Search This Blog

14.1.15

பொங்கலை பார்ப்பனர்கள் வெறுப்பதற்கு காரணம்?பொங்கட்டும் இனமானப் பொங்கல்!

பொங்கட்டும் இனமானப் பொங்கல்!

நாளை தை முதல் நாள் - திராவிடர்களின், தமிழர்களின் புத்தாண்டுத் திருநாள் - இந்நாளைப் பொங்கல் விழாவாக உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடுவார்கள். குழந்தைகள் முதல் முதியோர் வரை பொங்கலோ பொங்கல்! என்று மகிழ்ச்சி ஆரவாரத்தோடு ஆராதிப்பார்கள்.

உலகெங்கும் அறுவடைத் திருவிழா (Harvest Festival) கொண்டாடுவதுபோல, நம் இனத்தின் அறுவடைத் திருவிழா தைப் பொங்கலே! மறுநாள் விழாவுக்கு உற்ற துணையாக இருக்கும் கால்நடைகளைப் போற்றும் திருவிழா, மூன்றாம் நாள் உற்றார், உறவினர்களை, நண்பர்களைக் காணும் - சந்திக்கும் உரையாடும் காணும் பொங்கல் என்று எவ்வளவுப் பொருத்தமாக வாழ்வியல் சிந்தனையோடு இந்த விழாக்கள் உருவாக்கப் பட்டுள்ளன!


பல வகையிலும் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு நிகழ்ந்துள்ள நம் சமூக அமைப்பில், நம் இனத்துக்குரிய இந்த விழாவில்கூட  ஆரிய ஊடுருவலை புராண ஆபாசத் தினைத் திணித்துள்ளனர் என்றால் இந்தக் கொடுமையை என்னென்று சொல்வது! பொங்கலை - மகர சங்கராந்தி என்று சமஸ்கிருத மயமாக்கி, அதற்குள்ளும் புராணப் புழுதியைத் திணித்துள்ளனர்.


சூரியன் தனு ராசியில் சஞ்சரிக்குங் காலம். இது தேவர்களுக்கு விடியற் காலம்.  மகாசங்கிராமே சக்தி எனும் சக்தி தக்ஷிணாயனம் ஆறு மாதத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்தபடி யினால், அத்துன்பம் ஈஸ்வரானுக் கிரகத்தால் நீங்கினதால், தை மாதம் முதல் தேதி ஜனங்கள் அக்காலத்து விளைந்த புதுப் பொருள்களால் சூரியனை ஆராதித்தனர். அச்சக்தி பசுக்களைப் புலியுருவாய் அதஞ் செய் திருந்தபடியால் அப்பசுக்களைக் கொண்டு அப்புலியுருக் கொண்ட சக்தியை ஒட்டின நாள். இதனை மாட்டுப் பொங்கல் என்பர்.


இவ்வாறு அன்றி, இந்திரன் மழை வருஷிப்பவன் ஆதலால், அவன் செய்த நன்மையின் பொருட்டு தை மாதம் முதலில் அறுத்த, முதற் பயிரை மழைக்கடவுளாகிய இந்திரனுக்கு ஆராதித்து வந்தனர் எனவும், அது கிருஷ்ணமூர்த்தி அவதரித்தபின், அவர் அதை நாராயணனுக்குப் படைக்கக் கட்டளை இட்டனர் எனவும், அதனால் இந்திரன் கோபித்துப் பெருமழை பெய்விக்க, குடிகள் நிலைகுலைந்து மாடுகள் கன்றுகளை இழந்து தடுமாற, கண்ணன் கோவர்த்தனம் எடுத்துக் குடி மக்களைக் காத்தான் எனவும், அதனால் இந்திரன் வெட்கி வேண்ட, சங்கிராந்திக்கு முன்னால் அவன் பெயரால் பண்டிகை அமைந்ததாம். அது போகிப் பண்டிகை எனவும், மறுநாள் சங்கராந்திப் பண்டிகை எனவும், மறுநாள் மழையால் வருந்திய மாடு கன்றுகளைத் தளை அவிழ்த்து விட்டுக் களித்தமையால் மாட்டுப் பொங்கல் எனவும், மறுநாள் மழையால் உண்டாகிய சுகாசுகங்களை ஒருவரையொருவர் விசாரித்ததால் காண் பொங்கல் எனவும் கூறுவர்


இவ்வாறு தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவை ஆரிய மயமாக்கினர் - சமஸ்கிருதமயமாக்கினர். ஆரியம் விளைவித்த கேடு ஒன்றா இரண்டா? அடுக்கிக் கொண்டே போகலாம்.


