Search This Blog

25.12.12

தந்தை பெரியார் நினைவு நாள் சிந்தனை

தந்தை பெரியார் மறைந்து 39 ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனாலும் தந்தை பெரியார் மக்கள் சிந்தனையிலிருந்து மறையவில்லை. மக்கள் வாழ்வோடு நீக்கமற நிறைந்துள்ளார்.

நாட்டு நடப்பு ஒவ்வொன்றும் தந்தை பெரியார் சிந்தனை என்ற உரைகல்லில் வைத்து உரசப்படு கின்றன.

தமிழ்த் தேசியம் என்று கூறி தொடக்கத்தில் தந்தை பெரியார் அவர்களை உரசிப் பார்த்தவர்கள் கூட பிற்பாடு பதுங்குக் குழியைத் தேடும் நிலைதான் இன்று.

காரணம் - சமூக அடிப்படையின் சகல கூறுகளிலும்  அவரின் தாக்கம் இருக்கிறது.

மனித உரிமைகள் என்று பட்டியலிட்டு, மனித சமத்துவம், சகோதரத்துவம், பாலியல் உரிமை, கல்வி உரிமை, வேலை வாய்ப்பு என்ற வேட்கைத்தளம் ஒரு பக்கம்; மனிதனிடத்தில் குடிகொண்டுள்ள பகுத்தறிவுக்கு விலங்கு பூட்டப்பட்ட நிலையில், அதிலிருந்து அவனை விடுவிக்கும் மிகப் பெரிய முயற்சி மறுபுறம்;   இவையெல்லாம் ஒரு தனி மனிதரால் சாதிக்கப்பட்டது என்பதை இதற்கு முன் வரலாறு கேள்விப்பட்டதில்லை.

அதனால்தான் தந்தை பெரியார் பற்றி அறிஞர் அண்ணா குறிப்பிடும்பொழுது பெரியார் ஒரு சகாப்தம், கால கட்டம், ஒரு திருப்பம் என்று மிகத் துல்லியமாகக் கணித்தார்.

அய்யா மறைந்தாலும், எதிர்காலத்தில் நம் பயணம் எந்தத் திசையில் இருக்க வேண்டும் என்ற பார்வையையும் கொடுத்துச் சென்றுள்ளார்.

தந்தை பெரியார் தம் இறுதிப் போராட்டமாக அறிவித்தது அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை பற்றியதாகும்.

அதன் தத்துவம் அனைவரும் கோயிலுக்குள் சென்று சாமி கும்பிட வேண்டும் என்பதல்ல, மிக முக்கியமான இடமாக பெரும்பாலான மக்களால் சரியாகவோ தவறாகவோ நினைக்கப்படும் ஓரிடத்தில் - கருவறையில் ஒரு குறிப்பிட்ட மக்க ளுக்கு மட்டுமே ஆதிபத்தியம்; மற்றவர்களுக்குக் கிடையாது - அது பிறப்பின் அடிப்படையில் அமைந்த ஒன்று என்ற சகிக்க முடியாத பிறவி ஏற்றத் தாழ்வை உடைப்பதுதான் - மனித உரிமையைக் காப்பதுதான்  தந்தை பெரியார் அவர்களின் இறுதிப் போராட் டத்துக்குள் அடங்கியுள்ள தத்துவமாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டமும் சரி, நீதித்துறையும் சரி, பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் இந்த ஏற்பாட்டுக்குப் பக்க பலமாக இருப்பது என்பது வெட்கப்படத்தக்கதாகும்.

மண்ணுக்குச் சுதந்திரமா - மனிதனுக்குச் சுதந் திரமா என்ற தந்தை பெரியார் அவர்களின் கேள்விக்கு நாணயமான பதில் இதுவரை கிடைக்க வில்லை.
பொது வீதிகளில் நடப்பதில் தொடங்கி, பொது நீர் நிலைகளைப் பயன்படுத்துவது - உணவு விடுதியில் சமமாக உட்கார்ந்து உண்பது - கல்வி, வேலை வாய்ப்புகளில் இடம் என்று - தடைகள் தகர்க்கப்பட்டு கதவுகள் திறக்கப்பட்ட கால கட்டத்தில் இந்த ஜாதி என்னும் சர்ப்பம் கோயில் கருவறைக்குள் மிகப் பாதுகாப்பாகப் படம் எடுத்து ஆடுகிறதே என்ற அய்யாவின் கேள்விக்கு என்ன விடை? படித்தவர்களைக் கேட்கிறோம் - ஆட்சி அதிகாரங்களில் இருப்பவர்களைக்  கேட்கிறோம் - ஏன் ஆன்மிகவாதிகளையும் கூடக் கேட்கிறோம்.

தந்தை பெரியார் எழுப்பிய வினாவுக்கு என்ன விடை? வெறும் ஆடைகளில், உடைகளில், அணிகலன்களில் மாற்றம் வந்தால் போதுமா? சிந்தனையில் மாற்றம் வர வேண்டாமா? அந்த மாற்றம் என்ற வகையில் பேதமற்ற சமத்துவ நிலை என்ற பிள்ளையைப் பெற்றெடுக்க வேண்டாமா?

மயிர்க் காம்பு பிளந்து எழுதும் எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் தான் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.

ஜாதியைத் தூக்கிக் கொண்டு விட்டேனா பார் என்று திமிர் முறிக்கும் சக்திகள் தலைதூக்காது இருக்க வேண்டுமானால் அமாவாசைகளும், தொப்புளான்களும், ஊமையன்களும் கோயில் கருவறைக்குள் நின்று அர்ச்சனை செய்யவும், ஆராவமுத அய்யங்கார் வெளியில் நின்று கொண்டு என் பெயரில் அர்ச்சனை செய்யுங்கோ! என்று கேட்கும் ஒரு நிலை ஏற்பட்டாக வேண்டும். அது நமது சமூகத்தில் மிகப் பெரிய உளவியல் அதிர்வு அலைகளை உண்டாக்குமே!

அய்யா நினைவு நாளில் உரத்த முறையில் சிந்திப்போம்! உரத்த முறையிலும் செயல்படுவோம்!

இன்றைய கால கட்டத்தில் முற்போக்குச் சிந்தனை  - இடதுசாரித்தனம் என்று எந்தப் பெயர் கொடுத்தாலும் இதனைத் தாண்டி எதுவும் இருக்க முடியாது - முடியவே முடியாது!

                   ------------------------------"விடுதலை” தலையங்கம் 24-12-2012

14 comments:

தமிழ் ஓவியா said...

ஆனந்த விகடன் பொக்கிஷம்


பிற இதழிலிருந்து....

ஆனந்த விகடன் பொக்கிஷம்ஆனந்த விகடன் பொக்கிஷம்

வேப்பேரியில் போக்குவரத்து போலீஸ் அலுவலகம் அருகில் ரண்டால்ஸ் ரோட்டில் உள்ள பெரியார் திடலில், பெரியார் ஈ.வெ.ரா. அடக்கம் செய்யப்பட்டதற்கு மறுநாள் - காலை 9 மணி. சிங்கம் உலாவிய குகை ஒன்றைப் பார்ப்பதுபோன்ற உணர்ச்சி ஏற்படுகிறது.

திடலில் கூட்டங்கள் நடக்கும் கொட்டகைக்கு வலதுபுற மூலையில் பெரியார் நினைவுச் சின்னம் இருக் கிறது. ஓர் ஓரத்தில் பெரியார் கடைசியாகப் பயன்படுத்திய 9595 எண் உள்ள வேன் நிற்கிறது. வேனுக்கு மேல் சக்கர நாற்காலி மடங்கிக் கிடக்கிறது. ஆகஸ்ட் மாதம் பெரியாருக்கு இந்த வேன் வழங்கப்பட்டது. வேனின் ஒரு கதவை மேடை போல மாற்றி, பொதுக் கூட்டங்களில் அதிலேயே அமர்ந்து அவர் பேச வசதி செய்யப்பட்டு இருந் தது. 19ஆம் தேதி தி.நகரில் கடைசி யாக நடந்த பொதுக் கூட்டத்தில், இந்த வேனில் அமர்ந்துதான் பேசினார் பெரியார்.

