியாபாரத்துடன் நிறுத்திக் கொண் டோம்.

  உலக மயமாக்கியிருந்தால் வள்ளு வரும் அந்நூலில் இடம்பெற்றிருப்பாரே என்ற கவலை என்னைத் தாக்கியது!

  மற்றவை நாளை!

  - வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

  Read more: http://viduthalai.in/e-paper/96380.html#ixzz3S0lUqlXL

  தமிழ் ஓவியா said...

  தொழிற்சாலைகளைத் தொடர்ந்து மூடினால்...?


  திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (12.2.2015) பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  அதில் ஒன்று:

  தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் தொடர்ந்து இழுத்து மூடப்படுகின்றன. இதனால், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படுவதால், தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் உடனடியாக இதில் தலையிட்டு, தொழிற்சாலை களை மீண்டும் திறப்பதற்கான வழிமுறைகளில் ஈடுபடவேண்டும் என்று இச்செயற்குழு வற்புறுத்துகிறது இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டதற்கு என்ன காரணம்? தொடர்ந்து தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதே!

  உதகமண்டலத்தில் புகழ்பெற்ற பிலிம் தயாரிப்பு தொழிற்சாலை கடந்த டிசம்பர் முதல் முழுமையாக மூடப்பட்டது.

  சென்னை அருகே சிறீபெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டதைத் தொடர்ந்து நோக்கியாவிற்காக கையேடுப் புத்தகம் தயாரித்து வந்த ஆர்.ஆர்.டோனலி என்ற தொழிற் சாலையும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  சுஸ்லான் கம்பெனி, பெர்ஜர் பெயின்ட் ஆலை, எம்.ஆர்.எஃப். நிறுவனம் உள்ளிட்ட சில தொழிற்சாலைகள் எவ்வித முன்னறி விப்புமின்றி நிர்வாகத்தால் திடீரென மூடப்பட்டு வருகின்றன. சட்ட விரோதமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வாழ்க்கை என்பது கேள்விக்குறியாகி விட்டது. 2014 செப்டம்பர் ஹிந்துஸ்தான் வாட்ச் லிமிடெட் மூடப் பட்டதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள 17,000 தொழி லாளர்கள் வேலையிழந்தனர்.

  தமிழ் ஓவியா said...

  பி.எஸ்.என்.எல். தனியார் மயமாக்கப்பட்டதன் மூலம், நேரடியாக மற்றும் மறைமுகமாக வேலை வாய்ப்பு பெற்ற 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை இழந்தனர்.

  ஏர் இந்தியா, ஒ.என்.ஜி.சி. போன்ற அரசுத் துறை நிறு வனங்களின் பல்வேறு பிரிவுகள் இழுத்து மூடப்பட்டன. இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பிழந்து நிற்கின்றனர்.

  நாட்டின் முக்கிய விமான நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதன் காரணமாக அதைச் சார்ந்த 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

  இந்த வரிசையில் கடந்த 3 மாதங்களாக விப்ரோ, எல் அன்ட் டி, டாடா கன்சல்டன்சி மற்றும் ஹக்சார்வே போன்ற பெரிய, தகவல் தொழில் துறையில் ஈடுபட்டுவரும் நிறுவனங்கள் நாடு முழுவதும் தங்களது கிளை நிறுவனங்களில் பலவற்றை மூடியுள்ளன. ஆனால், நோக்கியா நிறுவனம் சிறீபெரும்புதூர் தொழிற்சாலை கைமாற வில்லை. அதற்கு மாறாக மொபைல் போன்களை உற்பத்தி செய்து தருவதாக மட்டும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டோம் என்று நீதிமன்றத்தில் கூறியது. இதன்மூலம் சிறீபெரும்புதூர் நோக்கியா ஆலை தொடர்ந்து இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  ஆனால், திடீரென மைக்ரோசாப்ட் நிறுவனம் மொபைல் போன் வாங்குவதை நிறுத்திவிட்டது. ஆகவே, தொழிற்சாலையை மூடப்போகிறோம் என்று அறிவித்து கடந்த நவம்பர் மாதம் முதல் நிறுவனம் இழுத்து மூடப்பட்டது.

  நோக்கியா நிறுவனம் இயங்கிக்கொண்டு இருந்தபோது, சுமார் 8 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாக பணி செய்து கொண் டிருந்தனர். இவர்களை அழைத்துச் செல்ல 27 ஒப்பந்தப் பேருந்துகள் இயங்கிக்கொண்டு இருந்தன.

  மேலும், நோக்கியா நிறுவனத்தில் பராமரிப்புப் பணிக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் என 25 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் நோக்கியா நிறுவனத்தை நம்பி இருந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் நோக்கியா தன்னுடைய பணியாளர் களை வெளியில் அனுப்ப ஆரம்பித்துவிட்டது. எதிர்காலத்தில் நோக்கியா நிறுவனம் மூடப்படும் என்பதால், வேறு வழியின்றி சுமார் அய்ந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர், தானாகவே பணியிலிருந்து விலகி விட்டனர். ஒப்பந்தத்தை மீறி உள்ளூர் சந்தையில் விற்பனையில் ஈடுபட்ட நிறுவனம் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றம் மூலம் வரியை திருப்பித் தரக் கோரினால் ஆலையை மூடிவிட்டு ஓடிவிட்டது.

  நவம்பர் மாதம் முற்றிலுமாக அனைவரும் வெளியேற்றப் பட்டனர்.

  இவை தொடர் கதையாகி விட்டன. ஏற்கெனவே வேலை வாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருக்கும் ஒரு நாட்டில், ஏற்கெனவே வேலை வாய்ப்பைப் பெற்றிருந்தவர்களும் வெளியேற்றப்படுகிறார்கள் என்றால், இந்தக் கொடுமையை என்னென்று சொல்லுவது?
  பன்னாட்டு நிறுவனங்களை அழைத்துத் தொழிற்சாலைகளைத் தொடங்கச் சொன்னால், உள்நாட்டுப் பொருளாதாரம் ஓங்கி நிற்கும்; உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புப் பெருகி ஓடும் என்ற உத்தரவாதம் எல்லாம் பொய்யென்று இப்பொழுது அம்பலமாகி விடவில்லையா?

  குறிப்பாக தமிழ்நாட்டில் தொடர்ந்து மூடப்படும் தொழிற் சாலைகள், அதன் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் குறித்துக் காதில் போட்டுக்கொள்ளும் அரசாகக் கண்ணுக்குத் தென்பட வில்லை.

  தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்சினை என்ன? தங்களுடைய கோரிக்கை களை வலியுறுத்தி வேலை நிறுத்தம்கூடச் செய்தனர். குதிரை காணாமல் போன பின்பு இலாயத்தை இழுத்துப் பூட்டுவது போல, காலங்கடந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சர்கள் வாக்குப் பொய்க்காது என்ற நம்பிக்கையில் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது. ஆனால், நடந்திருப்பது என்ன?

  அரசு சொன்னபடி பேச்சுவார்த்தை நடத்தவில்லை; அதன் விளைவு அடுத்து வேலை நிறுத்தம் என்ற நிலை நெருங்கி வருகிறது.

  மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு கார்ப்பரேட் நிறுவன முத லாளிகளுக்காகவும், வெளிநாட்டு நிறுவனங்களுக்காகவும் நிலங்களைக் கையகப்படுத்துவது தொடங்கி, போராடிப் பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்குவது வரை முதலாளித் துவத் தன்மையோடு நடைபோடத் தொடங்கி இருக்கிறது.

  ஒரு பக்கத்தில் மக்கள் தொகை வளர்ந்துகொண்டு வரும் இந்தியத் துணைக் கண்டத்தில், வேலை வாய்ப்பைப் பெருக்கவும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை மதிக்கவும் தவறினால், எதிர்காலம் குழப்பமானதாகவும், வன்முறைக் களமாகவும் மாறிவிடும் அபாயம் தலைக்குமேல் வாளாகத் தொங்கும் என்று எச்சரிக்க வேண்டியது நமது கடமையாகும்.

  Read more: http://viduthalai.in/page1/96315.html#ixzz3S0oTzhrF

  தமிழ் ஓவியா said...

  ஹெட்போனால் உண்டாகும் தலைவலி!

  ஹெட்போனைக் காதில் மாட்டிக்கொண்டு, யாரிடமாவது பேசிக்கொண்டோ அல்லது பாடல்களைக் கேட்கும் பழக்கமோ உண்டா உங்களுக்கு? வாங்க, கொஞ்சம் மனசுவிட்டுப் பேசலாம். எல்லா நேரமும் காதில் ஹெட் போனை மாட்டிக்கொண்டு பேசுவதும் இசையைக் கேட்பதும் உளவியல் ரீதியாக ஒருவரைப் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

  இப்படி ஹெட் போனோடு திரிபவர்களுக்குக் கேட்கும் திறனில் குறைபாடு ஏற்படவும், தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. உச்சகட்டமாக ஹெட் போனை மாட்டிக் கொண்டு சாலைகளையும், ரயில் பாதைகளையும் கடக்கும்போது ஏற்படும் விபத்துகள் அபாய மணி அடிக்கின்றன.

  ''செல்போனை நேரடியாகப் பயன்படுத்துவதால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் மூளையைப் பாதிக்கும், அதனால் ஹெட் போனைப் பயன்படுத்துங்கள்!'' என்று மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் யோசனை சொன்னது உண்மைதான்.

  ஆனால் ஹெட்போனை தொடர்ந்து பயன் படுத்தினால் அது வேறு பிரச்னைக்கு கொண்டு சென்றுவிடும் என்றும் மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. தொடர்ந்து ஹெட்செட் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றித் தஞ்சை மருத்துவக் கல்லூரியின் காது, மூக்கு, தொண்டை நிபுணர் எம்.ராஜ்குமார் விளக்கினார்.

  பொதுவாக மனிதனின் காதுகளின் உட்பகுதியில் இருந்து தினமும் ஒரு குண்டுமணி அளவுக்கு மெழுகு வடிவில் இருக்கும் அசுத்தம் வெளியேறும். இது இயற்கையானது. தொடர்ச்சியாக ஹெட்செட் பயன் படுத்தும்போது, காதில் இருந்து வெளிவரும் அழுக்கானது காதுகளின் உட்பகுதியிலேயே கொஞ்சம் கொஞ்சமாகத் தங்க ஆரம்பிக்கும்.

  அது நாளடைவில் அவர்களுக்கு அரிப்பையும் நமைச்சலையும் தரும். அதுபோன்ற வேளைகளில் 'பட்ஸ் பயன்படுத்தும்போது காது புண்ணாகிவிடும் வாய்ப்புள்ளது. இதற்கு 'டெலிபோன் இயர் என்றே பெயர் இருக்கிறது.

  தொடர்ச்சியாக ஹெட் செட் பயன்படுத்துபவர்களுக்கு சென்ஸரி நியூரல் லாஸ் எனப்படும் பாதிப்பு ஏற்படும். இதனால் கேட்கும் திறன் குறைய ஆரம்பிக்கும், காதுக்குள் இரைச்சல் கேட்கும்.

  அதிக அதிர்வினால் செவி மடலும் பாதிப்படையும். காரணமே இல்லாமல் காது வலி ஏற்படும். இவை எல்லாம் ஒன்று சேர்ந்து கேட்கும் திறனைக் கொஞ்சம் கொஞ்ச மாகக் குறைப்பதோடு நாளடைவில் காது கேட்கும் திறன் முற்றாகப் பழுதாகும். இதைக் குணமாக்க சிகிச்சை முறைகளே கிடையாது. ஒரே தீர்வு காது கேட்கும் கருவி பொருத்திக் கொள் வதுதான்.

  தமிழ் ஓவியா said...

  சாதாரணமாக வயதாவதன் காரணமாகத்தான் இந்த பாதிப்புகள் ஏற்படும். ஆனால் ஹெட்செட் பழக்கத்தினால் தற்போது இளம் வயதிலேயே இந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படுகின்றன'' என்றார். அதிகமாக ஹெட்செட் பயன்படுத்தினால் மன ரீதியாகவும் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

  இன்று நடக்கும் சாலை விபத்துகளில் கணிசமான விபத்துக்கள் ஹெட் போனில் பாட்டுக் கேட்டபடி வாகனம் ஓட்டுவதால்தான் ஏற்படுகிறது. சிலர் ஹெட்செட்டில் பாட்டுக் கேட்டபடியே சாப்பிடுவார்கள். அவர்களுக்கு அப்போது சாப்பாட்டில் அறவே கவனம் இருக்காது. இதுவும் உடல் நலத்திற்கு உகந்தது அல்ல.

  ஹெட் போன் இசைக்கு அடிமையானவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு மனம்விட்டுப் பேச வேண்டிய தருணங்களைத் தவற விட்டுவிட்டுத் தனிமையிலேயே முழ்கிக்கிடப்பார்கள்.

  சிலர் தங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் நண்பர்களுடனோ குடும்பத்தினருடனோ மனம் விட்டுப் பேசிப் பிரச்சினையைத் தீர்ப்பதை விட்டுவிட்டு, அதில் இருந்து ஒரு தற்காலிகமான ஒரு விடுதலை வேண்டி ஹெட் செட் அணிந்துகொண்டு பாட்டுக் கேட்க ஆரம் பிப்பார்கள். அந்த பிரச்சினையில் இருந்து தாம் தப்பித்து விட்டதாக நினைப்பார்கள். அப்படியே எண்ணிக் கொண்டும் இருந்து விடுவார்கள்.

  ஆனால் மீண்டும் அந்தப் பிரச்சினை வெடிக்கும்போது அவர்களால் திடீரென முடிவெடுக்க முடியாது. இதுபோல வரிசையாகப் பல பிரச்னைகள் அவர்கள் மனதில் குவிந்து அவர்களை பெரும் மன அழுத்தத்துக்கு ஆட்படுத்தும். இல்லாத ஓசை நமக்கு மட்டும் கேட்பது போலத் தோன்றும். இது ஒருவகை யான மன நோயாகும்.

  சிலருக்கு ஹெட்செட்டைக் கழட்டிய பிறகும் காதுகளில் பாடல்கள் ஒலிப்பது போலவும், யாராவது பேசுவது போலவும், ரிங்டோன் ஒலிப்பது போலவும் தோன்றும். இது தொடர்ந்தால் நாளடைவில் ஆடிட்டரி ஹாலுசி னேஷன் எனும் மன நோய்க்கு ஆளாகிவிடுவார்கள். கால் சென்டரில் வேலை செய்பவர்களுக்கும் இது அதிகமாக ஏற்படும்.

  சிந்தனாசக்தி குறையும். தொடர்ந்து ஹெட்செட் பயன்படுத்துவதால் மூளையின் செயல்திறன் குறையத் தொடங்கும். எந்நேரமும் பாடல் கேட்கும்போது இயல்பாக மனிதனுக்கு இருக்கும் சிந்திக்கும் திறன் பாதிப்படைகிறது'' .

  ஹெட்செட் என்பது அடுத்தவருக்கு நாம் தொந்தரவு தராமல் பாடல் கேட்பதற்காகவும் தொலை பேசியில் பேசுவதற்காகவும் பயன்படுத்த வேண்டிய ஒரு கருவி. தயவுசெய்து அதைக் காதில் மாட்டிக்கொண்டு இருப்பதே ஒரு ஃபேஷன் என்று மாற்றிவிடாதீர்கள்!

  Read more: http://viduthalai.in/page1/96341.html#ixzz3S0ppnpAk

  தமிழ் ஓவியா said...

  வயிற்றுப்புண்ணை குணமாக்கும் மணத்தக்காளி

  வாய்ப்புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்தப் பிரச்சினைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் நீங்கும்.

  நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் 11 மில்லி கிராம் வைட்டமின் சி யும் இக்கீரையில் உள்ளன. மூலநோய்க்கும் குடல் பிரச்சினைக்கும் இந்தக் கீரை நல்ல மருந்தாகும். மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

  இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும்.

  சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும்.

  நீர்க்கோவை நோய் மிகச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது. இக்கீரையைக் கஷாயமாய் அருந்தலாம். அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று சாப்பிடலாம்.

  கீரையையும், இளந்தண்டு களையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோவை நோய் விரைந்து குணமாகும்.

  கீரையைப் போலவே இதன் பழமும் சக்தி வாய்ந்த மருந்தாகும். காசநோயாளிகள் இப்பழங் களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது. தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம்.

  உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம். நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்தி வரவேண்டும்.

  மணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கின்றன.

  Read more: http://viduthalai.in/page1/96342.html#ixzz3S0q1Ph74

  தமிழ் ஓவியா said...

  மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைப்பூ

  மருத்துவக் குணமும் மகத்தான நலமும் கொண்டது வாழைப்பூ. ஆனாலும், அது சமையலில் அரிதாகவே இடம்பெறுகிற ஒன்றாக இருக்கிறது. வாழைப்பூவை சமைக்கத் தெரியா தவர்கள் ஒரு பக்கம் என்றால், வாழைப்பூவை ஆய்ந்து, சுத்தப்படுத்தி சமைப்பதற்கு அலுத்துக் கொண்டு அதைத் தவிர்ப்பவர்கள் இன்னொரு பக்கம்.

  அறியாமையையும், அலுப்பையும் தவிர்த்து வாழைப்பூவை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்கிறவர்களின் வீடுகளில் ஆரோக்கியம் தாண்டவமாடும் என்பதில் சந்தேகமில்லை. வாழைப்பூவின் குணநலன்களை விளக்குவதோடு, அதை வைத்து சூப்பர் உணவுகளையும் செய்து காட்டுகிறார் சஞ்சீவனம் ஆயுர்வேத தெரபி மய்யத்தின் மருத்துவ அதிகாரி விஜயகுமார்.

  நமது உணவில் காய்கறிகள் முக்கிய அங்கம் வகிக் கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்திய உணவு வகைகளில் எப்போதுமே காய்கறிகள் ஒரு பகுதி யாவது இடம்பெறுகின்றன. பெரும்பாலும் நமது உணவில் ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கள் இடம்பெறுகின்றன. காய்கள் சேர்ந்த உணவுக் கலவை அல்லது தொட்டுக்கொள்ளும் ஒரு உணவாக காய்கறி இடம்பெறுகிறது.

  சில காய்கறிகள் பொதுவாக நமது உணவில் வழக்கமாக தினசரி இடம் பெறுகின்றன. சில காய்கறிகள் பொதுவாக சமைக்கப் படுவதே கிடையாது. வாழைப்பூ, பெரும்பாலான வீடுகளில் விரும்பப்படும் உணவாகும்.

  இருப்பினும் மற்ற காய்கறி களான கேரட், முட்டை கோஸ், பீட்ரூட், பாகற்காய் உள்ளிட்ட காய்களைப் போல இது பயன்படுத்தப் படுவதில்லை. வாழைப்பூவில் என்ன சமைப்பது என்று பலருக்குத் தெரியாததுதான் காரணமாகும். சமையல் பயன் பாட்டுக்கு அப்பால், உணவு வகைகள் சிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டதாகவும் திகழ்கின்றன.

  வாழைப் பூவில் சில உணவு வகைகள் தயாரிக்கத் தெரிந்து கொள் வதற்கு முன்பாக வாழைப்பூவில் உள்ள உடலுக்கு நன்மை தரும் விஷயங்களை தெரிந்து கொள்வோம்.ஆயுர்வேத மருத்துவத்தில் பல காய்கறிகள் பற்றிய குறிப்புகள் இருந்தாலும், அவற்றில் முதன்மையானதாக கதலி எனப்படும் வாழைப்பூ முக்கிய இடம் பிடித்துள்ளது.

  இதில் உள்ள நன்மை தரும் விஷயங்களால் இதை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. வாழைப்பூவில் அதிக காரம் மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிடுவது மிகவும் பயனளிக்கக் கூடியது.

  வாழைப்பூ சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். ஆயுர்வேதத்தில் இது பித்த சம்ஹா (உடலில் பித்தத்தைத் தணிக்கும் குணம் கொண்டது) எனப்படுகிறது.

  இதை உரிய வகையில் சமைத்து சாப்பிடும்போது வெப்பத்தால் ஏற்படும் பலவித நோய்களை - அதாவது, சிறுநீரகம் சார்ந்த நோய்கள், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் உள்ளிட்ட வற்றைக் குணப்படுத்த உதவுகிறது.

  Read more: http://viduthalai.in/page1/96340.html#ixzz3S0qDtxzz

  தமிழ் ஓவியா said...

  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே 6 பார்ப்பன நீதிபதிகள் சமூகநீதிக்கு மாறாக மேலும் பார்ப்பனர்களை நியமிக்க சிபாரிசு செய்வதா?

  வாய்ப்பு மறுக்கப்பட்ட வகுப்பினருக்கும் வாய்ப்புத் தேவை

  சமூகநீதியை வலியுறுத்தி வரும் 19ஆம் தேதி

  சென்னையிலும், மதுரையிலும் ஆர்ப்பாட்டம்!


  தமிழர் தலைவர் ஆசிரியரின் சமூக நீதிக்கான அறிக்கை

  இலங்கை வடகிழக்கு மாகாண அரசின் தீர்மானம் வரவேற்கத்தக்கதே!

  சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் பார்ப்பன நீதிபதிகள் நியமிக்கப்படுவதை எதிர்த்தும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்ற பிரிவினருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வரும் 19ஆம் தேதி சென்னையிலும், மதுரை யிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

  சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 60 ஆகும். தற்போது 41 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். பதவி ஓய்வு காரணமாகவும், மாற்றலாகிச் சென்றுள்ளதாலும் - 19 இடங்கள் காலியாக உள்ளன.

  தமிழ்நாடு என்பது - தந்தை பெரியார்தம் சமூகநீதி மண் ஆகும்.

  சமூகநீதியின் முக்கிய அம்சமான கல்விக்காக தந்தை பெரியார் நடத்திய போராட்டத்தின் விளைவாகவே, இந்திய அரசியல் சட்டத்தில் முதல் அரசியல் சட்டத் திருத்தம் First Amendment to the Constitution of India) 1951இல் பிரதமர் நேரு, டாக்டர் அம்பேத்கரால் கொண்டு வரப்பட்டது!

  உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் சமூக நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் இருந்தால்தான் அரசியல் சட்டம் அளித்துள்ள உத்தரவாத உரிமையான சமூக நீதி காப்பாற்றப்படும் - செயல்படுத்தவும் முடியும்.

  தமிழ் ஓவியா said...

  தற்போதுள்ள தலைமை நீதிபதி வடக்கே இருந்து வந்து, உச்சநீதிமன்றத்திற்குப் போவதற்குத் தயாராக இருக்கும் உயர் ஜாதியினர் ஆவார். தனிப்பட்ட விருப்போ, வெறுப்போ அவர்மீது நமக்குக் கிடையாது - அவசியமும் இல்லை.

  காலியாக உள்ள இந்த நீதிபதி பதவிகளை நிரப்ப, பரிந்துரை செய்து அனுப்பும் கடமையும் பொறுப்பும் தலைமை நீதிபதி தலைமையில் உள்ள கொலிஜியம் என்ற மற்ற இரண்டு மூத்த நீதிபதிகளுடன் கலந்து தயாரித்து அனுப்பும் முறை - (இதுவே ஒரு வேளை கடைசி முறையாகவும் இருக்கலாம் - காரணம் வேறு ஒரு புது சட்டம் (National Judicial Commission) வரவிருக்கிறது).

  தமிழ்நாட்டின் வரலாறு என்ன?

  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பார்ப்பன உயர் ஜாதிப் பண்ணையமாக உயர்நீதிமன்றம் சுமார் 100 ஆண்டு களுக்கு மேலாக இருந்து வந்தது. கடந்த 30 ஆண்டுகளாகத் தான் ஓரளவு மற்ற ஒடுக்கப்பட்ட சமுதாயத்தவர்களுக்கு வாய்ப்பளிக்கும் சமூகநீதி செயல்பட்டு வருகிறது - எத்தனையோ போராட்டங்கள் காரணமாக.

  தமிழ் மண்ணின் மனோபாவம்

  முன்பு எம்.ஜி.ஆர். அவர்களது ஆட்சிக் காலத்தில் வடக்கே இருந்து வந்த தலைமை நீதிபதி (பார்ப்பனர்) 6 நீதிபதிகள் பதவிக்கு பார்ப்பனர்களையே பரிந்துரை செய்தபோது பெருங் கிளர்ச்சி - மக்கள் கிளர்ச்சி, திராவிடர் கழகத்தின் தலைமையில் நடைபெற்ற நிலையில் முதல் அமைச்சர் டில்லிக்கே இதைக் குறித்து கடிதம் எழுதினார். தமிழ்நாட்டு மண்ணின் மனோபாவம் (Soil Psychology of Tamilnadu) என்பது சமூகநீதி! ஆகவே அந்தப் பரிந் துரையை திருப்பி அனுப்ப வேண்டும்; ஏற்கக் கூடாது என்று எழுதினார்.

  விளைவு மற்ற பல்வேறு ஜாதியினரும் - தகுதி, திறமையில் எந்த வகையிலும் குறையாதவர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

  ஏற்கெனவே 6 பார்ப்பன நீதிபதிகள் உள்ளனரே!

  இப்போதும் பழைய வரலாறு மீண்டும் திரும்பியுள்ள தாக நாம் கேள்விப்படுகிறோம்.

  18 நீதிபதிகளுக்கு இரண்டு தவணைப் பட்டியல் என்ற தந்திர உபாயம் கையாளப்பட்டு. அதில் 6 பார்ப்பனர்கள் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட தாக, வழக்குரைஞர்கள் வட்டாரத்தில் பேச்சுகள் பரவியுள்ளன!

  ஏற்கெனவே 6 பார்ப்பன நீதிபதிகள் இருக்கும் நிலையில் 100க்கு 2 அல்லது 3 சதவிகிதம் உள்ளவர்கள் இப்படி பகற் கொள்ளை விருந்து சாப்பாடு சாப்பிட எண்ணுவது நியாயம்தானா?

  எத்தனையோ ஒடுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப்பட்ட வகுப்புகளிலிருந்து அனுபவம் வாய்ந்த வழக்குரைஞர்கள் ஏராளம் இருக்கின்றனர்.

  வாய்ப்பு அளிக்கப்படாத சமூகத்தினர்

  அருந்ததியர், வண்ணார் (சலவையாளர்கள்), முத்தரை யர், மருத்துவர்கள் (நாவிதர்கள்), மீனவர்கள், யாதவர்கள், போன்ற பல்வேறு சாதியினர் (உதாரணத்திற்கு சில சுட்டியுள்ளோம்) இவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டாமா?

  பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் தேவை

  பெண்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் இல்லை. தவறினால் உயர் ஜாதிப் பெண்கள்தான் மேலிடத்தின் கண்களுக்குப் படும் போலிருக்கிறது!

  பார்ப்பனர்களை இரண்டு பட்டியலில் பிரித்து அனுப்பினால் வெளிப்படையாகத் தெரியாமல் போய் விடும் என்பது போன்ற மலிவான தந்திரங்களில் ஏன் ஈடுபட வேண்டும்?

  வெளிப்படைத் தன்மை இந்த பரிந்துரைகளில் இருக்க வேண்டும் என்பது பொது மக்களும், வழக்குரைஞர்களும் எதிர்ப்பார்ப்பது எவ்வகையிலும் தவறல்ல. இது ஜனநாயக நாடு.

  கீழ்மட்ட சார்பு நீதிமன்ற நீதிபதி பதவிகள் நியமனத்திலும் சூழ்ச்சி!

  அது மாத்திரமல்லாமல், உயர்நீதிமன்றமல்லாமல் கீழ் மட்ட சார்பு நீதிமன்ற பதவிகளுக்கான பல தேர்வு, நேர்காணல் ஏற்பாடுகள் எல்லாம் ஒரு உயர்நீதிமன்ற பார்ப்பன நீதிபதி பொறுப்பிலேயே விடப்பட்டதாம். காஷ்மீருக்குப் பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ள ஒருவர் செல்லட்டும்; அதன்பிறகு பண்ணையம் நடத்தலாம் என்று மேற்குறிப்பிட்டவர் திட்டமிட்டே ஏற்பாடுகளைத் தவக்கமாகச் செய்கிறார் என்பது உயர்நீதிமன்றத்தில் குமுறலாக உள்ளது.

  இது உண்மையாக இருந்தால் அதைவிட வேதனை வெட்கக் கேடு வேறு இருக்க முடியாது.

  சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்

  சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்ற பழமொழி பல உயர்நீதிமன்ற தீர்ப்புகளில் கையாளப்படும் ஒரு சொற்றொடர்! அதன்படி நீதிபதிகள் நடந்து காட்டிட வேண்டும்.

  தேவை சமூகநீதி!

  இந்த நியாயமான கோரிக்கைகளான

  சமூகநீதி அடிப்படையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரை நியமனம் தேவை -
  ஒரு ஜாதி ஆதிக்கம் கூடாது.
  ஒரே பட்டியலாக அனுப்ப வேண்டும்.
  துணை சார்பு நீதிமன்றத் தேர்வில் பார்ப்பன ரல்லாத மூத்த நீதிபதிகளுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

  மதுரையிலும், சென்னையிலும் 19ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

  இதனை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னையிலும், மதுரையிலும் ஆர்ப்பாட்டம் அறவழியில் 19.2.2015 வியாழன் காலை 11 மணிக்கு நடைபெறும்.

  அனைவரும் வாரீர்! வாரீர்! ஆதரவு தாரீர்! தாரீர்!

  கி.வீரமணி
  தலைவர், திராவிடர் கழகம்

  14-2-2015

  Read more: http://viduthalai.in/page1/96196.html#ixzz3S0sgzWdh

  தமிழ் ஓவியா said...

  கவுரவம்

  அண்ணன் இராவ ணனை காட்டிக் கொடுத்த தற்காக அவன் தம்பி விபீ டணனை ஆழ்வார் என்று பட்டம் கொடுப்பதன் மூலம் இந்து இதிகாசமான இராமாயணம் காட்டிக் கொடுப்பதைக் கவுரவப்ப டுத்துகிறது என்று தானே கருத வேண்டும்.

  Read more: http://viduthalai.in/page1/96201.html#ixzz3S0t0VzhE

  தமிழ் ஓவியா said...

  பதவி ஆசை


  பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது. - (விடுதலை, 3.5.1965)

  தமிழ் ஓவியா said...

  பட்டும் புத்தி வரவில்லை!


  டில்லி தேர்தலில் பாஜகவின் அவமானகரமான தோல்விக்கு பாஜக அமைச்சர்கள் இந்துத்துவ கொள்கையில் மென்மையான போக்கை கடைபிடித்தது தான் முக்கிய காரணம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பு களின் முக்கிய தலைவர்களைக் கடிந்துகொண்டாராம், நமது கொள்கையை சரியான முறையில் இந்துக்களிடம் கொண்டு சென்றிருந்தால் இந்துக்களின் ஓட்டுகள் அனைத்தும் நமக்குக் கிடைத்திருக்கும்;

  ஆனால் பாஜகவும் இந்துத்துவ அமைப்புக்களும் அந்தக் காரியத்தை செய்யாமல் பேச்சோடு நின்ற காரணத்தால் தான் பாஜக தோற்றது என்று கூறியுள்ளார்.

  தேர்தல் தோல்வியின் காரணத்தை விளக்க மத்தியஅமைச்சர் ஸ்மிருதி இராணி, நிர்மலா சீதாராமன், ரவிசங்கர்பிரசாத் வியாழன் மாலை மோகன் பகவத்தைச் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து மத்திய அமைச் சர்களாக ஆனவர்களும் உடனிருந்தனர். அப்போது பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான சீதாராமன் அமைச்சர்களிடம் ஏன் அரவிந்த் கேஜரி வால் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தகுந்த ஆதாரங்களுடன் பிரச்சாரம் செய்யவில்லை? கேஜரிவால் மீது வார்த்தைகளால் தான் தாக்குதல் நடத்தினீர்கள்.

