Search This Blog

27.12.12

ஜாதிகளை ஒழிப்பது எப்படி?புதிதாக மணம் புரிவோர் அனைவரும் கலப்புமணம் செய்யவேண்டும்!


ஜாதியை ஒழிப்பதற்குப் பல அடிப்படையான முறைகள் இருக்கின்றன. ஜாதிப் பட்டங்கள் (அய்யர், முதலியார் பிள்ளை, அய்யங்கார், செட்டியார், நாயுடு, நாய்க்கர், ரெட்டியார், நாடார் முதலியன) சட்ட-பூர்வமாகத் தடுக்கப்பட வேண்டும்.
புதிதாக மணம் புரிவோர் அத்தனை பேரும் கலப்பு மணம் செய்யுமாறு தூண்டக் கூடிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஒரே வகுப்பில், ஒரே ஜாதிப் பிரிவில், திருமணம் செய்பவர்களுக்குப் பல கஷ்டமான நிபந்தனைகளையும், கட்டுத் திட்டங்களையும் விதித்து, அத்தகைய திருமணம் புரிபவர் களுக்குச் சமுதாயத்தில் செல்வாக்கு இல்லாமல் செய்ய வேண்டும். ஜாதிகளைக் குறிக்கும், நெற்றிக் குறி, உடை, பூணூல் முதலிய சின்னங்களையும் சட்ட-பூர்வமாகத் தடுக்கவேண்டும். இவ்வாறு செய்தால்தான் ஜாதிகள் அடியோடு ஒழியும்.

இவை மட்டுமல்ல, ஜாதிக்கு அடிப்படையா யிருப்பது எது? ஹிந்து மதம்! அதை ஆதரித்து நிற்பவை எவை? வேதம், இதிகாசம், சாஸ்திரம், புராணம் முதலிய கட்டுக்கதைகள். இவற்றுக்கு அடிப்படையாக உள்ளவை என்ன? இந்துமதக் கடவுள்கள் என்று கூறப்படும் முழுக் கற்பனைகள். எனவே, இவ்வளவையும் ஆணி வேருடன் பிடுங்கி எறிந்தா லொழிய ஜாதியை எப்படி ஒழிக்க-முடியும்? இவ்வளவையும் காப்பாற்று வதற்காக உள்ள ஒரு சமுதாயமான பார்ப்பனர்களின் வைதீக மனப் பான்மையை மாற்றியாக வேண்டும். அல்லது அவர்களைத் தனியாகப் பிரித்து நீக்கி வைக்க வேண்டும்! ஏன்?
ஜாதிகள் ஒழியவதனால் பாதிக்கப்படுபவர்கள் பார்ப்பனர்களேயாவர். ஜாதி உயர்வு, என்ற அடிப்படையினாலேயே அவர்கள் எல்லாத் துறைகளிலும் முன்னணிக்கு வந்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் கால்நடைகளை ஓட்டிக் கொண்டு, கால்நடையாக வந்த இந்தக் கால்நடைகள் இன்று இந்நாட்டுக் குடிமக்கள் எல்லோரையும் விட ஆயிரமடங்கு உயர்ந்த நிலைமையில் இருப்பதற்குக் காரணம் என்ன? அது மட்டுமா? இன்று பெரிய பெரிய புரட்சிக்காரன் முதல், மகாகனம் போன்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கைக்கூலி வரையில், எல்லா இயக்கங்களிலும் பார்ப்பனர்கள் இருக்கிறார்களே ஒழிய ஜாதியை ஒழிப்பது என்பதைக் கொள்கை யாகக் கொண்டு இடைவிடாத தொண் டாற்றக் கூடிய ஒரு பார்ப்பனராவது இன்று இந்த நாட்டில் இருப்பதாக யாராவது எடுத்துக்கூற முடியுமா என்று அறை கூவிக் கேட்கிறோம். ஹிந்து மதம் ஒழிந்தால் தான் ஜாதி ஒழியும். ஹிந்து மதம் ஒழிந்தால் பார்ப்பனியமும் அதே நேரத்தில் அழிந்து போகும். இதை பஞ்சமா பாதகம் செய்யும் பார்ப்பான் கூட விரும்பமாட்டான்!
இங்கிலீஷ் அரசியல் அமைப்பு என்ற நூலை எழுதிய புரொபசர் டிசே என்பவர் புரட்சி மனப்பான்மையுடையவன் போப் ஆகவே மாட்டான்; போப் ஆகும் மனிதன் புரட்சி செய்ய விரும்பமாட்டான், கூறியிருக்கிறார். அதுபோலவே, பார்ப்பனனாகப் பிறந்தவன் ஜாதிப் புரட்சிக்காரனாக ஆகவே மாட்டான். ஏனெனில், போப்புக்கு உள்ள அதிகாரம், ஆதிக்கம், இவற்றைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாக இந்நாட்டுப் பார்ப்பனர்களுக்கு இருக்கின்றன! இவர்கள் இதர ஜாதிகளைத் தூண்டி விட்டு, பார்! கழுதையும், குதிரையும் ஒன்றாகுமா? அய்ந்து விரல்களும் சரியாகுமா? என்று கூறிப் பிரித்து வைத்துக் கொண்டேதான் இருப்பார்கள். ஒரு கடைசிப் பிராமணன் இந்நாட்டில் இருக்கும் வரையில் இங்கிலீஷ் காரரைப் பின்பற்றி இந்தப் பிரித்தாளும் பித்தலாட்ட வேலையைச் செய்து கொண்டுதான் இருப்பான்! ஜாதிப் பிரிவுகள் பகுத்தறிவுக்கு முரணானவை என்பதையும் பார்ப்பனர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில், பகுத்தறிவுக்கு ஹிந்து சாஸ்திரங்கள் 144 உத்தரவு பிறப்பித்துக்கின்றன.
எந்தப் பிராமணன் தர்க்க சாஸ்திர பலத்தைக் கொண்டு வேதத்தின் உண்மையைப் பற்றிச் சந்தேகிக்கின்றானோ, அப்பேர்ப்பட்ட வேத நிந்தகன் சாதுக்களால் நாஸ்திகன் என்று பகிஷ்கரிக்கப்படுகிறான். என்று மகாபாரதம் கூறுகிறது. எனவே, பார்ப்பான் மட்டுமல்ல எந்த இந்துவுமே பகுத்தறிவுக்கு இடந்தர மாட்டான். இடந் தர முடியாது. இடந்தந்தால் இந்துவாக இருக்க முடியாது!
யார் என்ன சொன்னாலும் ஆயிரக்கணக்கான ஆண்டு களாயுள்ள ஹிந்து மதத்தை அசைக்க எவராலும் முடியாது. எத்தனையோ எதிர்ப்புகளையும், கஷ்டங்களையும் சமாளித்துக் கொண்டு உயிரோடிருக்கிறது நமது ஹிந்து மதம், என்று சர். ராதாகிருஷ்ணன் போன்ற மேதாவிகள் (?) கூறலாம். உயிரோடிருப்பதனால் மட்டும் ஒரு விஷயம் உயர்வான தாய் விடுமா? எவ்வளவோ எதிர்ப்புகளுக் கிடையே எலி, கொசு, ஈ, தேள், பாம்பு, மூட்டைப் பூச்சிகள் கூடத்தான் உயிரோடிருக்கின்றன. மனித சமுதாயமே எதிர்த்து வரும் குடி, விபசாரம் கூடத்தான் உயிரோடிருக்கின்றன? இவை-யெல்லாம் இந்து மதத்தை விடப் புனிதமானவை களா? அதிகப் பலன் தரக் கூடியவைகளா, என்று கேட்கிறோம்.
இறுதியாக ஒன்று கூறுவோம். ஜாதிகளை ஒழிக்க விரும்புவோர் மேடைப் பிரசங்கம் மட்டும் செய்தால் போதாது! கலப்பு மணத்தைத் தவிர வேறு சுயஜாதி மணம் செய்யவே கூடாது. புத்தரும் குருநானக்கும் கூறியதுபோல் வேதமும் சாஸ்திரங்களும் முழுப்பொய் என்று பச்சையாகக் கூறவேண்டும். இவற்றைச் செய்யக்-கூடிய ஆற்றலும், துணிவும், தியாக உணர்ச்சியும் படைத்த இளைஞர்களால் தான் ஜாதியை ஒழிக்க முடியும்? இந்த வேலையைச் செய்பவை தான் நமது திராவிடர் கழகமும், சுயமரியாதை இயக்கமும்.
                             ----------------------- 10.1.1947இல்" விடுதலை"யில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கத்திலிருந்து....

