Search This Blog

7.12.12

ஜாதித் தீக்கு தீ மூட்டப்பட வேண்டும்.

விஜயபாரதம் சீண்டுவது ஏன்? 

தருமபுரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் வாழ்ந்த மூன்று கிராமங்கள் முற்றிலும் எரிக்கப்பட்டுள்ளன; அதிர்ச்சியுடன் அந்தப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கழகத் தோழர் களுடன்  சென்றார். வீடுவீடாகச் சென்றார் - குமுறிக் குமுறி அழுத தாய்மார்களின் கண்ணீர் இன்னும் நம் கண்கள் முன் பாய்ந்து கொண்டு தானிருக்கின்றது.

இந்த ஜாதித் தீக்கு தீ மூட்டப்பட வேண்டும்.

அதற்கு உயிர்த் தண்ணீர் ஊற்ற யாரும் முயலக் கூடாது. மக்களின் மூளையில் பதுங்கிக் கொண்டிருக்கும் ஜாதிப் பாம்பு திடீரென படம் எடுத்து ஆடுகிறது; கொத்துகிறது. இந்தக் கொடூரம் ஒழிக்கப்பட வேண்டும் - மக்களின் மூளையில் படிந்திருக்கும் ஜாதி நோய்க்கு ரேடியம் சிகிச்சை தேவைப்படலாம்.

அதுதான் விழிப்புணர்வு என்பது. உழைக்கும் மக்களான தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட் டோரும் இணைந்து நின்று போராட வேண்டியவை இன்னும் எவ்வளவோ இருக்கின்றன.

அவற்றை எல்லாம் புறந்தள்ளி விட்டு, வலது கையும் இடது கையும் அடித்துக் கொள்ள வேண்டுமா?

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எவ்வளவு சொல்லியிருக்கிறார்கள் - ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

மீண்டும் நினைவூட்டப்பட வேண்டும் என்பதற் காக உடனே தருமபுரியில் வரும் ஞாயிறன்று (9.12.2012) ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டினை அறிவித்துள்ளார்.

உழைக்கும் மக்களாக ஆண்டாண்டு காலமாக மறுக்கப்பட்ட மக்களான தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் ஒன்றிணைந்து போராட வேண்டியவற்றை எடுத்துக் கூறி இரு கரங்களையும் இணைக்கும் பணியில் திராவிடர் கழகம் ஈடு பட்டுள்ளது.

ஜாதி என்பதற்கு ஏது அடையாளம்? சொல்ல முடியுமா? சவால் விட்டே கேட்க முடியும்!

ஜாதி மறுப்புத் திருமணம், மத மறுப்புத் திருமணம் இவற்றின் மூலம் ஜாதியற்ற புத்துலகத்தைப் படைக்கும் பாங்கில் திராவிடர் கழகம் அவற்றை நடத்தினால் இந்து முன்னணிக்காரர்களுக்கு மூக்குப்புடைக்கிறது.

தி.க. தலைவர் வீரமணி, கலப்புத் திருமண மாநாடு நடத்துவது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாகும். தொல். திருமாவளவன் கலப்புத் திருமணத்தை ஆதரித்துப் பேசுவது மீண்டும் பதற்ற நிலைமையை உருவாக்குமே தவிர அமைதியை உருவாக்காது என்று இந்து முன் னணி - ஆர்.எஸ்.எஸ். வார ஏடான விஜயபாரதம் (7.12.2012 பக்கம் 13) எழுதுகிறது.
எப்படிப்பட்ட கண்டுபிடிப்புப் பார்த்தீர்களா? ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்தினால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாகுமாம்.

அப்படியென்றால் ஜாதிக்குள் திருமணம் செய்து கொள்வோம் - ஜாதி வெறியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லுவோம் என்று  குரல் கொடுக்க வேண்டுமா?

பொது சுடுகாடு என்பது கூடாது - இந்துக் களிடையே பல்வழி தகன முறைகள், சம்பிரதாயங்கள் இருக்கின்றன என்று சொல்லுபவர்தானே அவாளின் ஜெகத் குரு.

இப்படி சுடுகாட்டிலும்கூட ஜாதி இருந்தால்தான் ஜாதித் தீ அணைவதற்கு வழி என்று சொல்ல வருகிறார்களா?

இந்து மதத்தில் பிறப்பின் அடிப்படையில் ஜாதி என்னும் கேவலமான அமைப்பு முறை இருக்கிறதே - அதனால்தானே ஊர்கள் எரிகின்றன என்று நேர்மையோடு எண்ணி, ஜாதியை ஒழிப்போம் வாரீர் என்று குரல் கொடுக்க விஜய பாரதங்களை வெளிப்படையாக வெளியில் வரச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஜாதி ஒழிந்தால் பார்ப்பன ஆதிபத்தியத்தின் அடிச்சுவடு கூட இல்லாமல் அந்தத் தருணத்திலேயே மண் மூடிப் போய் விடும் என்பது அவர்களுக்குத் தெரியாதா?

தருமபுரி மாவட்டத்தில் நடந்தவற்றை நாங்களும் கண்டிக்கிறோம் என்று ஊரை ஏமாற்ற ஒப்பாரி வைத்துக் கொண்டு, இன்னொரு புறத்தில் ஜாதி ஒழிப்புக்கான உபாயங்களுள் ஒன்றான ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்தும் திராவிடர்  கழகத்தைச் சீண்டுவது ஏன்? இதற்குப் பெயர்தான் கடைந்தெடுத்த பார்ப்பனீயம் என்பது.

                            ---------------------------"விடுதலை” தலையங்கம் 7-12-2012

17 comments:

தமிழ் ஓவியா said...


மிளகாய் யாகமாம்!பீகார் மாநிலக் காங் கிரஸ் கட்சியின் தலை வர் அனில்குமார் முதல் அமைச்சராக ஆவதற் காக கோயிலில் மிள காய் யாகம் நடத்து கிறாராம்!

சபாஷ்! முதல் அமைச் சராக ஆவதற்கு இவ் வளவு எளிதான வழி இருப்பதை இதுவரை மற்றவர்கள் அறியாமல் போனது பரிதாபமே!

மஞ்சள் யாகம் நடத் தினால் ஜனாதிபதியாக லாம், புளி யாகம் நடத் தினால் பிரதமர் ஆக லாம்; வெல்லம் யாகம் நடத்தினால் கேபினட் அமைச்சகராகலாம்.

வெங்காயம் யாகம் நடத்தினால் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் ஆகலாம்; பெருங்காயம் யாகம் நடத்தினால் உயர்நீதி மன்ற நீதிபதியாகலாம்.. உப்பு யாகம் நடத்தி னால் குறைந்தபட்சம் உதவாக்கரை மந்திரி பதவி கிடைக்க ஏதா வது வாய்ப்பு உண்டு.

இப்படி எல்லாம் ஒரு பட்டியல் வெளியிட்டால் யாகம் நடத்துபவர் களுக்கு யோகம் அடிக் கிறதோ இல்லையோ, மிளகாய், மஞ்சள், புளி, வெல்லம், வெங்காயம், உப்பு வியாபாரிகள் பெரும் பணக்காரர்கள் ஆவது என்பது மட்டும் உறுதியோ உறுதி!

நமக்கொரு சந் தேகம்! இதுவரை இப்படி யாகம் நடத்தி இருக்கிறார்களே -அவர்களுக்கெல்லாம் கிடைத்த கிரீடங்கள் என்னென்ன என்று பட்டியல் உண்டா?

வெகு தூரம் போக வேண்டாம்; கருநாடக மாநில முதல் அமைச்ச ராக பி.ஜே.பி. யைச் சேர்ந்த பி.எஸ். எடியூ ரப்பா செய்யாத யாகமா?

அம்மணக் குண்டி யாக நிர்வாணமாகப் படுத்துக்கிடக்க நேர்த்தி செய்தாரே - பிள்ளை பிழைக்க வில்லையே!