  உறுதியான ஆதாரங்களை ஏன் வைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும் டில்லியில் அனைத்து மத்திய அமைச்சர்களும் கலந்தாலோசித்து ஒற்றுமையாகப் பிரச்சாரம் செய்யாதது ஏன்?. உங்களில் ஒருவருக்குக் கூடவா இந்த அவமானகரமான தோல்வி ஏற்படும் என்று தெரிய வில்லை? அப்படியே தெரிந்திருந்தும் முன்கூட்டியே தலைமைக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று கேள்வியெழுப்பினாராம். சுமிருதி இராணி மீது மோகன் பகவத் மிகவும் கடுமையான கோபத்தில் இருந்தார். டில்லியை சொந்த ஊராகக் கொண்ட சுமிருதி இராணியின் தொகுதியில் பாஜக மூன்றாம் இடத்தைப் பெற்றது; இது தொடர்பாக மோகன் பகவத் கூறியபோது நீங்கள் அமைச்சாரனதும் தொண்டர்களையும் இதர உள்ளூர் தலைவர்களையும் மதிக்கவில்லை! உங்கள் மீது சங்பரிவாரத் தொண் டர்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். இந்தத் தோல்வியில் இருந்து நீங்கள் என்ன பாடம் கற்றுக்கொண்டீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

  மத்தியில் உள்ளவர்களில் சிலர் இந்துத்துவக் கொள்கைகளுக்கு விரோதமாக செயல்படுவதாகத் தெரிகிறது, மக்கள் நாம் இந்து ராஜ்யத்தை அமைப் போம் என்ற நம்பிக்கையில் தான் வாக்களித்து ஆட்சியைக் கொடுத்துள்ளனர். அதில் இருந்து விலகியதால் தான் இந்தத் தோல்வி ஏற்பட்டது என்று மோகன் பகவத் கூறினார். மோகன்பகவத்துடனான சந்திப்பிற்கு பிறகு ஊடகவியலாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சுரேஷ் சோனி மற்றும் கிருஷ்ண கோபால் கூறியதாவது, தேர்தல் தோல்வி குறித்து மோகன் பகவத் மிகவும் கோபத்தில் உள்ளார். தற்போதைய கால கட்டத்தில் இது போன்ற தோல்வி மக்களிடையே வேறு மாதிரியான எண்ணத்தை உருவாக்கிவிடும்; இதற்கு நாம் எக்காரணத்திலும் இடம் கொடுத்துவிடக்கூடாது.

  இந்துக்களின் ஓட்டுகளை பெறுவதில் நாம் என்றும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இந்துத்துவா கொள்கையில் மிதமான போக்கை கடைபிடித்ததால் தான் இந்த தோல்வி ஏற்பட்டது என்று கூறினார். டில்லி தேர்தல் தோல்வி தொடர்பான விவரமான அறிக்கை ஒன்றை வரும் 15 ஆம் தேதி தலைமையகமான நாக் பூரில் நடக்கும் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் என்று கூறினார்கள்

  டில்லியில் இவ்வளவுப் பெரிய தோல்வியைச் சந்தித்த பிறகும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்க் கும்பல் திருந்துவதாகத் தெரியவில்லை. இந்து வெறி அவர் களின் கண்களையும், கருத்துகளையும் திரையிட்டு மறைக்கிறது. இன்னும் கெட்டுப் போகிறேன் - என்ன பந்தயம் கட்டுகிறாய்? என்று கேட்பது போலிருக்கிறது; இவர்களின் புத்தியும் - போக்குகளும், பந்தயம் கட்டியா கெட்டுப் போக வேண்டும்?
  மத்தியில் ஆட்சி அமைத்து ஒரு எட்டு மாத இடைவெளியில், இந்தியாவின் தலைநகரத்தில் ஏற்பட்டுள்ள கடும் தோல்விக்குப் பிறகும் புத்திக் கொள் முதல் பெற தயாராகவில்லை - சங்பரிவார் என்றால், இவர்களிடம் புத்திக் கூர்மையை எதிர்பார்க்க முடியாது; காரணம், மதவெறிதான் - அதுவும் கண்மூடித்தனமான மதவெறி என்றால் எப்படித் தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள்?

  தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த கால கட்டத்திலேயே டில்லித் தலைநகரில் கிறித்தவர்களின் சர்ச்சுகள் இடிக்கப்பட்டன; எரிக்கப்பட்டன என்றால் இந்தக் கூட்டம் எந்தத் தைரியத்தில் தேர்தலைச் சந்திக்கிறது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இன்னொரு கேள்வியும் இருக்கிறது. இவர்கள் என்ன இந்துக்களின் ஏகப் பிரதிநிதிகளா? என்ற கேள்வியும் இந்துக்கள் மத்தியில் கேள்வி எழுந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை.

  Read more: http://viduthalai.in/page1/96180.html#ixzz3S0tQsvSe

  தமிழ் ஓவியா said...

  இலங்கைத் தமிழர்களின் நிலையை விருப்பு வெறுப்பின்றி ஆய்ந்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்

  பிரதமர் நரேந்திர மோடிக்கு கலைஞர் கடிதம்!


  சென்னை, பிப். 14_ பிரதமர் நரேந்திர மோடி அவர் களுக்கு, திமுக தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று எழுதியுள்ள கடிதத்தில், "இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் தமிழர்களைச்சோர்வடையச் செய்திருக்கின்றன எனவும், குருதியாலும் துன்பத்தாலும் கண்ணீராலும் நிறைந்த இலங்கைத்தமிழர்களின் வரலாற்றுப் பாதையை மாற்ற வேண்டிய தருணம் எனக் கருதி அவர்களின் நிலையை விருப்பு வெறுப் பின்றி ஆய்ந்து தேவையான அனைத்து நட வடிக்கைகளையும் எடுக்க மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்!" எனவும் உருக்க முடன் குறிப்பிட்டுள்ளார்.

  இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை பற்றி திமுக தலைவர் கலைஞர் அவர்கள், நேற்று (13.-2.-2015) அனுப்பியுள்ள விரிவான கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு :-

  அன்பார்ந்த பிரதமர் அவர்களுக்கு,

  என்னுடைய வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ள வேண் டுகிறேன். இலங்கையில் வாழும் தமிழர்களின் தொடர் இன்னல்கள் குறித்து என்னுடைய இந்தக்கடிதத்தை இலங்கையின் புதிய அதிபர் திரு. மைத்திரிபால சிறீ சேனா தங்களை டெல்லியில் சந்திக்கவிருக்கும் வேளை யில் அனுப்பியிருக்கின்றேன்.

  இலங்கையில் வாழும் தமிழர்களின் பேராதரவைப் பெற்றே திரு.சிறீசேனா இலங்கை அதிபராகத் தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கிறார். தாங்கள் நீண்ட நெடுங் காலமாக அனுபவித்து வரும் அரசியல் சட்டத்திற்குப் புறம்பான பாகு பாடு மற்றும் கட்டுப்பாடற்ற மனித நேயமின்மை ஆகியவற்றை முடிவுக்குக்கொண்டு வரு வார் என்று பெரிதும் நம்பியே இலங்கைத்தமிழர்கள் திரு.சிறீசேனா அவர்களுக்கு விரும்பி வாக்களித்தார்கள். தேர்தலின்போது திரு.சிறீசேனா அவர்களும், அவருடைய கூட்டணிக் கட்சிக்காரர்களும் தமிழர் களுக்கு அளித்த வாக்குறுதிகளை உண்மையி லேயே நம்பினார்கள். தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து ராணுவம் திரும்பப்பெறப்பட்டு விடுமென்றும், ராணுவத்தினரும், சிங்களர்களும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள தமிழர்களுக்குச்சொந்தமான நிலங்கள் மற்றும் வீடுகளை திரும்பப்பெற்று விடலாமென்றும், இனியும் தமிழர்கள் இரண்டாந்தரக்குடிமக்களாக நடத் தப்படமாட்டார்கள் என்றும், சுயமரியாதையோடும், கண்ணியத்தோடும் கூடிய அமைதியான வாழ்வுக்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென்றும், முப்பதாண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்து வரும் 13வது சட்டத்திருத்தம் நேர்மையான முறையில் அமலுக்குக் கொண்டு வரப்படுமென்றும், தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறுமென்றும் தமிழர்கள் எதிர்பார்த்தார்கள்.


  தமிழ் ஓவியா said...

  ஆனால், தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் தமிழர்களைச் சோர்வடையச் செய்திருக் கின்றன. தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும், செய்யப்பட்ட அறிவிப்புகளும் பல ஆனால் இதுவரை நடைமுறைக்கு வந்தது ஒரு சிலவே அல்லது எதுவும் நடைமுறைக்கே வரவில்லை என்றுதான் கூற வேண்டும். ஒரு சில நாட் களிலே சாதித்துக்காட்டப் படக்கூடிய வைகூட இதுவரையில் நடைபெறவில்லை ஒரு கால கட்டத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டியவைகளுக் கான அடையாளங்களும் தோன்ற வில்லை. தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து சிங்கள ராணுவம் திரும்பப் பெறப்பட வில்லை. தமிழர்களுக்குச் சொந்த மான வீடு களும், நிலங்களும் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப் படவில்லை. தமிழர்களின் நடமாட்டத்தைக்கட்டுப் படுத்துவதற்கென்றே நிறுவப்பட்ட சோதனைச் சாவடி கள் அகற்றப்படவில்லை. தமிழர்களின் சுதந்திரமான வாழ்க்கை முறைகளை சிதைத்திடும் வண்ணம் ஏற் கனவே இருந்து வரும் இலங்கை அரசின் கண்காணிப்பு திரும்பப்பெறப்படவில்லை.

  இலங்கை அதிபரின் அறிவிக்கை எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்!

  இவற்றையெல்லாம்விட, மிக மோசமான காரியம் ஒன்று தற்போது நடந்திருக்கின்றது. இலங்கை அதிபர் திரு.சிறீசேனா 2.2.2015 அன்று அறிவிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிக்கையில், "பாரம் பரியமாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் ராணுவம் (தரைப்படை, கடற்படை, விமானப்படை) பொது அமைதியினை நிலைநாட்டிப்பேணுவதற்கான கட மைகளை மேற்கொள்ளும்" என்று பிரகடனப்படுத் தப்பட்டிருக்கிறது. (நகல் இணைக்கப்பட்டுள்ளது) அதிபரின் இத்தகைய அறிவிக்கை எதிர்மறை விளை வுகளையே ஏற்படுத்தும்.

  நாடுகளிலும் வாழ்ந்து வரும் தமிழர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இலங்கைத் தமி ழர்கள் குறித்த நவீன வரலாறு முழுதும் குருதியாலும், துன்பத்தாலும், ஏமாற்றத் தாலும் நிறைந்திருக்கின்றது. கண்ணீர் நிறைந்த இந்த வரலாற்றுப்பாதையை மாற்ற வேண்டிய தருணம் இது. விருப்பு வெறுப்பின்றி இலங்கைத்தமிழர்களின் இன்றைய நிலையை ஆய்ந்து அறிந்து, அவர்களுடைய நீண்ட கால வேட்கையை நிறைவு செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொள்ள வேண்டுமென்று தங்களை மன்றாடிக்கேட்டுக்கொள்கிறேன். இலங்கை அதிபரோடு தாங்கள் மேற்கொள்ள விருக்கும் பேச்சுவார்த்தைகள் மூலம் நல்ல விளைவுகளைத்தரும் முடிவுகள் வெளிவரும் என்று தமிழகத்தில் வாழும் நாங்களும், சர்வதேச தமிழர்களும் பெரிதும் எதிர்பார்க் கிறோம்.

  இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தமது கடிதத்தில் கூறியுள்ளார்.

  Read more: http://viduthalai.in/page1/96177.html#ixzz3S0tgy7FJ

  தமிழ் ஓவியா said...

  நிர்வாகத்திற்கு அடிப்படைத்தேவைகளான நிலம் மற்றும் காவல் துறை தொடர்பான அதிகாரங்களை வழங்காத 13ஆவது சட்டத்திருத்தம் தமிழர்களுடைய பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைத்திடும் மருந்தாகி விடாது என சர்வதேசத்தமிழ்ச் சமூகம் கருது கிறது. ஏற்கனவே உறுதி அளித்தவாறு 13ஆவது சட்டத்திருத்தத்தை நடை முறைக்குக் கொண்டு வர இலங்கையின் புதிய அரசு முயற்சி மேற்கொண்டாலும், அது உண்மையான, முறையான, அனைத்து அதிகாரங் களையும் வழங்குவது எனும் நீண்ட பயணத்தில், எடுத்து வைக்கும் முதல் அடியாக மட்டும் இருக்குமே தவிர வேறல்ல. நிரந்தரமான அரசியல் தீர் வையே இலங்கைத்தமிழர்கள் தொடர்ந்து கோரி வருகிறார்கள். எங்களைப் பொறுத்த வரையில் நாங்கள், உலகெங்கிலும் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில், அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை அவர்களே தேர்வு செய்து கொள்வதற்கு ஏதுவாக, அய்.நா. மேற்பார்வையில் "பொது வாக்கெடுப்பு" நடத்த வேண்டுமென்றே தொடர்ந்து சொல்லி வருகிறோம்.

  இனப் படுகொலை குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

  இலங்கையில் கடந்த காலத்தில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், சர்வதேச சட்ட மீறல்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை குறித்து உலக நாடுகள் தெளிவாக அறியும். சர்வதேசக் குழு ஒன்றை அமைத்து, இலங்கையில் நடைபெற்ற கொடுமைகள் குறித்து விசாரணை செய்ய இதுவரை மேற்கொள்ளப் பட்ட முயற்சிகள் அனைத்தும் இலங்கை அரசால் முறி யடிக்கப்பட்டுள்ளன. தற்போது இலங்கையின் வடக்கு மாகாண கவுன்சில், இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை குறித்து சர்வதேச விசாரணை மேற் கொள்ளப்பட வேண்டுமென்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

  இந்தத் தீர்மானத்தினை இந்திய மத்திய அரசு அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் "தீர்மான" வடிவில் எடுத்துச்செல்வது பற்றி ஆழ்ந்து பரிசீலனை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கி றேன். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை மேற்கொண்டு, தொடர் புடைய குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படும் வகையில் இந்திய மத்திய அரசு அய்.நா. மனித உரிமை கள் ஆணையத்தில் தீர்மானம் ஒன்றினைக்கொண்டு வரவேண்டுமென்று எனது தலைமையில் அமைந்துள்ள "டெசோ" அமைப்பு ஏற்கனவே பலமுறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.
  இலங்கையில் ராஜபக்ஷே அரசு நடத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரித்தறிய அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் நியமித்த குழு தன்னுடைய அறிக்கையை அடுத்த மாதம் நடைபெறவுள்ள அய்.நா. மனித உரிமை ஆணையக்கூட்டத்தில் சமர்ப்பிக்க விருப்பதாக அறிகிறேன். அப்படி அந்த அறிக்கை சமர்ப் பிக்கப்படும்போது அது ஆணையக்கூட்டத்தில் நிறை வேற்றப்படுவதற்கு இந்திய அரசு ஆதரவு அளித்திட வேண்டு மென்று தமிழ்ச் சமூகம் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

  இலங்கைக்கடற்படையினராலும், சிங்கள மீனவர்களாலும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இன்னல்கள் தொடர்ந்து நடை பெறுவது குறித்து தாங்கள் அறிவீர்கள். தாங்கள் இலங்கை அதிபரோடு மேற்கொள்ள விருக்கும் விவாதங்களின் மூலம் தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றினை ஏற்படுத்தினால் நான் தங்களுக்குப்பெரிதும் நன்றியுடையவன் ஆவேன்.

  கடந்த அறுபதாண்டுகளுக்கு மேலாக இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமை களுக்கு இப்போதாவது நீதி கிடைத்திட வேண்டுமென்று இலங் கையிலும் மற்றும் உலக

  தமிழ் ஓவியா said...

  சமதர்மம் என்றால் சாதாரணமாகப் பாரபட்சமற்ற நீதி, சமத்துவம், பேதமற்ற அதாவது உயர்வு தாழ்வு இல்லாத நிலை என்பதாகும். ஆனால், இன்றைய வாழ்க்கை யில் ஒவ்வொரு அம்சத்திலும் அதாவது ஜாதியில், கல்வியில், செல்வத்தில், வாழ்க்கை அந்தஸ்து நிலையில் மேல் கீழ் நிலை இருந்து வருகிறது. இவற்றை ஒழித்து யாவற்றிலும் சமத்துவத்தை நிறுவுவதற்குச் சமதர்மக் கொள்கை ஆட்சி அவசியம்.-

  தந்தை பெரியார்

  Read more: http://viduthalai.in/page1/96216.html#ixzz3S0uCpqxi

  தமிழ் ஓவியா said...

  பரோடாவில் ஆலயப் பிரவேசம்

  சுதேச சமஸ்தானங்களில் முற்போக்கான காரியங்களை முதன்மையாகச் செய்து வரும் சமஸ்தானம் பரோடா சமஸ்தானம் ஒன்றேயென்பதை நாம் கூற வேண்டியதில்லை. அதிலும் தாழ்த்தப்பட்டவர்கள் விஷயத்தில், பரோடா அரசாங்கம் மிகவும் அனுதாபங் கொண்டு அவர்களுக்குப் பல நன்மைகள் செய்து கொண்டு வருகின்றது.

  தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளை எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் ஆட்சேபணையின்றிச் சேர்த்துக் கொள்ள வேண்டுமெனச் சென்ற வருஷத்தில் பரோடா அரசாங்கத்தார் உத்தரவு பிறப்பித்தனர். இவ்வுத்தரவை அகங்காரம் பிடித்த உயர் ஜாதி இந்துக்கள் எவ்வளவோ எதிர்த்தனர்.

  பள்ளிக் கூடங்களில் சேரவந்த தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளுக்கு எவ்வளவோ கஷ்டங்களை உண்டாக்கினார்கள், தங்கள் பிள்ளைகளை ஜாதி இந்துக்களின் பிள்ளைகள் வாசிக்கும் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பிய தாழ்த்தப்பட்ட வகுப்புக் குடும்பத்தினரின் குடிசைகளை நெருப்புக்கிரையாக்கினர்.

  அவர்கள் தண்ணீர் எடுக்கும் கிணறுகளில் மண்ணெண்ணெய் ஊற்றிகுடி, தண்ணீருக்குத் திண்டாட விட்டனர். இவ்வாறு உயர் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சகிக்க முடியாத கொடுமைகளைச் செய்தாலும், அவர்கள் அரசாங்கத்தார் தமக்குக் கொடுத்த சுதந்திரத்தை உபயோகிக் காமல் விட்டு விட வில்லை.

  அரசாங்கத்தாரும், தாம் பிறப்பித்த உத்தரவை மாற்றாமல், பிடிவாதமாகவே நிறைவேற்றினார்கள். இவ்வகையில் அரசாங்கம் கொண்டிருந்த உறுதியைத் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்பால் அனுதாபம் உள்ள எவரும் பாராட்டாம லிருக்க முடியாது.

  இப்பொழுது இன்னும் சிறந்த துணிகரமான காரியமாக, தாழ்த்தப்பட்டார் அனைவரும் கோயிலுக்குள் செல்ல உரிமையுண்டு என்றும் உத்தரவு பிறப்பித்ததை நாம் பாராட்டு கிறோம். இதற்கு முன் போர் சமஸ்தானத்திலும் இவ்வாறே தாழ்த்தப்பட்ட சமுகத்தார்க்கும் கோயில் பிரவேசம் அளித் திருக்கின்றனர்.

  அதைப்பின்பற்றி பரோடாவும் தைரியத்தோடு வைதிகர்களின் எதிர்ப்பைச் சிறிதும் பொருட்படுத்தாமல் இக்காரியத்தைச் செய்ததைப் பாராட்டு கிறோம். இப்பொழுது தான் சென்னைச் சட்டசபையில், தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கோயில் பிரவேசம் அளிக்கத்தக்க சட்டத்தை ஏற்படுத்துமாறு அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்வதாக தீர்மானம் நிறை வேறியிருக்கின்றது.

  சென்னை அரசாங்கத்தார் இத்தீர்மானத்தை அனுசரித்தும் பரோடா, போர்பந்தர் முதலிய சமஸ்தானங்கள் செய்திருக்கும் உத்தரவுகளைப் பார்த்தும் தாமதமில்லாமல் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கோயில் பிரவேசம் அளிக்கத் தகுந்த சட்டத்தை நிறைவேற்ற முன்வருமா? என்று கேட்கிறோம்.

  சுதேச சமதானங்கள் இக்காரியத்தைச் செய்த பின்னும் சென்னை மாகாண பொது ஜனங்களின் பிரதிநிதியாகிய சட்டசபை இக்காரியத்தை நிறை வேற்ற வேண்டுமென்று சிபாரிசு செய்த பிறகும் சென்னை அரசாங்கம் மௌனஞ் சாதித்துக் கொண்டு வாளாவிருக்குமாயின் அது நேர்மையும் ஒழுங்கும் ஆகாது என்பதைச் சொல்ல விரும்புகிறோம்.

  அரசாங்கத்தின் நோக்கம் எல்லா வகுப்பினருக்கும் சமத்துவமளிப்பதும், எல்லா வகுப்பினருக்கும் நீதி புரிவதும் அல்ல வென்று பொது ஜனங்கள் நினைக்கும் படி இருக்கும். ஆகையால் சென்னை அரசாங்கம் சிறிதும் தாமதம் இல்லாமல் பரோடா போர்பந்தர் முதலிய சமஸ்தானங்கள் செய்தது போலத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு ஆலயங்களில் சம உரிமை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறுகின்றோம்.

  குடிஅரசு - துணைத் தலையங்கம் - 06.11.1932

  Read more: http://viduthalai.in/page1/96218.html#ixzz3S0uJcGzK

  தமிழ் ஓவியா said...

  சௌந்திரபாண்டியன் வெற்றி

  சமீபத்தில் நடைபெற்ற மதுரை ஜில்லா போர்டு தேர்தலில் நமதியக்கத்தோழர் சௌந்திர பாண்டியன் அவர்கள் பெரு வாரியான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதறிய அளவிலா மகிழ்ச்சியடைகிறோம்.

  பொது ஜன சேவையில் ஆர்வமும், ஊக்கமும், செல்வாக்குமுள்ளவர் பலர் வெளியே தங்கி விடுவதும், தன்னலமும், வைதிகப்பித்தும் கொண்ட சிலர் அங்கம் பெற்று பொதுநலத்தொண்டை அறவே மறந்து சுயநலமே கருத்திருத்தி பணியாற்றுவதும் இப்போதைய ஸ்தலஸ்தாபனங்களின் இயற்கையாய் போய் விட்டது.

  நமது தோழர் சௌந்திரபாண்டியன் அவர்கள் முன்னர் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராய் இருந்து ஆற்றி வந்த பொது நல சேவையையும், தாழ்த்தப்பட்டார் விஷயத்தில் காட்டி வந்த அனுதாபமும், வெறும் ஏட்டுச் சுரைக்காயாய் போய் விடாமல் அவைகளைச் சட்ட மூலமாய் அமலுக்குக் கொண்டுவருவான்வேண்டி எடுத்துக் கொண்ட பெரு முயற்சிகளும், தமிழ் நாட்டார் இதற்குள்ளாக மறந்திருக்க மாட்டார் களென்றே நம்புகிறோம்.

  பொதுவாக மதுரை ஜில்லா வாசிகளும், குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தாரும் தங்கள் தங்கள் நன்மைக்காக கடைசி வரை வாதாட ஒரு உண்மையும், ஊக்கமும், உறுதியும் கொண்ட இத்தகைய ஒரு அக்கத்தினரை பெற்ற பெருமைக்கு உரித்தவர்களென்றே எண்ணுகிறோம். வெற்றி பெற்ற நமதியக்கத் தோழர் சௌந்திரபாண்டியன் அவர்களுக்கு நமது மகிழ்ச்சியுரியதாகுக.

  குடிஅரசு - துணைத்தலையங்கம் 07.08.1932

  Read more: http://viduthalai.in/page1/96218.html#ixzz3S0uQQU3h

  தமிழ் ஓவியா said...

  மீண்டும் கார்ப்பொரேஷனில் இந்து மதம்

  சென்ற 19.10.32 சென்னைக் கார்ப்பொரேஷனில் நடந்த கூட்டத்தில், ஜார்ஜ் டவுன் சொர்ணவிநாயகர் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள 537 சதுர அடி நிலத்தை அக்கோயிலுக்கு விட்டுவிடுமாறு ஒரு அவசரத்தீர்மானம் பிரரேபிக்கப்பட்டு ஆமோதிக்கப்பட்டது. ஒரு கனவான் இது அவசரமான விஷயமல்லவென்றும், ஆகையால் இவ்விஷயத்தை தீர்க்க ஒரு கமிட்டி நியமிக்க வேண்டுமென்றும் கூறினார்.

  மற்றொரு கனவான், அந்தக் கோயிலிலும், அதற்கு விடும் நிலத்திலும் தீண்டாதார்க்கு உரிமையுண்டா என்று கேட்டார். இவைகளுக்குச் சரியான சமாதானம் கூறப்படாமல், முதலில் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  நகரசபைக்குச் சொந்தமான சொத்துக்கள் நகர மக்களுக்கும் பொதுவான சொத்துக்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே நகரசபைச் சொத்துக்களைச் செலவு செய்யும்போது, அவை நகர மக்கள் அனைவருக்கும் உபயோகப்படக்கூடிய முறையிலேயே செலவு செய்யப் படவேண்டும் என்பதை எவரும் ஒப்புக்கொள்ளுவார்கள்.

  ஆகவே, நகரசபைக்குச் சொந்தமான ஒரு பொது நிலத்தை, ஒரு மதத்தார்க்கே, அதிலும் சில ஜாதியார்க்கே உபயோகமாக இருக்கும் ஒரு கோயிலுக்கு விட்டதனால் நகர மக்களுக்கு என்ன பிரயோஜனமென்று கேட்கின் றோம்.

  முன்பு நகரசபை சங்கராச்சாரியாருக்கு வரவேற்பு அளிக்கத் தீர்மானித்ததையும், இப்பொழுது பொதுஜன உபயோகத்திற்குப் பயன்படுத்த வசதியுள்ள 537 சதுர அடியுள்ள நிலத்தை ஒரு பிள்ளையார் கோவிலுக்குச் சொந்தமாக்கிய தீர்மானத்தையும் பார்க்கும்போது, நகரசபை, பொதுஜன நன்மைக்காக ஏற்பட்டதா? அல்லது இந்துமதப் பாதுகாப்புக்காக ஏற்பட்டதா? என்ற சந்தேகம், அந்நிய மதக்காரர்களுக்கு உண்டாகாமற் போகாது.

  இம்மாதிரியே நகர சபை இந்து மதத்திற்குப் பாதுகாப்பும் அளித்துக்கொண்டே போவதைப் பொது ஜனங்கள் கண்டிக்க முற்படுவது எவ்வகையிலும் குற்றமாகாதென்றே கருதுகின்றோம்.

  குடிஅரசு - துணைத்தலையங்கம் - 23.10.1932

  Read more: http://viduthalai.in/page1/96221.html#ixzz3S0uXJzxl

  தமிழ் ஓவியா said...

  ஒருவன் பூணூல் போட்டுக்கொண்டு, நெற்றிக் குறி இட்டுக் கொண்டு, அவன் தாயார் மொட்டை அடித்து முக்காடு போட்டுக் கொண்டு, அவன் மனைவி கோவணம் போட்டு சேலை கட்டிக் கொண்டு இருக்க உங்களிடம் வந்து நான் பொதுஉடைமைவாதி, அதுவும் இடதுசாரிக் கம்யூனிஸ்ட் என்று சொன்னால்,

  அதை நீங்கள் நம்பினால் நீங்கள் எவ்வளவு தூரம் முட்டாள்கள் ஆவீர்களோ அதேபோல்தான் நெற்றிக் குறியுடன் இராமாயணம், பாரதம், தேவாரம், பிரபந்தங்களைப் படித்துக்கொண்டு பாராயணம் செய்துகொண்டு பூசை புனஸ்காரங்களுடன் திரிகின்றவனைச் சமதர்மவாதி என்று நம்புவதாலும் ஆவீர்கள்.

  - தந்தை பெரியார் பொன்மொழிகள்

  Read more: http://viduthalai.in/page1/96221.html#ixzz3S0udr5YH

  தமிழ் ஓவியா said...

  பொன்மொழி

  தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல்வியுறுவான். - நெப்போலியன்

  சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கிறது - பக்ஸ்டன்

  Read more: http://viduthalai.in/page-1/96212.html#ixzz3S0v2goo9

  தமிழ் ஓவியா said...

  அச்சுறுத்தும் பன்றிக் காய்ச்சல் - ஓர் எச்சரிக்கை


  ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் நகரில் 2014 டிசம்பர் 8 ஆம் தேதி பள்ளிமாணவர் ஒருவர் சாதாரண காய்ச்சல் என்று கூறி மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனை யில் சேர்ந்த 2 நாளில் மரணமடைந்து விட்டார். இந்த மரணம் மூளைக் காய்ச் சலால் ஏற்பட்டது என மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் இளைஞர் மரண மடைந்த அதே தினத்தில் 12 பேர் காய்ச் சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.

  தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப் படுவது குறித்து ரத்தமாதிரிகளை பரிசோதித்த மருத்துவர்கள் பன்றிக் காய்ச்சல் பரவ ஆரம்பித்தது என்று ஒப்புக்கொண்டுவிட்டனர். ஆனால் அதற்கு (டிசம்பர் 20 வரை) ராஜஸ் தானில் மாத்திரம் 47 பேர் மரண மடைந்துவிட்டனர். ஜனவரி மாதத் தொடக்கத்தில் பன்றிக்காய்ச்சல் ராஜஸ் தானில் இருந்து குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரா என வேகமாக பரவியது. ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் அசோகோலாட் கூட இந்த காய்ச்சலில் இருந்து தப்பவில்லை. இந்த நிலையில் தலைநகர் டில்லி, தமிழ்நாடு, உத்தி ரப்பிரதேசம், பிகார், மேற்குவங்கம் ஒரிசா என வேகமாக பன்றிக்காய்ச்சல் பரவி யது. ராஜஸ்தான் மாநிலத்தில் மாத்திரம் 120 பேர் மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களில் பெரும்பாலா னோர் இளைஞர்களும் மாணவர்களும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் மிகவும் வேகமாக பரவிவரும் பன்றிக்காய்ச்சா லால் இதுவரை 30 பேர் மரணமடைந் திருக்கின்றனர்.

  போபாலில் உள்ள ஒரு பள்ளியில் 20க்கும் மேற்பட்ட மாண வர்கள் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப் பட்டது சோதனையில் தெரியவந்தது இதைத்தொடர்ந்து அந்த பள்ளிக்கு தற் போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போபால், இந்தூர், குவாலியர் போன்ற நகரங்களில் பன்றிக்காய்ச்சல் மிகவும் வேகமாக பரவிவருகிறது. போபால், இந்தூர் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவப் பிரிவுகள் தொடக்கப்பட் டுள்ளது, இருப்பினும் நோய் வேகமாக பரவி வருகிறது. சனிக்கிழமை அன்று போபால் இந்திரா காந்தி மருத்துவ மனையில் பன்றிக்காய்ச்சலால் இருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து போபாலில் பன்றிக்காய்ச்சலால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 12-அய்த் தொட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் பன்றிக்காய்ச்சலால் நாடு முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக கூடியுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சலால் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது.

  தமிழ் ஓவியா said...


  தமிழ்நாடு மாநி லத்தில் இதுவரை 113 நோயாளிகளுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறி யப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சலால் கடந்த இரண்டு வாரங்களில் 22 பேர் மரணமடைந்துள்ளது. பன்றிக்காய்ச்சல் மராட்டிய மாநிலத்தில் பரவ ஆரம்பித் துள்ளது. பூனே, அகமத் நகர், நாக்பூர், தானே, மன்மாட் போன்ற மாவட்டங் களில் பன்றிக்காய்ச்சல் பரவியுள்ளது. மகராஷ்டிராவில் இதுவரை 108 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 73 பேர் மரணமடைந்துள்ளனர். ஆந்திரா, ஒரிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் 500க்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச் சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட் டோர் மரணமடைந்துள்ளனர்.

  பன்றிக்காய்ச்சலால் குஜராத்தில் தொடர் மரணம்

  பன்றிக்காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் முதலிடத் தில் குஜராத் உள்ளது. இந்த மாவட் டத்தில் கடந்த வாரம் மட்டுமே 627 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கபட் டுள்ளது. மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் பரவுவது குறித்து குஜராத் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மத்திய குஜராத் மாவட்டங்கள் முழுவதும் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

  சிறு நகரங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்துள்ளோம். ஞாயிறு மட்டும் கட்ச் மாவட்ட தலைமை மருத் துவ மனையில் 5 பேர் பன்றிக்காய்ச்ச லால் மரணமடைந்துள்ளனர். அம் ரேலி, சூரத், காந்திநகர், பரோடா நகரங் களில் 77 புதிய நோயாளிகள் கண்டறி யப்பட்டுள்ளனர். ஜனவரி மாதம் முழுவதும் 63 நோயாளிகள் குஜராத்தில் மாத்திரம் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் மிகவேகமாக பரவி வரும் நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டில்லி மாநிலத் தேர்தலில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் ஹர்சவர்தனுக்கு மாற்றாக சுகாதாரத் துறைக்கு பொறுப்பேற்ற ஜெகத்பிரகாஷ் நாடா தன்னுடைய அமைச்சரவை பணியை கவனிப்பதை விட்டுவிட்டு பிகார் மாநி லத்தில் ஜிதன் ராம் மாஞ்ஜி மற்றும் நிதீஷ் குமாருக்கு இடையே பிணக்கை உருவாக்கி கட்சியில் பிளவுபடுத்தும் காரியத்தில் நீண்ட நாட்களாக மூழ்கி இருந்தார். தற்போதுஅதில் ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டார்.

