Search This Blog

19.7.13

இலங்கையிடம் இன்னும் இந்தியா எவ்வளவு அவமானங்களைத் தாங்குவது?

டெசோவின் தீர்மானங்கள் (1)


நேற்று (16.7.2013) சென்னை அண்ணா அறிவால யத்தில் டெசோ தலைவர் மானமிகு கலைஞர் அவர் களின் தலைமையில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் நான்கு நறுக்கான தீர்மானங்களும் அவற்றை நிறை வேற்றிட மத்திய அரசை வலியுறுத்தும் வண்ணம் அய்ந்தாவதாக போராட்ட வடிவ தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.

2012 ஏப்ரல் 30 ஆம் தேதி இரண்டாவது முறையாக டெசோ புது வடிவம் பெற்று செயல்பட்ட இந்தக் காலகட்டம் மிகவும் முக்கியமானது.

போருக்கு முன் டெசோவின் பணி என்பது ஒரு வகையானது; போருக்குப் பின் டெசோவின் பணி இன்னொரு வகையானது. போரினால் பெரும் பாதிப்புக்கு ஆளான ஈழத் தமிழர்களின் - சுயமரியாதை வாழ்வு மீள்குடியேற்றம் - வாழ்வுரிமை, அரசியல் தீர்வுகளை உள்ளடக்கமாகக் கொண்டதாகும்.
இந்திய அளவிலும் சரி உலகளவிலும் சரி டெசோ வின் எழுச்சிக்குப் பிறகு தேக்க நிலைகள் உடைக்கப்பட்டன.

இலங்கை அரசைப் பொறுத்தவரை ஏதோ பெரும் போரில் வெற்றி பெற்றுவிட்டது போன்ற மனப்பான்மை யுடன் வெறிபிடித்துத் திரிகிறது - எந்த வகையிலும் ஈழத் தமிழர்கள் மீண்டும் தலையெடுத்துவிடக் கூடாது என்பதில் திடமாக உள்ளது.

இந்திய அரசின் உறுதியற்ற தன்மை அதற்கு இலகுவாகப் போய்விட்டது. சீனா, ருசியா, கியூபா போன்ற இடதுசாரி நாடுகளும், பாகிஸ்தான் போன்ற நாடுகளும் தன்பக்கம் இருக்கும் இறுமாப்பில் இந்தியாவின் வார்த்தைகளுக்கு உரிய மதிப்பும் கொடுப்பதில்லை.

ஈழப் பிரச்சினைக்காக இருமுறை ஆட்சியை இழந்த தி.மு.க. அதே பிரச்சினைக்காகவே இப்பொழுது காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்து விலகிக் கொண்டு விட்டது.
கொஞ்ச நஞ்சம் இருந்த தர்மசங்கடமும் பறந்து ஓடிவிட்டது. இந்திய அரசு எதைச் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதில், போராடுவதில் டெசோதான் முன்னணி அமைப்பாக இருந்து வருகிறது.

நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மிகவும் செறிவானவை. ஈழத் தமிழர்ப் பிரச்சினையாகவிருந் தாலும், தமிழக மீனவர் பிரச்சினையாகவிருந்தாலும் சரி இந்தத் தீர்மானங்களின் உள்ளடக்கத்தைத் தவிர, விடுபட்டது ஒன்றும் இருக்க முடியாது, என்கிற அளவுக்குத் தெளிவானவையும், திட்டவட்டமானவையு மாகும்.

குறிப்பாக, முதல் தீர்மானம் அரசியல் தீர்வு என்று பேசப்படும் 13 ஆவது சட்டத் திருத்தம்பற்றியதாகும்.

1987 இல் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையிலான சட்டத் திருத்தம் அது. இலங்கை என்றால் ஒரே அரசு (ருவையசல ளுவயவந) என்ற நிலைக்குப் பதிலாக மாநிலங்களுக்கும் சற்றுப் பரவலான அதிகாரங்களை அளிக்கும் சட்டத் திருத்தம் அது.

26 ஆண்டுகள் ஓடிய நிலையிலும், அதனைச் செயல்படுத்தவேண்டும் என்று இலங்கை அரசை வற்புறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால், இலங்கை அரசின் நேர்மையற்ற போக்கை எளிதில் தெரிந்துகொள் ளலாமே!
அந்தப் பிரிவில் அடங்கியுள்ள மாநிலங்களுக்கான உரிமைகளை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சி யில் இப்பொழுது இலங்கை அரசு இறங்கியுள்ளது.

இரண்டு நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக மாற்றிக் கொள்ளக்கூடிய அதிகாரம் இலங்கைக்கு உண்டா என்பது முக்கியமான கேள்வி யாகும்.

வடக்கு - கிழக்கு மாநிலங்கள் இணைப்பு என்பது அந்த ஒப்பந்தத்தில் காணப்படும் முக்கிய அம்சமாகும். இலங்கை ஆளும் கட்சியின் கூட்டணியான ஜெவிபி (கம்யூனிஸ்டு என்னும் போர்வை வேறு!) மூலம் இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, சாதகமான தீர்வினையும் பெற்றுக்கொண்ட வஞ்சகத்தை என்னென்று சொல்லுவது!

இலங்கை அரசு பாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலும் காட்டிக்கொள்ளும் விலாங்குத் தன்மையில் நடந்துகொண்டு வருகிறது.

நியாயமாக இந்தப் பிரச்சினையில் இந்திய அரசுக்குக் கூடுதலான பொறுப்புண்டு. இந்திய அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அவமதிக்கிறது, தூக்கி எறிகிறது இலங்கை அரசு என்றால் - திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நேற்றைய தொலைக்காட்சிப் பேட்டியில் குறிப்பிட்டதுபோல, இந்தியாவின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால் அல்லவா இது!

அந்த வகையில் டெசோவின் தீர்மானம் ஈழத் தமிழர் களின் வாழ்வுரிமைக்கு மட்டுமல்ல; இந்திய அரசின் சுயமரியாதைக்குக்கூட தேவையானதாகும்.
இன்னும் சொல்லப்போனால், அய்.நா. மற்றும் உலக நாடுகளின் மரியாதையும், மனித உரிமையின் அடையாள மும்கூட டெசோவின் தீர்மானங்களில் உள்ளடக்கமாக இடம்பெற்றுள்ளன.

எனவே, இந்தத் தீர்மானங்களைக் கட்சிக் கண்ணோட்டத்துடன் பார்க்கத் தேவையில்லை.

இந்திய அரசு இதுவரை எப்படி நடந்துகொண்டு இருந்தாலும், இனியாவது விழித்துக்கொண்டு, மூடுமந்திரமில்லாமல் செயல்படட்டும்!

                                --------------------------"விடுதலை” தலையங்கம் 17-7-2013
 
இந்தியாவின் சுயமரியாதை?

இலங்கையில் போர் முடிந்த நிலையில் குடிபெயர்ந்த தமிழர்களுக்கு அளிக்கப்படும் மறுவாழ்வு திட்டங்களைப் பார்வையிட பிஜேபி - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 12 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சென்றது (2012 ஏப்ரலில்)
21.4.2012 அன்று அதிபர் ராஜபக்சேவைச் சந்தித்தது குழு. தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கும் 13ஆவது அரசமைப்புச் சாசன ஒப்பந்தம், 1987ஆம் ஆண்டு ஜூலையில் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனை விரைவில் நிறைவேற்றித் தருவதாக அதிபர் ராஜபக்சே தங்களிடம் கூறியதாக குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார்; ஏடுகளிலும் விரிவாக வெளிவந்தது.

இலங்கை அரசின் ஆதரவு ஏடான தி அய்லண்ட் இந்தத் தகவலை மறுத்துவிட்டது. 13ஆவது சட்டத் திருத்தம் குறித்து உறுதி அளிக்கவில்லை என்று கூறி விட்டார்களே!

அதோடு அந்த ஏடு நிற்கவில்லை. இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளிலிருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்வது சாத்தியம் இல்லை என்று இந்தியக் குழுவிடம் ராஜபக்சே கூறியதாகவும் அந்த ஏடு செய்தி வெளியிட்டதே! இதன்மீது இந்திய தரப்பில் கருத்துத் தெரிவிக்கப்படவில்லையே ஏன்?

அதற்குப்பிறகு 2012 ஜனவரியில் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை சென்று அதிபரைச் சந்தித்தார். சந்திப்புக்குப் பின் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.எம். கிருஷ்ணா சுஷ்மா சுவராஜ் சொன்னது போலவே சொன்னார்.

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகர்வு அளிக்கும் 13ஆவது அரசியல் சாசன சட்டத் திருத்தத்தை செயல்படுத்துவோம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தம்மிடம் கூறியதாகக் கூறினாரே! 18 மாதங்கள் ஓடிய பிறகும் நிலைமை என்ன?

13ஆவது சாசனத்தில் கண்டுள்ள உரிமைகளைப் பறிக்கும் வேலையில் இலங்கை அரசு முனைந்துள்ளதே!

போருக்குப்பின் இலங்கையில் நடந்துள்ள மறு சீரமைப்புப் பணிகள்பற்றி விசாரணை நடத்திட கற்ற பாடங்கள் மற்றும் இணக்கத்திற்கான (LLRC) குழு ஒன்றை இலங்கை அரசு தனக்குத்தானே அமைத்துக் கொள்ள அய்.நா.வின் மனித உரிமைக் குழுவின் வழி காட்டுதல்படி அனுமதிக்கப்பட்டது. அந்த இலங்கைக் குழுக்கூட சில பரிந்துரைகளைச் செய்ததுண்டு.

அரசியல் தீர்வு உடனடியாக தேவை. தமிழர் பகுதியிலிருந்து இராணுவம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்; சிவில் நிர்வாக உரிமைகள் அளிக்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசு அமைத்த அந்தக் குழு அளித்த பரிந்துரைகளைக்கூட இலங்கை அரசு செயல்படுத்தவில்லையே!
அமெரிக்கா இரண்டாவது தடவையாகவும் ஒரு வரைவுத் தீர்மானத்தை 2013 பிப்ரவரியில் தாக்கல் செய்தது. அதில் எல்.எல்.ஆர்.சி. அளித்த அறிக்கையில் கண்டுள்ளவை நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டதே - எதையும் கண்டு கொள்ளாத ஒரு கண் மூடி நிலையைத்தான் இலங்கை சிங்கள இனவாத பாசிச அரசு கடைப்பிடித்து வருகிறது.

இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான தகவல் உண்டு. மக்களவையில் எடுத்து வைக்கப்பட்ட தகவலும் கருத்தும் அது.

தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு அவர்கள் மக்களவையில் பேசியது அது (26.8.2011).

என்னுடைய நண்பர் நிதி அமைச்சர் முன்பு வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி (இன்றைய குடியரசு தலைவர்) கூறினார்; அவரின் அனுமதியின் பேரில் அவரது கடிதத்தைப் படிக்க விரும்புகிறேன்.

அன்பார்ந்த பாலு, இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து உங்களிடம் விளக்க விரும்புகிறேன். இலங்கைக்குள் அனைத்துச் சமுதாயத்தினரும், குறிப்பாக தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் வசதியாகவும், ஒன்றுபட்ட இலங்கையின் அரசியல் சாசனத்துக்குட் பட்டும், உரிமைகளைப் பெற அரசியல் தீர்வு ஒன்றைக் காண வேண்டும் என்பதற்கு நமது இந்திய அரசு தொடர்ந்து முயற்சியை மேற்கொண்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக 1987ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப் படையில் இலங்கையின் அரசியல் சாசனத்தில் 13ஆவது திருத்தத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தினோம் - இதன் விளைவாக 2009ஆம் ஆண்டு ஜனவரி 16,17 ஆகிய தேதிகளில் நமது வெளியுறவு செயலாளர் கொழும்புக்குச் சென்று இலங்கை அரசைத் தொடர்பு கொண்டார். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உண்மையான அதிகாரப் பகிர்வு வரும் திசையில் அடுத்த சில மாதங்களில் இதுபற்றிய முன்னேற்றத்தை நாம் எதிர்பார்க்கலாம் என்று நான் நம்புகிறேன் (இதை அவர் ஜனவரியில் கூறினார்) என்று அந்தக் கடிதம் கூறுகிறது. அதிபரின் நடவடிக்கை என்ன என்று நேருக்கு நேர் டி.ஆர். பாலு அவர்கள் கேட்டாரே - அப்படிப் பேசியும் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டனவே. கடிதம் எழுதியவர் இப்பொழுது குடியரசு தலைவராகவும் ஆகி விட்டார். காரியம் மட்டும் இலங்கை அரசு தரப்பில் நடக்கவில்லையே! ஒரு குட்டித் தீவிடம் இன்னும் இந்தியா எவ்வளவு அவமானங்களைத் தாங்குவது?

டெசோ தீர்மானத்தில் 120 கோடி மக்களைக் கொண்ட பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் சுயமரியாதை அடங்கவில்லையா?

---------------------------------"விடுதலை” தலையங்கம் 18-7-2013

51 comments:

தமிழ் ஓவியா said...


அருகதையற்றவர்கள்பேத அமைப்பு உள்ள சாத்திர சம்பிரதாய முறைகளையும், ஸ்தாப னங்களையும், அரசாங்கங்களையும் மாற்ற, ஒழிக்கத் துணிவு கொள்ள வேண்டும். இந்தத் துணிவு கொள் ளாத எவரும் சமதர்ம முயற்சிக்கு அருகதை அற்றவர்களே ஆவார்கள்.
(விடுதலை, 7.7.1965)

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழக அரசு வீண் பிடிவாதம் காட்டக் கூடாது!


அரசாணை எண் 181அய் திருத்துக! 252அய் ரத்து செய்க!

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

சென்னை, ஜூலை 18- ஆசிரியர் தகுதித் தேர் வில் ஆந்திரம், பீகார், ஒடிசா மாநிலங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, முன்னேறிய பிரிவின ருக்கு தனித்தனியே மதிப் பெண்கள் நிர்ணயிக்கப் பட்டுள்ளது போல் தமி ழகத்தில் பின்பற்றப்பட வேண்டும் என சென் னையில் இன்று நடை பெற்ற ஆர்ப்பாட்டத் தில் தமிழர் தலைவர் தமிழக அரசைக் கேட் டுக் கொண்டார். அரசாணை எண் 181அய் திருத்தியும் 252அய் ரத்து செய்தும் ஆணை பிறப் பிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொண்டார்.

சென்னையில் இன்று (18.7.2013) காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிடர் கழ கத்தின் சார்பில் ஆசிரி யர் தகுதித் தேர்வு: பணி நியமனத்தில் சமூக நீதி கோரி மாபெரும் ஆர்ப் பாட்டம் நடை பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத் திற்கு தலைமையேற்று பேசிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்கள் பேசியதாவது:

ஆசிரியர் தகுதித் தேர்வில் எல்லோருக்கும் ஒரே அளவுகோல்தான் எனத் தமிழக அரசு பிடிவாதம் காட்ட கூடாது. இது சமூக அநீதியாகும் தேசிய ஆசி ரியர் கல்விக் கழகத்தின் அறிவுறுத்தலில் தாழ்த் தப்பட்டோர், பிற்படுத் தப்பட்டோர், முன் னேறிய வகுப்பினர்க்குத் தகுதி மதிப்பெண்கள் தனித்தனியே நிர்ணயிக் கப்படுவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட் டுள்ளது.

ஆந்திராவைப் பாரீர்!

அதன்படி ஆந்திர மாநிலத்தில் முன்னேறிய பிரிவினருக்கு 60 சதவீத மதிப்பெண்களும் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத மதிப்பெண் களும், தாழ்த்தப்பட் டோருக்கு 40 சதவீத மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பீகாரில் முன்னேறிய பிரிவினருக்கு 60 சதவீத மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்டோருக்கும் மற்றவர்களுக்கும் 55 சத வீத மதிப்பெண்களும், ஒடிசா மாநிலத்தில் முன் னேறிய பிரிவினருக்கு 60 சதவீத மதிப்பெண் களும், மற்ற பிரிவின ருக்கு 50 சதவீத மதிப் பெண்களும் தனித் தனியே நிர்ணயிக்கப்பட் டுள்ளன. எனவே ஆந்திர மாநிலத்தில் இருப்பது போன்ற அதே அளவு கோல்தான் தமிழகத்தில் இருக்க வேண்டும்.

பொறியியல் கல்லூரி யில் காட்டப்பட்ட சமூக நீதி எங்கே போனது?

பொறியியல் கல்லூரி யில் கடைப்பிடிக்கப் பட்ட அந்த சமூக நீதிக் கண்ணோட்டம் தமிழ்நாடு அரசின் ஆசி ரியர் தகுதித் தேர்வில் இல்லாமல் போனது ஆச்சரியத்தை அளிக் கிறது. தமிழகத்தில் ஆசி ரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண்கள் நிர்ண யிப்பதில் இடஒதுக் கீட்டு முறை கடைப் பிடிக்கப்பட வேண்டும் என திராவிடர் கழகம், தி.மு.க. கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சி மற்ற அனைத்து கட்சிகளும் ஒரே குரலில் வலியுறுத்தி வருகின்றன.

தமிழகத்தில் நடத் தப்பட்டு வரும் ஆசிரி யர் தகுதித் தேர்வில் மாற்றுத் திறனாளி களும் போராடும் நிலை வந்திருப்பது வேதனை அளிக்கிறது. எனவே அனைத்துப் பிரிவினருக் கும் ஒரே தகுதி மதிப் பெண் (60 சதவீதம்) என்று நிர்ணயிக்கப்பட் டுள்ள தமிழ்நாடு அரசு ஆணை எண் 181 திருத் தப்பட்டு ஆந்திர மாநி லம் போன்று தனித் தனியே தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட ஆவன செய்ய வேண்டும் என முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறோம்.

வெயிட் டேஜ் முறையும் கூடவே கூடாது!

அதுபோலவே தமிழ் நாடு அரசு ஆணை எண் 252இல் கூறப்பட்டுள்ள பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறை என்பதும் சமூக நீதிக்கு எதிரானதாகும். எனவே இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டு கோள் வைக்கிறோம். இதை அலட்சியம் செய் தால் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடுக் கும் நிலை வரும்.

தமிழ் ஓவியா said...

இது முதற்கட்டப் போராட்டம்தான் - வெற்றி கிட்டும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.

சென்னை ஆர்ப்பாட்டத்தில்
தொல்.திருமாவளவன், கல்வியாளர் கஜேந்திரன் கருத்துரை

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்து பேசிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசுகையில்:-

ஆசிரியர் தகுதி தேர் வில் இடஒதுக் கீட்டை புறக்கணித்திருப்பதை கண்டிக்கிறோம். இதில் சமூக நீதி கடைப்பிடிக் கப்பட வேண்டும் என் பதை வலியுறுத்தியே இந்த போராட்டம் நடைபெறுகிறது என தெரிவித்தார்.

ஆந்திரா, அசாம் பின் பற்றும் முறைகளைத் தமிழ்நாட்டிலும் பின் பற்ற வேண்டும் என்று கூறிய எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன்

தமிழகத்தில் சமூக நீதிக்கு பாதிப்பு வரும் போதெல்லாம், உடனே போராட்டக் களத்தில் இறங்கும் களப் போராளி யாக நமது ஆசிரியர் தமி ழர் தலைவர் விளங் குகிறார்.

ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண்கள் நிர்ணயிப்பதில் பொத்தாம் பொதுவாக உயர் ஜாதியினருக்கும் ஏழை எளிய மக்களுக் கும் ஒரே அளவுகோல் வைத்திருப்பது சமூக நீதிக்கு சவக்குழி தோண் டும் நிலையாகும்.

முதலமைச்சர் அவர்கள் உடனடியாக ஆந்திரா - பீகார் மாநிலத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண்கள் நிர்ண யிப்பதில் கடைப் பிடிக்கும் அளவு கோலைப் போல் தமிழகத் திலும் பின்பற்றப்பட வேண்டும். அதற்கான அரசாணையை போட வேண்டும்.

