Search This Blog

4.2.15

ரங்கராஜ் பாண்டே பெரியாரைச் சீண்டுவதை நிறுத்து!


தினத்தந்தி தொலைக்காட்சியில் ஒருங் கிணைப்பாளராக இருக்கக்கூடிய ரங்கராஜ் பாண்டே தந்தை பெரியாரைச் சீண்டுவது என்றால், அவருக்கு ருசிக்கும் போல் தோன்று கிறது.

விவாதத்தில் பங்கேற்றவர்கள் பேசினால் கூட அதனைப் புரிந்து கொள்ளலாம்.

சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தந்தை பெரியாரைக் குறைகூறும் அளவில் இவர் பேசுவது ஏன்? இதுதான் ஒருங்கிணைப் பாளரின் வேலையா?

இந்து ஆன்மிகக் கண்காட்சிபற்றிய விவாதம் - இவர் கேட்கிறார் - கடவுளே இல்லை என்று சொல்பவர்கள், பெரியார் உருவச் சிலையை வழிபடலாமா? என்று, தான் மூப்பாகக் கேள்வியை எழுப்புகிறார்.

சொல்லுவதில் கொஞ்சம் அறிவுப் பசை இருந்தால்கூட ஏற்றுக் கொள்ளலாம்.

கூழ் முட்டை போல பேசக் கூடாதல்லவா! பெரியாருக்கு மக்கள் சிலை எழுப்புவது உண்மை!

ஆனால், அதனை வழிபடுவதற்காக அல்ல என்பது ஆரம்பப் பள்ளிக்கூட மாணவன்கூட சொல்லி விடுவானே!

அந்தச் சிலைக்குக் கீழ்தான் ’கடவுள் இல்லை இல்லவே இல்லை’ என்று கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளதே!


பெரியார் கூற்றுப்படி அந்தச் சிலையின் உருவத்தைவிட அதன் பீடத்தில் பொறிக்கப் பட்டுள்ள அந்த வாசகங்கள்தான் மிகமிக முக்கியமானவை.
இந்த நிலையில் அபாண்டமாக மோசடி யாக உண்மையைத் திரித்துக் கூறக்கூடாது திரி நூல்கள்!

ஒருக்கால் உண்மையைத் திரிப்பதால்தான் இவாளுக்குத் திரிநூல் என்று பெயர் வந்திருக்கலாமோ!

அதோடு விட்டுவிடவில்லை; கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்று பெரியார் சொல்லவில்லையா? என்று அதே பாண்டே தான் சம்பந்தமில்லாமல் எடுத்துக் கொடுக்கிறார்.

அதையாவது ஒழுங்காகச் சொல்லத் தெரிகிறதா? இப்பொழுதாவது தெரிந்துகொள் ளட்டும்.

கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
என்பதுதான் தந்தை பெரியார் சொன்ன வாசகம்.


இது யாரையோ தனிப்பட்ட முறையில் ஏசுவது என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. அது ஒரு தத்துவம் - அறிவியல் ரீதியான கணிப்பு.


உயர்நீதிமன்றப் படிக்கட்டுகள்வரை இதனை எதிர்த்து ஏறிவிட்டார்கள். பொட்டில் அறைந்தது மாதிரி கடவுள் நம்பிக்கை யாளரான உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி யாகயிருந்த மு.மு.இஸ்மாயில் தீர்ப்புரை வழங்கியதெல்லாம் இந்தப் பூணூல்களுக்குத் தெரியுமா?

யாருக்குச் சிலை வைக்கப்படுகிறதோ, அவரின் கருத்துகளைத்தான் அந்தப் பீடத்தில் பொறிக்க முடியும்! என்று காலாகாலத்திற்கும் அழியாத கல்வெட்டாக தீர்ப்பு வழங்கிய வரலாறெல்லாம் இந்தக் கத்துக்குட்டிகளுக் கெல்லாம் தெரியுமா?

தந்தை பெரியாரின் மனிதநேயமெல்லாம் தர்ப்பைப் புல்களுக்குத் தெரியும் - ஆனால், அவாளின் இனவெறி அவற்றை மறைத்து விடும்.


நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே! என்று சொல்லுபவர்தானே அவாளின் லோகக் குரு (சந்திரசேகரேந்திர சரஸ்வதி - தெய்வத்தின் குரல் 3 ஆம் பாகம், பக்கம் 148).

இந்த யோக்கியதையில் உள்ளவர்கள்தான் பெரியார்மீது பழியேற்றத் துடிக்கிறார்கள்.

மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்
திண்ணகத் திருவால வாயருள்
பெண்ணகத் தெழில் சாக்கியப் பேயமண்
பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே!


என்று தேவாரம் புகழ் திருஞானசம்பந்த அய்யர் பாடியிருப்பதற்கு என்ன பொருள்?

பவுத்தர், சமணர் வீட்டு அழகிய பெண் களைக் கற்பழிக்க மதுரைவாழ் சிவனே! அருள் புரிவாயாக! என்புது போலவா தந்தை பெரியார் சொன்னார்?

நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம் (பாடல் 878) என்ன கூறுகிறது?

வெறுப்போடு சமணர் முண்டர் வாதி இல்
சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரிய னகள் பேசில் போவதே
நோயதாகி,
குறிப்பெனக்கு அடையுமாகில், கூடுமேல்
தலையை ஆங்கே
அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா
நகருள்ளானே

என்ற தொண்டரடிப் பொடியாழ்வார்தம் பாடலின் திரண்ட பொருள் என்ன?

சமணர்களைக் கண்ட மாத்திரத்திலேயே தலையை அறுக்கவேண்டும் என்று சீரங்கத்து அரங்கநாதனை வேண்டுகிறானே - இதைப்பற்றி எல்லாம் என்றைக்காவது எடுத்தாண்டது உண்டா இந்தப் பீகாரி?

இந்தச் சில்லுண்டித்தனமெல்லாம் தந்தை பெரியாரிடம் வைத்துக் கொள்ளவேண்டாம்!

ஒன்று கொடுத்து ஒன்பது வாங்கவேண் டியிருக்கும்.
சங்கராச்சாரியார்களின் கதைகளையெல் லாம் வண்டி வண்டியாக ஏற்றவேண்டி வரும்!

யாரோ ஒருவரை அழைத்து அவர் திராவிடர் கழகம் என்று காட்டுவது கயவாளித் தனம் அல்லவா! அவரோ பெரியார் கருத்துகள் அத்தனையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று உளறுகிறார்.

தந்தை பெரியாரையும், திராவிடர் கழகத்தையும் கொச்சைப்படுத்தும் வேலையை பாண்டே நிறுத்தவேண்டும் - வீண் வம்பை விலை கொடுத்து வாங்கவேண்டாம்!

                      --------------------------மின்சாரம் ”விடுதலை” 4-2-2015  இல் எழுதிய கட்டுரை

58 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

வெங்காய ஜாதகம்?

கேள்வி: ஒருவர் மறை விற்குப் பின் என்ன நிலை யில் உள்ளார் என்பதை ஜாதகத்தில் தெரிந்து கொள்ள முடியுமா?

பதில்: அப்படி எது வும் ஜாதகத்தில் இல்லை.
- கல்கி, 8.2.2015

அப்புறம் என்ன வெங் காய ஜாதகம்?

Read more: http://viduthalai.in/e-paper/95503.html#ixzz3Qmpq6shz

தமிழ் ஓவியா said...

விடுதலை வாசகர்களுக்கு ஓர் இனிய அறிவிப்பு

நாட்டின் முக்கிய பிரச்சினைகளை விவாதிக்கும் வகையில், உரத்த சிந்தனையாக ஓர் புதிய பகுதி "கருத்துக்களம்" என்ற பொதுத் தலைப்பில் முக்கிய தலைப்புகளை அறிவிப்போம்.

100 - 150 சொற்களுக்கு மிகாமல் சுருங்க எழுதி விளங்க வைக்கும் வகையில், மின் அஞ்சல் மூலம் விடுதலை ஆசிரியருக்கு அனுப்பலாம்.

வெளிவரும் சிறப்பான கருத்துகளுக்கு தக்க பரிசுகள்- புத்தகங்களாக அளிக்கப்படும்.

திராவிடர் இயக்கத்தால் தமிழும், தமிழரும் வளர்ந்தன ரா? இல்லையா?

முதல் களம்

இரு கருத்துகளும் வரலாம். (Point - Counter Point வாதம் - எதிர்வாதம்போல் அமையும்)

அனுப்பப்படும் கருத்துகள் அத்தனையும் இடம்பெறும் என்று உறுதி அளிக்க இயலாது.

ஆனால், மாறுபட்ட கருத்துகளுக்கு இடம் நிச்சயம் உண்டு.

- ஆசிரியர், விடுதலை



mail id : viduthalaimalar@gmail.com

Read more: http://viduthalai.in/e-paper/95501.html#ixzz3Qmq4hUPn

தமிழ் ஓவியா said...

வாய்க் கொழுப்பு நீள்கிறது

முஸ்லீம்கள் நாய்போல் பிள்ளைகளை பெற்றுத் தள்ளுகிறார்களாம் பி.ஜே.பி.யைச் சேர்ந்த பிராச்சி சாமியாரிணி பேச்சு

புதுடில்லி, பிப்.4_ விசுவ இந்து பரிசத் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய பிஜேபி தலைவர் களில் ஒருவரான பிராச்சி சாமியாரிணி லவ் ஜிகாத் செய்பவர்கள் நாய்களைப் போல் 40_50 பிள்ளைக ளைப் பெற்றுத்தள்ளுகி றார்கள். இந்துக்கள் 4 குழந் தைகளைப் பெறக் கூறி னால் சிலருக்கு கோபம் வரு கிறது என்று பேசினார். ஞாயிறன்று இரவு புதுடில்லியில் விசுவ இந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத் தில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் களுள் ஒருவரான சாமியா ரிணி பிராய்ச்சி என்பவர் பேசும்போது, இந்துக்கள் 4 குழந்தைகளைப் பெற வேண்டும் என்று நாட்டு நலனில் அக்கறை கொண்டு பேசிய நமது மூத்த சாதுக்கள் மற்றும் இந்து நலனுக்கு என்றென்றும் பாடுபடும் அரசியல் தலை வர்கள் கூறினால், தேச நலனுக்கு எதிரான சிலர் இந்தக் கூற்றைத் தவறாக சித்தரித்து மக்களிடையே பொய் பிரச்சாரம் செய் கின்றனர்.

இவர்கள் இந்து நலனுக்கு எதிரானவர்கள், இந்து ராஷ்டிரம் அமை வதற்கு முட்டுக்கட்டை போடுபவர்கள். இவர்க ளால் நமக்கு என்றென் றும் தொல்லைதான்.

ஆனால் லவ்ஜிகாத் (முஸ்லீம்கள்) செய்பவர் கள் 40 குழந்தைகளை நாய்களைப்போல் பெற்றுத் தள்ளுகின்றனர். இப்படி நாய்களைப் போல் குழந்தைப் பெறு வதை யாரும் கண்டு கொள்ளவில்லை; ஆனால், இந்து ராஷ்டிரத்தின் ஒற்றுமைக்கு 4 குழந்தை களைப் பெறக் கூறினால் அதை எதிர்க்கின்றனர். இனிவரும் காலங்களில் எந்த வித பொய்ப்பிரச் சாரங்களையும் இந்துமக் கள் கவனத்தில் கொள் ளக்கூடாது அவர்களது கடமை 4 நான்கு குழந் தைகளைப் பெறுவது மட் டுமே, இதை தொடர்ந்து செய்துவந்தால் விரைவில் நமது நாடு இந்து நாடாக மாறிவிடும், மேலும் 4 குழந்தைகளுக்குமேல் உள்ள இந்து குடும்பங் களுக்கு பாராட்டும், பணமும் வழங்கப்படும்.

இதன்மூலம் அனைத்து இந்துக்களும் 4 குழந்தை களுக்குமேல் பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற கடமையுணர்ச்சி வரும், இந்தியாவில் உள்ள முக் கிய முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் தங்கள் தாய் மதமான இந்து மதத் திற்குத் திரும்பவேண்டும் என்று பிராச்சி சாமியா ரிணி தமதுரையில் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/95505.html#ixzz3QmqCso9c

தமிழ் ஓவியா said...

மூளைப் பாதுகாப்பு அரண்கள் - எவை?

முதுமை அடைந்தவர்கள் நோய் களினால் தாக்குண்டு அவதியுறுவது ஏற்கப்பட முடியாத ஒன்று என்றாலும், நியாயப்படுத்தக் கூடியதுதான்.

ஆனால், இளைய தலைமுறையினர் பலரும் பல்வேறு நோய்களினால் பாதிக் கப்பட்டு, வாழ்க்கையைச் சுருக்கிக் கொள்ளுவது அநியாயமான கொடுமை யாகும்!

எதுவும் நம் கையில் இல்லை என்று சாக்குருவி வேதாந்தம் பேசுவது, செய்கின்ற செயலுக்குப் பொறுப்பேற்கத் தெரியாத, அல்லது பொறுப்பின்மை யின் அடையாளமேயாகும்.

வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி, குறிக்கோள், உணவுப் பழக்கவழக் கங்கள் தொடங்கி, மது, சிகரெட் போன் றவைகளை நண்பர்களுடன் விளை யாட்டு, வேடிக்கையாகத் தொடங்கி, பிறகு அது விபரீதமாகிவிட்டதோடு, முதலில் வரவேற்றவர்களே, அவற்றை வழியனுப்பத் துடித்தாலும் விடமாட் டேன் உன்னை, விடமாட்டேன் என்று கெட்டியாய் முதலைப் பிடியுடன் பிடித்துக் கொள்வது இளைஞர் உலகின் இன்றைய வாழ்வின் அலங்கோல மாகும்!

எடுத்துக்காட்டாக சில ஆய்வுகள் மூலம் திரட்டப்பட்ட தகவல்கள் இதோ:

1. இயந்திர வாழ்க்கையாக சுழலும் நம் இளைஞர்கள் - மாணவர்கள் பலர் - வீடுகளிலிருந்து கல்விக் கூடம், தொழில் பணிமனைகளுக்குக் கிளம்பும் நேரத்தில், காலைச் சிற்றுண்டியைப் புறக்கணித்து, வெறும் வயிற்றுடன் ஓடுகிறார்கள்!
இதன் விளைவு...?

அவர்களது உடலில் சர்க்கரை அளவு (காலை நேரத்தில்) குறைகிறது; மூளைக்குத் தேவையான இரத்த ஓட்ட மும் குறைகிறது; மூளை பாதிப்படை கிறது; இதனால் வேலையில் சுணக்கம். உடலில் கலக்கம், மயக்கம்! சிற்சில நேரங்களில் சோர்வுடன் கூடிய தூக்கம்!

‘Break Fast’ என்பது ஆங்கிலச் சொல், காரணப் பெயர்தான் - பட்டினி யைத் தவிர்க்கும் உணவு முறை இது. இதைத் தவிர்த்தல் அறிவுடைமை ஆகாது - உடல்நலக் கேடு செய்யும். எனவே, இதனை மாற்றிக் கொள்ளுங் கள்.

2. அதிகமான உணவை உண்டு, வயிற்றில் திணிக்காதீர்; அதிகமாக பலூனை ஊதினால், அது வெடித்து விடு கிறது; உடலோ அதனைச் செரிமானம் செய்ய இயலாது தவிர்த்து, பல வகையில் உடலுக்கு எச்சரிக்கை மணி அடித்து, உடலின் செரிமான இயந்திரப் பகுதியை பழுதாக்குகிறது - வயிறு குப்பைத் தொட்டியல்ல, வடிகால் பெறவேண்டிய பயிர், வளரும் கழனி - மறவாதீர்!

இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று எண்ணும்போதே, உடனடியாக இலையை விட்டு எழுந்துவிடுங்கள். அது உங்கள் ஆயுளைக் கூட்டும்.

3. புகைப் பிடித்தல் - இன்றைய இளைஞர்களிடம் மலிந்துள்ள ஒரு மகத்தான தீய பழக்கம்!

தமிழ் ஓவியா said...

புற்று நோய் வந்து ஆயுளைப் பறிப்பதுபற்றிய தகவல்களை அறியாத வர்களா இவர்கள்? இருந்தும் - தெரிந்தே விளக்கை கையில் வைத்து, பாழுங்கிணற்றில் விழலாமா?

இப்பழக்கத்தால் மூளைச் சுருங்கிச் சுருங்கி, அல்சைமர்ஸ் Alzheimer என்ற மறதி நோய்க்கு சிவப்புக் கம்பளத்தை விரித்து வரவேற்கும் நிலை அல்லவா ஏற்படுகிறது.

4. அதுபோலவே, அதிகமான சர்க் கரை - இனிப்பு பொருள்களை உண் ணுதல்மூலம், நாம் உண்ணும் மற்ற உணவில் உள்ள புரதச் சத்துகளும், ஊட்டச் சத்துக்களும் நம் உடலில் சேர்வதற்குப் பெரிதும் தடையாக இது அமைந்து விடுகிறது.

இதுவும் மூளையை வெகுவாகப் பாதிக்கும் நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

5. காற்றுத் தூய்மைக்கேடு. நமது உடலின் மூச்சுக் காற்றான உயிர்க் காற்று (பிராண வாயு) மூளைக்கு அதிகம் தேவை. கெட்ட காற்று - கரியமில வாயு மற்றும் மாசுபட்ட காற்றை நாம் அதிகம் சுவாசிக்கும் நிலை ஏற்பட்டால் - மூளைக்குச் செல்லவேண்டிய பிராண வாயு குறைகிறது. இதனால் மூளையின் செயல் திறன் - ஆற்றல் குறைகிறது என்கின்றனர் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள்!

6. தூக்கம் என்பதின் முக்கியத்துவம், தேவைபற்றி நம்மில்பலர் அறிந்தவர் கள் அல்லர்.

நல்ல தூக்கம் நம் மூளைக்கு நல்ல ஓய்வைத் தரும். நீண்ட நேரம் தூங் காமல் இருந்தால், அத்தூக்கக் குறைவும் நமது மூளையின் ஆற்றலை வெகு வாகப் பாதிக்கிறது.

உணவுக்கு என்ன விதியோ அதே விதிதான் தூக்கத்திற்கும் (The Same Formula)

(அ) அளவும் குறைதல் கூடாது

(ஆ) அளவும் கூடவும் கூடாது

(இ) குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழும் பழக் கத்தை நமது உடற் கடிகாரத்திற்கு ஏற்படுத்தி விட்டால், அது நம் வாழ்வை நீட்டும்!

7. தூங்கும்போது சிலர் தலை யணையில் தலை வைத்து முகத்தையும் - போர்வை கொண்டு இழுத்து மூடிக் கொண்டு தூங்குகிறார்கள்.

இது மூளையைப் பாதிக்கும், நல்ல காற்றுத் தேவை குறைகிறது; தூய்மை யற்ற காற்று உள்ளே புகுந்து மூளையைக் கெடுக்கிறது!

அதுபோலவே, நம் உடல் நிலை சரியாக இல்லாதபோதும்கூட சிலர் - அவர்கள் பணிப் போதையாளர்கள் (Workaholic) ஆகி பழக்கப்பட்ட காரணத்தினால், கடுமையான பணி - படித்தல், எழுதுதல், சிந்தித்தல் - இவைகளைச் செய்தால், பாரம் இழுக்க முடியாத இயந்திரமாக மூளை பலவீன மடையும் வாய்ப்பு அதிகம்.

8. எதையும் பயன்படுத்தாமலேயே வைத்தால், அது துருப் பிடித்து விடும்; பயனற்றதாகி விடும். பயன்பாட்டுத் தகுதியை இழக்கும்.

அதுபோலத்தான் மூளையும்கூட! எவ்வளவுக்கெவ்வளவு பயன்படுத்து கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு அது விரியும் - தெளிவாக ஆணை பிறப் பிக்கும்.

பயன்படுத்தாவிட்டால், அது சுருக்க மடைந்து, செயல்திறனை இழக்கவே செய்யும். எப்பொருளையும் பயன் பாட்டில் வைத்திருக்கத் தவறாதீர்!

9. மிகவும் குறைவாகப் பேசுவது, மூளைக்குப் பாதுகாப்பு என்கின்றனர் அத்துறை மருத்துவர்கள்! அதற்காக அறிவுப்பூர்வமான உரையாடல்களைத் தவிர்த்து விடாதீர்கள்! பெரிதும் கேட் பாளராக இருங்கள்; பேச்சைக் குறைத்து செயலைப் பெருக்குங்கள்!

இவை நம் மூளைப் பாதுகாப்பு அரண்கள் ஆகும்!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

தமிழ் ஓவியா said...

நீதி போதனை வகுப்பா?

உச்சநீதிமன்றத்தில் டில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவர் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

சமூகத்தில் அறநெறிகள் குறைந்து வருகின்றன. பணம் சம்பாதிப்பது மட்டுமே சமூகத்தின் குறிக்கோளாக மாறி வருகிறது. இதுபோன்ற சமூகச் சீரழிவை மாற்றி அமைக்க வேண்டும். எனவே, பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை நீதி போதனை வகுப்பைக் கட்டாய மாக்கி, மாணவர்களுக்கு அறநெறிகளைப் போதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த வழக்குரைஞர் கள், தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி சிக்ரி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசும், மத்திய அரசின் கல்வி வாரியமும் விளக்கம் அளிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்பேகூட இந்தக் கருத்து உலா வந்து கொண்டிருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது இது நல்லதுதானே - நல்லொழுக்கத்தை மாணவர்களாக இருக்கும் பருவத்திலிருந்தே பயிர் செய்தால்தானே அவர்களின் எதிர்காலம் ஒழுக்கம் உள்ளதாக, கட்டுப்பாடு உள்ளதாக இருக்கும் என்று சொல்லக்கூடும்.

