Search This Blog

8.12.12

பெரியாரும் அம்பேத்கரும் சொன்னதென்ன?- தருமபுரி சிந்தனை

தருமபுரி சிந்தனை
அய்யாவும் அம்பேத்கரும் சொன்னதென்ன?

"நான் இதுவரை பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் (CLASSES)  நிலையைக் குறித்து நிருவாகப் பயன்பாட்டின் அடிப்படையில் கருத்துச் செலுத்தினேன். பிற்படுத்தப்பட்ட ஜாதி யார்கள் பொது ஊழியங்களில் இடம் பெறுவதில் தார்மீக அடிப்படைகளும் உள்ளன.

பொதுப் பணிகளில் சிலரைப் புறக்கணிப்பதில் உள்ள தார்மீகக் குற்றங்களை மறைந்த திரு. கோகலே வெளிக் காட்டியதுபோல் மற்ற எவரும் காட்டியிருக்க முடியாது. அந்நிய ஆதிக்கத்தால் அதிக செலவாவது தீமை என்பது ஒன்று மட்டுமல்ல, இதனிலும் பெரிய தீமைகள் உள்ளன. அதில் ஓர் ஒழுக்கம் (தார்மீகம்) பற்றிய தீமை உள்ளது. இப்பொழுதுள்ள முறைமையில் (வெள்ளையாதிக்கத்தில்) இந்திய இனமே ஒருவிதக் குன்றலுக்கு (Stunning  Dwarting) ஆட்பட்டு வருகிறது. நாம் நமது வாழ் நாட்களில் தாழ்ந்த சூழலுக்கு ஆட்படுகிறோம்.

வாழ் நிலையில் முன்னேறிய சமூகங்கள் பொது ஊழியங்களில் இடம் பெறுவதைத் தடுப்பது அறவழித் தவறு எனில், பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் வாய்ப்புகளைத் தடுப்பதும் அவ்வாறே தவறு ஆகும்.

மேலே சொல்லப்பட்ட கருத்துப் பின்னணிகள்  பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு சாதகமாக என்னைப் பேசச் செய்தன. இந்தப் பின்னணிகள், பொது ஊழியங்களை இந்தியமய மாக்கும் கருத்துக்கு மாறுபட்டவை யல்ல. இந்தியர்களுக்குப் பொது ஊழியங்களைத் திறந்து விடுவது, அதாவது இந்திய மயமாக்குவது திறமை வாய்ந்த நிர்வாகம் என்ற கருத்தின்மீது அமைந்ததல்ல; நல்ல நிர்வாகம் என்ற கருத்தின்மீது அமைந்ததாகும்.

அய்ரோப்பியர்களைவிட இந்தியர்கள் நிர்வாகத் திறன் என்னும் பண்பில் தாழ்ந்தவர்கள் என்று இந்திய மயமாக்குதலை எவரும் எதிர்க்க வில்லை. திறனில் தாழாமை சிறந்த நிர்வாகத்திற்கு தேவையாகும். அய்ரோப்பிய நிர்வாகந்தான் இந்த நாட்டுப் போக்குவரத்துச் சாலைகளை மேம்படுத்தியது. அறிவியல் நெறிகளில் பாசனக் கால்வாய்களைக் கட்டியது. ரயில் போக்குவரத்துகளைச் செம் மைப்படுத்தியது. நாணயச் செலா வணிகளைத் திருத்தி அமைத்தது. புவியியல், வானியல், மருத்துவம் ஆகியவற்றைச் செப்பமிட்டது. அய்ரோப்பிய நிர்வாகம் தன்னாலியன்ற மிகச் சிறந்த திறமையான அரசை உருவாக்கியதற்கு வேறு சான்றுகள் தேவையில்லை. அதே சமயம் இந்த அய்ரோப்பிய நிர்வாகம் மனித நிர் வாகத்திற்கான பண்புகளைப் பெற் றிருக்கவில்லை பழிப்புக்கும் ஆட் பட்டது. ஆகவே இந்திய மயமாக் குதலுக்குப் போராடியவர்கள், அதே கருத்து பிற்படுத்தப்பட்ட சமூகங் களுக்கு வரும்போது எதிர்ப்பது விந்தையாக இருக்கிறது. வேலை வாய்ப்புகளை இந்தியர்களுக்கென ஆக்க எந்தக் காரணங்கள் சொல்லப் படுகின்றனவோ அவை பிற்படுத்தப் பட்டோருக்கும் பொருந்தும்.
நான் மாநிலங்களின் தன்னாட்சிக்கு அல்லது மாநிலங்களின் முழுச் செயல் பொறுப்புக்கு முக்கியத்துவம் அளிப் பதைவிட இதற்கே அளிக்கிறேன்"

- இவ்வளவையும் கூறி இருப்பவர் யார் தெரியுமா? பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர்தான். எந்த இடத்தில் இவற்றைப் பதிவு செய் துள்ளார்.

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக் கீட்டின் தேவையை விளக்கி சைமன் கமிஷன் முன் டாக்டர் அம்பேத்கர் அவர்களால் பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள் இவை.

அதேபோல தாழ்த்தப்பட்டவர் களின் நலன். சுயமரியாதை குறித்து தந்தை பெரியார் எந்த அளவு கரிசனங் கொண்டு பாடுபட்டார் என்பது உலகறிந்த உண்மையாகும்.

1925ஆம் ஆண்டிலேயே இதுபற்றி பேசுகிறார். 1925 காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டுக்குக் கொடுக்கும் அழைப் பிலேயே குடிஅரசு மூலம் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

'பறையன் பட்டம் போகாமல் சூத்திரன் பட்டம் போய்விடும் என்று கருதுவீர்களேயானால், நீங்கள் வடிகட்டன முட்டாள்களேயாவீர்கள் மற்றும் பேசப் போனால், பறையன் சக்கிலி என்பதற்கு இன்னார்தான் உரிமை என்றும், அது கீழ்சாதி என் பதற்கும் இன்னது ஆதாரமென்றும் சொல்லுவதற்கு ஒன்றுமேயில்லை. கைபலமே ஒழிய, தந்திரமே ஒழிய, வேறில்லை."


சிந்திக்கவும்! சிந்திக்கவும்!!

தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் உழைப்பாளி மக்கள் அல்லவா! இடஒதுக்கீடு தேவைப்படும் சகோதரர்கள் அல்லவா! ஒன்றுபட்டு நிற்க வேண்டியவர்கள். வலது கையும் இடது கையும் மோதிக் கொண்டால் நிகர பலன் யாருக்குப் போய் சேரும்?

40 ஆயிரம் முதல் நிலை மத்திய அரசு அதிகாரிகள்கூடி தாழ்த்தப் பட்டோர்க்குரிய இடஒதுக்கீடு உட்பட அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் போடவில்லையா?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து சிந்திக்க வேண்டியவர்கள், - செயல்பட வேண்டியவர்கள் இந்த இரு தரப்பினர்தானே!

சூத்திரர் இழிவிலிருந்தும், பஞ்சமர் இழிவிலிருந்தும் விடுதலை பெற வேண்டிய நாம்,  நமது குறிக்கோளை மறந்து நமக்குள் குறி வைத்து தாக்கிக் கொண்டு இருக்க வேண்டுமா?
இதில் கூடுதல் பொறுப்பு தாழ்த்தப்பட்டவர் அல்லாதாருக்கு உண்டே! அதனை மறந்துவிட்டு தாழ்த்தப்பட்டோர் அல்லாதாரை திரட்டுவது எதற்காக? பகுத்தறிவுடன் உயர்ந்தபட்ச மனித நேயத்துடன் சிந்திப்பீர்!

உங்கள் சூத்திரப் பட்டங்களுக்கு கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் ஆகிய அனேக ஆதாரங்கள் உண்டு. இத்தனையும் நாசமாக்கி, அடியோடு ஒழித்தாலல்லாமல் உங்கள் தலையில் இருக்கும். சூத்திரப் பட்டம் கீழே இறங்காது.

ஆகவே யாருக்காவது, மான உணர்ச்சி இருந்திருந்தால் நீங்கள் ஜாதியை ஒன்றாக்குகிறீர்களே என்று நம்மைக் கேட்டிருக்க மாட்டார்கள்.
ஆகவே, ஆதி திராவிடர் நன்மை யைக் கோரிப் பேசப்படும், முயற்சி களும், ஆதித் திராவிடரல்லாத மக் களில் பார்ப்பனரல்லாத எல்லோ ருடைய நன்மைக்கும் என்பதாக உணருங்கள் (குடிஅரசு 11.10.1931) என்று எவ்வளவு தெளிவாக, திட்ட வட்டமாக, அக்கறையாகக் கதறுகிறார் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உருகுவதும், குரல் கொடுப்பதும், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டுக்காக சைமன் கமிஷன் முன் முக்கியக் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளதையும் கண்ட பிறகாவது, அறிந்த பிறகாவது தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரின் ஒற்றுமையை, அதன் அருமையை உணர்ந்து கொள்ள வேண்டாமா?

40 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட மத்திய அரசு குரூப்-I அதிகாரிகள் சங்கம் புதுடில்லியிலே கூடி என்ன தீர்மானம் போட்டார்கள்?

தாழ்த்தப்பட்டோர்க்குரிய இட ஒதுக்கீடு உட்பட அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று தீர் மானம் போட்டனரே! (இந்தியன் எக்ஸ்பிரஸ் 27.9.1990). மறந்து போய் விட்டதா?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால் அதில் தாழ்த்தப்பட்டோருக்கும் பிற்படுத்தப் பட்டோருக்கும் சேர்த்துதானே அந்த உரிமை முழக்கத்தை திராவிடர் கழகம் வகிக்கிறது.

எல்லார்க்கும் சேர்த்துதானே நீதிமன்றம் பட்டை நாமம் சாத்துகிறது.
இதனை தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இணைந்து சிந்திக்க வேண்டாமா?

இவற்றைப்பற்றிய அறைகூவல் தான் தருமபுரி   ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு (9.12.2012) சந்திப்போம் - சிந்திப்போம் வாரீர்!

 ------------------ மின்சாரம் அவர்கள் 8-12-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

27 comments:

தமிழ் ஓவியா said...


சரியான பதிலடி!


முதல்வர் அண்ணா மறைவுக்கு சென்னையில் மக்கள், தமிழக அரசு சார்பில் இரங்கல் கூட்டம் சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகில் அன்றைய பொறுப்பு முதலமைச்சராக இருந்த நாவலர் இரா. நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது.

பிரதமர் இந்திரா காந்தி, ஆளுநர் சர்தார் உஜ்ஜல் சிங், தந்தை பெரியார், சி. இராசகோபாலாச்சாரியார், டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியார், ராஜா சர். முத்தய்யச் செட்டியார், கலைஞர் கருணாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டு இரங்கல் உரையாற்றினர்.

அன்று லட்சக்கணக்கில் கூடிய கூட்டத்தில் பேசினர் பல மக்கள்.

கூட்டத்தின் துவக்கத்திலேயே ஆங்கிலத்தில் பேசி விட்டு விடை பெற்றுச் சென்றார் ராஜாஜி.

அவர் தயாரித்து வந்த உரையை பையிலிருந்து எடுத்துதான் பேசினார்.

அவர் அவ்வுரையில், அண்ணா அவர்கள் இளைஞராக இருக்கும்போது நாத்திகராக இருந்ததாகவும் பிறகு முதிர்ச்சி யடைந்து வளர்ச் சியடைந்து பல மான மாறுதலுக்கு ஆளாகி சுயமரி யாதை இயக்கக் கொள்கைகளை விட்டு விட்டு பரி பக்குவமானார் என்பதாகப் பொடி வைத்துப் பேசினார்! அவ்வுரை அய்யாவின் காதுகளில் சரியாக விழவில்லை. மேடையில் தந்தை பெரியாருக்கு உதவிட பின்னால் அமர்ந்திருந்த நான் ஆச்சாரியார், இப்படி அண்ணாவைப் பற்றிப் பேசுகிறார் என்று ஒரு குறிப்பை அவசர அவசரமாக எழுதி அய்யாவின் பார்வைக்கு வைத்தேன். அதைக் கையில் வைத்துக்கொண்ட அய்யா தம் பேச்சை வெகு வேகமாகத் துவக்கினார்.

தகவல்: க. பழநிசாமி
(சுயமரியாதை திருமணம் - தத்துவமும் வரலாறும்)

தமிழ் ஓவியா said...


