Search This Blog

19.12.12

பெரியாரின் இறுதிக் குரலைச் செவிமடுங்கள்!

தந்தை பெரியார் பேசுகிறார்!

இன்றுதான் (1973) தந்தை பெரியார் அவர்கள் மரண சாசனமாக தன் உரையை சென்னை தியாகராயர் நகரில் இறுதியாக நிகழ்த்திய நாள்.
அந்த உரையில் அனேகமாக அத்தனைக் கருத்துகளையும் தொலைநோக்கோடு எடுத்துக் கூறியுள்ளார்.

1. நமது கலைஞர் கருணாநிதி அவர்கள் கல்லுதான் - யார் வேண்டுமானாலும் பூசை செய்யலாம் என்று எல்லோருக்கும் அனுமதி கொடுத்தார். பார்ப்பான் கோர்ட் சுப்ரீம் கோர்ட் என்றால், அதிலே தமிழனுக்கு இடமே இல்லை. போனாலும் அவனுடைய அடிமைதான் போவான். அவன் சாஸ்திரத்தைப் பார்த்துதான் தீர்ப்பு சொல்வான் என்று சொன்னாரே!

அதுதானே இதுவரை நடந்திருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றம் இருமுறை சட்டம் செய் தும், அது செயல்பாட்டுக்கு வர முடியாத அளவுக்கு இந்து லா முட்டுக்கட்டை போட்டு வருகிறதே!

இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த செல்வி ஜெயலலிதாவை முதலமைச்சராகக் கொண்ட அமைச்சரவை இந்தப் பிரச்சினையில் ஆர்வம் காட்டிய நிலையில், 2011 மே மாதத்தில் ஆட் சிக்கு வந்த செல்வி ஜெயலலிதா அம்மையார் இதுவரை இப்படி ஒரு பிரச்சினை இருப்பதையே கண்டுகொள்ளவில்லையே!

பலமுறை தீர்மானம் போட்டு கழகம் வலியுறுத்தியும், அது குறித்து எந்தவிதக் கருத்தினையும் எடுத்து வைக்காதது - ஏன்?

2. அரசியல் ரீதியாகவும் ஒரு கருத்தைத் தெளிவுபடுத்தினார்.
எல்லாக் கட்சிக்காரனும் ஒன்று சேர்ந்து இன்றைக்கு இருக்கிற ஆட்சியை (கலைஞர் தலைமையிலான ஆட்சியை) ஒழிக்கவேண் டும் என்கிறான். ஒழித்தால் ஒழித்துவிட்டுப் போகட்டும். எனக்கு ஒன்றும் கவலை இல்லை. அப்புறம் என்ன இன்றைக்குத் திருட்டுத்தனமாக மறைவாகப் பேசுகிறப் பேச்சை வெளிப்படையாகப் பேசுவான்; பேசுகிறவனைப் பார்ப்பான் மாலை போட்டு வரவேற்பான்  என்றார் தந்தை பெரியார் தம் இறுதி உரையில்.
இன்றைய அரசியல் நடப்பை, ஆட்சி முறையை - அதற்கு ஆதரவு காட்டும் பார்ப் பனர்களின் போக்கைக் கொஞ்சம் அசை போட்டுப் பார்த்தால் தந்தை பெரியார் அவர் களின் தொலைநோக்கு எவ்வளவு துல்லிய மானது என்பது எளிதில் விளங்குமே!

3. ஜாதி ஏன் இன்னும் இருக்கவேண்டும் என்ற வினாவையும் தொடுத்தார் தந்தை பெரியார்.

ஓர் அரசாங்கம் நடக்கவேண்டுமானால், அரசியல் சட்டம் வேண்டும் - ஒத்துக் கொள் கிறேன். அரசாங்கம் இருக்கவேண்டும் என்ப தற்காக சூத்திரன் இருக்கவேண்டுமா? மனிதன்தானே இருக்கவேண்டும் என்று தனது இறுதி உரையிலே தந்தை பெரியார் வினா எழுப்பினார்.

மனிதன் இருக்கவேண்டும் - ஜாதி இருந் தால் அங்கு மனிதன் - மனிதம் இருக்காது! மாறாக மற்ற மனிதனை வெறுப்பாகத்தான் பார்ப்பான் - சகோதரத்துவம் அங்கு முளைக்காது.

