Search This Blog

30.12.12

ஆன்மிகம் மக்களின் வளர்ச்சிக்குக் கண்டு பிடித்துக் கொடுத்தது என்ன?

அரசுக்குப் பொறுப்பில்லையா?
மாயன் காலண்டர் என்ற புழுதி அடித்து ஓய்ந்து விட்டது. நம் நாட்டு ஊடகங்கள் இப்பிரச்சினையில் நடந்துகொண்டமுறை வெட்கித் தலைகுனியத் தக்கது.

ஒரு பிரச்சினை ஓய்ந்து இன்னொரு பிரச்சினை அவர்களுக்குக் கண்டிப்பாக முதலீடு தேவைப்பட கிறது. அந்த வியாபார தந்திரத்துக்காகவே மக்களைக் குழப்புவதுபற்றிக் கவலைப்படாமல், முட்டாள்தனமான ஒன்றைக் காற்று ஊதி உயரே பறக்கச் செய்கிறார்கள்.

அறிவியலுக்கு விரோதமானது என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தும், வேண்டுமென்றே மக்களிடத்தில் கண், காது, மூக்கு வைத்துப் பரப்புவது மோசடியில்லாமல் வேறு என்னவாம்?

இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) என்ற பகுதி ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்ன என்று கூறுகிறது!

விஞ்ஞான ரீதியான அணுகுமுறை, மனிதாபிமானம் மற்றும் ஆராய்ச்சி, ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பதும், காப்பதும் அவசியம் என்று ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று வலி யுறுத்தியுள்ள நிலையில், அந்த விஞ்ஞானத்துக்கு விரோதமாக மாயன் காலண்டர் என்பது போன்ற மூடத்தனங்களைப் பரப்பும் வேலையில் ஊடகங்கள் ஈடுபடலாமா? நாய் விற்ற காசு குரைக்காது என்ற மனப்பான்மைதான் அதற்குக் காரணம் என்றால், இதைவிட நாணயமற்ற, நேர்மையற்ற ஒன்று இருக்க முடியுமா?
எதை மன்னித்தாலும் மனிதனின் அறிவை நாசப்படுத்தும் எந்தக் காரியத்தையும் மன்னிக்கவே கூடாது என்று தந்தை பெரியார் கூறும் கருத்தில் ஒளிரும் சமூகப் பொறுப்புணர்ச்சியை சற்று நினைத்துப் பார்க்கட்டும்.


மக்களுடைய அறிவு, காலம், பொருள் இவற்றைப் பாழ்படுத்துவதற்கு, சீர்குலைப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.

நியாயமாக மக்கள் நல அரசு (Welfare State) என்றால், இதுபோன்ற மூடத்தனமான - மோசடியான வற்றைப் பரப்பும் அல்லது அதற்கு ஊக்கம் கொடுக் கும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே!
லண்டன் தொலைக்காட்சியில் ருத்திராட்சம் பற்றி ஒரு விளம்பரம் ஒளிபரப்பப்பட்டது. கெட்ட ஆவிகளை ருத்திராட்சம் விரட்டும் என்று கூறப்பட்டது. எதிர்ப்பு வெடித்துக் கிளம்பவே அந்த விளம்பரம் உடனே தடுத்து நிறுத்தப்பட்டது.

இங்கு என்னடா என்றால், பொழுது விடிந்தது முதல் ஊசிப் போன சரக்கு விநியோகம்தானே நடந்துகொண்டு இருக்கிறது.

திருவண்ணாமலை தீபம் என்று கூறி டன் டன்னாக நெய்யைக் கொட்டி, ஆயிரக்கணக்கான மீட்டர் துணிகளை எரிய விடும் ஒரு நிகழ்ச்சியை நேரிடையாக இங்குள்ள தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றன என்பது எத்தகைய வெட்கக்கேடு!

ஒவ்வொரு வாரமும் ஆன்மீகச் சிறப்பிதழை நாளேடுகள் வெளியிடுகின்றன. புராணக் குப்பை களை அபத்தமானவற்றை அவற்றில் அள்ளிக் கொட்டுகின்றன.

எல்லா அக்கப்போர்களையும் எழுதிவிட்டு கடைசியில் எப்படி முடிப்பார்கள் தெரியுமா? .....என்பது அய்தீகம்..... என்பது நம்பிக்கை என்று முடிப்பார்கள்.வெளியிடுகிறவர்கள் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல் மக்களை மடையர்களாக்குவது கொலை குற்றத்தைவிட மோசமானது அல்லவா!

இராசி பலன்களை வெளியிடுவது யோக்கியமான செயலா? இப்பொழுது 2013 ஆம் ஆண்டுக்கான ஆன்மிகத் தகவல்கள் என்று சிறப்பிதழை வெளியிடு கிறார்கள்.

எத்தனை ஆயிரம் ஆண்டுகாலமாக ஆன்மிகம் இருந்து வருகிறது? காதொடிந்த ஊசி அளவுக் காவது பலன் உண்டா?

ஆன்மிகம் மக்களின் வளர்ச்சிக்குக் கண்டு பிடித்துக் கொடுத்தது என்ன? விரலை மடக்க முடியுமா?

நம்மை முட்டாளாக்கியது - சோம்பேறிகளாக் கியது - நமது பொருளையும் - பொழுதையும் பாழாக் கியது அல்லாமல் ஆன்மிகத்தால் ஏற்பட்ட நிகரப் பலன் என்ன?

மதங்களுக்கு உரிமை உண்டு, அதன் விடயங் களில் அரசு தலையிடாது என்பது பொறுப்பான நிலைப்பாடா?

இன்னும் பள்ளிப் பாடங்களில் புராணக் குப்பைகள் இடம்பெறுவது ஏன்? 

எதிர்காலம் நிகழ்கால இருபால் மாணவர்களின் கைகளில்தானே இருக்கிறது - அவர்களுக்கு அறிவைக் கொடுக்க வேண்டாமா?

அரசும், பொதுநல விரும்பிகளும், அறிவியல்வாதிகளும் இந்த வகையில் சிந்திக்கட்டும்! செயல் படட்டும்!!
                        ------------------------”விடுதலை” தலையங்கம் 29-12-2012

35 comments:

தமிழ் ஓவியா said...


தேவை - துப்பாக்கி!

பெண்களைப் பேயென்றார்கள், மாயப் பிசாசம் என்றனர்; அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று கேள்வி கேட்டார்கள்.

ஆடவன் ஒருவன் 60 ஆயிரம் மனைவிகளைக் கட்டிக் கொள்ளலாம் என்று இதிகாசங்களில் எழுதி வைத்தனர். அந்த இதிகாசங்களுக்குக் கடவுள் தன்மையைப் புகுத்தினார்கள்.

பெண்களையும், பிராமணரல்லா தாரையும் கொல்லுதல் பாவமாகாது என்று கூறுவது மனு தர்மம். (அத்தியாயம் 11 சுலோகம் 66).

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந் தனை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் (மனுதர்மம் அத்தியாயம் 9 சுலோகம் 17).

இப்படி வாழையடி வாழையாக பெண்கள் என்றால் உணர்ச்சியற்ற மரக்கட்டைகளாக ஆக்கப்பட்ட சமூகத்தில் படிப்படியாக மாற்றம் ஏற்பட்டு வந்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிடர் இயக்கம் பெண்கள் மறுமலர்ச்சிப் பாட்டையில் மகத்தான புரட்சியை, பாய்ச்சலை ஏற்படுத்தியது.

கல்வியில் ஆண்களைப் புறந் தள்ளும் வகையில் பெண்களின் முன்னேற்றம் மூக்கின்மீது விரலை வைக்கும் வகையில் வளர்ந்தது.

சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு எனும் கோரிக்கை என்பது சாதாரணமானதல்ல. பெண்கள் மத்தி யில் ஏற்பட்டு வரும் விழிப்புணர்ச்சி யின் அடையாளம் இது. அது கிடைக்கப் பெற்றிருந்தால் டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு இழைக்கப்பட்ட வன் கொடுமையைத் தொடர்ந்து நாடா ளுமன்றம் கிடுகிடுத்திருக்காதா?

ஆண்கள் வாயடைத்துப் போயி ருப்பார்களே! டில்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் திருவைகுண்டம் புனிதா, விருத்தாசலம், சேலம் பகுதிகளிலும் சிறுமிகள் வன்புணர்ச்சிக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

சேலத்திலும் இரு துயர நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன .சட்டங்கள் இருந்து பயன் என்ன?
பெண்கள் படித்திருந்தாலும் பலகீனமானவர்கள் எனும் நிலை இருக்கு மட்டும் இந்தக் கொடுமைகள் தொடரத்தான் செய்யும்.

பெண்கள் வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்ட மடிப்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள் என்று தந்தை பெரியார் அவர்கள் பெண்களுக்குக் கற்பிக்க வேண்டி யவை எவை என்ற வினாவுக்கு முத்திரை பதித்த கருத்தினையும் வெளிப்படுத்தினார்.

கும்மி, கோலாட்டங்களை ஒழித்து விட்டு, ஓடவும், குதிக்கவும், தாண்டவும் கைக்குத்து, குஸ்தி முதலியவைகளைச் சொல்லிக் கொடுத்து ஓர் ஆண் பிள்ளைக் குள்ள பலம், தைரியம், உணர்ச்சி ஆகியவை பெண்களுக்கும் உண்டாகச் செய்ய வேண்டும் என் றாரே பெரியார். (குடிஅரசு 26.4.1931).

ஒவ்வொரு பெண்ணுக்குப் பின் னாலும் ஒரு போலீஸ்காரன் போய்க் கொண்டு இருக்க முடியுமா? (அந்தப் போலீஸ்காரனும் யோக்கியமானவனாக இருக்க வேண்டும் என்பது வேறு சங்கதி!)

தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் _ தேவைப்பட்டால் தாக்கி அடிக்கும் சக்தி பெண்களுக்கு ஏற் பட்டாக வேண்டும் தந்தை பெரியார் தெரிவித்துள்ள கருத்தில் அடங்கி யுள்ள தத்துவம் அதுதான்!

தற்காப்பு ஆயுதங்கள் _ தேவைப் பட்டால் துப்பாக்கி வைத்துக் கொள்ளும் அனுமதி பெண்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று தந்தை பெரியார் வழி வந்த தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளாரே! (விடுதலை 24.12.2012)

இரண்டு இடத்தில் வம்புக்கு வந்த ஆண் பெண்ணின் துப்பாக்கிக்கு இரையானான் என்ற செய்தி வெளி வரட்டும் பார்க்கலாம்; ஆண்களின் பராக்கிரமம் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் ஓடிப் பதுங்கி விடுமே!

கண்டிப்பாக ஒவ்வொரு பள்ளி யிலும் பெண்களுக்குத் தற்காப்புக் கலையான கராத்தே பயிற்சி அளிக் கப்பட வேண்டும்.

நான்கு இடத்தில் ஆண்களுக்குப் பெண்களால் செமத்தையாக கராத்தே அடி விழுந்தது என்று தகவல் பரவட்டும். தடியன்கள் துண்டைக் காணோம், வேட்டியைக் காணோம் என்று குதிகால் பிடரியில் அடிபட ஓட்டம் எடுப்பார்களே!

இந்தப் பிரச்சினையில் இன்னொன்று கவனிக்கத்தக்கது இந்த நாட்டில் இருக்கக் கூடிய பத்திரிகை ஊடகங்களாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சி, இணையதளம் போன்ற ஊடகங்களாக இருந்தாலும் சரி, வளப்பமான பருவத்தில் இருக்கக் கூடிய இருபால் இளைஞர்களின் மூளையில் வக்கிரப் புத்தியைத் தூண்டுவனவாக இருக்கின்றன என்பதை மறுக்க முடியுமா?

தனது ஆசிரியையே கேலி செய் யும் மாணவர்கள், ஆசிரியையைக் கல்யாணம் செய்து கொள்ளும் மாணவர்கள் என்பது போன்ற காட்சிகள் சர்வ சாதாரணமாக இருக்கின்றனவே!
தொலைக்காட்சி ஒளிபரப்புக் குறை கவுன்சில் என்ற ஓர் ஆய்வு உள்ளது, அது வெளியிட்டுள்ள ஆணை கவனிக்கத்தக்கது.

"டிவி' சேனல்களில், நெடுந் தொடர்கள் என்ற பெயரில் கலாச்சார சீர்கேடு; ரியாலிட்டி ஷோ என்ற பெய ரில், பங்கேற்பவர்களை வேதனைப் படுத்துகிறது என, விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கின்றன. பொழுது போக்கு சேனல்களில், குழந் தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், குழந்தைகளின் வயதுக்கு மீறிய நடவடிக்கைகளில், ஈடுபடுவது போல் காட்சிகள் வருவது கவலையளிக்கிறது.

தமிழ் ஓவியா said...

வயதுக்கு வந்தோரின் நடவடிக் கைகளை பிரதிபலிக்கும் வகையில், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்டு, காதல் பாட்டுக்கு நடனம் ஆடுவது, பாட்டுப் பாடுவது போன் றவற்றில் பங்கேற்கச் செய்கின்றனர்.

பெரியவர்களுக்குரிய பாடலையும், நடனத்தையும் அதே போன்றே குழந்தைகள் பாடுவதும், ஆடுவதும் கவலையளிக்கிறது. இது போன்ற நிகழ்ச்சிகள் சேனல்களில் வருவதைத் தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வ லர்கள், பெண்கள் அமைப்பு சார்பில், மத்திய அரசுக்கு புகார் தெரி விக்கப்பட்டது.

