கோயில்களில்
தரிசனம் செய்வதற்காகக் கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து இந்து
அமைப்புகள் முதற்கட்டப் போராட்டம் ஒன்றைத் தமிழ்நாட்டில் பல இடங்களில்
நடத்தியுள்ளனர். (21.7.2013)
இறைவனுக்கு முன் அனைவரும் சமம். இறைவனைத்
தரிசிக்கக் கட்டணம் நிர்ணயித்தால் காசு உள்ளவனுக்கு மட்டுமே கடவுளின்
தரிசனம் என்ற நிலை வந்துவிடும். இது இந்து மதத்தின் அடிப்படைத்
தத்துவத்தையே தகர்த்து விடும். இதனால் மேலும் ஏற்றத் தாழ்வுகள் உருவாகும்;
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்துக்குப்பின் அதிக அளவான வருமானம்
கோவில்களில் இருந்தே வருகிறது என்று கூறியுள்ளனர்.
இந்து அமைப்புகள் ஒரே ஒருமுறை நல்ல புத்தி வந்து இப்படி சொல்லியிருக்கிறார்கள், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
அவர்களுக்கு ஒரு யோசனை; நாடு தழுவிய
அளவில் பல இடங்களில் போராட்டம் நடத்துவதைவிட, எல்லா பக்தர்களையும் இலட்சக்
கணக்கில் அணி திரட்டி, திருப்பதி கோயிலை மய்யப்படுத்தி, கண்டனப் பேரணி
ஒன்றை நடத்தி, அதனைத் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தால்,
அது இந்தியா முழுவதும் நல்ல அளவு வெளிச்சத்துக்கு வந்து விளம்பரமும்
ஆகியிருக்குமே!
இப்பொழுதுகூடக் காலந்தாழ்ந்து போய்விட வில்லை; திட்டமிட்டு அப்படியொரு போராட்டத்தை நடத்தலாம்.
ஆனால் உண்மை என்ன? அர்த்தசாஸ்திரம் எழுதிய கவுடில்யர் கோயில் கட்டச் சொன்னதே மக்களிடம் அரசின் பணம் பறிக்கச் செய்வதற்கே!
அதற்காக ஒவ்வொரு கோயில் பற்றியும் அற்புதங்களை பரப்பி, அதன் மூலம் மக்களை ஈர்த்துப் பணம் வசூல் செய்யலாம் என்று கூறியிருக்கிறானே!
திருப்பதி கோயிலை மய்யப்படுத்தி
ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லுவதற்குக் காரணம் - அங்குதான் பக்தர்கள்,
நாள்கணக்கில் தரும தரிசனத் துக்காகப் காத்துக் கிடக்கிறார்களாம்.
அதிக பணம் கொடுப்பவர்களுக்கோ சில நிமிடங்களிலேயே சிறப்புத் தரிசனங்கள் கிடைத்து விடுகின்றன.
இன்னும் சொல்லப் போனால் பெரும் பண
முதலாளிகள் தங்கி இருக்கும் இடத்திற்கே சென்று கோயில் பிரசாதங்களைக்
கொடுத்து கொள்ளைப் பணத்தைத் திருப்பதி அர்ச்சகர் பார்ப்பனர்கள் கறந்து
விடுவது பற்றி பல நேரங்களில் செய்திகள் வந்ததுண்டே!
ஆங்கிலப் புத்தாண்டன்று இந்துக் கோயில்
களைத் திறக்காதீர்கள் - அது இந்து ஆகம விதிகளுக்கு முரணானது என்று சங்கராச்
சாரியார்கள் கதறுகிறார்கள், இந்து முன் னணிகள் கரடியாய்க் கத்துகின்றன.
அந்தக் கதறல்களை, கத்தல்களை எந்த இந்துக்
கோயில் பின்பற்றுகின்றது? பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகர் ஆகக் கூடாது.
அப்படி வருவது ஆகம விதிகளுக்கு விரோதம் என்று உச்சநீதிமன்றத்தின் கதவுகளை
தட்டுகிற இந்த அர்ச்சகர் பார்ப்பனர்கள், ஆகம விதிகளுக்கு முரணாக ஆங்கிலப்
புத்தாண்டுப் பிறப்பு என்று சொல்லி இரவு 12 மணிக்கு மேலும் நடையைத் திறந்து
வைத்துப் பக்தர்களிடம் வசூல் பண்ணிக் கொண்டு இருக்கிறார்களே! இது
ஆகமத்துக்கு எதிரானது அல்லவா!
கடந்த ஆங்கிலப் புத்தாண்டன்று
திருப்பதியில் 75 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். ஆயிரம் ரூபாய் வி.அய்.பி.
டிக்கெட் பெற்றவர்கள் தரிசனத் துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
அதைப் போலவே பழனி முருகன் கோயிலிலும் ஜனவரி முதல் தேதி ஆங்கிலப் புத்தாண்டுக்காகக் கோயிலைத் திறந்து வைத்தனரே! அன்று மட்டும் வசூல் ரூ.85 லட்சமாம்.
பக்தர்கள் கோயில் உண்டியலில் போட்ட
பணத்தையே காஞ்சிபுரம் தேவநாதன் என்ற அர்ச்சகப் பார்ப்பான் செக்ஸ்
லீலைக்காகத் திருடினான் என்று ஏடுகளில் செய்தி வெளி வரவில்லையா?
----------------------------------(மாலைமலர் 29.11.2009 பக்கம் 4).
காசேதான் கடவுளப்பா என்ற பழமொழி சும்மாவா வந்தது?
---------------------------"விடுதலை” 23-7-2013
57 comments:
தமிழ்நாட்டு சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டது!
கூலிப்படைகள் அட்டகாசம் தாங்க முடியவில்லை! அவற்றின் பின்னணிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்!
முதல் அமைச்சர் அவசர அவசியமாகத் தலையிட்டு நடவடிக்கை தேவை!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழங்கு சீர் கெட்டுப் போய் விட்டது; கூலிப்படைகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. தமிழ்நாடு முதல் அமைச்சர் அவசர அவசியமாகத் தலையிட்டுச் சீர் செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் எல்லாம் விலையேற்றத்தோடு நாளும் இருக்கையில், மிகவும் மலிவாகக் கிடைப்பது கூலிப்படைகள்தான்! கொலை செய்வதற்காக ஆங்காங்கே - (கார்ப்பரேட் கம்பெனிகள்போல்) இயங்கி வருவதாகவும், அவர்களை அழைத்துப் பேசி இப்படிப்பட்ட கொடுமைக்கள் அரங்கேற்ற திட்டமிடப்படு கின்றன என்றும் சாதாரணமான மக்களி டையேகூட பேச்சுக்கள் அடிபடுகின்றன!
தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு?
கொலைகளும், கொள்ளைச் சம்பவங்களும் அன்றாட அவலங்களாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு சீர்கேடாக உள்ளது.
இதை மறைப்பதோ, பூசிமெழுகுவதோ கூடாது; சில குற்றங்களைப் பதிவு செய்வதுகூட தவிர்க்கப்படுவதனால், குற்ற எண்ணிக் கையைப் புள்ளி விவர ரீதியாக குறைத்துக்கூட தமிழக அரசு கூறலாம்; ஆனால் பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களும் அறிய மாட்டார்களா?
ஏடுகளை எடுத்தால், தொலைக்காட்சி களைத் திறந்தால்., அன்றாடம் கொலை, கொள்ளைகள், திருட்டுகள் இவற்றைத் தாண்டி சாலை விபத்துக்கள் இவைதான் செய்தி களாகப் படமெடுத்தாடுகின்றன!
சேலம் - பிஜேபி பிரமுகர் படுகொலை கண்டிக்கத்தக்கது!
சேலத்தில் ஆடிட்டர் இரமேஷ் என்ற பா.ஜ.க.வின் தமிழகப் பொதுச் செயலாளர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார் என்பது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகும்.
இதற்கு மூல காரணம் யார் எது என்று கண்டறியப்படுவது, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதைவிட முக்கியமாகும்.
இதற்கு சில வாரங்கள் முன் வேலூரில் இதே கட்சியின் ஒருவரும் வெட்டிக் கொல்லப் பட்டார் என்ற வேதனைக்குரிய செய்தியும் வெளிவந்தது!
நம்மைப் பொறுத்தவரை, பொது வாழ்வில் உள்ள எவராயினும் கருத்துப் போர் நிகழ்த்தலாமே தவிர, வன்முறை வெறியாட்டங்களிலோ கொலை வெறித் தாக்குதலிலோ ஈடுபடுவது கூடாது! நியாயப்படுத்தவே முடியாது!
காந்தியாரைச் சுட்டுக் கொன்றபோதே தந்தை பெரியார் என்ன சொன்னார்?
அண்ணல் காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே நிகழ்வுபற்றிக்கூட, தந்தை பெரியார் அவர்கள் தனி நபர் செயல் அல்ல அது என்று கூறி, அதன் பின்னே இருக்கிற வெறிக்குரிய காரணம் கண்டறிந்து அதனைப் போக்க, அல்லது தடுக்க வேண்டும் என்று தனது முதிர்ந்த அனுபவத்தால் அறிவுரை வழங் கினார்கள்.
பெரியார் தந்த புத்தியின் அடிப்படையோடு நாமும் கூறுகிறோம்; கூலிப்படைகளால் கொலைகள் நடைபெறுகின்றன என்னும்போது அவற்றிற்கு மூலவர்கள் யார் என்பது அல்லவா முக்கியம்?
கூலிப்படைகள்! கூலிப்படைகள்!!
தமிழ்நாட்டில் பல கொலைகளுக்கு ரியல் எஸ்டேட்டு தகராறுகள், தொழில் போட்டி பொறாமை, தவறான உறவுகள் தங்களைக் காக்க கூலிப்படைகளை ஏவுகணைகளாக்கிக் கொள்ளும் நிலை மலிந்து காணப்படுகிறது!
எல்லாம் ஒரே வகையில் (அதாவது வெட்டிச் சாய்ப்பதுதான் பெரும்பான்மையாக உள்ளது) என்கிறபோது, வெறும் அரிவாள்கள் உற்பத் திக்குத் தடை விதித்தால் மட்டும் போதுமா?
கூலிப்படைகளை அடையாளம் காணுவ தோடு களையெடுத்து, தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக மாற்றவும் முயற்சிக்க வேண்டாமா தமிழக அரசு?
காவல்துறை பொறுப்பேற்க வேண்டும்
அரசியல் தலைவர்களுக்குப் போதிய பாது காப்பு வழங்குவது முக்கியம்தான் என்றாலும், அதைவிட முக்கியம் கூலிப்படைகளையும், அதற் காக முக்கிய தலைமைகள் பற்றிய தகவல் களைத் திரட்டி, கூர்மையான நடவடிக்கை களும் உடனே செய்ய தமிழக அரசின் உள்துறை, குறிப்பாக காவல்துறை முன்வர வேண்டும்.
குற்றங்கள் நிகழ்வுக்குக் காவல்துறை அதிகாரிகள் போதிய பொறுப்பேற்குமாறு ஆணைகளை அரசு வழங்க வேண்டும். எந்த கொலைக் குற்றங்களும் குறிப்பிட்ட கால வரைக்குள் துப்பு துலக்கப்பட்டாக வேண்டும் என்பதை அரசு வற்புறுத்திட வேண்டும்.
தொடர்ந்து பல்வேறு பொறுப்பாளர்களை இழந்து வரும் பா.ஜ.க. கட்சியினருக்கு (நாம் கொள்கை லட்சியங்களில் வேறுபட்டவர்கள் என்பதை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு) மனிதநேயத்தோடு, ஆழ்ந்த இரங்கலைத் தெரி விப்பதோடு, மறைந்தவரின் குடும்பத்தின ருக்கும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல் அமைச்சரின் கடமை
பதற்றங்களைத் தணிக்க மூல காரணங்கள் கண்டறியும் வண்ணமும், மேலும் இனிமேல் இச்சம்பவங்கள் நிகழாவண்ணமும் எக்கட்சித் தலைவர்கள், பொறுப்பாளர்கள் உட்பட அனைத்து மக்களது பாதுகாப்பும் உறுதி செய்யப்படல் வேண்டும்!
தமிழக முதல் அமைச்சர் உடனே அவசர அவசியமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அமைதியை ஏற்படுத்தஆவன செய்ய முன் வர வேண்டும்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
23.7.2013
தமிழ்நாட்டு சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டது!
கூலிப்படைகள் அட்டகாசம் தாங்க முடியவில்லை! அவற்றின் பின்னணிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்!
முதல் அமைச்சர் அவசர அவசியமாகத் தலையிட்டு நடவடிக்கை தேவை!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழங்கு சீர் கெட்டுப் போய் விட்டது; கூலிப்படைகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. தமிழ்நாடு முதல் அமைச்சர் அவசர அவசியமாகத் தலையிட்டுச் சீர் செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் எல்லாம் விலையேற்றத்தோடு நாளும் இருக்கையில், மிகவும் மலிவாகக் கிடைப்பது கூலிப்படைகள்தான்! கொலை செய்வதற்காக ஆங்காங்கே - (கார்ப்பரேட் கம்பெனிகள்போல்) இயங்கி வருவதாகவும், அவர்களை அழைத்துப் பேசி இப்படிப்பட்ட கொடுமைக்கள் அரங்கேற்ற திட்டமிடப்படு கின்றன என்றும் சாதாரணமான மக்களி டையேகூட பேச்சுக்கள் அடிபடுகின்றன!
தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு?
கொலைகளும், கொள்ளைச் சம்பவங்களும் அன்றாட அவலங்களாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு சீர்கேடாக உள்ளது.
இதை மறைப்பதோ, பூசிமெழுகுவதோ கூடாது; சில குற்றங்களைப் பதிவு செய்வதுகூட தவிர்க்கப்படுவதனால், குற்ற எண்ணிக் கையைப் புள்ளி விவர ரீதியாக குறைத்துக்கூட தமிழக அரசு கூறலாம்; ஆனால் பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களும் அறிய மாட்டார்களா?
ஏடுகளை எடுத்தால், தொலைக்காட்சி களைத் திறந்தால்., அன்றாடம் கொலை, கொள்ளைகள், திருட்டுகள் இவற்றைத் தாண்டி சாலை விபத்துக்கள் இவைதான் செய்தி களாகப் படமெடுத்தாடுகின்றன!
சேலம் - பிஜேபி பிரமுகர் படுகொலை கண்டிக்கத்தக்கது!
சேலத்தில் ஆடிட்டர் இரமேஷ் என்ற பா.ஜ.க.வின் தமிழகப் பொதுச் செயலாளர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார் என்பது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகும்.
இதற்கு மூல காரணம் யார் எது என்று கண்டறியப்படுவது, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதைவிட முக்கியமாகும்.
இதற்கு சில வாரங்கள் முன் வேலூரில் இதே கட்சியின் ஒருவரும் வெட்டிக் கொல்லப் பட்டார் என்ற வேதனைக்குரிய செய்தியும் வெளிவந்தது!
நம்மைப் பொறுத்தவரை, பொது வாழ்வில் உள்ள எவராயினும் கருத்துப் போர் நிகழ்த்தலாமே தவிர, வன்முறை வெறியாட்டங்களிலோ கொலை வெறித் தாக்குதலிலோ ஈடுபடுவது கூடாது! நியாயப்படுத்தவே முடியாது!
காந்தியாரைச் சுட்டுக் கொன்றபோதே தந்தை பெரியார் என்ன சொன்னார்?
அண்ணல் காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே நிகழ்வுபற்றிக்கூட, தந்தை பெரியார் அவர்கள் தனி நபர் செயல் அல்ல அது என்று கூறி, அதன் பின்னே இருக்கிற வெறிக்குரிய காரணம் கண்டறிந்து அதனைப் போக்க, அல்லது தடுக்க வேண்டும் என்று தனது முதிர்ந்த அனுபவத்தால் அறிவுரை வழங் கினார்கள்.
பெரியார் தந்த புத்தியின் அடிப்படையோடு நாமும் கூறுகிறோம்; கூலிப்படைகளால் கொலைகள் நடைபெறுகின்றன என்னும்போது அவற்றிற்கு மூலவர்கள் யார் என்பது அல்லவா முக்கியம்?
கூலிப்படைகள்! கூலிப்படைகள்!!
தமிழ்நாட்டில் பல கொலைகளுக்கு ரியல் எஸ்டேட்டு தகராறுகள், தொழில் போட்டி பொறாமை, தவறான உறவுகள் தங்களைக் காக்க கூலிப்படைகளை ஏவுகணைகளாக்கிக் கொள்ளும் நிலை மலிந்து காணப்படுகிறது!
எல்லாம் ஒரே வகையில் (அதாவது வெட்டிச் சாய்ப்பதுதான் பெரும்பான்மையாக உள்ளது) என்கிறபோது, வெறும் அரிவாள்கள் உற்பத் திக்குத் தடை விதித்தால் மட்டும் போதுமா?
கூலிப்படைகளை அடையாளம் காணுவ தோடு களையெடுத்து, தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக மாற்றவும் முயற்சிக்க வேண்டாமா தமிழக அரசு?
காவல்துறை பொறுப்பேற்க வேண்டும்
அரசியல் தலைவர்களுக்குப் போதிய பாது காப்பு வழங்குவது முக்கியம்தான் என்றாலும், அதைவிட முக்கியம் கூலிப்படைகளையும், அதற் காக முக்கிய தலைமைகள் பற்றிய தகவல் களைத் திரட்டி, கூர்மையான நடவடிக்கை களும் உடனே செய்ய தமிழக அரசின் உள்துறை, குறிப்பாக காவல்துறை முன்வர வேண்டும்.
குற்றங்கள் நிகழ்வுக்குக் காவல்துறை அதிகாரிகள் போதிய பொறுப்பேற்குமாறு ஆணைகளை அரசு வழங்க வேண்டும். எந்த கொலைக் குற்றங்களும் குறிப்பிட்ட கால வரைக்குள் துப்பு துலக்கப்பட்டாக வேண்டும் என்பதை அரசு வற்புறுத்திட வேண்டும்.
தொடர்ந்து பல்வேறு பொறுப்பாளர்களை இழந்து வரும் பா.ஜ.க. கட்சியினருக்கு (நாம் கொள்கை லட்சியங்களில் வேறுபட்டவர்கள் என்பதை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு) மனிதநேயத்தோடு, ஆழ்ந்த இரங்கலைத் தெரி விப்பதோடு, மறைந்தவரின் குடும்பத்தின ருக்கும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல் அமைச்சரின் கடமை
பதற்றங்களைத் தணிக்க மூல காரணங்கள் கண்டறியும் வண்ணமும், மேலும் இனிமேல் இச்சம்பவங்கள் நிகழாவண்ணமும் எக்கட்சித் தலைவர்கள், பொறுப்பாளர்கள் உட்பட அனைத்து மக்களது பாதுகாப்பும் உறுதி செய்யப்படல் வேண்டும்!
தமிழக முதல் அமைச்சர் உடனே அவசர அவசியமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அமைதியை ஏற்படுத்தஆவன செய்ய முன் வர வேண்டும்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
23.7.2013
பதினாறு குண்டு வெடிப்புகளுக்கு நாங்கள் தான் காரணம் - காவி பயங்கரவாதி பரபரப்பு வாக்குமூலம்!
***பீகார் புத்தர் கோயில் குண்டு வெடிப்பும் இதுவரை நடந்த மற்ற குண்டு வெடிப்புகளும்***
பதினாறு குண்டு வெடிப்புகளுக்கு நாங்கள் தான் காரணம் -காவி பயங்கரவாதி பரபரப்பு வாக்குமூலம்.....