  தமிழ் ஓவியா said...


  ஆனால் இவரது அமைச்சகப் பணியான தொற்று நோய் தடுப்பு முற்றிலும் செயலிழந்து விட்டதையே நாடு முழுவதும் பரவிவரும் பன்றிக்காய்ச்சால் காண்பிக்கிறது. மருந்து தட்டுப்பாடு தெலங்கானா, ஒரிசா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பன்றிக்காய்ச்ச லுக்கான மருந்துகளுக்கு கடும் தட்டுப் பாடு நிலவுகிறது. முக்கியமா திருப்பதி அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச் சலுக்கு மருந்து இல்லாத காரணத்தால் நோயாளிகள் வெளியேற்றப்படுகின் றனர். நரேந்திரமோடி தலைமையி லான மத்திய அரசு சிறீரங்கம் இடைத்தேர்தலை அனைத்து தமிழக அமைச்சரும் முனைப்பாக ஈடுபட்டு வருவது போல் டில்லி தேர்தலிலும் அத்தனை கேபினெட் அமைச்சர்களும் கடந்த ஒரு மாதமாக டில்லி தெருக் களில் வாக்குகேட்டு அலைந்து கொண்டு இருந்தனர்.

  பன்றிக் காய்ச்சல் பன்றிக் காய்ச்சலானது ஒரு வகையான இன்புளுயென்சா (வைரஸ் காய்ச்சலாகும்) ஆகும். இது பொதுவாக பன்றிகளைப் பாதிக்கின்றது ஆகவே மனிதர்களையும் பாதிக்கின்றது. வைர சானது மனிதர்களிலிருந்து மனிதர் களுக்கும் காற்று மூலம் மிகவும் விரைவாக பரவும். பன்றிக்காய்ச்சல் ஏற்படும் போது உள்ள அறிகுறிகள்:


  உடல் வெப்பநிலை உயர்வடைதல் அத்துடன் மேலும் பின்வருவன வற்றில் ஏதாவது இரு அறிகுறிகள் சாதாரணமாகக் காணப்படும்

  இருமல், தலை வலி, தொண்டை , மூக்கிலிருந்து நீர் வடிதல், தசை மற்றும் மூட்டு வலி போன்றவை.

  பின்வருவனவும் காணப்படலாம். பொதுவான உடல் நலக் குறைவு உணரப்படும், உடற் சோர்வு, (களைப்பு), பசியின்மை, வயிற்றோட்டம், அரு வருப்பு, வாந்தி, வயிற்றுவலி, நடுக்கா தினுள் கிருமித்தொற்று காரணமாக காதுவலி, மற்றும் அரிதாக வலிப்பு.

  பலருக்கு இந்த அறிகுறிகள் சில நாட்களுக்கே நீடிக்கின்றன. பொதுவாக அறிகுறிகள் 7-10 நாட்களில் படிப்படி யாக குறைவடைந்து செல்கின்றன. அறிகுறிகள் மறைந்த பின்னரும் உடல் முழுவதும் அரிப்பு மற்றும் கடுமையான வறட்டு இருமல் சில வாரங்களுக்கு அல்லது அதற்கு மேலும் நீடிக்கலாம். வைரஸ் கிருமித்தொற்றுக்கும் நோயின் அறிகுறிகள் காய்ச்சல் வந்த 2-5 நாட்களில் வெளியே தெரியவரும். ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு 7 நாட் களுக்கு பிறகு வெளியே தெரிய வரும்.

  மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கான அறிகுறிகள்

  இரத்த வாந்தி,
  பிரகாச ஒளிக்கு விருப்பமின்மை,
  நெஞ்சு வலி,
  மூக்கிலிருந்து இரத்தக் கசிவு,
  குரல்வளை அழற்சி,
  காய்ச்சலுடன் உடல் நடுக்கம்.

  குழந்தைகள் மற்றும் இளஞ்சிறு வர்களின் உணவு உட்கொள்ளல் பாதிக்கப்படும்.

  - சரா

  Read more: http://viduthalai.in/page-1/96215.html#ixzz3S0vHks9W

  தமிழ் ஓவியா said...

  மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் படம் தணிக்கைத்துறை அனுமதியின்றி வெளியிட அரசு உத்தரவாம்


  பஞ்சாபில் மிகவும் சர்ச்சைக்குரிய ராம் ரஹீம் பாபா தானே தயாரித்து எடுத்த திரைப்படமான கடவுளின் தூதுவன் (மெசேன்சர் ஆப் காட்) என்ற படத்திற்கு தணிக்கைத்துறைத் தலை வர் அனுமதியின்றி மத்திய இணை அமைச்சர் ராஜ்யவர்தன் ராதோட் உத் தரவின் பெயரில் படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளனர். இதனை அடுத்து, அதன் தலைவர் லீலா சாம்சன் தன்னுடைய பதவியை உதறித் தள்ளினார். அவருக்கு ஆதர வாக தணிக்கைக் குழுவில் 11 உறுப் பினர்களும் பதவி விலகியுள்ளனர்.

  சர்ச்சைச் சாமியார்

  பஞ்சாபில் உள்ள தேரா சச்சா சவுதா என்ற பிரிவைச் சேர்ந்த ராம்ரஹீம் பாபா தன்னை சீக்கிய மதகுருவான குரு நானக்கின் மறுபிறவி என்று அறிவித் துக் கொண்டு சட்லஜ் நதிக்கரையில் பெரிய மடம் ஒன்றைக் கட்டி அதில் வசித்து வருகிறார். இவருக்கு உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான சீடர்கள் உள்ளனர். இவர் தன்னுடைய சீடர்களுக்கு கட்டாய ஆண்மை நீக்கம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து அது தற்போது சி.பி.அய். வசம் விசாரணையில் உள்ளது. கடவுளை அடைய உணர்ச்சி களை அடக்கவேண்டும் என்று கூறி 400க்கும் மேற்பட்ட ஆண் சீடர்களின் ஆண்மையை அகற்றிவிட்டதாக அவரு டைய சீடர்களுள் ஒருவரான பரமீத் சிங் டில்லிகாவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

  இந்த சாமியார் தற்போது கடவுளின் தூதர் என்ற படத்தை எடுத்துள்ளார். இந்தப்படத்தில் தானே கடவுளின் தூதுவனாக மாறி பல்வேறு பிறவிகளில் பிறப்பதாகவும் குருநானக்காகவும் தான் பிறந்ததாகவும் கூறியுள்ளார். இதனை சீக்கியர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு இந்தப்படத்திற்கு தணிக்கைக் குழுத் தலைவர் லீலா சாம்சன் அனுமதியளிக்கவில்லை. இந்த நிலையில் ராம்ரஹீமின் தீவிர பக்தரும் ஒலிம்பிக் பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ராத்தோட் தலையிட்டு இந்தப்படத்தை வெளியிட தணிக்கைத் துறையினரிடம் அனுமதி பெறாமலேயே சான்றிதழ் கொடுத்துவிட்டார். இப்படம் தற்போது வெளியாகிவிட்டது. இவ்விவகாரம் குறித்து கேள்வியுற்ற லீலா தணிக்கைத் துறையில் மத்திய அரசின் தலையீட்டை எதிர்த்து பதவி விலகியுள்ளார். இவருக்கு ஆதரவாக தணிக்கைக் குழுவினர் 11 பேரும்பதவி விலகியுள்ளனர்.

  சிவசேனா மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் பிடியில் தணிக்கைத்துறை

  பிகே படம் வெளியானது முதலே சிவசேனா மற்றும் இந்துத்துவ அமைப் புகள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திடம் முறையிட்டன. இது போன்ற ஒரு படத்தை அதுவும் இந்து மதத்திற்கு ஆதரவாக உள்ள ஆட்சி நடக்கும் போது எப்படி வெளியிட அனுமதிக்கலாம் என்று கேட்டுள்ளனர். மோகன் பகவத்தும் இது குறித்து மோடியிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ராஜ்யவர்தன் ராத் தோட் நேரடியாக தலையிட்டு இப் படத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார். தணிக்கைத்துறையில் அரசியல் தலை யீடுகள் கூடாது என்று அரசியலமைப்பு சட்டம் கூறியிருந்தும், தற்போது நேர டியாக இணை அமைச்சர் தலையிட்டு தனது ஆதரவு பாபாவின் படத்தை வெளியிட அனுமதி கொடுத்துள்ளார்.

  சாமியார் மீது வழக்குகள்

  சீக்கிய பிரிவுகளுக்கு இடையே உள்ள பல்வேறு அரசியல் சர்ச்சை களின் காரணங்களாலும் இந்த விவகா ரம் பெரிதாக்கப்பட்டுள்ளதாக கூறப் படும் அதே சமயத்தில், சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதியப்பட்டு வழக்கு விசா ரணைகள் நீதிமன்றங்களில் நிலு வையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

  கடந்த 2002 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இந்த சாமியார் மீது பாலி யல் குற்றச்சாட்டுகளும் வரத் துவங்கியது.

  இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீது குற்றம் கூறி இந்திய பிரதமர் உள்ளிட்ட பலருக்கும் கடிதம் எழுதிய சத்ரபதி என்பவரும் மேலும் இரண்டு சேவை அமைப்பினர்களும் ரகசியமாக கொலை செய்யப்பட்டனர்


  தமிழ் ஓவியா said...

  இதனால் கொலைக் குற்றச்சாட்டு உள்ளிட்ட வழக்குகள் அந்த சாமியார் மீது பதியப்பட்டு நீதி விசாரணை தற்போதும் நடைபெற்று வருகிறது. அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிராக போராட்டங்கள்

  இப்படம் சீக்கிய மதகுருவான குருநானக்கின் சேவையை இழிவு படுத்தும்விதமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு பஞ்சாபியர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள் ளனர். புதுடில்லி மற்றும் பஞ்சாபின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது

  சீக்கியர்கள் நடத்தும் இந்த போராட் டம் காரணமாக இப்பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

  இதனால் காவல் துறையினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள் ளார்கள். இந்தியத் திரைப்படத் தணிக் கைக் குழுவால், திரையிட தகுதி யில்லாத திரைப்படம் என்று நிரா கரிக்கப்பட்ட ஒரு திரைப்படத்திற்கு இவ்வளவு விரைவாக தீர்ப்பாயம் எவ்வாறு அனுமதி வழங்கியது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

  மேலும் அப்படத்தில் நடித்துள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் பற்றிக் குறிப்பிட்டு, ஒரு தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிக்கு சட்டம் துணை போகின்றதா? போன்ற வாச கங்களைக் கொண்ட பதாகைகளையும் போராட்டக்காரர்கள் கொண்டிருந் தார்கள்.

  எம்எஸ்ஜி என்றழைக்கப்படும் இந்த திரைப்படத்தின் பெயருக்கு பின்னால் "தி மெஸஞ்சர் ஆஃப் காட்" என்கிற பின் தொடரும் இடம்பெற்றுள்ளது.

  ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரிக்கப்பட் டுள்ள இந்த திரைப்படம் வெளியாகும் என்று முன்னதாகவே விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

  மொத்தமாக இந்த திரைப்படத்தில் ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளன, அவை அனைத்திற்கும் பாடல்கள் எழுதுவது, பாடுவது, இசை அமைப்பது என அனைத்துப் பணிகளையும் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கே மேற் கொண்டுள்ளார்.

  அத்தோடு இப்படத்தின் இயக்கம், ஒளிப்பதிவு போன்ற துறைகளிலும் அவர் இணைந்து பணியாற்றியுள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ள இந்த சாமியார், படத்தின் கதைப்படியும் ஆன்மீகத் தலைவராகவே காட்சியளிப்பார் என்றும் படத்தின் கதைச்சுருக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  "மூடநம்பிக்கையை படம் ஊக்குவிக்கிறது"

  இந்நிலையில் மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளதால்தான், இப்படத்திற்கு இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு அனுமதி சான்றிதழ் வழங்க மறுத் துள்ளதாக கூறப்படுகிறது.

  தற்போது தணிக்கைச் சான்றிதழ் மேல்முறையீடு ஆணையம், இப்படத் திற்கு வெளியீடு அனுமதிச் சான்றிதழ் வழங்கியதால் இந்த சர்ச்சை வலுத் துள்ளது.

  இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழுவின் தலைவர் லீலா சாம்சனும் இந்த விவகாரம் காரணமாக அவரது பதவியை ராஜினாமா செய்த நிலையில், இவரைப்போல் பல்வேறு மாநில திரைப்படத் தணிக்கைக் குழுவின் தலைவர்களும் தொடர்ந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இவர்கள் கூறும் பல்வேறு காரணங் களில், அரசாங்கத்தின் குறுக்கீடுகளும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

  Read more: http://viduthalai.in/page-1/96219.html#ixzz3S0wa6YAO

  தமிழ் ஓவியா said...

  பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட வரி விலக்கை ரத்து செய்த திப்புசுல்தான்

  திப்புவைப் போல தங்களை விரட்டவேண்டுமென்பதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, ஆங்கிலேயர் கண்டதில்லை. கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம், திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா? என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.

  1782 டிசம்பரில், ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படை கள். ஆனால், அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ஆம் லூயி, பிரிட் டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டிய தாயிற்று.

  1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம்தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.

  மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1790_92) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்ன னால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், அய்தராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற் காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்.

  எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. 30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்தி லிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங் கிலேய அதிகாரி மன்றோ.

  பல போர் முனைகளில் ஆங்கிலே யரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக் கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.

  மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அது வரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந் தனை விதித்தான் கார்ன்வாலிஸ். பணயத் தொகையை அடைத்து கும்பினிக் கொள் ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற் பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணு வத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.

  ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சு கிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம் என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

  தமிழ் ஓவியா said...

  திப்புவைப் போரிட்டு வெல்ல முடி யாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளை யர்கள், பிளாசிப் போரில் பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் அய்ந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங் கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர் களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, இப்போது நாம் தைரியமாக திப்புவின் மீது படையெடுக்கலாம் என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.

  இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கி லேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.

  அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய் யாவும் செய்த அய்ந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங் கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத் துக்குத் தடையாகத் தென்னிந்தியாவி லிருந்து எழுந்து நின்ற அந்த மய்யம் வீழ்ந்தது. திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்ட வேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, அவர்கள் கண்டதில்லை.

  ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக் கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற் காட்டு நவாப், மராத்தியர்கள் என எல் லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.

  துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர் களுக்குத் தூது அனுப்பி வணிக ரீதி யாகவும், இராணுவ ரீதியாகவும் உலகள விலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும் என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.

  பிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், அந்தப் படை தன் தலைமையில்தான் போரிட வேண்டு மென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக் கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர் களான ஜாகோபின்கள்.

  தமிழ் ஓவியா said...

  பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்க வில்லை. புரட்சி வெற்றி பெற்றபின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட் சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, குடிமகன் திப்பு என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில் தான் முதன் முதலாக ஒலித்தன.

  பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக் கையைப் படித்துவிட்டு மைசூர் அரசின் சார்பாக உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட் டும் என்று செய்தியும் அனுப்புகிறார்.

  ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற் றின் போக்கை உணர்ந்து சமூக மாற் றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், பென்சன் ராஜாக்கள் என்று வெறுப் புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கணணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும். தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும் போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.

  காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால், அரசுக்கான வருவாயை விவசாயம்தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ் நிலையைப் புரிந்து கொண்டு விவ சாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.

  எந்தச் சாதி, மதத்தைச் சேர்ந்தவரா னாலும் சரி, உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும் என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமுல்படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமுல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக் கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

  ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம் என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும்முன் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டி யிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற் றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயி களைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறு கிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

  தமிழ் ஓவியா said...

  1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்க வில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர் களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற் பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவ சாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு. 1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ் ணராஜ சாகர் அணையைக் கட்டுவ தற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டு வதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப் பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.

  அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படை யிலான நகரங்கள் உருவாகியிருந்தன; உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன; முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர் என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற் றாய்வாளர் தோழர்.சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டி ருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடு கிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.

  திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக்கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற் றியிருக்கின்றன.

  தமிழ் ஓவியா said...

  பிரான்சுடனான அவரது உறவில் அய்ரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.

  இவையெதுவும் ஒரு புத்தார்வவாதி யின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத் தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்கு கிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங் களில் வணிக மய்யங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.

  அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத் தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந் திருக்கிறார் திப்பு. அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொரு ளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மை யானதா? என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் சூரியன் அஸ்த மிக்காத சாம்ராச்சியத்தை உருவாக்கியது.

  தமிழ் ஓவியா said...

  அநாதைச் சிறுமிகளை கோயி லுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.

  எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி என்று எழுதிய திப்பு, தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.

  கும்பினிக்காரர்களோ திப்புவிட மிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக் காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின், தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமை களாக மக்களைக் கப்பலேற்றினர்.

  திப்புவின் ஜனநாயகப் பண்பு அவ ருடைய நிர்வாக ஆணைகள் அனைத் திலும் வெளிப்படுகிறது. விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும் என்று தண்டனை முறையையே மாற்று மாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிலை நிறுத்தப்பட்டிருக் கின்றன.

  தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால், தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களைப் போர்க்களத் தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப் பாவி மக்கள் மீது போர் தொடுக் காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக் கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந் தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள் என்று தன் இராணுவத் துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை. ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்புதான் என்று கும்பினி நிர்வாகத் துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் சிவில் நிர்வாகமாக இருக் கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர் குலத்தில் பிறந்தவர்கள் என்ப தற்காக இங்கே சலுகை காட்டப் படுவதில்லை.. எல்லா வர்க்கத்தினர் மீதும் பார பட்சமின்றி நீதி நிலை நாட்டப்படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந் தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது என்று குறிப்பிட்டுள் ளான் என்றால் திப்புவின் பெருமையை நாம் என்னவென்று சொல்வது! (முகநூலிலிருந்து தகவல்: குடந்தை கருணா)

  Read more: http://viduthalai.in/page-1/96220.html#ixzz3S0wq6dfS

  தமிழ் ஓவியா said...

  பிற்படுத்தப்பட்டோரின் கவனத்துக்கு...

  யுஜிசி என அழைக்கப்படும் பல்க லைக்கழக மானியக் குழுவானது ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள் ளிட்ட சிறுபான்மையினர், பெண்கள் உள் ளிட்டோருக்குப் பல்வேறு விதமான கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. தற்போது, முதல்முறையாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவ -மாணவிகளுக்குப் புதிய கல்வி உதவித் தொகை திட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

  எம்.ஃபில். பிஎச்.டி. (முனைவர் பட்டம்) படிப்பதற்கு இந்த உதவித் தொகை கிடைக்கும். கலை, சமூக அறிவியல், அறிவியல், பொறியியல், தொழில் நுட்பம் ஆகிய படிப்புகளுக்கு உதவித் தொகை பெறலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

  (விண்ணப்பதாரர்கள் யுஜிசி அல்லது அறிவியல் மற்றும் தெழில்நுட்ப அமைச் சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அறிவி யல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி (சிஎஸ்அய்ஆர்) நிறுவனத்தின் ஜெஆர் எஃப் உதவித்தொகை பெறக்கூடாது என்பது ஒரு நிபந்தனை). ஆண்டு தோறும் 300 ஓபிசி மாணவர்களுக்கு உதவித் தொகை களை வழங்க யுஜிசி முடிவு செய்துள்ளது. இதில் 3 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப் பட்டிருக்கிறது.

  தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.25 ஆயிரம் கிடைக்கும். அத்துடன் எதிர்பாராத செல வுக்காக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரமும் (கலை படிப்புகள்), ரூ.12 ஆயிரமும் (அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம்) வழங்கப்படும்.

  இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்பு கல்வி செயல்பாடுகள் திருப்தியாக இருக் கும் பட்சத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.28 ஆயிரம் கிடைக்கும். அதோடு எதிர்பாராத செலவினங்களுக் காகக் கலைப் படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,500-ம், அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

  இந்த உதவித்தொகை விண்ணப்ப தாரரின் வங்கிக்கணக்குக்கு ஆன்லைனில் நேரடியாக (E- payment) வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்வி ஆண்டின் உதவித்தொகையைப் பெறுவ தற்கு வரும் பிப்ரவரி மாதம் 10-ம் தேதிக் குள் ஆன்லைனில் (www.ugc.ac.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது.

  ஓ.பி.சி. வகுப்பினர் யார்?

  பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர் களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள் இருக்கும் நபர்கள் ஓ.பி.சி பிரிவின் கீழ் வருவார்கள். பி.சி, எம்.பி.சி பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்தைத் தாண்டிவிட்டால் அவர்கள் ஓ.பி.சி. வகுப் பினராகக் கருதப்பட மாட்டார்கள். ஓபிசி வகுப்பினருக்கான சான்றிதழைத் தாசில்தார் வழங்குவார். இதற்கு உரிய படிவத்தில், தேவையான ஆவணங் களுடன் கிராம நிர்வாக அதிகாரி, வரு வாய் ஆய்வாளர் மூலமாக விண்ணப் பிக்க வேண்டும்.

  (தி இந்து 3.2.2015 இணைப்பு பக்கம் 1)

  Read more: http://viduthalai.in/page-1/96222.html#ixzz3S0xHmjRx

  தமிழ் ஓவியா said...

  இந்த விடுதியில் எந்திர பணியாளர்கள் மட்டுமே!


  உலகின் முதல்முறையாக முற்றிலும் எந்திரங்களைப் பணியாட்களாகக் கொண்டுள்ள விடுதி ஜப்பானில் தொடங்கப்பட உள்ளது. விடுதிகளில் பணியாற்றும் வழக்கமானப் பணியாட் களைப் போன்று விருந்தினர்கள் வருகைப்பதிவேட்டை பராமரிப்பது, சரிபார்ப்பது, அவர்களுக்குத் தேவை யான வசதிகள்குறித்து அறிந்து சேவை ஆற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணி களை ரோபோக்கள் மூலம் செய்யக் கூடிய விடுதி ஜப்பானில் வரும் ஜூலை மாதம்முதல் இயங்க உள்ளது.

  தமிழ் ஓவியா said...


  ஜப்பானில் நாகசாகிப் பகுதியில் டச்சு நாட்டின் தொழில்நுட்ப முறை யில் கட்டப்பட்ட நவீன விடுதியாக ஹூயிஸ் டென் போஸ்க் அரண்மனை போன்று கட்டப்பட்டுள்ளது. அங்கு ரோபோக்கள் எனப்படும் எந்திரப் பணியாட்கள் மற்றும் நவீனத் தொழில் நுட்பங்களுடன் விடுதி இயங்குவதற் கான செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.

  ஹென்-னா விடுதி என்றழைக்கப்பட உள்ள விடுதிகளில் புதுமையானதாக இருக்கப்போகிறது. ஆக்ட்ராய்ட் ஆண்ட்ராய்டுகள் என்று மனிதனைப் போல் செயலாற்றக்கூடிய ரோபோக்கள் விருந்தினர்களை வாழ்த்தி, வரவேற் கவும், விடுதியில் உள்ள அறைகளுக்கு சுமைகளைத்தூக்கிச் செல்லவும், காபி போன்ற பானங்களை அளிப்பதுடன் புன்னகைக்கவும் செய்யக் கூடியவை களாக இருக்குமாம்.

  ஜப்பானிய, சீன, கொரிய மற்றும் ஆங்கில மொழிகளில் ரோபோக்கள் பேசக்கூடியவைகளாக உள்ளனவாம். விடுதியில் முதல்கட்டமாக, இரண்டு அடுக்கு விடுதி 72 அறைகளுடன் 17.7.2015 அன்று திறக்கப்பட உள்ளது. அடுத்த கட்டம் 2016ஆம் ஆண்டில் மேலும் 72 அறைகளுடன் கட்டி முடிக்கப்பட உள்ளது.

  விடுதியில் வரவேற்பறைப் பணியாட் களாக மூன்று ரோபோக்களும், சேவை மற்றும் சுமை தூக்கும் பணிகளில் நான்கு ரோபோக்களும், மற்ற ரோபோக்கள் சுத்தம் செய்யக்கூடிய பணிகளிலும் ஈடுபடுத்தப்பட உள்ளன.

  உலகிலேயே நன்கு சேவையாற்றக் கூடிய விடுதிகளில் முதன்மையானதாக ஹூயிஸ் டென் போஸ்க் விடுதி இருக் கும் என்று அவ்விடுதியின் தலைவர் ஹைதியோ சவாடா கூறுகிறார். ரோபோக்கள் 90 விழுக்காடு மிகச் சிறப்பாக செயலாற்றக்கூடியவை என்றும் பெருமிதத்துடன் கூறுகிறார்.

  எதிர்காலத்தில் இதுபோன்ற விடுதி களை உலகம் முழுவதும் 1000 விடுதிகள் உருவாக்க உள்ளோம் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறுகிறார்.

  சிஎன்என், ஜப்பான் நிக்கிநியூஸ் ஆகிய ஊடகங்கள் இவ்விடுதி குறித்து கூறும்போது, மற்றபிற வசதிகளும் ஹென்-னா விடுதியினை மேம்படடையச் செய்யும். எதிர்காலத்தில் குறைந்த கட் டணத்துடன் உள்ள விடுதி என்று புகழ் பெற்று விளங்கும் என்று கூறியுள்ளன.

  முகத்தைக் காட்டினாலே புரிந்து கொண்டு திறக்கக்கூடிய விருந்தினர் அறைகள், மிக அத்தியாவசியமாக உள்ள சுருக்கமான வசதிகளுடன் அறைகள் அமைக்கப்படுகின்றன. தொடு திரை கணினி (டேப்லட்) வாயிலாக விருந்தினர்கள் தங்கள் தேவைகளைக் கோரவேண்டும். குளிர் சாதனத்துக்கு மாற்றாக, கதிர்வீச்சு முறையில் உட லுக்குத் தேவைப்படும் அளவில் வெப் பத்தை அளிக்கும்படியாக அறையில் தட்பவெப்பம் பராமரிக்கப்படும். விடுதி இயங்குவதற்கான கட்டணங்களைக் குறைக்கும் வண்ணம் சூரிய ஒளி மின் சாரம் மற்றும் பிற மின் சேமிக்கும் முறைகள் கையாளப்படும். அறைகளுக் குரிய கட்டணங்கள் கோரப்படும் வசதிகளுக்கு ஏற்ப மாறுபடும். நிலை யான கட்டண விகிதம் இல்லாமல், பருவ காலங்களில் அதிக தேவை ஏற்படு மானால், விருந்தினர்கள் ஏலமுறையில் விடுதி அறைக்கட்டணத்தை செலுத்திப் பெறலாம். அதிக ஏலம் எடுப்பவர் அன்று அறையை பயன்படுத்திக் கொள் ளலாம். ஆனாலும், ஏலத்திலும் கட்டண வரம்பு உண்டு.

  விடுதி தரப்பில் கூறும்போது, ஒருவர் தங்குவதற்கான அறையின் கட்டணமாக 7,000 யென்(60 டாலர்) தொடங்கி, 18,000 யென் (153 டாலர்) வரை மூவர் தங்கும் வசதிகளுடன் உச்சபட்சக் கட்டணமாக ஏலம் எடுக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள தாகக் கூறப்பட்டுள்ளது.

  Read more: http://viduthalai.in/page-1/96226.html#ixzz3S0xjOTfD

  தமிழ் ஓவியா said...

  சென்னைத் தலைமைச் செயற்குழுவில்
  கழகத் தலைவர் தெரிவித்த கருத்துகள் (சென்னை 12.2.2015)

  1) கழகத் தலைவர் கலந்து கொள்ளும் ஊர்களில் கட்டாயம் மண்டலம் / மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்.

  2) ஒப்படைக்கப்பட்ட நன்கொடைப் புத்தகங்களை கணக்குகளுடன் ஒப்படைக்க வேண்டும் என்று விடுதலையில் அறிவிப்பு வருவது உகந்ததல்ல - அந்த அளவிற்கு பொறுப்பாளர்கள் நடந்து காட்டவேண்டும்.

  3) 2015 ஏப்ரல் 28, 29 நாட்களில் (மாலை 5 மணிக்கு) சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பு மாநாடு பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து மீட்டுருவாக்கம் - கருத் தரங்கம்; மொழிப்போர் வீரர்களுக்கும் படத் திறப்புகள்; நுழைவுக்கட்டணமும் உண்டு. இனி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் நன்கொடையாக இருந்தாலும் பெரியார் உலகத்திற்கே!

  4) பெரியார் உலகம் தொடர்பான பணிகளும், கழகத் பிரச்சாரத் தொடர்பான பணிகளும் தங்குத் தடை யின்றி இணைந்தே நடைபெறவேண்டும்.

  5) இளைஞரணி - மாணவரணி மகளிர் அணிகள் விரிவாக்கம். மகளிர் அணி - 30 வயதுக்கு மேல்; மகளிர் பாசறை - 30 வயதுக்குள்
  (மாணவரணி, இளைஞரணிக்கும் இது பொருந்தும்)

  6) இளைஞரணி - மாணவரணி மாநாடு - ஆகஸ்டில் (பெரியார் சமூகக்காப்பு அணியும் இணைந்தது) நடைபெறும்.

  இளைஞரணி - மாணவரணி அமைப்புக்குழு பொதுச்செயலாளர்கள்:

  1) வீ.அன்புராஜ், 2) டாக்டர் துரை. சந்திரசேகரன், 3) தஞ்சை இரா.ஜெயக்குமார், 4) உரத்தநாடு இரா.குணசேகரன், 5) மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், 6) இளை ஞரணிச் செயலாளர் இல.திருப்பதி, 7) இளந்திரையன், 8) ஒருங்கிணைப்பாளர் முனைவர் செயக்குமார் - கடலூர்.

  7) மகளிர்அணி ஒருங்கிணைப்பு: 1) கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, 2) பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, 3) மகளிர் பாசறை செயலாளர் டெய்சி மணியம்மை 4) உமா செல்வராசு

  8) தலைமைக் கழகத்தினர் சம்பந்தப்பட்ட மாவட்டங் களில் இயக்கப்பணிகளுக்கும், செயல்பாட்டுக்கும் பொறுப்பாளர்கள் ஆவர். மாவட்டப் பொறுப்பாளர்களோடு தொடர்பிலேயே இருக்க வேண்டும். தலைமைச்செயற்குழுவுக்கு வரும்போது திட்டங் களோடும், கருத்துக்களுடனும் வருதல் வேண்டும். அவற்றை முறைப்படுத்தி செயல்படுத்தவும் வேண்டும்.

  9) மாவட்டத்திற்கு இரு இளைஞர்கள் / மாணவர்களை தேர்வு செய்து சிறப்பான பயிற்சி (INTENSIVE TRAINING) களப்பணி - மாணவர்கள், இளைஞர்கள் சேர்க்கை, ஊடக விவாதங்களில் பங்கேற்பு உள்ளிட்ட துல்லியமான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

  மேற்கண்ட கருத்துருகளை கழகத் தலைவர் கழகத் தலைமைச் செயற் குழுவில் அறிவித்தார்.

  Read more: http://viduthalai.in/page1/96136.html#ixzz3S0y93I52

  தமிழ் ஓவியா said...

  ஈழத்தில் நடந்த இனப்படுகொலை குறித்து அய்.நா. விசாரணை நடத்த வேண்டும் என்ற இலங்கை வடகிழக்கு மாகாண அரசின் தீர்மானம் வரவேற்கத்தக்கதே!

  இந்திய நாடாளுமன்றத்திலும் இத்தகைய தீர்மானம் கொண்டு வரப்பட
  தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

  தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

  டில்லி தேர்தல் முடிவுகள்

  ஈழத்தில் வடகிழக்கு மாகாண அரசு ஒரு முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றியுள் ளது. ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து அய்.நா. விசாரணை நடத்திட வேண்டும் என்று நிறைவேற்றிய தீர்மானம் வரவேற்கத் தக்கது என்றும். இதனை வலியுறுத்தும் வகை யிலும், அழுத்தம் கொடுக்கும் தன்மையிலும் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட, தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

  இலங்கையில் இராஜபக்சே தலைமை ஆட்சி ஒழிந்த நிலையில், பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்ற மைத்திரி பாலசிறீசேனாவின், தலைமையில் அமைந்துள்ள புதிய ஆட்சி, (இதுவும் சிங்களப் பெரும்பான் மையை வைத்துள்ள ஒரு ஆட்சி என்ற போதிலும்) இராஜபக்சே அணுகுமுறைக்கு விடை கொடுத்தால் ஒழிய, உலகத்தார் கண்முன் சீரிய ஆட்சியாகத் திகழ வாய்ப்பில்லை என்பதாலும், பொது மரியாதை கிடைக்காது என்ற தன்மையாலும், தமிழர்களின் வாக்குகளைப் பெற்றே ஆட்சிக்கு வந்துள்ளோம் - அவர்களின் ஒத்துழைப்பும், நல் லெண்ணமும் ஆட்சிக்குத் தேவை என்பதாலும், தமிழ் நாட்டு மக்களின் உணர்வை ஓரளவு புரிந்து கொண்ட தாலும், இவற்றைப் புரிந்து கொண்டு ஆட்சி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இதுவரை எதிர்பார்த்ததற்கு சற்று மேலாக, பழைய கள் புது மொந்தை என்பது போல் அல்லாது, பல்வேறு வரவேற்கத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

  புதிய அரசின் செயல்பாடுகள்

  1. வடகிழக்கு மாகாண ஆளுநரை மாற்றியது.