நம் நாட்டு அரசியல் வாதிகளுக்கு தங்கள் திறமைமீது, நேர்மை மீது, கொள்கைகள்மீது, திட்டங்கள்மீது நம்பிக்கை கிடையாது.

மாறாகக் கோயில் குழவிக் கல்லில் போய் முட்டிக் கொள்வது, யாகம் நடத்துவது. இவற்றின்மூலம் தான் ஜாக்பாட் அடிக்கும் என்று நம்புகிறார்கள் என்றால், இவர்களின் யோக்கியதையை என்ன வென்று சொல் லுவது!

பகுத்தறிவு எவ் வளவு அவசியம் என்பது இப்பொழுது விளங்கு கிறதா - இல்லையா? படிப்புக்கும் பகுத்தறி வுக்கும் எவ்வித சம்பந்த மும் இல்லை என்று புரிகிறதோ!

- மயிலாடன் 7-12-2012

தமிழ் ஓவியா said...


சமூகநீதிக்கான வீரமணி விருது வி. அனுமந்தராவ் எம்.பி. அவர்களுக்கு வழங்கப்பட்டது


புதுடில்லியில் புத்தெழுச்சிமிக்க சமூகநீதி விழா! முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், பெருமக்கள் பங்கேற்பு

புதுடில்லி, டிச.6- சமூக நீதிக்கான வீரமணி விருது, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரும், சமூகநீதிப் போராளியும், காங்கிரஸ் மாநிலங் களவை உறுப்பினருமான வி. அனுமந்தராவ் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

பெரியார் பன்னாட்டு மய்யம் (Periyar Inter National) என்ற அமைப்பு அமெரிக்காவின் சிகாகோ நகரில் உருவாக்கப்பட்டது (1994).

ஆண்டுதோறும் சமூகநீதிக்கான வீரமணி விருது, சமூக நீதிக்காகப் பாடுபடும் பெரு மக்களுக்கு அளிக்கப் பட்டு வருகிறது.

முன்னாள் பிரதமர் வி.பி. சிங் தொடங்கி...

விருது பெற்றவர்கள் பெயர்: முன்னாள் பிரதமர் வி.பி. சிங், சீதாராம் கேசரி, சந்திரஜித் யாதவ், மாயாவதி, சிங்கப்பூர் சு.தெ. மூர்த்தி, ஜி.கே. மூப்பனார், நீதியரசர் பி.எஸ். சாமி, பர்மா வீரா. முனுசாமி, கலைஞர், பேரா சிரியர் ரவிவர்மகுமார், குவைத் கா.சா. செல்லபெருமாள், கோ. கருணாநிதி, சிங்கப்பூர் கலைச்செல்வன்.
நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பின் அமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஏ. அனுமந்தராவ் 2012ஆம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான வீரமணி விருது வழங்கும் விழா நேற்று (5.12.2012) இரவு 7 மணிக்கு, புதுடில்லியில் ஆந்திரபவன் அம்பேத்கர் மன்றத்தில் நடைபெற்றது.

பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் முனைவர் இலக்குவன் தமிழ் அறிமுகவுரையாற்றினார்.

பெரியார் பன்னாட்டு மய்யம் பற்றியும் மானமிகு கி.வீரமணி அவர்களின் பெயரால் இந்த விருது அளிக்கப் படுவதன் நோக்கம் குறித்தும் தம் அறிமுகவுரையில் விளக்கம் அளித்தார்.

முன்னிலை வகித்த பெருமக்கள்

மாநிலங்களவைத் துணைத் தலைவர் மாண்புமிகு பேராசிரியர் பி.ஜெ. குரியன், மத்திய அமைச்சர் மாண்புமிகு வி. நாராயணசாமி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சர்வே சத்தியநாராயணா, பலராம்நாயக், பனபகா லட்சுமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன் ஏ.ஏ. ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, ஹெலன் டேவிசன், பொன்னம் பிரபாகர் ஜி.வி. ஹர்சகுமார், எம். செகந்நாத், எஸ். ராஜையா, ஆர். சாம்பசிவராவ், மதுயங்கி கவுட், டாக்டர் ஜி. விவேக் சுரேஷ்குமார் ஷெட்கர் ரமாதேவி, ராஜகோபால் ரெட்டி, அஷ்க் அலிடாக் மற்றும் ஃபருக் உசேன் எம்.எல்.சி., ஷாஜகான் எம்.எல்.ஏ., ஆகியோர் இந்த விழாவிற்கு முன்னிலை வகித்துப் பெருமைப்படுத்தினர். 16 நாடாளு மன்ற உறுப்பினர்கள் அய்ந்து மத்திய அமைச்சர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
விருது வழங்கப்பட்டது

சமூக நீதிக்கான வீரமணி விருது - 2012 சமூக நீதிப் போராளியான ஏ. அனுமந்தராவ் அவர்களுக்கு, பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் முனைவர் இலக்குவன் தமிழ் அவர்களால் பலத்த கரவொலிக் கிடையே வழங்கப்பட்டது.

விருதுடன் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் அளித்தார்.

வாழ்த்துரைத்தோர்

மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே. குரியன் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி, மத்திய அமைச்சர் வி. நாராயணசாமி, பலராம் நாய்க், பனபகாலட்சுமி, சர்வே சத்திய நாராயணா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், வசந்தி ஸ்டான்லி, பொன்னம் பிரபாகர், ஜி.வி. ஹர்சகுமார், அஷ்க் அலிடாக் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

ஏற்புரை - ஏ. அனுமந்தராவ்

விருதினைப் பெற்றுக் கொண்ட அனுமந்தராவ் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பெரியார் கருத்துக்களை மனதிற் கொண்டு சமூகநீதித் தளத்தில் தொடர்ந்து போராடுவேன் என்றும் பெரியார் பன்னாட்டு மய்யம் சமூக நீதிக்கான வீரமணி விருதினை வழங்கிட தம்மைத் தேர்ந்தெடுத்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். தம் வாழ்நாளில் தமக்குக் கிடைத்த மிகப் பெரிய சிறப்பும் அங்கீகாரமும் என்று மேலும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

டாக்டர் சோம இளங்கோவன் நன்றி கூறிட விருது வழங்கும் விழா நிறைவுற்றது.

முன்னாள் மத்திய அமைச்சர் டி.பி. யாதவ், பி.எஸ். கிருஷ்ணன் முன்னாள் மத்திய செயலாளர் பி.எஸ். கிருஷ்ணன் அய்.ஏ.எஸ்., உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஏ. சுப்பாராவ், மற்றும் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் கோ. கருணாநிதி. செயல் தலைவர் ஜி. பார்த்தசாரதி உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணிகளில் பணியாற்றுவோர் பெரும் அளவில் விழாவில் பங்கேற்று மகிழ்ந்தனர்.

தமிழ் ஓவியா said...


டில்லி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை


புதுடில்லி, டிச.6- அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான இன்று புதுடில்லியில் அவரது சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான இன்று (1956). நாடெங்கும் அவரது நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

புதுடில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் உருவச் சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கழகத் தலைவருடன் தி.மு.க. நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டி.ஆர். பாலு, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நல். இராமச்சந்திரன் கழக வழக்கறிஞர் த. வீரசேகரன் ஆகியோரும் கழகத் தலைவருடன் இணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கழகத் தலைவரை வரவேற்று அழைத்துச் சென்றார். பல்வேறு கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அண்ணலின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம் - ஊடகங்களின் போக்கு!தமிழீழ விடுதலைக்காகப் போராடிய பல்வேறு அமைப்புகளிலிருந்து தெளிவாக தெரிவு செய்து விடுதலைப்புலிகள்தான் வென்றெடுக்கக் கூடிய திறமையுள்ள வர்கள் என்று கால் நூற்றாண்டுகளுக்கு முன்னரே அறுதியிட்டுக் கூறியவர் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் மட்டுமே.