நடைமுறையில் பார்க்கும்பொழுது - அதுவும் பி.ஜே.பி. மத்தியில் ஆட்சியில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் - சங் பரிவார்க் கூட்டத்தின் அழுத்தத்தில் ஆட்சி நடை போடும் ஒரு சமயத்தில் நீதி போதனை என்பது இந்து மதப் பிரச்சாரப் புயலாகத்தான் வீசும்.

ஏற்கெனவே அரியானாவில் கீதை கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டு விட்டது; கல்வித் திட்டத்தையே இந்து மயமாக ஆக்க இருப்பதாகவும் அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

நீதி போதனை என்றாலே இதிகாசக் கதைகள், புராணக் கதைகளைத்தான் மாணவர்களுக்குப் போதிப்பார்கள்; பல ஆண்டுகளுக்குமுன் உயர்நிலைப் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு (Moral Instruction) நடைபெற்றுக் கொண்டு தானிருந்தது. அப்பொழுதும் புராண அளப்புகள்தான்; இராமன் கதை, அரிச்சந்திரன் கதை, குரு பக்திக்கு எடுத்துக்காட்டு கட்டை விரலைக் காணிக்கையாக துரோணாச்சாரிக்குக் கொடுத்த ஏகவலைவன் கதை களைத்தான் கதைத்துக் கொண்டிருந்தனர்.

குசேலனுக்கு 27 குழந்தைகள் - அவன் கிருஷ்ணன்மீது கொண்ட ஆழமான பக்தியின் காரணமாக கிருஷ்ண பகவான் தங்கத்தையும், பொருளையும் வாரி வழங்கி செல்வந்தனாக ஆக்கினார். ஆகவே, மாணவர்களே, பகவான்மீது பக்தி செலுத்துங்கள் என்று சொல்லுவதனால் மாணவர்கள் சோம்பேறிகளாக ஆவதைத் தவிர வேறு வழியே இல்லை!

தந்தை பெரியார்தான் அறிவார்ந்த வினாவை எழுப்பினார்.

ஒருவனுக்கு 27 குழந்தைகள் இருந்தால், அவன் வருஷத்துக்கு ஒரு குழந்தையைப் பெற்றிருந்தால், இருபது வயதிலும், அதற்கு மேற்பட்ட வயதும் நிறைந்த குழந்தை கள் எட்டாவது இருக்கும்.

இந்தக் குழந்தைகளும் சோம் பேறித் தடியன்போல், ஒரு வேலைக்கும் லாயக்கு இல்லாத மாமிசப் பிண்டங்களாக அல்லவா இருந்திருக்கக் கூடும்! இப்படி இருபது வயதுக்கு மேற்பட்டவர்களை வீட்டிலே வைத்துக்கொண்டு ஒருவன் பிச்சைக்குப் போயிருந்தால், அந்த நாட்டில் மற்றவர்களும் இதுபோல் இருந்திருக்க வேண்டாமா? அப்படி இருந்தால் அந்த நாடு எப்படி உருப்படி ஆகியிருக்கும்? இப்படிப்பட்ட சோம்பேறித் தடியர்களுக்குக் கடவுள் செல்வம் கொடுக்கலாமா? (பொன்னி பொங்கல் மலர், 1948)

என்று தந்தை பெரியார் எழுதியுள்ளாரே! இதில் ஒரு வரியை மறுக்க முடியுமா? மதம் காட்டும் மார்க்கம், புராணம் காட்டும் புத்தியுரை இதுதானா?

இவற்றையெல்லாம்தானே நீதி போதனை வகுப்பில் சொல்லிக் கொடுத்தார்கள்? இனிமேலும் சொல்லியும் கொடுப்பார்கள்.

கொள்கைக்காக நஞ்சுண்டு மறைந்த சாக்ரட்டீசை பற்றியா சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்?

பக்தி என்பது தனிச் சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து என்று கூறிய தந்தை பெரியார் அவர்களின் கொள்கையைப் பற்றியா எடுத்துக் கூறுவார்கள்?

இப்பொழுதே ஆசிரியர் தினம் என்பதை குரு உத்சவ் என்று சொல்லி வியாசரின் பிறந்த நாளைத்தான் இன்றைய தினம் மத்தியில் ஆட்சியிலிருக்கும் வகையறாக்கள் கொண்டாடுகிறார்கள்.

நேருவின் பிறந்த நாளைக் குழந்தைகள் நாளாக ஏற்காமல், சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடி, வாலிப வயதில் பெண்ணைத் திருடிய கிருஷ்ணன் பிறந்த நாளை(?) கொண்டாடக் கூடியவர்கள்.

இத்தகைய ஓர் ஆட்சியில் நீதி போதனை என்ற வகுப்பு எந்தக் கேவலத்திற்கு - பிற்போக்குத் தனத்திற்கு, மூட நம் பிக்கைக்கு இழுத்துப் போகும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

நீதி போதனை வகுப்பில் மதச்சார்பின்மை என்னும் தத்துவத்தின் சீலத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

ராமராஜ்ஜியத்தை உண்டாக்குவோம் - இந்து ராஜ்ஜி யத்தைப் படைப்போம் என்று காட்டுக் கூச்சல் போடுவோர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய இந்தக் காலகட்டத் தில் நீதி போதனை வகுப்பு என்பது மாணவர்கள் மத்தியிலேயே மதவாதத்தைத் திணிக்கும் பேராபத்தில் கொண்டு போய் விடும் - எச்சரிக்கை!

எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/95509.html#ixzz3QmqsR4HW

தமிழ் ஓவியா said...

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மில்லியன் டாலர் குட்டு!

ஜனவரி 26 - குடியரசு நாளைக் கொண்டாடும் சாக்கில் பிரதமர் மோடி அவர்கள் தன்னை உலகத் தலைவர்களில் ஒருவராகக் காட்டிக் கொள்ளும் வகையில் ஈடுபட்டுள்ள பல்வேறு திட்டமிட்ட செயல்களில் ஒன்றாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களையே இவ்வாண்டு முக்கிய விருந்தினராக அழைத்துள்ளார்!

இதனால் ஏற்படும் பலன்களும் விளைவுகளும் பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியவையாகும்.



ஏற்கெனவே திரு. மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது போட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில், ஒப்புக் கொள்ளப்பட்டாமல் இழுபறியாக இருந்த சில பிரிவுகளும் நம் மக்களுக்குக் கேடு_பாதகம் விளைவிக்கக்கூடிய பிரிவுகளும் சேர்த்து இப்போது பிரதமர் மோடி அரசால் கையொப்பமிடப்பட்டு, முழுக்க அமெரிக்காவின் பக்கமே சாய்ந்துவிட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

அணு உலையினால் ஏற்படும் ஆபத்துகளுக்கு அமெரிக்கா (வெளிநாடு) எவ்விதத்திலும் பொறுப்பேற்காது; நஷ்டஈடு தராது. மாறாக, அணு உலையை ஏற்படுத்தும் நாடே அதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்ற பிரிவை ஒப்புக் கொண்டிருப்பது, நமது முழு சரணாகதியைத்தான் காட்டும். பொதுவாக இதுமாதிரி ஒப்பந்தங்கள் இரு சாராருக்கும் வெற்றி, யாருக்கும் தோல்வி இல்லை என்ற (Win Win Situation) அடிப்படையில் அமைவதே விரும்பத்தக்கது!

அமெரிக்க முதலீடு என்பதால் அதிக லாபம் யாருக்கு? உள்நாட்டுத் தொழில்நுட்ப அறிவு (Technical Know) எந்த அளவு வளரும்; பொறுத்திருந்து பார்த்தால் புரியும்.

பொதுவாக இவ்வாட்சி ஒரு பக்கம் மதவாதம்; மற்றொரு பக்கம் கார்ப்பரேட் முதலாளிகளின் ஏகபோகப் பண்ணையம் இவற்றின் நிலைக்களனாக உள்ளது என்பன மறுக்க முடியாதவை.

அதானிகள், அம்பானிகள், டாட்டா, பிர்லாக்கள் போன்ற கொள்ளை லாபக் குபேரர்கள் கொழுக்கவும், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம், நிலங்களைக்கூட அடிமாட்டு விலைக்கு விற்று வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொள்ளும் நிலைதான்; உர மானியம் ரத்து, உணவுக்கான சலுகைகள் ரத்து போன்றவை இதன் உண்மை நிறத்தைக் காட்டும்!

நமது விருந்தினராக வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா பேசுகையில், இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ். மதவெறியைப் பளிச்சென்று சுட்டிக்காட்டிய-தோடு, சரியான எச்சரிக்கையையும் தந்துள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சி எப்போது வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்றால், அது மதவாதத்தை விட்டுவிட்டு மதத்தின் பெயரால் பிரிவினைவாதச் செயல்களை நடத்தாமல் இருக்கும்பொழுதுதான் இந்த நாட்டின் வளர்ச்சி சிறப்பாக அமையும். அதுவரை நாட்டின் வளர்ச்சி என்பது கேள்விக்-குறியாகத்தான் இருக்கும்.

இந்திய அரசியல் சட்டத்தின் (அடிப்படை உரிமை) 25ஆவது பிரிவு அனைத்து மக்களும் சமம் என்று குறிப்பிடுகிறது. அனைவருக்கும் _ தேர்வு செய்வதிலிருந்து, சுதந்திரமாய் பேசுவதற்கும், பின்பற்றுவதற்கும், பரப்புவதற்கும் உரிமை உள்ளது. நமது இரண்டு நாடுகளிலும், அனைத்து நாடுகளிலும் மதச் சுதந்திரத்தைக் காக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் உள்ளது.

இப்படி பிரதமர் மோடிக்கும், ஆட்சியிலிருக்கும் அவரது கட்சியினருக்கும் பராக் ஒபாமா இந்திய அரசியல் சட்டப் பிரிவு பற்றி பாடம் எடுத்துள்ளார்!

ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்கள் முதல் மற்ற மதவாத அடிப்படையாளர்களும் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். இது டாலர் தேசத்திலிருந்து வந்த மில்லியன் டாலர் குட்டு!

மோதிரக் கையால் குட்டுப்படுவதைவிட டாலர் கையால் குட்டுப்படுவதைப் பெருமையாகக் கருதுவார்களோ? இதைத்தானே நாம் அன்றும் இன்றும் கூறி வருகிறோம்.

- கி.வீரமணி, ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

இந்திய அறிவியல் காங்கிரஸ் - இந்தியாவிற்குத் தலைக்குனிவு

காவிப் புரட்டு

இந்திய அறிவியல் காங்கிரஸ் - இந்தியாவிற்குத் தலைக்குனிவு

இந்திய அறிவியல் காங்கிரஸ் கழகம் [INDIAN SCIENCE CONGRESS ASSOCIATION] என்பது இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி களை ஊக்குவிப்பதற்காக 1914-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது. தற்போது அவ்வமைப்பில் 30,000 விஞ்ஞானிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இது இந்தியாவின் ஓர் முன்னணி அறிவியல் அமைப்பாகும். அவ்வமைப்பால், ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரத்தில் இந்தியன் சயின்ஸ் காங்கிரஸ் என்ற நிகழ்வு நடத்தப்படுகிறது. 102-ஆம் இந்தியன் சயின்ஸ் காங்கிரஸ் 2015 மும்பையில் ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 7-ஆம் தேதி வரை நடைபெற்றது.



நிகழ்வின் ஒரு பகுதியாக, "சமஸ்கிருதம் மூலம் பண்டைய இந்திய அறிவியல் [Ancient Indian sciences through Sanskrit]" என்ற கருத்தரங்கம் நடந்தது. சமஸ்கிருதம் வழியாக... பண்டைய இந்திய அறிவியல் என்ற தலைப்பே தலைசுற்ற வைக்கிறது அல்லவா? அந்நிகழ்வில் நடந்தேறிய முட்டாள்தனமான, அறிவியல் என்ற பெயரில் வழங்கப்பட்ட வேத அறிவியல் உரைகளில், பகுத்தறிவிற்கு முற்றிலும் முரணான சிலவற்றைக் காண்போம்.

இந்திய அறிவியல் காங்கிரஸில் அரங்கேறிய கேலிக் கூத்துகள்:-

விமானத் தொழில்நுட்பம் பற்றி கேப்டன் ஆனந்த் போடாஸ் பேசினார். அவர், "பண்டைய இந்தியாவில் விமானத் தொழில்நுட்பம் பற்றிப் புராணங்களில் இருக்கிறது என்பது ஒரு கதை அல்ல; அது தொழில்நுட்ப விவரங்களைக் கொடுக்கும் ஒரு வரலாற்று ஆவணம். ரிக் வேதத்தில் பண்டைய விமானங்கள் பற்றிய குறிப்பு உள்ளது. முனிவர்கள் அகத்தியர் மற்றும் பரத்வாஜ் ஆகியோர் விமானக் கட்டுமானத் தைப் பற்றிய அறிவு கொண்டவர்கள் என்று தெளிவாக பல ஆவணங்களில் இருக்கிறது. ஏரோனாட்டிக்ஸ் அல்லது விமானிக்கசாஸ்த்ரா என்பது பரத்வாஜின் யந்திர சர்வஸ்வத்தின் ஒரு பகுதி. விமானிக்கசாஸ்திரத்தில் விமானத் தொழில்நுட்பம் பற்றியும், விமான வடிவமைப்பு பற்றியும், போக்குவரத்துப் பயன்பாடுகள் பற்றியும் விரிவாக உள்ளது. விமானத் தொழில்நுட்பம் பற்றி சமஸ்கிருத மொழியில் 100பிரிவுகள், எட்டுஅத்தியாயங்கள், மற்றும் 3000 ஸ்லோகங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

மிதக்கக் கூடிய, பின்னோக்கியும் பக்கவாட்டிலும் பறக்கும் 200 அடி விமானங்கள் வேத காலத்திலேயே இருந்தன. பரத்வாஜால் 7000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தில் போர்க்காலப் பயன்பாட்டிற்கென 30 என்ஜின்கள் இருந்தன. பரத்வாஜின்ப்ரிஹத் விமானசாஸ்திரத்தில், விமானங்கள் செய்வதற்குத் தேவையான உலோகக் கலவைகள் பற்றியும், விமானிகளை நீர், வைரஸ் மற்றும் அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கும் சிறந்த உடைகளைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளம் தலைமுறையினர் விமானசம்ஹிதா என்ற புத்தகத்தில் பரத்வாஜ் குறிப்பிடப்பட்டுள்ள உலோகக் கலவைகளைப் [alloys] பற்றிப் படித்து, ஆய்வு செய்து அவற்றை கண்டுபிடிக்கவேண்டும். மனிதர்களின்தோல், எலும்பு மற்றும் உடலின் பிற பகுதிகளைத் தாக்கும் 25 வகையான வைரஸ்கள் பற்றியும் பரத்வாஜ் கூறியுள்ளார் என்று பேசினார்.

மருத்துவர் அஸ்வின், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே நவீன அறுவை சிகிச்சை முறையை இந்தியர்கள் கண்டுபிடித்துவிட்டனர். நவீன அறுவைக் கருவிகளைப் போன்ற இரும்பாலான 100க்கும்

மேற்பட்ட அறுவை சிகிச்சைக் கருவிகள் இந்தியர்களிடம் இருந்தன என்றார்.

சுற்றுச்சூழல் அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவதேகர், மனிதர்களின் முன்னேற்றத்திற்கு சமஸ்கிருத அறிவு தான் தீர்வு என்றார். சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இந்தியர்கள்தான் பிதாகரஸ் தேற்றத்தையும், அல்ஜீப்ராவையும் கண்டுபிடித்தனர். ஆனால், அப்பெருமை மட்டும் கிரேக்கர்களுக்கு உரிய தாகிவிட்டது. என்றார். எவ்வித ஆதாரமும் இன்றி பிதற்றிக் கொண்டிருந்த வர்தன் கூற்றுக்கு ஆதரவாக, பிதாகரஸ் தேற்றம் கி.மு.800-களில் சுல்பசூத்திரத்தில் போதையனாரால் எழுதப்பட்டுள்ளது என்று மும்பை பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருதத் துறைத் தலைவரான டாக்டர் கவுரி மஹுலிகர் பேசினார்.

தமிழ் ஓவியா said...

மாட்டின் உடலில் ஒரு பாக்டீரியா உள்ளது. அந்த பாக்டீரியா, மாடு எதை உட்கொண்டா லும் அதனை 24 காரட் தங்கமாக மாற்றிவிடும். அந்த பாக்டீரியாவைப் பற்றி நாசாவிற்குக் கூட தெரியும் என்றார் ஒருவர்.

மூன்று நாட்கள் நீரில் மிதக்க வைத்து நடத்தப்படும் பிரேத பரிசோதனை முறையும் [AUTOPSY] வேத காலத்திலேயே இருந்ததாம்.

குஜராத் சர்வதேச இந்தியன் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் மூன்று சக ஊழியர்களு டன் கிரண்நாயக், மகாபாரதத்தில், செவ்வாய் கிரகத்தில் இரு அரசர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ஒருவரின் தலைக்கவசம் கீழே விழுந்து விட்டது. இப்போது நாம் கூகுளில் ஹெல்மட் ஆன் மார்ஸ் என்று தேடினால் நாசா வெளியிட்டுள்ள புகைப்பட ஆவணத்தைக் காணலாம் என்றார்.

திருவனந்தபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயிண்டிஃபிக் ஹெரிட் டேஜ் என்ற நிறுவனம் கண்காட்சியில் வைத்தி ருந்த ஓர் புத்தகத்தில், வேதங்கள் அசைவ உணவு உட்கொள்வதால் ஏற்படும் அறிவியல் தீமைகளை நிரூபித்துள்ளது என்றிருந்தது.

ராம் பிரசாத் காந்திராமனின் ஆன்லைன் பெட்டிஷன்:-

இந்திய அறிவியல் காங்கிரஸில், போடாஸின் விரிவுரையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, நாசா விஞ்ஞானி ராம்பிரசாத் காந்தி ராமன் ஒரு ஆன்லைன் பெட்டிஷனைத் தொடங்கினார். விஞ்ஞானிகளாகிய நாம் அமைதியாக இருப்பதென்பது, அறிவியலுக்கு நாம் செய்யும் துரோகம் மட்டுமல்ல; நம் குழந்தைகளுக்கும் தான் என்று அதில் குறிப்பிட்டிருந்தார் ராம்பிரசாத். 1000-க்கும் மேற்பட்டவர்களால் அது கையொப்பமிடப் பட்டது. கடந்த இரண்டு வாரங்களில் பல விஞ்ஞானிகள் போலி அறிவியலிற்கு இந்திய அறிவியல் காங்கிரஸ் கொடுத்த களத்தைக் கண் டித்தனர். எனினும், 30,000 இந்திய விஞ்ஞானி களை ஒன்றுபடுத்தும் அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், இது இந்திய புனித நூல்களில் உள்ள பரந்த அறிவியல் அறிவிற்குப் புத்துயிர் அளிக்கும் முயற்சி என்று நம்பினர்.

புனிதநூல்கள் மற்றும் சமஸ்கிருதம் பற்றிய மெக்காலேவின் பார்வை:-

பிரிட்டனைச் சேர்ந்த சிறந்த கல்வியாளரும், இந்தியாவில் ஆங்கிலக் கல்வி முறையை அறிமுகப்படுத்தியவரும், சிறந்த கட்டுரையாள ரும், வரலாற்று ஆய்வாளருமான மெக்காலே [MACAULAY] 1835-ஆம் ஆண்டில் அப்புனித நூல்கள் மற்றும் சமஸ்கிருதத்தைப் பற்றி இந்தியக் கல்வி ஆய்வுக்கூட்டத்தில் கூறியவை:

சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட அனைத்துப் புத்தகங்களில் இருந்தும் தொகுக்கப்பட்ட வரலாற்றுத் தகவல்கள், இங்கிலாந்தில் ஆயத்தப் பள்ளிகளில் [PREPARATORY SCHOOLS] பயன்படுத்தப்படும் மிகவும் அற்பமான தகவல்களைக் காட்டிலும் குறைவான மதிப்புடையவை தான். அரபு மற்றும் சமஸ்கிருதக் கல்லூரிகளுக்குச் செலவிடப்படும் பணம் உண்மைக்குப் புறம்பான, பிழைகளின் சாம்பியன்களாக மாணவர்களை உருவாக்குவதற்குத்தான். நாம் ஒரு மதத்தோடு தொடர்புடையது என்பதற்காக தவறான வரலாறு, தவறான வானியல் மற்றும் தவறான மருத்துவத்தைக் கற்பிக்கிறோம். [அவர் குறிப்பிடுவது புனித நூல்கள் என்று கூறும் சமஸ்கிருத இலக்கியங்களில் உள்ள கூற்றுகளைத்தான்.]

நம் புத்தகங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் தகுதி சமஸ்கிருதத்திலோ, அரபியிலோ உள்ள ஒரு புத்தகத்திற்குக்கூட இல்லை. நாம் ஆட்சியில் இருக்கும் போது, ஒரு சாமானிய ஆங்கிலயேருக்குக்கூட கேவலமாக இருக்கும் மருத்துவக் கோட்பாடுகளையோ, ஆங்கில உறைவிடப் பள்ளியில் படிக்கும் மாணவியைச் சிரிக்க வைக்கும் வானியலையோ, 30 அடி உயரமான மன்னர்களைக் கற்பிக்கும் வரலாறையோ, இனிப்பான மற்றும் வெண் ணெயால் ஆன பாற்கடலைக் குறிப்பிடும் புவி யியலையோ, 30,000 ஆண்டுகளாக நீண்ட ஆட்சிக் காலத்தைப் பற்றியோ கற்பிக்க வேண்டாம்.