சமமின்மை நிலவும் நாட்டில் அதற் கேற்றாற் போல் தகுதி மதிப்பெண்கள் மாற்றி அமைக் கப்பட வேண்டாமா.

அனைத்து பிரிவினருக்கும் ஒரே தகுதி மதிப்பெண் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு ஆணை எண் 181 அய் திரும்பப் பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் வலியுறுத்தினார்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு

காலம்காலமாக யாருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதோ, அவர்களுக்கு பிரதிநிதித் துவம் கேட்கிறோம். தற்போது நடத்தப்பட்டு வருவது தகுதிக்கான தேர்வு அல்ல, வேலை வாய்ப்புக்கான தேர்வு. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்டு மதிப்பெண்கள் மூலம் கிராமப்புறத்தில் இருந்து வரும் ஏழை எளிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே அவர்களுக்கு இழைக்கும் சமூக அநீதியாகும் இது. எனவே அனைத்து பிரிவினருக்கும் ஒரே தகுதி மதிப் பெண் (60 சதவிகிதம்) என்று நிர்ணயிக்கப் பட்டுள்ள தமிழ் நாடு அரசு ஆணை எண் 181 யை திருத்தப்பட வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத் தில் பேசிய கல்வி யாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசினார்.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரி யார் களம் இறைவி, தென்சென்னை மாவட்ட இணைச் செயலாளர் கோ.வி.இராகவன் ஆகி யோர் ஒலி முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் முன்னிலை வகித்தார். மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் வரவேற்புரை யாற்றினார். திருவொற்றியூர் செல்வராஜ் நன்றி யுரை கூறினார்.

தமிழ் ஓவியா said...


சென்னையில் (18.7.2013) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்


ஆசிரியர் தகுதித் தேர்வு பணி: நியமனத்தில் சமூகநீதிகோரி சென்னையில் (18.7.2013) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்

(1) வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

(2) வாழ்க வாழ்க வாழ்கவே
அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!

(3) காப்போம், காப்போம்!
சமூக நீதியை
சமூக நீதியை
காப்போம் - காப்போம்!

(4) தமிழ்நாடு அரசே
தமிழ்நாடு அரசே
ஆசிரியர் தகுதித் தேர்வில்
ஆசிரியர் தகுதித் தேர்வில்
சமூக நீதி சமூக நீதி
தேவை, தேவை!
கட்டாயம் தேவை -
கட்டாயம் தேவை!

(5) உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்
உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கும்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கும்
ஒரே அளவுகோலா?
ஒரே அளவுகோலா?
மதிப்பெண்ணில் மதிப்பெண்ணில்
ஒரே அளவுகோலா? ஒரே அளவுகோலா?

(6) உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்
உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்
மாற்றுத் திறனாளிக்கும்
மாற்றுத் திறனாளிக்கும்
ஒரே அளவுகோலா? ஒரே அளவுகோலா?
மதிப்பெண்ணில் மதிப்பெண்ணில்
ஒரே அளவுகோலா? ஒரே அளவுகோலா?

(7) உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்
உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும்
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும்
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும்
ஒரே அளவு கோலா?
ஒரே அளவுகோலா?
மதிப்பெண்ணில் மதிப்பெண்ணில்
ஒரே அளவுகோலா? ஒரே அளவுகோலா?

(8) பீகாரிலும் ஆந்திராவிலும்
பீகாரிலும் ஆந்திராவிலும்
சமூக நீதிக் கொடி
சமூக நீதிக் கொடி
பறக்குது! பறக்குது!!
பெரியார் பிறந்த மண்ணிலே
பெரியார் பிறந்த மண்ணிலே
சமூக நீதிக்கு சமூக நீதிக்கு
சவக்குழியா? சவக்குழியா?

(9) அனுமதியோம் - அனுமதியோம்!
சமூக அநீதியை சமூக அநீதியை
அனுமதியோம் - அனுமதியோம்!

(10) போராடுவோம் - போராடுவோம்
வெற்றி கிட்டும் வரை
வெற்றி கிட்டும் வரை
போராடுவோம் - போராடுவோம்!

(11) தந்தை பெரியார் தந்தை பெரியார்
பெரும்படையும் பெரும்படையும்
அண்ணல் அம்பேத்கர் அண்ணல் அம்பேத்கர்
பெரும்படையும் பெரும்படையும்
புறப்பட்டோம் - புறப்பட்டோம்!

(12) தமிழக அரசே தமிழக அரசே
அமல்படுத்து அமல்படுத்து!
சமூக நீதியை சமூக நீதியை
அமல்படுத்து அமல்படுத்து!

(13) பணி முடிப்போம் - பணி முடிப்போம!
தமிழர் தலைவர் தலைமையிலே
தமிழர் தலைவர் தலைமையிலே
பணி முடிப்போம்! பணி முடிப்போம்!
தந்தை பெரியார் தந்தை பெரியார்
பணி முடிப்போம்! பணி முடிப்போம்!

தமிழ் ஓவியா said...


உச்சநீதிமன்றத்தின் அரிய தீர்ப்பு!


மருத்துவக் கல்லூரி சேர்க்கை: நீண்ட நாள் கழகக் கோரிக்கைக்கு வெற்றி!

அகில இந்திய நுழைவுத் தேர்வு தேவையில்லை

உச்சநீதிமன்றத்தின் அரிய தீர்ப்பு!

புதுடில்லி, ஜூலை 18- அகில இந்திய அளவில் மருத்துவக் கல்லூரி சேர்க் கைக்கு (எம்.பி.பி.எஸ்.,) ஒரே நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்துக்கு உச்சநீதி மன்றம் மறுப்புத் தெரிவித்து ஆணை பிறப்பித்து விட்டது. அகில இந்திய மருத் துவக் கவுன்சிலின் முடிவை, தொடர்ந்து எதிர்த்து வருவது திராவிடர் கழகமே என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு கொண்டு வரும் மருத் துவ கவுன்சிலின் முடிவுக்கு உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. இதனால் அந்தந்த மாநிலங்களே மருத்துவ படிப்புக் கான நுழைவுத் தேர்வை முடிவு செய்து கொள்ள லாம் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ மாண வர்கள் தேசிய அளவிலான மருத்துவ தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( என்.இ. இ.டி) மருத்துவ கவுன்சில் கொண்டு வர வேண்டும் என விரும்பியது. மேலும் தகுதி இல்லாத நபர்கள் பணம் பெற்று சேர்க்கப்படுவதாகவும் தனது மனுவில் தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு பல்வேறு மாநிலங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவானது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தேர்வு முறையே பின்பற்ற லாம் என இடைக்கால தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப் பட்டது. அல்டாமஸ் கபீர் தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. இதன்படி நாட்டில் ஒரே மாதிரியான தகுதி நுழைவுத்தேர்வு தேவையில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர், அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம். இதில் 2 நீதிபதிகள் மருத்துவ கவுன்சிலின் முடிவை எதிர்த்தனர்.ஒரு நீதிபதி மட்டும் ஆதரித்தார். கிராமப்புற, நகர்ப்புற மாணவர்கள் மத்தியில் பாதிப்பு, வேறுபாடுகளை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த முடிவை பல்வேறு அரசுகள் மற்றும் தனியார் கல்லூரிகள் வரவேற்றுள்ளன.

தமிழ் ஓவியா said...


சேலம் இரயில்வே கோட்டத்தை மங்களூருவுடன் இணைப்பதா? தடுத்து நிறுத்துக!தென்னகத்தில் ரயில்வேக்கள் விரிவாக்கம் - அகல இரயில் பாதை போன்ற முயற்சிகள் தி.மு.க. தலைவர் கலைஞர், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, உறுப்பினர்கள், முந்தைய மத்திய அமைச்சர் பெருமக்கள் மற்றும் சேலம் வீரபாண்டிய ஆறுமுகம் ஆகியோர்களின் சீரிய முயற்சிகள் காரணமாக, சில டிவிஷன் களைத் தனியே உருவாக்கியதன் மூலம் வளர்ச்சிக்கும், புதிய வேலை வாய்ப்புக்கும் பெரிதும் வழி வகுத்தன.

மங்களூருவோடு இணைக்க திட்டமா?

எடுத்துக்காட்டாக கேரள மாநிலம், பாலக் காட்டோடு இணைக்கப்பட்ட டிவிஷன்களி லிருந்து ஒரு பெரும் பகுதியைப் பிரித்து சேலம் தனி ரயில்வே கோட்டம் - ரயில்வே டிவிஷன் அமைக்க அரும்பாடுபட்ட பிறகே, லாலு பிரசாத் அவர்கள் ரயில்வே அமைச்சராக இருந்த காலத்தில், சேலம் டிவிஷன் என்று தனியே சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புது டிவிஷன் உருவாக்கப்பட்டது. அப்படி உருவான பிறகும்கூட அதை முழு அளவில் வளர்ச்சியடைய வைக்க மனமின்றி. கேரளத்துச் செல்வாக்கு, மத்தியில் அதிகமாக இருப்பதன் காரணமாக, பெயரளவில் தனி அலுவலகம் போல சில ஆண்டுகள் இயங்க விட்டு, ஓரளவு வளர்ந்து வரும் நிலையில் திடீரென்று இப்போது இந்த சேலம் டிவிஷனை மங்களூருவுடன் (கர்நாடகத் துடன்) இணைக்க ரகசியமாகப் பல முயற்சிகள் நடைபெற்று வருவது குறித்து சேலத்துப் பெரு மக்களும், ரயில்வே தொழிலாளர் தோழர்களும் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

அவர்களது நியாயமான இந்த அச்சத்தைப் போக்கி, வெகுவாகப் பாடுபட்டு, வராது வந்த சேலம் ரயில்வே கோட்டம் மீண்டும் காணாமற் போகும் அவலநிலை ஏற்பட்டு விடக் கூடாது! கூடவே கூடாது!!

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு..

இதுபற்றி ரயில்வே நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் திரு. டி.ஆர். பாலு அவர்களும், நமது தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பெரு மக்களும், காங்கிரஸ் மத்திய அமைச்சர்களும் இதில் தனி அக்கறை செலுத்தி, சேலம் டிவிஷன் வழமைபோல் தனித்தியங்குவதோடு அதை மேலும் பலப்படுத்தவும் ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இன்றேல் மக்கள் கிளர்ச்சி வெடிப்பது உறுதி! உறுதி!!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
18.7.2013

தமிழ் ஓவியா said...


டெசோ பயணம் தொய்வின்றி தொடரும்! டெசோ தலைவர் கலைஞர் கடிதம்


சென்னை, ஜூலை 18- டெசோவின் பயணம் தொய்வின்றி தொடரும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடிதம் வருமாறு:- உடன்பிறப்பே,

ஈழத் தமிழர்கள் ஜனநாயக ரீதியாக அனைத்து வகை உரிமைகளையும் பெற்று, சுயமரி யாதையோடும், கண்ணியத் தோடும் வாழ்ந்திட வேண்டும் என்பதற்காக நாம் மேற் கொண்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, 16-7-2013 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெசோ அமைப்பின் கூட்டம் நடைபெற்று, அய்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அந்தத் தீர்மானங்கள் எல்லாம் ஏடுகளில் வெளிவந் திருப்பதைப் படித்திருப்பாய்!

இடையறாத இன்னல்களுக்குத் தொடர்ந்து ஆளாகிவரும் இலங்கைத் தமிழர்தம் வாழ்வில் ஒளி காண வேண்டும் என்ப தற்காக திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையிலான திராவிடர் கழகமும், மதுரை நெடுமாறன் தலைமையில் இருந்த காமராஜ் காங்கிரஸ் இயக்கமும் சேர்ந்து தான் தமிழ் ஈழ ஆதரவாளர் இயக்கம் என்ற டெசோ அமைப்பு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக் கப்பட்டது. 26-4-1985 அன்று திருவள் ளூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) உருவாக்கப்படுவதைப் பற்றி அறிவித்தேன். டெசோ அமைப் புக்கு தலைவராக நானும், உறுப்பினர்களாக கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர், தமிழர் தலைவர் கி. வீரமணி, பழ. நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோரும் அப்போது இடம் பெற்றோம்.

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழருக்கு ஆதரவாக 29-4-1985 அன்று சென்னையில் நடைபெற்ற மறியலில் 4002 பேரும், 30ஆம் தேதி திருச்சியில் 3000 பேரும், மே 3ஆம் தேதி தர்மபுரியில் 1000 பேரும், 6ஆம் தேதி சேலத்தில் 3000 பேரும், 7ஆம் தேதி தஞ்சை யில் 6000 பேரும், 8ஆம் தேதி வட ஆர்க்காட்டில் 2500 பேரும், 13ஆம்தேதி தென் ஆர்க்காட்டில் 3000 பேரும், 15ஆம் தேதி பெரியார் மாவட்டத்தில் 1500 பேரும், 16ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3000 பேரும், 17ஆம் தேதி கோவை, நீலகிரி மாவட்டங்களில் 3500 பேரும், 18ஆம் தேதி ராமனாதபுரம், பசும்பொன், காமராஜர் மாவட்டங்களில் 3000 பேரும், 20ஆம் தேதி மதுரை மாவட்டத் தில் 5000 பேரும், 22ஆம் தேதி நெல்லை, குமரி, புதுவை யில் 5500 பேரும் ஈடுபட்டு கைது ஆயினர்.

காஞ்சியில் கலைஞர் கைது

இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க 16-5-1985 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற என்னையும் மற்றும் ஆயிரம் பேரையும் கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தனர். நீதிபதி என்னைப் பார்த்து குற்றச்சாட்டை ஒப்புக் கொள்கிறீர்களா என்று கேட்டபோது, நீதிமன்றத்தின் கண்ணோட்டத்தில் சட்டப்படி நான் குற்றவாளியாக இருக்கலாம், ஆனால் எனது தமிழ் இன உணர்வு அடிப்படையில் என் மனசாட்சிப்படி நான் குற்றவாளி அல்ல என்று கூறினேன்.

1986ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் திங்களில் இலங்கையில் சிங்கள இராணுவத்தின் கொடுமை கள் அதிகரித்தன. அம்பாறை மாவட்டத்தில் தங்கவேலாயுதபுரம் என்ற கிராமத்தில் ஒரு நாள் இலங்கை இராணுவம் நுழைந்து கண்ணில் பட்ட பெண்களையும், வயதானவர்களையும், குழந்தை களையும் குருவிகளைச் சுடுவது போலச் சுட்டுக் கொன்றார்கள். ஒரே நாளில் அறுபதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் மடிந்தனர். தொடர்ந்து இப்படிப்பட்ட துயரச் செய்திகள் தமிழகத்திற்கு வந்து கொண்டே யிருந்ததால், சென்னையில் டெசோவின் அமைப்புக் கூட்டம் என் தலைமையிலே கூடி, மாவட்டந்தோறும் பேரணிகளை நடத்துவதென்றும், மதுரை மாநகரில் டெசோ சார்பில் அனைத்திந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களை எல்லாம் அழைத்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டினை நடத்துவதென்றும் முடிவெடுத்தோம்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்து டெசோ அமைப்பின் சார்பில் 3-10-1985 அன்று கோவையிலும், 4-10-1985 அன்று திண்டுக்கல் லிலும், 5-10-1985 அன்று தூத்துக்குடியிலும், 6-10-1985 அன்று திருச்சியிலும், 7-10-1985 அன்று சேலத்திலும், 13-10-1985 அன்று வேலூரிலும் மிகப் பெரிய பேரணிகள் நடத்தப் பட்டன.

தமிழ் ஓவியா said...

1986 - மதுரை மாநாடு

4-5-1986 அன்று மதுரையில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாட்டுக்கு டி.யு.எல்.எப். சார்பாக அமிர்தலிங்கம், எல்.டி.டி.ஈ. (விடுதலைப் புலிகள்) சார்பாக திலகர், டெலோ சார்பாக மதி, புரோடெக் சார்பாக சந்திரகாசன், ஈராஸ் சார்பாக ரத்தின சபாபதி, டி.இ.எல்.எப். சார்பாக ஈழவேந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பாக வரதராஜப்பெருமாள், பிளாட் சார்பாக வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதும், அந்த மாநாட்டில் அகில இந்திய ரீதியில் என்.டி. ராமராவ், வாஜ்பய், பகுகுணா, ராமுவாலியா, உபேந்திரா, உன்னிகிருஷ்ணன், ஜஸ்வந்த் சிங், கர்நாடக உள்துறை அமைச்சர் ராச்சையா மற்றும் தமிழகத் தலைவர்கள் பேராசிரியர் அன்பழகன், தமிழர் தலைவர் வீரமணி, பழ. நெடுமாறன், அய்யணன் அம்பலம், அப்துல் சமத், சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போதும் இலங்கைத் தமிழர் வாழ்வில் நிரந்தர விடியல் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் அந்த மாநாட்டினை டெசோ அமைப்பின் சார்பில் நடத்தினோம். எனவே டெசோ இயக்கத்தின் சார்பில் நாங்கள் நடத்துகின்ற எந்த நிகழ்ச்சியும் சில உளறுவாயர்கள் கூறுவது போன்ற எந்த உள்நோக்கத் தோடும் நடத்தப்படுவதில்லை.

ஏன், கடந்த ஆண்டு 12-8-2012 அன்று சென்னையில் டெசோ இயக்கத்தின் சார்பில் நடத்திய ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடும் எந்த உள்நோக்கத்திற்கும் இடம் தராமல் நடத்தப்பட்ட மாநாடுதான். அந்த மாநாட்டினை அ.தி.மு.க. அரசின் தடைகளையெல்லாம் கடந்து நாங்கள் நடத்திய போதும், மாலையில் நடைபெற்ற டெசோ மாநாடும், அதனையொட்டி காலையில் நடைபெற்ற ஆய்வரங்கமும் நடைபெறவே நடைபெறாது என்றும், அப்படியே நடைபெற்றாலும் வெளிநாட்டிலிருந்தோ, இலங்கையிலிருந்தோ, வட மாநிலங்களிலிருந்தோ இலங்கைத் தமிழர் பிரச்சினைகளில் ஆர்வமும் அக்கறையும் உடைய யாருமே கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும், கருணாநிதி ஏமாறப் போகிறார் என்றும் மனப்பால் குடித்தவர்களின் முகத்தில் எல்லாம் கரியை அள்ளிப் பூசுகின்ற அளவிற்கு அந்த டெசோ மாநாடு மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் ஈழத்தமிழர்களுக்குப் பயனுள்ள வகையிலும் நடைபெற்று முடிந்தது.


தமிழ் ஓவியா said...

