Search This Blog

24.2.15

மதவாதம்பற்றி ஒபாமா

மதவாதம்பற்றி ஒபாமா 


மத அடையாளத்தைச் சுமக்கும் சிலரே வன்முறைக்கும், பயங்கரவாதத்துக்கும் காரணமானவர்களாவர்; மதத்தின் பெயரைக் கூறிக்கொண்டு மனித நேயமற்ற செயல்களைப் புரிபவர்கள் மீதான நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்தில் உலக நாடுகள் ஒன்று சேரவேண்டும் என்று பராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் (19.2.2015) பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கான உச்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரேசில், ருஷ்யா, தென் ஆப்ரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 63 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மூன்று நாட்கள் நடந்த அந்த மாநாட்டில் அதிபர் பராக் ஒபாமா பேசியதாவது: உலகில் அதிகரித்து வரும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்க நாம் இங்கு கூடியுள்ளோம். ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு  எதிரான நட வடிக்கை அல்ல, இதை பல முறை தெளிவுபடுத்தியுள் ளோம். எந்த ஒரு மதமும் மனிதர்களைக் கொல்வதை வலி யுறுத்தவில்லை, மனித நேயத்தைத்தான் வலியுறுத்துகிறது. ஆனால், சிலர் மதத்தின் பெயரால் மக்களைத் துன்புறுத் துகின்றனர். கொலை செய்கின்றனர். அடிமைகளாக வாழ்நாள் முழுவதும் வைத்திருக்கின்றனர்.


ஆகையால் நமது நடவடிக்கை மதத்தின் மரபுகளைத் திரித்து மனித நேயத்திற்கு எதிரான நடவடிக் கையில் இறங்குபவர்களை ஒடுக்கவதாக இருக்க வேண்டும். சில தீவிரவாத இயக்கங்கள் மதரீதியில் ஆன சமூகத்தை உருவாக்குகிறோம் என்று கூறிக்கொண்டு, அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் மதங்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்குகின்றன என பிரச்சாரம் செய்கிறார்கள். இளை ஞர்களை இவர்கள் மூளைச்சலவை செய்கிறார்கள். இவர் களின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்கவேண்டும்.


மதம் சார்ந்த பெரியவர்கள் இளைஞர்களை நல்வழியில் திருப்பவேண்டும். மனித நாகரிகம் வளர்ச்சி என்பது நீண்டகால வரலாற்றை உடையது, ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய பரிணாமத்தை உள்ளடக்கியது. ஆனால் மதங்கள் இந்த நவீன நாகரிக வளர்ச்சியை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் அனைவரும் நவீன வளர்ச்சிகள் எல்லாம் மதக்கோட்பாடுகளுக்கு எதிரானவை என்று கூறிக் கொண்டு வருகின்றனர். அறிவியல் வளர்ச்சியின் மூலம் கண்டுபிடித்த சாதனங்கள் மூலமாக அவர்கள் அறிவியல் வளர்ச்சி முட்டாள் தனமானது என்று பேசி வருகின்றனர்.  அவர்கள் முன்வைக்கும் எந்த ஒரு வாதத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது.


ஏனெனில் அவர்கள் சொல்வது பொய். அவர்கள் எதிர்பார்க்கும் அங்கீகாரத்தை ஒருபோதும் நாம் அளித்துவிடக் கூடாது. அவர்கள் மதங்களைச் சார்ந்த வர்கள் அல்ல; அவர்கள் முழுக்க முழுக்க மனித சமூகத்திற்கு எதிரான செயல்களைச் செய் பவர்கள்  தீவிரவாதச் செயல்களைச் செய்யும் இவர்கள் ஒரு மதத்தின் பின்னால் ஒளிந்துகொள்கின்றனர். தீவிர வாதிகளின் சித்தாந்தத்தை உலகம் முழுதும் உள்ள மக்கள் நிராகரித்துள்ளனர்.  இஸ்லாமியர்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்று சில தீவிரவாத குழுக்கள் கூறுவதை ஏற்றுக் கொள்வதே தவறான பார்வையாகும். அவர்கள் இஸ்லாத்தை எந்த வகையிலும் பிரதிநிதித்துவம் செய்ய வில்லை.


அவர்கள் கடவுளின் பெயரால் அப்பாவிகளைக் கொலை செய்யும் பைத்தியக்காரர்களே! கடவுளின் பெயரால் அப்பாவிகளைக் கொல்பவர்கள் இந்துக்களா னாலும் சரி, கிறிஸ்தவர்கள் ஆனாலும் சரி, யூதர்கள், புத்தமதத்தவர்கள் என எந்த மதத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க முடியாது.


பயங்கரவாதத்துக்கு எந்த ஒரு மதமும் பொறுப்பல்ல. ஆனால், மத அடையாளத்தைச் சுமக்கும் சிலரே வன்முறைக்கும், பயங்கரவாதத்துக்கும் காரணமான வர்களாவர். தீவிரவாதத்தால் சிரியா, ஈராக்கை ஐ.எஸ்.ஐ.எஸ். சீர்குலைத்து வருகிறது. அப்பாவி மக்கள் தலை துண்டிக் கப்பட்டு, உயிருடன் எரித்துக் கொல்லப்படுகின்றனர். இது மன்னிக்க முடியாத கொடூரம் அதே நேரத்தில் மதத்தின் பெயரால் ஒரு சாராரை அடிமைபடுத்தும் செயலும் நீண்ட காலமாக நடந்து வருகிறது.


மதத்தின் பெயரால் மனித நேயத்திற்கு எதிரான போக்கை மதத்தின் பெயரைக்கொண்டு செய்பவர்களை மன்னிக்க முடியாது. இவர்களின் தீவிரவாத செயலுக்குக் கூடுதல் கண்காணிப்பு தேவைப்படுகிறது. ஆனால், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தப் போரில் வெற்றி பெறுவோம் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உலக நாடுகளின் ஒத்துழைப்பு இந்த நம்பிக்கையை மேலும் பலப்படுத்தியுள்ளது - என்று அமெரிக்க அதிபர் பேசியது வரவேற்கத்தக்கது.


மதத்தைப்பற்றி பொதுவான கருத்துக்களை அவர் ஒருபுறம் கூறியிருந்தாலும், அதுகுறித்து பிரதிவாதங்கள் இப்பொழுது முக்கியமல்ல. மாறாக மதத்தால் நாட்டு மக்கள் எந்த அளவுக்குப் பெரும் துன்பத்திற்கு இலக்காக்கப் படுகிறார்கள் என்ற அதிபரின் கவலை கண்டிப்பாகக் கவனத்தில் கொள்ளப்பட்டு ஆக வேண்டும்.


இந்தியாவிற்கு அவர் வந்த போதும் சரி, இந்தியாவின் பயணத்தை முடித்து அவர் அமெரிக்கா சென்ற பிறகும் சரி - இந்தியாவில் நடைபெற்று வரும் இந்துத்துவா வெறித் தாக்குதலை மனதிற் கொண்டு சொன்ன கருத்துக்கள் மிக முக்கியமானவை என்பதில் அய்யமில்லை.


இந்து மதத்தைப் பொறுத்தவரை அது பிறவியிலேயே பேதம் கற்பிக்கக் கூடியதாகும். அடக்குமுறைக்கு ஆளாக் கப்பட்டவர்கள் உரிமைக் குரல் கொடுத்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் அடக்கப்பட வேண்டும்; அதற்காக உயர் ஜாதிக்காரர்கள் ஆயுதம் எடுத்துப் போராட வேண்டும் என்று வன்முறையை மதத்தின் கருவிலேயே வைத்துள்ள மதம் இந்து மதமாகும்.


எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றினர் என்றால் தெரிந்து கொள்ளலாமே! இந்திய அளவில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்து வெறியர்கள் வாலாட்ட முடியாது என்பதற்குக் காரணம் இங்கு தோன்றிய தலைவர் பெரியாரும், அவர்கள் கண்ட இயக்கமுமே! இந்தியாவில் அனலைக் கக்கிக் கொண்டு இருக்கும் இந்த வெறியை நீர்த்துப் போகச் செய்யும் தத்துவம் தந்தை பெரியாரியலாக இருக்கிறது - அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கருத்தியலாகவே இருக்கிறது.


இவற்றை இந்தியா முழுமையும் எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பு மதச் சார்பற்ற சக்தி களுக்குக் கண்டிப்பாகவே இருக்கிறது.


அமெரிக்க அதிபர் பொதுவாகப் பேசி இருந்தாலும் இந்தக் கால கட்டத்தில் அய்.எஸ்.அய்.எஸ். கொடூரக்காரர் களையும் இந்தியாவில் காவிப் பயங்கரவாத சக்திகளையும் மனதிற் கொண்டேதான் பேசினார் என்பதில் அய்யமில்லை.

                  ------------------------"விடுதலை” தலையங்கம் 24-02-2015

48 comments:

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு - முற்போக்கு பிரச்சாரம் செய்ததற்காக அன்று நரேந்திர தபோல்கர், இன்று கோவிந்த் பன்சாரே படுகொலை?

இந்து மதவாத சக்திகளின் வன்முறை தடுக்கப்பட வேண்டும்

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

திருமண வீடு - சாவு வீட்டில்கூட - சந்திக்க மறுக்கும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் வடநாட்டைப் பார்க்கட்டும்!

மகாராட்டிரத்தில் மக்கள் மத்தியில் மூடநம்பிக்கையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த நரேந்திர தபோல்கரை 2012இல் படுகொலை செய்தது போலவே, அதே மகாராட்டியத்தில் பகுத்தறிவு முற்போக்குக் கொள்கை களுக்காகப் பாடுபட்ட பொதுவுடைமைவாதி கோவிந்த் பன்சாரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். மதவாத சக்திகளின் வன்முறைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மகாராட்டிர மண்ணில் ஜாதீய வாதம், மதவாதம், மூடநம்பிக்கை இவைகளுக்கு எதிராக இயக்கம் நடத்திய நரேந்திர தபோல்கர் இந்துத்துவ வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் (2012 ஆகஸ்டு)

அன்று நரேந்திர தபோல்கர், இன்று கோவிந்த் பன்சாரே!

இப்பொழுது அதே பணிகளைச் செய்து வந்தவரும், அம்மாநில இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தவருமான தோழர் கோவிந்த் பன்சாரே மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இரு வருமே நடைபயிற்சி சென்றபோதுதான் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

நரேந்திர தபோல்கரைச் சுட்டுக் கொன்ற கொலை யாளிகள் தான் இவரையும் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

அதே காரணம் - அதே பாணிக் கொலை!

நரேந்திர தபோல்கரைச் சுட்டுக்கொன்ற கொலையாளி களை இதுவரை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தாத நிலையில், அடுத்த கொலையும் இப்பொழுது நடந்திருக் கிறது. (அன்று காங்கிரஸ்; இன்று பா.ஜ.க. ஆட்சி)

தோழர் கோவிந்த் பன்சாரே வலதுசாரி மதவாத அரசியலுக்கு எதிராகச் சிம்மக் குரல் கொடுத்து வந்தவர்; சாமியார்களுக்கு எதிரான கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்; உயர் ஜாதி ஜாட் பிரிவினரின் கட்டப் பஞ்சாயத்துகளுக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்தவர்.

சிவாஜியை இந்துத்துவாவாதிகள் தங்களின் மதவெறி அரசியலுக்குத் தூக்கிப் பிடித்ததை, தக்க வெளியீடுகள் மூலம் தூள் தூளாக்கியவர்!

தமிழ் ஓவியா said...

பன்சாரேக்கு அச்சுறுத்தல்!

சிவாஜி பல்கலைக் கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பன்சாரே காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவுக்குச் சிலை எழுப்ப வேண்டும் என்று கூறப்பட்டதைக் கடுமையாகச் சாடினார்; அதே நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸின் மாணவர் பிரிவான ஏபிவிபியைச் சேர்ந்த வெறியன், தோழர் பன்சாரேயின் கருத்திற்கு எதிராக மேடையில் ஏறி வெறிக் கூச்சல் போட்டுள்ளான். நாதுராம் கோட்சே உண்மையான தேச பக்தர் என்று கூறியதோடு பன்சாரேயின் பேச்சை எதிர்த்து நீதிமன்றம் செல்லுவேன் என்று மிரட்டியிருக்கிறான். தோழர் கோவிந்த பான்சாரே பதற்றம் சிறிதும் அடை யாமல் அமைதியாக, தாராளமாக வழக்குப் போடுங்கள் இதே கருத்தை அங்கும் வந்து சொல்லுவேன் என்று கூறியிருக்கிறார்.

அவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதில் இந்த இந் துத்துவா பின்னணி இருக்கிறது என்பதில் அய்யமில்லை.

நாடு - ஒரு மோசமான தருணத்தில்

நாடு ஒரு மோசமான தருணத்தில் இருக்கிறது; இந்திய அரசமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள விஞ் ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும், சீர்திருத்த உணர்வை ஊட்ட வேண்டும்; அது ஒவ்வொரு குடி மகனின் கடமை என்பதற்கு எதிரான மதவெறி சக்திகள் படு கொலைக் கருவியைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளன.

மதவெறி நஞ்சை அன்றாடம் கக்கிவரும் சக்திகள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ள நிலையில் ஆட்சியில் அமர்ந்துள்ளவர்களை இயக்குவிக்கும் இடத்தில் இருக்கும் இந்தத் தருணத்தில், மதச் சார்பின்மை சக்திகள், இடது சாரிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவும், போராடவும் முன்வர வேண்டும்.

பூஜை அறைக்குள் முடங்கட்டும்!

மதம், பக்தி என்பவை எல்லாம் தனி மனிதனைச் சார்ந் தது; வீட்டுக்குள் பூஜை அறைக்குள் முடங்கிக் கிடக்கட்டும்!

மனித உரிமைக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும் பேரச் சுறுத்தலாக இருக்கும் இந்த போக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

நேர்மையான சட்ட ஆட்சி - நீதிமன்றத்தின் பொறுப்பு, ஊடகங்களின் கடமை இவைகளின் பங்களிப்பும் இதில் மிக முக்கியமானதாகும்! தேவையுமாகும்.

பகுத்தறிவுப் பிரச்சாரம் சுழன்றடிக்கட்டும்!

21ஆம் நூற்றாண்டில் முற்போக்குச் சமுதாயம், சரிநிகர் வாழ்வு மணக்கும் அத்தியாயம் மலர வேண்டுமே, அன்றி மதவெறிப் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகி, நாளும் கலவரச் சூழலும், அமைதியைத் தொலைத்த அருவருக்கத்தக்க நிலையும் நிலவ வேண்டுமா என்பதை முடிவு செய்வோம்! அரசியலுக்கு அப்பாற்பட்டு பகுத்தறிவுப் பிரச்சாரம் சுழன்றடிக்கட்டும்! சுழன்றடிக்கட்டும்!!

அவருக்கு நமது வீர வணக்கம்; பல தபோல்கர்களும், பன்சாரேகளும் உருவாவது நிச்சயம். அவரது குடும்பத் தினருக்கும், இயக்கத்திற்கும் நமது ஆழ்ந்த இரங்கல்.

நரேந்திர தபோல்கர்களுக்கும், கோவிந்த் பன்சாரேக் கும் நாம் காட்டும் உண்மையான மரியாதை இதுதான். வன்முறை ஆயுதம் - பகுத்தறிவு முற்போக்கு பொது வுடைமைச் சித்தாந்தங்களை வீழ்த்த முடியாது என்றே செயலில் காட்டுவோம் - வாரீர்!


கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
24.2.2015

Read more: http://viduthalai.in/e-paper/96777.html#ixzz3SfD2cIU2

தமிழ் ஓவியா said...

இந்தி - சமஸ்கிருதம்: அவசரம் காட்டும் அதிகாரிகள் கலைஞர் கருத்து


சென்னை, பிப்.24_ இந்தி, சமஸ்கிருதம் திணிப்பில் அரசைவிட அரசு அதிகாரிகள் அவச ரம் காட்டுகிறார்கள் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் எழுதியுள்ளார்.

கேள்வி :- இந்தி, சமஸ் கிருதம் போன்ற மொழி களைத் திணிக்க மத்திய ஆட்சிப் பொறுப்பிலே இருப்போர் அவசரம் காட்டாத நிலையிலும், அதிகாரிகள் மட்டத்திலே இருப்பவர்கள் இந்தியைத் திணிக்க அவசரம் காட்டு கிறார்களே?