குரங்கு பாலம் கட்டியதா?


இந்த சேது சமுத்திரம் வேலைகள் பல ஆண்டுகளாக தடைபட்டுக் கொண்டிருக்கிறது. காரணம் அரசியல் கலந்த ஜாதி வெறி, மத வெறி, சுயநல வெறி.

இராமாயணம், மகாபாரதம் எல்லாம் கற்பனை கதைகள். இவை களை யார் எழுதியது என்பதற்கு ஆதா ரம் கிடையாது. இந்த கதைகளுக்கு சரித்திர சான்று கிடையாது. ஆர்க் யாலஜி கிடையாது. தொல் பொருள் சாட்சி கிடையாது. ராமன் என்கின்ற கற்பனை கடவுளுடைய தகப்பனார் தசரதன் என்பவருக்கு 60 ஆயிரம் மனைவிகள் என்பது கதை.

ராமன் காட்டில் வனவாசம் போக வேண்டியாயிற்று. அவன் போகும்போது இவனுடைய மனைவி சீதை, அவனு டைய தம்பி லக்ஷ்மணன் துணைக்கு ஒரு குரங்கு அனுமான் எல்லோரும் இலங்கைக்கு சென்றார்கள். காரணம் இலங்கை அரசன் ராவணன் ராமனு டைய மனைவியை இலங்கைக்கு தூக்கி சென்றுவிட்டான். அதனால் ராமன், இலங்கைக்கு போய் இராவணனைக் கொன்று சீதையை மீட்டான் என்பது கதை.

அயோத்தியிலிருந்து இலங்கை குறைந்தது 2000 மைல்களுக்கு மேல் தூரம் ஆகும். இடையில் பெரிய ஆறு களை கடக்க அவர்கள் படகில் போனார்கள் என்பது கதை. இலங் கைக்கு போவதற்கு இராமேஸ்வரத்தி லிருந்து கடலை கடக்க வேண்டும். அந்த கடலை கடக்க இராமன் கடலில் பாலம் கட்டினான். அந்த பாலத்திற்கு கருங்கல் கிடைக்கவில்லை. அதனால் மணல் பாலம் கட்டினான். அந்த மணல் பாலம் கட்டுவதற்கு அணில்கூட மணலெடுத்து சென்றது என்பது கதை.

இந்த கதை நடந்து ஆயிரக்கணக் கான வருடங்கள் ஆயிற்று. மணல் பாலம் கடலில் கரைந்து போய் மணல் திட்டுக்களாக கிடக்கிறது. இந்த மணல் திட்டுகளை இராமன் பாலம் என்று நம் நாட்டு பகுத்தறிவாளிகள், மதவாதிகள், ஜாதி வெறியர் இராமர் பாலம் வேண்டும் என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ராமன்கூட உதவிவந்த அனுமான் என்கிற குரங்கு மனித உயரத்திற்கு இருக்கிறது என்பது கதை, சாதாரண மாக குரங்கு நின்ற வாக்கில் 2-_3 அடி உயரத்திற்குதான் இருக்கும். இந்த குரங்கு ஒரு மலையையே தூக்கிச் சென்று இலங்கையை தாக்கியது என்பது கதை. இந்த மாதிரி குரங்கு இருந்திருந்ததான் Discovery Channel of Animal Planet அதன் சரித்திரத்தையே காட்டியிருப் பார்கள்.இந்த உலகமே பஞ்ச பூதங்களை நீர், நெருப்பு, ஆகாய காற்று என்ற சக்தி களாலும், காந்த சக்தியால் இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்லாம் அணுசக்தி யால் இயங்கிக் கொண்டிருக்கிறது. சிவசக்தியை நம்புகிறவன் அணுசக்தியை நம்ப மாட்டான்.

கடவுள்களும் கோயில்களும் மனித னால் கட்டப்பட்டது. மதக் கடவுள்கள் எல்லாம் பொய். ஏசுநாதர், முகமது நபி, புத்தர் எல்லாம் கடவுள்கள் என்கி றார்கள். அவர்கள் எல்லாம் மதபோத கர்கள், அறிவுரை கூறியவர்கள்.

இந்தகணினி, (Computer) செல்போன் (Cell Phone) காலத்திலும் ராமர் பாலம் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் கள். நாட்டு நன்மையை நினைக்காமல் முட நம்பிக்கையை பேசிக் கொண்டி ருக்கின்றார்கள்.

தமிழ் ஓவியா said...


குரங்கு கையில் பூமாலை! நினைத்துப் பாருங்கள்


இரண்டாவது முறையாக அமெரிக்காவின் குடியரசு தலைவராகப் போட்டியிட்டு பெரு வெற்றியைப் பெற்ற ஓபாமாவுக்கு - அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய மிட் ரோமினி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இது நமது நாட்டுக்கு மிகவும் சவாலான நேரம். நமது நாட்டை வழி நடத்துவதில் அதிபர் ஒபாமா வெற்றி பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட ஒபாமா

தேர்தலில் கடும் போட்டியை ஏற்படுத்தியதற்காக தம் வாழ்த்துக்களையும் ரோம்னிக்குத் தெரிவித்துக் கொண்டார்.

இதையும் நினைத்துப் பாருங்கள் ஆட்சியைப் பறி கொடுத்த நிலையில், குரங்கு கையில் பூமாலை கிடைத்துவிட்டது! என்று இங்கு சொன்னவர்களையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!

தமிழ் ஓவியா said...


எடைக்கு எடை


சினிமா நடிகை சம்வருதா தமிழ்ப் படங்களிலும், மலையாளப் படங்களிலும் நடிக்கக் கூடியவர். அமெரிக்காவைச் சேர்ந்த அனில்ராஜ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

இந்தப் புதுமணத் தம்பதிகள் குருவாயூர் சென்று எடைக்கு எடை வாழைப் பழங்களைக் கொடுத்துள்ளனர். நடிகை எடை 57 கிலோ பழங்களின் விலை ரூ.1145 கணவரின் எடை 72 கிலோ - பழங்களின் விலை ரூ.1445.

இவர்கள் எல்லாம் படிக்காத பாமரர்கள் அல்லர். கடவுளுக்கு எதற்கு வாழைப்பழம்? இல் 129 கிலோ அளவுக்கு வாழைப்பழங் களைக் கொடுத்துள்ளார்களே - அவற்றில் ஒரே ஒரு பழத்தை யாவது குருவாயூரப்பன் தின்று இருப்பாரா?

குரங்குக்கு கொடுத்தால்கூட தின்று இருக்கும் - குத்துக் கல்லுக்குக் கொடுத்திருக்கிறார்களே _- இவர்களின் புத்தயை என்ன சொல்ல! படிப்புக்கும் பகுத்தறிவுக் கும் சம்பந்தமில்லை என்றார் தந்தை பெரியார் - அதற்குச் சாட்சியமே இந்தக் கூத்து.

தமிழ் ஓவியா said...


என்ன அற்பப் புத்தி!


புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

அறிவிலே தெளிவும் நெஞ்சிலே உறுதியும் அகத்திலே அன்பினோர் வெள்ளமும் உடையவர்க்கேயன்றிச் சுயமரியாதைக் கொள்கைகள் பாமர மக்கட்குப் பிடிக்கமாட்டா என்பது உண்மை. பாமர மக்களை அதே நிலை யில் வைத்திருக்க வேண்டுமென்பது சுயமரியாதைக்காரர் அபிப்பிராயமல்ல; ஆதலால்தான் அவர்கள் எவ்வகைச் சிரமத்தையும் பாராது சுமார் ஒர் ஆண்டாக உழைத்து வருகிறார்கள். அவ்வுழைப்பினின்று இனியும் அவர்கள் பின்னிடப் பாமர மக்களிடம் தமது கொள்கைகளை எடுத்துச் சொல்லி வந்ததில் இந்நாள் மட்டும் தக்க பலன் கிடைத்திருப்பதோடு விரைவில் முழு வெற்றியும் கிடைக்கும் என்பது உறுதி. ஆனால் சுயமரியாதைப் பிரச்சாரம் இந்நாள் மட்டும் செய்து வந்தவர்க்கு ஒரு விஷயம் அனுபவ பூர்வம் விளங்கி விட்டது. அதாவது பாமர மக்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர் சுய மரியாதைக் கொள்கைகளின் உண் மையை அறிந்த உடன் கள்ளங் கபட மின்றிச் செய்கையில் காட்டத் தொடங்கி விடுகிறார்கள். அறிவு டையார் என்று தம்மைக் கருதியி ருப்பவர்கள் அவ்வாறில்லை. மேலும், சுயமரியாதைக் கொள்கையின் உண் மையைக் கண்டறியும் திறத்தில் அறிவுடையார் என்பவர்கள் பாமர மக்கள் வரிசையில் வந்து சேர்வதும் ஓர் ஆச்சரியம். ஓர் பாமரன் சுயமரியாதைக் கொள்கையை அறியாதிருப்பதனால் கேடொன்றுமில்லை. ஆனால் அறிவுடையார் என்பவர் அதைக் கண்டறியும் திறனிழந்துவிடுவதால் நாட்டுக்கு மிக்க தீமை உண்டாகிறது.

அறிவு மிக்கவர் என்றும் தேசபக்தி நிறைந்தவர் என்றும் கருதி நாட்டினர் போற்றி வந்த மக்கள், தேசம் தேசம் என்று கூச்சலிட்டும், என் தேசம் தேசம் என்று கூச்சலிட்டும், பொருள் ஆவி மூன்றையும் தத்தம் பண்ணியிருக்கிறேன் என்று மூழ்க்கியும் கிடந்து ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தமக்குள்ள மத குருக்கள் என்பது வரையோ தமக்குள் மதத்தையோ யாராவது குறை கூறிவிட்டால் தேச பக்தி பறக்கிறது. அறிவுடைமை அறிவின்மையாக மாறுகிறது. இது என்ன அற்ப புத்தி யென்பது?

தேசம் பிரதானமா? மதம் பிரதானமா? என்று கேள்விகட்கு மதம் பிரதானம் என்று பதில் சொல்லும் பெரியோரால் ஒருபோதும் இந்நாடு முற்போக்கடையாது. தேசத்தை நன்னிலைக்குக் கொண்டுவர எத் தனையோ உயர் குணங்கள் வேண்டும், ஆயினும், மதவெறி என்னும் ஒரே தீக்குணத்தால் சேதத்தைக் கருதிச் செய்த காரியம் அனைத்தும் கெடும்.

நமது சுயமரியாதைக் கொள்கைகள் தென்னாட்டிலும் மற்றும் தமிழர் வாழும் நிலங்களிலும் இவ்வாறு பரவி இருப்பதற்கு நான் ஒரே காரணம் சொல்லுகிறேன்; அறிவுத் தெளிவும், நெஞ்சுறுதியும் அன்புள்ளமும் உள்ள தேச பக்தப் பெரியார்கள் அநேகர் சுயமரியாதையின உண்மை நலன்களை அறிந்து அதுபற்றி மக்களிடம் முழக்கஞ் செய்ய முன் வந்ததேயாகும்.

ஒரு மனிதன் ஜனத் தலைவனா கவோ, பொது மக்களுக்கு உழைப்பவ னாகவோ தன்னை ஆக்கிக் கொள்ளக் காரணமாயிருந்தவை அவனுடைய கல்வியும், அறிவும், விடாமுயற்சியும், சமத்துவ புத்தியும் பிறவுமாம். ஆனால் ஒரு பாதிரியோ அல்லது ஒரு திவசம் கொடுக்க வீட்டுக்கு வரும் ஐயரோ மறறும் மதத் தலைவரோ ஒரு மனி தனைக் கீர்த்தியுள்ளவனாக்கவில்லை. எந்தவழியில் ஒரு மனிதனுக்குக் கீர்த்தி ஏற்பட்டதோ அதை விட்டு அக்கீர்த் தியை அறிவற்ற விதமாய், மதம் மத குருக்கள் என்ற அற்ப காரணத்துக்காக உபயோகிக்க நினைப்பது விவேக மாகாது. பொது மக்கள்பால் நன்றி செலுத்திய தாகாது; பெருந்தன்மை யாகாது, நடப்பதைக் கவனியுங்கள். திரு. காந்தியவர்களின் போராட்டத்தில் மிக்க கவலையோடு உழைத்துவந்த ஜோஸப் முதலியவர்களும், புதுவையில் கத்தோ லிக்கர் சிலரும் தம் தம் தேசக் கொள் கையைவிட மதக் கொள்கை பிரதான மென்று கருதி நடந்து வருகிறார்கள்.