10 comments:

தமிழ் ஓவியா said...

காதல் திருமணங்கள ஊக்குவிப்போம்


மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்களின் சுருக்கம்:

மனிதத் தன்மைக்கு விரோதமான ஜாதி என்னும் பிறவி பேதத்தை முற்றிலும் நிராகரித்து, மனிதர்களாக தமிழ்ப்பெருங்குடி மக்கள் வாழ வேண்டும்.

தீண்டாமை ஒழிப்பு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மிகச் சரியான முறையில், துல்லியமாக செயல்படுத்த வேண்டும்.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக் கென்று ஒதுக்கப்பட்ட நிதியை வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது.

இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தாழ்த்தப் பட்டோர் - பிற்படுத்தப்பட்டோருக்கிடையே பிரித்தாளும் முறையில் சட்டங்களையோ, ஆணைகளையோ இயற்றக்கூடாது.

இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 17ஆவது பிரிவில் தீண்டாமை (UNTOUCHABILITY) ஒழிக்கப்படுகிறது என்று இருப்பதை மாற்றி ஜாதி (CASTE) ஒழிக்கப் படுகிறது என்று அரசியல் சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும்.

ஜாதியைப் பாதுகாக்கும், ஊக்குவிக்கும் கீதை, மனுதர்மம் போன்ற வேத சாஸ்திர, புராண, இதிகாச நூல்களைத் தடை செய்ய வேண்டும் -ஜாதி - தீண்டாமை குற்றமானவை,மனிதநேயத்துக்கு எதிரானவை என்பதை உணர்த்தும் பாடத் திட்டங்களை வகுக்கவேண்டும்.

இடஒதுக்கீடுக்கு மட்டுமே ஜாதி அளவுகோல்- பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டங்களைப் போடக்கூடாது- ஜாதி சின்னங்களை குறிப்பாக பூணூலை யாரும் அணியக் கூடாது. தெருக்கள், ஊர்களில் உள்ள ஜாதிப் பெயர்கள், வணிக நிறுவனங்களில் இடம்பெறும் ஜாதிப் பெயர்கள் நீக்க சட்டம் இயற்றவேண்டும்.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்து கொள்வோர்க்குப் பிறக்கும் குழந்தைகளை ஜாதியற்றவர்களாக அறிவித்து குறிப்பிட்ட சதவிகிதத்தில் அவர் களுக்கு இடஒதுக்கீடு (INTER CASTE QUOTA) அளிக்கப்பட வேண்டும். இந்த வகையான இடஒதுக் கீட்டின் சதவிகிதம் அதிகரித்துக் கொண்டே போக வேண்டும், ஜாதி அளவு கோல் இடஒதுக்கீட்டின் விகிதாசாரம் குறைந்து கொண்டு போகும் வகையில் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வரவேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித்தனி காலனிகளைக் கட்டாது, ஊருக்குள் கட்டித் தரவேண்டும்.

ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்களையும், காதல் திருமணங்களையும் - துணைவரை இழந்தோர், மணமுறிவு பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான திருமணங்களையும் ஊக்குவிப்பது, மன்றல் தேடும் விழாக்களை நடத்துவது, அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது.

ஜாதி, மத மோதல்களைத் தொடக்க நிலையிலே தடுக்கும் வகையில், காவல்துறையில் தனிப் பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டும்

தமிழ் ஓவியா said...

கொள்கை விழா!


தந்தை பெரியார் தனது பிறந்த நாள் ஒவ்வொன்றையுமே தனது கொள்கை யைப் பரப்பும் நாளாகத்தான் கொண்டாடுவார். அவரது தொண்ட ருக்கெல்லாம் தொண்டர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் அப்படியே. பிறந்தநாள் என்றாலே யார் கண்ணிலும் படாமல் ஒதுங்கியே இருந்த ஆசிரியர் 75 ஆவது பிறந்தநாளில் தான் தொண்டர்களின் அன்புக்கட்டளைக்கு ஆட்பட்டார்.