கலைஞர்:- உண்மை யானதும், அதிர்ச்சி தரத் தக்கதுமான செய்திதான் இது. தினமணி நாளிதழில் வெளி வந்துள்ள செய்தி யில், சி.பி.அய். (மத்திய புல னாய்வுத் துறை) அனைத்து அலுவலகங்களிலும் நிர்வாகத் தேவைகளுக் கான பணிகளை இந்தி மொழியில் மேற்கொள்ள வும், அந்த மொழியை அலுவலர்கள் அறிந்து கொள்ளும் வகையிலான நிகழ்ச்சிகளை நடத்தவும் அதன் தலைமையகம் கண்டிப்புடன் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சி.பி.அய். தலைமையக நிர்வாகப் பிரிவு துணை இயக்குநர் மணிஷ் கே. ஷா அவர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக் கையில், சி.பி.அய் அலுவல கக் கூட்ட நிகழ்வுகள், தீர் மானங்கள், அரசாணை கள், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய அறிக்கைகள், அலுவலக ஒப்பந்தங்கள், உரிமங்கள், ஏல ஒப்பந்தப் புள்ளி கோரல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இந்தி உள்ளிட்ட இரு மொழிகளில் வெளியிடு வதை மண்டலத் தலைமை அதிகாரிகள் உறுதிப் படுத்த வேண்டும். இந்தி மொழியில் சி.பி.அய். அலுவ லகத்துக்கு வரும் கடிதங் களுக்கு கட்டாயம் இந்தி மொழியில்தான் பதில் அனுப்ப வேண்டும். அதி காரிகளின் பணிக்கால ஆவணங்கள் அனைத்தும் இந்தி மொழியிலேயே இருக்க வேண்டும். அலு வல் கோப்புகளில் அதிகா ரிகள் குறியிடும் விவரங் கள் இந்தி மொழியில் தான் இருக்கவேண்டும் என்றெல்லாம் குறிப்பிடப் பட்டுள்ளது என்று செய்தி வந்திருப்பது அதிர்ச் சியாக உள்ளது. இந்தச் செய்தி உண்மையாக இருக்குமேயானால், மத் திய அரசும், முக்கியமாக பிரதமர் அவர்களும் இதனைப் பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றப் புலனாய் வில் முக்கியப் பங்கு வகிக் கும் சி.பி.அய். இப்படி அலு வலக நடைமுறைகளில் இந்திக்கு முதலிடம் அளிக்குமானால், மத்திய அரசின் மற்ற துறைகளும் ஒவ்வொன்றாக இந்த முன் மாதிரியைப் பின்பற்றும் நிலை ஏற்பட்டு, அனைத் தும் இந்தி மயம் என்ற ஆபத்து தோன்றிவிடும்! கிரானைட் முறைகேடுகள் குறித்து சகாயம் அய்.ஏ. எஸ். அவர்களுக்குத் தகவல் தந்தவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் சகாயம் அவர் களுக்கு அதிக பாதுகாப்பு செய்து தரப்பட வேண் டும் என்றும் கலைஞர் எழுதியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/96788.html#ixzz3SfDGtbLo

தமிழ் ஓவியா said...

குருட்டு நம்பிக்கை...


உலகில் உள்ள மதங்கள் எல்லாம் குருட்டு நம்பிக்கை என்கின்ற பூமியின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன.
(குடிஅரசு, 3.11.1929)

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழக வீட்டுவிழா என்பது என் சொந்த வீட்டு நிகழ்ச்சி போன்றது!

குழந்தை நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட நேரத்தில் சிசேரியன் செய்வது நியாயமா?

சுதியா - தினேஷ்குமார் திருமண விழாவில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் பகுத்தறிவு உரை

ஈரோடு, பிப்.24_ திரா விடர் கழகத் தோழர்கள் வீட்டில் நடக்கும் திருமண விழா என்பது என் சொந்த வீட்டில் நடக்கும் விழா என்றார் தமிழ்நாடு காங் கிரஸ் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன்.

ஈரோட்டில் நேற்று முன்தினம் (22.02.2015) சுதியா_ தினேஷ்குமார் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நடத்திவைத்தார். தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் தலை வர் ஈவெ.கி.ச.இளங்கோவன் மணவிழாவில் மணமக் களை வாழ்த்திப் பேசும் போது குறிப்பிட்டதாவது:

பாசத்துக்கும் மரியா தைக்கும் உரிய ஆசிரியர் வீரமணி அவர்கள் சொல் லியதுபோல வாழ்த்துரை என்பது இந்தக் காலத்தில் தேவை இல்லாததாகும். வாழ்த்துரை என்பது அறி வுரையாகத்தான் இருக்கும்.

மணமக்கள் எப்படி வாழவேண்டும் என்று சொல்ல வேண்டிய நிலை இருக்கிற காரணத்தால் தான், தந்தை பெரியாரைப் போன்றவர்கள், பேரறிஞர் அண்ணாவைப் போன்ற வர்கள், டாக்டர் கலை ஞரைப் போன்றவர்கள், நெடுஞ்செழியனைப் போன்றவர்கள், என்னு டைய தந்தையாரைப் போன்றவர்கள், ஏன் அந்தக் காலத்திலேயே மரியாதைக் குரிய ஆசிரியர் வீரமணி அவர்களைப் போன்ற வர்கள் ஒவ்வொரு திரு மணத்திலும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணிநேரம் பேசுவார்கள், வாழ்த்துவார்கள். அறிவுரை கூறுவார்கள்.

ஏனென்றால், அந்தக் காலத்திலே திருமணம் என்று சொன்னால், மண மகளாக வரக்கூடிய பெண் ஏதோ வீட்டுக்கு சம்பளம் இல்லாத ஒரு வேலைக் காரியைப்போல்தான் அந்தக் காலத்திலே மதித் தார்கள், நடத்தினார்கள்.

ஆனால், பெரியார் போன்றவர்களுடைய அறிவுரை, பிரச்சாரத் துக்குப் பின்பு, ஆணும், பெண்ணும் சமம். குறிப் பாகப் பெண் ஆணுக்கு அடிமை இல்லை. ஆணுக்கு நிகரானவள் பெண் என் பதை உணர ஆரம்பித்த சமூகம். இன்றைக்கு படிப் பதிலே ஆண்களைவிட பெண்கள் சிறப்பாகப் படிக்கின்றார்கள் என்ற நிலை ஏற்பட்டதற்கு கார ணம் அன்றைய சுயமரி யாதை இயக்கம், தந்தை பெரி யாரைப் போன்றவர்கள்.

ஆகவே, நான் ஒன்றும் அவர்களுக்கு அறிவுரை சொல்லப்போவதில்லை. சொல்லத் தேவையும் இல்லை. எவ்வளவு பெற்றுக் கொள்ள வேண்டும்? எப்படிப் பெற்றுக்கொள்ள வேண்டும்? எப்போது பெற்றுக்கொள்ள வேண் டும்? என்ற கணக்கெல் லாம் நம்மைவிட அவர் களுக்கு மிக அதிகமாகத் தெரியும்.

வாழ்க்கையை எப்படி நடத்துவது என்று கேட்டால், நமக்கு அவர்கள் புத்தி சொல் வார்கள். நாம் அவர்களைக் கேட்டு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் என்னைப்போன்ற தலை முறையினர் இருக்கின் றோம். காரணம் இன்றைய இளைஞர்கள் மிகவும் விவரம் தெரிந்தவர்கள், ஆற்றல் பெற்றவர்கள். அவர்களுக்கு புத்தி சொல்லத் தேவை இல்லை. அறிவுரை சொல்லத் தேவை இல்லை. ஆகவே நான் அதைச் சொல்லப் போவ தில்லை.

நல்ல நேரம் என்று சொல்லி சிசேரியன் செய்வதா?

இன்னும் சொல்லப் போனால், ஒரேயொரு விஷயம். இன்றைய சமு தாயத்தில் இப்போது இருக்கிற ஒரு விஷயம் என்னுடைய மனதை உறுத்திக்கொண்டே இருக் கின்ற ஒரு விஷயம் என்ன வென்று சொன்னால், ஒரு பெண் கருவுற்ற பிறகு, அந்தப் பெண் இயற்கை யாக குழந்தை பிறக்கின்ற வரை காத்திருந்தால் மிகவும் நல்லது.

தமிழ் ஓவியா said...

அல்லது மருத்துவ ரீதியாக சில தொந்தரவுகள் இருக்கின்றன என்று சொன்னால், அறுவை சிகிச்சை (சிசேரியன்) செய்து கொள்ளலாம். ஆனால், இன்றைக்கு என்ன நிலை மை என்று சொன்னால், முகூர்த்தம் பார்த்து, நல்ல நேரம் பார்த்து இன்றைக்கு இந்த நேரத்தில் பிறந்தால், அந்த ஜாதகம் பிரமாதமான ஜாதகமாக இருக்கும்.

நாளைக்கு குழந்தைக்கு கலியாணம் நடந்தால், இந்த ஜாதகம் இப்படி இருந்தால் எல்லோரும் பெரிய அளவு மாப்பிள்ளை தேடுவோம் முழுவதுமாக என்று எண்ணி, இயற்கைக்கு மாறாக, எந்த விதமான மருத்துவப் பிரச்சினைகளும் இல்லாது, காலம் நேரம் பார்த்து, நல்ல நேரத்தில் அனாவசியமாக சிசேரியன் செய்து கொள்கின்றார் களே, அறுவை சிகிச்சை அது ஒன்றுதான் என்னு டைய மனதை உறுத்திக் கொண்டு இருக்கின்றது. அப்படிச் செய்யக்கூடாது.


அவர்களுக்கு டில்லியிலே ஆண்டு கொண்டிருக்கின் றவர்களும் ஆதரவுதருகின் றார்கள் என்று சொன் னால், அவர்கள் அரசியல் காரணங்களுக்கு அப்பாற் பட்டு, சமுதாய ஏற்றத் தாழ்வுகளை விளைவிக்கின் றார்கள் என்ற முறையிலும், அவர்களை எதிர்க்க வேண்டியது நம்முடைய கடமை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இது என் சொந்த வீடு

மற்றபடி நான் அதிகம் சொல்லவில்லை. எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இங்கே கருப்புச் சட்டைப் போட்ட அருமைத் தோழர்களைப் பார்க்கும்போது ஏதோ என்னுடைய சொந்த வீட்டில் இருப்பதுபோன்ற ஒரு உணர்வு. இருப்பது வாடகை வீடாக இப்போது இருந்தாலும்கூட, சொந்த வீட்டிலே எனக்கு நாட்டம் அதிகம். இருக்க வேண்டும் என்றுகூட ஆசை. ஆனால், என்ன செய்வது? வாடகை வீட்டுக்கு வந்துவிட்டேன்.

தமிழ் ஓவியா said...


மருத்துவப் பிரச்சி னைகள் இருந்தால், சிசே ரியன் செய்துகொள்ளலாம். இல்லையென்றால், இயற் கையான பிரசவத்தைத்தான் நாம் எதிர்பார்க்க வேண் டுமே தவிர, இதுபோல், நாம் நல்ல முகூர்த்தம் என்று சொன்னால், மக்களையும், தங்களையும் ஏமாற்றிக் கொள்கின்றார்கள். அவர்கள் நம்புகின்ற ஆண்டவனையும் ஏமாற் றுகின்றார்கள் என்பதுதான் எங்களுடைய கருத்து. இதைத்தான் நான் வலி யுறுத்த வேண்டும் என்று நான் நினைத்தேன். அதை உங்களிடம் நான் சொல் கின்றேன்.

இன்றைக்கு காலம் மாறிவிட்டது. பெண்களும், ஆண்களுக்கு சமமாக சம்பாதிக்கக்கூடியவர்கள். பெண்களைப் பொறுத்த வரையில் ஆண்களுக்கு எந்தவிஷயத்திலும் இளைத் தவர்கள் அல்ல. நாடாளு வதா என்று சொன்னால், அதற்குப் பெண்கள் ஆண் களைவிட நாட்டை சிறப் பாக ஆண்ட சரித்திரம் உண்டு இந்திரா காந்தி முதல். விண்ணிலே பறப்பவர் கள் ஆண்கள் என்று சொன்னால், பெண்களும் சமமாகப் பறக்கின்றார்கள்.

இராணுவத்திலும் பெண் கள் இருக்கின்றார்கள். இப்படி எல்லா இடங் களிலும் பெண்களுக்கு சம உரிமை வந்துவிட்ட இந்த நேரத்தில், சில மத வெறி யர்கள் என்ன சொல்லு கிறார்கள் என்றால், பெண் கள் பத்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண் டும் என்று இன்றைக்கு டில்லியிலே ஆட்சியிலே இருக்கின்றவர்களுக்கு ஜால்ரா போடுகின்ற சில மதவெறி சட்டத்தை அவர்கள் சொல்லுகின் றனர். இதைக் கடுமையாக எதிர்த்தாக வேண்டும்.

குழந்தை பெற்றுக்கொள் வது என்பது பெண்களுக்கு ஒவ்வொரு முறையிலும் சாவா? பிழைப்பா? என்ற நிலையிலேதான் ஒவ்வொரு பெண் குழந்தை பெறு வதிலே, நடைபெற்றுக் கொண்டிருக்கிற நேரத்தில் ஒரு பெண் பத்து குழந் தைகளை பெற்றுக்கொள்ள லாம் என்று சொன்னால், மீண்டும் பழைய 500, 600 ஆண்டுகளுக்கு முன்பு நிலவி இருந்தநிலைக்குச் செல்லுகிறது என்றுதானே அர்த்தம்?

தமிழ் ஓவியா said...

ஆகவே, பெண்களைப் பொறுத்தவரையில், பிள்ளைப் பெறுவது என்பது இயற்கையிலே நடைபெறு கின்ற ஒரு சம்பவமே தவிர, அதையே பெண்கள் தொழி லாகக் கொண்டு வாழ வேண்டும் என்று சொல் கின்றவர்கள், பெண்கள்மீது அக்கறை இல்லாதவர்கள் என்பதோடு மட்டுமல்ல, பெண்களை அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். அவர்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் உடை பற்றி பெரியார் அன்றே சொன்னார்

நான் ஏன் இதைச் சொல்கின்றேன் என்றால், பெரியாரைப் போன்ற வர்கள் எல்லாம் அந்தக் காலத்திலே பெண்கள் முடியை வெட்டிக்கொள்ள வேண்டும், பேண்டைப் போட்டுக்கொள்ள வேண் டும். ஆண்களைப்போலவே இருக்க வேண்டும் என்று சொல்லி, இன்றைக்குப் பெண்கள் சம உரிமை படைத்தவர்களாக இருக் கின்றார்கள்.

அதுவும் நம்முடைய மாவட்டத்தில் பார்த்தீர்கள் என்றால், இன்றைக்கு விவசாயம் செய்வதில், ஆண்களைவிட பெண்கள் மிகவும் திறமையாக இருக் கிறார்கள். ஆண்கள் ஏதோ வெளளையும், சொள்ளை யுமாகப் போட்டுக்கொண்டு ஊரிலே நடக்கின்ற பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்கின் றார்களே தவிர, பெண்கள் தான் திறமையாக விவ சாயத்தை கவனித்துக் கொள்கிறார்கள் என்பது நம்முடைய மாவட்டத்தில் தெரியும்.

தமிழ் ஓவியா said...

அதைவிட, பெண்கள் ஆண்களைவிட மிக நன் றாகப் படிக்கக்கூடியவர்கள். நம்முடைய மாவட்டம் இருக்கின்றதே, அதாவது கொங்கு மண்டலம் இங்கே கல்விச்சாலைகள், கல்வி நிறுவனங்கள் மிக அதிகம். மிக அதிகம் என்று சொன் னால், நம்முடைய மாவட் டத்தில், நம்முடைய கொங்கு மண்டலத்தில் இருக்கின்ற அத்தனைப்பேரும் இன் றைக்குப் படித்துக் கொண் டிருக்கிறார்கள்.

பல குழந்தைகளை பெற்றுக் கொள்ளச் சொல்லுவதா?

குறிப்பாக பெண்கள் ஆண்களைவிட அதிகமாக, நன்றாகப் படிக்கின்றார்கள். வேலைவாய்ப்பு என்பது பெண்களுக்கு ஆண்களை விட அதிகமாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. இத்த கைய ஒரு முற்போக்கான நேரத்தில், முற்போக்கான காலத்தில் சிலபேர் பழமை விரும்புவது மட்டுமல்ல, பெண்களை மீண்டும் அடிமையாக்க வேண்டும் என்பதற்காகவே, பத்து குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லக்கூடிய ஓர் அபத்த மான கருத்துகளை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

இருக்கும்வரையிலே அதிலேதான் இருப்பேன். வேறு வழியில்லை என் றால் சொந்த வீட்டுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், அதை நான் மறுக்க முடியாது என்பதை மட்டும் இங்கே சொல்லி, நான் மிகவும் சந்தோஷப் படுகின்றேன். ஆகையால், மரியாதைக் குரிய ஆசிரியர் அவர்களை நான் பொறுப் பேற்ற உடனேயே சென்று பார்க்க வேண்டும என்று திட லுக்கு சென்றேன்.

ஆனால், அன்றைக்கு அவர் சிங்கப் பூர் சென்று விட்டார். அதற்குப்பிறகு அவரும் பல இடங்களுக்கு சுற்றிக் கொண்டிருக்கிறார். நானும் தமிழகம் முழுவதும் சுற்றிக் கொண் டிருக்கிற காரணத்தால் சந்திக்க முடியவில்லை. நடுவிலே சென்ற மாதம் கோவையிலே நடந்த ஒரு கூட்டத்திலே நான் அவரை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தது.

பேசுவதற்கு வாய்ப்பில்லை. காரணம் அவர் பேசிவிட்டு உடனே விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்று சென்று விட்டார். ஆகவே, இங்கே இன்றைக்கு அவரை சந்திப்பதில் எனக்கு மட் டற்ற மகிழ்ச்சி. இங்கே சிற்றரசு அவர்கள் இல்லத் திருமணத்தைப் பொறுத்த வரையில் இதிலே கலந்து கொள்வது அவர்கள் சொல்லியது போல, சொந்தத் திருமணத் தில் கலந்துகொள்வது போன்று ஓர் உணர்வு.

ஆகவே, மணமக்கள் வீட்டுக்கும், நாட்டுக்கும் பயனுள்ள வாழ்வு வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்தி விடைபெறுகின் றேன். வணக்கம் நன்றி.