இது போன்ற புகார்களைக் களைவதற்காகவும், சேனல்களில் என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பலாம் என்பதற்கான ஆலோசனை வழங்குவதற்காகவும், ஒளிபரப்பு தொடர்பான குறைகள் தீர்வு கவுன்சில் அமைக்கப்பட்டது.

அனைத்து சேனல்கள் உறுப் பினர்களாக உள்ள, இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளையின் சார்பில் அமைக் கப்பட்டது தான் இந்த கவுன்சில். இந்த கவுன்சில், அனைத்துப் பொழுது போக்கு சேனல்களுக்கும் விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது:

குழந்தைகள் தொடர்பான நிகழ்ச்சிகளில், குறிப்பாக, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், வயதுக்கு மீறிய செயல்களில், குழந்தைகள் பங்கேற் பதைத் தவிர்க்க வேண்டும். வயதுக்கு வந்தோர் சம்பந்தப்பட்ட பாடல், ஆடல் காட்சிகளை போல், பிரதிபலிக்கும் வகையில் குழந்தைகள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

காதல் பாடல், குத்துப் பாட்டு போன்றவற்றில் குழந்தைகள் ஆடு வதையோ, பாடுவதையோ அனுமதிக் கக் கூடாது. பெரியவர்களைப் போன்று, குழந்தைகள் உடைகளை அணிவது, ஒப் பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும். வயது வந்தோர் மட்டுமே பங்கேற்கக் கூடிய நிகழ்ச்சிகளில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பங்கேற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மன பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மற்றும் அவர்களின் தன்னம் பிக்கைக்கு ஊறு விளைவிக்கக் கூடிய ரியாலிட்டி ஷோக்களில், குழந்தைகள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும்.

நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந் தைகளின் படிப்புக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில், நிகழ்ச்சிகளின் தயாரிப்புகளை வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக அவர்களின் மன நலம், உடல் நலம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு, "டிவி' சேனல்களுக்கு, கவுன்சில் வேண்டுகோள் விடுத் துள்ளது. பள்ளிக்கூட நாடகங்களில் கூட சிறுமிகள் ஆடும் நடனம் என்ன?

நீல வண்ண கண்ணா வாடா நீ ஒரு முத்தம் தாடா! என்று சிறுமிகள் பாடி நடனம் ஆடுவது விரும்பத் தக்கதுதானா?

இத்தகைய வக்கிரச் சிந்தனைகளை இளம் வயதில் திணிக்கும் ஆபாசக் கலைகளுக்கு அவசியம் மூக் கணாங்கயிறு தேவையே!

அவ்வப்போது அத்தி பூத்தது போல ஒரு சில செய்திகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன.
டில்லியில் நிஷா சர்மா என்ற பெண்! திருமணத்திற்கு முதல் நாள் வரதட்சணையின் தொகையை உயர்த்தி கேட்டான் ஒரு படித்த முட்டாள். இந்தியாவின் தலைநகரிலே மணமகள் நிஷா பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். (படித்து முடிப்பதற்குள் பெற்றோர் களுக்கு என்ன அவசரமோ?)

விடிந்தால் திருமணம் அதற்குள் மணமகன் வீட்டாரின் அட்டகாசம் எல்லையை மீறுகிறது! கொண்டு வா, 12 லட்சம் பணத்தை என்று கிட்டியைக் கட்டுகிறார்கள்.

இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை மணமகள் நிஷாவுக்கு. - நேராக காவல் நிலையம் செல்லுகிறார் --_ புகார் செய்கிறார் _ விளைவு மணமகன், மணமகன் பெற்றோர்களின் கைகளில் இரும்புக் காப்பு -_ டில்லி சிறையில் தள்ளப் படுகிறார்கள்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் வித்யா என்கிற ஆனந்தி பி.எஸ்ஸி. பட்டதாரி; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்; அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜியும் பி.எஸ்.ஸி பட்டதாரி _ அவருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை. திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணச் சந்தையில் விலை எல்லாம் பேசப் பட்டது. (வரதட்சணை). நாள் நெருங்க நெருங்க அவ்வப்போது விலைவாசி ஏற்றத்திற்கேற்ப வரதட்சணைப் பொருள்களின் விலையும் உயர்த்தப்பட்டது.

அற்ப விஷயம். ஒரு செம்பின் விலை ரூ.150; 500 ரூபாய் மதிப்புள்ள செம்பு வாங்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.

இதற்கிடையே வருங்கால மரு மகளைப் பார்த்து மாமியார் உதிர்க்கும் முத்துச் சொற்கள் நீ எப்படியும் என் வீட்டுக்குத்தானே வர வேண்டும் _ பார்த்துக் கொள்கிறேன்! என்கிற மிரட்டல்கள்!

பார்த்தார் மணமகள் வித்யா _ திருமணத்திற்கு முன்பே இப்படி சொல்லம்புகள் _ இவர்கள் வீட்டில் எப்படிப் போய் நிம்மதியாக வாழ முடியும்? பாலாஜியோ தாய்ச் சொல்லைத் தட்டாத சுத்தம் சுயம் பிரகாசம்!

விடியற்காலையில் திருமணம் ஏற்பாடுகள் ஒரு பக்கம். வித்யாவின் சிந்தனைகள் வியர்த்துக் கொட்டின. அவரின் கால்கள் அசோக் நகர் காவல் நிலையத்தை நோக்கி _ புகார் மனு கொடுக்கப்பட்டது. விளைவு மணமகன் பாலாஜி, அவனின் பேராசை பிடித்த பெற்றோர்கள் சென்னை மத்திய சிறைச் சாலையில்.

அத்தோடு நிற்கவில்லை தொடர்கிறது வீராங்கனைகளின் வீர சாகசங்கள்.

தஞ்சாவூர் சீனிவாசபுரத்தில் சக்தி வேலன் -_ லதா தம்பதிகள் _ காதலித் துத் திருமணம் செய்து கொண்ட வர்கள் _ பெற்றோர்களின் எதிர்ப்பு களையும் மீறி!

16 மாதங்கள் உருண்டோடி விட்டன. மணமகனின் பெற்றோர்கள் விடாது துரத்திக் கொண்டே இருந்தனர். தன் மகனுக்கு வேறு ஒரு திருமணத்தை நடத்தியே தீருவது என்பதில் ஒரே பிடிவாதம்.

சக்திவேலனும் அந்த வலையில் விழுந்தான். பெண் பார்க்கப்பட்டு திருமணமும் நிச்சயிக்கப்பட்டது. காதலித்துக் கைபிடித்த சக்திவேலன் லதாவைப் பார்த்து உன்னை நான் எப்பொழுது திருமணம் செய்து கொண்டேன்? என்று கேட்கும் அளவுக்குப் புத்தி மாறிப் பேசினான்.

விளைவு _ தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் லதா புகார் கொடுத்தார்.

திருமண மண்டபத்திலே இருந்த சக்திவேலன் கைது செய்யப்பட்டான்.

அண்மைக் காலத்தில் பாதிக் கப்பட்ட பெண்கள் உரிமைப் புலி களாக மாறி செயல்படுவது காலத்தின் புதிய திருப்பம். இந்தத் திருப்பம் பெண்கள் மத்தியிலே புதியதோர் எழுச்சியை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை. இதனைத் தொடர்ச் சியாகக் கொண்டு செல்லுவதில் முற்போக்குச் சக்திகள் முனைப்பாகச் செயல்பட வேண்டிய கால கட்டம் இது! உள ரீதியாகப் பெண்கள் மத்தி யிலே புதியதோர் எழுச்சிப் பூகம்பம் வெடித்துக் கிளம்பும் என்பதில் அய்யமில்லை.

இப்பொழுது உடனடி தேவை பெண்களுக்குத் தற்காப்பு ஆயுதம் அது துப்பாக்கிகளாக இருந்தால் மிகச் சிறந்ததே!


-மின்சாரம்-29-12-2012

தமிழ் ஓவியா said...


செத்தான்



நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டோமானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்.
(விடுதலை, 14.3.1970)

தமிழ் ஓவியா said...


தகுதி - திறமை...?



எதைக் கொடுத்தாலும் சூத் திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே என்று கூறுவதுதான் மனுதர்மத்தின் அடிப்படைத் தத்துவம் ஆகும்.

எனவே அதனை அடியொற்றி நடக் கின்ற பார்ப்பனர்கள் சூத்திர மக் களுக்கு கல்வியைக் கொடுக்காமல் பல்லாண்டு காலமாக அவர்களை ஏய்த்து, அடக்கி, ஒடுக்கி கோலோச்சி வந்தனர்.

இத்தகைய அநீதியைக் கண்ட பெரியார் சிங்கமெனச் சிலிர்த்தெழுந்து பாமர மக்களிடையே கல்வியின் அவசியத்தையும், முக்கியத்துவத்தை யும், அதன் இன்றியமையாத் தேவை யையும் எடுத்துக் கூறி பாமர மக்களை சிந்திக்கத் தூண்டினார்.
அதன் பயனாய் விதியை நினைத்து, வெந்ததைத் தின்று வீதியில் உறங்கிக் கிடந்த பாமர மக்கள் மெல்ல மெல்ல சிந்திக்கத் தொடங்கினர். இதன்மூலம், பாமர மக்கள் மத்தியில் எழுச்சியும், நம்பிக்கையும் ஏற்பட்டு புதிய இரத்தம் பாய்ச்சியது போன்ற ஓர் உணர்வைப் பெற்றனர்.


தமிழ் ஓவியா said...

உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள், மற்ற நாட்டு மக்களைப் போன்று நம் நாட்டு மக்களும் கல்வி அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்று இரவு - பகலாக சிந்தித்ததன் விளைவால்;

தந்தை பெரியார் காரணமாகவும், கல்வி வள்ளல் காமராசர் காரியமாக வும் இருந்து செயல்பட்டதன் பயனாய் நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை பள்ளிகள் திறந்து கல்வி நீரோடையை வெள்ளம் போல் பாய்ந்தோடச் செய் தனர்.

இவ்விரு தலைவர்களின் தன்னல மற்ற, தளராத உழைப்பின் பயனாய் பாமர மக்கள் கல்வியின் அவசியத்தை யும், முக்கியத்துவத்தையும் உணர்ந்து தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க ஆர்வமுடன் முன்வந்தனர்.

ஆண்டாண்டு காலமாக இன எதிரி களால் வஞ்சிக்கப்பட்டு கல்வி - வேலை வாய்ப்பின்றி முடங்கி முடமாகிப் போன பாமர மககள், மேற்கண்ட அப்பழுக்கற்ற இரு பெரும் தலைவர்களின் பெரு முயற்சியால் கல்வியின் பயனை நுகரத் தொடங்கி அதன் மூலம் தற்போதுதான் வேலை வாய்ப்பினை எட்டியுள்ளனர்.

அதற்குள்ளாக, நாட்டின் பெரும் பான்மை மக்களாக உள்ள ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அங்கம் வகிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத பார்ப்பனர்கள், எப்படியாவது இதனை தடுத்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தகுதி - திறமை பற்றி கூப்பாடு போட ஆரம்பித்து விட்டனர்.

ஆம், அண்மையில் நாளேட்டினை நோக்கியபோது (19.11.2012) ஆசிரியர் பணிக்கு தகுதிதான் அடிப்படை! எனும் தலையங்கத்தை கண்ணுற்றேன்.

அத்தலையங்கத்தின்படி, ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதித் தேர்வுதான் திறமையைத் தீர்மானிக்கும் அளவுகோல் என்றால்; பட்டப் படிப்பு முடித்து அதன் பிறகு ஆசிரியர் பணிக்காக பயிற்சி மேற் கொண்ட மாணவர்களுக்கு கல்வித்துறை சான்றிதழ் வழங்கியது எதற்காக?

தகுதித் தேர்வு தான் அடிப்படை எனில், ஆசிரியர் பணிக்கென்று படித்த மாணாக்கர்களுக்கும், சான்றிதழ் வழங்கிய கல்வித் துறைக்கும் தகுதி இல்லை என்று பொருளா? கல்வித் துறை, ஆசிரியர் பணிக் கென்று தனியாக பட்டயப் பயிற்சி அளித்து அதில் தேர்ச்சி பெற்றவர்களைத் தானே பதிவு மூப்பு மூலம் இத்தனை ஆண்டுகாலம் ஆசிரியர் பணிக்குத் தேர்ந்தெடுத்தது.

தமிழ் ஓவியா said...

பிறகு, தற்போது எங்கிருந்து குதித் தது மேலும் ஓர் தகுதித் தேர்வு? பட்டப் படிப்பும் அதனைத் தொடர்ந்து ஆசிரியர் பட்டயப் பயிற்சியும் (பி.எட்) முடித்து பத்து அல்லது பதினைந்து வருடங்கள் ஆன நிலையில் தகுதித் தேர்வு என்று ஒன்றை அவர்கள்மீது திணித்தால், அதில் அவர்களால் எப்படி தேர்ச்சி பெற இயலும்?

சமூக நீதிக் கொள்கையை நேரடியாக எதிர்க்க முடியாத இன எதிரிகள், மறைமுகமாக தகுதித் தேர்வு என்று ஒன்றை திணிப்பதன் மூலம் சமூகநீதியை சவக்குழிக்கு அனுப்புவதற்கான சதி வலையை சன்னமாகப் பின்னுகின்ற வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
சமூகநீதி அடிப்படையில் ஆசிரியர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படாமல், சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் நோக்கத்தில் இத்தகைய தகுதித் தேர்வினை நடத்து வது என்பது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நல னுக்கு எதிராக நடத்தப்படும் அநீதி அல்லாமல் வேறு என்ன? என்று சமூக நலனில் அக்கறை கொண்ட சமூகநீதிச் சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இன உணர்வாளர்கள் ஆகியோர் கேள்வி எழுப்புகின்றனர்.