பேச்சின் இடையில் திடீரென்று அவர், ஐயோ... அம்மா... என்று உரத்த குரலில் வலி தாங்காமல் வேதனையுடன் கூவினார். கூட்டமே திடுக்கிட்டு என்ன... என்ன? என்று வேனை நோக்கிப் பாய்ந்தது. ஆனால், பிறகு பெரியார் எப்படியோ சமாளித் துக் கொண்டு நீண்ட நேரம் பேசி னார்.
பங்களா வேண்டாம்!

பெரியார், ஹெச்.டி. ராஜா, ஜி.டி. நாயுடு மூவரும் சேர்ந்து வாங்கிய பகிர்ந்து கொண்ட இடத்தில் பெரியார் திடல் உருவானது. விடுதலை அலுவலகம் அங்கேதான் இருக்கிறது. அதன் ஒரு பகுதியிலேயே பெரியார் இல்லம் இருக்கிறது. திடலில் நுழைந்ததும் கட்டிலில் பெரியார் அமர்ந்திருக்கும் காட்சிதான் முதலில் கண்ணில் படும்.

சிந்தாதிரிப்பேட்டையிலும் பெரியா ருக்கு ஒரு வீடு இருக்கிறது. அங்கே சந்தடி அதிகம் என்று அவர் தங்கு வதற்காகப் பெரியார் திடலிலேயே பெரிய பங்களா ஒன்று கட்டப்பட்டது. பெரியார் அந்த பங்களாவை ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்துவிட்டார். இவ்வளவு பெரிய பங்களா எனக்கு எதற்கு? என்று அங்கே தங்க மறுத்துவிட்டார். பிறகு, விடுதலை அலுவலகத்தின் ஒரு பகுதியே இல்லமாயிற்று. பெரியார் தங்கியிருந்த இடம் எளிமையாகக் காட்சி தருகிறது. காலியாக உள்ள பெரியார் கட்டிலின் எதிரே, சோகமே உருவாக மணியம்மை அமர்ந்திருந்தார்.

பற்கள் கிடையாது...

பொதுக் கூட்டங்கள் இல்லாத நாட்களில் இரவு 7.30 மணிக்குப் படுக்கச் சென்றுவிடுவார் பெரியார். காலையில் சீக்கிரம் எழுந்து விடுவார். கொதிக்கத் கொதிக்க ஒரு கப் காபி சாப்பிடுவார். பிறகு சற்று நேரம் கழித்து இரண்டு இட்லி மலைப்பழம் சாப்பிடுவார். பழங் களில் மலைப் பழம்தான் பெரியாருக்குப் பிடித்தது. பிற்பகல் 12 மணிக்குக் குறை வான சோற்றுடன் மட்டன் சாப்பிடுவார். சாதம் குழைவாக இருக்க வேண்டும். மட்டன் நன்றாகப் பக்குவம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இரண்டு மூன்று கறி வகைகள் கூடாது ஏதாவது ஒன்றுதான் இருக்க வேண்டும்.

சரியாக 2.30 மணிக்கு அம்மா என்று மணியம்மைக்குக் குரல் கொடுப்பார். காபி வர வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு காபிதான். இடையே வேறு எதுவும் சாப்பிட மாட்டார். ஆனால், கழகத் தொண்டர்கள் அன்புடன் கொடுப்பதை மட்டும் சாப்பிடுவதுண்டு. ஒரு வேளை தான் சாப்பாடு. உணவுக்குப் பிறகு, கட்டித் தயிரில் சர்க்கரை போட்டுச் சாப்பிடுவார். இனிப்புகளை பெரியார் நிறையச் சாப்பிடு வார். இறுதி வரை அவருக்கு சர்க்கரை வியாதியோ, ரத்த அழுத்தமோ வர வில்லை. ஹெர்னியா தொல்லை மட்டும் பல ஆண்டுகளாக இருந்தது.

பெரியாருக்குப் பற்கள் கிடையாது. ஆனால், அவர் பேசுவதையோ, சாப்பிடு வதையோ பார்த்தால் அது தெரியாது. ஈறு பலமாக இருந்தது. முறுக்குகளைக் கூட பெரியார் மென்று சாப்பிடுவார்.

தமிழ் ஓவியா said...

கடைசி நாள்கள்...

டிசம்பர் 21ஆம் தேதி வட ஆர்க்காடு பயணம் தொடங்க இருந்தார் பெரியார். ஆனால் 20-ஆம் தேதி பிற்பகல் ஹெர் னியா தொல்லையால் வலி கண்டு சென்னை பெரியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அச்சமே இல்லாத பெரியாருக்கு, ஊசி குத்திக் கொள்வது என்றால் மட்டும் குழந் தைகளைப் போலப் பயம். பார்த்துக் குத் துங்க... என்று சொல் வார். சென்னை பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவுடன், அந்த அறையில் இதற்கு முன்பு யார் இருந்தார்கள். அந்த நபருக்கு என்ன சிகிச்சை நடந்தது என்றெல்லாம் விசா ரித்து இருக்கிறார். ஏனோ, வேலூருக்குச் சென்று சிகிச்சை பெறவே அவர் விரும்பினார். அவர் விருப்பப்படியே 21ஆம் தேதி பிற்பகல் வேலூர் மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார்கள்.

வேலூரில் சேர்த்தவுடன் ஓர் இன் ஜெக்ஷன் போட்டிருக்கிறார். டாக்டர் பட். உணவு, ஊசி மூலம் செலுத்தப்பட்டது. அன்று இரவு நன்றாகத் தூங்கியிருக் கிறார். மறுநாள் 22ஆம் தேதி காலை 8.30 மணிக்கு எழுந்து, பேப்பர்களைப் படித் திருக்கிறார். ஹார்லிக்ஸ் சாப்பிட்டார். தூங்குவதற்காகத் தூக்க மருந்து கலந்த ஊசி போடப்பட்டது.

பிற்பகல் 2 மணிக்கு வீரமணி என்று அழைத்து, வயிற்றில் வலி மிகுதியாக இருப்பதாக டாக்டரிடம் சொல்லும்படி கூறி இருக்கிறார். வீரமணி டாக்டரை அழைத்து வந்தார். வாயுவினால் வலி இருக்கலாம் என்றும், எனிமா கொடுத்து வயிற்றைக் காலி செய்தால் சரியாகும் என்றும் கூறிய டாக்டர், எனிமா கொடுத்தார். வயிறு சுத்தமான பிறகு, பெரியாருக்கு வலி குறைந்திருக்கிறது. அன்று இரவு 8 மணி வரை சரியாக இருந்தார்.

நள்ளிரவு 12 மணிக்கு பெரியாருக்குத் திடீரென்று மூச்சு வாங் கியது. தூங்கும்போது வாய் மூலம் சுவாசிக்கும் பழக்கம் உள்ளவர் பெரியார். அதனால் தொண்டைச் சளி கட்டிக் கொண்டு சிரமப்பட்டு இருக்கிறார். டாக்டர் இன்ஜெக்ஷன் கொடுத்தவுடன் சற்று சரியாயிற்று.

23ஆம் தேதி தூக்க மருந்து கொடுக்கப்பட்டதால் நல்ல தூக்கத் தில் இருந்திருக்கிறார். ஆனால், உணர்வு இழக்கவில்லை. மணியம்மை குளுகோஸ், கொடுத்தபோது, என்ன அய்யா, வாயில் ஊத்த ணுமா? நீங்களே கையில எப்பவும் மாதிரி வாங்கிச் சாப்பிடுங்களேன் என்று கூறியபோது, பெரியார் கையில் வாங்கி குளுகோஸ் குடித்தார். புரை ஏறியிருக்கிறது. தலையில் தட்டிக் கொண்டார். எதையாவது சாப்பிட் டால் தாடியை அழுத்தமாகத் துடைத் துக் கொள்வதுபோல அப்போதும், துடைத்துக் கொண்டார் என்றார் வீரமணி.