1983இல் தமிழீழத்தில் ஏற்பட்ட கல வரம் முதல் நாள் வரை சிங்களவர்கள் போன்றே இங்குள்ள பெரும் பகுதி ஊட கங்களும் ஊ(ட)கமான செய்திகளையே கவனமாக வெளியிட்டு வருகின்றன. கார ணம் தமிழீழம் கிடைத்து விடக் கூடாது என்பதில் சிங்களவர்கள் போன்றே கவனம் செலுத்துகின்றன.

தமிழீழத்தில் ஏற்பட்ட பல்வேறு விடுதலை அமைப்புகளை இங்குள்ளவர் களும் ஆளுக்கொன்றாக ஆதரித்து அவர்களுக்கும் தங்களுக்கும் விளம்பரம் தேடிக் கொண்டுள்ளனர். ஆஸ்தான விமர்சகர்களை ஒவ்வொரு ஊடகமும் (பத்திரிகை, சின்னத்திரை) பெற்றுள்ளன. விருப்பு வெறுப்பின்றி எந்த பிரச்சினை யையும் அணுகுவதில்லை. யதார்த்தமாக யாரும் பேசுவதில்லை. இந்நிலையேகூட தமிழீழ விடுதலைப் போரில் பின்னடை வுக்குக் காரணியாக இருந்திருக்கலாம்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் சேலத்தில் நடைபெற்ற இல்வாழ்க்கை இணையேற்பு விழாவில் தமிமீழக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் தங்களுக்குப் புகலிடமே பெரியார் திடல்தான் என்று உறுதிபடக் கூறினார்.

பார்ப்பன செய்தி ஊடகம், அக்கிரகார வானொலி இருந்த காலம் முதலும், சின்னத்திரை துவங்கிய காலம் முதலும் நீதிக்கட்சிக்கும். திராவிடர் கழகத்திற்கும் உண்மையான திராவிட இயக்கத்திற்கும் எந்தவகையிலும் அவற்றின் செயல்பாடு கள் நல்லவிதமாக மக்களிடம் சென்ற டையக் கூடாது என்பதில் மிகவும் கவன மாக இருக்கின்றன.

ஆனால் நீதிக்கட்சி, திராவிடர் கழகம், தி.மு.க. ஆகியன ஊ(ட)கத்தின் ஆதரவு இன்றியே தினசரி மக்களிடையே யான பிரச்சாரத்தினால் மட்டுமே கடுமையான எதிர்ப்பையும் மீறி வளர்ச்சி பெற்றன. இரவு 9 மணிக்கு மேல் ஒலிபெருக்கி, மின்விளக்கு இல்லாமல் பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்ற இயக்கங்கள் நீதிக்கட்சி, திராவிடர் கழகம் மற்றும் தி.மு.க. மட்டுமே. இந் நிலையிலேயே இவ்வியக்கங்கள் உலகத் தில் எந்தவொரு இயக்கமும் பெறாத இமாலயச் சாதனையாக மிகப் புரட்சியாக சமூக மாற்றத்தை ஏற்படுத்தினர். ஏனைய இயக்கங்கள் ஊ(ட)க விளம்பரம் இல்லாமல் இயங்காது. இன நலனுக்குப் பேசுவதுபோல் இருக்கும் ஆனால் உண்மையில் எதிராக இருக்கும். பலனை முழுமையாக முந்திக் கொண்டு அனுப விப்பார்கள். பெற்ற பயனுக்குத் தாங்கள் தான் காரணியென்பார்கள். அதிலும் மெத்தப் படித்த(மே)தாவிகள், அரசு? ஊழியர்கள் ஆகியோர் அப்பப்பா சொல்லி மாளாது.

1983 முதல் ஈழத்தில் ஏற்பட்ட இனக் கலவரம் முதல் நாளது வரை இவர்கள் பேசும் பேச்சுக்கள் தண்ணீரில் வெண் ணெய் எடுப்பது போல இருக்கும். யதார்த்தம் என்ற பெயரில் வக்கிர புத்தியையும் ஒழுக்கக் கேடுகளையும் கொண்ட சமூகமாக இருப்பதுபோல வெளியிட்டு பெரிய திரை, சின்னத்திரை, செய்தி ஊடகம் ஆகியன சமூகப் பொறுப் பின்றியே செயல்பட்டு வருகின்றன என்பதை சமூகத்தில் அக்கறையுள்ள பொது மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

மேனாள் உச்சநீதிமன்ற நீதியரசரும், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவருமான உயர்திரு மார்க்கண்டேயகட்ஜு அவர் களும் ஊடகங்களின் செயல்பாட்டினைக் கண்டித்துள்ளார். பல இயக்கங்களுக்கு ஊடகங்கள் கொடுக்கும் விளம்பரம் தமி ழினத்திற்கும் சமூகத்திற்கும் எதி ரானதே!

சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் தமிழ்நாட்டுக்கு வந்தபோது கதவைச் சாத்திக் கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டவர் எல்லாம் சமூக நீதியை பற்றிப் பேசுவதுதான் வேடிக்கை.

ஊடகங்கள் வெளியிடும் செய்திகளில் நல்ல செய்திகளும் அவ்வப்போது வருவ துண்டு. இந்நிலையை அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள், மலத்தில் அரிசி பொறுக்குவது போல என்பார்கள்.

மத்திய, மாநில அரசுகள் பெரிய திரை, சின்னத் திரை, செய்தி ஊடகங்கள் மீது சமூகப் பொறுப்புடன் கடுமையான பார்வை செலுத்த வேண்டும். இல்லை யேல் மக்களின் கண்டனப் பார்வை அரசுகள்மீதும், ஊடகங்கள்மீதும் பாயும்.

- குயில், வேலூர்

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர் கி.வீரமணி 80ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகள்...!!


தழைத்தோங்கட்டும் மனிதநேயம் எங்கெங்கும்..!!


படிப்பறிவில் சிறந்தவர்.......!!
பகுத்தறிவினால் உயர்ந்தவர்......!!
சமூகநீதி கொள்கை கொண்டவர்....!!
சாமானியனும் சாதிக்க வழிவகுத்தவர்...!!
பெண்ணுரிமையைப் பேணிக்காப்பவர்.....!!
பெண்களுக்கென்று ஆசியாவிலேயே
முதல் கல்லூரி (பொறியியல்) அமைத்தவர்...!!
பத்து வயதில் பகுத்தறிவு பகலவன் பாதை கண்டவர்...!!
பாரெங்கும் பகுத்தறிவு பகலவன் பாதை அமைப்பவர்...!!
மூடநம்பிக்கை ஒழிக்க முழு மூச்சாய் உழைப்பவர்....!!
மனிதனை மனிதனாக மதிப்பவர்.....!!
மானுடமெங்கும் மனிதகுலம் தழைத்தோங்க...
மனிதநேய சிந்தனையை பரப்புபவர்.....!!
ஆறு அறிவு கொண்ட மனிதனின்
அறியாமையை அகற்றிட........
அல்லும் பகலும் அயராமல் உழைப்பவர்...!!
அரசியல் சட்டம் கூறும்.....
அறிவியல் சிந்தனையை வளர்ப்பவர்...!!
சாதி, மத, கடவுளுமின்றி.....
சமத்துவ சமுதாயமாக வாழ்ந்திட.....
சலிப்பில்லா பிரச்சாரம் செய்பவர்...!!
கல்லாமையை இல்லாமையாக்கி...
கல்வியறிவு பெற்றிட......
காலம் நேரம் பாராமல் பாடுபடுபவர்...!!
ஆரியத்தின் சூழ்ச்சியினை
அனு தினமும் முறியடித்து...
தமிழினம் எழுச்சிப்பெற்றிட...
எந் நாளும் போராடுபவர்.....!! யார் அவர்??
அவர் தான் வீரமணி
தமிழர்களின் தன் மானம் காக்க...
தன்னலம் கருதாமல்....
தமிழர் நலம் காக்க போராடும்....
தமிழர் தலைவர் வீரமணி
தன் எண்பதாண்டு அகவையில் எழுபதாண்டை..
பொதுத் தொண்டுக்கு அர்ப்பணித்தவர்..!!
தான் கண்டதும், கொண்டதும்
ஒரே தலைவர்!
ஒரே இயக்கம்!
ஒரே கொடி!
ஒரே கொள்கை!
என வாழும் ஒரே தலைவர்
தமிழர் தலைவர் கி.வீரமணி
அவர்களின் 80ஆவது பிறந்த நாள் விழா
வாழ்த்துகள்!! வாழ்த்துகள்!!
வாழ்க தமிழர் தலைவர் பல்லாண்டு
வளரட்டும் எல்லாம் பெரியாராண்டு!!
பாரெங்கும் பரவட்டும் பெரியார் கொள்கை- அதற்கு
தயங்காமல் தோள் கொடுப்போம் என்றென்றும்!!!
தழைத்தோங்கட்டும் மனிதநேயம் எங்கெங்கும்!!!