தகுதி - திறமை என்பது ஒரு மோசடிச் சொல் என்று கல்வி வள்ளல் காமராசர் கூறியதில், எவ்வளவு பொருள் பொதிந்த உண்மை அடங்கியிருக்கிறது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

பகுத்தறிவுப் பகலவன் - தந்தை பெரியாரின் பெரு முயற்சியால் கிடைக்கப் பெற்ற இடஒதுக்கீட்டின் பயனை, நாட்டின் பெரும்பான்மை மக்களாக உள்ள ஒடுக் கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் எந்த வகையிலும் அனுபவித்து விடக் கூடாது என்கின்ற நயவஞ்சக நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட இத்தகைய தகுதித் தேர்வினை அனைத்து தரப்பு மக்களும் கடுமை யாக எதிர்க்க முற்பட்டுள்ளனர்!

மேலும், இவை பெரும்பான்மை மக் களுக்கு எதிரானதும், விரோதமான தும் ஆகும் என்பதால் முற்போக்கு சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், பகுத்தறிவாளர்கள், சமூகநல ஆர்வலர் கள், ஆசிரியர் சங்கங்கள், மகளிர் நல அமைப்பினர் ஆகியோர் மத்தியில் தகுதித் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆசிரியர் பணிக்குத் தேர்ந்தெடுக் கப்படுபவர்கள் ஒழுக்கமுள்ளவர் களாக, அர்ப்பணிப்பு உணர்வு உள்ளவர் களாக, மனிதநேயம் மிக்கவர்களாக, கட்டுப்பாடு உடையவராக இருந்தாலே ஆசிரியர் பணி என்பது அறப்பணி யாக அமையும் என்பதே பெரும் பான்மை மக்களின் கருத்தாகவும், எண்ணமாகவும் உள்ளது.

ஆதலால், சமூகநீதிக்கு எதிராக வும், விரோதமாகவும் எந்த அரசு செயல்பட்டாலும் அதனை தமிழ் மண் ஏற்றுக் கொள்ளாது - அனுமதிக்காது என்பதை எடுத்துக்காட்டும் வகை யிலும்; மேலும் தகுதித் தேர்வால் ஏற்படுகின்ற இன்னல்களையும், அதில் அடங்கியுள்ள சூட்சுமத்தையும், அத னால் பெரும்பான்மை மக்களுக்கு எதி ராக இழைக்கப்படுகின்ற அநீதிகளை யும் விளக்கிடும் வகையில் இளைஞர் களும், மாணவர்களும் ஒன்றிணைநது நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை உள்ள மக்களிடையே மாபெரும் பிரச்சாரப் பயணத்தை துவக்கிட ஆயத்தமாகி விட்டனர்!

ஆகவே, தமிழக அரசு சமூக நீதிக் கண்ணோட்டத்தோடு இவ்விடயத்தில் சிறப்புக் கவனம் செலுத்தி, ஆசிரியர் பணிக்காக நடத்தப்படுகின்ற தகுதித் தேர்வினை ரத்து செய்து பெரும் பான்மை மக்களாக உள்ள ஒடுக் கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிகோல ஆவன செய்ய வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் கனிவான வேண்டுகோளாகும்.

- சீ. இலட்சுமிபதி,
தாம்பரம், சென்னை - 45

தமிழ் ஓவியா said...




அதிர்ச்சி அடைகிறேன் என்று முதல்வர் சொன்னால்மட்டும் போதாது

தமிழ்நாட்டிலும் பெண்கள்மீது ஏவுப்படும் வன்முறைக்கு முடிவு தேவை!

2012 ஆம் ஆண்டோடு இந்த அவலம் முடியவேண்டும்;

2013 இல் புதிய விடியல் பிறக்கட்டும்! பிறக்கட்டும்!!

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்


சென்னை, டிச. 29- பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் 2012 ஆம் ஆண்டோடு முற்றுப்பெற வேண்டும்; 2013 இல் புதிய விடியல் பிறக்கவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

பெண்கள்மீது ஏவப்படும் பாலியல் கொடுமை களைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று (29.12.2012) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரை யாற்றினார். அவரது உரை வருமாறு:

தேசிய அவமானம்

என்னுடைய கண்டன உரைக்கு முன்னாலே இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகளையே உலுக்கி, மிகுந்த வேதனைக்கும், துன்பத்திற்கும், துயரத்திற்கும், அவமானத்திற்கும் ஆளாக்கி இருக் கக்கூடிய நிகழ்வான, டில்லியிலே பாதிக்கப்பட்ட அந்த மருத்துவக் கல்லூரி மாணவி, சிங்கப்பூருக்கு எடுத்து செல்லப்பட்டு, அவர்கள் விடியற்காலை மரணமுற்றார் என்ற செய்தி, எவ்வளவு பெரிய முயற்சிகளை மருத்துவத் துறையிலே செய்தும்கூட, அந்த மிருகங்களுடைய அட்டகாசம் மருத்துவத் தையும் தாண்டி சென்றிருக்கிறது; மருத்துவத்தால் கூட, உலக மருத்துவ வல்லுநர்களாலும் காப்பாற்ற முடியாத அளவிற்கு, காட்டுமிராண்டித்தனத்தின் உச்சத்திற்கு சென்றிருக்கிறது என்பதை அறிய மிகுந்த வேதனை அடைவதோடு, இந்த அவமானம் ஒரு தேசிய அவமானம், நாட்டிற்கே அவமானம், பெண் குலத்தை இவ்வளவு இழிவாக நடத்தக்கூடிய ஆண் மக்கள் இந்த நாட்டில் வாழ்கிறார்களா? என்று வெளிநாட்டவர் காறித் துப்பக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய அளவிற்கு ஒரு தேசிய அவமானம் ஆகும்.

மறைவுற்ற மருத்துவக் கல்லூரி மாணவிக்கு இரங்கல்

இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிடர் கழக மகளிரணி சார்பில் பெண்கள்மீது ஏவப்படும் பாலியல் கொடுமைகளைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், டில்லியில் மருத் துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையின் காரணமாக பாதிக்கப்பட்ட நிகழ்வில், இன்று அதிகாலை சிங்கப்பூர் மருத்துவமனையில் மறைந் ததையொட்டி, ஒரு நிமிடம் அமைதி காக்கும்படி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வேண்டு கோளுக்கேற்ப தொடக்கத்தில் இரங்கல் தெரிவிக்கப் பட்டது.



ஒரு நிமிடம் அமைதி...

அந்தத் தோழியருக்கு, இவ்வளவு பெரிய கொடு மைக்கு ஆளான அவருக்கு, கண்டன உரையைத் தொடங்குவதற்கு முன்னாலே, நம் அனைவருடைய ஆழ்ந்த இரங்கலை, ஒரு நிமிடம் அமைதி காத்து, பிறகு உரையைத் தொடரலாம்.


தமிழ் ஓவியா said...

இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டிலும், சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. இதற்கு மத்திய அரசு - மாநில அரசு என்ற வேறுபாடில்லை. ஆணா திக்க சமுதாயம் - பெண்ணுரிமை பெறக்கூடிய ஒரு புதிய எழுச்சியுள்ள யுகம் இரண்டுக்குமிடையிலே ஒரு மிகப்பெரிய யுத்தம் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்ற தொடக்கம்தான் இப்போது நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

டில்லியிலே அவ்வளவு பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. அதேநேரத்திலே, அதைவிடக் கொடு மையாக, தமிழ்நாட்டிலே, நம்முடைய வழக்குரை ஞர் அருள்மொழி அவர்கள் சுட்டிக்காட்டியபடி, தூத்துக்குடியிலே மிகப்பெரிய கொடுமை! அதுவும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, பள்ளிக்கூடத்திற்குச் சென்று திரும்பிய அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க அந்த வன்கொடுமை நெஞ்சர்களுக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ அப்படி நடந்து கொள்வதற்கு என்று நமக்கே புரியவில்லை.

அதேபோல், சிதம்பரம் பகுதியிலே, விழுப்புரத் திலே, அதுபோலவே, இன்று காலையில் கூட வேலூர் திருப்பத்தூருக்குப் பக்கத்திலே நடைபெற்ற ஒரு நிகழ்வு என்று தொலைக்காட்சிகள் தொடர்ந்து செய்திகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக இருக்கிறது என்று சொல்கிற முதலமைச்சர் அவர்கள், இதைத்தான் ஒழுங்கு என்று கருதுகிறரா? இதைத்தான் சட்டம் என்று கருதுகிறாரா? அவரே பெண்ணினத்தினுடைய பிரதிநிதியாக இருந்து, தாய்மார்கள் எல்லாம் அவருக்கு வாக்களித்து, அவரை முதலமைச்சராக அமர வைத்திருக்கின்ற ஒரு நிலையிலே,

அவர்கள் மற்ற இடங்களைப் பார்த்து அதிர்ச்சி யடைகிறேன் என்று சொல்வதைவிட, இங்கே நடைபெறுவதைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்தால் மட்டும் போதாது; அவர்கள் கையிலே சட்டம் இருக்கிறது; காவல்துறை இருக்கிறது; காவல்துறை யிலே மிகப்பெரிய அளவிலே பெண் அதிகாரிகள் இருக்கிறார்கள். இதையும் தாண்டி கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், சில வாரங்களுக்கு முன்னாலே, காவல்துறை பெண் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு சில நிகழ்வுகள்; பெண்கள் வளர்ந்தால், முன்னேறினால், அதை சகிக்க முடியாத ஆணாதிக்கம் இன்றைக்கும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம்!

பெரியாருடைய சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம், பிறவியினால் பேதம் இருக்கக் கூடாது என்பதாகும். அந்தப் பிறவியினால் பேதம் இருக்கக் கூடாது என்பது - ஒன்று சாதி, இன்னொரு ஆண் - பெண் என்ற பேதம்.

தமிழ் ஓவியா said...

அந்த வகையிலே இப் பொழுது சட்டங்கள் மாறி வந்தாலும்கூட, மீண்டும் மீண்டும் இப்படியெல் லாம் ஒழுக்கக்கேடுகள், கலாச்சாரச் சீரழிவுகள் நடைபெறுகின்றன. உட னடியாக நடவடிக்கை எடுத்துவிடுவோம் என்ற உறுதிமொழி சொன்னால் மட்டும் போதாது.

நோய்நாடி நோய் முதல் நாடவேண்டும்; இப்படி ஒரு கலாச்சாரத்தைப் பரப் புகின்ற ஊடகங்களாக இருந்தாலும், தொலைக் காட்சியாக இருந்தாலும், அது பெரிய திரை, சின்னத் திரையாக இருந்தாலும் சரி அல்லது ஆட்சித் திரை யாக இருந்தாலும் சரி, எந்தத் திரையாக இருந்தாலும் மகளிருக்கு பாது காப்புத் தேவை. தவறு யார் செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள், இதில் கட்சியில்லை, ஜாதியில்லை, மதம் இல்லை என்று சொல்லக்கூடிய ஒரு நல்ல போக்கு, நடுநிலைப் போக்கு, கடுமையான போக்கு நடைபெற்றாகவேண்டும்.

தமிழ் ஓவியா said...

நம்முடைய நாட்டில் நடைபெற்ற இந்த அவலத் தைக் கண்டு சிங்கப்பூர் மக்கள் சிரிக்கிறார்கள்.

இப்படி ஒரு அவலம் இந்தியாவில் நடை பெறலாமா என்று பேட்டி கொடுக்கிறார்கள். இது தேசிய அவமானமாகும்.

எனவே, ஆட்சியாளர்களுக்குச் சொல்கிறோம், மத்திய - மாநில ஆட்சியாளர்களுக்குச் சொல் கிறோம், இதை வெறும் 144 உத்தரவு போட்டு அடக்கிவிட முடியாது. அல்லது சட்டங்களால் தடை செய்து அடக்கிவிட முடியாது. அல்லது ஊடகங்களை மிரட்டி நீங்கள் உண்மையைச் சொன்னால், உங்கள்மீது வழக்குபோடுவோம் என்று அடக்கிவிட முடியாது. மிகப்பெரிய புரட்சியாக வெடிக்கும்!

அப்படி அடக்க, அடக்க இது கொதிகலன்போல உள்வாங்கி இருக்கும். ஒரு நாள் மிகப்பெரிய புரட்சியாக வெடித்தால், அன்றைக்கு யாராலும் அதை சமாளிக்க முடியாத ஒரு காலகட்டம் வரும்.

எனவேதான், அந்த நிலைக்கு மக்களை விரட்டாமல், ஆத்திரத்தின் உச்சகட்டத்திற்குப் போகாமல், மத்திய - மாநில அரசுகள், குறிப்பாக ஆளுகின்றவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு சமாதானத்தைத் தேடி அலையக்கூடாது. உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறியவேண்டும், அதுதான் மிக முக்கியம். ஏதோ, குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிட்டோம் என்று சில சோளக் கொல்லை பொம்மைகளைக் கொண்டுவந்து நிறுத்தக்கூடாது.

முடிவல்ல, தொடக்கம் இது!