இப்போது 80 ஆவது பிறந்தநாளில் பல்லாயிரம் தொண்டர்கள் வாழ்த்துரைக்க கொள்கை விழாவாகவே டிசம்பர் 2 களைகட்டியது.



காலை 9 மணிக்கு பெரியார் நினைவிடம் அருகே மரக்கன்று நடும் நிகழ்வோடு தொடங்கிய விழாவில் மதியம் 1 மணிவரை ஆயிரக்கணக்கான பெரியார் தொண்டர்கள், இன உணர்வாளர்கள்,திராவிட இயக்க ஆதரவாளர்கள் என குவிந்தனர்.பிறந்தநாள் நாயகர் தி.க.தலைவர் கி..வீரமணி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சால்வைகள், மாலைகளைத் தவிர்த்து பெரியார் தொண்டர்கள் பாதுகாப்பு நிதிக்கு 5 இலட்சம் ரூபாய் நன்கொடை திரண்டது. குருதிக்கொடை, மருத்துவ ஆலோசனை,புற்று நோய்க் கண்டுபிடிப்பு பரிசோதனை உள்ளிட்ட மனிதநேய முகாம்கள் நடந்தன.

மாலை ஈரோடு தமிழன்பன் தலைமையில் கவியரங்கம் நடந்தது. கவிஞர்கள் தமிழமுதன்,யுகபாரதி,கருணாநிதி ஆகியோர் கவிமாலை சூட்டினர்.

தொடர்ந்து தி.க.பொருளாளர் கோ.சாமிதுரை தலைமையில், துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்க, தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் பங்கேற்ற பாராட்டரங்கத்தில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்கத்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் பாராட்டிபேசினர். டாக்டர் கலைஞர் அவர்கள் தனது உரையில், பெரியாருக்குப் பிறகு, அவர் வைத்துவிட்டுப் போன சொத்துக்கள் எல்லாம்; இப்படிப்பட்ட அறக்கட் டளைகள் எல்லாம் என்ன ஆகுமோ? என்று இருந்த கேள்விக்குறிக்கு ஒரே பதில் ஒன்றும் ஆகாது. நான் இருக்கிறேன் என்று தன்னுடைய ஒளிமிகுந்த முகத் தைக் காட்டியவர் தான் என்னுடைய ஆருயிர் இளவல் வீரமணி அவர்கள் ஆவார்கள்!

அவர்களைப் பெற்றிருக் கின்ற இந்த இயக்கத்திற்கு திராவிட இயக்கத்திற்கு எந்த அழிவும் எப்போதும் நேர்வதற்கு இடமில்லை. என்னையும் வெல்லக் கூடிய அளவிற்கு தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் நானே மூக்கில் விரல் வைக்கின்ற அளவிற்கு மிக அற்புதமான அறப்பணிகளை தந்தை பெரியார் அவர்களின் பெயரால் அன்னை மணியம்மை அவர்களின் பெயரால் ஆங்காங்கு ஆக்கியிருக்கிறார். அங்கிங் கெனாதபடி எங்கெங்கும் வீரமணி அவர்களுடைய ஆற்றல் பளிச்சிடுவதை, ஒளிவிடுவதை, பிரகாசித்துக் கொண்டிருப்பதை நான் காணுகின்றேன். திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்து விட வேண்டுமென்று எதிரிகள் இன்றைக்கு முற்படு வார்களேயா னால், அதைத் தடுத்து நிறுத்தக் கூடிய கேடயமாக திராவிடர் கழகம், தளபதி வீரமணி அவர்களுடைய தலைமையிலே இயங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஆகவே எங்களிடத்திலே வாலாட்ட வேண்டு மென்று விரும்புகின்றவர்கள் ஜாக்கிரதை என்று தான் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.நான் இந்த நேரத்தில் தந்தை பெரியார் அவர்க ளுடைய பெயரால் உள்ள இந்த மன்றத்திலே அமர்ந்து சொல்கிறேன். இனி பத்தாண்டு காலத்திற்கு மேல் சாதியை வைத்து எவரும் தமிழ்நாட்டிலே யாரையும் ஏமாற்ற முடியாது. ஏனென்றால் பார்க்குமிடம் எல்லாம், இன்றைக்கு இளைஞர்கள் தயாராகிக் கொண்டு வருகிறார்கள்.

நான் திராவிடர் கழகத்திலே உள்ள இந்த இளைஞர்களையும் பார்க் கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்திலே இன் றைக்கு வளர்ந்து வருகின்ற இளைஞர்களையும் பார்க்கிறேன். அந்த இளைஞர் அணியினர் இன்றைக்கு வேகமாக விறுவிறுப்பாக திராவிட இயக்கத் தின் கொள்கைகளை, சமுதாயக் கொள்கைகளை பின்பற்றக் கூடிய வீராதி வீரர்களாக, இளைஞர் அணியாக வளர்ந்து வருகின்ற காட்சியைப் பார்க்கின் றேன். அவர்கள் எல்லாம் இன்னும் அய்ந்தாண்டு காலத்திற்குப் பிறகு, பத்தாண்டு காலத்திற்குப் பிறகு, இந்த இயக்கத்தை, இந்தச் சமுதாயத்தை வாழ்த்தி, ஏற்று, வளர்த்து நடத்தக் கூடிய ஆற்றலும், அறிவும் பெற்றவர்களாக ஆகி விடுவார்களேயானால் பிறகு சாதிக்கு வேலையே இல்லை. ஜாதியை முன்னிறுத்தி இனி யாரும் அரசியல் நடத்த முடியாது - தருமபுரிகள் நடை பெறாமல் தடுக்கப்பட நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட வேண்டும், என்று உணர்ச்சிமயமான கொள்கைப் பிரகடனத்தை எடுத்துரைத்தார்.

ஏற்புரையாற்றிய கி.வீரமணி அவர்கள் தனது உரையில், நண்பர்களே, எங்களு டைய பிறந்தநாள் விழாக்கள் என்று கொண்டாடப் படுவதோ, இது வெளிச்சம் போட்டு எங்களைப் பாராட்டவேண்டும் அல்லது பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. பாராட்டைக் கேட்பதைவிட எங்களுக்குக் கடினமான தண்டனை வேறு எதுவும் கிடையாது.