சென்னையில் டெசோ மாநாடு

டெசோ இயக்கத்தின் சார்பில், அன்று காலையில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற ஆய்வரங்கத்தில் இந்தியாவின் வட மாநிலங்களிலிருந்தும், அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்த், சுவீடன், மொராக்கோ, சிங்கப்பூர், மலேசியா, நைஜீரியா மற்றும் இலங்கை நாடு களிலிருந்தும்; மாநாட்டுக்கு வந்தால் இலங்கை கொடுங்கோல் அரசு என்ன செய்யுமோ என்ற அச்சத்தால் வராத ஒரு சிலர் தவிர்த்து; வந்திருந்த 30க்கு மேற்பட்ட பன்னாட்டுப் பிரதிநிதிகள், தமிழார்வலர்கள், ஈழத் தமிழர் பிரச்சினைகளில் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வருவோர், வரைவுத் தீர்மானங்களாக தயாரிக்கப்பட்டிருந்த 11 தீர்மானங் களின் மீது விரிவாக தங்கள் ஆழ்ந்த கருத்துக் களையும், திருத்தங்களையும் எடுத்து வைத்து இறுதித் தீர்மானங்களை வடிவமைத்து உருவாக்கிய தோடு மட்டுமின்றி, புதிதாக மூன்று தீர்மானங் களையும் முன்மொழிந்து அவையும் விவாதிக்கப் பட்டு மாநாட்டிலே நிறைவேற்றப்பட வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. குறிப்பாக கடைசித் தீர்மானமான டெசோ மாநாட்டிற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்த தமிழக அ.தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென்று கூறி, அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்ததே லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய அரசின் முன்னாள் அமைச்சரும், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினரு மான அருமை நண்பர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்கள்தான். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மாநாட்டோடும் டெசோ பணி களை நாங்கள் முடித்திடவில்லை. 19-11-2012 அன்று அண்ணா அறிவாலயத்தில் டெசோ அமைப்பின் கூட்டம் என்னுடைய தலைமையிலே நடைபெற்றது. பொதுச் செயலாளர் பேராசிரியரும், இளவல் கி. வீரமணி, தொல். திருமாவளவன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோரும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக அய்.நா.விற்குச் சென்று தேவையான விளக்கங்கள் அளித்து வந்த தளபதி மு.க.ஸ்டாலின், நாடாளு மன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, லண்டன் மாநாட்டில் கலந்து கொண்ட அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங் கோவன், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் மற்றும் ரவிக்குமார், அசன் முகமது ஜின்னா ஆகியோரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு; நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

டெசோ சார்பில் கணடன ஆர்ப்பாட்டம்

தமிழ் ஓவியா said...

4-2-2013 அன்று மீண்டும் டெசோ அமைப்பின் கூட்டம் சென்னையில், அண்ணா அறிவாலயத்தில் என் தலைமையில் நடைபெற்று 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த மாநாட்டில்தான், இலங்கையில் தமிழர்கள் வாழும் 89 கிராமங்களின் பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப் பட்டதைப் பற்றியும், தமிழர்கள் வழிபடும் 367 இந்துக் கோயில்கள் மற்றும் மசூதிகள், தேவாலயங்கள் அழிக்கப்பட்டு வருவதைப் பற்றியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக மீனவர் களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து துன் புறுத்தி வருவதைக் கண்டித்து 18-2-2013 அன்று ராமேஸ் வரத்திலும், 19-2-2013 அன்று நாகப்பட்டினத்திலும், டெசோ இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவ்வாறே அந்த அறவழி ஆர்ப்பாட்டங்களும் தமிழ் மக்களின் பேராதரவோடு நடை பெற்றுள்ளன. மீண்டும் 25-2-2013 அன்று டெசோ அமைப்பின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் என் தலைமையில் நடை பெற்றது. அந்தக் கூட்டத்திற்குப் பின், என் சார்பில், செய்தியாளர் களைச் சந்தித்த தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள், மனித உரிமைகளை மீறிய போர்க் குற்றவாளியான இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்திடும் வகையில் மார்ச் 5ஆம் தேதியன்று டெசோ இயக் கத்தின் சார்பில் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடை பெறும் என்றும், அதே நாளில் டெல்லி நாடாளு மன்றம் முன்பு தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர் களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர், தொல். திருமாவளவனும் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்றும் அறிவித்தார். மேலும் மார்ச் 7ஆம் தேதியன்று டெசோ இயக்கத்தின் சார்பில் டெல்லியில் நடைபெறும் சிறப்பு மாநாடு மற்றும் கருத்தரங்கில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர் களும், பல்வேறு மனிதநேய அமைப் பினரும் கலந்து கொள்ள விருக்கிறார்கள் என்றும் கூறினார். அவ்வாறே இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சிறப்பாக நடைபெற்றன.

தமிழ் ஓவியா said...

கச்சத்தீவை மீட்போம்!

5-3-2013 அன்று டெசோ அமைப்பின் சார்பில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் டெசோ உறுப்பினர்களின் கூட்டத்தில் இலங்கை அரசின் இனப் படுகொலையைக் கண்டித்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 12-3-2013 அன்று தமிழகம் முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. 15-4-2013 அன்று நடைபெற்ற டெசோ கூட்டத்தில், கச்சத் தீவினை இலங்கைக்கு ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது என்பதுதான் உண்மை என்றும், எனவே 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத் தீவு இந்தியா வின் ஒரு பகுதிதான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், டெசோ அமைப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதென முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அவ்வாறே உச்ச நீதிமன்றத்தில் என் பெயரிலேயே வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

ஆகஸ்டு 8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

இந்த வரிசையில்தான் நேற்றையதினம் 16-7-2013 அன்று டெசோ கூட்டம் நடைபெற்று, அதிலே இலங்கை அரசமைப்புச் சட்டத் தின் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வற்புறுத்தியும், தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த தீர்மானங்களின் மீது இந்திய மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், சிங்கள ஆதிக்க வெறிக்கு எதிராக தமிழர் எழுச்சியை ஒன்று திரட்டவும், டெசோ இயக்கத்தின் சார்பில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று தமிழகம் முழுதும் மாவட்டத் தலைநகரங்களில் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவ தென முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அறவழிப் பயணம் தொடரும்!

உடன்பிறப்பே, நமது இயக்கத்தில் சார்பில் இவ்வாறு இலங்கைப் பிரச்சினைக்காகவும், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும், ஏனைய பொதுமக்கள் பிரச்சினைகளுக்காகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டு மென்று தலைமையின் சார்பில் முடிவெடுத்து அறிவித்து வருகிறோம். இத்தகைய நிகழ்ச்சிகளை இன்றுள்ள அரசியல் சூழலில் நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை நீங்கள் எல்லாம் உணர்ந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இலங்கைத் தமிழர் உறவு என்பது நம்முடைய தொப்புள் கொடி உறவாகும். அவர்களுக்காக டெசோ இயக்கத்தின் சார்பில் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடத்த வேண்டிய ஆர்ப்பாட்டத்தை எப்போதும் போல் சிறப்பாகவும், வெற்றிகர மாகவும் நடத்திடுவாய் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்பவே இருக்கிறது. சென்னை மாநகரில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமை தாங்கவிருக்கிறேன் என்கிற போது, நீயும் இந்த ஆர்ப்பாட்டத்தைச் சிறப்பாக ஆக்கிடுவாய்; ஆக்கிட வேண்டும்! ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைத்திடும் வரை, நமது அறவழிப் பயணம் நிற்காது!

அன்புள்ள,
மு.க.

தமிழ் ஓவியா said...


உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் எஸ்.சி., எஸ்.டி., பி.சி. மற்றும் பெண் நீதிபதிகள் உரிய எண்ணிக்கையில் வருவதை நான் வரவேற்கிறேன்!நீதியரசர் ப.சதாசிவம் பேட்டி

புதுடில்லி, ஜூன் 19- மேல் மட்ட நீதிமன்றங் களில் தாழ்த்தப்பட் டோர், மலை வாழ் மக்கள் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் பெண்கள் உரிய எண்ணிக்கையில் நீதிபதிகளாக வர வேண் டும்; அதனை நான் வரவேற்கிறேன் என்று உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக இன்று (ஜூலை 19) பதவி யேற்ற நீதியரசர் ப. சதா சிவம் நேற்று முன்தினம் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டுக்கு அளித்த பேட் டியில் கூறினார்.

பேட்டியில் கூறியதாவது:

மேல் நிலை நீதி மன்றங்களில் நீதிபதி பதவிகள் நிரப்புவதில், நிலவி வரும் முறை களிலிருந்து சற்று தளர்வு ஏற்படுத்தி, உச்சநீதி மன்றத்திலும், உயர்நீதி மன்றங்களிலும் பெண் களிடமிருந்தும், தாழ்த் தப்பட்டவர்களிடமிருந்தும், பழங்குடியினரிடமிருந்தும், மற்றுமுள்ள பிற்படுத்தப் பட்ட மக்களிடமிருந் தும் மேல் நிலை நீதி மன்றங்களுக்குத் தேர்ந் தெடுக்கப்படுவதை தான் வரவேற்பதாக கூறியுள் ளார். மேல் நிலை நீதி மன்றங்களில் பெண் களுக்கோ இதர பிற் படுத்தப்பட்டோர் களுக்கோ நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கு இடஒதுக்கீடு இல்லை. நீண்ட நாட்களாகவே உயர்நிலை நீதிமன்றங் களில், பெண்கள், பிற்படுத்தப்பட் டோர் ஆகியோர்க்கான இடம் மிகக் குறைவு. அவர் களை உச்சநீதிமன்றத் திலும், உயர்நீதிமன்றங் களிலும், அடிப்படை தகுதி உரிமையை சமரசம் செய்து கொள் ளாமல் நியமனம் செய் தால், நாட்டின் பன்முக சமுதாய வேறுபாடுகள் பிரதிபலிக்கப்படுவதோடு, சமுதாயத்தில் பெரு மளவிற்கு ஒருவளமான அடையாளத்தை அளிக்கும். தேர்வு முறைகளில் மாற்றம் செய்ய நான் விரும்புகிறேன். பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு ஒரு சிறு உதவியாக, பிற் படுத்தப்பட்ட வகுப்பு களில் உள்ள நற்றகுதி பெற்றுள்ளவர்கள் தேர்வு பெறுவதற்கு மேல் நீதிமன்றத் தேர் வாளர்களை ஒத்துக் கொள்ள வைப்பதற் கான பொறுப்பு அடுத்த தலைமை நீதிபதி என்ற முறையில் எனக்கிருக் கிறது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பு உறுப்பினர்கள், சட்டத்தைப் படித்து விட்டு நீதிபதியாக விரும் புபவர்கள் தங்கள் அடிப்படைத் தேவை களை நிறைவுபடுத்திக் கொள்ள தாங்களே முன் வர வேண்டும். அது உயர்நீதிமன்ற அதிகாரி கள் முன் தங்கள் பற்றிய தகவல்களை எடுத் துரைக்க, தங்களுக்குண் டான வேலைப் பகு தியைக் கேட்டுப் பெற உச்சநீதிமன்ற தேர்வுக் குழு நீதிபதிகளிடம் சில கொள்கைகள் சில இணக்கங்களை ஏற் படுத்தித் தர உதவும் என்று விளக்கினார்.

உச்சநீதிமன்றத்தில், 63 ஆண்டுக் காலத்தில், பெண் நீதியரசர்களுக் குப் பற்றாக் குறை நிலவு கிறது. அமர்ந்து இருக் கும் இரண்டு பெண் நீதிபதிகளையும் சேர்த்து, குயான் சுதா மிஸ்ரா, ரஞ் சனா பி. தேசாய் ஆகியோ ரையும் சேர்த்து 5 பேர் தான் இருக்கிறார்கள். இந்தியாவின் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி யாக முதல் தாழ்த்தப் பட்ட இனம் சேர்ந்த கே.ஜி. பாலகிருஷ்ணன் 2007இல் பதவி ஏற்றார். ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடமிருந்து நீதிபதிகள் தேர்ந்தெடுப் பது மிக மிக அபூர்வம்.

நீதியரசர் சதாசிவம், நீதிபதிகளின் அரசியல் சார்புகளையும், கடுமை யாகப் பேசினார். அவர் கள் அரசியல் தொடர்பு களைத் தவிர்த்து, சார்பு நிலைகளையும் நீக்கிக் கொள்ள வேண்டும். அவர் அரசியலுடன் இணைக்கப்பட்டிருக்க லாகாது என்று நீதியர சர்களாக விரும்புபவர் களுக்குச் சொன்னார்.

தமிழ் ஓவியா said...


மற்றொரு திவ்யா - இளவரசன் இணை காவல்துறை என்ன செய்கிறது?


- நமது சிறப்புச் செய்தியாளர்

தருமபுரி, ஜூலை 19- தருமபுரி மாவட்டம் பொம்மிடி காவல் சரகத் திற்குட்பட்ட வேப்ப மரத்தூர் கிராமத்தில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த கோபால் மகன் சுரேஷ் என்பவரும் அரூர் வட்டம் பறையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ப வரின் மகள் சுதா என்ப வரும் (தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்) காதலித்து கடந்த மூன் றாண்டுகளுக்கு முன் 21.4.2010-ஆம் தேதி சின்ன திருப்பதி கோயிலில் திரு மணம் செய்து கொண்டு அரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டுள்ள னர்.

கடந்த 3 ஆண்டு களாக சுரேஷ் பெற்றோ ருடன் கூட்டுக் குடும்ப மாக வாழ்ந்து வந்ததோடு ஜாதி மறுப்புத் திரு மணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் காதலின் சாட்சி யாக ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது.

மூன்றாண்டுகளுக்குப் பிறகும்...

இந்த நிலையில் இவர் கள் செய்து கொண்டது. காதல் திருமணம் என்று நம்பிய ஊரார். காலப் போக்கில் சுதாவின் சமூகம் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் சமூ கத்தை சார்ந்தவர் என்று தெரிய வரவே ஜாதியின் கோர முகம் தெரிய வந்தது. 3 ஆண்டுகளாக வேப்பமரத்தூரில் கூட்டுக்குடும்பமாக மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த நிலையில் நத்தம் இளவரசன் - திவ்யா காதல் விவகாரத்தில் ஜாதி வெறியர்களின் பிடி இறுகியது.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநா தன் (ஊர் கவுண்டர்) பெரியசாமி கோல்கரை (கவுண்டர்) தங்கராஜ் உட்பட்டோர் தலைமை யின் கீழ் ஊர் பஞ்சாயத் தினர் ஒன்றுகூடி வன் னிய இனத்தை சேர்ந்த பையன் தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஊரில் வசிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஜாதிக்கு ஏற்பட்ட இழுக்காகும் எனவே அந்தப் பெண்ணைத் துரத்திவிட்டு வரவும். அப்படி ஜாதி கெட்டு கீழ் ஜாதிப் பெண்ணு டன் வாழ்ந்தால் உங்கள் குடும்பத்தின் மீது ஊர் கட்டுப்பாடு கொண்டு வருவோம் என கூறி ஊர் திருவிழாவுக்கு கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுத்து ஊர்நிதியில் இருந்து சுரேஷ் வாங்கி இருந்த பணத்தையும் கட்டவைத்ததுடன், ஊர்திருவிழாவில், ஊரில் நடக்கும் திருமணம், சாவு போன்ற நிகழ்வு களில் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள் ளக் கூடாது. ஊராரும் இவர்களை சேர்க்கக் கூடாது. பொதுகுழாயில் தண்ணீர் எடுக்கக் கூடாது கடைகளில் பொருள் வாங்கவோ கொடுக் கவோ கூடாது என ஊர் (கட்ட) பஞ்சாயத்து பேசி சுரேசு குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளதாக ஜாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் தெரிவித் தனர்.

அதிலும் வேறு எந்த ஜாதிப்பெண்ணாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று உறுதியாக தெரி வித்துள்ளதாக கூறியது டன் இளவரசன் - திவ்யா வாழ்க்கை மாதிரி ஆக்கி விடுவோம் என்று மிரட் டியதாகவும் செய்தியா ளர்களிடம் தெரிவித்தனர்.

காவல்துறை என்ன செய்கிறது?

இந்த ஜாதி வெறி பிடித்தவர்களின் மிரட் டலுக்கு பயந்து சுரேஷ் - சுதா ஆகியோர் 22.6.2013-இல் பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் (குற்ற எண் 234/2013) இருந்தும் இதன் மீது காவல் துறை யின் நடவடிக்கை ஏதும் இல்லாததால் தினம் தினம் எங்கள் குடும்பத்தி னரை மிரட்டி வருகிறார் கள். ஒரு மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்காத தால் 17.7.2013-இல் உயி ருக்கு பயந்து மாவட்ட காவல்துறைக் கண்கா ணிப்பாளரிடம் (2ஆவது முறையாக) புகார் மனு கொடுக்க வந்துள்ளோம் என்று தம்பதிகள் தெரி வித்தனர் எங்களது வாழ்க்கை இன்னொரு நத்தம் இளவரசன் - திவ்யா வாழ்வைபோல ஆகிவிடக் கூடாது என்றனர்.

தமிழ் ஓவியா said...

13ஆவது சட்டத் திருத்தம்

1987 ஜூலை 29ஆம் தேதி ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தம் வாராது வந்த - தமிழர்களைக் காப்பாற்றக்கூடிய பெரு ஒப்பந்தம் என்றெல்லாம்கூட பேசப்பட்டதுண்டு.

உண்மை என்னவென்றால் பாதிக்கப்பட்ட தமிழர் களின் பிரதிநிதிகள் - போராளிகளின் பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்டுத் தயாரிக்கப்பட்ட ஒப்பந்தம் அல்ல அது! குறைந்தபட்ச சலுகைகளைத் தமிழர்களுக்கு அளிப்பதாகக் கருதப்பட்ட அந்த ஒப்பந்தத்தைக்கூட ஜெயவர்த்தனேயின் அமைச்சரவைத் தலைமை அமைச்சர் பிரேமதாசா முதல், பாதுகாப்புத்துறை அமைச்சர் அதுலத் முதலி வரையுள்ள 11 அமைச்சர்களும் ஏற்கவில்லை; ஒப்பந்தத்தில் கையொப்பமிட வந்த இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியை வரவேற்க வராமல் புறக்கணித்தனர்; புத்த பிக்குகள் எல்லாம் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர்!

ஜூலை 29ஆம் தேதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட இலங்கை அதிபர் ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனே அடுத்த ஒரு வார காலத்துக்குள்ளாகவே (6.8.1987) அதிபர் ஜெயவர்த்தனே இலங்கை வானொலி தொலைக் காட்சிகளில் நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தி என்ன தெரியுமா?

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இணைப்பு தற்காலிகமானதுதான். இதுகண்டு எதற்காக எதிர்ப்பைத் தெரிவிக்கிறீர்கள்? நானே இந்த இணைப்பிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய இருக்கி றேன். தற்காலிகமான இந்த ஏற்பாட்டிற்கு என்னைப் புரிந்து கொள்ளாது சிங்களச் சோதரர்கள் ஏன் ரகளை செய்ய வேண்டும்? என்று பேசினார் என்றால், ஒப்பந்தத் தில் கையொப்பமிட்ட ஒரு நாட்டு அதிபரின் அறிவு நாணயம் எத்தகையது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாமே!

வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைப்பு என்று வசீகரமாக அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதே - அது எந்த அடிப்படையில் தெரியுமா? இணைப்புக்கான வாக்கெடுப்பு என்று வரும் பொழுது அந்த இரண்டு மாகாணங்களிலும் தானே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்? அதுதான் இல்லை; கிழக்கு மாகாணத்தில் மட்டுமே தான் வாக்கெடுப்பு; ஏன் அந்த ஏற்பாடு தெரியுமா? அம்மாநிலத்தில் 60 விழுக்காட்டினர் சிங்களவர்களாக ஆக்கப்பட்டதுதான்.

26 ஆண்டுகளுக்குப் பிறகும் இரு மாநிலங்களும் இணைக்கப்படவில்லை என்பதை எண்ணும்பொழுது இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சி அதிகாரம் அமைந்தாலும் தமிழர்களை ஒடுக்குவது என்பதில் மட்டும் ஒரே கொள்கைதான் ஒரே செயல்பாடுதான்!

தமிழ் ஓவியா said...

இப்பொழுது நிலை என்னவென்றால், ஆளும் கட்சியின் மிக முக்கிய கூட்டாளிக் கட்சியான ஜெ.வி.பி. மூலம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, இணைப்பு, நீதிமன்ற தீர்ப்பு ரீதியாகவே வாய்ப்பு இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டதே!

இவ்வளவையும் கடந்து 13ஆவது சட்டத் திருத்தத்தில் கண்டுள்ளவைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் நிலைமைதான்! அதையும்கூட ஏற்றுக் கொள்ளாமல் அதில் ஏ என்ற ஒரு பிரிவை உண்டாக்கி நீர்த்துப் போகச் செய்யும் குள்ள நரித் தந்திரத்தில் சிங்கள இனவெறிப் பாசிச அரசு இறங்கிவிட்டது.

