Search This Blog

14.12.12

பார்ப்பனர்கள் ஜாதி ஒழிப்பு வீரர்களா?


பார்ப்பன ஏடுகளுக்கு இப்பொழுது ஜாதி ஒழிப்பின்மீது கவலை வந்ததாகக் காட்டிக் கொள்கிறார்கள். இந்த வார துக்ளக்காக இருந்தாலும் சரி, ஆர்.எஸ்.எஸின் விஜயபாரதமாக இருந்தாலும் சரி ஒரே படகில் பயணம் செய்வதை அறிய முடிகிறது.

60 ஆண்டு காலமாக திராவிடக் கட்சிகளின் காலத்தில்தான் ஜாதி - வெறியூட்டும் கருவியாக மாறியுள்ளதாம் - சொல்லுகிறது ஆர்.எஸ்.எஸ். இதழ்.

ஒரு கேள்வி: ஜாதிபற்றி விஜயபாரதம் பிரதிநிதித்துவம் படும் இந்துத்துவாவின் கருத்து என்ன? முதலில் அதனைச் சொல்லி விட்டு, இதில் மூக்கை  நுழைப்பதுதான் அறிவு நாணயம், அதனைப் புறந்தள்ளி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் எத்து வேலையில் இறங்க நினைக்கக் கூடாது.
இவர்களின் குருநாதரான கோல்வாக்கர் என்ன கூறுகிறார்? இந்துத்துவாவின் வேத நூல் என்ற கூறப்படும் Bunch of Thoughts எனும் நூல் என்ன கூறுகிறது?
பழங் காலத்தில் ஜாதி அமைப்பு முறை இருந்தபோது அதன் உச்சியில் இருந்தோம். ஜாதி அமைப்பு முறை முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையாக இருக்கவில்லை. ஜாதி அமைப்பு முறை சமூகத்தில் ஒற்றுமையைக் கட்டிக் காக்கிறது என்று சொல்லியிருக் கிறாரே - அதற்கு என்ன பதில்?

வெகுதூரம் போவானேன்? மறைந்த இவர் களின் காஞ்சிப் பெரியவாள் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஜாதியையும் தாண்டி தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறியுள்ளாரே - அந்தக் கருத்துத் தவறானது. நாங்கள் ஏற்றுக் கொள்ள வில்லை என்று விஜயபாரதம் துக்ளக் இதழோ அடுத்த இதழில் வெளிப்படுத்தத் தயாரா?

இன்னும் ஆவணி அவிட்டம் என்று ஒரு நாளை ஆண்டுக்கொரு முறை ஏற்பாடு செய்து பூணூலைப் புதுப்பித்துக் கொள்ளுவது ஜாதி ஒழிப்புக்கான சபதமா?

ஆம், நாங்கள் துவி ஜாதிதான் - இரு பிறப்பாளர்கள்தான். பிர்மாவின்  நெற்றியில் பிறந்தவர்கள்தான் - சூத்திரர்களாகிய நீங்கள் அடிமை மக்கள்தான், வேசி மக்கள்தான் என்று கூறாமல் கூறும் கூட்டம் திராவிடக் கட்சிகளால் ஜாதி வெறியூட்டப்படுகிறது என்று எழுதுகிறார்கள் என்றால், இவர்களைவிட கடைந்தெடுத்த மோசடிப் பேர் வழிகள் வேறு உண்டா?

ஜாதியை ஒழிப்பதற்காகத்தானே திராவிட ஆட்சி அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை பெற வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்களின் கருத்தினை ஏற்று சட்டம் செய்தது?

அதனை எதிர்த்து இன்று வரை அந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றம் சென்று முடக்கிய வர்கள் பார்ப்பனர்கள் தானே? அந்த நிலைப் பாட்டை இன்று வரை ஆதரிக்கிறவர்களா - கரு வறைக்குள், பார்ப்பனர்களின் ஜாதி ஆதிக்க ஆணவத்தைப் பாதுகாத்து வருபவர்களா - திராவிடர் இயக்கத்தைக் குறை கூறுவது?

பார்ப்பனர் சங்கம் மாநாடு கூட்டி, அரிவாளைத் தூக்கிக் காட்டி வன்முறை வெறியாட்டம் போட்ட போது இந்த துக்ளக்கோ, விஜயபாரதமோ ஒரு வரி கண்டித்து எழுதியதுண்டா?

திராவிடர் இயக்கம்தான் மக்கள் மத்தியில் ஜாதி, தீண்டாமையை எதிர்த்து விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை செய்து வந்திருக்கிறது.

தாழ்த்தப்பட்டோர் - மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்குச் சென்று அவர்களின் வாழ்வு - தாழ்வுகளில் பங்கு ஏற்றார்கள்.

தாழ்த்தப்பட்டவர்கள் தன்னைத் தீண்டி விடக் கூடாது என்று கால்களில்  துணிகளைச் சுற்றிக் கொள்பவர் தானே (தாழ்த்தப்பட்டவர் பகுதிக்குச் சென்றதாக பெருமைப் பாட்டு வேறு!) இவர்களின் ஜெகத் குரு?
வெகு தூரம் போக வேண்டாம். காஞ்சி மடத்துக்குள் தாழ்த்தப்பட்ட தோழர் ஒரே ஒருவருக் குப் பணியமர்த்தம் செய்வார்களா?

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயலும் பார்ப்பனர்களிடம் எச்சரிக்கை தேவை!

                               ---------------------------------"விடுதலை” தலையங்கம் 14-12-2012

21 comments:

தமிழ் ஓவியா said...


விடுதலைபற்றி ஒரு வாசகர்


நான் நம் விடுதலை நாளித ழின் சந்தாதாரராக இருந்து வருகிறேன்.

நான் 33 ஆண்டுகள் தினத்தந்தியில் மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவன்.

விடுதலை இதழ் மிகவும் நன்றாக உள்ளது. ஒப்புக்காக இதைச் சொல்லவில்லை இதில் வரக் கூடிய மருத்துவப் பகுதி மகளிர் அரங்கம் எல்லாமே தனித் தன்மையுடன் மிக நல்ல முறையில் உள்ளது. கூடியவரை ஒரு வரியைக்கூட விடாமல் படித்து விடுவேன். அத்துடன் பக்க அமைப்பு நன்றாக இருப்பதுடன், படங்களும் தெளிவாக அச்சா கின்றன.

ஆசிரியர் குழுவிற்கு என் பாராட்டுடன் நன்றியையும் தெரி வித்துக் கொள்கிறேன்.

- ஜெ. மேகநாதன்
மெய்ஞானபுரம் (தூத்துக்குடி)

தமிழ் ஓவியா said...


மின்வெட்டை நீக்கி வெப்பமயமாதலைக் குறைக்கும் ஆல்கே (பாசி)!


