Search This Blog

5.12.12

கோவில்கள் பேதங்களின் உறைவிடங்களே!

பேதங்களை வளர்க்கும், ஊக்குவிக்கும் ஜாதிகளை நிரந்தரப்படுத்தும் முக்கியமான இன்றைய நிறுவனங்கள் கோவில்கள்தான்.
இந்தக் கோவிலுக்குள் எந்தெந்த ஜாதியினர், எந்தெந்த இடம்வரை செல்லலாம் என்பதுகூட வரையறுக்கப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட ஜாதியினர் அறவே கோவிலுக்குள் நுழையக்கூடாது என்ற நிலை இருந்த துண்டு. இவையெல்லாம் பல்வேறு போராட்டங்களின் காரணமாக அதனைத் தொடர்ந்து அரசின் ஆணைகள், செயல்பாடுகள் காரணமாக மாற்றப்பட்டுள்ளன.

இருந்தாலும் கோவில் கருவறைக்குள் பார்ப்பானைத் தவிர மற்ற ஜாதியினர் செல்லக் கூடாது; அர்ச்சகராகக் கூடாது என்ற நிலை இன்றுவரை பாதுகாப்புடன் இருந்து வருகிறது.

இதனை எதிர்த்துத்தான் தந்தை பெரியார் மரண சாசனம் போல போர்க்களத்தில் நின்றார்.

தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு அன்னை மணியம்மையார் தலைமையிலும், அதனைத் தொடர்ந்து தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையிலும் தொடர்ந்து பல்வகைப் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன.

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலும், தந்தை பெரியார் மறைந்த பின்பு, தமிழர் தலைவர் காலகட்டத்திலும் இரண்டு முறை இதற்கான சட்டங்கள் தி.மு.க. அரசால் மானமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான அரசால்  இயற்றப்பட்டும், பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்று சட்டத்தைச் செயல்படுத்த முடியாமல் முடக்கியுள்ளனர்.

தமிழ்த் தேசியம் பேசுவோர், ஜாதியவாதம் பேசுவோர் இவற்றைப்பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. ஒட்டுமொத்தமாக எல்லா ஜாதி தமிழர்களையும் சேர்த்துத்தான் சூத்திரன் (கீழ்ஜாதி மகன், வேசி மகன்) என்று சொல்லும் கேவலம் இன்றுவரை நீடிக்கிறது.
தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கிட்டும் போது, ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் உள ரீதியான பெரிய மாற்றம் நிகழும் - இதனை சென்னையில் கடந்த முதல் தேதி நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆழ்ந்த பொரு ளோடு சுட்டிக்காட்டுகிறது. தாழ்த்தப்பட்டவர் களை கீழ்ஜாதியினர் என்று நோக்கும் பார்வை அடிபட்டு வீழும்.

இன்னொரு கொடுமையை தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை ஒரு சுற்றறிக்கையின்மூலம் செய்துள்ளது.

மாற்றுத் திறனாளிகள் தோல் செயற்கை உறுப்புகளுடன் கோவிலில் வழிபட உரிமை இல்லை என்பதுதான் அந்தச் சுற்றறிக்கை.

சிவபெருமானே புலித்தோலை இடுப்பில் அணிந்துள்ளான் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக்கொண்டு, மாற்றுத் திறனாளிகள் தோல் செயற்கை உறுப்புகளுடன் செல்லக் கூடாது என்பது முரண்பாடு அல்லவா என்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவின் தீர்மானத் திற்கு என்ன பதில் சொல்ல முடியும்?

இந்தச் சுற்றறிக்கை உடனே விலக்கிக் கொள்ளப்படவேண்டும். இல்லையெனில், இந்தப் பிரச்சினையை திராவிடர் கழகம் கையில் எடுத்துக்கொள்ளும் என்பதை எச்சரிக் கையாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.