இந்த உண்மைக்கு வெகுதூரம் சென்று ஆய்வு செய்யவேண்டாம்; கடந்த நவம்பர் 7 இல் தருமபுரி மாவட்டத்தில் என்ன நடந்தது?

தாழ்த்தப்பட்ட மனிதனை மனிதனாக, சகோதரனாகப் பார்த்தால் மூன்று கிராமங்கள் எரிக்கப்பட்டு இருக்குமா?

எரிக்கப்பட்டதற்குப் பிறகும், அதற்கு வருந்தாமல், அந்தக் கொடுமைக்கு மேலும் உரம் ஊட்டும் வகையில் நடந்துகொள் வார்களா? தூபம் போடுவார்களா?
இந்தியாவின் ஏற்றத் தாழ்வில் முதல் இடத்தில் இருப்பது வர்க்கப் பேதத்தைவிட வர்ணபேதமே!
எனவே, முற்போக்காளர்களே தந்தை பெரியார் அவர்களின் இறுதிக் குரலைச் செவி மடுங்கள்! அதை நோக்கிச் செயல்படுங்கள்! செயல்படுங்கள்!! 

                       ------------------------"விடுதலை” தலையங்கம் 19-12-2012

9 comments:

தமிழ் ஓவியா said...


பக்தி வந்தால் புத்தி போச்சு!

மனிதனை மறந்த கடவுள் சேவைக் கேலிக் கூத்து!

- ஊசி மிளகாய்

பெற்றதாய் கூழுக்கழுகையில், பிள்ளை கும்பகோணம் கோயிலுக்கு கோதானம் கொடுக்குதாம் என்ற ஒரு பழமொழி உண்டு.

பிரபல கர்நாடக மதுபானத் தொழில திபரான விஜய் மல்லய்யா என்ற கன்னட பார்ப்பன முதலாளி, பல்வேறு தொழில் களையும் நடத்தும் பெரும் பணக்காரர்.

இவர் சில ஆண்டுகளுக்குமுன் கிங்பிஷர் (முபேகளைநச) என்ற விமான சேவை ஒன்றைத் தொடங்கி, பிரபலமாக நடத்தி வந்தார்!

பல பெருநகரங்கள், சில வெளிநாட்டு நகரங்கள் உள்பட பலவற்றிற்கும் சென்ற இவரது விமான சேவை - பெரும் நட்டத் தில் இயங்குவதாகக் காட்டப் பட்டது.

விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பியதில் எண்ணெய் நிறுவனங் களுக்கு பல கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது அந்த விமானக் கம்பெனி.

அதுபோல, பல மாதங்களாக விமான ஓட்டிகளுக்கு சம்பளம் தராமலேயே பாக்கி ஏராளம் வைத்து, அவர்களும் பொறுமை இழந்து வேலை நிறுத்தம் செய்து, பல நாள்கள் விமான சேவையைத் தொடர முடியாமல், பயணிகள் பலரும் பெரும் இன்னலுக்கும் ஆளானார்கள். பல விமானங்கள் ஆங்காங்கே நிறுத்தப் பட்டுக் கிடந்த நிலை.
சில வங்கிகள், புதிய கடனுதவி தரக்கூடியவர்கள் முன்வந்தும் முற்றாக நிலைமை சரி செய்யப்பட முடியாத நிலை. ஏதோவது மஞ்சள் கடிதாசியை (இன் சால்வென்சியைக்) கூறிவிடுவார்களோ என்று பல தரப்பிலும் பேசப்பட்ட நிலை உண்டு.

இந்நிலையில், ஒரு விமானியின் மனைவி சம்பளம் வராத காரணத்தால், கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டு இறந்தார் - டில்லி அருகே!

இதைப்பற்றி சிறிதும் கவலைப்படாத விஜய் மல்லய்யா திருப்பதி ஏழுமலை யானுக்கு நேற்று 3 கிலோ தங்கம் அளித்துள்ளார்!

திருப்பதி கோயில் கருவறைகளின் கதவுகளுக்கு முலாம் பூச இந்தத் தங்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இவர் கூறியுள்ளாராம்! இதன் மதிப்பு 90 லட்ச ரூபாய்கள் ஆகும்!

இதுபோலவே, முன்பு கருநாடக மாநிலம் தட்சண கன்னட மாவட்டத்தில் உள்ள குக்கே சுப்ரமணிய கோயிலுக்கு 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத் தகடுகள் பொருந்திய கதவுகளைக் காணிக்கை யாக தந்தார்!