இந்தியாவில் இது வரை நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் 16 குண்டுவெடிப்புகளை காவி பயங்கரவாத இந் துத்துவ தீவிரவாதிகள் நிகழ்த்தியதாக வாக்கு மூலங்கள் வெளிவந்துள் ளன, இதன் மூலம் இந்தி யாவில் நிகழ்ந்த பல் வேறு குண்டுவெடிப்பு களில் இந்துத்துவ தீவிர வாதிகளுக்கு பங்கிருப் பது தெரியவந்துள்ளது,
மலேகான், சம் ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, 2-ஆவது மலே கான் உள்ளிட்ட குண்டு வெடிப்புகளில் தொடர்புடையதாக, அண்மையில் தேசிய பாதுகாப்புப் படை யினரால் கைது செய் யப்பட்ட இந்துத்துவா தீவிரவாதி ஒருவன் இதனை தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்,
2007 ஆம் ஆண்டு சம்ஜோதாஎக்ஸ்பிரஸ் தொடர் வண்டியில் குண்டுவைத்த ராஜேந்தர் சவுத்ரி அண்மையில் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினியில் இருந்து கைது செய்யப்பட்டார், இதையடுத்தே இந்த உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன,
இந்துத்துவா தீவிர வாத குழுக்கள் குண்டு வெடிப்புகளை நடத்தி விட்டு, முஸ்லிம்கள் மீது பழியை சுமத்திவிட்ட உண்மை இந்த வாக்கு மூலங்களின் வழியாக வெளிவந்து கொண்டி ருக்கிறது,
2004 ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள பீர் மித்தா அஹ்லே ஹதீஸ் மசூதியில் வெள்ளிக் கிழமை தொழுகைக்குத் திரண்டவர்கள் மீது வெளியே இருந்து க்ரே னேடை வீசியவர்கள் தங்களின் குழுவைச் சார்ந்தவர்கள் தாம் என்பதை இந்துத்துவ தீவிரவாதிகள் தற் போதைய வாக்குமூலத் தில் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் க்ரேனைடு வெடித்து 2 பேர் பலியானார்கள்
ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.
எனினும் இச்சம்பவம் காஷ்மீர் தீவிரவாதிகளின் சதிவேலையாகவே அப்போது பார்க்கப்பட்டது, தெஹ்ரீக்குல் முஜாஹிதீன் என்ற அமைப்பு இச்சம்பவத்திற்கு காரணம் என்று அன்று காவல்துறை கூறி யிருந்தது.
மேற்கண்ட சம்பவம் வழக்கு தொடர்பான விசாரணை அறிக் கையை காஷ்மீர் காவல்துறையினரி டம் தேசிய பாதுகாப்புப் படை கேட்டுள்ளது. விசாரணை அறிக் கையில் இந்துத்துவா தீவிரவாதிகள் குறித்து ஏதேனும் விவரங்கள் கூறப்பட்டுள்ளனவா? என்பதை ஆராயவே இந்த அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது,
இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டு வெடிப்புகளில் தொடர் புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் சுனில் ஜோஷி கொலை, பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் ஜிலானியை கொல்ல முயன்றது உள்ளிட்ட வழக்குகளில் இந்துத்துவத்திற்கு தொடர்பிருப் பதையும் ராஜேந்தர் சௌத்ரியின் வாக்குமூலம் தெரிவித்துள்ளது.
நன்றி செய்தி : இந்நேரம்.காம்
அறிவியல்
ஆள் நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிந்தன்ஷாவடி உருவாக்கியுள்ளார்.
மனிதர்கள் நடமாடும் போது மட்டுமல்ல; வாகனங்கள் சென்றாலும் அந்த நேரத்தில் திடீர் என்று வெளிச்சம் கிடைக்கும் வகையில் இதனை உருவாக்கியுள்ளார்.
இதனால் மின்சாரமும் மிச்சமா கிறது. இருட்டில் பேய், பிசாசு என்று அவிழ்த்து விடும் பொய் மூட்டை களும் அவிழ்ந்து கொட்டி விடும் அல்லவா!
கோயில் என்றால்
ஆந்திர மாவட்டம் காளஹஸ்தி கோயிலின் கோபுரம் 28.5.2010 அன்று இடிந்து விழுந்தது. (இதற்குப் பெயர்தான் கடவுள் சக்தி! - நம்பித் தொலையுங்கள்!) புதிய ராஜகோபுரம் கட்டுவதாகக் கூறி அக்கம் பக்கத்தில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப் பட்டன. அதற்குப் பதிலாக பரத்வாஜ தீர்த்தம் பகுதியில் நிலங்கள் அளிக் கப்படும் என்று உறுதி அளிக்கப் பட்டது. ஆனால் இதுவரை கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படாத காரணத்தால் சுங்கி ரெட்டி என்பவர் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதி, நிலங்கள் வழங் கப்படும் வரை ராஜ கோபுரக் கட்டு மான பணியினை நிறுத்திட நீதி மன்றம் ஆணை பிறப்பித்து விட்டது.
கோயில் சம்பந்தப்பட்டது என்ப தால் அதன் தர்ம கர்த்தர்கள் நாணய மாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான்; தெய்வ காரியம்தானே எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நம்பினால் படுமோசம்தான்.
கோயில் தர்மகர்த்தாக்களின் அறிவு நாணயம் எப்படிப்பட்டது என்பதற்கு இது ஒரு சின்ன எடுத் துக்காட்டு, அவ்வளவுதான்.
சுங்கி ரெட்டி உஷார் பேர் வழி - பாராட்டுகள்!
விசா வேண்டுமாம்!
குஜராத்தில் 2002இல் நடந்த கல வரத்தைத் தொடர்ந்து மோடிக்கு விசா அளிக்க அமெ ரிக்கா மறுத்து வந்தது. இந்தத் தடையை விலக்கிக் கொள்ளும்படி அமெரிக்க அதிகாரிகளிடம் வற்புறுத் துவேன் என்று பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
வற்புறுத்துவது ஒரு புறம் இருக் கட்டும்; அமெரிக்கா விசா மறுத் ததற்கான காரணங்களிலிருந்து மோடி விடுபட்டு விட்டாரா? இன்று வரை குஜராத் கலவரத்தை நியாயப் படுத்திக் கொண்டு தானே இருக் கிறார்.
குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து அன்றைய பிரதமர் வாஜ்பேயி எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளி நாடுகளுக்குச் செல் லுவேன்? என்று புலம்ப வில்லையா? இந்தியாவுக்குள்ளேயே கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியுள் ளதே! கூட் டணிக் கட் சிக்குள்ளேயே விரிசல் ஏற்பட்டு விட்டதே!
இந்தியாவுக்குள்கூட டில்லி பல்கலைக்கழக மாணவர்கள் மோடியை அனுமதிக்கவில்லையே!
இந்த நிலையில் அமெரிக்க அதிகாரிகளிடம் மோடிக்கு விசா வழங்க வற்புறுத்தப் போவதாக பிஜேபியின் தலைவர் ராஜ்நாத் சிங் கூறுவது ஓர் அர்த்தமற்ற பேச்சு தானே?
சங்கராச்சாரியாரின் தமிழ் நேசம்!
சென்னை சேத்துப்பட்டு காஞ்சி காமகோடி பீடம் சங்கராலயத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தமிழ் வழி பாடசாலை தொடங் கப்பட்டுள்ளது. விழா வைத் தொடங்கி வைத்து உரையாற்றிய ஜூனியர் சங்கராச்சாரி யார் விஜயேந்திர சரஸ்வதி! தமிழை ஆன்மீக உணர்வுடன், தூய்மை மற்றும் புனிதத் தன்மை யோடு கற்றுக் கொள்ள வேண்டும்; இறைவன் பெருமையை அதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
என்னே தமிழ்நேசம் - பாசம்! ஆன்மீக உணர்வோடு தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டுமாம். மெத்த சரி, அந்தத் தெய்வத் தமிழைக் கோயிலில் அர்ச்சனை மொழியாக அனுமதிக்க முடியாது என்று அடம் பிடிக்கிறீர்களே அது ஏன் என்று ஒரு கேள்வியை முன் வைத்தால், சங்க ராச்சாரியாரின் போலித் தமிழ்ப் பற்றின் முகமூடி கிழிந்து தொங்கி விடுமே!
இன்றுவரை சங்கராச் சாரியின் சீடர் திருவாளர் சோ ராமசாமி தமிழில் அர்ச்சனை செய்தால் பொருள் இருக்கும்; அதே நேரத்தில் அருள் இருக் காது என்று எழுது கிறாரே - அவருக்குப் புத்தி மதியை காஞ்சி மடத்தார் சொல்லக் கூடாதா?
பூஜை வேளைகளில் சங்கராச்சாரி யார் நீஷ பாஷையை (தமிழை) பேச மாட்டார் என்ற நிலையிலிருந்து சங்கராச்சாரியார்கள் மாறி விட் டார்களா?
நிரந்தர விரோதி
நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூட நம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கிறது.
_ (குடிஅரசு, 13.4.1930)
மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ? - காற்றுதான் சிலரை நீக்கி வீசுமோ?
தந்தை பெரியார் அவர்களைத் தரணிக்கு தந்த ஈரோடு பெரு நகரத்தில், இரண்டு அற்புத இன்றைய இருபால் இணையர்களை மருத்துவமனைக்கு சென்று கண்டு, மகிழ்ந்தேன் - சில ஆண்டுகளுக்கு முன் - அவரது பெரியார் பற்று - அதைவிட ஆழமான அவரது நன்றிப் பெருக்கு, நானிலமே போற்றிப் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று அல்லவா!
அதற்குரிய சான்றுதான் இந்தக் கடிதம்!
ஈரோடு - 18.07.2013 வியாழன் அன்று பிரபல எலும்பு முறிவு மருத்துவர் டாக்டர் பி.டி.சக்திவேல்-மகப்பேறு மருத்துவர் சவுந்திரம் சக்திவேல் இணையரின் மகன் பிரதீப்குமார் அவர்களுக்கு இந்த ஆண்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.
சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை மாற்றி ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்புக் கதவை நீதிக்கட்சி ஆட்சி மருத்துவப் படிப்பிற்குத் திறந்தது. அதற்கும் தந்தை பெரியார்தான் காரணம், அதனைத் தொடர்ந்து இட ஒதுக்கீட்டிற்காக போராடி, இட ஒதுக்கீடு பெற்றுத்தந்ததும் தந்தை பெரியார்தான்; இன்றுவரை தந்தைபெரியாரின் இயக்கமான திராவிடர் கழகம் சமூக நீதிக்காக பல்வேறு களங்களைக்கண்டு மாபெரும் வெற்றிகளைத் தமிழ்ச் சமுதாய ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெற்றுத் தந்துள்ளது. குறிப்பாக தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்களின் பணி அளப்பரியது.தந்தை பெரியார், விடுதலை, ஆசிரியர் கி.வீரமணி இவர்களது உழைப்பால் இடஒதுக்கீடு (கல்வி,வேலை வாய்ப்பு) தமிழ் நாட்டிலும்,மண்டல்கமிசன் மூலம் இந்தியா வெங்கும் சிறப்பான முறையில் நடைமுறைக்கு வந்துள்ளது.
இட ஒதுக்கீட்டு முறையில்தான் நானும், எனது இணையர் சவுந்திரம் அவர்களும் மருத்துவர்களாக படித்து பயன்பெற்றோம்,அதனால் நாங்களும் இச்சமூகத்திற்குப் பயன்படுகிறோம். அந்த வகையில் எங்களது மகன் பிரதீப் குமாருக்குக் கோவை அரசு மருத்துவக்கல்லூரி யில் 2013-இந்த ஆண்டு இடஒதுக்கீடு அடிப் படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத் துள்ளது. எனவே வாழையடி வாழையாக தமிழ்ச் சமூகம் உயர்வதற்கு உழைத்துவரும் விடுதலை" வளர்ச்சிக்கு நன்றியுடன் ரூபாய் 10000/- (பத்தாயிரம்) வங்கிவரைவோலையாக வழங்கி மகிழ்கிறோம். நன்றி.
நன்றியுடன் மருத்துவர் பி.டி.சக்திவேல் எம்.பி.பி.எஸ். எம்.எஸ்.ஆர்த்தோ, ஈரோடு.
அறிவு ஆசான் கல்வி வள்ளலாக இருந்து பரிந் துரைக் கடிதங்களை நூற்றுக்கணக்கில் ஆயிரக் கணக்கில் கடந்த பல ஆண்டுகளாகத் தந்து - அவர்கள் வாழ்ந்த காலத்தில் கல்வியாண்டு துவக்கப் பருவத்தில் எழுதி, எழுதிக் கொடுப்பார்கள் - எங்களைப் போன்ற உதவியாளர்களுக்கு, அத்தகவலை உரியவர்களை நேரில் பார்த்து அய்யாவின் விருப்பத்தை அப்படியே எடுத்துக்கூறி, அதன் காரணமாக மருத்துவத்தில், பொறியியலில், கலை, அறிவியல் பட்டப் படிப்புகளில் இடம் பெற்று, பட்டதாரிகள் ஆனவர்கள் பல்லாயிரவர் இருந் திருப்பார்கள்; இருக்கிறார்கள் இன்றும்கூட!
பயன் பெற்றோர் பலரும் தவறாது தமிழன் என்றொரு இனமுண்டு.
தனியே அவர்க்கொரு குணமுண்டு என்ற நாமக்கல் கவிஞரின் கருத்துக்கு ஏற்ப, நன்றி கூற மறந்தவர்களும், தவறியவர்களுமே அநேகர்!
அது தமிழனின் தனிக்குணம் போலும்!
நன்றி விசுவாசம் காட்டுவதும் நயவஞ்சகம் செய்யாமையும் தமிழனுக்கு நஞ்சு என்பது தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு.
இதில்அத்தி பூத்ததுபோல், தவறாது நன்றி சொன்னவர்கள், செய்பவர்களும் இல்லாமல் இல்லை! நன்றி மறந்த இந்தப் பரந்த பாலைவனத்தில், அத்தகையவர்கள் ஒயாசிஸ் - சோலைகள் போன்றவர்கள் ஆவார்கள்!
அதற்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டுதான் மேலே காட்டிய டாக்டர் இணையர்களின் எடுத்துக் காட்டான கடிதமும், நன்கொடையும்!
தந்தை பெரியார் தந்த பரிந்துரைகளால் பயன் பெற்ற - இடம் கிடைக்கப் பெற்ற தோழர், தோழி யர்கள் விடுதலை நாளேட்டிற்கு ஒரு சந்தா கட்டி னால் இன்று பல லட்சம் பிரதிகள் சர்க்குலேஷன் ஆகிக் கொண்டிருக்குமே!
என்ன செய்வது! நம் இனத்தின் கூறுபாடு இது! அதற்காக நாம் நமது தொண்டறத்தை, மனிதநேய அடிப்படையிலான கல்விக்கண் பெற வைத்தல், உத்தி யோக மண்டலக் கதவுத் திறக்க உழைத்தல் போன்ற பணிகளை நிறுத்திவிட முடியுமா?
மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?
காற்றுதான் சிலரை நீக்கி வீசுமோ?
நம் பணி என்றும் தொண்டறம் தானே!
நன்றி என்பது பயனடைந்தவர் காட்ட வேண்டிய பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்க்க வேண்டிய ஒன்றல்ல; அப்படி எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமே
- 1931இல் தந்தை பெரியார் அன்று குடிஅரசு ஏட்டில் எழுதிய வரிகள் இவை.
எனவேதான் இந்த நன்றி பாராத (Thankless Jobs) என்ற பயனுறு பணி செய்யும் பாதையான ஈரோட்டுப் பாதையில் என்றும் எப்போதும், எந் நிலையிலும் பயணிக்கிறோம்.
- கி.வீரமணி
எல்லா வகையான நுழைவுத் தேர்வுகளையும் எதிர்ப்போம்! கலைஞர் கடிதம்
உடன்பிறப்பே,
எம்.பி.,பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளில் மாணவர்களைத் தேர்ந் தெடுக்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.அய்.), வெளியிட்ட அறிவிப்பினை உச்ச நீதிமன்றமே 18-7-2013 அன்று ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கிறது. பொது நுழைவுத் தேர்வு தொடர்பான இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பு, அரசியல் சாசனச் சட்டத்தை மீறுவதாக உள்ளது என்று தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியிருக்கிறது. திமுக எதிர்ப்பு! மேலும் ஏற்கெனவே பொது நுழைவுத் தேர்வு மூலம் நடைபெற்ற மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை இந்தத் தீர்ப்பு எந்த வகையிலும் பாதிக்காது என்றும், இந்தத் தீர்ப்பு மூலம் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், மாணவர் சேர்க்கைக்காக தாங்களாகவே நுழைவுத் தேர்வை நடத்திக்கொள்ள உரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பிலே கூறியிருக்கிறார்கள். மூன்று நீதிபதிகள் அடங்கிய இந்த அமர்வில், இரண்டு நீதிபதிகள் அதாவது தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர், விக்ரம்ஜித் சிங் ஆகியோர் இவ்வாறு தீர்ப்பு கூறியுள்ள போதிலும், இதே அமர்வில் இடம் பெற்ற மற்றொரு நீதிபதியான ஏ.ஆர். தேவ், மற்ற இரண்டு நீதிபதிகளின் கருத்தில் தனக்கு உடன்பாடில்லை என்றும், தேசிய அளவில் தகுதித் தேர்வு நடத்துவது என்பது சட்டப்படியானது, நடைமுறைக்குச் சாத்தியமானது மற்றும் சமூகத்துக்குத் தேவையானது என்றும் தெரிவித்திருக்கிறார். என்றாலும் இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளில் இருவர், பொது நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று கூறிவிட்டதால், அந்தத் தீர்ப்பே இறுதித் தீர்ப்பாக அமைந்துள்ளது. எம்.பி.,பி.எஸ் படிப்பிற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து பல ஆண்டுக் காலமாகவே பிரச்சினை உள்ளது. தி.மு.கழக ஆட்சிக் காலத்திலேயே, இந்தியாவி லுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.,பி.எஸ் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு நடத்துவது என இந்திய மருத்துவக் கழகம் எடுத்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொட ரப்பட்ட வழக்கு 18.2.2011 அன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் வழக்கறிஞர் திரு.கோபால் சுப்பிரமணியம் அவர்கள் - பொது நுழைவுத் தேர்வு சம்பந்தமான இந்திய மருத்துவக் கழகத்தின் அறிவிக்கைக்கு எந்த ஒப்புதலும் மத்திய அரசு வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்திய மருத்துவக் கழகத்தின் வழக்கறிஞர் மத்திய அரசு ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியுள்ளது எனக்கூறியுள்ளார். மேற்படி வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதிபதிகள் இந்திய மருத்துவக் கழகமும் மத்திய அரசும் முரண்பாடான கருத்தைக் கொண்டிருப்பதால் இரு தரப்பினரும் அமர்ந்து கலந்தாலோசித்து இது குறித்து ஒருமித்த முடிவெடுப்பது நல்லது என்று அப்போதே தெரிவித்திருக்கின்றனர். இந்த வழக்கு மீண்டும் 7.3.2011 அன்று விசார ணைக்கு வந்தபோது, இந்திய மருத்துவக் கழகத்தின் வழக்கறிஞர் மருத்துவப் படிப்பிற்காக மாற்றியமைக் கப்பட்ட சட்ட நெறிமுறைகள் 21.12.2010 அன்று அறிவிக்கை செய்யப்பட்டது என்றும், அந்த மாற்றியமைக்கப்பட்ட நெறிமுறை களின்படி, மத்திய அரசின் முன் அனுமதியுடன் எம்.பி.,பி.எஸ். படிப்பிற்கு பொதுநுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும் கூறினார். இந்திய மருத்துவக் கழகத்தின் மாற்றியமைக் கப்பட்ட நெறிமுறைகள் சட்டப்படி செல்லத் தக்கதா என்ற கேள்வி எழவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த மாற்றியமைக்கப் பட்ட நெறி முறைகளால் யாருக்காவது பாதிப்பு ஏற்படுமாயின் அவர்கள் அதனை எதிர்த்து வழக்குத் தொடரலாம் என்றும் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு கிடையாது
தமிழகத்தைப் பொறுத்தமட்டில், நடைமுறை யில் இருந்த பொது நுழைவுத் தேர்வினை ரத்து செய்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டம் இயற்றப்பட்டு 2007-08ஆம் கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் +2 படிப்பில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி மருத்துவப் படிப்பிற்கு மாணவர்களைச் சேர்க்கும் நடைமுறைதான் இருந்து வருகிறது. இது தொடரப்பட வேண்டும் என்று நான் முதல்வராக இருந்தபோது, இந்தியப் பிரதமருக்கும், மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கும் 15.8.2010ல் கடிதம் எழுதினேன். மேலும் உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக தமிழக அரசு இணைத்துக் கொண்டது. தமிழ்நாடு அரசு எம்பி.,பி.எஸ் படிப்பிற்கு மேல்நிலைக்கல்வி தேர்வில் மதிப்பெண் களின் அடிப்படையில் சேர்க்கையை அனுமதிப்பது என்ற நிலையை உச்சநீதி மன்றத்தில் தெரிவித்தது. இதற்கிடையில் சென்னை உயர்நீதி மன்றத்திலும் இந்திய மருத்துவக் கழகத்தின் அறிவிக்கை குறித்து இடைக்கால தடை உத்தரவும் 2011ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அன்று கழக அரசால் பெறப் பட்டது. 11.01.2011 முதல் 13.01.2011 வரை அய்தரா பாத்தில் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்களின் மாநாட்டில் மருத்துவப் படிப்பிற்கு அகில இந்திய அளவில் பொதுநுழைவுத் தேர்வு கொண்டுவரப்படமாட்டாது என முடிவெடுக் கப்பட்டது. அகில இந்திய அளவில் எம்.பி.,பி.எஸ். படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து ஏற்கனவே இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்ட அறிவிக்கையினை திரும்பப் பெற வேண்டும் என்று 13.1.2011 அன்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே தமிழகத்தில் நுழைவுத் தேர்வு முறையை ஒழித்தது கழக ஆட்சிதான் என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் கடந்த 2012இல் மருத்துவக் கல்வியில் மத்திய அரசு அளவில் நுழைவுத் தேர்வினை நடத்தப் போவதாகச் செய்திகள் வந்தபோது, அதில் மத்திய அரசு உடனடி யாகத் தலையிட்டு, நுழைவுத் தேர்வு முறையை அறவே ஒழிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன்.