(புதுவை முரசு மே 1931)

தமிழ் ஓவியா said...


திருந்திய தோழரின் திறந்த மடல்


கும்பகோணம் அருகில் உள்ள அரவிந்த்நகர் என்னும் பகுதியில் வசித்து வரும் நான் இளமையில் தீவிர திருப்பதி வெங்கடாசலபதி பக்தனாக இருந்தேன். என்னுடைய பூஜை அறையில் திருப்பதி வெங்கடாசலபதி சாமி படங்களையும், எங்கள் குல தெய்வத்தின் படங்களையும் வைத்து அதற்கு மின்விளக்கு அலங்காரங்களையெல்லாம் செய்து பயபக்தியுடன் தரையில் விழுந்து கும்பிடுவேன்.

என்னுடைய சிறிய தந்தையுடன் (அவரும் தீவிர வெங்கடாசலபதி பக்தர்) திருப்பதி சென்று பல முறை வழிபட்டு மொட்டை போட்டுக் கொண்டு வருவேன். அப்போது நான் யார் எதை சொன்னாலும் சிந்திக்காமல் ஏற்றுக் கொள்ளும் பருவம்.

திருப்புமுனை

அப்போது என்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக என்னுடைய மாமா (கா. இராமநாதன் கொரநாட்டுக்கருப்பூர்) அவர்கள் பாபநாசம் திராவிடர் கழக பயிற்சி முகாமில் என்னை சேர்த்து விட்டார். இரண்டு நாள் பயிற்சி பெற்று திராவிடர் கழக மானமிகு துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் எனக்கு பயிற்சி முடித்த சான்று அளித்தார்கள். அப்போதுதான் இதுவரை நான் செய்த மூடநம்பிக்கைகளை உணர்ந்து பார்த்து இனி நாம் செய்ய வேண்டியது நிரந்தர ஈரோட்டுப் பாதை என்பதை உணர்ந்து கொண்டேன்.

சாமி படங்களை எல்லாம் தூக்கி எறிந்தேன்

பூஜை அறையில் இருந்த சாமி படங்களையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு அந்த இடத்தில் தந்தை பெரியாரின் கல்வெட்டும், மானமும், அறிவும் மனிதனுக்கு அழகு என்னும் பொன்மொழியையும் பொறித்த கல்வெட்டை பதித்துவிட்டேன்.

என் சொந்த வாழ்க்கை பற்றி...

என்னுடைய பெயர்: எஸ். நிஷாந்த் ஞி.வி.ணி., பிறந்த தேதி: 30.10.1987
தந்தை பெயர்: ஆர். சிவப்பிரகாசம், எம்.ஏ., பி.எட்.,
தாயார் பெயர்: அம்பிகா பி.எஸ்.சி.,

தொழில்: அரசு போக்குவரத்து கழகத்தில் பொறியாளர் பணி.

இயக்கத் தொடர்பு பற்றி...

என்னையும், என்னுடைய தாயார், என்னுடைய பாட்டி என்று அனைவரையும் பெரியார் கொள்கைக்கு மாற்றியது என்னுடைய மாமா கா. இராமநாதன் அவர்கள்தான்.

சரியான நேரத்தில் சரியான பாதைக்கு எங்களை அழைத்துச் சென்ற வழி காட்டி அவர்தான்.

வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

மாணவப் பருவத்தில் ஒருவருக்கு நல்ல வழிகாட்டி அமைந்தால் அவர் திசைமாறி செல்ல வாய்ப்பு இல்லை என்பதை நான் நன்கு உணர்ந்து கொண்டு வாழ்க்கையில் மேலும் மேலும் நிச்சயம் வெற்றி பெறுவேன். மேலும் இந்த தாழ்ந்து கிடக்கும் சமுதாயத்திற்கு ஏதாவது தொண்டு செய்ய ஆர்வமாக உள்ளேன் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

ரஷ்யாவில் லெனின் ரத்தம் சிந்தி தான் புரட்சி செய்து ஜார்மன்னர் களிடமிருந்து நாட்டை மீட்டார். ஆனால் தந்தை பெரியார் தமிழ்நாட்டில் ரத்தம் சிந்தாமல் மிகப் பெரிய சமுதாய புரட்சியை செய்து மக்களை இழிவிலிருந்து மீட்டார் என்ற வரலாறு காண படித்துப் பார்க்கும்போது உலகத்திலேயே இதுபோல ஒரு மாபெரும் புரட்சியாளர் நமக்கு கிடைத்திருப்பதை நினைத்துப் பார்த்து வியந்துள்ளேன். மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்ற பாரதிதாசனின் வரிகளை நினைத்துப் பார்த்தால் நமக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது.

வாழ்க தந்தை பெரியார்! வளர்க பகுத்தறிவு! வணக்கம்

நேர்காணல்: கா. இராமநாதன், திராவிடர் கழகம், கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...


சுயமரியாதைத் தங்கம்
மருத்துவர் சொக்கலிங்கம்!



- மஞ்சை வசந்தன்

இதய நோய்தீர்க்கும் வல்லுநர் அமெரிக்கா சென்று மருத்துவம் கற்றவர் தந்தை பெரியார், பெருந் தலைவர் காமராசர், கலைஞர், எம்.ஜி.ஆர் உள்ளிட்டோருக்கு மருத் துவம் பார்த்தவர்! தற்போது இதய வல்லுநர்களாய் இருக்கும் பலரை உரு வாக்கியவர். கலைஞர் தொலைக் காட்சி வழி மக்களுக்கு விழிப்பூட்டி வருபவர். இத்தகு பெருமையும், திறமையும், புகழும் மிக்க மருத்துவர் அய்யா சொக்கலிங்கம் அவர்களிடம் எனது இரத்த அழுத்தம் சார்ந்த ஆலோசனைப் பெறச் சென்றேன். அப்போது பேசிக்கொண்டிருந்த போது, தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா பற்றிச் சொன்னேன். உடனே அப்படியா 80ஆவது பிறந்தநாளா! நான் நேரில் வந்து 10 நிமிடங்கள் ஆசிரியர் பற்றி பேச விரும்புகிறேன் என்றார்

இச்செய்தியை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்களிடம் கூற, அவர் 1ஆம் தேதி இரவு நிகழ்ச்சியில் பேச வசதியாய் இருக்கும் என்றார்கள். இது பற்றி மருத்துவரிடம் தெரிவித்தேன். மிகவும் மகிழ்ந்தார்கள்.

அவ்வாறே 1ஆம் தேதி இரவு திட லுக்கு வந்து பேசினார். தன் பேச்சை, நான் ஒரு சுயமரியாதைக்காரன் என்று சொல்லித் தொடங்கினார். கூட்டத்தில் உள்ளதிராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர் களைப் பார்த்து, நீங்கள் மேலே கருப்புச்சட்டை கீழே வெள்ளை உடை. நான் மேலே வெள்ளைச் சட்டை கீழே கருப்பு உடை அவ் வளவுதான் வித்தியாசம். உடையில் வேறுபாடு சுயமரியாதை உணர்வு, பெரியார் கொள்கை வழி நடப்பதில் எந்த வேறுபாடும் இல்லை என்றார். அரங்கம் கையொலியால் அதிர்ந்தது.

தந்தை பெரியார் மீது தனக்குள்ள பற்று, தமிழர் தலைவர் மீது தனக்குள்ள அன்பு, ஈர்ப்பு இவற்றை எடுத்துரைத்தார். ஆசிரியர் 80 வயதில் அடியெடுத்து வைப்பதைச் சுட்டிக் காட்டி, இதய அறுவை சிகிச்சைக்குப் பின் ஆசிரியர் இத்தனை ஆண்டுகள், நலமுடனும், துடிப்புடனும் இருப்பது கடினம். அவர் முழு நேரமும் மக்கள் தொண்டை மனதில் கொள்வது தான். மக்கள் தொண்டையே மனதில் கொள்கின்றவர்கள், மனம் மகிழ்வுடன், நிறைவுடன் நிம்மதி யுடன் இருப்பர். இதுவே ஆசிரி யரின் இளமைக்கும், இதய நலத் திற்கும் காரணம். சுயமரியாதைத் தோழர்களும் மற்றவர்களும் இதை மனதில் கொள்ள வேண்டும்!

நான் எப்போதும் லிப்டில் செல்வதில்லை. எட்டுமாடியானாலும் படி ஏறித்தான் செல்வேன். இதய நலம் காக்க மாடிப்படிகள் ஏறி இறங்க வேண்டும், நடைப்பயிற்சியும் உரிய பயிற்சியும் செய்ய வேண்டும் என்றார். நாம் பெற்றிருக்கும் படிப்பு, பதவி, உயர்வு, விழிப்பு, எழுச்சி எல்லாம் பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் ஆசிரியர் வீரமணி அவர்களின் அயராத உழைப்பும், ஏராளமான திராவிடர் கழகத் தொண்டர்களின் தியாகமும், கலை ஞர் அவர்கள் கடும் முயற்சிகளும் காரணங்கள்.

நாம் விழிப்போடும், அறிவோடும் இருந்து, நன்கு கற்று உயர வேண்டும். நான் ஒரு கடவுள் மறுப்பாளன். கடவுளை மறுத்து, செய்யும் தொழிலே தெய்வம், அறிவே நமது ஆக்கம் என்பதை என் வாழ்நாள் முழுவதும் காட்டிவருகிறேன்.

நூறு வயது கடந்து வாழ மூன்று முக்கிய மந்திரங்கள்:

1. எண்ணும் எண்ணம் சீராக (உயர்ந்ததாக) இருக்க வேண்டும்.

2. உண்ணும் உணவு சீராக (உரியதாக) இருக்க வேண்டும்.

3. உடற்பயிற்சி தேவைக்கு ஏற்ப இருக்க வேண்டும்.

விலைமதிப்பு மிக்க உயிரைக் காக்க வேண்டும் என்றால், அறிவின் படி மனம் கேட்க வேண்டும், மனதின்படி உடல் செயல்பட வேண்டும். அப்படிப்பட்ட அறிவை சரியான பாதையில் செலுத்துவது பெரியாரின் பகுத்தறிவு மட்டுமே!

வாழ்க்கையென்பது கருவில் தோன்றி கல்லறையில் மறையும் இடைவெளிதான். வாழ்நாளைக் கூட்டுவதோ அல்லது குறைப்பதோ அவரவர் கையில் மட்டுமே உள்ளது. இதற்கு நல்வழியும் நம்பிக்கையும் முக்கியம். நம்பிக்கை என்பது தன் நம்பிக்கை, மூடநம்பிக்கையல்ல. தன்னம்பிக்கையைத் தகர்க்கும் ஆற்றல் மூடநம்பிக்கைக்கு உண்டு. மூடநம்பிக்கைகளை ஒழித்து தன்னம்பிக்கையை வளர்க்க பெரியார் வழியே சிறந்தது.

ஆமை வீட்டிற்குள் நுழையக் கூடாது என்பார்கள். அசைந்து வரும் ஆமையல்ல. கல்லாமை, இல்லாமை, அறியாமை, பொறாமை, வேண்டாமை, இயலாமை என்ற ஆமைகளே! நம் உள்ளத்திற்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு பெரியார் வழியே உகந்தது. இப்படிப்பட்ட அய்யாவின் தொண்டை கொள்கைகளை ஆயுள் பணியாகக் கொண்டு செய்து வரும்ஆசிரியர் வீரமணியவர்கள் 100 ஆண்டுகள் பிறந்தநாள் கொண்டாட வேண்டும். அந்த விழாவிலும் நான் கலந்து கொண்டு வாழ்த்த விரும்பு கிறேன் என்று உரையாற்றினார். மறுநாள் இருவேளையும் திடலுக்கு வந்து வாழ்த்தினார். ஆதாயம் பெற முடியாத ஒரு இயக்கத் தலைவரின் பிறந்தநாள் விழாவிற்கு தன்னைக் காண மக்கள் பல நாள் காத்திருக்கும் தகுதியுடைய ஒரு புகழ்பெற்ற மருத்துவர் மூன்று முறை வந்து சிறப்பித்தார் என்றால் அது இயக்கத்தின் சிறப்பையும் தமிழர் தலைவரின் சிறப்பையும் மருத்துவரின் சுயமரியாதை உணர் வையும் காட்டுகின்றது. மருத்துவர் சொக்கலிங்கம் சுயமரியாதைத் தங்கம் மற்றவர்க்கு அவர் ஓர் எடுத்துக் காட்டு.