  2. அங்கே உள்ள இராணுவத்தைத் திரும்ப அழைத்திடும் பல்வேறு நடவடிக்கைகள்.

  3. சிங்களர், குடியேற்றப் பகுதிகளை மீண்டும் தமிழர் பகுதியாக்கிட, மீள் குடியேற்ற நடைமுறைத் திட்டங் களை வகுத்து, தமிழர்களுக்குரிய உரிமைகளை மீட்டுத் தரும் நடவடிக்கை.

  4. முந்தைய ஒப்பந்தத்தில் உள்ள 13ஆவது பகுதி (அதனால் பெரும் அளவுக்கு லாபமில்லை என்றாலும்) கொஞ்சம் பரவாயில்லை என்ற வகையில் அரசியல் தீர்வுக்கு வழி வகை செய்தல்.

  5. இராஜபக்சேவின் ஜால்ரா தலைமை நீதிபதியை மாற்றி அதற்குப் பதில் திறமை மிக்க ஒருவரை அமர்த்தி யுள்ளமை.

  இவை எல்லாம் மிகப் பெரும் காயம்பட்ட நிலையில் முதலுதவிபோல, முன் சிகிச்சை போன்ற ஓரளவு திருப்தி தரும் புதிய அரசின் நடவடிக்கைகளாகும்.

  தமிழக மீனவர்களின் படகுகள் மீட்பு

  இவை அல்லாமல் -

  தமிழ் ஓவியா said...

  1. தமிழக மீனவர்களிடமிருந்து அடாவடித்தனமாக இராஜபக்சே ஆட்சியினால் பறிக்கப்பட்ட 87 படகுகளை - சுப்ரமணியசாமி போன்ற அரசியல் தரகர்களின் விஷம ஆலோசனைகளை ஏற்று, இலங்கை மண்ணில் முடக்கி வைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்ததை மாற்றி, அவர்களுக்குத் திருப்பி தரும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதானது - நல்லெண்ண நடவடிக்கைகளாகும்.

  வடகிழக்கு மாகாண முதல் அமைச்சர் திரு. விக்னேசுவரன் தலைமையிலான அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானம் முக்கியமானது; இலங்கையில் நடைபெற்றது - அப்பட்டமான இன அழிப்புப் படுகொலையே! (Genocide) அய்.நா. வெளியிலிருந்து சுதந்தரமானவர்களை வைத்து அதை விசாரணை செய்து, குற்றவாளி இராஜபக்சேயையும் அவரது கூட்டத்தினையும் தண்டிக்க வேண்டும் என்ற கருத் தமைந்த வடகிழக்கு மாகாண அரசின் தீர்மானம் - அனைத்து மக்களாலும் வரவேற்றுப் பாராட்டக் கூடியது ஆகும்!

  மனித உரிமைப் பறிப்பு - அய்.நா. சாசனத்திற்கு முரணானது.

  இதை திராவிடர் கழகமும், டெசோ அமைப்பும், பற்பல ஆண்டுகளாக வற்புறுத்தி வருகின்றன.

  உலக நாடுகளின் ஆதரவைப் பெறும் தீர்மானம்

  அ.ய்.நா. அமைத்த போர்க் குற்ற விசாரணை அறிக்கை யில் கூறப்பட்ட கருத்துக்களை நடுநிலையோடு ஆராய்ந் தால், நிமீஸீஷீநீவீபீமீ என்ற இன அழிவுப் படுகொலைக்கான அத்தனை சம்பவங்களும் நடந்தன என்பது எளிதாக விளங்குமே!

  திரு விக்னேசுவரன் அரசின் தீர்மானம் உலக நாடு களின் ஆதரவை - நியாய உணர்வு - மனித உரிமை அடிப்படையில் பெற்றே தீரும் என்பது உறுதி.

  இவையெல்லாவற்றினும் மேலாக இந்திய அரசு - பிரதமர் மோடி தலைமையில் உள்ள அரசு, இலங்கையில் நடைபெற்றது அப்பட்டமான இன அழிப்புப் படுகொலை என்பதை வலியுறுத்தி, இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு தனித் தீர்மானமே கொண்டு வர முன்வர வேண்டும்.

  இனப்படுகொலை குறித்து அய்.நா.வின் சுதந்திரமான விசாரணை தேவை!

  வருகிற தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரில் இப்படி ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வரவும், விக்னேசுவரன் அரசின் தீர்மானத்தின் கருத்தை ஆதாரமாக்கி, தமிழர் இனப்படுகொலைபற்றி அய்.நா.வின் சுதந்திரமான ஒரு விசாரணைக் குழு நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

  அத்துணைக் கட்சிகளும், ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமின்றி, ஒரு மனதாக ஒருமித்த குரலில் ஆதரவு கொடுத்து வரலாற்றில் இனி எங்கும் இப்படிப்பட்ட மனித இனப்படுகொலை தலை தூக்கக் கூடாது என்று நிலையை உருவாக்கிட அது பெரிதும் உதவும் என்பது உறுதி.

  கி.வீரமணி
  தலைவர், திராவிடர் கழகம்

  சென்னை
  13-2-2015

  Read more: http://viduthalai.in/page1/96130.html#ixzz3S0yGyZew

  தமிழ் ஓவியா said...

  இன்றைய ஆன்மிகம்?

  தோஷம் விலக

  ராகு கேதுகள் தோஷம் விலக திருநாகேஸ்வரம் கீழப் பெரும் பள்ளம், காளகஸ்தி போன்ற ஆலயங்களுக்குச் சென்று பூஜை செய்து விரதம் இருப்பது நன்மை தருமாம்.
  ராகு,கேதுகள் என்று கிரகங்களே கிடையாது என்று வானியல் விஞ்ஞா னம் கூறுகிறதே - இதி லிருந்து இவை எல்லாம் வெறும் கற்பனைகள், அசல் மூடநம்பிக்கைகள் என்று தெரியவில்லையா?

  Read more: http://viduthalai.in/page1/96133.html#ixzz3S0yPdJvL

  தமிழ் ஓவியா said...

  இன்றைய ஆன்மிகம்?

  தோஷம் விலக

  ராகு கேதுகள் தோஷம் விலக திருநாகேஸ்வரம் கீழப் பெரும் பள்ளம், காளகஸ்தி போன்ற ஆலயங்களுக்குச் சென்று பூஜை செய்து விரதம் இருப்பது நன்மை தருமாம்.
  ராகு,கேதுகள் என்று கிரகங்களே கிடையாது என்று வானியல் விஞ்ஞா னம் கூறுகிறதே - இதி லிருந்து இவை எல்லாம் வெறும் கற்பனைகள், அசல் மூடநம்பிக்கைகள் என்று தெரியவில்லையா?

  Read more: http://viduthalai.in/page1/96133.html#ixzz3S0yPdJvL

  தமிழ் ஓவியா said...

  புறப்படுங்கள் தோழர்காள்!


  தோழர்களே! திராவிடர் கழகத் தலைமைச் செயற் குழுக் கூட்டம் கழகத் தலைவர் தலைமையில் நேற்று சென்னை யில் கூடி முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

  குறிப்பாக - சிறுகனூரில் பெரியார் உலகம் நிர்மாணம் பற்றிய தீர்மானமும், கூட்டத்தில் கழக தலைவர் எடுத்துக் கூறிய கருத்துக்களும் தகவலும் குறிப்பிடத்தக்கவை.

  தகவல் தெரிந்த காலந்தொட்டு திராவிடர்களின் வரலாறு - தமிழர்களின் வரலாறு ஆரியக் காரிருளால் சூழப்பட்டதைத் தான் அறிய முடிகிறது.

  நாம் ஓர் இனம் என்ற எண்ணம்கூடச் சிறிதுமின்றி ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பால், நாலாயிரம் ஜாதிகளாகக் கூறு போடப்பட்டு, சூத்திரர்களாக - பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்களாக ஆக்கப்பட்டோம்.

  கூலிகளாக, பார்ப்பன மேலாண்மைக்கு வடித்துக் கொட்டும் கீழ் மக்களாக, கல்விக் கண் பிடுங்கப்பட்ட குருடர்களாக, முழங்காலுக்கு மேல் வேட்டி கட்டிட உரிமையற்றவர்களாக, சேற்றில் கிடந்து உழன்றாலும் முழு வேளைச் சோற்றுக்கு வக்கில்லாத, ஏதும் கெட்ட மக்களாக ஆக்கப்பட்ட இனத்திற்கு,

  தன்மானம் ஊட்டி, நீ புழுவல்ல - நீயும் மனிதன்தான், உன்னிடமும் பகுத்தறிவு குடி கொண்டு இருக்கிறது - அதனை வெளியில் கொண்டு வா! அய்ந்தறிவு - பன்றியும், ஆறறிவு மனிதனும் ஒன்றா? நீ இந்த நாட்டுக்குச் சொந்தக்காரன் அல்லவா! நீ எப்படி இன்னொரு இனத்தின் கால் மாட்டில் தஞ்சம் அடைத்து கிடக்கிறாய்?

  தமிழ் ஓவியா said...


  விழி, எழு, வேகமாக நடைபோடு என்று விசை யொடிந்த சமூகத்திற்கு விவேகத்தையும், வீரத்தையும் ஊட்டி, நாம் ஓரினம் - ஜாதி நம்மைப் பிளக்கிறது - அது நம்முடையது அல்ல - அது ஆரியச் சூழ்ச்சி என்ற உன்னத உணர்வினைத் தாய்ப் பாலாக ஊட்டி, தாயினும் சாலப் பரிந்து நம்மைப் புரந்த - ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உலகத் தலைவர் தந்தை பெரியாருக்கு நிரந்தர நினைவுச் சின்னம் ஒன்றை நிர்மாணிக்கிறோம் என்றால், அது என்ன சாதாரணமானதா?

  தந்தை பெரியார் காலத்தில் நாம் வாழ்ந்தோம் - நேரிடையாகப் பலன் பெற்றோம் என்பதற்கு அடையாள மாக நமது நன்றி உணர்வை நீராகப் பாய்ச்சி அந்த நினைவுச் சின்னப் பயிரை செழித்தோங்கச் செய்ய வேண்டாமா?

  நம் கையில் நிதியில்லை. ஆனால் சமூக நீதி என்னும் பெருஞ்செல்வம் இருக்கிறது; அந்த நீதி என்னும் ஒளி விளக்கைக் கையில் ஏந்தி, அந்தத் தலைவரால் உரிமையும் நலனும், பலனும், பெற்ற நம் மக்கள் மத்தியிலே ஊடுருவுவோம்! உரிமையோடு அவர்களைக் கேட்போம் - நம்மை வாழ வைத்த வள்ளலுக்கு வரலாற்றுச் சின்னம் சமைக்க ஆதரவு தாரீர் - இயன்ற நிதியைத் தாரீர்! காலத்தை வென்று நிற்கும் காலந்தந்த தலைவருக்கு எடுக்கப்படவிருக்கும் காலக் கல்வெட்டாம் தந்தை பெரியார் 137 அடி உயர சிலை அமைப்பில் உங்கள் பங்கும் இருக்க வேண்டாமா!? என்ற உரிமையோடு கேளுங்கள் தோழர்களே, கேளுங்கள்!

  நம் முயற்சியிலும், உழைப்பிலும் கோரிக்கையின் தன்மையிலும்தான் இருக்கிறது நிதி திரட்டுவது.

  பத்துக் கோடி தமிழர்கள் ஆளுக்குப் பத்து ரூபாய் கொடுத்தாலே போதுமே - நூறு கோடி நம் மடியில் வந்து விழாதா? மலைக்க வேண்டாம் - தயங்க வேண்டாம் - நாம் எடுத்துச் செல்லும் பிரச்சினை - கோரிக்கை எத்தகையது என்பதன் அருமையை உணர்ந்தால் திட்டமிடும் நிதி வந்து சேர்வதில் கடினம் இருக்காது.

  முதற்கட்ட நிதியை ஓரளவு சேர்த்தோம் - நிலுவையில் இருந்தால் அதனையும் முடிக்க வேண்டும். அடுத்த கட்ட நிதி சேர்க்க தலைமைக் கழகத்தின் சார்பில் நன்கொடைப் புத்தகங்கள் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களிடம் அளிக்கப்பட்டு விட்டன.

  பெரியார் உலகம் உருவாக்கும் பணி தொடங்கப்பட்டு விட்டது. வரும் 20ஆம் தேதி ஆரம்பப் பணிக்காக அலுவலகம் அதே இடத்தில் இயங்கத் தொடங்குகிறது.

  பெருஞ் செல்வந்தர்கள்தான் நிதி கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். அன்றாடம் காய்ச்சிகளின் பங்களிப்புக்கூட அய்யா உலகத்தின் கணக்கில் வந்து சேர வேண்டாமா? அந்த மக்களுக்காகத்தானே நரைத்து, கிறங்கிய நிலையிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு, இரவு பகல் பாராமல் மணிக்கணக்கில் பேசினார், களங்கள் பல கண்டு காரா கிரகங்களை முத்தமிட்டார்.
  யார் இந்த பெரியார்? இதோ தந்தை பெரியாரின் தகைமை சால் நண்பர் திரு.வி.க. மொழியில் பார்ப்போமே!

  ஸ்ரீமான் நாயக்கர் செல்வமெனும் களியாட்டில் அயர்ந்தவர், உண்டாட்டில் திளைத்தவர், வெயில் படாது வாழ்ந்தவர். ஈரோட்டு வேந்தரென விளங் கியவர் என்றாரே தமிழ்த் தென்றல் திரு.வி.க.

  வெயில் படாது வாழ்ந்த அந்த வேந்தர்தான் வறியர் போன்ற தோற்றத்தில் வெயிலும், மழையுமே தனது குடை என்று ஓடி ஓடி உழைத்தாரே. திண்ணை வீட்டில் - இட்லி வாங்கிச் சாப்பிட்டு ஊர் ஊராக அலைந்தாரே - அந்த உழைப்பின் அறுவடையில் தானே நம்மினம் தலை நிமிர்ந்தது. சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு கட்டத்தில் சொல்லும் வற்றிப் போய் விடும்! காரணம் அவர்தம் தொண்டின் ஆழமும், அகலமும், உயரமும் தொலைவும் நீண்டு கொண்டேபோகக் கூடியது!

  நீடு துயில் நீக்க வந்த அந்தப் பகுத்தறிவுப் பகல வனுக்கு, நம்மை வாழ வைத்த தாயுமானவருக்குத் தமிழர்கள் தங்கள் பங்கைச் செலுத்த வைக்கும் பணிதான் நம் பணி!

  தோழர்களே, தூக்கம் தொலைத்தாவது, உணவைத் துறந்தாவது நமக்கு மன நிறைவைத் தரும் இந்த ஒப்பரிய பணியில் ஒப்படைத்துச் செயல்படுவோம்! நம் தலைவர் மனம் மகிழ்வின் மூலம் அவர்தம் ஆயுள் நீள்வதற்கான இந்த மூலத்தின் ரகசியத்தை உணர்ந்து உழைப்பைக் கொட்டி, வெற்றிக் கொடியைப் பறக்க விடுவோம்! வாருங்கள், கருஞ்சட்டைத் தோழர்களே, நம் தமிழர் தலைவரின் நூற்றாண்டு விழாவை அவரையே அழைத்து பூத்துக் குலுங்கும் இந்தப் பெரியார் உலக வளாகத்தில் நடத்துவோம்! நம் கழகத் தலைவர் எத்தனை எத்தனையோ சாதனைச் சிகரங்களைப் படைத்துள்ளார்! இந்தச் சாதனை - அந்தச் சிகரத்தின் உச்சியில் பறக்கும் வெற்றிக் கொடியாகட்டும்!

  நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது; வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்பது வெறும் சொல்லழகு அல்ல - செயலழகு என்பதைக் காட்டுவோம் - புறப்படுவீர் கம்பீரமாக!

  தன்னம்பிக்கை தானே நமக்கு எப்பொழுதும் பெருந்துணை!

  Read more: http://viduthalai.in/page1/96120.html#ixzz3S0zfGhb4

  தமிழ் ஓவியா said...

  உங்களுக்கு தெரியுமா?

  -தந்தை பெரியார்

  சூத்திரன் பார்ப்பானைக் கடவுளாகக் கொண்டு தவம் செய்யாமல் கடவுளை நினைத்துத் தவம் செய்வதற்காக, ராமன் சம்புகன் என்ற சூத்திரனைச் சித்திரவதை செய்து கொன்றான். அதாவது சூத்திரனுக்கு (திராவிடனுக்கு) கடவுள் பார்ப்பான்தான். பார்ப்பானைக் கடவுளாகக் கொண்டு வணங்காதவனைப் பார்ப்பான் அரசன் கொல்ல வேண்டும். இது இராமாயண தர்மம் மாத்திரமல்லாமல் மனுதர்மமுமாகும். எனவே இராமாயணம் இருக்க வேண்டுமா?

  **************
  பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய நான்கு ஜாதிகளை நான் படைத்தேன் என்றும், பிராமணனுக்குச் சூத்திரன் அடிமைப்பணி செய்ய வேண்டும்; செய்யாவிட்டால் நரகத்தில் புக வேண்டும் என்பதாகவும் பாரதத்தில் (கீதையில்) கிருஷ்ணன் சொல்லி இருக்கிறான். எனவே பாரதம் இருக்க வேண்டுமா?

  **************

  சூத்திரன் என்பவன் தாசி புத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன். இதுதான் மனுதர்மம்; மனுதர்ம மாத்திரமல்ல, இந்து லாவும் இப்படித்தான் சொல்லுகிறது.

  Read more: http://viduthalai.in/page1/96149.html#ixzz3S10MOE7L

  தமிழ் ஓவியா said...

  இராமாயணம் கட்டுக்கதையே! சி.ஆர்.

  விடுதலையின் பிரச்சாரத் தொண்டு வெகு விரைவில் மாற்றுக் கொள்கையுடைவர்களையும் விழிப்புறச் செய்வதற்கு நல்ல சான்றுகள் கிடைத்து வருகின்றன.

  அதில் வெளிவரும் புராண சாஸ்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆஸ்திகப் பிரசாரகர்களே அவ்வாராய்ச்சியிற்கண்ட உண்மைகளை ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கின்றன. உண்மையான பகுத்தறிவு பிரச்சாரத் தொண்டுக்கே உயர்வு கிடைக்கும் என்பதும் தெளிவாகிறது.

  மதுரையில் பேசிய முதலமைச்சர் ஆச்சாரியார், திராவிடத் தலைவர் பெரியாரைக் குறிப்பிட்டு அவர்கள் இருவரிடையேயும், பழங்காலமிருந்தே நிலவிவரும் சிறப்பான நட்பும், பெரியார் அவர்கள் நாட்டுப்பணியில் தீவிர சிரத்தையுடன் முந்தை நாளிலிருந்தே பாடுபடு வதையும் புகழ்ந்து கூறியிருப்பதுடன் பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் காணும் உண்மைகளை ஒப்புக் கொண்ட வகையில் கோயில்களின் புனிதத்தன்மை குறைந்திருப்பதையும்,

  இராமாயணம், ஓர் கட்டுக்கதை யென்றே சொல்ல வேண்டுமென்றும், தர்மம் என்பதே மனச்சான்றுக்குச் சரியெனப் படுவதுதானென்றும், அக்காலத்தில் மக்களிடம் குடிகொண்டிருந்த ஒழுக்கக் குறைபாடுகளைப்பற்றி கவி வாணரால் சித்திரிக்கப்பட்டது தான் ராமாயணம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

  Read more: http://viduthalai.in/page1/96149.html#ixzz3S10SLsAV

  தமிழ் ஓவியா said...

  திருடர்க்கு அழகு திருநீறணிதல்!

  திருநீறு என்றால் என்ன? எதற்காக அதை நெற்றியில் இடுவது? இடுகிறவர்கள் அதை என்ன கருத்தோடு இடுகிறார்கள்? என்கின்ற விஷயங்களை யோசித்துப் பார்த்தால் திருடர்க்கு அழகு திருநீறடித்தல் என்பது நன்றாய் விளங்கும்; இல்லாவிட்டால் மூடர்க் கழகு திருநீறடித்தல் என்பதாவது விளங்கும்.

  எப்படியெனில், திருநீறு என்பது சாம்பல். அதை இடுவதால் கடவுளின் அருளைப் பெறலாம் என்று அதை இடுகின்றவர்கள் கருதுவதும், தாங்கள் எவ்வளவு அக்கிரமக்காரர் ஆனாலும் திருநீறிட்ட மாத்திரத்திலே சகல பாவமும் போய்க் கைலாயம் சித்தித்து விடும் என்று நினைப்பதுமேயாகும்.

  இதற்கு ஆதாரமாக திருநீறின் மகிமையைப் பற்றிச் சொல்லுகின்ற பிரமோத்திர காண்டம் என்னும் சாஸ்திரத்தில் ஒரு பார்ப்பனன் மிக்க அயோக்கியனாகவும், கொலை, களவு, கள், காமம், பொய் முதலிய பஞ்சமாபாதகமான காரியங்கள் செய்து கொண்டே இருந்து ஒருநாள் ஒரு புலையனான சண்டாளன் வீட்டில் திருட்டுத்தனமாய் அவன் மனைவியைப் புணர்ந்ததாகவும்,

  அந்தச் சண்டாளன் இதை அறிந்து அந்தப் பார்ப்பானை ஒரே குத்தாகக் குத்திக் கொன்று அப்பிணத்தை சுடுகாட்டுக்குப் பக்கத்தில் கொண்டு போய் எறிந்து விட்டதாகவும், அந்தப் பார்ப்பனனை அவன் செய்த பாவங்களுக்காக எமதூதர்கள் கட்டிப் பிடித்து கும்பிபாகம் என்னும் நரகத்தில் தள்ளிக் கொண்டு போனதாகவும், அந்தச் சமயத்தில், சிவகணங்கள் இரத்தின விமானத்துடன் வந்து அந்தப் பார்ப்பனனை எமதூதர் களிடமிருந்து பிடுங்கி இரத்தின விமானத்தில் வைத்து, கைலாயத்திற்குப் பார்வதியிடம் கொண்டு போனதாகவும்,

  எமன்வந்து, இவன் மகாப்பாவம் செய்த கெட்ட அயோக்கியப் பார்ப்பனனாயிருக்க நீங்கள் கைலாயத்திற்கு எப்படி கொண்டு போகலாம்? என்று வாதாடினதாகவும், அதற்கு சிவகணங்கள் இந்தப் பார்ப்பான் மீது சற்றுத் திருநீறு பட்டுவிட்டதால் அவனுடைய பாவம் எல்லாம் ஒழிந்து அவன் மோட்சத்துக்கு அருகனானதனால் பரமசிவன் எங்களை அனுப்பினார் என்று சொன்னதாகவும்,

  அதற்கு எமன் சித்திரபுத்திரன் கணக்கைப் புரட்டிப் பார்த்து இந்தப் பார்ப்பான் ஒரு நாளும் திருநீறு பூசவில்லை, ஆதலால் இவனுக்கு மோட்சத்தில் இடமில்லை என்று சொல்லி வாதிட்டதாகவும், அதன் மீது சிவகணமும் எமகணமும், எமனும் சிவனிடம் சென்று இவ்வழக்கைச் சொன்னதாகவும், பிறகு சிவன் இந்தப் பார்ப்பான் உயிருடன் இருக்கும் வரை மகாபாதகங்கள் செய்திருந்தாலும் இவனைக் குத்திக் கொன்று சுடுகாட்டில் இவன் பிணத்தை எறிந்த விட்டபோது,

  மற்றொரு பிணத்தைச் சுட்ட சாம்பலின்மீது நடந்து வந்த ஒரு நாய் இவனது பிணத்தைக் கடித்துத் தின்னும் போது அதன் காலில் பட்டிருந்த அந்தச் சாம்பலில் கொஞ்சம் பிணத்தின் மீது பட்டுவிட்டதால், அவனுக்குக் கைலாயத்தில் இடம் கொடுக்க வேண்டியதாயிற்று என்று சொல்லி எமனைக் கண்டித்து அனுப்பி விட்டுப் பார்ப்பானுக்கு மோட்சம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

  ஆதலால் திருநீறு எப்படியாவது சரீரத்தில் சிறிது பட்டுவிட்டால் எப்படிப்பட்ட அயோக்கியர்களுக்கும் மோட்சம் கிடைக்குமென்று சிவன் சொல்லி இருப்பதைப் பார்த்து நமது சைவர்கள் திருநீறு அணிகின்றார்கள். அந்த சாஸ்திரத்தின் அடுத்த அத்தியாயத்தில் திருநீறு அணியும் விதம், இடங்கள் எல்லாம் குறிப்பிட்டு இதில் எழுதக் கூடாத படுபாதகங்கள் செய்வதனால் ஏற்படும் பாவங்கள் எல்லாம் நீங்குமென்றும் அவன் பிதுர்க்கள் செய்த பாவங்கள் கூட நீங்கி நரகத்திலிருந்தாலும் சிவனிடத்தில் சேர்வார்கள் என்றும் எழுதப்பட்டிருக்கின்றது.

  இவை பிரமோத்திர காண்டம் 14ஆவது 15ஆவது அத்தியாயத்தில் உள்ளது. இந்த ஆதாரத்தை நம்பி மோட்ச ஆசையால் திருநீறு அணிகின்றவர் திருடராகவாவது, அதாவது பேராசைக்காரராகவாவது, மூடராகவாவது இருக்காமல் வேறு என்னவாக இருக்கக் கூடும்? என்பதை யோசித்துப் பார்க்கக் கோருகிறோம்.

  - விடுதலை 29.12.1950

  Read more: http://viduthalai.in/page1/96150.html#ixzz3S10a2KjD

  தமிழ் ஓவியா said...

  வேடிக்கை வாதம் போலி சயின்ஸ்

  சுயமரியாதைக்காரர்.: மாட்டுச் சாணியை உருட்டி கொளுக்கட்டை போல் ஆக்கி சாமியாக வைத்துக் கும்பிடுகிறார்களே இதன் காரணம் என்ன? அந்தச் சாணி நாற்றமடிப்பதில்லை என்கின்ற காரணம் தானே?

  பார்ப்பான்: ஓய் உமக்கென்னங்காணும் தெரியும்? பசுஞ்சாணியில் ஜர்ம்ஸ் (பூச்சி)களைக் கொல்லும் சக்தி இருக்கிறது ஓய்.

  சு.ம.: இது எந்த டாக்டர் சொன்னார் உமக்கு? அல்லது இது எதிலிருக்கிறது?

  பார்ப்பான்: ஓய், ஓய், இந்தக் காலத்து டாக்டர்களை யெல்லாம் விட, இந்தக் காலத்து சைன்ஸ் புத்தகங்களை யெல்லாம் விட, அந்தக்காலத்துப் பெரியவாளும், சாஸ்திரங்களும் எவ்வளவோ மேலானது. தெரியுமா? இதற்கெல்லாம் ஆதாரம் கேட்காதேயும், இப்படிக் கேட்டவர் வெகு பேருக்கு வாய் புளுத்துப் போய்விட்டது.

  சு.ம.: ஓ! ஓ! அப்படியா? பகுத்தறிவில்லாத மாட்டுச் சாணிக்கே ஜர்ம்சைக் கொல்லுகிற சக்தி இருந்தால் அதை விட உயர்ந்த பிறவியான பகுத்தறிவுள்ள மனுஷன் சாணிக்கு இன்னமும் என்ன என்னமோ சக்தி இருக்கலாமே: பின்னை அதை...

  பார்ப்பான்: சீச்சீ, நீர் என்ன? சுயமரியாதைக் காரராக்கும். உம்மிடம் யார் பேசுவார்?
  (குடிஅரசு 20.11.1943)

  Read more: http://viduthalai.in/page1/96151.html#ixzz3S10oAeZb

  தமிழ் ஓவியா said...

  கே.எம்.பணிக்கர் கூற்று!

  ஜாதி உணர்ச்சி பற்றி குற்றம் சாட்டும் பெரும்பாலோர் ஜாதிகளின் பிரதிநிதிகளாகவே இருந்தவர்கள்!

  ஒரு காலத்தில் அவர்கள் தங்கள் பகுதிகளில் அரசியல் ஆதிக்கத்தை ஏக போகமாக அனுபவித்து வந்தவர்கள். இன்று வயது வந்தோர்க்கு வாக்குரிமை என்பதன் அடிப்படையில் உள்ள மக்கள் ஆட்சியில் இதுவரை சமுதாயத்தில் செல்வாக்கும் அரசியல் ஆதிக்கமும் இழந்திருந்த மக்கள் தங்களுக்குச் சவால் விடும் அளவுக்கு உயர்ந்து விட்டனரே என்பதால்தான் ஜாதி உணர்ச்சி ஓங்கி விட்டது என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

  ஜனநாயக வழிமுறைகளினால் கீழ் ஜாதிக்காரர்கள் அரசியல் ஆதிக்கம் வகிக்கும் அளவுக்கு முன்னேறி வருவது இந்திய ஜனநாயகத்தில் மிகவும் வரவேற்கத்தக்கதொரு அம்சமாகும்.

  - ஜம்மு - காஷ்மீர் பல்கலைக்கழக துணை வேந்தர் கே.எம்.பணிக்கர், கருநாடகப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் 1962ஆம் ஆண்டு உரையாற்றியது.

  Read more: http://viduthalai.in/page1/96151.html#ixzz3S10vh9DC

  தமிழ் ஓவியா said...

  தமிழர் தலைவர் உரை

  தமிழர் தலைவர் ஆசிரியர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:

  நீண்ட இடைவெளிக்குப்பின்னாலே இந்த அனகா புத்தூருக்கு வரும்போது இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு ஏற்படுகிறது. தோழர்கள், நிறைய இளைஞர்கள் இந்த பகுதியில் இருக்கிறீர்கள்.

  தாம்பரம் மாவட்ட தோழர்களைப் பாராட்டவேண்டும். பழைய தோழர்கள் கொள்கை யாளர்களாக, உரம் பாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதிலே ஒன்றும் மாற்றம் இல்லை. ஆனால், ஆல மரம் பெரிய அளவில் பலத்தோடு மட்டும் இருந்தால் போதாது. அதனுடைய விழுதுகள்தான் அதை என்றைக்குமே பாதுகாக்கக் கூடியவைகள். நான் நினைத்துப் பார்க்கிறேன்.

  18 ஆண்டுகளுக்கு நம்முடைய ரங்கசிவா, சுப்பிரமணியம் போன்ற தோழர்கள் இந்தப் பகுதிக்கு எங்களை அழைத்தபோதெல்லாம் கொஞ்சம் எதிர்ப்புக்குர லெல்லாம்கூட வரும். எதிர்ப்பு வரும்போதெல்லாம் எங்களுக்கு உற்சாகம் வரும். அந்த வகையிலேதான் இன்றைக்கு மிகப்பெரிய நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

  இந்த மாநாட்டுக்குத் தலைப்பு திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு என்று போட்டிருக்கிறோம். இதுமாதிரி மாநாடுகள் 2000 மாநாடுகளை தமிழ்நாடு முழுக்க பட்டி,தொட்டியெல்லாம் நடத்த வேண்டும். அதன்மூலம் திராவிடர்களை விழிக்க வைக்க வேண்டும். கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னாலே ஏமாந்தவர்கள், மீண்டும் விழிப்பை இப்போது டில்லியிலிருந்து ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

  ஆகவே, இங்கிருந்து செல்ல வேண்டியதற்குப் பதிலாக அங்கிருந்து வருகிறது. எங்கிருந்து வந்தாலும் பெரியார் எல்லா இடத்திலும் பரவலாக இப்போது பயணம் செய்துகொண்டிருக்கிறார் என்பதற்கு அடையாளமாகத்தான் அந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

  எனவே ஒருசில கருத்துகளை 40 மணித்துளிகளிலே சொல்ல முடியாது. அதற்காகத்தான் ஏராளமான புத்கங்களை இங்கே கொண்டுவந்திருக்கிறோம். தந்தை பெரியார் அவர்களுடைய காலத்திலிருந்தே புத்தகங்களைக் கொண்டு வந்து மக்கள் மத்தியிலே பரப்புவது என்பது வியாபாரத்துக்காக அல்ல. இந்த புத்தகங்களுடைய விலையைப் பார்த்தாலே தெரியும் இது.