115 ரிட் மனுக்ள்
ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 15 சதவிகித இடங்களை மத்தியத் தொகுப்புக்கு எடுத்துச் சென்று, அந்த இடங்களை நிரப்ப அகில இந்திய அடிப்படையில் நுழைவுத் தேர்வு நடத்து கிறார்கள். அதுபோலவே மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலைப் பிரிவில், அதாவது எம்.டி., எம்.எஸ்., போன்ற வகுப்புகளில் சேருவதற்கும் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு வைக்கப்படுகிறது. இவ்வாறு மத்திய தொகுப்புக்கு எடுத்துச் செல்லப் படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக்கீடு அறவே இல்லை. இந்தப் பிரச்சினை பற்றி அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடனடி யாகத் தலையிட்டு, இதிலே நுழைவுத் தேர்வு முறையை ஒழித்தும், இதர பிற்படுத்தப்பட்டோருக் குரிய இட ஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்தும் நல்லதோர் முடிவு காணவேண்டுமென்றும் 29-9-2012இல் நான் கேட்டுக் கொண்டேன். எம்.பி.,பி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் மாணவர் களைச் சேர்க்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்தும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பை எதிர்த்து மொத்தம் 115 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதுதான் வழக்கு நடைபெற்று, தற்போது உச்ச நீதிமன்றம் பொது நுழைவுத் தேர்வினை ரத்து செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பினை பெரும்பாலோர் வரவேற்று மகிழ்கிற இந்த நேரத்தில், மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சர், குலாம் நபி ஆசாத் செய்தியாளர் களிடம் கூறும்போது, உச்ச நீதி மன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்று காத்திருந் தோம்; துரதிருஷ்ட வசமாக, அத்தகைய தீர்ப்பு கிடைக்கவில்லை; இதனால், எங்களுக்குச் சிறிது மன வருத்தம்தான்; ஏனெனில், பலவற்றை சீர்படுத்த நாங்கள் திட்ட மிட்டிருந்தோம். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. எனவே, இப்போதி ருக்கும் நிலையில், தீர்ப்பை எதிர்த்து சீராய்வு அல்லது வேறு எந்த முறையீடாவது செய்வதுதான், சரியாக இருக்கும். எனவே, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை, முழு மையாகப் படித்து ஆராயுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள் ளேன். சட்ட நிபுணர்களின் ஆலோ சனையும் கோரப் பட்டுள்ளது. சட்டப்படியான நடவடிக்கையை தவிர்த்து, வேறு ஒன்றும் இப்போதைக்கு இல்லை என்று கூறியிருக்கிறார்.
அன்று மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் எழுதியது என்ன?
மருத்துவப் படிப்பில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது சம்பந்தமான வழக்கு இந்திய உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வந்தபோது, இந்திய மருத்துவக் குழுமம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு அகில இந்திய பொது நுழைவுத் தேர்வுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. இதனை அறிந்ததும் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கும், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் அவர்களுக்கும் 15.8.2010 அன்று நான் எழுதிய கடிதத்தில், கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு, பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வினை, 2007-2008ஆம் ஆண்டு முதல் ரத்து செய்து சட்டம் இயற்றியுள்ளது என்றும்; அதன் காரணமாக சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் பின்தங்கியுள்ள கிராமப்புற மாண வர்கள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர் என்றும்; அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு முறை; மாநிலங்கள் கல்வித் துறையை நிர்வாகம் செய்வதில் உள்ள உரிமையில் குறுக்கிடுவதாகக் கருதப்படுகிறது என்றும்; தமிழக அரசு நீண்ட காலமாக நடைமுறைப்படுத்தி வரும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும்; சமூக நீதியின் தாயகமான தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலன்கள் பாதிப்புக்குள்ளாகும் என்றும் கருத்துத் தெரிவித்து, பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்து நல்ல முடிவு ஒன்றை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.குலாம் நபி ஆசாத் அவர்கள் இதற்குப் பதில் அளித்து, 27.8.2010 அன்று அவர் அனுப்பிய கடிதத்தில்,
மருத்துவப் படிப்பில் அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்த கருத்து அகில இந்திய மருத்துவக் கவுன்சில் மேற்கொண்ட நடவடிக்கை யின் அடிப்படையிலானதாகும். எனினும் இக் கருத்தின்மீது மாநில அரசுகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆகியவற்றுடன் விரிவாக ஆலோ சனை செய்து அவர்களின் அக்கறையையும், உணர் வுகளையும் கருத்தில் கொண்டு முடிவு மேற்கொள்ள வேண்டியது அவசியம் என மத்திய அரசு கருது கிறது. எனவே, முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எழுதிய கடிதத்தில் அவர் வெளிப்படுத்தி யுள்ள அக்கறையைக் கருத்தில்கொண்டு, அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்த முடிவுகள் மாநில அரசுகளுடனும், மற்ற சம்பந்தப் பட்ட அமைப்புகளுடனும் விரிவாக ஆலோசனை செய்த பிறகே மேற்கொள்ளப்படும் என இக்கடிதத் தின் வாயிலாகத் தங்களுக்கு உறுதி அளிக் கிறேன் என கடிதம் எழுதியிருக்கிறார். தினமணி தலையங்கம் இந்தச் செய்தி தமிழ் மற்றும் ஆங்கில நாளேடு கள் அனைத் திலும் அப்போதே விரிவாக வெளி வந்துள்ளன. உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து 20-7-2013 அன்று தலையங்கம் எழுதிய தினமணி நாளேடு, மருத்துவக் கல்விக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதைத் தவிர, நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிடும் சட்டப்படியான அதிகாரம் இந்திய மருத்துவக் குழுமத்துக்கு இல்லை என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்திருக் கிறது. இந்தத் தீர்ப்பு, இந்திய மருத்துவக் குழுமத் தின் அதிகார வரம்பை வரையறுத்திருக்கிறதே தவிர, மருத்துவ நுழைவுத் தேர்வு என்பது கூடவே கூடாது என்று கூறவில்லை. அந்தந்த மாநிலங்கள், தங்கள் மாநிலங்களில் உள்ள மருத்து வக் கல்லூரி களுக்கான மாணவர் சேர்க்கையை நுழைவுத் தேர்வு மூலம் நடத்துவதற்கும் நீதிமன்றம் தடை விதிக்க வில்லை. நாடு தழுவிய நுழைவுத் தேர்வு என்பது மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாக இருக்கும் என்று உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர், விக்ரம்ஜித் சிங் ஆகியோர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளது.
நுழைவுத் தேர்வு எந்த வடிவத்தில் வந்தாலும் திமுக எதிர்க்கும்
ஏழை எளிய நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த வசதிகளற்ற கிராமப்புற மாணவர்களுக்கும், வசதிகள் மிகுந்திருக்கும் நகர்ப்புற மாணவர்களுக் கும் இடையே இருக்கும் வேறுபாட்டை அகற்று வதற்காகவே நுழைவுத் தேர்வு முறையையே ரத்து செய்தது கழக ஆட்சி. எனவே நுழைவுத் தேர்வு கூடாது என்ற கொள்கை அடிப்படையிலும்; மருத்துவக் கல்லூரி இடங்களுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வில் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு இடமில்லை என்பதாலும்; அகில இந்திய நுழைவுத் தேர்வு மாநில உரிமைகளில் தலையிடும் காரிய மாகும் என்பதாலும்; இந்த நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்து உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்றாகும். இந்தத் தீர்ப்பினை மறு ஆய்வு செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் அறிவித்திருப்பது, ஏற்றுக்கொள்ள இயலாதது மட்டுமல்லாமல்; அவர் ஏற்கனவே நுழைவுத் தேர்வு தொடர்பாக மேற்கொண்டிருந்த நிலைப் பாட்டுக்கும் தற்போதைய அவரது அறிவிப்புக்கும் உள்ள முரண்பாட்டையும் சுட்டிக்காட்ட விழைகிறேன். தி.மு.கழகத்தைப் பொறுத்தவரை, நுழைவுத் தேர்வு எந்த வடிவத்தில் வந்தாலும்; அதை எதிர்க்கும் என்பதையும் தெளிவுபடுத்திட விரும்புகிறேன்!
அன்புள்ள,
மு.க.
பூனைக்குட்டி வெளியில் வந்தது!
நரேந்திர மோடிக்குத்தான் பிரதமர் ஆகும் தகுதி உள்ளதாம்
சொல்கிறார் காஞ்சி ஜெயேந்திரர்
சென்னை, ஜூலை 24-நரேந்திர மோடிதான் பிரதமராக வரவேண்டுமாம் - சொல்லி இருப்பவர் காஞ்சி சங்கராச்சாரியார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்காக பாரதீய ஜனதா முன் நிறுத்தினால் அது வரவேற்கத்தக்கது. நரேந்திரமோடி தகுதியான வேட்பாளர். நிர்வாக திறமை மிக்கவர். அவருக்கு கடவுள் அருளாசி உண்டு. எனது வாழ்த்துக்கள்!
ஆனால் சோனியாகாந்தி வெளிநாட்டுக்காரர் என்பதால் அவரது மகன் ராகுல் காந்திக்கு இந்தியாவுக்குத் தலைமை தாங்கும் தகுதி கிடையாது என்றே கருத வேண்டியுள்ளது.
நரேந்திரமோடி - ராகுல்காந்தி இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நரேந்திர மோடிக்குத்தான் முதலிடம் கிடைக்கும். நிர்வாகத் திறமை ஆற்றல் படைத்த மனிதர். மிகப்பெரிய சாதனையாளர். குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றவர். மதச்சார்பற்ற ஆட்சியை அவர் தருவது நிச்சயம். - இவ்வாறு காஞ்சி சங்கராச்சரியார்(?) ஜெயேந்திரர் கூறியுள்ளார்.
விளம்பரம்
ஊடகங்களில் இடம் பெறும் விளம்பரங்கள் மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின் றன என்பது மாநில, மத்திய அரசுகளுக்குத் தெரியாதா?
தெரிந்திருந்தால், ஊட கங்களில் குறிப்பாக தொலைக்காட்சிகளில் இடம்பெறும் விளம்பரங்கள் குறித்துக் கவனம் செலுத்தி இருக்கவேண்டுமே!
ஒரு தனியார் தொலைக் காட்சியில் ஒரு விளம்பரம் (நாய் விற்ற காசு குரைக் கவா போகிறது?)
தனலட்சுமி என்ற எந்திரம்; அதை வாங்கி வீட்டில் வைத்துக்கொண் டால் அந்த வீட்டில் செல் வம் அப்படியே பொங்கி வழியுமாம்.
வியாபாரி ஒருவர் தன லட்சுமி எந்திரத்தை வாங்கிக் கடையில் வைத் ததால், நட்டத்தில் மூழ்கிப் போய்க் கொண்டிருந்த வியாபாரம் ஓகோவென்று லாபம் கொழிக்க ஆரம் பித்துவிட்டதாம்.
மக்களைச் சோம்பேறி யாக்கும், அவர்களின் பணத்தை மோசடி செய்யும் - வழிப்பறி போன்ற குற்ற மல்லவா இது! இவற்றை அனுமதிக்கலாமா?
இதே நேரத்தில் இலண் டனிலிருந்து ஒரு தகவல்:
கோகோகோலா விளம் பரத்தைத் தடை செய்த செய்தி அது-
கோகோகோலா குடிப்ப தால் உடம்பில் உள்ள அதிகப்படியான கலோரி கள் எரிக்கப்படுவதாகக் கூறும் விளம்பரம் அது. அதனை எதிர்த்துப் புகார் கிளம்பியதுதான் தாமதம்; அந்த விளம்பரத்தை உட னடியாகத் தடை செய்தது இங்கிலாந்து அரசு.
அதல்லவா மக்கள் நல அரசு! அதேபோல, பிரிட் டனில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியான எம்.ஏ.டி.வி. கணேஷ் ருத் திராட்சப் பதக்கம் குறித்து விளம்பரம் ஒன்றை ஒளி பரப்பியது. இதனை அணிந்துகொண்டால் கெட்ட ஆவிகள் அண்டாது என்று இரு பெண்கள் பேசுவதுபோல் அந்தக் காட்சி!
இதனை நிரூபிக்க ஆதாரம் உண்டா என்ற வினாக் கணைகள் வெடித் துக் கிளம்பின. விளைவு அந்த மூட நம்பிக்கை விளம் பரம் தடை செய்யப்பட்டது.
(ஆதாரம்: தினமலர், 23.2.2008)
அது அல்லவோ நாடு- அது அல்லவோ மக்கள் நல அரசு! இந்தியாவிலும் அத்தகு நடைமுறைகள் தேவை.
விஞ்ஞான மனப்பான் மையை வளர்க்கவேண்டும் என்று (51-ஏ(எச்)) வெறும் ஏட்டில் எழுதி வைத்தால் போதுமா? - மயிலாடன்
அமர்த்தியா சென்னின் கருத்து பேரலையாய் வீசும்!
பிரபல பொருளாதார அறிஞரும், அத்துறையில் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் - பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திர மோடி குறித்துத் தெரிவித்துள்ள கருத்து - இந்திய அளவில் பெரிய இமாலய அலையாய் வீசப் போகிறது என்பதில் அய்யமில்லை.
அவர் ஒன்றும் அரசியல்வாதியல்ல; எந்த அரசியல் கட்சியோடும் தொடர்புடையவரும் அல்லர்.
பிரதமருக்கான வேட்பாளர் மதச் சார்பற்றவராக இருக்கவேண்டும்; மோடியைப் பொறுத்தவரை சிறுபான்மை மக்களின் நலனையும், பாதுகாப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாதவர் என்று மய்யப் படுத்தித்தான் அவரின் குற்றச்சாற்று அமைந் துள்ளது.
இதே குற்றச்சாற்றைத்தான் பிரபல சிந்தனை யாளர் இராமச்சந்திர குகா, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ போன்ற வர்கள் வைத்திருக்கின்றனர். ஏன், அன்னா ஹசாரே கூட இந்த வகையில் வாய்த் திறந்துவிட்டாரே!
இதே குற்றச்சாற்றைத்தான் - பி.ஜே.பி.யின் கூட்டணியில் அங்கம் வகித்த அய்க்கிய ஜனதா தளத்தின் - குறிப்பாக அக்கட்சியின் சார்பாக பிகாரில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிதிஷ் குமாரும் முன்வைத்துள்ளார்.
இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மிக முக்கியமான கொள்கைகளில் முற்றிலும் மாறுபட்ட வர் எப்படிப் பிரதமராக வர முடியும் என்ற கேள்வி மோடியின் கழுத்தை மிகவும் நெருக்கிப் பிடித்து அழுத்திக் கொண்டிருக்கிறது.
இதே காரணத்திற்காகத்தான் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குச் செல்ல விசா மறுக்கப்பட்டது.
இதே காரணத்தைச் சொல்லிதான் அன்றைய பிரதமரும் - சொந்தக் கட்சியைச் சேர்ந்தவருமான அடல்பிகாரி வாஜ்பேயியும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாட்டுக்குச் செல்வேன்? என்று புலம்பினார்.
இவ்வளவுக்குப் பிறகும், அரசியல் நாகரிகத் துக்காகக்கூட தன்னைச் சரிப்படுத்திக் கொள்ள மோடி தயாராகவில்லை.
சிறுபான்மை மக்களை - குறிப்பாக முஸ்லிம் களைக் குறிப்பிடும்பொழுதெல்லாம் தம் வன்ம உணர்வை வெளிப்படுத்திடத் தவறுவதில்லை. அம்மக்கள் சார்ந்த இடத்தில், பரிவர்த்தனைக்காகக் குல்லாயைக் கொடுத்தபோதுகூட ஒரு நாகரிகத் துக்காகக்கூட சற்று நேரம்கூட அதனை அணிந்து கொள்ளத் தயாராக இல்லையே!
முஸ்லிம்கள்பற்றிக் குறிப்பிடும்பொழுது அவருக் குக் கிடைத்த உதாரணம் நாய்க்குட்டிதான்; ஏன் நாயைக் குறிப்பிடுகிறார் தெரியுமா? முசுலிம்கள் பொதுவாக நாய்களை வளர்க்கமாட்டார்கள் - எனவே, அதைச் சொல்லி வம்பு வளர்க்கும் அற்பப் புத்தி.
காங்கிரசைக் குறிப்பிடும்பொழுது மதச்சார் பின்மை என்னும் பர்தாவுக்குள் தன்னை மறைப்பதாக, அந்தப் பர்தா என்னும் முசுலிம் பெண்கள் அணியும் உடையைப் பயன்படுத்துகிறார்.
மதச்சார்பின்மை என்னும் போர்வை அல்லது முகமூடி என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம்; அப்படிச் சொன்னால், மோடியின் இந்துத்துவா வெறி ஆசுவாசம் கொள்ளாதே!
அவர் முதலமைச்சராக இருக்கும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் ஒரே ஒரு முசுலிம்கூட வேட்பாளராக நிறுத்தப்படாததிலிருந்தே அந்த மனிதனின் கோர ரூபத்தை அடையாளம் காணலாமே!
சும்மாவா சொன்னார் - உச்சநீதிமன்ற நீதிபதி நீரோ மன்னன் என்று மோடியை?
120 கோடி மக்களைக் கொண்ட இந்தியா என்னும் துணைக் கண்டத்திற்குப் பிரதமராக வரக்கூடியவர் மதச் சார்பற்றவராக இருக்கவேண்டும் என்று இந் தியாவுக்குள் உள்ள மக்கள் மட்டுமல்லர்; இந்தியா வைத் தாண்டியுள்ள மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.
இந்தத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் கூடப் பெறத் தகுதியில்லாதவர் நரேந்திர மோடி என்பதால், தொடக்கத்தின் தேர்விலேயே இந்தியத் துணைக் கண்ட மக்களால் தள்ளுபடி செய்யப்படக் கூடிய வராகவே ஆகிவிட்டார்.
அதுவும், அமர்த்தியாசென் போன்றவர்கள் கூறிய பிறகு இந்தக் கருத்துப் பேருரு பெற்று - புதிய திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை இப்பொழுதே எழுதி வைத்துக்கொண்டு விடலாம்.
அவசியம்
கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறு பாடு இருந்தாலும் மனிதத் தன்மை யோடு நடந்துகொள்வதே முக்கியமும், அவசியமுமாகும்.
(விடுதலை, 17.6.1970)
நரேந்திர மோடி பிரதமராக வருவதை ஏற்க முடியாது!
நோபல் அறிஞர் அமர்த்தியா சென் திட்டவட்டமான கருத்து
புதுடில்லி, ஜூலை 24- குஜராத் முதல்வர் நரேந் திர மோடி பிரதமராக வருவதை ஏற்கமுடியாது என நோபல் பரிசு வென்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் அறிவித்துள்ளார்.