காவல்துறை அதிகாரங்களை தமிழ்ப் பகுதி மாகாணங்களுக்குக் கொடுத்தால் பிற மாகாணங் களிலும் அதே கோரிக்கைகளை வைப்பார்கள். அது இலங்கையின் பாதுகாப்புக்கே குந்தகமாக ஆகி விடும். இலங்கை அரசின் அதிகாரங்களை அது குறைத்துவிடும் என்று கருதுகிறதாம் ராஜபக்சே அரசு!

அதற்காக என்ன செய்துள்ளார்கள்? 13ஆவது சட்டத் திருத்தத்தை மறுபரிசீலனை செய்வதற்காக நாடாளு மன்றத் தேர்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இன்றுதான் (19.7.2013) கூடுகிறது. அந்தக் குழு கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (டி.என்.ஏ.) கூறிவிட்டது.

இன்றைய சூழலில் தனி நாட்டை வற்புறுத்தப் போவதில்லை; அதே நேரத்தில் நல்ல அளவுக்கு அதிகாரப் பகிர்வுடன் கூடிய மாகாண சபை அமைந்திட இந்தியா உதவ வேண்டும் என்று தான் கூறியுள்ளனர்.

16ஆம் தேதி கூடிய டெசோ கூட்டத்தின் தீர்மானத் தில் காணப்படும் இந்த ஒரு பகுதி முக்கியமானது.

13ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், ஈழத் தமிழர் பிரச்சினைக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது என்பதும்; இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும் ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி, அவர்களுடைய கருத்தினைக் கேட்டுத் தீர்வு காண்பதுதான் ஈழத் தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும் என்பதுதான் டெசோ அமைப்பின் நிலைப்பாடாகும். இருப்பினும் தற்காலிகத் தீர்வாகவாவது ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் பயன்பட வேண்டும் என்று டெசோ அமைப்பு கருதுகிறது.

மேலும் இலங்கை அதிபர் மற்றும் அவருடைய அமைச்சரவையில் உள்ளவர்கள் தெரிவித்து வரும் கருத்துகள் இந்த ஒப்பந்தத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே இந்திய அரசு அந்த ஒப்பந்தத்தில் கண்டுள்ளவாறு, எந்தவிதத் திருத்தங் களும் இல்லாமல் 1987 ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று டெசோ அமைப்பின் இந்த கூட்டம் வலியுறுத்துகிறது என்ற தீர்மானம் நடைமுறைக் கண்ணோட்டத்தோடு இன்றைய சூழலில் நிறைவேற்றப்பட்டு இருப்பது மிகச் சரியானதேயாகும்.

தமிழ் ஓவியா said...


திராவிடர்கள்தான்பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர் கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப் படிக் கூறுகிறோம். - (விடுதலை, 24.2.1954)

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம் என்றும் தேவை சுயமரியாதைத் திருமணம்


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்!

ஜூன்26 குடந்தை மாவட்ட கழக வரலாற்றில் மட்டுமல்ல, கழகத் தோழர்களின் குடும்ப வரலாற்றிலும் மறக்க முடியாத, கோலாகல ஒரு கொள்கைத் திருநாள்! ஆம்! குடந்தை கழக மாவட்டத்தில் தோழர்கள் வரவேற்பு - சந்திப்பு என்று தாங்களே மகிழ்ச்சி பொங்க எழுதியும் பாசமிகு கழகக் குடும்பத் தினரைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்த பொன்னாள்! தாங்கள் குறிப்பிட்டி ருந்தபடி ஒவ்வொரு கழகக் குடும்பத் தினருக்கும் ஒவ்வொரு தியாக வர லாறு இருக்கிறது!!

மலரும் நினைவுகளாக அவை களை நினைவு கூர்வதற்கும் ஏஞ்சிய காலத்தில் உறுதியோடும் உற்சாகத் தோடும் பணியாற்றுவதற்கும் கழகக் குடும்பங்களுக்கிடையே ஒரு பாசப் பிணைப்பை ஏற்படுத்துவதற்கும் இளைஞர்களிடையே ஒரு எழுச்சி யையும், விழிப்புணர்ச்சியையும் உருவாக்குவதற்கும் தங்களின் இந்த வருகை மிகவும் பயன்பட்டிருக்கிறது!

கொள்கை உறுதி படைத்த வர்களுக்கு கொடிய பாம்பும், கொடியில் தொங்கும் புடலங்காயே என்ற திண்ணிய உள்ளம் படைத்த கொள்கை மறவர்களின் அறப்போர் பாசறையே அய்யா வளர்த்த அன்புப் பாசறை என்பதை அன்று அனைவரும் உணர்ந்தனர்!

1963-ஆம் ஆண்டில் தாலி கூட அணிவிக்காமல் ஒரு சுயமரியாதைத் திருமணத்தை செய்து கொள்வ தென்றால் எத்தகைய எதிர்ப்புகளை எண்ணங்களை எதிர்கொள்ள வேண் டியிருக்கும் என்பதையும், அதை யெல்லாம் தாண்டி, எப்படி வெற்றி கரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதையும் என் இணையரும் நானும் முடிவெடுத்து கடந்த 50 ஆண்டு காலமாக இகழ்ந்திட்ட உள்ளத்தினரும் இறுதியில் இன்று கை குலுக்கி வாழ்த்துகின்ற நிலையைப் பெற்றிருக்கிறோ மென்றால்... அதற்கு, சுயமரியாதைக் கொள்கை மீது கொண்ட உறுதியும் அய்யா, அண்ணா, கலைஞர் தாங்கள் தந்த துணிவும், தொண்டறமுமே காரணம்!

தாங்கள் எங்களுக்கு சால்வை அணிவித்தபோது... இதுவரை நாங்கள் அனுபவித்த தொல்லைகள் துயரங்கள் அத்தனையும் எங்கோ ஓடிமறைந்தன!

பணியாற்றிய காலங்களில் நாங் கள் இருவருமே நேர்மையானவர் கள்... ஒழுக்கமுள்ளவர்கள்... நாணய மானவர்கள், கொள்கை உறுதி படைத்தவர்கள் என்ற பாராட்டைப் பெற்றிருக்கிறோமென்றால் இது ஒரு சுயமரியாதைக் குடும்பத்திற்குக் கிடைத்ததாகவே கருதுகிறோம்!

இது தற்புகழ்ச்சிக்காக அல்ல; வருங்கால வீறுகொண்ட இளைய சமுதாயமும் சுயமரியாதைப் பாதை யிலே வெற்றி நடைபோட வேண்டும் என்ற அளவற்ற ஆசையினாலே தான்! வேண்டும் என்பதற்காகத் தான்!!

தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் போல் இன்று, தாங் களும் முத்தமிழறிஞர் கலைஞரும் தமிழினத்தின் இருகண்கள்!... ஆனால் பார்வை ஒன்றே! சுயமரியாதைப் பார்வை!!

அந்தப்பார்வை காட்டும் வழியே இறுதி வரை போராடுவோம்! எங்களை எனது 80-ஆவது அகவையில் பாராட்டி பயனாடை அணிவித்த தங்களுக்கும், அம்மாவுக்கும், கழகத்திற்கும் என்றென் றும் நம்பிக்கைக்குரியவர்களாக இருப் போம் என்ற உறுதியையும் தெரி வித்துக்கொள்வோம்!.

நன்றி! நன்றி!! வணக்கம்.

வாழ்க பெரியார்!.

- நெய்வேலி தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...


ஆகாயத்தில்...


ஆகாயத்தில் எங்கோ அந்தர உலகத்தில் கடவுள் என்ற ஒருவன் உட்கார்ந்து கொண்டு இவ்விதமாக வெல் லாம் சிருஷ்டி செய்கின்றார் என்று சொல்லப் படுமானால் அத்தகைய பட்சாதாபமுடைய கடவுளை கஷ்டப்படுகிற உலகினர் கழுத்தை பிடித்துக் கீழே தள்ளி மிதித்து விடுவார்கள்.

அத்தகைய கடவுள் இப்படி மிதிபடுவதற்குத் தகுதியானவரே! புதிதாகச் சிருஷ்டிக்கும் ஜீவனை அவலட்சணமாக, அறிவீன னாக ஆரோக்கிய ஹீனமாக சிருஷ்டிக்கும் கடவுள் கொடுங்கோலர் அல்லவா?

(சுப்பிரமணிய சிவா எழுதிய மோட்ச சாதன ரகசியம் என்ற நூலிலிருந்து)

தமிழ் ஓவியா said...

ஒரு பார்ப்பனரின் கணிப்பு

தீண்டாமை என்பது சமய சம் பந்தப்பட்டிருக்கிறது. அதை சமய சம்பந்தத்தினால் தான் தீர்க்க முடியும். நான் ஒரு பிராமணன் என்ற முறையிலும் ஒடுக்கப்பட்ட மக் களுக்கு தலைவன் என்ற முறை யிலும் உங்களிடம் பேசுகிறேன். நல்ல ஒழுக்கமுள்ள அரிஜன் எப்பொழுது சங்கராச்சாரி பீடத்தில் அமருகின்றாரோ அப்பொழுது தான் தீண்டாமை ஒழிந்த தாகக் கருதமுடியும்.

(காகா கலேல்கார், ஆதாரம்: பெரியார் படைக்க விரும்பிய புதிய மனிதன் என்ற நூல்.)

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி பாரதியார்

தமிழ்நாட்டில் சாஸ்திரங்கள் இல்லை. உண்மை யான சாஸ்திரங்களை வளர்க்காமல் இருப்பனவற்றையும் மறந்து விட்டு, தமிழ்நாட்டு பார்ப்பனர் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள். - காற்று என்ற பாட்டில் பாரதியார் கூறியுள்ளது

தமிழ் ஓவியா said...


கடவுள்


தோழர்களே! நபி அவர்களை நான் ஒரு மகான் என்றோ, அமானுஷ்ய சக்தி படைத்தவர் என்றோ கருதவில்லை. என்னைப் பொறுத்தவரையில், நபி அவர்களை ஒரு மனிதத் தன்மை படைத்த சிறந்த மனிதராகத்தான் கருதுகிறேனேயல்லாமல், அதற்கு மேற்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில் கருதவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முகமது நபி அவர்களுடைய முக்கியமான கருத்துகளிலே தெய்வீகத் தன்மை என்பதை ஒப்புக் கொள்ள முடியாத நம் போன்றவர்களும் மற்றும் பல மதங்களைச் சேர்ந்த சீர்திருத்தவாதிகளும் ஆதரவு கொடுப்பதற்கும் ஒப்புக் கொள்வதற்கும் மேற்கொள்வதாக எடுத்துக் காட்டுவதற்கும் பல கருத்துக்கள் இருக்கின்றன.

அவர் என்ன சொன்னார்? ஒரு கடவுள்தான் உண்டு. பல கடவுள்கள் இல்லை என் றார். நீங்கள் கேட்கலாம், நபி அப்படி அதாவது ஒரு கடவுள் என்று சொன்னார்; இதைப் பற்றி உன் கருத்து என்ன? என்று என்னை பொறுத்தவரையில் நான் சொல்கிறேன்;

கடவுள் என்று மக்கள், ஆயிரக்கணக்கான கடவுள்களைக் கட்டி அழுகிறவர்களைவிட நபி அவர்கள் எவ்வளவோ மேலானவர் என்பேன்.

தந்தை பெரியார், 20.12.1953

தமிழ் ஓவியா said...

திதி மந்திரமும் - அதன் பொருளும்

மந்திரம்: என்மே மாதா ப்ரலுலோபசரதி

அன்னவ் வ்ரதா தன்மே ரேதஹா
பிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யநாம...

பொருள்: நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்ற வர்கள் சொல்வதால் நான் இன்னா ருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்ப வேண்டியுள்ளது. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டு போய் சேர்ப்பீர் என்பது இதன் பொருள்.

இம்மந்திரத்தின் வெளிப்படையான அர்த்தமென்ன?

தன் தாயானவள் சந்தேகத்திற்கு உரியவள். தன் கணவனுக்கு உண்மையாக நடக்காதவள். மாற்றானிடம் உடல் தொடர்பு வைத்திருந்தவள் என்ற அடிப்படையில் இந்த மந்திரம் சொல்லப் படுகின்றது. இதைத்தான் மந்திரம் ஓதும் புரோகிதர் சொல்ல திதி கொடுக்கும் மகன் திருப்பி சொல்கின்றான்.

ஆதாரம்: அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாசாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது... பாகம் -1 - பக்கம் 157, நக்கீரன் வெளியீடு.

எனவே இந்துமதப்படி பெற்றோர் களுக்கு நீ திதி கொடுத்தால் உன் தாய் ஒரு விபச்சாரி என்று பொருள். இதைத் தான் இந்து மதம் கூறுகிறது.

தமிழ் ஓவியா said...


மந்திர நீரும் - முடிவெட்டுவோர் நீரும்


பொதுமக்களே! நீங்கள் பார்ப்பனர்களுக்கு பொன்னும் பொருளும் தருகின்றீர்கள். அந்த பார்ப்பனர்கள் உங்களிடம் பொருள் பெற்று தம் கல்வியை பெருக்கி கொள்கின்றனர். பொது மக்கள் அனைவருக்கும் கல்வி அறிவையும் மெய்ப்பொருள் தெளிவையும் கற்றுத் தருவார் களானால், நீங்கள் அவர்களுக்கு பொன்னும் பொருளும் தருவது தகும்.

தெய்வத்தன்மை பொருந்திய நீர் நிலை களிலும், ஆறுகளிலும், வேள்விகளின் போது தலையை மொட்டை அடித்துக் கொள்கின் றீர்கள். அதனால் என்ன பலன்? நீர் நிலை களில் நீராடியதால் தீவினை அகன்றிருந்தால் மொட்டையடித்துக் கொள்வது தேவை இல்லை.

மொட்டை அடிப்பவன் கையால் தெளிக்கும் நீரால் அவர்கள் செய்த தீவினை அகல்வதாக இருக்கும் நிலையைப் பார்த்தால் போற்றத்தக்க நீர்நிலைகளைவிட தலை மழிப்பவனின் கையில் உள்ள நீரே பெருமையுடையதாகிறது. மந்திர நீரைவிட முடி மழிப்பவனின்கை நீர் மேன்மையானது.

தலை மொட்டையானாலும், தாழ்வான எண்ணங்களும் ஜாதி வேறுபாட்டு உணர்வுகளும் மொட்டையடிக்கப் படுவதில்லை அல்லவா? ஆந்திர சீர்திருத்த ஞானி வேமண்ணா

தமிழ் ஓவியா said...

காசியில் இறக்க முக்தி

சில தொண தொண பேர் வழிகள் எதையாவது எழுதிக் கொண்டு வந்து தங் களது அந்தக் கவிதையை சரிபார்த்துத் தரும்படியோ அல்லது அதற்கு மதிப்புரை தரும்படியோ புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களிடம் தொல்லை தருவார்கள்.

காசியில் இறக்க முக்தி, கைலையில் பிறக்க முக்தி என்று இப்படியாக 3 அடிகள் எழுதிய ஒருவர், 4ஆவது அடி தமக்கு வரவில்லை என்றும் அதை முடித்துத் தரவேண்டும் என்று ஒருவர் புரட்சி கவிஞரிடம் வேண்டினார்.

கவிஞர் தமக்குள் சிரித்துக் கொண்டே எனும் புராணக்கூற்றினை ஏற்பதில் இல்லை புத்தி என்று கடைசி வரியை முடித்துக் கவிதையை வந்தவன் கையில் கொடுத்தார். வந்தவன் முகத்தில் வழிந்த அசட்டுத் தனத்தைப் பார்க்க வேண்டுமே!

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப்பாட்டம்!


முக்கிய அறிவிப்பு

கழகப் பொறுப்பாளர்களே, தோழர்களே, ஆகஸ்டு முதல் தேதி, ஆர்ப்பாட்டம் அனைத்து மக்களின் ஆதரவையும் ஒருங்கே பெற்றுள்ளது. இதனை எதிர்ப்பார் குறிப்பிடத்தக்க வகையில் எவரும் இலர்.

1.8.2013 காலை 11 மணிக்கு எங்கும் நடைபெற வேண்டும். நடக்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் நடத்திடக் காவல்துறைக்கு இன்றே அனுமதி கேட்டு எழுதிக் கொடுக்க வேண்டும்.

கழகம் முன்னின்று நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பேராதரவு அளிக்க முன் வந்துள்ள தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ஆதரவு தருவோர்களை முன்னிலை என்றும், தொடக்கவுரை என்றும் குறிப்பிட்டு, துண்டறிக்கைகளை, விளம்பரப் பதாகைகளை, சுவர் எழுத்துகளைத் துவக்கி விட்டீர்களா?

தந்தை பெரியார் அறிவித்த மரண சாசனம் போன்ற போராட்டம் தமிழர் சமுதாய இன இழிவை ஒழிக்கும் போராட்டம்!

மிகுந்த உணர்வோடு, கொள்கைத் தாகத்தோடு முனைந்து செயல்படுவீர்!

அனைத்துக் கழக மாவட்டங்களிலும் இது நடைபெற வேண்டும். கழகத் தோழர்கள் அத்தனைப் பேரும் (விடுபடவே கூடாது) குடும்பம் குடும்பமாகப் பங்கேற்க வேண்டும். ஆதரவுக் கரம் நீட்டும் அன்புத் தோழர்களை பிற அமைப்புகளை அணுகுங்கள் - முக்கியம்! முக்கியம்!!

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவைப் பரப்பிடுவோம்


பகுத்தறிவை பக்குவமாய் பரப்பிடுவோம்!
பார்முழுக்க பிரச்சாரம் செய்திடுவோம்!
மக்களுக்கு, கருத்துக்கள் போய்ச் சேர்ந்திடவே!
மனிதநேயத்தை வளர்த்திடுவோம்!
வன்முறை இன்றி கருத்துக்களை
நன்முறையில் விளக்கிக் கூறிடுவோம்!
பெரியாரின் நல்ல பண்புகளை
பெரிதும் கடைப்பிடித்தே வாழ்ந்திடுவோம்!
பெண்ணடிமை ஒழித்து இவ்வுலகில்
தன்மானத்துடன் வாழச் செய்திடுவோம்!
நமது வீட்டு குழந்தைகளை
நன்றாக பகுத்தறிவுவாதி ஆக்கிடுவோம்!
-
கவிஞர் கணக்கப்பா

தமிழ் ஓவியா said...


என்னடா வெங்கட்ட நாயக்கா!


நம் இனம் இந்த உலகில் இருக்கிற வரை இழிவும் நீங்கப் போவது கிடையாது.

இந்த இழிவோடு ரோடு வழியாகப் போகிற பில் கலெக்டர் பார்ப்பான் வருவான்.

என்ன வெங்கட்ட நாயக்கா இன்னக்கி ஒரு பேப்பர் பார்க்கணும்டா சாய்ந்தரம் வாரியா என்று டா போட்டுத்தான் சொல்வான்.

அதற்கு என் தகப்பனார் எழுந்து நின்று ஆகட்டும் சாமி, அவசியம் வருகிறேன் என்று சொல்வார். இத்தனைக்கும் அவன் சாதாரண பில் கலெக்டர். பார்ப்பான் என்கிற ஒன்றைத் தவிர, மற்றபடி அவன் எதிலும் உயர்ந்தவன் அல்லன்.

(குடிஅரசு தொகுதி 17 பக்கம் 267)
க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


குப்பை மேடான கடவுள்!