  லாபத்துக்காக விற்கப்படுவது அல்ல. நாங்கள் சொல்லுகிற கருத்துகள் எவ்வளவு ஆதாரபூர்வமானவை, எவ்வளவு உண்மையானவை, மக்களுக்கு மறைக்கப்பட்ட இது வரையிலும் தெரிவிக்கப்படாத கருத்துகள் என்பதை விளக்கு கின்ற வகையிலேதான், ஆதாரங்களை அள்ளித்தருகின்ற வகையிலேதான் இந்தப் புத்தகங்கள் இங்கே கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

  நீங்கள் எல்லோரும் இந்தப்புத்தகங்களை வாங்க வேண்டும். வாங்கினால் மட்டும் போதாது, படிக்க வேண்டும். படித்தால் மட்டும் போதாது மற்றவர்களுக்குக் கொடுத்துப் பரப்பவேண்டும். ஏனென்றால், நம்முடைய தகவல்கள் உண்மைகள் இன்னும் போய்ச் சேரவில்லை. அதனாலே நம்முடைய நிலைமை என்ன என்று தெரியாமல் இருக்கிறார்கள். நம்முடைய பொருளையே இன்னொருவன் திருடி, நம்மிடையே விற்கிறான்.

  அதை அவனுடைய பொருள் என்று நினைக்கின்ற அளவுக்கு இருக்கிறோம். ஆகவேதான் பல கருத்துகளை மக்களுக்கு விடாமல் நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டிய மகத்தான பொறுப்பு நம்மிடத்திலே இருக்கிறது. அதில் செய்கின்ற பணிகளாகத்தான் 2000 மாநாடுகளைப்போடுவதற்கு கடந்த சேலம் பொதுக் குழுவிலே நாங்கள் இதை முடிவு செய்தோம். தந்தை பெரியார் நினைவு நாளிலிருந்து முதல் மாநாடே சென்னையிலிருந்து தான் ஆரம்பித்தது.

  அதுவும் எம்.ஜி.ஆர். நகரில் தொடங்கி யது. 40 நாள்களுக்குள்ளே திருவள்ளூரிலே தொடங்கி கன் னியாகுமரி வரையிலும் 46 மாநாடுகள் நடந்து முடிந்துள்ளன. திராவிடர்கழகம் தேர்தலுக்கு நிற்கின்ற இயக்கம் அல்ல. உண்மையை வெளிப்படுத்தக்கூடிய இயக்கம்.

  தாத்தா காலத்தில் படம் எடுக்கும் பழக்கம் கிடையாது. பாட்டி படம் எடுத்துக்கொள்ள வரமாட்டார்கள். மூட நம்பிக்கை நம் நாட்டில் புகுந்து அறியாமை ஆட்சி புரிந்த காலம். அப்படி படம் எடுத்தால் ஆயுள் குறைந்துவிடும் என்பார்கள்.

  தமிழ் ஓவியா said...

  இப்போது கேமரா தனியாக வாங்குவதில்லை. கையளவு செல் பேசியிலேயே பல விசயங்கள் அடங்கிவிட்டது. கடிகாரம், காலெண்டர், ஒலிப்பதிவு, போட்டோ எடுப்பது என்றுஎல்லாமே அதிலேயே இருக்கிறது. நான் இருக்க ஒருகுறையும் இல்லை என்று இருக்கிறது. துணைக்கும் அதுதான் இருக்கிறது.

  இதை தந்தை பெரியார் அவர்கள் 60 வருசத்துக்கு முன்னாலேயே இனிவரும் உலகம் என்கிற புத்தகத்தில் கூறியிருக்கிறார்கள். கையடக்கக் கருவியில் உருவம் காட்டி, உருவத்தைப் பார்த்துப் பேசலாம் என்றார். இப்போது ஸ்கைப் என்று வந்துவிட்டது. அதையும் பார்ப்பனர்கள் பயன்படுத்துகிறார்கள். மயிலாப்பூரில் பார்ப்பனர் ஸ்கைப்பில் மந்திரம் சொல்கிறார். நியூயார்க்கில் திருமணம் நடக்கிறது. அப்படி அறியாமையை வளர்க்க பயன் படுத்துகிறார்கள்.

  தாத்தா படம் இல்லை என்றால் ஓவியக்காரர்கள் வரை வார்கள். பின்னர் கேமராவால் படங்கள் எடுக்கிறார்கள். புகைப் படக்காரர்கள் அழகுபடுத்துகிறார்கள். இன்னொரு கேமரா படம் உடைந்த எலும்பை உடைந்ததாகவே காட்டும். இதயத்தில் ஓட்டை இருந்தால் உடைந்ததாகவே காட்டும். அதில் கொஞ் சம் டச் பண்ணிக் கொடுங்கள் என்று யாராவது கேட்டால் என்ன ஆகும்? அதனுடைய வேலை என்ன? உடைந்ததை உடைந்ததாகவே காட்டினால்தான் சிகிச்சை நடக்கும்.

  அதுமாதிரி இந்த நாட்டிலே ஓவியக்காரர்களாக இருக்கின்ற கட்சிக்காரர்கள் உண்டு. புகைப்படக்காரர்களாக இருக்கின்ற அரசியல் கட்சிக்காரர்கள் உண்டு. இவர்கள் மத்தியிலே திராவிடர் கழகம் எக்ஸ்-ரே போன்றது பெரியார் இயக்கம். உள்ளதை உள்ளபடி காட்டும் எக்ஸ்-ரே படம்போல், நம்மை சூத்திரன் என்று எழுதிவைத்திருக்கிறான் என்றால், அப்படியே எடுத்துக் காட்டுவதாகும். உலகத்திலே தந்தை பெரியார் ஒருவர்தான் கேட்டார்.

  இந்த இயக்கம் இன்றைக்கும் கேட்கிறது, இன்றைக்கும் அந்த சூழ்நிலை இருக்கிறது. இந்த இயக்கம் இல்லையென்றால், மறுபடியும் அது இறுகும். இந்த இயக்கம் இல்லை என்றால், திராவிடர் இயக்கம் இல்லை என்றால், இந்த அணிகள் இல்லை என்றால் என்ன ஆகும்? நாம் துண்டு தோளின்மேல் போட முடியாது. முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்டமுடியாது.

  தமிழ் ஓவியா said...


  நம் முடைய தாய்மார்கள், சகோதரிகள் மார்பை மறைத்து ரவிக் கைப் போட முடியாது. 120 ஆண்டுக்கு முன்னாலே ரவிக்கை போடுவதற்கு போராடும் நிலை தோள்சீலைப் போராட்டம் நடத்தி வெள்ளைக்காரன் வந்ததற்கு பின்னாலேதான் ரவிக்கைப்போடுவதற்கு உரிமையைக் கொடுத்திருக்கிறான். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்கள் இதற்காகப் போராடும் நிலை இருந்தது.

  அந்த அளவுக்கு கொடுமைக்கு ஆளாக்கி, அறிவற்ற மக் களாக்கி, படிக்கக்கூடாத மக்களாக்கி, தொடக்கூடாத மக் களாக்கி வைத்திருந்தான். ஆகவே திராவிடர் விழிப்புணர்வு மாநாடு என்பது எதற்காக? ஏன் விழிப்புணர்வு வேண்டும்? இன்னமும் தூங்கக் கூடாது. இந்த நாட்டிலே இன்னமும் நாம் ஏமாற வேண்டும் என்று நினைக்கிறார்கள். மயக்க மருந்தைக் கொடுக்கவேண்டும என்று நினைக்கிறான். பக்திப்போதை என்று வந்த உடனே, பக்தியினாலே புத்தியை இழக்கிறான்.

  ஒன்பது மாதங்களுக்கு முன்னாலே அரசியலிலே நாங்கள் சொன்னோம். மோடி புதிதாக வந்து வளர்ச்சி, முன்னேற்றம் என்றெல்லாம் வித்தைக்காட்டுகிறார் என்றோம். ஆனால் அவர் யாரால் இயக்கப்படுகிறார் என்பதுதான் முக்கியம். ஆர்எஸ்எஸ், சங் பரிவார், இந்துத்துவா அமைப்புகள் தேர்தலில் நிற்பதில்லை என்று சொல்வார்கள். ஆனால், இந்தமுறை வெளிப்படை யாகவே அவர்கள்தான் இயக்கினார்கள். அப்படி பொம் மலாட்டம்போல் மோடியைக்காட்டினார்கள்.

  எதைக்கொடுத்தாலும் கீழ்ஜாதிக்காரனுக்கு, சூத்திரனுக்கு, பஞ்சமனுக்கு கல்வியைக் கொடுக்கக்கூடாது என்று கூறினார்கள். அதை மாற்றிச் செய்தவர் தந்தை பெரியார். இதை இப்போதுள்ள இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தந்தை பெரியார் பணி சமூகப் புரட்சிப் பணி.
  ராணுவம், காவல்நிலையம், தீயணைப்பு நிலையம், பள்ளிக் கூடம், மருத்துவமனை ஆகியவைகளில் ஜாதி, மதங்கள் கிடையாது. பொதுவானவையாகும்.

  அதேபோலத்தான் திராவிடர் கழகம் அறியாமையைப் போக்கக்கூடிய பள்ளிக்கூடம். ஜாதி நோயை, மத வெறியை, பெண்ணடிமையைத் தீர்க்கக்கூடிய மருத்துவமனை, கலவரத்துக்கு முற்றப்புள்ளி வைக்கும் தீ அணைப்புப்படை மதவெறி மாய்ப்போம் மனித நேயம் காப்போம் என்று சொல்கிற இயக்கம். திராவிடர் கழகம் பொதுவானது. கருப்புச்சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்.

  மூச்சுக்காற்றின் அவசியம் எப்போது தெரியும்? மூச்சுவிட சிரமம் ஏற்படும்போதுதான் தெரியும். திராவிடர்கழகம் மூச்சக்காற்று மாதிரி உள்ள இயக்கம். அடுத்த தேர்தலைப்பற்றி கவலைப்படுபவர்கள் அல்ல, அடுத்த தலைமுறையைப்பற்றி கவலைப்படும் இயக்கம். எனவே அறிவை விரிவு செய்யுங்கள்.

  தன்மானம் பெறுங்கள். சமுதாயத்திலே மதவெறியை மாய்த்து, மனிதநேயத்தைக் கொள்ளுங்கள். தமிழர்களே, தமிழர்களே, ஜாதியால், கட்சிகளால், மதங்களால் பிரிந்திருக்காதீர்கள். மனித நேயத்தோடு ஒன்றுபடுங்கள் கைகோர்த்து நில்லுங்கள்.

  -இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

  Read more: http://viduthalai.in/page1/96155.html#ixzz3S11BrfiN

  தமிழ் ஓவியா said...

  திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்

  2015ஆம் ஆண்டுக்கான கழகப் பிரச்சார திட்டங்கள்
  மதவாதம், ஜாதீய வாதத்தை எதிர்த்து கழகம் நடத்தும் திராவிடர் விழிப்புணர்வு மாநாட்டால் பெரும் தாக்கம்

  ஏப்.28,29 நாட்களில் சென்னையில் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து மீட்டுருவாக்க மாநாடு - கருத்தரங்கம் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்


  சென்னை, பிப்.12- பெரியார் உலகம் உருவாக்கப் பணிகள் விரைவுப்படுத்தப் படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்படுகின்றன என்று சென்னையில் இன்று திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  2015ஆம் ஆண்டுக்கான வேலைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. தீர்மானங்கள் வருமாறு:

  சென்னை பெரியார் திடலில் துரை. சக்கரவர்த்தி நிலையத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் திராவிடர் கழகத் தலைமைச் செயற் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

  தீர்மானம் எண் 1. இரங்கல் தீர்மானம் நெல்லை மண்டல திராவிடர் கழகத் தலைவர் பொறியாளர் சி.மனோ கரன் (வயது 65 - மறைவு 9.1.2015), கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் காவேரிப் பட்டணம் மு.தியாகராசன் (வயது 70 - மறைவு 1.2.2015) பகுத்தறிவு நடிகர் செல்லத்துரை ஆகியோரின் மறைவிற்கு இக்கூட்டம் தனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர் களின் கடந்தகால இயக்கச் செயல்பாடுகளுக்கு வீரவணக்கம் செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

  தீர்மானம் எண் 2

  2015ஆம் ஆண்டுக்கான கழக வேலைத் திட்டம் குறித்து சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் (7.12.2014) அறிவிக்கப் பட்ட திட்டங்களை செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
  இயக்கப் பணியில் - 5 அம்ச திட்டங்கள்

  1. தமிழ்நாடு தழுவிய அளவில் கிராமங்களைக் குறியாகக் கொண்டு திராவிட விழிப்புணர்வு வட்டார மாநாடுகளை ஊராட்சி ஒன்றியம் ஒன்றுக்கு 4 திசைகளில் 4 கிராமங்கள் - ஒரு நகரம் என்ற அடிப்படையில் குறைந்த பட்சம் 2000 பிரச்சார திராவிட விழிப்புணர்வு வட்டார மாநாடுகளை நாடு தழுவிய அளவில் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

  2. ஜாதி - தீண்டாமை ஒழிப்புத் தீவிரப் பிரச்சாரக் கூட்டங்கள். (முதலில் கிராமப்புறப் பிரச்சாரம்) - கோடைக் காலங்களில் தீக்குண்டம் இறங்கும் செயல் விளக்கம் நிகழ்ச்சி, கிராமப் பிரச்சாரத்தின் போது கழகக் கொடிகளை ஏற்றுதல்.
  3.களப்பணிக்கு இளைஞர்களை களத்தில் இறக்கும் திட்டம். பெரிதும் மாணவர்கள், இளைஞர்கள் (முதியவர்களின் கண்காணிப்போடு). ஒரு குழு: வீடுகள்தோறும், கடைகள்தோறும் துண்டறிக்கைகளை வழங்குதல்.

  மற்றொரு குழு: பெரியார் உலகத்திற்கான உண்டியல் வசூல் மற்றும் 5 ரூபாய், 10 ரூபாய் என்ற வகையில் நன்கொடை ரசீதுகள் மூலம் நிதி திரட்டுதல்.

  4. கழக இளைஞர், மாணவர் பயிற்சிப் பட்டறை (இரண்டு நாட்கள்)

  5. மகளிர் அமைப்புகளை உருவாக்குதல் - பிரச் சாரம், கழக ஏடுகளுக்குச் சந்தா சேர்த்தல், பெரியார் உலகத்திற்கு நன்கொடை திரட்டுதல்.

  பிரச்சாரம்

  1. பிரச்சார நூல்கள் பற்றிய கருத்தரங்குகள் (பகுத்தறிவாளர் கழகம் - மற்றும் கழக அணியினர் இணைந்து)

  2. பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை, விற் பனைக்குப் புத்தகக் கண்காட்சி - (இந்தச் சந்தர்ப் பத்தில் அனைத்துக் கட்சிப் பிரமுகர்களையும் அழைத்துச் சிறப்புச் சொற்பொழிவுகள்)

  3. பெரியார் ஆயிரம் வினா - விடைப் போட் டிக்கு நிரந்தரத் தொண்டறப் பணிக்குழு - (Volunteer Corps)

  4. இணையதளம் மூலம் பிரச்சாரம் - பெரியாரை உலக மயமாக்கும் முயற்சி - புதுப்புது யுக்திகளில்.

  தமிழ் ஓவியா said...

  5. கலை, இலக்கியம், நாடகம், குறும்படங்கள்.

  6. ஒத்தக் கருத்துடையோர் ஒருங்கிணைப்பு.

  7. கழகத் தலைவரின் சிறப்புக் கூட்டங்கள் (நுழைவுக் கட்டணத்துடன் - பெரியார் உலகத்திற் காக - நாடு தழுவிய அளவில்) ஆகிய பணிகளைத் தீவிரமாக மேற்கொள்வது என்று தீர்மானிக்கப் படுகிறது.

  8. இவ்வாண்டுப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளையொட்டி சென்னை - பெரியார் திடலில் ஏப்ரல் 28, 29 ஆகிய நாட் களிலும் சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பு மாநாடு, பண் பாட்டுப் படையெடுப்பிலிருந்து மீட்டுருவாக்கம் - புத்துருவாக்கம் கருத்தரங்குகளை தமிழ் ஆய்வு அறிஞர் பெருமக்களை - கவிஞர்களை அழைத்து நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

  தீர்மானம் எண் 3

  சேலம் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தீர்மானித்தபடி திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாடுகள் மக்கள் மத்தியில் பேரெழுச்சியை உருவாக்கிக் கொண்டு வருகின்றன. மதவாத, ஜாதியவாத சக்திகள் தமிழ்நாட்டில் தலையெடுக் காமல் தடுப்பதற்கான உணர்வூட்டும் உந்து சக்தியாக இம்மாநாடுகள் நடைபெற்று வருவது மன நிறைவையளிக்கிறது. கழகப் பொறுப்பாளர்களும் ஆர்வத்துடன் மாநாட்டு ஏற்பாடுகளைச் செய்வ தற்கு இச்செயற்குழு பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது. தொடர்ந்து நடைபெற உள்ள மாநாடு களையும் சிறப்பாக ஏற்பாடு செய்யுமாறு கழகத் தோழர்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

  கோவையில் கடந்த ஜனவரி 30ஆம் நாள் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட காந்தி யார் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் மதச்சார் பற்ற கொள்கையுடைய கட்சிகளை ஒருங் கிணைத்து நடத்திய பொதுக்கூட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

  தமிழ் ஓவியா said...

  தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் மதவாத - இந்துத்துவா சக்திகள், ஜாதீயவாத சக்திகளை முறியடிக்க அரசியலுக்கு அப்பாற்பட்ட முறையில் திராவிடர் கழகம் மேற்கொண்ட இந்த வழிகாட்டும் நடைமுறைக்கு ஆதரவு தெரிவிப்பதாக கோவைப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் கட்சிகள் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். அக்கூட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்பில்லாத மதச் சார்பின்மையில், சமூகநீதியில் நம்பிக்கை யுள்ள கட்சிகளும் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

  தேர்தல் நோக்கத்திற்காக மட்டுமல்லாமல் இளைஞர்கள் மதச்சார்பின்மை, சமூகநீதியில் தெளிவுபெறவும், வழிகாட்டவும் இந்த ஒருங் கிணைப்புப் பெரும் அளவில் பயனளிக்கும் என்பதையும் இச்செயற்குழு தெளிவுபடுத்துகிறது.

  தீர்மானம் எண் 4

  பல்வேறு மயக்கம் தரும் உறுதிமொழி களைக் கொடுத்தும், பணபலம், பத்திரிகை பலம் கொண்டு வளரும் தலைமுறை யினரைத் தங்கள் வலைக்குள் சிக்க வைக்க இந்துத்துவ சக்திகள் பெரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் அந்த ஆபத்துகளிலிருந்து மாணவர்களையும், இளைஞர்களையும் தடுத்து நிறுத்தவும், அவர்களைப் பகுத்தறிவோடு திராவிடர் இயக்கச் சிந்தனையில் நிலைநிறுத்தவும் மாணவரணி அமைப்பையும், இளை ஞரணி அமைப்பையும் திட்டமிட்ட வகையில் பலப்படுத்தும் பணியில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

  தீர்மானம் எண் 5

  சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுவது தொடர்பாக நன்கொடை பெற்றுக் கொண்டுள்ள மாவட்டப் பொறுப் பாளர்கள் வசூலித்த நிதியையும், மீதி நன்கொடைப் புத்தகங்களையும் இம்மாத இறுதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாத நிலையில் மார்ச்சு முதல் தேதி முதல் பொதுச் செய லாளர்களும், அமைப்புச் செயலாளர் களும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று கணக்கினைப் பெறுவது என்றும் இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

  தீர்மானம் எண் 6

  காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பாடல்களை எந்தக் கார ணத்தை முன்னிட்டும் நீக்கக் கூடாது என்று இச்செயற்குழு கேட்டுக் கொள் கிறது. நீக்கினால் அனைத்துக் கட்சி களையும் திரட்டி பெரும் போராட்டத்தில் திராவிடர் கழகம் ஈடுபடும் என்றும் தெரிவித்துக் கொள்கிறது.

  தீர்மானம் எண் 7

  தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் தொடர்ந்து இழுத்து மூடப்படுகின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கான தொழி லாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படுவதால், தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் உடனடியாக இதில் தலையிட்டு தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற் கான வழிமுறைகளில் ஈடுபட வேண்டும் என்று இச்செயற்குழு வற்புறுத்துகிறது.

  தீர்மானம் எண் 8

  மீத்தேன் வாயு திட்டம் விவசாயத் தைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால் இந்தத் திட்டத்தைக் கைவிடுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
  தமிழ்நாடு அரசும் இதில் கவனம் செலுத்தி இத்திட்டம் ரத்து செய்யப்பட உரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

  கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகப் புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

  மு. துக்காராம் - மாவட்டத் தலைவர், தா.சுப்பிரமணி - மாவட்டத் துணைத் தலைவர், கோ. திராவிடமணி - மாவட்டச் செயலாளர், சு. வனவேந்தன் - மாவட்ட இணைச் செயலாளர், விஜயகுமாரி தியாகராசன் - மாவட்ட மகளிரணி தலைவர், கல்யாணி துக்காராம் - மாவட்ட மகளிரணி செயலாளர், பா. கண்மணி வனவேந்தன் - மாவட்ட மகளிரணி அமைப்பாளர்.

  மேற்கண்டவர்களைப் பொறுப் பாளர்களாக கழகத் தலைவர் அறிவித்தார்.

  Read more: http://viduthalai.in/page1/96075.html#ixzz3S11Y5JGs

  தமிழ் ஓவியா said...

  பாரதியார்

  இங்ஙனம் தமிழ் ப்ரதானம் என்று நான் சொல்வதால், டாக்டர் நாயரைத் தலைமை யாகக் கொண்ட திரா விடக் கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேச விரோதிகளுக்கு நான் சார்பாகி ஆர்ய பாஷா விரோதம் பூண்டு போகிறேன் என்று நினைத்து விடலாகாது.

  தமிழ்நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரத தேச முழுவதிலும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க.

  இன்னும் நம் பாரத தேசத்தின் அய்க்கியத் தைப் பரி பூரணமாகச் செய்ய நமது நாடு முழுவதிலும் வடமொழிப் பெயர்ச்சி மென்மேலும் ஓங்குக. எனினும் தமிழ் நாட்டில் தமிழ்மொழி தலைமை பெற்றுத் தழைத்திடுக இவ்வாறு பாரதி கூறுகிறார் (ம.பொ. சிவஞானம் எழுதிய பாரதியும் ஆங்கிலமும் பக்கம் 39-40) எப்பொ ழுதோ பாடினார் என்று அலட்சியப்படுத்தலாம்; ஆனால் அதனை இப் பொழுதும் கையாண்டுள் ளதால் தான் கவனிக்க வேண்டியுள்ளது.

  டாக்டர் நாயரைபற்றி பாரதி என்ன சொல்லு கிறார்? திராவிடக் கஷி யார் என்ற போலிப் புனைந்த தேச விரோதி என்கிறார்.

  இன்றைய ஆர்.எஸ்.எஸ். காரர்களும், பார்ப்பனர்களும் பார்ப் பனப் பாதந்தாங்கும் புல் லுருவிகளும் என்ன சொல்லுகிறார்களோ, அதையேதானே பாரதி யும் சொல்லியிருக்கிறார். இந்த வகையில் இவர் களுக்கெல்லாம் பாரதி யார் வழிகாட்டி என்று கூட தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள் ளலாம்தான்.

  திராவிடக் கஷியார் என்றும் போலிப் புனைப் பெயர் என்றும் கோபப் படும் பாரதி தனது பாடல்களில் எத்தனை எத்தனை இடங்களில் ஆரிய நாடு என்றும், ஆரியர் என்றும் கொக் கரிக்கிறார்.

  ஆரிய சாத்திர சம் பிரதாயங்களைத் தழுவி வாழ்வாராயின் அச்ச மொன்றும் இல்லை என்றெல்லாம் எழுத வில்லையா? ஆரிய மைந்தன் அகத்தியன் என்றெல்லாம் பாட வில்லையா?

  திராவிடர் என்பது பொய். ஆரியர் என்பது தான் மெய் என்று கூறு கிறாரா பாரதி?

  வேத முடைய திந்தநாடு - நல்ல
  வீரர் பிறந்திருந்த நாடு
  சேதமில்லாத ஹிந்துஸ்தானம் - இதைத்
  தெய்வமென்று கும்பிடடி பாப்பா
  என்று பாடியவன் தானே பாரதி.
  இன்னும் ஒருபடி மேலே சென்று லெனி னைப் பரம மூடன் என்று எழுதியவரும் இந்த முண்டாசுக் கவிஞன் தான்.

  பாரதியாக இருந்தா லும் சரி, விவேகானந்த ராக இருந்தாலும் சரி முற்போக்கும், பிற்போக் கும் கைகோர்த்துக் கொண் டிருக்கும் கலவை என்றே சொல்ல வேண்டும்.

  - மயிலாடன்

  Read more: http://viduthalai.in/page1/96071.html#ixzz3S11ei1u1

  தமிழ் ஓவியா said...

  இன்றைய ஆன்மிகம்?

  வேண்டுதல்

  கடவுள் எல்லாம் அறிந் தவன் தெரிந்தவன் என் றால், பக்தர்கள் எல்லாம் ஏன் அவனிடம் வேண்டு தலை செய்கிறார்கள் - நேர்த் திக் கடன் கழிக்கிறார்கள்?

  Read more: http://viduthalai.in/page1/96087.html#ixzz3S127IZTd

  தமிழ் ஓவியா said...

  உயிர் நாடி...

  மதங்களுக்கு உயிர் நாடியாயிருப்பது பிரச்சாரமும், பணமுமேயல்லாமல், அவற்றின் கடவுள் தன்மையோ, உயர்ந்த குணங்களோ அல்லவே அல்ல.

  - (விடுதலை, 1.4.1950)

  Read more: http://viduthalai.in/page1/96089.html#ixzz3S12Dp6st

  தமிழ் ஓவியா said...

  மாணவர்களை முட்டாளாக்க வேண்டாம்!

  பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் இருபால் மாணவர்களுக்கும் சிறப்பு வழிபாடு ஒன்று சென்னை சைதாப்பேட்டையில் காரணீஸ்வரர் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

  இந்தச் சிறப்பு வழிபாட்டில் பங்கு கொள்ள விரும்பும் மாணவர்கள் முன் கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டுமாம். இந்த வழிபாட்டில் பங்கு கொள்ளும் இருபால் மாணவர்களிடம் அகல் விளக்குகள் வழங்கப்படுமாம். அந்த அகல் விளக்கை ஏற்றி எங்கள் வாழ்வில் ஒளியேற்று இறைவா! என்று மாணவர்கள் வேண்டிக் கொள்ள வேண்டுமாம். அதன் பிறகு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கிட சிறப்பு வழிபாடு நடத்துவார்களாம். அதன் பிறகு பூஜையில் வைக்கப்பட்ட காப்புக் கயிறுகளை மாணவர்களுக்கு வழங்குவார்களாம்.

  இதனைப் படிக்கும் பொழுது, இந்த 21ஆம் நூற்றாண்டின் நுழைவு வாசலில் ஆன்மீகவாதிகள் எதிர்கால நம்பிக்கை ஒளி விளக்குகளின் கைகளில் அகல் விளக்கைக் கொளுத்தி கடவுளிடம் விண்ணப்பம் போட்டால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பாக வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல முன் வருகிறார்கள் - வெட்கக்கேடு!

  இது மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்குப் பதிலாக மூடநம்பிக்கையையும், சோம்பேறித்தனத்தையும் தானே வளர்க்கும்.

  கடவுளிடம் கையேந்தினால் தேர்வில் வெற்றி பெறலாம் என்ற பொய் நம்பிக்கையை மாணவர்களிடம் திணித்தால் அவர்கள் கல்வியில் எப்படிக் கவனம் செலுத்துவார்கள்? அன்றாடம் பாடங்களைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்படும்?

  அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும், தேர்வில் சிறப்பாக வெற்றி பெறுவதற்குமான அறிவார்ந்த வழிமுறைகள் உள்ளன. கல்வியாளர்கள் அதைப்பற்றி எல்லாம் எடுத்துக் கூறியுள்ளனர். அவற்றையெல்லாம் புறந்தள்ளி, அறிவுக்கு ஒவ்வாத முறையில் தவறான வழியில் மாணவர்களைத் திசை திருப்பலாமா!?

  மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும், சீர்திருத்த உணர்வை ஊட்ட வேண்டும். அது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51கி(பி) தெளிவாக, திட்டவட்டமாகக் கூறுகிறது.

  இந்த நிலையில், இதற்கு முற்றிலும் முரண்பாடாக மூடநம்பிக்கை வலைக்குள் மாணவர்களைச் சிக்க வைப்பது சட்டப்படி குற்றமல்லவா!? மாணவர்களின் எதிர் காலத்தை இருட்டறையில் தள்ளுவது குற்றம் அல்லவா?

  இது ஏதோ ஒரு மதப்பிரச்சினை என்று கருதி விடக் கூடாது; எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இது போன்ற வேலையில் ஈடுபட்டாலும் அது குற்றம் குற்றமே!

  இதுகுறித்து ஏடுகளும், இதழ்களும், ஊடகங்களும் விமர்சிக்க வேண்டாமா?

  ஆனால் நம் நாட்டு ஏடுகளும், இதழ்களும் ஊடகங்களும் ஆன்மீக மலர்களைத்தானே வெளி யிட்டுக் கொண்டு இருக்கின்றன. அவர்களுக்கு எதை விற்றாவது கல்லாப் பெட்டியை நிரப்ப வேண்டும் என்பதுதானே நோக்கம்.

  சரி, கல்வியாளர்கள் இல்லையா? அவர்கள் முன்வந்து கருத்துக்களைச் சொல்லக் கூடாதா என்று கேட்கலாம்; அப்படிச் சொல்லுவதற்கு முதுகெலும்பு வேண்டுமே, நமக்கு ஏன் வீண் வம்பு என்று ஒதுங்கிக் கொள்ளும் சுயநல கதகதப்பில் அல்லவா வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்!

  அரசியல்வாதிகள் கருத்துச் சொல்ல பெரும்பாலும் விரும்பாததற்குக் காரணம் இது கடவுளோடு, பக்தி யோடு சம்பந்தப்பட்டது என்பதால் வாக்கு வங்கியை நினைத்து வாய் மூடிக் கொள்ளும் நிலைதான்.

  கடைசியில் எங்கு வந்து நிற்கிறது என்றால், இது பகுத்தறிவாளர்கள் அதிலும் குறிப்பாக திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களின் பிரச்சினை என்று நினைத்து ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

  இதில் உண்மை நிலை என்னவென்றால் எதிர் காலத்தின் உலகை நிர்மாணிக்கக் கூடிய மாணவர்களை தன்னம்பிக்கையற்றவர்களாக ஆக்கி விடக் கூடாது என்று கருதுகிற ஒவ்வொரு வரும் சிந்திக்க வேண்டிய, தலையிட வேண்டிய ஒன்றாகும். இது வெறும் கழகப் பிரச்சினையல்ல.

  இதில் இன்னொரு கேள்வியும் உண்டு, தேர்வு களுக்குமுன் இப்படி வழிபாடு நடத்திய மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற்று விட்டனர் என்பதற்கான புள்ளி விவரங்கள் உண்டா?

  கடவுள் நம்பிக்கை இல்லாத மாணவர்கள் எல்லாம் தேர்வில் தோல்வி அடைந்து விடுகின்றனரா?

  பக்தி என்பது தவறான பாதைக்கு இழுத்துச் செல்லக் கூடிய மூட உணர்வு என்பதற்கு இந்த ஏற்பாடுகள் ஓர் எடுத்துக்காட்டே!

  Read more: http://viduthalai.in/page1/96093.html#ixzz3S12M7ryk

  தமிழ் ஓவியா said...

  இது உண்மையா? இது உண்மையா? இது உண்மையா?

  சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 18 நீதிபதி பணியிடங்களை நிரப்பிடும் வாய்ப்பினைப் பயன்படுத்தி, தற்போதுள்ள தலைமை நீதிபதி பார்ப்பனர் (வடக்கே இருந்து வந்தவர்) தற்போதுள்ள பார்ப்பன நீதிபதிகளின் எண்ணிக்கை 6 (2 அல்லது 3 சதவிகிதம் உள்ள வகுப்பினர்) மேலும் அதே அளவுக்கு நியமனம் செய்யப்பட- பார்ப்பனப் பண்ணையமாக மாற்றிட - தீவிர முயற்சிகளைச் செய்து, பகீரதப் பிரயத்தனம் செய்யும் நிலையில், இதை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் புரிந்துகொண்டு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது வரவேற்கத்தக்கது.

  இரண்டு மூன்று பட்டியலின் பின்னணியில் உள்ள மர்மம் என்ன?