நரேந்திர மோடிதான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்பதை யும் கிட்டத்தட்ட அறி வித்துவிட்டது பாஜக. மோடியை முன் நிறுத் துவதை பாஜவுக்குள் ளேயே ஒரு பிரிவினர் எதிர்த்து வரும் நிலை யில், நாட்டின் சமூக ஆர்வலர்கள், மத நல்லி ணக்கவாதிகள், பொரு ளாதார அறிஞர்கள் என பல மட்டங்களி லும் மோடிக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வரு கிறது.
நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளாதார அறிஞரான அமர்த்தியா சென் கடுமையாக எதிர்த் துள்ளார் மோடியை. அவர் அளித்த பேட்டியில்,
மதநல்லிணக்கத்துக்கு எதிரான ஒரு மனிதரை எப்படி நாட்டின் பிரத மராக ஏற்க முடியும்? ஒரு இந்தியக் குடிமகன் என்ற முறையில் அவர் பிரதமராவதை நான் கடு மையாக எதிர்க்கிறேன். சிறுபான்மை மக்கள் தாங்கள் பாதுகாப்பு டன் இருக்கிறோம் என உணரும் வகையில் அவர் எதையுமே சொல்ல வில்லை. சிறுபான்மை யினருக்கு மட்டும் என் றல்ல... நான் சிறுபான் மையில் ஒருவன் இல்லை... பெரும் பான்மை மக்களுக்கும் கூட அவர் என்ன செய்துவிட்டார்? வன்முறைக்குச்சட்ட அங்கீகாரமா?
2002 இல் அவர் செய் தது திட்டமிட்ட வன் முறை. மோடியை அங் கீகரிப்பதன் மூலம் அந்த வன்முறைக்கு சட்ட அங்கீகாரம் தரப்போகி றார்கள் என்றுதான் அர்த்தம்.
இந்திய பிரதமராக விரும்பும் எந்த இந்திய குடிமகனுக்கும் இல்லாத பயங்கரமான வன்முறை பின்னணி மோடிக்கு உள்ளது. அவரை ஏற்கக் கூடாது.குஜராத்தில் சில உள்கட்டமைப்புகள் நன்றாக இருக்கலாம். ஆனால் கல்வி மற்றும் சுகாதாரத்தில் அந்த மாநி லம் கடந்து வர வேண்டிய தூரம் நிறைய உள்ளது.
சகிப்புத் தன்மையில் நீண்ட பாரம்பரியம் கொண்ட இந்தியாவில், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான நிலை உள்ளது என பெரும் பான்மை மக்கள் எண் ணுமளவுக்கு மோடி நடந்து கொள்ளவில்லை என்றார்.
ஆசிரியருக்குக் கடிதம்
திருநெல்வேலியில் திருப்பம்
தமிழர் தலைவர் அவர்களுக்கு, வணக்கம். அய்யா வருகின்ற சூலை மாதம் 28 ஆம் தேதி திருநெல்வேலியில் மன்றல் (ஜாதி மறுப்பு இணை தேடல்) நடை பெறுவது சம்பந்தமாக நானும், மாவட்டத் தலைவர் இரா.காசி அய்யாவும், துண்டறிக்கையை கொடுத்து நிதி உதவி கோரி பல நண்பர்களை சந்தித்தபோது ஏற் பட்ட அனுபவங்களை தங்களிடம் தெரிவிக்க விரும்பி இக்கடிதத்தை எழுதுகின்றேன்.
நாங்கள் இருவரும் அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை யின் இயக்குநர் பொறியாளர் ஆர். ஆதிலிங்கம் அய்யா அவர்களை சந்தித்து துண்டறிக்கையை கொடுத்தபோது மிக்க மகிழ்ச்சி அடைந்தார். அவர் கூறிய வார்த் தைகள் பெரியார் இல்லை என் றால் இங்கு ஒன்றுமே இல்லை அதேபோல் காந்திமதி மருத்துவ மனையின் நிறுவனர் டாக்டர் தங்கராஜ் அய்யா அவர்களை சந்தித்தோம். எங்களால் முடியாத காரியத்தை தங்களுடைய இயக்கம் தான் செய்ய முடிகின்றது என பாராட்டி, ஜாதி மறுப்பு திருமணம் செய்கின்றவர்களுக்கு பொருளா தார நெருக்கடி ஏற்பட்டால் முழு மையாக நான் உதவி செய்கின்றேன் என எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.
பின்பு விடிவெள்ளி மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் சந்திரசேகர் அவர்களைச் சந்தித் தோம். அவர் இப்படிப்பட்ட புரட் சிகரமான திட்டங்களை தங்களால் எப்படி செய்ய முடிகின்றது? எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்களுடைய உழைப்பையும், நேரத் தையும் செலவழிக்கின்றீர்கள் என வியந்து பாராட்டினார். அவரே துண்டறிக்கை, சுவரொட்டி முத லியவற்றை எனக்கு அனுப் புங்கள், நான் பிரச்சாரம் செய்கிறேன் எனக் கூறி அதன்படியும் செய்தார். மண்டலச் செயலாளர் மா.பால் இராசேந்திரம் எங்களை வழி நடத்தினார்.
இந்நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற வேண்டும்; என முடிவு செய்து 74 வயது இளைஞர் இரா.காசி எனது டிவிஎஸ்-50-இல் உட்கார்ந்து கொண்டு காலையில் இருந்து மாலை வரை, என்னுடன் தொண்டு செய்வது எனக்கே ஆச்சரியம்.
அதேபோல் தென்காசி மாவட் டத் தலைவர் டேவிட் செல்லத் துரை அவர்கள், நேரிடையாக நெல்லைக்கே வந்து செய்ய வேண் டிய, செய்த பணிகளை திட்டமிட்டு ஒழுங்குபடுத்திவிட்டு சென்றது, நெல்லை மாநகரத் தலைவர் பி.இரத்தினசாமி, தன் முதுமையை பொருட்படுத்தாது நாங்கள் அழைத்தபோது வந்து பங்கேற்றது, குறிப்பாக கீழப்பாவூர் தோழர் அருண் தன் தொழில் சம்பந்தமாக தொடர்புடைய நண்பர்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு எங்களுக்கு பொருளாதார வசதி செய்தது, தூத்துக்குடி மாவட்ட தலைவர் கனகராஜ் செல்போனில் தொடர்பு கொண்டு, நாங்கள் தோழர்களுடன் நெல்லைக்கு வரு கின்றோம், துண்டறிக்கையை கொடுத்து மக்களிடத்தில் பிரச் சாரம் செய்வோம் என எனக்கு உற் சாகப்படுத்தியது எல்லாம், அவர் கள் பெரியாருக்கு செய்த நன்றி.
நன்றி என்பது பலன் அடைந்த வர்கள் காட்டவேண்டிய கடமையே தவிர, உதவி செய்தவர்கள் எதிர் பார்ப்பது சிறுமைக் குணமே என்ற தந்தை பெரியாரின் பொன்மொழி என் நினைவுக்கு வருகின்றது.
தங்களின் விசுவாசமுள்ள ஊழியன்
- ச.இராசேந்திரன்
திருநெல்வேலி
பசித்திரு - அறியத் துடித்திடு!
ஆப்பிள் கம்ப்யூட்டர் குழுமத்தை ஆலமரமாக வளர்த்தெடுத்த அதன் நிறுவனத் தலைவரான ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) அவர்கள் குறுகிய காலத்தில் புகழ் செல்வத்தையும், தொழிற் செல்வத்தையும் அடைந்து மறைந்தும், மறையாமல் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளிலும் அவரது படைப்புகள், படையெடுப்புகளாக வெற்றி கரமாக சாம்ராஜ்யத்தை அமைத்துவிடும் அளவுக்கு உயர்ந்தார்!
அவர் அமெரிக்காவில் உள்ள பிரபல ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகப் (Stanford University) பட்டமளிப்பு விழாவில் குறிப்பிட்ட பட்டதாரிகளுக்கு வழங்கிய அறிவுரை - இரண்டு வாக்கியங்கள் - உலகம் முழுவதும் பிரபலமாகிப் பயன்படுத்தப்படும் வாசகங்களாக, பொன்மொழி களாக ஆகிவிட்டன!
‘‘Stay Hungry
Stay Foolish’’
‘‘என்றும் அறிவுப் பசியோடு இருங்கள்;
‘‘என்றும் அறியாமையைப் புரிந்து அறிந்து
(கற்று) கொள்ளும் நிலையிலேயே இருங்கள்!’’
இவ்விரண்டு வாக்கியங்களுக்குள், திருவள்ளு வரின் திருக்குறள்போல, ஆழமான முத்தான கருத்துக்கள் புதைந்துள்ளன - அல்லவா?
என்றும் பசியோடு இருப்பவன்தான் எப்போதும் உழைத்திட வேண்டும் என்ற உறுதியோடு அன்றாடம் தன் கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பான்.
பசியோடு இருப்பவன் என்றால் நலம் குன்றாத மனிதன் என்கிற பொருளிலும்கூட இதைப் புரிந்து கூறிய ஸ்டீவ் ஜாப்ஸ் எவ்வளவு பாராட்டுக்குரியவர்!
அவர் பசி என்பது உடல் உணவுக்காக அல்ல; உள்ளத்துப் பசி - அறிவுத்தாகம் கொண்டு அலை வது ஒவ்வொருவரின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பதைச் சுட்டிக் காட்டவே ஆகும்!
அறிவுக்கு எல்லை ஏது? மேலும் மேலும் பல்வேறு செய்திகளை நாம் அறிந்துகொண்டே ஆர்வம் குன்றாத ஆர்வமாக அமைதல்தான் நம்மை பல்முனைகளிலும் உயர்த்திட உதவும்.
இன்றைய புதுமை - வியப்பு!
நாளை அதுவே பழைமை - சாதாரணமாகி விடுகிறது!
வள்ளலார் அவர்கள் பசித்திரு என்று ஒரு சொல்லில் கூறியதை அவரது பக்தர்கள் பலரும் வெறும் அன்னதானத்திற்கு மட்டுமே உரியது என்று ஒரு குறுகிய சிமிழுக்குள் அடைத்துவிட்டனர்!
பசித்திருத்தல் - எல்லாத் துறைகளிலும் தேவை!
எல்லா வயதினருக்கும் தேவை!
எல்லாக் காலங்களிலும் தேவை!!
அடுத்து, நம் அறியாமையை நாம் அறிந்தும் அறிந்துகொண்டும் வளரவேண்டும் என்று அவா வுறுதலும், ஆர்வங்கொண்டு அலைவதும் அவசியம்; மனிதகுல முன்னேற்றத்திற்குரிய முக்கியத் தேவைகள் ஆகும்!
எனக்குத் தெரிந்ததெல்லாம் என் அறியாமை ஒன்றுதான் என்று மிகுந்த தன்னடக்கத்தின் உச்சியில் நின்று, தணியாத அறிவு வேட்கையைப் புலப்படுத்தினார்-
மனித குல மாணிக்கம் உண்மைத் தியாகி
கிரேக்கத்துச் சாக்ரட்டீஸ் அவர்கள்!
நமக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவமும்!
நான் என்ற அகம்பாவமும், நமது, நாங்கள் என்பதைக் கைவிட்டு - நான், எனது என்ற அகங்கார உச்சரிப்பும் வளர்ச்சியைத் தடுக்கும் உச்சகட்ட முட்டுக்கட்டை.
இதைத்தான் அறிவை விரிவு செய் - அகண்ட மாக்கு என்றார் புரட்சிக்கவிஞர்.
அறிதோறும் அறியாமை என்று வள்ளுவர் சொன்னார்.
புதிய பருவங்களில் புதிய சொற்றொடர்கள் புதையல்களாகக் கிடைக்கின்றன நமக்கு!
போற்றுவது முக்கியமல்ல!
பின்பற்றுவதே - அதிமுக்கியமானது - தேவையானது! -----கி.வீரமணி
சங்கராச்சாரி பட்டத்தைப் பறிப்பார்களா?
இந்துத்துவா வெறியரான நரேந்திர மோடி பிரதமராகக் கூடாது என்று நோபல் அறிஞர் அமர்த்தியா சென் கூறியதற்காக அவருக்கு அளிக் கப்பட்ட பாரத ரத்னா விருதைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றால், மதவாதியாக இருந்துகொண்டு அரசியலில் மூக்கை நுழைக்கிறாரே - மோடி பிரதமராக வரவேண்டும்; ராகுல் பிரதமராக ஆகக்கூடாது என்று அரசியல் பேசும் ஜெயேந்திரரிடமிருந்து சங்கராச்சாரி பட்டத்தைப் பறிக்கலாமா?
சங்கராச்சாரியார் அரசியல் பேசலாமா?
பி.ஜே.பி. ஆளும் மாநிலத்திலேயே மோடி புறக்கணிக்கப்படுகிறார்
போபால், ஜூலை 25- மத்தியபிரதேச மாநிலத்தில் பாரதீய ஜனதா பிரச்சார சுவரொட்டிகளில் நரேந்திரமோடி படம் புறக்கணிக்கப்பட்டது.
குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடியை பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக அவர் கட்சியின் பிரச்சார குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரை பல்வேறு மாநிலங்களிலும் பாரதீய ஜனதா கட்சியினர் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் பாரதீய ஜனதா பிரச்சார சுவரொட்டிகளில் நரேந்திரமோடி படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. சிவராஜ்சிங் சவுகான் முதல் அமைச்சராக இருந்து வருகிறார். அவர் தனது அரசின் சாதனைகளை விளக்கி கட்சி சார்பில் 60 நாட்கள் ரதயாத்திரை பிரச்சாரத்தை நேற்றுமுன்தினம் தொடங்கி வைத்தார். இதற்காக பெரிய அளவில் விளம்பரங்கள் செய்து இருந்தார். அதில் வாஜ்பாய், அத்வானி, ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, அனந்தகுமார் ஆகியோரது படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் நரேந்திரமோடி படம் இடம்பெறவில்லை. அனந்தகுமார், அருண் ஜெட்லி போன்றவர்களது படங்கள் இடம்பெற்ற நிலையில் நரேந்திரமோடி படம் இடம்பெறாதது தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நரேந்திரமோடி பாரதீய ஜனதா பிரச்சார குழு தலைவராக நியமிக்கப்பட்டதற்கு அத்வானி எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்தார். பின்னர் சமரசம் ஆனார். முன்னதாக அத்வானி மத்திய பிரதேசம் சென்ற போது சிவராஜ்சிங் சவுகானை பாராட்டி சிறப்பாக ஆட்சி செய்வதாகவும், மத்திய பிரதேச மாநிலம் வேகமாக முன்னேறி வருவதாகவும் புகழ்ந்து பேசினார்.
நரேந்திர மோடிக்கு முக்கியத்துவம் அளிப்பதை வைத்தே அவர் இவ்வாறு சவுகானை உயர்த்தி பேசினார். இது கட்சி தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு உத்தரகாண்ட் மாநிலம் சென்ற நரேந்திர மோடி அங்கு தவித்த தனது மாநில பக்தர்களை மட்டும் மீட்டு அழைத்து வந்தார். மத்திய பிரதேச மாநில பக்தர்களை அவர் கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக நரேந்திரமோடி மீது மத்திய பிரதேச மாநிலத்தில் அதிருப்தி நிலவியது.
இதன் வெளிப்பாடுதான் நரேந்திரமோடி படம் இடம் பெறாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இரண்டு வாங்கினால் ஒன்று இனாம்!
கடைகளில் விலை போகாமல் சரக்குகள் தேங்கிவிட்டால், என்ன செய்வார்கள்? இரண்டு வாங்கினால் ஒன்று இனாம் என்பார்களே - அதுபோல, கட்சிக்கு ஆயிரம் பேர்களைத் திரட்டிக் கொடுத்தால், மோடியைச் சந்தித்துப் பேசலாமாம்!
கட்சிக்கு ஆள் சேர்ப்பது கொள்கை அடிப்படையில் கிடையாதோ! கடைகளில் வாங்கும் கத்திரிக் காய்களோ!
நல்ல கட்சியப்பா, பி.ஜே.பி.!
ஜெயேந்திரர் ஆர்.எஸ்.எஸ். ஆசாமி - சந்தேகம் வேண்டாம்!
கொலைக் குற்ற வழக்கில் சிக்கிப் பிணையில் நடமாடிக் கொண்டிருக்கும் திருவாளர் ஜெயேந்திர சரசுவதி - ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று எத்தனையோ முறை ஆதாரங்களுடன் விடுதலை எடுத்துக்காட்டிய துண்டு; திராவிடர் கழகம் அடையாளம் காட்டியதுண்டு. அவற்றை நம்பாதவர்கள் எவரேனும் இருந்தால் நேற்று ஏடுகளில் அவர் வெளியிட்ட கருத்துகளைப் படித்த வர்களுக்குச் சந்தேகம் தீர்ந்திருக்கும்
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்காக பாரதீய ஜனதா முன் நிறுத்தினால் அது வர வேற்கத்தக்கது. நரேந்திரமோடி தகுதியான வேட்பாளர். நிர்வாகத் திறமை மிக்கவர். அவருக்கு கடவுள் அருளாசி உண்டு. எனது வாழ்த்துக்கள்!
ஆனால் சோனியாகாந்தி வெளிநாட்டுக்காரர் என்பதால் அவரது மகன் ராகுல் காந்திக்கு இந்தியா வுக்குத் தலைமை தாங்கும் தகுதி கிடையாது என்றே கருத வேண்டியுள்ளது.
நரேந்திரமோடி - ராகுல்காந்தி இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நரேந்திர மோடிக்குத்தான் முதலிடம் கிடைக்கும். நிர்வாகத் திறமை ஆற்றல் படைத்த மனிதர். மிகப்பெரிய சாதனையாளர். குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றவர். மதச்சார்பற்ற ஆட்சியை அவர் தருவது நிச்சயம். - இவ்வாறு காஞ்சி சங்கராச்சரியார்(?) ஜெயேந்திரர் கூறியுள்ளார்.
மேற்கண்டதைப் படிப்போர் தெளிவாகவே ஒன்றைத் தெரிந்துகொள்ளலாம். மோடியை பி.ஜே.பி. சார்பில் பிரதமராக நிறுத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ்ஸே முக்கிய காரணமாகும்.
மோடி, தன்னை ஒரு இந்துத் தேசியவாதி என்று சில நாள்களுக்கு முன்புதான் வெளிப்படையாகப் பேட்டி ஒன்றில் கூறினார்.
நரேந்திர மோடி மதச் சார்பற்ற கொள்கைக்கு எதிரானவர் என்று பி.ஜே.பி.யைத் தவிர அனேகமாக எல்லாத் தரப்பினரும் எடுத்துக் கூறிவிட்டனர். மதச் சார்பற்ற தன்மைக்கு தம் வசதிக்கு விளக்கம் கூறித் தப்பிக்கப் பார்க்கிறார்.
குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை இன் றளவும் நியாயப்படுத்திக் கொண்டு இருக்கிறார். அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் அடித்துக் கூறுகிறார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதுகூட இதே மோடி என்ன சொன்னார்? இந்துக்கள் ஆண் மக்கள், பேடிகள் அல்லர் என்பதை நிரூபித்துவிட்டனர்! என்று கருத்துக் கூறிய பேர்வழிதான் இந்த மோடி.
அத்தகைய ஒருவர்தான் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என்று ஒருவர் சொல்லுகிறார் என்றால், அவர் இன்னொரு மோடியாகத்தானிருக்க முடியும்.
மோடியை ஆதரிப்பதோடு அவர் நிற்கவில்லை. மிகவும் பச்சையாக காங்கிரஸ் சார்பில் பிரதமருக்கு முன்னிறுத்தப்படுபவரைப்பற்றியும் விமர்சனம் செய்கிறார் என்பதையும் கவனிக்கவேண்டும்.
பி.ஜே.பி.யின் தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார்; மோடி பிரதமராக வரவேண்டும் என்பதற்குத் தனிப் பிரிவை ஏற்படுத்தி அதற்கு இந்த ஜெயேந்திரரை பிரச் சாரக் குழுத் தலைவராக அறிவிப்பதுபற்றி பி.ஜே.பி.யோ, சங் பரிவாரமோ ஆழமாகவே யோசிக்கலாம்.