சுயமரியாதைக்காரராக இருக்கக்கூடிய எங் களைப் போன்றவர்களுக்குப் இந்தப் பாராட்டு களைக் கேட்டுக் கொண்டிருப்பது இருக்கிறதே அது மிகக் கடினம். வழக்கமாக அதைக் கேட்டும் பழக்கப்பட்டவர்கள் அல்ல,

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நாணயத்தினுடைய இரண்டு பக்கங்களாக இருக்கும். அந்த நாணயத்திற்கு இன்னும் பாது காப்புக் கவசமாக விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் இருக்கும் என்பதுதான் மிக முக்கியம்.

இந்தக் காலகட்டத்தில் ஒன்று மிக முக்கியம் - ஜாதீயம் மீண்டும் தலைவிரித்தாடக் கூடிய நிலை யிலே இருக்கிறது. கொசுவை யாகம் செய்து ஒழித்து விடலாம் என்று நினைக் கிறார்கள். அவர்கள் கொசுவை ஒழிப்பார்களா? நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும். கொசுவை ஒழிக்க வேண்டுமென்றால், அய்யா ரொம்ப காலத்திற்கு முன்னாலே இந்தத் தத்துவத்தை சொன்னவர்.

ஜா(தீ)தி என்று சொன்னால், அது முழுக்க முழுக்க பார்ப்பனர் கொசுக்கள் மூலம் வருகிறது. அது எங்கிருந்து வருகிறது என்றால், இந்து மதம் என்ற சாக்கடையில் இருந்து உரு வாகிறது. அந்தச் சாக்கடையைத் தூர்க்காத வரையிலே, இந்தக் கொசுக்கள் இருக்கின்ற வரையிலே ஜாதியை ஒழிக்க முடியாது. ஆகவேதான், எனக்கு ஒன்றும் தனிப் பட்ட முறையில் அந்த வருணத்தின் மீது கோபம் அல்ல. அவதிப்படுகிறார்களே என்று சொன்னார்.

இன்றைக்கும் ஜாதிக் கொசுக்கள், ஜாதீயம் அப்படித்தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. டெங்கு காய்ச்சல் வந்து ஏன் உயிரிழப்பு ஏற்படு கிறது? கொசுக்களை அழிக்கவேண்டும். கொசுக் களை அழிப்பதற்கு யாரும் தயவு தாட்சண்யம் காட்டக்கூடாது.

இந்தத் திராவிடர் இயக்கத் திற்குப் பெயரே பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்று அன்றைக்கு கிராமத்தில் ஒதுக்குவார்கள். அது எங்களுக்குப் பெருமை. அதைவிட பெரிய பெருமை திராவிடர் இயக்கத்திற்கு வேறு கிடையாது. ஏனென்றால், யார் ஒடுக்கப்பட்ட வனோ, யார் அழிக்கப் படவேண்டியவன் என்று மற்ற ஆதிக்கக் காரர்கள் நினைத்தார்களோ அவர்களுக்குத் தோள் கொடுப்பதுதான் எங்களுக்கு முக்கியம்.

ஆகவேதான், எங்களுடைய திட்டங்கள் வேக வேகமாக அடுத்து தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு என்பதை நோக்கிப் போகும் - 80 வயது ஒரு பொருட்டல்ல - 90 வயது ஒரு பொருட்டல்ல - எங்களுடைய உள்ளமும், உறுதியும்தான் பொருட்டு என்பதற்கு இந்த இயக்கத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

தலைவணங்கி நன்றி செலுத்துகின்றேன்

இளைஞர்களே வாருங்கள்! இந்த அனுபவம் பேசும்; முதிர்ச்சி கைகொடுக்கும். அந்த வகையிலே தான் இனிமேல் ஒரு புதிய திட்டத்தைப் போட்டாக வேண்டும். அது தேர்தலைப் பொறுத்தது அல்ல; அடுத்த தலைமுறையைப் பொறுத்த திட்டமாக, மானமுள்ள மக்களாக நம் மக்களை ஆக்கவேண்டும். திராவிட சமுதாயத்தைத் திருத்தி, மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆக்குவோம் என்று சொன்னார் களே, அதனை உருவாக்க வேண்டும். இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரையிலே சமூகநீதி என்ற அளவுக்கு ஜாதி அளவுகோல் தேவை. அதை வைத்துத்தான் நம்மை அழித்தார்கள் அதிலே. எப்படி ஒரு நோய்க் கொல்லி மருந்திலே ஆண்டிப யாடிக் என்று கொடுக்கக்கூடிய மருந்திலே அளவான விஷத்தை நாம் தேர்ந்தெடுப் போமோ, அதே அளவான விஷத்தை நாம் தேர்ந்தெடுத்து வைத்தால்தான், அந்தக் கிருமியைக் கொல்லும். அந்த மருந்தில் பாய்சன் என்று போட்டிருப்பார்கள். அதுமாதிரி ஜாதி விஷம்தான்; ஆனால், அதை இட ஒதுக்கீட்டிற்கு அளவாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று சொன்னார்.
அதை பலர் இன்று அந்த விஷத்தையே முழுமையாகக் கொடுக்கலாம் என்று நினைக்கிறார்கள். இதனை நம் இயக்கம்தான் பிரச்சாரத்தின்மூலம் தெளிவுபடுத்த முடியும். ஜாதியை அழிப்போம்; இட ஒதுக்கீட்டிற்கு அதை எந்த அளவிற்குப் பயன்பட வேண்டுமோ அதற்கு மட்டுமே அந்த அடையா ளங்கள்; அதுவும் நீண்ட காலத்திற்கு அதைப் பயன்படுத்த வேண்டிய தில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வருவோம் என்ற பெரியார் தத்துவத்தை, திராவிடர் இயக்கத் தத்துவத்தை, சமூகநீதி தத்துவத்தை எடுத்து தெளி வாக முன்வைப்போம் என்பதுதான் மிக முக்கியம். என்று குறிப்பிட்டு, தனது பிறந்தநாள் விழாவில் பெரியாரின் அடிப்படை இலட்சியமான ஜாதி ஒழிப்புக்கு போர் முரசம் கொட்டும் களமாக மாற்றியமைத்தார்.