_இவ்வாறு ஈ.வெ.கி.ச. இளங்கோவன் பேசினார்.

Read more: http://viduthalai.in/e-paper/96791.html#ixzz3SfFjDMfk

தமிழ் ஓவியா said...

கடவுள் சக்தியின் கையாலாகாத்தனம் சனீஸ்வரன் காப்பாற்றவில்லையே!

கோவை, பிப்.23_ கோவை பீளமேடு அவினாசி ரோட்டை சேர்ந் தவர் கேசவ மூர்த்தி (வயது 44). பீள மேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

நேற்று இரவு வீடு திரும்பிய கேசவ மூர்த்தி வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக் கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை திருடிச் சென்றி ருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து பீளமேடு காவல்துறையி னருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத் தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

5 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு

ஜோலார்பேட்டை, பிப்.23 ஜோ லார்பேட்டை அடுத்த மேட்டுசக்கர குப்பம் என்ற இடத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு யாரோ சிலர் இந்த கோவிலின் பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்து அம்மன் கழுத்தில் இருந்த பவுன் தாலியை திருடிச்சென்று விட் டனர். அதேபோல் பக்கத்து பகுதியான போயர்வட்டம் என்ற இடத்தில் உள்ள மாரியம்மன் கோவிலிலும் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த பவுன் தங்க தாலியை திருடிச்சென்றனர்.

மேலும் அதே பகுதியில் உள்ள பெருமாள், ஆஞ்சநேயர், காமாட்சியம் மன் கோவில்களிலும் உண்டியலை உடைத்து, உண்டியல் பணம், வெள்ளி நகைகளை யாரோ சிலர் திருடி சென்றனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

கோவில் குடமுழுக்கில் தாலி சங்கிலி பறிப்பு

திருவான்மியூர், பிப். 23 சோழிங்க நல்லூரை அடுத்த காரப்பாக்கம் கங்கையம்மன் கோவில் குட முழுக்கு நேற்று நடந்தது. அதில் ஏராள மானோர் கலந்து கொண்டனர். அந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி சோழிங் கநல்லூர் காந்தி நகரை சேர்ந்த பார்வதி (55) என்ற பெண்ணின் 5 பவுன் தாலி சங்கிலியை அடையாளம் தெரியாத நபர் பறித்து சென்றான்.

அதே போன்று சோழிங்கநல்லூர் பள்ளிக்கூட சாலை தெருவை சேர்ந்த கஸ்தூரி (60) என்பவரிடம் 4 பவுன் தாலி சங்கிலி பறிக்கப்பட்டது. இது குறித்து கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. எனவே அங்கு சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து காவல் துறை யினர் விசாரித்து வருகின்றனர்.

கோவில் குளத்தில் மூழ்கி 8ஆம் வகுப்பு மாணவி சாவு

மாமல்லபுரம், பிப். 23-_ மாமல்ல புரம் அண்ணல் காந்தி தெரு வில் வசிக்கும் விநாயகமூர்த்தி என்ப வரின் மகள் அருந்ததி (வயது 13). இவர் மாமல்லபுரம் அரசு மேல்நிலை பள்ளி யில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று அரை நாள் பள்ளிக்கு சென்றுவிட்டு மதியம் 1 மணியளவில் வீடு திரும்பும் போது உடன் வந்த 4 தோழிகளுடன் கருக்காத்தம்மன் தெப்ப குளத்தின் படித்துறையில் நின்று மீன் பிடித்து விளையாடியுள்ளனர். அப் போது அருந்ததி பாசி படிந்த படிக்கல் வழுக்கி குளத்தின் நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற முற் பட்ட 4 தோழி களும் நீரில் மூழ்கினர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் 5 பேரையும் மீட்டனர். இதில் அருந்ததி மட்டும் மூச்சு திணறி உயிரி ழந்தார். கோவில் குளத்தில் தடுப்பு வேலியும் அவசர படிக்கல்லும் இல் லாததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என்று கோரி கூறி பொதுமக்கள் மாண வியின் உடலை பிரேத பரிசோதனை நடத்த விடாமல் முற்றுகையிட்டனர். பின்னர் மாமல்லபுரம் காவல்துறை யினர் உடலை செங்கல்பட்டு அரசு மருத் துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

Read more: http://viduthalai.in/page1/96711.html#ixzz3SfGZ1w2G

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

வியாபார வசீகரமா?

செவ்வாய், வெள்ளி களில்தான் கோயில் களுக்குச் சென்று வழிபட வேண்டும் என்பது வியா பார வசீகரமா? அல்லது கடவுளுக்கு மற்ற கிழமை கள் எல்லாம் பிடிக்கா தவை என்ற அர்த்தமா?

Read more: http://viduthalai.in/page1/96710.html#ixzz3SfGh7g6s

தமிழ் ஓவியா said...

காரணம்


வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்து கொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)

தமிழ் ஓவியா said...

பீகார் போதிக்கும் பாடம்

பீகார் மாநில பா.ஜ.க. ஜாதி அரசியலில் முற்றிலும் இறங்கி மூக்கறுபட்டு விட்டது. அய்க்கிய ஜனதா தளத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள் அந்த கட்சிக்கு முழுமையான பலத்தை தருகிறது. பீகார் பா.ஜ.க. ஜாதி அரசியலில் இறங்கி பிகாரில் தனது பொம்மை ஆட்சி நிறுவும் முயற்சியில் இறங்கியது. பீகார் மாநில பா.ஜ.கவினர் மோடியின் அரசியல் தந்திரத்தை நன்கு அறிந்தவர்கள். நிதீஷ் மற்றும் லாலு பிரசாத் யாதவ் இருவரும் ஒன்றாக வரும் செய்திகள் கிடைத்தபோதே ஜிதன் ராம் மான்ஜியை தங்கள் பக்கம் இழுத்து ஜாதீய அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

லாலு பிரசாத் கட்சியிலும் சில முக்கிய நபர்களை பா.ஜ.க. தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளைத் தொடர்ந்து நடத்தி வந்தது. முக்கியமாக ஜாதி ரீதியாக மக்களைப் பிரிக்க பீகார் பா.ஜ.க. தலைவர்கள் அய்க்கிய மற்றும் ராஷ்டிரிய ஜனதாதள கட்சி, மக்களுக்கு எதிரான கட்சி ஜாதி பெயரால் ஓட்டுக் களை வாங்கி வயிறு வளர்க்கும் கட்சி என்று பிரசாரம் செய்து பா.ஜ.க. கட்சிதான் உங்களுக்கு மாற்று என்று கூறியது.

ஆனால் டில்லி தேர்தல் பா.ஜ.க.வினருக்கு நல்ல பாடத்தைத் தந்து விட்டது; முக்கியமாக டில்லியில் மதவாதம் தேறாது என்ற நிலையில் ஜாதீய வாதத்தைக் கையிலெடுத்த பா.ஜ.வினருக்கு ஏற்பட்ட தோல்வி ஒரு பாடமாக அமைந்தது.

தமிழ் ஓவியா said...


ஜிதன் ராம் மான்ஜி பிகார் பா.ஜ.க. தலைவர்களைச் சந்தித்து பேசினார். அய்க்கிய ஜனதாதளத்தை உடைத்து புதிய கட்சியை உருவாக்கி அந்த கட்சியை பா.ஜ.க. வுடன் கூட்டணி சேர்த்து ஆட்சியமைக்க திட்டமிட் டனர். இதுகுறித்து நேரடியாகவே ஜிதன்ராம் மாஞ்ஜி பேசியுள்ளார். ஆனால் டில்லி தேர்தல் முடிவுகள் ஜாதி அரசியல் எடுபடாது என்று தெரிவித்து விட்டது. வேறு வழியின்றி டில்லி தேர்தல் முடிவுகளை ஒட்டி பா.ஜ.க.வினர் மாநிலக் கட்சிகளை நாங்கள் உடைக்க முயற்சி செய்யவில்லை என்று அறிக்கை விட்டனர்.

அதே நேரத்தில் பிகார் பா.ஜ.க.விற்குள்ளேயே ஜிதன் ராம்மான்ஜிக்கு எதிராக குரல் எழுப்ப ஆரம்பித்தது. பல பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஜிதன் ராம்மான்ஜிக்கு எதிராக கிளம்பினர். டில்லி தேர்தலில் வாங்கிய பலமான அடியின் காரணமாக இன்னும் சில மாதங்களுக்கு பா.ஜ.க. தேர்தலை சந்திக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. டில்லி தேர்தலில் பா.ஜ.க.வின் தோல்வி எதிர்க்கட்சிகளுக்குப் புதிய உற்சாகத்தை தந்துள்ளது.

பா.ஜ.க.வின் நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் சாநவாஸ் உசைன் பிகார் மாநில பா.ஜ.க.வினருக்கு பல முக்கிய கட்டளைகளைப் பிறப்பித்தார். முக்கியமாக நிதீஷ் - லாலு கட்சியில் உள்ள கருத்து வேறுபாடு கொண்ட பிரமுகர்களை தங்கள் பக்கம் இழுப்பது, லாலு பற்றிய ஊழல் புகாரை மக்களிடையே பிரச்சாரம் செய்வது போன்றவை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன.

ஆனால், நிதீஷ்குமார் தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இப்போதிருந்தே தேர்தல் பணியை ஆரம்பிக்க கட்டளையிட்டுள்ளார். இதன் காரணமாக தொகுதி பங்கீடு சிக்கல் நிதீஷ் கட்சியில் இருக்காது என்று முடிவாகியுள்ளது. காங்கிரசும், லாலுவின் கட்சியும் தற்போதிலிருந்தே தேர்தல் வேலையில் இறங்கி விட்டன. முக்கியமாக பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் இஸ்லாமியர்களின் ஓட்டுகள் அனைத்தும் மொத்தமாக அய்க்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரசுக்குச் செல்லும், மிக குறைந்த எண்ணிக்கையிலான பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதியினரின் வாக்குகள் மட்டுமே பிஜேபிக்கு வாக்களிப்பவர்களில் முதலிடம் உள்ளனர்.

ஜிதன்ராம் மான்ஜியை தங்கள் பக்கம் இழுப்பதால் பா.ஜ.க.விற்கு எந்த ஒரு லாபமுமில்லை. அவரைச் சார்ந்த சமூகமான மகாதலித் சமூகம் எந்த காலத்திலும் பா.ஜ.க.விற்கு ஆதரவாக நிற்காது; முக்கியமான ரன்வீர் சேனா போன்ற கொலைகார இயக்கங்களின் பின்னால் பிகார் பா.ஜ.க. தலைவர்கள் இருக்கின்ற காரணத்தால் எந்த ஒரு காலத்திலும் தாழ்த்தப்பட்டோர் பா.ஜ.க.வை ஆதரிக்கப் போவதில்லை. ஜாதி அரசியலைக் கையிலெடுத்த பா.ஜ.க. டில்லியில் கிடைத்த பின்ன டைவையே பிகாரிலும் சந்திக்கும் என்பது உறுதியாகி யுள்ளது. ஜிதன்ராம் மான்ஜி தொடக்கத்தில் தீவிரமான கருத்துகளைப் பேசி வந்தார்.

எந்த ஒரு சூழ்நிலையிலோ முதல்வர் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டது. எப்படியாக இருந்தாலும் பிஜேபியின் துணையை அவர் நாடியது அவர் மீதிருந்த நல்லெண்ணத்திற்கு ஊறு விளைவித்து விட்டது. அவர்மீது நம்பிக்கை வைத்துதான் நிதீஷ்குமார் முதல் அமைச்சர் பொறுப்பை ஒப்படைத்தார் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பீகார் மாநிலத்தில் நடந்தேறிய கசப்பான நிகழ்வுகள் எங்கும் நடைபெறக் கூடாது; இந்தக் கால கட்டத்தில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை மக்களின் ஒன்றிணைப்பு மிகவும் அவசியமானதாகும்.

ராம ராஜ்ஜியத்தை உருவாக்கத் திட்டமிடும் இந்துத்துவாவை வேரறுக்க சம்புகன், ஏகலைவன், நந்தன் சக்திகள் ஒன்றிணைந்து வரலாற்றில் புதிய புரட்சியை உண்டாக்க வேண்டும். ராமராஜ்ஜியத்தை வீழ்த்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் தேவைப்படுகிறார்கள் - தேவைப்படுவார்கள் - ஒன்று படுவோம்! வென்று விடுவோம்!!

Read more: http://viduthalai.in/page1/96704.html#ixzz3SfH3wmqS

தமிழ் ஓவியா said...

பல நோய்களை தீர்க்க உதவும் அதிமதுரம்

அதிமதுரம் கொடி வகையை சேர்ந்தது. காடுகளில் புதர் செடியாக வளரும் கூட்டிலைகளை கொண்டது. கணுக்களில் சிறிய மஞ்சள் கலந்த ஊதா நிறபூக்கள் நிரம்பியதாக இருக்கும். இதன் வேர்கள், இலைகள் மருத்துவத்திற்கு பயன்படுகிறது. வேர் கடை சரக்காக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். மலச்சிக்கலை போக்கும் உணவு மண்டலத்தை சீராக இயங்கவைக்கும்.

ஊட்டசத்து நிரம்பியது. சிறுநீர் புண்களை ஆற்றும், கல்லடைப்பை நீக்க பயன்படும். அதிங்கம், அஷ்டி, மதூகம், மதூரம் என பல்வேறு பெயர்களால் வழங்கப்படும் அதிமதுரம் உலகத்தின் அனைத்து மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதை எளிய முறையில் பயன் படுத்தி பல்வேறு நோய்களையும் தீர்க்கமுடியும்.

பித்தம், வாதம். ரத்ததோசம், வீக்கம், வாந்தி, நாவறட்சியை போக்கும். தாகம், அசதி, கண்நோய்கள், விக்கல், எலும்பு நோய்கள், மஞ்சள்காமாலை, இருமல், தலை நோய்கள் ஆகியவற்றை குணமாக்கும். வேர்கள் இனிப்புச்சுவையும் குளிர்ச்சித்தன்மையும் கொண்ட வையாக இருக்கும்.

அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளம்வறுப்பாய் வறுத்து சூரணம் செய்து வைத்து கொண்டு சூட்டினால் ஏற்படும் இருமலுக்கு 5 கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட தீரும்.

சிலர் உடல் உறுப்புகளில் புண் ஏற்பட்டு ரத்தவாந்தி எடுப்பார்கள். இவர்கள் அதிமதுரப்பொடி, சந்தனத்தூள் சமஅளவாக கலந்து அதில் 1 கிராம் அளவில் அளவில் பாலில் கலந்து குடிக்க ரத்தவாந்தி நிற்கும். புண்கள் ஆறும்.

போதுமான அளவில் தாய்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அளவில் அதிமதுர சூரணத்தைப்பாலில் கலந்து அதனுடன் இனிப்பு சிறிது சேர்த்து சாப்பிட்டால் தாய்பால் நன்கு சுரக்கும். அதிமதுரத்தை நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் இளநரை ஏற்படாது. முடி உதிர்தலும் நிற்கும். அதிமதுரத்தை சூரணமாக்கி காற்றுபுகாத பாட்டிலில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தொண்டைக்கட்டு, இருமல், சளி உள்ளவர்கள் 1 முதல் 2 கிராம்வரை எடுத்து தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட தீரும். 1முதல் 2 கிராம் அளவில் அதிமதுரப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வர மார்பு, ஈரல், இரைப்பை, தொண்டை ஆகியவற்றில் உள்ள வறட்சி நீங்கி நலம் உண்டாகும். இருமல், மூலம், தொண்டைகரகரப்பு, நரம்புதளர்ச்சி தீரும்.

Read more: http://viduthalai.in/page1/96734.html#ixzz3SfHbdKIm

தமிழ் ஓவியா said...

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ஆப்பிள்

ஆப்பிள் பழங்காலத்தில் இருந்தே அறியப்பட்ட ஒரு அற்புதமான பழமாகும். ஆப்பிள், குமளி பழம், ஆப்பழம், சீமை இலந்தைபழம், அரத்திபழம் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் குளிர் பிரதேசங்களில் வளரக்கூடியது. தற்போது இந்தியா, சீனா, அர்ஜென்டினா மற்றும் மத்திய ஆசியாவில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

நம்நாட்டில் சிம்லா, காஷ்மீர் பகுதிகளில் உள்ளன. எல்லாப் பருவ காலங்களிலும் கிடைக்கும் ஆப்பிள், அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி சாப்பிடக்கூடியது. விலை சற்று அதிகம் என்றாலும் மருத்துவத்தில் இதன் பயன் அதிகரித்துள்ளது.

சத்துக்கள்: ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலிய சத்துகள் அதிக அளவில் அடங்கியுள்ளன.

பயன்கள்: ஆப்பிள் பழத்தில் உள்ள ரசாயன கலவைகள் ஒன்றுக்கொன்று வேதியியல் முறையில் இணக்கமாக செயல்படுகிறது. ஆர்கானிக் கலவை இரும்பு சத்தை எளிதில் உடல் கிரகிக்க உதவுகிறது. ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் ரத்தசோகை விரைவில் நிவர்த்தியாகிறது. ரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது.

* தேவையற்ற கொழுப்பு சத்தை குறைக்கிறது. சோடியம் குறைக்கப்பட்டு ரத்த அழுத்தம் குறைய உதவுகிறது. அதிக ரத்த போக்கை தடுக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது.