நெருக்கடிநிலை காலத்தில் தலைமறைவான ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு இவர் உதவி புரிந்ததை நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம் எனும் நூலில் இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் திருவாளர் இராம.கோபாலன் 222 ஆவது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கருநாடகத்தில் ஸ்ரீபேஜாவார் சுவாமிகள், நெருக்கடி வந்த முதல் வாரத்திலேயே ரூ.1001 கொடுத்ததுடன், செல்லும் இடமெல்லாம் ஆர்.எஸ்.எஸ்ஸுக்காகப் பிரச்சாரம் செய்து வந்தார்; காஞ்சி காமகோடிப் பீடம் ஸ்ரீஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் தலைமறைவு இயக்கத்திற்குப் பல விதங்களில் உதவியுள்ளார். தலைமறைவு இயக்கத்தவர்கள் அவரை அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர் என்று திருவாளர் இராம. கோபாலன் குறிப்பிட்டுள்ளார் என்றால், ஜெயேந்திரர் காவி உடையில் திரியும் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பது விளங்கவில்லையா?
அயோத்தியில் கட்டடத்தை இடித்தது கிரிமினல் நடவடிக்கை எனக் கூற முடியாது. இதற்காக மத்திய அமைச்சர் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை (தினமணி, 27.11.2000) என்று சொன்னவரும் இந்த சாட்சாத் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்தான்.
ஒரு வகையில் ஜெயேந்திர சரசுவதி, நரேந்திர மோடியை வெளிப்படையாக ஆதரித்ததும் நல்லதாகவே போய்விட்டது.
கொஞ்ச நஞ்சம் அரசல்புரசலாக இருப்பவர்கள்கூட, நாட்டை மதத்தின் பெயரால் அமளிக்காடாக மாற்றத் துடிக்கும் ஒரு கூட்டம் கிளம்பிவிட்டது என்பதை வெகுமக்கள் தெரிந்துகொள்ள, புரிந்துகொண்டு செயல்படப் பெரும் உதவியாகவே போய்விட்டது - அந்த வகையில் வரவேற்கவும் செய்யலாம்.
தொல்லை
வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)
ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப்பாட்டம் தோழர்களே, கவனம்! கவனம்!!
தமிழர்களைச் சூத்திரர்கள் என்று சொல்லும் - இன்றைய கோயில் அர்ச்சகர் முறையை எதிர்த்தும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தியும் ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப்பாட்டம் அனைத்துக் கழக மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெறுவதற்கான தகவல்கள் குவிந்து கொண்டுள்ளன.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவுக் கரம் நீட்டும் அமைப்புகளையும் (தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஏற்கெனவே ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்). அரவணைத்து எழுச்சியுடன் ஆர்ப்பாட்டத்தை நடத்துவீர்! அரசுகளின் காதுகளுக்கும், நீதிமன்றத்தின் காதுகளுக்கும் எட்டட்டும்! எட்டட்டும்!! மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் தத்தம் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் தோழர்களின் பட்டியலையும் சேர்த்து, சிந்தாமல், சிதறாமல் ஆர்ப்பாட்டத்தை நடத்துவீர்! நடத்துவீர்!! காவல்துறைக்கு அனுமதி கேட்டுக் கடிதம் கொடுத்துவிட்டீர்களா?
- தலைமை நிலையம், திராவிடர் கழகம்
அன்பு வளர முடியும்
நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், சாதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும்.
(விடுதலை, 20.9.1968)
அண்ணா பெயரில் சமூக அநீதியா?
ஆசிரியருக்குக் கடிதம்
அண்ணா பெயரில் சமூக அநீதியா?
நாகை மாவட்டம் தெற்கு மருதூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கே.குமாரவேலு என்பவர் (ஆசிரியர் தகுதித்தேர்வில் 83 மதிப்பெண் பெற்றவர்) தன்னை பணியில் அமர்த்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர், டி.இ.டி. தேர்வில் மதிப்பெண் தகுதியில் யாரும் சலுகை கோர முடியாது.
தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உட்பட எந்த பிரிவினராயினும் டி.இ.டி. தேர்வில் குறைந்தபட்சம் 90 மதிப்பெண் எடுக்க வேண்டும் என வாதிட்டார். அரசு தரப்பு வாதத்தை ஏற்றுகொண்ட நீதிபதி மாற்றுத் திற னாளியின் மனுவை தள்ளுபடி செய்தார். "அண்மை யில் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை.
3 சதவீத இட ஒதுக் கீட்டுப்படி மாற்றுத் திறனாளிகளுக்கு 360 இடங்கள் ஒதுக்கப்படவேண்டும். மாற்றுத் திறனாளி ஒருவர் கூட பணியில் அமர்த்தப்படவில்லை. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் பிரிவுக்கு மனு கொடுத்தேன். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரையும் சந்தித்து மனு கொடுத்தேன். ஆனால் 90 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பணிநியமனம் குறித்து பரிசீலிப்பதாக அவர் கூறினார்.
மாற்றுத் திறனாளி களுக்கு முன்னுரிமை கொடுத்து, இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் மற்றும் அரசாணை குறித்து நான் கேட்ட விளக்கங்களை அதிகாரிகள் அளிக்கவில்லை. இவை பின்பற்றப்படாமல் காற்றில் பறக்க விடப் பட்டுள்ளன.
இதனால் சமவாய்ப்பு அளிக்கும் அரசியல் சாசனம் மீறப்படுகிறது." என்று வழக்கு தொடுத்தவர் நீதி மன்றத்தில் கூறியுள்ளார். அதற்கு அரசு தரப்பின் பதில் என்ன? அந்தப் பணியிடங்கள் காலியாக வைக்கப் பட்டுள்ளனவா? அந்த இடத்தில் மாற்றுத் திறனாளி அல்லாத ஒருவரை பணியில் அமர்த்துவது சட்டப்படி குற்றமல்லவா? இதே நிலைதான் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்கள் விஷயத்திலும் பின்பற்றப் பட்டிருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகிறதே!
- கி.தளபதிராஜ், மயிலாடுதுறை
மொட்டைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!
-ஊசி மிளகாய்
நம்மூரில் - திருப்பதி - பழனி - என்று வேண்டுதலை என்ற பெயரில் - பக்தி மூடநம்பிக்கை காரணமாக திருப்பதி, வெங்கடாஜலபதிக்கும், பழனி முருகனுக்கும் இன்னும் சில கடவுளர். கடவுளச்சிகளுக்கும் மயிர்க் காணிக்கை என்பது பய பக்தியுடன் தரப்படுவதாகும்.
எந்தப் பார்ப்பனரும் திருப்பதியிலோ, பழனியிலோ அல்லது வேறு எந்த கோயிலிலேயோ மயிர்க் காணிக்கைக்காகத் தலையை மொட்டை அடித்துக் கொள்ளுவது கிடையாது!
முன்பெல்லாம் அக்கிரகாரத்து விதவை மாமிகள் - மொட்டை அடித்துக் கொண்டு வெள்ளை சேலை உடுத்திக் கொண்டு, ரவிக்கை மொட்டைப் பாப்பாத்திகள் என்ற நாமகாரணத்துடன் உலா வருவார்கள்!
இப்போது எங்கும் அப்படி ஒரு காட்சியை அக்ரஹாரங்களில் பார்க்கவே முடியாது; காரணம் அவர்கள் மாறி விட்டார்கள். ஆனால் நம் சூத்திர ஜாதிகளில் இன்னமும் வெள்ளைச் சேலை ரவிக்கை தியாகத்துடன் உள்ள பெண்களைக் காண முடிகிறதே!
குன்றக்குடி அடிகளார் சொல்வார்: பேயைவிடக் கொடுமையாக ஆடுவர் பேய் பிடித்தவர் என்று நகைச்சுவையாக; அதை நிரூபிப்பதாக இருக்கும் நம் பெண்களின் இத்தகைய வேடம்!
இதோ இந்தப் படத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் (பெரிய) சீனியர் புஷ் அவர்களும் ஒரு சிறுவனும் உள்ளனர்!
இந்தப் பையனின் உணர்வுகளுக்கு உரமூட்ட, பெரிய புஷ் அவர்கள்தானே முன் வந்து தலையை மொட்டை அடித்துக் கொண்டாராம்!
சீனியர் புஷ் அவர்களின் பாதுகாப்புக் குழுவில் உள்ள(Security - Men) ஒருவரின் மகன் (அப்பையனுக்கு 2 வயதுதான்) ரத்தப் புற்றுநோய் வந்து(Leukaemia) அந்த சிறுபிள்ளைக்குச் சிகிச்சை தருவதால் தலை மயிர் உதிர்ந்து விட்டது. (கீமோதெரப்பி தருவதன் விளைவால் மயிர் உதிர்ந்து விடும்) அதனால் மொட்டை அடித்து விட்டனர்.
தனக்கு இப்படி மொட்டை அடித்து விட்டார்களே என்று அப்பிள்ளை மனதுக் குள் வருந்தினான். அவனது நோய் குணமாவதற்கு அது ஒரு தடையாக அமைந்துவிடும்; எனவே அவனது மன நிலையை நல்ல வண்ணம் பக்குவப்படுத்த வேண்டும் என்பதற்காக பெரியவர் புஷ் அவர்கள் தன் தலையை மொட்டையடித்துக் கொண்டு அவனிடம் விளையாடி அந்தச் சிறுவனுக்கு மகிழ்ச்சியை ஊட்டிக் கொண்டுள்ளார்!
எப்படிப்பட்ட மனிதநேயம் பார்த்தீர்களா?
அவரது சக்கர நாற்காலியில் (அதுதான் பெரிய புஷ் அவர்களின் தற்போதைய புழக்கத்திற்குரியது) அந்தப் பையனைப் போலவே நீலக்கலர் சட்டை அணிந்து கொண்டு அந்தப் பையனையும் தூக்கி தன் மடியில் (சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே) வைத்துக் கொண்டு அவனுக்குத் தெம்பூட் டும் காட்சி - எவ்வளவு அருமையான காட்சி என்பதைப் பார்த்தீர்களா!
மூடநம்பிக்கையினால் மொட்டை போடு வது சுயநலத்தின் - வெளிப்பாடு! பண்ட மாற்றின் ஒரு பரிமாணம்! ஆனால் பெரிய புஷ்ஷின் மொட்டை - ஒரு புதிய பரிமாணம்; மனிதநேயம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அருமையான எடுத்துக்காட்டு அல்லவா!
‘Empathy’ என்ற சொல்லுக்கு இதைவிட நல்லதோர் விளக்கம் வேறு இருக்கவே முடியாது!
பிறரைப் பார்த்து அவர் நிலைக்காக பரிதாபப்படுவது - Sympathy - வெறும் இரக்கம்!
பிறரின் துன்ப நிலையில்தன்னை வைத்து அவரது மன உணர்வினையே பெறுவது Empathy -- இரக்கத்தைவிட மேலானது; ஒத்தது அறிதல்!
சென்னை அய்.அய்.டி.யின் சமூகஅநீதிக்கு எதிராக - நீதிபதி நாகமுத்து அவர்கள் வழங்கிய சிறப்பான தீர்ப்பு!
சென்னை அய்.அய்.டி.யின் சமூகஅநீதிக்கு எதிராக - நீதிபதி நாகமுத்து அவர்கள் வழங்கிய சிறப்பான தீர்ப்பு!
சி.பி.அய். விசாரணை என்பது மிகவும் வரவேற்கத்தக்கதே!
அய்.அய்.டி.யில் நடைபெற்றுள்ள அத்தனை குறைபாடுகளையும் சி.பி.அய். வெளியில் கொண்டு வர வேண்டும்!
தொடர் வெற்றிகளுக்காகவும் போராடுவோம்!
தமிழர் தலைவரின் முக்கிய சமூகநீதி அறிக்கை
சென்னை அய்.அய்.டி.யில் சமூக நீதிக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்று வரும் அட்டூழியங்களைக் கண்டுபிடிக்க, சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப் பினை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சென்னை அய்.அய்.டி. என்பது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை (H.R.D.) என்ற கல்வித் துறையின்கீழ் இயங்கும் ஒரு மத்திய கல்வி நிறுவனம்; இதற்கென ஆளு மைக்குழுவும், ஆளுநரும் உண்டு என்றாலும், இதன் இயக்குநர்களாக தொடர்ந்து உயர் ஜாதி (பார்ப்பனரே) வந்ததோடு அல்லாமல், இந்திய அரசியல் சட்டத்தின் 16ஆவது விதியின்படி பின்பற்றப்பட வேண்டிய இடஒதுக்கீட்டை அறவே புறக்கணித்து, I.I.T. என்றால், “Iyer Iyyangar Tennancy” என்று பார்ப்பவர் எவருக்கும் எளிதில் தெரியும் வண்ணமே அது நடந்து கொண்டு வந்துள்ளது! வருகிறது!!
தகுதி - திறமையுள்ள ஒடுக்கப்பட்டோருக்கு முட்டுக்கட்டைகள் - தொல்லைகள்!
தகுதி திறமை என்ற அளவுகோல்படிப் பார்த்தாலும் முன்னேறிய ஜாதியினருக்குச் சளைக்காத ஆற்றல் உள்ள பார்ப்பனரல்லாத வர்கள், S.C., S.T., OBC., MBC போன்ற வகுப் பினர் எவர் உள்ளே நுழைந்தாலும்கூட, அவர்களை ஆதிக்க அதிகார வர்க்கம் தடுத்து, அடக்கி, அல்லது சதா குற்றம் கண்டு, நிம்மதி யற்ற நிலைக்கே தள்ளி, அவர்களாகவே பணியை விட்டு விட்டு ஓடும்படியாகச் செய்வது - தலைமையை அபகரித்துள்ள பார்ப்பன எஜமானர்களின் புனிதக் கடமையாகவே - தர்மமாகவே - இருந்து வந்துள்ளது!
இதை எதிர்த்து நாமும் ஒத்த கருத்துள்ள பல்வேறு அமைப்புகளும் அறப் போராட்டங்களை நடத்தியுள்ளோம். பல அறிக்கைகளையும் வெளியிட்டு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளோம்.
ஏனோ மத்திய அரசின் காதுகளில் இவை இன்னும் விழுந்ததாகவே தெரியவில்லை; அதன் பார்வை இந்தக் கொடுமைகள் - அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளையே - பின்பற்றாத - இந்தக் கொடுமைகள் பக்கம் திரும்புவதே யில்லை!
எத்தனையோ தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட பேராசிரியர்கள் புழுக்களைப் போல ஆதிக்கக் கொடுங் கரங்களால் அழுத்தி மிதிக்கப்பட்டே வைக்கப்பட்ட வரலாறு பழைய வரலாறே ஆகும்! இது கொடுமையிலும் கொடுமை.
நீதியரசர் நாகமுத்து அவர்களின் சிறப்பான தீர்ப்பு!
இதனால் வெகு காலமாக பாதிக்கப்பட்ட - வர்ணிக்க முடியாத அளவுக்கு மன உளைச் சலுக்கு ஆளாகிய பேராசிரியை டாக்டர் வசந்தா அவர்கள் கணித மேதை - அவரது பாட நூல்கள் பலவும் அவரது ஆற்றலைப் பறைசாற்றுபவை - சென்னை உயர்நீதிமன்றத் தில் ஒரு ரிட் மனு போட்டு நியாயம் கேட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்பமை ஜஸ்டீஸ் திரு எஸ். நாகமுத்து அவர்கள், ஒரு நல்ல தீர்ப்பை வழங்கி யுள்ளார்கள்!
1995 முதல் 26.9.2000 வரை சென்னை அய்.அய்.டி.யில் நடைபெற்ற பணி நியமனங்கள் தொடர்பான உண்மைகளை அறிய சி.பி.அய். புலன் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தர விட்டுள்ளார்கள்.
மேலும் மனுதாரர் டாக்டர் வசந்தா கடந்த 27.7.1995 முதல் இணைப் பேராசிரியராக 18.12.1996 முதல் பேராசிரியராகவும், அய்.அய்.டி.யில் பணியாற்றி வருவதாகக் கருதப்பட வேண்டும்.
அந்த அடிப்படையில் எதிர் காலத்துக்கான அவரது ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி அவர்கள் தமது தீர்ப்பில் கூறியுள்ளார்கள்!
சமூகநீதிக்குக் கிடைத்த வெற்றி!
இது சமூக நீதிக்குக் கிடைத்த நியாயமான வெற்றி! இதுகூட தாமதத்துடன் கிடைத்தது என்றாலும் - மறுக்கப்படாமல் கிடைத்ததே என்ற மகிழ்ச்சி! இந்த மனிதவளத்துறை கல்வியகங்களில் நசுக்கப்பட்டு வந்த பல ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்டோர் சற்று நிம்மதிப் பெரு மூச்சு விடுவர்!
சி.பி.அய். செய்ய வேண்டியது என்ன?
நீதியரசர் வழங்கிய நியாயத்திற்கான தீர்ப்பினைப் பாராட்டுகிறோம். அய்.அய்.டி.யில் - அரசியல் சட்டம் விதித்துள்ள உரிமைகள் அனைத்தும் (அவை சலுகைகளோ, பிச்சை களோ அல்ல) ஒடுக்கப்பட்டோருக்குக் கிட்டும் வண்ணம் சி.பி.அய்.யின் விசாரணை அறிக்கை அமைவது அவசியம்! அய்.அய்.டி. தொடர்பான பல்வேறு குறைகள் கண்டு அறியப்பட்டு களையப்படல் வேண்டும்; அதனைக் கண் காணிக்க வேண்டிய பொறுப்பு சென்னை உயர்நீதிமன்றத்திற்குரிய கடமையாகும்.
இதற்கு முன்பு பொறுப்பிலிருந்த பலரும் தப்பிவிடக் கூடாது! கூடவே கூடாது!
இது ஒரு கட்டம்தான். மேலும் சமூகநீதி பெறுவதற்கு பல கட்டங்கள் அங்கே தேவைப் படும்.
தொடர் வெற்றிக்காகப் போராடுவோம்!
இந்த வழக்கில் சொல்லப்பட்ட தகவல்கள், ஒரு பனிப்பாறையின் முனைதான் (Tip of the iceberg) k£Lnk! மட்டுமே!
எனவே சமூகநீதிப் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள வெற்றியின் வெள்ளி முளைத் துள்ளது இப்போது!
தொடர்ந்து நாமும் விழிப்போடு இருப்போம் -விழிப்புணர்வை உருவாக்கி அறவழியில் போராடுவோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
26.7.2013
ஆன்மா பற்றி மொக்கலவாதக் கருத்து
கடவுளை உண்டு பண் ணினவனை விட ஆன் மாவை உண்டு பண்ணினவனே அயோக்கியன் என தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். இதே கருத்தை வலியுறுத்தும் வண்ணம் பவுத்தத்தைச் சார்ந்த மொக் கல வாதக் கருத்தும் (நை ராத்ம வாதம் அல்லது ஆன்மா இல்லை என்கின்ற வாதம்) அமைந்திருப்பதை நீலகேசி என்னும் நூலில் மொக்கல வாதசருக்கத்தில் காணலாம்.
ஆன்மா அடங்காத ஒன்றா?
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரியங் களும், (அறிவுக்கருவிகள்) வாக்கு, பாணி, பாதம், குதம், குய்யம் ஆகிய கர்மேந்திரியங்களும் (தொழிற்கருவிகள்) இவ்வுடல் அடங்கும் பொழுது தானாகவே அடங்கி விடுகின்றன அல்லவா? அங்ஙனமிருக்க ஆன்மா மட்டும் ஏன் அடங்காது?
ஆன்மா ரூபமுடையது என்பீரேல்; சரீர பிரமாணத் ததா? அப்படியானால் சரீரத்துக்குள் புகாது. காரணம்? ஒரே அளவுள்ள இரு குடங்கள் ஒன்றினுள் ஒன்று புகமுடியாது போலாம் என்றறிக!
ரூபம் அற்றது என்றாலோ? ரூபமற்ற ஆன்மா ரூபமாகிய சரீரத்துக்குள் புக முடியாது.
ரூபமாகவும், அரூபமாகவும் உள்ளது என்றாலோ இரு வகைத்தும் குற்றமே என்றறிக! (நீலகேசி மொக்கலவாதச்சருக்கம், பக்கம்-3)
இதிலிருந்து ஆன்மா என்பதே ஒரு பொய்க் கற்பனை என்பதும், உடலுக்குள் புகுவதும், பிறகு உடல் செயலற்றுப் பிணம் என்றாகி விட்டால் அந்த உடலை விட்டு வெளியேறிவிடுகிறதென்பதும், மீண்டும் வேறு உடலை ஏற்றுக் கொள்கிறதென்பதும் சுத்தப் புரட்டு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
சேலம் ர.ஒந்தாட்சி
அமைச்சர்கள் கோவிலுக்குப் போவது சட்ட விரோதம்!