தமிழ் ஓவியா said...

ஜாதியை ஒழிக்க கை கோர்ப்போம்!


அறைகூவல் விடுத்த தருமபுரி மாநாடு!!

தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் அடித்தளமே ஜாதிகள் ஒழிந்த சமூகநீதியில் கட்டப்பட்டது தான். தனது இறுதி மூச்சு அடங்கும் வரையில் ஜாதி இழிவைப் போக்கவே அவரது முழக்கம் ஓயாமல் ஒழித்தது.அந்தத் தலைவன் உழைத்த மண்ணில் அரசியல் வளர்க்க சிலர் ஜாதிவெறியைத் தூண்டும் அவலம் நிகழ்ந்துள் ளது. தருமபுரி மாவட்டத்தில் வைக்கப்பட்ட அந்தத்தீயை அணைக்க பெரியார் தொடங்கிய திராவிடர் கழகம் களம் இறங்கியது.



பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூக மக்களை உடனடியாகச் சென்று சந்தித்த தி.க.தலைவர் கி.வீரமணி அந்த மண்ணிலேயே ஜாதி ஒழிப்பு-தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெறும் என அறிவித்தார்.

தமிழ்த் தேசியம் என்று ஒரு பக்கம் பேசிக் கொண்டு பிறவியிலேயே ஆண்டாண்டுக் காலமாகத் தீண்டத்தகாத மக்களாக, ஒடுக்கப் பட்ட மக்களாக ஆக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக மற்றவர்களை ஒன்றுபடுத்து வதை முறியடிக்கவும், மனிதனை மனிதனாகப் பார்க்காமல் ஜாதி வெறிக் கண் கொண்டு பார்ப்பது பாசிச நோயின் சேட்டையாகும் இதை கண்டித்தும்டிசம்பர் 9 நாள் தருமபுரியில் ஜாதி ஒழிப்பு தீண்டாமை ஒழிப்பு கருத்தரங்கம் மற்றும் மாபெரும் மாநாடு தொடங்கியது. தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒன்றிணைந்து போராட வேண்டும் ஏன்? என்ற பொதுத் தலைப் பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு பாரதிதாசன் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பெ. ஜெகதீசன் தலைமை வகித்து உரையாற்றினார். சமூகநீதிப் பார்வையில் என்ற தலைப்பில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் பிறைநுதல்செல்வி, அண்ணல் அம்பேத்கர் பார்வையில் என்ற தலைப்பில் ஆதவன் தீட்சண்யா, புரட்சிக்கவிஞர் பார்வையில் என்ற தலைப்பில் இரா. கண்ணிமை, தந்தை பெரியார் பார்வையில் என்ற தலைப்பில் முனைவர் அதிரடி க.அன்பழகன் ஆகியோர் உரையாற் றினர். அன்று

மாலை நடபெற்ற மாபெரும் மாநாட்டில்

மக்கள் உரிமைக்கழகத் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் தொடக்கவுரை நிகழ்த்தினார்.அதில் அவர்,தக்க நேரத்தில் இந்த மாநாட்டை அறிவித்து எழுச்சி யுடன் நடத்துகின்ற திராவிடர் கழகத் துக்கும், அதன் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் நன்றி யையும், பாராட்டு தலையும் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர்,`` இது அரசியல் தேர்தல் கூட்டணியல்ல - மாறாக ஜாதி ஒழிப்புக் கூட்டணி - தீண்டாமை ஒழிப்புக் கூட்டணி - பாதிக்கப்பட்ட, ஒடுக்கப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஆதரவுக் கூட்டணி - இந்தக் கூட்டணியில் ஒன்றுபட்டு நிற்கிறோம்.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களின் தலைமையிலே இவற்றிற்காக நாங்கள் அணி வகுத்து நிற்கத் தயார்.

காதலை எதிர்த்து. ஜாதி சங்கங்களைக் கட்டுவது, கண்டிக்கத்தக்கதாகும். திராவிட என்பதை எதிர்த்துப் பேச ஆரம்பித்துள்ளனர் சிலர் - அதுவும் தவறான கருத்தாகும். திராவிடர் என்பது - ஒரு குறியீடாகும்.

ஜாதியை எதிர்த்து தந்தை பெரியார் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். போராடினார். நூறு ஆண்டு களுக்கு மேலாக இதற்கான இயக்கம் நடத்தப் பட்டுள்ளது.


தமிழ் ஓவியா said...

சமூகத்தின் எதிரிகள் பார்ப்பனீயமும், முதலா ளித்துவமும்தான் என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார்.

28 ஆண்டு காலமாக உள்ள தீண்டாமை ஒழிப்பு வன்முறை கொடுமைத் தடுப்புச்சட்டம் ஓட்டைகள் கொண்டதாக உள்ளது. அது சரி செய்யப்பட வேண்டும்.
காவல்துறையிலும் ஆதிக்க ஜாதிகளின் ஆதிக்கம் காணப்படுகிறது. ஒடுக்கப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடம் இருக்க வேண்டும்.

தருமபுரியில் தாழ்த்தப்பட்டவர் குடியிருப் புகள் கொளுத்தப்பட்டதே - பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றுவர்கள் யார்? செல்லாதவர் கள் யார்? என்பதிலிருந்தே ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டவர் களுக்காகப் பாடுபடவில்லை என்று செய்யப்பட்ட பிரச்சாரம் உண்மையல்ல. அது தவறு என்று இப்பொழுது நிரூபிக்கப் பட்டுவிட்டது. தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்களை நோக்கி நாம் கேட்கும் வினா இதுதான்.

தலித் அல்லாதவர்கள் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டனரே! அப்படியென்றால் தலித்துகள் தமிழர்கள் இல்லையா? என்ற நறுக்கான வினாவை முன் வைத்தார் பேராசிரியர் மார்க்ஸ்.அடுத்துப் பேசிய தி.க.செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தமது உரையில், ``1973 டிசம்பர் 8,9 நாட்களில் அதாவது - இதே நாளில் தந்தை பெரியார் சென்னை யில் தமிழர் சமுதாய இழிவுஒழிப்பு மாநாட்டை நடத்தி அதில் ஜாதி ஒழிப்புத் தீர்மானத்தை நிறை வேற்றினார்.

