Search This Blog

15.12.12

மருத்துவர் இராமதாசுக்கு சோ வக்கீலா? பார்ப்பனர்கள் ஒரு ஜாதியா? இனமா? வருணமா?

மருத்துவருக்கு சோ வக்கீலா?
பா.ம.க. நிறுவனர் மருத்துவர்  திரு. ச. இராமதாசு அவர்கள் தலித் - தலித் அல்லாதார் என்ற அமைப்பினை உருவாக்கி வரும் இந்தக் கால கட்டத்தில் அவருக்கு ஒரு வக்கில் கிடைத்துள்ளார். அவர்தான் திருவாளர் துக்ளக் சோ ராமசாமி அய்யர்வாள்!

அதுதானே பார்த்தோம். ஜாதிக்கு எள் மூக்கு அளவுக்கு எங்கேனும் உத்வேகம் கிடைத்தால் விட்டு விடுவார்களா சங்கராச்சாரியாரின் சீடர்கள்?
இந்த வார துக்ளக் இதழில் (19.12.2012) நினைத்தேன் என்று எழுதுகிறாராம். திருவாளர் சோ.


எடுத்த எடுப்பிலேயே பொய்யான தகவல் ஒன்றை முதலாகப் போட்டு அதற்கு மேல் அடுக்கடுக்காக தனக்கே உரித்தான பித்தலாட்ட பின்னல் கணக்குகளைப் போட்டுக் கொண்டே போகிறார்!

சில ஜாதி அமைப்புகளைச் சேர்த்துக் கொண்டு தலித்களுக்கு எதிராக ஒரு அணியை உருவாக்க வாருங்கள் _ தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு எதிராக ஒரு அணி அமைப்போம் என்று பா.ம.க. தலைவர் ராமதாஸ் கூறவில்லை. ஆனால் பல ஜாதிகளை இணைத்து, ஒரு கூட்டு அமைப்பை உருவாக்க அவர் முன்வந் துள்ளது இந்த எண்ணத்தில் தான் என்பது எல்லோருக்கும் புரிகிறது!  அந்த அடிப் படையில் பல கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் அவருடைய முயற்சிகளைக் கண் டித்துள்ளனர். ஆனால் ராமதாஸ் செய்கிற முயற்சிக்கு ஒரு பின்னணி இருக்கிறது. இவ்வாறு திருவாளர் சோ எழுதி யுள்ளார்.

மருத்துவர் இராமதாசு அவர்கள் சொன்னதைக் கூட சொல்லாததாக ஆக்க வேண்டும் என்பதிலே இந்த சோவுக்கு அப்படி என்ன அக்கறை!

12.11.2012 அன்று மருத்துவர் இராமதாசு அவர்கள் அளித்த பேட்டியில் அவர் கூறியது என்ன? சென்றவர்களுக்கு நன்கு தெரியும்.

அப்பட்டமாக ஒளிவு மறைவின்றி சொன்னது தலித் அல்லாதார்கள் ஒன்று சேர்ந்து ஓர் அணி அமைக்கப்படும் என்று கூறியிருக்க, சோ அதனை ஏன் இருட்டடிக்க முயற்சிக்கிறார்?

இந்த உண்மையை ஏற்றுக் கொண்டால் மருத்துவரை ஒரு துருப்பாகப் பயன்படுத்தி தந்தை பெரியாரையும், திராவிடர் இயக்கத்தையும் உரச முடியாதே!

அதுவும் திராவிடர் இயக்கத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசி மருத்துவர் புறப்பட்டுள்ள இந்த நேரம் _ அவரைப் பயன்படுத்திக் கொண்டால் பார்ப்பனர் எதிர்ப்பு என்னும் தமிழ் நிலத்தின் புயல் காற்றைப் புறந் தள்ளிவிட முடியாதா என்ற நப்பாசை!
சும்மா ஆடுமா சோவின் குடுமி என்று ஒரு நூலை எழுதினார் தோழர் தினகரன் சின்னராசு.

அதுதான் இப்பொழுது நினைவிற்கு வந்து தொலைக்கிறது.