அமைச்சர்கள் கோவிலுக்குப் போவது சட்டவிரோதம் என்று ஜப்பான் நாட்டில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. ஜப்பான் மதச்சார்பு இல்லாத நாடுஎன்று அதன் அரசியல் சட்டம் கூறுகிறது. அதன்படி, அமைச்சர்கள் கோவிலுக்குப் போவது சட்ட விரோதம் என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியிருக்கிறது. இந்தத் தீர்ப்புப்படி ஜப்பான் மன்னரும் கோவிலுக்குப் போக முடியாது. இந்த சட்டம் இந்தியாவிற்கு?
(ராணி, 3.1.1991)
மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்...
பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞானமுடைய எவனும் கூற முன்வரமாட்டான். சமூக வாழ்வில் ஒருவன் பெற்றிருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படுகிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான்றாகும்.
இந்தியாவிலே கோடீசுவரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரிகளுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன? ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயிருக்கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியாவிலே மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடைய வனாயிருக்கிறான்.
- டாக்டர் அம்பேத்கர்
அம்பேத்கர் கூற்று!
இந்த நாடு வெளிநாட்டுக்காரர்களின் ஆளு கையால்தான் காலங்காலமாய் இருந்திருக்கிறது. அடிமைத் தனத்திலேயே சுகங்கண்டவர்கள் இந்தியர்கள். இதற்கெல்லாம் காரணம் சாதி தவிர, வேறு ஏதாவது காரணம் கூற முடியுமா? காந்தி இதைக் கொஞ்சமாவது உணர்ந்திருக்கிறாரா? சித்த சுவாதீனம் இல்லாதவனைப் போலவும், தற்கால மனிதனைப் போலவுமே இருக்கிறது அவரது பேச்சும் நடவடிக்கையும்.
- டாக்டர் அம்பேத்கார்
காற்பலம் குறைவு
ஒரு சைவன் சுயமரியாதைகாரனானான். பின்னர் அவனை நிறுத்துப் பார்த்ததில் - எடையில் காற்பலம் குறைவு ஏற்பட்டது; விபூதியிடுவது நீங்கியதால்!
****************************
கண்ணு: உழைப்பை நிறுத்தி விட்டால் உடம்பு பெருக்கிறதா என்று பார்க்க போகிறேன்.
வேணு: ஏன் பார்ப்பனர்களில் சதை இல்லாத ஆசாமி இல்லையா?
- புரட்சிக்கவிஞர்
ஈரேழு லோகமாம்!
கண்ணன் வாயைக் காட்ட அவன் வாயில் ஈரேழு பதி னான்கு உலகமும் இருப் பதை நேரில் அவன் தாய் கண்டாள் என்று சொற்பொழி வாளர் கூறியதும் கூட்டத்திலிருந்து கேள்வி கேட்கிறார்:
ஒரு கேள்வி:- ஏனையா, வாய்க்குள் ஈரேழு லோகங் களும் புகைபோல் தெரிந் தனவா? திருத்தமாகவா?
உபந்யாசகர்:- முட்டாளே! அசல் உலகங்கள்! உலகத்தில் உள்ள ஒன்று விடாமல் தெரிந்தன என்று தாய் ஆச்சரியப்பட்டாள்.
மற்றொரு வேண்டுகோள்:- அய்யா! உபந்நியா சகரே! இந்தக் கடிதத்தை அந்த அம்மாவிடம் கொடுத்து, தயவு செய்து (வாய்க்குள் தெரிவதால்) சுலபமாய்ச் சென்னை - பாரிஸ் வெங்கடாசல அய்யர் வீதி நெ.17 வீட்டின் குறட்டில் போட்டு விடச் சொன்னால் போதும் அவசரமான லெட்டர். ஸ்டாம்பு வாங்கக் காசில்லை.
-புரட்சிக் கவிஞர், (பாரதிதாசன் கதை: 100
அப்பா, ஒரு சந்தேகம்!
மகன்: ராஜகோபுரத்தின் முன்னே தீ அணைப்பு மோட்டார் நிறுத்தி வைத்திருக்கிறார்களே எதற்கு?
தகப்பனார்: தீ விபத்து ஏற்பட்டால் அணைப்பதற்கு.
மகன்: சாமி நெருப்பு பிடிக் காமல் பார்த்துக் கொள்ளாதா?
தகப்பனார்: (மகனை முறைத்து பார்க்கிறார்.)
மகன்: (பயந்து கொண்டு) அப்பா.
தகப்பனார்: என்னடா?
மகன்: என் மேலே கோவிக்காமல் சொல்லுப்பா.
தகப்பனார்: சரி என்னத்தை கேக்கப்போற?
மகன்: சாமி தூக்கி வரும்போது பக்கத்திலேயே ஏராளமான போலீஸ்காரர்கள் சூழ்ந்து கொண்டு வருகிறார்களே எதுக்கப்பா?
தகப்பனார்: அட, இது தெரியலியே உனக்கு! சாமிக்கு போட்டு வைத்திருக்கிற தங்கம், வைரம், இவைகளைக் கொண்டு செய்த விலை மதிப்பு போட முடியாத நகைகளை திருடர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு போகாமல் பாதுகாத்துக் கொள்ள வரு கிறார்கள்.
மகன்: சாமியே பார்த்துக் கொள்ளாதா அப்பா?
தகப்பனார்: சரி, சரி நீ வீட்டுக்கு வாடா உன் தோலை உரித்துவிட்டு மறு வேலை பார்க்கிறேன்.
- வி.வாசுதேவன், திருவொற்றியூர், சென்னை.
குறும்பா
தேள் கொட்டினால்
விஷம் தீண்டினால்..
கோயிலுக்கா போகிறார்கள்?
கடவுளையா வேண்டுகிறார்கள்?
ஆஸ்பத்திரிக்குப் போகிறார்கள்
டாக்டரை அணுகுகிறார்கள்!
இதைத்தான் சொன்னார்
பெரியார்!
கடவுளை மற
மனிதனை நினை என்று!!
- கோ.கலியபெருமாள்,
மன்னார்குடி
சொல்லும் அதில் புதைந்துள்ள கதையும்
-மு.வி.சோமசுந்தரம்
கோர்டியன் முடுச்சி என்று ஆங்கிலத்தில் குறிப்பிடக்கூடிய சொல்லின் தோற்றக் கதையும் விளக்கத்தையும் காணுவோம்.
கிரேக்க பழமை இலக்கியத்துடன் தொடர்பு கொண்டது. இந்த சொல், கோர்டியஸ் ஒரு குடியானவர். அவன் பிறகு பிரிகியா என்ற நாட்டின் அரசனாவதற்கு முன்னதாக, தன்னுடைய வண்டி யில் நுகத்தடியில் காளை மாட்டை சிக்கலான முடிச்சை பயன்படுத்தி பூட்டினான். அவன் அந்த வண்டியை குறி சொல்லும் கிரேக்கக் கடவுள் சீயஸ் 99 தலத்தில் காணிக்கையாக செலுத்தினான். சீயஸ். யார் இந்த நுகத்தடி முடிச்சை அவிழ்க்கிறார்களோ அவர் ஆசியாவின் அரசனாவார். என்று குறி சொல்லியது. பலர் முயற்சித்தனர். தோல்வியே கண்டனர். அலெக்ஸாண்டர் கோர்டியான் பகுதிக்கு வந்தபோது, சீயஸின் விசித்திரமான குறியைப் பற்றி கேள்வி பட்டு, சீயஸ் கோயில் தலத்துக்குச் சென் றான். சிக்கல் முடிச்சை அவிழ்ப்பதற்குப் பதிலாக, தன்னுடைய வாளை எடுத்து அந்த முடிச்சை வெட்டினான். தொடர்ந்த படையெடுப்பின் மூலம் ஆசியாவின் பேரரசனானான்.
இந்த சொல்லானது, சிக்கலான ஒரு பிரச்சினைக்கு, சாதுரியமான தீர்வை கையாளுவதைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது. அதாவது விரைவாகவும் துணிச் சலுடனும் செயல்படுவதைக் குறிக்கும்.
எடுத்துக்காட்டாக நிர்வாகத்தில் சிக்கலும் சச்சரவையும் ஏற்படுத்தும் ஊழி யர்களை நிர்வாகத் தலைவர் அவர்கள் அனை வரையும் வேலையைவிட்டு நீக்கினார்.
(நன்றி: தி இந்து, Know Your English)
தனிக்கட்டையின் தவிப்பு
- வச்சலா சோமசுந்தரம்
கேரி வாக்கியருக்கு மன உளைச் சல் பணி மனையிலும் சங்கடமான சூழ்நிலை நாள் முழுவதும் அலு வலகத்தில் தனி ஆணாக 120 பெண் களுடன் இயங்கும் அலுவலகத்தில் செயல்பட வேண்டிய கட்டாய நிலையில் கேரி வாக்கியர் இருந்தார்.
கேரி வாக்கியர் ஆறடி உயரத் தினராக எழிலான தோற்றத்துடன், தலைமை அஞ்சலகத்தில் கணக்கு பிரிவில் பணியாற்றும் பிரம்மச்சாரி வயது 18 தான், பணி செய்யும் பெண்கள் அவரைத் தொல்லையின் எல்லைக்கே தள்ளிவிட்டனர். அலுவலகத் தொழிற்சங்கத்தில், தன்னை வேறு அறைக்கு மாற்றம் செய்யும்படி வேண்டுகிறார் பணித் தொல்லை என்பதைக் காரணமாக மனுவில் குறிப்பிட்டார்.
என்னைத் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். நான் பெண்களைப் போற்றுகிறேன், என்று சமாதானம் வேறு கூறினார். 120-க்கிடையில் ஒன்று இருப்பது அச்சப்பட வேண்டிய ஒன்று தானே நாள் முழுவதும் அலுவலகத்தில் உப்பு சப்பற்ற பேச்சு, சிரிப்பு சத்தம் எங்கும் நறுமணம் கவ்வியிருக்கும். சங்கடமும், சித்தரவதையும் தாங்க முடியவில்லை. ஆனாலும் கேரி சகித்துக்கொண்டுதான் இருக்க வேண்டும். ஏன்? மாற்றம் கேட்டு விண்ணப்பித்த கேரியின் மனு ஏற்கப்படவில்லை.
(நன்றி: தி இந்து 3.4.2013 - 50 ஆண்டுகளுக்கு முன் பகுதி செய்தி)
காய்கறியில் என்ன இருக்கு?
வாழைத் தண்டு: கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்கள், வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளன. இது சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருந்தால் கரைக்க உதவும்.
வாழைப்பூ: கால்சியம், பாஸ்பரஸ், புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி உள்ளன. மலச்சிக்கலை போக்க உதவும்.
வாழைக்காய்: இரும்புச் சத்து, போலிக் ஆசிட், வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. கருவுற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசோகையைத் தடுக்க உதவும்.
பீட்ரூட்: இதில் துத்தநாகம், கால்சியம், சோடியம், பொட்டாசியம் ஆகியவை உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும். உடல் வளர்ச்சிக்கு ஏற்றது.
உருளைக்கிழங்கு: இதில் மாவுச் சத்து அதிகமாக உள்ளது. வைட்டமின் ஏ, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகியவை உள்ளன.
பாகற்காய்: இந்த காயில் வைட்ட மின் சி, ஏ, பி, பாஸ்பரஸ், கால்சியம் உள்ளன. இந்த காயை சாப்பிடுவதன் மூலம் பசி அதிகரிக்கும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும்.
கேரட்: இதில் வைட்டமின் ஏ அதிக மாக உள்ளது. குழந்தைகளின் உணவில் அதிகமாக சேர்த்தால், பிற்காலத்தில் பார்வை கோளாறு எதுவும் வராது. மாலைக்கண் நோயை கட்டுப்படுத்தவும் உதவும்.
கத்தரிக்காய்: பாஸ்பரஸ், போலிக் ஆசிட், வைட்டமின் பி, சி உள்ளன. ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
வெண்டைக்காய்: போலிக் ஆசிட், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து உள்ளது. மூளை வளர்ச்சிக்கு உதவும், குழந்தைகள் விரும்பி சாப்பிடும். தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கில் புலி ஆகலாம்.
பீன்ஸ்: புரதச்சத்து, கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.
புடலங்காய்: வைட்டமின் ஏ, பி, இரும்புச் சத்து, தாமிரம், கால்சியம் உள்ளன. எலும்பு உறுதிக்கு இதை சாப்பிடலாம்.
அவரைக்காய்: புரதச்சத்து, நார்ச் சத்து உள்ளன, உடல் வளர்ச்சி பெறும், மலச்சிக்கலை போக்கும்.
முருங்கைக்காய்: வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளன. ஆண்களுக்கு விந்து அதிகரிக்க உதவும், பெண்களுக்கு உதிரப் போக்கை கட்டுப்படுத்தும்.
வெங்காயம்: இரும்புச்சத்து, கால் சியம் உள்ளன. தினமும் சாப்பாட்டில் வெங்காயம் சேர்த்தால், உடல் கொழுப்பை கரைக்க உதவும்.
சுண்டைக்காய்: புரதச்சத்து, இரும் புச்சத்து, வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன. எலும்புகளுக்கு வலு சேர்க் கவும், ரத்தசோகை வராமல் தடுக்கவும் உதவும்.
கருணைக் கிழங்கு: கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி ஆகியவை உள்ளன. இதை சாப்பிட்டால், உடல் வளர்ச்சிக்கு நல்லது. மூல நோய் வரா மல் தடுக்கவும், மூலத்தை கட்டுப் படுத்தவும் உதவும்.
தக்காளி: வைட்டமின், ஏ, பி, சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. உடல் உறுதிக்கும், ரத்தவிருத்திக்கும் உதவும்.
பிராமணன் என்றால்...
பிராமணன் என்றால் ஆங்கில அகராதியில் இந்துக்களில் உயர்ந்த ஜாதியான் என்று போட்டிருக்கிறது.
தமிழ் அகராதிகளில் பிராமணன் என்றால் பார்ப்பான் என்றும்,
புரோகிதன் என்றும்,
முதல் ஜாதியான் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
இந்து மத ஆதாரங்களில் சிரேஷ்டமானவர்கள் என்றும்,
கடவுள் முகத்தில் தோன்றியவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, அவர்களுக்குப் பல உயர்வும், மற்றவர்களுக்கு இல்லாத தனி உரிமையும் அளிக்கப்பட்டிருக்கின்றன.
உழைப்பாளிகளையும், சேமிப்பு ஆட்களையும் ஏய்த்துச் சுருண்டுவதுதான் இவர்களது வாழ்க்கைத் தருமம்.
(குடிஅரசு தொகுதி 35 பக்கம் 88).
அவனும் நீயும் (தமிழ் அடிமை)
பார்ப்பானைப் பார்த்து, நீ ஏன் பொறாமைப் படுகிறாய்.
அவன் கட்டுப்பாடான சமூகத்தைச் சேர்ந்தவன். நீ கட்டுப்பாட்டை வெறுக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவன். அவன் கட்டுப்பாட்டுக்கு உழைப்பவன்.
நீ கட்டுப்பாட்டை உடைப்பதற்குக் கூலி வாங்குபவன். அவன் இன நலத்தைப் பார்ப்பவன் நீ சுயநலத்தைப் பார்ப்பவன். அவன் மதத்தில் அவன் ஜாதி உயர்வு. உன் மதத்தில் உன் ஜாதி தாழ்வு.
- க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி
நாவலர் பாரதியார்
..என்னுடைய 14 வயதிலே எனக்கு கல் யாணம் நடந்தபோது நேரிட் டதைச் சொல்கிறேன். எட்டையபுர சமஸ்தானத் தில் ஓர் கிராமத்திலே, நாகரிக உணர்ச்சி பரவ முடியாத ஊரிலே எனக்குக் கல்யாணம். நான் வைதீக உணர்ச்சி உள்ளவன். நல்ல சைவன். இப்போது இருக் கும்சைவம் போன்றதல்ல. என்னுடைய சிவ நெறி வேறு. இன்று சைவப் பண் டிதர்கள் கூறும் சைவம் நான் கொள்வதல்ல. உண் மையே எனக்குச் சிவம். எனக்குக் கல்யாணம் பார்ப்பனரை வைத்துச் செய்வதாக கூறினார்கள். அப்படிப்பட்ட கலியாணம் எனக்கு வேண்டாம் என் றேன். சைவ ஆகமங்களின் படி பார்ப்பனர்களைச் சண்டாளர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. கோயில்களிலே அவர்கள் துவஜஸ்தம்பத்துக்கு அப்புறம் நுழையக்கூடாது. வந்தால் தீட்டாகி விடும் என்று ஆகமம் கூறுவதால், அப்படிப்பட்ட சண்டாளர் களைக் கொண்டு நான் கலியாணம் செய்து கொள்ள மாட்டேன் என்றேன். என் குடும்பத்தார் திருநெல் வேலிக்கும், மதுரைக்கும் போய் பண்டிதர்களைக் கேட்டார்கள். திருநெல் வேலி பண்டிதர்கள்கூட சரியாகச் சொல்லவில்லை. மதுரையிலிருந்த பண்டிதர் கள் பையன் சொல்லுவது உண்மைதான். ஆகமம் அப்படித்தான் கூறுகிறது என்று சொன்னார்கள்.
- நாவலர் சோமசுந்தர பாரதியார்
(நாவலர் பாரதியார் - அறிஞர் அண்ணா இராமா யணச் சொற்போர் 14.3.1948 - சேலம். நூல்: தீ பரவட்டும் - பக்கம் 52).
நாவலர் பாரதியாரின் இந்தக் கருத்தை இன்று நினைவூட்டுவதற்குக் காரணம் - அவரின் பிறந்த நாள் (1876) இந்நாள்!
பார்ப்பனர்கள் தான் சகலமும் கற்றவர்கள்; அவர்கள்தான் கோயில் கருவறைகளுக்குள் செல்லும் தகுதி பிறப்பின் அடிப்படையில் பெற்ற வர்கள் என்று அரட்டை அடிக்கிறார்கள் அல்லவா!
அது எத்தகைய பொய் மூட்டை என்பதை அவிழ்த் துக் கொட்டுவதற்குத்தான் நாவலர் அவர்களை இங்கு அழைத்துள்ளோம்.
கோயில்களில் பார்ப் பனர்கள் துவஜஸ்தம்பத் துக்கு அப்புறம் நுழையக் கூடாது என்று சொல்லு பவர் சாதாரணமான வரல்லர்; மெத்த படித்தவர் - பன்மொழி அறிந்தவர் -சைவ மெய்யன்பர் என் பதை நினைவூட்டுகிறோம்.
1938இல் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங் கியபோது தோன்றாத் துணையாக நின்ற அந்தப் பெரு மகனாரை இந்நாளில் நன்றி உணர்வுடன் நினைவு கூர்வோம்!
- மயிலாடன்
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆர்ப்பாட்டம்!
அனைத்துத் தரப்புகளிலிருந்தும், பேராதரவு குவிகிறது
இடையில் நான்கே நாட்கள் விரைந்து செயல்படுவீர்!
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
தமிழர் தலைவரின் எழுச்சிமிகு அறிக்கை
ஆகஸ்டு முதல் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ள ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட் டமான, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆர்ப்பாட் டத்திற்கு இடையில், இன்னும் நான்கு நாட்களே உள்ளன; அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் ஆர்ப்பாட் டம் வெற்றிகரமாக நடைபெற கழகத் தோழர்கள் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினர்களே!
அனைவருக்கும் அன்பு வணக்கம். ஆகஸ்ட் 1 ஆம் தேதி நெருங்கி விட்டது!
இன்னும் நான்கே நாள்கள்தான்!
நாடெங்கும் அடைமழைப் பிரச்சாரங்கள்!