                   ------------------------"விடுதலை” தலையங்கம் 5-12-2012

8 comments:

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாருக்கு நிகரான தலைவர்கள் இல்லை


பார்ப்பனீயம் ஒழிந்தால்தான் பெண்ணடிமைத் தனமும் ஒழியும்! நூல் வெளியீட்டு விழாவில் மதுரை வழக்குரைஞர் பானுமதி பேச்சு

புதுக்கோட்டை,டிச.5-புதுக்கோட்டை நகர மன்றத்தில் 3.12.2012 அன்று புதுகை சுவாதி யின் 22-ஆவது நூலான மழை வெளிதனிலே என்கிற நூல் கீதா வின் விழிகள்தூவும் விதைகள் என்கிற நூல் வெளியீட்டுவிழா நடந்தது. இவ் விழாவில் கவிஞர்கள் பேராசிரியர்கள் எழுத் தாளர்கள் பட்டிமன்றப் பேச்சாளர்கள் பலரும் கலந்து கொண்டு நூல் திறனாய்வு செய்தும் நூலாசிரியர்களைப் பாராட்டியும் பேசி னார்கள். நிகழ்ச்சியை வி.சி.வில்வம் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மதுரை வழக்கறிஞர் பானுமதி சிறப்புரை யாற்றினார். அவர் பேசுகையில் 'கவிதை எழுத எனக்குத் தெரி யாது என்ற போதிலும் கவிதைகள் எப்படி யிருக்க வேண்டும் என்ப தைக் கொஞ்சம் அக் கறையோடு பார்ப்ப வள் என்கிற முறையில் இந்தநூலாசிரியர் களைக்கொஞ்சம் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். பெண் களுக்கு காதணி விழா நடத்த விரும்புகிறவர்கள், பூப்பு நீராட்டு விழா நடத்த விரும்புகிறவர்கள் அவர்களது திறமையை வெளிக் கொணரும் வித மாக அவர்கள் நூல் எழு தும் திறமை படைத்த வர்களாக உருவாக்கி வெளியீட்டு விழாக் களாக நடத்த வேண்டும். சிறு வயது முதலே அவர் கள் பரிசுகள் வாங்கி வரும்போது அதற்கு பாராட்டு விழாக்கள் நடத்தினால் அவர்கள் வாழ்வில் மிக வேகமாக உயர வழிவகுக்கும்.

இதற்கு முன் இந்த நூல்களை நான் படித் திருக்கவில்லை. மேடை யில் வந்து அமர்ந்த பிறகு கொண்டு வந்து கொடுத் தார்கள். கிட்டத் தட்ட எல்லாக் கவிதைகளை யும் வாசித்து முடித்து விட்டேன். கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது என்று இங்கு பேசிய அத்தனை பேரும் வாழ்த்திப் பேசியிருக் கிறார்கள்.

கவிஞர்கள், பேராசிரி யர்கள், எழுத்தாளர்கள் பட்டிமன்றப் பேச்சா ளர்கள் பலரும் அவை யில் உள்ள அனைவரும் வாழ்த்தும் அளவிற்குத் திறமை வாய்ந்த கவிஞர் களாக, சிறந்த எழுத் தாளர்களாக புதுக் கோட்டைப் பெண்கள் இருக்கிறார்கள் என்ப தில் எனக்கும் நிரம்பவும் மகிழ்ச்சிதான். அதே வேளையில் இன்னொன் றையும் இந்த எழுத்தா ளர்கள் சிந்திக்க வேண் டும். இவ்வளவு சிறப் புக்கு உரியவர்களாக மாற வேண்டும் பெண் கள் வாழ்விலும் சமூகத் திலும் உயர வேண்டும் என்று அக்கறை எடுத் துப்பாடுபட்டவர் களில் இந்தியாவில் தந்தை பெரியார் அளவுக்கு எந்த ஒரு தலைவரும் இதுவரை இருந்ததில்லை.
அவர் எதற்காகப் பாடுபட்டார் என்பதை ஒவ்வொரு பெண்ணும் சிந்திக்கவேண்டும். குறிப் பாக உங்களைப் போல் சமூகத்தில் மதிக்கத்தக்க வகையில் போற்றத் தக்க வகையில் உயர்ந்திருக் கும் பெண்கள் இது வரை சிந்திக்காமல் இருந்தாலும் இனிமே லாவது சிந்திக்க வேண் டும். கவிதை எழுதுப வர்கள் வீட்டுக்குள் ளேயே சிந்தித்து எழுதிக் கொண்டிருக்க வேண் டுமா என்ன? இந்த நூல் களில் அதைத் தவிர வேறொன்றுமில்லை.