அறுவடைத் திருவிழாவான பொங்கலை பார்ப்பனர்கள் வெறுப்பதற்குச் சாத்திர ரீதியான காரணமும் உண்டு.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் (குறள் 1033)


என்றார் திருக்குறள் தந்த திருவள்ளுவர்.

உழுதுண்டு வாழ்கின்றவர்களே உலகில் உரிமையுடன் வாழ்கின்றவர்கள் ஆவார்கள்; ஏனையோர் பிறரைத் தொழுது அதனால் உண்டு பிறர் ஏவல் கேட்டு வாழ்கின்றவர் என்பது இதன் பொருளாகும். இந்தக் கருத்தைப் பார்ப்பனர்கள் கண்டிப்பாக ஏற்க மாட்டார்கள். காரணம் இத்தொழிலில் உழைப்பு அடிப்படையாக இருக்கிறதே! இத் தொழிலை ஏற்றுக் கொண்டால் வயலில் இறங்கி உழைக்க வேண்டுமே!


எனவே, சாத்திர ரீதியாக விவசாயத்தைப் பாவத் தொழில் என்று ஆக்கி விட்டால் (மனுதர்மம் அத்தியாயம் 10 சுலோகம் 84)  மிகப் பெரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ததாகி விடாதா? என்ற சூழ்ச்சியால்தான் அப்படி ஒன்றை எழுதி வைத்துக் கொண்டு விட்டார்கள்.


தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும்தான் நம் இன மக்களிடம் ஆரியக் கறைகளையும் சூழ்ச்சிகளையும் எடுத்துக் கூறி புத்தெழுச்சியை ஏற்படுத்தியது.


நாடெங்கும் பொங்கல் விழா கொண்டாட்டத்தை அரங் கேற்றியது  - தமிழர்களுக்கென்றுள்ள அடையாளத்தை மீட்டெடுக்கும் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.


தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்று திராவிடர் கழகம் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே வந்தது; கலைஞர் அவர்கள் ஆட்சியில் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்குச் சட்ட வடிவம் கொடுத்தார். ஆனால், அதனைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் ஆரியப் பகை மீண்டும் பழைய புராண ஆபாசக் குட்டையில் கவிழ்த்து விட்டது.


நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும் கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த 60 பிள்ளைகள்தான் தமிழர் ஆண்டுகள் என்று புராணம் எழுதி வைத்து விட்டனர்.


இதில் ஆபாசம் பொங்கி வழிவது ஒருபுறம் இருக்கட்டும்  இந்த 60 ஆண்டுகளின் பெயர்களில் ஒன்றுகூட தமிழ் இல்லை! இது எவ்வளவுப் பெரிய மோசடி, ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு.


தமிழர் விழாவைக் கொண்டாடும் நேரத்தில் இந்த ஆரியப் படையெடுப்பை ஒவ்வொரு தமிழனும்  எண்ணிப் பார்த்து, தன்மான உணர்வு, இனமான உணர்வு, மொழி உணர்வு கொள்ள வேண்டும். ஆரியப் பண்பாட்டுப் படை யெடுப்பை முறியடித்தே தீருவோம் என்ற சூளூரையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் அடையாளமாக தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் சூட்ட வேண்டும்; தப்பித் தவறிக்கூட அதில் ஆரிய வாடை, பார்ப்பன சாயல் இருக்கவே கூடாது. எந்தப் பார்ப் பானாவது தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுகிறானா? என்பதைச் சிந்தித்தால் இந்த உணர்ச்சி எவ்வளவு அவசியம் என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.
தமிழன் நம்பும் கடவுள்கள், நம்பும் சாத்திரங்கள் கொண்டாடும் பண்டிகைகள் அனைத்துமே ஆபாசம் என்பதையும் தாண்டி, தமிழர்களை நாலாஞ் ஜாதியாக்கி சூத்திரர்கள் என்று கட்டிப் போடும் நரித்தந்திரங்கள் என்பதை உணர வேண்டும்.