செரிமாண மண்டலம் சீராக இயங்க செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்க செய்கிறது. இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. இன்சுலின் சுரப்பு நடைபெறுவதால் ரத்த சர்க்கரை குறைய உதவுகிறது. சோடியம் உடம்புக்கு பயன்படுவது போக அதிகப்படியாக சேராமல் பாதுகாக்கிறது.

* மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள், சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது.

* குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஆப்பிள் பழத்தை வேகவைத்து பிசைந்து கொடுத்தால் குணமாகும்.

* வலிப்பு உள்ளவர்கள் ஆப்பிள் பழச்சாறு 60 மி.லி, அத்திப்பழச்சாறு 60 மி.லி கலந்து தினசரி இரண்டு வேளை கொடுத்து வந்தால் மூன்று தினங்களில் வலிப்பின் தீவிரம் குறைந்துவிடும்.

* இதய நோயாளிகளுக்கு சிறந்த உணவாகிறது. நரம்பு தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் பழம் மட்டும் சாப்பிடுவதால் மிகுந்த நன்மை கிடைக்கிறது.

* தூக்கத்தில் எழுந்து நடக்கும் இயல்பு டையவர்கள் குணமடைய, இரவில் இரண்டு ஆப்பிள் பழங்களை தண்ணீரில் போட்டு வைத்திருந்து அதி காலையில் இதன் சாற்றை பிழிந்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

* வறட்டு இருமல் உள்ளவர்கள், தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இருமல் தீரும்.

* சரியான உடல் வளர்ச்சியும், சதைப்பிடிப்பும் இல்லா தவர்களும் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டால் ஒல்லியான உடல் சீராகப் பருமன் அடையும்.

Read more: http://viduthalai.in/page1/96736.html#ixzz3SfHl41FW

தமிழ் ஓவியா said...

டிமென்ஷியா என்னும் அறிவுத்திறன் வீழ்ச்சி

நடுத்தரவயதை எட்டிய அனைவருக்குமே ஒரு பயம் மனதுக்குள் படபடத்துக் கொண்டிருக்கும். வயதாக வயதாக ஞாபக சக்தி குறைந்துகொண்டே போகுமோ? கட்டாயம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தகவல்களைக் கூட மறந்து தொலைத்து விடுவோமோ? ஒருவேளை அதுதான் அறிவுத் திறன் வீழ்ச்சியோ?

முதலில் பொதுவான ஞாபக மறதிக்கும், அறிவுத் திறன் வீழ்ச்சிக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஞாபக மறதி அதிகமாக ஏற்பட்டுள்ள ஒருவர் அறிவுத் திறன் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில்லை.

அதேசமயம், அறிவுத்திறன் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நிச்சயம் ஞாபக மறதி இருக்கும். ஒருவருக்கு அதிக அளவில் ஞாபக மறதி உண்டானால் அவர் அறிவு திறன் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

மூளை சோதனைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். அறிவுத்திறன் வீழ்ச்சியாக இருந்தால் மூளையில் உள்ள ரசாயனப் பொருள்கள் குறைந்து, திசுக்கள் அழிந்திருக்கும். ஞாபக மறதி என்றால் திசுக்கள் அழிவதில்லை. மூளையில் உள்நரம்பு செல்கள் மெதுவாகச் செயல்படுகின்றன. அவ்வளவு தான்.

அறிவுத் திறன் வீழ்ச்சி யால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள நினைவாற்றல் இழப்பை உணராதவர்களாக இருப்பார்கள். அவர்கள் நடவடிக்கையில் சில மாறுதல்களும் ஏற்படலாம். அதுவரை சாந்த சொரூ பியாக இருந்தவர், திடீரென்று காச் மூச் என்று தகாத வார்த் தைகளால் யாரையாவது திட்டத்தொடங்கலாம். இப்படி செயல்பட்டால் அது அறிவுத்திறன் வீழ்ச்சியாக இருக்க வாய்ப்பு உண்டு.

அறிவுத்திறன் வீழ்ச்சி நோய் ஏன் ஏற்படுகிறது?

வயதோடு தொடர்புடைய ஒரு சிக்கல்தான் அறிவுத்திறன் வீழ்ச்சி நோய். அதாவது அதிக ஆண்டுகள் ஒருவர் உயிரோடு இருந்தால் அவர் அறிவுத்திறன் வீழ்ச்சி நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.

65 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுகொண்டவர்களில் 5 சதவீதத்தினரும், 80 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுகொண்டவர்களில் 20 சதவீதத்தினரும், 100 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயது கொண்டவர்களில் 50 சதவீதத்தினரும் அறிவுத்திறன் வீழ்ச்சி நோயின் ஏதோ ஒரு வடிவத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வாழ்க்கைமுறையின் காரணமாக உண்டாகக்கூடிய நோய்களான மாரடைப்பு, நீரிழிவு நோய், உடல்பருமன், அதிக ரத்த அழுத்தம் போன்றவற்றின் காரணமாகவும் அறிவுத்திறன் வீழ்ச்சி நோய் உருவாகும் வாய்ப்பும் அதிகரித்து வருகிறது. அறிவுத்திறன் வீழ்ச்சி நோயின் மிக சகஜமான, தொடக்ககால அறிகுறி என்பது நினைவாற்றல் குறைவதுதான்.

முக்கியமாக சமீபத்திய குறுகியகால நினைவுகளை மறந்துவிடுதல் பொதுவான மறதியை கொண்டவர்கள், தாங்கள் மறந்தது தொடர்பான பிற தகவல்களை நினைவு வைத்திருப்பார்கள்.

தமிழ் ஓவியா said...


எதை செய்கிறோம் என்று யோசிக்காமலேயே தினமும் பல செயல்களை நாம் வெகு இயல்பாகச் செய்கிறோம். அறிவுத்திறன் வீழ்ச்சி நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுபோன்ற செயல்களில் கூட தடுமாற்றம் ஏற்படும். அறிவுத்திறன் வீழ்ச்சி நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு எந்த உடைக்கு பிறகு எதை அணியவேண்டும் என்பதிலோ, ஒரு உணவை எப்படி தயாரிப்பது என்பதிலோ கூட மறதி ஏற்படும்.

சரியான வார்த்தைகள் நினைவுக்கு வராமல் நாம் எல்லோருமே எப்போதாவது திண்டாடியிருப்போம். ஆனால் அறிவுத்திறன் வீழ்ச்சி நோயினால் பாதிக்கப்பட்டவர் மிக எளிமையான வார்த்தைகளை கூட அடிக்கடி மறந்துவிடுவார்.

அதற்குப் பதிலாக பழக்கமில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தி தனது பேச்சையும் எழுத்தையும் பிறரால் அறிந்துகொள்ள முடியாதபடி செய்வார். இன்றைக்கு என்ன கிழமை என்பதையோ தான் எங்கே சென்றுகொண்டி ருக்கிறோம் என்பதையோ நாம் சில சமயம் மறந்துவிடுவது உண்டு.

ஆனால் தனக்கு மிக பழக்கமான சூழலைக்கூட அறிவுத்திறன் வீழ்ச்சி நோயினால் பாதிக்கப்பட்டவர் மறந்துவிடுவார். ஓர் உரையாடலில் பங்குகொள்வது, செலுத்து வேண்டிய கடன்களை உரிய நாள்களில் செலுத்துவது போன்றவற்றை நினைவுகொள்வதும், அறிவுத்திறன் வீழ்ச்சி நோயாளிகளுக்கு கடினமானதாகவே இருக்கும்.

அவ்வப் போது எதற்காகவாவது நாம் வருத்தப்படுவோம் அல்லது உம்மென்று இருப்போம். ஆனால் அறிவுத்திறன் வீழ்ச்சி நோய்க்காரர் தன் வழக்கத்துக்கு மாறாக மிக அதிகமான அளவில் அல்லது மிகவும் குறைவான அளவில் உணர்ச்சி வசப்படுவார். தான் இதற்குமுன் வழக்கமாக நடந்து கொள்ளும் விதத்திலிருந்து அறிவுத்திறன் வீழ்ச்சி நோயால் பாதிக்கப்பட்டவர் மிகவும் மாறுபட்டு நடந்து கொள்ளக்கூடும்.

நினைவாற்றல் மிகக்குறையும் சந்தர்ப்பங்களில் சந்தேகம், கோபம், மனச்சோர்வு, கவலை, பதற்றம் போன்ற உணர்வு களால் பரிதவிப்பார். அறிவுத் திறன் வீழ்ச்சிக்கு மூளையில் சில ரசாயனங்கள் குறைந்துவிடுவதும் ஒரு காரணம் என்றபோது, அத்தகைய ரசாயனப் பொருள்களை மருந்து மாத்திரைகள் மூலம் அதிகப்படுத்தி பிரச்சினையை தீர்க்கலாம். அது தொடர்பாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். மூளையில் ஏன் இந்த ரசாயனப் பொருள்கள் குறைய வேண்டும். இதற்கு பல காரணங்கள் உண்டு.

Read more: http://viduthalai.in/page1/96735.html#ixzz3SfHshbyX

தமிழ் ஓவியா said...

திராவிடர் விழிப் புணர்வு வட்டார மாநாட் டில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சியுரை யாற்றுகையில்:

_ சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சென்னிமலைக்கு வந்து நான் உரையாற்றி யுள்ளேன். அப்பொழுது ஒரு சாமியார் வண்டி மாட்டை மலையில் ஏற்றி மக்களை ஏமாற்றி மூட நம்பிக்கையில் மூழ்க வைத் திருந்தார். விரதம் இருந் தால் தான் மேலே ஏற முடியும் என்று சொல்லி வைத்திருந்தார்.

அதெல் லாம் மூடநம்பிக்கை என்று எங்களது தோழர் பழையகோட்டை இளைய தளபதி கழகத்தின் முதல் பொருளாளர் அர்ச்சுனன் அவர்களின் மகன் சிவக் குமார் மன்றாடியார் அவ ரது மாட்டு வண்டியெல் லாம் கொடுத்து அந்த வண்டியை பழக்கப்படுத்தி நாங்கள் மூடநம்பிக் கையை முறியடித்தோம். இந்த ஊருக்கு எம்.பி. நாச்சிமுத்து என்பவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர்.

முதன் முதலாக வழக்கறிஞர் படிப்பை படித்து வழக்கறிஞராக ஆனார். அப்பொழுது தந்தை பெரியார் அவர் கள் நம்ம இனத்தைச் சேர்ந்த ஒருவர் வழக் கறிஞராக வந்துவிட்டார் என்று மகிழ்ச்சி பொங்க அந்த வழக்கறிஞரை சாரட் வண்டியில் ஏற்றி மிகப் பெரிய ஊர்வலமாக அவரை அழைத்துச் சென்று நிதிமன்ற வாயில் வரை அவருக்கு மரியாதை செய்து இறக்கி விட்டு வந்தார்.

அப்போதெல் லாம் பார்ப்பனர்களே நீதி பதியாகவும், வாக்குரைஞ ராகவும் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நம்முடைய இனத்திலி ருந்து வந்த முதல் வழக் கறிஞர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகன் பாலச்சந்திரன் அவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார். இன்று காலை தான் அவர் என்னை நேரில் சந்தித்தார்.

அவ ருக்கே இந்த விஷயம் தெரி யாது. நான் அவரிடம் கூறியபோது மிகவும் ஆச் சரியப்பட்டார். பி.ஜே.பி. அரசினுடைய முன்னேற் றம் முன்னேற்றம் என்று சொல்லிக்கொண்டு அய்.டி. ஊழியர்கள் மற்றும் பல்வேறு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு துணைபோவதையும்,

பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்கவில்லை என்று காரணம் கூறி மூட நினைப்பதும் மக்களுக்கு அடிப்படை தேவையான இ.எஸ்.அய். மருத்துவ மனைகளை மூட நினைப் பதையும் போன்ற மோடி அரசின் பிற்போக்கு தனத்தைச் சுட்டிக் காட்டி எழுச்சியுரையாற்றினார்.

அசல் மனுதர்மத்திலுள்ள பல்வேறு கருத்துகளை விளக்கமாக எடுத்துக்கூறி அது நம்மை எப்படி அடிமைப்படுத்துகிறது என்பதைச் சுட்டிக் காட்டினார். மேலும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். (முழு உரை பின்னர் வெளிவரும்)

Read more: http://viduthalai.in/page1/96731.html#ixzz3SfILLHy5

தமிழ் ஓவியா said...

இணைய தமிழில் புதிய மாற்றம் பெரியார் அறிமுகப்படுத்திய எழுத்துச் சீர்திருத்தம்

இந்த மாற்றத்திற்குப் பேருதவி புரிந்துள்ளது!

இந்து ஆங்கில ஏட்டில் சிறப்புக் கட்டுரை

சென்னை, பிப்.25_ இணைய தளத்தில் தமிழ் இன்று ஆதிக்கம் செலுத்து வதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார் அறிமுகப் படுத்திய தமிழ் எழுத்துச் சீர்திருத்தமே என்று இந்து ஏட்டில் இன்று (25.2.2015) வெளிவந்துள்ள சிறப்புக் கட்டுரை கூறுகிறது.

இணையதமிழ் (i தமிழ்) என்ற தமிழ் எழுத்துருவின் நவீன வடிவத் திட்டத்தை கார்கி ஆராய்ச்சி மய்யம் செயல் படுத்த முனைந்துள்ளது. தமிழ் பல நூற்றாண்டு களாக பல்வேறு மாற்றங் களை சந்தித்து வந்தது. எழுத்துருவில் மாற்றங் களைச் சந்தித்தாலும் அதன் தொன்மை மாறா மல், வளமை குன்றாமல் இன்றளவும் இளமையாக, மேலும் புதுமையாக திகழ் வதே இதன் தனித்துவ மாகும். இதனடிப்படையில் கணினி எழுத்திற்கேற்ப எளிமையான முறையில் தமிழ் எழுத்துக்களில் மாற் றங்களைக் கொண்டுவர கவியரசர் வைரமுத்துவின் மகன் கார்க்கி தன்னுடைய ஆய்வு மய்யத்தின்மூலம் புதிய எழுத்துருக்களை வர விருக்கும் தமிழ் இணைய வழி மாநாட்டில் ஆய்வா ளர்கள் முன்பு வைக்க உள்ளார்.

மதன்கார்க்கி அவரது குழுவினரான சுதர்சனம் நேசமணி மற்றும் தமிழ்ச் செல்வி ஆகியோர் ஒன்றி ணைத்து 216 உயிர்மெய் எழுத்திற்கும் புதிய வரிவடி வத்தை உருவாக்கியுள்ளனர். முக்கியமாக ஒருங்குறி யில் (யுனிக்கோட்) முறை யில் இன்றளவும் சில குறை பாடுகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. முக் கியமாக தற்போது மிகவும் வேகமாக வளர்ந்துவரும் ஆண்டிராய்டு மற்றும் அய்போன் போன்ற தளங் களில் யுனிக்கோட் எழுத் துருக்கள் சரிவர தெரிவ தில்லை.

இதனடிப்படை யில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு கார்கி ஆய்வு மய்யம் வேகமாக வளர்ந்துவரும் இணைய தமிழ் உலகில் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலும், அதேநேரத்தில் இனிவரும் காலத்திலும் இணைய வழித் தமிழ் மிகவும் எளிய முறையில் வரும் தலை முறைக்கும் பயனளிக்கும் விதத்தில் பல்வேறு மாற் றங்களைக் கொண்டுவந் துள்ளனர்.

i தமிழ் எழுத்துருக்கள் நவீன ஸ்மார்ட் போன் களின் எழுது பலைகை களில் (keyboard) எவ்வித சிறப்புக் குறியீடுகள் இல் லாமல் சாதாரண எழுது பலகை போன்றே அவற்றை நாம் பயன்படுத்தமுடியும். தமிழ் எழுத்துருக்களில் மாற்றம் நூற்றாண்டுக ளாகத் தொடர்ந்து மாறிக் கொண்டு வந்தாலும் வீர மாமுனிவர் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் எளிமையாக் கும் முயற்சி துவங்கியது.

தந்தை பெரியார் தொலைநோக்கிற்கு மிகப் பெரும் உதாரணங்களுள் ஒன்றாக தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கூறலாம். அவரது காலத்தில் தமிழ் அச்சுக்கள் தோன்ற ஆரம் பித்துவிட்டன. தமிழ் அச் சுக்கோர்வைக்கு அப்போதி ருந்த வடமொழிக் கலப்புத் தமிழ் ஏற்றதாக இருக்காது என்ற தொலைநோக்குப் பார் வையில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். பெரியாரின் இந்த எழுத்துச் சீர்திருத்தம் என்பது இன்று இணையம் வரை வந்து விட்டது. இந்திய மொழிகளில் இணையத்தில் தமிழின் ஆதிக்கம் இன்று முதலிடத் தில் இருப்பதற்கு முக்கிய காரணம் பெரியார் கொண்டு வந்த தமிழ் சீர்திருத்தம் தான். பெரியாரின் எழுத் துச் சீர்திருத்திற்கு முன்பாக இருந்த தமிழையொட் டியே மலையாளம், தெலுங்கு கன்னடம் போன் றவை இருந்தன. ஆனால், அம்மொழிகளால் எழுத் துச் சீர்திருத்தம் பெற இய லாமல் இன்றளவும் இணைய உலகில் பின்தங் கியே உள்ளது. சீன மொழி இன்றள வில் உலகம் முழுவது அதி கமாக பேசும் மொழிகளில் முதன்மையானதாக உள் ளது. நவீன சீனாவைப் படைத்த சான் யாட் சென் சீனமொழியை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யவேண்டும். நவீன வளர்ச்சிக்கு ஏற்ப மொழி யில் மாற்றம் செய்யவேண் டும் என்று கூறினார். அவரது ஆலோசனையின் படி சீன மொழியில் ஏற் பட்ட எழுத்துரு மாற்றம் இன்று உலகின் பொருளா தார வல்லரசாக மாற்றி யுள்ளது.