  ஒரே பட்டியலாகப் புதிய நீதிபதிகளுக்கான நியமனப்பட்டியலுக்குப் பதிலாக - இரண்டு அல்லது மூன்றாகப் பிரித்து, தனித்தனியே ஒவ்வொரு பட்டியலிலும் ஒன்று அல்லது இரண்டு பார்ப்பனர்கள் பெயரை அவ்வப்போது சேர்ப்பது என்ற தந்திர வித்தை கையாளப்படுவதால் இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பது உண்மையா?

  தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாய் வருவதற்கு, மிகவும் பார்ப்பன வெறிபிடித்த ஒரு மாவட்ட நீதிபதி, (டில்லியில் தனக்குள்ள செல்வாக்கால்,) கலைஞர் ஆட்சிக்காலத்தில் இங்குள்ள ஆட்சியின் எதிர்ப்பினால், வடக்கே (பஞ்சாபி) மாநிலத்தில் நியமிக்கப்பட்டவர், தற்போது வாரம் இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மந்திராலோசனையின் முக்கிய நபராக உள்ளார் என்பதும், இதில் மற்றொரு ஆலோசகராக சென்னை நீதிமன்ற மூத்த பார்ப்பன நீதிபதி ஒருவரும் முக்கியப் பங்கு வகித்து ஒரு கூட்டுத் திட்டமே உருவாகி அதிகமான பார்ப்பனரை உள்ளே கொண்டு வருவதும், பார்ப்பனரல்லாத மாவட்ட நீதிபதிகளை வீட்டுக்கு அனுப்பிட, ஏதாவது அற்பக் காரணங்களைத் தேடுவதும், தலைக்குக் கத்தி வைக்கும் மனு நீதி ராஜ்யத்தை நடத்திவரும் கொடுமை தொடர்கிறது என்று உயர்நீதிமன்ற நீதித்துறை வட்டாரங்களிலேயே கூட குமுறலும், கொந்தளிப்பும் பெருகியுள்ளன என்பது உண்மையா?

  எந்தவித ஊழல், லஞ்சக் குற்றச்சாட்டு ஏதும் இல்லாத - கூறவும் முடியாத நிலையில் ஒரு மாவட்ட நீதிபதியை இதற்கு மேலே பதவி உயர்வு (உயர்நீதிமன்ற நீதிபதிக்குத் தகுதி) அவர் பெற்றுவிடக் கூடாது என்பதற்காக இம்மாதம் 28 ஆம் தேதி அவரது பதவிக் காலம் (மாவட்ட நீதிபதிக்கானது) முடிவுறும் நிலையில், அவரைப் பரிந்துரை செய்வதைத் தவிர்க்கவே,
  அவர் அரசியல் செல்வாக்குள்ள தம் ஜாதிக்காரர் ஒருவரை ஒரு குறிப்பிட்டவரைச் சந்திக்கின்றார் என்றெல்லாம் உயர்நீதிமன்ற மேலிடம் ஏனோதானோ என்று குற்றம் சுமத்தி, செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்பதுபோல நடந்துகொள்வது உண்மையா?

  மாவட்ட நீதிபதி பதவிகள் நியமனத்திலும் பார்ப்பன சூழ்ச்சி

  மாவட்ட நீதிமன்ற சார்பு (Subordinate Judiciary) தேர்வுக்கான, தேர்வுத் தாளைத் திருத்துதல், மாவட்ட நீதிபதி முதல் மற்ற நீதித் துறையில் பார்ப்பனர் ஏக போகம் தொடரும் வண்ணம், பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு மதிப்பெண் போடுவதில், பாரபட்சம் காட்டி, பார்ப்பனரல்லாதவர்களைத் தடுக்கும் முயற்சியை திருப்பணியாகவே ஒரு பார்ப்பன உயர்நீதிமன்ற நீதிபதி, மேலிடத்தின் ஆதரவோடு நடத்தி, பார்ப்பனரல்லாதவர்களை ஒழித்துக்கட்டும், பரசுராம அவதாரம் எடுத்து வருவது உண்மையா?

  இதுபற்றி உடனடியான மாற்றம் தேவை; பார்ப்பனரல்லாத மூத்த நீதிபதிகள் பலர் இருந்தும், இந்தப் பொறுப்பு முழுவதும் ஏன் ஒரு பார்ப்பனரிடமே விடப்பட்டுள்ளது? இந்த நிலையால், மேலும் குமுறல் அதிகமாகி, நீதித்துறை கொதி நிலையில் உள்ளது என்பதும் உண்மையா?

  குறிப்பு: இதற்கான சமூகநீதிப் போராட் டத்தில் பெருமளவு வழக்குரைஞர்கள் கலந்துகொள்ள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம் -

  திராவிடர் கழகம்)

  தமிழ் ஓவியா said...

  குஜராத்தில் 2000-த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் படுகொலைக்குக் காரணமாக இருந்த ஆட்சியின் சொந்தக்காரர் மோடி கூறுகிறார்

  உலக அளவில் நடக்கும் மத ரீதியான மோதல்கள் கவலையளிக்கிறதாம்!

  புதுடில்லி, பிப்.18_ டில்லி விக்யான் பவனில் நடந்த கிறிஸ்துவ மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி உலக அளவில் நடக்கும் மதரீதியான மோதல்கள் கவலையளிப்பதாக உள் ளது என்று தெரிவித்துள் ளார். கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் குரியகோஸ் மற்றும் கன்னிகாஸ்திரி யூப்ரேசியா ஆகியோருக்கு அண்மையில் வாடிகன் நகரில் நடந்த விழாவில் புனிதர் பட்டம் அளிக்கப் பட்டது. புனிதர் பட்டம் அளிக்கப்பட்டதை நினை வுகூரும் வகையில் டில் லியில் உள்ள விக்யான் பவனில் நடந்த விழாவில் கொண்டாடப்பட்டது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: உலகில் தங்களுக்கு விருப்பமான மத நம்பிக் கையை பின்பற்ற ஒவ் வொருவருக்கும் பூரண உரிமை உள்ளது இந்தி யாவிலும் அந்த நிலை உள்ளது என்று கூறிய மோடி இதற்கான சுதந் திரத்தை அரசு உறுதி செய்யும் என்றார். அனைத்து மதத்தின ரையும் மதித்து நடக்கும் பண்பாடு ஒவ்வொரு இந்தியனின் உணர்வி லும் கலந்தது என குறிப் பிட்ட மோடி, மத சகிப்புத் தன்மையுடனும், பரஸ்பர மரியாதையுட னும் பிற மதத்தினரை மதிக்கவேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத ரீதியிலான மோதல்களை உருவாக்கு பவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை என்றார்.

  இந்தியா வந்த அமெ ரிக்க அதிபர் ஒபாமாமுதல் அமெரிக்க பத்திரிகையின் தலையங்கம்வரை இந்தி யாவில் மத நல்லிணக்கம் குறைந்து வருவதாக பேசப்பட்டது. பிரதமர் மோடி இவ்விவகாரத்தில் மவுனம் கலைத்துப் பேச வேண்டும் எனவும் பல் வேறு தரப்புகளில் இருந்து தொடர்ந்து வலியுறுத் தப்பட்டு வந்தது.

  மோடியை அழைக்க எதிர்ப்பு!

  பிரதமர் மோடியை இந்நிகழ்ச்சிக்கு அழைத் ததில் கிறிஸ்தவ சபை களுக்கு இடையே இரு வேறு கருத்து நிலவுவ தாகவும் தெரிகிறது. ஒரு தரப்பினர், டில்லி யில் தேவாலயங்கள்மீதான தாக்குதலுக்குப் பின்னர் எந்தக் கருத்தும் தெரிவிக் காதவரை ஏன் அழைக்க வேண்டும் என வாதிட்ட தாகவும், மற்றொரு தரப் பினர் இந்த அழைப்பின் மூலம் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்பாக பிரதமர் மவு னம் கலைக்க வழிவகை ஏற்படும் என தெரிவித் ததாகவும் கூறப்படுகிறது.

  தலைநகர் டில்லியில் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கு தலுக்கு ஆளாகிவருகின் றன. கடந்த வாரம் கிறிஸ் தவ கல்வி நிறுவனம் ஒன்று தாக்கப்பட்டது. இருப்பினும் மோடி மத மோதல்கள் தொடர்பாக தொடர்ந்து மவுனத்தை கடைப்பிடித்து வந்தார். டில்லி தேர்தல் தோல்வி, அதைத் தொடர்ந்து காஷ்மீரில் ஆட்சி அமைப் பதில் மீண்டும் தோல்விய டையும் நிலை, உலக நாடுகளின் அழுத்தம் போன்றவைகளால் இறுதி யில் மோடி தனது நிலைப் பாட்டைக் கூறியுள்ளார். அதே நேரத்தில் நேரடி யாக இந்துத்துவா சக்தி களைக் குறிப்பிடாமல், சர்வதேச மத ரீதியான மோதல்கள் என்று குறிப் பிட்டதன்மூலம் சங் பரி வாரத்தின் தலைவர்களை சமாதானப்படுத்துவதுபோல் உள்ளதாகத் தெரிகிறது.

  மோகன் பகவத், அசோக் சிங்கால், பிரவீன் தொகாடியா போன்றோர் இந்து ராஷ்டிரம், அகண்ட பாரதம், இந்தியாவில் பிறந்த அனைவரும் இந் துக்களே என்றும், விரை வில் 5 கோடி பேரை இந்துமதத்திற்கு மாற் றுவோம் என்று கூறி வரும் நிலையில், மோடி யின் இந்த திடீர்ப் பேச்சு சங் பரிவார் கூட்டங்களி டையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இதுதான் மோடியின் மதச்சார்பின்மை!

  இந்துக் கலாச்சாரம், இந்து நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் அரசு மத்தியில் அமைந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடிக்குச் சற்று அவகாசம் கொடுங்கள். நமது பாரதத் தன்மை குறித்த கனவு களை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார்.

  மேற்கண்டவாறு ராகவ் ரெட்டி, வி.எச்.பி. அமைப்பின் சர்வதேசத் தலைவர் கூறியுள்ளார்.

  Read more: http://viduthalai.in/e-paper/96418.html#ixzz3S69iOwIi

  தமிழ் ஓவியா said...

  சிவராத்திரி உபயம்: 2000 பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதி

  உஜ்ஜைன், பிப். 18_ மத்தியப் பிரதேசம் உஜ் ஜைனியில் உள்ள மகா பைரவர் கோவிலில் சிவராத்திரி அன்று இரவு பிரசாதம் சாப்பிட்ட 2000 சிவ பக்தர்கள் நகரின் பல்வேறு மருத்துவமனை யில். சேர்க்கப்பட்டுள் ளனர்.

  அதில் 200_க்கும் மேற்பட்டவர்களின் நிலைமை மோசமாக உள்ளதாம். மிகவும் சக்திவாய்ந்த தெய்வம் என்றும், உலகம் அழியும்போதுகூட அழி யாத கோவில் என்றும் கதைகட்டி விடப்பட்ட உஜ்ஜைனி மகாபைரவர் கோவிலில் சிவராத்திரி விழாவன்று ஆயிரக்கணக் கானோர் கூடுவார்கள். இந்த ஆண்டும் உஜ்ஜைனி மகாபைரவர் சிவராத்திரி கோவில் விழா கடந்த ஞாயிறு அன்று துவங்கி யது. மத்தியபிரதேச மாநிலம் மட்டுமின்றி ராஜஸ்தான் போன்ற மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். நேற்று மாலைமுதல் சிவராத்திரி விழா தொடங்கி நடந்து வந்ததாம்.

  நள்ளிரவு விழாவில் கலந்துகொண்ட அனை வருக்கும் பிரசாதம் வழங் கப்பட்டதாம். அத்துடன் விழா நிறைவடைந்தது. பிரசாதம் உண்ட சில மணிநேரத்தில் முதலில் குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் மற்றும் கடுமை யான வயிற்றுவலி ஏற் பட்டது. இதனை அடுத்து பெண்கள் மற்றும் ஆண் களுக்கும் வயிற்றுவலி, மயக்கம் ஏற்பட்டது. முதலில் சில நூறு பேருக்கு மட்டும் இருந்த வயிற்றுவலி இன்று காலையில் ஆயிரக்கணக் கானோர் வயிற்றுவலி மற்றும் வாந்தியால் அவ திப்பட ஆரம்பித்துவிட் டனர்.

  இதனால் கோவில் வளாகம் முழுவதுமே அழுகுரல் கேட்கத் தொடங்கியது. நிலைமை மோச மானதைத் தொடர்ந்து அனைவரும் அருகில் உள்ள பல்வேறு மருத் துவமனைகளில் சேர்க்கப் பட்டனர். இச்சம்பவம் குறித்து மத்தியப்பிரதேச தலைமை மருத்துவ அதி காரி என்.கே.திரிவேதி கூறியதாவது. காலைமுதல் 2000_க் கும் மேற்பட்டோர் தொடர்ந்து அரசு மருத் துவமனை மற்றும் தனி யார் மருத்துவமனைகளில் குவிந்தவண்ணம் உள்ள னர்.

  சுமார் 500 பேர் களுக்கு முதலுதவி கொடுத்து வீட்டிற்கு அனுப்பி விட்டோம். இதில் 1500_க்கும் மேற் பட்டோர் உள்நோயா ளிகளாக சேர்க்கப்பட் டுள்ளனர். குழந்தைகள் மற்றும் பெண்களில் 200_க்கும் மேற்பட்டோர் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதில் 40 பேரை போபா லில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள் ளோம்.

  மாவட்ட காவல்துறை இணை ஆணையர் ஆர்.பி. கோலட் கூறும்போது, பிரசாதம் தயாரித்து வழங்கும் உரிமையைப் பெற்றுள்ள தனியார் நிறு வனம் ஒன்று வெளியில் இருந்து உணவு தயாரித் துக் கொண்டுவந்துள்ளது. உணவில் நச்சு கலந் துள்ளதா என கண்டறிய உணவு மாதிரிகள் ஆய் வகத்திற்கு அனுப்பட் டுள்ளது, இவ்விவகாரம் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடந்துவரு கிறது என்று கூறினார். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

  Read more: http://viduthalai.in/e-paper/96419.html#ixzz3S69qyljo

  தமிழ் ஓவியா said...

  மகிழ்ச்சிபற்றி ஒரு புதுக்கண்ணோட்டம் (2)

  மகிழ்ச்சி என்பது இன்ப உணர்வின் வெளிப்பாடு;

  துயரம், துக்கம் என்பது துன்பத்தின், துயரத்தின் வெளிப்பாடு.

  வாழ்க்கையில் வெறும் இன்பமோ, வெறும் துன்பமோ எப்போதும் இருந்த தில்லை - எவர்க்கும்.

  மாறி மாறி மகிழ்ச்சியும், துயரமும் வெளிப்படும் நிகழ்வுகளும், நிலை களும் சகஜம்.

  உலக வரலாற்றில் எப்போதும் எல்லா பக்கங்களும் தொடர் துன்பத் தாலோ அல்லது அறுபடாத தொடர் இன்பத்தாலோ நிரப்பப்பட்டதல்ல; சில பக்கங்கள் இரண்டுமில்லாத காலி பக்கங்களாகவே இருக்கின்றன என்றார் ஜெர்மன் தத்துவ அறிஞர் ஜார்ஜ் வில் லியம் பிரஃடெரிக் ஹெகல் (1770-1831).

  (இவர் வரலாற்றுக்கும், தத்துவத் திற்கும் உள்ள இணைப்பைப்பற்றி நன்கு அறிந்து ஆராய்ந்த மேதையாவார். காரல் மார்க்ஸ்க்கு இவரது தத்துவம், தர்க்க முறையின் தாக்கம் அதிகம் உண்டு).

  தத்துவ அறிஞர்களில்கூட நம்பிக் கைக் குறைந்த சலிப்பும், விரக்தியும் மேலோங்கும் அணி (Pessimistic Philosophers); மற்றொரு வகை எப்போதும் நம்பிக்கை தளராத விரிந்த மனப்போக்கு உடைய தத்துவ ஞானிகள் (Optimistic Philosophers).

  முன்னவர்களை Weeping philosophers - எப்போதும் அழுது புலம்பும் அழுகுணிச் சித்தர்கள் என்றும், பின்ன வர்களை எப்போதும் சிரித்து மகிழும் சிரிப்புத் தத்துவ அறிஞர்கள் Laughing Philosophers என்றும் கூறி மகிழ்வது.

  சிற்சில நேரங்கள் ஒருவர் மகிழ்ச்சி மற்றவருக்குத் துன்பம் என்ற நிலையே உலகின் நடைமுறையாக உள்ளது! எல்லோருக்கும் எல்லா நிலைகளிலும் மகிழ்ச்சியும், துயரமும் - இன்பமும், துன்பமும் - எல்லா நேரங்களிலும் ஏற்பட்டுவிடுமா?

  இயலுமா? என்றால், பதில் இல்லை. கடினம்; எளிதில் இவை இணையாது என்பதே யதார்த்தம் - நடைமுறை.

  பசியால் மானை வேட்டையாடி சிங்கம் தன் பசியைத் தீர்த்து மகிழ்கிறது.

  மான், சிங்கத்திடமிருந்து தப்பியோட முயன்று அதில் தோல்வி அடைந்து, சிக்கிக் கொள்கிறது. இரையாகி அது சிங்கத்திற்கு தன்னை இழந்து சிங்கம் மகிழ்ச்சி அடைகிறது.

  அதுபோலத்தான் ஏழைகளும், பாட்டாளிகளும் தங்கள் இரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி உழைத்து, தனக்குரிய பலன் கிட்டாவிட்டாலும், பணக்காரர்களின் குதிர் நிரம்பி வழிய உதவுகின்றனர்!

  ஏழை பாட்டாளிகளின் கண்ணீர், செந்நீர், ஏகபோக முதலாளிகள் - பணக்காரர்களின் பன்னீராக மாற்றப் படுகிறது!

  ஒரு பக்கம் வலி மிகுந்த துன்பம்; மறுபுறம், குதூகலம், கொள்ளை லாபத் தினை குன்றெனக் குவித்து மகிழும் குவலயச் சுரண்டல்காரர்களின் மகிழ்ச்சி - என்று நியாயமான துன்பம், நியாயம், நீதியற்ற இன்பம் - இவைதான் இன் றைய உலகின் சமூக அமைப்பாகி உள்ளது!

  பொத்தல் இலைக் கலமானார் ஏழை மக்கள்
  புனல் நிறைந்த தொட்டியானார் செல்வர்

  என்றார் புரட்சிக்கவிஞர்.

  மகிழ்ச்சியை இன்பத்தால் மட்டுமே அனுபவிப்பதைவிட, துன்பம் துவட்டி எடுக்கும்போதும் அனுபவிக்கப் பழகு வது மிகவும் இன்றியமையாத தேவை யாகும் தொண்டறத்தில்.

  துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
  இன்பம் பயக்கும் வினை (குறள் 669)

  இதில் துன்பத்தை ஏற்று துக்கம் வராமல் (கொண்ட லட்சியத்திற்கான விலை என்கிறபோது, மகிழ்ச்சியோடு அதை ஏற்கும் வைர நெஞ்சங்களுக்கு, வையகத்தில் பஞ்சமா? வரலாற்றில் கொஞ்சமா?

  நச்சுக்கோப்பையை ஏற்று குடித்து மகிழ்வுடன் தனது வாழ்வை முடித்து, வரலாறாக வாழுகிறார் சாக்ரட்டீஸ்!

  தூக்குமேடையை முத்தமிட்ட கொள்கை நாத்திக நன்னெறியார் தீரன் பகத்சிங்,

  வசதி, வழக்குரைஞர் செல்வ வாழ்வு துறந்து, சிறையில் செக்கிழுத்து, அறி வையும், மானத்தையும் தவிர, மற்ற எல்லாவற்றையும் துறந்த ஒப்பற்ற தியாக மாணிக்கம் - வைர நெஞ்சம் படைத்த வ.உ.சிதம்பரனார், எதிர் நீச்சல், இழிவுகளைச் சுமந்தும் தன் இலட்சியப் பயணத்தை, ஒரு கையில் மூத்திரச் சட்டி, மறுகையில் அணையாத அறிவுச்சுடர் தாங்கி 95 வயது வரை பட்டிதொட்டியெங்கும் பரப்புரை செய்து வாழ்வதில் எல்லையற்ற மகிழ்ச்சி கொண்ட ஈரோட்டு ஏந்தல் தந்தை பெரியார் - இப்படி எத்தனை எத்தனையோ பேர் துன்பத்தால் துவளாது, இன்பத்தை நெருப்பிலும் கண்டு தூய்மையாலே தொண்டறச் செம்மல்கள் ஏராளம் உண்டே!

  - வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

  Read more: http://viduthalai.in/page-2/96424.html#ixzz3S6AP6J52

  தமிழ் ஓவியா said...


  ஏனிந்த ஆர்ப்பாட்டம்?
  கழகத் தலைவர் பேட்டி


  சென்னை, பிப்.19- உயர்நீதிமன் றத்தில் நீதிபதி பதவிகள் நியமனம் தொடர்பான இந்த ஆர்ப்பாட்டம் ஏன்? என்பதற்கான காரணத்தை செய்தியாளர்கள் மத்தியில் திராவி டர் கழகத் தலைவர் விளக்கினார். அதன் விவரம் வருமாறு:

  சென்னை உயர்நீதிமன்றத் தினுடைய மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 60இல் ஒருவர் காஷ்மீருக்கு தலைமை நீதிபதியாக சென்ற நிலையில் 18 இடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள இடங்களை நிரப்புவதில் சமூகநீதிக் கொள்கை கடைப்பிடிக்க வேண் டும். அது சலுகையோ, பிச்சையோ அல்ல. இந்திய அரசியல் சட்டம் வகுத்திருக்கிற போதிய பிரதிநிதித் துவம் (அடிக்குவேட்ரெபிரசன் டேசன்) என்ற பிரிவின்கீழும், சமுகநீதியை நிலைநாட்டவேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

  ஜனநாயக நாட்டில் யாரும் கருத்துகளைச் சொல்ல லாம். பட்டியலை அனுப்பும்போது, ஒரே பட்டியலை அனுப்பவேண்டும் என்று சொல்லுகிறார்கள். காரணம் என்னவென்றால், திறமை உள்ளவர்களுக்கு என்று ஒரு பட்டியலாம், பிறகு இன்னொரு பட்டியலாம். மற்றவர்கள் எல்லாம் திறமை இல்லாத வர்களைப்போல அவர்கள் சொல்லுவது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

  ஆறு பார்ப்பனர்களை ஒரேயடியாக அனுப்புவ தற்குப்பதிலாக, இரண்டு மூன்றாக பிரித்து அனுப்பி னாலும் மொத்த எண்ணிக்கை அதுதான். இதுவரை உயர்நீதிமன்றத்தையே எட்டிப்பார்க்காத சமூகங்கள், ஜாதிகள் இருக்கின்றன. அவைகளுக்குப் போதிய பிரதிநிதித் துவம் கொடுக்க வேண்டும். அது அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தித் தான் இந்தப் போராட்டம்.

  வழக்குரைஞர்கள் போராட்டமாக மட்டுமல்ல, மக்கள் போராட்டமாக அது வெடித்திருக்கிறது. மதுரையிலும் இந்தக் கிளர்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. அனைத்து இயக்கங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

  இப்போது நீதிமன்றப் போராட்டம் வீதிமன்றப் போராட்டமாக மாறி இருக் கிறது. இது முதல் கட்டம். மேலும் தொட ரும். நீதி கிடைக்கும்வரை போராடுவோம்.

  செய்தியாளர் கேள்வி: புதிய நீதிபதிகள்...?

  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பதில்: 6 பேர். ஆறு பேரும் பார்ப்பனர்கள். ஒரே ஜாதிக்காரர்கள். இதுவரை பல்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் நீதிபதியாக, தகுதி உள்ள வழக் குரைஞர்களாக இருந்தும் கூட, அவர்களுடைய பெயர் பரிந்துரைக்கப்பட வில்லை. அதுதான் இப்போது வழக்குரைஞர்களுடைய மிகப்பெரிய குறைபாடு; நியாயமான குறைபாடு.

  Read more: http://viduthalai.in/e-paper/96498.html#ixzz3SBvGoy1u

  தமிழ் ஓவியா said...

  இன்றைய ஆன்மிகம்?

  ஒழுக்கப் போதனையா?

  பிர்மாவுக்கும், விஷ் ணுவுக்கும் இடையே யார் பெரியவன் என்று சண்டை வந்தது என்று புராணம் எழுதி வைக்கப்பட்டுள் ளதே - இப்படி அதிகாரம், ஆணவம் கொண்டவர்கள் தான் படைத்தல், கடவுள், காத்தல் கடவுளா? இது தான் ஆன்மீகம் கற்றுத் தரும் ஒழுக்கப் போதனையா?

  Read more: http://viduthalai.in/e-paper/96502.html#ixzz3SBvpbIOk

  தமிழ் ஓவியா said...

  நரேந்திர மோடியின் ஆட்சியில் தொழிலதிபர்களுக்குத் தான் நல்ல காலம் பிறந்துள்ளது அன்னா ஹசாரே


  மும்பை, பிப்.19- பா.ஜ.க.வுக்கு ஓட்டு போட்டால் நல்ல காலம் பிறக்கும் என தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்துள்ள நரேந்திர மோடியின் தலைமையிலான அரசில் தொழிலதிபர்களுக்குத் தான் நல்ல காலம் பிறந் துள்ளது என ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரே குற்றம் சாட்டியுள்ளார்.

  மராட்டிய மாநிலத் தில் உள்ள தனது சொந்த ஊரான ரலேகான் சித்தி யில் பிரபல தொலைக் காட்சி ஒன்றுக்கு பேட்டி யளித்த அன்னா ஹசாரே, ஏழைகள் மற்றும் விவ சாயிகளின் நலனைப் பற்றி மோடி நினைப்ப தில்லை. மாறாக, தொழி லதிபர்களின் நலனைப் பற்றியே அவர் நினைத்து வருகிறார்.

  அவரது தலைமையி லான ஆட்சி அமைந்தவு டன் நல்ல காலம் பிறக் கும் என்று தோன்றியது. ஆனால், அந்த நல்ல காலம் தொழிலதிபர்களுக் குத் தான் வந்துள்ளது. இதனால், அவரது செல் வாக்கு சரிந்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

  Read more: http://viduthalai.in/e-paper/96500.html#ixzz3SBvxmwAj

  தமிழ் ஓவியா said...

  நீங்குமா? நீங்காதா?


  மதத்தைக் காப்பாற்றவே கோயில்களும், சொத்துகளும், அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா? அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா? நீங்காதா? என்பதைத்தான் கவனிக்க வேண்டும்.
  (விடுதலை, 3.12.1962)

  Read more: http://viduthalai.in/page-2/96503.html#ixzz3SBwBKa96

  தமிழ் ஓவியா said...

  இந்தியாவில் மனித உரிமை மீறல்கள்
  இந்தியாவில் மனித உரிமை மீறல்கள்

  Print
  Email


  இந்தியாவில் சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக பன்னாட்டு மனித உரிமைக் கண்காணிப்பு ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

  கடந்த ஆண்டு உத்தரபிரதேசம், முசாபர் நகரில் ஏற்பட்ட கலவரம் முதல் அண்மையில் பிகார் மாநிலத்தில் நடந்த கலவரம் வரை குறிப்பிட்ட மதத்தின்மீது கடுமையான தாக்குதல்கள் நடை-பெற்றுள்ளன. இந்தத் தொடர் தாக்குதலின்-மூலம் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்-துள்ளனர்.

  தொடர்ந்து நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைச் சுதந்திர-மாகச் செயல்பட அனுமதித்துள்ளது கண்டிக்கத்தக்கது.

  ஆந்திரா, ராஜஸ்தான், ஜார்கண்ட் போன்ற நகரங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முக்கியமாக மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ள இந்த மாநிலங்களில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் மிரட்டி வற்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். மத்திய அரசு இந்த அவலத்தை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது.

  அண்மையில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில் எந்தவிதப் பாதுகாப்பும் அளிக்க அரசு முன்வராததால் குற்றவாளிகளுக்குத் துணிச்சல் ஏற்பட்டுவிடுகிறது.

  இந்தியாவில் 13 விழுக்காடு குழந்தைத் தொழிலாளர்கள் ஆரம்பக் கல்வியைக்கூட முடிக்காத நிலையில் இருப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. சில குழந்தைத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக மாற்றப்படுகின்றனர்.

  தடுக்க வேண்டிய அரசுகளோ கண்ணை மூடிக்கொண்டு இருக்கின்றன என பன்னாட்டு மனித உரிமைக் கண்காணிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்-பட்டுள்ளது

  தமிழ் ஓவியா said...

  உங்களுக்குத் தெரியுமா?


  பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் தனித்தனியாக உணவு பரிமாறி வ.வே.சு. அய்யர் ஜாதிவெறியோடு நடத்திய சேரன்மாதேவி குருகுலம் மலேயா நாட்டில் வாழ்ந்த தமிழர்கள் தந்த ரூ 20,000 நன்கொடையால் நடத்தப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

  தமிழ் ஓவியா said...  கருத்து

  ’மேக் இன் இந்தியா’ மூலம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுகிறார் பிரதமர் மோடி. ஆனால், வெளிநாட்டுத் தயாரிப்புகளை இந்தியாவில் விற்க சங்பரிவாரின் பொருளாதாரப் பிரிவான ஸ்வதேசி ஜாக்ரண் மஞ்ச் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. என்ன முரண் இது?

  - திக்விஜய் சிங்

  காங்கிரஸ் பொதுச்செயலாளர்

  மதச்சார்பின்மை மற்றும் சோஷலிசம் என்ற வார்த்தைகளை அரசியல் சட்டத்தின் முகவுரையிலிருந்து நீக்க வேண்டும் என சிவசேனா தெரிவித்துள்ளது அழிவை ஏற்படுத்தக்கூடியது; கண்டிக்கத்தக்கது மற்றும் வெறுக்கத்தக்க அறிக்கையாகும். அறியாமையின் வெளிப்பாடே அந்த அறிக்கை மதச்சார்பின்மை அவசியம் இல்லை என சொல்வது கவலை தருவதாக உள்ளது.

  - ஜிதன்ராம் மாஞ்சி

  பிகார் முதல்வர்

  மத சுதந்திரம் மற்றும் பன்மைத்துவம் மிகுந்த இந்தியா, தற்போது வெறுப்பு, பெரும் பான்மைத்துவம் மற்றும் சகிப்புத் தன்மை இல்லாத நாடாக மாறியிருக்கிறது. புதிய அரசு பதவியேற்ற முதல் 100 நாட்களில், சிறுபான்மை கிறித்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களை இந்து தேசியவாதிகள் அதிகரித்து இருப்பதாக என்.ஜி.ஓ.க்களின் ஆவணங்-களின் தகவல்கள் கூறுகின்றன.

  - ஜோ பிட்ஸ்,

  அமெரிக்காவின் குடியரசு

  கட்சியைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர்.  தேர்தல் சட்டத் திருத்தம் வருகின்ற நேரத்தில் இந்தியாவில் பல்லாண்டு-களாகப் பலராலும் சொல்லப்-பட்டு வருகின்ற விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பற்றியும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

  - கலைஞர், தி.மு.க. தலைவர்

  மனிதனின் வாழ்க்கை உயர்வடைய புத்தகங்கள் மிகவும் முக்கிய-மானவை. ஒருவன் தலைகுனிந்து-படிப்பது-தலைநிமிர்ந்து வாழ்வதற்கே. உலக அளவில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கியவை புத்தகங்களே. புத்தகம் என்பது ஒவ்வொரு முறை திறக்கும்-போதும் வெடிக்கக்கூடிய சக்தி படைத்தது. சாதாரண மனிதனைக்கூட சாதனை மனிதனாக்க புத்தகங்களால் முடியும்.

  - இரா.தாண்டவன்,

  சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்.


  சொல்றாங்க...

  அய்க்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு கொடுக்கும்.

  - ஒபாமா, அமெரிக்க அதிபர்

  சொல்றேங்க...

  அமெரிக்காவா? நம்ப வைத்துக் கழுத்த அறுக்காம இருந்தா சரி!

  இந்தியா_பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு அய்.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா ஆதரவு அளிக்கக் கூடாது.

  - சர்தாஜ் அஜிஸ்,

  தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாகிஸ்தான்.

  ஏன் சீனாதான் நெருக்கமா இருக்கே, அங்க விண்ணப்பித்தாப் போச்சு!

  தமிழ் ஓவியா said...

  பகுத்தறிவு வளர சிறந்த வழி


  எங்கள் வழிகாட்டி மாம்பலம் ஆ.சந்திரசேகர் அழைப்பு சோதிடம் மறுப்பு...

  கூடுதல்....மாதம், நாள் மறுப்பு......செய்தால்...!

  என் திருமண மண்டபத்தில்....

  ஆடி , மார்கழி, புரட்டாசி.. மாதங்களில் திருமணம் செய்தால் கட்டணத்தில் 75% தள்ளுபடி செய்கிறேன்!

  அஷ்டமி... நவமி... அமாவாசையில் எந்த மாதம் மணம் செய்தாலும் 75% தள்ளுபடி நிச்சயம்!