பிரெஞ்சு நாட்டு அறிஞர் கண்டுபிடிப்பு

உலகம் வெப்பமயமாதல் பிரச் சினையால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது என்பதை பல்வேறு அறிவி யல் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தி வருகின்றன. இதற்குக் காரணம் உலகம் முழுவதும் அதிகரித்தும் வரும் வாகனப் பெருக்கம். இது மட்டும் இல்லாமல் வாழ்விடங்களுக்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் மரங்களை வெட்டி, காடுகளை அழிப்பதும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. மேலும் வாகனங்கள், தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் - டை - ஆக்சை டால், வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவுதான் ஆர்டிக், அண்டார்டிகா போன்ற துருவப் பகுதிகளில் உள்ள ஆர்டிக்கடலில் பனிப் பாறைகள் அதிக அளவு உருகி வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டு களில் இப்பகுதிகளில் உள்ள பனிப் பாறைகள் முழுவதுமாக உருகி கடல் நீர் உயரக்கூடும். இதனால் அண்டார் டிக்காவை சுற்றியுள்ள பகுதிகள் அழி யும் சூழல் உருவாகியுள்ளதாக நிபுணர் கள் அச்சம் தெரிவித் துள்ளனர்.

வெப்பமயமாதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதால் பருவ நிலை மாற்றங்கள் ஏற்பட்டு, மழை பொய்த்து வருகின்றது. இது மட்டு மல்லாமல் சுனாமி போன்ற பேரிடர் களுக்கும் வெப்பமயமாதல் ஒரு காரண மாக உள்ளது. இந்த வெப்பமாயா குறித்து விவாதிக்கும் அய்.நா. சபை யின் பருவநிலை மாற்ற மாநாட்டின் 18ஆவது அமர்வு கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நவம்பர் 26ஆம் தேதி முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 1995ஆம் ஆண்டு ஜப்பானில் கியோட்டா நகரில் நடந்த மாநாட்டில் அமெரிக்கா தவிர மற்ற உலக நாடுகள் ஒப்புதலோடு உருவான கியோட்டா ஒப்பந்தத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பது என தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. வெப்பமய மாதலுக்கு வளரும் நாடுகளை விட வளர்ந்த நாடுகள் தான் பெரிய அளவில் காரணமாக உள்ளன. இதனால் வளர்ந்த நாடுகள் தங்களது நாட்டில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கரியமில வாயுவின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இதற்கு பெரும்பாலான நாடுகள் ஒப்புக் கொண்ட நிலையில் அமெரிக்கா தொடர்ந்து இந்த ஒப்பந் தத்தை ஏற்க மறுத்து வருகிறது.

இந்நிலையில் வெப்பமயமாதலில் இருந்து சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் வகையிலும் மின்வெட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலும் பிரஞ்ச் நாட்டு அறிவியல் அறிஞர் பியரி கலேஜா ஆல்கேக்கள் என்ற பாசியின் மூலம் ஒளிரும் பல்ப்பையும், மின்சாரத்தை தயாரிக்கும் முறையையும் கண்டறிந்துள் ளார். கடந்த 20 ஆண்டுகளாக கலேஜா நுண்ணுயிரி வகையான ஆல்கேக்கள் என்ற பாசிகளை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த வகையான ஆல்கேக்கள் நமது பூமியில் 300 கோடி ஆண்டுகளாக இருந்து வருவதை படி மங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அது மட்டும் இல்லாமல் இந்த ஆல்கேக்கள் அதிக அளவு ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. இந்த ஆல்கேக்கள் புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான கார்பன் -டை - ஆக்சைடை ஒளிச்சேர்க் கையின் போது எடுத்துக்கொண்டு மனித குலத்திற்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. மேலும் இந்த மைக்ரோ ஆல்கேக்கள் எனப்படும் பாசிகளை வளர்ப்பது மிகவும் எளிது. இதனை உயிரி எரியாற்றலாகவும் பயன்படுத்தலாம் என்கிறார் கலேஜா.

இந்த ஆல்கேக்கள் எனப்படும் பாசிகளால் உருவாக்கப்பட்ட விளக்கு ஒன்றையும் கலேஜா வடிவமைத் துள்ளார். இந்த மின் விளக்குகள் ஒளி தருவதோடு மட்டும் நின்று விடாமல் காற்றில் உள்ள கார்பன் -டை -ஆக் சைடையும் உறிஞ்சிக்கொள்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தண்ணீ ரில் வைக்கப்படும் இந்த ஆல்கேக்கள் காற்றில் இருக்கும் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி, சூரியனின் ஒளியை பெற்றும் ஒளிச்சேர்க்கையின் மூலமாக மின் ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இந்த மின் ஆற்றலை பேட்டரிகளில் சேகரித்து வைத்து தேவையின் போது இரவு நேரங்களில் இவ்விளக்கை ஒளியூட்டலாம். தேவை யின்போது மட்டும் அந்த மின் ஆற் றலைப் பயன்படுத்த ஏதுவாக இவ் விளக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதில் இருந்து வெளியேற்றப்படும் வாயு வெறும் ஆக்சிஜன் மட்டுமே. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு தயாரிக்கப்படும் ஒரே ஒரு பாசி விளக்கு மட்டும் ஆண்டிற்கு ஒரு டன் கார்பன் -டை- ஆக்சைடை உறிஞ்சுகிறது. இந்த பாசி விளக்கு மக்கள் தங்களது தேவைக் கேற்ற வடிவில் உருவாக்கிக் கொள்ள லாம் என்பது இதன் தனிச்சிறப்பு. மனிதர்கள் இதுவரை பயன்படுத்தி வந்த எரிபொருள், மின்சாரம் போன்ற வற்றிற்கு மாற்று உருவாக்குவதற்கான தேவை தற்போது தீவிரமடைந்து வருகிறது. இச்சூழலில் இந்த புதிய கண்டுபிடிப்புக்கு அரசாங்கங்கள் உரிய கவனம் செலுத்தி அதனைப் பரிசீலிக்குமானால், மின்சாரத் தேவை பூர்த்தியடைவதோடு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.
நன்றி: தீக்கதிர் 11.12.2012

தமிழ் ஓவியா said...


பார்ப்பன தர்மம்


பார்ப்பன தர்மம் என்பதே கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு, புரட்டு, பித்தலாட்டம், துரோகம், அசிங்கம், ஆபாசம், நம்பிக்கைக் கேடு, நாணயக் கேடு ஆகிய கூடாத காரியங்களை, குணங்களை அடிப்படையாகக் கொண்டே ஏற்பாடு செய்யப்பட்டவை என்றே சொல்லக்கூடியவையாக இருக்கின்றன. (விடுதலை, 5.1.1966)

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் தகுதித் தேர்வு

ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம் தேர்வு செய்யப்பட்ட 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணையை முதல் அமைச்சர் வழங்கியுள்ளார் (13.12.2012).

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக் கொன்று தொடுக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு பின்பற்ற வில்லை என்பது உட்பட பல்வேறு குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

இதுகுறித்து பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்குத் தாக்கீதும் அனுப்பியுள்ளது. இதுகுறித்து கல்வி அமைச்சர் என்.ஆர். சிவபதி கூறுகையில் விரல் நீட்டி சுட்டிக்காட்டி குறை சொல்ல முடியாத அளவுக்குத் தேர்வு நடைபெற்றுள்ளது என்று சொல்லியுள்ளாரே தவிர, இடஒதுக்கீடு மாற்றுத் திறனாளி களுக்கு தகுதி மதிப்பெண்கள் சலுகை தொடர்பான குற்றச் சாற்றுகளுக்கு நேரிடையான பதில் இல்லையே - ஏன்?