கொஞ்சம் வெளியில் வாருங்கள். வீதியில் என்ன நடக்கிறது? ஊருக்குள் என்ன நடக்கிறது? நாட் டில் என்ன நடக்கிறது? சமூகத்தில் என்ன நடக் கிறது என்பதை எல்லாம் பாருங்கள். பெண்கள் அடிமையாகிக் கிடக் கிறோம் என்பதை மட் டுமே கவிதை களிலும் புத்தகங்களிலும் பேசிக் கொண்டிருக்கி றீர்களே எவ்வளவு நாளைக்குத் தான் இதைப் பேசிக் கொண்டிருப்பீர்கள்? பெண்ணடிமைத் தனத் திற்கு மூலகாரணமே பார்ப்பனீயம்தானே. பெண்ணியம் உண்டு. ஆணியம் இல்லை. தலித் தியம் உண்டு உயர்ந்த இயம் இல்லை. எல்லா இயத்தையும் இயக்கு வது பார்ப்பனீயம் என் பதை மட்டும் அடிமைப் பட்டுக் கிடப்பவர்களே இன்னும் உணர மறுக் கும்வரை பெண்ணடி மையும் இருக்கும். மற்ற அடிமைத்தனமும் இருக்கத்தான் செய்யும். பார்ப்பனீயத்தை ஒழிக் காமல் எந்தச் சூழ்நிலை யிலும் மற்றவர்கள் முன் னேற முடியாது. மற்ற வர்களை அடிமைப் படுத்த வேண்டும் என் பது பார்ப்பனீயம் என்ப தால் அதன் வெளிப்பாடு தான் ஆணாதிக்கச் சிந் தனையும் பெண்ண டிமைத்தனமும். அதை முதலில் படித்த பெண் கள் உணர வேண்டும். தமிழ்நாட்டில் இன் றைக்குஇருக்கும் அத்தனைபிரச்சி னைகளுக்கும்தீர்க்க முடியாத சிக்கல்களுக் கும் காரணம் பார்ப்ப னீயமே. சினிமா முதல் விளம்பரங்கள்வரை பெண்கள் போகப் பொருளாகவே ஆக்கியி ருப்பதும் பார்ப்பனீ யம்தான் என்பதை முத லில் உணரவேண்டும்.

பெண்கள் எழுதுவ தற்குப் பிரச்சினைகளே இல்லையா? வீதிக்கு வந்து பாருங்கள் புரியும்- பெண்கள் எந்த வகை யில் எல்லாம் அடிமைப் பட்டுக் கிடக்கிறார்கள் என்பது. ஆண்களுக்குப் பிரச்சினை என்றாலும் அவர்களையே விடு விக்கும் நிலையில் இப் போது பெண்கள் இருக் கும்போது சமூகத்தில் பார்ப்பனீயம் போடும் விலங்கிற்குள் போய் தாமாகவே மாட்டிக் கொள்வதைத் தவிர்த்து சமூகச் சிக்கல்களைத் தகர்க்கும் பெண்களை விடுதலைபெறச் செய்யும் படைப்புகளை சமூகத் திற்கு அளிக்க வேண்டும். -இவ்வாறு பேசினார். நூலாசிரியர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்கள்.

(தகவல்: ம.மு.கண் ணன் விடுதலை செய்தி யாளர்.)

தமிழ் ஓவியா said...


திணறட்டும் தருமபுரி!


தருமபுரி மாநாடு தோழர்களே! தோள் தூக்கி வாரீர் வீரர்களே!
ஜாதி என்னும் சாக்கடைப் புழு - தமிழன்
சோற்றில் தலை தூக்குவதோ!

வேதியன் வைத்த தீ - வேறு
வடிவத்தில் வாலாட்டுவதோ!
ஜாதியின் மூலத்தை அழித்திடவே
சட்டத்தையும் எரித்த கருஞ்சட்டைகளே!

வீதிக்கு வாருங்கள்! வாருங்கள்!!
வேட்டு முழக்கம் போடுங்கள்! போடுங்கள்!!
ஜாதியாம் பிளவு நோயால் - போய்த்
தொலைந்தவன் தமிழனன்றோ!

ஜாதி விஷத்தின் வேரினை
மோதி முறித்தல்லவோ!
தமிழன் எனும் சிற்பத்தை
செதுக்கினார் எம் பெரியார்!

நான் வன்னியன்
நான் சேணியன்
நான் கவுண்டன்
நான் முதலி யென்று
நான் நானென்று
நாராய்க் கிழிந்து கிடந்த

நாலாஞ் ஜாதிக் கூட்டத்தை
நாடெங்கும் சுற்றிச் சுற்றி
நாப்பறை கொட்டிக் கொட்டி
தமிழன் எனும் உணர்வாம்
தாய்ப்பாலை ஊட்டி ஊட்டி
தாலாட்டி வளர்த்தார் தந்தை பெரியார்

அட, தமிழினச் சோதரர்காள்!
அறிவோடு சிந்திப்பீர்!
மீண்டும் மனுதர்மமா?
மாள்வதுதான் உன் விருப்பமா?