(அப்போது இவரது விமானக் கம்பெனி விமானிகள் வேலை நிறுத்தம், எரிபொருள் நிரப்ப முடியாத அளவுக்குக் கடன் சுமை காரணமாக அக்கம் பெனிகளின் மறுப்பு முதலியவை உச்சக்கட்டத்தில் இருந்த காலகட்டம்).

பக்தியின் லட்சணம் பார்த்தீர்களா? கடவுளை மற; மனிதனை நினை என்ற தந்தை பெரியார்தம் மனிதநேய அறிவுரையின் முக்கியத்துவம் புரிகிறதா, தோழர்களே!

தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காது பட்டை நாமம் - வெங்க டாஜலபதி நெற்றிபோல! ஆனால், கடவுளின் கதவுக்குத் தங்கக் கட்டிகள் மட்டும் நன்கொடை!

என்னே பக்தி மூட நம்பிக்கை!

பெரிய மனிதர்களுக்குக்கூட பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்பதற்கு இந்த உதாரணம் ஒன்று போதாதோ!

தமிழ் ஓவியா said...


பல்லாண்டு பல்லாண்டு வாழ்க இனமானப் பேராசிரியர்!


பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

இனமானப் பேராசிரியர்!

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வாழ்த்து அறிக்கை

நமது இனமானப் பேராசிரியரும், திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளருமான மானமிகு பெருந்தகை க.அன்பழகனாருக்கு இன்று 91ஆவது பிறந்த நாள் விழாவாகும்.

தனது இளவயது முதலே - மாணவப் பருவந்தொட்டே - ஒரு சுயமரியாதைக் குடும்பப் பாரம்பரியத்தில் வந்தவர்;

அவரது பெருமைமிகு தந்தையார் கலியாணசுந்தரம் என்ற மணவழகனார் பழைய மாயூரத்தில் கதர்க்கடை நடத்தி, கொள்கைக்காகப் பொருளை இழந்த நெறியாளர். பிறகு தந்தை பெரியார் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.

அவரது மாமா - நெருங்கிய உறவுக்காரர் மாயூரம் சி.நடராசன் அவர்கள், தந்தை பெரியாருக்கு நிழல்போல் - மெய்க்காப்பாளராகவே சுயமரியாதை இயக்க, அடிநாதமாக இருந்தவர்; பேராசிரியர் இளமையில் சுயமரியாதைப் பால் அருந்தக் காரணமானவர்.

எனவே சுமார் முக்கால் நூற்றாண்டாக - ஒரே கொள்கை - லட்சியத்துடன் வாழும் நம் பேராசிரியர் அவர்கள் எளிமையானவர்; இனிமையானவர். எதையும் மறைக்காமல் பேசியே பழக்கப்பட்ட வாய்மையாளர்!

தந்தை பெரியார் தம் லட்சியங்களை அண்ணா வழியில் அயராது எடுத்து இயம்பும், மானமிகு சுயமரியாதைக்காரரான நம் கலைஞருக்குத் தோள் கொடுத்து, தொய்வின்றி நடக்கும் தி.மு.க.வின் பாதுகாப்புக் கேடயம் அவர்!

பாராட்டுப் பற்றிக் கவலைப்படாது, ஈரோட்டுத் தேரை காஞ்சிப் பாதையில், கலைஞருடன் சேர்ந்து வடம்பிடித்து இலக்கு சேர்க்க சலியாது உழைக்கும் சரித்திர நாயகர்; ஒப்பனை தேடாத ஒப்பற்ற மாவீரர் அவர்!

91ஆம் ஆண்டு என்பது நூறாண்டை நோக்கிய வாழ்க்கையின் அவரது இலட்சியப் பயணம். இந்நூற்றாண்டின் இணையற்ற கருத்துச் செல்வம் அவர்!

அவர்கள் மேலும் பல்லாண்டு பல்லாண்டு நல்ல உடல் நலத்துடன் இன்றுள்ளதுபோல் என்றும் உள்ள வடிவத்துடன், தொண்டறச் செம்மலாகவே வாழ்ந்து திராவிடர் சமுதாயம் மானமும் அறிவும் பெற உழைக்கவேண்டும் என்பதே தாய்க்கழகத்தினரின் பேரவா - பெருவிழைவு.