தமிழ் ஓவியா said...


இந்திரசித் வீரமணி



பெரியார் பெருங்கவிஞர்
கருவூர்ப் பாரி, கரூர்

ஈரோட்டு ராவணனுக்(கு) இந்திரசித் தாகியே
சீரோடு வந்துமே சேர்ந்தவர் யார்? - பேரோடு
நற்புகழ் நேர்மை நனிதொண்டென் றெல்லாமும்
பெற்றநம் வீரமணி! பார்!
அண்ணாவைப் போல்உயரம்! ஆர்க்கும் பகுத்தறிவே!
எண்ணம் எழுத்தோடே ஏறுநடை - கொண்டநற்
பேச்சு மிகப்பெற்ற பேற்றுக் குரியர்நம்
மூச்சனையார் வீர மணி!
பத்தே அகவை! பலர்போற்ற மேடையிலே
நித்தம் முழங்கியே நம்பெரியார் - சித்தத்தே
முத்தாய் மிளிர்ந்துமே மேன்மையுற் றுள்ளமை
மெத்தபுகழ் வீரமணி மாண்பு!
இடையறாத் தொண்டினை இன்முகத் தோடே
தடையிலா தாற்றும் தகைமை - மடைதிறந்த
வெள்ளம்போல் ஆகி வளர்புகழ் கூட்டுவிக்கும்
உள்ளம் உடையார் உணர்!

தமிழ் ஓவியா said...


இந்தியாவில் கவுரவ கொலைகள் சாதியை வளர்க்க வழியா?

நீதிக்கான விடியலில் ஏற்கெனவே தமிழ்நாட்டில் நடைபெறும் கவுரவ கொலைகளைப்பற்றி எழுதியுள்ளோம். ஆனால் இன்று வரை அரசோ அல்லது சமூக ஆர்வலர்களோ ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

ஊடகங்களில் இன்றைக்கு மிக விரைவாக சென்றடைவது. சினிமா மற்றும் சின்னத்திரை இவர்களில் மூலகாரணமாக இருப்பவர்கள் இருவர். ஒன்று பண முதலாளிகள் (முதலைகள் என்றும் சொல்லலாம்? இரண்டாவது இயக்குநர், கதாசிரியர், பாடலாசிரியர் அனைவரும் இன்றைக்கு இத்துறைகளில் முன்னணியில் உள்ளனர். கவுரவ கொலைகள்பற்றி இவர்களின் நிலைப் பாடு என்ன? சாதியை நாட்டிலிருந்து ஒழிக்க இவர்களின் பங்களிப்பு என்ன? கவுரவ கொலைகள் நடப்பதை வெளிச் சம் போட்டு காட்ட வேண்டியதுதானே. சாதிய படிநிலை அப்படியே நீடிக்க வேண்டும் என்ற எண்ணமா?
இவர்களின் சினிமாவிலும், சின்ன திரையிலும் காதல் ஒன்றே முன்னிலைப் படுத்தப்படுகிறது. ஆனால் சமூகத்தில் நடைபெறும் அவலங்களை தோலுரித்து காட்ட முன் வராத காரணம் என்ன? தலித்துகள் இன்றைக்கு சினிமாத் துறையில், இயக்குநர்களாக, இசை அமைப்பாளர்களாக, நடிகர்களாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் யார் என்று அடையாளம் காட்டவில்லை என்றாலும் இவர்களைப்பற்றி அனைவரும் அறிவர் - சில பொய் சொல்லி வாழ்பவர்களைத் தவிர.

இவர்களிடமிருந்து நாம் சாதி ஒழிப்புக்காக படம் எடுங்கள் என்று சொல்ல முடியாது. காரணம் இவர் களின் முன்னேற்றம் பாதிக்கப்படலாம். ஆனால் சமூக நீதிக்காக தங்களை முன்னிலைப்படுத்த நினைக்கும் தலித் அல்லாத இயக்குநர்கள், முதலாளிகள் இசையமைப்பாளர்கள் முன்வரலாம் என நாம் எதிர்பார்க்கிறோம்.

அறுபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே சுதந்திரம் கிடைத்த பின்னும் நம் நாடு சாதியால் பிரிக்கப்பட்டு வாழும் நிலை மாறுவது எப்போது? நமக்குப் புரியவில்லை. நீதிக்கான விடியல் எதிர்பார்த்ததெல்லாம் நாட் டில் அதுவும் தமிழ்நாட்டில் நடை பெறும் கவுரவக் கொலைகளைப்பற்றி, சினிமாவிலும், சின்னதிரையிலும் முன்னெடுக்க மாட்டார்களா? என எதிர்பார்த்த. நீதிக்கான விடியல் நம்பிக்கை பொய்த்துப் போனது.

ஆனால் ஆஸ்திரேலியாவில் முன் னணி திரைப்பட தயாரிப்பாளரான பில்பெனட் என்கிறவர், இந்தியாவில் நடைபெறும் கவுரவ கொலைகளை முன்னெடுத்து படமெடுக்க முனைந் துள்ளதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. திரு. பில்பெனட் அவர் கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்திய பத்திரிகையில் ஒரு கதையைப் படித்த பின் இப்படி ஒரு படம் எடுக்க வேண் டுமென விரும்பி உள்ளார். அதே நேரத்தில் சாதி மறுப்புத் திருமணங் களையும், மத மறுப்புத் திருமணங் களையும் குறித்து படமெடுக்க எண்ணி உள்ளார். அவர் மிகவும் வருத்தப்படும் செயல், சாதி விட்டு சாதி காதல் திரு மணம் செய்பவரை அவர்களின் பெற்றோரே கொலை செய்வது கேட்டு நான் அதிர்ந்து போனேன் என்கிறார்.

நீதிக்கான விடியல் பில் பெனட் அவர்களை பாராட்டுகிற அதே நேரத் தில் இந்திய சினிமா, சின்னத்திரை தயாரிப்பாளர்களுக்கும், பண முதலாளி களுக்கும் மற்றும் இயக்குநர்களுக்கும் வேண்டுகோள், இந்திய சமூக அமைப்பை மாற்ற முயலுங்கள். உங் களின் பங்கு நாட்டின் முன்னேற்றத் திற்கு மிக மிக அவசியம். அதிலும், கசப்பு மருந்து நோயாளிக்கு இனிப்பு கலந்து கொடுப்பது போல் தங்கள் பேனா முனைகளால், நாட்டில் நடைபெறும் கேடுகளைக் களைந்திட, பொழுதுபோக்குக்கு மட்டுமல்லாது நல்ல செய்திகளை மக்களுக்கு சொல் வதின் மூலம் தங்களின் பங்களிப்பு மிக மிகத் தேவை அதைதான் நீதிக்கான விடியல் எதிர்பார்க்கிறது.

(நீதிக்கான விடியல் 2012 ஆகஸ்ட் பக்கம் 8-_9

தமிழ் ஓவியா said...


மெக்காலே பிரபு


மெக்காலே பிரபு பேசுகையில், இந்தி யாவில் இப்போது பிரதிநிதித் துவ அமைப்பு இல்லை. எனவே அவர்களுக்கு ஒரு நல்ல அரசிய லமைப்பை உருவாக்கித் தர வேண்டும்.

இந்தியாவில் ஒரே விதமான குற்றத்திற்கு இரண்டு விதமான தண் டனைச் சட்டம் அமலில் உள்ளது. ஒன்று ஆண்டவனின் நெற்றியில் இருந்து உருவானவர்கள் என்று சொல்லப்படுகின்ற பிராமணர்களுக்கு சாதாரண தண்டனையும், இறை வனின் காலடியில் இருந்து உருவான வர்கள் என்று சொல்லப் படுகின்ற சூத்திரர் களுக்கு மிகக் கடுமை யான தண்டனையும் வழங்கப் படுகின்றன.

இந்தியர்கள் ஜாதி அடிப்படையில் இன் னல்கள் பல அனுப வித்து வருகின்றனர்.

இத்தகைய தீங்கினைத் தடுத்து நிறுத்த நாம் தலைமை அரசுக்கு சட்டம் இயற்றும் அதிகாரத்தினை அளித்துள்ளோம். இனி சட்டம் இயற்றும் அதிகாரம் தலைமை அரசுக்கு மட்டுமே கொடுக்கப்படும்.

சென்னை பம்பாய் ஆகிய மாகாணங்களுக்கு இருந்த அதிகாரம் பறிக்கப்படும். மேலும் நாம் அனுப்பும் தூதுவர் அங்கு சென்று சட்டம் இயற்றும் போது அய்ரோப்பியர்களுக்கும் இந்தியர்களுக்கும் ஒன்றாகப் பொருந்தக் கூடிய சட்ட திட்டங் களை இயற்றுவார் என்று கூறினார். மெக்காலே நியமனம். மாட்சிமை தங்கிய மன்னர், அவரையே (மெக்காலே) தூதுவராக நான்காவது உறுப்பினராக நியமித்து இந்தியா விற்கு அனுப்பி வைத்தார்.

அவர் 1834ஆம் ஆண்டு சூன் திங்கள் 10ஆம் நாள் சென்னை கடற்கரையில் வந்து இறங்கினார்.

க. பழநிசாமி
(மணிவாசகர் பதிப்பகத்தின் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை ந. முடிகோபதி அவர்களின் நூலில், 26ஆம் பக்கத்தில் இருப்பது...)

தமிழ் ஓவியா said...


செப்டம்பர்-17 நன்றிக்குரிய நாள்


சரித்திரம் மறைந்த செய்தி தலைவனின் மரணச் செய்தி

விரித்ததோர் புத்தகத்தின்

வீழ்ச்சியைக் கூறும் செய்தி

நரித்தனம் நடுங்கச் செய்த

நாயகனின் மரணச் செய்தி

மரித்தது பெரியாரல்ல

மாபெரும் தமிழர் வாழ்க்கை!

1973 டிசம்பர் 24 அன்று தந்தை பெரியார் மறைந்தபோது கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரிகள்தான் இவை.

பெரியாரோடிருந்து நாத்திகம் பேசிக் கொண்டிருந்த கண்ணதாசன் பெரியாரை விட்டுப் பிரிந்து, பல்வேறு அரசியல் சதுரங்க விளையாட் டுகளை நடத்திய கண்ணதாசன்தான். தந்தை பெரியார் மறைந்தபோது மரித்தது பெரியாரல்ல, மாபெரும் தமிழர் வாழ்க்கை என்று பதிவு செய்தார்.

பெரியார் என்று சொன்னால். அவர் ஒரு நாத்திகர். கடவுள் மறுப் பாளர், பிராமண எதிர்ப்பாளர் என்றெல்லாம் சொல்லி அவர்மீது அவதூறுகளும், வெறுப்புகளும் வீசிப் பழக்கப்படுத்திவிட்டார்கள் திட்டமிட்டு.

ஆனால், தம் மீதான எந்தவொரு குற்றச்சாட்டு குறித்தும், தரங்குறைந்த விமர்சனம் குறித்தும் கவலையே படாமல் தன் பாதையில், தன்னு டைய திட்டப்படி, இலக்கு நோக்கி தனது பெரும் பயணத்தை வெற்றி கரமாக நடத்தி முடித்தார் பெரியார்.

பெரியாரை நேர்மையாக வாசித்துணர்ந்த யாராலும் அவர் மீது குறையோ, குற்றச்சாட்டோ கூற முடியாது. அவ்வளவு வெளிப் படையான தாராளவாதியாகவே வாழ்ந்தார் பெரியார். அவர் சொல்கிறார்: நான் எனக்கு முன்னால் இருக்கிற இந்த சமுதாயத்தைப் பார்க்கிறேன். இந்த சமூகத்தின் மீதான எனது அறிவுக்கு எட்டிய கருத்துகளை சொல்லுகிறேன். இந்த சமூகம் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்கிற எனது கருத்தானது மாற்றத்தக்கது அல்ல என்றோ, இதுவே முடிந்த முடிவான கருத்து என்றோ நான் கூற மாட்டேன். ஏனென்றால், என் பார்வையில், என் அறிவுக்கு எட்டிய வரையில் சரி எனப்பட்டதையே நான் கூறுகிறேன். இதை யாரும் இப்படியே நம்பி விடாதீர்கள். நீங்களும் உங்கள் சொந்த அறிவைக் கொண்டு சிந் தித்துப் பாருங்கள். உங்கள் அறிவுக் குச் சரியெனப்பட்டதை ஏற்று மற்றதை தள்ளுபடி செய்து விடுங்கள்.