1835-ஆம் ஆண்டு மெக்காலே கூறியவற்றை இந்திய அறிவியல்(?) காங்கிரஸ் நடந்துள்ள இத்தருணத்தில் நாம் அனைவருக்கும் நினைவுப் படுத்த வேண்டும். இந்திய அறிவியல் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட முதல் ஆண்டிலிருந்து நடந்த நிகழ்வுகளைப் பார்த்தோமேயானால், இது போன்ற ஓர் அடிமுட்டாள்தனமான அறிவியல்-தொழில்நுட்ப மாநாடு நடந்ததே இல்லை. அப்பெருமை(சிறுமை) இக் காவிக் கும்பலையே சாரும்! இது இந்தியாவிற்கு ஒரு தலைக்குனிவு!

- யாழ்மொழி

தமிழ் ஓவியா said...

இன உணர்வுப் பொங்கல்

2015ஆம் ஆண்டு ஜனவரி 16, 17, 18 ஆகிய மூன்று நாள்கள் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் திராவிடர் திருநாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற நமது தமிழ்ப்-புத்தாண்டு - பொங்கல் விழா, பண்பாட்டுத் திருவிழா காடும் காடு சார்ந்த முல்லை நில வாழ்க்கையை நினைவூட்டும் வண்ணம் அமைந்திருந்தது.

இதற்காக, தந்தை பெரியார் நினைவிடத்தில் மரங்களின் மேல் ஒரு குடிலும், அதைச் சென்றடைவதற்கான ஒரு தொங்கு பாலமும் அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குடிலுக்குச் செல்லும் வழியில் முல்லை நிலச் சூழலை முழுமை செய்வதற்காக காடை, வான்கோழி, கிண்ணிக் கோழி, நாட்டுக்கோழி ஆகிய பறவையினங்களும், முயல் போன்ற விலங்கினங்களும் காட்சிக்கு வைக்கப்-பட்டிருந்தன. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.

ஓசை சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட காட்டுப் பறவைகள், விலங்குகள் ஆகியன பற்றிய உயிர்நிழல் ஒளிப்படக் கண்காட்சியை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்துவைத்தார். மகளிர் சுய உதவிக் குழுவினரின் இயற்கை உணவுத் திருவிழாவும் இடம் பெற்றிருந்தன.

மற்ற இடங்களைப் போலல்லாமல் உரியடிக்கும் பானையில் ஜாதி என்று எழுதப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தது. வெற்றி பெறவேண்டுமானால் ஜாதியை உடைக்க வேண்டும்.

முதலில் நாட்டுப்புறப் பாடல்களுக்கு ஒயிலாட்டம் ஆடி கண்ணப்பர் ஒயிலாட்டக் குழு அனைவரையும் கவர்ந்தனர். அதைத்தொடர்ந்து அன்பு பகுத்தறிவு கலை இலக்கிய இசைக்குழு பகுத்தறிவு வணக்கப் பாடலுடன் தொல்லிசையை இசைத்து மக்களை மகிழ்வித்தனர்.

கவிஞர் கலிபூங்குன்றன் தமது அறிமுகவுரையில், திராவிடர் திருநாள் ஏன்? என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும் விதமாக, திராவிடர்_திருநாள் - தமிழர் திருநாள் இரண்டும் ஒன்றுதான். திராவிடர் திருநாள் என்ற பெயர்தான் பார்ப்பனப் பண்பாட்டுக்கு எதிரானது என்பதை அடையாளப்படுத்தக் கூடியது என்று கூறி விட்டு, அக்ராசனபதி, உபச்சாரம், ஜலம், தீர்த்தம், ஸ்நானம், சாதம் என்பன போன்ற ஏராளமான வட மொழியை நீக்கி தமிழைத் தமிழாக்கியது திராவிடர் இயக்கம்தான் என்பதை தமிழ்த் தேசியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.

தொடர்ந்து பேரா. சுப. வீரபாண்டியன், எது தமிழ்ப்புத்தாண்டு எனும் தலைப்பில் பேசினார்.

தன் சொந்தப் பணியோடு சேர்த்து சூழலியலைக் காக்க ஒரு லட்சம் மரங்களை நட்டு பல்வேறு விருதுகளையும் பெற்ற கோவையைச் சேர்ந்த பேருந்து நடத்துநர் ம. யோகநாதனுக்கு தமிழர் தலைவர் பெரியார் விருதளித்துச் சிறப்பித்தார். தொடர்ந்து எழுத்தளர் வே. மதிமாறனுக்கு, தமிழர் தலைவர் பெரியார் விருது வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியும், தனது ஆசான் ஆ.திராவிடமணி படத்தைத் திறந்துவைத்தும், பெரியார் விருது வழங்கியும் சிறப்பித்த தமிழர் தலைவர் தமது உரையில் தமிழ்த் தேசியவாதிகளுக்குப் பாடம் எடுத்தார்.

தமிழ் ஓவியா said...


திராவிடர்களுக்குத்தான் திருநாள் உண்டு. மற்றவர்களுக்கு பண்டிகைதான் என்று திராவிடர் திருநாளுக்கும், தமிழர் திருநாளுக்கும் உள்ள வேறுபாட்டைச் சுட்டிக் காட்டினார். தொடர்ந்து பேசிய ஆசிரியர் அவர்கள், எந்த ஆண்டு உண்மையான தமிழ்ப்புத்தாண்டு மறுக்கப்பட்டதோ, அதிலிருந்து அடிக்கப்பட்ட பந்து எழுவது போல பெரியார் திடல் திராவிடர் திருநாளை நடத்துகிறது. 60 ஆண்டுகள் பிறந்த ஆபாசத்தையும் கூறி, இதுவா தரணி ஆண்ட தமிழனுக்குப் புத்தாண்டு? என்ற சுயமரியாதைக் கேள்வியை எழுப்பினார்.

தொடர்ந்து, பேராசிரியர் சிறப்புரை-யாற்றினார். பொதுவாகவே தமிழனுக்கு தமிழர் என்ற நினைவு இருப்பதில்லை. தமிழர் என்றால் வெறும் மொழிப்பற்று உள்ளவர்கள். திராவிடன் என்று சொன்னால், மொழியுணர்வோடு சொரணையும் இனவுணர்வும் உள்ளவர்கள் என்றார். கம்பர், சேக்கிழார், பாரதி ஆகியோரை நினைவுகூர்ந்து அவர்களின் மொழிப்பற்று எதற்குப் பயன்பட்டது என்ற கேள்வியையும் எழுப்பினார். மானத்தை விட்டுவிட்டு இவர்கள் எதைச் சாதிக்கப் போகிறார்கள்? என்று கூறிவிட்டு, டாக்டர். அம்பேத்கர் மட்டும் இல்லாமல் போயிருந்தால், நாம் செத்துப் போயிருப்போம். காரணம், அவர் இயற்றிய அரசியல் சட்டத்தில் உள்ள கருத்துச் சுதந்திரம் மட்டும் இல்லையென்றால் என்று எண்ணிப்பாருங்கள் என்று சிந்திக்க வைத்தார்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் புதுவை பாவாடைராயனின் கிராமிய கலைக்குழுவின் பம்பை ஆட்டம் தொடங்கியது

தென்றல் குழந்தைகள் மன்றம் சார்பில் காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த சிறுமி வினோலியா எதிர்பாராத ஆச்சரியம் போல, ஏய் நல்லாயிருக்கா... உனக்கு நல்லாயிருக்கா... என்ற பகுத்தறிவுப் பாடலையும், எத்தனை முறைதான் எங்கக்கா வெட்கப்படுவா எங்கக்கா... என்ற பெண்ணுரிமைப் பாடலையும் பாடி சமூக அவலங்களை கண் முன்னே நிறுத்தி மனம் கசியச் செய்துவிட்டார்.

பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணியின் மாநில செயலாளர் மஞ்சை வசந்தனின் அறிமுக உரைக்குப் பிறகு, பண்ணாராய்ச்சி வித்தகரின் படத்தைத் திறந்துவைத்த பேராசிரியர் மு.இளங்கோவன் இயக்கிய குடந்தை சுந்தரேசனாரின் ஆவணப் படம் வெளியிடப்பட்டது. முல்லை நில உயிர்ச்சூழல் என்ற தலைப்பில் ஓசை இளஞ்செழியன் உரையாற்றினார்.

திரைப்பட கலை இயக்குநராக சிறப்பாகச் செயல்படும் லால்குடி இளையராஜா, இளையோருக்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மலர்வதி, பகுத்தறிவு பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பெரியார் விருது வழங்கிச் சிறப்பித்தார்.

நிகழ்ச்சியின் சிறப்புரையாகவும், நிறைவுரை-யாகவும் தமிழர் தலைவர் உரையாற்றினார்.

மூன்றாம் நாள்

இலட்சிய நடிகர் மறைந்த எஸ்.எஸ். ராஜேந்திரனின் உருவப் படத்தை திரைப்பட இயக்குநரும், சுயமரியாதைக் குடும்பத்தவருமான எஸ்.பி. முத்துராமன் அவர்கள் திறந்து வைத்து, அவரைப்பற்றிய அரிய சில நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து, ஊடகவியலாளர் கோவி. லெனின் திராவிடர் திருநாள் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். வெள்ளை ஆடைக்குப் பதிலாக கறுப்பு ஆடை யணிந்து வந்து அனைவரையும் வியப்பிலாழ்த்தினார் பேராயர் எஸ்றா. சற்குணம் அவர்கள்.

ஊடகவியலாளர் ப. ரகுமான், இசையமைப்பாளர் டி. இமான், திரைப்பட இயக்குநர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் முறைப்படி பெரியார் விருது வழங்கினார்.

கருத்துரை, பெரியார் விருது, வாழ்த்துரை முடிந்து தமிழர் தலைவர் தம் நிறைவுரையில், துணிந்தவனுக்குத் துக்கமில்லை என்பது பழமொழி. துணிந்தவனுக்குத் தோல்வியில்லை என்பது புதுமொழி என்று பழமையைப் புதுப்பித்தார். மாட்டுப் பொங்கலைப்பற்றிச் சொல்லும்போது, ஏன் எருமை மாட்டைச் சொல்ல மறுக்கிறோம் என்று தர்க்க ரீதியிலான ஒரு கேள்வியை எழுப்பி, அதற்கு மனுதர்மத்தி-லிருந்தே ஆதாரத்தை எடுத்துக்காட்டினார்.

மொழியால், வழியால் நாம் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், பிறப்பால் மனிதர்கள், அறிவால் பகுத்தறிவாளர்கள் என்று ஒரு வரையறையுடன் தனது உரையை நிறைவு செய்தார்.

தமிழ் ஓவியா said...

இரோம் சர்மிளா : விடுதலையும் தொடரும் கைதுகளும்


இராணுவச் சட்டங்கள்

இரோம் சர்மிளா :

விடுதலையும் தொடரும் கைதுகளும்


'சர்மிளா தற்கொலைக்கு முயலும் குற்றவாளி', அவரைக் காண இம்பால் நீதிமன்றத்தை அணுகியபோது நீதிபதி அனுமதி மறுத்துக் கூறியவை இவை. ஆனால் அதே நீதிமன்றம் 'சர்மிளா குற்றமற்றவர், அவரது போராட்டம் சட்டப்பூர்வமானது என தீர்ப்பளித்து. ஜனவரி 22ஆம் தேதி விடுதலை செய்தது.

ஆனால் அடுத்த நாள் இரவே மருத்துவ உதவி தரப்படுகிறது என மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த விடுதலையும் தொடரும் கைதுகளும் சர்மிளாவின்மேல் நிகழ்த்தப்படுவதல்ல, அவர் வைக்கும் கோரிக்கையின்மேல் நிகழ்த்தப்படுபவை.

மணிப்பூரில் நடைமுறையில் உள்ள ராணுவ சிறப்பதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பதுவே அந்தக் கோரிக்கை. அதற்காகவே கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார்.

இந்தச் சட்டத்தை இங்கிலாந்து காலனிய காலத்தில் எதிர்த்த அதே காங்கிரஸ்தான், இந்திய விடுதலைக்குப் பிறகு இங்கு நடைமுறைப்படுத்தியது.

இந்திய விடுதலைக்குப் பிறகான அரை நூற்றாண்டு காலம் கடந்தும் நடைமுறையில் உள்ள ராணுவ சிறப்பதிகாரச் சட்டம், மத்தியில் எந்த அரசாங்கம் மாறினாலும் மாறாத ஒன்று. அந்தச் சட்டம் ஏற்படுத்திய வன்முறையே எனது உண்ணாவிரதத்துக்குக் காரணம் என்கிறார் சர்மிளா.

அப்படி என்ன வன்முறை? நவம்பர் 2, 2002, மாலோம் என்ற பகுதியில் காலைப் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த 10 பேர் எவ்வித எச்சரிக்கையுமின்றி அசாம் ரைபில்ஸ் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதில் ஓர் இளைஞர் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் வீரதீர விருது பெற்றவர். இந்தச் சட்டத்துக்குக் கொடுக்கப்படும் கேள்விகள் கேட்கமுடியாத உட்சபட்ச அதிகாரத்தை எதிர்த்து அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை சர்மிளா தொடர்கிறார்.

ஏன் இந்தச் சட்டம்? 1948இல் இந்தியாவால் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்ட மணிப்பூரிலும் இன்னும் பிற வடகிழக்குப் பகுதிகளிலும் இந்திய _- காலனித்துவ ஆட்சி (Indian Colonial Rule) என்று நிலவும் அரசியல் சூழலை இன்றளவும் இந்திய அரசு ஏற்கத் தயாராக இல்லை என்பதால் இங்கு ராணுவ சிறப்பதிகாரச் சட்டத்தை வைத்திருக்க வேண்டிய நிலை இந்திய அரசுக்கு உள்ளது. ஆனால் இந்திய அரசு, ஆயுத இயக்கங்கள் ஊடுருவலைத் தடுக்கவே இச்சட்டம் என்கிறது.

தற்கொலை குற்றமல்ல

அண்மையில் உச்ச நீதிமன்றம் அய். பி. சி. 309, அதாவது தற்கொலைக்கு முயல்வது குற்றமாகாது என்றது. இப்போது சர்மிளாவுக்குக் கொடுக்கப்பட்ட விடுதலை, அய். பி. சி. 309 விலக்கப்பட்ட அடிப்படையில்தான் என எண்ணப்பட்டது.

தற்கொலைக்கு முயலும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சட்ட ஆணையகம், தற்கொலைக்கு முயல்வோரைத் தண்டிப்பது சரியாகாது. அவர்களுக்கு அதிலிருந்து மீண்டும் உளவியல் சார்ந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றது.

சட்ட ஆணையகம் கருத்தின் அடிப்படையில், இங்கு சிகிச்சையானது ராணுவ சிறப்பதிகாரச் சட்டக் கொள்கை மீதே தேவையாக உள்ளது.

- மகா.தமிழ்ப் பிரபாகரன்

(கட்டுரையாளர் நியூஸ்7 தொலைக்காட்சியில் தமிழ் செய்தியாளராகப் பணியாற்றுபவர். இரோம் ஷர்மிளா குறித்து அத்தொலைக்காட்சியில் சிறப்புப் பதிவினைச் செய்தவர்.)

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வழக்குகளை விசாரிக்கும் ஆங்கிலேய நீதிபதிகளுக்கு உதவியாக சாஸ்திரங்களை எடுத்துச் சொல்லும் பொறுப்பில் பார்ப்பனர்களே இருந்தார்கள் என்பதும், அந்தப் பார்ப்பனர்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப கருத்துகளைக் கூறி வந்தார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

எதுக்காவது போராடுவோம்?"

போனவாரம் மாதொருபாகன் மனதைப் புண்படுத்துகிறது என்று போராடியவர்கள், இப்போது நயன்தாரா பீர் வாங்குவது போல் நடிக்கக்கூடாது என்று போராட்ட அறிவிப்பு விடுத்திருக்கிறார்கள். எப்படியாவது செய்திகளில் இடம்பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் எதற்குப் போராட்டம் நடத்துவது என்று தெரியாமல் எல்லாவற்றுக்கும் போராட்ட அறிவிப்பு விடுக்கிறார்கள் இந்துத்துவ காமெடியினர். ஏதோ நம்மால ஆன உதவியையும் செய்யலாமே! எதற்கெல்லாம் போராட்டம், எப்படியெல்லாம் நடத்தலாம் என்பதை நம் உண்மை வாசகர்கள் எழுதி அனுப்பலாம். சிறந்த போராட்டத்திற்குப் பரிசு உண்டு. வரும் பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் உங்கள் ஆலோசனைகளை அனுப்பிவையுங்கள்.

எதுக்காவது போராடுவோம்?

உண்மை

பெரியார் திடல், 84/1, (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7

unmaionline@gmail.com

தமிழ் ஓவியா said...

உற்சாக சுற்றுலாத் தொடர் - 2

மாச்சுபிச்சு மட்டுமல்ல...

அக்டோபர் 7ஆம் தேதி விமானப் பயணம் வாசிங்டன் டல்லஸ் விமான நிலையத்திலிருந்து ஆரம்பமானது. விமான நிலையத்தின் ஒரு தனிப் பகுதியில் இருந்து நாங்கள் ஏறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாதிப் பயணம் விமானத்தின் முன் பகுதி இருக்கை எண் 2 ஏ&பி, கையிலிருந்த அய்-பேடில் பயண விவரங்கள், செல்லும் இடங்கள் பற்றிய அனைத்து விவரங்களும் இருந்தன. அங்கிருந்து 6 மணி நேரத்தில் தென்அமெரிக்கா பெரு நாட்டின் தலைநகரம் 'லீமா' வந்தடைந்தோம். விமானத்தில் இரண்டு பேராசிரியர்கள் அலெக்சு மர்பி, சேக் டால்டன் பெரு நாட்டின் பழங்கால அரசியல் பற்றியும், இன்கா இனத்துக்கு முன் வாழ்ந்த மனிதர்களைப் பற்றியும், இன்கா இனத்தைப் பற்றியும் படங்களுடன் சொற்பொழிவு ஆற்றினார்கள்.

கையிலுள்ள அய்-பேடில் படங்களும் எழுத்துகளும், காதில் தனி ஒலிவாங்கி மாட்டிக்கொண்டு பேசுவதை விமானத்தின் இரைச்சலின்றி நன்றாகக் கேட்க ஏற்பாடு. ஏதாவது சரியில்லையென்றால் கையைத் தூக்கினால் உடனே வந்து சரி செய்வார்கள். கல்லூரிப் பாடம் போல் ஆனால் நகைச்சுவை யுடன் பல செய்திகள் கற்றுக் கொண்டோம்.

நடுவிலே தனி சமையல்காரர் தயாரித்த பல்வகை உணவு, புன்னகையுடன் வரிசையாகத் தரப்பட்டது. பயண விவரங்கள் தங்கும் விடுதி பற்றிய அறிவிப்பு, பயண அட்டை, மருத்துவ மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி அட்டை என்று விவரங்கள் அறிவிக்கப்பட்டன. முக்கியமாக கைப்பை தவிர ஒரு பெரிய பெட்டியும், தள்ளுப் பெட்டியும் பற்றிக் கவலை இல்லை. அவை விடுதி அறைக்கே நேரே வந்துவிடுமாறு ஏற்பாடு. நேரம் போனதே தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு தென்அமெரிக்கா பற்றி பயணக் கட்டுரை எழுதியிருந்தேன். ஆகவே இந்தத் தடவை மாச்சு பிச்சு பற்றி நிறைய எழு தாமல், அந்த நாட்டில் பார்த்த முக்கிய மாற்றங் கள் பற்றி எழுத விழைகிறேன்.

லீமா விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்குச் சென்றோம். சிற்றுண்டி அருந்தி விட்டு ஒரு அருங்காட்சியகம் சென்றோம். அங்கே அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்ட ஆயிரக்கணக்கான அழகிய மண்பாண் டங்கள், பொன், வெள்ளி, வெண்கலச் சாமான் களைப் பார்த்தோம். ஒரு தனி மனிதரின் சேகரிப்பு. இவையெல்லாம் இன்கா மக்களுக்கு முந் தைய நாகரிக மக்களுக்கு உரியதாகும் என்றனர். இன்கா மக்கள் ஏறத்தாழ 600 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்தவர்கள். அவர்கள் இனத்தவரை அடிமை ஆக்கியவர்கள் ஸ்பானியர்கள்.

தற்போது பார்த்த மாற்றங்கள் என்னவென் றால் மேன்மை பெற்ற பொருளாதார நிலைமை, நகரத்தூய்மை, வேலை வாய்ப்பு முன்னேற்றம், மக்களின் முகத்தில் ஒளிவிடும் நம்பிக்கை. இந்த முன்னேற்றத்திற்குக் காரணம் மக்களுக்காகப் பாடுபடும் நல்ல அரசியல் தலைவர்கள் என்று அந்த நாட்டுப் பெண் பயண விளக்குநர் (Travel Guide) சொன்னார். மக்களும் தாங்களும் தங்கள்நாடும் முன்னேற வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்கள் என்றார். கல்வி கற்பதிலும் மிக்க முன்னேற்றம் என்றார். பயணிகளாகிய எங்களுக்கு இந்த மாற்றம் மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அக்டோபர் 8ஆம் தேதி லிமா நகரிலிருந்து

தமிழ் ஓவியா said...