நான் டாக்டருக்கு படித்ததில் இருந்து , டாக்டராக வேலை பார்த்ததில் இருந்து, வன்னியர் சங்க காலத்தில் இருந்து, பாமக தொடங்கிய பின்பு வரை நான் ஜாதி வெறியன் தான். என் மக்கள் முன்னேற வேண்டும். படிக்க வேண்டும், வேலைக்கு போக வேண்டும். 3 வேளை வயிறார சாப்பிட வேண்டும் என நினைப்பவன் ராமதாஸ் மட்டும்தான். மழை, வெயில் பார்க்காமல் உழைப்பவர்கள் வன்னியர்கள். நம்மைக் கண்டால் யாருக்கும் பிடிக்கவில்லை. தீப்பந்தம் எடுத்துச் சென்று கொளுத்துவதாக பிரசாரம் செய்கிறார்கள். நமது கைகளை வெட்டுவதாக கூறுகிறார்கள். நாம் ஒற்றுமையாக இருப்போம் என்று சொன்னால் உன் பெண்ணை கொடுக்கிறாயா என்று கேட்கிறார்கள். நமது பெண்களுக்குக் காதல் - வலை வீசி கடத்திச் செல்கிறார்கள். பெண்ணை பெற்றவர்கள் உஷாராக இருக்க வேண்டும். படிக்க வைக்கும்போது யாரையாவது துணைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டம் உளுந் தூர்பேட்டை தாலுகாவில் உள்ள வன்னியர்கள் ஒட்டு மொத்தமாக மாம்பழத்திற்கு தான் ஒட்டுப்போட வேண்டும் என்ற முடிவுக்கு வாருங்கள். இரட்டை இலை, சூரியன், கைக்கு போட்டால் நமக்கு நாமே அழித்துக் கொள்வதாகும். வன்னியன் மாம்பழத்திற்கு ஒட்டுப் போடுங்கள்.

ராமதாஸ் இருக்கும் போது வன்னியர் ஆட்சி வர வேண்டும். வன்னியர்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் நாம் ஆளலாம். தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு அக்னி சட்டி, மஞ்சள் கொடி  பறக்க வேண்டும்.
2016ஆம் ஆண்டு நடக்கும் சட்ட மன்றத் தேர்தலில் விழுப்புரம் மாவட் டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதி களிலும் அப்படியே வெற்றி பெறு வோம். எல்லோரும் விழிப்பாக இருங்கள் சிந்தியுங்கள் மற்ற கட்சிகளை மறந்து பாமகவை நினையுங்கள்  

என்று பேசியதுகூட சோ வாளுக்குத் தெரியாதா?

ஜாதிக் கட்சிகளை இணைத்து ஒரு கூட்டு அமைப்பை உருவாக்க அவர் முனைந்துள்ளதாக சோ சொல்லுகிறாரே. அதுகூட அந்தரங்க சுத்தியல்ல என்பது இந்தப் பேச்சு வெளிப்படுத்திடவில்லையா? புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் என்மீது படுத்துக் கொள்ளுங்கள் என்ற கதை யல்லவா இது! நியாயமாக துக்ளக் எப்படி விமர்சித்திருக்க வேண்டும்? இதே துக்ளக் (15.10.2003 பக்கம் 21) பா.ம.க. பற்றி எப்படி விமர்சித்து இருந்தது?

இதோ: வன்னியர் கட்சியா, வித்தியாசமான கட்சியா - எனும் தலைப்பில் இதே துக்ளக் (15.10.2003 - பக்கம் 21) என்ன எழுதிற்று?

வன்னியர் சங்கமாக சுமார் ஒன்பது ஆண்டுகள் செயல்பட்டு வந்த அமைப்பு 1989ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி சீரணி அரங்க கூட்டத்தில்தான் பாட்டாளி மக்கள் கட்சியாக மலர்ந்தது. தாழ்த்தப் பட்டோர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மதவழிச் சிறுபான்மையினர் ஆகியோருக்காக - பாடுபடுவதே கட்சியின் கொள்கை என்று அறிவிக்கப்பட்டது. அப் போது எழுப்பப்பட்ட சமூக நல்லிணக்கம் என்ற பா.ம.க.வின் கோஷம் பல தரப்பிலும் வரவேற்கப் பெற்றது. என்று எழுதப்பட்டு இருந்ததே துக்ளக்கில்