அந்த வகையிலே, இன்று நடைபெறக்கூடிய ஆர்ப்பாட்டம் இருக்கிறதே, இது முடிவல்ல; தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலே இது ஒரு தொடக்கம். எல்லோருக்கும் இந்த உணர்வு இருக்கிறது; இதற்குக் கட்சியில்லை, ஜாதியில்லை, மதமில்லை. இன்னுங்கேட்டால், மேல்ஜாதிப் பெண்களாக இருந்தாலும் சரி, கீழ்ஜாதிப் பெண்களாக இருந் தாலும் சரி பெண்கள் பெண்கள்தான். அவர்க ளுடைய உரிமைகள் காப்பாற்றப்படவேண்டும். அவர்கள் மனிதர்கள். அதுதான் மிக முக்கியம். இந்த மனிதநேயப் பார்வைதான் நமக்கு மிக முக்கியம். அந்த அடிப்படையிலே, எந்த ஜாதி என்பது முக்கியமல்ல; எந்தக் குலம் என்பது முக்கியமல்ல; எந்தக் கட்சி என்பது முக்கியமல்ல; எந்த மாநிலம் என்பதும் முக்கியமல்ல; மனிதர்களாக என்பதுதான் முக்கியம். அதுதான் தந்தை பெரியாருடைய தத்துவம். ஆகவே, அந்தத் தத்துவத்தை மய்யப் படுத்தி, இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை முதற்கண் தொடங்குகிறோம்.

2013 இல் புதிய விடிவு பிறக்கட்டும்

2012 ஆம் ஆண்டோடு இது முடியட்டும்; 2013 ஆம் ஆண்டு புதிதாக தொடங்குகிறது என்று நினைக்காதீர்கள்; எங்கள் சிந்தனையிலே புதிய விடியல் பிறக்கிறது; பெண்களுக்குப் புதிய விடியல் பிறக்கவேண்டும்; பெண்ணுரிமைக்குப் பாதுகாப்பு இருக்கவேண்டும் என்ற உணர்வினைக் காட்டுங்கள் ஆட்சியாளர்களே!

அமைதியாகச் சொல்வதால், அவர்கள் ஏதோ சாந்தமாக விட்டார்கள்; சரி செய்துவிட்டோம் என்று தயவு செய்து தப்புக் கணக்குப் போடா தீர்கள். எரிமலைகள் வெடிப்பதற்கு முன்னால்கூட அமைதி யாகத்தான் இருக்கும்; கடல்கூட சீறுவதற்கு முன்னால்கூட அமை தியாகத்தான் இருக்கும். அதை நன்றாக உணர்ந்து நடந்து கொள்ளுங்கள், நடந்து கொள்ளுங்கள் என்று ஆட்சியாளர்களுக்குச் சொல்லுகிறோம்.

ஆண்களே, இது பெண்கள் பிரச்சினையல்ல;

மீண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் எங்கும் நடை பெறக்கூடாது; யாருக்கும் நடைபெறக்கூடாது. ஆண்களே, இது பெண்கள் பிரச்சினை என்று நினைக்காதீர்கள்; பெண்களைவிட அவமானப்பட வேண்டியவர்கள் ஆண்கள்தான் இதில், என்பது தான் மிக முக்கியமானது.

எனவே, இந்தத் தேசிய அவமானத்தை துடைக்க, அனைவரும் கைகோர்த்து நில்லுங்கள்; ஒத்த குரல் எழுப்புங்கள்; இதில் சுருதிபேதம் வேண்டாம்; கருத்து மாறுபாடுகள் வேண்டாம்; கொள்கை வேறுபாடுகள் குறுக்கிட வேண்டாம்.

முன்னேறிய நாடு என்றால்...

ஒரே நோக்கம் மனிதநேயம், சுயமரியாதை, மறுவாழ்வு, பொதுவாழ்வு, பெண்ணுரிமை எங்கே நிலைக்கிறதோ, அந்த நாடுதான் முன்னேறிய நாடு என்று அதற்குப் பொருள்.
ஏனென்றால், அவர்தான் தாய், அவர்தான் மகள், அவர்தான் நம் தங்கை, அவர்தான் நம் தமக்கை என்பதை மறந்துவிடாதீர்கள், மறந்துவிடாதீர்கள் என்று கூறி முடிக்கிறேன்.
வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!
நன்றி வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

தரிசனம் கிடையாதோ!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி நாட்களில் சொர்க்க வாசல் தரிசனம் கிடைக்காமல் 60 ஆயிரம் பக்தர்கள் அவதிக்கு ஆளாகினர்.

இதில் அவதி எங்கிருந்து வந்தது. நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! என்று வழக்கமான பல்லவியைப் பாடவேண்டியதுதானே!

அந்தத் திருப்பதி குத்துக்கல்லான ஏழுமலை யான்தான் ஆனாலும் - நம்மை நாடிவந்த பக்தர்களை இப்படி நாமம் சாத்தலாமா? (நாமக் கடவுள் தானே!) சிறப்புத் தரிசனம் கொடுத் திருக்க வேண்டாமா?

இதெல்லாம் இருக்கட்டும் தமிழக முதல் அமைச்சர் முதல் திருப்பதி, சிறீரங்கம், சென்னை பார்த்தசாரதி கோயில் வரை - சொர்க்கவாசல் புகுந்தவர்கள் எல்லாம் - எப்படி திரும்பி வந்தார் கள் வீட்டுக்கு? அவர்கள்தான் சொர்க்கவாசலில் நுழைந்து சொர்க்க லோகம் சென்று விட்டனரே!

தன்னையும் ஏமாற்றிக் கொண்டு - கடவுளை யும் ஏமாற்றுவதால்தான் இந்தக் கடவுளுக்கு நாமம் சின்னத்தை நெற்றியில் சாத்தி முன்னறிவிப்பு கொடுத்துள்ளார்களோ!

தமிழ் ஓவியா said...

வேலை வாய்ப்பு

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோர் 70 லட்சம். சரி இருக்கட்டும்; இவர்களைப் பதிவு செய்யும் வேலை வாய்ப்பு அலுவலகங்களிலேயே (Employment Exchange Office) 400 அலுவலர் இடங்கள் காலியாம்.

எப்படி இருக்கு? கல்வி கட்டாயமாக்கப்படு வதோடு வேலை வாய்ப்பு என்பதையும் அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று திராவிடர் கழகம் வலியுறுத்தி வருகிறது - பல மாநாடுகளையும் பேரணிகளையும் கூட நடத்தி வருகிறது.

மாநில அரசுகளாக இருந்தாலும் சரி மத்திய அரசாக இருந்தாலும் சரி. இதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வேலையற்றோர் எண்ணிக்கை பெருக, பெருக நாட்டில் வன்முறைகளும், கிளர்ச்சி களும், சமூகச் சீர்கேடான நிகழ்வுகளும் அன் றாடம் பிரபலம் ஆகிக் கொண்டேதானிருக்கும்.

விசுநாதா வேலை கொடு! என்ற வசனம் நினைவில் இருக்கிறதா?

தமிழ் ஓவியா said...

வழக்குரைஞர் கிரிக்கெட்

நம் ஊர்களில் கிட்டிப்புள் என்று ஒரு விளை யாட்டை நம் இளைஞர்கள் விளையாடிய காலம் ஒன்று உண்டு, அதனை உருட்டல் புரட்டல் செய்து கிரிக் கெட்டாக்கி விட்டனர். அது முழுமையும் பார்ப்பனர் களுக்கான பணம் காய்ச்சி மரமாகிவிட்டதால், அதற்கு ஏகப்பட்ட விளம்பரங்கள். சினிமா நடிகர்கள் கிரிக்கெட் ஆடுவார்கள், இப்பொழுது வழக்குரை ஞர்கள் கிரிக்கெட்டாம்.

நடிகர்கள் சடுகுடு (கபடி) வழக்குரைஞர்கள் சடுகுடு, மருத்துவர்கள் கால்பந்து என்று ஏன் நடத்தப்படுவதில்லை. காரணம் இவற்றில் பார்ப் பனர்கள் இல்லை (அதாவது உண்மையான உடலு ழைப்புகளில் அவர்கள் நுழைய மாட்டார்களே!)

இடதுசாரி நண்பர்கள் எதிலும் வர்க்கப்பார்வை எடுப்பார்கள், இந்தியாவைப் பொருத்தவரையில் எதிலும் வர்ணப் பார்வை என்ற ஒன்று இருக்கிறது. ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் அந்த வர்ணம் என்ன என்பது துல்லியமாக விளங்கும்.

தமிழ் ஓவியா said...


ஆரியம் வேறு திராவிடம் வேறே!


திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்:

ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள்.

தமிழர்களே! தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே! பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று.

கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி?

தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம்.

தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

குடிஅரசு - கட்டுரை - 29.11.1947

தமிழ் ஓவியா said...


தோழன் (மாத வெளியீடு)


ஆசிரியர்: ஏ.பி.ஜனார்த்தனம் எம்.ஏ.


தோழர் ஏ.பி ஜனார்த்தனம் அவர்களைத் திராவிடத் தோழர்கள் டார்பிடோ ஜனார்த்தனம் என்றே பேரன்போடு அழைப்பார்கள். காரணம் அவர் பேச்சிலே அனல் கக்கும், அறிவொளி வீசும். இதே போக்கில் எழுதுவதிலும் வல்லவர் என்பதைத் தோழர் மெய்ப்படுத்தித் காட்டியிருக்கின்றார். தோழனி லுள்ள தனிச் சிறப்பு, திராவிடத் தெலுங்கரின் கருத்தையும் திராவிடத் தமிழருக்கு வழங்குவது என்பதையறியும் போது நாம் பெருமகிழ்ச்சி கொள்ளுகின்றோம். பெரியாரவர்கள் விரும்புவது போல, தோழன் திராவிடர்களுக்கு உண்மை ஆருயிர்த் தோழனாக மிளிர்ந்து வருவான் என்பது உணர்ந்து, தங்களின் தோழனுக்குப் பேராதரவு செய்து ஆதரிக்க வேண்டுவது திராவிடர்களின் கடமை எனவும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

குடிஅரசு - மதிப்புரை - 06.12.1947
(குறிப்பு: ஏ.பி.ஜனார்த்தனம் அவர்களின் பிறந்தநாள் 25.12.1919)

தமிழ் ஓவியா said...


தண்டச்சோத்துப் பிண்டங்களுக்கு வெட்டிச் சோறு

சீரழிந்த திருவாங்கூரில் சாரமில்லாத முறை ஜபம் தொடங்கி விட்டதாம். இது ஆறு வருஷத்திற்கு ஒரு தடவையாக, 1751ஆம் ஆண்டிலிருந்து மார்த்தாண்டவர்மன் ஆட்சி முதல் நடந்து வருகிறதாம்.

8 நாட்கள் வீதம் 7 தடவை 56 நாட்களுக்கு இந்த முறை ஜபம், பிற்பகலில் சஹஸ்ரநாம ஜபமும், இரவில் ஜல ஜபமும் 48 நாட்களுக்கு நடக்கும்; இதற்கு நாலாபக்கத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான நம்பூதிரிகள் வந்திருக்கிறார்கள் என்று பத்திரிகைச் செய்தி கூறுகிறது.

திருவாங்கூரின் இந்தப் போக்கு பரம்பரையானது என்பதும், நீண்ட காலமாக ஆரியமே அங்கு ஆண்டு வருகிறது என்பதும் திராவிடத் தமிழர்கள் அறிந்த உண்மை.

நாட்டு மக்களுக்குப் போதுமான உணவுப் பொருளைத் தர முடியாத திருவாங்கூர் மன்னர்; ஒருவருக்கு இரண்டரை அவுன்ஸ் அரிசியே தருகின்ற இந்த மண்டலாதிபதி, ஆயிரக்கணக்கான நம்பூதிரிகளைக் கூட்டி குறைந்தது 2 மாதத்திற்குத் தண்டச்சோறு அளிக்கின்றார் என்றால், அதுவும் இவ்வாறு நடப்பது மக்களின் பொறுப்பாட்சிக்குப் பிறகும் என்றால், இதற்குப் பெயர் பொறுப்பாட்சியா? மானங்கெட்டு நாட்டின் நிலையறியாது மதியை நம்பூதிரி கைகளில் ஒப்பித்துவிட்டு, மக்களுங்கூட இந்த அக்கிரமத்தை அனுமதித்துக் கொண்டிருக்கலாமா? பொறுப்பாட்சிக் கிளர்ச்சி என்ற புனிதப் போரை நடத்தியவர்கள் இதை நியாயமானது, நாணயமானது, மானமுள்ளது என்றே கருதுகிறார்களா? இந்தச் செயலைத் திருவிதாங்கூர் தமிழ்நாட்டு காங்கிரசும் ஆதரிக்கிறதா? அக்கிரமம்! அக்கிரமம்!

குடிஅரசு - துணுக்கு - 29.11.1947

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் மட்டும் என்ன வாழ்கிறது?


நாளும் பெண்கள் மீதான வன்கொடுமை அரங்கேற்றம்!
அரசுக்கு உயர்நீதிமன்றம் தாக்கீது!

Image - திருமண உதவி திட்ட நிதி உயர்நீதிமன்றம் உத்தரவு

வேலூர், டிச. 29- தூத்துக்குடி மாவட்டம், திருவை குண்டத்தில் 13 வயது சிறுமி புனிதா வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஈரம் காய்வ தற்குள் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட மற்றொரு சம்பவம் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடந் திருக்கின்றது.

அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடி, நாகை, விருத் தாசலம், சிதம்பரம் என காமுகர்களின் களியாட்டத் தில் தமிழகம் திளைத்திருக்கிறது. அடுத்து என்ன நடக்குமோ என்று தாய்மார்கள், பெற்றோர்கள் செய்வதறியாது தவித்திருக்கிறார்கள்.

டெல்லியில் 23 வயது மருத்துவ மாணவி பேருந் தினுள் 6 கயவர்களால் சின்னாபின்னமாக்கப்பட்டு தற்போது சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிர் இழந்தார் என்பது வேதனை! இச்சம்பவத்தை இந்தியாவில் அனைத்து மாநில பத்திரிகைகளும், பெரும் தலைப்பிட்டு செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அதேபோல் தமிழகத் திலும் அனைத்து நாளேடுகளும், ஊடகங்களும் இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றன.

ஆனால் தமிழகத்தில், தினமும் ஒரு வன் கொடுமை - கொலை நடக்கிறது என்று சொல்லக் கூடிய அளவிற்கு, கடந்த வெள்ளிக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டத்தில் 7 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி - சிறுமி - பள்ளிக்குச் செல்லும் வழியில் மனித மிருகத்தால் வேட்டையாடப்பட்டு, சின்னாபின்னமாகி - கொலை செய்யப்பட்டார். இந்த பரிதாப சம்ப வத்தை தமிழகத்தில் எத்தனை ஊடகங்கள், பத்திரி கைகள் வெளியிட்டுள்ளன என்றால் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றது.

தமிழ் ஓவியா said...


சிறுமி புனிதாவின் மரணத்திற்கு அ.தி.மு.க. அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். இவ்வன் கொடு மையைக் கண்டித்து தி.மு.க. சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எஸ்.பி.சற் குணபாண்டியன் தலைமையில் கவிஞர் கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாலியல் கொடுமை யால் பலியான மாணவி புனிதாவின் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில், ரூபாய் 2 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

விருத்தாசலம் அருகே

அச்சம்பவத்தின் ஈரம் காய்வதற்குள், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே இளம் பெண் ஒருவர், தான் மணக்க இருக்கும் முறைப் பைய னுடன் மணிமுத்தாறு ஆற்றங்கரை ஓரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தபொழுது, 6 பேர் அப்பெண்னை வன்புணர்ச்சி செய்தனர். அவர் விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் நாகையில் வேலைக்குச் சென்று திரும்பிய இளம் பெண் விமலா கெடுக்கப்பட்டு கொலை செய்து ரயிலில் பிணத்தை வீசி எறிந்து உள்ளனர்.
மேலும் சிதம்பரம் மஞ்சகுப்பம் கிராமத்தில் 21 வயது இளம் பெண் சந்தியா பாலியல் பலத்காரத் திற்குள்ளாகி படுகொலை செய்யப்பட்டு இருப்ப தோடு நேற்று தூத்துக்குடி யில் 27 வயது பெண் மழைக்காக ஒரு வீட்டில் ஒதுங்கிய பொழுது பாலியல் வன்கொடுமைக்காளாகியுள்ளார்.

இச்சம்பவங்களில் இருந்து தமிழகம் மீள்வ தற்குள் மற்றொரு சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை குலுக்கியுள்ளது. ஆனால் தமிழக முதல மைச்சரோ இச்சம்ப வங்கள் எதுவும் நடக்காததைப் போலவே நடந்து கொண்டு வருகிறார்.

ஜெயலலிதா ஆட்சியில் ஒன்றியங்கள், நகரங்கள், பேரூர்கள், ஊராட்சிகளில் மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்றே சொல்ல முடி யாது. மின்சாரம் உள்ள நேரத்தைவிட, மின்சாரம் இல்லாத நேரம் தான் மிகவும் அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் 16 மணி நேரம், 18 மணி நேரம் என்றெல்லாம் மின் வெட்டு நிலவுகிறது. இந்த மின்வெட்டு சம்பவத்தால் தான் காயத்ரி என்ற 9 வயதே கொண்ட சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் கிராமத் தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (30), இரும்பு தள வாடங்கள் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் காயத்திரி (9), அதே கிராமத்தில் உள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் இரவு 8 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே சென்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வழக்கம்போல மின் தடை ஆனது.

இந்நிலையில், வீட்டருகே விளையாடிக் கொண் டிருந்த காயத்திரி திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நண்பர்கள் உறவினர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடினர்.

நீண்ட நேரமாகியும் காணாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த குபேந்திரராவ் என்பவருக்குச் சொந்தமான வாழைத் தோட்டத்தில் வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப் பட்டு கிடந்தது.

அதற்கு மத்தியில் மாணவியை சிறுமி காயத் திரியை மர்ம நபர்கள் கொடூரமாக சீரழித்து, கொலை செய்யப் பட்டிருந்தது தெரிய வந்தது. ஆட்கள் வரும் சத்தம் கேட்டதும் மர்ம நபர்கள் ஓடி விட்டனர்.

இந்த தகவல் அந்த கிராமத்தில் மட்டுமின்றி அக்கம் பக்கம் உள்ள கிராமங்களிலும் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து திருப்பத்தூர் காவல் துறை அதிகாரி நாகராஜ், எஸ்.ஐ. ஜெயலட்சுமி ஆகியோர் அந்தக் கிராமத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கற்பழித்து, கொலை செய்யப் பட்ட மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டுள்ளது. இந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஆண்டியப் பனூர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.நல்லதம்பி கூறுகையில்,

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்ப னூர் கிராமத்தில் 2000 மக்கள் தொகை உள்ள ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கோவிலில் பவுர்ணமி பூஜை செய்வது வழக்கமான ஒன்று. அதை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணி அளவில் சிறுவர்கள் சிறுமிகள் பிரசாதம் வாங்கி கொண்டு வரும்போது மின்சாரம் நிறுத்தப்பட்டதை பயன்படுத்தி கொண்ட ஒரு சில கயவர்கள் அந்த வழியாக வந்த சிறுமி காயத்திரியை தூக்கிச் சென்று குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சமூக விரோதிகளை காவல் துறை கைது செய்யாமல் மூடி மறைக்க நினைக்கிறது.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கொடியவர்களை போலீசார் உட னடியாக கைது செய்தாக வேண்டும், இல்லையேல் ஒன்றியக் கழகத்தின் சார்பில் தலைமைக் கழகத்தின் அனுமதி பெற்று போராட்டம் நடத்துவோம் என கூறினார்.

உயர்நீதிமன்றம் தாக்கீது

தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் குறித்து தமிழக அரசு வரும் 4ம் தேதிக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் தொடரும் பாலியல் வன்முறைச் சம்பவங்களை சென்னை உயர்நீதி மன்றம் தாமாகவே முன் வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில், தூத்துக்குடி மாவட்டம் கிளாக் குளம், சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவ மனை, விருத்தாசலம் என தொட ரும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பாக காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர் பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் கோரப் பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வெங்கட் ராமன், வாசுகி ஆகியோரடங்கிய டிவிஷன் பெஞ்ச், இந்த வழக்கு தொடர்பாக வரும் 4ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


குஷ்பு புடவையும் குமுறும் கடவுளும்!


கிருஷ்ணன்:
கோபியர் கொஞ்சி
நாளாச்சு!
அவதாரம்
தரித்தகாலம்
அழிஞ்சே போச்சு!
குஷ்பு புடவையில்
நான் தான்!
நினைக்கையிலே
தேன்தான்!
இராமன்:
மயக்கம்
தீரலையோ?
மன்மதா!
பக்தனெல்லாம்
படைதிரட்டி
நிற்கிறான்!
ஏகபத்தினி விரதன்
ராமன்! -குஷ்பு
தேகம் சுத்தும்
சேலையிலா?
விலாநோக
விம்முகிறான்!
விவரங்கெட்ட
பக்தன்.
தூணிலும்
துரும்பிலும்
இருக்குமெனக்கு
குஷ்பு
துணியிலிருக்க
உரிமை இல்லையா?
ஆதாரத்தோடு ராமன் கேட்க
ஆத்திரத்தோடு
நுழைந்தார்
ஆஞ்சநேயர்!
ஆஞ்சநேயன்:
அடே ராமா!
ஆண்டு அனுபவித்த
அதிர்ஷ்டகட்டைகள்
நீங்கள்!
அடியேன் கதை
அப்படியா?
அடித்தது அதிர்ஷ்டம்
என்றிருந்தேன்!
கட்டும் புடவையில்
கட்டை பிரம்மச்சாரியா?
கழட்டு என்றே
கரைகின்றான்!
அவன்மட்டும்
அடிஷனல் வைத்து
அலைகின்றான்!
ராமன்-கிருஷ்ணன்-
ஆஞ்சசேயன் மூவரும்:
பறிக்காதே!பறிக்காதே!!
ஆண்டவன் உரிமையை
பறிக்காதே!
எங்கள் உரிமை!
எங்கள் உரிமை!!
தூணில் இருப்பதும்
துணியில் இருப்பதும்
எங்கள் உரிமை!
எங்கள் உரிமை!!
பறிக்காதே!பறிக்காதே!!
ஆண்டவன் உரிமையை
பறிக்காதே!


(கி.தளபதிராஜ்)

தமிழ் ஓவியா said...


சொர்க்கமா நரகமா?


தன்னை எதிர்த்து பார்லிமெண்டிற்குப் போட்டியிடும் ஒருவர் நடத்தும் தேர்தல் கூட்டம் ஒன்றிற்கு ஆப்ரகாம் லிங்கன் சென்றிருந்தார். மேடையில் பேசிக் கொண்டிருந்த பாதிரியார் லிங்கனைக் கண்டதும் அவரை அவமானப்படுத்த வேண்டும் என எண்ணினார். லிங்கன், சொர்க்கம் _ நரகம் ஆகியவை மீது நம்பிக்கை அற்றவர் என்பது பாதிரி யாருக்குத் தெரியுமாகையால், இந்தச் சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சொர்க்கத்திற்குப் போக விரும்புபவர்கள் அனை வரும் தயவு செய்து எழுந்து நிற்கவும் என்றார். ஆப்ரகாமைத் தவிர, எல்லோரும் எழுந்து நின்றார்கள். மறுபடியும் பாதிரியார் சொன்னார். நரகத்துக்குப் போக விரும்பாதவர்கள் எழுந்து நிற்கவும் என்றார். இப்பொழுதும் லிங்கனைத் தவிர்த்து எல்லோரும் எழுந்து நின்றார்கள். உடனே பாதிரியார் லிங்கனைப் பார்த்துக் கேட்டார். நீங்கள் எங்கே போக விரும்புகிறீர்கள்? லிங்கன் சொன்னார்.

நான் பார்லிமெண்டிற்குப் போக விரும்புகிறேன் பாதிரியார் வாயடைத்துப் போனார்.

தமிழ் ஓவியா said...


ஜாதி மறுப்புத் திருமணம் போற்றும் கவிதை


லண்டன் ரயிலில் தமிழ்க் கவிதை


லண்டன் சுரங்க இரயில்களில் ஒரு புதுமை உலகின் மிகச் சிறந்த கவிதை வரிகள் சிலவற்றை மட்டும் தேர்ந் தெடுத்து விளம்பரங்களுக்கு இடையில் அவ்வப்போது வெளியிடுகிறார்கள். இது பயணிப்பவர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றுள்ளது. 2001இல் முதன் முதலில் குறுந்தொகை வரிகள் காதலன் - காதலியின் உள்ளங்கள் ஒன்று சேருவதற்கு இலக்கிய உலகத் திலே மிகச் சிறந்த உவமை என்று தேர்வுக் குழுவினர் தேர்வு செய்து தமிழிலும் ஆங்கில மொழி பெயர்ப்பை ஆங்கிலத்திலிருந்தும் எழுதி வைத்தனர். இந்த ஆங்கில மொழி பெயர்ப்பு ஏ.கே. இராமானுஜத்தினுடையது. 2001இல் எழுதப்பட்ட ஆறு கவிதைகளில் ஆசியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை வரிகள் குறுந்தொகை வரிகள் மட்டுமே.


தமிழ் ஓவியா said...

அந்த வரிகள் 2000 ஆண்டுகளுக்கு முன் காதலர் இருவர் மனமும் கலந்த நிலையை அற்புதமாக எடுத்துக் கூறும் செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்னும் குறுந்தொகையினுடையவை. செம்மண் தரையில் மழை பெய்கையில் அம் மண்ணின் மீது விழுந்த மழை நீர் செந்நிறமாக மாறுவதையும் அன்பு நெஞ்சங்கள் இரண்டும் ஒன்று கலந்ததற்கு எடுத்துக்காட்டாகக் கூறும் அருமையான வரிகள்.

இதைக் குறித்து விசாரித்தபோது இக்கவிதை எப்படி அங்கே சேர்ந்தது தேர்வுக் குழுவினரை ஈர்த்தது என்பது குறித்த தகவலையும் அறிய முடிந்தது.

கல்கியின் -ஆம்! கல்கி கிருஷ்ண மூர்த்தியின் பெயர்த்தி கவுரிராம் நாராயணன் என்பவர் லண்டன் பயணித்த போது, இரயிலில் பாடல் களைத் தேர்வு செய்யும் குழுவைச் சேர்ந்த சொனெய்க் என்னும் பெண் மணியிடம் இப்பாடல் வரிகளைக் குறிப்பிட்டாராம். இவ்வரிகளைக் கேட்ட அப்பெண்மணி, கலப்பு மணத்தை ஊக்குவிக்கும், சாதி, மத, இன வேறுபாடு பாராமல் அன்பு கொண்ட நெஞ்சங்கள் மட்டும் கலப்பதை இரசித்து அதை வெளியிட ஏற்பாடு செய்திருக்கிறார்.