இதற்குமேலுங் காரண காரியங்களைச் சொல்ல முடியாது என்கிற அளவுக்கு நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் மலையளவு சொல்லிச் சென்று இருக்கிறார்கள். தமிழா தன்மானம் கொள்!


தமிழா தமிழனாக இரு!!
வெல்க பெரியாரியல்!
பொங்கலோ பொங்கல்!!

                            -------------------------------- "விடுதலை" தலையங்கம்  14-01-2015

4 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கடவுள்

கடவுள்கள் சிவன், விஷ்ணு, பிர்மா, விநாய கன், சுப்பிரமணியம் முதலியோர்பற்றிக் கதை கதையாக எழுதி வைத் துள்ளார்களே, அவை நடமாட்டம் பற்றி எல் லாம் எழுதித் தள்ளி யுள்ளார்களே- இப்பொ ழுதெல்லாம் இந்தக் கடவுள்களின் நடமாட் டங்களோ, செயல்களோ ஒன்றையும் காணோமே - ஏன்? உயிரோடு இருக் கிறார்களா? செத்துப் போய் விட்டார்களா?

Read more: http://viduthalai.in/e-paper/94434.html#ixzz3OnUKTz57

தமிழ் ஓவியா said...

அண்ணா பெயரில் உள்ள கட்சி ஆட்சி நடத்தும் லட்சணம் இதுதானா?


முருகன் கோயிலுக்கு அழைக்கிறார்

அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்

அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இப்படி அதிகார பூர்வமாக சுற்றறிக்கை விடுவது சட்டப் படி சரிதானா? மதச் சார்பற்ற அரசா? இந்து மதச் சார்பு அரசா?

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இந்து மதக் காரர்கள் மட்டும்தான் பணி யாற்றுகிறார்களா? ஒருக்கால் இந்து மதக்காரர்கள் மட்டும் தான் பணியாற்ற வேண்டும் என்று கருதுகிறார்களா?

இதனை எதிர்த்து நீதி மன்றம் சென்றால் மேலாண் இயக்குநரும், உடந்தையாக இருக்கும் அதிகாரிகளும் கூண்டில் ஏறிப் பதில் சொல்ல வேண்டாமா?

அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்ச ராக வந்ததும் அரசு அலு வலகங்களில் உள்ள கட வுளர் படங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட மதச் சார் பின்மையைக் காப்பாற்றினார்.

அண்ணா பெயரில் உள்ள கட்சி ஆட்சி நடத்தும் லட்சணம் இதுதானா?

அண்ணாவுக்கு நாமம் என்று முதல் அமைச்சர் உட்படச் சொல்லுவதன் அர்த்தம் இப்பொழுதுதான் புரிகிறது - அதாவது அண்ணாவின் கொள்கைக்கு நாமம்! புரிகிறது! புரிகிறது!!

அ.இ.அ.தி.மு.க. அரசில் பணியாற்றும் மற்ற மதக்காரர்களின் நிலை என்ன? வேறு மதத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தங்கள் மத சம்பந்தமான விழாவில் பங்கேற்க இப்படி சுற்றறிக்கை வெளியிட்டால் ஏற்றுக் கொள்வார்களா?

அரசுப் பணியாளர்கள் மத்தியில் வேண்டாத விகற்பத்தை அரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளே ஏற்படுத்தலாமா?

எல்லா வகையிலும் ஆட்சி சீர் கெட்டுப் போய் விட்டதோ!

Read more: http://viduthalai.in/e-paper/94437.html#ixzz3OnUZclvM

தமிழ் ஓவியா said...

கங்கையைப் புனிதப்படுத்தும் கனவான்கள் பார்வைக்கு...

எங்கு பார்த்தாலும் பிணங்கள் மிதக்கும் கோரக்காட்சி

பீதியில் உறையும் பொது மக்கள்

காசி, ஜன.14_ புனித கங்கை என்று போற்றப் படும் கங்கையில் இது வரை இல்லாத அளவுக்கு ஏராளமான எண்ணிக்கை யில் மனிதப் பிணங்கள் மிதப்பதால் மக்கள் பீதி யில் உறைந்து கிடக்கின்றனர்.