உலகத்தில் எத்தனையோ சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகள் தோன்றியிருக் கிறார்கள். அவர்களில் யாருமே தங்கள் கருத்தைப் பற்றி இந்தளவிற்கு வெளிப் படையாக சுய விமர்சன மும் செய்ததில்லை. பிறர் விமர்சனங்களுக்கு மதிப்ப ளித்ததுமில்லை.

மனித அறிவு தொடர்ந்து பரந்து விரிந்து செல்லக் கூடியது. மனித அறிவின் வளர்ச்சியே மானுட சமூ கத்தின் மகிழ்ச்சி. எனவே, அறிவை விரிவு செய் என்றார் பெரியார். எதன் ஒன்றின் பெயராலும் அறிவைத் தடுக்காதீர்கள். அறிவு வளர்ச்சிக்கு விலங்கு போடாதீர்கள். அறிவை விடுதலை செய்யுங்கள் என்று மனித சமூகத்தைப் பார்த்து வேண்டுகோள் விடுத்தார் பெரியார்.

ஒழுங்கு முறைக்காக கட்டுப்பாடு அவசியமே தவிர அடிமை முறைக்கு வழிகோலும் என்றால் கட்டுப்பாடுகளை உடைக்கலாம் தப்பில்லை என்றார் பெரியார். உடனே கட்டுப்பாடு வேண்டாம் என்கிறார் என்று திரித்துப் பேசி னார்கள் பெரியார் எதிர்ப்பாளர்கள்.

பெரியாரின் தத்துவங்கள் ஒரு வாழ்க்கை நெறி. இந்த வாழ்க்கை ஒரு வாய்ப்பு. இதை மகிழ்வோடும் விருப்பத்தோடும், ஆசைப்பட்ட படியும் வாழப் பழக வேண்டும் என்று பெரியார் சொன்னார். வாழ்வு சுமையாகவோ, துக்கம் நிறைந்த தாகவோ, நிம்மதியற்றதாகவோ, கவலை மிகுந்ததாகவோ இருக்கவே இருக்கக்கூடாது என்பது பெரியாரின் விருப்பம்.

மனிதன் தனாகப் பிறக்கவில்லை. எனவே, தனக்காக மட்டுமே வாழ்தல் கூடாது. நாம் ஒரு சமூகப் பிராணி. எனவே, நம்முடைய வாழ்வு இந்த சமுதாயத்திற்கானதாகவும் இருத்தல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டவர் பெரியார்.


தமிழ் ஓவியா said...

பெரியார் பேசாத துறைகள் இல்லை, ஆய்வு செய்யாத விசயங்கள் இல்லை. எதையும் அப்படியே நம்பிவிட வேண்டாம். யார் எதை சொன்னாலும் அதை ஏன் எதற்கு என்று வினவுங்கள் என்றார். இந்த உலகிலேயே தான் அதிகம் வெறுப்பது அடிமைத்தனம். அதிகம் நேசிப்பது விடுதலை என்று தன் வாழ்வியல் இலட்சியங்களைப் பிரகடனப்படுத்திய பெரியார் காலமெல்லாம் தன் இலட்சியங்களின் வெற்றிக்காக உழைத்தார், சலிப்பு, ஓய்வு இன்றி உழைத்தார்.
அவருடைய சுற்றுப் பயண தூரம் பூமியின் சுற்றளவைப் போல மூன்று மடங்கு அதிகம். அவர் பேசிய பேச்சுக்களை எல்லாம் தொடர்ந்து ஒலிக்க விட்டால் இரண்டரை ஆண்டுகளுக்குக் கேட்கலாம் என்று சொன்னால் அவருடைய பெரும் பணியைப் பற்றி கொண்ட கொள்கைக்காக அவர் மேற்கொண்ட சிரமம் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இத்தனைக்கும் அவர் உடல், நோய்களைச்சுமந்த உடலாக இருந்தது. சமூக நோய்களைச் சரி செய்ய வேண்டுமே என்கிற மருத்துவச் சிந்தனையை எண்ணத்தில் ஏந்தி செயல்பட்ட அவருக்கு உடல் நோய்கள் ஒரு தடையாகவே இல்லை. எல்லா சிரமங்களையும் ஏற்று தம்முடைய நெடிய பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருந்தவர் பெரியார்.

1879 செப்டம்பர் திங்கள் 17ஆம் நாள் புரட்டாசி மாதம் 1 ஆம் நாள் சனிக்கிழமையன்று அவர் பிறந்தபோது அவரது தந்தை வெங்கட்டப்ப நாயக்கர் ஈரோடு மாநகரின் பெரும் செல்வந்தர். பெரு வணிகர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்த பெரிய மனிதர். இவை அனைத்தையும்விட அவர் ஒரு வைணவ பக்தர். நாமதாரி வெங்கட்டப்ப நாயக்கரின் மனைவி சின்னத்தாயம்மாள் பக்த சிரோன்மணி.

ஈரோடு கச்சேரி தெருவிலும், கடை வீதியிலும், இரயிலடியிலும் இவர்களுக்கு வீடுகளும், கட்டடங்களும் மடங்களும் நிறைய இருந்தன. கச்சேரி தெருவில் மாளிகை போன்ற வீட்டில் அன்றாடம் சமயச் சொற்பொழிவுகளும், கதாகாலட்சேபமும், சமை யலும், பந்தியும் நடந்து கொண்டே இருக்கும். புரட்டாசி சனிக்கிழமை பிறந்த ஆண் குழந்தைக்கு இராமசாமி என்று பெயர் சூட்டினார்கள் வெங்கட்டப் பரும் சின்னத் தாயும்.

வீட்டில் துறுதுறுவென்று திரிந்த இராமசாமி, தன் வீட்டில் நடக்கும் பக்தி பிரச்சாரங்களைக் கூர்ந்து கவனித்தார். கதை கேட்டு எல்லோரும் கன்னத்தில் போட்டுக் கொள்ளும்போது இராமசாமி மட்டும் கதைகளில் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை கேள்வியாய் கேட்டு சமய அடியார்களையும் பக்தி பரப்புரையாளர்களையும் விழி பிதுங்க வைத்தார். இப்படி இயல் பிலேயே ஏன்? எதற்கு? எப்படி? என் கிற கேள்வி பிறந்தது இராமசாமிக்கு.

இந்தக் கேள்விகள்தான் ஆரம்பப் பள்ளியைக் கூடத் தாண்டாத இராமசாமியை தந்தை பெரியாராக தரம் உயர்த்தியது. ஒரு முறை அவர்கள் வீட்டில் இராமாயணக் கதாகாலட்சேபம் நடந்து கொண் டிருந்தது. இராமாயண கதாபாத் திரங்கள் ஒவ்வொருவருடைய தன்மைகளைப் பற்றியும் நன்கு கேட்டறிந்து கொண்டார் இராம சாமி.

தமிழ் ஓவியா said...

வனத்திலே தனித்திருந்த சீதையை இராவணன் தலைமுடியைப் பிடித்து தரதரவென இழுத்துத் தன் தொடைமீதுஅமர வைத்து இலங் கைக்குக் கொண்டு சென்றான் என்று கதை சொல்பவர் சொல்லச் சொல்ல கேட்டுக் கொண்டு இருந்தவர்கள் சீதைக்காகக் கொட்டி துக்கப்பட் டார்கள். சிலர் இராவணனை சபித் தார்கள். ஆனால் இராமசாமியால் அமைதி காக்க முடியவில்லை.

இராவணன் சீதையை இழுத்துச் சென்றிருக்கவே முடியாது. சீதைதான் இராவணனோடு விரும்பிப் போயி ருக்க வேண்டும் என்று கூட்டத் திலிருந்து குரல் கொடுத்தார் இராமசாமி. கூட்டம் அதிர்ச்சியில் உறைந்தது. கேள்விகேட்பது வெங் கட்டப்ப நாயக்கரின் மகன் என்ப தால் கதை சொல்பவரால் கோபப்பட முடியவில்லை. எனவே எப்படி? என்று பதில் கேள்வி கேட்டார்.

விரும்பாத பெண்ணைத் தொட்டால் இராவணன் தலை சுக்குநூறாக வெடிக்கும் என்றொரு சாபம் இருக்கும்போது அவர் எப்படி சீதையை இழுத்துச் சென்றிருக்க முடியும்? என்று வினவினார் இராமசாமி. இராமசாமி பெரியா ரான பின்னும் இது போன்ற பல வினாக்களை எழுப்பினார். பெரியார் கேட்க கேட்க இராமாயண கதை திருத்தப்பட்டது.

தமிழ் ஓவியா said...

பத்துத் தலை இராவணன் எப்படி புரண்டு படுத்தான்? என்று பெரியார் கேட்டார். பதில் இல்லை. ஆடை ஆபரணங்கள் மனிதனு டைய அறிவு வளர்ச்சியின் அடை யாளங்கள் என்பதை அனைவரும் அறிவோம். இப்படியிருக்க பெண் தெய்வங்கள் போட்டிருக்கிற பட்டாடைகளை நெய்து தைத்துக் கொடுத்ததும், இவர்கள் போட்டி ருக்கிற நகைகளை செய்து கொடுத் ததும் யார்? என்று அவர் கேள்வி எழுப்பியபோது கோபப்பட்ட சமய அன்பர்களும் பக்தப் பெருமக்களும் இந்தக் கேள்விகளுக்குள் இருந்த அறிவியல் பார்வையைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் கடவுள் கோயில் உட்பட அனைத் துமே மனிதனின் உழைப்பு. மனிதனின் கண்டுபிடிப்பு என்பதே பெரியாரின் கேள்விகளுக்குள் இருந்த உண்மை. இப்படிக் கடவுள் குறித்து, மதம் - புராணம் குறித்து பெரியார் கேள்வி எழுப்பியதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்பவர்கள் பெரியாரின் மற்ற கேள்விகள் குறித்து வாயே திறப்பதில்லை. 1923 இந்திய விடுதலைப் போராட்டக் காலம். கேரள மாநிலம் வைக்கத்தில் ஒரு கோயில் தெருவில் தாழ்த்தப்பட் டவர்கள் நடந்து செல்வதே தீட்டு என்று சொன்னபோது, வெள்ளை ஆதிக்கத்தை வெளியேற்றி சுயராச் சியம் அமைப்பது இருக்கட்டும். நாயும், நரியும், காக்கை - கழுதையும் போகிற தெருவில் மனிதரில் ஒரு பிரிவினர் நடப்பது தீட்டு என்று சொல்லி மனிதனை மனிதன் இழிவு படுத்தும் இந்த சாதி ஆதிக்கத்தை வெளியேற்றி சுயமரியாதை ராச்சியம் அமைப்பது முதல் வேலை என்று களத்திற்கு வந்தார் பெரியார்.

தமிழ் ஓவியா said...

சாதியால் தாழ்த்தப்பட்டு அடக்கு முறைக்கும் அவமானத்திற்கும் ஆளாகியுள்ள மக்கள் சமூகத்திலே செய்து வருகிற கடைநிலைப் பணி களைத்தானே ஒவ்வொரு வீட்டிற் குள்ளும் பெண்கள் செய்கிறார்கள். தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலும் தாழ்த்தி வைக்கப்பட்டுள்ள பெண் களை விடுதலை செய்யாமல், இந்த சமுதாயத்தில் சரி பாதியாயிருக்கிற பெண்களின் உழைப்பை, அறிவை, ஆற்றலைப் பயன்படுத்தாமல், பெண் இனத்தை முடக்கி மூலையில் உட்கார வைத்துவிட்டு சமுதாய முன்னேற்றம் என்று பேசுவது அறிவு நாணயம் இல்லாத செயல் என்று கடுமையாகப் பேசினார் பெரியார். மனிதனை மனிதன் தொடக் கூடாது. நெருங்கக் கூடாது. காணக் கூடாது என்று தாழ்த்துவதும், அடிமைப்படுத்தியிருப்பதும், மனித குலத்தின் ஒரு பிரிவினரான பெண் இனத்தை இழிவுபடுத்தி ஒடுக்கி வைத்திருப்பதுமான நிலையை மாற்ற முயற்சி எடுக்காமல் இந்தக் கொடுமைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டும் அனுமதித்துக் கொண்டும் இருப்பது கடவுள் என்று கருதப்படுகிறவரின் நாணய மான செயலாகுமா? என்று சிந்தித் துப் பாருங்கள் என்று சொன்ன பெரியார், 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் கூட்டிய முதல் சுயமரியாதை மாநாட்டில் இயற்றிய தீர்மானங்கள் புரட்சிகரமானவை.