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த குளமங்கலத்தில் உள்ள அய்யனார்கோயில் குதிரைச் சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் மாலைகள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அருகில் உள்ள குளமங்கலத்தில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் என்று ஒரு கோயில் உள்ளது. இக்கோயில் கட்டப் பட்டது கி.பி.1400-வாக்கில் என்று சொல்லப்படுகிறது. மற்றகோயில்களைப் போல்தான் இங்கும் வேலைவெட்டி எதுவும் இல்லாமல் ஒரு குதிரைச்சிலையைக் கட்டி வைத்திருக் கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும் அதில் இன்னொன்றும் இருக்கிறது.

பார்ப்பனக்கோயில்கள் எப்படி இருக்கும் பார்ப்பனச் சாமிகளும் கடவுள் கடவுளச்சிகளின் சிலைகளும் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை திராவிடர் கழகம் மட்டும் மேடைக்கு மேடை முழங்கி தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பார்த்தால் இந்த பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் கோயி லுக்கோ சாமி சிலைக்கோ முக்கியத்துவம் தராமல் குதிரைச்சிலைக்கு மட்டும் மக்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்.

காரணம் என்னவென்றால் இக்குதிரைச்சிலையின் அமைப்பு ஒரு குதிரை வானத்தில் தாவிப் பாய்வது போன்ற ஒரு தோற்றம் அச்சுப் பிசகாமல் நரம்பு புடைத்து துடிக்கும் அத்தனையும் துல்லியமாகத் தெரியும் வகையில் தமிழனின் கலைத் திறமையை உலகுக்குக் காண்பிக்கும் வகையில் இச்சிலை அமைக் கப் பட்டிருக்கிறது. ஆசியாவிலேயே மிகப் பெரிய குதிரைச்சிலை இதுதான் என்று சொல்லப் படுகிறது. அதனால் ஒரு தமிழனின் கலைவண்ணம் உலகுக்குத் தெரிகிறது என்று சொல்லிக் கொள்ளலாம். அது வேறு விஷயம்.

(ஒரு கோயிலுக்குள் ஒரு பார்ப்பான் புகுந்தால் மற்றவர்களை வெளியேற்றி விடுவான் என்பதற்கு இந்தக்கோயிலும் ஒரு உதாரணம். இக்கோயிலின் பூசகர்கள் என்று சொல்லக்கூடிய படிமாத்தார்கள் பரம்பரை குடியிருப்பே இருந்தும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளூரில் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டும் விவசாயம் செய்து கொண்டும் சென்னைக்குச் சென்று பிழைப்பு நடத்தியும் வருகிறார்கள். ஆனால் இந்தக் கோயிலுக்குள் அர்ச்சகர் என்று சொல்லிக் கொண்டு உட்புகுந்த பார்ப்பான் சில விதிமுறைகளை வகுத் துக் கொண்டு கோயில் நிலத்திலேயே பலலட்ச மதிப்பில் வீடும் கட்டிக் கொண்டு இப்போதைய நிலைக்கு கோடீசுவரனாகி விட்டான் என்பதை இன்றளவும் இந்தக் கிராம மக்களே உணரவில்லை.)

இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மாசிமகத் திருவிழாவின்போது சுமார் ரூபாய் 20-ஆயிரம் முதல் 50-ஆயிரம்வரை செலவு செய்து காகிதப்பூமாலை கட்டிக் கொண்டு வந்து குதிரைச் சிலைக்கு அணிவித்து வணங்கி மகிழ்வார்கள். இது வேறு எங்கும் நடக்காத ஒரு செயலாகும். நம் தமிழர்கள் எதைத்தான் விட்டு வைத்திருக்கிறார்கள் குதிரைச்சிலையை விட்டு வைப்பதற்கு?

இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி இப்போது பிளாஸ்டிக் ஒழிப்பில் முனைப்பைக் காட்டி வரும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மனோகரன் இக்கோயில் குதிரைச் சிலைக்கு அணிவிக்கப் பட்டிருக்கும் பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் ஜிகினா மாலைக்கும் தடாபோட்டு விட்ட தோடு குதிரைச்சிலைக்கு இந்த ஆண்டு பக்தர்களால் அணிவிக்கப்பட்ட சுமார் 1200-மாலைகளையும் அப்புறப் படுத்தி மாவட்ட குப்பைக்கிடங்குக்கு அள்ளி வரச் செய்து உத்தரவு பிறப்பித்து விட்டார்.

ஒவ்வொரு மாலைக்கும் ஒவ்வொரு லாரி பிடித்து பக்தர்களால் பெரிதும் போற்றப் பட்டுக் கொண்டு வரப்பட்ட மாலைகள் ஒரே லாரியில் மற்ற குப்பைகளோடு குப்பையாக்கப் பட்டு விட்டது. மேலும் கடந்த ஆண்டுகளில் போடப் பட்ட மாலைகள் அருகில் உள்ள வில்லுணி ஆற்றங்கரையில் அப்படியே மட்காமல் கிடப்பதையும் சுட்டிக் காட்டிய மாவட்ட ஆட்சியர் அனைத்தையும் அக்கிராமத்தை விட்டே அகற்றச் சொல்லி விட்டார். மேலும் வரும் ஆண்டுகளில் ஜிகினா மாலையோ, பிளாஸ்டிக் மாலையோ போடக்கூடாது என்றும் சொல்லி விட்டார். அதனால் அய்யனார் கோபித்துக் கொள்ள மாட்டார் என்பதோடு அவருக்கு பேசும் திறனிருந்தால் மட்காத குப் பையைக் கொண்டு வந்து என் தலையில் கொட்டுகிறீர்களே மக்கான மக்களே என்று வேதனைப் பட்டி ருப்பார். அவர்தான் பேசமாட்டாரே!
- ம.மு.கண்ணன், புதுக்கோட்டை

தமிழ் ஓவியா said...


அர்ச்சகப் பார்ப்பானும் மகனும் உரையாடல்


கோவில் அர்ச்சகரான தந்தையிடம் பார்ப்பன சிறுவன் அப்பா நம்மை நாடி வரும் பக்தர்களுக்காக பூஜை செய்து கடவுளிடம் வேண்டிக் கொள்கிறீர்கள்.

நானும் என் முன்னேற்றம் குறித்து கடவுளிடம் பேச வேண்டும் கடவுள்இருக்கின்றாரா, பேச முடியுமா?

அர்ச்சகப் பார்ப்பான் மகனிடம் கவிதை வடிவில் பதில் கூறுகிறார்.

கவிதை

கவலை கொள்ளாதே கவலை கொள்ளாதே

நம் முன்னேற்றம் பற்றி

கவலை கொள்ளாதே

நம் ஆரிய முன்னோர் செய்த சதியால் இம்மக்கள் முட்டாள்களாக உலவுகிறார்கள்

சூத்திரன் அறியாமையால்

ஆரியன் வீட்டில் அடுப்பெரிகிறது

இவர்களின் முட்டாள் தனமே நம் மூலதனம்

கடவுள் ஒருவன் இருந்தால் - நாம் களவு செய்யலாகுமா?

சாதரண அறிவு கூட இல்லாத

சந்தைக் கூட்டமடா?

முட்டாள்கள் இருக்கும் வரை

முன்னேற்றம் பற்றி கவலை கொள்ளாதே.

நோகாமல் நுங்கு திங்கும் வித்தை

நாம் காலம் காலமாக கற்ற வித்தை

அறியாமை சூத்திரன் உள்ளவரை -

அரிசி தானியத்திற்குப் பஞ்சமில்லை

ஒரறிவு கூட அற்ற (கடவுளை) கல்லை நட்டு

ஆறறிவு கொண்ட மக்களை

அல்லாட வைக்கும் ஆற்றலை

அல்லவா பெற்றுள்ளோம்.

முட்டாள்கள் உள்ளவரை முன்னேற்றம்

பற்றி கவலை கொள்ளாதே!

கடன் வாங்கி காவடி எடுத்து - நம்

கண்ணீர் துடைப்பான்

பால்குடம் எடுத்து நம் வயிற்றில்

பாலும் வார்ப்பான்.

அவன் சாமி ஆடிக் கொண்டாலும் நம்மைத்தானே

ஆடாமல் அல்லல் படாமல்

வாழவைக்கும் (சூத்திரதாரிகள்)

எங்கு கிடைக்குமடா?

இப்படியொரு அடிமைகள்

உழைத்து தேய்ந்து உடல் கறுத்து

சேர்த்த காசெல்லாம் நம்

ஆரியத்தின் சேமிப்புக்குத் தானே இடுகின்றான்.

பாமரக் கூட்டத்தால் பஞ்சம் நமக்கு இல்லை.

காட்டு மிராண்டிகள் உள்ள வரை

(கடவுள்) கல்லும் சாம்பலும்

ஆரியக் கூட்டத்தை காக்கும்

அற்புத தொழில் நுட்பம்

கருவிலே கூட களங்கத்தை வைத்தோம்

மதிகெட்டு மானமிழந்தாலும் - ஆரியரை

மணத்தோடு நயம் பட வைக்கிறான்

முன்னேற்றம் பற்றி

கவலை கொள்ளாதே! கவலை கொள்ளாதே!

தொடாதே தீட்டு என்றாலும்

தொடர் காணிக்கை தரும்

தொலை நோக்கு மந்தைகள் அல்லவா,

மங்கையர் அணிவகுப்பு

மல்லிகை மலர்களின் சரம் தொடுப்பு

மதிமயங்கும் நறு மணங்கள்

மங்கையர் மூச்சின் மோகம் - உனக்கு

வயது வந்தால் வாழ்வின் ரகசியம் புரியும்

கல்லை காட்டியே கல்லாவை நிரப்பும் சாணக்யம்

மந்தைகள் நிறைந்த மன்றத்தில் - ஆரியர்கள் மேதாவியே

சூடு சொரணை இல்லையென்றாலும் - நமக்கு

சோறிடும் பண்பு மாற மடமைகள்

பால் பழம் நெய் பல வகை - பட்சணங்கள்

பகலவன் படாத தேகம் - பகட்டு வாழ்க்கை

சல்லாபம் உல்லாசம் மலர்மணம் - சுகபோகம்

முன்னேற்றம் பற்றி கவலை கொள்ளாதே! கவலை கொள்ளாதே!

எல்லாம் இருப்பினும் எதிரிக்கூட்டம்

உண்டென்று சொல்வேன்

உள்ளத்தில் வைத்துக் கொள் - கொடும்

உணர்வுடன் பகைத்துக் கொள்

ஈரோட்டுச் சிங்கமொன்று - இடைவிடாது

சிந்தித்ததால் விடையின்றி கிடந்தவன்

வீறு கொண்டு எழுந்தான் - கிழவரின்

பல் முனைத்தாக்குதலால் - ஆரியக் கூட்டம்

பரிதவித்து நின்றோம்.

பூசைகள் யாகங்கள் எத்தனை செய்தாலும் அக்கிழவன்

புத்திக்கு பதில் சொல்ல இயலாது

அவரது நகல்கள் என்றுமே

அசாத்திய சாதனைகளின் பிறப்பிடம்.

எச்சரிக்கை கொள் இருப்பினும்

கவலை கொள்ளாதே! வாழ்வு பற்றி கவலை கொள்ளாதே!- இராமகிருட்டிணன், திருநெல்வேலி

தமிழ் ஓவியா said...


எத்தனை முட்டாள்கள்?
இந்தக் கூட்டத்தில் உள்ளவர்களில் இன்னமும் எத்தனை முட்டாள்கள் திவசம் செய்கிறீர்கள். உன் அப்பன் செத்தான்.

நீதானே குழியில் போட்டுப் புதைத்தாய்?

தீயிட்டுக் கொளுத்தினாய்? அதன்பின் எதற்காக உன் அப்பனுக்குத் திவசம் கொடுக்கிறாய்?

செத்தவன் நரகத்திற்குப் போகிறான்.

சொர்க்கத்திற்குப் போகிறான் என்கிறபோது மறுபிறப்பு, பிதிர்லோகம் என்பது பித்தலாட்டந்தானே? இதன் மூலம் காசு கொடுப்பவன், நாமாகவும், காசு பெறுபவன் பார்ப்பான் தானே?

- தந்தை பெரியார்

(பெரியார் களஞ்சியம் தொகுதி 19 300ஆம் பக்கத்தில் இருப்பது)

தமிழ் ஓவியா said...


அட, பைத்தியங்களே!உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் பரிதாபகரமாகப் பலியானார்கள்.
அதே நேரத்தில் புனித கோயில் களுக்கு எந்த சேதாரமும் இல்லை என்று ஒரு பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர். (கடவுளைக் காப்பாற்று கிறார்களாம்) அதே நேரத்தில் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாகத் தகவல்கள் வெளிவர ஆரம்பித்து விட்டன. கேதார் நாத் கோயில் பெரும் சேதத்துக்கு ஆளாகி விட்டதாம். ஆனாலும் கருவறைக்குப் பாதிப்பு இல்லையாம். அப்படியானால் கருவறை மட்டும் தான் கோயிலா? கோயில் என்று இப்பொழுது சொல்கிறார்களே. அதன் வடிவங்கள் _- அவை எல்லாம் வெறும் பில்டப் தானா?

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார்


கணவன் - மனைவி என்பது கிடையாது. ஒருவருக்கொருவர் துணைவர்கள்; கூட்டாளிகள் என்பது தான் உண்மை.
- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...


சு.சாமியே நில்! சொல்!


அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்காக நமக்கு சனாதன தர்மம் வர்ணசிரமத்தை அளித்துள்ளது. அது பிறப்பின் அடிப்படையில் இருந்தது இல்லை. சந்திரகுப்த மன்னன் தன் - செயல்களால் க்ஷத்திரியனாகத் திகழ்ந்தான்; பிறப்பினால் அல்ல. பாரத் வர்ஷா (ஆர்யா வர்த்தம்) என்ற, எப்பொழுதும் இருந்திராத, ஒரு தேசத்தை வலுவான தேசத்தை உருவாக்கினான். அன்னியப் படையெடுப் பாளர்கள் நம்மிடையே உள்ள துரோகிகளைக் கொண்டு அதை ஒரு கடுமையான சாதி அமைப்புகளைக் கொண்டதாக மாற்றி விட்டார்கள் (அது மேலை நாட்டினரால் நம்மீது திணிக்கப்பட்டது) அதன் மூலம் இன்று நாம் பார்க்கும் இந்திய சமூகத்தின் சீர்குலைவுகள் ஆரம்பமாகின. இந்தக் கடுமையான நிலையிலிருந்து விடுதலை பெற வீர இந்துவாக ஒன்று படுவோம் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் வருங்காலப் பத்தாண்டுகளில் நாம் அழிந்து போகத் தயாராக இருக்க வேண்டும்.

நாம் நமது தேசத்தைச் சீர் செய்ய வேண்டுமென்றால், சனாதன வீர இந்துத்துவாதான் எதிரே நிற்கும் ஒரே வழி.

இவ்வாறு சு.சாமி திருவாய் மலர்ந்துள்ளார்.

பிறப்பின் அடிப்படையில் வருணாசிரமம் இல்லை _ - கிடையாது என்று சு.சாமி அறிவு நாணயத்துடன் நம்புவாரேயானால், சங்கர மடத்தில் சங்கராச்சாரியார் வருவது பிறப்பின் அடிப்படையிலா இல்லையா?

கோயில் அர்ச்சகர்களாகப் பார்ப்பனர்கள் வருவது பிறப்பின் அடிப்படையிலா இல்லையா?

இவற்றை மாற்ற வேண்டும் என்று சு.சாமி அய்யர் சங்கரமடத்தின் முன் மறியல் நடத்துவாரா? கற்பகாம்பாள் கோயில் முன் கண்டனக் கூட்டம் நடத்துவாரா?

சு.சாமி பூணூல் போட்டு இருப்பது பிறப்பின் அடிப்படையிலா? - குணத்தின் அடிப்படையிலா?

நாணயமாகப் பதில் சொல்லட்டும் பார்க்கலாம்!

தமிழ் ஓவியா said...


நன்றி மணக்கும் கடிதமும், நன்கொடையும்


ஈரோடு-18-07-2013 வியாழன் அன்று பிரபல எலும்பு முறிவு மருத்துவர் டாக்டர் பி.டி.சக்திவேல்-மகப்பேறு மருத்துவர் சவுந்திரம் சக்திவேல் இணையரின் மகன் பிரதீப்குமார் அவர்களுக்கு இந்த ஆண்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.

சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை மாற்றி ஒடுக்கப்பட்ட ,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்புக் கதவைநீதிக்கட்சி ஆட்சி மருத்துவப் படிப்பிற்குத் திறந்தது. அதற்கும் தந்தைபெரியார் தான் காரணம்,அதனைத் தொடர்ந்து இட ஒதுக்கீட்டிற்காக போராடி, இட ஒதுக்கீடு பெற்றுத்தந்ததும் தந்தைபெரியார்தான் இன்றுவரை தந்தைபெரியாரின் இயக்கமான திராவிடர்கழகம் சமூக நீதிக்காக பல்வேறு களங்களைக்கண்டு மாபெரும் வெற்றிகளைத் தமிழ் சமுதாய ஒடுக்கப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெற்றுத்தந்துள்ளது.குறிப்பாக தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்களின் பணி அளப்பரியது.தந்தை பெரியார், விடுதலை, ஆசிரியர் கி.வீரமணி இவர்களது உழைப்பால் இடஒதுக்கீடு (கல்வி,வேலை வாய்ப்பு) தமிழ்நாட்டிலும்,மண்டல்கமிசன் மூலம் இந்தியாவெங்கும் சிறப்பான முறையில் நடைமுறைக்கு வந்துள்ளது.

இட ஒதுக்கீட்டு முறையில்தான் நானும்,எனது இணையர் சவுந்திரம் அவர்களும் மருத்துவர்களாக படித்து பயன்பெற்றோம்,அதனால் நாங்களும் இச்சமூகத்திற்கு பயன்படுகிறோம். அந்த வகையில் எங்களது மகன் பிரதீப்குமாருக்கு கோவை அரசு மருத்துவக்கல்லூரி யில் 2013-இந்த ஆண்டு இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.எனவே வாழையடி வாழையாக தமிழ் சமூகம் உயர்வதற்கு உழைத்துவரும் விடுதலை" வளர்ச்சிக்கு நன்றியுடன் ரூபாய் 10000/.(பத்தாயிரம்) வங்கிவரையோலையாக வழங்கி மகிழ்கிறோம். நன்றி.

நன்றியுடன் மருத்துவர் பி.டி.சக்திவேல் எம்.பி.பி.எஸ். எம்.எஸ்.ஆர்த்தோ, ஈரோடு. சக்தி நர்சிங்ஹோம், எலும்பு முறிவு மருத்துவமனை, பைபாஸ் சாலை, கொல்லம்பாளையம், ஈரோடு-638002.

18-07-2013 அன்றுமாலை 6 மணியளவில் மருத்துவர் பி.டி.சக்திவேல் அவர்கள் வங்கிவரையோலையை மண்டல தி.க.செயலாளர் ஈரோடுசண்முகம் அவர்களிடம் ஒப்படைத்தார் உடன் மாநகர தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட சு.ம.திருமண அமைப்பாளர் ப.சத்தியமூர்த்தி,மாநகர இளைஞரணித் தலைவர் ஜெபராசுசெல்லத்துரை.

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கலாமா?இம்மாதம் 16ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களில் இரண்டாவது தீர்மானம் - இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதாகும்.

54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டது இந்தக் காமன் வெல்த்தாகும். சுழற்சி முறையில் இந்தக் காமன்வெல்த் மாநாடு ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறுகிறது.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று குரல் உலக நாடுகளில் ஓங்கி ஒலிப்பதற்கு என்ன காரணம் என்பது சிந்திக்கப்பட வேண்டாமா?

காரணம் - அங்கே மிகப் பெரிய இனப்படு கொலை நடந்திருக்கிறது. இனப்படுகொலை செய்ததோடு மட்டுமல்லாமல், அவ்வாறு செய்தி ருப்பதை இன்றுவரை நியாயப்படுத்திக் கொண்டும் இருக்கிறது.