  நான் தயார்..

  நீங்கள் தயாரா?...

  - முகநூலிலிருந்து

  தமிழ் ஓவியா said...

  பகுத்தறிவே இளைஞர்களை ஆளவேண்டும்

  -அறிஞர் அண்ணா

  பட்டதாரிகளே! உங்கள் குடும்பங்களுடைய நன்னிலைக்குப் பாடுபடுவதோடு, சமூகத்திற்-காகப் பணிகளையும் செய்ய வேண்டியதுடன், பகுத்தறிவுவாதத்தின் ஒளியை எங்கும் வீசச் செய்பவர்களாக நீங்கள் திகழ வேண்டும்.

  பகுத்தறிவுவாதம் என்பது அடிப்படை உண்மைகளை, நெறிகளை மறுப்பதாகாது; எதையும் காரணங் கண்டு ஆராய்ந்து உண்மை காண்பதாகும். போலித்தனமான எண்ணங்-களை, செயல்களை அழித்தொழிப்பதுதான் பகுத்தறிவு ஆகும்.

  அறிவின் எந்த ஒரு துறையாயினும் அதில் நமக்கென்று ஒருமுறை இல்லாமலில்லை. நம்முடைய வாழ்க்கை முறைகள் அழியாதவை என்று நாம் கொண்டாடலாம். ஆயினும், அந்த முறைகளை இளமை குன்றாத தீவிரத் தன்மையோடு கூடியதாக வைத்திருக்க வேண்டுமானால், மாறுதலை ஏற்றுக் கொள்ளத்தக்க, புதிய கருத்துகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய இளம் இதயத்தைப்போல் நமது இதயம் பசுமையானதாக விளங்க வேண்டும்.

  பெரியாரைப் பின்பற்றுவோம்

  நெடுங்காலமாகப் பழைய முறைகளிலேயே ஊறி, அவற்றைத் தாங்கி, அவற்றுக்கெதிரான வாதங்களுக்கு எதிர்ப்புக்கூறி, காலத்தைக் கழித்திருக்கிறோம்.

  இதே காலத்தில் உலகத்தின் ஏனைய நாட்டவர்கள் எல்லாம் உண்மையை நாடி, பொறுமையோடு தங்களது இடைவிடா ஆராய்ச்சி சோதனை மூலம் பல புதிய முடிவுகளை எய்தியதுடன், உயர்வு பெற்றுள்ளனர். நாம் பண்டைய பழம்பெருமையில் அமர்ந்திருப்பதில் திருப்தி கொள்கிறோம்.

  நன்மையறியாமல் இவற்றைப் பாதுகாக்கக் கூடியவர்களாக இருந்து வந்துள்ளோம். இந்த வகையில், புரையோடிய சமூகக் கருத்துகளைச் சாகடிக்கும் வீரர் பெரியாரைக் குறைகூறத் துணிவதில் சிறிதுகூட அறிவுத் தெளிவு இல்லை.

  பழம் பெருமை பேசிக்கொண்டு, மூடப் பழக்கங்களில் ஆழ்ந்து அடிமைப்பட்டிருக்கும் சமுதாயத்தைச் சீர்திருத்தி, புரையோடிய சமுதாயக் கருத்துகளை ஒழித்துப் போராடும் வீரரான பெரியாரைக் குறைகூறிப் பயன் என்ன? பகுத்தறிவே எல்லோருடைய உள்ளங்களையும் தங்குதடை-யின்றி ஆளவேண்டும்.

  ஜாதி ஒழிந்த சமத்துவ சமுதாயம் அமைக்கும் போர் வீரர்களாக எல்லோரும் முன்வர வேண்டும். நாட்டில் புத்துயிர் ஊட்டிப் பகுத்தறிவாளர்களைப் பெருக்க வேண்டும்.

  ஜாதி முறையை எதிர்த்துப் போர் தொடுங்கள்

  பகுத்தறிவு மூலம் சமுதாயத்தினைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும். பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்று வெளியேறுவோர் இப்பணிக்குத் தூதுவர்களாக விளங்க வேண்டும். ஜாதி முறையை எதிர்த்துப் போர் தொடுத்திடுங்கள் என நான் உங்களை அழைக்கிறேன்.

  விஞ்ஞானத்தோடு ஒட்டி வாழ முடியாத மூடப் பழக்கங்களுக்கு எதிராகப் போர் தொடுக்கும்படியும் உங்களை வேண்டுகிறேன்.

  (அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் 18.11.1967 அன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி.)

  தமிழ் ஓவியா said...

  பழைமையான சூரியக் குடும்பம்


  பூமியைப் போன்ற அளவுள்ள அய்ந்து கிரகங்கள் சுற்றி வரும் ஒரு நட்சத்திரம் நாசாவின் கெப்ளர் செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதுவரை கண்டறியப் பட்ட நட்சத்திரங்களிலேயே மிகப் பழைமையான நட்சத்திரமாகக் கருதப்படும் இதற்கு கெப்ளர் 444 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கெப்ளர் 444அய் பூமியை விடச் சிறியதான புதன் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு இடைப்பட்ட அளவில் உள்ள அயந்து கிரகங்கள் சுற்றி வருகின்றன. கெப்ளர் 444 குடும்பத்திலுள்ள கிரகங்கள் தங்களது சூரியனை 10 நாள்களுக்கும் குறைவான நேரத்தில் சுற்றி வந்துவிடுகின்றன. அதேபோல பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தில் பத்தில் ஒரு பங்கு தூரத்திற்குள் வட்டப் பாதையில் சுற்றி வந்துவிடுகினறன என வானியலாளர்கள் கூறியுள்ளனர். இதுபோன்ற பழைமையான நட்சத்திரத்தைச் சுற்றி ஏராளமான சிறிய கோள்கள் சுற்றி வருவதைப் பார்த்ததில்லை. இது மிகவும் சிறப்பானது. கெப்ளர் 444 சூரியக் குடும்பமானது நமது சூரியக் குடும்பத்தைவிட இரண்டரை மடங்கு பழைமையானது. நமது சூரியக் குடும்பம் 450 கோடி ஆண்டுகள்தான் பழைமையானது என சிட்னி பல்கலைக்கழக இயற்பியல் கல்லூரிப் பேராசிரியர் டேனியர் ஹுபர் கூறியுள்ளார்.

  தமிழ் ஓவியா said...

  புதுப்பா

  முகங்கள்
  அண்ணனுக்கு ஆனைமுகம்
  தம்பிக்கு ஆறுமுகம்
  தந்தைக்கும் தாய்க்கும்
  பாதிப் பாதி முகம்
  பக்தனே நீ எந்த முகத்தோடு
  கோவிலுக்குப் போகிறாய்?

  - வீ.உதயக்குமாரன், வீரன்வயல்.

  புதுப்பா

  பாதையை மாற்று!
  விரும்பியதை விரும்பு - உன்னை
  விரும்பியதை விரும்பு!
  எறும்புக்குத் தெரியாதா
  கரும்பின் சுவை!
  கண்ணின் பார்வை
  காணும் தூரம் மட்டும்!
  அறிவின் பார்வையோ
  ஆகாயத்தை எட்டும்!
  கீதையைப் போற்றாதே!
  பாதையை மாற்று! - பெரியார்
  பாதைக்கு மாற்றேது!

  - சீர்காழி கு.நா.இராமண்ணா

  தமிழ் ஓவியா said...

  மோடி ஏன் மறுக்கவில்லை?

  இந்தியாவில் மதச் சிறுபான்மையர் மீதான வன்முறைத் தாக்குதல்கள் குறித்துக் குறிப்பிடும் போது, மோடியின் மவுனம் ஆபத்தானது என்று அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் இதழின் தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.

  கிறித்தவர்களின் வழிபாட்டிடங்கள்மீதான தாக்குதல்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியாவில் அனைத்துக் குடிமக்களையும் காப்பாற்ற வேண்டியராக உள்ள பிரதமர் மோடி, எவ்விதக் கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார்.

  அதேபோல், கிறித்தவர்கள் மற்றும் இசுலாமியர்கள் அதிக அளவில் கட்டாயப்-படுத்தி அல்லது பணம் கொடுப்பதாக உறுதியளித்து இந்து மதத்துக்கு மாற்றம் செய்யப்படுவது குறித்தும் எந்தக் கருத்தும் வெளியிடாமல் உள்ளார்.

  மத சகிப்புத்தன்மை இல்லாத நிலை அதிகரித்து இதுபோன்ற தொல்லைகள் இருந்தபோதிலும், மோடி தொடர்ச்சியாக அமைதியாக இருப்பதன் மூலம், இந்து தேசியவாதிகளின் உரிமைகளைக் குறித்த எல்லைகளுக்குள் கட்டுப்படுத்த முடியவில்லை அல்லது கட்டுப்படுத்த விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது.

  அண்மையில் இந்தியாவில் உள்ள ஏராளமான கிறித்தவ வழிபாட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டு சூறையாடப்பட்டன. கடந்த டிசம்பரில் கிழக்கு டில்லியில் செயின்ட் செபாஸ்டியன் சர்ச் முழுவதுமாக தீக்கிரை-யாக்கப்-பட்டது.

  கிறித்தவ மதபோதகர் கூறும்போது, புகைமண்டலமாக இருந்தபோது மண்ணெண்ணெய் மணம் வெளிவந்ததாகக் கூறியுள்ளார். டில்லியில் அண்மையில் தீய நபர்களால் செயின்ட் அல்போன்சா சர்ச் தீவைத்து எரிக்கப்பட்டது. சடங்குகளுக்குப் பயன்படுத்தும் பொருள்களை எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால், பணம் நிறைந்திருந்த உண்டியல் பெட்டியை அவர்கள் தொடவில்லை.

  கத்தோலிக்க ஆயர்களின் மாநாட்டில் இந்தியாவுக்கே உரிய மதச் சார்பின்மையை நிலைநிறுத்த அரசுக்குக் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறித்தவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள், சொந்த நாட்டில் பாதுகாப்பாக உள்ளார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

  மாபெரும் அளவிலான மதமாற்றங்கள் குறித்தும் கவலைகளைத் தெரிவித்துள்ளனர். ஆக்ராவில் கடந்த டிசம்பரில் 200 முசுலீம்கள் இந்து மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஜனவரியில் மேற்கு வங்கத்தில் நூறு கிறித்தவர்கள்வரை மறு மதமாற்றம் என்கிற பெயரில், இந்துமதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

  இந்து தேசியவாதக் குழுக்களாக உள்ள விஸ்வ இந்து பரிஷத், ராஷ்டிரிய சுயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) ஒளிவுமறைவின்றி தாய்மதம் திரும்புதல் என்கிற பெயரில் பிரச்சாரத்தைச் செய்து இந்துக்கள் அல்லாதவர்களை மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்பச் செய்வதாகக் கூறுகிறார்கள்.

  இந்தியாவில் 80 விழுக்காட்டினருக்கும் மேலாக இந்துக்கள் உள்ளனர். ஆனால், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சார்ந்த பிரவீன் தொகாடியா கூறும்போது, அவருடைய அமைப்பான வி.எச்.பி., நாட்டில், நூறு விழுக்காட்டளவில் இந்துக்களாக ஆக்குவது-தான் இலக்கு என்று கூறியுள்ளார். அதற்கு ஒரே வழி மதச்சிறுபான்மையரின் மத நம்பிக்கைகளை மறுப்பதுதான்.

  அயோத்தியில் 3,000 முசுலீம்களை ஒரே நேரத்தில் மதமாற்றம் செய்ய உள்ளதாக வி.எச்.பி. கூறுகிறது. இந்துத்துவத் தீவிரவாதிகளால் 1992ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, நாடுமுழுவதும் ஏற்பட்ட வன்முறைக் கலவரங்களில் 2000பேர் உயிரிழந்தனர்.

  நெருப்போடு விளையாடுவதை வி.எச்.பி. தெரிந்தே செய்கிறது. மோடியின் விருப்பமான திட்டமாக இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதி அளித்திருந்தார். ஆனால், புதுடில்லியில் கடந்த மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மதவாதங்களால் பிரித்துக் கொண்டிருக்கும் வரை, இந்தியா வெற்றி பெறவே முடியாது என்று கூறியுள்ளார். மத சகிப்புத் தன்மையற்ற தன்மையில் கேளாக்காதாக உள்ள மோடியின் அமைதியை உடைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

  தமிழ் ஓவியா said...

  வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

  -புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

  தமிழ் அழிப்பாரின் எண்ணத்துக்கு வலிமை சேர்த்துவிடக் கூடும் என்று கருதினார் புரட்சிக்கவிஞர். தம் கருத்தை வலியுறுத்தி ஆராய்ச்சித் தொடர் ஒன்றினை எழுதினார்; வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? எனும் கட்டுரைத் தொடர், தமிழ்ப் பகைவர்களுக்குச் சாட்டையடி கொடுத்தது: தமிழ் ஆர்வலர்களுக்கெல்லாம் புது வழி காட்டியது; தெளிவூட்டியது.

  - சு.மன்னர்மன்னன்

  காட்சி

  தமிழ்ச் சொற்களையெல்லாம் வடசொற்கள் என்று ஆக்குவதில் பார்ப்பனர்க்குத் தனி ஆசை. அவ்வாறு செய்வதால் இந்நாட்டுக்கும் அவர்கட்கும் இல்லாத தொடர்பை உண்டு-பண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் இந்தத் தீய முயற்சியை அறிவுடைய தமிழர்களும், நடுநிலை-யுடைய உலகமும் அறிந்து நகையாடக்கூடுமே யென்பதை அவர்கள் கருதுவதேயில்லை.

  தூங்கிக் கொண்டிருந்தார்கள் தமிழர்கள். அது அந்த நாள். பார்ப்பனர் அல்லல் புரிந்தார்கள் அளவில்லாமல்.

  விழித்துக் கொண்டார்கள் தமிழர்கள். இது இந்த நாள். அல்லல் புரியாது அடங்கினார்களா எனில் இல்லை.

  காட்சி _- தொழிற்பெயர். அதில் காண், முதனிலை, சி_-தொழிற்பெயர், இறுதிநிலை. காண் என்பதின் இறுதியில் உள்ள _ -ண், என்ற மெய்யானது _- சி, என்ற வல்லினம் வந்தால் _- ட் -_ ஆகும் என்பது சட்டம். அதனால்தான் காட்சி என்றாயிற்று. காணல், காண்டல், காட்சி அனைத்தும் ஒரே பொருள் உடையவை. எனவே காட்சி தூய தமிழ்ச் சொல். இதைப் பார்ப்பனர் தம் ஏடுகளில் காக்ஷி என்று போடுவார்கள்.

  காட்சியைக் காக்ஷி ஆக்குவதில், தமிழ்ச்-சொல்லை வடசொல் ஆக்குவதில் அவர்-கட்குள்ள ஆசை புரிகிறது அல்லவா? இவ்வாறு காக்ஷி என்று பார்ப்பனர்கள் தம் ஏடுகளில் கொட்டை எழுத்துகளில் வெளியிடுவதால் நம்மவர்களும் அதையே பின்பற்றத் தொடங்கி விடுகிறார்கள்.

  பார்ப்பான் சொன்னது பரமசிவன் சொன்னதல்லவா? அதனால்தான் நாம் பொதுவாக நம்மவர்கட்குச் சொல்லுகிறோம்.

  தமிழ் தமிழர்க்குத் தாய்! தமிழிற் பிழை செய்வது தாயைக் குறைவுபடுத்துவதாகும். படக் காட்சிக்குரிய அறிவிப்போ, திருமண அழைப்பிதழோ, வாணிக அறிவிப்புப் பலகையோ எழுதும் போது தமிழறிஞர்களைக் கலந்து எழுதுங்கள் என்கிறோம்.

  இனி இவ்வாறு தமிழ்ச் சொற்களையெல்லாம் பார்ப்பனர் வடசொற்கள் என்று சொல்லிக்-கொண்டு போகட்டுமே, அதனால் தீமை என்று தமிழரிற் சிலர் எண்ணலாம்.

  அவ்வாறு அவர்கள் இந்நாள் வரைக்கும் விட்டு வைத்ததால் என்ன ஆயிற்று தெரியுமா? வடமொழியினின்றுதான் தமிழ் வந்தது, வடவர் நாகரிகத்திலிருந்துதான் தமிழர் நாகரிகம் தோன்றியது என்றெல்லாம் அவர்கள் சொல்வ-தோடு அல்லாமல், உலகையும் அவ்வாறு நம்பவைக்கவும் முயல்கிறார்கள்.

  அது மட்டுமா? மேற்சொன்ன காரணங்-களைக் காட்டி, அவர்கள் பிறப்பிலேயே உயர்ந்தவர்கள் என்னும் முடிச்சுமாறித்-தனத்தையும் மெய் என்று நிலைநாட்டி வருகிறார்கள்.

  இது வட சொல்லன்று; இன்ன காரணத்தால் இது தமிழ்ச் சொல் என்று விளக்கிவர முடிவு செய்துள்ளோம். தமிழர்கள் ஊன்றிப்படிக்க.

  தமிழ் ஓவியா said...

  செய்தியும் சிந்தனையும்

  அடிமாடு

  செய்தி: தொழில் துறை எவ்வளவு வளர்ச்சி அடைந் தாலும் போதாது; விவசாயம் தான் வளர்ச்சி அடைய வேண்டும். - பிரதமர் மோடி

  சிந்தனை: ஆமாம்; அதற்காகத் தான் விவசாய நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக அடி மாட்டு விலைக்கு வாங்கப் படுகிறது.

  Read more: http://viduthalai.in/e-paper/96569.html#ixzz3SIRKFtrY

  தமிழ் ஓவியா said...

  இன்றைய ஆன்மிகம்?

  சாதனையா?

  பகவான்தான் தலை எழுத்தை எழுதுகிறான் என்றால் மக்களின் சராசரி வயது முன்பை விட இப்பொழுது உயர்ந் துள்ளதே - இது கடவுள் சக்தியா? அறிவியல் மருத்துவத்தின் சாதனையா?  Read more: http://viduthalai.in/e-paper/96572.html#ixzz3SIRTif7W

  தமிழ் ஓவியா said...

  பகுத்தறிவுத் திரைப்படத்தை முடக்குவதா?


  பிரபுவிண்டே மக்கள் எனும் மலையாளப்படத்தில் பகுத்தறிவுக் கருத்துகள் உள்ளன.

  மதங்களுக்கு எதிரான கருத்துகளை உள்ளடக்கி உள்ளதால் இணையத்தில் அந்த படம் தடை செய்யப்பட்டுள்ளது.

  படத்தின் இயக்குநர் சஞ்ஜீவன் அந்திகாட் கூறும்போது, இந்தப்படத்தை 1.25 இலட்சம் பேர் பார்த்துள்ளனர். பகுத்தறிவு மற்றும் மதசார்பற்ற குழுவினராகிய கேரளா சுதந்திர சிந்தனையாளர்களின் அமைப்பால் கடந்த ஜனவரி 8ஆம் நாளன்று யூ டியூப்பில் இந்தப் படம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

  இந்த அமைப்பின்மூலம் ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த பிற வீடியோப் பதிவுகள் மதவெறி மற்றும் மூடநம்பிக்கைள், பகுத்தறிவு வாதங்கள் ஆகி யவைகளைக் கொண்டுள்ள வீடியோப் பதிவுகளும் தடை செய்யப்பட்டுள்ளன என்று கூறினார். யூ டியூப்பிலிருந்து கேரளா சுதந்திர சிந்தனை யாளர்கள் அமைப்புக்கு உள்ள கணக்கு முடக்கப் பட்டதாக தகவல் வந்துள்ளது.

  உரிய முறையில் பொருத்தம் இல்லாமல் பதிவுகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து யூ டியூப் நிர்வாகம் அவைகளை தடை செய்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பதிவையும் எவரேனும் நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டுவிட்டால், யூ டியூப் நிர்வாகத்தின் சார்பில் உள்ள குழுவினர் அதை ஆய்வு செய்வார்கள். அதன்படி, யூ டியூப் அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய வகையில் அப்பதிவுகள் இருந்துள்ளன. ஆகவே, அவை நீக்கப்பட்டன. பிரபுவிண்டே மக்கள் (மலை யாளம்) முழு படமும் அதன்படியே நீக்கப்பட்டுள்ளது என்று யூ டியூப் அளித்துள்ள தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

  படத்தின் இயக்குநர் இணையத்தில் வெளியிட்ட மூன்று வாரங்களுக்குள் அப்படம் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. வகுப்புவாத சக்திகள் அப்படத்தை நீக்குவதற்காகப் பணிபுரிந்துள்ளனர்.

  இயக்குநர் சஞ்ஜீவன் அந்திகாட் மேலும் கூறும் போது, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின்மூலம் தணிக்கை சான்று அளிக்கப்பட்ட படமாகும். அப்படி இருக்கும்போது, பொருத்தமில்லாதவை எப்படி அதில் இடம் பெற முடியும்? மதங்களால் ஏற்படும் தீமைகளை அந்தப்படம் வெளிப்படுத்தி உள்ளது. ஆகவே, மதவாத சக்திகளாக இணையத்தில் மறைந்துள்ளவர்களால் அதன் சிறகுகள் வெட்டப்பட்டுள்ளன.

  சமூக வலைத்தளங்களில் கேரளா சுதந்திர சிந்தனையாளர்களுக்கான அமைப்பு பதிவேற்றிய பக்கங்கள் இதுவரையிலும் ஆறு முறை இதுபோன்று தடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

  பி.கே. என்ற இந்தி படம் வட மாநிலங்களில் சங்பரிவார்க் கும்பலால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. பல திரையரங்குகள் தாக்கப்பட்டன. அதன் விளைவு பொது மக்கள் மத்தியிலே பெரும் ஆதரவைப் பெற்றது. 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. இந்தக் கால கட்டத்தில் பிரபு விண்டே மக்கள் எனும் மலையாளப் படத்தினை இணையத்தில் முடக்கு வதேன்? அதுவும் தணிக்கைத் துறையால் அனுமதிக்கப் பட்ட ஒரு திரைப்படத்தை முடக்குவது எந்த வகையில் சரியானதாக இருக்க முடியும்?

  மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையையும் சீர்திருத்த உணர்வையும் வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் நிலையில் இது போன்ற திரைப்படங்களை முடக்குவது கண்டிக்கத் தக்கது - சட்ட விரோதமானதும்கூட மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினையைக் கொண்டு செல்லுவது கேரள சமூக சீர்திருத்தவாதிகளின் முக்கிய கடமையாகும்.

  Read more: http://viduthalai.in/e-paper/96552.html#ixzz3SIRvUEZ7

  தமிழ் ஓவியா said...

  கற்றுக் கொள்ள வேண்டியது


  இதுவரை எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனரல்லாத கட்சிக்கு அனுகூலமாய்ப் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறாரா? என்றால் ஒருவர்கூட இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். பார்ப்பனருக்கு வேறு எவ்வளவு கெட்ட குணம் இருந்தாலும், தங்கள் வகுப்பு விசயத்தில் எல்லாரும் ஒன்று சேருவது அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விசயம்.
  (குடிஅரசு, 7.11.1926)

  Read more: http://viduthalai.in/e-paper/96550.html#ixzz3SISLaB4F

  தமிழ் ஓவியா said...

  ரஷ்யாவில் விஷ்ணுவின் மகன் விநாயகன்

  ரஷ்யாவில் உள்ள லெனின் கிராட் நகரில் உள்ள வினோதங்களில் ஒன்று அங்கு அமைந்திருக்கும் நாத்திகர்கள் காட்சி சாலை. உலகத்தில் உள்ள அனைத்து மதங்கள், கடவுள்கள் பற்றிய விளக்கக் குறிப்புகளும், கடவுள் உருவச் சின்னங்களும் அங்கு வைக் கப்பட்டுள்ளன.

  மதங்களாலும், கடவுள்களாலும் அல்லது இவை பற்றிய நம்பிக்கையால் மக்களுக்கு ஒருவித பயனும் இல்லை என்பதை விளக்குவதே அந்த கண்காட்சியின் நோக்கம்.

  அங்கு ஓரிடத்தில் விநாயகர் சிலைக்குக் கீழே விநாயகர் விஷ்ணுவின் மகன் என்ற குறிப்பு இருக்கிறது.

  அந்தக் கண்காட்சியில் கடவுள், மதம் காரணமாக மனித குலத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், அநீதிகள் பற்றிய விளக்கங்கள் காணப்படுகின்றன.

  Read more: http://viduthalai.in/e-paper/96555.html#ixzz3SITO14B2

  தமிழ் ஓவியா said...

  கோபுரத்தை தாங்கும் காக்கைகள்!

  இங்கு மட்டும்தான் மூட நம்பிக்கைகள் இருக்கின்றன என்று யாரும் நினைக்கவேண்டாம். ஆனால் நம் நாட்டில் மூடநம்பிக்கைகள் கொஞ்சம் அதிகம்.

  லண்டனின் லண்டன் டவர் என்ற பிரசித்திபெற்ற கோட்டைக் கோபுரங்களில் பல காக்கைகள் வாழுகின்றன. அந்த காக்கைகளையும் அரண்மனை பணியாளர்கள் கணக்கில் சேர்த்து, அரசாங்க செலவில் அவற்றை பராமரிக்கிறார்கள்.

  இதற்கு காரணம் என்? அந்தக் காக்கைகள் அகன்று விட்டால் லண்டன் டவர் கட்டடம் இடிந்து விழுந்து விடும் என்று நினைக்கிறார்கள். என்னே மூட நம்பிக்கை!

  தகவல்: நாங்கூர் எஸ்.பாஸ்கரன் எம்.ஏ.,

  Read more: http://viduthalai.in/e-paper/96555.html#ixzz3SITVzY67

  தமிழ் ஓவியா said...

  அண்ணா சொன்ன கடவுளர் கதைகள்

  ஆண்டவன் ரகசியம்

  ஆதி காலத்தில் மனிதன் ஓயாத அலைகளைப் பார்த்தான். அதன் சீற்றத்தால் நாடு அழிவதைக் கண்டான்; கடும்புயல் வீசி பெருமரங்கள் சாய்வதைக் கண்டான்; இடி இடித்து அதன் ஓசையால் புற்றுக்குள் இருக்கும் நாகமும், புதரில் மறைந்து இருக்கும் புலியும் நடுநடுங்கி ஓடுவதை அவன் பார்த்தான்.

  ஏன் இவை ஏற்படுகின்றன என்று அவனுக்குப் புரியவில்லை. இது விளங்காத காரணத்தால் அவனுக்கு அச்சம் ஏற்பட்டது. ஏன் என்று புரியாது அச்சத்துடன் நின்ற அந்த மனிதனின் முன்னே ஒரு எத்தன் நின்றான். அவை என்ன தெரியுமா? அதுதான் ஆண்டவன் செயல் என்று அந்த எத்தன் கூறினான்.

  அந்த ஆதி மனிதன் முன்னே நின்ற எத்தன்தான் உலகிலேயே முதலில் தோன்றிய பார்ப்பனன் அல்லது புரோகிதன். அச்சத்திலே ஏற்பட்டதுதான் ஆண்டவன் தத்துவம்.

  முக்தி பெற்ற பார்ப்பான்!

  மதுரை சோமநாதப் பெருமானின் ஒரு பார்ப்பன பக்தன் காமுகப்பட்டு, கருத்திழந்து தொட்டிலிலே வளர்த்தவளை கட்டிலுக்கிழுத்தான்- பெண்டாடினான். நடக்க கூடாத செயல்! ஆனால் நடந்திருக்கிறது.

  தாய் அவனைப் பார்த்து பாவி அன்னையையா இந்த அக்கிரமம் செய்தாய் என்று கேட்க அவன் அப்பன் ஒருவன் இருப்பதால் அல்லவோ நீ எனக்கு அன்னையானாய் அவன் இல்லாவிட்டால்...! ஒரு பெண்தானே, என எண்ணி அவனை வெட்டி வீழ்த்தினான்.

  இரு பாதகம் செய்த அவன் மருட்சி கொண்டு மதுரைக்கு வந்து ஆலவாய் அப்பனிடம் அடைக்கலம் புகுந்தான் அலறினான். அப்போது சோம பெருமானும் மீனாட்சி அம்மையும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருக்க, அவன் குரல் கேட்ட பெருமான் ஆட்டத்தை நிறுத்த, உடனே அம்மை பார்த்து ஏன் ஆடவில்லை என்று கேட்க அய்யன்,

  அன்னையை பெண்டாடிய அடியாரின் கருத்தை விளக்க, அந்த மாபாவிக்கா அருள்புரிவது என்று மீனாட்சி சிணுங்க உமையவளே, உற்றுக் கேள் எத்தகைய மகா பாதகம் என்றாலும் பிராமணன் என்றால் அருள்புரியத் தான் வேண்டும் என்று கூறினாராம். பிறகு அவன் முக்தி (மோட்சம்) பெற்றானாம்.

  அக்கினியின் ஆசை!

  ஒரு காலத்தில் சப்தரிஷிகள் யாகம் செய்தனராம். அந்த யாகத்திற்கு அவிர்ப்பாகம் வாங்கச் சென்ற அக்கினி பகவான் அந்த ஏழு ரிஷி பத்தினிகள் மீதும் காமமுற்றா னாம். இதனை வெட்கத்தை விட்டு தன் மனைவியிடம் சொன்னானாம்.

  ஆண்டவனான அக்கினி பகவான் தன் மனைவியிடம் அதற்கு ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னானாம். அவன் மனைவியும் சப்தரிஷிகளில் ஆறு பேர்களின் மனைவியைப் போல உருவெடுத்து தன் கணவனின் காமத்தைத் தணித்தாளாம்.

  ஆனால் ஏழாவது முனிவரின் மனைவியான அருந்ததியைப் போல மட்டும் உருவெடுக்க முடியவில்லையாம் அதற்குக் காரணம் அருந்ததி ஒரு ஆதி திராவிடப் பெண்ணாம்.
  ஆதாரம்: பேரறிஞர் அண்ணா சொன்ன குட்டிக் கதைகள் 100 என்ற நூல்

  Read more: http://viduthalai.in/e-paper/96560.html#ixzz3SITopAdp

  தமிழ் ஓவியா said...

  ஜாதி கணக்கெடுப்பில் உள்நோக்கமில்லை
  முதல்வர் சித்தராமையா

  பெங்களூரு, பிப்.21 ''பொது நியாயப்படி, அனைவருக்கும் கிடைக்க வேண்டிய சலுகைகள், கிடைக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில், ஜாதி கணக்கெடுப்பு நடத்தப்படு கிறது. இதில், எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை, என்று, முதல்வர் சித்தராமையா கூறினார்.

  மைசூரு மண்ட ஹள்ளி விமான நிலையத் தில், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பொது நியாயப்படி, அனைவருக்கும் கிடைக்க வேண்டிய சலுகைகள், கிடைக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில், ஜாதி கணக்கெடுப்பு நடத்தப்படு கிறது. இதில், எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. அனைவருக்கும் சமமான சலுகையை வழங்கு வதன் மூலம், சமூக அபிவிருத்தியை, முன்னோக்கி கொண்டு செல்ல நடவடிக்கை மேற் கொள்ளப் பட்டுள்ளது. ஆனால், இதை பற்றி சிலர், தேவையின்றி குற்றம் சாட்டி வருகின் றனர்; இதற்கு, அரசு பணி யாது. சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு, கூடுதல் முக்கியத்துவம் தரப்படும். மத்திய அரசு, இது போன்ற திட்டங்களை குறைத்து கொள்வது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

  Read more: http://viduthalai.in/e-paper/96615.html#ixzz3SOxChszH

  தமிழ் ஓவியா said...

  வன்முறைக்கும், பயங்கரவாதத்திற்கும் காரணம்
  மத அடையாளங்களைச் சுமப்பவர்களே!

  அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து

  நியூயார்க் பிப் 21_ மத அடையாளத்தைச் சுமக்கும் சிலரே வன் முறைக்கும், பயங்கரவாதத் துக்கும் காரணமானவர் களாவர் மதத்தின் பெயரைக் கூறிக்கொண்டு மனித நேயமற்ற செயல் களைப் புரிபவர்கள் மீதான நடவடிக்கை எடுக் கும் கட்டாயத்தில் உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும் என்று பராக் ஒபாமா கூறியுள்ளார்.

  அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் புதன்கிழமை நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கான உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெ ரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரேசில், ருஷ்யா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 63 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மூன்று நாட்கள் நடக் கும் இந்த மாநாட்டில் அதிபர் பராக் ஒபாமா பேசியதாவது: உலகில் அதிகரித்து வரும் தீவிர வாதத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்க நாம் இங்கு கூடியுள்ளோம். ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு (இஸ்லாம்) எதிராக நட வடிக்கை அல்ல, இதை பல முறை தெளிவுபடுத்தி யுள்ளோம். எந்த ஒரு மதமும் மனிதர்களைக் கொல்வதை வலியுறுத்த வில்லை, மனித நேயத் தைத்தான் வலியுறுத்து கிறது. ஆனால் சிலர் மதத்தின் பெயரால் மக் களை துன்புறுத்துகின்ற னர். கொலை செய்கின்ற னர்.