விமானத்தில் குச்கோ நகரம் சென்றோம். அங்கு monestery என்ற விடுதியிலிருந்து அரை மணி தூரத்தில் உள்ள சக்சுகாமன் என்ற இன்காவின் தொன்மையான இடத்தை அடைந்தோம். அந்த இடத்தின் சிறப்பு என்ன வென்றால் மிகப்பெரிய கற்களை (13 அடி உயர முள்ள 200 டன்கள் எடை உடைய) ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்பட்ட கட்டி டங்கள்தான். இதில் ஆச்சரியம் என்ன? இவை கட்ட அந்தக் காலத்தில் சக்கரமோ அல்லது சுமை தூக்கியோ கண்டுபிடிக்கப்படவில்லை. யானைகளும் இந்த நாட்டில் கிடையாது. பிறகு எப்படி இக்கற்களைத் தூக்கி அடுக்கியிருப் பார்கள் என்பது புதிர் அல்லவா? இக்கட்டிடங்களை இன்கா மன்னர் பச்ச கூட்டி என்பவர் கட்டியுள்ளார். இம்மன்னர் இன்கா காலத்தில் மிகவும் புகழ் பெற்றவராக இருந்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

அன்று இரவு விடுதியில் தங்கிவிட்டு, மறுநாள் காலை உலக அதிசயங்களில் ஒன்றான மாச்சு பிச்சுக்குப் போகும் வழியில் ஒலாண்டேடாம்போ என்ற இன்கா கோட்டைகளில் ஒன்றான தொன்மைக் கட்டிடத்தைப் பார்க்க ஊர்தியில் சென்றோம். அந்தத் தொன்மையான நகரத்தில் பல நூறு படிக்கட்டுகளைக் கொண்ட கட்டிடங்கள் அரச குடும்பத்தின் இறைவழிபாட்டுக்கும், அரசாங்க நிர்வாகத் திற்கும், தானிய சேமிப்புக் காவலுக்கும் உதவி யாக இருந்ததாகச் சொன்னார்கள். இக்கட்டிடங் கள் பெருங் கற்களை அடுக்கி, கற்களின் இடை யில் சாந்து வைக்கப்படாமல் கட்டப்பட்டவை யாகும். நானூறு ஆண்டுகளாக இக்கட்டிடங்கள் சிதையாமல் இருப்பது, அக்காலக் கட்டிட வல்லுநர்களின் அறிவுச் செறிமையைக் காட்டு கிறது. அதில் மேடைகள் போல் அமைக்கப் பட்ட அடுக்குகளில் பயிர்களும் வளர்க்கப்பட் டனவாம்.

இந்தத் தடவை மாச்சு பிச்சுக்கு உல்லாசப் புகைவண்டியில் சென்றோம். உணவு விருந்து புகைவண்டியில் மிகவும் இன்புறும் வண்ணம் இருந்தது. மாச்சு பிச்சு ஏறக்குறைய 2,453 மீட்டர்கள் உயரத்தில் இருப்பதால் அங்கே உயிர்க்காற்று (ஆக்சிசன்) அழுத்தம் குறைவு. ஆகையால் படிகள் ஏறும் போது மூச்சுவிடச் சிறிது கடினமாக இருந்தது. மாச்சு பிச்சு, இன்கா இனத்தவரால் சுமார் கி.பி.1450ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக தொல்பொருளியல் அறிஞர் கள் கூறுகின்றனர்.

இக்கட்டிடங்களை அரசர்கள் நிர்வாகத் திற்கும், இறை வழிபாட்டிற்கும், வானவியல், விவசாய இயல் போன்றவைகளுக்கும் பயன்படுத்தி இருந்திருக்கிறார்கள்.

பிறகு 16ஆம் நூற்றாண்டின் நடுவில் இந்நகரத்தைவிட்டு அகன்றுவிட்டார்கள். இவர்கள் இப்படி ஏன் திடீரெனப் போய் விட்டார்கள் என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது.

1911ஆம் ஆண்டு தொல்பொருள் அறிஞர் கிரம் பிங்கம் Prof. Hiram Bingam, Yale University) என்பவர் காடுகளால் மூடிக் கிடந்த இந்நகரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். மலை உச்சியில் நூற்றுக்கணக்கான அறைகள் கொண்ட இக்கட்டிடங்கள் மேகங்களின் நடுவில் மிதக்கும் நகரம் போன்ற உணர்வை ஏற்படுத்தின. கட்டிடங்களின் நடுவில் உள்ள மேடை போன்ற புல்வெளிகளில் லாமா என்ற ஒட்டகச் சாயல் உள்ள ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.

மனிதர்களைக் கண்டு அஞ்சாத இவ்விலங்கு-களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். மலையைச்சுற்றி மழைக்காடுகளும் (Rain Forest), மலை அடிவாரத்தில் உள்ள உறுபாம்பா என்ற ஆறும் கண்களுக்கு இனிமைதான். அன்று இரவு இன்கா இனத்துப் பெண்கள் லாமா கம்பளி நூல் கொண்டு ஆடை நெய்து காண்பித்தார்கள். விடுதிக்குப் பக்கத்தில் உள்ள அருங்காட்சியகத் தில் இன்கா இனத்து தங்க வெள்ளி நகைகள், பாத்திரங்கள், மண் பாண்டங்கள் பார்த்தோம். ஸ்பானியர்கள் இன்கா இனத்துக் கட்டிடங்களை இடித்து அவற்றின் மேல் கட்டிய கிறித்தவக் கோவில்களின் உள்ளே தங்கத்துடனும் வெள்ளி யுடனும் மிளிரும் அழகிய கலை வேலைப் பாடுகளைப் பார்த்தோம். கருவிகள் இல்லாமல் கற்கருவிகளைக் கொண்டு கட்டிய பழைய இயற்கை நாகரிகத்திற்கும், அந்தக் கற்களைத் திருடிக் கட்டப்பட்ட மதவெறி நாகரிகத்திற்கு முள்ள வேறுபாடு நன்கு தெரிந்தது.

இதுதான் முன்னேற்றமா என்ற கேள்வி எழுந்தது. பெரு நாட்டிலே சோளப்பொரி ஒரு சென்டிமீட் டரைவிடப் பெரிதாக இருந்தது. அவர்கள் 200க்கும் மேற்பட்ட சோள வகைகளையும், 2000 வகை உருளைக்கிழங்கு வகைகளையும் பயிரிடு வதாகச் சொன்னது எங்கள் விவசாய இதயங் களைக் கவர்ந்தது.

உறங்கி எழுவோம்

- மருத்துவர்கள் சோம & சரோ இளங்கோவன்

தமிழ் ஓவியா said...

என்னதான் இருக்கிறது மாதொருபாகன் நூலில்?

கடவுளை வணங்குபவன் காட்டு-மிராண்டி என்று பெரியார் சொன்னபொழுது சாதாரணமாகத் தோன்றினாலும், ஆராய்ந்து பார்க்கும்பொழுது அதன் ஆழமான பொருள் புரியும்.

மாதொருபாகன் நாவலைப் படித்து முடித்தவுடன் கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி மட்டுமன்றி, பக்தி வந்தால் புத்தி போகும் என்ற கூற்றின் உண்மையும் புலப்படுகிறது.

20ஆம் நூற்றாண்டு சமூக விஞ்ஞானியின் கூற்று எவ்வளவு சரியென்று புலப்படுகிறது. இந்தச் சமூகத்தில் புரையோடிக் கிடக்கின்ற எண்ணற்ற நம்பிக்கைகளை விவாதத்திற்கு உட்படுத்தி, பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெருமாள்முருகன் எழுதிய மாதொருபாகன் அத்தகைய ஒன்றினைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

கதை நடந்த காலம் சுதந்திரம் வருவதற்கு முந்தைய ஒன்று. கதை நடக்கும் இடம் திருச்செங்கோட்டிற்கு அருகில் உள்ள ஒரு கிராமம். கிராமங்களில் ஜாதியின் இறுக்கத்தில் வாழும் குடும்பங்களைப் பற்றிய கதை. இந்தியாவின் இதயம் கிராமங்களில் உள்ளது என்று காந்தி சொன்னார்.

ஆனால், அந்த இதயம் எந்த அளவிற்குச் சீர் கெட்டுப்போய் உள்ளது என்பதை யாரும் உணரவே இல்லை. மக்கள் கிராமங்களை வெறுத்து நகரங்களை நோக்கி ஓடுவதற்கு வெறும் பொருளாதாரம் மட்டும் காரணம் அல்ல. அங்குள்ள சமூகச் சூழல்தான் பெரும் காரணம். நகரத்திலே முற்றிலுமாக ஜாதி வேற்றுமை கிடையாது என்று சொல்லமுடியாவிட்டாலும், பெருமளவு இல்லை என்பது உண்மை. நகரத்தில், அவரவர்தம் உழைப்புக்கு ஏற்ற வருமானம் அதற்கான அங்கீகாரம் கிடைக்கிறது. நகரங்களில் கூட்டுக் குடும்பங்கள் கிடையாது. அது ஒரு குறையாகக் கருதப்பட்டாலும் இன்னொரு வகையில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகிவிடுகிறது.

கூட்டுக் குடும்பம் எழுத்தளவில் வேண்டுமானால் சிறந்த சமூக அமைப்பாக இருக்கலாம். ஆனால், நடைமுறையில் பல்வேறு சங்கடங்களையும், அழுத்தங்களையும் ஒவ்வொரு உறுப்பினர் மீதும் செலுத்துகிறது என்பதுதான் உண்மை.

தமிழ் ஓவியா said...

மாதொருபாகன் கதையில் ஆசிரியர் அதனை நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார். குழந்தை இல்லாத பென்னா - காளி தம்பதியினருக்கு அப்படி ஒரு சமூக அழுத்தம். தங்களுக்குக் குழந்தை இல்லையென்றால் என்ன, ஒருவருக்கு ஒருவராக குழந்தையாக இருந்துவிட்டுப் போறோம் என்ற மனநிலை கொண்டிருந்தாலும், ஜாதி, சமூகம், உறவு அவர்களை நிம்மதியாக இருக்க விடவில்லை. குழந்தைப்பேறு இல்லாத பெண்ணை உலர் நிலமாகவும், இல்லாத ஆணைக் கேலியாகவும் கிண்டலாகவும் அவனது ஆண்மைத் தன்மையைக் கேள்விக்குரிய ஒன்றாகவும் சித்தரிக்கிறது.

இத்தம்பதியினர் வேண்டாத தெய்வங்கள் இல்லை. செல்லாத கோவில்கள் இல்லை. ஆனால், எந்தக் கடவுளும் கண் திறந்து வழி காட்டவில்லை (இருந்தால்தானே கண் திறப்பர்!). அவர்கள் வசிக்கும் பகுதியில் வழிவழியாக ஒரு நம்பிக்கை உண்டு. ஊர்த் திருவிழாவின் பதினான்காம் நாளன்று, குழந்தை இல்லாத பெண்கள், கோவிலுக்கு வரும் எந்த ஆணுடனும் உறவு கொண்டு கருத்தரித்துக் கொள்ளலாம். அப்படி அவளுடன் உறவு கொள்பவன் கடவுளுக்குச் சமமானவன். அவளுக்குப் பிறக்கும் குழந்தை கடவுளுக்குப் பிறக்கும் குழந்தையாகக் கருதப்படும்.

அப்பெண்களும் தன்னோடு கலவி கொண்டவனை இன்னொரு ஆண்மகனாகக் கருதாமல் கடவுளாக(?) கருதுவார்கள். மலடியாக சமூகத்தில் ஏச்சும், கிண்டலும், புறக்கணிப்பும் பெற்றவர்களுக்கு கடவுளின் குழந்தை வரமாகக் கருதப்பட்டது. பதினான்காம் நாள் இரவு, இளைஞர்களுக்கும், நடுவயதினர்க்கும், முதிர்ந்த வயதானாலும் இளமை நினைப்பில் வாழ்பவர்களுக்கும் காமக் களியாட்டம்தான். இதில், அவர்களுக்குள் போட்டியும் நடக்கும், யாதெனில், யார் அவ்விரவில் அதிகமான பெண்டிர்க்கு வரம் அளித்தார்கள் என்று. கதைநாயகன் காளி திருமணத்திற்கு முன் தனது நண்பனுடன் இந்த விளையாட்டில் கலந்து கொண்டவன். ஆகவே, அவனுக்கு இதன் உண்மையான மகத்துவம் தெரியும்.

காளி_பென்னா தம்பதியினருக்கு அவர்தம் பெற்ற தாயினரே பதினான்காம் நாள் திருவிழாவில் கலந்து கொள்ளத் தூண்டும்பொழுது, காளியின் மனசு ஏற்றுக் கொள்ளவில்லை. தன் உயிருக்கு உயிரான வாழ்விணையை இன்னொருவன் பெண்டாளுவதை அவனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

ஆனால், பென்னா குழந்தைப் பேறுக்காக அக்காரியத்தைச் செய்யத் துணிந்துவிடுகிறாள். அதைவிட முக்கியக் காரணம், குழந்தை இல்லை என்பதினாலேயே உற்சாகத்தைத் தொலைத்துவிட்ட கணவனை மீட்டெடுப்பது. இந்த உணர்ச்சிக் குவியல்களைச் சரிவர இந்த நாவல் வெளிப்படுத்துகிறது.

கதாசிரியர் பெருமாள்முருகன் மிக நேர்த்தியாக உணர்வுப்பூர்வமாக இந்தக் கதையை உருவாக்கியுள்ளார். கொங்குநாட்டு வட்டார மொழியினை எளிமையாகப் பயன்படுத்தியுள்ளார்.

இந்நாவல் ஒரு மாஸ்டர் பீஸ் என்ற அளவிற்கு இல்லை என்றாலும் தமிழ் இலக்கியச் சூழலில் சிறந்த கதை என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. நம் சமூகத்தில் இன்னும் இதுபோன்ற நாவல்கள் பல வெளிவர வேண்டும். மூடநம்பிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். பெரியார் என்னும் அறிவொளி பாயும்பொழுது அறியாமை என்னும் இருள் அகலும்.

- கோ.ஒளிவண்ணன்

தமிழ் ஓவியா said...

ஒரு திருநங்கையின் திறந்த மடல்

'ஐ’ய்யே...

அதுக்கும் மேல...

தமிழ் சினிமா கண்ட மாபெரும்(!) இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு,

தங்களின் ஐ(ய்யே) காவியம் கண்டேன். விக்ரம் போன்ற வித்தியாச நடிப்பு வெறி கொண்டவர்களும், ஆஸ்கர் ரவிச்சந்திரன் போன்ற தயாரிப்பாளர்களின் பணவெறிக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களின், ரசிக மனோபாவத்திற்குப் பின்னுள்ள பெண்களின் மீதான பாலியல் வெறிகளுக்கும், ஹீரோயிசம் எனும் பொறுக்கித்தனங்களுக்கும், நாயக வழிபாட்டிற்கெல்லாம் தஞ்சம் தரும் ஆலயம், “a shankar film” தான் என்பதை அறியாதார் யார்?!



நியாயமான ஒரு படைப்பைப் புரிதலின்றி மததுவேசமாகச் சித்தரித்து அப்படைப்பையும், படைப்பாளியையும் பின்வாங்கச் செய்யும் அதேவேளையில்தான் உங்களின் படைப்புச் சுதந்திரத்தின் வெற்றியையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இதே மதத் துவேசத்தைக் காரணம் காட்டி டாவின்சி கோட் தடை செய்யப்பட்ட நாட்டில், இதே மத துவேசத்தைக் காரணம் காட்டி தற்காலிகத் தடை செய்யப்பட்டு, அதுவே பெரும் விளம்பர முமாகி வணிக வெற்றியும் அடைந்த விஸ்வ ரூபம் படம் வெளியானதும் இங்கேதானே.

ஆனால், தாய்நாட்டு அகதிகளான, பாலியல் வெறியர்களான, அருவெருப்பான சமூக விரோதி களான எங்களை எப்படியும் சித்தரிக்ககூடிய அருகதை கொண்ட தங்களைப் போன்ற மகா கலைஞர்களை மட்டும் யாரும் எதுவும் கூறப்போவதில்லை.

சமீபகாலமாக வலைத்தளங்களில் திரைப் படங்களைத் துவைத்துக் கிழித்துத் தொங்கப் போடும் வலைத்தள விமர்சகர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்களுக்குகூட இந்த 'ஐ' படம் அவர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்ற ஆதங்கம்தான்.

இம்மொக்கைக் கதை, திரைக்கதையைக் கலாய்த்த அளவிற்கு திருநங்கைகளைக் காயப் படுத்தியதைப் பற்றிக் கண்டுகொள்ளவில்லை. இன்னும் கூடுதலாக ஒரு விமர்சகர் இதில் ஒரு நயன்தாரா வேறு வில்லன்..!! என்று எழுதி யிருக்கிறார்.

குறைந்தபட்சம் இந்த ஆபத்தான ரசனையை வளப்படுத்திய விதத்தில் நீங்கள் உள்ளம் குளிர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பிரம்மாண்டம், பிரம்மாண்டமான செட், பிரம்மாண்டமான கலைஞர்கள், அதிபிரம்மாண்ட மான பட்ஜெட் தாண்டி அதற்கும் மேலயும் சில விசயங்கள் இருப்பதைத் தங்களின் பிரம்மாண்ட மூளைக்கு முன் பகிர்ந்து கொள்ள இச்சிறுமதியாள் விரும்புகிறேன்.

சிவாஜி படத்தில் போகிற போக்கில் திருநங்கைகள் மீது காறி உமிழ்ந்ததை நினைத்துப் பார்க்கிறேன். சின்னக் கலைவாணர் அவர்கள் இப்பத்தான் ஆப்பரேசன் பண்ணிட்டு வந்திருக்கு என்று ஏளனமாகக் கூறியதும் சீ..சீ என்று அருவெறுப்புடன் எங்கள் சூப்பர் ஸ்டார் விலகிச் சென்றதைத் தூசி தட்டி தற்போது அதற்கும் மேல ப்ரம்மாண்டமாய் காறித் துப்பியதைத்தான் பேச விரும்புகிறேன்.

வழக்கமான நாயகன் போலவே இதிலும் விக்ரம் அவர்கள் மிக ஆண்மையுடன் வில்ல னைப் பார்த்து, முதல் பத்து நிமிடங்களிலேயே டே பொட்ட.. என்கிறார். நான் அதிர்ச்சி யடையவில்லை, நானும் என்னைப் போன்ற பொட்டைப் பிறவிகளும் தமிழ் சினிமாவின் இத்தகைய தொடர் பதிவுகளால் நன்கு பழகி யிருக்கிறோம். விக்ரம் அவர்களுக்கும்கூட இந்த வசனம் ஒன்றும் புதிதல்ல, தனக்கு மிகப்பெரிய ப்ரேக் கொடுத்த பாலா அவர்களின் சேது படத்தில்கூட டே.. இப்பிடிப் பண்ணிப் பண்ணியே ஒருநாள் நீ அஜக்காவே மாறப் போற என்று சொன்னவர்தான். அதற்குப் பிறகு இச்சொல்லாடலை அவர் பயன்படுத்தாத படங்களின் எண்ணிக்கைதான் குறைவாக இருக்கக்கூடும்.

தமிழ் ஓவியா said...

சதுரங்க வேட்டை என்னும் சமூக அக்கறை கொண்ட படமியக்கிய திரு.வினோத் அவர்களே பொட்ட என்று சொல்லாடலை எளிதாகப் பயன்படுத்துகையில், அதனைப் பிரபல திரை விமர்சகர்களான கேபிள் சங்கர்கள் சப்பைக் கட்டுக் கட்டும்போது, உங்களிடம் மட்டும் அந்தக் கரிசனத்தை நாங்கள் எதிர்பார்க்கவா முடியும்.

அதுசரி உங்களால் பொட்டை என்று அறியப்படும் நாங்கள் உங்கள் ஆண்மைப் பராக் கிரமத்திற்கு முன் அப்படி என்னதான் குறைந்து விட்டோம்?! உள்ளம் முழுதும் பெண்மை குடி யிருப்பதை அறிந்து எம் பாலினத்திற்கு நேர்மை யாக இருக்கிறோமே அதற்கும் மேலவா உங்கள் பராக்கிரமம் சிறந்தது?

திருநங்கையாக குடும்பத் தையும், அது தரும் அரவணைப்பையும், பாதுகாப்பையும் விட்டு வெளிவர துணிச்சல் இருக்கிறதே அதற்கும் மேலவா உங்கள் பராக்கிரமம் சிறந்தது? இந்திய பிரஜைக்குரிய சகல உரிமைகளும் மறுக்கப்பட்டு தாய்நாட்டு அகதிகளாவோம் என்பதை அறிந்தும் திருநங்கை யாக குடும்பத்தை விட்டு வெளியேறுகிறோமே அதற்கும் மேலவா உங்கள் பராக்கிரமம் சிறந்தது?

பெற்றோர்களின் சொத்துசுகம் எதுவுமில்லாமல் சூன்யத்திலிருந்து எங்கள் வாழ்க்கையை நிர்கதியாகத் தொடங்கி அடுத்த வர்களைச் சாராமல் வாழ்கிறோமே அதற்கும் மேலவா உங்கள் பராக்கிரமம் சிறந்தது?

தெருவி லும், வெள்ளித்திரையிலும் உங்கள் ஆண் பராக்கிரமசாலிகள் சொல்லாலும், செயலாலும் எங்கள் மீது நிகழ்த்தும் வன்முறைகளைத் துணிவோடு எதிர்கொண்டு தொடர்ந்து செல்கிறோமே அதற்கும் மேலவா உங்கள் ஆண்மை பராக்கிரமம் வாய்ந்தது? அல்லது பொட்டைகள் சோத்தில் உப்புப் போட்டுத் தின்பதில்லை என்பது உங்களின் திண்ணமான எண்ணமா??

ஐ என்ற தலைப்பிற்கேற்ப அய்ந்து வில்லன்கள் வேண்டுமென்று யோசித்தது சரி. அதற்கும் மேலே, கதைக்களத்திற்கேற்ப அதே துறைசார்ந்த வில்லன்களாக வைத்த உங்களின் மெனக்கெடலைப் பாராட்டுகிறேன்.. அதற்கும் மேல, பிரம்மாண்டமாக, ரிச் லுக்குடன், அதேசமயத்தில் வித்தியாசமான, காமெடியான, வில்லன் வேண்டுமென, ஒரு ஸ்டைலிஸ்டாக திருநங்கையை வைத்ததையும், அதுவும் ஆதண்டிக்காக இருக்க வேண்டுமென்பதற்காக உலக அழகியையே, அழகாகக் காட்டிய நிஜ ஸ்டைலிஸ்ட் ஓஜாஸ் ரஜனியையே (எந்திரன் படத்தில் அய்ஸ்வர்யா ராயை அழகாய் காட்டி யவர் இவர்தான்.. மொழி தெரியாத அவருக்கு என்ன கதை சொல்லி நடிக்க வைத்தீர்கள் என்பது தங்களுக்கே வெளிச்சம்.) நடிக்க வைத்த தில் நிஜமாகவே நான் மெரசலாகிட்டேன்.