இந்த இடைவெளி நாள்களில்தான் கழகப் பொறுப்பாளர்கள் ஜாதி தீண்டாமை, ஒழிப்புக்கான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் - சட்டத்தை சரியான முறை யில் செயல்படுத்த, நமது கழகம் அறிவித்த முதல் கட்டப் போராட்டமான அறப் போராட்டத்தைச் சிறப்பாக நடத்திட நாடெங்கும் அடைமழைப் பிரச்சாரங்கள் மிகச் சிறப்பாக - தெரு முனைப் பிரச்சாரம் தொடங்கி, பொதுக் கூட்டங்கள், கருத் தரங்குகள், வட்டார மாநாடுகள் என்று பல முனைகளிலும் மிக எழுச்சியோடு நடைபெற்று வருகின்றன!
இந்தப் போராட்டத்தை விளக்கி, நமது இயக்கம் வெளியிட்டுள்ள அறப்போர் விளக்க ஆவணம் போன்ற கையேடு - நூல் - இதுவரை லட்சம் படிகளுக்கு மேல் பரப்பப்பட்டுள்ளது!
துண்டறிக்கைகள் விநியோகமோ, பல லட்சக் கணக்கில்!!
ஜாதி மோதல்கள் - தீண்டாமையை இன்னமும் ஆழ் மனதில் வைத்துக் கொண்டு ஒப்புக்கு சப்பாணி! யாக இருக்கும் பலருக்கும் நமது அறப்போர் நல்லதோர் விளக்கத்தை அளித்துள்ளது!
எந்த விலையும் கொடுப்போம்!
கடந்த 43 ஆண்டுகளுக்குமேல் இந்தப் பிரச்சினையில் நமது இயக்கம் - ஜாதி - தீண்டாமை ஒழிப்பு என்பது நமது உயிர் மூச்சுக் கொள்கை; ஆனபடியால் உறுதியாக நின்று வென்றே தீருவது என்ற திடசித்தத்துடன், எந்த விலையையும் கொடுக்கத் தயார் என்று நாளும் பாடுபட்டு களங்காண, களைப்பின்றிக் கடமையாற்றி வருகிறோம்!
தீர்ப்புகளும், நீதிபதிகளின் பரிந்துரைகளும்
(அ) இரண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புக் கள் ஆதி திராவிடர் உட்பட அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனம் சட்டப்படி சரி என்றுதான் கூறி, இதன் நியாயத் தையும், தேவையையும் ஏற்றிருக்கின்றன.
(ஆ) இரண்டு முறை இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் இந்து அறநிலையத்துறை அறிஞர்களைக் கொண்டு குழுக்கள் - முறையே எம்.ஜி.ஆர். கலைஞர் ஆகியவர்களின் தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க., தி.மு.க. அரசுகளால் நியமிக்கப்பட்டு (ஜஸ்டீஸ் மகாராசன் குழு) அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அனைத்து ஜாதி அர்ச்சகர்கள், ஆகமப் பயிற்சியை தக்க முறையில் பெற்று - தயார் நிலையில் இப்போது உள்ளனர்!
ஜஸ்டீஸ் திரு. ஏ.கே. ராஜன் அவர் களின் தலைமையிலும், தி.மு.க. ஆட்சி காலத்தில் குழு அமைக்கப்பட்டு உரிய பரிந்துரைகள் பெறப்பட்டன.
மூன்று முதல் அமைச்சர்களின் ஆதரவு!
(இ) மூன்று முதல் அமைச்சர்கள்,
மாண்புமிகு கலைஞர்,
மாண்புமிகு எம்.ஜி.ஆர்.,
மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா,
ஆகியோர்தம் ஆட்சியில் தமிழக சட்டமன்றத்திலேயே உறுதி அளிக்கப்பட்டு சட்டங்கள் வந்தன!
இன்றைய உச்சநீதிமன்ற குறுக்கீடுகள் தற்காலிகத் தடைதான்.
பயிற்சி பெற்றவர்கள் தயார்!
தமிழக அரசு, அது ஏற்கெனவே தந்த உறுதிப்படி, 69 சதவிகித அடிப்படையில் தேர்வு செய்து, ஆகமங்களில் உரிய பயிற்சியைப் பெற்று விட்டு, வைணவ, சிவன் கோயில்களில் தற்போதுள்ள ஆகமம் அறியாத அர்ச்சகர்கள் போல் இன்றி, அப்பாடத் திட்டத்தை முறையாக கற்று, வெற்றி பெற்று பட்டயச் சான்றையும் பெற்றவர்களை நியமிப்பதற்கு எந்த மறுப்பும் சட்டப்படியும், நியாயப்படியும் இருக்கவே முடியாது!
இப்போதைய பார்ப்பனீயத்தின் கடைசி முயற்சி, அது ஒருக்காலும் வெற்றி பெற முடியாது. தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் பேராதரவு!
இச்சட்டத்தை தந்தை பெரியார் தம் பெரு விருப்பப்படி இயற்றி, ஒருமுறை அல்ல, இரண்டு முறை ஆட்சியில் இருந்தபோது செயல்படுத்த அத்துணை சட்டத் தேவைகளையும் நிறைவேற்றிய நமது தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், அண்ணா சொன்ன இரட்டைக் குழலாக இரு கழகங் களும் (தி.க.; தி.மு.க.) இயங்குகின்றன என்பதை நாட்டிற்கு அறிவிக்கும் வண்ணம், இந்த அறப் போராட்டத்தில் தி.மு.க. கலந்து கொள்ளும் என்று அறி வித்துள்ளார்கள்; அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அருமையான ஒத் துழைப்பை நல்கி, ஒருங்கிணைப்புப் பணிக்கு உறுதுணையாகி களங்காண ஆயத்தமாகியுள்ளனர் இது நமக்குப் பெருமித உணர்வை உண்டாக்கியுள்ளது.
எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் ஆதரவு
அதுபோலவே எப்போதும் நம்முடன் ஒன்றியுள்ள பிரிக்க இயலாத சகோதர பாச உணர்வு பொங்கும் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்களும், அந்த இயக்கமும் முதல் தேதி அறப்போரில் பங்கேற்கும் என்று அறி வித்து, அவர்தம் தோழர்களை ஆயத்தப் படுத்தி வருகிறார்கள்.
பக்தர்கள் ஆதரவு
இதில் ஒரு தனிச்சிறப்பு - பக்தர்கள் பலரும் நமது போராட்டத்திற்குப் பரவ சத்துடன் ஆதரவு தந்து கைகோக்க முனைந்துள்ளார்கள்!
எங்கெங்கும் உற்சாகப் பெரு, வாழ்வு! உணர்ச்சிக் கொப்பளிப்பு!!
ஆயத்தமாவீர் ஆயத்தமாவீர்!!
அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!!
இப்படை தோற்கின்
எப்படை வெல்லும்?
எவர் ஒத்த கருத்துடன் நம்மோடு கைகோக்க முனைந்தாலும் இருகரம் நீட்டி வரவேற்போம்.
காரணம், இது ஒரு கட்சிப் போராட்டம் அல்ல!
இது ஒரு இன இழிவு ஒழிப்புப் போராட்டம்!
மாபெரும் மனித உரிமைக்காகப் போராடும் மனிதநேயப் போராட்டம்!
எனவே அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
27.7.2013
ஆன்மீகவாதிகளிடமிருந்தும் ஆதரவு!
அன்புள்ள அய்யா கி. வீரமணி அவர் களுக்கு,
தாங்கள், அடுத்த மாதத் தொடக் கத்தில் (ஆகஸ்டு ஒன்றில்); எல்லாச் ஜாதியினரும், அர்ச்சகர் ஆகலாம் என்ற கருத்தை வலியுறுத்துவதற்காக போராட்டம் நிகழ்த்த இருப்பதாகப் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக அறிந்தேன். நல்லதொரு கொள்கைப் போராட் டம்; நிகழ்த்த வேண்டியதே; வெற்றி பெற என் நல் வாழ்த்துக்கள்.
அக்கொள்கைப் போராட்டத்தில், கலந்து கொள்ளவும் - கருத்துக் கூற வும்; எல்லாத் தகுதியும் உடையவன் - நான்!
தாங்கள் விரும் பினால் - நேரில் சந்திக்கவும் - கலந்து கொள்ளவும் - தயாராய் உள் ளேன். பிற - பின்பு - பதில் பார்த்து!.
எல்லாம் வல்ல சொக்க நாயகி உடனுறை சொக்க நாதப் பெருமான்; தங்களுக்கு எல்லா நலமும் அருள்வானாகுக!!
தங்கள்,
அலங்கை வே. அன்பரசவேள் பி.ஏ.,
(ஆன்மீகச் சொற்பொழிவாளர் அலங்காநல்லூர் , மதுரை)
பீடை!
மகன்: ஆடி மாதம் தெய்வீக மாதம் என் றும் 12 மாதங்களில் அதுதான் சிறந்தது என்றும் தினமணி கூறுகிறதே அப்பா!
அப்பா: அப்படியா! ஆடி மாதம் பீடை மாதம் என்றும் அம்மாதங்களில் கல்யாணங்கள் செய் யக் கூடாது என்று சொல்லுவதும் இவர் களின் மதம் தானே மகனே!
இடையில் நான்கே நாட்களே!
எந்த மதத்திலும் இல்லாத பெருங்கொடுமை இந்து மதத்தில்தான் இருக்கிறது. ஒரே மதத்தைச் சேர்ந்திருந்தாலும் தங்களைத் தவிர வேறு யாரும் அர்ச்சகர் ஆக முடியாது என்று அடம் பிடிக்கின்றனர் பார்ப்பனர்கள்.
அரசு சட்டம் போட்டாலும், பார்ப்பனர்களுக் குள்ள வசதிகள் வாய்ப்புகள் காரணமாக உச்சநீதிமன்றம் வரை சென்று காரியங்களைச் சாதித்துக் கொள்கிறார்கள்.
கோயிலுக்குள் அர்ச்சகராக அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்காக திராவிடர் கழகம் கொடி பிடிப்பது - ஏதோ மிகப் பெரிய உத்தியோகம் என்ற எண்ணத்தால் அல்ல.
பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகர் ஆகக் கூடாது என்பதற்குச் சொல்லப்படும் காரணம் தான்; இவர்கள் சூத்திரர்கள் - இவர்கள் கருவறைக்குள் நுழைந்தால் சாமி தீட்டுப்பட்டு விடும் - தோஷம் ஏற்பட்டு விடும்; அதனைத் தொடர்ந்து பிராயச் சித்தங்கள் செய்யப்பட வேண்டும் - தீட்டுக் கழிக்க வேண்டும் என்று சொல்லுகிறார்களே. இந்த இழிவைத் துடைப்பது தான் இந்தப் போராட்டத்தின் நோக்கம். இது ஒரு மனித உரிமைப் போராட்டம்!
எனவே தோழர்களே! எழுமின்! எழுமின்!! ஆகஸ்டு முதல் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் 60 முக்கிய இடங்களில் அறவழி ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம். இழிவைத் துடைத்தெறியும் இந்த ஆர்ப்பாட்டம் அனைத்து இடங்களிலும் வெகு மக்கள் இயக்கமாக நடைபெற வேண்டும்; பொது மக்களுக்கு விளக்கித் துண்டு அறிக்கைகள், சுவர் எழுத்துகள், பதாகைகள், தெருமுனைக் கூட்டங்கள் மூலம் பிரச்சாரம்! பிரச்சாரம்!! நடக்கட்டும்! நடக்கட்டும்!!
பக்தி நம்பிக்கையுள்ள நம் தமிழர்கள்கூட இன்னும் புரியாத நிலையில் இருக்கக்கூடும். அவர்கள் புரிந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க ஆர்வமுடன் முனைந்து வரும் அளவுக்கு நமது பிரச்சாரம் கடைகோடிக்குப் போய்ச் சேர்ந்திட வேண்டும்.
தி.மு.க. தோழர்களும், விடுதலைச் சிறுத்தைக் கட்சித் தோழர்களும் எல்லா மய்யங்களிலும் பங்கேற்க ஆர்வத்துடன் இருக்கிறார்கள். முறைப்படி நீங்களும் தொடர்பு கொள்ளுங்கள்.
இடையில் இன்னும் நான்கு நாட்களே உள்ளன. சுறுசுறுப்பாக விறுவிறுப்பாகப் பணியாற்றுங்கள். பொது மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படும் அளவுக்குத் தகவல்கள் போய்ச் சேர வேண்டும்.
சந்திக்கும் தோழர்களிடத்தில் எல்லாம் வாய்ப்புக் கேற்ற வகையில் நாம் நடத்தவுள்ள போராட்டத்தின் நோக்கத்தை எடுத்துச் சொல் லுங்கள். இரயிலில், பேருந்தில், ஆட்டோக்களில் பயணம் செய்யும் பொழுதுகூட, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குச் சென்ற இடத்தில் கூட இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று பக்குவமாகப் போராட்டத்தின் நோக்கத்தை எடுத்துக் கூறுங்கள்.
உங்கள் பகுதியில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர் இருந்தால் அவர்களுடனும் தொடர்பு கொண்டு, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புக் கொடுங்கள். ஒட்டு மொத்தமான தமிழர்களின் இழிவு ஒழிக்கும் போராட்டம் இது.
உங்களைச் சூத்திரர்களாக விட்டு விட்டுப் போகிறேனே என்று தந்தை பெரியார் தெரிவித் ததை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். மின்சாரம் உடலில் பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்படும்; ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப்பாட்டம் தொடக்கம்தான். அடுத்தடுத்து பல கட்டங் களில் பல வடிவங்களில் போராட இருக்கிறோம். இந்தப் பிரச்சினையில் முடிவு எட்டப்படும் வரை நாம் ஓயப் போவதில்லை.
கழகத் தோழர்களின் வீட்டில் உள்ள அனைத்து மக்களும் (பெரியார் பிஞ்சுகள் உட்பட) ஆர்ப்பாட்டக் களத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
என்ன சரிதானே?
பணி முடிப்போம் - பெரியார் பணி முடிப்போம்!
பணி முடிப்போம்!!
தொடர்பு
மதம் மதத்தைச் சேர்ந்த வர்களிடம்தான் தொடர்பு கொண் டிருக்கிறது. பகுத்தறிவு மனிதச் சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொள்கிறது. (விடுதலை, 14.10.1971)
நெல்லையில் தமிழகத்தின் மாபெரும் ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா - மன்றல் 2013
என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையை ஏந்தவேண் டும் வெளிநாட்டில் என்ற இந்த தத்துவ பாடல் வரிகளுக்கு முற்றி லும் பொருத்தமான நாடு நம் தமிழ் நாடு. இதே நேரத்தில் தமிழ்நாட்டில் மாவட்டவாரியாக பார்க்கும் போது அனைத்து வளங்களும் ஒருங்கே காணப்படுவது திருநெல்வேலி மாவட்டமாகும், இன்றும் தமிழ கத்தில் ஒரு வழக்கு மொழி உண்டு மூவகைத்தொழில் முனை வோர்(மீன்பிடி, உழவு, வேடர்) திரு நெல்வேலிக்கு சென்றால் சிறப்பாக வாழ்வார்கள் என்பதுதான்
இந்த வழக்குமொழிக்கேற்ப திரு நெல்வேலியின் கிழக்கே கடற்கரை, மத்தியில் செழிப்பான தாமிரபரணி பாயும் வண்டல் வளம் மிகுந்த மண், மேற்கே உலகின் மிகவும் அபூர்வ வகை மூலிகை மரங்கள், குரங்கி னங்கள் மற்றும் தென்னிந்தியாவின் புலிகள் சரணாலயம் கொண்ட மேற்குத்தொடர்ச்சி மலை, என செழிப்புடன் இருப்பதால் தான் ஒருகாலத்தில் திருநல்வாழி என அழைப்பட்ட ஊர் மருவி திருநெல் வேலியாக மாறியிருக்க கூடுமோ என்ற அய்யம் இன்றும் தமிழார் வலர்களுக்கு உள்ளது. திருநெல் வேலியைப் பொருத்தவரை பெரும் பாலும் அனைத்துத் தரப்பு மக்களும் கடின உழைப்பாளிகள் மேலும் இம்மாவட்டத்தைச்சேர்ந்த பெண்கள் குடும்ப நிர்வாகத்திலும் நிதிதிட்டமிடுதலிலும் சிறந்து விளங்குகின்றனர் என்பது பொது வான கருத்து. பொதுவாக இந்தியா முழுவதும் நடுத்தர வர்க்கப்பெண் கள் தங்களின் குடும்ப வருமானத்தை திட்டமிட்டு செலவு செய்வதில் வல்லமைபெற்றவர்கள் தான். ஆனால் திருநெல்வேலி மாவட்ட பெண்களைப்பொறுத்தவரை இந்த மாவட்டத்தில் தொடர்ந்து திடீர் ஏற்ற இறக்கங்களை காணும் பொருளாதாரச்சூழலில் குடும்பத் தை தகுந்தவாறு நிர்வாகிக்க திட்ட மிடுதல் என்பதை வாழ்க்கையின் முக்கிய அங்கமாக ஆக்கிக்கொண் டார்கள். இந்த மாவட்டத்தின் பொருளாதார சங்கிலிப்பிணைப்பு அனைத்து கிராமம் மற்றும் நகரங் களை இணைக்கிறது.
ஆனால் இந்த பொருளாதார சூழல் தொடர் நிகழ்வல்ல சில மாதங்கள் வணிகம் தொய்வடைந்து இருக்கும் போது சேமிப்பை வைத்து வாழ்க்கையை கழிக்கவேண்டிய சூழலில் நீண்ட காலம் வாழ்ந்து விட்டமையால் நிதி மேலாண்மை யும் திருநெல்வேலிமாவட்ட பெண் களுக்கு கைவந்த கலையாயிற்று. 1400-களின் இறுதியில் கேரளத்தின் கரையில் இறங்கிய போர்ச்சுகீசி யர்கள் கோவாவை நோக்கி ஆதிக் கத்தின் கவனம் செலுத்தினாலும் அவர்களுடன் வந்த ரோமன் கத் தோலிக்க பாதிரியார்கள் கல்வி தொடர்பான சேவைகளை தென் தமிழகத்தில் துவங்கினார்கள், இந்தியாவிலேயே பெண்கள் மட்டுமே படிக்கும் கல்விச் சாலை 1887ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நாசரேத்தில் துவங்கப் பட்டது, அதே போல் பெண்கள் தங்கி படிக்க விடுதியுடன் கூடிய பள்ளிக்கூடமும் 1897ஆம் ஆண்டு நாரைக்கிணறு என்னும் ஊரில் துவங்கப்பட்டது.(தற்போது இரண்டு ஊர்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது) சுதந்திர இந்தியாவில் பெண்களுக்கான கல்விச்சாலைகள் அதிகம் உள்ள மாவட்டமும் திருநெல்வேலிதான் என்பது வரலாற்றுச்சிறப்பு.