எரிந்தது வீடுகள் அல்ல
எம்தமிழர் மானம்!
இடிந்தது வீடுகள் அல்ல
இன ஒற்றுமைக் கோட்டை!
சீச்சீ, வெட்கம்! வெட்கம்!! - உயிர்
வாழ்வதா முக்கியம்?

ஒடுக்கப்பட்ட தோழனுக்கு
முன்னுரிமை
கொடுப்ப தன்றோ
நம் கடமை!

அடக்க நினைப்பார்
ஆணவத்தை
அடக்கி முடிப்ப தன்றோ
அறிவுடைமை!

புறப்படு புறப்படு எம் தோழா - புயல்
நடை போட்டிடு போட்டிடு எம் தோழா!

ஜாதியைச் சாய்ப்போம்!
ஜாதியைச் சாய்ப்போம்!
சமத்துவம் படைப்போம்!
சமத்துவம் படைப்போம்!

பெரியார் கைத்தடி
கொடுக்கும் நெற்றியடி!
பெரியார் கண்ணாடி - வழி
காட்டும் முன்னாடி!

எதிர்காலம் ஒளிர
இவையே முன்னோடி!
படைப்போம் வாரீர்!
புரட்சிப் பண்பாடி!

தமிழர் தலைவர் அழைக்கிறார்
தருமபுரி திணறட்டும்!

- கவிஞர் கலி.பூங்குன்றன் -

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் நன்றி அறிவிப்பு அறிக்கை


எனது பிறந்தநாள் விழா என்ற பெயரில் நடைபெற்ற கொள்கைப் பிரச்சார விழாவில்

கலந்துகொண்டு வாழ்த்திய கலைஞர் உள்ளிட்ட பல்துறைப் பெருமக்கள், கழகக் குடும்பத்தினர்

அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!

பல வகைகளிலும் வெற்றிக்குப் பாடுபட்ட தோழர்களுக்கும் நன்றி!

தமிழர் தலைவர் நன்றி அறிவிப்பு அறிக்கை

தமது 80ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டோர், வாழ்த்துத் தெரிவித்தோர், பல்வேறு தொண்டறப் பணிகளில் ஈடுபட்டோர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி

கடந்த (டிசம்பர்) முதல் நாள், இரண்டாம் நாள் அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற, கழகப் பொதுக் குழு, எனது 80 ஆவது பிறந்த நாள் என்ற பெயரில் நடை பெற்ற கழகக் கொள்கைப் பிரச்சாரப் பெருவிழா ஆகிய வைகளுக்கு நேரில் வந்து, கலந்துகொண்டு அன்பை, வாழ்த்தை, வாரி வழங்கிய எனதருமைக் கழகக் கொள் கைக் குடும்பத்தவருக்கும், பல்வேறு அரங்குகளில் பிரச் சாரத்தைச் செய்த கழகப் பொறுப்பாளர்கள், கல்விக் குடும் பத்தினர், விடுதலைக் குடும்பத்தினர், பகுத்தறிவாளர் கள், தி.மு.க. மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலை வர்கள், நண்பர்கள், தமிழ்ச் சான்றோர்கள், ஊடகவியலா ளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச் சர்கள் (முன்னாள், இந்நாள்) அனைவருக்கும் எனது தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளிநாடுகளிலிருந்தும் - தமிழ்கூறும் நல்லுலகமும் சரி, பிற பெருமக்களும் சரி, அனைவரும் அன்புடன், அரு ளுடன் எம்மை உற்சாகப்படுத்தியமைக்கு நன்றி! நன்றி!!

இணையத்தின்மூலமும், கடிதங்கள்மூலமாகவும் வாழ்த்துச் செய்தி அனுப்பியவர்களுக்கும் நன்றி!

தமிழ் ஓவியா said...

முதல் நாள் நிகழ்ச்சியிலும், அடுத்த நாள் நிகழ்ச்சி யிலும் உரையரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், கலை யரங்கம், பாராட்டரங்கம் என்று நடந்தவைகளில் கலந்துகொண்டு பிரச்சாரப் பெருவெள்ளம் வழிந் தோடிடும் வகையில் நடத்தியவர்களுக்கும் நமது நன்றி!

கடவுளை மற - மனிதனை நினை!