தமிழ் ஓவியா said...

ஆனால், அந்தக் கீழ்த்தரமான பாத்திரத்திற்கும் அவரது நிஜப் பேரான ஓஜாஸ்யையே வைத்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் இயக்குநரே?

தான் வியக்கும், விரும்பும் அழகியாலயே இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்டைலிஸ்ட் என்று அறிமுகப்படுத்தப்பட்ட போதும், ஓஜாஸ் மீது நாயகனுக்கும், நண்பனுக்கும் அவ்வளவு கீழ்த் தரமான பார்வையேன் வருகிறது. எல்லா இன்னல்களையும் கடந்து பல திருநங்கைகள் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள்தான். ஆனாலும், அவர்கள் ஏளனத்திற்குரியவர்கள், என்பதைப் பார்க்கும் ரசிகர்கள் மனதில் உறுதியாக விதைக்கத்தானே?!. தமிழ் ரசிகர்களே திருநங்கைகளைக் கலாய்க்க, காஞ்சனா (திருநங்கைகளைச் சற்று கண்ணியமாக்கிய படம் என்றாலும், இறுதியில் அதையும் கலாய்க்கப் பயன்படுத்தும் ரசிகர்களை எண்ணி வியக்கேன்..!!) என்று அழைக்க அப்டேட் ஆகி யிருக்கும் நிலையில் ஊரோரம் புளியமரம்.. என்று பாடுவது எதனால்?

நீங்கள் எதிர்பார்த்ததைப் போலவே அந்தக் காட்சியில் ரசிகசிகாமணிகள் அரங்கம் அதிரச் சிரித்தார்கள்தான். என்ன அந்த அருவெறுப்பான சிரிப்பை மீறி, முதல்வன் படத்தில் வரும் புகழின் அம்மாவைப் போல என்னைப் போன்ற பொட்டைகளைப் பெற்ற அம்மாக்களின் கேவல்கள் உங்கள் காதை எட்டியிருக்காது.

அதெப்படி, வெறும் திரையிலும், போஸ்டர் களிலும் மட்டுமே கண்ட ஓர் அழகியை, அவள் அழகி என்பதால் மட்டுமே ஓர் ஆணழகன் காதலித்துவிட முடியும், அதுவும் உண்மையான, நியாயமான, சில்மிஷம் இல்லாத காதலாகிறது.

குற்றவுணர்வாலும், பரிதாபத்தாலும் ஒரு அழகியால், ஆணழகனைப் பரிசுத்தமாக காதலிக்க முடிகிறது. ஆனால், ஒரு திருநங்கை யின் காதல் உணர்வு மட்டும் எப்படித் தங்களுக்கு அவ்வளவு நாராசமானதாகிறது. அவள் காதல், நாயகனால் மட்டுமல்ல, நண்ப னாலும், நாயகியாலும், படத்தில் வரும் விளம்பரப் பட இயக்குநராலும் அருவெறுப்பா கவே பார்க்கப்படுகிறது.

அதாவது இப்படத்தின் இயக்குநராகிய நீங்கள் வெறுப்பதைத்தான் சூசகமாகக் கூறுகிறீர்கள் இல்லையா?

அவரை ரிச் _ -திருநங்கையாகக் காட்ட ஆரம் பத்தில் அழகான கேமரா ஆங்கிளைப் பயன் படுத்திய நீங்கள், அவரது காதல் புறக்கணிக்கப் படும் கணம் முதல் அவரை அசிங்கமாக மட்டுமே காட்டப் பயன்படுத்திய காமிரா ஆங் கிளில் அசிங்கமாகத் தெரிந்தது ஓஜாஸ் மட்டும் இல்லை, நீங்களும்தான் என்பதை உணர்ந் தீர்களா?

இவ்வளவு வரைக்குமே உங்களிடம் நாகரிக மாகத்தான் கோபம் கொள்ள நினைத்திருந்தேன். ஆனால், 9 என்ற அறையெண்ணைக் காட்டி பின் ஓஜாஸைக் காட்டிய உங்கள் அரதப்பழசான, அருவெறுப்பான விளையாட்டை எண்ணி என்னால் கெட்ட வார்த்தைகளால் வசை பாடாமல் இருக்க முடியவில்லை. ஏனெனில், இதே 9 என்ற சொல்தான், என் பள்ளிக்காலம் முழுதும் முள்ளாகக் குத்தி, கண்ணீர் சூழ சக மாணவர்களிடமிருந்து என்னைத் தனிமைப் படுத்தியது.

இதே 9 என்ற சொல்தான், இப்போது வரையிலும் எல்லா அற்பனும் என்னைச் சிறுமைப்படுத்தப் பேராயுதமாகப் பயன்படுத்து கிறான். அவற்றோடு கூடுதலாக சமூகம் கற்றுக்கொடுத்த கெட்ட வார்த்தைகள்தான் இப்போது என் கைவசம் இருப்பவை.

இருந்தாலும், கேபிள்சங்கர் போன்ற விமர்சன சிகாமணிகள் எனக்கு நாகரிக வகுப்பு எடுப்பார்களே என்று அஞ்சி நானாக நாகரிகமாகவே தொடர்கிறேன்.

இப்படத்தில் எந்த மிருகங்களும் துன்புறுத்தப்படவில்லை என்ற டிஸ்க்லைம ருடன் தொடங்கும் இப்படத்தில்தான், கிடைக்கும் ஒரு வாய்ப்பைக்கூட விடாமல் பாலியல் சிறுபான்மையினர் முதல், மாற்றுத் திறனாளிகள் வரை காயப்படுத்த தங்களுக்குக் கட்டற்ற சுதந்திரம் அளித்திருக்கிறது நமது சென்சார் போர்ட்.

அதன் தாராள மனதைக் கண்டிக்காமல் உங்களை மட்டும் கேள்வி கேட்டு என்ன பயன்?

ஒரேயொரு படத்திற்காக இத்தனை மெனக்கெடலையும், கடின உழைப்பையும், தனது நேரத்தையும் கொடுத்து மகாகலைஞனாக உயர்ந்து நிற்கும் விக்ரமிடம் இதுபோன்ற அற்பக் காட்சிகளில் நடிக்க வேண்டாமென என்னால் வேண்டுகோள்கூட வைக்கமுடியவில்லை.

ஏனெனில், அடுத்த உலகநாயகனாக வேண்டு மெனத் துடிக்கும் அவரது ஆதர்ச நாயகனான கமலும்கூட, வாசிப்பும், பகுத்தறிவும் கொண்ட நடிகரென நவீன இலக்கியவாதிகள் ஈசிக் கொள்ளும் அதே கமல்ஹாசன் அவர்களும்தான் பொட்டை என்னும் சொல்லாடலைத் தொடர்ந்து தமது படங்களிலும், அதற்கும் மேல வேட்டையாடு, விளையாடு படத்தில் திருநங்கைகளையும், சமபால் ஈர்ப்பினரையும் தனது பங்கிற்குச் சிறப்பாக மலினப்படுத்தி யிருக்கிறாரே...

உங்கள் இருவருக்கும் மட்டுமன்றி, அனைத்து நடிகர்கள், காமெடியன்கள், இயக்குநர்களுக்கும், ஒரேயொரு தகவல்.. நீங்கள் கொண்டாடும் ஆண் பராக்கிரமசாலிகள் மட்டுமே உங்கள் ரசிகர்கள் அல்ல.

உங்களால் ஏலியனாகக் கருதப்பட்டு, மலினப்படுத்தப்படும் நாங்களும் உங்களின் ரசிகர்கள்தான்.

எங்கள் வீட்டிலும் டி.வி. பெட்டி உண்டு. நாங்களும் படங்கள் பார்க்கிறோம்.

ரசிக்கிறோம், சிரிக்கிறோம், அதுமட்டுமல்ல தவறாமல் சோற்றிலும் உப்பு போட்டுத்தான் சாப்பிடுகிறோம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

- லிவிங் ஸ்மைல் வித்யா

தமிழ் ஓவியா said...

கருத்து


மார்க்சிஸ்ட் தலைவர்கள் பலர் தற்போது சிந்தனை ரீதியாக முதலாளித்துவ ஆதரவாளர்களாகி-விட்டனர். சமூக, பொருளாதாரக் கொள்கையின்படி நான் இன்னும் ஒரு மார்க்சிஸ்ட்தான். முதலாளித்துவ நாடுகளில் ஏழை, பணக்காரர்கள் இடையேயான வித்தியாசம் அதிகரித்துள்ளது. சரிசமமான பகிர்வுக்குத்தான் மார்க்சிசத்தில் முக்கியத்துவம் தரப்படுகிறது.

- தலாய் லாமா, புத்த மதத் தலைவர், திபெத்.

இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு எட்டு விபத்துகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் நடைபெறும் விபத்துகளில் 15 விழுக்காடு தமிழகத்தில் நடப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் இரண்டு பேர் செஞ்சிலுவைச் சங்கம் அல்லது அவசர ஊர்தி சேவை போன்ற முதலுதவிச் சங்கங்களில் தொண்டாற்ற வேண்டும்.

- கே.ரோசய்யா, தமிழக ஆளுநர்


மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நாட்டில் 1000 ஆண்களுக்கு 918 பெண்கள் மட்டுமே உள்ளனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண நாடு முழுவதும் பெண் சிசுக் கொலை அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

- மேனகா காந்தி, மத்திய அமைச்சர்



சொல்றாங்க...



பகவத் கீதையைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடக்கம்தான். பாரதப் பண்பாட்டையும் நாகரிகத்தையும் கற்பிக்கும் வகையில் விரைவில் கல்வி முழுமையாகக் காவி மயமாக்கப்படும்.

- ராம் பிலாஸ் சர்மா, கல்வி அமைச்சர், ஹரியானா

சொல்றேங்க...

நல்லா கற்பிங்க அமைச்சர் சார்!

ஆனா... நண்பன் படத்து டயலாக் மாதிரி கற்பிங்கிறது கற்பழின்னு ஆகாமப் பாத்துக்குங்க! ஏன்னா... நீங்க சொல்ற பாரதப் பண்பாட்டின் மகாபாரதத்தையும், பாகவதத்தையும், இதர புராணங்களையும் மாதிரி கற்பழிப்பு சீன் உள்ள கதைகள் உலகத்திலேயே கிடையாது!

சொல்றாங்க...

பகவத் கீதையை முன்னிறுத்தி அரசியல் நடைபெறுவதை ஏற்க முடியாது. உலகில் உள்ள அனைவருக்கும் கீதை பொதுவானது. அது பா.ஜ.க.விற்கு மட்டும் சொந்தமல்ல.

- பூபிந்தர் சிங் ஹுடா, மேனாள் முதல்வர், ஹரியானா

சொல்றேங்க...

இதுதானா சார் உங்க டக்கு! பா.ஜ.க. மட்டும் இதை வச்சு அரசியல் பண்ணக்கூடாது... நாங்களும் பண்ணு-வோம்ங்கிறீங்களா... விஷம் யார் கையில இருந்தாலும் விஷம்தான் சார்.

சொல்றாங்க...

டில்லியில் ராமபக்தர்களின் அரசாங்கம் அமைந்துள்ளது. ஜெய்ஸ்ரீராம் என்ற மக்களின் பிரார்த்தனையால்தான் ராம பக்தர்களால் டில்லியில் ஆட்சி அமைக்க முடிந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநில அரசு அயோத்தியை மேம்படுத்தவில்லை. அயோத்தியைப்பற்றி தற்போதைய சமாஜ்வாடி மற்றும் முந்தைய பகுஜன் சமாஜ் அரசுகளுக்கும் அக்கறை இல்லை. இதற்குக் காரணமே இந்தக் கட்சிகளின் ஜாதிய அரசியல்தான். - நிதின் கட்காரி, மத்திய அமைச்சர்

சொல்றேங்க...

ஆமாங்க... அவங்களோடது பிற்படுத்தப்-பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல். உங்களோடது பார்ப்பன உயர்ஜாதி அரசியல்!

தமிழ் ஓவியா said...

துளிச் செய்திகள்


பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினர் நாடாக பாலஸ்தீனம் ஜனவரி 6 அன்று இணைந்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மின்னணு முறையில் ஓட்டளிக்கத் தேவையான ஏற்பாடுகளை எட்டு வாரங்களுக்குள் செய்துதர மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஜனவரி 12 அன்று ஆணையிட்டது.

அய்ரோப்பிய நாடான குரோஷியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கொலிந்தா கிரயா கிதாரொவிச் வெற்றிபெற்று அந்நாட்டின் அதிபர் பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

சுரங்க முறைகேடு வழக்கில் கைதாகி சிறையிலிருந்த கருநாடக மேனாள் அமைச்சர் ஜனார்த்த ரெட்டிக்கு 40 மாதங்களுக்குப் பின்னர் ஜனவரி 20 அன்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.

பயங்கரவாதிகள் மீதான வழக்கை விரைந்து விசாரிப்பதற்காக சிறப்பு ராணுவ நீதிமன்றங்கள் ஏற்படுத்த வகை செய்யும் அரசியல் சாசனத் திருத்த மசோதாக்கள் இரண்டினை பாகிஸ்தான் அரசு ஜனவரி 3 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அவை ஜனவரி 6 அன்று நிறைவேற்றப்பட்டன.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாநகராட்சித் தேர்தலில் மேயர் பதவிக்குப் போட்டியிட்ட திருநங்கை மதுகின்னார் வெற்றி பெற்றுள்ளார்.

சவுதி அரேபியா நாட்டில் மன்னர் அப்துல்லா ஜனவரி 23 அன்று மரணம் அடைந்ததை அடுத்து புதிய மன்னராக சல்மான் அறிவிக்கப்-பட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

தேநீர் இரட்டைக் குவளை

மலைஜாதிப் பெண்
கிள்ளிப் பறித்தாள்
தேயிலையை அங்கே!
கறவைப் பசுவை
பாடிக் கறந்தாள்
பால் வந்ததிங்கே!
கரும்பாலை அலுப்பில்
தினம் அவன் உழைத்தே
சக்கரை சேர்ந்ததிங்கே!
தண்ணீர் கலந்தவன்
என்ன ஜாதியோ?
என்ன எழவோ?
-என யாரும் கேட்டறியேன்.
பாத்திரம் தேய்த்தவன்,
அடுப்பைச் செய்தவன்,
எரிக்கிற எண்ணெய்,
கழுவுகிற சோப்புக் கட்டி,
எதற்கும் ஆதிமூலம் கேட்டறியேன்.
ஜாதி பேசும்
சுத்தபத்தம் எல்லாம்
தேநீர்க் கடை
இரட்டைக் குவளையில்தான்.
இப்பெல்லாம் எங்க சார்
இரட்டை டம்ளர். எல்லாமே பிளாஸ்டிக் டம்ளர்தானே' என்பவன்
வலிந்து சொல்வான்
இப்பெல்லாம் யாரு சார்?
ஜாதி பாக்குறா! என்று.

- தம்பி. அழ. பிரபு, மதுரை

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களின் புலம்பலில் நியாயம் இருக்கிறதா? -2

இடஒதுக்கீடு பார்ப்பனர்களுக்கு அநீதியா?


மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இதைப் படிப்பவர்கள் நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆங்கில மருத்துவப் படிப்பிற்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு? எந்தத் தொடர்புமில்லாத நிலையில் ஏன் அப்படி ஒரு நிலை இருந்தது? யாரால் அந்த நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கும்? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சமஸ்கிருத மொழி தெரியாத பார்ப்பனரல்லாத திராவிட மக்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பைப் பறிக்கும் சதி இதில் அப்பட்டமாகத் தெரிகிறதா இல்லையா?. ஆங்கிலேயர் ஆண்ட போதே இந்த நிலை என்பதைப் பார்க்கும் போது, ஆங்கிலேயரிடம் பார்ப்பனர்களுக்கு இருந்த செல்வாக்கு தெரிகிறதா இல்லையா? சிறிதளவு ஆட்சி அதிகாரம் பார்ப்பனரல்லாத இயக்கமான நீதிக் கட்சியின் கைகளுக்குச் சென்றபோது, மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற தகுதியை நீக்கி, அனைவரும் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு வாய்ப்பளித்தார்கள். இது தவறா? இதனால் பார்ப்பனர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் அதிக இடம் கிடைக்கும் என்ற நிலை மாறிவிட்டதே என்று புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?

1918ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு வித்வான் தேர்வுக்கு சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்க முடிவு செய்தது. சமஸ்கிருத அறிவு இல்லாத ஒருவரை திராவிட மொழிப் புலமை இருப்பவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று வாதிட்டார்கள். பல்கலைக்கழகத் திட்டப்படி, இரண்டு திராவிட மொழிகளைத் தெரிவு செய்து படிக்கலாம் என்ற விதி இருந்தும், ஒரு திராவிட மொழியும் சமஸ்கிருதமும் சேர்த்துப் படிக்க மட்டுமே வசதிகள் செய்யப்பட்டிருந்தன. திராவிட மொழிப் படிப்பைத் தெரிவு செய்த குற்றத்துக்காக திராவிட மாணவர்கள் சமஸ்கிருதம் பயில வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த நிலையெல்லாம் மாறி பார்ப்பனரல்லாதவர்கள் கல்வி பெற வாய்ப்பளித்தது திராவிடர்களின் இயக்கமான நீதிக் கட்சி. இதில் என்ன தவறு இருக்கிறது? மூன்றரை சதவிகிதம் உள்ள பார்ப்பனர்கள் மட்டுமே படித்து அறிவு பெற அதிகம் வாய்ப்பிருந்த நிலை மாறிவிட்டது குறித்துப் புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?

தமிழ் ஓவியா said...

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்துப் புலம்பியிருக்கிறார் பத்ரி சேஷாத்திரி. எனவே, பலரும் புரிந்துகொள்ளும் வண்ணம் சில ஆதாரங்களை அட்டவணை 1இல் காணலாம். இதுதான் 1901ஆம் ஆண்டின் நிலை. இந்நிலையை மாற்றி அனைவருக்கும் கல்வி கிடைக்க வழிவகை செய்தது நீதிக்கட்சி. கல்வியில் இந்த நிலை என்றால், வேலைவாய்ப்பு எப்படி இருந்தது என்பதற்கான ஆதாரம் அட்டவணை 2இல் தரப்பட்டுள்ளது.

சுமார் மூன்றரை சதவிகிதம் இருந்த பார்ப் பனர்கள், கல்வியையும், அரசுப் பணிகளையும் மொத்தக் குத்தகை எடுத்தது போல இருந்த நிலையை மாற்றி அனைவருக்கும் சமமான வாய்ப்பை திராவிடர் இயக்கமாம் ஜஸ்டிஸ் கட்சி எப்படி வழங்கியது என்பதற்குச் சான்று, ஜஸ்டிஸ் மந்திரிகள் வந்த பிறகு நமது மாகாணத்தில் இலவசக் கல்வியும், கட்டாயக் கல்வியும் ஏற்பாடு செய்து அநேக இடங்களில் அமலில் கொண்டுவந்து இருக்கிறார்கள். 5 வயது முதல் 12வயது வரை ஒவ்வொரு குழந்தையையும் கண்டிப்பாய்ப் படிக்க வைக்க வேண்டும். இல்லா விட்டால் பெற்றோருக்குத் தண்டனை என்று சட்டமும் செய்து இருக்கிறார்கள். அதன் மூலம் படிக்கும் இலட்சக்கணக்கான பிள்ளைகளில் 100க்கு 99 பேர் பார்ப்பனர் அல்லாதோர் என்று குடிஅரசில் (26.10.1926) செய்தி வந்துள்ளது. மேற்கண்ட செய்தி பல தகவல்களை நமக்குத் தருகிறது. இன்றைக்கு வரலாறு தெரியாமல் திராவிட இயக்கம் என்ன செய்தது? என்று கேள்வி கேட்கும் பார்ப்பனரல்லாத இளைய தலைமுறை யின் கேள்விக்குமான பதிலும் இதில் அடங்கி யிருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து வெளியேறிப் போய் வேலை செய்யும் நிலை வந்துவிட்டதே, இதற்கெல்லாம் காரணம் திராவிட இயக்கங்கள் தானே என்று புலம்புகிறார் பத்ரி சேஷாத்திரி. இது உண்மையா?

இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர் மனியின் கை ஓங்கியிருந்த போது, ஜெர்மனி தான் வெல்லும் என்ற நிலை இருந்தபோது, தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் ஜெர்மன் மொழியைக் கற்றார்கள் என்பதுதானே வரலாற்றில் பதிவாகி யிருக்கும் செய்தி. ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொள்ளச் சொல்லி திராவிட இயக்கமா வலியுறுத்தியது?

தமிழ் ஓவியா said...

சுயநலம், சந்தர்ப்பவாதம் நிரம்பிய பார்ப் பனர்கள் தங்கள் வசதிக்காக, உயர்வுக்காக இடம் மாறிச் சென்று பிழைப்பது இன்று நேற்றா நடக் கிறது? இந்தியா முழுவதும் பார்ப்பனர்கள் வசிப் பதில் இருந்தே தெரிந்துகொள்ளலாமே பிழைப் பதற்காக இடம் பெயரும் அவர்களின் இயல்பான குணத்தை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த இடப் பெயர்வை ஏதோ எழுபதுகளில்தான் முதன்முதலில் நடந்தது போல நீலிக் கண்ணீர் வடிப்பது நியாயமா?