வாழ்க பெரியார்
வாழ்க பேராசிரியர்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்குறிப்பு: இனமானப் பேராசிரியரின் மணி விழாவை தாய்க்கழகமாகிய திராவிடர் கழகம், குருகுல ஊரான ஈரோட்டில் பெருஞ்சிறப்புடன் நடத்தி மகிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

19.12.2012

தமிழ் ஓவியா said...


மூட நம்பிக்கை முறியடிக்கப்பட்ட நாள் விழிப்புணர்வு கொண்டாட்டம்!

அஞ்சாதே மனமே!


பூமி சுற்றும்; உலகம் வாழும்!


மூட நம்பிக்கை முறியடிக்கப்பட்ட நாள் விழிப்புணர்வு கொண்டாட்டம்!

நாள்: 22.12.2012, சனிக்கிழமை

நேரம்: காலை 7 மணிமுதல் 8 மணிவரை

இடம்: மெரீனா கடற்கரை, சென்னை

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று இனிப்புகள், துண்டறிக்கைகள் வழங்கி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

பகுத்தறிவாளர் கழகம் - திராவிடர் மாணவர் கழகம் - திராவிடர் கழக இளைஞரணி
மேலும்
Thursday, 20 December 2012

10:00am

10:00am - 05:00pm நம்பாதீர்! நம்பாதீர்! உலக அழிவு என்பது மூடநம்பிக்கையே!

05:00pm

05:00pm நம்பாதீர்! நம்பாதீர்! உலக அழிவு என்பது மூடநம்பிக்கையே!

06:00pm

06:00pm நம்பாதீர்! நம்பாதீர்! உலக அழிவு என்பது மூடநம்பிக்கையே!

06:00pm நம்பாதீர்! நம்பாதீர்! உலக அழிவு என்பது மூடநம்பிக்கையே!

தமிழ் ஓவியா said...


90 சதவிகித இந்தியர்கள் முட்டாள்களா? நீதிபதி கட்ஜு விளக்கக் கடிதம்


புதுடில்லி, டிச. 19-இந்தியர்களை நான், இயல்பிலேயே முட்டாள்கள் என, சொல்லவில்லை; பெரும்பான் மையான இந்தியர்கள், பகுத்தறியும் தன்மையின்றி, நிறைய முட்டாள் தனத்தைக் கொண்டுள்ளனர் என்றே சொன்னேன்,'' என, பிரஸ் கவுன்சில் தலைவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான, மார்க்கண்டேய கட்ஜு விளக்கம் அளித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன், டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, மார்க்கண்டேய கட்ஜு, 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்கள்; 80 சதவீத இந்துக்களும், 80 சதவீத முஸ்லிம் களும் மதச்சார்பானவர்கள்; 1857-க்கு முன், இந்து முஸ்லிம் மோதலே கிடை யாது' என, தெரிவித்திருந்தார்.

அவரின் பேச்சு, நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான கட்ஜு, இவ்வாறு பேசலாமா என, விவாதங்கள் கிளம்பின.

உத்தரபிரதேச தலைநகர் லக் னோவை சேர்ந்த, தான்யா மற்றும் ஆதித்யா என்ற, சட்டக் கல்லுரி மாணவர்கள், மார்க்கண்டேய கட்ஜு வுக்கு, வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி, 30 நாள்களுக்குள், வெளிப் படையாக மன்னிப்பு கேட்க வேண் டும்' என, வலியுறுத்தினர். அவர் களுக்கு, நீதிபதி கட்ஜு அனுப்பி யுள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது:

நான் குறிப்பிட்ட, 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்கள்' என்பதில் உள்ள, 90 சதவீதம்' என்பது, எவ்வித புள்ளி விவரத்தின் அடிப்படையிலும் எடுக்கப்பட்டதல்ல; பொதுவாக சொன்னேன். பெரும்பாலான இந்தி யர்கள், பகுத்தறியும் திறன் இன்றி, பிரிவினைவாதிகளின் கைப்பாவை களாக விளங்குகின்றனரே என்ற ஆதங்கத்தில், அவ்வாறு குறிப்பிட் டேன்.

அந்த, 90 சதவீதத்தில், உங்கள் இருவரையோ அல்லது வேறு எந்த தனி நபர்களையோ, குறிப்பிட வில்லை. மேலும், நான் என் உரையில், எந்த இடத்திலும், இந்தியர்கள் அடிப்படையிலேயே முட்டாள்கள் என்றோ, இயல்பிலேயே அவர்கள் சிந்திக்க முடியாதவர்கள் என்றோ குறிப்பிடவில்லை.