  அடிமைகளாக வாழ்நாள் முழுவதும் வைத்திருக்கின்றனர். ஆகையால் நமது நட வடிக்கை மதத்தின் மரபு களைத் திரித்து மனித நேயத்திற்கு எதிரான நட வடிக்கையில் இறங்குபவர் களை ஒடுக்குவதாக இருக்கும். சில தீவிரவாத இயக் கங்கள் மதரீதியில் ஆன சமூகத்தை உருவாக்கு கிறோம் என்று கூறிக் கொண்டு அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் மதங்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கு கின்றன என பிரச்சாரம் செய்கிறார்கள். இளைஞர் களை இவர்கள் மூளைச் சலவை செய்கிறார்கள். இவர்களின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும். மதம் சார்ந்த பெரியவர்கள் இளைஞர் களை நல்வழியில் திருப்ப வேண்டும். காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் மனித நாகரிகம் வளர்ச்சி என்பது நீண்ட கால வரலாற்றை உடை யது, ஒவ்வொரு கால கட்டதிலும் புதிய பரிணா மத்தை உள்ளடக்கியது. ஆனால் மதங்கள் இந்த நவீன நாகரிக வளர்ச் சியை ஏற்றுக்கொள்வ தில்லை. அவர்கள் அனை வரும் நவீன வளர்ச்சிகள் எல்லாம் மதக் கோட் பாடுகளுக்கு எதிரானவை என்று கூறிக்கொண்டு வருகின்றனர். அறிவியல் வளர்ச்சியின் மூலம் கண்டுபிடித்த சாதனங்கள் மூலமாக அவர்கள் அறி வியல் வளர்ச்சி முட்டாள் தனமானது என்று பேசி வருகின்றனர். அவர்கள் முன் வைக்கும் எந்த ஒரு வாதத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஏனெ னில் அவர்கள் சொல்வது பொய். அவர்கள் எதிர் பார்க்கும் அங்கீகாரத்தை ஒருபோதும் நாம் அளித்துவிடக் கூடாது. அவர்கள் மதங்களைச் சார்ந்தவர்கள் அல்லர் அவர்கள் முழுக்க முழுக்க மனித சமூகத்திற்கு எதிரான செயல் களைச் செய்பவர்கள் தீவிரவாதச் செயல்களைச் செய்ப வர்கள் ஒரு மதத்தின் பின் னால் ஒளிந்து கொள் கின்றனர். தீவிரவாதிகளின் சித்தாந்தத்தை உலகம் முழுதும் உள்ள மக்கள் நிராகரித்துள்ளனர். இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று சில தீவிரவாதக் குழுக்கள் கூறுவதை ஏற்றுகொள்வது தவறான பார்வையாகும். அவர்கள் இஸ்லாத்தை எந்த வகை யிலும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை.

  அவர்கள் கடவுளின் பெயரால் அப்பாவிகளைக் கொலை செய்யும் பைத் தியக்காரர்களே. கடவு ளின் பெயரால் அப்பாவி களைக் கொல்பவர்கள் இந்துக்களானாலும் சரி, கிறிஸ்தவர்கள் ஆனாலும் சரி, யூதர்கள், புத்தமதத் தவர்கள் என எந்த மதத் தைச் சேர்ந்தவராகவும் இருக்க முடியாது. பயங்கர வாதத்துக்கு எந்த ஒரு மதமும் பொறுப்பல்ல. ஆனால், மத அடையா ளத்தைச் சுமக்கும் சிலரே வன்முறைக்கும், பயங்கர வாதத்துக்கும் காரண மானவர்களாவர்.

  தீவிரவாதத்தால் சிரியா, ஈராக்கை அய். எஸ்.அய்.எஸ். சீர் குலைத்து வருகிறது. அப்பாவி மக்கள் தலை துண்டிக்கப்பட்டு, உயிரு டன் எரித்துக் கொல்லப் படுகின்றனர். இது மன் னிக்க முடியாத கொடூரம். அதே நேரத்தில் மதத்தின் பெயரால் ஒரு சாராரை அடிமைப்படுத்தும் செயலும் நீண்ட காலமாக நடந்து வருகிறது. மதத்தின் பெயரால் மனித நேயத்திற்கு எதி ரான போக்கை மதத்தின் பெயரைக்கொண்டு செய்பவர்களை மன்னிக்க முடியாது. இவர்களின் தீவிரவாதச் செயல்களுக் குக் கூடுதல் கண்காணிப்பு தேவைப்படுகிறது. ஆனால், பயங்கரவாதத் துக்கு எதிரான இந்தப் போரில் வெற்றி பெறு வோம் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உலக நாடுகளின் ஒத் துழைப்பு இந்த நம்பிக் கையை மேலும் பலப் படுத்தியுள்ளது என்றார் அவர்.

  Read more: http://viduthalai.in/e-paper/96617.html#ixzz3SOxNNe4t

  தமிழ் ஓவியா said...

  இதுதான் மகா சிவராத்திரி நிர்வாண சாமியார்களின் ஆபாசம்!


  ஜூனாகாத், பிப்.21_ குஜராத்தின் ஜூனாகத் பாவ்நாத் கோவிலில் ஆயிரக்கணக்கான நிர்வாண சாமியார்களின் அமர்க்களமான ஆட்டம் பாட்டம் ஊர்வலத்துடன் மகாசிவராத்திரி வழிபாடு நடைபெற்றது. குஜராத் மாநிலம் ஜூனாகாத்தின் கிர்னார் மலைப் பகுதியை சிவனின் முகமாக கருதி இந்துக்கள் வழிபாடு நடத்துகின்றனர். 10 ஆயிரம் படிக்கட்டுகளைக் கடந்து வழிபாடு நடத்து வது இங்கு வழக்கம். இம்மலை அடிவாரத் தில் இந்து மதத்தின் 'தற்கொலைப்படை'யாக செயல்பட்டு வரும் அகோ ரிகள் எனப்படும் நிர் வாண சாதுக்களின் கிளை மடங்கள் ஏராளமாக உள்ளன. பொதுவாக கும்பமேளா காலங்களில் தான் பல்லாயிரக்கணக் கில் நிர்வாண சாதுக்கள் ஒன்று திரண்டு பேரணி நடத்தி ஹரித்துவார், அலகாபாத் உள்ளிட்ட இடங்களில் நீராடி வழி பாடு நடத்துவர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி நாளில் கிர்னார் மலை அடி வாரத்தில் உள்ள பாவ் நாத் கோயிலில் இந்த நிர்வாண சாதுக்கள் ஒன்று கூடி நீராடி வழி பாடு நடத்துவது வழக்கம். இவர்கள் நீராடுவது மிகச் சிறிய அளவிலான கிணறு போன்ற இடத்தில்தான்.. இந்த கிணற்றில் நிர் வாண சாதுக்களின் எந்தப் பிரிவு முதலில் குளிக் கிறதோ அவர்களுக்கு சிவபெருமானின் அருள் நேரடியாக கிடைத்து விடும் என்பது நம்பிக்கை யாம். இதற்காக நிர்வாண சாதுக்களிடையே பெரும் போட்டி அடிதடியும் நடைபெறும்.

  இந்த ஆண்டும் பாவ்நாத் சிவ ராத்திரி திருவிழா கடந்த 15-ஆம் தேதி தொடங் கியது. இதையொட்டி நாடு முழுவதும் இருந்து சாம்பல் பூசிய உடம்புடன் நிர்வாண சாமியார்கள் ஆயிரக்கணக்கில் ஜூனா காத் கிர்னார் மலை அடி வாரத்தில் முகாமிட்டிருந் தனர். மலைஅடிவாரத் தில் கொட்டும் பனியிலும் இவர்கள் அனைவரும் நிர்வாணமாகவே விடிய விடிய வலம் வந்து கொண்டிருந்தனர். மகாசிவராத்திரியின் கடைசி நாளில் அதி காலையில் சிறப்பு வழி பாடு நடத்தப்பட்டன. முன்னதாக நிர்வாண சாமியார்களின் பிரம் மாண்ட ஊர்வலம் நடத் தப்பட்டது. நிர்வாண மாகவே ஆடிப் பாடி பலவகை சாகசங்களை நிகழ்த்தியபடி இவர்கள் ஊர்வலமாக வந்தனர். மிரள வைக்கும் சிலம் பாட்டம், கத்திச் சண்டை உள்ளிட்ட இந்த நிர் வாண சாகச நிகழ்ச்சிகள் பல மணிநேரம் நடை பெற்றது. உள்நாடு மற்றும் வெளிநாட்டினர் பல்லாயிரக்கணக்கில் திரண்டு இந்த 'நிர்வாண' சாதுக்களின் சாகசங்களை பார்வையிட்டனர். பின் னர் பாவ்நாத் கோயிலின் புனித கிணற்றில் போட்டி போட்டுக் கொண்டு நிர் வாண சாதுக்கள் புனித நீராடி வழிபாடு நடத்தின ராம். இந்தத் திருவிழா வையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

  Read more: http://viduthalai.in/e-paper/96621.html#ixzz3SOxUzuV6

  தமிழ் ஓவியா said...

  இன்றைய ஆன்மிகம்?

  சமஸ்கிருதம்

  கடவுள் சபலங்களுக் கும், சடங்குகளுக்கும் அப்பாற்பட்டவர் என் றால் கோயிலில் சமஸ் கிருதத்தில்தான் அர்ச் சனை செய்யப்பட வேண்டும். குட முழுக்கு சமஸ்கிருதத்தில்தான் நடைபெற வேண்டும் என்பது கடவுளைக் கேலி செய்வது ஆகாதா? ஆகமம் என்றாலும் அவாளுக்குத்தான் சாதகமா?

  Read more: http://viduthalai.in/e-paper/96619.html#ixzz3SOxcOCal

  தமிழ் ஓவியா said...

  மனித சமுதாயத்தில்...


  நாம் உண்மையான பகுத்தறிவுவாதிகளாக ஆகிவிடுவோமேயானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல, சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டுவிடும்; மனித சமுதாயத்தில் ஒழுக்கமும், நாணயமும் ஏற்படும். (விடுதலை, 16.11.1971)

  Read more: http://viduthalai.in/e-paper/96607.html#ixzz3SOxr26SJ

  தமிழ் ஓவியா said...

  பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்

  வைரம் ஜொலிக்க வேண்டுமானால், சாணை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதைப்போல், நல்வாழ்வு பெற வேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்.

  நமது இலட்சியம் அரசியல் வேட்டையல்ல, மந்திரி நாற்காலியல்ல. நாலாறு பெறுவதல்ல. நமது மூதாதையர் ஆண்ட நாட்டை மீண்டும் பெறுவது - புதிய அரசை அமைப்பது, அதுதான் நம்முடைய நோக்கம்.

  Read more: http://viduthalai.in/page2/96579.html#ixzz3SP08tthy

  தமிழ் ஓவியா said...

  ஜா(பா)தகம்

  வீரன்வயல் வீ. உதயக்குமரன்

  உங்க பொண்ணு எங்களுக்கு பிடிச்சி போச்சி.. உங்க எல்லோருக்கும் என் பையனையும் பிடிச்சி போச்சி.. ஆனா ரெண்டு பேரோட சாதகமும் பொருந்த லேன்னு சொல்றது சரியா படலே சம்மந்தி உடைந்த குரலில் சொன்னார் சிவ சங்கரன்.

  கள்ளிமேட்டு சோசியன் கணிப்பு தப்பாது. கல்யாணம் நடந்தா ஆறே மாசத்துல என் பொண்ணு முண்டச்சி ஆயிடுவா
  அழுத்தமாய் வாதித்தார் பெண்ணின் தந்தை நாச்சிமுத்து.

  ”சரி வேற சோசியரை பார்ப்போம். அவனும் இதையே சொன்னா... இந்த கல்யாணம் வேண்டாம்”

  ”சம்மந்தியும் விடறதா இல்ல. சரி உங்க திருப்திக்காக வேற ஜோசியனையும் பாக்கலாமே நான் சோதிடம், ஆன்மீகம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவன் இதெல்லாம் சுத்த பேத்தல்னு நிரூபிக்கதான் நான் வேற சோசியனை பாக்கலாம்னு சொல்றேன்”

  சம்மந்திகள் இருவரும் கொத்தமங்கலம் கோபாலிடம் சாதகங்களை நீட்டி னார்கள். கோபால் தனது காவி பற்கள் வெளியே தெரிய சிரித்தார்.

  ”இந்த கல்யாணம் நடக்கும்.. ஆனா உடனே நடக்காது.. ஆறு வருஷம் பொறுத்திருக்கணும்”

  ”என்ன சோசியரே.. உங்க கிட்ட கல்யாணத்துக்கு பொருத்தம் பாக்க சொன்னா அறுபதாம் கல்யாணத்துக்கு காத்திருக்க சொல்றீங்க”

  சிவசங்கரன் தனது எரிச்சலை கொட்டித் தீர்த்தார். மேலும் நான்கு சோதிடர்களை பார்த்த பிறகு சிவசங்கரன் ஒரு முடிவுக்கு வந்தார்.

  ”சம்மந்தி எவனாவது ஒரே மாதிரி சொன்னானா.. நாலு பேரும் நாலு விதமா சொல்றான். இப்ப வாங்க.. நாம முதல்ல பாத்த கள்ளி மேட்டு சோசியன் கிட்ட போகலாம் ம் அவர்தான் கரெக்டான ஆள்”

  ம்.. இந்த சாதகத்துக்கு ரெண்டு பேர்க்கும் போன வருஷமே கல்யாணம் நடந்திருக்கணுமே கள்ளி மேட்டு சோதிடர் தனது கணிப்பை சொன்னதும் பொங்கி எழுந்தார் நாச்சிமுத்து.

  ”படவா ராஸ்கல் உன் பேச்சை கேட்டு ஒருவருஷம் வீணாப் போச்சிடா.. போன வருஷம் ஒரு பேச்சு இந்த வருஷம் ஒரு பேச்சு இதான் சாதகமா.. வாங்க சம்மந்தி நாமளே நாள் குறிக்கலாம்”

  Read more: http://viduthalai.in/page3/96584.html#ixzz3SP0hKKoH

  தமிழ் ஓவியா said...

  வாத்தியாரே தீர்ப்பை மாற்று!

  மனைவியின் விருப்பமின்றி கணவன் வற்புறுத்தி உறவுகொள்வது பாலியல் வன்முறைக் குற்றமாக்கப்பட வேண்டும் என்று கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் தனிப்பட்ட பிரச்சி னையை பொதுப்பிரச்சினையாகக் கருத முடியாது என்று நிராகரித்துவிட்டது.

  டில்லியில் அலுவலராகப் பணி புரியும் ஒரு பெண் தன்னுடைய கணவ னால் தொடர்ச்சியாக பாலியல் வன் முறைக்கு ஆளாகி உள்ளார். அப்படி தன்னுடைய விருப்பத்துக்குமாறாக இருந்துள்ள கணவனின் செயலை குற்ற மாக்கிட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

  அப்பெண்ணின் வழக்கில் சட்டத்தின் பார்வையில் கணவன் மனைவியிடம் நடந்துகொள்ளும் பாலியல் உறவு என்பதை குற்றமாகக் கருத இடம் இல்லை என்றும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 375இன்படி, மணமான இணையருக்குள் பாலியல் உறவு என்பதில் அவர்களுக்குள் ஒப்புத லின்றியே இருந்தாலும், மனைவியின் வயது 15வயதுக்குள் இல்லாமல், மனைவியின் ஒப்புதலின்றி அவள் கணவன் உறவு கொண்டால் அது பாலியல் வன்முறை ஆகாது என்று கூறப்பட்டுள்ளது.

  2012ஆம் ஆண்டு டில்லியில் பாலியல் வன்முறை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப் பட்ட நீதிபதி வர்மா தலைமையிலான குழு அறிக்கையில், மணமான பின்னர் விருப்பமின்றி உறவு கொள்வதைக் குற்றமாகக் கருதவேண்டுமா?

  என்ப தைக் கவனத்தில் கொள்ளும்போது, விருப்பமின்றி கணவன் மனைவி யிடையே ஏற்படக்கூடிய உறவைக் குற்றமாகக் கருதினால், அது திருமணம் என்பதற்கான முறையையே அழித்து விடும் ஆற்றல் உள்ளதாக ஆகிவிடும் என்று இந்திய அரசு கருதுகிறது. குடும்ப முறையே முழுமையாக பெரிய அழுத் தத்துக்கு உள்ளாகிவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  குடும்ப முறையை சீர்குலைத்துவிடும் என்பதால் திருமணத்துக்குப்பின்னர் கணவன் மனைவியிடையே விருப்ப மின்றி உறவு கொள்வதைக் குற்றமாகக் கருத முடியாது என்று இப்பிரச் சினைகுறித்து விவாதிக்க அமைக்கப் பட்ட நாடாளுமன்ற குழு கூறிவிட்டது.

  அதேநேரத்தில், சட்டப்படி பிரிந்து இருக்கும்போது கணவன் மனைவியி டையே பாலியல் தொல்லைகள் நிகழும்போது, அதைக் கடுமையானக் குற்றமாகக் கருதவேண்டும். என்றும் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை கூறியிருந்தது.

  வழக்கு தொடுத்த பெண்ணின் வழக்குரைஞர் கோலின் கோன்சால்வ்ஸ் கூறுகையில், இப்போதைக்கு வழக்குக் கான மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். ஆனாலும், பெண் களுக்கான அமைப்புவாயிலாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.

  Read more: http://viduthalai.in/page3/96588.html#ixzz3SP15gTcq

  தமிழ் ஓவியா said...

  புத்தர்தம் பகுத்தறிவு ஒளி!

  ’இவ்வுலகில் புலன் இன்பங்களில் கட்டுப்பாடு அற்றவர்களாய், இனிய பொருட்களில் பேரவா கொண்டவர் களாய், குற்றச் செயல்களோடு தொடர்பு உடையவர்களாய், அழிவு நிலைப் பார்வை உடையவர்களாய், குறுகிய மதியினராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச்சியை உண்பவர்களன்று’

  ’இவ்வுலகில் கடுமையானவராய் நம்பிக்கைத் துரோகம் செய்பவராய், கருணை அற்றவராய், அதிக சுயநலம் கொண்டவராய், கருமியாய், எவருக்கும் ஏதும் அளிக்காதவராய், புறங்கூறுபவ ராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச் சியை உண்பவர்கள் அன்று’

  இவ்வுலகில் தீயொழுக்கம் உடை யவராய், தம் தொழிலில் ஏமாற்றுக் காரராய், கடனைத் திருப்பித்தர மறுப்பவராய், பாசாங்குக்காரராய், பிறரை இகழ்ச்சியாய் நினைப்பவராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச் சியை உண்பவர்கள் அன்று.

  இவ்வுலகில் பிறருக்குத் துன்பம் இழைப்பவராய், பிறர் பொருள் கவர்பவராய், தீயொழுக்கம் உள்ளவராய் மரியாதை அற்றவராய், கொடுஞ் செயல்களில் கட்டுப்பாடு அற்றவராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச் சியை உண்பவர்கள் அன்று.

  இவ்வுலகில் கொலை செய்வோராய், கொலை செய்யத் தூண்டுதலாய் இருப்போராய், திருடராய், பொய்யராய், வஞ்சிப்பவராய், ஏமாற்றுக்காரராய் தவறான காமச் செயல்களில் ஈடுபடு வோராய் இருப்பவர்களே தீயர்கள்! இறைச்சியை உண்பவர்கள் அன்று.

  இவ்வுலகில் சினம் மிகுந்தோராய், தற்பெருமை, தற்புகழ்ச்சி, பொறாமை, தீய நெறிகளில் நிலைப்போராய் இருப்பவர்களே தீயர்கள். இறைச்சியை உண்பவர்கள் அன்று.

  எவரொருவர் மீனையும், இறைச் சியையும் உண்பவராய் இருந்தும், நல் லோராய், பற்றுக்களைக் கடந்தோராய், நேரிய வழியில் மகிழ்வோராய், வெல்லப்பட்ட புலன்களை உடைய வராய், பேராசை, வஞ்சகம், தற்புகழ்ச்சி அற்றோராய், கருணை உள்ளவராய், இறப்பிற்குப் பின்னும் நற்பெயர் பெறு வோராய், நன்னெறியில் நிலைப் போராய் இருப்பவர்கள் தீயோராக கருதப்படுவதில்லை.

  எவரொருவர் பற்றுகள் நிறைந் தவராய், பேராசை பிடித்தவராய், ஏமாற் றுக்காரராய், வஞ்சகம் செய்வோராய், குற்றச் செயல்களில் தொடர்புடை யோராய், புலன்களை வெல்ல முடி யாதவராய், தீய ஒழுக்கமுடையோராய், நம்பிக்கைத் துரோகம் புரிபவராய், கருணை அற்றவராய், இறப்பிற்குப் பின்னும் தீய பெயர் பெறுவோராய்,

  தீய நெறியில் நிலைப் போராய் இருந்து, சாம்பல் பூசியவராய், சடைமுடி வளர்ப் பவராய், பருவத்திற்கேற்ப பூஜைகள், யாகங்கள் செய்வோராய், எல்லாவித சடங்குகளையும் செய்பவராய் இருப் பவர், மீனையும் இறைச்சியையும் தவிர்ப்பவராய் இருப்பதினால் நல் லோராக கருதப்படுவது இல்லை.

  மீனையும், இறைச்சியையும் உண் ணாது தவிர்த்தலும், நிர்வாணமாய் இருத்தலும், குடுமி வைத்தலும், மழித் தலும், உரோம உடை உடுத்தலும், யாகத் தீ வளர்த்தலும் போன்ற இவை யெல்லாம் பேரின்ப ஞானம் பெற போதிய வழிமுறைகள் அன்று. தன்னை வருத்தலும், யாகத்தீயில் தானப் பொருள்களை இழத்தலும், சடங்குகளும், குற்றம் உடைய மனிதனைத் தூய்மைப் படுத்தி விடாது.

  ’தீமைகளை உருவாக்குவது தீயசெயல் களே அன்றி மீனையோ இறைச் சியையோ உண்பதனால் அன்று’

  உங்கள் புலன்களை அடக்குங்கள்! உண்மையைக் கடைப்பிடியுங்கள்! உங்கள் சக்திகளை நீங்களே ஆளும் திறன் பெறுங்கள்! இரக்கத்தோடு இருங்கள்! அனைத்துக் கட்டுக்களையும் விட்டொழித்து தீமைகளை வென்ற துறவிதான் கண்டவற்றாலும் கேட்ட வற்றாலும் களங்கப்படுவது இல்லை.

  புனிதர் புத்தரின் போதனைகளி லிருந்த சத்தியத்தை உணர்ந்த துறவி ஆமகந்தர், அங்கேயே அப்போதே தன்னையும் தன் சீடர்களையும் நன் னெறியாம் தம்மநெறிக்கு ஒப்புக் கொடுக்க புனிதர் புத்தரைப் பின்பற்றுவோர் களாகத் தம்மை ஏற்கும்படி வேண்டிப் பணிந்தார்.
  இவ்வாறு புத்தர் கூறினார்.

  (அண்ணல் அம்பேத்கர் எழுதிய நூலின் மொழி பெயர்ப்பு)

  மொழியாக்கம்: திருமகள்

  Read more: http://viduthalai.in/page3/96587.html#ixzz3SP1Cvdv4

  தமிழ் ஓவியா said...

  அய்வருக்கும்....

  பாஞ்சாலி
  யார்? -
  வாக்காளர்
  பட்டியல்
  தயாரிப்பவர்
  கேட்டாராம்....
  நவ.5
  என பதில்வர
  திகைத்துப் போய்
  எடுத்தார்
  ஓட்டம்?

  யார் கண்டுபிடிப்பு!?

  நாங்கள்
  எதையும் கண்டுபிடிக்கவில்லையா?
  மதம், சாதி, கடவுள்...
  எங்களைத் தவிர - வேறு
  யாரால் கண்டுபிடிக்க முடியும்?
  சவால்! சவால்!

  - மா. அழகிரிதாசன்

  Read more: http://viduthalai.in/page3/96589.html#ixzz3SP1YH6Hu

  தமிழ் ஓவியா said...

  மோடியின் 10 லட்ச ரூபாய் சட்டை ஏலம்
  பாவத்தைப் போக்க கங்கையில் கரைக்கிறார்களோ!

  குடியரசு தினத்தன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் இருந்த போது மோடி அணிந்த ஆடை உலக அளவில் மிகவும் கடுமையான விமர் சனத்திற்கு ஆளானது.

  இங்கிலாந்து நிறுவனம் ஒன்றினால் தனிப்பட்ட முறையில் தங்க இழையால் நரேந்திர தாமோதர் மோடி என பெயர் பொறிக் கப்பட்டு நெய்து ஆஸ்திரியா நாட்டு ஆடை வடிவமைப்பாளர்களின் கைவண்ணத்தில் ஆடையாக நரேந்திர மோடி அணிந்தார். இந்த ஆடை நெய்வ தற்கு, ஆடை வடிவமைக்க தைத்து கொடுக்க என்று ரூ 10 லட்சம் வரை செலவானது.

  இது குறித்து இன்றுவரை மோடி எதுவும் கூறவில்லை. ஆனால் இந்த ஆடை விவகாரம் பெரிய அளவில் மோடிக்கு அவப் பெயரை வாங்கிக்கொடுத்ததுமல்லாமல் டில்லி தேர்தலின் தோல்விக்கு ஒரு காரணமாகவும் அமைந்துவிட்டது.

  இந்த ஆடை அணிந்த நாளில் இருந்து தொடர்ந்து மோடிக்குக் கெட்ட சகுனமாகவே இருந்து வந்ததாம், காஷ்மீர் விவகாரத்தில் ஆட்சியமைப் பதில் இருந்து பின்னடைவு, டில்லி தேர்தல் தோல்வி, பீகார் மாநில அரசி யலில் தலையிட்டதன் மூலம் கூட்டணி கட்சிகளிடம் பிணக்கம் என தொடர்ந்து அரசியல் சிக்கல் ஏற்பட்டது.

  இதற்கு முக்கிய காரணம் இந்த ஆடையின் மூலம் கண் திருஷ்டி ஏற்பட்டுவிட்டது என்று கூறி ஆடையை ஏலம் விட முடிவு செய்தார்களாம். வெறும் ஆடையை மட்டும் ஏலம் விட்டால் ஊடகங்கள் பிரச்சினையை எழுப்பும் என்று கூறி மோடி குஜராத் முதல்வராக இருந்த போதுஅவருக்கு பரிசாக அளித்த 400-க்கும் மேற்பட்ட பொருட்களையும் ஏலம் விடப் போகி றார்களாம்.

  இதில் வரும் தொகை கங்கை சுத்திகரிப்பு இயக்கத்திற்கு கொடுக்கப் படும் என்று மோடியின் தரப்பில் கூறப்படுகிறது. (இதிலும் இந்துத்துவா தானா?)

  கடந்த வெள்ளியன்று மோடியின் ஆடையை ஏலம் விட்டு அதில் வரும் பணத்தை தூய்மை இந்தியா இயக்கத் திற்கு வழங்கப்படும் என்று கூறிவந்த நிலையில் திடீரென கங்கை சுத்திகரிப்பு இயக்கத்திற்கு வழங்கப்படும் என்று அறிவித்ததன் பின்புலம் இப்படியும் இருக் கலாம்; அவர்கள் நடவடிக்கைப்படி அவர் செய்த பாவம் எல்லாம் கங்கையில் கரைக்கும் ஏற்பாடாக இருக்குமோ!

  Read more: http://viduthalai.in/page3/96590.html#ixzz3SP1hrKjo

  தமிழ் ஓவியா said...

  தமிழகத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகள்

  நோக்கியா

  கடந்த ஆகஸ்டிலிருந்து தமிழகத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகளினால் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை 50,000 தொட்டுள்ளது. இதில் நோக் கியா மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் மாத்திரம் நேரடியாக மற்றும் அதனைச் சார்ந்த தொழில் செய்து வந்த 25,000 பேர் நிரந்தரமாக வேலையிழந்துள்ளனர்.

  நோக்கியா தொழிற்சாலை வரி ஏய்ப்பிற்காக மூடப்பட்டதா?

  2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நோக்கியா தனது தொழிற்சாலையை சென்னையில் திறந்தது. மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய பகுதிகளில் இருந்த சந்தைகளுக்கு இங்கிருந்து மொபைல் போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

  ஒப்பந்தத்தின் படி ஏற்றுமதிக்கான தயாரிப்புகள் மாத்திரமே இங்கு தயாரிக் கப்பட்டு வந்தது. ஆனால் ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக, உள்ளூர் சந்தையில் பெரும் வரவேற்பு இருப்பதை அறிந்து கொண்டு விதிமுறைகளை மீறி மொபைல் போன்களை உள்நாட்டுச் சந்தையிலும் விற்றது.

  நோக்கியாவின் இந்த விதி முறை மீறிய செயல்பாட்டின் காரண மாக தமிழ்நாட்டிற்கு சுமார் 3000 கோடி வரி இழப்பு ஏற்பட்டது. கலைஞர் தலைமை யினால் ஆன அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் விதிமுறை மீறிய நோக்கியா நிறுவனம் தமிழக அரசுக்கு 2,400 கோடி ரூபாய் வரி கட்ட வேண்டும் என அறிவிக்கை அனுப்பியது.

  மற்றோரு வழக்கில் நோக்கியா மைக்ரோசாஃப்டிற்கு மாற்றுவதற்கு முன்பாக 3500 கோடி ரூபாய்க்கு உத்தரவாதமளிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

  ஆனால், நோக்கியா நிறுவனம் சிறீப்பெரும்புதூர் தொழிற்சாலை கைமாறவில்லை, அதற்கு மாறாக மொபைல் போன்களை உற்பத்தி செய்து தருவதாக மட்டும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம் என்று நீதிமன்றத்தில் கூறியது. இதன் மூலம் சிறீப்பெரும்புதூர் நோக்கியா ஆலை தொடர்ந்து இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  ஆனால் திடீரென மைக்ரோசாப்ட் நிறுவனம் மொபைல்போன் வாங்குவதை நிறுத்தி விட்டது. ஆகவே தொழிற்சாலையை மூடப் போகிறோம் என்று அறிவித்து கடந்த நவம்பர் முதல் இந்நிறுவனம் இழுத்து மூடப்பட்டது. நோக்கியா நிறுவனம் இயங்கிக்கொண்டு இருந்த போது சுமார் 8000 தொழிலாளர்கள் நேரடியாக பணிசெய்து கொண்டு இருந்தனர்.

  இவர்களை அழைத்துச்செல்ல 27 ஒப்பந்தப் பேருந்துகள் இயங்கிக் கொண்டு இருந்தன. மேலும் நோக்கியா நிறுவனத்தில் பராமரிப்பு பணிக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் என 25,000 பேரின் வாழ்வாதாரம் நோக்கியா நிறுவனத்தை நம்பி இருந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் நோக்கியா தன்னுடைய பணியாளர்களை வெளி யில் அனுப்ப ஆரம்பித்து விட்டது.

  எதிர்காலத்தில் நோக்கியா நிறுவனம் மூடப்படும் என்பதால் வேறு வழியின்றி சுமார் அய்ந்தாயிரத்திற்கும் மேற்பட் டோர், தானாகவே பணியிலிருந்து விலகிவிட்டனர். ஒப்பந்தத்தை மீறி உள்ளூர் சந்தையில் விற்பனையில் ஈடுபட்ட நிறுவனம் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றம் மூலம் வரியை திருப்பித்தரக்கோரினால் ஆலையை மூடிவிட்டு ஓடிவிட்டது. நவம்பர் மாதம் முற்றிலுமாக அனை வரும் வெளியேற்றப்பட்டனர்.

  ஃபாக்ஸ்கான்

  சிறீபெரும்புதூரில் நோக்கியா செல்போன் தொழிற்சாலை வளாகத் தில் செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் ஃபாக்ஸ்கான் தொழிற் சாலை இயங்கி வந்தது. இத்தொழிற் சாலையில் நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் பயிற்சி தொழிலாளர்கள் என மொத்தம் சுமார் 8000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.

  இந்நிலையில் நோக்கியா தொழிற் சாலை மூடப்பட்டதை தொடர்ந்து பாக்ஸ்கான் நிறுவனம் தனது உற்பத் தியை குறைத்துக்கொண்டது. இதனால் இத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஒப்பந்த தொழிலாளர்கள், பயிற்சி தொழிலாளர்கள் சுமார் 6400 பேர் ஏற்கனவே வேலை இழந்துள்ளனர். இந்த நிலையில் 2014-ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி ஆலையை முழு மையாக மூடிவிட்டது. இதன் மூலம் 8000 பேர் வேலை இழந்துள்ளனர்.

  Read more: http://viduthalai.in/page3/96591.html#ixzz3SP1oxxwn