கார்கி ஆய்வு மய்யம் கொண்டுவந்துள்ள நவீன தமிழ் எழுத்துருக்கள்மூலம் பதிப்பிற்குச் செல்லும் போது அதிக இடங்கள் சேமிக்கப்படும் இதன் மூலம் காகித சேமிப்பு மாத் திரமல்லாமல் காகிதத்திற் காக வெட்டப்படும் மரங்கள் சேமிக்கப்படும்.

(இன்றைய ஆங்கில இந்து ஏட்டில் கார்த்திக் சுப்பிரமணியம் எழுதிய ‘‘A Proposal to simplify the Tamil Script’’ கட்டுரையின் தமிழாக்கம் இது).

Read more: http://viduthalai.in/e-paper/96807.html#ixzz3Sl5yEyt0

தமிழ் ஓவியா said...

செவ்வாய்த் தோஷ நம்பிக்கையாளர்களுக்குக் காணிக்கை!
செவ்வாய்க்கோளில் பிறக்கும் முதல் குழந்தை?

மார்ஸ் ஒன் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப்பயணம். உள்படம்: செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப் பயணம் மேற்கொண்டு, பிள்ளை பெற விரும்பும் பிரிட்டானிய பெண் மேகி லியூ

செவ்வாய்க் கோளில் பெண்மணி ஒருவர் முதல் முறையாக குழந்தை பெற்றெடுக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்த மார்ஸ் ஒன் (Mars One) என்ற தனியார் நிறுவனம் கடந்த 2013 ஆம் ஆண்டு செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப்பயணம் (A One-Way Trip) என்ற பிரமாண்டமான திட்டத்தை அறிவித்தது. இதற்காக, செவ்வாய்க்கு செல்லும் பயணிகள் மீண்டும் பூமிக்குத் திரும்ப இயலாது; அதற் கான எந்த ஏற்பாட்டையும் நிறுவனம் செய்ய வில்லை என்ற நிபந்தனையுடன் விண்ணப் பங்களை வழங்கியது.

2024 ஆம் ஆண்டு செவ்வாய்க்கோளை நோக்கி செல்லும் இந்த பயணக்குழுவினர், அங்கேயே நிரந்தரமாக தங்க வைக்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, இந்த சாகசப் பயணத்தில் பங்கு பெற உலகம் முழுவதிலும் 2 லட்சத்து 2 ஆயிரத்து 586பேர், தங்களின் பெயர்களை முன்பதிவு செய்தனர். இத்திட்டத்திற்கு, சுமார் 100பேர் தெரிவு செய்யப்பட்டனர். இதில், அமெரிக்காவி லிருந்து 39, அய்ரோப்பாவிலிருந்து 31, ஆசியா விலிருந்து 16, ஆப்ரிக்காவிலிருந்து 7, ஓசியானி யாவிலிருந்து 7 பேரும் தேர்வாகியுள்ளனர். செவ்வாய்க்கோள் பயணத்தில் பயணம் செய்யும் குழுவினரில் இந்தியர்களான கேர ளாவைச் சேர்ந்த சாரதா பிரசாத் (19), துபாயில் வசிக்கும் ரிதிகா சிங் (29) ஆகிய 2 பெண்களும், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கணினி அறிவியலில் டாக்டரேட் பயின்று வரும் தரண்ஜீத் சிங் (29) உட்பட 3 பேர் தேர்வானவர்களின் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

இந்நிலையில், இந்தப் பயணத்திற்குப் பிரிட்டனைச் சேர்ந்த 24 வயதான மேகி லியூ (Maggie Lieu)
என்ற பெண் தெரிவாகி யுள்ளார். மேலும் இவர், செவ்வாய்க்கோளில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடிவெடுத் துள்ளதாகவும் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, செவ்வாய்க்கோளில் குழந்தையை பெற்றெடுப்பதற்கு அங்குள்ள புவி ஈர்ப்பு விசை சாதகமாக இருக்காது என்று இதுவரை ஆராய்ச்சியில் வெளியாகவில்லை என்றும் அதனால், அங்கு தான் நிச்சயம் குழந்தை பெற்றெடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும், இந்த பயணத்திற்கு தெரிவான 100 பேரில் அனைவரும் 19 வயதிலிருந்து 60 வயதுடையவர்கள் என்பதால் அவர்களில் ஒருவரை எனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டு குழந்தையை பெற்றெடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

சுமார் 6 பில்லியன் டாலர் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயணத்தில் பங்கு பெறுபவர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கணக்கில் பல பயிற்சிகள் அளிக்கப் பட்டு வருகின்றன. இது தவிர, இந்த பெரிய பயணத்தை உருவாக்கியவரும், இத்திட்டத்தின் தலைமை நிர்வாகியுமான பாஸ் லான்ஸ் டோர்ப் கூறுகையில், உலகமே வியக்குமளவிற்கு இருக்கப் போகும் இந்தப் பயணத்தை நேரடியாக செவ்வாய்க்கோளிலிருந்து ஒளிப்பரப்ப போகி றோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தொலைக்காட்சி மற்றும் இணைய தள வசதிகள் உள்ள ஒவ்வொருவரும் இந்தப் பயணத்தைக் கண்டுகளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ள தாகவும் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/96811.html#ixzz3Sl6GETOL

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

விருப்பு - வெறுப்பு!

ஆன்மிகம் பொதுவானது என்றால், வடகலைக் காரன் ஏன் தென்கலைக்காரனை வெறுக்கிறான்? திருநீறு பூசுபவன் ஏன் இவர்கள் இருவரையும் வெறுக் கிறான்? ஆக, ஆன்மிகத்திலும் விருப்பு - வெறுப்பு இருக்கிறது என்பது உண்மையானால், அது என்ன வெங்காய ஆன்மிகம்?

Read more: http://viduthalai.in/e-paper/96808.html#ixzz3Sl6NwyQP

தமிழ் ஓவியா said...

பள்ளி மாணவர்கள் மத்தியிலே நேருவைக் கொச்சைப்படுத்திய பி.ஜே.பி. கல்வி அமைச்சர்


ரோஹதக், பிப்.25_ பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அரி யானா கல்வியமைச்சர் ராம்விலாஸ் சர்மா பள்ளி மாணவர்கள் முன்பு முன் னாள் பிரதமர் நேருவை அசிங்கமான வார்த்தை களைப் பயன்படுத்தி திட் டினார். அரியானா மாநிலம் ரோஹதக்கில் அம்

மாநிலத்தைச் சேர்ந்த பிரபல கவிஞர் லக்மிசந் தின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது, இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக அரியானா மாநிலத்தின் கல்வி அமைச்சர் ராம்விலாஸ் சர்மா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அனைவரிடத்திலும் சங்கடத்தை ஏற்படுத்தியது

நமது கவி லக்மிசந் திற்கு நிகரானவர் யாரு மில்லை. அவருக்குள்ள புகழ் என்றும் மறையாது. அவரை எந்த ஒரு தலை வருடனும் ஒப்பிட முடி யாது. ஒருமுறை டில்லிக் குப் பயணம் செய்த சிலர் பேசிக்கொண்டனர். அதில் ஒருவர், இன்று நேரு இறந்துவிட்டார் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த நமது அரியா னாவைச் சேர்ந்தவர் கூறும்போது, பெருமை மிக்க லக்மிசந்த் எங்கே என்று கூறி (சில தவறான வார்த்தைகளை உபயோ கித்து) அந்த நேரு எங்கே? என்று கூறினாராம். இதை அப்படியே ஒலி பெருக்கியில் கூறினார். அவருக்கு முன்பாக நூற் றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் அமர்ந்திருக்க, மேடை யில் ஆசி ரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் அமர்ந் திருக்கும்போது, மாநில கல்வி அமைச்சர் ஒருவரே ஜவர்கர்லால் நேருவை அசிங்கமான வார்த்தை யால் திட்டித் தீர்த்துள் ளது அனைவரிடத்திலும் சங்கடத்தை ஏற்படுத் தியது. நிகழ்ச்சி முடிந்த பிறகு இதுகுறித்து ஊடகவிய லாளர்கள் அமைச்சரிடம் கேட்ட போது,

நான் வேண்டு மென்றே இந்த வார்த்தையைக் கூற வில்லை. கவிஞர் லக்மி சந்த்பற்றி மக்கள் கூறு வதைத்தான் நான் கூறி னேன். மேலும், சில வார்த் தைகளை எந்த அளவு கோல் வைத்து மட்ட மான வார்த்தை நல்ல வார்த்தை என்று கூறு கிறீர்கள் என்று ஊடக வியலாளர்களிடம் பதில் கேள்விவைத்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆசிரியர்கள் கூறியதாவது: அவை நிறைந்த பள்ளி மாணவ, மாணவிகள் முன்பாக இதுபோன்ற வார்த்தையை பயன் படுத்தக் கூடாது

. மேலும் பள்ளியில் நேரு குறித்து மாணவர்களுக்கு நாங்கள் பாடம் சொல்லித்தருகி றோம். அப்படி இருக்க எங்களின் முன்பே புகழ் பெற்ற ஒரு தலைவரை கொச்சையான வார்த்தை களைப் பயன்படுத்தி பேசியிருப்பது தவறான முன்னுதாரணமாகும் என்று கூறினார்கள். ஆர்.எஸ்.எஸ் உறுப் பினரான ராம்விலாஸ் சர்மா முன்னாள் பாஜக மாநிலத் தலைவராக நீண்ட ஆண்டுகாலம் பதவி வகித்தார். அரியா னாவில் உள்ள பாஜக அரசில் கல்வி அமைச்ச ராக உள்ளார்.

தமிழ் ஓவியா said...

மூடன்


கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக்கொண்டு தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழிபோட்டுக்கொண்டு திரிகின்றவன் ஒரு மூடன். - (குடிஅரசு, 18.5.1930)

Read more: http://viduthalai.in/page-2/96798.html#ixzz3Sl6po8mX

தமிழ் ஓவியா said...

செவ்வாய்த் தோஷ நம்பிக்கையாளர்களுக்குக் காணிக்கை!
செவ்வாய்க்கோளில் பிறக்கும் முதல் குழந்தை?

மார்ஸ் ஒன் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப்பயணம். உள்படம்: செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப் பயணம் மேற்கொண்டு, பிள்ளை பெற விரும்பும் பிரிட்டானிய பெண் மேகி லியூ

செவ்வாய்க் கோளில் பெண்மணி ஒருவர் முதல் முறையாக குழந்தை பெற்றெடுக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்த மார்ஸ் ஒன் (Mars One) என்ற தனியார் நிறுவனம் கடந்த 2013 ஆம் ஆண்டு செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப்பயணம் (A One-Way Trip) என்ற பிரமாண்டமான திட்டத்தை அறிவித்தது. இதற்காக, செவ்வாய்க்கு செல்லும் பயணிகள் மீண்டும் பூமிக்குத் திரும்ப இயலாது; அதற் கான எந்த ஏற்பாட்டையும் நிறுவனம் செய்ய வில்லை என்ற நிபந்தனையுடன் விண்ணப் பங்களை வழங்கியது.

2024 ஆம் ஆண்டு செவ்வாய்க்கோளை நோக்கி செல்லும் இந்த பயணக்குழுவினர், அங்கேயே நிரந்தரமாக தங்க வைக்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, இந்த சாகசப் பயணத்தில் பங்கு பெற உலகம் முழுவதிலும் 2 லட்சத்து 2 ஆயிரத்து 586பேர், தங்களின் பெயர்களை முன்பதிவு செய்தனர். இத்திட்டத்திற்கு, சுமார் 100பேர் தெரிவு செய்யப்பட்டனர். இதில், அமெரிக்காவி லிருந்து 39, அய்ரோப்பாவிலிருந்து 31, ஆசியா விலிருந்து 16, ஆப்ரிக்காவிலிருந்து 7, ஓசியானி யாவிலிருந்து 7 பேரும் தேர்வாகியுள்ளனர். செவ்வாய்க்கோள் பயணத்தில் பயணம் செய்யும் குழுவினரில் இந்தியர்களான கேர ளாவைச் சேர்ந்த சாரதா பிரசாத் (19), துபாயில் வசிக்கும் ரிதிகா சிங் (29) ஆகிய 2 பெண்களும், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கணினி அறிவியலில் டாக்டரேட் பயின்று வரும் தரண்ஜீத் சிங் (29) உட்பட 3 பேர் தேர்வானவர்களின் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

இந்நிலையில், இந்தப் பயணத்திற்குப் பிரிட்டனைச் சேர்ந்த 24 வயதான மேகி லியூ (Maggie Lieu)
என்ற பெண் தெரிவாகி யுள்ளார். மேலும் இவர், செவ்வாய்க்கோளில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடிவெடுத் துள்ளதாகவும் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, செவ்வாய்க்கோளில் குழந்தையை பெற்றெடுப்பதற்கு அங்குள்ள புவி ஈர்ப்பு விசை சாதகமாக இருக்காது என்று இதுவரை ஆராய்ச்சியில் வெளியாகவில்லை என்றும் அதனால், அங்கு தான் நிச்சயம் குழந்தை பெற்றெடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும், இந்த பயணத்திற்கு தெரிவான 100 பேரில் அனைவரும் 19 வயதிலிருந்து 60 வயதுடையவர்கள் என்பதால் அவர்களில் ஒருவரை எனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டு குழந்தையை பெற்றெடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

சுமார் 6 பில்லியன் டாலர் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயணத்தில் பங்கு பெறுபவர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கணக்கில் பல பயிற்சிகள் அளிக்கப் பட்டு வருகின்றன. இது தவிர, இந்த பெரிய பயணத்தை உருவாக்கியவரும், இத்திட்டத்தின் தலைமை நிர்வாகியுமான பாஸ் லான்ஸ் டோர்ப் கூறுகையில், உலகமே வியக்குமளவிற்கு இருக்கப் போகும் இந்தப் பயணத்தை நேரடியாக செவ்வாய்க்கோளிலிருந்து ஒளிப்பரப்ப போகி றோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தொலைக்காட்சி மற்றும் இணைய தள வசதிகள் உள்ள ஒவ்வொருவரும் இந்தப் பயணத்தைக் கண்டுகளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ள தாகவும் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/96811.html#ixzz3Sl81XgPw

தமிழ் ஓவியா said...

இங்கிலாந்திலிருந்து வெளிவரும் இதழில்

இங்கிலாந்திலிருந்து வெளிவரும் ஸ்வின்டன் அட்வர்ட்டைசர் (swindonadvertiser.co.uk) எனும் ஆங்கில இதழில் கடவுள் இல்லை என்று தலைப்பிட்டு வெளியாகி உள்ள வாசகர் கடிதத்தில் உள்ள தகவல் வருமாறு:

கடவுள் இல்லை

மூன்று முசுலீம்கள் அமெரிக்காவில் கொல்லப் பட்டனர். கடவுளை நம்புபவர்களிடையே காட்டு மிராண்டித்தனங்கள் ஏற்படக்கூடாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாக உள்ளது.

அண்மைக்காலத்தில் எத்தனை முசுலீம்கள் கொல்லப்பட்டுள்ளனர்? வானத்திலிருந்து கற் பனையாக எவனோ குதிப்பான் என்கிற நம்பிக்கை யால், மக்களைக் கடத்துவது மற்றும் உயிரோடு எரிப்பது என நடைபெறுகின்றன.

ஏசுவாக இருந்தாலும், அல்லாவாக இருந்தாலும், இன்னும் மொகம்மத் அல்லது கடவுள் அல்லது புத்தர் என்று எவரும் இருப்பதாகக் கூறினால், நாம் வாதிடுவதற்கு காரணமாவது இருக்கும்.

எங்குமே கடவுள் இல்லை, மற்றபடி இல்லாத இந்தக் குப்பைகளின் பெயரால் அந்த நம்பிக்கையில் பின்பற்றுபவர்களால் பொறுப்பற்றமுறையில் பலவும் நடத்தப்படுகின்றன.

அப்படி ஒருவன் இல்லாதநிலையில் அவனால் என்ன செய்துவிட முடியும்?

- ரோஜெர் லேக் வடக்கு ஸ்வின்டன்

Read more: http://viduthalai.in/e-paper/96890.html#ixzz3SqlW7xUI

தமிழ் ஓவியா said...

மோடி குட்டு உடைந்தது!
சொந்த தொகுதிக்குக்கூட ஒரு பைசா செலவழிக்கவில்லை

மோடியின் தத்து கிராமத்திலும் வெத்து விளம்பரம் தான்! புதுடில்லி பிப் 26_ புதிய ஆட்சி அமைந்து ஓர் ஆண்டு நெருங்கிக் கொண்டு இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களின் தொகுதிக்காக இதுவரை என்ன செய்தார்கள் என்று டில்லியைச் சேர்ந்த சமூக சேவகர் தகவல் அறியும் உரிமைச்சட்டத் தின் கீழ் கேள்வி கேட் டுள்ளார்.