பார்ப்பனர்களைத் தவிர்த்து வேறு ஜாதியைச் சேர்ந்த யாரும் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி வேறு மாநிலங்களில், வேறு நாடுகளில் பணிபுரியாமலா இருக்கிறார்கள்? பார்ப்பனர்கள் பஞ்சம் பிழைக்கவா இடம் பெயர்ந்து சென்றனர்? இல்லையே. தங்கள் வசதிக்காகச் சென்றனர்.

பத்ரி சேஷாத்திரி மற்றும் அவரைப் போன்ற சிந்தனை கொண்டுள்ள பலருக்குமான கேள்விகள் பின்வருமாறு.

மாதச் சம்பளம் வாங்காத பார்ப்பனர்கள் எத்தனை சதவிகிதம்?

மாதச் சம்பளம் வாங்காத மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை சதவிகிதம்?
தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ள பார்ப்பனர்கள் எத்தனை சதவிகிதம்?

தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ள மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை சதவிகிதம்?

ஏசி அறையில் வேலை பார்க்கும் பார்ப்பனர் கள் எத்தனை சதவிகிதம்?

ஏசி அறையில் வேலை பார்க்கும் மற்ற சமூ கத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை சதவிகிதம்?

உடல் உழைப்பில் ஈடுபடும் பார்ப்பனர்கள் எத்தனை சதவிகிதம்?

உடல் உழைப்பில் ஈடுபடும் மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை சதவிகிதம்?

மூட்டை தூக்கியாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே மற்ற ஜாதியைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் போல கூலித் தொழில் செய்யும் பார்ப்பனர்களை எங்காவது கண்டதுண்டா?

இவற்றுக்குப் பதில் சொல்ல முடியுமா? இவற்றிற்கான பதில்களில் அடங்கியிருக்கிறது புலம்பல்களில் உள்ள நியாயமற்ற தன்மை. நாற்று நட்டாயா? களை பறித்தாயா? என்று வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட வசனம் போல பாரப்பனரல்லாதவர்கள் கேள்வி கள் கேட்டால், தலை குனிந்து நிற்க வேண்டி யிருக்கும் பார்ப்பனர்கள்.

வண்டி இழுக்காமல், வயலில் வேலை செய் யாமல், கல் உடைக்காமல், மண் சுமக்காமல், சிரைக்காமல், தைக்காமல், லாரி ஓட்டாமல், தெருப் பெருக்காமல், மலம் அல்லாமல், மரம் ஏறாமல், மீன் பிடிக்காமல், விறகு வெட்டாமல், மூட்டை தூக்காமல், அப்படி இல்லாமல், இப்படி இல்லாமல், மொத்தத்தில் உடல் நோவாமல், அழுக்குப் படியாமல், இத்தனை ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாமர்த்தியம் உள்ள பார்ப்பனர்கள், முட்டி மோதி முன்னேற முயற்சிக்கும் மற்ற ஜாதி மக்களைப் பார்த்துப் பொறாமை கொள்வது எந்த விதத்தில் நியாயம்? நேர்மையாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

இடஒதுக்கீடு என்பது வாய்ப்பு மறுக்கப் பட்டவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பு. இடஒதுக்கீடு என்பது போடப்படும் பிச்சை அல்ல, பெறப்படும் உரிமை. இடஒதுக்கீடு என்ற முறை இல்லையென்றால், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும். ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்தால் குற்றங்கள் பெருகும், சட்டம் ஒழுங்கு சீர் கெடும். ஒரு நாள் பிரச்சினைகள் முற்றும், புரட்சி வெடிக்கும். புரட்சி வெடித்தால், சுரண்டிக் கொழுப்பவர்களின் தலைகள் கொய்து எறியப்படும், ஆதிக்கம் புரிபவர்கள் அழித்தொழிக்கப்-படுவார்கள். நாடே சிதறுண்டு போகும்.

இது வெறும் கருத்தல்ல, இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரானவர்களுக்கான எச்சரிக்கை! மத்திய அரசு சமஸ்கிருதத்தை வளர்க்க முயன்றால், அது பார்ப்பனர்களின் சதியா? என்று கேட்கிறார் பத்ரி சேஷாத்திரி. பார்ப்பனர்களின் சமஸ்கிருதத் திணிப்பு குறித்து தனியாக நீண்டதொரு கட்டுரையே எழுதக் கூடிய அளவிற்கு வரலாற்றுச் செய்திகளும் ஆதாரங்களும் நிறையவே இருக்கின்றன. அது ஒருபுறம் இருக்க, எங்கும் பேச்சுவழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழியை, அந்த மொழிக்குத் தொடர்பே இல்லாத திராவிட மொழியான தமிழ் மொழியைப் பேசும் மக்கள் மீது திணித்தால், அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?

சமஸ்கிருதம் சீனர்களின் மொழியென்றால், அதைச் சீனர்களின் சதி என்றழைக்கலாம், அது பார்ப்பனர்களின் மொழி என்பதால், அதைப் பார்ப்பனர்களின் சதி என்றுதானே சொல்லு வார்கள். பார்ப்பனர்களைத் தவிர வேறு யாராவது அவர்கள் மொழியை மற்றவர்கள் மீது திணிப்பார்களா? அப்படித் திணிப்பதால் அவர்களுக்கு என்ன லாபம்? எனவே அதைப் பார்ப்பனர்களின் சதி என்று கருதுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

சமஸ் கிருதம் பார்ப்பனர்களின் மொழியல்ல, அது இந்தியர்களின் மொழி, கடவுளின் மொழி என்றெல்லாம் சொல்லி பத்ரி சேஷாத்திரி தப்பிக்க முடியாது. காரணம், கட்டுரையின் இறுதிப் பகுதியில் பார்ப்பனர்களும் மற்றவர்களைப் போல தங்கள் மொழியைப் பாதுகாக்கும் நிலை வேண்டும் என்று விருப்பத்தைத் தெரிவித்துள் ளார். உங்கள் மொழியை உங்கள் வீட்டிற்குள் நீங்கள் பேசிக்கொள்ளுங்கள், அதை யாரும் தடுக்கவில்லை. ஆனால், உங்கள் மொழியை மற்றவர்கள் மீது திணிக்காதீர்கள் என்றுதானே சொல்லுகிறார்கள். இதில் என்ன தவறிருக்கிறது?

- திராவிடப்புரட்சி

தமிழ் ஓவியா said...

இவ்விடம் அரசியல் பேசலாம்

ராத்திரி நேரத்துப் பூஜையில்....

தோழர் சந்தானத்தின் சலூனுக்குள் மகேந்திரன் நுழைந்ததுமே புதிதாக வேலைக்குச் சேர்ந்த முத்துவைப் பற்றித்தான் விசாரித்தார்.

"தோழர், புதுசா சேர்ந்த முத்துவை எங்க காணல? அதற்குள் வேலை பிடிக்கலைன்னு கிளம்பிட்டாரா?"

"அப்படில்லாம் இல்லைங்க தோழர், அவங்க ஊர்ல மாரியம்மன் கோவில் திருவிழாவாம், வருஷா வருஷம் எங்க இருந்தாலும் கண்டிப்பா போயிடுவாராம், அதான் லீவு கேட்டாரு, கொடுத்துட்டேன்."

"பரவாயில்லையே! முத்துத் தம்பிக்குத் தெய்வ பக்தி அதிகமோ?"

"நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன் தோழர், அப்புறம் அவனே உண்மையச் சொல்லிட்டான் தோழர்!"

"அதென்ன உண்மை தோழர்?"

"அவங்க ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவுல போடுற ஆடலும் பாடலும் ப்ரோக்ராம் ரொம்ப பேமஸாம்! ஒவ்வொரு வருஷமும் மிஸ் பண்ணவே மாட்டாராம்!"

"ஓஹோ. அபிநயா கலைக்குழுவுல எம்ஜிஆர், ரஜினி மாதிரியெல்லாம் வேஷம் போட்டு ஆடுவாங்களே அந்த மாதிரி டான்ஸ் தான? அதெல்லாம் தொடர்ந்து பார்த்தால் சலிப்புத் தட்டிடுமே தோழர்! அதுக்கா அவ்வளவு ஆர்வம்?!"

"அட! நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க தோழர்?"

"பின்ன எப்படி தோழர்?"

"கரகாட்டமெல்லாம் பார்த்திருக்கீங்களா தோழர்?"

"சின்ன வயசுல பார்த்திருக்கேன். அதுவும் வீட்டுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமா!"

"ஹஹஹ! அதான பார்த்தேன்! நானும் உங்க கேஸ் தான் தோழர்! அந்தக் கரகாட்டத்துல முதலில் கரகத்தை வைத்து நிறைய வித்தையெல்லாம் பண்ணிக் காட்டுவாங்க. அப்புறம் நேரம் செல்லச்செல்ல, நள்ளிரவு வர்றப்பதான், கூட்டம் கலையாமல், தூங்காமல் இருக்கறதுக்காக கொஞ்சம் ஆபாசமா பேசுவாங்க, மிஞ்சி மிஞ்சிப் போனால் கூட்டத்திலிருக்குற ஒரு சின்னப் பயனைக் கூப்பிட்டுப் படுக்க வச்சு வாழைக்காய் வெட்டுவாங்க! ஆனால் இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சி அதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுடும் தோழர்!

"அப்படியா? அதெப்படி உங்களுக்குத் தெரியும் தோழர்?"

"எப்படி தெரியுமா? இன்டர்நெட்ல யூ டியூப் புல்லா அதுதான் தோழர் இப்போ அதிகம் பேர் பார்க்கற வீடியோவே!"

"இன்டெர்நெட் வரைக்கும் வந்திடுச்சா? அப்படி என்ன தோழர் அந்த ஆடல் பாடலில் இருக்குது?"

"அப்பட்டமா உறிச்ச கோழியாட்டம் ஆடுறதும், படுக்கையறைக் காட்சிகளை மேடையேத்துறதும் தான் தோழர் அதோட ஸ்பெஷாலிட்டியே!"

"படுக்கையறைக் காட்சிகளா? அதுவும் சாமி திருவிழா மேடையிலா?"

"அட, அந்த மேடையிலயே பெரிய சைஸ்ல சாமி படத்தை ப்ளக்ஸ்ல தொங்க விட்டுக்கிட்டு தான் இத்தனை கூத்தும் நடத்துறாங்க தோழர்! என்ன நம்ப முடியலையா?!"

"ஆமா தோழர்! அந்த ஊர் பஞ்சாயத்துன்னு ஒன்னு இருக்கும்ல, நாட்டாமைன்னு ஒருத்தர் இருப்பாருல்ல? அவரு அதையெல்லாம் கண்டிக்க மாட்டாரா?"

தமிழ் ஓவியா said...

"அவரு எங்க கண்டிக்க? மேடையைச் சுத்தி உட்கார்ந்துக்கிட்டு செல்பேசில

வீடியோ எடுக்குற கும்பலில் அவரும் ஒருத்தராச்சே!"

"அடக்கொடுமையே! இந்த மாதிரிக் கலாச்சாரத்திற்கு விரோதமான நிகழ்ச்சிகளைத் தடுத்து நிறுத்தி சட்டத்துக்கு முன்னாடி நிறுத்த வேண்டிய அவரே இப்படியா?!"

"என்ன அவரே இப்படியா? கரகாட்டம் நடந்த காலத்துலயே இவங்கதான கரகாட்டக் கலைஞர்களுக்குப் பணம் குத்துற கோஷ்டி?! அந்தக் கலைஞர்களைப் பாதுகாக்குறேன் பேர்வழின்னு இவங்க எப்படி வழியுவாங்கன்னு சுப்பிரமணியபுரம் படத்துல கூட பார்த்திருப்பீங்களே!"

"அதுசரி! இப்படி உலக அளவுல நம்மூருத் திருவிழா மானம் கப்பலேறிக்கிட்டுத்தான் இருக்குதா? இதுல அய்யோ பாவம் மாதொருபாகன் நாவலை வச்சுக்கிட்டு, அந்த ஊர் ஜனங்களைக் காவிக்கூட்டம் உசுப்பிவிட்டுட்டு வேடிக்கை பார்க்கறதைப் பார்த்தால் பத்திக்கிட்டு வருது தோழர்!"

"அதேதான் தோழர்! ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்குவதுதான இவங்க வேலை! ஜாதித் தீயைக் கிளறி விட்டுட்டு இப்போ குளிர் காலத்துக்குச் சுகமா குளிர் காயுறாங்க! நம்ம முத்து திரும்ப வேலைக்கு வந்தபிறகு வந்து அவனிடம் கேளுங்க! திருவிழாவைப் பத்திக் கதைகதையா சொல்வான்! இந்த மாரியம்மன் கோவில் திருவிழாகூட ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனியா நடக்குமாம் தோழர்!"

"என்னது ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனியாவா? அப்போ மாரியம்மனும் ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனியாதான் அருள்பாலிக்குமா?"

"விட்டால் மாரியம்மன் என்ன ஜாதின்னு கேட்பீங்க போல! அதைப் பத்தி நம்ம மாரியம்மனே கவலைப்படல, நமக்கு எதுக்கு தோழர்!"

"ஊர் முழுக்க ஜாதி வெறியும், மத வெறியும் மீண்டும் உச்சத்துக்கு வர்றாப்புல தெரியுதே தோழர்! எழுத்தும் கலையும்தான் மக்களோட மனநிலையை மேம்படுத்தி மனிதாபிமானத்தைத் துளிர்க்கச் செய்ய முடியும். ஆனால் அப்படிப்பட்ட படைப்பைக்கூட ஜாதிக் கண்ணோட்டத்துல பார்க்கறதும், ஆணாதிக்க சிந்தனையோட அவதூறு பரப்புவதும், கொலை மிரட்டல் விடுறதும் என்ன ஒரு கலாச்சாரமோ தோழர்!"

"இதெல்லாம் ஆட்சி மாற்றத்தால வர்ற வேகமும், துடிப்பும்தான் தோழர்! நம்மூர்ல ஜாதி வெறியைத் தூண்டுறாங்க, வடநாட்டுல என்னடான்னா, நாலு குழந்தை பெத்துக்கோ, அஞ்சு குழந்தை பெத்துக்கோன்னு மத வெறியத் தூண்டுறாங்க!"

"குழந்தைகளை வதவதன்னு பெத்துப்போட்டு இந்துக்களோட எண்ணிக்கையை உயர்த்தப் போறாங்களாம்! மேட்டூர் டேம்லயும், பெரியாரு டேம்லயும் நீர்மட்டத்தை உயர்த்தி விவசாயத்தை உயர்த்துறதுக்கு வழியக் காணும்! புள்ளகுட்டியை உயர்த்துறதுக்கு அய்டியா கொடுக்க மத்திய அரசாங்கம் எதுக்குத் தோழர்?!"

"சரியா கேட்டீங்க! நாட்டுல கொசுக்களோட தொகை பெருகிட்டுப் போறதைப் பத்திக் கவலையில்ல, இதுல முஸ்லீம்கள் எண்ணிக்கை அதிகமாகுதுன்னு கிளப்பிவிட்டு புள்ள பெத்துக்கற போட்டியைத் தூண்டி விடுறானுங்க! முதலில் தன்னோட கட்சிக்காரங்களை வதவதன்னு பெத்துக்கச் சொல்லலாம்ல! அப்படியாவது அவங்களுக்கு ஓட்டு எண்ணிக்கை அதிகமாகுதான்னு பார்க்கலாம்ல!"

"அதானே தோழர்! முதலில் அவங்க கட்சிக்குள்ள செயல்படுத்தலாமே?!"

"அங்கதான தோழர் இடிக்குது! அவங்க தலையே மனைவிகூட சேர்ந்து வாழமாட்டேன்னு அடம் பண்ணிட்டு இருக்கார்! அவரோட மனைவி தான் சேர்ந்து வாழத் தயார்னு ஊடகங்களில் பேட்டியெல்லாம் குடுத்து கேன்வாஸ் பண்றாங்க! நினைச்சாலே பரிதாபமா இருக்குதுல்ல தோழர்!"

"ஆமா, தோழர். இன்னொரு கொடுமையப் பார்த்திங்களா தோழர்? தலைநகர் டெல்லியில ஏகப்பட்ட கற்பழிப்புகள் நடைபெறுவதால் அங்கே பாதுகாப்பை அதிகப்படுத்தணும்னு சொன்னப்பலாம் கண்டுக்காமல் இருந்துட்டு இப்ப ஒபாமாவுக்காக 15,000 கேமரா வரை பொருத்தி பாதுகாப்புக் கொடுக்குறாங்க!"

"ஆனாலும் பாருங்க, 15,000 கேமராவைப் பொருத்தினாலும் அதிலிருக்கும் கேமராவை வச்சு நம்மை நாமே செல்பி எடுத்துக்க முடியாது! என்ன கொடுமை சரவணன் மாதிரியில்ல?!"

ஹஹஹ! அதேதான் தோழர்!

- கல்வெட்டான்

தமிழ் ஓவியா said...

இது என்ன கூத்து?

மத சுதந்திரம் தொடர்பான ஒபாமாவின் கூற்று துரதிருஷ்டமானது.
- உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

ஒபாமா சொன்ன கருத்து பொதுவாகச் சொல் லப்பட்டதுதானே தவிர, நம்மைப் பற்றியல்ல!
- பி.ஜே.பி. தலைவர் அமித்ஷா

Read more: http://viduthalai.in/e-paper/95648.html#ixzz3QyNvrepD

தமிழ் ஓவியா said...

வாராக்கடன்

முடிந்த டிசம்பர் காலாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ஏற் பட்ட நட்டம் 6516 கோடி யாம்.

வாராக் கடன் 8.12 சதவீதம் அதிகரித்ததே இதற்குக் காரணமாம். (ரூ.14,500 கோடி வாராக் கடன்).

அம்மா பசி!

அம்மா பசி என்று அழும் குழந்தைகள் உலகில் 56.8 கோடி

Read more: http://viduthalai.in/e-paper/95644.html#ixzz3QyO7QOlG

தமிழ் ஓவியா said...

பொருளல்ல...

மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக் கொள்ள வேண்டுமென்பது பொருளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும்.
(விடுதலை, 10.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/95649.html#ixzz3QyOadr8C

தமிழ் ஓவியா said...

ஆன்மா அடங்காத ஒன்றா?

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரி யங்களும் (அறிவுக்கருவிகள்) வாக்கு, பாணி, பாதம், குதம், குய்யம் ஆகிய கர்மேந்திரயங்களும் (தொழிற்கருவிகள்) இவ்வுடல் அடங்கும் பொழுது தாமாகவே அடங்கி விடுகின்றன அல்லவா? அங்ஙனமிருக்க ஆன்மா மட்டும் ஏன் அடங்காது?

ஆன்மா ரூபமுடையது என் பீரேல், சரீரப் பிரமாணத்ததா, அப்படியானால் சரீரத்துக்குள் புகாது. காரணம்? ஒரே அளவுள்ள இரு குடங்கள் ஒன்றினுள் ஒன்று புகமுடியாது போலாம் என்றறிக!

ரூபம் அற்றது என்றாலோ ரூபமற்ற ஆன்மா ரூபமாகிய சரீரத்துக்குள் புக முடியாது.
ரூபமாகவும், அரூபமாகவும் உள்ளது என்றாலோ, இரு வகைத்தும், குற்றமே என்றறிக.

- (நீலகேசி, மொக்கலவாதச் சருக்கம், பக்கம் 3)

Read more: http://viduthalai.in/page-7/95692.html#ixzz3QyPiyWS3

தமிழ் ஓவியா said...

சாக்ரட்டீஸின் பொன்மொழிகள்

தங்கத்தைக் கண்டுபிடிக்கச் சுரங்கத்திற்குள் நுழைகிறவன் மரியாதையை பார்த்தால் முடியுமா? தங்கத்தை விட மேலான பொருளை அதாவது நீதியைத் தேடி கண்டுபிடிக்க நாங்கள் புறப்பட்டிருக்கிறோம். இதில் மரியாதையை பார்த்துக் கொண்டு முயற்சியைக் கைவிட்டு விடு வோமா?
***************
நீதிக்கு நான் மிக உயர்ந்த ஸ்தானம் கொடுக்கிறேன். அதாவது எந்த விஷ யத்தை அந்த விஷயத்திற்காகவும் அதன் விளைவு களுக்காகவும் நேசிக்கிறோமோ அந்த மாதிரியான விஷயங்களில் ஒன்றாக நீதியை நான் கருதுகிறேன்.
***************
ஒரு மனிதனுக்கு எந்தத் தொழிலைச் செய்ய இயலுகையிலேயே ஒரு திறமை இருக்கிறதோ அந்தத் தொழிலை மட்டும் அவன் செய்து கொண்டு போனால் நல்லது.
***************
விபரீதமான குற்றங்களைச் செய்கிற கடவுளர்களை சிருஷ்டித்து அந்தக் கடவுள்களின் கதைகளைச் சிறுவர் களுக்கு சொல்லிக் கொடுப்போமானால் அவர்கள் என்ன நினைத்துக் கொண்டு விடுகிறார்கள் தெரியுமா? கடவுளர்களே பல குற்றங்களை செய்திருக்கிறபோது நாமும்தாம் செய்தாலென்ன! என்று கருதி அதே மாதிரி செய்யத் தொடங்கி விடுகிறார்கள்.

இந்த மாதிரியான கதைகளை நாம் சொல்லிக் கொடுக்கக் கூடாது. தவிர, ஒரு தெய்வத்திற்கு விரோதமான மற்றொரு தெய்வம் சதி செய்வதாகவோ, யுத்தம் செய்வதாகவோ உள்ள கதைகளையும் நாம் சொல்லலாகாது. ராட்சதர்களோ அல்லது தேவர்களோ ஒருவருக் கொருவர் போராட்டங்கள் நடத்தியதாகவும் நாம் உபதேசிக்கலாகாது.