தமிழ் ஓவியா said...

படிக்கட்டில் பயணம்

படிக்கட்டுகளில் பயணம் செய்வதால் ஏற்படும் பரிதாப மரணங்கள்பற்றி அன்றாடம் செய்திகள் வந்தும்கூட அதனைச் சற்றும் பொருட்படுத்தாது அந்தப் பயணம் இறுதிப் பயணமாக இருக்கக் கூடுமே என்பதுபற்றிக் கூடக் கவலைப்படாமல் மாணவர்கள் பயணிக்கிறார்களே - என்ன சொல்ல! நேற்று மட்டும் இந்த வகையில் 5209 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம். ரூ.100 அபராதம் என்ற வகையில் 5,20,900 ரூபாய் போக்குவரத்துத்துறைக்கு வருவாய் கிடைத்துள்ளதாம்!

ஒரு நாளோடு நின்றுவிடக் கூடாது (பொது இடங்களில் சிகரெட் பிடிக்கக் கூடாது என்பதுபோல) கெடுபிடியாக இருக்க வேண்டும் நடவடிக்கைகள்.

கல்வி நிறுவனங்களிலும் இதுபற்றி மாணவர்களுக்கு இதமாக - பதமாக எடுத்துக் கூறலாம் அல்லவா! வெறும் நெட்டுருப் படிப்பு எதற்கு? வாழ்க்கையைப் படிக்க முதலில் கற்றுக் கொடுங்கள்.

தமிழ் ஓவியா said...

சந்திரனில் நதி

சனிக்கிரகத்தில் துணைக்கோளான சந்திரனில் (டைட்டன்) நதி இருப்பதை நாஸா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்குப் பிறகாவது சனீஸ்வர பகவான். சிவபெருமான் சூடியிருக்கும் சந்திரன் என்ற அக்கப் போர்களை ஆழக்குழி தோண்டிப் புதைப்பார்களா?

சந்திரன் தலையில் ஆம்ஸ்ட்ராங் காலடி எடுத்து வைத்த போது, சிவபெருமான் அந்த விஞ்ஞானியை என்ன செய்தானாம்?

தமிழ் ஓவியா said...

அய்யப்பா!

சென்னை எழும்பூர் சென்னை சென்ட்ரல் இரயில் நிலை யங்களில் ஓர் அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

ரயிலில் பயணம் செய்யும்போது, அய்யப்பப் பக்தர்கள் இரு முடிக்குக் கற்பூரம் ஏற்றி, தீபாராதனை செய்யக்கூடாது; கழிவறையில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் என்பது தான் இந்த அறிவிப்பு.

ஏனிந்த அறிவிப்பு? அய்யப்பப் பக்தர்கள் இந்தக் காரியங்களை எல்லாம் செய்கின்றனர் என்பதனால்தானே!

பக்தி இருக்கிறதே தவிர பண்பாடு நன்னடத்தைகள் இல்லை என்பது தெரிந்து விட்டதே - அதிகாரப் பூர்வமாக!

தமிழ் ஓவியா said...

அய்யப்பா!

சென்னை எழும்பூர் சென்னை சென்ட்ரல் இரயில் நிலை யங்களில் ஓர் அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

ரயிலில் பயணம் செய்யும்போது, அய்யப்பப் பக்தர்கள் இரு முடிக்குக் கற்பூரம் ஏற்றி, தீபாராதனை செய்யக்கூடாது; கழிவறையில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் என்பது தான் இந்த அறிவிப்பு.

ஏனிந்த அறிவிப்பு? அய்யப்பப் பக்தர்கள் இந்தக் காரியங்களை எல்லாம் செய்கின்றனர் என்பதனால்தானே!

பக்தி இருக்கிறதே தவிர பண்பாடு நன்னடத்தைகள் இல்லை என்பது தெரிந்து விட்டதே - அதிகாரப் பூர்வமா

தமிழ் ஓவியா said...

மாற்றம்

ஒரே வருடத்தில் மூன்று ஆணையர்கள் மாற்றம் என்றால் சாதாரணமா? சென்னை மாநகராட்சிக்கு ஒரே ஆண்டில் மூன்று ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர். புதிதாக வந்துள் ளவர் தொழிற்துறை செயலாளராக இருந்த விக்ரம்கபூர்

மாற்றம் என்பதுதான் மாறாது என்பது இதுதானோ!

தமிழ் ஓவியா said...

ரஜினிகாந்த்

அரசியலுக்கு வருவதாக பொய் வாக்குறுதி அளிக்க மாட்டேன். - ரஜினிகாந்த் அறிவிப்பு

அப்பாடா நல்ல செய்தி! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


நடக்கிறதா?

செய்தி: நாடாளுமன்றத்தை குறைந்தது 100 நாள் நடத்தும் திட்டமில்லை என்பது மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.

சிந்தனை: எத்தனை நாள் நடக்கிறது என்பது இருக்கட்டும்; அறிவிக்கப்பட்ட நாள்களில் ஒழுங்காக நடத்த முடிகிறதா என்பதைச் சொல்லுங்கள்.

தமிழ் ஓவியா said...


தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் : கலைஞர் பேட்டி


சென்னை, டிச.14- நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகளின் அணி குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் செய்தியாளர் களிடம் நேற்று தெரிவித்ததாவது: செய்தியாளர் :- இன்றைய செயற்குழுவில் கலந்து கொண்டோர் எண்ணிக்கை?

கலைஞர் :- இன்றைய செயற்குழுவிற்கு அழைப்பு அனுப்பப்பட்டவர்கள் 324 பேர். அவர்களில் வருகை தந்தவர்கள் 266 பேர். சிறப்பு அழைப்பு அனுப்பப்பட்டவர்கள் 42 பேர். அவர் களில் வருகை தந்தோர் 31 பேர்.

செய்தியாளர் :- முக்கியத் தீர்மானமாக டிசம்பர் 18ந்தேதியன்று அறப்போர் ஆர்ப்பாட் டத்தை அறிவித்திருக்கிறீர்கள். அந்தப் போராட்டம் எப்படி இருக்கும்?

கலைஞர் :- அறப்போர் ஆர்ப்பாட்டம் அமை தியாக முழக்கம் செய்கின்ற போராட்டமாக இருக்கும். அந்தந்தப் பகுதிகளுக்கேற்றவாறு, அமைதியான முறையில் முழக்கம் செய்தும், சட்டம் ஒழுங்கு இவற்றுக்குக் கட்டுப்பட்டும் ஆர்ப் பாட்டங்கள் நடத்தப்படும். குக்கிராமங்களில்கூட கழகக் கொடிகளோடும் - கழகத்தினர் இந்தப் போராட்டங்களில் ஆங்காங்கு ஈடுபடுவார்கள்.