இதில் வாரணாசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான மோடி இதுவரை அந்த தொகுதிக் காக ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என் பது தெரியவந்தது. நாடாளுமன்ற உறுப்பி னர்கள் அவர்களின் தொகுதி வளர்ச்சிக்காக ரூ200 கோடி ஒதுக்கப்படு கிறது. இந்த நிதியில் அவர்களின் தொகுதி மேம்பாட்டிற்கென புதிய திட்டங்களை வகுத்து அதை நடைமுறைப்படுத்த லாம், மத்திய மாநில அரசுகளின் அனுமதி மற்றும் வேறு எந்த ஒரு தடையும் இல்லாத நிலையில் திட்டங்களை தொகுதி மக்களிடம் இருந்து பெறலாம். வாரணாசி தொகுதி மக்கள் இதுவரை பொது சமுதாயக் கூடம், பள்ளி களில் கணினி, குடிநீர் சுத்திகரிப்பு கருவி, மற்றும் சிறுதொழில் முனைவோ ருக்கான பொதுச்சந்தை போன்ற பல்வேறு திட் டங்களை மோடி வார ணாசிக்கு வரும் போதெல்லாம் அவரிடம் கோரிக்கை மனுவாக கொடுத்திருந்தனர். ஆனால் இந்த மனுக்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை. மேலும் மக்கள் கொடுத்த கோரிக் கைகள் குறித்து ஆலோ சனைகள் கூட நடைபெற வில்லை என்று தெரிகிறது,.

இது குறித்து வார ணாசி மக்கள் கூறும் போது மோடி வாரணா சிக்கு வரும்போது நாங்கள் கொடுக்கும்; மனுக்கள் குறித்து என்ன நடவ டிக்கை எடுத்தார் என்று கேட்டதற்கு இதில் பெரும்பாலானவை மாநில அரசு செய்து கொடுக்கும் இதற்கான நிதி மாநில அரசின் வளர்ச்சித் திட்டத்தில் ஒதுக்கியுள்ளோம் என்று பதில் கிடைத்தது. மோடி வாரணாசி வரும்போ தெல்லாம் வாரணாசியை சிங்கப்பூராக மாற்றுவோம் என்று பாஜக காரர்கள் கூறுகிறார்கள்.

வாரணா சிக்கு உலக தலைவர்களை எல்லாம் அழைத்து வரு வோம் என்கிறார்கள். ஆனால் அந்தத் தலை வர்கள் வருகை தருவதற்கு தரமான சாலைகள் எதுவும் இல்லை, இதற்குக் காரணம் கேட்டால் சாலைகளை நிர்வகிப்பது மாநில அரசு என்று பதில் வருகிறது. மோடியின் தத்து கிராமம்தான் என்ன வாழ்கிறது? மோடி தத்து எடுத்த முஸ்லீம்களே வசிக்காத கிராமமான ஜெயபூரிலும் இதே நிலைதான், மோடி செயல்படுத்தப்போகும் திட்டங்களின் பட்டியல் அடங்கிய பெரிய பதா கைகள் கிராமத்தின் நுழைவாயிலில் அலங்கரிக் கின்றன.

மோடி முதல் முறையாக வருகைதந்த போது வைத்த இந்தப் பதாகைகள் இன்று பழையதாகிப் போய் விட்டன. பல எழுத்துகள் அழிந்துவிட்டன; ஆனால் இதுவரை எந்த ஒரு திட்டமும் செயல் படுத்தப்படவில்லை. இதற்குக் காரணம் கேட்ட போது கிராமங்களில் முக்கிய உறுப்பினர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று அங்கெல்லாம் நடந்து வரும் வளர்ச்சிப் பணியை கண்காணித்து வருகின்றனர். கிராமத்தில் நாங்கள் கேட்ட சாதாரண திட் டங்களுக்குகூட இப்படி எதிர்மாறான பதில்களே வருகின்றன. ஆக்கப் பூர்வமான எந்த திட்டமும் இன்றுவரை நடைபெறவில்லை என்று கூறுகின்றனர்.

கோடைப் பிரதேசமான வாரணாசி யில் ஆப்பிள் மரம் நடு வதற்கு வற்புறுத்துகின்ற னர். ஆப்பிள் மரங்கள் பனிபொழியும் பிரதேசங் களில் தான் செழுமையாக வளரும் ஆண்டிற்கு 3 மாதம் மட்டுமே குளிர் காலமாக இருக்கும் வாரணாசியில் ஆப்பிள் விவசாயம் என்பது இய லாத காரியம்; ஆனால், ஜெயபூர் கிராம பஞ் சாயத்துத் தலைவரான துர்காவதி தேவியின் மைத்துனர் கிராமத்தில் ஆப்பிள் விவசாயம் செய்ய அனைவரையும் வற்புறுத் துகிறார் இதற்காக லட்சக் கணக்கில் பணம் செல வழிக்கின்றனர். தேவை யற்ற இந்த காரியத்தின் மூலம் வாரணாசியில் மோடிக்கு அவப்பெயரே ஏற்படப்போகிறது என்று வாரணாசி மக்கள் கூறுகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/96885.html#ixzz3SqliRMqH

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பட்டர்

ஜாதியைப் பொறுத்து யாரும் உயர்வு, தாழ்வு பாராட்டக் கூடாது; கடவுள் பக்தி கொண்டவன், பக்தியற்றவன், தாழ்ந்த வன் என்பது தான் வைணவத்தின் அடிப்படை. மகாபாரதத்தில் வரும் விதுரர் தாழ்ந்த குலத்தில் பிறந்தாலும் அவரை வியாசர் போற்றி வணங் குகிறார் என்று எழுது கிறது ஓர் ஆன்மிக இதழ்.

ஏன் அதனோடு நிறுத்திக் கொண்டனர்? அந்தப் பக்தியுள்ள விதுரர் குலத்தவர்கள் அந்த வைணவக் கோயி லில் பட்டராக முடி யாதது ஏன் என்பதுதான் இன்றையக் கேள்வி?

Read more: http://viduthalai.in/e-paper/96887.html#ixzz3Sqlr2YPG

தமிழ் ஓவியா said...

கர்மப்பலன்

செய்தி: மதர்தெரசா மருத் துவத் தொண்டு என்ற பெயரில் மத மாற்றத்தில் ஈடுபட்டார். - மோகன் பகவத் ஆர்.எஸ்.எஸ். தலைவர்

சிந்தனை: குஷ்ட நோய் என்றால் அது கர்மபலன் என்று சொல்லும் இந்துத் துவவாதிகள் அந்த நோய் தீர்க்கும் பணியில் ஈடுபட்ட வர்களை ஏற்றுக் கொள் வார்களா?

Read more: http://viduthalai.in/e-paper/96900.html#ixzz3SqnolyCZ

தமிழ் ஓவியா said...

பிற மதத்தில் இருந்து இந்து மதம் மாறியவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கவேண்டும்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு


புதுடில்லி பிப் 27 பிற மதங்களிலிருந்து இந்து மதத்தை ஏற்றுக்கொள்ப வர்களை தாழ்த்தப்பட்ட வர்கள் பட்டியலில் தான் சேர்க்கவேண்டும் என உச்சநீதிமன்றம் பரபரப் பான தீர்ப்பை வெளியிட் டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த கெபி மனு என்ப வரின் பாட்டனார் கிறிஸ் தவராக மதம் மாறினார். அதன் பிறகு அவர்கள் மூன்று தலைமுறைகளாக கிறிஸ்தவர்களாக இருந் தனர்.

இந்த நிலையில் மனு இந்துமதத்திற்கு மாறி தனது ஜாதிச்சான்றிதழில் தாழ்த்தப்பட்ட இந்து என்று சேர்ந்து அதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்று இருந்தார். இதை கேரள நீதி மன்றம் ஏற்க மறுத்து வேற்று மதத்தில் இருந்து இந்துமதத்திற்கு வருப வர்கள் எப்படி தாழ்த்தப் பட்டவராக சேர்க்க முடியும் என்று கூறி அவரது பணி நியமனத்தை சட்டவிரோதம் என்று கூறி அவரிடம் இருந்து 15 லட்சம் ரூபாயை வசூல் செய்யவும் அவரை உடன டியாக பணி நீக்கம் செய் யவும் உத்தரவிட்டிருந்தது.

கேரள உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து கெபி மனு உச்சநீதி மன்றத்திற்கு சென்றார். இவரது மனு நீதிபதி தீபக் மிஷ்ரா மற்றும் கோபால் கோடா அடங்கிய அமர் வின் முன்பு விசார ணைக்கு வந்தது. இது குறித்து நீதிபதிகள் கூறியதாவது: பிற மதங் களில் இருந்து இந்து மதத்திற்கு வருபவர்கள் அவர்களின் மூதாதை யர்கள் எந்த ஜாதியில் இருந்தார்கள் என்பதை சாட்சிபூர்வமாக உறுதிப் படுத்தவேண்டும். மேலும் அவர்கள் வேறு ஜாதி களை ஏற்றுக்கொள்பவ ராக இருந்தால் அந்த ஜாதி இந்துக்கள் அவர் களை தங்கள் ஜாதிக் காரர்களாக மனப்பூர்வ மாக ஏற்றுக் கொள்ள வேண்டும், ஒருவர் கிருத் தவ மதத்தில் இருந்தோ அல்லது இஸ்லாம் மதத் தில் இருந்தோ இந்து மதத்திற்கு மாறுவதனால் இந்து சமூகம் அவர்களை ஏற்றுக் கொள்ள வேண் டும். அப்படி ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் அவர்கள் தாழ்த்தப்பட்ட வர்களாகக் கருதப்படு வார்கள்.

இன்று இஸ்லாம் மற்றும் கிருத்தவ மதத்தைச் சார்ந்தவர்களின் முன் னோர்கள் பெரும்பாலும் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த முன் னோர்கள் தான் வேற்று மதத்திற்கு சென்றார்கள் எனவே அவர்கள் இந்து மதத்திற்குத் திரும்பும் பொழுது அவர்கள் தாழ்த்தப்பட்ட பிரிவின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் இந்து மதம் திரும்பு பவர்கள் தங்களது ஜாதி நிருபிக்கப்படாத நிலையில், அவர்கள் தாழ்த்தப்பட்ட வர்கள் என்றும், தாழ்த்தப்பட்டவர் களுக்குரிய அனைத்து இடஒதுக்கீடு சலுகைகளும் அவர்களுக்கு உண்டு என்று தீர்ப்பு கூறினார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/96966.html#ixzz3SxD381uY

தமிழ் ஓவியா said...

அன்னைதெரசாமீது அவதூறு : கலைஞர் கருத்து


கேள்வி:- அன்னை தெரசா வின் சேவையைக் கொச்சைப் படுத்தும் வகையில் ஆர். எஸ்.எஸ். தலைவர் கருத்து தெரிவித்தது பற்றி?

கலைஞர் :- தேவையில் லாத கருத்து அது. பேசக் கூடாத கருத்து அது. ராஜஸ் தான் மாநிலத்தில் ஒரு கூட் டத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு. மோகன் பகவத், அன்னை தெரசா ஆற்றிய சேவைகள் சிறந்தவையாக இருக்கலாம்; ஆனால், அந்தச் சேவையாருக்கு வழங்கப்படுகிறதோ, அந்த நபரை கிறித்தவ மதத்திற்கு மாற்றுவதுதான் அதன் ஒரே நோக்கமாக இருந்தது என்று குறிப் பிட்டிருக்கிறார். அன்னைதெரசா, கொல்கத்தா நகரில் ஏழையெளியவர்களுக்காக அய்ம்பதாண்டு களுக்கும் மேலாக பணியாற்றியவர். 1979ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசே வழங்கப்பட்டது. இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது. அதிலும் மறைந்து விட்ட ஒரு மாபெரும் மாதரசியைப்பற்றி இப்படிப் பட்ட அநாகரிகமான வார்த்தைகளை ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறி, வீண் பிரச்சினை ஒன்றைப் பா.ஜ.க. அரசுக்கு ஏற்படுத்தி விட்டார் என்றுதான் கூற வேண்டும். யாகாவாராயினும் நாகாக்க என்பதை இவர்கள் உணராமல் இருக் கிறார்களே என்பதுதான் வேதனை!

Read more: http://viduthalai.in/e-paper/96961.html#ixzz3SxDVIRK7

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

இயற்கை சீற்றங்கள்

கேள்வி: திடீரென்று ஏற்படும் நில நடுக்கம் பெரு வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஜோதிட சாஸ்திர விதிகளுக்கு உட்பட்டவையா? அல்லது அப்பாற்பட்டவையா?

பதில்: இது பிரசத் ஜாதக முறைப்படி சொல்லப்படும். இதற்கு இயற்கை உற்பவங்கள் என்று பெயர் (கல்கி 15.2.2015 பக்கம்.15) ஏதாவது புரிகிறதா? இந்த வழுக்கலுக்குப் பெயர்தான் ஆன்மிகம்!

Read more: http://viduthalai.in/e-paper/96962.html#ixzz3SxDhum3W

தமிழ் ஓவியா said...

பக்குவப்படுத்த வேண்டும்

மக்கள் இயற்கையிலேயே மூட நம்பிக்கை, காட்டுமிராண்டித்தனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களை ஓரளவுக்காவது மாற்றிப் பகுத்தறிவு, சமதர்மம் இவைகளுக்குப் பக்குவப்படுத்தவேண்டும்.
(விடுதலை, 16.1.1973)

Read more: http://viduthalai.in/e-paper/96967.html#ixzz3SxEJRmf7

தமிழ் ஓவியா said...

எந்த வகையிலும் வரவேற்க முடியாத ரயில்வே பட்ஜெட் தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து

சென்னை, பிப்.27_ எந்த வகையிலும் வரவேற்க முடியாததாக ரயில்வே பட்ஜெட் உள்ளது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய ரயில்வே பட் ஜெட் குறித்து, தி.மு.க. தலைவர் கலைஞர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியா முழுவதிலும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட பயணிகள் கட்டண குறைப்பு இல்லை என்று தெரிந்து விட் டது. கடந்தாண்டு பா.ஜ.க. அரசின் ரயில்வே பட் ஜெட் நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவால் தாக்கல் செய்யப் படுவதற்கு சில நாள்களுக்கு முன்பாகவே 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கான கட்டண உயர்வினை; கடந்த கால அரசின் முடிவு அது என்று கூறி அறிவித் தார்கள். அதற்குப் பிறகு டீசல் விலை கணிசமாக குறைந்துள்ள நிலையில், பயணிகள் கட்டணமும், சரக்கு கட்டணமும் இந்த ஆண்டு மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவால் குறைத்து அறிவிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்பட்டும் குறைக்கப்பட வில்லை.

கடந்த 8.2.2015 அன்று நான் வெளியிட்ட அறிக்கையிலேகூட, தமிழகத்திற்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 24 ரயில்வே திட்டங்களும் நிறைவேற போதுமான நிதியினை வருகின்ற ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால் இந்தப் பட் ஜெட்டிலும் தமிழகத்தின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இந்திய ரயில்வே பட்ஜெட் வரலாற்றிலேயே இந்த முறை தான் முதல் தடவையாக புதிய ரயில் களோ, கூடுதல் ரயில்களோ அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட ஈரோடு_பழனி ரயில் திட்டம் போன்றவைகளுக்கு நிதி ஒதுக்கி, இந்த ஆண்டு நிறைவேற்ற வேண்டும் என்றும் நான் விடுத்த அறிக்கையிலே கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், மத்திய ரயில்வே அமைச்சர் மத்திய அரசுக்கு நிதி நெருக்கடி ஏற் பட்டிருப்பதால் புதிய ரயில்களை அறிவிக்க முடியாத சூழ்நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்று அறிவித்திருப்பதால், பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைவார்கள். புதிய திட்டங்களை அறி விக்காததோடு பல திட்டங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளன. எனவே, எந்த வகையிலும் வரவேற்க முடியாத பட்ஜெட்டாகவே மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் அமைந்துள்ளது.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/96927.html#ixzz3SxGEgVdB

தமிழ் ஓவியா said...

யம திசை!

தென்திசையை யம (எமன்) திசை என்றும், வடதிசையை குபேர திசை என்றும் கூறுவது உண்டு. இது ஆரியர் வழக்கு. அவர்கள் வடக்கே வாழ்ந்தார்கள். ஆகவே, அதைக் குபேர திசை என்றார்கள். அவர்களை எதிர்த்த தமிழர் தெற்கே இருந்தார்கள். எனவே, தென் திசையை யம திசை என்றார்கள்! தென்திசையை அவாக் என்று ஆரியர் கூறினார்கள். வாக்கு என்றால் மொழி. அவாக் என்றால் மொழி அல்லாதது. அதாவது, அவர்களின் மொழி வழக்கில் இல்லாத திசை என்று பொருள். ஆனால், தமிழரோ தென் திசையைப் போற்றினார்கள் தென் என்றால், இனிமை என்று பொருள் கொண்டார்கள். தெற்கில் இருந்து வீசும் காற்றை தென்றல் என்கிறார்கள். தங்கள் மொழியை தென்மொழி என்றார்கள். தங்கள் மன்னனை தென்னவன் என்று கூறி மகிழ்ந்தார்கள். அதே நேரம் வடதிசையைப் பழிக்கவில்லை! நன்றி: ராணி, 7.3.1982

Read more: http://viduthalai.in/e-paper/96956.html#ixzz3SxGt4wEm

தமிழ் ஓவியா said...