குறிப்பாக இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று அழுத்தம் கொடுப்பதற்கு அதிகமான காரணங்களும், நியாயங்களும் இருக்கின்றன.

1983 ஆகஸ்டு 16ஆம் தேதியன்று இந்திய நாடாளுமன்றத்திலேயே அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் இலங்கையில் நடப்பது இனப் படுகொலையே என்பதைத் தெரிவித்திருக்கிறார் என்பதை இந்திய அரசு அறியும் பட்சத்தில் அது எப்படி இனப்படுகொலைக்குக் காரணமாகவிருந்த அதிபரின் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்? கலந்து கொள்ளவும் முடியும்?

இந்த அடிப்படையான கேள்விக்கு இந்தியா பதில் சொல்லக் கடமைப்படவில்லையா?

வெளிநாட்டில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்த பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் ஒரு பேட்டியில் இலங்கையில் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அங்கு தமிழர்களில் மிதவாதிகள்கூட தீவிரவாதிகளாகும் விபரீதம் ஏற்படும் என்று கூறியுள்ளாரே! (23.9.1984)

இந்திரா காந்தி அவர்களைத் தலைவராகவும், கட்சியின் வழிகாட்டியாகவும் கருதக் கூடிய இன்றைய மத்திய அரசு, அவரின் குரலை - குரலில் அடங்கியுள்ள நியாயத்தை ஆழமாகப் புரிந்து கொண்டு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டாமா?

இனப்படுகொலை நடைபெறும் எந்த நாட்டிலும் மனிதாபிமானம் உள்ள எந்த நாடும் தலையிடுவதற்கு உரிமை உண்டு என்று (ழுநநேஎய ஊடிஎநவேடி - 1948) அய்.நா.வின் சட்ட விதி கூறியிருக்கிறதே.

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க விதிமுறைகளும், நியாயங்களும் ஏராளமான அளவில் குவிந்து கிடக்க, இந்தியா வேறு மாதிரி நடந்து கொள்வது உலக நாடுகள் மத்தியிலும், குறிப்பாக மனித உரிமை விரும்பிகள் மத்தியிலும் அவப் பெயரைத் தேடிக் கொள்வதாகும். இது 120 கோடி இந்திய மக்களுக்கு ஏற்படும் தலைக்குனிவும் ஆகும்.

16ஆம் தேதி டெசோ கூட்டத்தில் பல முக்கிய மான தகவல்கள் எடுத்துக்காட்டவும் பட்டுள்ளன.

கனடா நாடு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதாக கூறியுள்ளது. பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் குறிப்பாக காமன்வெல்த் மனித உரிமை அமைப்பு, ஆஸ்திரேலியாவின் மனித உரிமைச் சட்ட மய்யம் முதலியவை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளனவே! காமன்வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள் 27 பேர் ஒருமனதாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனரே!

டெசோ கூட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலும், கருத்தும் மிக மிக முக்கியமானவை.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடை பெறுவது உறுதியாகி விட்ட நிலையில், காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற்றால், அதன் காரணமாகவே அடுத்த இரண்டாண்டு களுக்கு காமன்வெல்த் மாநாட்டின் அவைத் தலைவராக ராஜபக்சே இருப்பாரென்றும், அதனால் 54 நாடு களைக் கொண்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரை நீதி விசாரணைக்கு உட்படுத்துவது இக்கட்டாக ஆகிவிடக் கூடுமென்றும், வலிமையான கருத் துகள் முன் வைக்கப்படுவதால், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா நட்பு நாடு என்று கூறிக் கொண்டு அதிலே கலந்து கொள் ளுமேயானால் அங்கே நடைபெற்ற இனப்படு கொலைகளை இந்தியா ஏற்றுக் கொள்வது போலாகி விடும் என்று டெசோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வரிகள் மிக மிக முக்கியமானவை அல்லவா!

இந்தியா காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப் பதன் மூலம் ஈழப் பிரச்சினையில் இதுவரை சம்பாதித்து வைத்துள்ள அவப் பெயரை - பழியைப் பெரும் அளவில் துடைத்துக் கொள்ள நல்லதோர் வாய்ப்பாக அமையுமே! இந்தியா சிந்திக்குமாக!

தமிழ் ஓவியா said...


பாடுபடுவான்இந்த நாட்டில் மனிதன் மற்றொரு மனிதனால் எவ்வளவு இழிவாகக் கருதப்படுகிறான் என்பதை ஒரு மனிதன் உணருவானானால், அவனுக்குக் கடுகளவு சுயமரியாதையாவது இருக்குமானால், அவன் மனித இழிவைப் போக்கத்தான் முதலில் பாடுபடுவான்.
(குடிஅரசு, 3.5.1936)

தமிழ் ஓவியா said...

குடிஅரசு வாசகர்களுக்கு ஓர் உண்மையான முன்னறிவிப்பு

அன்புள்ள வாசகர்களே!

இதுசமயம் நமது குடி அரசு வாரா வாரம் 4000 பிரதிகள் வரை போய்க் கொண்டிருந்தாலும், சட்டசபைத் தேர்தல் தீர்ந்த அடுத்த வாரம் முதல் கொண்டே சுமார் 1000 அல்லது 1500 பிரதிகள் திடீரென்று குறைந்து சுமார் 2500 பிரதிகள் போலத் தான் போக நேரிடும். ஏனெனில், சட்டசபைத் தேர்தலின் பொருட்டு நமது பார்ப்பனர் செய்துவரும் பொய்ப் பிரசாரத்தை வெளிப்படுத்த வேண்டி `குடிஅரசுக்கு முன்பணமாக சந்தா வந்தாலும் வராவிட்டாலும் இதுவரை அனுப்பிக் கொண்டே வந்தோம். இதனால் பெருத்த நஷ்டமும் நேரிட்டிருக்குமென்று சொல்லத் தேவையில்லை. ஆதலால் சில பாக்கிதாரருக்கு மாத்திரம் வி.பி.பி மூலம் அனுப்பி பார்க்கவிருக்கிறோம். தேர்தல் முடிந்தவுடன் வி.பி.பி. திருப்பியவர்களுக்கும் சந்தா பாக்கிதாரர்களுக்கும், முன்பணமனுப்பாதவர் களுக்கும் பத்திரிகைகள் அனுப்பப்படமாட்டா. நிற்க, தேர்தல் முடிந்த பின்னர் நமது `குடிஅரசு அரசி யலையே முக்கியமாய்க் கருதாமல் மக்களின் சுயமரியாதையைக் கெடுக்கும் பார்ப்பனியத்திற்கு ஆதாரமான வேதம், சாஸ்திரம், மிருதி, இதிகாசம், புராணம் என்று சொல்லப்பட்ட ஆரிய சம்பந்தமான நூல்களிலும், செயல்களிலுமுள்ள தந்திரங்களையும், புரட்டுகளையும், பட்சபாதகங்களையும், வஞ்சனைகளையும் தெள்ளத்தெளிய விளக்குவதோடு அந்நூல்களிலுள்ள விஷயங்களை நமது பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக எப்படி மறைத்தும், திருத்தியும், தப்பு வியாக்யானப் படுத்திக் கூறியும், நம்மை ஏமாற்றி வருகிறார்கள் என்பதையும் முறையே வெளியிடுதலையே பிரதானமாய்க் கருதி தக்க ஏற்பாடுகள் செய்துள் ளோம். ஆதலால் சந்தா பாக்கியுள்ளவர்கள் சந்தாத் தொகையை அனுப்பியும் மற்றவர்கள் புது சந்தாதாரர்களாக சேர்ந்தும் `குடிஅரசை ஆதரித்து அடுத்த மாத ஆரம்பத்திலிருந்தே வாசித்து வர வேண்டுமென நாம் மனப்பூர்வ விநயமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம்.
- குடிஅரசு - ஆசிரியர் அறிவிப்பு, 17.10.1926

தமிழ் ஓவியா said...

தமிழ் நாட்டிலிருந்து
`மற்றொரு இந்தியத் தலைவர்

பண்டித மோதிலால் நேரு அவர்கள் தனக்கு அசவுகரியம் ஏற்படும் போதெல்லாம் நம் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களில் ஒருவரைத் தான் பதில் (ஆக்டிங்) தலைவராய் நியமிப்பது வழக்கம். அதுபோலவே சென்ற வாரமும் தனக்கு லாகூரில் இருக்க சவுகரியமில் லாததால் ஸ்ரீமான் எஸ். சத்திய மூர்த்தி சாஸ்திரிகளை வந்து தனது தானத்தை ஒப்புக்கொள்ள அழைத்து இருக்கிறார். முதல் தடவை ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு அழைப்பு வந்தது. மறுதடவை ஸ்ரீமான் எ. ரெங்கசாமி அய்யங்காருக்கு அழைப்பு வந்தது. மூன்றாம் தடவை ஸ்ரீமான் எஸ். சத்தியமூர்த்தி சாஸ்திரிகளுக்கு அழைப்பு வந்திருக்கிறது. இனி நான்காந்தடவை கும்பகோணம் சக்கரவர்த்தி அய்யங்காருக்கு அழைப்பு வருமென்று எண்ணுகிறோம். இந்தியாவின் பாக்கியமே பாக்கியம். அதிலும் தமிழ்நாட்டின் பாக்கியமே பாக்கியம்.
- குடிஅரசு - செய்திக்குறிப்பு, 10.10.1926

தமிழ் ஓவியா said...

செந்தமிழ்ச் செல்வி (மாத வெளியீடு)

நாகரிகத்தில் சிறந்து விளங்கும் நாடுகளில் பத்திரிகைகள் தலைசிறந்து நிற்கும். மேனாடுகளை நோக்க நமது நாட்டில் பத்திரிகைகளின் தொகையும் செல்வாக்கும் குறைவுதான். பல அறிஞர்களின் உள்ளக் கருத்துக்களை ஒருங்கு திரட்டி உணர்த்தலால் மக்கள் அறிவைப் பண்படுத்துதலில் பத்திரிகைகள் வல்லன. நமது நாட்டில் தினசரி, வாரப் பத்திரிகைகள் அரசியல் கிளர்ச்சியில் பாய்ந்து செல்லும் வேகத்தில் சமூக சீர்திருத்த விஷயத்தில் அசிரத்தை காட்ட வேண்டிய நிலையில் இருக்கின்றன. கல்வி, சமயம், தத்துவம், சமத்துவ உணர்ச்சி ஆகிய விஷயங்களில் எல்லோருக்கும் பயன்படத்தக்க ஒரு திறமான திருத்தம் ஏற்பட்டால்தான் நமது சமூகத்தை பிணித் திருக்கும் குருட்டு நம்பிக்கைகள் ஒழியும். இத்துறையில் வேலை செய்யவல்லன மாத வெளியீடு களே யாகும். ஏனெனில் அறிஞர்கள் சாவதானமாக ஆராய்ந்து கண்ட முடிவுகளே அவற்றில் வெளிவர இயலும். தமிழ்நாட்டில் அத்தகைய திங்கள் வெளியீடுகளிற் சிறந்தது நமது செந்தமிழ் செல்வி எனத் துணிந்து கூறலாம். இதில் பெரும்பாலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வல்லவர்களான பேரறிஞர்களின் ஆராய்ச்சி உரைகளே வெளிவருகின்றன. பார்ப்பனியத்தின் மாயப்புரட்டுகள் வெளியாக்கப்படுகின்றன. தமிழர் நாகரிகம் தெள்ளத்தெளிய விளக்கப்படுகிறது. பண்டைய இலக்கிய இலக்கண ஆராய்ச்சிகளும் புதிய மேனாட்டுச் சாஸ்திர முறைகளும் ஆராய்ச்சி வல்லு நரால் பொருத்தமாய் எழுதப்படுகின்றன. மதுரைத் தமிழ்ச் சங்கத்தினின்றும் மாதம்தோறும் வெளியாகும் செந்தமிழ் வெளியீடு பார்ப்பன கோஷ்டி கையிலகப்பட்டுப் பார்ப்பனமயமாகிக் கொண்டிருக்கிறது. அதைத் தோற்றுவித்த ஸ்ரீமான் பாண்டித்துரைத் தேவரவர்களின் உத்தேசம் அடியோடு புறக்கணிக்கப் படுகிறது. பார்ப்பனரல்லாதார் பொருள் ஏராளமாயிருந் தும் சேதுபதி மகாராஜா தலைவராயிருந்தும் தமிழ்ச் சங்கத்தையும் அதைச் சார்ந்த கலாசாலையையும் `செந்தமிழ் மாத சஞ்சிகையையும் பார்ப்பனராதிக்கத்தில் ஒப்படைத்திருப்பது பரிதபிக்கத்தக்கது. இக்குறை களைக் கண்டே பல தமிழபிமானிகள் தென் இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் என்னும் பெயரால் மற்றொரு உண்மை தமிழ்க் கழகம் கண்டனர். மதுரை தமிழ்ச் சங்கத்தைப் போல் தென் இந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்கு புதுக்கோட்டை மகாராஜா, ராமநாதபுரம் மகாராஜா, ஏனைய ஜமீன்தார்கள், நாட்டுக் கோட்டை, நகரத்தார், பிரபுக்கள் முதலியோருடைய நன்கொடைகளும் ஆதரவும் இல்லையாயினும் அது தோன்றிய குறுகிய காலத்துள் நாவலர் பதிப்பு, சங்கப் பதிப்பு ஆகியவைகளையும் தோற்கடிக்கத்தக்க நிலைமையில் பல பழைய புதிய நூல்களை அது வெளியேற்றியிருக்கிறது. ஒரு சிறு பிழையுங்காண முடியாது. பெரும்பாலும் புத்தக கட்டடங்களும் நவீன முறையில் கண்கவர் வனப்பின வாயிருக்கும். நாம் தலைப்பிற் குறித்த `செந்தமிழ்ச் செல்வியும் இக்கழகத்தினின்றும் வெளிவருவதுதான். உயர்திரு வாளர்கள் கா. சுப்பிரமணியப் பிள்ளையவர்கள், எம்.ஏ., எம்.எல்., பா.வே. மாணிக்க நாயக்கர் போன்ற இரு மொழிப் புலவர்களின் பேராதரவு பெற்ற நமது, `செந்தமிழ்ச் செல்வியின் மாட்சியை விளக்கவும் வேண்டுமோ? தமிழ் மக்களின் முன்னேற்றங் கருதி உழைக்கும் சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் மணி, திருநாவுக்கரசு முதலியாரவர்களே நமது செல்வியின் ஆசிரியராவார்கள்.

வடமொழிக் கலப்பில்லாத `தனிச் செந்தமிழ் நடை படிக்கப் படிக்க இனிக்கும். ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ் மகளும் அன்புடன் வரவேற்று ஆதரிப்பாராக.

வருட சந்தா

உள்நாடு ரூ.3-0-0
வெளிநாடு ரூ.3-8-0
கிடைக்குமிடம்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (லிமிடெட்), 306 லிங்கி செட்டி தெரு, சென்னை.

- குடிஅரசு - நூல்மதிப்புரை - 10.10.1926

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


1921 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் - இரண்டு பார்ப்பனர்கல் விவசாய வேலை செய்தார்கள் என்பதற்காக, அவர்கள் ஜாதி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்பதும், இதற்கு சங்கராச்சாரியும் உடந்தை எனபதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

தற்கொலை


விலைமதிப்பற்ற மனித உயிரைத் தற்கொலை செய்து போக்கிக் கொண்டோர் எண்ணிக்கையில் 2012ஆம் ஆண்டில் (19,927) தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தேசிய அளவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குடும்பப் பிரச்சினை, நோய், காதல் பிரச்சினை, வருமானமின்மை, வரதட்சணைக் கொடுமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மனிதர்கள் தற்கொலை முடிவுக்கு வருகின்றனர். இதில் இரண்டாம் இடத்தில் (16,112) மகாராஷ்டிராவும், மூன்றாம் இடத்தில் மேற்கு வங்கமும் (14,957) உள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை உடல்நலக் குறைவால் 3,663 பேர்களும் குடும்பப் பிரச்சினையால் 4,842 பேர்களும் தற்கொலை செய்துள்ளனர். உடல்நலக் குறைவு அடிப்படையில் தேசிய அளவில் மூன்றாம் இடத்தையும் குடும்பப் பிரச்சினை அடிப்படையில் இரண்டாம் இடத்தையும் தமிழகம் பெற்றுள்ளது.

19 வயதிலிருந்து 29 வயதுக்குட்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டதில் மணிப்பூர் (46,635) முதலிடத்தில் இருக்கிறது. 15லிருந்து 29 வயதுக்கு உட்பட்டவர்களில் 43.8 சதவிகிதம் குடும்பப் பெண்களும் 78.8 சதவிகிதம் மாணவர்களும், 30லிருந்து 44 வயதுவரை உள்ளவர்களில் 36.7 சதவிகிதம் விவசாயிகளும் 35.2 சதவிகிதம் வேலைவாய்ப்பற்றவர்களும் தற்கொலை செய்துள்ளனர்.

திருமணமானவர்களே அதிக அளவில் தற்கொலை செய்துள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிவித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

முருகன் ஆலயத்தில் பெரியார்1942-ஆம் ஆண்டு டி.கே.சி.யிடம் செயலராகப் பணிபுரிந்த எஸ்.வேங்கட சுப்பிரமணியம் (எஸ்.வி.எஸ்.) குற்றாலத்தில் டி.கே.சி.யின் இல்லத்தில் தங்கி இருந்தார். ஒருநாள் நண்பகலில் பெரியார் ராமசாமி மாட்டு வண்டியில் டி.கே.சி.யின் இல்லத்தைக் கடந்து சென்றதை எஸ்.வி.எஸ். கண்ணுற்றார். இதனை டி.கே.சி.யிடம் தெரிவித்தார். உடனே டி.கே.சி. எஸ்.வி.எஸ்ஸிடம் பெரியார் எவ்விடத்தில் தங்குகிறார் என்பதனை அறிந்து வருமாறு பணித்தார். எஸ்.வி.எஸ். அதனை ஏற்று அருகில் உள்ள பங்களாவில் பெரியார் தங்கியிருக்கிற செய்தியினை டி.கே.சி.யிடம் தெரிவித்தார்.

மீண்டும் டி.கே.சி. எஸ்.வி.எஸ்ஸை நோக்கி, பெரியாரிடம் சென்று மதிய உணவு உண்டுவிட்டாரா? இல்லையெனில் தமது இல்லத்தில் இருந்து அனுப்பி வைக்கலாமா? என்பதை அறிந்துவருமாறு கூறினார்.

பெரியார் கடந்து சென்றதை ஏன்தான் டி.கே.சி.யிடம் சொன்னோமோ என்று எஸ்.வி.எஸ். தமக்குள்ளேயே முணு முணுத்தார். பெரியார் பிராமண குலத்துக்குப் பரமவைரி; காங்கிரஸ் கொள்கைகளை அறவே பிடிக்காதவர். கம்ப ராமாயணத்தையே தீயிட்டுக் கொளுத்தியவர். இச்செயல்களால் அவருக்குப் பெரியாரைச் சிறிதும் பிடிக்காது. தமக்குப் பிடிக்காத கொள்கைகளைக் கொண்ட பெரியார் மீது கம்ப ராமாயணத்தை உயிர் மூச்சாகக் கொண்ட டி.கே.சி. எல்லையற்ற பாசத்தைக் கொட்டுகிறாரே! நல் உபசரிப்பையும் நல்குகிறாரே என நினைத்துப் பெரிதும் வேதனையுற்றார்.

இதனைக் குறிப்பால் உணர்ந்த டி.கே.சி. பெரியாரின் கொள்கைகளைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அவர் ஒரு லட்சியவாதி. சீர்திருத்தச் செம்மல். தள்ளாத வயதிலும் நாடெங்கிலும் அயராது தம் கொள்கைகளைப் பரப்பி வருகிறார். இத்தகு பெரியாரை நாம் உபசரிப்பதில் என்ன தவறு? என்று கூறி உணவு வழங்க ஏற்பாடு செய்தார்.