அன்புடன்
க.பூபாலன்-பானு
சிங்கப்பூர்.


தமிழ் ஓவியா said...

பெரும்பேறு எமக்கிங்கு வேறெதுவோ ...!

தந்தை பெரியார் தொலைநோக்கு
தந்த தனியாட் பெரும்படையே ..!
அய்யா சென்ற அடிச்சுவடு
அணுவும் மாறா அருட்கொடையே...!!
பெரியார் இயலின் திறன்விளக்கப்
பெருகிப் பாய்ந்திடும் நீரூற்றே ....!
'ஒன்பது' முதல் 'எண்பது' வரைக்கும்
ஓய்வே காணாத பூங்காற்றே .....!!
வாழ்வியல் சொல்லி வழிநடத்தும்
வளமே ! உங்கள் வாழ்நாளில்
"பிறந்தோம் ..வளர்ந்தோம் ..வாழ்கின்றோம் "
பெரும்பேறு எமக்கிங்கு வேறெதுவோ...!!


சுப.முருகானந்தம்,
மாவட்ட செயலாளர்
பகுத்தறிவாளர் கழகம்,
மதுரை மாநகர்


தமிழ் ஓவியா said...

இனமானப் பழம்


பண்பாட்டுப் படைத்தலைவர் வீரமணி - இவர்
பாதையில் திரண்டிடுவோம் ஓரணி
எண்பது வயதிலும் இளையவர் - நம்
இனமானப் பழம் பழுத்த குலையிவர்
கண்களுக்குக் கண்ணான கண்ணாடி - இவர்
கருத்தென்றும் பலபடி முன்னாடி
மண்ணுக்குத் தனிப்பெருமை சேர்ப்பவர் - நம்
மக்கள் முன்னேற வழி பார்ப்பவர்
இனமானப் போரை முன் எடுப்பவர் - நாம்
எழுந்திருக்கப் புதியவிசை கொடுப்பவர்
மனம் போன படி போகத் தடுப்பவர் - சுய
மரியாதை ஏவுகணை தொடுப்பவர்
வினவுதெரி நாள் முதலாய்ப் போராட்டம் - அன்றி
வேறில்லை கொள்கையிலோர் மாறாட்டம்
கனவுகளை நனவாக்கத் துடிப்பவர் - நாம்
கடைத்தேறத் தடைக்கற்கள் இடிப்பவர்
பண்பாட்டுப் படைத்தலைவர் வீரமணி - இவர்
பாதையில் திரண்டிடுவோம் ஓரணி
எண்பது வயதிலும் இளையவர் - நம்
இனமானப் பழம் பழுத்த குலையிவர்


- பேராசிரியர் த.பழமலய்

தமிழ் ஓவியா said...

வணக்கமும் - வாழ்த்துகளும்


அறிவாசான் வழித்தோன்றலாய்-
செயலில் முத்திரை பதித்து வரும் ஆசிரியர்க்கு
வணக்கம்
பிறந்தநாளைப்
பிளவுகளைக்
களைந்திடும் நாளாக்கியமைக்கு
நன்றி.
தர்மபுரி
தர்மம் - புரியாமல்
தடுமாறு வதுகண்டு
ஏக்கப் பெருமூச்சாய்
வாழ்த்துரைகள்.
மக்கிப் போகும் மலர்க்கொத்தும்
சால்வைக்கும் மாறாகச்
சமூகப்பயன் திட்டம் - விழா
வீட்டில் பூச்சியாகிவிடாமல்
என்றும் படிக்க
நூல்கள் - ஆங்கில மலர்-
நாளைய விளைச்சலுக்காக
இன்றைய பொழுதுகள்
என
எல்லாமும்
பாராட்டத்தக்கவை
தங்கள் பணி
மேலும் மேலும்
சிறக்க வாழ்த்தும்,
வணக்கமும்!


- பேராசிரியர் அறவேந்தன்

தமிழ் ஓவியா said...


தருமபுரியில் சந்திப்போம், தோழர்களே!


தருமபுரி - இப்பொழுது தமிழ்நாடெங்கும் பேசப்படுகிறது. வரும் ஞாயிறன்று (9.12.2012) தருமபுரியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்படவிருக்கும் ஜாதி மறுப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டுக்குப் பிறகு இந்தியத் துணைக்கண்டமே தருமபுரியைப் பற்றி பேசப் போகிறது.

தருமபுரி - அங்கே ஓர் அதர்மம் நடந்து விட்டது. ஆண்டாண்டு காலமாக பார்ப்பனீய வருணாசிரம தர்மத்தால் ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் - பார்ப்பனரல்லாதாராலேயே, அதுவும் பிற்படுத்தப்பட்ட மக்களாலேயே வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர் என்பது அதிர்ச்சி அல்லவா!

பார்ப்பனீயம் விதைத்த வருணாசிரமத்தின் துஷ்டக் குணம் இன்னும் மக்கள் மத்தியில் குடி கொண்டு இருப்பதா?

தெற்கே தந்தை பெரியாரும், வடக்கே அண்ணல் அம்பேத்கரும் பாடுபட்டதை நினைத்துப் பார்க்க வேண்டாமா? தவறு செய்தவர்கள் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கட்டும். தாம் செய்தது எவ்வளவு பெரிய இமாலயக் குற்றம் என்பதை எண்ணிப் பார்க்கட்டும்!

இந்தக் குற்றம் இறுதியாக இருக்க வேண்டும்.

2012லும் நாம் மனிதராக வாழா விட்டால் நமது பிள்ளைகள் கூட நம்மை மதிக்காது.

தருமபுரியில் கழகம் நடத்த இருக்கும் மாநாடு தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை என்பதை தாங்கிப் பிடிக்கும் தோள்களாகவே இருக்கும்.

தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் ஒடுக்கப்பட்ட மக்கள் அல்லவா? உழைப்பாளிகள் அல்லவா? சோதரர்கள் பகைவர் களாகலாமா?
தமிழர்களே, தருமபுரியில் அன்று காலையிலேயே அருமையான கருத்தரங்கம்.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை ஓங்குக என கருத்துக் குரல் கொடுக்கும் கருத்தரங்கம் அது.

மாலை பேரணி, திறந்தவெளி மாநாடு, திறந்த உள்ளத்துடன் வாருங்கள்! மாநாடு முடிவுற்று திரண்ட கருத்துக்களுடன் திரும்பலாம் வாரீர்! வாரீர்!!

ஜாதி நோயை தீர்த்துக் கட்ட கிளர்ந்தது தருமபுரி என்னும் வரலாற்றைப் படைப்போம் வாரீர்! வாரீர்!!