23ஆம் தேதி இரவு மூச்சு வாங்க ஆரம்பித்தது. பல முறை பேசி கெஞ்சிக் கெஞ்சி ஆக்ஸிஜன் டியூப்பை பெரி யாரின் மூக்கில் வைத்தார் டாக்டர் ஜான்சன். ஆனால் பெரியார் அதைப் பிடுங்கி எறிந்துவிட்டார். கடைசியில் முகமூடி போன்று இருக்கும் ஆக்ஸி ஜன் குழாயைப் பொருத்தினார்கள்.

24ஆம் தேதி துயரம் மிக்க அந்தப் பொழுது விடிந்தது. பல்ஸ் குறைந்து டாக்டர்கள் நம்பிக்கை இழந்தார்கள். காலை 7.10 மணிக்கு மசாஜ் செய்து, இதயத்தை இயங்கச் செய்ய முயன் றார்கள். நேரிடையாக இதயத்துக்கு ஊசி போட்டார்கள். 7.22-க்கு பெரி யாரின் உயிர் மெதுவாகப் பிரிந்தது.

யார் இறந்தாலும் அழக் கூடாது என்பது அய்யாவின் கொள்கை. உயிர் பிரிந்த அய்யாவின் சடலத்தை அம்மா (மணியம்மை) அவர்கள் அப்படியே சற்று நேரம் பார்த்துக் கொண்டு இருந்தார். பின்னர் 22 ஆண்டு களுக்கு முன்பு ஒரு சமயம் அய்யா அவர்கள் அவருக்கு அளித்த புட வையை எடுத்துவந்து, அவர் கால் மீது வைத்துவிட்டு அப்படியே நின்றார். அவர்கள் அப்படி நிற்பதைக் கண்டு சம்பத் உட்பட நாங்களும் கண்ணீரை அடக்கிக் கொண்டு நின்றோம். அங்கே பேரமைதி நிலவியது. பிறகு, அந்தப் புடவையைக் காலடியில் இருந்து எடுத்து உடனே உடுத்திக் கொண்டார். எல்லோரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு, பெரியாருடைய கறுப்புச் சட்டையையும் கைலியையும் - கொண்டு வரச் செய்து, அவற்றை அய்யா அவர்களுக்கு அணிவித்தார். பெரியார் உடல் அருகே அசையாமல் அமர்த்திருந்த அம்மா, வேனில் உடலை ஏற்றி வேலூரைவிட்டுப் புறப்பட்டவுடன் துக்கம் தாளாமல் கணவரின் காலடி யில் முகத்தைப் புதைத்துக் கொண்டு கதறித் தீர்த்துவிட்டார்

உணர்ச்சிமிக்க இந்த நிகழ்ச் சியைக் கண்கள் கலங்கக் கூறினார். விடுதலை வீரமணி.

- ராவ்
(நன்றி: ஆனந்தவிகடன் 26.12.2012)

தமிழ் ஓவியா said...முடியாதுமதக் கட்டளையையும், கடவுள் நம்பிக்கையையும் கொண்ட ஒரு அடிமை, ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் ஒரு நாளும் விடுதலை அடையவோ, முன்னேற்றமடையவோ முடியவே முடியாது. - (குடிஅரசு, 7.5.1933)

தமிழ் ஓவியா said...


சூளுரைத்து, சுயமரியாதை உலகமைப்போம்!


நம் மக்களின் விழி திறந்த வித்தகர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவு நாள்.

பெரியார் தொண்டர்களைப் பொறுத்த வரை அது ஒரு சடங்கோ, சம்பிரதாயமோ அல்ல;

மாறாக, சரித்திரக் குறிப்பு நாள்; அவர் துவக்கிய சமுதாயப் புரட்சிப் போர் அவரது இராணுவக் கட்டுப்பாடு மிக்க தொண்டர்களால் தொய்வின்றி தொடர்ந்து நடத்தப்பட்டு முன்னேறிச் செல்கிறது என்று உலகுக்குப் பறைசாற்றும் பல்திசை முழக்க நாள்!

முன்பு எப்போதையும்விட இப்போது மேலும் பெரியார் - தத்துவம், கொள்கை, லட்சியப் பணிகள் தேவைப்படுகின்றன என்று உணர்ந்துள்ள நாள்!

சமூகப் புரட்சி இல்லாத வெறும் அரசியல் மாற்றங்கள், வேரில்லாத மரத்தைப் போல, நீடித்து நிலைத்து நிற்பதில்லை. எனவேதான் மக்களிடம் செல்; அவர்கள் மனதை மாற்று, அதற்கு ஆயுதம் அறிவாயுதமாக மட்டுமே அமையட்டும்; அதற்காக விலை கொடுக்க வேண்டுமானால் உன்னை ஒப்படைத்துக் கொள்! ஊரை, உலகத்தைத் தொல்லைப் படுத்தாதே! தன்னலத்தைச் சுட்டெ ரித்து, பொது நலத்தை தகத்தகாய ஒளிவீசும் தங்கம் எனப் பிரகாசிக்கச் செய்!

- என்று அறிவுரை கூறி, அதன்படி அவரே நடந்து அகிலத்திற்குப் பாடம் போதித்தார் - தமிழகத்தின் முதல் பேராசிரியராம் தந்தை பெரியார்!

அய்யா மறைந்தார் என்று ஆரியம் மகிழ்ச்சிக் கூத்தாடியது. ஆனால் அது, இன்று பொய்யாய், பழங் கதையாய் ஆகி வருகிறது என்பதால், புது உருவத்தில் பொல்லாங்கு ஊடகங்கள் மூலம் பொறுப்பற்ற இனத் துரோகிகளைப் பிடித்து அவர்களுக்கு விளம்பர சடகோ பங்களைச் சாத்துகிறது. அதற்குப் பலியாகும் இனத் துரோகிகளான விபீடணர்களைப் பிடித்துத் தம் காலடியில் வைத்து மகிழ்கிறது.

பதவிகளைப் பெற முடியாத பல அரசியல்வாதிகள், ஜாதி, மத வாதங் களைப் புதிய முதலீடுகளாக்கி படியேற முயற்சிக்கின்றனர். பெரியார் மண் அதற்கு ஒருபோதும் இடந்தராது.

மதவாதம் தமிழ்நாட்டில் கால் பதிக்க முடியாமல் உள்ளது போலவே இந்த ஜாதி வெறித்தனத்தின் முதுகெலும்பும் முறிக்கப்படும்.

பொதுத்துறை நிறுவனங்களை விற்று தனியார்மயமாக்கி அதன் மூலம் முதலாளித்துவமும் கொழுக்கிறது; வருணமும் புத்துயிர் பெற்று, சமூக நீதிக்கு சமாதி கட்டலாம் என்ற அவர்களின் ஆசை நிராசையாக்கப்பட கிளம்புதுகாண் சிங்கக் கூட்டம்!

தனியார்த் துறைகளிலும் இட ஒதுக் கீடு கட்டாயம் என்னும் பதாகையைத் தூக்கிக் கிளம்பும் கிழக்குச் சூரியக் கதிர்கள்!

பெண்ணுரிமை, மண்ணுரிமையை விட மகத்தானது; அதற்குத் தோன்றும் அறைகூவல்களையும் ஏற்று, நிலை நாட்டுவோம் என்பதற்காக 1929இல் செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்கள் மேலும் செயலுரு கொள்ள 2013ஆம் ஆண்டை பிரச்சார - போராட்ட ஆண்டாக்கி, நாம் முழுமையாக அப்பெரும் பணிக்கே ஒப்படைக்கிறோம் என்று அய்யா என்ற அணையா அறிவுச் சுடர் முன் சூளுரை ஏற்போம்!
சுயமரியாதை உலகமைப்போம்!

வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!

கி.வீரமணி
தலைவர் திராவிடர் கழகம்

சென்னை, 24.12.2012

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 24தமிழர் தலைவர் தலைமையில் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து உறுதிமொழி ஏற்பு

கழகத் தோழர்கள் புடைசூழ பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் (24.12.2012)

சென்னை, டிச.24- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர் களின் 39ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (24.12.2012) காலை சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டும், பெரியார் நினைவிடத் தில் மலர் வளையம் வைத்தும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தந்தை பெரியார் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (24.12.2012) தமிழ கம் முழுவதும் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணி விக்கப்பட்டும் பல்வேறு

சமூக தொண்டறப் பணிகளும் பகுத்தறிவு பிரச்சார பணிகளும் நடைபெறுகிறது.

தந்தை பெரியார் சிலைக்கு மாலை நினைவிடத்தில் மலர் வளையம்

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு இன்று (24.12.2012) காலை 10 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

பின்னர் பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் கழகத் தோழர் - தோழியர் புடை சூழ தமிழர் தலைவர் தலைமையில் மலர் வளையம் வைத்து, ஜாதி, மதங்கள், மூடநம்பிக்கை ஒழிக்க தொடர்ந்து தந்தை பெரியார் அவர்களின் கொள்கை களை பரப்பப் பாடுபடுவோம் என உறுதிமொழி எடுத்து கொள்ளப் பட்டது. இந்நிகழ்வில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழக பொருளாளர் வழக் கறிஞர் கோ. சாமிதுரை, பொதுச் செயலாளர் வீ. அன்பு ராஜ், வீ மோகனா அம்மையார் பெரியார் சுயமரி யாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க. சண்முகம், கழக மாநில பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, திராவிட மகளிர் பாசறை செயலாளர் டெய்சி மணியம்மை, கழகத் தலைச் செயற்குழு உறுப்பினர் திருமகள், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், வழக் குரைஞர் அருள்அரசன், மகளிர் பாசறை உமாசெல் வராசு, சி. வெற்றிச்செல்வி பெரியார் திடல் மேலாளர் ப. சீதாராமன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே. நடராஜன், திராவிடர் கழக மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் தமிழ் சாக்ரடீஸ், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பரஞ்சோதி, வழக்கறிஞர் ஜெ. துரைசாமி, வழக்கறிஞர் வீரமர்த்தினி பத்திரிகை யாளர் க. திருநாவுக்கரசு, நாத்திகம் பாலு, மு. தரும ராஜ், விடுதலை ராதா ஆகியோர் பங்கேற்றனர்.

அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவிப்பு

முன்னதாக கழகத் தோழர் - தோழியர்கள் பெரியார் திடலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டுச் சென்று பெரியார் நெடுஞ்சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு திராவிடர் கழக மகளிரணி சார்பில் மலர் மாலை அணிவிக்கப்பட்டது. அதே போன்று பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் நினைவிடத்திலும், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவு மேடையிலும் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டது.

தந்தை பெரியார் நினைவிடத்தில் அவரது நினைவு நாளையொட்டி திராவிடர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, தொழிலாளர் அணி, பெரியார் மருத்துவமனை, திராவிடன் நலநிதி, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் சார்பிலும் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில்... அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் தந்தை பெரியார் நினைவிடத்தில் அதன் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் எம். இளங்கோவன் (அய்.அய்.டி.) தர்மராஜ், ராமமூர்த்தி (அய்.சி.எப்.), எஸ். சேகரன், எஸ். சத்திய மூர்த்தி (யூனியன் வங்கி) ஆர். சண்முகவேல் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பெரியார் மருத்துவமனை சார்பில்...

பெரியார் மணியம்மை மருத்துவமனை சார்பில் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மீனாம்பாள் தலைமையில் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டது. மருத்துவர் டாக்டர் மேக்னா, மருத்துவமனை மே லாளர் ஜி. குணசேகரன், ஜி. தயாளன், செவிலியர்கள் கே. சவுதாமினி, சி. ஆக்னஸ், என்.டி. உமாலூசி, இந்துமதி, மாலதி, மருத்துவமனை உதவியாளர்கள் லலிதா, சியா மளா, எப்தி, கற்பகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் ஓவியா said...

பெரியார் நூலகர் வாசகர் வட்டம்

பெரியார் நூலகர் வாசகர் வட்டம் சார்பில் அதன் தலைவர் மயிலை நா. கிருஷ்ணன், செயலாளர் சத்திய நாராயணசிங், சுப்பிரமணி, தீனன், இராவணன், நாகரத்தினம், வேலு, அருணாசலம், பழனிசாமி, தென்னவன், பெருமாள், மனோகரன் ஆகியோர் இணைந்து பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

தென்சென்னை தந்தை பெரியார் நினைவுநாளையொட்டி தென் சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் தியாகராயர் நகர், மயிலை நொச்சி நகர், அய்ஸ் அவுஸ், அண்ணா மேம்பாலம் ஆகிய இடங்களில் தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் தலை மையில் மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி. பாலு, மாவட்ட செயலாளர் இரா.பார்த்தசாரதி, இணைச் செயலாளர் கோ.வி.ராகவன், டி.ஆர்.சேதுராமன், தங்கம் ரமேஷ், இரா.பிரபாகரன், மயிலை சாமிநாதன், சூளை மேடு இராமச்சந்திரன், விக்னேஷ் கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வடசென்னை முன்னதாக இன்று காலை 8.45 மணியளவில் வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் அமைந் துள்ள தந்தை பெரியார் சிலைக்கு, மாவட்ட கழகத் தலைவர் தி.வே.சு.திருவள்ளுவன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. வடசென்னை மாவட்ட செய லாளர் கி.இராம லிங்கம், கொடுங்கையூர் பகுதி கழகத் தலைவர் கோ. தங்கமணி, தோழியர் தங்க. தனலட்சுமி, கு.தங்கமணி குணசீலன், இராயபுரம் பகுதி கழக அமைப்பாளர் சி.நாகேந்திரன், கொளத்தூர் பகுதி கழக இளைஞரணி அமைப் பாளர் பார்த்திபன், சிறுவன் சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

திராவிடர் தொழிலாளரணி

தந்தை பெரியார் நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் திராவிடர் தொழிலாளரணி சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் ஆ.நாகலிங்கம், மா.இராசு, க.மூர்த்தி, பெரியார் மாணாக்கன், பிரபாகரன், செ.பார்த்தசாரதி, அசோக் லேலேண்டு செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலை சிறுத்தைகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, செய்தித் தொடர்பாளர் வன்னியரசு, தகடூர் தமிழ்ச்செல்வன், இரா.செல்வம், இளங்கோ, அரங்கநாதன், குமரப்பா, தமிழ் ஆகியோர் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக இன்று காலை தந்தை பெரியார் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். தி.மு.க.வைச் சேர்ந்த கவிஞர் காசி.முத்து மாணிக்கம், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் முகமது சகி, பேராசிரியர் வேலுசாமி, பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், வடசேரி இளங்கோவன், பேராசிரியர் முனைவர் மறை மலை யான், மயிலாடுதுறை கழக மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற தந்தை பெரியார் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில்:- பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன், வீ.அசோக்ராஜ், பேரா சிரியர் மங்கள முருகேசன், ஆடிட்டர் இராமச்சந் திரன், தஞ்சை சண்முகம், திராவிடன் நலநிதி பொது மேலாளர் அருள்செல்வன், வெங்கடேசன், முருகன், வேணு கோபால், மேகராஜன், புரசை அன்புசெல்வன், பெரி யார் ஆய்வு நூலகத்தின் நூலகர் கோவிந்தன், இசையன்பன், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் சென்னை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் குமார், முனைவர் ஜெயக்குமார், கழகப் பொதுக்குழு உறுப்பினர் மனோரஞ்சிதம், மரகத மணி, சுமதி, இந்திரா, ஆதிலட்சுமி, வெண்ணிலா, சீர்த்தி அ.குயில் மொழி, தேன்மொழி, குழலினி, யாழினி, இரத்தினா வதி, சா.தேவி, பரமேஸ்வரி, மோனிஷா, இங்கர்சால், தமிழீழம், இறைவி, பண்பொளி, மாலதி, கற்பகம், பசும்பொன், மீனாட்சி, செல்வி, மணிமேகலை, சந்திரா, இனநலம், வேலவன், இளவேனில் அன்றில், க.கனி மொழி, ப.சோபனா, ப.சோ.யாழினி, ஏ.கஸ்தூரி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...