மனிதர்கள் ஒருவரை யொரு வர் நேசிக்க வேண்டுமென்றும், ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், இதை போன்ற நீதிகளைப் புகட்டுகிற கதைகளையே சொல்ல வேண்டும்.
***************
அதிகமான செல்வமோ அதிகமான வறுமையோ தங்கள் ராஜ்யத்திற்குள் வரவொட்டாதபடி அரசர்கள் பாதுகாக்க வேண்டும். அதிக செல்வத்தினால் ஆடம்பரத் தன்மையில் சோம்பேறித்தனமும் உண்டாகும். அதிக வறுமையினால் புரட்சியும், இழிதகைமையும், துரோகமும் ஏற்படும்.

Read more: http://viduthalai.in/page-7/95691.html#ixzz3QyPt7u3O

தமிழ் ஓவியா said...

மதச்சார்பின்மை என்றால் அரசுக்கு மதம் கிடையாது என்பதே பொருள்

குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் சரியான கருத்து

மும்பை, பிப்.5- குடியரசு நாள் விழாவையொட்டி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அரசமைப்பு சட்ட முகப்புரை விளம்பரத்தில் மதச்சார்பின்மை, சோசலிஸ்ட் ஆகிய இரண்டு வார்த்தைகளும் இடம் பெற வில்லை. 42ஆவது திருத்தம் செய்வதற்கு முன் இருந்த முகப்புரையை வெளியிட்டதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் தெற்கு மும்பையில் உள்ள வில்சன் கல்லூரியில், மாணவர்களிடம் கலந்துரையாடிய குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறியதாவது:_-

மதச்சார்பின்மை என்றால், நமக்கு என்ன புரிகிறது? நமது சமூகத்தில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கிறோம். அதனால்தான் நமது நாட்டை மதச்சார்பற்ற நாடு என்கிறோம். மதச்சார்பின்மை என்பது ஒரு நாட்டுக்கு சொந்தமாக மதம் இல்லை என்பதை உணர்த்துகிறது. மத அடிப்படையில் ஒரு நாடு மக்களை பிரிக்கக் கூடாது. வளர்ச்சித் திட்டம், கல்வி உதவித் தொகை ஆகியவற்றை மத அடிப்படையிலோ அல்லது பாலின அடிப்படையிலோ வழங்காமல் பொதுவாக வழங்க வேண்டும். பாலின பாகுபாடு என்ற நோயால் நமது சமூகம் பல இன்னல்களை அனுபவித்துள்ளது. பாலின பாகுபாடு சட்டத் தால் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இது சரியான பலனை அளிக்கவில்லை. எனவே இந்த சவாலை சமூகரீதியாக சந்திக்க வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை பின்பற் றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அதற்கு நாம் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். சரியா, தவறா என்பதைப் பற்றிக் கவலைப்படால் நாட்டின் குடிமக்கள் பொது வாழ்வில் பங்கு கொள்ள வேண்டும். மாணவர்களும் குடிமக்கள்கள் தான். அதனால் பொது வாழ்வில் பங்கேற்பது உங்களின் கடமை. குடிமக்களாகிய நீங்கள் உங்கள் கடமையைச் செய்ய வேண்டும் என்றார்.

Read more: http://viduthalai.in/page1/95621.html#ixzz3QyQKhKFV

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கிரகங்கள்

நமது உடலை சரியான முறையில் இயற்கை யாகவே பராமரித்து வரும் எச்சில், கல்லீரல், இரைப்பை நீர், குடல் நீர், கண் நீர் சுரப்பி, வியர்வைச் சுரப்பி போன்ற நாள முள்ள சுரப்பி நீர் களை ராகு - கேதுவை தவிர ஏனைய ஏழு கிரகங் களும் கட்டுப்படுத்துகின் றன என்று மருத்துவ ஜோதிடர்கள் தங்கள் ஆய்வில் கண்டுபிடித் துள்ளனர்.

- தினகரன் ஜோதிட மலர் 4.2.2015

ராகு, கேது என்ற கிரகங்கள் இல்லை என் பது வானியல் அறிவியல் சொல்லும் ஆணித்தர மான கருத்து.

மருத்துவ ஜோதிடர்களாமே - அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? மருத்துவமும் ஜோதிட மும் எதிர்முனைகள் அல்லவா!

Read more: http://viduthalai.in/page1/95626.html#ixzz3QyQU3NYU

தமிழ் ஓவியா said...

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் பாரதிதாசன் பாடல்களை நீக்குவதா?


காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் தொலைதூர கல்வி பாடத்திட்டத்தில் முதுகலை தமிழ் முதலாமாண்டு பாடத்தில் இக்காலஇலக்கியம் எனும் பகுதியில் இடம் பெற்றுள்ள பாரதிதாசன் பாடல் வரிகளான தமிழியக்கம் கவிதை தொகுப்பு கடந்த 2004ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

பத்து ஆண்டு களுக்கு பிறகு இப்போது சென்னை ஆழ்வார்ப் பேட்டை, சர்.சி.பி ராமசாமி (அய்யர்) சாலையை சேர்ந்த பார்ப்பனர் ஒருவர் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக்குழு தலைவர் திரு சோம. கலியமூர்த்தி அவர்களிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு மேற்கண்ட புரட்சிக் கவிஞரின் தமிழியக்கம் பாடல்களை நீக்க வேண்டும், இல்லை யென்றால் தங்கள் மீதும், நிர்வாகத்தின் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.அதற்கு பதிலளித்த துணைவேந்தர் (பொறுப்பு) முறைப்படி கடிதம் அனுப்பாமல், சொல்வதை மட்டுமே வைத்து நீக்க முடியாது, எனவே, தங்களின் சார்பில் வேண்டுகோள் கடிதம் அனுப்பினால் பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்க, அந்தப் பார்ப்பனரும் உடனடியாக தனது வேண்டு கோளை இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளார்.

உடன் அதற்கான நடவடிக்கை நடக்க உள்ளது என்ற தகவலறிந்த திராவிடர் கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம், பாரதிதாசன் தமிழ் பேரவை, பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி, பகுத்தறிவாளர் கழகம் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பாரதிதாசன் பாடல்களை நீக்கக் கூடாது என்று அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் பொறுப்புக்குழு தலைவர் திரு சோம. கலியமூர்த்தி அவர்களிடம் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இதனிடையே கடந்த 02.02.2015 அன்று காரைக்குடி வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் மூலம் இத்தகவல் அறிந்து அன்று மாலை காரைக்குடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் இது குறித்து பேசும் போது புரட்சிக்கவிஞர் பாடல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டவை; அதை நீக்கிட துணைவேந்தருக்கும் அதிகாரமில்லை, அரசுக்கும் அதிகாரமில்லை.

எனவே, திராவிடர் கழகம் இது தொடர்பாக நடத்தும் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவு அளிக்கும், போராடும் என்று பேசினார். இதனிடையே வரும் 12.02.2015 அன்று நடக்கவுள்ள அழகப்பா பல்கலைகழக ஆட்சிமன்றக் குழு கூட்டத் தில் இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்து நீக்கும் முயற்சி எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது. இதை தடுத்து நிறுத்த காரைக்குடியில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

மத்தியில் பாரதீய ஜனதா கட்சி தலைமையில் ஆட்சி அமைந்து விட்டது என்றவுடன் இந்தப் பார்ப்பனர்களின் தலைகளில் அதிகாரத் திமிர் என்னும் கொம்பு முளைத்து விட்டதாகவே திமிருகிறார்கள் - முட்டித் தள்ளக் குதியாட்டம் போடுகிறார்கள்.

பல்கலைக் கழகத்தில் எந்தப் பாடத்தை வைப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை இந்தப் பார்ப்பனர்களுக்கு யார் கொடுத்தார்கள்?

அறிவியலுக்கு முரணாக பித்தாபிறை சூடி பெருமானே! (தலையில் சந்திரனை சூடியிருக்கும் சிவபெருமானே!) என்ற பாடல்களை எல்லாம் பாடத் திட்டத்தில் சொல்லிக் கொடுக்கும் பொழுது பகுத் தறிவுச் சிந்தனை வளம் கொழிக்கும் புரட்சிக் கவிஞர் பாடல்கள் பல்கலைக் கழகத்தில் இடம் பெறக் கூடாதா?

குற்றலாக் குறவஞ்சியில் ஒரு பாடல்:
காதலஞ் செழுத்தார் போதநீ றணியார்
கைந்நரம் பெடுத்துக் கின்னரம் தொடுத்தப்
பாதகர் தோலால் பலதவி லடித்துப்
பறவைகள் படுக்கும் குறவனும் நானே
என்று குற்றாலக் குறவஞ்சியில் திரி கூட ராசப்பக் கவிராயர் பாடியுள்ளார்.

அடியார்கள் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி வழுத்தும் சிவபெருமான் திருநீற்றை அணியாதவர் களின் கைந் நரம்பினை எடுத்துக் கின்னரம் என்ற யாழில் தொடுத்து, நீறில்லா நெற்றியினுடைய தீவினை யாளர்களுடைய (பாவிகளுடைய) தோலினால் செய்யப்பட்ட தவிலினை அடித்துப் பறவைகளைப் பிடிக்கின்ற குறவனும் நானே! என்பது இப்பாடலின் பொருள். மேல்நிலைப் பள்ளிகளில் இப்பாடல் வைக்கப் பட்டதுண்டு அதைப்பற்றியெல்லாம் இந்த அறிவுக் கொழுக்கட்டைக் கண்டு கொள்ளாதது ஏன்?

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம், தமிழர் ஒருவரின் நன்கொடையால் உருவானது. அத்தகு பல்கலைக் கழகத்தில் ஒரு தமிழ்க் கவிஞரின் பாடல் களை நீக்க முயலுவது கண்டிக்கத்தக்கது. மீறினால் கடும் போராட்டம் வெடிக்கும் எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page1/95597.html#ixzz3QyQhGnU3

தமிழ் ஓவியா said...

ஆயுதம்!


கொஞ்சத் தண்டனையானாலும், அதிகத் தண்டனையானாலும் அது எதற்காக ஏற்பட்டது என்றால், ஒரு குற்றத்தைச் செய்தவன் மேலும் (மறுமுறை) அக்குற்றத்தைச் செய்யாமல் இருப்பதற்குப் பயன்படும் ஆயுதம்தான் அது.
(விடுதலை, 13.01.1965)

Read more: http://viduthalai.in/page1/95596.html#ixzz3QyQsEvKM

தமிழ் ஓவியா said...

விடுதலையின் சிறப்பு

எனக்கு வயது 55 ஆகிறது. மாணவப் பருவம் தொட்டு, விடாமல் விடுதலை படித்து வருகின்றேன். ஒருவர் நல்ல மனோதிடமும், பொது அறிவும், அரசியல் தெளிவும் பெற விடுதலையை மட்டும் படித்து வந்தாலே போதும் என்பது என் தாழ்மையான கருத்தாகும்.

ஈமோ என்ற ஓவியத் தொடர் ஆரம்பத்தில் சிறுவர்களுக்கான பகுதி என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். அதில் பெரியவர்களுக்கான செய்திகளும் உள்ளன என்பதை விடாமல் படித்து வரும்போது தெரிந்துகொண்டேன்.

விடுதலை வாசகர் ஒவ்வொரு வரும், தான் படித்த விடுதலை நாளிதழை, விடுதலை நாளிதழ் வாங்காத ஒருவரிடம் கொடுத்து படித்துப் பாருங்கள் என்று சொல்ல வேண்டும். ஏனைய நாளிதழ் களோடு ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்ல வேண்டும் என வேண்டிக் கொள்கின் றேன்.

- பெரி. காளியப்பன், மதுரை

Read more: http://viduthalai.in/page1/95610.html#ixzz3QyR2rJfI

தமிழ் ஓவியா said...

கணவனின் வருவாயை அறிய தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின்படி மனைவிக்கு உரிமை உண்டு
மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

புதுடில்லி, பிப். 8_ கணவனின் சொத்து விவ ரங்கள், முதலீடுகள் மற் றும் பிற சொத்துகள் உள் ளிட்ட பல்வேறு வருவாய் குறித்த தகவல்களை அறிய தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி மனை விக்கு உரிமை உள்ளது என்று மத்திய தகவல் ஆணையம் அளித்தத் தீர்ப்பில் கூறி உள்ளது.

குடும்ப வன்முறை பாதிப் புக்கு ஆளாகிய மனைவி யின் மனுவின்மீதான வழக் கில் மத்திய தகவல் ஆணை யம் அளித்தத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அந்த வழக்கில் தனி நபர் வரு வாய் என்பது தனிப்பட்ட தகவல் என்று வாதிடப் பட்டது. அப்பெண்ணின் கணவன் பணிபுரியும் டில்லி டிரான்ஸ்கோ நிறு வனத்துக்கு கணவன் வருவாய் குறித்து, அவர் மனைவியின் வாழ்வாதார உரிமைக்குத் தேவையான தகவலை அளிக்க ஆணை யம் உத்தரவு பிறப்பித்துள் ளது. தகவல் பெறும் உரி மைச்சட்டத்தின்கீழ் தனிப் பட்டவர்களின் தகவலை அளிக்கக்கூடாது என்பதி லிருந்து விதிவிலக்காக மனைவிக்கு கணவனின் வருவாய்குறித்த தகவல் அளிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் வரதட் சணையாக அளிக்கப்பட் டது உள்பட கணவனின் சொத்து விவரங்கள், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முயன் றது, மனைவியை பொரு ளாதார ஆதரவின்றி கைவிட்டது உள்ளிட்ட வைகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்குறித்து தகவல்களை மனைவி கேட்டுள்ளார்.

தீர்ப்பில் கூறும்போது, தனிப்பட்ட பிரச்சினை என்று பார்க்காமல் பொதுப் பிரச்சினையாகவே இதைப்பார்க்க வேண்டும் என்று தகவல் ஆணையர் எம்.சிறீதர் ஆச்சார்யலு கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும் போது, டில்லி டிரான்ஸ்கோ நிறுவனத்திடம் ஒரு பெண் கேட்டுள்ள தகவல் களை அளிக்காமல் தள்ளி விட முடியாது.

தனிநபர்குறித்த தகவல் பாதுகாப்பு என்பதைத் தாண்டி, ஒரு அரசு அலு வலரின் பொதுவான கடமை என்பதில் குடும்ப வன்முறை என்றில்லாமல் மனைவி மற்றும் குழந் தைகளை பராமரிக்கும் பொறுப்பு உள்ளது. கண வனின் வருவாய் குறித்த தகவலை மனைவிக்கு 48 மணி நேரத்துக்குள் டிரான்ஸ்கோ நிறுவனம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அண்மையில் டில்லி உயர்நீதிமன்ற உத்தரவில் கசம் சர்மா எதிர் மகிந்தர் குமார சர்மா வழக்கில் மத்திய தகவல் ஆணை யம் எடுத்துக்காட்டி உள் ளது. டில்லி உயர்நீதிமன்றம் கணவன் மற்றும் மனை வியின் வருவாய், சொத்து மற்றும் முதலீடுகள் குறித்த உறுதிமொழி ஆவணங் களை அளிக்க உத்தர விட் டது. அதற்கு முன்னதாக தனிப்பட்டவர்களின் தகவல் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

பொருளாதாரத்தில் சார்பு நிலைகுறித்தும், பெற்றோர்கள் ஆதரவின் றியும், கணவனின் பரா மரிப்பு இன்றியும் உள்ள மனைவி, தன்னுடைய வாழ்வாதார உரிமையை சவாலாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே இத்தகவல்கள் மனைவி யின் வாழ்வாதார உரிமை யைப் பொருத்துள்ள தாகும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/95854.html#ixzz3R9coyNWh

தமிழ் ஓவியா said...

ஆந்திராவில் பெரியார், பகத்சிங் படங்களுடன் பகுத்தறிவு வினாக்களுக்கு விடை அளித்தால் ரூ.10 லட்சம் பரிசு

கடவுளை மற! மனிதனை நினை!! (தேவுன்னி தொலகிஞ்சு, மானவத்வான்னி ரக்ஷிஞ்சு) வாசகங் களுடன் உள்ள நெகிழி (பிளக்ஸ் பேனர்) ஆந்திர மாநிலம் கடப மாவட்டம், "ப்ரொத்தட்டூரு" எனும் ஊரில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அதில் (பேனரில்) இடம்பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு: இவை மூட நம்பிக்கைகள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

* பேய்கள், பூதங்கள், ஆத்மா, மறுபிறப்பு, சொர்க்கம்-நரகம், - ஆகியவை முழுக்க முழுக்க கற்பனைகளே!

* மந்திரங்கள், மகிமைகள், செய்வினை, பாணாமதி போன்ற அனைத்தும் உண்மையே அல்ல!

* வாஸ்து, சோதிடம், எண் கணித சாத்திரம், அதிருஷ்ட மோதிரங்கள், திவ்விய வைரங்கள், இராசி பலன்கள்! * தன லட்சுமி, குபேர மந்திரங்கள், வீட்டு தோஷங்கள், யக்ஞ-யாகங்கள் - அனைத்தும் அய்-டெக் மோசடிகள் * பர லோகம், சுவிசேஷ பிரார்த்தனைகளின் ஊடாக நோய்களைத் தீர்த்தல்...

* சாமியாடுதல் கடவுள் அருளால் நிகழ்வதல்ல - ஹிஸ்டீரியா எனப்படும் மன-உள நோய் (பிரமை)

* பாபாக்கள், சுவாமிஜிக்கள் ஆகியோர் மகிமைகளின் பெயரால் செய்யும் தந்திரங்களே! (மந்திரமல்ல-தந்திரமே)

* மதக் கிரந்தங்கள் அனைத்தும் மனித இன கற்பனைகளே;

* கடவுளர் உறையும் கோயில்கள், மனிதனின் நிர்மாணங்களே, கட்டுமானங்களே!
மேலே சொல்லப்பட்டுள்ளவை அனைத்தும் அறிவியல் அடிப்படையானவை என நிரூபித்தால், உறுதி/அறுதிப்படுத்தினால் - ரூ. பத்து இலட்சம் பரிசு!

*பிரஜா மக்கள் நாத்திக அமைப்பு, ஆந்திரப் பிரதேச கிளை, கடப மாவட்டம், ப்ரோத்தட்டூரூ கிளை மாநிலப் பேரவையின் ஒத்துழைப்புடன் ... மக்கள் புரட்சி மேடை.

- தகவல்: கோரா.

Read more: http://viduthalai.in/page-8/95853.html#ixzz3R9cwgeKE

தமிழ் ஓவியா said...

தகாத வார்த்தைகளில் 19 நிமிடம் திட்டிய ராஜபக்சே! அந்தரங்கத்தை அம்பலப்படுத்தும் சந்திரிகா!!

கொழும்பு, பிப்.7 இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்சே முதல் முறையாக பொறுப்பேற்ற போது அவருக்கு வாழ்த்து சொன்னதற்காக, தம்மை தகாத வார்த்தைகளால் 19 நிமிடம் திட்டினார் என்று அந்நாட்டின் முன் னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க குற்றம்சாட்டி யுள்ளார். மேலும் ராஜ பக்சேவின் அந்தரங்க வாழ்க்கை பற்றி, நான் விவரித்த போது தொலை பேசி இணைப்பை அவர் துண்டித்து விட்டார் என்றும் சந்திரிகா கூறியுள் ளார். இலங்கை அதிபர் தேர்தலை முன்வைத்து மீண்டும் அரசியல் களத் தில் பரபரப்பானவர் முன் னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க. அவர் அண் மையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி யில் கூறியுள்ளதாவது:

நான் அதிபர் பதவியி லிருந்து ஓய்வு பெறும் நேரத்தில் அடுத்த அதிபர் வேட்பாளராக ராஜபக் சேவை நிறுத்தினேன். அப்போது இருந்த ஆளும் கட்சி உறுப்பினர்களில் 61 பேரில் 56 பேர் ராஜபக் சேவை அதிபர் வேட்பாள ராக நிறுத்த வேண்டாம். அவர் கட்சித் தலைமைக்கு பொருத்தமற்றவர் எனவும் தெரிவித்தனர். ஆனால் அவர் தனது தவறுகளை உணர்ந்து மக்களுக்கு நல்லாட்சி வழங்குவார் எனும் நம்பிக்கையில் நானும், இன்னும் மூவரும் அவரை அதிபர் வேட் பாளராக நியமித்தோம். அவரோ, ரணில் விக்ரம சிங்கவுடன் இணைந்து கொண்டு, எனக்கு எதிராக பேசுவது உள்ளிட்ட பல் வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ராஜபக்சே முதல் முறையாக அதிப ராகப் பொறுப்பேற்ற பின்னர் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தொலைபேசியில் பேசி னேன். அப்போது, அவர் என்னை 19 நிமிடங்கள் தொடர்ச்சியாக தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார். நான் அமைதி யாக அவர் கூறியவற்றை யெல்லாம் கேட்டு விட்டு, குறிப்பிட்ட சிலர் மட்டுமே அறிந்த அவரின் வாழ்க்கை ரகசியத்தை கூறினேன். உடனே அவர் தொலை பேசி அழைப்பை துண் டித்து விட்டார். பின்னர் மகிந்த ராஜபக்சே என்னை சிறிது சிறிதாக பழிவாங்கினார். என்னை, அரசின் இல்லத்திலிருந்து வெளியேற்றுவதற்காக எனக்கு எதிராக வழக்கும் தொடர்ந்து, என்னை மிகவும் கேவலப்படுத்தி னார்.

எனினும் அவரால் அந்த வீட்டை பறிக்க முடியாது போய்விட்டது. இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகாலமாக அவர் நடத்திய அரசியல் சீரழிவு களை பொருட்படுத்த முடியாமல் பல்வேறு தரப் பினர் என்னை மீண்டும் அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தினர். ஆனால் மீண்டும் ஒருமுறை, நான் அரசியலுக்கு வர விரும் பாததினால் இந்நாட்டை கட்டியெழுப்ப சிறந்த தலைமைத்துவம் ஒன்று வேண்டும் என தீர்மா னித்து அதற்கு ஏற்றாற் போல் தற்போதைய அதி பர் மைத்திரிபால சிறீ சேனவை நியமித்தேன். இவ்வாறு சந்திரிகா குமார துங்க கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/95758.html#ixzz3R9dsiOt4

தமிழ் ஓவியா said...