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


டிசம்பர் ஆறும் - ஒன்பதும்!


டிசம்பர் 6 ஒவ்வொரு ஆண்டும் வந்து வந்து போய்க் கொண்டுதானிருக்கிறது. உலகப் பேரறிஞர்களுள் ஒருவர் என்று தந்தை பெரியார் அவர்களால் மதிக்கப் பெற்றவரான அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் இன்று (1956). உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் உரிமை முரசைக் கொட்டுவதற்கான குறியீடு நாளாக இந்நாளைக் கொள்ளலாம்.

ஒவ்வொரு வகையிலும், ஒவ்வொரு நாட்டிலும் அடக்கு முறை ஆக்டோபஸ் ஆட்டம் போட்டுக் கொண்டு தானிருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை - பிறப்பின் அடிப்படையிலேயே பேதம் எனும் பார்ப்பனீயக் கொடிய நஞ்சான வருணாசிரமம் என்பது சுடுகாடு வரை துரத்தியடித்துக் கொண்டே இருக்கிறது.

இந்தச் சூழ்ச்சியின் மூலகர்த்தாவான பிர்மாவின் நெற்றியிலே பிறந்ததாக எழுதி வைத்துக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள், ஏணிப் படிக்கட்டு முறையில், தம்மால் உருவாக்கி வைக்கப்பட்டுள்ள ஜாதிய அமைப்பு முறையின் விளைவான, அடுத்தடுத்துக் கீழ்ப்படியில் நின்று கொண்டு இருப்பவர்களிடையே நடந்து கொண்டிருக்கும் அடிதடிகள், கலவரங்கள், உயிர்ப்பலிகள், பொருள் நாசங்கள் இவற்றைப் பார்த்து உள்ளத்தில் கைதட்டி ரசித்துக் கொண்டு இருக்கிறான். பலே! பலே! நம் சூழ்ச்சிப் பொறி, இன்னும் வீரியம் இழந்து விடவில்லை என்று தம் பூணூலைப் பிடித்து அடிக்கொரு முறை முத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கிறான்.

இந்தப் படிக்கட்டு ஜாதிய அமைப்பு முறைபற்றி (ழுசயனநன ஐநேளூரயடவைல) தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட சமூகப் புரட்சியாளர்கள் எத்தனை முறை இதமாக - பதமாக எடுத்துச் சொல்லியிருந்தாலும், தலைமுறை தலைமுறையாக, தம் குருதியிலும், மூளையிலும் மாட்டப்பட்டு வந்திருக்கும் விலங்குப் பிடியிலிருந்து விடுபெற முடியாத பரிதாபப் பள்ளத்தாக்கில்தான் விழுந்து கிடக்கின்றனர்.

தருமபுரி மாவட்டத்திலும், கடலூர் மாவட்டத்திலும் நடைபெற்ற எரிப்பு நிகழ்வுகள் யாருக்கிடையில்? உழைக்கும் மக்களான தாழ்த்தப்பட்டவர்கள்மீது இன்னொரு உழைக்கும் மக்களான பிற்படுத்தப் பட்டோர் தாக்குதலைத் தொடுக்கின்றனர்.

ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டாமா? அந்த இரு பிரிவினரும் உழைப்பாளி மக்கள் அல்லவா? வயல்வெளிகளில், கட்டடப் பணிகளில், சாலைப் பணிகளில், தொழிற்சாலைகளில் ஒருவருக் கொருவர் தோளோடு தோள் இணைந்து பாடுபடுவதில் சகோதரர்கள் அல்லவா!

அதை மறந்துவிட்டு, ஒரு சிறு பொறியைத் தீயாக்கி ஊர்களே பற்றி எரியும் நிலை ஏற்பட் டுள்ளதே, நியாயம்தானா?

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அந்த இளவரசன் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதால் - மூன்று ஊர்கள் எரிக்கப்பட்டுள்ளதே - அந்த இளவரசன் ஒருக்கால் பார்ப்பானாக இருந்தால் இந்தக் கோர நிகழ்வு நடந்திருக்குமா?

பிற்படுத்தப்பட்ட மக்களை வழி நடத்துவதாகக் கூறிக் கொண்டு இருக்கும் பெரிய மனிதர்கள் இதுபற்றி உரத்த முறையில் சிந்திக்க வேண்டாமா?

ஜாதிக்கு எது அடையாளம்? ஜாதிப் பெருமையைப் பேசப் பேச இன்னும் நாங்கள் சூத்திரர்கள்தான் என்ற அறிவிப்புப் பலகையை மேலும் மேலும் புதுப்பித்து நம் கழுத்தில் மாட்டிக் கொண்டு திரிகிறோம் என்றுதான் பொருள்.

தந்தை பெரியார் சொன்னாரே, சூரியப் பிரகாசம் போல சொன்னாரே நினைவு இருக்கிறதா?

பறையன் பட்டம் போகாமல், சூத்திரப் பட்டம் போகாது என்றாரே 1925ஆம் ஆண்டிலேயே. நினைவிருக்கிறதா?

பார்ப்பனர் அல்லாதார் சாஸ்திரப்படி - ஏன் - இன்றைய அரசமைப்புச் சட்டப்படியும், சூத்திரர்கள் தான் (வேசி மக்கள்தான்) என்ற நிலை தொலைய வேண்டுமானால் எல்லோரும் சேர்ந்து பறையன் பட்டத்தை ஒழித்து, ஒடுக்கப்பட்ட அந்தச் சகோ தரனை பிறவி இழிவிலிருந்து மேன்மை நிலைக்கு தூக்கிவிட நான் முந்தி - நீ முந்தி என்று போட்டிப் போடுவோம், வாருங்கள்!

இவற்றிற்கெல்லாம் வழிகாட்டும் மாநாடுதான் வரும் 9ஆம் தேதி ஞாயிறன்று தருமபுரியில் நடக்க இருக்கும் ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாடும் - கருத்தரங்கமும். வாரீர்! வாரீர்!! வாரீர்!!! 6-12-2012

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்

எழுத்தாளர் எழுதுகிறார்

தங்களை நேரில் சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்வாக இருக்கிறது. பல ஆண்டுகளாக தங்கள் மேடைப் பேச்சை கேட்டு வருகிறேன். எங்கள் ஊருக்கு தாங்கள் வந்தபோதெல்லாம் தூரத்தில் நின்று தங்கள் பேச்சு முழுவதையும் கேட்பது என் வழக்கம். தங்கள் பேச்சைக் கேட்டுவிட்டு வந்தபின் இரண்டு மூன்று நாட்கள் வரையில் தங்கள் பேச்சின் உட்கருத்தை எனக்குள் அலசுவதும் உண்டு. காலப் போக்கில் தங்கள்மீது அளப்பரிய மரியாதையுடன் இருந்து வருகிறேன்.

இந்த நேரத்தில்தான் நண்பர் அ.நா. பாலகிருஷ்ணன் உங்களை தலைவர் சந்திக்க விருப்பப்படுகிறார் என்று கூறினார். அந்த நேரத்தில் எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சியும் தொடர்ந்து தங்களை நேரில் சந்தித்த நிகழ்ச்சியும் என்னுள் நெகிழ்வை ஏற்படுத்தின.

இந்நிகழ்வைத் தொடர்ந்து தாங்கள் தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங் கிய பெரியார் களஞ்சிய தொகுப்புகள் முழுவதையும் அனுப்பியது எனக்கு பெரும் எழுச்சியை உண்டாக்கியுள்ளது.

நேற்றுடன் முதல் தொகுப்பு முழு வதையும் படித்து முடித்தேன். அதிலுள்ள சிந்தனைகளை முழுவதுமாக அலசி மனதில் பதிய வைத்துக் கொண்ட பின்தான், அடுத்த தொகுப்பை படிப்பேன். நல்ல நூல்களை எப்போது படித்தாலும் இப்படித்தான் என் செயல் இருக்கும். அத்துடன் சில குறிப்புகளை எடுப்பதும் வழக்கம். இந்நூலிலும் குறிப்புகளை எடுத்து வருகிறேன்.