வரவேற்கத்தக்க மாயாவதியின் கருத்து!


பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வருக!

புதுடில்லி, டிச.24- பிற்படுத்தப்பட்டோருக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வர வேண்டும் என்று, மாயாவதி யோசனை தெரிவித்து இருக்கிறார். தாழ்த்தப்பட்ட மற் றும் பழங்குடியினத்தவ ருக்கு (எஸ்.சி., எஸ்.டி.) அரசுப் பணியில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியின் கடுமையான எதிர்ப்பி னால், மக்களவையில் அந்த மசோதா நிறை வேற்றப்படவில்லை. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி எம்.பி.கள், தங்களுடைய பிரதான ஓட்டு வங்கி யான முஸ்லிம்கள் மற் றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் அரசுப் பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வற் புறுத்தினார்கள். இந்த நிலையில், சமாஜ்வாடி கட்சிக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், பிற்படுத்தப் பட்டோருக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க புதிய மசோதா கொண்டு வந்தால் ஆதரிப்போம் என்று அறிவித்து இருக்கிறார். அதேபோல் முஸ்லிம் களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சச்சார் கமிட்டி பரிந்துரை களையும் விரைந்து அமல்படுத்தும்படியும் மாயாவதி வற்புறுத் தினார். அத்துடன் உத் தர பிரதேசத்தில் சட்ட சபை தேர்தலின்போது முஸ்லிம்களுக்கு 18 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று சமாஜ்வாடி கட்சி அளித்த வாக்குறுதியை நினைவு படுத்திய மாயா வதி, ஆட்சி பொறுப்பு ஏற்று 9 மாதங்கள் கடந்த பின்னரும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான உ.பி. அரசு, தனது வாக் குறுதியை அமல்படுத்த தவறிவிட்டது என்றும் குற்றம் சாட்டினார். நாங்கள் அனைத்து சமூக மக்கள் மீதும் நம்பிக்கை வைத்து இருக்கிறோம். முற்படுத் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை மக்க ளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை ஆதரிக்கி றோம் என்றார்.

தமிழ் ஓவியா said...


காவிரி பிரச்சினைக்காக டிசம்பர் 30இல் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்!


அருமைப் பெரு மக்களே!

காவிரி நீர்ப்பாசனம் அறவே கிடைக்காத நிலையில், தமிழ்நாட்டின் டெல்டா மாவட் டங்கள் குற்றுயிரும், குலை உயிருமாகத் துடித்துக்கொண்டு கிடக்கின்றன.
விவசாயிகள் தற்கொலை செய்து கொள் ளும் போக்கு நாள்தோறும்! நாள்தோறும்!!

குறுவை தரிசாகி, சம்பாவும் சாம்பலாகும் மிகக் கொடுமையான கால கட்டம் இது.

நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம், பிரதமர் தலைமையிலான காவிரி கண்காணிப்பு ஆணையம் என்று உச்ச கட்ட அதிகாரம் படைத்த அமைப்புகள் ஆணை பிறப்பித்தாலும் கருநாடகத்தின் ஈவு இரக்கமற்ற பிடிவாதம் தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கி வருகிறது.

மத்திய அரசோ எல்லாருக்கும் நல்ல பிள்ளை என்ற வேடம் போடுகிறது. நடுவண் அரசு என்ற பெயருக்குப் பொருத்தமில்லாமல் கழுவும் நீரில் நழுவும் மீனாக நடந்து கொண்டு வருகிறது.

தமிழ்நாடு அரசோ குறைந்தபட்சம் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டுவதற்குக் கூட மனம் இல்லாமல் காலம் கடத்தி வருகிறது. இந்தப் பிரச்சினையில் கருநாடக மாநில அரசு எப்படி நடந்து கொள் கிறது என்பதைக் கூட கவனிக்க மறுத்தால் என்ன செய்வது!

காவிரி நீர் இல்லாமையாலும், மின் வெட்டுக் காரணமாகவும் காய்ந்து கிடக்கும் பயிர்களைக் கண்டு நொந்து விவசாயிகள் தற்கொலை என்ற வேதனை!

இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த - குறிப்பாக விவசாய மக்களின் உள்ளக் குமுறலைத் தெரிவிக்கும் வகையில் கீழ்க்கண்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 30ஆம் தேதி ஞாயிறு காலை 10 மணிக்கு தஞ்சா வூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

1) மத்திய - மாநில அரசுகளின் போக்குக்குக் கண்டனம்.

2) நடுவர்மன்ற தீர்ப்பை அரசு கெசட்டில் வெளியிட வேண்டும்.

3) பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகளுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும். விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும்.

- மேற்கண்ட மூன்றையும் வலியுறுத்தி தஞ்சாவூரில் வரும் ஞாயிறன்று நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை 24.12.2012

குறிப்பு: தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, லால்குடி, கரூர் கழக மாவட்டத் தோழர்கள் திரளாக வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தமிழ் ஓவியா said...


பாலியல் வன்கொடுமை: கண்டன ஆர்ப்பாட்டம்!


அருமைச் சகோதரிகளே!

டில்லி தலைநகரில் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன் கொடுமை, தமிழ்நாட்டிலும் தூத்துக்குடி அருகே சிறுமி சீரழிக்கப்பட்ட வக்கிரம் என்பவை எல்லாம் பனிப்பாறையின் ஒரு சிறு கடுகு முனைதான்.

தலை குனியத்தக்கது!

ஒட்டுமொத்த சமுதாயமே வெட்கித் தலை குனியும் வகையில் இதுபோன்ற அநாகரிகங் கள் நாளும் நடந்து கொண்டுதானிருக் கின்றன. இந்தியாவின் தலைநகரமான டில்லி மாநகரம் இதில் முதல் இடத்தில் இருக்கிறது என்பது படுகேவலம்!

பெண் என்றால் பலகீனமான ஜீவன் என்ற எண்ணம் ஆண் தசை பலங்களுக்கு (MUSCLE POWER) மனுதர்ம காலத்திலிருந்து இருந்து வருவதுதான்.

சட்டங்கள், தண்டனைகள் தேவை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொண்டும் (DEFENCE), தேவைப்பட்டால் தாக்குதலை (OFFENCE)த் தொடுக்கும் அளவுக்குப் பயிற்சி பெற்றாக வேண்டும்.

ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் பெண்களுக்குக் கட்டாயம் கராத்தே பயிற்சிகள் அளிக்கப்பட வேண் டும். டில்லி போன்ற நகரங்களில் பெண் களுக்கு துப்பாக்கி அளிப்பது பற்றிக்கூட சிந்திக்கலாம்.

நம்நாட்டு ஊடகங்கள் குறிப்பாக சின்னத் திரைகள், பெரிய திரைகள், பத்திரிகைகள், உலகமய நுகர்வுக் கலாச்சாரம் என்பவை யெல்லாம் மனிதர்களின் மூளைகளை வக்கிரக் குண்டுகளை தயாரிக்கும் தொழிற்சாலை களாக மாற்றிக் கொண்டு வருகின்றன. நோய் நாடி நோய் முதல் நாடும் தொலை நோக்குப் பார்வையோடு அரசுகள் செயல்பட வேண்டும். சமுதாயத்தில் பாலியல் உரிமைக்கான விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடந்துகொண்டே இருக்கவேண்டும்.