சிலரின் சூழ்ச்சியால், தங்கள் சிந்திக்கும் திறனை இழந்து விட்டனர் என்று தான், குறிப்பிட்டேன். அதில், எந்த உட்பொருளும் இல்லை. ஜாதி, மதம், சமூகம், மூடப்பழக்க வழக் கங்கள் போன்றவற்றைப் பின்பற்று வதால், முன்னேற்றமே இன்றி, பின் தங்கி வருகின்றனர் என, குறிப்பிட் டேன்.

நான் அதிகம் நேசிக்கும் இந்தியர் களைப் பற்றி, அவ்வாறு குறிப்பிட் டது, அவர்களை தாழ்த்த வேண்டும்; அவர்களை மனதளவில் துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல; சில கசப்பு மருந்துகள்தான், நோயை குணமாக்கும் என்ற எண்ணத்தில், பெரும்பாலான இந்தியர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் கூறினேன்.

நம் முன்னோர், ஏராளமான கண்டு பிடிப்புகளையும், வேதங்களையும் படைத்தனர். காலப்போக்கில், அந்தத் திறமைகள் எல்லாம் மறைந்து விட் டன. அந்தத் திறமைகள் மீண்டும் வாய்த்திட வேண்டும் என்பதற்காகவே கூறினேன்.

ஜாதி பார்த்தும், மதம் பார்த்தும் தான், பெரும்பாலான இந்தியர்கள் ஓட்டளிக்கின்றனர். ஜாதிப் பெரு மையை காப்பாற்றுவதற்காக, உடன் பிறந்தவர்களையே சிலர் கொல்கின் றனர். இதுபோன்ற செயல்களை தடுப் பதற்காகவே, அவ்வாறு கூறினேன்.
- இவ்வாறு, நீதிபதி கட்ஜு கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


வளர முடியும்

நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், ஜாதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும். (விடுதலை, 20.9.1968)

தமிழ் ஓவியா said...


நாமக் கடவுளுக்கு நாமமா?


பழநி, டிச.19- பழநியில் கிரிவீதி, அடிவாரங்களில் சிலர், அலுமினிய பொருட்களில் வெள்ளி மூலம் பூசி விற்கின்றனர். அதை வெள்ளி என நம்பி, அதிக விலை கொடுத்து பக்தர்கள் ஏமாறு கின்றனர். பாத விநாயகர் கோயில், கிரி வலவீதி, யானைப்பாதை, படிப் பாதை, அடிவாரம் அய்யம்புள்ளி வீதிகளில் உள்ள நடைபாதை வியாபாரிகள், சிறுகடைக்காரர்கள், குத்துவிளக்குகள், வேல், சுவாமி சிலைகள், கால், தலை, உருவம், பாதம் மற்றும் பதக்கங்கள் என பல வகையான அலுமினிய உருவங் களுக்கு, வெள்ளி முலாம் பூசி விற் கின்றனர்.

பெரிய கடைகளுக்கு சென்றால், விற்பனை வரியைச் சேர்த்து, கூடுதல் விலைக்கு விற்கின்றனர் எனக் கூறும் கையேந்தி' வியாபாரிகள் விற்கும் போலியான வெள்ளி பொருட்கள், அசல் வெள்ளி போலவே பளபளப்பாகவும், விலை குறைவாகவும் இருப்பதால், பக்தர்கள் நம்பி (ஏமாந்து) வாங்கிச் சென்று, கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

பழநி கோயில் உண்டியல் எண்ணிக்கை மாதம் ஒருமுறையும், விழாக்காலங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறையும் எண்ணப்படுகிறது. அப்போது, உண்டியல்களில் அதிக மாக காணப்படுவது போலியான வெள்ளி முலாம் பூசப்பட்ட அலுமினிய பொருட்கள் தான். இவற்றை திரும்ப பயன்படுத்த முடியாததால், மூட்டைகளாக கட்டி வைக்கின்றனர்.


கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், பக்தர்கள் பழநி ஆண்டவருக்கு காணிக்கையாக செலுத்திய, தங்கம் வெள்ளிப் பொருட்கள் பெரும்பாலும் போலி யாக உள்ளதுன.
குறிப்பாக, வெள்ளிவேல், உரு வங்கள் ஏராளமானவை போலி யாகவே உள்ளன. பக்தர்கள் விலை யை விசாரித்து, கவனமாக வெள்ளி பொருள் தானா என பார்த்து வாங்க வேண்டும். நடைப்பாதைக் கடைகள், கை யேந்திகளிடம் வாங்காமல், மொத்த விற்பனை கடைகளில் வாங்கினால், தரமானதாக இருக்கும். கோயி லுக்கும் உபயோகமாக இருக்கும்,'' என்றார்.