தீண்டாமை ஒழிக் கப்படுகிறது என்ப தற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று அரசமைப்புச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எடுத்துக் காட்டி,உலகில் தொழில் பிரிவுகள் உண்டு. ஆனால் இந்து இந்தியாவில் தான் தொழிலாளர்கள் ஜாதி யாகப் பிரிக்கப்பட் டனர் என்று தெரிவித்தார்.

அவரை அடுத்து உரையாற்றிய தி.க.துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்,``சமூகநீதிக் களத்தில் தாழ்த்தப் பட்டோர் பிற்படுத் தப்பட்டோர் ஒன்றி ணைந்து போராடி உரிமைகள் பெறுவ தற்கான கடமைகள் உண்டு. குறிப்பாக கோயில் கருவறைக்குள் தாழ்த் தப் பட்டவரும், பிற் படுத்தப்பட்டவரும் நுழைய முடியாது. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம் முடக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுத்துறைகளில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறவில்லை.

மத்திய அரசுத் துறைகளில் 102 செயலாளர்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இடம் பூஜ்ஜியம். கூடுதல் செயலாளர்கள் 113 என்றால், அதில் தாழ்த்தப்பட்டோர் 5, மலைவாழ் மக்கள் 3, பிற்படுத்தப்பட்டோருக்கு ஒரு இடம் கூடக் கிடையாது.

இயக்குநர் பதவிகளில் தாழ்த்தப்பட்டோர் 50, மலைவாழ்மக்கள் 20, இதர பிற்படுத்தப் பட்டோ 29 மீதி 578 இடங்கள் உயர்ஜாதியினர். குறிப்பாக பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில்.

குரூப் ஒன்று பதவிகளை எடுத்துக்கொண் டால், தாழ்த்தப்பட்டோருக்கு 11.5 விழுக்காடு, மலைவாழ் மக்களுக்கு 4.8 விழுக்காடு, இதர பிற்படுத்பட்டோர் 6.9 விழுக்காடு.

தமிழ் ஓவியா said...

இதுபோன்ற தகவல்கள் ஏராளம் உண்டு. ஒரு பிரிவில்கூட தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ள சட்டப் படியான இடங்கள் பிற்படுத்தப்பட் டோருக்கு சட்டப்படியான இடங்கள் கிடைக்கவில்லையே.
தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் இணைந்து போராட வேண்டிய அவசியத்தை இவை உணர்த்த வில்லையா? இந்த அடிப்படை உரிமைகள்பற்றிச் சிந்திக் காமல், கவலைப்படாமல், பாதிப்புக்கு ஆளான இரு பிரிவினர் ஒன்றிணைந்து போராடுவதை விடுத்து, அவர்களுக்குள் மோதலை உருவாக்கும் போக்கு சரிதானா? இதன் விளைவு ஆதிக்கக் காரர்களுக்கு தானே இலாபம்?

தந்தை பெரியார் பெயரை, அண்ணல் அம் பேத்கர் பெயரை உச்சரித்தால் மட்டும் போதுமா? அந்தத் தலைவர்கள் கூறிய கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு ஒன்றுபட்டுக் கருத்தில் நிற்க வேண்டாமா? என்ற வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன்.

திராவிட இயக்கத்தமிழர் பேரவை தோழர் சிங்கராயர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ் மாநிலக் குழு உறுப் பினர் தோழர் ஜி.ஆனந் தன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித்தோழ ரும், சமூக சமத்து வத்துக்கான டாக்டர் கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத், மேனாள் அமைச்சரும் தி.மு.க. செய்தித் தொடர்பாளருமான அ.இரகுமான்கான் ஆகியோர் உரையத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் உணர்ச்சிபூர்வ உரையை வழங்கினார்.

நிறைவாக தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உரையை ஆற்றினார். அவர் தமது உரையில்,``இந்த மாநாட்டை நாங்கள் ஒன்றும் மகிழ்ச்சியாக நடத்திடவில்லை. நடத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். 2012இலும் ஜாதி தீண்டாமையை எதிர்த்து மாநாடு நடத்த வேண்டியுள்ளது என்ற வேதனை ஒருபுறம்; அதே நேரத்தில் இந்தக் கால கட்டத்தில் நடத்தித் தீர வேண்டிய மாநாடு - இது திராவிடர் கழகத்தின் கடமை.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள 12 தீர்மானங்களும் மிகுந்த தொலைநோக்கோடு நிறைவேற்றப்பட்டுள்ளன. மேக்னகார்டா என்று சொல்லத் தக்கது. இத்தீர்மானங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு இந்தியா முழுவதும் பரப்பப்படும்.

மக்களின் சிவில் உரிமைகளுக்காக 1945 முதல் பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1955இலும், 1989இலும் சட்டம் வருகிறது.

மனித உரிமைகள், தீண்டாமை ஒழிப்பு என்ற வகையில் இயற்றப்படும் சட்டங்கள் பிற்காலத்தில் தேவைப் படாதவைகளாக ஆக வேண்டாமா? அப்பொழுதுதானே மனித உரிமைகள் பேணப்படுகின்றன. தீண்டாமைக்கு இடம் இல்லை என்ற பெருமிதமான நிலை உருவாகும்.

இங்கே என்னடா என்றால் எல்லாம் - தலைகீழாக அல்லவா உள்ளன.

தீண்டாமை என்றால் என்னென்ன? எவை வன்கொடுமைகள் என்று வெளியிடப்படும் பட்டியலைப் பார்த்தால் மக்கள் மத்தியில் மோசமான, அநாகரிகமான எண்ணங்களும், உணர்வுகளும் தான் வளர்ந்து வந்திருக்கின்றன என்று நினைக்கக் கூடிய அளவுக்குத் தான் நிலைமைகள் இருந்து வருகின்றன.

தாழ்த்தப்பட்டவர் வாயில் மலத்தைத் திணிக்கும் அளவுக்கல்லவா தீண்டாமைக் கொடுமை வளர்ந்துள்ளது? இதற்காக வெட்கப்பட வேண்டாமா?

தந்தை பெரியார்தான் கேட்டார், நாயைக் கொஞ்சுகிறான், பூனையைக் கொஞ்சுகிறான் மனிதன். ஆனால் தம் சக மனிதனைத் தீண்டத்தகாதவன் என்ற வெறுக்கிறானே இது கொடுமையல்லவா என்று கேட்டார்.