வரும் 29ஆம் தேதி சனியன்று காலை 10.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கழக மகளிரணி தலை மையில் இது குறித்து எழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மகளிரணியினர் ஒன்றுதிரண்டு வருமாறு அழைக்கிறோம்!

சென்னை
24.12.2012

(கி.வீரமணி)
தலைவர், திராவிடர் கழகம்

குறிப்பு: ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி தலைமையில் நடைபெறும்.

கண்டன உரை: தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

தமிழ் ஓவியா said...

வரலாற்றில் இவர்கள்


மகா க(கா)வி பாரதியார்

அகண்ட பாரதம் ஆரியநாடு!
நால்வர்ணம் நாட்டுநலன்!
பசுவதை தெய்வக்குற்றம்!
இந்தி பொதுமொழி!
சமஸ்கிருதம் தெய்வபாஷை!
மதமாற்றம் தடைசெய்!

ஸிஷிஷி எனும் பச்சைப்பார்ப்பன இயக்கம் தோன்றும் முன்னரே இம் முழக்கங்களுக்கு சொந்தக்காரன்!.

ஸிஷிஷி இயக்கத்தின் முன்னோடி!.தன் கவிதைகளில் அங்கொன்றும் இங்கொன்று-மாய் சிலதை கிறுக்கி தன்னை முற்போக்காளனாய் காட்டிகொள்ளும் வித்தையில், கை தேர்ந்தவன் ஆரிய சனாதன வெறிபிடித்த பாரதி !.

அதனால்தான் "வேதம் அறிந்தவன் பார்ப்பான்-பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான்"

என்றான் போலும்!

அகண்ட பாரதம் ஆரியநாடு!

"உன்னத ஆரிய நாடெங்கள் நாடே"-என்றும்

"வானாறு பேரிமய வெற்பு முதல் பெண்குமரி யீராகும் ஆரியநா டென்றே யறி!"-என்றும்

இந்திய நாட்டை முன்று சதவீத பார்ப்பனர்களின் நாடாகப் பாடிமகிழ்ந்தான்!.

ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப் பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே"

வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம் ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர்". -என்று புலம்பினான்!.

நால்வர்ணம் நாட்டுநலன்!

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் முதலிய நால்வருணங்கள் இருக்க வேண்டும்.நால்வருணம் அழிந்தால் மனித இனமே அழிந்து விடும் என்ற வர்ணாஸ்ரம வெறிபிடித்த பாரதி "நாலு குலங்கள் அமைத்தான் - அதை
நாசம் உறப்புரிந்தனர் மூடமனிதன்"-என்றான்.

"நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி"-என்று ஒப்பாரி வைத்தான்.

சர்.பிடி.தியாகராயர்,டி.எம்.நாயர்,சி.நடேசனார் ஆகியோர் தென்னிந்திய நலஉரிமை சங்கம் என்ற பெயரில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை தோற்றுவித்தபோது, அதற்கு எதிர்வினை-யாற்றியவன் பாரதி!

பொய்யும் புனைவுமாகத் திராவிடர்க-ளென்றும் ஆரியர்கள் என்றும் பழைய சொற்களுக்குப் புதிய அபாண்டமான அர்த்தங்கள் கற்பித்துக் கொண்டு வீண் சண்டைகள் வளர்ப்பதில் ஹிந்து சமூகத்துக்கே கெடுதி விளையக்கூடும்.இந்தப் பிராமணரல்லா-தார் கிளர்ச்சி கால கதியில் தானே மங்கி அழிந்து விடுமென்று நிச்சயிப்பதற்கும் போதிய காரணங்களிருக்கின்றன"என்றான்.

பசுவதை தெய்வக்குற்றம்!

"பசுவை இந்துக்களாகிய நாங்கள் தெய்வமாக வணங்குவதால், நாங்கள் பெரும்பகுதியாக வாழ்வதும், எங்களுடைய பூர்வீக சொத்தாகிய இந்தத் தேசத்தில் பஹிரங்கமாகப் பசுவின் கொலையை யாரும் செய்யாமல் இருப்பதே மரியாதையாகும்" என்று 1917 லேயே சுதேசமித்திரன் ஏட்டில் பசுவதை தடை கோரியவன் பாரதி!

இந்தி பொதுமொழி!

இந்தியாவின் தேசியமொழியாக இந்தி இருக்கவேண்டும் என்று 1906ல் "இந்தியா" வார ஏட்டில் "இந்திபாஷை பக்கம்" என்ற தலைப்பில் கட்டுரை எழுதினான்.தமிழர்களாகிய நாம் ஹிந்தி பாஷையிலே பயிற்சி பெறுதல் மிகவும் அவசியமாகும். ஹிந்திப் பாஷையை எதிர்க்க என்ன அவசியம் இருக்கிறது என்று கேட்கிறோம். இந்தியா பலவித பிரிவுகளுடைய-தாய் இருந்த போதிலும் உண்மையிலே ஒன்றாய் இருப்பதற்கினங்க, அதிலுள்ள வெவ்வேறு நாடுகளிலே வெவ்வேறு பாஷைகளிருந்த போதிலும் முழுமைக்கும் ஒரு பொது பாஷை வேண்டும். தமிழர்கள் தமிழும் ஹிந்தியும், தெலுங்கர் தெலுங்கும் ஹிந்தியும், பெங்காளத்-தார் பெங்காளியும் இந்தியும் என இவ்வாறே எல்லா வகுப்பினரும் அறிந்திருப்பார்களானால் நமக்குப் பொதுப்பாஷை ஒன்றிருக்கும்". (பாரதி தரிசனம்)

சமஸ்கிருதம் தெய்வபாஷை!

செத்தமொழி சமஸ்கிருதத்தை தெய்வ-பாஷை என்று உயர்த்திப்பிடித்தவன் பாரதி!

நம் முன்னோர்களைப் பின்பற்றி புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் சமஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷையென்று சொல்வது விளையாட்டன்று. மற்ற சாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா. அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷை என்கிறோம்".(பாரதியார் கட்டுரைகள்)

தமிழ் ஓவியா said...

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்-மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்"

என்கிறப்பாடலைக்கூட பாரதி 1915 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்ச்-சங்கத்தின் பரிசுப் போட்டிக்காக நண்பர்களின் வற்புறுத்தலினால் எழுதியதாக கூறப்படுகிறது. எனவே இப்பாடலும் பாரதிக்கு தமிழ்மேல் இருந்த காதலால் எழுதப்பட்டது அல்ல என்பது புலனாகிறது.
மதமாற்றம் கூடாது!

பஞ்சத்தில் பசியால் வாடிய மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துவந்த கிருத்துவப்-பாதிரியார்கள் மீது சீறிப்பாய்ந்தான் பாரதி. "எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயப் பாதிரிகள் பஞ்சம் பற்றிய ஜனங்களுக்குப் பலவித உதவிகள் செய்து நூற்றுக்கணக்கான மனிதர்களையும், முக்கியமாக திக்கற்ற குழந்தைகளையும், கிறிஸ்தவ மதத்திலே சேர்த்துக் கொள்கிறார்கள்.

ஹிந்து ஜனங்களின் தொகை வருஷந்-தோறும் அதிபயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது. ஹிந்து ஜனங்கள்! நமது ரத்தம், நமது சதை, நமது எலும்பு, நமது உயிர். கோமாமிசம் உண்ணாதபடி அவர்களைச் சுத்தப்படுத்தி, அவர்களை மீண்டும் நமது இந்து சமூகத்திலே சேர்க்க வேண்டும். (பாரதியார் கட்டுரைகள்)

1921 இல் "லோக குரு பாரதமாதா" என்ற தலைப்பில் "இந்தியாவிற்குச் சுதந்திரம் கேட்பதே இந்து தர்மத்தைக் காப்பாற்றத்தான்" என்று எழுதியுள்ளான்.(பாரதியார் கட்டுரைகள்)

பாரதியும் மீசையும்!