செய்தியாளர் :- சென்னையில் நடை பெறும் அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் நேரடியாக நீங்கள் கலந்து கொள்கிறீர்களா?
கலைஞர் :- இன்னும் அதைப் பற்றி முடிவு செய்யவில்லை.

நில அபகரிப்புப் புகார்

செய்தியாளர் :- அ.தி.மு.க. அரசு பொறுப் பேற்றவுடன், நில அபகரிப்புப் புகார் கூறி எதிர்க் கட்சியினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத் தார்கள். ஆனால் இப்போது இரண்டு அமைச் சர்கள் மீது நில அபகரிப்புப் புகார் வந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையே?

கலைஞர் :- தவறான இடத்தில் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்.

செய்தியாளர் :- அ.தி.மு.க. அரசு, எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இரட்டை இலை நினைவுச் சின்னத்தை பெரிதாக வைத்திருக்கிறார்கள். அரசு செலவில் அது கட்டப்பட்டதாகச் சொல் கிறார்கள். அதைப் பற்றி எதுவும் தீர்மானத்தில் இடம் பெற வில்லையே?

கலைஞர் :- இதுபற்றி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதாக செய்திகள் வந்துள்ளன. எனவே அதிலே நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்ப வில்லை.

செய்தியாளர் :- தமிழக அரசு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் சொன்னார். ஆனால் அவருடைய ஆட்சியில் அண்ணா நகரில் வால்மார்ட் நிறுவனத்தின் அலுவலகம் தொடங்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின் றன. எனவே ஜெயலலிதா வால்மார்ட் நிறுவனத் திற்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கிறார் களா?

கலைஞர் :- இன்றைய தீர்மான வாசகத் திலேயே உங்களின் இந்தக் கேள்விக்கான விடை அடங்கியிருக்கிறது.

செய்தியாளர் :- சிங்கள ராணுவம் யாழ்ப் பாணம் பல்கலைக் கழக மாணவர்களைத் தாக் கியதையொட்டி, அந்த மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அதன் காரண மாக சிங்கள அரசு அங்கேயுள்ள தமிழர்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதாக செய்திகள் வருகிறதே?

கலைஞர் :- இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றியும், சிங்கள ராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்தும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி யிருக்கிறோம். அதைப் படித்துப் பாருங்கள். செய்தியாளர் :- மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க., ஏன் மத்திய அரசிடம் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று தமிழகத்திற்குக் கொடுக்கக் கூடாது?

கலைஞர் :- மின்சாரத்தை ஒரு மாநிலத்தி லிருந்து இன்னொரு மாநிலத்திற்குக் கொண்டு வருவதற்கு, அதற்கான வழிவகைகள் முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். மத்தியிலே இருக்கும் மின் சாரத்தை தென் கோடியிலே உள்ள ஒரு மாநிலத் திற்குக் கொண்டு வருவதென்றால், அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த ஏற்பாடுகளை உடனடியாக செய்து விட முடியாது. தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து மின்சாரம் பெற வேண்டுமென்றால், அந்த மின்சாரத்தைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடு களை முன் கூட்டியே செய்திட வேண்டும்.

செய்தியாளர் :- அந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்று அதிமுக ஆட்சி யாளர்கள் பிரத மருக்கு கடிதம் எழுதியிருக் கிறார்கள். அந்த நடவடிக்கையை துரிதப் படுத்த வேண்டுமென்று தி.மு.க., மத்திய அரசிடம் வலியுறுத்துமா?

கலைஞர் :- நிச்சயமாக - தமிழ்நாட்டின் நன்மைக்காக எதையும் வலியுறுத்த தி.மு.க. தயாராக இருக்கிறது.

மதவாதக் கட்சிகள்

செய்தியாளர் :- வருகின்ற நாடாளு மன்றத் தேர்தலில் மதவாதக் கட்சிகள் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க, தமிழகத்திலே உள்ள மதசார் பற்ற கட்சி களையும், தி.மு.க. கூட்டணியிலே தற்போது இல்லாத கட்சிகளையும் ஒன்றி ணைத்து, ஒரு பலமான கூட்டணியை அமைக் கும் முயற்சியிலே நீங்கள் ஈடுபடுவீர்களா?

கலைஞர் :- நீங்கள் சொன்ன மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து அந்த முயற்சியிலே ஈடுபட்டால், அதனை நாங்கள் ஊக்கப்படுத்து வோம்.
-இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார்.

தமிழ் ஓவியா said...

சங்கராந்தி!


பொங்கல் விழாவைத் தமிழர் திருநாள் என்றும், உழைப்பின் உயர்வை உலகுக்கு அறிவிக்கும் நாள் என்றும் தந்தை பெரியார் அவர்கள் அறிவித்து, அவ்விழாவிற்கு நாட்டில் ஒரு புதுமரியாதையை ஏற்படுத் தினார்கள்.

ஆனால், அதையும் விட்டு வைத்தார் களா இந்த பார்ப்பனத் திமிங்கலக் கூட்டம்? அதிலும் மதச் சேற்றைப் போட்டுக் குழப்பி, சங்கராந்தி என்று பெயரிட்டு, தங்கள் முத்திரையைக் குத்தி வைத்து இருக்கின்றனர்.

அந்த மத நாற்றத்தை இதோ கேளுங்கள்.

சூரியன் தனு ராசியில் சஞ்சரிக்கும் காலம். இது தேவர்களுக்கு விடியற் காலம். மகாசங்கிராமேசக்தி எனும் சக்தி தஷிணாயனம் ஆறு மாதத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களை புலி உருவாயும் வருத்தி வந்ததினால், அத்துன்பம் ஈஸ்வரானுக் கிரகத்தால் நீங்கினதால், தை மாதம் முதல் தேதி ஜனங்கள் அக்காலத்து விளைந்த புதுப்பொருள்களால் சூரியனை ஆராதித் தனர்.

அச்சக்தி பசுக்களை புலியுருவமாய் அதஞ் செய்திருந்தபடியால், அப்பசுக் களைக் கொண்டு, அப்புலியுரு கொண்ட சக்தியை ஓட்டின நாள். இதனை மாட்டுப் பொங்கல் என்பர்.

இவ்வாறு அன்றி, இந்திரன் மழை வருஷிப்பவன் ஆதலால், அவன் செய்த நன்மை பொருட்டு தை மாதம் முதலில் அறுத்த, முதல் பயிரை மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு ஆராதித்து வந்தனர் எனவும், அது கிருஷ்ணமூர்த்தி அவதரித்த பின், அவர் இதை நாராயணனுக்குப் படைக்க கட்டளை இட்டனர் எனவும், அதனால் இந்திரன் கோபித்து மழை பெய்விக்க, குடிகள் நிலைகுலைந்த மாடுகள், கன்றுகளை இழந்து தடுமாறி கண்ணன் கோவர்த்தனம் எடுத்து குடிமக்களை காத்தனர் எனவும், அதனால் இந்திரன் வெட்கி வேண்ட, சங்கராந்திக்கு முன்னால் அவர் பெயரால் பண்டிகை செய்வித்தனர்.