சமயவிதிகளை புறந்தள்ளிய பெண்கள் 10ஆம் நூற்றாண்டிற்கு பிறகு இந்தியா முழுவதுமே சமயவிதி களின் தாக்கம் காரணமாக பெண் கள் பணிக்கு செல்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டு ஒரு சாரர் வருமானத்தை மாத்திரமே சார்ந்து இருக்கவேண்டிய சூழல். மேல் மட்ட மக்களின் வாழ்க்கையில் பொருளாதார சிக்கல் சமாளிக்கத் தகுந்த நிலையில் இருந்தது ஆனால் நடுத்தரமக்களின் வாழ்க்கை சமய விதிகளின் காரணமாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்ததுவங்கியது, பெண்கள் வீட்டில் முடங்கியதால் ஒரு சார்பு வருமானம் அதைக் கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டிய சூழல், ஆனால் திருநெல் வேலி மக்களை சமயவிதிகள் அவ்வளவாக கட்டுப்படுத்தவில்லை என்றே கூற முடியும், முக்கியமாக பெண்கள் சுதந்திரத்தை எதிர்பார்த் தனர். சமய அழுத்தங்கள் 10ஆம் நூற்றாண்டில் முழுமையடைய துவங்கினாலும் அவை மெல்ல மெல்ல அடித்தள மக்கள் வரை சென்றடைய 300 நூற்றாண்டுகள் வரை ஆனது, இந்த காலகட்டத்தில் இஸ்லாம் மற்றும் கிருஸ்தவம் மெல்ல மெல்ல பரவிக்கொண்டு இருந்த காலம் இதனால் அடித்தள மக்கள் விரைவாக கிருஸ்தவத்தை ஏற்றுக்கொண்டனர், முக்கியமாக மீனவர் இந்தியாவின் கடற்கரைப் பகுதியில் வாழும் மீனவர்களின் பெரும்பாலானோர் கிருஸ்தமத் தைத் தழுவியவர்கள் காரணம் இந்து மதத்தில் கடல்சார்ந்த தொழில் செய்ய அனுமதி இல்லை, இதன் காரணமாக கடல்சார்ந்த தொழில் செய்த அனைவரும் மிகவும் விரை வாக கிருஸ்தவத்தை ஏற்றுக்கொண் டனர். இதன் துவக்கம் தென் இந்தியாவின் திருநெல்வேலியில் இருந்துதான் துவங்கியது. முத்தெடுக்கும் தொழில் சிறந்து விளங்கிய 18-ஆம் நூற்றாண்டுகள் வரை பெண்களும் முத்துகுளிக்க ஆழ்கடலிலிறங்கியதற்கான ஆதா ரங்கள் உள்ளன. மீனவப் பெண் களின் உழைப்பின் தாக்கம் சமவெளிப்பகுதிபெண்களிடமும் தொற்றிக்கொள்ள அவர்களும் தங்களுக்கு ஏற்ற பணிகளை செய்ய முன்வந்தனர், கணவரின் தொழிலில் தானும் இணைந்து பங்கேற்பது (பனைத்தொழில், விவசாயம், நெசவு) போன்றவை இம்மாவட்ட பெண் களிடம் இருந்து மெல்ல மெல்ல தமிழகம் முழுவதும் பரவியிருக் கலாம், இன்று பொருளாதார மேலாண்மை பட்டப்படிப்பில் பயிற்றுவிக்கப்படும் நிதிதிட்ட மிடல் அடித்தட்டு மக்களின் வாழ்க் கையில் இருந்து தான் பெற்றது, இதற்கு பெண்கள் தலையாய காரணமாக இருந்தனர். முக்கியமாக சமய இறுக்கங்கள் காரணமாக ஜாதிய முறைகள் எல்லா பகுதிகளிலும் பரவினாலும் இங்கு தொழிம் மற்றும் பொருளா தார போட்டிகாரணமாக திருநெல் வேலிமாவட்டம் சாதியத்தில் மிகவும் இறுக்கமான மாவட்டமாக மிகவும் விரைவாக மாறத் துவங் கியது, இதன் பாதிப்பு பெண் களிடம் காணப்பட்டது, திறமை கள் இருப்பினும் அதை சுதந்திரமாக பயன்படுத்த இயலாத நிலை திறமைகள் இருந்தும் அதை வெளி யே காட்டாத ஒரு சிறைவாழ்க்கை வாழும் சூழலில் கடந்த 300 ஆண்டுகள் கழிக்கவேண்டியதா யிருக்கு, இருப்பினும் தங்களின் உரிமைகளுக்காக நீண்டதொரு தொடர்போராட்டங்களை திருநெல்வேலிமாவட்டப்பெண்கள் கண்டுள்ளனர். முக்கியமாக சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாவட்ட மாநாடு 28.11.1927-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் தான் துவங்கியது. என்பது வரலாறு இந்த மாவட்டத் தின் மற்றொரு பெருமை இத்தகைய பெருமைகளை ஒருங்கே கொண்ட திருநெல்வேலியில் தந்தை பெரி யாரின் நீண்ட நாள் கனவான சுய மரியாதைத்திருமணம் என்ற அமைப்பின் மூலம் மக்கள் எல்லோ ரையும் சுயமாக சிந்திக்கவும் செயல் படவும் பெண்கள் சுதந்திரமாக வாழவேண்டி தன் வாழ்நாள் முழுவதும் உலகத்தில் எங்குமே கிடைக்கப்பெறாத சுயமரியாதை என்ற அனைத்து தரப்பு மக்களும் பெறவேண்டும் என்ற தாகத்தால் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். தனித்து இயங்குவதாலும் தகுந்த தளமின்றி இயங்குவதாலும் எந்த ஒரு போராட்டமும் வெற்றி பெறாது, இதை கருத்தில் கொண்டு தான் அறிவாசான் தந்தை பெரியார் திராவிட இனத்தை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கி தனது வாழ் நாளிலேயே அதில் வெற்றியும் கண்டார். மக்களை ஜாதிமதவேறுபாடு களுடன் இணைக்கும் போராட் டத்தை பெண்களிடம் இருந்து துவங்கவேண்டும் என்பது அவரது கருத்து, இதன் காரணமாகத்தான் அவர் ஆரம்பம் முதலே பெண் ணடிமையை உடைத்தெரியும் பணி யை தனது தலையாய கடமையாக கொண்டு பயணித்தார், அதில் சுயமரியாதைத்திருமணமும் ஒன்றாகும் தகுதியான சட்டவிதி களின் படி வயதுக்குவந்த ஆணும் பெண்ணும் தங்கள் எதிகாலத்தை நிர்ணயிக்க உரிமையுண்டு இதில் சமய சாம்பிராணிகள் ஜாதி சாக் கடைகளுக்கும் இடம் தரக்கூடாது, பெரியாரின் இந்த கருத்தை நினைவில் கொண்டு மன்றல் நிகழ்வு தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை என வெற்றிகரமாக நடந்த மன்றல் நிகழ்வு தற்போது நெல்லையிலும் வெற்றிகரமாக நடந்தேற உள்ளது. வளமான திரா விட சமுதாயம் காண முனைப் போடு களமிறங்கிய மன்றலின் பணியினை அனைத்து மக்களி டமும் கொண்டு சேர்க்கும் கடமை நம்முடையதே வாழ்க பெரியார்! வளர்க அவரது தொண்டு!
சரவணா இராசேந்திரன்
கோயமுத்தூர் ஜில்லா தேர்தல்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
கோயமுத்தூர் ஜில்லாவின் சார்பாக சென்னை சட்டசபைக்குப் பார்ப்பனரல்லாத அபேட்சகர்கள் மூன்று பேரும் பார்ப்பன அபேட்சகர் ஒருவரும் ஆக நான்கு அபேட் சகர்கள் நிற்கிறார்கள். இந்நான்கு கன வான்களும் பெயருக்கு மாத்திரம் தனித் தனிக் கட்சியைச் சேர்ந்ததாகச் சொல்லிக் கொண்டாலும் தத்துவத்தில் பார்ப்பனரல் லாத கட்சிக்கு மூன்று பேரும், பார்ப்பனக் கட்சிக்கு ஒருவருமாய் இருக் கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். உதாரணமாக, ஸ்ரீமான் அய்யங்கார் தேவதான மசோதா வையும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தையும் எதிர்ப்பதினாலும், ஸ்ரீமான் செட்டி யார் முதலானவர்கள் இவ்விரண்டையும் மனப்பூர்வமாய் ஆதரிப்பதினாலும் தெரிந் துக் கொள்ளலாம். நாம் இதற்கு முன் பல தடவைகளில் எழுதி வந்தது போலவே சட்டசபைகள் மூலம் குடிமக்களுக்கு எவ்வித அரசியல் நன்மையும் செய்ய முடியவே முடியாது என்பதை இப்பொழுதும் சொல்லுகிறோம். ஆனால் வேளாள குடி மக்கள் இந்நாட்டில் உள்ள மற்ற எல்லா மக்களைவிட உயர்ந்த தன்மை உடையவர் களாயிருந்தாலும் பார்ப்பன ஆதிக்கத்தில் சிக்கி விவகாரம் முதலியவைகளால் குடி கெடுவதையும் வைதீகச் சடங்குகளால் தாழ்த்தப்பட்டு அடிமைகளாவதிலிருந்தும் தப்புவிக்க உபயோகப்படுத்திக் கொள்ள லாம் என்று சொல்லுவோம்.
ஆனால் பல காரியங்கள் செய்திருப்ப தாய் ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்கார் போன்ற பல பார்ப்பனர்கள் பத்திரிகைகள் மூலமும் விளம்பரங்கள் மூலமும் பறையடிப்ப தெல்லாம் குடியான மக்களை ஏமாற்றச் செய்யும் வெறும் மோசடியே தவிர வே றில்லை. அதுபோலவே அதைப் பார்த்து பார்ப்பனரல்லாத அபேட்சகர்களும் குடி யானவர்களை ஏமாற்ற பார்ப்பனர்களைப் பின்பற்றி பொய் விளம்பரம் செய்ய வேண்டி ஏற்படுகிறது. உண்மையில் ஸ்ரீமான் வெங் கிட்டர மணய்யங்கார் போன்றவர்கள் வெளிப் படுத்தி இருக்கும் வேலைகளின் இரகசியங் களை அறிந்தால் அது ஸ்ரீமான் அய்யங் காரால் நடந்ததா? அல்லது ஸ்ரீமான்கள் டி.எ. இராமலிங்கம் செட்டியார், சி.எ. இரத்தினசபாபதி முதலியார் போன்ற வர்களின் பிரயத்தனத்தால் நடந்ததா என்பது நன்றாய் விளங்கும். ஸ்ரீமான் அய் யங்கார் விளம்பரம் செய்து கொள்வதில் அதிக ஆசை உள்ளவராகவும் அதைப்பற்றி பிறத்தியார் தன்னை எவ்வளவு கேவல மாகப் பேசினாலும் அதைக் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் எப்படியாவது சட்ட சபைக்குப் போனால் போதும் என்கிற கவலை உள்ளவருமானதால் எவ்வளவு தூரம் குடியானவர்களை ஏய்க்கலாமோ அவ்வளவு தூரம் விளம்பரப்படுத்திக் கொள்ளுகிறார்.
ஸ்ரீமான்கள் செட்டியாரும், முதலியாரும் தங்களைப் புத்திசாலிகள் கேவலமாய் நினைப்பார்களே என்று பயப்படுவதாலும் தற்புகழ்ச்சி செய்து கொள்ள வெட்கப் படுவதாலும் அவர்களின் உண்மையான பெருமைகளும் செய்த வேலைகளும் கூட வெளியாருக்குத் தெரிவதற்கிட மில்லாமல் இருக்கிறது. ஸ்ரீமான் வேணுவுடையாக் கவுண்டர் அவர்களுக்கு இதில் அனுபோகமில்லாத தாலும் அவரும் விளம்பரம் செய்து கொள்ள வெட்கப்படுவதாலும் அவரது நிலைமையும் சரிவர ஓட்டர்கள் உணர்வதற் கில்லாமல் இருக்கிறது. ஆதலால் பார்ப்பனரல்லாத ஓட்டர்கள் வெறும் விளம்பரங்களைக் கண்டு ஏமாறாமல் பார்ப்பனரல்லாத அபேட்சகர்களையே ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறோம். குறிப் பாய் இந்த ஜில்லா வேளாளக் கவுண்டர் கனவான்கள் எவ்வளவுக் கெவ்வளவு தங்களுடைய ஓட்டுகளைப் பார்ப்பன அபேட்சகருக்குக் கொடுக் கிறார்களோ அவ்வளவுக் கவ்வளவு தங்கள் வகுப்புத் தலைவராகிய ஸ்ரீமான் பட்டக்காரர் வேணு வுடையாக் கவுண்டர் அவர்கள் சட்ட சபைக்குத் தெரிந்தெடுக்கப்படுவதைக் கண்டிப்பாய் தடைபடுத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
- குடிஅரசு - கட்டுரை - 17.10.1926
ஸ்ரீமான் சீனிவாச சாதிரியார் கொல்லத் தெருவில் ஊசி விற்பனை
ஸ்ரீமான் சீனிவாச சாதிரியார் கொல்லத் தெருவில் ஊசி விற்பனை
மகா மகாகனம் ஸ்ரீநிவாச சாஸ்திரியார் வரப்போகும் தேர்தலில் பார்ப்பனர்களுக்கு வெற்றி கிடைப்பதற்காக ஊர் ஊராய் பிரசங்கம் செய்து வருகிறார். இந்த முறையில் கோய முத்தூருக்கும் வந்து மாணவர் சங்கத்திலும் வகுப்பு வாதத்தால் ஏற்படும் தீங்கு என்பதைப் பற்றி பேசியிருக்கிறார். வகுப்பு வாதத்திற்கு ஏற்பட்ட கட்சி தன்னை ஜனநாயக் கட்சியென் றும், தேசியக் கட்சி என்றும் சொல்லிக் கொள்வது தகாது என்றும், இதைப்போல் இந்திய ராஜீயத் துறையில் அதிகமாக கேட்டை விளைவிப்பது வேறெதுவுமில்லை என்றும் கூறுகிறார்.
இதில் எவ்வளவு புரட்டுகள் இருக்கின்றன என்பதை யோசியுங்கள். முதலாவது, ஸ்ரீமான் சாஸ்திரி இந்திய மக்களின் சார்பாக பேசுவதற்கே யோக் கியதை அற்றவர் என்பதே நமதபிப்பிராயம். அவர் நமது சர்க்காருக்கு உள் உளவாயிருந்து தனக்குப் பெரிய அந்தஸ்தும் பட்டமும் பதவியும் பெற்றுக் கொண்டு தன்னுடைய பிள்ளை குட்டிகளுக்கும் பெரிய பெரிய உத்தியோகத்தை வாங்கிக் கொண்டவர். அல்லாமலும், தேசத்திற்காகவும் ஜனநாயக தத்துவத்திற்காகவும் பாடுபட வந்த அவதார மூர்த்தி யாகிய மகாத்மா காந்தியை `அராஜகர் என்றும் அவரை சும்மா வைத்துக் கொண்டிருந் தால் ராஜ்யமே கெட்டுப் போய்விடும் என்றும், சர்க்காருக்கு உபதேசித்து அவரை ஜெயிலில் வைக்கச் சர்க்காருக்கு உதவியாயிருப்பதற்காக பதவி பெற்றவர். ஜனநாயக தத்துவ முறையை அடைவதற்காக பாரதமாதா முடிவு செய்து கொண்டு அதன் மக்கள் பதினாயிரக்கணக் கான பேரை ஜெயிலுக்குள் தள்ளிக் கொண் டிருக்கும் பொழுது வெள்ளைக்காரருக்கு அனுகூலமாய்ப் பேசிக் கொண்டும் மகாத்மாவை அடக்கினால் தான் இவ்வியக்கம் அடங்கு மென்றும் சொல்லிக்கொண்டு, தான் மேல்நாடு களில் உல்லாசப் பிரயாணம் செய்து வெள்ளைக் காரருடன் விருந்துண்டு கொண்டு கேளிக்கை யாயிருந்தவர், ஜனநாயக தத்துவத்திற்காக நாளிதுவரை ஸ்ரீமான். ஸ்ரீநிவாச சாஸ்திரி யாரால் ஒரு காதொடிந்த ஊசிக்குச் சமானமான உதவியாவது உண்டா? வகுப்புவாதம் கூடாது என்று சொல்ல பிராமணருக்கு யோக்கியதை ஏது? பிராமணன் வகுப்பு வாதத்தையே அடிப் படையாகக் கொண்டவன்; எப்பொழுது ஒரு மனிதன் தான் உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளுகிறானோ அப் பொழுதே அவனிடத்தில் அவனுடைய வகுப்பு உயர்ந்த வகுப்பு மற்றவர்கள் தன்னிலும் தாழ்ந்த வகுப்பு என்கிற வகுப்புவாதம் இருக்கிறதா இல்லையா? முதலில், தான் அதை விட்டு விட்டுப் பார்ப்பனர்களையும் இதை விடச் செய்த பிறகு வகுப்பு வாதம் கூடாது என்று உபதேசிக்க வந்தால் அப்போது ஸ்ரீமான் சாஸ்திரியாருக்குப் பேச உரிமை உண்டு.
தங்கள் வகுப்பு உயர்ந்த வகுப்பு என்பதைப் பற்றி யாரும் ஆட்சேபிக்கக்கூடாது; அது அப்படியே இருக்க வேண்டும். அதற்கு வேண்டிய பிரயத்தனமும் செய்யவேண்டும். மற்றவர்கள் மாத்திரம் வகுப்பைப் பற்றிப் பேசக்கூடாது. தாழ்ந்த வகுப்பாராகவே இருக்க வேண்டும் என்று சாஸ்திரியார் கனவு கண்டால் அதற்கு மற்றவர்கள் இடம் கொடுப்பார்கள் என்று சாஸ்திரியார் நினைக்கிறார் போல இருக்கிறது. அல்லாமலும் பிராமணனால்தான் வகுப்புவாதம் ஏற்பட்டது. ஆதலால் அவனிடத்தில் இருப்பதை ஒழித்தால் தான் வகுப்புப் பிசாசு நம் நாட்டை விட்டுத் தொலையும் என்று நாம் சொல்லும் போது பிராமணன் வந்து இதில் நியாயாதிபதியா யிருக்க இடமேது. திருடனையே தன் திருட்டுக்கு நியாயதி பதியாய் வைத்தால் அவன் தன்னை தண்டித்துக் கொள்வானா? அதுபோல் பார்ப்பனன் குற்றவாளி என்றால் பார்ப்பனனே வந்து நான் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு சொல்லிக் கொள்ள பாத்தியமேது? சாஸ்திரியார் பார்ப்பனன் என்கிற முறையில் வேண்டுமானால் தன்னிடம் குற்றமில்லை என்று வாதாடிக் கொள்ளலாமேயொழிய, தான் நடுநிலை மைக்காரர் போல் வேஷம் போட்டுக் கொண்டு மாணவர்களுக்கு உபதேசம் பண்ண யோக்கி யதை ஏது? என்றுதான் நாம் கேட்கி றோம். ஆனால் இதிலும் அதிகமான பார்ப்பன சூழ்ச்சிகளைக் கண்டு தேறியிருக்கும் கோவை பார்ப்பனரல்லாத மாணாக்கர் முன்னிலையில் பார்ப்பன சாஸ்திரியரின் உபதேசம் `கொல்லத் தெருவில் ஊசி விற்கப் போனதற்குச் சமானமே யொழிய வேறில்லை என்பதே நமதபிப்பிராயம்.
- குடிஅரசு - கட்டுரை - 17.10.1926
தமிழ்ப் பொழில் அன்பர்கட்கு வேண்டுகோள்
தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச்சங்கத்தினின்றும் தமிழ்ப் பொழில் என்னும் பெயரிய ஒரு திங்கள் வெளியீடு தமிழறிஞர் திருவாளர் ஆர். வேங்கடாசலம் பிள்ளையவர்களை ஆசிரியராகக் கொண்டு ஓராண்டு வெளிப் போந்து நற்பயன் அளித்தமை நேயர்களுணர்ந்திருக்கலாம். என்றும் இடையறாது உரிய காலங்களில் வெளிவரற்குறிய சில முன் ஏற்பாடுகள் செய்தற் பொருட்டுப் `பொழில் சிறிது காலந்தாழ்ந்து வெளிவரும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆசிரியர்க்குள்ள அலுவல் மிகுதியால் சிறிய கால அளவு கொஞ்சம் பெரிதாக நீண்டது. முன் ஏற்பாடுகள் முன்னரே செய்யப்பட்டிருக்கின்றன. நிற்க, `தமிழ்ப் பொழிலின் முன்னேற்றங் கருதி உழைக்க ஆங்கிலமும் தமிழும் கற்றுவல்ல அறிஞராகிய திருவாளர்கள் நீ. கந்தசாமிப் பிள்ளையவர்கள், எம்.ஆர்.ஏ.எ., அரசர்மடம் பள்ளிக்கூட தமிழாசிரியர் சாமி சிதம்பர உடையாரவர்கள் ஆகிய இருவரும் முன் வந்துள்ளார்கள். இவருள் முன்னவர் உதவி ஆசிரியர், பின்னவர் உடனின்று துணை செய்தலேயன்றி வெளியிடங்கட்குச் சென்று பொழிற்கு அன்பர்களைத் திரட்டும் உதவியாளர் ஆவார். திருவாளர் உடையாரவர்கள் தாம் எய்தி வந்த ஊதியத்தினையும் விட்டு விட்டுத் (தமது சுருங்கிய செலவுகளை மட்டும் பெற்றுக் கொண்டு) தொண்டு செய்ய முன்வந்திருப்பது மிகப் பாராட்டற்பாலது. செந்தமிழ்ச் செல்வர்கள், ஊதியம் கருதாது தமிழ்த் தொண்டொன்றே கருதித் தனித் தீந்தமிழில் வெளிவரும் பொழிலைப் புரந்து தமிழ்த்தாயைப் போற்றி வருமாறு வேண்டுகிறோம்
- குடிஅரசு - வேண்டுகோள் - 24.10.1926
Post a Comment