பார்ப்பன தர்மத்திற்கு எதிராக மீசை வளர்த்தான் பாரதி என்று சிலாகிப்பர் சிலர்.பாரதியின் மீசை பார்ப்பன தர்மத்திற்கு எதிரானதா? தான் மீசை வளர்த்த கதையை அவரே சொல்கிறார்!.

வேத பூமியாகிய ஆரிய வர்த்தத்தில் பிராமணர்களில் மீசை இல்லாமலிருப்பது சாஸ்திர விரோதமென்று பாவிக்கிறார்கள். அங்கு ஒருவன் மீசையைச் சிரைத்தால் அவனுடைய நெருங்கிய சுற்றத்தாரில் யாரேனும் இறந்து போனதற்கடையாளமாகக் கருதப்-படுகிறது. பல வருஷங்களுக்கு முன்பு நான் ஸ்ரீகாசியில் ஜயநாராயண கலாசாலை என்ற இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து வாசிக்கப் போனேன். நான் தமிழ்நாட்டிலிருந்து சென்றவனாதலால் தமிழ்நாட்டுப் பிராமணரின் வழக்கப்படி அடிக்கடி முகச்சவரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் படித்துக் கொண்டிருந்த பிள்ளைகள் என்னை நோக்கி மிகவும் ஆச்சர்யப்பட்டனர்.

தமிழ் ஓவியா said...

எப்போது பார்த்தாலும் இவன் மீசையை சிரைத்து விட்டு வருவதன் காரணம் யாதென்று அவர்களுக்குள்ளேயே பலநாள் ஆலோசனை செய்து பார்த்தார்கள். அவர்களுக்கொன்றும் புலப்படவில்லை. கடைசியாக என்னையே ஒருவன் கேட்டுத்தீர்த்தான். உங்கள் குடும்-பத்தில் யாரேனும் வாரம் தவறாமல் செத்துப் போய்க் கொண்டிருக்கிறீர்களா? என்று என்னிடம் வினவினான். அவன் இங்ஙனம் கேட்டதன் காரணத்தை அறிந்து கொண்டு, அப்படியில்லையப்பா! தமிழ்நாட்டில் பிராமணர் மீசை வைத்துக் கொள்ளும் வழக்கமில்லை என்று தெரிவித்தேன்."என்கிறார். (பாரதியார் கட்டுரைகள்). எனவே வடநாட்டு ஆரியர்களின் கலாச்சார முறையைப் பின்-பற்றியே பாரதி மீசையை வைத்துக் கொண்டார் என்பது தெரிகிறது.

ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கோருவதும், வெள்ளையன் கையில் அகப்படாமல் ஓடிஒளிந்து, தலைமறைவு வாழ்கை வாழ்வது-மாக இருந்த பாரதியின் மீசையை வீரத்தின் அடையாளமாக பலர் புகழ்வதைக்கண்டு எப்படி சிரிப்பது எனத் தெரியவில்லை!.

"அச்சமில்லை அச்சமில்லை" என்று அவன் பாடியதை நினைக்கையில், கோழைகள் இருள் சூழ்ந்த பகுதிகளைக் கடக்கும்போது பயம் தொற்றிகொள்ளாமல் இருக்க உரத்த குரலில் பாடிகொண்டோ,பேசிகொண்டோ நடக்கும் பழக்கம் இன்றும் கிராமப்பகுதிகளில் உண்டு. அதுதான் நினைவிற்கு வருகிறது.பாரதியின் "அச்சமில்லை அச்சமில்லை" பாடலும் அந்தவகையில் எழுந்தது தானோ?

பாரதி ஆராய்ச்சி!

திராவிட இயக்கத் தோழர்களே கூட பாரதியின் ஒருசில பாடல் வரிகளை பார்த்துவிட்டு தவறான மதிப்பீட்டுக்கு வந்துவிடுகிறார்கள். 1937 லேயே "பாரதி ஆராய்ச்சி" என்ற தலைப்பில் குடியரசு ஏட்டில் வெளிவந்த கட்டுரை இதற்கு தக்க பதிலாக அமையும்!.

"பாரதியை ஒரு தெய்வமாக பாவித்து, அவருடைய படத்துக்கு மாலைபோட்டு, தீப நெய்வேத்தியங்கூட சிலர் செய்கிறார்கள். இப்படியெல்லாம் செய்வதற்கு காரணம் பார்ப்பனர்களின் சூழ்ச்சிப் பிரச்சாரமும், பொதுமக்களின் குருட்டுத்தனமான முட்டாள் நம்பிகையுமே ஆகும்.

இந்தக் கொண்டாட்டங்களுக்கு முக்கிய காரணம் அவர் ஒரு பார்ப்பனர் என்ப-தேயாகும்.ஒரு பார்ப்பான் எவ்வளவு அயோக்கியனாயிருந்தாலும் , ஒழுக்கங்-கெட்டவனாயிருந்தாலும், துர்பழக்க-முடைய-வனாயிருந்தாலும், பேடியாயிருந்தாலும், பித்துக்குளியாய் இருந்தாலும் அவனைப்பற்றி அவனுடைய குற்றங்களையெல்லாம் மறைத்து "இந்திரன்" என்றும் "சந்திரன்" என்றும் உயர்த்திப் பேசி, எழுதி அதன் மூலம் தங்கள் இனப்பிழைப்புக்கு வழிதேடிக் கொள்கிறார்கள். இந்த அடாத காரியத்துக்கு தகுந்த வசதிகள் அவர்களுக்குத் தாராளமாய் இருக்கின்றன.

மனு ஆட்சி எப்படியாவது ஏற்பட-வேண்டும் என்று பார்ப்பனர்கள் இரவும் பகலும் கனவு கொண்டிருக்கும் பொழுது, அதற்கு உதவியாக எழுதப்பட்டிருக்கும் பாடல்களை பார்ப்பனர்கள் கை நழுவ விடுவார்களா? பாரதி அநேக பாடல்களை குடிவெறியில் பாடியிருக்கிறார்.அவர் நிதான புத்தியோடு பாடவில்லை என்று சுலபத்தில் அறிந்து கொள்ளலாம்.

பார்ப்பனரைப் பற்றி பாரதியின் உண்மையான அபிப்பிராயம் என்னவென்றால் பார்ப்பனரே உயர்ந்த வகுப்பினரென்றும், இந்தியா அவர்களுக்கு சொந்த சொத்து என்றும், அவர்களுடைய ஆரிய பாஷையே உயர்ந்த-தென்றும் கருதியே வந்திருக்கிறார் என்பதுதான்!. பார்ப்பனரின் நிலைமை உயர வேண்டு-மென்பதே அவருடைய நோக்கமென்றும் தெரிகிறது. இதற்கு மாறாக அவரைப்பற்றி நினைத்துகொள்ள "பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே", "தமிழ்மொழி போல் எங்கும் காணோம்" என்ற வரிகள் எடுத்துக்காட்டப் படுமானால் அப்படி இரன்டொன்று பாடியிருப்பதும் கூடக் குடிவெறி என்று தான் சொல்லவேண்டும்"

(குடியரசு 17.10.1937)

- கி.தளபதிராஜ்

தமிழ் ஓவியா said...