அது போகிப்பண்டிகை எனவும், மறுநாள் சங்கராந்திப் பண்டிகை எனவும், மறுநாள் மழையால் வருந்திய மாடு கன்றுகளைத் தளை அவிழ்த்து விட்டு களித்தமையால் மாட்டுப் பொங்கல் எனவும், மறுநாள் மழையால் உண்டாகிய சுகா சுகங்களை ஒருவரை யொருவர் விசாரித்ததால் காண்பொங்கல் எனவும் கூறுவர்.

இவ்வாறு அறிவுக்குப் பொருத்தமற்றவைகளை எல்லாம் புராணங்களின் பேரால் புளுகி தள்ளியுள்ளனர் இந்தப் பார்ப்பனர்கள். மழை பொழிவதாம் - அதை மலையை குடையாக்கி தடுப்பதாம்! கேழ்வரகில் நெய் வடிகிறதாம் பார்ப்பனர்கள் சொல்லுகிறார்கள்! தமிழர்களே நம்பப் போகிறீர்களா?

தமிழ் ஓவியா said...


பக்தி காவியத்தின் பவிசு!

உள்தெளி வின்றியே உவப்பு இன்றி ஓடிய
மட்டறு காமமாம் வால உற்றுளான்
அட்டுஒளிர் பொன்ஆனாள் அல்குலாம் சுழிப்
பட்டனன் இன்பமாம் பரவை நண்ணுவான் - கந்த புராணப் பாடல்

பதவுரை

உள்தெளிவின்றி - உள்ளம் தெளிவற்று
உவப்பின்றி ஓடிய - மன அடக்கமின்றி ஓடுகிற
மட்டறு காமம் - அளவு கடந்த காம உணர்ச்சி
அட்டு ஒளிர் பொன் ஆனாள் - சுடச்சுடரும் பொன் போன்றவள்
அல்குலாம் - பெண் பிறப்பு உறுப்பான (கடல்)
சுழிப்பட்டனன் - சுழியில் அகப்பட்டான்
இன்பமாம் பரவை - இன்பமாகிய கடலை
நண்ணுவான் - சேருவான்

விளக்கம்

மன அடக்கம் இல்லாது பெருக்கெடுத்து ஓடுகின்ற அளவிடமுடியாத காமம் என்கிற ஆழ்கடலில் மூழ்கியவனான காசிபமுனிவன், சுடச்சுட ஒளி வீசும் பொன்போன்ற உடலைப் பெற்றுள்ள மாயாதேவியின் அல்குல் எனப்படும் சுழியில் அகப்பட்டு தத்தளித்தான். எனினும் இன்பமாகிய கடலைச் சென்று அடைய முடிந்தது.

தமிழ் ஓவியா said...


அட மத வெறியே!


திருச்சி பொன்னகரைச் சார்ந்த ராஜன் ஹென்றி என்பவரின் 11 வயது மகன் அலிசன்வேதா. இந்தச் சிறுவன் திருச்சி மெயின் கார்டு கேட் அருகே உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளிக் கூடத்தில் 6ஆவது வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 14.12.1978 அன்று இந்தச் சிறுவன் பள்ளிக் கூடம் முடிந்து வீட்டுக்குச் செல்லும் போது, பேருந்தில் ஏறவந்த போது, சிந்தாமணி அண்ணா சிலை அருகே பேருந்தில் அடிபட்டு பெரும் விபத்துக்குள்ளானான். மாணவர்களும், ஆசிரியர்களும் அலிசன்வேதாவை திருச்சி தலைமை மருத்துவமனைக்குச் கொண்டு சென்றனர்.

மாணவனுக்கு உடனே ரத்தம் கொடுத்தால் பிழைக்க வைத்து விடலாம் என்று டாக்டர் கூறினார். உடன் வந்திருந்த மாணவர்களும், ஆசிரியர்களும் ரத்தமளிக்க முன் வந்தனர். சோதித்து பார்த்ததில் ரத்தமும் ஒத்ததாக இருந்தது.

மகன் விபத்துக்குள்ளானதை அறிந்து மருத்துவ மனைக்கு வந்த அந்த மாணவனின் தாயார் அடுத்தவர் களின் ரத்தத்தைத் தங்கள் மகனின் உடலில் ஏற்றக் கூடாது என்றும், அவ்வாறு செய்வது கர்த்தரின் முடிவுக்கு எதிரானதாகும் என்றும், தனது மகனை கர்த்தர் காப்பாற்றுவார் என்றும் கூறி, ரத்தம் ஏற்றவிடாமல் தடுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் மாணவன் துடிதுடிக்க இறந்து விட்டான். இந்த மாணவன் பெந்தகொஸ்தே கிருஸ்துவ குடும்பத்தைச் சார்ந்தவன். இது குழந்தைகள் சர்வதேச ஆண்டாகும். இந்த ஆண்டில் மதவெறி மடமைக்கு இப்படி இளந்தளிர்கள் பலி கடாக்களாக்கப்படும் கொடுமைகள் இந்தநாட்டில் நடந்து கொண்டிருக்கின்றன.

கர்த்தரை நம்பிக் கொண்டிருக்கும் கண்மூடித் தனங்கள் இந்த விஞ்ஞான யுகத்திலும் நீடிக்கலாமா?

- விடுதலை - 3.1.1979

தமிழ் ஓவியா said...

பார்ப்பனியமும் முதலாளியமும் முதன்மையான எதிரிகள்


என்னைப் பொறுத்தவரை இந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு பகைவர்களோடு போராட வேண்டியுள்ளது. ஒன்று பார்ப்பனியம்; இரண்டு முதலாளியம். பார்ப்பனியம் எனும் எதிரியை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்லும் போது என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பார்ப்பனர்கள் ஒரு வகுப்பினர் என்ற அடிப்படையில், அதிகாரங்கள், உரிமைகள், நலன்கள் பெறுவதை மட்டும் நான் பார்ப்பனியம் என்று குறிப்பிடவில்லை. அந்த அர்த்தத்தில் நான் பார்ப்பனியம் என்னும் சொல்லைப் பயன்படுத்தவில்லை. சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளின் எதிர்மறைதான் பார்ப்பனியம் என்று சொல்லுகின்றேன்.

இந்த எதிர்மறை உணர்வு எல்லா வகுப்பினரிடை யேயும் உள்ளது. பார்ப்பனர்களோடு மட்டும் அது நின்று விடவில்லை. பார்ப்பனர்கள் தாம் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா வகுப்பினரிடையிலும் ஊடுருவி உள்ளது என்பது உண்மை. இந்தப் பார்ப்பனியம் எங்கும் பரவி, எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பார்ப்பனியம் சில வகுப்புகளுக்கு உரிமை மிகுந்த உயர்வுகளை வழங்குகிறது. மற்ற வகுப்புகளுக்குச் சம வாய்ப்புகளை மறுக்கிறது.