வேறு வழியின்றி வேண்டா வெறுப்புடன் எஸ்.வி.எஸ். பெரியாரிடம் சென்று டி.கே.சி. கூறிய விபரத்தைச் சொன்னார். பெரியாரும் மதியம் வீட்டிலிருந்து உணவு அனுப்புங்கள் என்றார். அதற்கிணங்க டி.கே.சி. வீட்டிலிருந்து அறுசுவை உணவு பெரியாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பசியுடன் இருந்த பெரியாரும் உணவைச் சுவைத்து உண்டு மகிழ்ந்தார்.

அதே ஆண்டு மற்றொரு சமயம் பெரியார் ராமசாமி குற்றாலத்தின்கண் அமைந்த டி.கே.சி.யின் இல்லத்திற்கு வருகை தந்தார். டி.கே.சி. தமது மணிவிழாவினைக் கொண்டாட அவ்வமயம் திருவிலஞ்சிக் குமரன் கோவிலுக்குச் சென்றுள்ளதை அறிந்தார். உடனே தமது வண்டியை நேராகத் திருவிலஞ்சிக் குமரன் கோவிலுக்கு ஓட்டிச் செல்லுமாறு பணித்தார். உடன் இருந்த பெரியாரின் நாத்திகத் தொண்டர்கள் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாயினர். அவர்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தும்கூட பெரியார் அதனைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. நேராகத் திருவிலஞ்சிக் குமரன் ஆலயத்திற்குள்ளேயே சென்றார்.

பெரியார் பெரிய நாத்திகவாதி. கடவுள் நம்பிக்கை அறவே இல்லாதவர். இருப்பினும் டி.கே.சி. மீது கொண்ட அளப்பரிய அன்பினாலும், மட்டற்ற மதிப்பினாலும் ஆலயத்திற்குள்ளேயே சென்று அவரைக் கட்டித் தழுவி வாழ்த்துக் கூறி அக மகிழ்ந்தார்.உடனிருந்த நாத்திகத் தொண்டர்கள் பெரியாரிடம் தணிந்த குரலில், அய்யா, தாங்கள் முருகன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கலாமா? என வினவினர். உடனே பெரியாரும், அறுபதாம் கல்யாணம் முருகனுக்கு இல்லையப்பா! நம்ம முதலியார்வாளுக்குத்தானே! அதுல நான் கலந்துக்கறதல என்னப்பா தவறு? என மறுத்துரைத்தார்.

பின்பு பெரியார் டி.கே.சி.யோடும், நண்பர் களோடும் பந்தியில் அமர்ந்து சித்திரான்னங்களை விரும்பி ருசித்து உண்டுவிட்டுப் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

பெரியார் தெய்வ மறுப்புக் கொள்கை உடையவராயினும், டி.கே.சி.யின் நட்புக்கு அதிக மதிப்புக் கொடுத்தார் என்பதை உணர்ந்து, உடன்வந்தோர் அனைவரும் ஆறுதல் அடைந்தனர்.

தமிழ் ஓவியா said...

யாகம் நடத்துவது அறநிலையத்துறையின் வேலையா?

இந்த ஆண்டு, சரியான மழை _- காலத்தே பெய்யும் பருவ மழை போதிய அளவு இல்லை என்பதால் வறட்சி நிலவுகிறது. வடமாநிலங்களில் அபரிமிதமான மழை, வெள்ளக்காடு _- பல்லாயிரம் பேர்களைப் பலி கொள்ளும் அளவுக்கு அங்கே!

இந்நிலையில், மழையை வரவழைக்க இந்து அறநிலையத் துறை தன்கீழ் உள்ள கோவில்களில் யாகம் நடத்தியும், வருண ஜெபம் நடத்தியும் சில கோவில் குளங்களில் (அங்கேயே பல குளங்கள் _- தீர்த்தங்களில் தண்ணீரே இல்லை) முழங்கால் அளவு, அரை நிர்வாணக் கோலத்துடன் திடசரீரம் உள்ள பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிச் சின்னமான பூணூலைக் காட்டிக் கொண்டு, சமஸ்கிருத மொழியில் வேத மந்திரங்களைக் கூவிக் கொண்டு, யாகம் என்ற பெயரில் புது வருவாய்க்கு வழிதேடும் வழியை வகுத்துக் கொடுத்திருக்கிறது!

இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் மழை வேண்டி யாகம் என்றால், உலகத்தின் பகுத்தறிவுள்ள மக்கள் கை கொட்டிச் சிரிக்க மாட்டார்களா?

இந்த மூடநம்பிக்கைகளை _- பக்தி வேஷம் போட்டு பரதக் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் பார்ப்பனர்களுக்கு தொழில் வளம் ஏற்படுத்த தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை துணை போவது மிக மிகக் கண்டனத்திற்குரியதாகும்!

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மை (Secular) கொள்கைக்கும் 51A(h) பிரிவில் உள்ள அடிப்படைக் கடமைகளைப் பரப்புதல் என்ற தலைப்பில், ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையை (Scientific Temper) கேள்வி கேட்கும் அறிவை மனித நேயத்தை, சீர்திருத்தத்தைப் பரப்புவது அடிப்படைக் கடமை என்று இருக்கும்போது,அதைச் செய்யத் தவறுவதைவிட பெருங் குற்றமும் உண்டோ? அரசுத் துறையே அறிவியல் மனப்போக்குக்கும், சீர்திருத்தத்திற்கும் முரணாக இப்படி மழை வேண்டி யாகம் செய்ய அதன் நிதியைச் செலவிட்டு, மூடநம்பிக்கையைப் பரப்பும் மோசமான எதிர்மறைச் செயலில் ஈடுபடலாமா?

இதைவிட (அரசியல்) சட்ட விரோத நடவடிக்கை வேறு என்ன?

மழை வேண்டி _ -பருவக் காற்று துவங்கும் காலத்தில் மிகச் சாமர்த்தியமாக யாகம் நடத்துவது வருண ஜெபம் நடத்துவது, என்பது யாரை ஏமாற்ற?

சில கேள்விகளை அத்தகைய பெரும் உலக மகா யாக அறிவாளிகளுக்கு நாம் வைக்கிறோம்.

1. மழை எப்படி வருகிறது என்பது 4,5ஆவது வகுப்பு மாணவனுக்கு வகுப்பில் விஞ்ஞானம் சொல்லிக் கொடுத்துவிட்டு, இப்படி யாகம் செய்தால் அது இரட்டை வேடம் _- மோசடி அல்லவா?

2. யாகம் நடத்தும் எவராவது கையில் குடையோடு சென்றுள்ளார்களா? உத்தரவாதம் தருவார்களா?

3. மழை வேண்டி வருண ஜெபம், யாகம், பூஜை புனஸ்காரம், முழங்கால் தண்ணீரில் நின்று சமஸ்கிருத வேத மந்திரங்கள், அல்லது அமிர்தவர்ஷணி ராகம் பாடுவதாலோ! ஆனந்த பைரவி வாசிப்பதாலோ மழை வரும் என்றால், கச்சேரி மூலமே மழைப் பிரச்சினையைத் தீர்த்து விடலாமே! _- எதற்காக உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் காவிரி நீருக்காக?

உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்கள் நிவாரண உதவிகளைத் தடுக்கும் வகையில் மீண்டும் மிரட்டும் மழையைத் தடுக்க எந்த யாகம்? எந்த பூஜை? எந்த ஜெபம்? _- சொல்லட்டுமே பார்க்கலாம்!

அறியாமையைவிட மிகப் பெரிய நோய் மனித குலத்திற்கு வேறு இல்லை என்றார் அமெரிக்க நாட்டுப் பகுத்தறிவாளர் ராபர்ட் ஜி. இங்கர்சால்!

இந்த அறியாமையைத் தமிழக அரசே ஊக்குவிக்கலாமா? பரப்பலாமா? அதுவும் அண்ணா பெயரில் உள்ள அரசு?

இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை நீதிக்கட்சி ஆட்சிதான் 1924 வாக்கில் உருவாக்கியது. அதன் விவாதங்கள் சட்ட-மன்றத்தின் நூலகத்தில் உள்ளதை இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும், அமைச்சரும், முதல் அமைச்சரும் படிக்க வேண்டும்.

கணக்குத் தணிக்கை (Audit) தான் அதன் பிரதான நோக்கமே தவிர, பக்தி பரப்பும் இலாகாவாக இந்து அறநிலையத் துறை செயல்படுவது அச்சட்ட விரோதமே! சாயமடிப்பதோ, கும்பாபிஷேகம் செய்வதோ, தேர் இழுப்பதோ இத்துறை அதிகாரிகளின் வேலை அல்ல!

இப்போது மதச் சார்பின்மையைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, பல மாவட்டங்களில் ஆட்சியாளர்களும், (Collector), மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்களும் (போலீஸ் எஸ்.பி.க்களும்) தேருக்கு வடம் பிடிப்பது, கும்பாபிஷேகத்தில் பக்தி வேஷம் போட்டுக் காட்டிக் கொள்ளுவது, என்பது பகிரங்கமான சட்ட விரோதச் செயல்!

இது உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் அறப் போர்கள் ஒருமுனையிலும், பொது நல வழக்கு மறுமுனையிலும், பிரச்சாரங்கள் மூன்றாவது முனையிலும் நடத்தப்படும் என்பதை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

கி.வீரமணி,

ஆசிரியர்

தமிழ் ஓவியா said...


நாம் இன்னும் சூத்திரர்களா? அமெரிக்காவிலிருந்து ஒரு குரல்!


அனைவரும் அர்ச்சகர் போராட்டம் மிகவும் முக்கியம் வாய்ந்தது !

இதில் அனைவரையும் பங்கேற்க வைக்க வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் ஆழமாகச் சிந்தித்துச் செயல்படுத்துபவர்.

தமிழனின் சூத்திரப் பட்டத்தை அடியோடு ஒழிக்கும் செயல் இந்தப் போராட்டம்.

அனைவரும் சமம் என்று பேசித் திரிந்தால் போதாது. பேசுவோர் அனைவரையும் பங்கேற்க செய்ய வேண்டும். கிராமத்துக் குழந்தைகள் முதல் கல்லூரிப் பேராசிரியர்கள் ,மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியியல் மற்றும் பல்துறை வல்லுநர்களைப் பங்கேற்கச் செய்ய வே ண்டும். அனைவரும் மானமுள்ள மனிதர்களாக வாழ வேண்டுமா அல்லது சூத்திரர்களாக வாழ வேண்டுமா?

இது கடவுள் எதிர்ப்புப் போராட்டமல்ல. இந்தப் போராட்டம் பக்தியை எதிர்த்தல்ல. புத்திக்கானப் போராட்டம். நீ எவ்வளவு பெரிய மனிதனாகப், படித்துப் பட்டம் பெற்ற அறிஞனாக இருந்தாலும், கோவில் கட்ட வாரி வழங்கியிருந் தாலும் உன்னைச் சார்ந்தோர் அர்ச்சகர் ஆக முடியுமா?
உலகில் இந்தக் கொடுமை வேறு எங்காவது உண்டா? தென் அமெரிக்காவிலே பிறந்தவர் உலக கத்தோலிக்கர்களின் போப்பாண்டவர். தஞ்சையிலே பிறந்த தமிழன்! தஞ்சைக் கோவிலில் சூத்திரன். மதுரையிலே பல்லாயிரம் ஆண்டுகளாக உள்ள தமிழன் மதுரையிலேயே சூத்திரன்! பொங்க வேண்டாமா உள்ளம்? யார் செய்த வேலை என்பதைவிட இப்பொழுது நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம். இதில் பங்கேற்காதவர்கள் தங்களைச் சூத்திரன் என்று ஒப்புக்கொள்கின்றார்களா ?.

அனைவரும் தயவு செய்து சிந்தியுங்கள். உங்கள் குழந்தைகளைச் சூத்திரனாக இருக்கச் சொல்லலாமா?அதற்காகத்தான் இந்தப் போராட்டம்.

ஆயிரமாண்டு அசிங்கத்தை இன்று களை வோம். நாம் கட்டிய கோவில்களில் நாம்தான் உரிமையுடையவர்கள். இது திராவிடர் கழகப் போராட்டம் என்றிருக்கலாமா?

அனைத்துத் தமிழர்களின் போராட்டம். தமிழன், தமிழ் என்று பேசிப் பயனில்லை. மான முள்ள தமிழனாக வாழவேண்டுமென்கிற போராட்டம். நீங்கள் மானமுள்ள தமிழன் என்பதைப் பறைசாற்றும் போராட்டம்.

அனைவரும் சமம் என்று அகிலமே பாடும்; பொது அடிமைப் புத்தியை அகற்றிடும் போராட் டம். அடிமைத்தளை உடையட்டும் .

அனைவரும் அர்ச்சகராக அரசு செயல்படட்டும்!

வாழ்க பெரியார் !
- சோம.இளங்கோவன், சிகாகோ

தமிழ் ஓவியா said...


சாமி கும்பிட கட்டணமா? இந்து அமைப்புகள் போர்க்கொடி!

சென்னை, ஜூலை 21- கோவில்களில், தரிசன கட்டணம் வசூலிப்ப தற்கு எதிராக, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட் டம் நடத்த, பல்வேறு இந்து இயக்கங்கள் முடிவு செய்துள்ளன. அதற்கான முதற்கட்ட போராட்டம், இன்று (21ஆம் தேதி) துவங்குகிறது.

தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறை யின் கட்டுப்பாட்டில், 39 ஆயிரம் கோவில்கள் உள் ளன. இக்கோவில்கள், மாத வருவாயின் அடிப் படையில் பிரிக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகின்றன. இக்கோவில்களில், பண் டிகை, சிறப்பு நாட்களில், கட்டண அடிப்படை யில், தரிசனத்துக்கான வரிசை பிரிக்கப்படு கிறது. 1,000 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட் டணம் நிர்ணயிக்கப் படுகிறது. இக்கட்டணத்துக்கு, பக்தர்களிடையே பலத்த எதிர்ப்பு வந்த போதும், அறநிலையத் துறை தரிசன கட்டண முறையை, தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த சில ஆண்டு களாக, பல்வேறு இந்து இயக்கங்கள், இதற்கு எதிராக போராடி வரு கின்றன. அதன் ஒரு பகுதியாக, கையெழுத்து இயக்கம் நடந்து வரு கிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும், இன்று போராட்டம் நடத்த, இந்து முன்னணி உள்ளிட்ட, பல்வேறு இந்து இயக்கங்கள் போராட்டம் நடத்து கின்றன.

இதுகுறித்து, இந்து இயக்கங்களின் நிர்வாகி கள் கூறியதாவது: இறை வனுக்கு முன், அனை வரும் சமம். இறைவனை தரிசிக்க கட்டணம் நிர்ணயித்தால், காசு உள்ளவனுக்கு மட்டுமே, கடவுளின் தரிசனம் என்ற நிலை வந்துவிடும். இது, இந்து மதத்தின் அடிப்படை தத்து வத்தையே தகர்த்து விடும். இதனால், மேலும் ஏற்றத் தாழ்வுகள் உரு வாகும். தமிழகத்தில், "டாஸ்மாக்' நிறுவனத் துக்கு பின், அதிக அளவி லான வருமானம், கோவில்களில் இருந்தே வருகிறது என்று கூறி யுள்ளனர்.

பக்தி ஒரு பிசினஸ் என்று ஏற்கெனவே சங்க ராச்சாரியார் கிருபானந் தவாரியார் போன்றவர் களே சொல்லி விட்டார்கள்.

ஆங்கிலப் புத்தாண் டுக்கே இரவு நேரத்தில் கூட கோயில்களைத் திறந்து வைத்துக் கட்டா யம் வசூலிக்கிறார்கள்.

திருப்பதி போன்ற கோயில்களில் அதிக கட் டணம் செலுத்த செலுத்த வெகு வெகு சீக்கிரத்தில் தரிசனம் கிடைக்க ஏற் பாடு செய்யப்பட்டுள் ளது. காசேதான் கடவு ளப்பா என்பது இது தானோ!

தமிழ் ஓவியா said...


இதோ, பாரம்பரிய அர்ச்சகரின் வன்முறை பக்திப் பரவசம்!


- ஊசி மிளகாய்

தகுதி, திறமை பேசும் பார்ப்பனர்களுக்கு, ஏனோ அர்ச்சகரைத் தகுதி, திறமைக்கு உரியவர்களாக்கி, முறைப்படி, ஆகமங்கள் அதுவும்கூட சிவன் கோயிலுக்கு சிவாகமம், வைஷ்ணவ கோயிலுக்கு வைகனாச ஆகமங்கள் மற்றும் பஞ்சாராத்திரம் போன்றவைகளையும், (சம்பிரதாய நடைமுறை களையும்) அர்ச்சனை பற்றிய முழுக் கல்வியைக் கற்றுத் தேர்வு செய்தவர்களையும் ஏன் இன்னும் கோயில் கருவறைக்குள் விடு வதைத் தடுக்க வேண்டும்?

பார்ப்பன அர்ச்சகர்களின் பரம்பரைக் கொள்ளை, சுவாகா சுய தொழில் தடையின்றி நடைபெற வேண்டும் என்ற பேராசைதானே ஒரே காரணம்?

உச்சநீதிமன்றத்தின் இரண்டு முக்கிய தீர்ப்புகள் (பல நீதிபதிகள் அமர்வுகள் அதில் உண்டு) - அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவது அரசியல் சட்ட விரோதமல்ல; மத விஷயங்களில் குறுக்கீடு ஆகாது; அரசியல் சட்ட விதிகள் 25, 26ஆவது பிரிவுக்குட்பட்ட சட்ட பூர்வ நடவடிக்கைகளே என்று தெளிவான தீர்ப்புகள் 1971-லும் 2002லும் வந்து விட்டன! இரண்டு ஆட்சிகளில் (எம்.ஜி.ஆர். கலைஞர் ஆட்சிகளில் - அதிமுக, திமுக ஆட்சிகளில்) இரண்டு உயர்நீதிமன்ற நீதியரசர்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அவர்கள் பரிந்துரையும் இதை ஏற்றுக் கொண்டு விட்டது!

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் முறையான பாட திட்டத்தின்கீழ், 69 சதவிகித தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு சட்டப் படியே பயிற்சி பெற்று 206 பேர்கள் உள்ளனரே!

பிறகு ஏன் இன்னமும் இந்த முட்டுக்கட்டை முயற்சிகள்?

பாரம்பரிய அர்ச்சகர், பார்ப்பனர்களின் ஒழுக்கம் என்பது எப்படிப்பட்டது?

ஆச்சாரம் போச்சு, அனுஷ்டானம் போச்சு என்று ஒப்பாரி வைக்கும் துக்ளக் துருவாச முனிவர்களின் துருப்பிடித்த சாபம் எல்லாம் பொருள் உள்ளதா?

இந்த அர்ச்சகர்கள் எப்படிப்பட்டவர்கள்? இந்திய அரசு டாக்டர் சர். சி.பி. இராமசாமி அய்யர் தலைமையில் அமைத்த இந்து அறநிலைய ஆய்வுக் கமிட்டி அறிக்கை முதல் துவங்கி,
ஜஸ்டிஸ் மகராஜன் தலைமையில் (எம்.ஜி.ஆர். அரசு) போட்ட கமிஷன் அறிக்கையும் சரி,

நடைமுறையில் காஞ்சிபுரம் கோயில் கருவறையை விபச்சார கேந்திரமாகப் பயன்படுத்தி, பல குடும்பப் பெண்களை எல்லாம் செல்போன் அருளால் படம் எடுத்து பயமுறுத்தி தொடர் கற்பழிப்புத் திருப்பணி செய்த அர்ச்சகர் தேவநாதன் வரை ஏராளம் சொல்ல முடியும் சம்பவங்கள் வரை எத்தனைத் திருப்பணிகள்!