கோட்சே விவகாரம்பற்றி ஏன் வாயைத் திறக்கவில்லை?

மகாராட்டிர காங்கிரசு எம்.பி., மோடிக்குக் கடிதம்

மும்பை, பிப்.9 இந் துத்துவா அமைப்புகள் நாடு முழுவதும் நாதுராம் கோட்சேவை வீர நாய கனைப்போல் தற்போது சித்தரித்துக்கொண்டு இருக்கின்றனர், அகிம்சை யின் அடையாளமான காந்தியாரை கொலை செய்தவனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் குறித்து மோடி என்ன சொல்லப் போகிறார் என்று மகாராஷ்டிராவை சேர்ந்த மாநிலங்களவை உறுப் பினர் ஹுசைன் தால்வி கடிதம் ஒன்றை எழுதி யுள்ளார்.

மத்தியில் பாஜக ஆட்சிபீடத்தில் அமர்ந்த தில் இருந்து இந்துத்துவா அமைப்புகள் நாட்டின் அமைதிக்கு பங்கம் விளை விக்கும் வகையில் பொது இடங்களில் பேசி வரு கிறது; இது குறித்து உலக நாடுகளும் தற்போது கண்டனம் கூறத் தொடங்கி விட்டன.

இந்த நிலையில் மகாராஷ்டி ராவைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் ஹுசைன் தால்வி இவ் விவகாரம் குறித்து மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பாஜக கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சி பீடத்தில் அமர்ந் தது, அது ஆட்சி பீடத் தில் அமர்ந்தது முதலே இந்துத்துவ அமைப்புகள் சிறுபான்மையினருக்கு எதிராக பேசிவருகின் றனர்.

பாலத்திற்கு கோட்சேயின் பெயரா?

இந்துத்துவ அமைப்பு களின் தாய் அமைப்பான இந்து மகாசபா மிகவும் பாதகமான ஒரு செயலை கையிலெடுத்து அது குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு கோட்சே வின் பிறந்த நாளை மிக வும் சிறப்பாக கொண் டாட அனைவரையும் பொது இடத்திற்கு அழைக்கிறது, சிலைகள் அமைக்க முடிவு செய் கிறது. சமீபத்தில் ராஜஸ் தான் மாநிலத்தில் புதி தாக கட்டப்பட்டுக் கொண்டு இருக்கும் ஒரு பாலத்திற்கு நாதுராம் கோட்சே பெயர் வைக்கப் பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலக நாடுகளால் அகிம்சையின் அடையாள மாக பார்க்கப்படும் காந் தியாரைக் கொன்ற ஒருவனுக்கு இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இன்று ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது? அதுவும் மத் தியில் ஆட்சிக் கட்டிலில் இருக்கும் பாஜகவிற்கு நட்புறவாக உள்ள ஒரு அமைப்பு திடீரென கோட்சேவை புனிதமாக்க முயற்சி செய்வது ஏன்? மகாராஷ்டிரா வில் கோட்சே திரைப்படம், புத்தகம், கோட்சே நாட கம் என பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. காந்தியிரைக் கொன்ற கொலைகார னுக்கு ஏன் திடீரென இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும் இந்தியாவின் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் மோடி(நீங்கள்) இந்துத்துவா அமைப்பு களின் செயலுக்கு எந்த ஒரு பதிலும் கூறாமல் அமைதிகாத்து வருகிறீர் கள்? இதன் தொடர்ச்சி யாக கோட்சேவிவகாரம் வந்துள்ளது. ஆகையால் இந்தச் செயலுக்குத் தங் களின் நிலை என்ன என் பதை உடனடியாக மக் களிடையே தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட் டுக் கொள்கிறேன் என தனது கடிதத்தில் குறிப் பிட்டிருந்தார்.

Read more: http://viduthalai.in/page1/95757.html#ixzz3R9e2NBpI

தமிழ் ஓவியா said...

அறிவோடு சிந்திக்க...


புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் என்று ஒன்று இல்லை; அது இருக்கவேண்டிய அவசியமுமில்லை என்று சொன்னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.
(விடுதலை, 23.1.1968)

Read more: http://viduthalai.in/page1/95740.html#ixzz3R9eHmKwc

தமிழ் ஓவியா said...

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில்
பாரதிதாசன் பாடல்களை நீக்குவதா?: கலைஞர் கண்டனம்


சென்னை, பிப்.7_ காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இக்கால இலக்கியம் என்ற தலைப்பில் இடம் பெற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதைத் தொகுப்புக்கு வாய்ப்பு இல்லை என்பதை திராவிட முன்னேற்றக் கழகமும் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது என தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட கேள்வி _ பதில் வடிவிலான அறிக்கை:
கேள்வி :- காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் பாரதிதாசன் பாடல்களை நீக்குவதா என்ற தலைப்பில் 5.-2-.2015 அன்று விடுதலை தலையங்கம் ஒன்று தீட்டியிருக்கிறதே? கலைஞர் :- நானும் அதைப் படித்தேன்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் தொலை தூரக் கல்விப் பாடத் திட்டத்தில் முதுகலைத் தமிழ் முதலாமாண்டு பாடத்தில் இக்கால இலக்கியம் எனும் பகுதியில் இடம் பெற்றுள்ள பாரதிதாசன் பாடல் வரிகளான தமிழியக்கம் கவிதைத் தொகுப்பு பத்தாண்டுகளுக்கு மேலாக இடம் பெற்றிருந்ததை நீக்க வேண்டுமென்று வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பதை அறிந்த திராவிடர் கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம், பாரதிதாசன் தமிழ்ப் பேரவை, பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி, பகுத்தறிவாளர் கழகம் போன்ற அமைப்புகளின் சார்பில் அந்தப் பல்கலைக் கழகத் துணை வேந்தரிடம் அதற்கு எதிராக மனு அளித்திருப்பதாகவும், காரைக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத்தின் போராட்டத் திற்கு தங்களின் ஆதரவு உண்டு என்று தெரிவித் திருப்பதாகவும், பல்கலைக் கழகம் பாரதிதாசனின் பாடல்களை நீக்க நடவடிக்கை எடுத்தால் போராட்டம் நடைபெறு மென்றும் அந்தத் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. இக்கால இலக்கியம் என்ற தலைப்பில் இடம்பெற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதைத் தொகுப்புக்கு வாய்ப்பு இல்லை என்பதை திராவிட முன்னேற்றக் கழகமும் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது என்பதுதான் நமது முடிவு. பேருந்துக் கட்டணத்தை குறைக்க வேண்டும்

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியபோது, அதைக் காரணம் காட்டி பேருந்துக் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. தற்போது பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு படிப்படியாகக் குறைத்து வருகிறது. ஆனால், அதிமுக அரசு பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க முன் வரவில்லை. டீசல் விலை குறைவு காரணமாக ஒடிசா மாநில அரசு பேருந்துக் கட்டணத்தைக் குறைத்து அறிவித்துள்ளது. லாரிகளின் வாடகைக் கட்டணத்தை, லாரி உரிமையாளர்கள் ஒரு டன்னுக்கு ரூ.300 வரை குறைத்துள்ளனர்.

எனவே, தமிழக அரசும் பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். அம்பேத்கர் சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என்று வலியுறுத்தி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.

அடிப்படை வசதிகள் கோரி உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய, ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கதாகும் என்று கலைஞர் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/95773.html#ixzz3R9eXBwBh

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

மனிதன் பகுத்தறிவுவாதி; வளர்ச்சிக்கு உரியவன். அவன், வாழ்க்கையைச் சுமையாக, அமைத்துக் கொள்ளக் கூடாது. மனிதச் சுதந்திரத்திற்கும் கவலையற்று வாழ்வதற்கும் ஏற்ற முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும்... எனவே, மனித வாழ்வு பெண்டாட்டி கட்டிக் கொண்டு குட்டி போட்டுக் கொண்டு,

காப்பாற்ற மட்டும் என்று எண்ணாமல், மனிதச் சமுதாய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பாடுபடுவதுதான் என்பதை உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும்.

நம்மைப் பற்றி நாமேதான் கவலை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். நம் கையூன்றி நாமேதான் கரணம் போடவேண்டும். நமக்காக வாதாடுகிறவர்களோ நமக்கு உதவி செய்கிறவர்களோ யாரும் இல்லை.

நம்முடைய வேலை மிகக் கடினமானது. அதற்கு யாருடைய உதவியும் ஆதரவும் நமக்குக் கிடையாது. ஆனால் நாம் கடைசிவரை போராடித்தான் தீர வேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/95756.html#ixzz3R9fGtUHm

தமிழ் ஓவியா said...

காதல் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதத்தை கட்டாயமாக்க முடியாது
மதுரை உயர்நீதிமன்றம் கருத்து

மதுரை, பிப். 7_ காதல் திருமணத்தின்போது பெற்றோர் சம்மதத்தை கட்டாயமாக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், வாழ்க்கை துணையை தேடிக் கொள்ள உரிமை உண்டு என கூறி யுள்ளது.

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர்நீதி மன்றம் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கவுரவ கொலைகள், காத லால் தற்கொலை, கடத் தல் போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன. இவற்றை தடுக்க அரசு தவறிவிட் டது. காதல் என்ற பெய ரில் சிலர் வீட்டை விட்டு வெளியேறி, பிற ஜாதி யினரை திருமணம் செய்கின் றனர்.

திருமணம் முடிந்த சில மாதங்களில் வரதட் சணை கேட்டு கொடு மைப்படுத்தும் நிலையும் உள்ளது. இதனால் பெண் கள் பெருமளவு பாதிக்கப் படுகின்றனர். வன்முறை கூட ஏற்படுகிறது. காதல் திருமணம் செய்வோருக்கு பெற்றோரின் ஆதரவு கிடைப்பதில்லை.

தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட கவுரவ கொலை கள் நடந்துள்ள நிலையில், அதை தடுக்க அரசு உறு தியான நடவடிக்கை எடுக்க வில்லை. இவற்றை தடுக் கும் விதமாக ஒவ்வொரு கலப்பு திருமணத்தையும் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் பதிவு செய்யக் கூடாது எனவும், பெற்றோர் உடன் வருவதை கட்டா யப்படுத்த வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசா ரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், எஸ்.தமிழ் வாணன் ஆகியோர், அர சியலமைப்பு சட்டப்படி ஒருவருக்கு, அவரது வாழ்க் கைத் துணையை தேடிக் கொள்ள உரிமை உண்டு. இதில் நீதிமன்றம் தலை யிட முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என உத்தரவிட்டனர்.

Read more: http://viduthalai.in/page1/95793.html#ixzz3R9fcWiwq

தமிழ் ஓவியா said...

யார் அந்த விஷமிகள்?

தேர்தல் நேரமாக இருந்தாலும், தலைவர்களின் சிலைகளை மூடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் சிறீரங்கத்தில் தந்தை பெரியார் சிலையை மட்டும் மூடிய அதிகாரிகள் யார்?

திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு.சேகர் உயர்நீதிமன்ற ஆணையைக் காட்டி எடுத்துச் சொன்னபின், தந்தை பெரியார் சிலை மீது மூடியிருந்த துணி அகற்றப்பட்டது.

உயர்நீதிமன்ற ஆணைக்கு விரோதமாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?

Read more: http://viduthalai.in/page1/95795.html#ixzz3R9foKQqW

தமிழ் ஓவியா said...

ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்க் காணப் படுகின்றதோ அவைகளையெல்லாம் மாற்றுவதுதான் உண்மையான சுயமரி யாதை இயக்கத்தின் நோக்கமாகுமே தவிர, அரசனுக்குப் பதிலாகப் பார்ப்பானை ஏற்றி வைப்பதும், பார்ப்பானுக்குப் பதிலாகப் பணக்காரனைப் பட்டத்தில் வைப்பதும் ஒரு நாளும் சுயமரியாதையாகாது; இவையெல் லாம் சுயநல மரியாதையேயாகும்.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page1/95752.html#ixzz3R9fyqc2G

தமிழ் ஓவியா said...

கடவுள்பற்றி துணுக்குத் துக்கடா! சித்திரபுத்திரன்

சுப்பன்: சர்வ சக்தியுள்ள கடவுளை நம்பமாட்டேன் என்கிறானே இந்தப்பாவி, எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்க மாட்டேன் என்கிறானே.

ராமன்: அதுமாத்திரம் அதிசயமில்லப்பா, பசியா வரம் பெற்ற இந்த மகான் உணவு இல்லாமல் சாகக் கிடக்கிறார். ஒருவன் கூட ஒருகை கூழ் ஊத்த மாட்டேங்கிறானே.

சுப்பன்: பசியா வரம் பெற்றவனுக்கு கஞ்சி என்னத்துக்கு? பட்டினி கஷ்டம் எப்படி வந்தது?

ராமன்: இதுதான் வேடிக்கையா? நீ சொல்வது மட்டும் வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: என்ன நான் சொல்றதிலே வேடிக்கை?

ராமன்: சர்வ சக்தி உள்ள கடவுள் என்கிறாய். அந்த சர்வ சக்திக்கு இந்த ஒரு சாதாரண மனுஷனை நம்பும்படி செய்ய முடியவில்லை என்றால் இது முட்டாள்தனமான சிரிப்புக்கு இடமான காரியமாக இல்லையா?

அதாவது பசியாவரம் பெற்ற மகான் பசியால் வாடுவது என்பதில் எவ்வளவு பித்தலாட்டம் இருக்கிறதோ அதேபோல் சர்வ சக்தி உள்ள கடவுள் என்பதை ஒரு சாதாரண மனிதன் நம்பவில்லை என்பதும் அவனை நம்பச் செய்ய அந்தக் கடவுளால் முடியவில்லை என்பதுமாகும்.

- விடுதலை (22.2.1972)

தமிழ் ஓவியா said...

சாக்ரட்டீஸின் பொன்மொழிகள்

தங்கத்தைக் கண்டுபிடிக்கச் சுரங்கத்திற்குள் நுழைகிறவன் மரியாதையை பார்த்தால் முடியுமா? தங்கத்தை விட மேலான பொருளை அதாவது நீதியைத் தேடி கண்டுபிடிக்க நாங்கள் புறப்பட்டிருக்கிறோம். இதில் மரியாதையை பார்த்துக் கொண்டு முயற்சியைக் கைவிட்டு விடு வோமா?
***************
நீதிக்கு நான் மிக உயர்ந்த ஸ்தானம் கொடுக்கிறேன். அதாவது எந்த விஷ யத்தை அந்த விஷயத்திற்காகவும் அதன் விளைவு களுக்காகவும் நேசிக்கிறோமோ அந்த மாதிரியான விஷயங்களில் ஒன்றாக நீதியை நான் கருதுகிறேன்.
***************
ஒரு மனிதனுக்கு எந்தத் தொழிலைச் செய்ய இயலுகையிலேயே ஒரு திறமை இருக்கிறதோ அந்தத் தொழிலை மட்டும் அவன் செய்து கொண்டு போனால் நல்லது.
***************
விபரீதமான குற்றங்களைச் செய்கிற கடவுளர்களை சிருஷ்டித்து அந்தக் கடவுள்களின் கதைகளைச் சிறுவர் களுக்கு சொல்லிக் கொடுப்போமானால் அவர்கள் என்ன நினைத்துக் கொண்டு விடுகிறார்கள் தெரியுமா? கடவுளர்களே பல குற்றங்களை செய்திருக்கிறபோது நாமும்தாம் செய்தாலென்ன! என்று கருதி அதே மாதிரி செய்யத் தொடங்கி விடுகிறார்கள்.

இந்த மாதிரியான கதைகளை நாம் சொல்லிக் கொடுக்கக் கூடாது. தவிர, ஒரு தெய்வத்திற்கு விரோதமான மற்றொரு தெய்வம் சதி செய்வதாகவோ, யுத்தம் செய்வதாகவோ உள்ள கதைகளையும் நாம் சொல்லலாகாது. ராட்சதர்களோ அல்லது தேவர்களோ ஒருவருக் கொருவர் போராட்டங்கள் நடத்தியதாகவும் நாம் உபதேசிக்கலாகாது.

மனிதர்கள் ஒருவரை யொரு வர் நேசிக்க வேண்டுமென்றும், ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், இதை போன்ற நீதிகளைப் புகட்டுகிற கதைகளையே சொல்ல வேண்டும்.
***************
அதிகமான செல்வமோ அதிகமான வறுமையோ தங்கள் ராஜ்யத்திற்குள் வரவொட்டாதபடி அரசர்கள் பாதுகாக்க வேண்டும். அதிக செல்வத்தினால் ஆடம்பரத் தன்மையில் சோம்பேறித்தனமும் உண்டாகும். அதிக வறுமையினால் புரட்சியும், இழிதகைமையும், துரோகமும் ஏற்படும்.

Read more: http://viduthalai.in/page1/95691.html#ixzz3R9hd1o7p

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கிரகங்கள்

நமது உடலை சரியான முறையில் இயற்கை யாகவே பராமரித்து வரும் எச்சில், கல்லீரல், இரைப்பை நீர், குடல் நீர், கண் நீர் சுரப்பி, வியர்வைச் சுரப்பி போன்ற நாள முள்ள சுரப்பி நீர் களை ராகு - கேதுவை தவிர ஏனைய ஏழு கிரகங் களும் கட்டுப்படுத்துகின் றன என்று மருத்துவ ஜோதிடர்கள் தங்கள் ஆய்வில் கண்டுபிடித் துள்ளனர்.

- தினகரன் ஜோதிட மலர் 4.2.2015

ராகு, கேது என்ற கிரகங்கள் இல்லை என் பது வானியல் அறிவியல் சொல்லும் ஆணித்தர மான கருத்து.

மருத்துவ ஜோதிடர்களாமே - அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? மருத்துவமும் ஜோதிட மும் எதிர்முனைகள் அல்லவா!

Read more: http://viduthalai.in/page1/95626.html#ixzz3R9iCVrGz

தமிழ் ஓவியா said...

மதச்சார்பின்மை என்றால் அரசுக்கு மதம் கிடையாது என்பதே பொருள்

குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் சரியான கருத்து

மும்பை, பிப்.5- குடியரசு நாள் விழாவையொட்டி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அரசமைப்பு சட்ட முகப்புரை விளம்பரத்தில் மதச்சார்பின்மை, சோசலிஸ்ட் ஆகிய இரண்டு வார்த்தைகளும் இடம் பெற வில்லை. 42ஆவது திருத்தம் செய்வதற்கு முன் இருந்த முகப்புரையை வெளியிட்டதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் தெற்கு மும்பையில் உள்ள வில்சன் கல்லூரியில், மாணவர்களிடம் கலந்துரையாடிய குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறியதாவது:_-

மதச்சார்பின்மை என்றால், நமக்கு என்ன புரிகிறது? நமது சமூகத்தில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கிறோம். அதனால்தான் நமது நாட்டை மதச்சார்பற்ற நாடு என்கிறோம். மதச்சார்பின்மை என்பது ஒரு நாட்டுக்கு சொந்தமாக மதம் இல்லை என்பதை உணர்த்துகிறது. மத அடிப்படையில் ஒரு நாடு மக்களை பிரிக்கக் கூடாது. வளர்ச்சித் திட்டம், கல்வி உதவித் தொகை ஆகியவற்றை மத அடிப்படையிலோ அல்லது பாலின அடிப்படையிலோ வழங்காமல் பொதுவாக வழங்க வேண்டும். பாலின பாகுபாடு என்ற நோயால் நமது சமூகம் பல இன்னல்களை அனுபவித்துள்ளது. பாலின பாகுபாடு சட்டத் தால் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இது சரியான பலனை அளிக்கவில்லை. எனவே இந்த சவாலை சமூகரீதியாக சந்திக்க வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை பின்பற் றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அதற்கு நாம் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். சரியா, தவறா என்பதைப் பற்றிக் கவலைப்படால் நாட்டின் குடிமக்கள் பொது வாழ்வில் பங்கு கொள்ள வேண்டும். மாணவர்களும் குடிமக்கள்கள் தான். அதனால் பொது வாழ்வில் பங்கேற்பது உங்களின் கடமை. குடிமக்களாகிய நீங்கள் உங்கள் கடமையைச் செய்ய வேண்டும் என்றார்.

Read more: http://viduthalai.in/page1/95621.html#ixzz3R9iK32Pw

தமிழ் ஓவியா said...

அதிர்ஷ்டத்தை நம்பும் மோடி
நாட்டிற்கே பெரும் அவலம்

நிதிஷ்குமார் சாட்டை

பாட்னா, பிப்.5_ டில்லி தேர்தல் கூட்டத் தில் பேசிய மோடி, நான் அதிர்ஷ்டக்காரன், நான் எந்த நாட்டிற்கு சென்றா லும் அந்த நாட்டு அதி பர்கள் என்னுடன் பேசு வதை பெருமையாக நினைக்கிறார்கள் என்று கூறினார். இது குறித்து பேசிய நிதீஷ்குமார் அதிர்ஷ் டத்தை நம்பி ஆட்சி நடத்தும் ஒரு நபரை நாம் தேர்ந்தெடுத்திருக்கி றோம். இது நாட்டிற்கே அவலம் என்று கூறினார். பிகார் மாநில முன் னாள் முதல்வர் நிதீஷ் குமார் பட்னாவில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசும் போது கூறியதாவது:

மத்தியில் பாஜக ஆட் சிக்கு வந்தது முதல், மத வாதம் தலைதூக்கிவிட் டது. மதவாதப் பேச்சுக் கள் ஆளும் கட்சி தலை வர்களும் சரி அவர்களை வழிநடத்தும் இந்து அமைப்புகளின் தலைவர் களும் தொடர்ந்து பேசிக் கொண்டு வருகின்றனர். மேடை முழுக்க வளர்