நிற்க, மாத்ருபூமியின் ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் இருந்த கே.பி. கேசவமேனன் எழுதிய கடந்த காலம் என்ற வாழ்க்கை வரலாற்றின் தமிழ் மொழியாக்கத்தை ஏற்கெனவே படித்தி ருக்கிறேன். தாங்கள் அ.நா. பாலகிருஷ் ணன் அவர்களிடம் சொன்னபின்பும் ஒரு முறை படித்தேன். ஒரு பத்தியில், வைக்கம் சத்தியாகிரஹம் அகில இந்தியப் புகழ் பெற்றுவிட்டது. தமிழ்நாட்டிலிருந்து ஈ.வி. ராமசாமி நாயக்கர் வைக்கம் வந்து சத்யாக்கிரஹம் செய்து திருவனந்தபுரம் சிறைக்கு வந்தார் என்று இருக்கிறது. ஆங்கிலப் பதிப்பு எனக்குக் கிடைக்க வில்லை. மூல நூலாகிய மலையாள மொழியில் வந்த கழிஞ்ஞ காலம் புத்தகத்தைக் கேட்டு எழுதியிருக்கிறேன். புத்தகம் வந்ததும் அதில் எப்படி எழுதியிருக்கிறார் என்பதை படித்து விட்டு தங்களுக்குத் தெரிவிப்பேன்.
பெரியார் களஞ்சியம் நூல்கள் தொகுப்பை எனக்கு அனுப்பிதற்கு மிக்க நன்றி. அத்தொகுப்பை என் நூலகத்தில் முக்கிய இடத்தில் வைப்பேன். அதேபோல் என் மனம் என்னும் அலமாரியிலும் பாதுகாப்பேன்.

- குறிஞ்சிவேலன், குறிஞ்சிப்பாடி

தமிழ் ஓவியா said...

மன்றல் 2012

மன்றல் 2012 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றேன். இது மிக மிக அருமையாக ஏற்பாடு செய்யப் பட்ட இணையற்ற நிகழ்ச்சியாகும். எவ் வளவோ திருமண ஏற்பாடு நிகழ்ச்சிகள் (சுயம்வர நிகழ்ச்சிகள் போல) பலரால் நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால் மத மறுப்பு, ஜாதி மறுப்பு, மாற்றுத் திறனாளி களுக்கு, இணையரை இழந்தவர் களுக்கு, மணவிலக்குப் பெற்றவர்களுக் காக இணை தேடல் நிகழ்ச்சி நடத்துவது இதுதான் முதல் நிகழ்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மன்றல் 2012 என்பதைப் போல மன்றல் 2013- முதல் மன்றல் 2013 - இரண்டு மன்றல் 2013 - மூன்று என்று தொடர்ந்து நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன். இதைத் தொடர்ந்து சென்னையிலேயே நடத்தாமல் மாவட்டத் தலைநகர்களில் வருடம் இரண்டு அல்லது மூன்று மன்றல் நிகழ்ச்சிகளாக நடத் தினால் பலரும் பெரும் பயன் பெறுவர். ஜாதிக் கலவரங்கள் மீண்டும் முளைக்கப் பார்க்கும் இந்த காலகட்டத்தில் இது போன்ற மன்றல் நிகழ்ச்சிகள் மக்கள் மனதிலே ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்த லாம். வாழ்க மன்றல் 2012! வளர்க மன்றல் நிகழ்ச்சிகள்!

- தி. பரமசிவன், மாவட்ட தலைவர், பொள்ளாச்சி கழக மாவட்டம்

தமிழ் ஓவியா said...


ஜாதி அரசியல் வேண்டாமே: கலைஞர் கருத்து
சென்னை, டிச.6- ஜாதி அரசியல் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர்.
முரசொலியில் இன்று எழுதிய பதில்கள் வருமாறு:

கேள்வி:- கூட்டணிக்காக கையேந்தும் நிலை பா.ம.க.வுக்கு இல்லை - தேர்தலில் தனித்து போட்டி யிட தி.மு.க. தயாரா? என்றெல்லாம் டாக்டர் ராமதாஸ் கேட்டிருக் கிறாரே?

கலைஞர்:- அப்படியா? தமிழகத்தின் கடந்த கால அரசியல் சரித்திரத்தை உணர்ந்தவர்களுக்கு, கூட்டணிக்காக கையேந்தும் நிலையில் பா.ம.க. இல்லை என்பது உண்மையா என்று நன்றாகத் தெரியுமே! மத்திய அமைச்சராக இருந்த தம்பி அன்புமணியைக் கேட்டாலே உண்மைகளைச் சொல்வாரே?

கேள்வி:- பா.ம.க. மீதும் அதன் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் மீதும் சாதி வெறியைக் கிளப்பி, அவதூறு குற்றச்சாட்டு களைத் தாங்கள் சுமத்தியிருப்பதாக டாக்டர் ராமதாஸ் சொல்லி யிருக்கிறாரே? கலைஞர்:- செய்தியாளர் ஒருவர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து சாதிப் பிரச்சினைகளை கிளப்புகின்ற வகையில் பேசிக் கொண்டே இருக்கிறாரே, அதைப்பற்றி அரசு நடவடிக்கை எடுக்கவில்லையே? என்று கேட்டபோது, சாதி வெறியை கிளப்புகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதுதான் எங்களுடைய கருத்தும் வேண்டுகோளும் ஆகும் என்றுதான் பதில் அளித்திருக்கிறேன். சொன்னது என்ன?

கேள்வி கேட்ட செய்தியாளர்கள் பா.ம.க. பற்றி கேட்ட போதிலும், நான் அளித்த எந்தப் பதிலிலும் பா.ம.க. என்ற வார்த்தையையோ, டாக்டர் ராமதாஸ் என்ற பெயரையோ பயன்படுத்தவே இல்லை. வன்னியர்கள் மீது கருணாநிதிக்கு எந்த அளவுக்கு வன்மம் இருக்கிறது என்பதை உணர முடிகிறது என்றெல்லாம் பேசியிருக்கிறார் ராமதாஸ். வன்னியர்கள் உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு தனி இடஒதுக்கீடு வேண்டுமென்று இவர்கள் போராட்டம் நடத்தி, அதிலே சிலர் உயிரிழக்க காரணமாக இருந்தார்களே தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை. தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த பிறகுதான், இவரை தம்பி வீரபாண்டி ஆறுமுகம் மூலமாக நேரில் அழைத்து வரச்செய்து கலந்துரையாடி, மிகவும் பிற் படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு தி.மு.கழக ஆட்சியிலே வழங்கி 28-3-1989இல் உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக அதற்கு முந்தைய ஆண்டு மருத்துவக் கல்லூரியில் 26 மாண வர்கள் மட்டுமே வன்னியர்கள் சேர்க்கப்பட்டதற்கு மாறாக 74 ஆக உயர்ந்தது. அதுபோலவே பொறி யியல் கல்லூரிகள் தேர்வில், 88-89இல் 109 வன்னிய மாணவர் கள் என்பது 89-90இல் 292 ஆக உயர்ந்தது. போராட்டத்தில் உயிர் நீத்த 27 குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வீதம் நிதி உதவியும் செய்யப் பட்டது. அவர்களின் வாரிசுகளுக்கு குடும்ப ஓய் வூதியமாக மாதம் 1,500 ரூபாய் அனுமதிக்கப் பட்டது. இந்தத் தொகை 2006இல் மீண்டும் கழக ஆட்சியில் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.

எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார்

வன்னிய சமுதாயத்தில் ஒருபெரும் உண்மைத் தலைவராக விளங்கிய எஸ்.எஸ்.ராமசாமி படை யாச்சியார் சிலையினை சென்னையிலே அமைக்க 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கழக ஆட்சியில் வழங் கப்பட்டது. 1989ஆம் ஆண்டு மிகப் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சீர் மரபினர் நலன்களுக்காக தனி இயக்ககம் உருவாக்கப்பட்டதும் கழக ஆட்சியிலே தான். 1989 டிசம்பரில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டதும் கழக ஆட்சியிலேதான்.

2-3-2009இல் கழக ஆட்சியிலேதான் வன்னியர் பொதுச் சொத்து நல வாரியமும் அமைக்கப் பட்டது.

தமிழ் ஓவியா said...

இதையெல்லாம் டாக்டர் ராமதாஸ் வசதியாக மறந்து விட்டு அல்லது மறைத்துவிட்டு, வன்னியர் கள் மீது எனக்கு வன்மம் இருப்பதாகப் பேசியிருக் கிறார் என்றால், அவர் எந்த அளவிற்கு என் மீது வன்மம் கொண்டுள்ளார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏதோ நான் அவசர அவசரமாக செய்தி யாளர்களை அழைத்துப் பேட்டிக் கொடுத்ததாகவும் சொல்லியிருக்கிறார். என்னை வந்து பார்த்த முப்பதுக்கு மேற்பட்ட செய்தி யாளர்களுக்கே அந்த உண்மை தெரியும். 3-12-2012 அன்று மாற்றுத் திறனாளிகள் தினம் என்ற அடிப்படையில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் எனக்கு வாழ்த்துச் சொல்வதற்காக வந்திருந்தார்கள். அத்தனை பேரையும் அறைக்குள் பார்க்க இடம் இருக்காது என்பதால், அறிவாலய வாசலில் மாற்றுத் திறனாளி கள் அனைவரையும் சந்தித்தேன். அந்த நிகழ்ச் சியை தூர இருந்து செய்தி யாளர்கள் படமெடுத்துக் கொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் வேனில் ஏறுவதற்கு முன்பாக அங்கே தூரத் தில் இருந்த செய்தி யாளர்கள் என்னிடம் இரண்டே இரண்டு கேள் விகள் என்று கூறிவிட்டு, மாற்றுத் திறனாளிகளைப் பற்றித்தான் முதலில் கேட்டார்கள். வெறுப்பு அரசியலில் வேண்டாமே!

அதற்குப் பதிலளித்த பிறகு, செய்தியாளர்கள் கேட்ட கேள்வியில்தான், பா.ம.க. தலைவர் சாதீய அமைப்புகளைக் கூட்டி, தலித்களுக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அது எவ்வளவு அபாயகரமான அரசியல் என்று நீங்கள் நினைக் கிறீர்கள்? தேர்தலுக்காக பா.ம.க. செய்கிற முயற்சி என்று எடுத்துக் கொள்ளலாமா? டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து சாதிப் பிரச்சினைகளை கிளப்புகின்ற வகையில் பேசிக் கொண்டே இருக்கிறாரே, அதைப் பற்றி அரசு நடவடிக்கையும் எடுக்கவில்லை, எச்சரிக் கைக் கூடச் செய்யவில்லையே? என்று டாக்டர் ராமதாஸ் பற்றி அடுக்கடுக்காக கேள்வி களைக் கேட்டார்கள். எனவே ராமதாஸ் கோபித்துக் கொள்ள வேண்டியது செய்தியாளர்களிடம் தானே தவிர என்னிடமல்ல! திரு. டாக்டருக்கு மட்டுமல்ல; நான் எல்லோருக்கும் விடுக்கும் வேண்டுகோள் - வெறுப்பு அரசியல் வேண்டாமே!

சில்லறை வணிகம்

கேள்வி:- சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு பற்றிய பிரச்சினையில் தாங்கள் விளக்கமாக அறிக்கை கொடுத்தபிறகும், அந்நிய முதலீட்டை தி.மு.க. ஆதரிப்பதைப்போல தமிழ் நாட்டில் உள்ள மார்க்சிஸ்ட்கள்; பிரச்சாரம் செய்கிறார்களே?

கலைஞர்:- இங்கேயுள்ள மார்க்சிஸ்ட் தோழர்கள் அந்தப் பிரச்சினையைத் திசை திருப்பு வதற்காக அவ்வாறு அறிக்கை விட்ட போதிலும், அந்தக் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர், தோழர் பிரகாஷ் காரத் அவர்கள் பேசும்போது,கூந னுசயஎனைய ஆரநேவசய முயணாயபயஅ, பைபநளவ யடடல டிக வாந ஊடிபேசநளள ஞயசவல, ளை யடளடி யபயளேவ கு.னு.ஐ என்று உண்மையை வெளிப்படையாகப் பேசியது மகிழ்ச்சி தருகிறது.
நான் எனது அறிக்கையின் தொடக்கத்திலேயே தெளிவாக சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறேன். தமிழகத்திலே அப்படிப் பட்ட நிலை இல்லை என்று தமிழக முதலமைச்சரே சொல்லி விட்டதால், இங்கேயுள்ள சிறு வணிகர் களுக்கோ, விவசாயிகளுக்கோ எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என்பதால்தான், மத்தியில் நிலையான அரசு வேண்டும் என்பதை மட்டும் கருதி இந்தப் பிரச்சினையில் மத்திய அரசை தி.மு.கழகம் ஆதரிக்கும் என்று தெரிவித்திருக்கிறேன். தி.மு. கழகத்தின் இந்த நிலைப் பாட்டினைத்தான் சிலர் மாற்றி கட்சிமாச்சர்யத்தோடும், உள்நோக்கத் தோடும் திசை திருப்பிப் பேசி வருகிறார்கள். கேள்வி:- 19 மாவட்டங்களில் மருத்துவத் துறை இணை இயக்குநர்கள் பணி இடங்கள் நிரப்பப் படாததால் பணிகள் பாதிப்பு என்று குறிப்பிட்டி ருந்தீர்களே, அந்த இடங்கள் நிரப்பப் பட்டு விட்டதா?

தமிழ் ஓவியா said...

வேலைவாய்ப்புகள்

கலைஞர்:- அந்தத் துறையில் மாத்திரமல்ல; பள்ளிக் கல்வித் துறையிலும் 72 டி.இ.ஓ. பணி இடங்கள் காலியாக இருக்கின்றன. பணி ஓய்வு, நேரடி பணி நியமனம் இல்லாதது போன்ற காரணங்களால் 35க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஜூன் மாதத்திலேயே காலியாக இருந்தன. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பணி ஓய்வு பெற்றவர்கள் - 25க்கும் மேற்பட்டவர்களுக்கு மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு போன்ற காரணங்களால் காலிப் பணி இடங்கள் அதிகரித் துள்ளன. பெரம்பலூர், பெரியகுளம், உத்தமபாளை யம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, தேவ கோட்டை, பழனி, திருநெல்வேலி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணி இடங்கள் உட்பட மொத்தம் 72 காலிப் பணி இடங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது இந்தப் பணி இடங் களுக்கு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் இந்த இரண்டு பணிகளையும் பார்ப்பதால், இரண்டிலும் தொய்வு ஏற்படும். இந்தக் காலிப் பணி இடங்களை நிரப்புவ தற்குத் தகுதியான தலைமை ஆசிரியர்களின் பட்டியல் அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும், அரசில்தான் ஏதோ காரணத்தால் கால தாமதம் ஆவதாகவும் சொல்லப்படுகிறது.