பெரியார் (தொண்டர்கள்) மருத்துவ நலநிதி அறக் கட்டளைக்கு நன்கொடைகளை வழங்கிய அனைத்துத் தோழர், தோழியர்க்கும், அறிவியல் கண்காட்சிமூலம் மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் செய்த திருச்சி கல்வி நிறுவனங்களின் மாணவ, மாணவியர் இருபாலருக்கும், சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி, அதில் குருதிக்கொடை மற்றும் மருத்துவ ஆய்வு செய்து, கடவுளை மற மனிதனை நினை என்ற தந்தை பெரியாரின் தத்துவத்தின் செயல் பாடாக செய்துகாட்டிய சிறப்புக்குரியவர்களான மருத்துவ மாமணிகள், மனிதநேயச் சீலர்கள், மாணவ, இளைஞர் களான கழகக் கண்மணிகள், எட்டுப் புத்தகங்களை மிகச் சிறப்பாக அச்சிட்டு பரப்பிட உழைத்த சக தோழர், தோழியர்க்கு, கூந ஆடினநச சுயவடியேடளைவ ஹரேயட சூரஅநெச 2012 என்ற ஆண்டுமலரைக் கொணர்ந்து அற்புதமாக அச்சிட்டு வழங்கிய நமது அச்சகப் பொறுப்பாளர் களுக்கும், திடலில் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் இவ்விழா ஏற்பாடுகளுக்காக உழைத்த அத்துணைப் பேருக்கும், எமது உளங்கனிந்த மகிழ்ச்சிப் பெருக்குடன் இணைந்த நன்றி!

ஒப்பற்ற கலைஞர் அவர்களின் நீண்டநேர உரை

நமது இனத்தின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்கள் வந்து வாழ்த்தி (நீண்ட நேரம் பேசி) அமர்ந்து மகிழ்ந்து சென்றார்கள்.

அதுபோல வாழ்த்திய அறிஞர் பெருமக்களுக்கும், கழகப் பொறுப்பாளர்களுக்கும் எனது பாசம் கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் ஓவியா said...

வெளிநாட்டுத் தமிழர்கள்

விழாவில் நேரில் கலந்து கொண்டு மகிழ்ச்சியைப் பெருக்கித் தந்த அமெரிக்க பெரியார் பன்னாட்டு இயக் குநர்கள் டாக்டர் சோம. இளங்கோவன், டாக்டர் இலக் குவன் தமிழ், சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன் றத்தின் தலைவர் வீ.கலைச் செல்வம் குடும்பத்தினர், மலேசிய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கே.ஆர்.ஆர். அன்பழகன், ஆப் பிரிக்கா கண்டத்தில் உள்ள கானா நாட்டின் பெரியார் ஆப்பிரிக்கன் பவுண் டேசன் இயக்குநர் திருமதி சாலை மாணிக்கம், குவைத் பெரியார் பன்னாட்டு அமைப்பின் துணைத் தலைவர் லியாகத் அலிகான், சிங்கப்பூர் பெரியார் விருது பெற்ற நூலகத் துறை அதிகாரி திருமதி புஷ்பலதா (நாயுடு), பிரான்ஸ் நாட்டு தமிழ்ச் சங்கச் செய லாளர் நண்பரான கோகுலன், ஆகியவர்களுக்கும் எனது அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன்மூலம் பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது என்பது உலகத்திற்கு அறிவிப்பாக அமைந் துள்ளது என்பது நமக்கெல்லாம் பூரிப்பை வழங்குவது அல்லவா?

80 ஆம் பிறந்த நாள் விழா - இவர்கள் வருகை, வாழ்த்து, மகிழ்ச்சி பொங்கிய ஊக்கம் காரணமாக என்னை முதுமையாக்கவில்லை - இளமையாக்கி மேலும் உற்சாகத்துடன் செயல்படு என்று ஆணையிட்டுள்ளது.

வாழ்த்துக்கள் என்ற பெயரால் தேவையற்று பணச் செலவு செய்யவேண்டாம்; அதற்குப் பதில் பெரியார் (தொண்டர்கள்) நலப் பாதுகாப்பு நிதியாக வழங்குங்கள் என்ற வேண்டுகோளை ஏற்று அன்று உண்டியலில் முக வரியோடு பணம் தந்துள்ள (சில காசோலைகள் மூலமும் கூட) 5 லட்சம் ரூபாய். நேரில் வந்து தந்தவர்களுக்கும் எமது உளப்பூர்வ நன்றி!
நன்றி! நன்றி!! நன்றி!!