இந்தப் பார்ப்பனியம் சேர்ந்துண்ணல், கலப்பு மணம் ஆகிய சமூக உரிமைகளோடு நின்றுவிடுவதில்லை. அப்படி நின்றிருந்தால் யாரும் அதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் அவ்வாறு அது நிற்கவில்லை. சிவில் உரிமைகளையும் அது பதம் பார்க்கிறது. பொதுப் பள்ளிகள், பொதுக் கிணறுகள், பொதுக் கழிப்பிடங்கள், பொது மருந்த கங்கள் ஆகியவை சிவில் உரிமைகள் தொடர்பானவை. பொது மக்களுக்காகப் பொது மக்கள் நிதியின் மூலம் நிர்வகிக்கப்படும் எல்லாமே ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியவை. ஆனால் இந்தக் குடிமை உரிமைகள் இலட்சக் கணக்கான மக்களுக்கு மறுக்கப்படுகின்றன. இது பார்ப் பனியத்தின் விளைவு அல்ல என்று யாராவது சொல்ல முடியுமா? பார்ப்பனியத்தால் ஆயிரக்கணக்கான ஆண்டு களாக அவிழ்த்துவிடப்பட்ட இந்த அடக்குமுறை இன்னும் உயிரோட்டமுள்ள மின் ஆற்றலாக ஓடிக்கொண்டிருக்க வில்லையா?

பொருளாதார வாய்ப்புகளைக் கூடப் பாதிக்கும் அளவுக்கு அத்தனை சர்வவல்லமை வாய்ந்ததாகப் பார்ப்பனியம் விளங்குகிறது. ஓர் ஒடுக்கப்பட்ட தொழிலாளிக்குள்ள வாய்ப்பு வசதிகளைப் பிற தொழிலாளியின் வாய்ப்பு வசதிகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். பணிப்பாதுகாப்பு, பணி முன்னேற்றம் ஆகியவற்றில் ஒடுக்கப்பட்ட தொழிலாளிக்குள்ள வாய்ப்புகள் என்ன? தீண்டத்தகாதவன் என்பதால் அவனுக்கு எத்தனையோ வேலை வாய்ப்புகள் மூடப்பட்டுவிடுகின்றன. மிகச் சிறந்த எடுத்துக்காட்டு பருத்தித் தொழில்.

பம்பாய் மாகாணத்தில், பம்பாயிலும் சரி - அகமதா பாத்திலும் சரி, பருத்தி ஆலைகளில் நெசவுத் துறையில் ஒடுக்கப்பட்ட வகுப்பினரை அனுமதிப்பதில்லை. ஒடுக்கப்பட்ட வகுப்பினர் நூற்புத் துறையில் மட்டுமே பணிபுரிய முடியும். நூற்புத் துறையில் - பஞ்சாலைகளில் ஊதியம் மிக மிகக் குறைவு. நெசவுத் துறையில் தீண்டப்படாதவர்களுக்கு வாய்ப்பு ஏன் மறுக்கப்படுகிறதென்றால், அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதுதான். ஒரு சாதி இந்து முசுலீம்களோடு பணிபுரிவதில் எந்தச் சுணக்கமும் காட்டுவதில்லை. ஆனால் தீண்டத் தகாதோர் என்றால் எதிர்ப்பு காட்டுகிறான்.

தமிழ் ஓவியா said...

இரயில்வே துறையை எடுத்துக் கொள்ளுங்கள். இரயில் வேயில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன? ஒடுக்கப் பட்டவன் ஒரு கேங்க் மேனாகத்தான் பணிபுரிய வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. பதவிக்காலம் முழுவதும் எவ்வித உயர்வும் இல்லாமல் கேங்க் மேனாகவே பணிபுரியும் நிலை உள்ளது. அவனுக்குப் பதவி உயர்வு எதுவும் தரப்படுவ தில்லை. போர்ட்டராகக்கூட அவன் வர முடியாது. போர்ட்ட ராக வர வேண்டுமானால் ஸ்டேஷன் மாஸ்டரின் வீட்டு வேலைகளையும் அவன் செய்தாக வேண்டும். ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு சாதி இந்துவாக இருப்பார். ஆகவே ஒடுக்கப்பட்ட தொழிலாளி போர்ட்டராக அவர் வீட்டுக்குள் நுழைவதை விரும்பமாட்டார். எனவே ஒடுக்கப்பட்ட வகுப்பினர் போர்ட்ட ராக நியமிக்கப்படுவதில்லை.

எனக்கும் உங்களுக்கும் தீயநோக்கத்தைக் கற்பிப்ப வர்களுக்கு இரண்டு கேள்விகள். இந்தக் கேள்விகள் நேரடியான கேள்விகள். மேலே சொன்னவையெல்லாம் உண்மையான குறைபாடுகள் தானே? உண்மையான குறைபாடுகள் என்றால் அவற்றை நீக்க முனைவதும் அதற்காகத் திரள்வதும் சரிதானே? இந்தக் கேள்விகளுக்கு நேர்மையான எந்த மனிதனும் எதிர்மறையாகப் பதில் சொல்ல முடியாது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு தொழி லாளர் அமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த மான இந்தியத் தொழிலாளி வர்க்கத்திற்கு நாம் பெரிய உந்துசக்தியாக இருக்க முடியும். எனவே நமது முயற்சிகள் நியாயமானவை. நம்மீது குற்றம் சாட்டும் தொழிலாளர் தலைவர்கள் ஏதோ ஒருவித பிரமையில் இருக்கிறார்கள். அவர்கள் காரல்மார்க்சைப் படித்தவர்கள். உடைமை வர்க்கம், தொழிலாளர் வர்க்கம் என இரண்டு வர்க்கம் மட்டுமே உண்டு என்பவர்கள். “இந்தியாவிலும் இரண்டு வர்க்கம் தான் - ஆகவே நமது கடமை முதலாளித்துவத்தை ஒழிப்பது” என்று கருதுபவர்கள். இந்த விசயத்தில் அவர்கள் இரண்டு தவறுகள் செய்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

மார்க்சு சொன்னதை ஒரு கருத்து நிலையாகக் கொள்ளாமல், மெய்ம்மை என நினைப்பது அவர்கள் செய்யும் முதல் தவறு. இரு வர்க்கம் என்பதை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரம் நடத்தினால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. உடைமை வர்க்கம், இல்லாத வர்க்கம் என்னும் பிரிவினை உணர்வு இந்தியாவில் சாதிப் பிரி வினைகள் காரணமாக உண்டாகவில்லை. எல்லாத் தொழி லாளர்களும் ஒன்று - ஒரே வர்க்கம் என்பது இலட்சியம். அது அடையப்பட வேண்டிய இலட்சியமேயாகும். ஆனால் அதுவே இருக்கிற யதார்த்தம் என்று முடிவு செய்து கொள்வது தவறு. பிறகு எப்படித் தொழிலாளர்களை அணித் திரட்ட முடியும்?