கல்வி, வேலை வாய்ப்பில் பெண் களுக்கும் சம பங்கு வேண்டும் என்றும் காவல் துறையிலும், இராணுவத்திலும் கூட பெண்களை சேர்க்க வேண்டும் என்றும், குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம பங்கு வழங்க வேண்டும் என்றும் பல புரட்சிகர தீர்மானங்களை இயற்றி னார். எப்போது? 1929-ல், அவருடைய சகோதரி மகள் அம்மாயி. 13 வயதில் கணவனை இழந்த விதவையாகி கதறித் துடித்தது அந்தக் குழந்தை. சாதி சம்பிரதாய ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்த அந்தக் காலத்தில், அம்மாயிக்கு மறுமணம் செய்து வைத்தார் பெரியார். பெண்ணின் திருமண வயது 25 என்று நிர்ண யிக்கக் கோரினார். வாய்ப்புகள் வழங்கப்படுமானால் பெண், ஆணைவிட சாதனை செய்வாள் என்று பெண்ணுரிமை முழக்கங் களை ஓங்கி முழங்கினார்.

கடவுள் மறுப்பாளர் என்று அறியப்பட்ட பெரியார் தான் இந்தி எதிர்ப்புப் போரில் தவத்திரு மறைமலை அடிகளோடும், சமுதாய இன இழிவு ஒழிப்புப் போரில் தவத்திரு குன்றக்குடி அடிகளோடும் இணைந்து பணியாற்றினார். இனமானம் காக்க தன்மானம் கருதாமல் கருப்பும் காவியும் இணைந்து களமாடின. அதேபோல பிராமண துவேசி என்று சொல்லப்பட்ட பெரியார்தான் ஆயிரம் கருத்து முரண்களைக் கடந்தும் இராஜாஜியின் நட்பைப் பாதுகாத்து வைத்திருந்தார். இராஜாஜி மறைந்தபோது கதறி அழுதார். மயானத்திற்கு வந்திருந்த இந்திய குடியரசுத் தலைவர் வி.வி. கிரி நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, தன்னுடைய வாகனத்தில் குடியரசு தலைவரை அமரச் செய்துவிட்டு தள்ளாத வயதிலும் தான் இறங்கி தரையிலே உட்கார்ந்து கொண்டார். அந்த அளவிற்கு பொது மரியாதை நாகரிகம் மிகுந்த தலைவராய் வாழ்ந்தார் பெரியார்.

சக்கர நாற்காலியில் ஊர்ந்தவாறு ஊர் ஊராய்ச் சென்று சுற்றிச் சுற்றிஅவர் பேசிய பேச்செல்லாம் சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பகுத் தறிவு, சுயமரியாதை குறித்துத்தான் பெரியாரின் பேருழைப்புதான் தமிழ்நாட்டில் சாதிக் கட்சித் தலைவர்கள்கூட சாதிப் பெயர் சொல்ல முடியாத மாற்றம், பெண்கள் இடஒதுக்கீட்டு சட்டமும், பெண்கள் சொத்துரிமைச் சட்டமும் இன்னமும் நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் அவை நடைமுறைக்கு வந்து கால் நூற்றாண்டுகள் ஆகிறது. இந்த செயல் நடவடிக்கைகளின் பெயர்ச் சொல்தான் பெரியார் என்பதையும் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்கள் ஆகியோர் இன்றைக்கு படித்த பட்டதாரிகளாக பதவிக்காரர்களாக வலம் வரக் காரணமே பெரியாரின் பேருழைப்புதான் என்பதையும் இந்த நாளில் நன்றியோடு நினைத்துப் பார்ப்போம்! வாழ்க பெரியார்!

தகவல்: கே. நவநீதன், மதுரை
(நன்றி: தங்க மங்கை, செப்டம்பர் 2012)

தமிழ் ஓவியா said...


பெற்றதும் கற்றதும்!


கடந்த சில நாள்களில் (4,5,6 ஆகிய மூன்று நாள்) டெல்லியில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை சார்பில் நடைபெற்ற அறப் போராட்டம் - ஆர்ப்பாட்டம், கருத் தரங்கு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பழைய நண்பர்களையும், நலம் விரும்பிகளையும் சந்தித்து உரையாடி விட்டு, நேற்று காலை 6.25 மணிக்கு டெல்லியில் இருந்து திரும்பு வதற்கு பயண ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.

முதல் நாள் இரவே காலை 6.25 (ய.அ.) புறப்பட வேண்டிய விமானம், காலதாமதமாகி 9.30 மணிக்குத்தான் புறப்படும் என்ற தகவல், விமான நிலையத்திலிருந்து எங்களுக்குத் தரப்பட்டது.

நாங்களும் வழக்கம்போல் விடியற் காலையே ஆயத்தமாகி 8.30 மணிக் குள் விமான நிலையத்திற்குச் சென்று விட்டோம்.

முதலில் 10 மணிக்கு - 10 மணித் துளிகள் தாமதம் என்றனர் விமான அதிகாரிகள்.

இருக்கை நுழைவுச் சீட்டு உட்பட பெற்று உரிய வாசல் முன்பு சென்று அமர்ந்தோம்.

விமானத்தில் பழுது உள்ளது; எனவே மேலும் தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டது.

எப்போதும் புத்தகங்களைக் கையில் வைத்து படிப்பதை வாடிக்கை யாகக் கொண்டவன் நான்; என்னுடன் அமெரிக்க பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர், டாக்டர் சோம. இளங் கோவன், துணைவேந்தர் டாக்டர் நல். இராமச்சந்திரன், வழக்குரைஞர் த. வீரசேகரன் ஆகிய எல்லோரும் உடன் வந்தனர். நட்பு மகிழ்ச்சிக்குரிய நேரத்தைத் தருகிறதே!


தமிழ் ஓவியா said...

அங்கே ஒரு வழக்குரைஞர் அருணன் என்ற நண்பரை வீரசேகரன் அறிமுகப் படுத்தினார். அவருடன் மற்றொரு வழக்குரைஞரும் வந்திருந்தார். நண்பர் அருணன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தா மொழி அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்தவர். கடுமை யாக உழைத்து வழக்குரைஞராகி, மத்திய அரசின் வழக்குரைஞராக பல ஆண்டுகள் இருந்தவர். தாய் தந்தை யர்கள் கிராமவாசிகள். இவர் பெங்களூ ருவில் சட்டம் படித்தவர்; அதன் மூலம் பல மொழிகள் அறிந்தவர்.

மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் விடாமல் பேசிக் கொண்டே இருந்து எங்களைச் சிரித்து மகிழவும் வைத்தார்!

புதிதாக வந்துள்ள ஆப்பிள் கைப் பேசியை அவர் வைத்துக் கொண்டு, என்னுடன் படம் எடுத்துக் கொள்ள விடா முயற்சி செய்து கொண்டே இருந்தார்.

விமானத்திற்கு நாங்கள் காத்திருக் கும்போது பல நுழைவு வாயில்களை மாற்றி மாற்றி அறிவித்து, எங்களை (பயணிகளை) விமான நிலையத்தினர் அலைக் கழித்தனர். மூன்றுமுறை மாற்றி மாற்றி அலைய வைத்தனர். இறுதியில் வேறு விமானம். சுமார் பகல் 2 மணியளவில்தான் அமர்த்தப்பட்டோம்.

புது ஆப்பிள் கைபேசியில், பல்வேறு நுணுக்கமான தொழில் நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளதால், படம் எடுப்பது எளிதாக அவருக்கு இயலவில்லை. நண்பர் வீரசேகரன் முயற்சித்தார்; துணைவேந்தர் இராமச்சந்திரன் அவருக்கு ஒவ்வொன்றாக விளக்கி, இறுதியில் படம் எடுக்கும் நிலையில் வெற்றிகரமாக வழக்குரைஞர் அருணன் அவர்கள் தேர்வாகி விட்டார்! மீண்டும் படம் எடுக்க என்னை நிற்கும்படி கேட்டு படம் எடுத்துக் கொண்டு, நல்ல நகைச்சுவை உணர்வுடன் ஒன்றைக் கூறினார்;

தமிழ் ஓவியா said...

எனக்குக்கூட கைப்பேசியில் (என்னுடையது மிகவும் சாதாரண பழைய கைப்பேசிதான்) அழைப்புக்களை ஏற்கவும், தேவைப்படுவோரை அழைக்க மட்டுமே தெரியும். கூடுதலான ஒரு சில வசதிகள் அதில் இருந்தாலும் அவற்றை பயன்படுத்த எனக்குத் தெரியாது.

தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக் கொள்வதுதான் நேர்மை. கிரேக்க நாட்டு மிகப் பெரிய பகுத்தறிவு முன்னோடியான சாக்ரட்டீஸ் கூட எனக்குத் தெரிந்ததெல்லாம் என் அறியாமை ஒன்றுதான் என்று மிகுந்த தன்னடக்கத்துடன் சொன்னார். அவ்வளவு மகத்தான மாமனிதர்களே அவ்வளவு அடக்கத்துடன் கூறும்போது, சாமான்யர்களான நாம் எம்மாத்திரம்? கற்றது கைம்மண் அளவுதானே? கைப்பேசி மூலம் கற்க வேண்டியதோ உலகளவு அல்லவா - பெருகி வரும் இந்தத் தொழில் நுட்ப யுகத்தில் உள்ளது?

இந்த வழக்குரைஞர் நண்பர் மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் சொன்னார்;

நான் ஏதோ ஆசைப்பட்டு இதை வாங்கி விட்டேன்; இது எப்படி இருக்குன்னா, ஒரு கிராமத்துக் காரனுக்கு பெரிய சினிமா நடிகையைத் திருமணம் பண்ணிக் கொடுத்து வாழுவதுபோல இருக்கு! என்றார். நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம். நுகர்வோர் கலாச்சாரம் எப்படி யெல்லாம் நம்மைப் வேடிக்கைச் செய்கிறது பார்த்தீர்களா?

அதேபோல அருப்புக்கோட்டை அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் உள்ள பெற்றோர்கள் (விவசாயிகள்) மகளான ஓர் இளம் பெண் - மாணவி பெயர் காயத்திரி இவர் நத்தம் கல்லூரியில் க்ஷக்ஷஹ வகுப்பில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்; பெண்களுக்கான கால்பந்து விளையாட்டு வீராங்கனை யான இவர் இந்தியாவின் 23 பேர்கள் தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து ஒரே ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டு, மலேசியாவிற்கும், சிங்கப்பூருக்கும் சென்ற இந்திய மாணவிகள் குழுவில் விளையாடி சாதனை செய்துள்ளார்! சீனாவிற்கும் சென்று திரும்புகிறார்; சீனாவிலும் இவர் தேர்வாகி இருக் கிறார்.

நமது பெண்கள் - எவ்வளவு ஆற்றலை உள்ளடக்கியுள்ளனர் என்பது புரிவதோடு, எவ்வளவு பெருமை யாக உள்ளது!

தன்னந்தனியாக இவர் சென்று துணிவுடன் வந்துள்ளார். இவரது பெற்றோர்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

கிடைத்த வாய்ப்பை தனது ஊக்க முயற்சி மூலம் நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார் இப்பெண். எத் தனையோ பேர்கள் குடத்திற்குள் விளக்காகி உள்ளனர்!

அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்

அழகிய தமிழ்நாட்டின் கண்கள்

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

காத்திருந்த நேரமும் வாழ்க்கை யின் வெற்றியாளர்களைச் சந்திக்க எங்களுக்குப் பயன்பட்டது என்ற மகிழ்ச்சியுடன் திரும்பினோம்! அதுவும் பயனுள்ள நேரம்தானே!

- கி.வீரமணி 8-12-2012

தமிழ் ஓவியா said...


வெற்றி... ஆனால்...


சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்ற பிரச்சினை நாட்டை அலைக் கழித்துக் கொண்டு இருந்தது.

எதிர்ப்புப் புயல் கடுமையாக வீசினாலும் மத்திய அரசு எடுத்த முடிவில் பின் வாங்குவ தாகத் தெரியவில்லை என்ற நிலையில் நாடாளு மன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி விட்டன.