தலைமையே இல்லாத அலுவலகங்கள்

கல்வித் துறையிலேதான் இந்த லட்சணம் என்றால், தமிழகத்தில் 30 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்கள் பணி இடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக 17 அலுவலகங்கள் தலைமையே இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் மொத்தம் 50 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பணி இடங் கள் உள்ளதில், 30 பணி இடங்கள் காலியாக உள் ளன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தப் பணி இடங்கள் நிரப்பப்படவில்லை. இதை யெல்லாம் நான் கூறவில்லை. இந்த ஆட்சியாளர்களை விழுந்து விழுந்து ஆதரிக்கும் தினமணி நாளிதழி லேயே வெளிவந்த செய்தியாகும்.
கேள்வி:- சாலை மறியல் செய்ததற்காக தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரைப் பிடிக்க காவல் துறை முயற்சி செய்கிறதாமே?

தமிழ் ஓவியா said...

கலைஞர்:- சாலை மறியல் செய்ததற்காக தேடியிருக்க மாட்டார்கள் - சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதற்காக தேடியிருக்கக் கூடும். அவர்கள் இப்போது எந்தக் கோடியில் இருக்கிறார்களோ, யார் கண்டது?

கேள்வி:- திருச்சி சிறைச்சாலைக்குள் செல் போன் புதையலே கிடைத்ததாமே?

கலைஞர்:- கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற சோதனையில் 36 ஆயிரம் ரூபாய் பணம், 5 செல்போன்கள், 2 சிம்கார்டுகள், கஞ்சா பொட் டலங்கள் கிடைத்ததாம். இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சோதனையில் 6 செல்போன்கள், 4 சிம்கார்டுகள், 7 பேட்டரிகள் ஒரு புதையலில் கிடைத்ததாம். இதற்கு யார் பொறுப்பேற்றுக் கொள் கிறார்களோ, தெரியவில்லை. அமைச்சர்களா; அல்லது அதிகாரி களா?

தி.மு.க. ஆட்சியில்....

கேள்வி:- தமிழ்நாட்டில் வல்லூர், வட சென்னை மற்றும் மேட்டூர் அனல் மின் நிலையங்களில் கூடுதல் மின் உற்பத்தி செய்யப்பட விருப்பதால், மின்வெட்டு மிக விரைவில் தளர்த்தப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறியிருக்கிறார்களே?
கலைஞர்:- இந்த அனல் மின் நிலையங்கள் எல்லாம் எந்த ஆட்சிக் காலத்திலே தொடங்கப் பட்ட திட்டங்கள் தெரியுமா? வல்லூர் அனல்மின் நிலையத் திட்டத்திற்கான மொத்த மதிப்பு 8 ஆயிரம் கோடி ரூபாயாகும். இந்தத் திட்டத்தின் அலகுகள் ஒன்று மற்றும் இரண்டிற்கான வேலைகள் 13-8-2007 அன்று கழக ஆட்சியில் தொடங்கப்பட்டன. அலகு மூன்றிற்கான வேலைகள் 28-7-2009 அன்று தொடங்கப்பட்டன. இதுவும் கழக ஆட்சியில்தான். மேட்டூர் அனல் மின் நிலையத்தில் - 3 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய ஒரு திட்டம் கழக ஆட்சியில் 2-5-2007இல் தொடங்கப்பட்டது; மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் புதிய திட்டத் திற்கான பணிகள் 25-6-2008இல் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டன. இதன் உற்பத்தி 25-6-2011இல் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதற் குள் பொதுத்தேர்தல் நடைபெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது.

அதைப் போலவே வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய வகையில் 2 ஆயிரத்து 475 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு திட்டம் 26-6-2007இல் தொடங் கப்பட்டது; இதுவும் கழக ஆட்சியில்தான். வட சென்னை அனல் மின் நிலையத்திலேயே மேலும் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய ஒரு திட்டம் 2 ஆயிரத்து 475 கோடி ரூபாய் மதிப்பீட் டில், 14-7-2008இல் தொடங்கப்பட்டது. இதுவும் கழக ஆட்சியில்தான். வடசென்னை (யூனிட் 1) அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் புதிய திட்டத்திற்கான அடிக்கல் கழக ஆட்சியில் 18-2-2008 தேதியில் நாட்டப்பட்டது. அதன் உற்பத்தி 17-2-2011ஆம் தேதி தொடங்கப் பட்டிருக்க வேண்டும். அங்கேயே யூனிட் 2, இரண்டாவது புதிய அனல் மின் நிலையம் 600 மெகாவாட் திட்டம் 16-8-2008இல் கழக ஆட்சியில் தொடங்கிட நட வடிக்கை எடுக்கப்பட்டது. அங்கே பணி கடந்த 15 மாதங்களில் தொய்வில்லாமல் நடந்திருந்தால், மின் உற்பத்தி ஏற்கனவே தொடங்கியிருக்கும். கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்பதால் இந்த ஆட்சியினர் முதலில் இவற்றில் அக்கறை காட்டாமல் இருந்தார்கள். இப்போது நெருக்கடி வந்ததும், அக்கறை காட்டினார்கள் என்பதுதான் உண்மை.

ஜவுளித் தொழிலின் எதிர்காலம்

கேள்வி:- 16 மணி நேர மின்வெட்டு காரணமாக தமிழகத்தின் ஜவுளித் துறையின் எதிர்காலம் இந்த ஆட்சியில் கேள்விக் குறியாக மாறியுள்ளதே?

கலைஞர்:- இந்தியாவைப் பொறுத்த வரை யில் வேளாண்மைக்கு அடுத்து அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவது ஜவுளித் தொழில். இந்திய அளவில் 1,759 பெரிய நூற்பாலைகளும், 1,326 சிறிய நூற்பாலைகளும் உள்ளன. இதிலே தமிழகத்திலே மட்டும் 917 பெரிய நூற்பாலைகளும், 1,031 சிறிய நூற்பாலைகளும் இருக்கின்றன. தமிழகத்தில் உள்ள மில்களின் நூல் உற்பத்தி மட்டும் 1,600 மில்லியன் கிலோவாகும். தற்போது 16 மணி நேரம் மின் வெட் டினை இந்த இருண்ட ஆட்சி நடைமுறைப்படுத்தி யிருப்பதால், தினமும் 100 கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதுவரை 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட் டுள்ளதாக நூற்பாலை உரிமையாளர்கள் தெரிவிக் கிறார்கள். இந்த நிலை தொடருமேயானால், பல தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயரும் நிலை இருப்ப தாகச் சொல்லப்படுகிறது. இதற்கெல்லாம் அ.தி.மு.க. அரசு என்ன செய்யப் போகிறது?

தமிழ் ஓவியா said...


வீரத்தளபதி வீரமணி


வீரத்தின் விளைநிலமே!
விவேகத்தின் சொற்றொடரே!
பேருள்ளம் கொண்ட பெருமகனே!
பெரியாரின் வாரிசே!
சமதர்ம கொள்கையுடைய சமத்துவமே!
தங்க மகனாக தரணியெல்லாம் போற்றப்படும்
தாயுள்ளம் கொண்டவரே!
எங்கள் தளபதியே! வீரமணியே!
அகவை 80 ஆனாலும்
அல்லும் பகலும் அயராது உழைத்து
அனைவருக்கும் தொண்டு செய்யும் தூயவரே!
எங்கள் அன்பு தளபதியே! வெற்றிமணியே!
சோதனைகளை சாதனையாக்கும் சுந்தர தமிழ்ச்சுடரே!
சுயமரியாதை இயக்கத்தின் சுதந்திர வீரரே!
எளியோரையும் இனியவராக்கும் குணம் கொண்டவரே!
என் உள்ளம் கவர்ந்தவரே!
தமிழ்க்காவலர் வீரமணியே!
தரணி போற்றும் நின் புகழ் என்றும்
வாழ்க வாழ்க என வாழ்த்தி
பைந்தமிழிலே பாடுகிறேன்
பாரெல்லாம் நின் புகழ் ஓங்கவே!
என்றும் அன்புடன்

(கலைமாமணி டாக்டர் வி.ஜி.சந்தோசம்)