தாழ்த்தப்பட்டோரையும் பிற்படுத்தப் பட்டோரையும் சிறுபான்மையினரையும் இணைத்து அரசியல் நடத்தப் போவதாகச் சொன்னவர்கள், இப்பொழுது அதற்கு முரண்பாடாக தாழ்த்தப்பட்டோரைத் தவிர்த்து வெறும் ஜாதிக் கட்சிகளோடு கூட்டு அமைப்பது பற்றி துக்ளக் தனக்கே உரித்தான பாணியில் கேலி செய்யாதது ஏன்?

மாறாக அதனை நியாயப்படுத்தி எழுத வேண்டிய அவசியம் ஏன்? தாழ்த்தப்பட்ட மக்களை மருத்துவர் கைவிட்டு விட்டாரே என்ற ஆனந்தத்தில் மருத்துவரைத் தூக்கி வைத்துக் கொஞ்சுகிறது என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும்.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் கூட்டணி இந்துத்துவாவுக்கு எதிரானதாயிற்றே! பார்ப்பனர்கள் 
தனிமைப்படுத்தப்படுவார்களே!

எப்படியோ அந்த முயற்சியைக் கைவிட்டு வெறும் ஜாதி டப்பாவுக்குள் மருத்துவர் அடங்கி விட்டால் அக்கிரகார ஏட்டுக்கு ஆனந்தம் புடைத்துக் கொண்டு கிளம்பாதா?

வெகு தூரம் போக வேண்டாம். இந்த ஆண்டு துவக்கத்திலேயே கூட (22.1.2012) சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறு பான்மை சமுதாய மக்கள் பிரதிநிதிகளைக் கூட்டி இந்த அணியை பலப்படுத்துவோம் என்று கூறவில்லையா?

                                   ------------------------(தமிழ் ஓசை  23.1.2012 பக்கம் 4)

இந்த 11 மாத இடைவெளியில்தான் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட் டி ஷர்ட் போட்டு கூலிங் கிளாஸ் போட்டு வன்னிய சமூகப் பெண்களை மயக்குகிறார்களா?

சகோதரர் திருமாவளவன் இருக்கும் இடத்தில் நாங்கள் இருப்போம் என்று சொன்னதெல்லாம் ஏமாற்று வேலையா? ஏன் இதைப்பற்றி எல்லாம் துக்ளக் விமர்சிக்கவில்லை?

இந்தியாவிலுள்ள பிற்படுத்தப்பட்ட ஷெட்யூல்டு சிறுபான்மை இன மக்கள் ஆதிக்க சக்தியான பாரதீய ஜனதா, காங்கிரஸ், அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு எதிராக மதசார்பற்ற தன்மை, சமூக நீதி சனநாயகம், சமத்துவம் இவைகளைப் பெறுவதற்கு ஓரணியில் திரளுவது அவர்களது தலையாய கடமையாகும்.

இதே எண்ணம் கொண்ட தலைவர்கள், கட்சிகள், அமைப்புகள் ஓரணியில் நின்று தீய சக்திகளை எதிர்க்க தயாராக இருக்க வேண்டும்! -
இதையும் சொன்னவர் சாட்சாத் மருத்துவர்தான். 

                                      -----------------------------(தினப்புரட்சி 9.11.1990 பக்கம் 1)

தேர்தலின் போது 3 தொகுதி ஒதுக்குவதாக வாங்கிய ரூ.2½ கோடியை டாக்டர் ராமதாஸ் திருப்பித் தர வேண்டும் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி பேட்டி அளித்தாரே (தினத்தந்தி 11.10.2010).

கடந்த பாராளுமன்ற தேர்தலில் என்னைத் தோற்கடித்தவர் ராமதாஸ்தான் என்னுடைய தோல்விக்கு முழு முதற் காரணமான இருந்தது மட்டுமின்றி திமுக கூட்டணியில் இடம் பெற்ற எங்களுக்கு மூன்று தொகுதி ஒதுக்குவதாக உறுதியளித்து என்னிடம் 2½ கோடி ரூபாய் வாங்கினார்.