கீதை பற்றி விவேகானந்தர்கீதை என்ற நூல் மகாபார தத்தின் ஒரு பகுதியாகும். கீதையைச் சரிவர புரிந்து கொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதன் முதலில் மகாபார தத்தின் ஒரு பகுதியாக - அதாவது வேதவியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா?

இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா? மூன்றாவதாக கீதையில் கூறப்படுவதுபோல் குருசேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா? நான்காவதாக அர்ஜுனனும் ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள்தானா? என்பன கீதையைச் சங்கராச்சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத்தினார் என்று சிலர் கருதுகிறார்கள். எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளி யிட்டிருந்தாலும் சரி - குருசேத்திர யுத்தம் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. யுத்தத்தில் கிருஷ்ணன் அர்ஜூனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண் டாரா என்ற பிரச்சினை எழுகிறது.

அர்ஜூனன் ஏனையப் பெயர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளனவே தவிர இவர்கள் இருந்தனர் என்றோ, குருசேத்திரயுத்தம் செய்தனர் என்பதோ. கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. - விவேகானந்தர், கீதையைப்பற்றி கருத்துகள் என்ற நூலில்

ஆதாரம்: ஏ.எஸ்.கே.அய்யங்கார் எழுதிய பகுத்தறிவுச் சிகரம் பெரியார் என்ற நூலில் - பக்கம் 11,.117)

Read more: http://viduthalai.in/e-paper/96956.html#ixzz3SxGzeQRD

தமிழ் ஓவியா said...

கலைவாணர் போட்ட மந்திரம்

எங்கள் வீட்டில் வயதான பாட்டி இருந்தார்கள். அவர் காலில் ஒரு நாள் தேள் கொட்டி விட்டது. வீட்டில் தம் நண்பர் களுடன் பேசிக் கொண்டிருந்த போது அப்பாவிடம் இதைச் சொன்னோம்.

அவர் உடனே, இவ்வளவு தானே நானே குணப்படுத்தி விடுகிறேன். செம்பு நிறைய நீரும் ஒரு கொத்து வேப்பி லையும் கொண்டு வாருங்கள் என்றார்.

அவை கொண்டு வரப்பட்டன. வேப்பிலையை நீரில் தொட்டு கொட்டிய இடத்தில் பாட்டிக்கு வீச ஆரம்பித்தார். வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அப்பாவின் நண்பர்கள் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது வலி இறங்கி இருக்க வேண்டும். எப்படி இருக்கிறது என்று பாட்டியிடம் கேட்டார். பாட்டி, சற்றுத் தேவலை இன்னும் மேலிடத்தில்தான் வலிக்கிறது என்றார்.

உடனே மறுபடியும் ஒரு தடவை மந்திரம் முணு முணுத்து வேப்பிலை நீர் அடித்தார். பின்பு, இப்போது எப்படி இருக்கிறது. மேலிடத்திலும் வலி குறைந்து இருக்க வேண்டுமே என்று கேட்டார். பாட்டியார், அந்த இடத்திலும் வலி குறைந்து விட்டது என்றார்.

அப்படியானால் வலிசுத்தமாக இறங்கி விட்டது என்று அர்த்தம். இனி வலியே இருக்காது. எங்கே காலை மடக்கு பார்க்கலாம். பாட்டி காலை மடக்கினார். எழுந்து நில் பார்க்கலாம் பாட்டி எழுந்து நின்றார். நட பார்க்கலாம் பாட்டி நடந்து காட்டினார். இனி உன்னால் ஓடவும் கூட முடியும் அவ்வளவுதான் என்றார் அப்பா.

அப்பாவின் நண்பர்கள், வியப்பினால், தேள் கொட்டினால் விஷத்தை இறக்க மருந்து வைத்துக் கட்டாமல் இப்படி மந்திரம் போடுகின்றாயே. மந்திரத்தில் ஏதும் பயனில்லை என்று பிரச்சாரம் செய்கிறாய். இந்த மந்திரத்தை யாரிடம் கற்றாய்? இத்தனை நாள் எங்களுக்கு தெரியாமல் மறைத்து விட்டாயே. அது என்ன என்று எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டனர். அது ஒன்றும் இல்லை. அது பரம ரகசியம். இன்னொரு நாளைக்கு இன்னொரு இடத்தில் சொல்லுகிறேன். இப்போது இங்கு வேண்டாம்

நண்பர்கள் விடாப்பிடியாக, இல்லை இப்போதே எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க, அப்பா சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு, பாட்டியார் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அது ஒன்றும் கஷ்டமான மந்திரம் இல்லை. உன்னை கடிச்சா எனக்கென்ன, உன்னை கடிச்சா எனக்கென்ன என்று அவசரமாகச் சொன்னேன். இவ்வளவுதான். மனோதத்துவ வைத்தியம் இது - அவ்வளவுதான். நீங்களும் கூட இதைச் செய்யலாம் என்றாரே பார்க்கலாம்.

இதைக் கேட்டு நண்பர்கள் அப்படியா சங்கதி என்று கூறிக் கொண்டு அப்பாவின் கருத்தியல்புகளை மேலும் ஒரு படி புரிந்து கொண்டார்கள்.

கேட்டவர்: உடுமலை நடராசன்

கூறியவர்: மறைந்த நகைச்சுவை நடிகர் கலை வாணர் அவர்களின் புதல்வர் திரு.நல்லதம்பி
இடம்: பயணிகள் விடுதி, அமராவதிநகர், உடு மலை வட்டம். நாள்: 11.4.1981

Read more: http://viduthalai.in/e-paper/96956.html#ixzz3SxHNJEEu

தமிழ் ஓவியா said...

74 ஆண்டுகளுக்குமுன் அண்ணா தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட மூதாட்டியின் மலரும் நினைவுகள்

திருச்சி அருகில் திருவானைக் கோவில் பகுதியில் ஓட்டுவீட்டில் வசிப்பவர் சம்பூரணம் 92 வயதுள்ள மூதாட்டி இவர்.
அண்மைக்காலத்தில் முக்கியப்பிர முகர்களின் கவனத்துக்குள்ளானார். முதுமைக்காலத்தில் தற்போது அதிகஅளவில் மகிழ்வடைந்துள்ளார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அம்மூதாட்டியைச் சந்தித்து அவர் அந்தக் காலத்தில் செய்துகொண்ட சுயமரியாதைத் திருமணம் குறித்து பேசி உள்ளார். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாக அப்படி ஒரு சீர்திருத்த திருமணம் செய்துகொள்வது என்பது மிகப்பெரிய புரட்சியானதாகும்.

1941ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திமுக நிறுவனர் அறிஞர் அண்ணா அவர்கள் முதல்முறையாக நடத்திவைத்த சுயமரியாதைத் திருமணமாக சம்பூரணம்- _ -இராம. சின்னய்யா ஆகியோரின் திருமணம் அமைந்திருந்தது. புரட்டாசி மாதத்தில் 50 பேர் கலந்துகொண்ட மணவிழாவாக நடைபெற்றது.

இதுகுறித்து சம்பூரணம் கூறுகையில், அப்போது எனக்கு 19 வயது. என் கணவருக்கு 34 வயது என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

எப்போதும் மறக்க முடியாத விழா அது. தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதன், வழக்குரைஞர் டி.பி.வேதாசலம் ஆகி யோரும் பங்கேற்றனர் என்று பசுமை யான நினைவுகளை எடுத்துக்கூறினார்.

அறிஞர் அண்ணாவுக்கு முக்கிய மான நிகழ்வாக அமைந்நதது. அதுதான் அவர் நடத்திவைத்த முதல் சுயமரி யாதைத் திருமணமாகும். இரண்டு ரோஜா மாலைகள் மற்றும் 50 ரோஜா மலர்கள் விழாவில் இடம் பெற்றன.

அய்ந்துபேருடன் பிறந்தவர் சம்பூர ணம். சம்பூரணத்தின் தமக்கையார் அய்ந்து படி அரிசி போட்டு திருமண விருந்து படைத்தார். அவர் சகோதரர் சைமன் இராமசாமி கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலும், திமுக பொதுக்கூட்டங்களி லும் பாடியவராவார். அவர்தான் சம் பூரணம் திருமணம் சுயமரியாதைத் திரு மணமாக நடைபெற்றதற்குப் பெரிதும் காரணமானவராக இருந்துள்ளார்.

திருச்சியில் பல ஆண்டுகளாக ஆசிரியையாகப் பணியாற்றியவர் சம்பூர்ணம். அவருடைய சகோதரி பொற்செல்வி இளமுருகு கலைஞர் மற்றும் அவர் குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார்.

ஆனாலும், சம்பூரணம் கலைஞரை பொதுக்கூட்டங்களில் மட்டுமே பார்த்து, அவர் பேச்சு, உச்சரிப்புகளால் பெரிதும் கவரப்பட்டவர். சம்பூரணத் தின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன் பாக சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார். அவர் மகன்கள் திருச்சி மற்றும் மதுரையில் உள்ளனர். அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்கின்றனர்.

அண்மையில் சிறீரங்கம் இடைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வருகைதந்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் சம்பூரணம் அம்மையாரை நேரில் சந்தித்து பயனாடை அணிவித்து, நலம் விசாரித்துள்ளார்.

அவரிடமும் கலைஞர் மற்றும் தயாளு அம்மாள் குறித்தும் சம்பூரணம் நலன் விசாரித்ததுடன், கலைஞர் நீண்ட காலத்துக்கு நல்ல உடல் நலனுடன் வாழ வேண்டும் என்கிற விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page8/96997.html#ixzz3T2NippVB

தமிழ் ஓவியா said...

மதம் படுத்தும் பாடு

அமெரிக்க நாத்திக எழுத்தாளர் பங்களாதேஷில் கொல்லப்பட்ட கொடுமை!

பங்களாதேஷைச் சேர்ந்தவரும் அமெரிக்காவில் வசித்துவருபவருமான அவிஜித் ராய் என்பவர் நாத்திக, மதசார்பற்ற கருத்துகளை தம்முடைய இணையப் பக்கங்களில் (Blogger) பதிவிட்டு வந்துள்ளார்.

இசுலாமிய அடிப்படை மத வாதிகளின் தொடர்ச்சியான அச்சுறுத் தல்கள் இருந்தபோதிலும், அஞ்சா நெஞ்சினராக மதசார்பற்ற நிலையில் தம்முடைய கருத்தைப் பதிவு செய்து வந்துள்ளார்.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்றுவந்த புத்தகக் கண்காட்சிக்கு தம் மனைவி ரபீதா அகமத் போன்னாவுடன் சென்று வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, (26.2.2015) அடையாளம் தெரியாத இரண்டு காலிகளால் அவிஜித் ராய் மற்றும அவர் மனைவி ரபீதா ஆகிய இருவரும் பெரிய கத்திகளால் சரமாரியாகத் தாக்கப்பட்டனர்.

இச்சம்பவம்குறித்து உள்ளூர் காவல் துறைத் தலைமைப் பொறுப்பில் உள்ள சிராஜூல் இஸ்லாம் கூறும்போது, அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே உயிரிழந்துவிட்டார். இத்தாக்குதலில் அவர் மனைவியின் விரல் துண்டிக்கப்பட்டு, மிகவும் மோச மாக காயமடைந்துள்ளார் என்றார்.

ராய் பங்களாதேசத்தில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் ஆவார். அவர் மதசார்பற்ற கருத்து களைப் பதிவு செய்யும் வகையில் முக்தோ-_மோனா என்கிற பிளாக் பக்கத்தை உருவாக்கி தொடர்ச்சியாக மதசார்பற்ற கருத்துகளை எழுதி வந் துள்ளார். அவர் எழுதியுள்ள புகழ் பெற்ற நூல் பிஸ்வாசெர் வைரஸ் (நம் பிக்கை எனும் வைரஸ் கிருமி) உள் ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

தெற்காசிய நாடுகளில் மதசார்பற்ற எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர் கள்மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்தவண்ணம் உள்ளன.
இதேபோன்று 2013 ஆம் ஆண்டில் பங்களாதேசத்தில் நாத்திக கருத்தை எழுதிவந்த இணையப் பக்க எழுத் தாளர் அகமத் ரஜீப் ஹைடர் என்பவர் மோசமாகத் தாக்கப்பட்டு கொல்லப் பட்டார்.

அப்போது, மத அடிப்படை வாதிகளைக் கண்டித்து நாடுமுழுவதும் பெரும் போராட்டமாக வெடித்தது.

பங்களாதேசத்தில் இசுலாமிய அடிப்படைவாதிகளால், இசுலாம் மதத்தின்மீது விமர்சனத்தை முன் வைக்கும் எழுத்தாளர்களை வதம் செய்வது என்கிற பெயரால் கொன்று வருகிறார்கள்.

ராய் மற்றும் அவர் மனைவிமீது தாக்குதல் நடத்தியவர்களை இன்னமும் பங்களாதேசக் காவல்துறையினர் கைது செய்யவில்லை. தாக்குதலுக்குப் பயன் படுத்திய பெரிய கத்தியைமட்டும் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு சிந்தனை


புல், பூண்டு - ஓரறிவு; நத்தை, சங்கு - ஈரறிவு; எறும்பு, கரையான் - மூவறிவு; ஈ, வண்டு - நான்கறிவு; விலங்குகள், பறவைகள் - அய்ந்தறிவு; மனிதன் மட்டுமே! - ஆறறிவு.

ஏன்? எதற்கு? எப்படி? எங்கே? எப்பொழுது? யாரால்? - இந்த ஆறு வினாக்களும் ஆறறிவு படைத்த மனிதனின் அடையாளச் சின்னங்களாகும்.

அறிதல், உணர்தல், விரும்பிச் செய்தல் ஆகிய மூன்றும் அறிவின் கூறுபாடுகள். அறிவார்ந்த சிந்தனை, அறிவார்ந்த சொல்; அறிவார்ந்த செயல் மூன்றையும் உள்ளடக்கியவனே மனிதன். எனவே தான் மனிதன் ஓர் அறிவு ஜீவி என்றார் கிரேக்க நாட்டுப் பேரறிஞர் அரிஸ்டாட்டில் சிந்தனையின் கூர்மையே பகுத்தறிவு பகுத்தறிவு சிந்தனை வீரத்தின் சிறப்பு அம்சமாகும்.

தகவல்: வை. மாறன், நன்னிலம்

Read more: http://viduthalai.in/page5/96990.html#ixzz3T2OwNWW9

தமிழ் ஓவியா said...

அண்ணா அறைகிறார்!

குழந்தையை மிரட்டக் கிழவர்கள், அய்ந்து கண்ணனைப் பற்றியும், ஆறு காலனைப் பற்றியும் கதை கூறும் போது குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய் பொத்திக் கொண்டிருக்குமே யன்றி, தாத்தா, இதை நான் நம்ப முடி யாது என்று கூறுவதுண்டோ?

குழந் தைப் பருவம், மனித சமுதாயத்துக்கு இருந்த போது தான் இடதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக் கடவுள் எனக் கடவுட் கதைகள் கட்டி விடப்பட்டன.

உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப் பரு வத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால், இங்கு மட்டும், ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்னும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பதுடன், அதே கருத் துகளை மக்களிடையே பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக் கொண் டுள்ளனர். நூல்: உவமை நயம்

Read more: http://viduthalai.in/page3/96987.html#ixzz3T2PpGlQk

தமிழ் ஓவியா said...

கண்டுபிடிப்பு

நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டு பிடித்தார். கோபர்நிகஸ் கோள்களின் இயக்கத்தைக் கண்டுபிடித்தார். டார்வின் பரிணாம வளர்ச்சியைக் கண்டு பிடித்தார். ஆல்வா எடிசன் மின் விளக்கைக் கண்டுபிடித்தார். இவற்றால் மனித குலம் வளர்ச்சி பெற்றது.

மனிதன் கடவுளைக் கண்டு பிடித்தானே - அதனால் என்ன பலன் ஏற்பட்டது? மடையனா வதற்கும், சோம்பேறியாவதற்கும் ஏற்பட்டதல் லாமல் வேறு என்னவாம்?

துத்தநாகம்

நாக்குக்கு ருசி தெரிய வில்லை என்பார்கள். என்ன காரணம் தெரியுமா? உடலில் துத்தநாகம் என்ற உப்புச் சத்துக் குறைவதால் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. காய்ச்சலின் போது இந்தச் சத்து இழக்கப்படுவதால் வாய் கசப்பாக இருப்பதையும் உணர்கிறோம்.

Read more: http://viduthalai.in/page2/96984.html#ixzz3T2QQ7400

தமிழ் ஓவியா said...

போகாத ஊருக்கு வழிகாட்டலா?
இல்லாத சரஸ்வதி நதிக்கு பிஜேபி அரசின் பணம் விரயம்

சண்டிகர், பிப்.28_ சரஸ்வதி ஆறு இருப்ப தாகக் கற்பனையில் கூறப் பட்டு வரும் நிலையில், அந்த கற்பனையான சரசுவதி நதியை பூமிக்கு வெளியே கொண்டு வருவ தற்கான முயற்சியில் மீண்டும் இரட்டிப்பான முயற்சியில் அரியானா மாநிலத்தின் வனத்துறை இறங்கி உள்ளதாம்.