சந்தாக்கள் அளிப்பு

82 விடுதலை சந்தாக்களுக்கு (அரை மற்றும் முழு ஆண்டு) தொகை ரூ.71,920/-, வளர்ச்சி நிதி ரூ.200/-, மாநில இளைஞரணி முயற்சித்து 1680 உண்மை சந்தாக்களுக்கு ரூ.5,27,875/- (5 லட்சத்து 27 ஆயிரத்து எண்ணூற்று எழுபத்து அய்ந்து), மகளிரணி முயற்சியில் 147 பெரியார் பிஞ்சு சந்தாக்களுக்கு ரூ.14,660/-, பகுத்தறிவாளர் கழகத்தினர் 248 கூந ஆடினநச சுயவடியேடளைவ சந்தாக்களுக்கு ரூ.53,760/- தந்துள்ளனர். அனைவருக்கும் மிக்க நன்றி!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.


புதுடில்லி, 5.12.2012

தமிழ் ஓவியா said...


செத்தான்நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டோமானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்.
(விடுதலை, 14.3.1970)

தமிழ் ஓவியா said...


வதந்தீ! வதந்தீ!! வதந்தீ!!!


முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் உடல்நலம் குறித்து திட்டமிட்ட வகையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் வதந்தீகளைப் பரப்புவது வாடிக்கையாகி விட்டது. இன்று அதேபோன்ற வதந்தீயை தமிழ்நாடு முழுவதும் பரப்பி உள்ளனர்.

இப்படி ஓர் அற்ப சந்தோஷமா? கலைஞர் வாழ்வார், நூற்றாண்டு கடந்து வாழ்வார், வதந்தீயாளர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்! வாழ்க கலைஞர்!

தமிழ் ஓவியா said...


திட்டமிட்டு என்னைப்பற்றி வதந்தி! அதை யாரும் நம்பி ஏமாறவேண்டாம்


கலைஞர் பேட்டி

சென்னை, டிச. 5- சில விஷமிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு என்னைப்பற்றி வதந்திகளை உருவாக்கி யிருக்கிறார்கள். அதை யாரும் நம்பி ஏமாற வேண்டா மென்று கேட்டுக்கொள்கிறேன் என்று இன்று (5.12.2012) காலை அண்ணா அறிவாலயத்தில் செய்தி யாளர்களிடையே தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்தார்.
இது தொடர்பாக கலைஞர் அவர்கள் செய்தி யாளர்களிடையே கூறியதாவது:-

செய்தியாளர்: இன்று காலையிலிருந்து தங் களுக்கு உடல்நலம் சரியில்லை என்று தமிழ்நாடு முழு வதிலுமிருந்து தொலைபேசி மூலமாக விசாரித்துக் கொண்டிருக்கிறார்களே?

கலைஞர்: இன்று காலையிலிருந்து சில விஷமிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு என்னைப்பற்றி இந்த வதந்திகளை உருவாக்கியிருக்கிறார்கள். அதை யாரும் நம்பி ஏமாற வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.

செய்தியாளர்: காவிரி நீர்ப் பிரச்சினையில் கருநாடக மாநில அரசு தொடர்ந்து அடம் பிடித்து வருகிறதே?

கலைஞர்: ஒரு மாநில அரசைப் பற்றி அவசரப்பட்டு நான் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. நீண்ட நாள்களாக நான், தமிழகமும், கருநாடகமும் அண்டை மாநிலங்கள், இந்த இரண்டு மாநிலங்களும் நட்புணர்வோடு இருக்க வேண்டுமே அல்லாமல், தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது என்பதில் நான் கண்டிப்பாக இருப்பவன். எனவே, உங்கள் கேள்வியின் மூலமாக தமிழக அரசையோ, கருநாடக அரசையோ நான் இந்தப் பிரச்சினையில் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. ஏற்கெனவே காவிரி நதி பாய்கின்ற பகுதிகளில் உள்ள மாநிலங்கள் எல்லாம் சேர்ந்து மத்திய அரசின் உதவியோடு உருவாக்கியது காவிரி நதி நீர் ஆணையம். அந்த ஆணையத்திற்கு கட்டுப்பட்டுத்தான் காவிரி பாய்கின்ற பகுதிகளிலே உள்ள மாநிலங்கள் எல்லாம் நடக்கவேண்டும். இது அப்போதே எடுத்த முடிவு. அந்த முடிவினை தக்கக் காரணங்கள் இல்லாமல் யாரும் மீறக்கூடாது என்பது என்னுடைய கண்டிப்பான கருத்து. - இவ்வாறு கலைஞர் பேட்டியில் கூறியுள்ளார்.