வெளிநாட்டுக்காரன் நம்மைப்பற்றி என்ன தான் நினைப்பான்?

நம் நாட்டு ஜாதி அமைப்பு முறையைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் மிக அழகான வார்த்தையால் படம் பிடித்தார். படிக்கட்டு முறை ஜாதி அமைப்பு முறை.

ஏணியின் உச்சியில் ஒருவன் இருக்கின்றான், அவன் பிராமணன் - பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் இரண்டாவது இடத்தில் இருப்பவன் பிர்மாவின் தோளில் பிறந்த சத்திரியன்; மூன்றாமவன் பிர்மாவின் இடுப்பில் பிறந்த வைசியன், நான்காவது ஆள் சூத்திரன் - பிர்மாவின் காலில் பிறந்தவன் - அதற்கும் கீழ்தான் பஞ்சமன் - தீண்டத்தகாதவன் - அதற்கும் கீழே இருப்பவர்கள் நம் நாட்டுப் பெண்கள்.

தமிழ் ஓவியா said...

மேலே இருப்பவன் கொஞ்சம் ஏணியை அசைத்தால் போதும் முதல் ஆள் இரண்டாவது ஆள்மீது, இரண்டாவது ஆள், மூன்றாவது ஆள்மீது, நான்காவது ஆள் அய்ந்தாவது ஆள்மீதும் விழுகிறான்.

5ஆவது இடத்தில்இருப்பவன் தன்மீது விழுந்த நான்காவது ஆளோடு சண்டைபோடும் நிலை. 4ஆவது ஆளுக்கும், 5 ஆளுக்கும் இடையேதான் சண்டை நடக்கும் இவர்கள் தானே பக்கத்துப் பக்கத்தில் இருக்கின்றனர். நான்காவது ஆளும், அய்ந்தாவது ஆளும் அடித்துக் கொண்டு நிற்கும்போது ஏணியின் உச்சியில் இருக்கிற முதல் ஆள் சர்வ சாதாரணமாக - ஒன்றும் தெரியாதவன் போல், அங்கு என்ன நடக்கிறது, சண்டையா என்று கேட்கிறான்.

அண்ணல் அம்பேத்கர் சொன்ன ஏணிப்படி ஜாதிய அமைப்பு முறை இதுதான். எப்பொழுதும் மூலகாரண கர்த்தாக்களை மறந்துவிடக் கூடாது.

இன்றைக்கு இந்து ஏட்டில் ஒரு செய்தி வெளி வந்துள்ளது. தேனி மாவட்டம் டி.கல்லுப்பட்டியை அடுத்த சிற்றூரில் கயிலாயநாதர் கோயில் - அங்குள்ள பூசாரிக்குத் துணையாக குட்டிப் பூசாரி - தாழ்த்தப்பட்டவர் ஏழு ஆண்டுகளாக அந்தக் கோயிலில் பணி புரிந்து வந்துள்ளார். தலைமைப் பூசாரி வராத நாட்களில் இவரே பூசைகளை நடத்துவதுண்டு.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பிரச்சினையே கிளப்புகிறார்கள். தாழ்த்தப்பட்டவன் எப்படி கோயில் பூசாரியாக இருப்பது என்று கூறி தாழ்த்தப்பட்ட அந்தத் தோழரை தாக்கி இருக்கின்றனர்.

தென் கரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரைப் பெற்றுக் கொண்டதற்கு ரசீது தரப்பட்டது - ஆனால் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் வழக்கை வாபஸ் வாங்குமாறு வற்புறுத்துகிறார்.

பாதிக்கப்பட்ட அந்தத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பூசாரி மதுரையில் உள்ள எவிடன்ஸ் என்ற அமைப்பின் துணையை நாடுகிறார். அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போடுகின்றார்.

இதை அறிந்தவுடன் மேலும் அந்தப் பூசாரிக்கு அழுத்தங்களைக் கொடுக்கின்றனர். முடிவு என்னவென்றால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பூசாரி தூக்கில் தொங்கினார் என்று செய்தி வந்துள்ளது.

நம் நாட்டில் அதிகார வர்க்கம், போலீஸ்கூட யாருக்குத் துணைபோகிறது என்பதைச் சிந்திக்க வேண்டும்.

அதே நேரத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஒரு நிகழ்வு. ஏழு தாழ்த்தப்பட்ட தோழர்களை படகில் ஏற்றிக் கொண்டு போய் கங்கையின் நடுப் பகுதியில் தள்ளிக் கொலை செய்துள்ளனர். ஒரு ஆள் மட்டும் நீந்தித் தப்பிப் பிழைத்துள்ளார். வழக்குப் போடப்படுகிறது. ஒரே ஒருவர் தான் சாட்சி என்பதால் மாவட்ட நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்கிறார். உயர்நீதிமன்றத்திலும் அதே தீர்ப்பு. வழக்கு உச்சநீதிமன்றம் வரைசெல்லுகிறது.

உச்சநீதிமன்றமோ குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அளித்து இப்பொழுது தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழ் ஓவியா said...

30 ஆண்டுகளுக்குப்பின் இப்படி ஒரு தீர்ப்புக் கிடைத்துள்ளது. எனவே சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பி விடலாம் என்று யாரும் மனப்பால் குடிக்க வேண்டாம் - காலந் தாழ்ந்தாவது குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது என்பதை மறக்க வேண்டாம்.

நீங்கள் அரசியல் மூலம் எந்தப் பதவிக்கும் செல்லுங்கள் முதல் அமைச்சர் மட்டுமல்ல. பிரதமராகக் கூடச் செல்லுங்கள் - அதில் எங்களுக்கு என்ன சங்கடம்?
எங்கள் கல்லறைமீது பதவி நாற்காலி போட்டு உட்கார வேண்டும் என்று மட்டும் ஆசைப்படாதீர்கள்.

அடுத்து நாம் எங்கு செல்ல வேண்டும் என்கிற வளர்ச்சியைப் பற்றி சிந்தியுங்கள். கி.மு.க்கு நாட்டை நகர்த்த வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள்.