யமுனா நகர் மாவட் டத்தில் சரஸ்வதி நதி உருவான இடம் எனக் கூறப்படும் இடமாகிய அதி பத்ரி பகுதியில் சரசுவதி உத்கம் ஸ்தல் எனும் பகுதியில் பூமிக்கு வெளியே சரசுவதி நதியை கொண்டு வரப் போகிறார்களாம்.
வனத்துறை அலுவலர் களைக் கொண்ட குழுவி னர் அதற்கான பணிகளை மேற்கொள்ள சரசுவதி உத்கம் ஸ்தல் பகுதிக்குப் பயணமாகி உள்ளனராம்.

அப்பகுதியில் தண்ணீர் போக்குவரத்துள்ள கால்வாய்ப்பகுதிகளைத் தேடிக் கண்டுபிடித்து அல்லது உருவாக்கு வதன்மூலம் கற்பனையில் மட்டுமே கூறப்பட்டுவரும் சரசுவதி நதியின் தடத்தைக் கண்டறிந்து வெளியே கொண்டுவரப்பட உள்ள தாம். இந்துமதப் புராணங் களில் குறிப்பிடக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து, அதன்மூலமாக சரசுவதி யின் பாதையை அறிய முடியுமா? என்றும் ஆய்வு மேற்கொள்வார்களாம். இந்துப் புராணங்களில் சரசுவதி நதி அலகாபாத் வரை பாய்ந்துசென்று அதன் பின்னர், கங்கை மற்றும் யமுனை நதிகளு டன் திரிவேணி எனும் பகுதியில் இணைகிறதாம்.

சரஸ்வதி உத்கம் ஸ்தல் என்பது ஷிவாலிக் மலை யடிவாரத்தில் அதி பத்ரி பகுதியில் உருவாவதாக நம்பப்படுகிறதாம். இது தான் சரஸ்வதி நதியின் மூலமாம். இந்தத் தகவ லின்படி, அந்தப் பகுதி களில் அரியானா சுற்று லாத்துறையும் ஷிவாலிக் நதியின் பாதையை அறிய முற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

அரியானா மாநில வனத்துறை அலுவலகத் தின் சார்பில் ரந்தீர் குமார் என்பவர் கூறும்போது, இந்தப் பகுதியில் உள்ள நீரோட்டத்தைக் கொண்டு தண்ணீரை எடுத்து வாய்க் கால் அமைத்து, மேலும் இரண்டு, மூன்று குழாய்க் கிணறுகள் அமைத்தும் அதன்மூலம் பெறப்படும் தண்ணீரை அருகில் உள்ள பழமையான ஆற்றில் கலந்து விடப் போகி றோம் என்று கூறினார்.

இந்து மதக் கற்பனை யில் உள்ளபடி, சரஸ்வதி ஆறு என்பது பூமிக்கடி யில் இன்னமும் உள்ள நீரோட்டமாம். பூமிக்கடி யில் உள்ள நீரோட்டம் இருப்பதுகுறித்து செயற் கைக்கோள் படங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள் ளது என்றும். சரஸ்வதியின் ஆற்றோட்டப் பாதை யாகக் கருதப்படும் பகுதி யில் நீரோட்டம் உள்ள தாகக் கூறப்படுகிறது.

பூமிக்கடியில் உள்ள சரசுவதி ஆற்றை பூமிக்கு வெளியே கொண்டு வருவ தற்கு பாஜக ஆளும் அரியானா அரசு டேராடூ னில் உள்ள ஆய்வகத்தின் உதவியை நாடி உள்ளது. புதிதாக தண்ணீர் கால் வாயை உருவாக்குவதன் மூலம், அந்தப் பகுதியில் மத ரீதியிலான சுற்று லாவை அதிகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது என்று வனத்துறை யின் சார்பில் கூறப்பட் டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/97010.html#ixzz3T2R1t8fe

தமிழ் ஓவியா said...

முட்ட விடும் வேலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை நசுக்க பழங்குடியினர் ஆதரவைத் திரட்டப் போகிறார்களாம். வேறு ஒன்றுமில்லை; நக்சலைட்டுகளையும், மலைவாழ் மக்களையும் மோதவிடும் நரித் தந்திரம் இது. குஜராத் கலவரத்தில் முதல் அமைச்சர் மோடி இந்த வேலையைத்தானே செய்தார்.

தினமணியின் பத்திரிகா தர்மம்!

பன்றிக் காய்ச்சலைத் தடுக்க நடவடிக்கைகள்: திமுக உறுப்பினர்கள் வெளி நடப்பு என்று தினமணி வைத்திய நாதய்யர் தலைப்புப் போடுகிறார். சென்னை மாநகராட்சி மன்றத்தில் பன்றிக் காய்ச்சலைத் தடுக்க நடவடிக்கை எடுத்ததற்காக தி.மு.க. உறுப் பினர்கள் வெளிநடப்பு செய்தனர் என்று மக்களை நம்பச் செய்யும் தகிடு தத்தம் இது. திமுக உறுப்பினர் வெளிநடப்புச் செய்தது வேறு காரணத்திற்காக என்பதுதான் உண்மை. திமுக என்றால் வைத்திகளுக்கு அப்படி ஒரு வெறுப்போ!

திடீர் சவார்க்கர் சிலை அகற்றம்

குமரி மாவட்டம் ஈத்தா மொழியில் நேற்று இந்து மகா சபை சார்பில் இந்து மகாசபை தலைவர் தா. பால சுப்பிரமணியம் தனது வீட்டில் சவார்க்கர் சிலை வைத்து கட்சி நிருவாகிகளுடன் மாலை அணிவித்துள்ளார்.

இதற்கு அரசு அனுமதிக்கவில்லை. வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று அந்த சிலையை அகற்றினர். மேலும், இந்து மகா சபை நிர்வாகி தா. பாலசுப்பிரமணியம்மீது பல பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நல்ல சேதி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசனத்துக்கான 300 ரூபாய் முன் பதிவு டிக்கெட் விற்பனையில் பெரும் பின்னடைவு!

Read more: http://viduthalai.in/e-paper/97013.html#ixzz3T2RAgvO5

தமிழ் ஓவியா said...

முயற்சிக்க வேண்டும்


தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையா வண்ணம் நடந்துகொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்கவேண்டும்.
(விடுதலை, 20.3.1950)

Read more: http://viduthalai.in/page-2/97005.html#ixzz3T2RbBn4z

தமிழ் ஓவியா said...

பெரியார் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் சென்று மீண்டபின் அளித்த முக்கிய அறிக்கை

தோழர்களே, எனது மேல் நாட்டு சுற்றுப் பிரயாணம் ஒருவாறு வெற்றியுடன் முடிந்து 11. 11. 32 தேதி காலை ஈரோடு வந்து சேர்ந்திருக்கிறேன். நீண்ட பிரயாணத்தினால் நான் சிறிது களைப்புற்றிருந்தாலும் சமீபத்தில் களைப்பு நீங்கி இயக்க வேலையை மும்முரமாய் தொடங்க உறுதி கொண் டிருக்கிறேன்.

என்னுடன் கூட வந்த தோழர் ராமநாதன் அவர்கள் என்னை மார்செயில்ஸில் இந்தியாவுக்குக் கப்பலேற்றி விட்டு ஜினிவாவுக்குச் சென்று இருக்கிறார். அங்கு சில விஷயம் அறிந்து 2 - அல்லது 3 - மாதத்தில் இந்தியா திரும்புவதாக சொல்லிப் போயிருக்கிறார்.

அதற்குள் கூடிய சீக்கிரம் நமது இயக்கத் தோழர்கள் பலரைக் கூட்டி கலந்து பேசி ஒரு வேலை திட்டத்துடன் தீவிர பிரசாரம் நடத்த உத்தேசித்திருக்கிறேன்.

சீக்கிரத்தில் எனது சுற்றுப் பிரயாணத்தின் விருத்தாந்தங் களையும், காட்சிகளையும், அதனால் தான் கொண்ட கருத்துக் களையும் அதை எந்த அளவுக்கு நாம் பின்பற்ற வேண்டும் என்பதையும் விளக்கி சீக்கிரம் பத்திரிகையில் வெளியிடவும் உத்தேசித்து இருக்கிறேன்.

நான் இங்கு இல்லாத போது இயக்கத்தைத் தொடர்ந்து முன்னிலும் பல மடங்கு அதிகமாக எழுத்தாலும் உபன்யாசங்களாலும் மகாநாடுகள் கூட்டியும் மக்களுக்கு உண்மை உணர்ச்சிக்களை ஊட்டி தீவிரமாய் வேலை செய்து வந்த தோழர்கள் யாவருக்கும் நான் என் மனப் பூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

குடிஅரசு - குறிப்பு - 13.11.1932

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3T2SQb1dK

தமிழ் ஓவியா said...

தேசியத்தின் விளைவு

1914ஆம் வருஷம் முதல் 1918 வருஷம் வரை நடந்த உலக மகாயுத்தமானது அதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தேச மக்களையும் தேசியம், தேசாபிமானம் என்பவற்றின் பேரால் செய்யப்பட்ட பிரசாரத்தின் பயனாகவே அந்த யுத்தத்தின் சம்பந்தப்படும் படி செய்தது.

இந்த உலக மகாயுத் தத்தின் பயனாய் கொல்லப்பட்டவர்கள் 97,43,914 கிட்டத் தட்ட ஒரு கோடி பேர் காயம் பட்டவர்கள் 20,92,7,459 இரண்டு கோடிப் பெயர்களுக்கு மேலானவர்கள் காணாமல் போன வர்கள் 30,00,000. இந்த மகாயுத்தத்திற்கு செலவான தொகை 70,00,00,00,000 பவுன் (ஏழு ஆயிரம் கோடி பவுன்) அதாவது 10,00,00,00,00,000 ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் ஆகும்.

இது நிற்க, இன்றைய தினம் உலக யுத்தத்தை எதிர்பார்த்து தேசாபிமானத்தின் காரணமாக என்று தேசத்தைக் காப்பாற்றுவதற்காக உலக அரசாங்கங்கள் மொத்தமும் செலவு செய்யும் தொகை சென்ற 1931ஆம் வருஷத்திற்கு மாத்திரம் 80,00,00,000 எண்பது கோடி பவுன் அதாவது 1080,00,00,000 ஆயிரத்து எண்பது கோடி ரூபாய் ஆகும்.

இதை தினக் கணக்காய் பிரித்தால் தினம் 1க்கு 20,00,000 பவுன் (இருபது லட்சம் பவுன்) அதாவது நாள் 1க்கு 270,00,000 இரண்டே முக்கால் கோடி ரூபாய் செலவு செய்யப் படுகின்றது.

பிரிட்டிஷ் அரசாங்கமானது தனது அரசாட்சி வரும் படியில் உள்ள ஒவ்வொரு பவுன் வரும் படியிலும் 13 ஷில்லிங் யுத்த தேசாமானத்திற்காக. தேசத்தைக் காப்பாற்ற தேசிய கடனுக்கும் சேனை தளவாடங்களுக்காக அதாவது,

யுத்த கடனுக்கு வட்டி 0 - 9 - 0 யுத்த வீரருக்கு பென்ஷன் தற்காலம் ராணுவத்திற்கும் 0 - 1 - 3
தரைகப்பல் தளவாடத்திற்கும் 0 - 2 - 9 ஆக : 0 - 13 - 0

மேற்படி பதின்மூன்று ஷில்லிங்போக பாக்கி இருக்கும்

ஷில்லிங்கில் கல்விக்கு 0 - 1 - 5
உத்தியோக பென்ஷன் 0 - 1 - 3
தல ஸ்தாபன உதவி 0 - 1 - 2
வேலை இல்லதவர்களுக்கு பிச்சை 0 - 1 - 2

வீட்டு வசதி கோர்ட்டு வசதிவகையறாவுக்கு 0 - 0 - 8
போலீஸ் 0 - 0 - 6
விவசாயம் சுகாதாரம் 0 - 0 - 2
சில்லறை ஆக 0 - 0 - 3 ஆக : 0 - 7 - 0

ஆக பிரஜைகளின் நன்மைக்கு என்று ஏழு ஷில்லிங்கும் செலவு செய்யப்படுகிறது.

அதாவது மேற்கண்ட யுத்த கடன் வட்டிக்காக என்று செலவு செய்யப்படும் 9 ஷில்லிங்கும் முதலாளிமார்களுக்கே போய்ச்சேரும் தேசாபிமானத்திற்காக ஏற்பட்ட காரியத்தின் பயனாய் இன்று முதலாளிமார்கள் தேச அரசிரை வரும் படியில் கிட்டத் தட்ட சரிபகுதியை உலக முள்ளளவும் அனுபவிக்க மார்க்கம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

எனவே, பல கோடிக்கணக்கான மக்களை பலி கொடுத்து காயப்படுத்தி காணாமல் போகச் செய்ததும் அல்லாமல், மக்களிடத்தில் வாட்டிப் பிழிந்து வசூல் செய்யும் வரியிலும் நூற்றுக்கு 65 பாகத்தை தேசத்தைக் காப்பாற்ற என்னும் பேரால் இராணுவத்திற்கும், தள வாடங்களுக்கும் செலவு செய்தும்,

இந்த தேசத்தில் இன்று பத்து லட்சக்கணக்கான மக்கள் வேலையில்லாமலும், ஜீவனத்துக்கு தங்களுக்கும் தங்கள் பெண்டு பிள்ளைகளுக்கும் அரைவயிற்றுக்கு போதுமான கஞ்சிக்கூட மார்க்கமில்லாமலும் தவித்து வருகிறார்கள்.

இது பாமர ஜனங்களுடைய - ஏழை ஜனங்களுடைய தேசாபிமான முட்டாள் தனமா? அல்லது பணக்காரனுடைய படித்த கூட்டத்தாருடைய தேசாபிமான பித்தலாட்டமா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அடுத்த வாரம் தேசியக் கடன் என்பது என்ன? என்பதைப் பற்றி எழுதுகிறேன்.

குடிஅரசு - கட்டுரை - 11.12.1932

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3T2SYjvzi

தமிழ் ஓவியா said...

பகிஷ்கார யோசனை

காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தற்போது செய்தி ருக்கும் பகிஷ்கார யோசனை மிகவும் புத்திசாலித்தன முள்ளதாகவும், வேடிக்கையானதாகவும் இருக்கிறது. ரயில் போஸ்டாபீஸ், தந்தி முதலியவைகளையும் பகிஷ்காரம் செய்ய வேண்டுமாம்.

ஆனால் எந்த காங்கிரஸ் காரராவது இவைகளை நடைமுறையில் செய்து காட்ட முடியுமா? என்று கேட்கிறோம். இந்த பகிஷ்கார வியாக்கியானம் வெகு வேடிக்கையானது! ரயிலைப் பகிஷ்காரஞ் செய்வதென்றால் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு வண்டிகளில் ஏறாமல் மூன்றாவது வகுப்பில்தான் ஏறவேண்டுமாம்! தபால் பகிஷ்காரம் என்றால் கவர் எழுதாமல் கார்டுகளிலேயே எழுத வேண்டுமாம்.

தந்தியைப் பகிஷ்கரிப்பது என்றால் கூடுமானவரையில் வார்த்தைகளைச் சுருக்கித் தந்தி கொடுக்க வேண்டுமாம்! இதுதான் இந்த பகிஷ்காரங்களுக்குக் காங்கிரஸ்காரர்கள் செய்யும் அருமையான அர்த்த புஷ்டியுள்ள விருத்தியுரை.

இந்த வியாக்கியானம் கூறவும், இந்தப் பகிஷ்காரப் பிரசாரஞ் செய்யவும் வேண்டிய அவசியமே இல்லை. பொருளாதார நெருக்கடியுள்ள தற்காலத்தில் இப்படித்தான் நடந்து தீருகின்றது. ஏழை மக்கள் ரயிலில் முதலாவது, இரண்டாவது வண்டிகளை எப்பொழுதும் திரும்பிப் பார்த்தே இருக்க மாட்டார்கள். அவர்கள் எழுதும் கடிதங்களும் குறைவு.

அதுவும் கார்டு 9 பைசாவும், கவர் 1 அணா 3 பைசாவும் ஆனவுடன் நிச்சயமாகக் கார்டில்தான் எழுதுவார்கள். தந்திக்கும் அவர்களுக்கும் வெகுதூரம் ஆகையால் இந்தப் பகிஷ் காரத்தைப் பற்றிப் பிரயோசனமில்லை.

உண்மையிலேயே பகிஷ்காரம் பண்ண வேண்டுமானால், வெள்ளைக்கார அரசாங்கத்திற்குச் சொந்த மானதையெல்லாம் நாம் உபயோகிக்கக் கூடாது என்று இருக்க வேண்டுமேயானால், முதலில் நாம் இந்த நாட்டி லேயே இருக்கக் கூடாது. ஏன்? இந்த நாட்டை இப்பொழுது வெள்ளைக்கார அரசாங்கந்தானே ஆண்டு கொண்டிருக்கின்றது?

ஆகவே அவர் களுடைய ஆட்சிக்குள் அடங்கிய நாட்டில் இருப்பது பாவம் அல்லவா? ஆகையால் எல்லோரும் சமுத்திரத்தில் குடியேற வேண்டும்; வெள்ளைக் காரர் ஆளும் பூமியைப் பகிஷ்காரம் பண்ண வேண்டும் என்று தீர்மானஞ் செய்வார்களானால் இன்னும் மெச்சத்தக்கதாக இருக்கும் என்று யோசனை கூறுகிறோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 10.01.1932

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3T2SgpIx9