இந்தப் பிரச்சினையை முன் வைத்து நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவது என்கிற அளவுக்குப் பிரச்சினை முற்றி விட்டது. எதிர்க் கட்சிகள்கூட உடனடியாக பொதுத் தேர்தலை விரும்பவில்லை என்பது தான் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவு இல்லாமல் போனதற்கான காரண மாகும்.

கடைசியாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் ஏற்கப்பட்டு இறுதியாக மத்திய அரசு எப்படியோ தப்பிப் பிழைத்துவிட்டது.

தி.மு.க. போன்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள்கூட, மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தால், அதன் பலனை மதவாத சக்தியான பாரதீய ஜனதா அனுபவித்து விடக் கூடாது என்ற நோக்கில் ஆதரித்து, வாக்களித்துள்ளார்களே தவிர மற்றபடி சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு கொள்கைக்கு எதிரான நிலையில்தான் இருந்து வருகின்றனர்.

ஒன்றை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உணர வேண்டும். ஏதோ ஒரு சூழ் நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பிப் பிழைத்திருக்கலாம்; இது ஒன்றும் உறுப்பினர் களின் தலைகளை எண்ணும் சாதாரண பிரச்சினையல்ல.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்ற கொள்கையானது வெகு மக்கள் விரோத மான செயல் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.

வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித் தாடும் ஒரு நாட்டில், சில்லறை வணிகத்தில் கோடிக்கணக்கான மக்கள் ஈடுபட்டுக் கொண் டிருக்கும் நிலையில், அதனைப் பூண்டோடு அழிக்கும் வேலையில் ஓர் அரசு ஈடுபடலாமா என்பதுதான் முக்கிய கேள்வியாகும்.

ஏதேதோ சமாதானம் செய்யும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டாலும் உண்மை வேறு விதமானதுதான். வெகுதூரம் போவானேன்? நம் நாட்டு காளி மார்க் சோடாவும், வின்சென்ட் சோடா நிறுவனமும் காணாமல் போய் விடவில்லையா?

குடி தண்ணீரில் கூட நுழைந்து விட்டதே அந்நிய நிறுவனங்கள்! கொக்கோ கோலா கிங்லி என்ற பெயரிலும், பெப்சியோ, அக்வாஃபினா என்ற பெயரிலும், நெஸ்லே நிறுவனம் பியூரி லைஃப் என்ற முகமூடி அணிந்தும், பிரிட்டானியா நிறுவனம் ஒன்று ப்யூர் ஹெல்த் என்ற விலாசத்துடனும் கடை விரித்து விட்டனவே!

என்ன கொடுமை என்றால் ஒரு லிட்டர் பாலைவிட ஒரு லிட்டர் தண்ணீரின் விலை அதிகம்.

வீட்டில் தண்ணீரை காய்ச்சி எடுத்துச் செல்வதைவிட எந்த வகையிலும் இந்த வியாபார தண்ணீர் தரத்தில் உயர்ந்ததும் அல்ல.

21 நிறுவனங்கள் தயாரிக்கும் தண்ணீரில் 32 வகையான நஞ்சுகள் இருப்பதாக சோதனை யில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மாநில அரசுகள் விரும்பாவிட்டால் சில்லறை வணிகத்தில் அந்நிய நிறுவனங்கள் அங்கு நுழையாது என்று உறுதியளித்திருப்பது ஓர் ஆறுதலான தகவலாகும்.
11 மாநிலங்கள் அந்நிய முதலீட்டுக்கு ஒப்புதல் தந்ததாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்தசர்மா கூறியுள்ளார்.

எப்படியோ ஒட்டகம் கூடாரத்துக்குள் நுழைந்துவிட்டது. மக்கள் விழிப்புணர்ச்சிதான் கடைசித் தடுப்பு சுவர் ஆகும். காலம் பதில் சொல்லும்.8-12-2012

தமிழ் ஓவியா said...


இறந்த பின்...

ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்று ஒன்று இருக்குமானால், அது அவன் இறந்த பின், அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவதுதான்.
(விடுதலை, 31.3.1950)

தமிழ் ஓவியா said...


கலைத்துறை தேவையே!




பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையைப் பரப்பத் தற்போது கலை நிகழ்ச்சிப் பிரிவை (அணியைத்) துவங்கியிருப்பது பாராட்டு தலுக்குரியது.

பரப்புரை என்பது பேச்சால் மட்டும் நடப்பது அன்று. இசை, வில்லுப்பாட்டு, நாடகம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், மூடநம்பிக்கை ஊர்வலம், மந்திரமா? தந்திரமா? வானொலி நிகழ்ச்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சி, இணையதள நிகழ்ச்சி, கைப்பேசி, செய்தித்தாள்கள் என அறிவியல் வளர்ந்து வரும் காலத்தில் பழைமையர்கள் எத்தனை வகைகளில் பழைமையைப் பரப்புகிறார்களோ, அத் தகை வகைகளிலும் நாம் பகுத்தறிவைப் பரப்ப வேண்டும்.

எடுத்துக்காட்டாக, 1973இல் ஞாலம் புகழ் சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் நான் தமிழாசிரியராக இருந்த போது - அங்கே தீ மிதித்து - அய்யா விடம் வணக்கம் சொல்லி வாழ்த்தைப் பெற்றேன். அந்த மாநாட்டில் - மதுரை பொன்னம்மாள் சேதுராமன் குமுதம் திரைப்படப் பாடல் உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே! ஒருவர் கண்ணை ஒருவராலே நம்ப முடியலே! என்ற மெட்டில், இசைக் கருவிகள் முழங்க,
கடவுளில்லே! கடவுளில்லே
கடவுளே இல்லே!
கண்டிப்பாகச் சொல்லுகிறோம்
கடவுளே இல்லே! (கடவுளில்லே)
வாசக்கல்லை மிதிக்கிறே!
குளத்துக் கல்லில் துவைக்கிறே
அப்புறம் ஏன் - கோயில் கல்லை மதிக்கிறே! (கடவுளில்லே)

என அவர்கள் இருவரும் எடுப்பான குரலில் முதல் அடியைப் பாடியதுமே மாநாடே கரவொலியால் அதிர்ந்தது. பகுத்தறிவாளர் உள்ளமெல்லாம் நாத் திகக் கொள்கை நன்கு பதிந்தது.

அந்நிகழ்ச்சியும் அய்யா மேடையில் அமர்ந்து சுவைத்த காட்சியும் இன்றும் என் மனதில் இசைத்தட்டாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. எனவே இசைக்கு அசையார் எதற்கும் அசையார். சிற்றூர் களில் நடக்கும் புராண நாடகங்கள் தான் நம் புத்தியைக் கெடுத்தன.
இசைக்குழு தேவை! தேவை!!

******

பள்ளிவிட்டு, வெளியே பரப்புரை செய்வதற்கு அரும்பாடுபட வேண்டும். ஆனால், பகுத்தறிவுக்கெதிரான அறி யாமை நிறைந்த கருத்துக்களைக் கல்வி என்ற பெயரில் அரசாங்கமே ஊதியம் கொடுத்துக் கற்பிக்கின்றதே! இதைத் தடுக்க.. இராமாயணம் இடம் பெறும் வகுப்பில் இராவண காவியம் இடம் பெற வேண்டும் அறிஞர்அண்ணா முதல்வ ரானதும் ஒரு பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, கங்கை, இமயமலை யில் உற்பத்தி ஆகிறது எனப் பூகோள ஆசிரியர் சொல்கிறார். தமிழ்ப் புலவரோ கங்கை, சிவபெருமான் தலையிலிருந்து வருகிறது என்றார். தேர்வில் பள்ளி மாணவன் எது சரி என்று அறிந்து தேர்வு எழுதுவான்? இதுபோன்ற அறிவுக்கு முரண்பாடான பாடத் திட்டங்களையெல் லாம் மாற்றியாக வேண்டும் என எடுத் துரைத்தார். (1968) மாற்றம் நடந்ததா?

******

கடந்த கால அரசுகள் செய்யத் தவறிய கல்விச் சீர்திருத்தத்தை எண்ணி, இனி மேலாவது, கல்வித் துறையில் பழைமைப் பாடங்களோடு, பகுத்தறிவுப் பாடங்களும், மதத் தலைவர்கள் வரலாற்றோடு, சீர் திருத்தப் பெரியோர்களின் வரலாற்றையும் (இன்றியமையாத கொள்கையை விடாமல்) சேர்த்துக் கற்பிக்க வேண்டும்.

தத்தனூர் சி. தமிழ்மணி
(அரியலூர்)

தமிழ் ஓவியா said...


குளித்தலையில் பிராமணாள் ஒழிந்தது


பிராமணாள் ஹோட்டல் என்ற பெயரில் ஸ்டிக்கர் ஓட்டி மறைத்து விட்டபின்.

கரூர் மாவட்டம் குளித்தலையில் புதிய காவல் நிலையத்திற்கு எதிர்ப்புறம் சிறீனிவாசா பிராமணாள் ஹோட்டல் என்ற பெயரில் இயங்கி வந்தது சிறீரங்கத்தில் பிராமணாள் ஹோட்டல் பெயர் நீக்கப்பட்டதன் விளைவாக குளித்தலையில் கரூர் மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் காவல் நிலையத்திற்கும், சிறீனிவாசா ஹோட்டல் நிர்வாகத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உரிமையாளரே பிராமணாள் ஹோட்டல் என்ற பெயரில் ஸ்டிக்கர் ஓட்டி மறைத்து விட்டார். பிராமணாள் என்ற இடத்தில் ஸ்ரீனிவாசா ஹோட்டல் என்ற வாசகம் இடம் பெற்றது. கரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் முயற்சிக்கு ஒத்துழைத்த உணவு விடுதி உரிமையாளருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...


செய்திகளும் சிந்தனைகளும்


நீரோட்டம்

காவிரி நதி நீர்ப் பிரச்சினை காரணமாக தமிழ் நாடு கருநாடக மாநிலங்களுக்கிடையிலான போக்கு வரத்து இரு நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது. *(இதற்குப் பெயர் தான் தேசீய நீரோட்டம் என்பதோ!)

சிறையில் மீனவர்கள்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன் டெல்லியில் பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்தார். பேச்சு வார்த்தை நடத்து கொண்டு இருப்பதாகவும் விரைவில் தீர்வு கிடைக்கும் என்று பிரதமர் கூறினாராம்.

(இது மாதிரி உறுதிமொழிகளைக் கேட்டுக் கேட்டு, காதே புளித்துப் போய் விட்டது.
கோரிக்கை வைப்பது, பிரதமர் கவலையைத் தெரிவிப்பது என்பனவற்றை பதிவு செய்து வாரம் ஒரு முறை ஒலி பரப்பலாம்.
சுண்டக்காய் நாட்டிடம் அகில பாரதம் என்ன பாடுபடுகிறது!)

ஜாதிதான்

தமிழ்நாட்டில் இனி ஜாதி கூட்டணிதான். ஜாதி அரசியல் இல்லாத மாநிலங்கள், தொகுதிகள் கிடை யாது என்று வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு கூறியுள்ளார்.
(தலித் அல்லாதரை ஒருங்கிணைப்பதாக கூறிக் கொண்டு புறப்பட்டுள்ள இவர் உழைப்பாளி மக்களான வன்னியர்களைத் தனிமைப்படுத்திவிடுவார் போலிருக்கிறதே! ஒரு நிம்மதி, வன்னிய பெருமக்கள் இந்தத் தவறுக்குத் துணை போக மாட்டார்கள் என்று நம்பலாம்!)

கொலை! கொலை!!

திருச்சி சிறையிலிருந்து பொன்னேரி நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டு, மீண்டும் திருச்சிக்குப் பேருந்து வழியாகக் கொண்டு வரப்பட்ட கைதி தேவராஜ் என்பவரை நெற்குன்றம் அருகில் பேருந்தில் ஏறிய பத்துபேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்றது.
(இது நாடுதானா? நாள்தோறும் ஏடுகளைப் புரட்டினால் கொலை, கொள்ளை, கழுத்தறுப்பு தானா! சட்டம் -ஒழுங்கு பலே ஜோர்தான் போங்க!)

சங்கீ..தம்

திருவருட்பா போன்ற பாடல்கள் சபாக்களில் இசைக்கப்படுமேயானால் தமிழும், சங்கீதமும் காப்பாற்றப்படும்.

- தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்

(இதே கருத்தை கொஞ்சம் விரிவுபடுத்தி கோயில் கருவறைக்குள்ளும் பாடலாம் என்று மனதைக் கொஞ்சம் அகலமாக்கிக் கூறக்கூடாதா? அங்கு மட்டும் தமிழ் நீஷப் பாஷை ஆனது எப்படியோ!)

அன்சாரி கைது!

இந்திய ராணுவ ரகசியங்கள், பயிற்சி மய்யங்களின் நிழற் படங்களை வெளி நாட்டுக்குக் கடத்த முயன்ற தமீம் அன்சாரி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது.
(மிகச் சரியான நடவடிக்கை நாட்டுப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில், அதே நேரத்தில் ஒரு பாட்டில் விஸ்கிக்காக இந்திய ராணுவ இரகசியங்களைக் காட்டிக் கொடுத்த கூர்ம நாராயண் என்ற பார்ப்பனர் நீச்சல் குளவசதியுடன் கூடிய தோட்ட பங்களாவில் புதுடில்லியில் உல்லாசமாக வாழ்கிறார் என்று கேள்வி!)

கொள்கைப் பரப்புச் செயலாளர்

ம.தி.மு.க.வின் கொளகைப் பரப்புச் செயலாளராக வழக்குரைஞர் க. அழகுசுந்தரம் நியமிக்கப்பட் டுள்ளார்.

(நல்லது. அய்யா வழியில் ஆண்டாள் என்ற பேசிய ஒருவர் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தார். இதுபற்றி விடுதலையில் எழுதியும் மதிமுக தலைமை கண்டு கொள்ளவில்லை புதிய கொள்கைப் பரப்புச் செயலாளர் அனேகமாக திராவிடர் இயக்கச் சிந்தனையாளராக, குறைந்தபட்ச பகுத்தறிவுக் கொள்கையாளராக இருப்பார் என்று நம்புகிறோம்)

வருத்தம்

தமிழ்நாட்டுக்கு கடந்த புதன் இரவு முதல் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித் தும், அவ்வாறு திறந்து விடாததற்காக கருநாடக மாநிலத்துக்காக வாதாடிய வழக்குரைஞர் நாரிமன் வருத்தம் தெரிவித்தார்.
(இதைவிட பெரிய பெரிய ஆணைகளை எல்லாம் உச்சநீதிமன்றம் பிறப்பித்தும் கருநாடகம் அதனை மதிக்கவில்லையே; அதற்கு பெரிய பெரிய வருத்தம் தெரிவிக்கவில்லையே - இது என்ன கொசு(று))

தமிழ் ஓவியா said...


அப்பா - மகன்


நான்... நான்...

மகன்: நான் நேர்மை யானவன் நான் நேர்மையானவன் என்று பிஜேபி தலை வர் நிதின்கட்காரி கூறுகிறாரே அப்பா! அப்பா: அதை அடுத் தவர்கள் சொல்ல வேண்டும் தன் முதுகைத்தானே தட்டிக் கொள்ளக் கூடாது மகனே!

(சொந்த கட்சிக் காரர்களே அவரைப் பதவி விலகச் சொல் கிறார்களே மறந்து விட்டாரா?)

தமிழ் ஓவியா said...


மதுரை ஜில்லா 2ஆவது சுயமரியாதை மகாநாடு


தீர்மானங்கள்

1. இன்றைய காங்கிரஸ் சர்க்கார் மந்திரிசபை வகித்த தினத்திலிருந்து இன்றுவரை பார்ப்பனரல்லாத மக் களுக்கும், ஏழை பாமரமக்களுக்கும், பொதுஜனங் களுக்கும் கட்டாய இந்திக் கல்வித் திட்டம், வார்தா கல்வித் திட்டம், காலேஜ் தேர்தல் கமிட்டியை எடுத்தல், பப்ளிக் பிராசிகியூட்டர் நியமனத்தை எடுத்துவிடல், உத்தியோகத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை மறைமுகமாக வொழித்தல் போன்ற சூழ்ச்சியால் பார்ப்பனரல்லாத மக்களுக்கு பல தீங்குகளைச் செய்து வருவதால், காங்கிரஸ் மந்திரிசபை மீது நம்பிக்கை யில்லை யென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது என்ற தீர்மானத்தை தோழர் அருணாசலம் பிரேரேபித்தார்.

அதனை ஆதரித்து, தோழர்கள் சி. என். அண்ணாத் துரை, கே. எம். பாலசுப்பிரமணியம் எ. பொன்னம்பலனார், பண்டித திருஞானசம்பந்தம், எஸ்.வி. லிங்கம் பேசி னார்கள். தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.

2. மதுரை முனிசிபல் சபையாரால் நடத்தப்படும் இலவச வாசகசாலைகளில் விடுதலை, குடிஅரசு, பகுத்தறிவு, நகர தூதன், நவமணி முதலிய பத்திரி கைகள் இல்லாமைக்கு வருந்துவதுடன் இனிமேலாவது மேற்கண்ட பத்திரிகைகளைப் போடும்படி மதுரை முனிசிபல் சபையாரை இம்மகாநாடு கேட்டுக் கொள்ளுகிறது.

பி:- தா. பால்சாமி
ஆ:- முத்திருளாண்டி.

3. மதுரைமில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்திருப்பதனால் பாதிக்கப்படும், தொழிலாளர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்யுமாறு சுயமரியாதைத் தோழர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்ளுகிறது.

பி:- தோழர் ஏ.எஸ். அருணாசலம்
ஆ:- அய்யப்பசாமி

4. சென்னை சட்டசைபகளில் ஜஸ்டிஸ் கட்சியின் தலைவர்களாக வீற்றிருக்கும் சர். மகமது உஸ்மான் அவர் களும் குமாரராஜா முத்தையா செட்டியார் அவர்களும் தாங்கள் இருவரும் எதிர் கட்சித்தலைவர்கள் என்ற பொறுப்புகளை மறந்து மந்திரியுடன் உறவாடி அளவ ளாவிக் கொண்டிருப்பதை இம்மகாநாடு வன்மையாய்க் கண்டிக்கிறது. மேற்படி இருவர்களையும் தங்கள் ஸ்தானங் களை ராஜினாமாச் செய்யும்படி வற்புறுத்தி அவர் களுக்குப் பதிலாக தகுந்த தலைவர்களைத் தேர்ந் தெடுக்கும்படி ஜஸ்டிஸ் கட்சித் தலைவரை இம்மகாநாடு வேண்டிக் கொள்ளுகிறது.

பி:- எஸ். உத்தண்டன், விருதுநகர்,
ஆ:- இ. ஆவடையப்பன், சோளவந்தான்.
இதனை பண்டித திருஞான சம்பந்தம் எதிர்த்தார். தோழர்கள் ஈ.வெ.ராமசாமி யும், பாண்டியன் அவர்களும், இதனை விட்டுவிடலாமென்று பேசினார்கள். தோழர்கள் கெ. எம். பாலசுப்பிரமணியமும், உத்தண்டனும் தீர்மானத்தை நிறைவேற்றவேண்டுமென வற்புறுத்திப் பேசினார்கள். தீர்மானத்தில் பிற்பகுதியை மட்டும் எடுத்துவிடுவதாக ஒரு திருத்தப் பிரரேபணையை தோழர் சவுந்திர பாண்டியன் கொண்டுவந்தார்.அசல் தீர்மானத் தைக் கொண்டுவந்த தோழர் அதை ஏற்றுக்கொள் வதாகக் கூறவே திருத்தத் தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டு, 5 பேரால் எதிர்க்கப்பட்டு, பெரும்பான்மையினரால் ஆதரிக்கப்பட்டு தீர்மானம் நிறை வேறியது.

5. பொது ரஸ்த்தா, பொதுக் குளம், கிணறு, சத்திரம், குழாய், சினிமா படக்காட்சி, போக்குவரத்து சாதனம், காபி சாப்பாடு ஓட்டல் இன்னும் பொதுவான இடங்களில் சமத்துவமில்லாமல், ஜாதி மத பேதம் காட்டக்கூடிய நபர்க்கு 6 மாதம் தண்டனை என்று சென்னை கவர்ன் மெண்டார் சீக்கிரம் சட்டம் செய்யவேணுமென்றும், செய்யாத பட்சத்தில் மேற்படி உரிமையை அடைய போராட்டம் ஆரம்பிக்க வேண்டுமென்றும் இம்மகாநாடு ஒவ்வொரு இந்தியர்களையும் கேட்டுக் கொள்வதாகத் தீர்மானிக்கிறது.

பி:- வீர. சு.பு. வீரய்யா.
ஆ:- டி. ஏ;. நாகலிங்கம்;.

6. மதுரையில் காபி கிளப்களில் சமத்துவமாக நடத்தப்பட வேண்டுமென்று மருத்துவர்களால் நடத்தப் படுகிற கிளர்ச்சியை இம்மகாநாடு வரவேற்பதுடன் ஆதரவளிக்கிறது.

தலைவர்

7. இந்தியை கட்டாயப் பாடமாக நமது ஜில்லாவில் உள்ள பள்ளிக்கூடங்களில் சென்னை சர்க்கார் அமலுக்குக் கொண்டுவராமல் பாதுகாக்க கீழ்க்கண்ட வர்கள் அடங்கிய கமிட்டியைத் தெரிந்தெடுக்கிறது.

(1) ஊ. பு. அ. சவுந்திரபாண்டியன் (2) டி. ஆவடையப்பன் (3) பி.வி.விநாயக மூர்த்தி (4) ஆர்.ராஜகோபாலன் (5) எம். ஆர். மித்திரன் (6) எ. ஏஸ். அருணாசலம் (7) எஸ். மஸ் தான் ஷரிப்.

பி: தோழர் ஈ.வெ.ராமசாமி
ஆ: விநாயகமூர்த்தி

(13.3.1938இல் மதுரை விக்டோரியா எட்வர்டு ஹாலில் நடைபெற்ற மதுரை ஜில்லா - 2 -ஆவது சுயமரியாதை மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்)


- குடிஅரசு - தீர்மானங்கள் - 20-03-1938

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார்
பொன்மொழி


பகுத்தறிவின் பாங்கில், அமைதிப் பாதை வழி நடந்து, பொதுவுடைமை மலர்ச்சி காண விழைகிறது திராவிடர் கழகம்.

தமிழ் ஓவியா said...


தெரியுமா உங்களுக்கு?


1933 வரை பொள்ளாச்சி நகர உணவு விடுதிகளில் பார்ப்பனர்க்கும் மற்றையோர்க்கும் சாப்பிடும் இடம் தனித்தனியாக ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த இழிவை நீக்கி நகராட்சி நடவடிக்கை எடுத்ததை கண்டித்தவர் பார்ப்பன வெறியர் சர். பி.எஸ்.சிவசாமி அய்யர் என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி.


சென்னை மாகாண சட்டமன்றத்தில் 1892 முதல் 1917 வரை 25 ஆண்டுக்காலத்தில் ஒரு பார்ப்பனர் அல்லாதார் கூட உறுப்பினராக இல்லை. எல்லாமே அவாள் மயம்!


- பிக்கவோல் நீதிக்கட்சி மாநாட்டில் கே.வி.ரெட்டி நாயுடு பேச்சு (அக்டோபர் 1917)


-------------------------------


திருச்சி குடமுருட்டி ஆற்றுப் படித்துறையில் பார்ப்பனர் மட்டுமே குளிக்க வேண்டும் என நகராட்சி விளம்பரப் பலகை வைத்திட ஏற்பாடு செய்தவர் டி.எஸ்.பொன்னுசாமி தேவர் எனும் உறையூர் வார்டு நகர் மன்ற உறுப்பினர். கோடரிக் காம்பு?


--------------------------------
தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தவர் எனப் பார்ப்பனர்கள் கொண்டாடும் முத்துசாமி அய்யர் தீர்ப்பு கூறுகையில், வைப்பாட்டி வைத்திருப்பதனால் கணவனிடம் ஜீவனாம்சம் கோர மனைவிக்கு உரிமையில்லை என்று எழுதியவர். -

தரவு: Indian Social Reformer VL 2.2.1895, பக்கம் 169


-------------------------------
இதே நபர் இன்னொரு தீர்ப்பில் ஆதி திராவிடர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படக் கூடாது; இந்து கோயில்கள் முகம்மதியர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர்க்காகக் கட்டப்படவில்லை என்றே எழுதினார்.


(தரவு: Right of Temple Entry - P.Chidambaram Pillai, Nagercoil - page 8)