அத்தோடு ஏ.கே. இராமானுஜம் அவர்களின் துணைவியார் ருக்மணி இரமானுஜம் வரைந்த ஒரு கோலமும் அது ஒரு அழகுடைய டிசைனாக அங்கு அலங்கரித்திருக்கிறது.

பாரம்பரியக் கோலங்கள் என்ற தொகுப்பில் இடம் பெற்று இருந்த கோலம் தான் அது.
ஓவிய எழுத்துகளில் தீட்டப்பட்ட அக்கவிதை வரிகள்.

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல

அன்புடைய நெஞ்சந்தாம் கலந்தனவே இந்தக் கவிதை வரிகளின் பொருள் நானும் நீயும் யார் யாரோ என் அன்னை யாரோ, உன்னைப் பெற்ற தாயும் யாரோ. என் தந்தைக்கும், உன் தந்தைக்கும் எம்முறையில் உறவு? அதாவது மாமன் மச்சான், சொந்தம் என்கிற உறவு இல்லை. நாம்தான் எப்படி ஒருவரை ஒருவர் சந்தித்தோம்? ஆனால் நம் இருவரின் உள்ளங்கள் இரண்டும் செம்மண்ணும் அதன்மீது விழுந்த மழை நீரும் போல இரண்டறக் கலந்து விட்ட விந்தையை எவ்வாறு எடுத்துரைப்பது?

இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு ‘Redearth and Pouring Rain’ என்னும் தொடராகும். இதில் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா?

நம் குறுந்தொகை வரிகள் ஆங்கில இலக்கியத்தில் புகுந்து புறப்பட்டு விட்டன. 2001லேயே வெளியான ஆங்கில நாவலின் தலைப்பே Red Earth And pouring Rain’ என்பதுதான்.

காதல் திருமணம், சாதி மறுப்புத் திருமணம் இரண்டாயிரம் ஆண்டு களாகத் தமிழ் மண்ணில் இருந்து வருவது என்பதற்குக் குறுந்தொகை இன்றும் எடுத்துக்காட்டு.
எனவே இனி நடைபெறும் மன்றல் விழாக்களில் இந்தக் குறுந்தொகை வரிகளை இடம் பெறச் செய்வோம்.

கடைசியாக ஒரு வரி இவ்வளவு அற்புதமான கவிதை வரிகளை 2000 ஆண்டுகளுக்கு முன் தீட்டிய அந்தக் கவிஞரின் பெயர் தெரியவில்லை என்பதுதான். பெயர் தெரியாத அக் கவிஞனைப் பாடல் வரிகளைக் கொண்டே செம்புலப் பெயல் நீரார் என்னும் நீண்ட பெயரால் குறிப் பிட்டனர். நாம் கலப்பு மணம் எனும் சாதி மறுப்புத் திருமணங்களில் செம்புலப் பெயல் நீராரை நினைப் போம். தந்தை பெரியாருடன் சேர்த்து.

- முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்

தமிழ் ஓவியா said...


இராமாயண, மகாபாரதக் கதைகள் இன்றைய சூழ்நிலையில் நடைபெற்றால் எழும் சட்டச் சிக்கல்கள்


எந்த ஒரு சமுதாயமும். அது நடைமுறையில் பின்பற்றி வரும் முற்போக்குச் சட்ட விதிகளுக்கு முற்றிலும் மாறுபட்ட செயல்கள் அடங்கிய தொகுப்புகளை வாழ்வியல் இலக்கியங்களாகப் போற்றி வளர்த்தால் அந்தச் சமுதாய வளர்ச்சி தேக்க நிலை அடைந்து விடும். இந்தியக் குடியரசு நாட்டில் நிலவும் நிலை அத்தகையதே இராமாயண மும், மகாபாரதமும் வாழ்வியல் இலக்கியங்களாகக் கருதப் பெற்று, ஆட்சிக் கட்டிலில் அமர்ந் திருக்கும் ஆதிக்க சக்திகளால் முழு மூச்சுடன் வேகமாகப் பரப்பப்பட்டு வருகின்றன. ஆட்சி நடத்துவோர், சட்ட விதி களை மாற்றி முற்போக்கு எண் ணங்களுக்குத் தாங்கள் உரியவர்கள் என்று பறைசாற்றிக் கொள்ளும் அதே வேளையில், மூடநம்பிக்கைகள் மிகுந்த மனித நேயத்திற்கு மாறுபட்ட செயல்கள் சமுதாயத்தால் குற்றமுடையன எனக் கருதப் பெறும் நிகழ்ச்சிகள் அடங்கிய புராணங் களைப் பரப்புவது ஒன்றுக் கொன்று முரண்பட்ட, மக்களைத் திசை திருப்பும் செயலே ஆகும். இந்திய அரசியல் சட்டம், குற்றவியல் தீங்கி யல், சட்டங்களுக்கு மாறுபட்ட நிகழ்ச்சிகள் அடங்கிய இக்கதையைக் காணும் கேட்கும் நமது குழந்தைகள் சட்ட விதிகளுக்கு முழுமையான மரியாதை அளிப்பவர்களாக ஒழுக்க முள்ளவர்களாக எப்படி வளர முடியும்? இராமாயண மகாபாரத நிகழ்ச்சிகள் இன்றைய சூழ்நிலையில் நடைபெற்றால் சட்டத்தின் பார்வையில் அவை எவ்வாறு இருக்கும் என்பதற்கு இதோ சில எடுத்துக்காட்டுகள்.

1. இந்திய அரசியல் சட்டம் அடிப் படைக் கடமையைக் குறிப்பிடும் பொழுது, ஒவ்வொரு குடிமகனும் மனிதநேயம். அறிவியற் மனப் பான்மை எதையும் கேள்விக் குட்படுத்தி ஆயும் பாங்கு ஆகிய பண்புகளை வளர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. பறவைகள், மிருகங்கள் பேசுவதும், சில பிரிவி னருக்கு சில உரிமைகள் மறுக்கப் படுவதும் ஆகிய அறிவியலுக்குப் பொருந்தாத, மனிதநேய எதிர்ப்பு நிகழ்ச்சி இராமாயண, மகாபாரதக் கதைகளில் ஏராளம் உண்டு.

2. அரசியல் சட்டவிதி 15 (4) சமு தாயத்தில் சமூக, கல்வி நிலைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி நிலையங்களிலும் வேலை வாய்ப்புத் துறைகளிலும் இடஒதுக்கீடு அளிக் கப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. மகாபாரதத்தில் சத்திரிய குலத்தில் பிறக்காதவன் என்பதால் ஏகலைவன் கற்ற வித்தையை பயன்படுத்த முடியாத வாறு அவன் கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்ட துரோணர் சட்டப்படி தண்டனைக்கு ஆளாக வேண்டியவர்.

3. இருதார மணம் இந்துத் திரு மணச் சட்டத்தின்படி செல்லத்தக்க தல்ல. இராமாயணத்தில் தசரதனுக் குப் பல மனைவியரும், மகா பாரதத்தில் கிருட்டிணன், அர்ச் சுனன் ஆகியோருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரும் இருந்தனர்.

4. இளம்வயதில் பெண்களைக் கிண்டல் கேலி செய்த கண்ணன் இந்திய குற்றவியல் சட்டத்தின்படி தண்டிக்கத் தகுந்தவன் Eveteasing சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் கொடுஞ் செயலாகும்.

5. சூர்ப்ப நகையை அவமானப் படுத்தி அங்கத்திற்கு பங்கம் விளை வித்த இராமனும் இலட்சுமணனும் இந்திய குற்றவியல் சட்டத்தின்படி தண்டனைக்குரியவர்கள்.

6. சந்தேகத்தின் காரணமாக ஆய்வுக்குள்ளாக்கப்பட்டு காட்டிற்கு அனுப்பப்பட்ட சீதை திருமணச் சட்டத்தின்படி இராமனிடமிருந்து விவாகரத்து பெற்றிருக்க முடியும்.

7. மகாபாரதத்தில் பீஷ்மர் திருமணம் செய்து கொள்ள முடி யாதவாறு சந்தனு (பீஷ்மரின் தந்தை) மன்னனிடம் ஒப்பந்தம் கேட்ட போது Void Agreements ஆனபடியால் இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872.23(3) பிரிவின்படி செல்லத்தக்க தல்ல.

8. பகவத் கீதைக்குப் பொருந்தக் கூடிய சட்டப்பிரிவு இந்திய குற்ற வியல் சட்டம் 320 பிரிவு (கொலை செய்தல்)

9. தற்போதைய சூழ்நிலையில் துரவுபதை பம்பாய் சிவப்பு விளக்கு பகுதியைத் தவிர வேறெங்கிருந்தா லும் அய்வருக்கு மனைவியாய் இருந்த காரணத்திற்காக விபச்சாரத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டியவளே.

மேலே குறிப்பிட்டவை உதாரணத் திற்குச் சில. உள்ளே நுழைந்தால் சட்ட முரண்பாட்டு செயல்கள் பல உண்டு.

நேரு நூற்றாண்டு விழா நினைவுகள்

ஆரியருக்கும் திராவிடருக்கும் நடைபெற்ற சண்டைகளின் அடிப் படையை வைத்து எழுதப்பட்டது தான் இராமாயணம்.

- _ -சவகர்லால் நேரு,

தமிழ் ஓவியா said...


கடவுள்கள் இருக்க பயமேன்?


திக்குவாய் குறை தீர்க்கும் திருப்பந்துறை முருகப் பெருமான் - (மதுரை மணி, 10.11.2007)
கணித அறிவை மேம்படுத்த வேண்டுமா? இன்னம்பூர் இறைவனை நாடுங்கள் - (குங்குமம், 3.5.2007)

குழந்தைப் பேறு அருள மருதூர் சிறீநவநீதி இருக்கிறார் (நெல்லை)

திருமணம் கை கூட வைக்கும் திருவீழிமிழலை அழகில மாமுலையம்மை (திருவாரூர்) - (தினத்தந்தி, இலவச இணைப்பு, 27.7.2010)

திருமணம் கை கூடும் திருநீர்மலை பெருமாள் (சென்னைக்கு தென்மேற்கே) - (ராணி, 16.5.2010)

வழக்குகளில் வெற்றி பெற கொல்லங்குடி வெட்டுடையாள் காளி கோயில் (சிவகங்கை) - (ராணி - 7.3.2010)

வீடு கட்ட உதவும் கடவுள் திருப்புகமூர் அக்னீஸ்வரர் (குங்குமம், 16.7.2009)

இழந்த பொருளைப் பெற வேண்டுமா? தஞ்ச புரீஸ்வரர் கோயில் (திருவையாறு அருகில்) - (தினத்தந்தி, ஆன்மீகப் பகுதி, 26.2.2010)

கல்யாணம் நடக்க வேண்டுமா? கடன் தீர வேண்டுமா? வழக்கில் வெற்றி பெற வேண்டுமா? திக்குவாய் தீர வேண் டுமா? குழந்தைப் பேறுவேண்டுமா? வீடு கட்ட வேண்டுமா? இவைகளுக்கெல் லாம் ஒவ்வொரு கோயிலும், அதில் குடி கொண்டிருக்கும் சாமியும் துணை இருப்பது உண்மையானால் நாட்டில் அரசாங்கமே தேவைப்படாதே!

பக்தர்கள் உண்மையில் இவற்றை நம்பினால் அரசிடம் மனு போடுவார்களா? அரசாங்கத்தின் 108 எண்ணை கூப்பிடுவார்களா?

யாரை ஏமாற்ற இந்த விளம்பரப் பட்டியல்?

மக்களுக்கு தன்னம்பிக்கையையும், செயல் திறமையையும், பகுத்தறிவையும் ஊட்ட வேண்டியது.

தமிழ் ஓவியா said...


அய்யாவின் செல்லப்பிள்ளை!


அய்யாவின் அடிச்சுவட்டில் அகலாப் பார்வை;
ஆரவாரம் இல்லாத எளிமைப் பண்பு;
பொய்யான சாதிமதம் பொசுக்கும் ஆற்றல்;
பொழுதெல்லாம் இனமான எண்ணம்; இஃதைச்
செய்யாத தில்லையென ஒதுக்காத் தொண்டு;
சிறப்புகளைச் சுமப்பதற்குத் தயங்கும் உள்ளம்;
மெய்யாக இவர்போன்றார் இல்லை என்றே
மேதினிக்கு வீரமணி வாய்த்தார் நன்றே!

பெரியார்இன் றில்லையெனும் நினைப்பால் பார்ப்பான்
பொய்ப்பலகை எழுத்துகளில் பிராம ணாளைத்
தெரியுமாறு சிறீரங்கக் கடையில் வைத்தான்
திரண்டனரே கழகத்தார் தலைவர் பின்னால்!
புரியாமல் புலிவாலைத் தட்டி விட்டுப்
பொந்துக்குள் பதுங்கிவிட்ட எலிகள் போன்றே
புரிநுலார் போயொளிந்தார்; கடையும் காலி!
போகவில்லை இனமானம் தலைவ ராலே!