தமிழ் ஓவியா said...


தருமபுரி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் தொல்.திருமாவளவன் குமுறல்


புதுடில்லி, டிச.19- நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (18-12-2012) காலை கேள்வி நேரம் முடிந்ததும் குறியின்மை நேரம் (சீரோ ஹவர்) தொடங்கியது. அவசர நிலையின் அடிப்படையில் பொதுப் பிரச்சினைகள் குறித்து நடைபெற்ற இவ்விவாதத்தின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலித் மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் தொடர்பாகப் பேசினார்.

அப்போது, தர்மபுரியில் நடைபெற்ற சாதி வெறியாட்டத்தைக் குறிப்பிட்டுப் பேசியபோது அவையில் இருந்த அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கூச்சல் போட்டனர். தொடர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்த நிலையில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனால் மக்களவைத் தலைவர் திருமதி மீராகுமார் திடீரென அவையை ஒத்திவைத்தார். இவ் விவாதத்தில் திருமாவளவன் பேசியதாவது-

"மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே, இவ் வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்காக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட-பழங்குடியின மக்கள் சுமார் 25 கோடிக்கு மேலானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்திய அரசும் சட்டமும் தங்களைப் பாதுகாக்கும் என்கிற நம்பிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் நாடு விடுதலை பெற்று 65 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன. குறிப்பாக, ஒரு சில நிகழ்வுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் சிறீகாகுளம் மாவட்டத்தில் லட்சுமிப்பேட்டை என்னும் கிராமத்தில் மாலா எனும் தலித் மக்கள் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் பயிர் செய்தார்கள் என்பதற்காக காப்புரெட்டி எனும் உயர்ந்த சாதியினர் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். சொத்துக்கள் சூறை யாடப்பட்டன. நான் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று அம்மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு வந்தேன்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தருமபுரி அருகே நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய மூன்று கிராமங்கள் அண்மையில் சாதி வெறியர்களால் தாக்கப்பட்டன. சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சாதிவெறியர்கள் பட்டப்பகலில் திரண்டு அந்த கிராமங்களில் மாலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரையில் சுமார் 6 மணி நேரம் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சொத்துக் களைக் கொள்ளையடித்து பின்னர் வீடுகளுக்குத் தீ வைத்தனர். 6 மணி நேரம் இத்தகைய தாக்குதல் நடந்தும்கூட தமிழ்நாடு காவல்துறை அதைத் தடுப்பதற்கு எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் தலித் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. ஆட்சி நிர்வாகம் செயலிழந்து கிடக்கிறது.

(இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கூச்சல் போட்டனர்) தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒரு சிலர் திட்டமிட்ட வன்முறையைத் தூண்டி வருகின்றனர். எனினும் காவல்துறை வேடிக்கை பார்த்து வருகிறது."

(இந்நேரத்தில் மக்களவைத் தலைவர் திருமதி மீரா குமார் அவர்கள் அதிமுக உறுப்பினர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அவையை ஒத்திவைப்பதாக அறிவித்துவிட்டு அவையிலிருந்து வெளியேறிவிட்டார்.)

தமிழ் ஓவியா said...


சொர்க்கவாசல் மகிமை


மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர் களுக்குப் பணச் செலவு செய்து கொண்டு போவதும், பொய்யையும் புளுகையும் காவடிக் கதையாய்ச் சொல்வதும், அறுத்துச் சமைத்த பாம்பும், கோழியும், மீனும் உயிர் பெற்று விட்டன என்பதும், மண் சர்க்கரை ஆகிவிட்டது என்பதும், வெட்டித் துண்டாக்கப்பட்ட குழந்தை உயிர் பெற்று விட்டது என்பதும் இவைபோல் இன்னும் பல பொய்களை வெட்கமில்லாமல் சொல்வதும், அழுக்குக் குட்டைகளில் குளித்தும், குடித்தும் பஞ்சாமிர்தம் எனும் அசிங்கத்தை உண்டும், அதனால் காலரா போன்ற கொடிய நோய்க்கு இரை யாவதும் நாம் கண்டதுதானே! அசிங்கம், ஆபாசம், அறியாமை இவைதானே நமது பண்டிகைகளாக இருந்து வருகின்றன!

சிறீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு என்று கதை அளக்கிறார்களே, அதன் தாத்பரியத்தைக் கேளுங்கள்:

நாகப்பட்டினத்தில் இருந்த ஜைனக் கோயிலின் பொன் சிலையைத் திருடி வந்து, அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் சிறீரங்கம் கோயிலின் மதில்களைக் கட்டினான்.

ஆனால், அக்கோயிலின் மதில்களையும் கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகட்கோ அந்தக் கோயிலின் சின்னத்தையே - அதாவது நாமத்தையே சாத்திவிட்டான். கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, திரவியம் தருகிறேன் என்று கூறி, காவிரி தீரத்தில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்று விட்டான் - ஓடக்காரன் துணையோடு!

அவர்களை ஆற்று வெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் கொள்ளிடம் என்றும், அந்தத் துறைக்குப் பார்வானத்துறை (பார்வானம் - சுடுகாடு, பார்வணம் - சிரார்த்தம் செய்யும் இடம்) என்றும் பெயரிட ஆண்டவனிடம் இறைஞ்ச, அவ்வாறே அளிக்கப்பட்டு, அன்று கொல்லப் பட்டவர்களுக்கெல்லாம் முக்தியும் அளிக்கப்பட்டதாம்! (திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற நூல் ஆதாரப்படி).

சிறீரங்கம் வைகுண்ட ஏகாதசியின்போது திறக்கப் படுகின்றதே சொர்க்கவாசல் - அது எங்கே செல்கிறது தெரியுமா? திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் கொன்று சிரார்த்தம் செய்த அந்தப் பார்வானத்துறைக்கு! சொர்க்கவாசல் மகிமை இப்பொழுது புரிகிறதா?

தமிழ் ஓவியா said...

மேல் ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களிடத்தில் நம்மீது கருணை ஏற்படும்படி நாம் செய்து வந்த முயற்சிகள் எல்லாம் வீணாய்ப் போய்விட்டன.

இனி அவர்களிடத்தில் சமத்துவமாயும், ஒற்றுமையாயும் வாழ முயற்சித்து நம் சக்தியையும், உழைப்பையும், பணத்தையும் செலவழிப்பது வீண் வேலையாகும். நமது முறைகளும் இழிவுகளும் மேல் ஜாதிக்கார இந்துக்களால் தீர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தைத்தான் அளிக்கும்.

இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்கின்ற விஷயத்தில் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். அம்முடிவு என்னவென்றால்,

நாம் இந்து மதத்தைவிட்டு அடியோடு விலகி விடுவது என்பதுதான்.
நமக்கு யார் சுதந்திரம் கொடுக்க மறுக்கிறார்களோ அவர்களை இனி நாம் கெஞ்சக் கூடாது. அவர்களது சம்மந்தத்தை இனி நாம் விலக்கிக் கொள்ள வேண்டும்.

நாம் நம்மை இந்துக்கள் என்று கூறிக்கொள்வது கூடாது.
அதனால்தான் மேல் ஜாதிக்காரர்கள் நம்மை இழிவாகவும் கொடுமையாகவும் நடத்துகிறார்கள்.

நாம் வேறு மதத்தைச் சார்ந்தவர்களாய் இருந்தால் நம்மை இப்படி கொடுமைப்படுத்த அவர்களுக்கு துணிவு இருந்திருக்காது. எந்த மதத்தினர் உங்களுக்கு சம அந்தஸ்து கொடுத்து சமத்துவமாய் நடத்துகிறார்களோ அப்படிப்பட்ட மதம் எதுவாயினும் அதில் சேர்ந்து கொள்ளுங்கள்.

பிறக்கும் போதோ நான் தீண்டப்படாதவனாய் பிறந்தேன். என்றாலும் அது நான் செய்த குற்றமல்ல.

ஆனால் இறக்கும் போது தீண்டப்படாதவனாய் இறக்கமாட்டேன். அதற்கு மார்க்கம் என் கையிலேயே இருக்கிறது. அதாவது நான் ஒரு இந்துவாய் இறக்கப் போவதில்லை

(நாசிக்கில் கூடிய பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர்குடிஅரசு 20.10.1935)