மோடி வெற்றிபெற்ற நாடாளுமன்றதொகுதியான வாரணாசி மற்றும் அதற்கு மேற்கே உள்ள உன்னாவ் போன்ற பகுதி களில் கடந்த இரண்டு மாதங்களாக 200க்கும் மேற்பட்ட பிணங்கள் மிதந்தன. அடையாளம் தெரியாத இந்தப் பிணங் களால் அந்தப்பகுதி மக்களிடம் அச்சம் மிகுந்து காணப்படுகிறது. சில பிணங்கள் நாய் மற் றும் காகங்கள் சிதைத்து விட்டதால் மிகவும் கோரமாக காட்சியளிக் கின்றன.

இதுகுறித்து உன்னாவ் மாஜிஸ்ட்ரேட் கூறியதாவது, எங்களுக்கு சில மீனவர்கள் மூலம் கங்கை நதியில் பிணங்கள் அதிக அளவு மிதந்து வருவதாக தகவல் வந்தது. பொதுவாக ஏழைகள் உடலை எரிக்க போதிய பொருளாதார வசதி யில்லாத காரணத்தால் ஆள் ஆரவாரமற்ற பகுதிகளில் கங்கைக் கரை யில் விட்டுவிடுவார்கள் இப்படி வாரத்திற்கு நான்கு, அய்ந்து பிணங்கள் மிதந்து வருவதுண்டு, ஆனால் திடீரென இவ் வளவுப் பிணங்கள் வருவது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம், என்றார்.

இது குறித்து வார ணாசி ஹனுமான் காட் பகுதி மீனவர்கள் கூறிய தாவது, கங்கையின் போக்கு அதிகம் இருக்கும் போது பிணங்கள் தானா கவே மிதந்து சென்று விடும், ஆனால் தற்போது நதியின் போக்கு மிகவும் மெதுவாக உள்ளது. இத்தகைய காரணத்தால் பிணங்கள் கரை ஒதுங்க ஆரம்பித்து விட்டன.

தற்போது மகர சங்ராந்தி விழா இன்றி லிருந்து துவங்கு கிறது. இந்துக்கள் இந்த நாளில் கங்கையில் குளிப்பதை புனிதமாக கருதுகின்றனர். ஆனால் அலகாபாத், வாரணாசி, உன்னாவ் கங்கைக் கரைகளில் தொடர்ந்து பிணங்கள் ஒதுங்கிக் கொண்டு இருக்கின்றன.

வாரணாசி சுற்றுப் புறப் பாதுகாப்பு ஆர்வலர் ராகேஷ் ஜஸ்வால் கூறியதாவது, கங்கைப் பாதுகாப்பு இயக்கம் என்று ஒன்றை மோடி தொடங்கி வைத்தார், அந்த இயக்கத்தின் தலைவராக ராமாஜி திரிபாடி உள்ளார். மோடி வரும் காலங்களில் மட்டும் கங்கைக் கரையில் மண்வெட்டி கடப்பாரை குப்பை அள்ளும் உபகர ணங்களைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விடு கிறார்கள். மத்திய அரசு கங்கை சுத்தத்திற்கு என்று 20,000 கோடிக்கு பல்வேறு திட் டங்களை வகுத்துள்ளது. உச்சநீதிமன்றமும் மத்திய அரசைக் கண்டித்து விட் டது, இவ்வளவு நடந்த பிறகும் அரசு கங்கையைச் சுத்தப்படுத்துவதில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. பிணங்களை இலவசமாக எரிக்க வாரணாசியில் மட்டும் 5 அமைப்புகள் உள்ளன. பெயருக்குத் தான் இலவசமே தவிர பிணம் எரிப்பவர்கள் முதல் விறகு வாங்கும் வரைக்கும், அய்ந்தாயிரம் வரை பிடுங்கிவிடுகிறார்கள். ரூ.100_க்கே திண்டாடும் ஏழைகள் ஆயிரக்கணக் கில் எங்கே கொடுப் பார்கள்? என்று கூறி யுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/94435.html#ixzz3OnV0uZgp

தமிழ் ஓவியா said...

அறிவு பெற முடியாமல்....


தெரியாததை, இல்லாததை நம்பவேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடுகிறான்.
(விடுதலை, 2.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/94422.html#ixzz3OnVFYdmn