தத்தெடுத்த பெரியாரின் செல்லப் பிள்ளை
தமிழர்தம் தலைவராக உயர்ந்த வாக்குப்
பத்தடுத்த எண்பதாமே! வாழ்த்து வோம்நாம்!
பண்பாடும் பகுத்தறிவும் தலைவர் பெற்ற
சொத்தெனவே சொல்கின்றார் சான்றோர் எல்லாம்
சோர்வின்றிப் பணிபுரிந்த பெரியார் இட்ட
வித்தெனவே வீரமணி விளங்கு கின்றார்
விரிவானக் கதிரவனாய் இனத்தைக் காக்க!

- குறள்மொழி

தமிழ் ஓவியா said...

பேராசிரியரின் பேருள்ளம்!


என்னுடைய செல்பேசி ஒலித்தது. எடுத்தேன். மறுபுறம் பேராசிரியரின் உடன்பிறப்பு பேராசிரியர் க. பால கிருஷ்ணன் பேசினார்.

அய்யா நான் பேராசிரியர் தம்பி பேசுகிறேன். நீங்கள் எழுதிய திருக்குறள் ஆய்வு நூல்கள் இரண்டும் மிகச் சிறப்பாக இருப்பதாக பேராசிரியர் கேள்வியுற்று உடனே அந்த இரு நூல்களும் எனக்கு வேண்டும் என்று நூல்களின் பெயரையும், உங்கள் பெய ரையும் தானே கைப்பட எழுதி என் னிடம் கொடுத்தார்கள். எனக்கு உடனே நூல்கள் வேண்டும் என் றார்கள்.

நூல் ஆசிரியர் வீட்டிலே எத்தனைபடிகள் வைத்திருத்தாலும் இருக்காது என்ற வழமைப்படி என்னிடமும் ஒரு படி கூட இல்லை. அய்யா, திடலில் கிடைக்கும். நான் தாம்பரத்தில் இருக்கிறேன். நீங்கள் யாரையாவது அனுப்பிப் பெற்று, பேராசிரியரிடம் சேர்த்து விடுங்கள் என்றேன். அவரும் விரைந்து செயல்பட்டு, திடலில் நூல்களைப் பெற்று பேராசிரியரிடம் கொடுத்தார்.

நான்கு நாள்கள் கழித்து 28.12.2012 அன்று இரவு பேராசிரியருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூற (முதல் நாளே) அவரது அண்ணாநகர் இல்லத்திற்குச் சென்றேன். அங்கிருந்த தோழர்கள் என்னை அடையாளங்கண்டு, உடனே அழைத்துச் சென்றனர்.

பேராசிரியர் சற்று நேரத்திற்கெல் லாம் மருத்துவமனைக்குச் சென்று விட்டு வீட்டிற்குள் வரவேற்பறைக்கு வந்தார். நானும் எனது மகன் மருத்துவர் அறிவுக்கரசனும் அய்யாவிற்கு வணக்கம் தெரிவித்தோம்.

என்னைக் கண்டதும் அய்யாவிற்கு அளவில்லாத மகிழ்ச்சி எங்கு தங்கியிருக்கிறீர்கள்! என்றபடி அருகில் வந்தார்கள்.

அய்யா தாம்பரத்திற்கு வந்து தங்கி இரு மாதங்கள் ஆகின்றன என்றேன்.

தமிழ் ஓவியா said...

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திராவிடன் புத்தக நிலையத்தில், எனது நூல்களான அர்த்தமற்ற இந்து மதம் ஆரியத்தால் வீழ்ந்தோம் தப்புத் தாளங்கள், சம்பிரதாயங்கள் சரியா? ஆகிய நூல்களை வாங்கிச் சென்று அய்யாவிற்கு அளித்து, சால்வை அணி வித்து நீண்ட காலம் வாழ வேண்டும்!! என்ற விருப்பத்தைத் தெரிவித்தேன்.

நூல்களைப் பார்த்த பேராசிரியர் ஆரியத்தால் வீழ்ந்தோம் நூலைப் பார்த்தவுடன் பெருமையோடு சிரித்தார். இறுதியாக அர்த்தமற்ற இந்து மதத்தைப் பார்த்து விட்டு எங்கே முதல்பாகம்? என்றார்கள். அப்போது தான் பார்த்தேன், இரண்டும் இரண்டாவது பாகமாக வாங்கி வந்துவிட்டேன். முதல் பாகம் இல்லை.

91ஆவது அகவையிலும் அவர் எவ்வளவு விழிப்போடு இருக்கிறார்; நாம் இந்த வயதில் எவ்வளவு கவனக் குறைவாக இருக்கிறோம்! என்று எண்ணும்போது, பெரியாரிடம் நேரடியாக வளர்ந்தவர்களின் ஆற் றலை, கூர்மையை என்னால் வியப் போடு எண்ணிப் பார்க்க முடிந்தது.

வசந்தன்! உங்களை நேரில் வந்து வாழ்த்த எனக்கு உடல் நிலை வாய்ப்பளிக்கவில்லை எனவே, வந்த இடத்திலே உங்களை வாழ்த்திப் பாராட்டுகிறேன் என்று சொல்லி, நான் அவருக்கு அணிவித்த சால் வையையே எனக்கு அகமகிழ்வோடு, அளவற்ற பற்றோடு அணிவித்து, பல்லாண்டுகள் நலமுடன் வாழ்ந்து பணியாற்ற வேண்டும்! என்று வாழ்த் தியவாறு கைகளைப் பாசத்தோடு பற்றினார்.

அவர் தகுதியென்ன! உயர்வு என்ன! அறிவு என்ன! புகழ் எவ்வளவு! வயது என்ன! அவர் பேரனான என்னை நேரில் வந்து வாழ்த்த விரும்புகிறேன்! என்றார் என்றால் அவரது பேருள்ளத்தை என்னென்று வியப்பது!

எனது திருக்குறள் ஆய்வுகளைப் படித்த அவருக்கு, என்மீது அத்தகுதி ஈடுபாட்டை அந்நூல்கள் ஏற்படுத்தி யுள்ளன. 24 வயதில் கண்ணதாசனைப் புறங்காணச் செய்தவன் என்பதால் அது அவரை பெருமை கொள்ளச் செய்துள்ளது. குணா போன்ற குள்ள நரிகளை, இன எதிரிகளை சம்மட்டி கொண்டு தாக்கும் ஆற்றல் அவரை அன்பு கொள்ள செய்துள்ளது.

எதிரில் நின்ற என் மகனை அழைத்தார். வா வந்து என் பக்கத்தில் நில்! என்றார்கள். எனக்கு அவர் சால்வை போர்த்தியதை படம் எடுக்கச் சொன்னார்கள். அதன் பிறகு பேரா சிரியர் அவர்களிடம் விடை பெற்றேன்.

அடுத்த 10 நிமிடங்களில் அங்கிருந்த தோழர்கள் என்னிடம் சற்றுமுன் எடுக்கப்பட்ட புகைப்படப் படியைக் கொடுத்தார்கள்!

எனது வாழ் நாளில் நான் பெற்ற இரண்டாவது மிகப் பெரிய விருது இது. முதல் விருது, தமிழர் தலைவர் ஆசிரியர் அளித்த விருது கோரா அவர்களுடைய மகனார் இலவணன் அவர்களிடம், எமரால்டு கோபால கிருஷ்ணன் முன்னிலையில் 1998ல், ஆசிரியர் அவர்கள் என்னை அறிமுகம் செய்தபோது,

இவர் தோழர் மஞ்சை வசந்தன். சிறந்த எழுத்தாளர்; நல்ல பேச்சாளர்; ஆற்றல் மிகு சிந்தனையாளர்; திராவிட இயக்கத்தின் அழியா சொத்து (கிமீ) என்றார். ஆசிரியர் வாயால் நெஞ்சார எனக்கு வழங்கிய இதைவிடவா உயரிய விருது உலகில் எனக்குக் கிடைத்து விடப் போகிறது?

தமிழர் தலைவர் பிறந்த நாளுக்கு முதல்நாள் நான் உடல் நலம் குன்றி யிருந்த நிலையில், என்னை நன்றாகக் கவனித்து நலம் காக்க வேண்டும் என்று மருத்துவர் சொக்கலிங்கம் அவர்களிடம் கேட்டுக் கொண்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் அய்யா கவிஞர் அவர்கள் மஞ்சை வசந்தன் இயக்கத்தின் சொத்து; காத்து, பாதுகாப்பது உங்கள் கடமை! என்றார்கள்.

முகஸ்துதி விரும்பாத கவிஞரிடம் இத்தகு பெருமை பெறுவதும் அரிது. அதுவும் எனக்குக் கிடைத்தது!

இந்த பெரியவர்கள் மூவரும் எனக்குக் கொடுத்த பெருமை, காட்டிய பற்று பாசம் தந்தை பெரியாரே எனக்குத் தந்த பாசமாக, பரிசாக கருதி நிறைவு பெற்றேன்; ஊக்கம் பெற்றேன்.
பெரியார் குடும்பம் எப்படிப்பட்ட பாசக் குடும்பம்! கொள்கை வழி கட்டுண்ட கண்ணியக் குடும்பம்! இந்த மன நிறைவை எந்த அரசியல் பதவி அளிக்கும்? வாழ்க பெரியார்! குடும்பம்! வளர்க அதன் அளவு!


மஞ்சை வசந்தன்

தமிழ் ஓவியா said...


செவிச்செல்வம் - சிரிக்க ஒரு துணுக்கு
எழுத்துரு அளவு Larger Font Smaller Font


நாம் ஒன்றைக் கூறினால், பேசினால் அது ஒருவர் காது வசதி அவரை அடைய வேண்டும். அதுவே பேச்சின் மூலம் அவையும் பயன் - செந்தாமரையும், செல்லப்பனும் நல்ல இல்லறம் நடத்தும் இணையர். இருவருக்கும் இடையே நேசிப்புக்கும் குறையேது மில்லை.

ஒரு நாள் செல்லப்பன் செந்தாமரை யிடம் கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் வரவில்லை செல்லப்பன் சிறிது வருத்தப்பட்டார். இணையருக்கு கேட்கும் திறனில் குறைபாடு ஏற்பட்டிருக்குமோ என்ற அய்யம் தோன்றியது. கேட்கும் திறனில் குறைபாடு இருந்தால் துவக்க நிலையில் சரி செய்து விடுவது நல்லது என்று கருதி காது மருத்துவர் ஆலோசனை பெறச் சென்றார். இணையரின் சந்தேகத்துக்குரிய குறை பாட்டின் தன்மையை முழுமையாக அறிந்து கொள்ள செல்லப்பன் ஒரு எளிமை யான சோதனையை வீட்டில் நடத்தி பிறகு தன்னைப் பார்க்கும்படிக் கூறினார். மருத் துவர் கூறிய எளிய சோதனை வருமாறு:

இணையர் இருக்கும் இடத்திலிருந்து 40 அடி தூரத்திலிருந்து, வழக்கமாக பேசும் குரலில் பேசுங்கள் அவர்கள் பதில் வருகிறதா என்று பாருங்கள். இல்லையென்றால் 30 அடியிலும், அடுத்து 20 அடியிலு சோதனை செய்யுங்கள். அதிலும் பயனில்லை என்றால் 10 அடி தூரத் திலிருந்து பேசுங்கள். அதற்கும் பதில் வரவில்லையென்றால், அவர்கள் பதில் கிடைக்கும் தூரத்திலிருந்து பேசி எவ்வளவு தூரம் என்று அறிந்து கொள்ளுங்கள். செல்லப்பனுக்கு மிகவும் திருப்தி அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட் செய்ய வேண்டும் என்று செலவு ஏதும் வைக்காமல், வீட்டு வைத்தியம் போல் ஒரு எளிய வழிமுறையைக் கூறினாரே என்று மகிழ்ந்தார்.

மறுநாள் மாலை நேரம் கடந்து, இணையர் சமையல் கட்டில், இரவுக் கான உணவை சமைக்கும் பணியில் இருந்தார். செல்லப்பன் 40 அடி தூரத்தில் இருப்பதை உறுதி செய்து கொண்டார். அந்த இடத்திலிருந்து, கண்ணு! ராத்திரிக்கு என்ன சமையல்? என்று கேட்டார். பதில் இல்லை. 30 அடி தூரத்தில், நின்றார். மீண்டும் அந்த கேள்வியைக் கேட்டார். ஏமாற்றம்தான். பதில் இல்லை. 20 அடி தூரத்தில், நின்று, அம்மணி, என்ன சமையல்? என்றார். பதில் கிடைக்க வில்லை. அடுத்து சமையல் கட்டு கதவு அருகில், 10 அடி தூரத்தில் நின்று கேள்வியைக் கேட்டார். அப்பொழுதும் அவருக்கு பதில் கிட்டவில்லை. கடைசியாக, இணையர் செந் தாமரையின் பின்னால் நின்று, இன்று என்ன சமையல் என்று கேட்டார். செல்லப்பன். அம்மையார் சொன்னார். சப்பாத்தி குருமா, சப்பாத்தி குருமா என்று நான்கு முறை சொல்லிவிட்டேன். இப்போ அய்ந்தாவது முறை சப்பாத்தி குருமா என்று உங்கள் காதில் சொல் லுகிறேன் என்றார்கள். பிரச்சனை எங்கே?

(ஒரு. இணையதளம் ; வழங்கியவர் மு.வி. சோமசுந்தரம்)

தமிழ் ஓவியா said...


இளம்பிள்ளை வாத நோயும் - வன்முறையும்


பாகிஸ்தான் கராச்சி நகரில் 18/12/2012 அன்று போலியோ தடுப்பு சொட்டு மருந்து குழந்தைகளுக்கு அளிக்கும் முகாமில் ஐந்து மருத்துவப் பணியாளர்கள் தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்டனர். ஐந்து பேரும் பெண் ஊழியர்கள்.