சி.பி. ராமசாமி அய்யர் கமிஷன் அறிக்கைகள் அரைபாட்டில் சாராயத்திற்கு சாமி சிலையை விற்ற அர்ச்சகர்கள் கதையெல்லாம் கூறப்பட்டுள்ளதே!

நேற்று சுடச்சுட - ஒரு சம்பவம் பூரி ஜெகன்நாதர் தேரோட்டம் நடை பெறுகிறது ஒடிசாவில்.

அங்கு சென்ற இத்தாலிய நாட்டு நாட்டிய மாதுவின் தோளை தொட்டுப் பார்த்துள்ளனர். டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு விரிவான செய்தியாக இன்று முதல் பக்கத்தில் வெளியிட் டுள்ளது!

அந்த அம்மையாரிடம் 1000 ரூபாய் தட்சணை கேட்டுள்ளார் அந்த அர்ச்சகர்; இவர் மிக அதிகம் என்று கூறி மறுத்துள்ளார்!

அதற்காக அவரை ஓங்கிக் கன்னத்தில் அறைந் துள்ளார் அந்தப் பார்ப்பன அர்ச்சகர்!

அந்த அம்மையாரின் கையைப் பிடித்து முறுக்கி, தோள் பட்டையை அழுத்தி ஆபாச வார்த்தைகளில் அந்த அம்மையாரை அர்ச்சனை செய்துள்ளார் அந்தப் பார்ப்பனர்.

ஆத்திரம் பொங்க, காவல்துறை அதிகாரி களிடம் ஆங்கிலத்தில் புகார் கொடுத்துள்ள அந்த அம்மையார் இத்தாலிய நாட்டுக்காரர்; பெரிய பிரபல நாட்டியப் பயிற்சியாளரும்கூட!
எப்படிப் போகிறது பார்த்தீர்களா? அர்ச்சகர் பக்தி, ஒழுக்கம் எல்லாம்!

பக்திப் பரசவம் இதுதானோ?

பேராசைக் காரனடா பார்ப்பான் - நம்மைப் பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்
என்ற (பார்ப்பன) பாரதியின் கவிதைக்கு ஒடிசாவும் எடுத்துக்காட்டு போலும்!

தமிழ் ஓவியா said...


சிங்களமயமாக்கல்!


ஜூலை 16ஆம் தேதி டெசோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 4ஆவது தீர்மானம் தமிழர் பகுதிகளில் சிங்களவர் களுக்கு உருவாக்கப்பட்டுள்ள புது மாவட்டம் பற்றியதாகும்.

வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை மாவட்டத்திற்கும் இடையே வரலாற்று ரீதியாக இருந்த இணைப்பைத் துண்டிக்கும் வகையிலும், சிங்களப் பகுதியான அனுராதபுரம் மாவட்டத்தோடு இணைந் திருக்கும் வகையிலும் வெளி ஓயா என்ற சிங்களப் பெயரிலேயே ஒரு புதிய மாவட்டத்தை சிங்கள அரசு உருவாக்கி, அங்கே சிங்கள வர்களை மட்டுமே குடியேற்றி வருகின்ற நிகழ்வுகளும் தற்போது நடைபெற்று வருவதை டெசோ இயக்கம் சுட்டிக்காட்டி அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப் பட்டுள்ள தீர்மானத்தின்படி பொதுத் தேர் தல்கள் நடைபெறும் காலத்தில் இது போன்ற மாவட்டங்களை உருவாக்குவதோ, எல்லை களை மாற்றுவதோ, புதிய குடியேற்றத்தை ஊக்குவிப்பதோ கூடாது என்று திட்டவட்டமாக கூறப்பட்ட போதிலும்; அதை மீறுகின்ற வகையில் சிங்கள அரசு ஈடுபடுவதையும் இந்திய அரசு கவனத்தில் கொண்டு, இதனை உலக நாடுகள் மற்றும் அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றின் கவனத் திற்கு எடுத்துச் சென்று, உடனடியாகத் தடுத்து நிறுத்திட ஆவன செய்ய வேண்டுமென்று இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறது என்ற டெசோவின் 4ஆம் தீர்மானம், இலங்கையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் தமிழினத்தின் அடையாளத்தையே முற்றிலுமாக அழிக்கும் பேராபத்தைச் சுட்டிக் காட்டியுள்ளது.

தொடர்ந்து 1948ஆம் ஆண்டு முதலே கிழக்கு மாகாணத்தில் மிகப் பெரிய அளவில் தமிழ் ஈழத்தில் 9 ஆயிரம் சதுர மைல்களில் 2000 சதுர மைல்களை ஆக்கிரமித்துள்ளது.

தமிழர்கள் வீடுகளிலேயேகூட சிங்கள வர்கள் குடியேறிய கொடுமையை இலங்கையில் அப்பொழுது இருந்த இந்திய அமைதிப் படை (ஐ.ஞ.மு.கு.) நிருவாகிகளிடம் புகார் செய்யப்பட்டது. ஆனாலும் எந்தப் பரிகாரமும் கிட்டவில்லை. இப்பொழுது 89 தமிழ் ஊர்களின் பெயர்கள் சிங்கள மயமாக்கப்பட்டுள்ளன. (தமிழ்நாட்டில் தமிழ் ஊர்கள் சமஸ்கிருத மயம் ஆக்கப் பட்டதையும் நினைவில் கொண்டால் சிங்கள வர்கள் ஆரியர்களே என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அவர்களின் அணுகுமுறைகள் ஒன்றாகவே இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்)

இலங்கையில் தமிழர் பகுதிகள் ஆக்கிர மிக்கப்படுவதை எதிர்த்தும், சர்வதேச அளவில் இந்தப் பிரச்சினையைக் கொண்டு சேர்க்கவும் தமிழக மக்கள் பேரவைத் தலைவர் திருச்சேத்தி தலைமையில் பிரான்சு நாட்டு தமிழீழ மக்கள் பேரவை சார்பில் பாரீசில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டதும் உண்டு (ஜூன் - 2012) வாரா வாரம் பல வாரங்கள் அப்படி நடத்தினர்.

நியாயமான இந்த அறவழிப் போராட்டங் களையெல்லாம் இலங்கைப் பாசிச அரசு கிஞ்சிற்றும் பொருட்படுத்தவில்லை. தான் நினைத்த - விரும்பிய தமிழீழ அழிப்பை மூர்க்கத் தனமாகவே செய்து கொண்டு இருக்கிறது. அதனைத் தடுத்து நிறுத்தும் கடமை இந்திய அரசுக்கு இல்லையா? அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இப்படிப் பச்சையாக இலங்கை அரசு நடந்து கொண்டுள்ளதே - இதன்மீது நடவடிக்கை என்ன?

டெசோ இதனைத்தான் சுட்டிக் காட்டு கிறது; உலக நாடுகள் மத்தியில் இவற்றைக் கொண்டு செல்ல வரும் ஆகஸ்டு 8ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் டெசோ நடத்த இருக்கும் அறவழி ஆர்ப்பாட்டம் நல்ல அளவுக் குத் திருப்பத்தைத் தரும் என்று எதிர் பார்ப்போம்!

தமிழ் ஓவியா said...


முன்னாள் அமைச்சர் வி.வி. சாமிநாதன் எழுதுகிறார்


தந்தை பெரியாரின் பிரதிநிதி தி.க. தலைவர் கி.வீரமணி ஆகஸ்ட் முதல் நாள் அனைத்து சாதியினரும் அர்ச்சக ராகலாம் என்று தமிழ்நாட்டில் அரசு அமல்படுத்த அறிவித்த போராட்டம் ஆகஸ்ட் சுதந்திர போராட்டத்திற்கு ஒப்பானது.

உண்மையில் சாதி பேதம் உயர்வு தாழ்வு கூடாது என்பதை உளமார நம்பினால் தி.மு.க. ஆதரவு தந்தது போல் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க., இடதுசாரி கம்யூனிஸ்ட்டுகளும் திரு. கி.வீரமணி அவர்களின் ஆகஸ்ட் போராட்டத்தை ஆதரிக்க முன் வர வேண்டும். மாநில மனித உரிமை பாதுகாப்பு அமைப்பு தமிழ் எழுத்தாளர் முற்போக்கு சங்கம் போன்ற அமைப் புகளும், திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரிஅனந்தன், சேகர் முதலியவர்கள் கை கோக்க வேண்டும். மண் விடுதலையடைந்தால் போதாது. மூடப் பழக்க வழக்கங்களிலிருந்து மனம் விடுதலையடைய வேண்டும். வைக்கம் போராட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தந்தை பெரியார் போராட் டத்தை தொடர்ந்து தீண்டாமை ஒழிய சிறை சென்று வெற்றி பெற்று வைக்கம் வீரர் என்ற பட்டத்துடன் தமிழகம் திரும்பினார். ஆனால், அதே மலை யாள நாட்டில் எர்ணாகுளம் மாவட்டம் ஆரங்காடு என்ற கிராமத்தில் 1993இல் ஒரு சிவன் கோயில் கருவறைக்குள் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம் நடத்தும் பயிற்சிப் பள்ளியில் மந்திரம் கற்றுத் தேர்ந்த திறமையான ஆனால் பார்ப்பனரல்லாத ஈழ வகுப்பு அர்ச் சகரை கருவறைக்குள் நுழைய நம் பூதிரி பார்ப்பனர்கள் மறுத்து விட்டனர். கேரள நாட்டு அரசும், அறநிலையத் துறையும், பொது மக்களும், தாழ்ந்த குலமானாலும் தகுதியுடைய அர்ச்சகர் ஆதித்தியன் நியமனத்தை ஆதரித் தன. இருந்தாலும் வேந்தனும், வேதி யர்களுக்கு துரும்பு என்று உயர்சாதி வெறி பிடித்த நம்பூதிரி பிராமணர்கள் கேரள உயர்நீதிமன்ற புல்பெஞ்ச் சட்டப்படி செல்லும் என்று சொல்லியும் அரசை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு போன வழக்கு வரலாற்று சிறப்பு மிக்க வழக்கு; ஆதித்தியன் கே. திருவிதாங்கூர் சமஸ்தானம் என்ற வழக்கில் 3.10.2002இல் இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அது சட்டப்படி செல்லும் நியாயமானதே என தீர்ப்பளித்தது. தமிழர்களுக்கு முன்பே அதிகம் படித்த அய்யர், அய்யங்கார், அர்ச்சகர்களுக்கு இது தெரியாது என்று சொல்ல முடியாது. தந்தை பெரியார் உயிருடன் இருக்கும் போதே கோயில் நுழைவுப் போராட்டம் அரசியல் சாசன சட்டம் போன்றவை களால் அரசு கோயில்களில் உள்ள கருவறைகளுக்குள் ஒளிந்து கொண்டு இருக்கும் தீண்டாமையை ஒழிக்க ஆன்மீகவாதிகளோ ஆ.ஞ., ஆ.டு.ஹ., ஆக போட்டியிடும் அரசியல் கட்சிகளோ வாய் திறக்கவே இல்லை. எனவே பெரியார் 26.1.1970 ராஜமன்னார்குடி ராஜகோபால சாமி பெருமாள் கோயில் கர்ப்பக்கிரக நுழைவு போராட்டத்தை துவக்கப் போவ தாக அறிவித்து விட்டார்கள். அன்று தி.மு.க.வின் முதல் முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா இறந்து கலைஞர் முதலமைச்சராக இருந்த காலம் அண்ணாவால் நியமிக்கப்பட்ட அற நிலையத்துறை அமைச்சர் கே.வி. சுப்பைய்யா மூலம் அனைத்து சாதி யினரும் அர்ச்சகராகலாம் என சட்ட சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றியதால் பெரியார் 26.1.1970இல் அறப் போராட்டத்தை ஓத்தி வைத்தார்கள். ஆனால் அரசியலில் ஏற்பட்ட சுனாமி யால் சட்டம் ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்ததால் 5ஆவது தடவை முதலமைச் சரானவுடன் கலைஞர் 2006இல் பெரியாரின் கொள்கையை அமல்படுத்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராக லாம் என சட்டத்தை மீண்டும் நிறைவேற்றினார்.

கேரள நாட்டில் 2002இல் நம் பூதிரி பிராமணர்கள் கொட்டம் அடங்கியும் 2006இல் கூட தமிழ்நாட்டில் உள்ள ஸ்மார்த்த பிராமண அய்யர் மற்றும் அய்யங்கார் அர்ச்சகர்கள் உயர் ஜாதி வெறி தலைதூக்கி ஆடியது. மரபு, பழைய பழக்க வழக்கங்கள் என கூறி 2006இல் நேரிடையாகவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சமூக நீதி சட்டம் அமல் செய்ய முடியாமல் இடைக்கால தடை வாங்கி இன்று வரை ஏழு ஆண்டு களாக பார்ப்பனரல்லாத எல்லா தகுதி களும் உடைய வகுப்பினர்கள் தமிழ் நாட்டில் அரசு ஆலயங்களில் கருவறை கதவுகளைத் தட்டினாலும் திறக்காமல் பார்ப்பன அர்ச்சகர்கள் தடுத்துக் கொண்டு வருகிறார்கள். தமிழ் மடாதி பதிகளுக்கு வெட்கமில்லை தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டியிடு வதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

தமிழ் பல்கலைக் கழகங்கள் தோன்றி அதை அலங்கரிக்கும் முன்னாள் இந்நாள் துணைவேந்தர்கள் கவலையில்லாமல் இருக்கிறார்கள். ஆன்மீகத்திற்கு அவ மானம் மனித உரிமைகள் மதிக்கப்பட வில்லை. இந்திய அரசியல் சாசன அடிப் படை உரிமை ஷரத்துக்கள் 13,14,15,16 மற்றும் 17 மீறப்படுகின்றன. தீண்டாமைத் தடுப்பு தண்டனை தரும் சட்டம் செத்த பாம்பாகி விட்டது. விவேகானந்தர் தினம் கொண்டாடும்போது கோயிலில் கருவ றைக்குள் கடைப்பிடிக்கும் தீண் டாமையை ஏன் பேச விவேகிகள் மறுக்கிறார்கள்?

ஆலயங்களில் இலவச அன்னதான திட்டம் கோயில்களுக்கு கொடிக் கம்பங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி கோயிலுக்குள் கடவுள்கள் வாழும் கருவறைக்குள் பொது புனித மண் வழிபாட்டு இடத்தில் சாதி வேற்றுமை தாண்டவமாடுவதை மறைக்கப் பார்ப்பது மன்னிக்க முடியாத குற்றம் மக்களை ஏமாற்ற முடியாது யாரும்.

மாது தீட்டானால் கங்கையில் குளிக் கலாம் கங்கைக்கே தீட்டாகியிருக்கிறதே 3.10.2002-ஆம் தேதியன்று உச்சநீதி மன்றம் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கடைப்பிடிக்கப்படும் பழக்க வழக்கமா னாலும், மரபு ஆனாலும், அரசு உத்தரவே ஆனாலும் அது கோயிலானாலும் சரி அவை மக்கள் சமத்துவம் சகோதரத் துவம், நாகரிகம், முன்னேற்றம் முதலிய கொள்கைகளுக்கு முரணாக இருந்தால் அவை சட்டப்படி செல்லாது என உச்சநீதிமன்றமே 3.10.2002ஆம் தேதி கொடுத்த தீர்ப்பை அவமதிப்பது போல் இருக்கும்போது 2006இல் இடைக்காலத் தடை பார்ப்பன அர்ச்சகர்களுக்கு கொடுத்தது அதிசயம்! அதைவிட அதி சயம் 7 ஆண்டுகள் ஆகியும் தடையை நீக்கி இறுதித் தீர்ப்பு வழங்காமல் இருப் பதுதான். நீதி வழங்க தாமதமானால் நீதி வழங்க மறுப்பதற்கு சமமென்ற பழமொழி தெரியாதா?

எனவே 1.8.2013ஆம் தேதியன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராக லாம் என்ற பெரியார் கொள்கையை தமிழ்நாடு அரசு பெரியார் பிறந்த தினத்திற்குள் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி தி.க. தலைவர் கி.வீரமணி நடத்தும் போராட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும். பெரியார், தீண்டாமையை பூரணமாக ஒழிக்க ஏற்றிய தீபத்தை அணையாமல் ஏந்தும் கி.வீரமணி வாழ்க!

தமிழ் ஓவியா said...


தகுதியானதா தகுதித் தேர்வு?


ஆசிரியர் பணிக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தகுதித் தேர்வு குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்பட்டும் கல்வித் துறை அசைந்து கொடுப்பதாக இல்லை. எனினும் மீண்டும் ஒரு முறை பரிசீலித்தால் நல்லது.

ஆசிரியர் பணிக்கு வருகிறவர் பாட அறிவைவிட கற்பித்தலில் சிறந்து விளங்க வேண்டும். அதாவது தனது பாட அறிவை, சரியான முறையில் கற்பித்தால்தான் மாணவர்களின் புரிந்து கொள்ளும் ஆற்றலை வளர்க்க முடியும்.

மாணவர்களுக்குப் பாடங்களைச் சரியாகப் புரிய வைப்பதில்தான் ஆசிரியரின் வெற்றியே இருக்கிறது. அவ்வாறெனில் தகுதித் தேர்வு, போதனை முறைக் குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும். அதைவிடுத்து மீண்டும் மீண்டும் பாட அறிவையே சோதிப்பதால் எப்படி தகுதியான ஆசிரியர் கிடைத்துவிடுவார்?

உதாரணமாக ஆங்கில மொழிப் பாடத்தில் மொத்த முள்ள 30 வினாக்களில் 29 வினாக்கள் இலக்கண அறிவைச் சோதிப்பதாகவே உள்ளன. கற்பித்தல் முறையைச் சோதிக்கும் கேள்வி ஒன்றே ஒன்று தான்.

கற்பித்தல் முறைகளான புரிந்துகொள்ளும் திறன், எழுத்தாற்றல், வாக்கியங்களை அமைக்கும் திறன், பேச்சுத் திறன், பல்வேறு கற்பித்தல் முறைகளில் திறன், உச்சரிக்கும் திறன் ஆகியவற்றைச் சோதிக்கும் கேள்வி கள் அந்தத் தாள்களில் இல்லையே? ஆசிரியர்களின் கற்பித்தல் ஆற்றலையும், மாணவர்களின் கற்கும் ஆற்றலையும் எவ்வாறு கணக்கிடுவது?

இடைநிலை ஆசிரியர்களுக்கு முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையுள்ள பாடத் திட்டத்திலி ருந்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலுள்ள பாடத்திட்டத்திலிருந்தும்தானே கேள்விகள் இடம் பெற வேண்டும்? இதைக் கவனத்தில் கொள்ளாமல் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்வி களைக் கேட்டால் என்னாவது?
இப்படிக் கேட்பது ஆசிரியர்களின் தரத்தைச் சோதிப்பதைவிட வேலைவாய்ப்பில் வடிகட்ட மட்டுமே உதவும்.

சிறந்த முறையில் ஆசிரியப் பயிற்சி பெற்றவர்களுக்கு மீண்டும் தகுதித் தேர்வு தேவையில்லை. வேலை வாய்ப்பை மனதில் கொண்டு தேர்வு வைப்பதானால் சிறந்த கற்பித்தல் திறன்பெற்ற ஆசிரிய வல்லுநர்களைக் கொண்டு வினாத்தாள் தயாரிக்கட்டும். அதுவும் அந்தந்த நிலை பாடத்திட்டத்திலிருந்து கற்பித்தல் முறை குறித்து அதிக வினாக்கள் இருக்க வேண்டும். இத்தகைய தேர்வு முறையே ஆசிரியர் தகுதித் தேர்வின் தீர்வாக இருக்க முடியும்

- கலைப்பித்தன், கடலூர்
நன்றி: தினமணி, 22.7.2013