ஒரு பிரிவுத் தொழிலாளர்கள், இன்னொரு பிரிவுத் தொழிலாளர்களை நசுக்குவதைத் தடுப்பதன் மூலம் அவர் களிடையே ஒற்றுமையை உருவாக்க முடியும். ஒடுக்கப்பட்ட பிரிவுகள் அமைப்பு ரீதியாகத் திரள்வதைத் தடுப்பதன் மூலம் அது முடியாது. இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் பிரிவினரைத் தடுப்பதன் மூலம் அது முடியாது. ஒற்றுமையைக் கொண்டுவர ஒரே வழி ஒரு தொழிலாளி இன்னொரு தொழிலாளிக்கு இனம், மதம் ஆகிய பின்னணியில் பகைமைக் கொள்வதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து களைவதன் மூலம், அத்தகைய ஒற்றுமையை அவர்களிடையே கொண்டுவர முடியும். தொழிலாளர்களிடையே ஒற்றுமையைக் கொண்டுவரச் சிறந்த வழி என்னவென்றால், ஒரு தொழிலாளி மற்ற தொழிலாளர்களுக்குத் தரவிரும்பாத உரிமைகளை அவன் மட்டும் பெறவேண்டும் என்பது தவறான சிந்தனை என்று அவனுக்கு எடுத்துச் சொல்வதுதான். தமக்கிடையே உள்ள சமூக வேறுபாடுகளுக்கு அழுத்தம் தரும் போக்கு தொழிலாளர் மத்தியில் ஒற்றுமையைச் சிதைத்துவிடும் என்பதைத் தொழிலாளர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

சுருங்கச் சொன்னால் சமத்துவமின்மை என்னும் குணாம்சத்தை அதாவது பார்ப்பனியத்தைத் தொழிலாளர் மத்தியிலிருந்து அடியோடு களைந்தெறிய வேண்டும். இத்தகைய முயற்சியில் இறங்கிய தொழிலாளர் தலைவர் யார்?

முதலாளித்துவத்துக்கு எதிராக ஆவேசமாகப் பேசும் தொழிலாளர் தலைவர்களை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் பார்ப்பனியத்திற்கு எதிராக எவரும் பேசியதாகத் தெரியவில்லை. இந்த விசயத்தில் அவர்கள் சாதிக்கும் மவுனம் வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரு வேளை தொழிலாளர் ஒற்றுமைக்கும் பார்ப்பனியத்துக்கும் தொடர்பே இல்லையென்று அவர்கள் நினைக்கிறார்களா? அல்லது தொழிலாளர் சக்தி இப்படிச் சிதறிக் கிடப்பதற்கே பார்ப்பனியம் பெருங்காரணியாக இருக்கிறது என்பது அவர்களுக்கு இன்னும் தெரியவில்லையா? ஒரு வேளை இந்த அப்பட்டமான சந்தர்ப்பவாதத்தால் தொழிலாளர் உணர்வுகளைப் புண் படுத்திவிடக்கூடாது - அப்போதுதான் தலைமையில் நீடிக்க முடியும் என்று நம்புகிறார்களா?

தொழிலாளர் வர்க்கம் இப்படிச் சிதறுண்டு கிடப்பதற்கு அடிப்படைக் காரணம் பார்ப்பனியமே என்பதை ஏற்றுக் கொண்டால், அந்தப் பார்ப்பனியப் போக்கு தொழிலாளர் களிடையே நிலவுவதையும் விளக்கியே ஆக வேண்டும். இந்தத் தொற்றுநோயை அலட்சியம் செய்வதாலோ, அதைப்பற்றி மவுனம் சாதிப்பதாலோ தொழிலாளர்களைப் பீடித்துள்ள பீடை அகலாது. இந்தப் பார்ப்பனியப் போக்கைத் தேடிக் கண்டறிந்து, தோண்டித் துருவி ஆராய்ந்து அடி யோடு கல்வி எறிய வேண்டும். அப்போதுதான் தொழிலாளர் ஒற்றுமை சாத்தியப்படும்.

(பம்பாய் மன்மத்தில், 1938 பிப்பிரவரி 12, 13 ஆகிய நாள்களில் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட இரயில்வே தொழிலாளர் மாநாட்டில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆற்றிய சொற் பொழிவு. அம்பேத்கர் நூல் (தமிழ்) தொகுப்பு : தொகுதி 37).

தமிழ் ஓவியா said...

போராட்டமும் ஒற்றுமையும்
மாவோ

திசம்பர் 7 - மாவோ நினைவு நாள்

எல்லா நேரங்களிலும் வேறுபாடற்ற ஒற்றுமை யைப் பற்றி மட்டுமே பேசி, போராட்டத்தைப் பற்றிப் பேசாமலிருப்பது மார்க்சியம் - லெனினியம் அல்ல. போராட்டத்தின் வழியாகவே ஒற்றுமை உருவாகிறது. இந்த வகையில் மட்டுமே ஒற்றுமை சாத்தியமாக முடியும். இதே மாதிரிதான் கட்சிக்குள்ளும், வர்க்கங் கள், மக்களிடையேயும் இப்படித்தான். ஒற்றுமை போராட்டமாக மாறுகிறது. பிறகு மீண்டும் ஒற்றுமை நிலவுகிறது. போராட்டத்தைப் பற்றியும் முரண்பாடுகள் பற்றியும் பேசாமல் மாறுபடாத ஒற்றுமையைப் பற்றி மட்டும் நாம் பேசிக் கொண்டிருக்க முடியாது.

தலைவர்களுக்கும், தலைமை தாங்கப்படுவோ ருக்கும் இடையேயான முரண்பாடுகள் பற்றி சோவியத் யூனியன் பேசவில்லை. முரண்பாடுகள் இல்லையென்றால் போராட்டம் இருக்காது. அங்கே உலகம் இருக்காது. முன்னேற்றம் இருக்காது. வாழ்க் கை இருக்காது. எதுவுமே இருக்காது. எல்லா நேரத் திலும் ஒற்றுமை பற்றியே பேசுவது ‘தேங்கி நிற்கும் ஒரு குட்டை போன்றது’. இது வெறுப்பு ஏற்படவே வழிவகுக்கும். ஒற்றுமைக்கான பழைய அடிப்படை யை நாம் அழிக்க வேண்டும். போராட்டத்தின் மூலமாகவும் புதிய அடிப்படையிலும் ஒன்றுபடுத்த வேண்டும். எது சிறந்தது? தேங்கிய குட்டையா அல்லது விரைந்து சீறியோடி வரும் வற்றாத யாங்சே நதியா? இதைப்போல்தான் கட்சிக்கும்; இதைப்போல் தான் வர்க்கங்களுக்கும்; மக்களுக்கும் கூட. ஒற்றுமை - போராட்டம் - ஒற்றுமை. இதன் பொருள், நாம் நமது வேலையைச் செய்கிறோம் என்பதாகும்.

உற்பத்தி, நுகர்வாக மாறுகிறது; நுகர்வு, உற்பத்தி யாக மாறுகிறது. நுகர்வுக்காகவே உற்பத்தி செய்யப் படுகிறது. உற்பத்தி என்பது பிற உழைப்பாளி மக்களின் நலனுக்காக மட்டுமல்ல. உற்பத்தியாளர் களும் நுகர்வோரே.