கொல்லப்பட்டதன் காரணங்கள்: 1. போலியோ தடுப்பு மருந்து மலட்டுத் தன்மையை உருவாக்கும் என்ற இஸ்லாமிய மத நம்பிக்கை. 2. இது போன்ற நோய் தடுப்பு முறைகளில் ஒன்றான எச் ஐ வி வழியாக தலிபான் தலைவர் பின் லேடன் இருப்பிடமும் அவரையும் அமெரிக்கப்படை அடையாளம் கண்டு கொண்டதனால் இது போன்ற நோய் தடுப்பு முறைகள் ஒற்றர்கள் படை என்று தலிபான்கள் கருதுகின்றனர்.

கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளாக மருத்துவ அறிவியலார்களின் பெரும் முயற்சியாலும் உலக அமைப்புகளினாலும் போலியோ நோய் மூன்று நாடுகள் தவிர, மற்றைய நாடுகள் போலியோ நோயிலிருந்து விடுதலை பெற்றதாக அறியப் பட்டுள்ளது. இந்திய நாடு கடந்த 2011 ஆம் ஆண்டில் போலியோ நோயிலிருந்து விடு பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நோய் தடுப்பில் முழு வெற்றி பெற வேண்டுமெனில் போலியோ நோய் பரவலாகக் காணப் படும் மூன்று நாடுகள்--பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா நாடுகளில் முழுமையாக தடுக்கப் பட வேண்டும்.

இந்த குறிக்கோள் இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் நிறைவேற்ற உலக அமைப்புகளும் பிற நாடுகளும் முயன்று வருகின்றன. பெரியம்மை முழுமையாக ஒழிக்கப் பட்டது போன்று போலியோ நோயும் ஒழிக்கப் பட்டு குழந்தைகள் இந்த நோயின் தாக்குதலுக்கும் அதன் பின் விளைவுகளில் இருந்தும் விடு படுவர். இத் தருணத்தில் போலியோ நோயின் ஒழிப்புக்கு வழிகோலிய இரு மருத்துவ அறிவியலார்களை நினைவு கூர வேண்டும். .ஜோன்ஸ் சால்க் மற்றும் அல்பர்ட் சாபின். இவர்கள் மனித குலத்துக்கு ஆற்றிய பணி அளப்பரியது. இவர்களை நினைவு கூரும் மக்கள் சொற்பமே. நோய் தாக்குதலுக்கு ஆளான பின்பு பரிகாரம், பூசை, கோவில், குளம், என்று அலைவதை விட்டு வரும் முன் காப்போம் என்று திட்டமிட்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தகுந்த பருவத்தில் தவறாமல் கொடுத்து இந்த நோயின் மீள முடியாத தாக்குதலிலிருந்து விடுதலை பெறலாம்.

தமிழ் ஓவியா said...


பெண்களே கவனம்! கவனம்!!


பெண்களின் ஆரோக்யத்துக்கு அடிப்படையானது கால்சியம். வெறுமனே பாலையும், தயிரையும் குடிப்பதால் மட்டுமே கால்சியம் அளவு அதிகரிப்பதில்லை. அதற்கு வைட்டமின் டி சத்து அவசியம். கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துகள் குறைபாட்டால் பெண்கள் சந்திக்கக் கூடிய பிரச்சிகளைப் பற்றியும், அவற்றுக்க்கான தீர்வுகள் பற்றியும் விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.

கால்சியம் பற்றாக்குறை வந்தா வரக்கூடிய பிரச்சினைகள் பத்தி மக்களுக்கு ஓரளவுக்குத் தெரியாது. ஆனா, அந்த கால்சியத்துக்கு தேவையான வைட்டமின் டி பத்தின விழிப்புணர்வு பலருக்கும் இல்லை.

முட்டையோட வெள்ளைக் கரு, உலர் பழங்கள்னு உணவுப் பொருள்கள் மூலமாக கிடைக்கிற வைட்டமின் டி ரொம்ப அரிது. அந்தச் சத்துக்கான ஒரே ஆதாரம் சூரிய வெளிச்சம். ஆனா, வெயில்ல தலைகாட்டினா சருமம் கருத்துடும், அழகு போயிடும்னு பலரும் வெயிலைத் தவிர்க்கிறோம். அதிகாலை சூரிய வெளிச்சத்துலதான் வைட்டமின் டி சத்தைப் பெற முடியும்.

ஆனா, அந்த நேரத்து வெயில் அழகுக்கு எதிரிங்கிறதால, சருமத்தைப் பாதுகாக்க சன் ஸ்கிரீன் போட்டுக்கறோம். சன் ஸ்கிரீன் போடறது மூலமா வைட்டமின் டி சத்து, சருமத்துக்குள்ள ஊடுருவுறது தவிர்க்கப்படுது. தசைகள் வலுவோட இருக்க, இதயம் சரியா இயங்க, ரத்தத்துல ஹீமோகுளோபின் அளவு சரியான அளவுல இருக்க.. இப்படிப் பல விஷயங்களுக்கு வைட்டமின் டி அவசியம்.

கருவுற்ற பெண்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி பற்றாக்குறை இருந்தா, அவங்களுக்குப் பிறக்கிற பெண் குழந்தைக்கு இடுப்பெலும்பு சின்னதா இருக்கும். அந்தக் குழந்தை வளர்ந்து, திருமணமாகி, குழந்தை பெறும் நேரத்துல அதுக்கு சிசேரியன் தேவைப்படலாம். ஒரு மாசத்துக்கு ஒருத்தருக்கு 60 ஆயிரம் யூனிட் வைட்டமின் டி தேவை. ரத்தப் பரிசோதனை மூலமாக இந்த பற்றாக்குறையைக் கண்டுபிடிக்கலாம். மருத்துவரோட ஆலோசனையோட, வைட்டமின் டி மருந்துகளை 3 மாதங்களுக்கு எடுத்துக்கிட்டு, மறுபடி ஒரு பரிசோதனை செய்து பார்த்து, போதுமான அளவு இருக்கிற பட்சத்துல மருந்துகளை நிறுத்திடலாம். 35 வயதுக்கு மேலான பெண்களும், கருவுற்ற பெண்களும் கட்டாயம் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அளவுகள்ல கவனமா இருக்கணும். இது போதிய அளவு இருக்கிறது மூலமா முதுகு வலி, கொலஸ்ட்ரால் பிரச்சினைகளைக் கூட தவிர்க்க முடியும்... என்கிறார்.

தமிழ் ஓவியா said...


கடவுள்கள் இருக்க பயமேன்?


திக்குவாய் குறை தீர்க்கும் திருப்பந்துறை முருகப் பெருமான் - (மதுரை மணி, 10.11.2007)
கணித அறிவை மேம்படுத்த வேண்டுமா? இன்னம்பூர் இறைவனை நாடுங்கள் - (குங்குமம், 3.5.2007)

குழந்தைப் பேறு அருள மருதூர் சிறீநவநீதி இருக்கிறார் (நெல்லை)

திருமணம் கை கூட வைக்கும் திருவீழிமிழலை அழகில மாமுலையம்மை (திருவாரூர்) - (தினத்தந்தி, இலவச இணைப்பு, 27.7.2010)

திருமணம் கை கூடும் திருநீர்மலை பெருமாள் (சென்னைக்கு தென்மேற்கே) - (ராணி, 16.5.2010)

வழக்குகளில் வெற்றி பெற கொல்லங்குடி வெட்டுடையாள் காளி கோயில் (சிவகங்கை) - (ராணி - 7.3.2010)

வீடு கட்ட உதவும் கடவுள் திருப்புகமூர் அக்னீஸ்வரர் (குங்குமம், 16.7.2009)

இழந்த பொருளைப் பெற வேண்டுமா? தஞ்ச புரீஸ்வரர் கோயில் (திருவையாறு அருகில்) - (தினத்தந்தி, ஆன்மீகப் பகுதி, 26.2.2010)

கல்யாணம் நடக்க வேண்டுமா? கடன் தீர வேண்டுமா? வழக்கில் வெற்றி பெற வேண்டுமா? திக்குவாய் தீர வேண் டுமா? குழந்தைப் பேறுவேண்டுமா? வீடு கட்ட வேண்டுமா? இவைகளுக்கெல் லாம் ஒவ்வொரு கோயிலும், அதில் குடி கொண்டிருக்கும் சாமியும் துணை இருப்பது உண்மையானால் நாட்டில் அரசாங்கமே தேவைப்படாதே!

பக்தர்கள் உண்மையில் இவற்றை நம்பினால் அரசிடம் மனு போடுவார்களா? அரசாங்கத்தின் 108 எண்ணை கூப்பிடுவார்களா?

யாரை ஏமாற்ற இந்த விளம்பரப் பட்டியல்?

மக்களுக்கு தன்னம்பிக்கையையும், செயல் திறமையையும், பகுத்தறிவையும் ஊட்ட வேண்டியது.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாருக்கு சிலை வைப்பது எதற்கு?

தந்தை பெரியாருக்கு சிலை வைப்பது அவருக்கு ஆராதனை செய்து, வழிபடுவதற்காக அல்ல; சடங்கு, சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு ஆதிக்க ஆன்மீகச் சுரண்டலுக்கு வழி வகுத்திடவும் அல்ல; தந்தை பெரியாருக்கு சிலை வைத்திடுவது அவருக்கு அடையாள மரியாதை செய்திடவே; அவருடைய பகுத்தறிவுக் கொள்கையினை _ சிலையைப் பார்வையிடுபவர்களுக்கு உணர்த்திடவே. தனக்கு சிலை வைத்திட தந்தை பெரியார் அனுமதித்தபோது அவர் விதித்த நிபந்தனை இதுதான்; என் உருவம் சிலை வடிவத்தில் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்; சிலை வடிவத்தினை விட நான் பிரச்சாரம் செய்த பகுத்தறிவுக் கருத்துகள் சிலை பீடத்தில் பொறிக்கப்பட வேண்டும். எந்த கருத்துகளை நான் எடுத்துச் சொன்னேனோ அந்தக் கருத்துகள் சிலையை பார்ப்பவரிடம் சென்றடைய வேண்டும் என்று கூறி சிலை வைத்திட அனுமதி அளித்தார்.

பொது வாழ்வில் பங்கேற்ற பலருக்கும் சிலை வைத்திடும் பொழுது அவரது பெயர் மற்றும் வாழ்ந்த நாள் பற்றிய குறிப்புகளுடன் சிலை நிறுவிடுவர். ஆனால் தந்தை பெரியாருக்கு எத்தனை சிலைகள் வைக்கப்படுகின்றனவோ அந்த அளவிற்கு அவரது பகுத்தறிவுக் கருத்துகளும் அவைகளில் பொறிக்கப்படுகின்றன. பரந்துபட்ட, நிலைத்திடும் கருத்துப் பரவலுக்கு உரிய அணுகுமுறையின் முழுமையான அடையாளமே தந்தை பெரியாருக்கு சிலை நிறுவிடுவது. இதில் வழிபாடு கிடையாது. பகுத்தறிவுக் கருத்துப்பரவல்தான் சிலை வைத்திடுவதன் முழுப் பரிமாணமாகும்.

எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாத இயக்கம் பெரியார் இயக்கம். சோதனைகளையே சாதனையாக்கிக் கொள்ளும் வல்லமை பெற்றது பெரியார் இயக்கம். தந்தை பெரியார் வாழ்ந்த பொழுது, ஒரு சமயம் சுற்றுப் பயணத்தில் அவரது எதிரிகள் அவரை அவமானப்படுத்தும் எண்ணத்தில் அவரை நோக்கி செருப்பு வீசினர். வீசப்பட்ட ஜோடி செருப்புகளில் ஒன்று மட்டும் பெரியாரது வாகனத்தில் வந்து விழுந்தது. பயணப்போக்கில் சற்று தூரம் வந்துவிட்ட பெரியார், வாகனத்தை திருப்பச்சொல்லி, செருப்பு வீசப்பட்ட இடத்திற்கு வந்தார். வீசப்பட்ட செருப்பு ஜோடிகளில் மற்றொன்றையும் எடுத்துக் கொண்டு, வீசப்பட்ட செருப்புகளின் பயன்பாட்டையும் ( ஜோடி செருப்பில் ஒரு செருப்பு இருப்பதால் யாருக்கும் பயனில்லை; வீசப்பட்ட மற்றொரு செருப்பும் இருந்தால் நன்றாகப் பயன்படுமே!) வெளிப்படுத்தி எதிரிகளை நாணம் அடையச் செய்து, அவர்தம் செயலினை முறியடித்தார். பின்னர், எந்த இடத்தில் செருப்பு வீசி பெரியாரை அவமானப்படுத்திட நினைத்தார்களோ அந்த இடத்திலேயே அவருக்கு சிலை வைத்து வந்த எதிர்ப்பினையும், பெரியார் தொண்டர்கள் கருத்துப் பிரச்சார வாய்ப்பாக மாற்றினர். செருப்பொன்று விழுந்தால் சிலையொன்று முளைக்கும் எனும் அந்த நிகழ்வின் கவித்துவ வரிகள் - பெரியார் இயக்க கருத்துப் பரப்பல் அணுகுமுறையின் கட்சிதமான கட்டமைப்புகள்!

- வீ.குமரேசன்

( உண்மை - மார்ச் 16-31 )