நாளைக்கே உங்களுக்குப் பிரச்சினை, சங்கடம் என்றால், உங்களைக் காப்பாற்ற நாங்கள்தான் வருவோம்.

எங்கள் தாக்குதல் என்பது தத்துவத்தின் மீது தானே தவிர தனி மனிதர்கள்மீது அல்ல.

தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட் டவர்களும் சரி - இருவரும் யார்? உழைப்பாளி மக்கள்தானே - அடிமை மக்கள்தான் என்பதை ளுநசஎஉந ஊடயளள என்றே குறிப்பிட்டுள்ளார்.

இதனைப் புரிந்து கொள்ளாமல் நாம் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டு சாக வேண்டுமா?

நாங்கள் மாநாடு நடத்துவது நம்மை நாம் தனிமைப்படுத்திக் கொள்ள அல்ல.
நாம் ஒன்றுபட்டு போராடுவோம் - நாம் பெற வேண்டிய உரிமைகள் ஏராளம் உள்ளன என்று பொறுப்போடு அழைப்பு விடுப்பதுதானே இந்த மாநாட்டின் நோக்கம்?

இங்கே பேசிய விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் சகோதரர் திருமாவளவன் எவ்வளவுப் பொறுப்புணர்ச்சியுடன் பேசினார். நான் அதனை மிகவும் பாராட்டுகிறேன்; வரவேற்கிறேன்.

எங்களோடு, இரட்டைக் குழலொடு, மூன்றாவது குழலாக அவர் முழங்குவார்.

மாண்புமிகுகள் வரும் - போகும், மானமிகு என்பதுதான் முக்கியம், அது நிலைக்க வேண்டும் அதற்காகத்தான் இந்தக் கூட்டணி. கிராமம் தவறாமல், ஊர் தவறாமல் நமது ஒற்றுமைக்காக நல்லிணக்கத்துக்காக கருத்துப் பிரச்சாரத்தை, விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்வது தான் இனி எங்களின் முழு மூச்சான வேலை. அந்த வேலையைத்தான் செய்து கொண்டுள் ளோம் என்றால் ஒத்த கருத்துள்ளவர்களோடு கூட்டுப் பணியாகத் தீவிரமாகச் செயல்படு வோம்.

வாருங்கள் சேர்ந்துழைக்கலாம் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.

தமிழர்களின் ஒற்றுமைக்குத் தீ வைக்கும் ஜாதியை ஒழிக்க தக்க தருணத்தில் களம் இறங்கியுள்ளது திராவிடர் கழகம்.வலது கையும் இடது கையும் மோதிக்கொள்ள ஒருபோதும் அனுமதிக்க முடியாது.தமிழ் தேசியங்கள் மவுனம் காக்கும் காலத்தில் திராவிட இயக்கமே தமிழர்களை ஒன்றாக்க மீண்டும் முனைந்துள்ளது.

தமிழ் ஓவியா said...

தர்மபுரி

பாலன் பொறந்த
மண்ணில்
பழியொண்ணு
படிஞ்சிருச்சே!

அப்பு ஒழச்ச
மண்ணில்
அநியாயம்
நடந்திருச்சே!

சாதிவெறி பாம்பு வந்து
சடக்குன்னு
கொத்திருச்சே!

சிறுகுஞ்சப் பருந்து வந்து
திடுக்குன்னு
எத்திருச்சே!

கல்லூடு கட்டுறது
ஒங்க
கண்ணுக்குப்
பொறுக்கலியோ!

கல்லூரி செல்லுறது
ஒங்க
கருத்துக்கு
ஒறுக்கலியோ!

அகம் புறமா
வாழ்ந்த
இனம்
அடிபட்டுச்
சாகுதே

குறுந்தொகைய
படிச்ச மனம்
இடிபட்டு
வேகுதே!

எரிச்சவுக மூளையில
எருக்கு
முளச்சிருக்கோ!

இடிச்சவுக கைகளில
எலந்த
கௌச்சிருக்கோ!

எதுல ஒசத்தின்னு
எனக்கெடுத்துச்
சொல்வீரோ!

எதுத்தா பேசுறன்னு
என்னையுந்தா
கொல்வீரோ!

அடங்கமறு காலத்துல
அடக்கி விட
முடியாது!

அத்துமீற
துணிஞ்சுபுட்டா
அடிதடிக்கு
முடிவேது!

ஊரு திருந்தாம
உருப்படவே
முடியாது!

சாதி ஒழிக்காம
தமிழிருட்டு
விடியாது!

- அறிவுமதி
(நன்றி : குமுதம்)

anbu thamizh@gmail.com said...

கலப்புத்திருமணம் செய்தா; சாதி ஒழியாது ஓவியா ,,கலப்புத்திருமணம் செய்த எல்லாரையும் தமிழக அரசிடமிருந்து பெற்ற சாதி சான்றுகளை ,திரும்ப அரசிடம் ஒப்படைக்கவேண்டும் ,,தங்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது சாதி மதம் கேட்க்காத விண்ணப்ப படிவம் [உள்ளது ]அதனை கேட்டு விண்ணப்பிக்கவும் ..குழந்தைகளின் சாதி மறந்துவிடும் ,நாமதான் அரசின் இலவசங்களுக்கும் ,இட ஒதுக்கீட்டிற்கும் ,சாதியை பெருமையாக சொல்லிக்கொல்கிறோமே~~சாதியின் பெயரைperumaiyaaga சொன்னதால் கிடைக்கும் ..,,எந்த ஒரு சாதிய போராளிகள்.தலைவர்கள் ,ஏன் ,,ஈ ,வே, ராமசாமி கூட போராடவில்லையே !!சாதியை ஒழிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் ஒரே ஒரு அறிக்கை ,,சாதியை தரக்குறைவாக கருதுபவர்கள் [கடந்தகாலங்களில் l தொல், திருமாவளவன் ஒரு அறிக்கைவிட்டுthamizhpeyaraaga மாற்றினார் ]அதுபோல் கலப்புத்திருமணம்செய்த எல்லாரையும்மிழக அரசிடமிருந்து பெற்ற சாதி சான்றுகளைதிரும்ப அரசிடம் ஒப்படைக்கஅறிக்கைவிட்டுசாதியை ஒழிக்கலாம் செய்துபாரும்
\