ஒரு மனிதர் சாப்பிடவில்லையென்றால், அவருக்கு சக்தியே இருக்காது. அவரால் உற்பத்தி செய்யவும் முடியாது. அவர் சூடான உணவு சாப்பிட்டால், அவரால் கூடுதலாக வேலை செய்ய முடியும். மார்க்சு சொல் கிறார் - உற்பத்தி என்பது நுகர்வையும் உள்ளடக் கியதே. உற்பத்தியும் நுகர்வும், கட்டுமானமும் அழிவும் எதிர்மறைகளின் ஒற்றுமைகள். அவை ஒன்று மற்றொன்றாக மாறுகிறது.

தமிழ் ஓவியா said...

எதிர்மறைகளின் ஒற்றுமை, அவை ஒன்று மற்றொன்றாக மாறுவது என்ற கோட்பாடுகளை ளக்குவதற்கு நாம் ஏராளமான எடுத்துக்காட்டு களைக் காட்ட வேண்டும். பல டசன் அல்லது நூறு எடுத்துக்காட்டுகளை முன்வைக்க வேண்டும். இதன்மூலமாக மட்டுமே நாம் நமது தத்துவத்தைச் சரிசெய்து கொள்ளவும், புரிதல் நிலையை உயர்த்திக் கொள்ளவும் முடியும். இளவேனில், கோடை, இலையுதிர்காலம், குளிர்காலம் என்பவையும் கூட ஒன்று மற்றொன்றாக மாறுகிறது. இளவேனில், கோடை ஆகியவற்றின் கூறுகள் இலையுதிர் காலத்தி லும், குளிர் காலத்திலும் இருக்கின்றன. பிறப்பும் இறப்பும் கூட ஒன்று இன்னொன்றாக மாறுகிறது. வாழ்வு சாவாக மாறுகிறது. உயிரற்ற பொருள் உயிருள்ளதாக மாறுகிறது. மனிதன் இறப்பது தவிர்க்க முடியாதது. இது இயற்கையின் நியதி.

தமிழ் ஓவியா said...

‘சுருக்கமான தத்துவ அகராதி’ (1939இல் மாஸ் கோவில் வெளியிடப்பட்டது) என்னை எதிர்ப்பதில் சிறப்பு கவனம் செலுத்துகிறது. பிறப்பு இறப்பாக மாறுகிறது என்பது வறட்டு வாதம் என்றும், போர் சமாதானமாக மாறுகிறது என்பது தவறு என்றும் அது கூறுகிறது. இந்தக் காட்சி ஆய்வில் யாருடையது சரியானது? என்று நான் கேட்கிறேன். ஜடப்பொருளின் நிலை மாற்றத்தின் பயனே உயிருள்ள பொருள் என்று இல்லாமல் போனால், இவர்கள் எங்கிருந்து வந்த னர்? தொடக்கக் காலத்தில் புவியின் மீது உயிரற்ற பொருள்கள் தவிர வேறெதுவும் இல்லை. இதைத் தொடர்ந்தே உயிருள்ள பொருள் தோன்றியது. நைட் ரஜன், ஹைட்ரஜன் போன்ற தொண்ணூற்றிரண்டு மூலப் பொருள்களில் ஏற்பட்ட மாற்றங்களின் பயனே உயிர் வாழும் அனைத்துப் பொருள்களும், ஜடப் பொருள் நிலை மாறுபாட்டின் பயனே அனைத்து உயிர் வாழ் இனங்களும். தொகுத்துச் சொன்னால் குண மாற்றங்கள் அளவு மாற்றங்களாகின்றன. அளவு மாற்றங்கள் குணமாற்றங்களாகின்றன.

எல்லையுடையது எல்லையற்றதாக மாறுகிறது; எல்லையற்றது எல்லையுடையதாக மாறுகிறது. பண்டைக் காலத்து இயக்கவியல், மத்திய காலத்தில் கற்பனா வாதமாக மாறியது. மத்திய கால கற்பனா வாதம், நவீன காலத்தில் இயக்கவியலாக மாறியது. பிரபஞ்சமும் கூட மாறிக் கொண்டேயிருக்கிறது. அது நிலையானதல்ல. முதலாளித்துவம் சோசலிசத்துக்கு இட்டுச் செல்கிறது. சோசலிசம் கம்யூனிசத்துக்கு இட்டுச் செல்கிறது. கம்யூனிச சமூகம் இன்னும் மாற்றமடைய வேண்டியிருக்கிறது. அதற்குக்கூட ஒரு தொடக்கமும் முடிவும்உண்டு. நிச்சயமாக அது பல கட்டங்களாகப் பிரிக்கப்படும். அல்லது அவர்கள் அதற்கு வேறு பெயர் வைப்பார்கள். அது நிலையானதாக இருக்க முடியாது. அளவு மாற்றங்கள் மட்டும் இருந்து குணமாற்றங்கள் இல்லையென்றால் அது இயக்கவியலுக்கு எதிரான தாகப் போகும்.

பிறந்து வளர்ந்து அழியாதது உலகத்தில் எது வுமே இல்லை. குரங்குகள் மனிதர்களாக மாறின. மனிதகுலம் உருவானது. கடைசியில் மொத்த மனித குலமும் அழியலாம்; அது வேறெதுவாகவோ மாறலாம். அந்தச் சமயத்தில் இந்தப் பூமியேகூட அழிந்து போக லாம். இந்தப் பூமி நிச்சயம் அழிந்துதான் ஆக வேண்டும். சூரியன் கூட குளிர்ச்சியாகும். பண்டைக் காலத்தைவிட அது இப்போதே குளிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இந்தப் புவி முழுவதும் பனியாக இருந்த காலத்தில் 20 இலட்சம் ஆண்டுகளில் ஒரு மாற்றம் வந்தது. பனி வந்தபோது வாழும் அனைத்து உயிரி னங்களிலும் பெரும் பகுதி அழிந்து போயின. தென் துருவத்துக்குக் கீழே பெருமளவு நிலக்கரி இருக்கிறது. இதனால் பண்டைக் காலங்களில் அங்கே அதிக வெப்பம் இருந்ததை நீங்கள் காணமுடியும்.

நமது சிந்தனையை உயிர்ப்பூட்டுவதற்காகவும் விரிவுபடுத்துவதற்காகவுமே நான் இதைப் பற்றியெல் லாம் பேசியிருக்கிறேன். மனம் எப்போது கரடுதட்டிப் போனாலும் அது மிகவும் ஆபத்தானதாகும். நாம் நமது ஊழியர்களுக்குக் கல்வி கொடுக்க வேண்டும். மய்ய, மாகாண, மண்டல மற்றும் வட்டார நிலை ஊழியர்கள் மிகவும் முக்கியம். பல்வேறு அமைப்புகள் உட்பட பல நூறாயிரம் பேர் இருக்கிறார்கள். நாம் கூடுதலாகச் சிந்திக்க வேண்டும். செவ்வியல் இலக்கி யங்களையே மனதில் நிலையானதாக நாம் கொண் டிருக்கக் கூடாது. நமது மூளையை நாம் பயன்படுத்த வேண்டும். சிந்தனையை உயிர்ப்பூட்ட வேண்டும்.

(மாவோ 1958 மார்ச்சு மாதம், செங்டூ மாநாட்டில் நிகழ்த்திய உரை. மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி 8, பக்கம் 79-82)