ஜாதியைத் தகர்க்கும் மரபணு அறிவியல்

உங்கள் ஜாதிய பெருமைகளை தகர்த்தெறியக் கூடிய மரபியல் ஆய்வுகள் வந்த பின்னர் உயிர்களில் மறைந்துக் கிடக்கும் பல ரகசியங்களை வெளிக் கொணர முடிகின்றது. ஒரு குழந்தையின் மெய்யான பெற்றோர் யார் என்பதையும், வழக்கு விசாரணைகளில் குற்றவாளி யார் என்பதையும், உயிர்கள் தோற்றத்தையும், உயிரினங்களுக்கு இடையிலான தொடர்புகளை விளக்கவும், பல பரம்பரை நோய்கள் தோற்றம் பெறுவது எப்படி என்பதையும், அவற்றை குணப்படுத்துவது முதல் பல துறைகளில் இன்று மரபியல் உதவுகின்றது.மனிதர்கள் இன்று இனம், மதம், ஜாதி எனப் பிரிந்து முரண்பட்டுக் கொண்டாலும் கூட ஒவ்வொருவருக்கும் உள்ள தொடர்புகளை விளக்குவதற்கும் மரபியல் உதவுகின்றது.

வடக்கு ஐரோப்பியரும், அமெரிக்க பழங்குடிகளும் நெருங்கிய இனம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க மரபியல் சமூகம் வெளியிடும் ஜெனடிக்கஸ் என்ற இதழின் நவம்பர் மாத பதிப்பில் வெளியான ஒருக் கட்டுரையில் வடக்கு ஐரோப்பிய மக்களுக்கும் அமெரிக்க பழங்குடிகளுக்கும் தொடர்புகள் இருப்பதை கூறியுள்ளனர். பழைய கற்கால ஐரோப்பிய மக்களுக்கும், தற்கால அமெரிக்க பழங்குடிகளுக்கும் பல தொடர்புகள் இருந்துள்ளன என ப்ராட் படிப்பகத்தின் நிக் பாட்டர்சன் கூறுகின்றார்.

குறிப்பாக 15, 000 ஆண்டுகளுக்கு முன் ஆசியாவின் சைபீரியாவில் இருந்து பெரிங்க் கணவாய் ஊடாக வடக்கு அமெரிக்காவுக்கு நுழைந்தனர் இன்றைய அமெரிக்க பழங்குடிகள் என்றழைக்கப்படும் எஸ்கிமோக்கள், செவ்விந்தியர்கள் ஆவார்கள். அவர்கள் அமெரிக்க கண்டத்தை மட்டும் நிரப்பவில்லை மாறாக வடக்கு ஐரோப்பா வரை அவர்கள் சென்றே உள்ளனர்.

தமிழ் ஓவியா said...

ஹார்வார்ட்டின் மருத்துவ துறையின் மரபியல் பேராசியர் டேவிட் ரெய்க், நிக் பாட்டர்சன் ஆகியோர் இணைந்து நடத்திய DNA ஆய்வினை நடத்தினார்கள். இவற்றில் இரு விதமான மக்களை கணக்கில் எடுத்துக் கொண்டார்கள், ஒரு பிரிவினர் பழங்கால வேட்டை சமூகத்தினரில் இருந்து கிளைத்தவர்கள், மற்றவர்கள் கலப்பில்லாமல் வாழ்ந்து வரும் பழங்கால வேளாண் சமூகத்தினரில் இருந்து வந்தவர்கள். இவற்றில் வேட்டை சமூகத்தினராக இருந்த ஐரோப்பியர்களுக்கும் வடகிழக்கு சைப்பீரியர்கள், அமெரிக்க பழங்குடிகளுக்கும் தொடர்புகள் மிகுதியாக இருந்துள்ளதாம். குறிப்பாக வடக்கு ஐரோப்பாவில் வாழும் இன்றைய பிரித்தானியர்கள், ஸ்காண்டினேவியர்கள், பிரஞ்சினர்கள், மற்றும் சில கிழக்கு ஐரோப்பியர்கள் ஆகியோருக்கும் அமெரிக்க பழங்குடியினருக்கும் தொடர்புகள் பல இருந்துள்ளன என தெரிய வருகின்றது.

"மனித மரபணு பல இரகசியங்களை கொண்டுள்ளது. அது மனித நோய்களை குணப்படுத்துவதற்கு முக்கியமான ரகசியங்களை திறப்பதோடு மட்டுமில்லாமல், நம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தினைப் பற்றிய பல தடயங்களையும் வெளிப்படுத்துகிறது" என ஜெனடிக்ஸ் ( Genetics ) சஞ்சிகையின் முதன்மை ஆசிரியர் மார்க் ஜோன்ஸ்டன்கூறுகின்றார். மனிதர்களை பெருங்கடல்கள் பிரித்திருந்த போதும், நம் முன்னோர்களின் பல இடப்பெயர்வுகளை ஆராயும் போதும், அவற்றின் அம்சங்களை அறியும் போதும் அனைத்து மனிதர்களும் மிக நெருக்கமானவர்கள் என்ற உண்மை வலுவூட்டுவதாக உள்ளது என அவர் மேலும் கூறினார்.

உடைபடும் ஜாதிய தூய்மைவாதம்

இது போன்ற மரபியல் ஆய்வுகள் மிகவும் முக்கியமானவை என்பேன். இவ்வாறான ஆய்வுகள் ஊடாக இனப் பெருமைகள் தகர்த்தெறியப்படலாம், அனைத்து மனிதர்களும் தொடர்புடையவர்கள் என்பதையும், தனித்த தூய இனம் என்ற ஒன்று உலகில் இல்லை என்பதையும் உணர வைக்க முடியும். இவ்வாறான ஆய்வுகள் பலவற்றை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடத்த வேண்டும். ஏனெனில் இன வித்தியாசமில்லாத நிலையில் கூட கற்பனை சாதியக் கோட்பாடுகளால் திருமணங்கள், வாழ்க்கை முறைகளில் சாதியத்தை தக்க வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். ஆனால் உண்மையில் இன மரபியல் ரீதியாக ஒவ்வொரு இனக் குழுக்களும், சாதியக் குழுக்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புப் பட்டே பன்னெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளது என்பதை உணர்ந்தாலே பாதி சிக்கல்கள் தீரும் அல்லவா. குறிப்பாக தாம் சத்திரியர், தாம் சூத்திரர், தாம் பார்ப்பனர் என்ற பெருமிதத்தில் ஜாதியங்களை போற்றி புகழ்ந்து சமூக ஊடகங்களில் பலரும் பேச ஆரம்பித்து-விட்டார்கள். உங்களுக்குத் தெரியுமா உங்களால் அறிவியல் ரீதியாக நீங்கள் இன்ன ஜாதி என நிரூபிக்கவே முடியாது.

நிற்க, நேசனல் ஜியோகிராபிக்கின் மனித ஜீனோம் ( National Geographic Human Genome) திட்டத்தின் படி, உங்களின் முன்னோர்கள் யார் யார் என்பதை அறிந்துக் கொள்ள முடியும்.

http://shop.nationalgeographic.com/ngs/browse/productDetail.jsp? productId=2001246&gsk&code=MR20944 சென்று ஒரு பாக்கெட்டை ஆர்டர் செய்துக் கொள்ளுங்கள்.

அவற்றில் உள்ளவாறு உங்களின் உடல் மரபணு மாதிரிகளை அனுப்பி வையுங்கள். சில தினங்களில் உங்களின் குலம், கோத்திரம் எல்லாவற்றையும் பிட்டு பிட்டு வைத்து ஒரு பொதி வந்து சேரும். பலர் இதனை பரிசோதிக்க அஞ்சுகின்றார்கள், ஏனெனில் இதுவரை தாம் பார்ப்பனர், சத்திரியர், ஆரியர், அரபியர் வெள்ளை இன மேன்மையர் என புகழ்ந்த பலருக்கு தமது மூதாதை கருப்பின நெக்ரிடோ என்பதாக கூட இருந்தது கண்டு அதிர்ந்தார்கள். ஜாதி, இன பெருமைகளை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு இன்று சமத்துவம் பேசத் தொடங்கிவிட்டார்கள்.

- இக்பால் செல்வன்
நன்றி: கோடங்கி இணையதளம்