3 சீட்டுக்காக எங்கள் கட்சிப் பணத்தை ராமதாசிடம் கொடுத்தோம். உறுதியளித்தபடி  சீட்டுத் தரவில்லை. என் தோல்விக்குக் காரணமான ராமதாஸ் தேசிய ஜனநாயக முன்னணி தலைவர்களான பிரதமர் வாஜ்பாய், முதல் அமைச்சர் கருணாநிதி ஆகியோரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இதுதான் பிரச்சினைக்குத் தீர்வாக அமைய முடியும்.

ராமதாஸ்மீது வன்னிய சமுதாய மக்கள் வைத்திருந்த நம்பிக்கை போய் விட்டது. அவர் செல்வாக்கை இழந்துவிட்டார் என்று அதே பேட்டியில் கூறியனாரே வாழப்பாடி ராமமூர்த்தி (தினத்தந்தி 11.10.2000) இதெல்லாம் சோவுக்குத் தெரியா?

22.2.1991 நாளிட்ட தினப்புரட்சி நாள் ஏட்டில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் எழுதிய கடிதம்.

எங்களை கூடத்தான் கேட்கிறார்கள் பார்ப்பானே நாட்டை விட்டு வெளியேறு என்று தீர்மானம் போடுகிறீர்களே அதனால் ஓட்டு உங்களுக்குப் பாதிக்காதா? என்கிறார்கள். நாங்கள் சொல்லவில்லையா?

பார்ப்பனர்களுக்குப் மற்ற உயர் சாதியினருக்கும் தமிழகத்தில் 8%(அ)10% ஒதுக்கீடு கேட்பதே பாட்டாளி மக்கள் கட்சிதான் என்றார்.


இது யாருடைய அறிக்கை?

இடஒதுக்கீட்டிற்காகப் போராட்டம் நடத்தப்பட்டது என்றால், அதனால் பலனடைந்திருப்பது குறிப்பிட்ட ஒரு ஜாதி மட்டுமல்ல, ஏறக்குறைய 107 ஜாதிகள் பலனடைந்திருக்கின்றன. ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த இந்த ஜாதிகள் இன்று பலனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. அரசியல் அதிகாரம் பொருளாதார முன்னேற்றம் பெற்றிருக்கின்றன. அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களின் போர் முரசாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் பேராதரவோடு இந்த இரு இயக்கங்களும் வளர்ச்சியின் சிகரத்தை நோக்கி தொடர்ந்து வீறுநடை போட்டு வருகின்றன. உலகத் தமிழர்களின் அடையாளம் அழிந்து போகாமல் தடுக்கவும், உள்ளூர்த் தமிழர்களின் உரிமைகள் பறிபோகாமல் இருப்பதற்கும், பா.ம.க.வும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றின் வளர்ச்சியையும், செல்வாக்கையும் கண்டு பொறுக்க முடியாத ஆதிக்கச் சக்திகள் கடந்த காலங்களில் ஜாதி எனும் முத்திரை குத்தி தோற்றுப் போயிருக்கின்றன. துருப்பிடித்துப் போன அந்த ஆயுதத்தை வீசி எங்களை அழிக்க முயன்று அவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள்.
- _ பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை இது (25.2.2008) இந்த அறிக்கைக்கு என்ன பதில்? மருத்துவர் கூறுவாரா -_ அவரின் வக்கில் சோதான் கூறுவாரா?

இதோ மருத்துவர் மேலும் பேசுகிறார்: பெரியார் காலத்திலிருந்து இன்றுவரை பார்ப்பனர்கள் பிற்படுத்தப்பட்ட செட்யூல்டு, சிறுபான்மை வெகு மக்களின் (90%) முன்னேற்றத்தை எதிர்ப்பதால் தான் நாங்களும் அந்த ஆதிக்க வெறி பிடித்த பார்ப்பனீயத்தை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எங்கள் தயவில் வாழ வேண்டிய பார்ப்பனர்கள் எங்களுக்கே குழி பறிக்க நினைத்தால், ஆபத்து அவர்களுக்குத்தானே தவிர எங்களுக்கல்ல.
இதனால் பார்ப்பனர் ஒட்டுப் போட மாட்டார்கள் என்றால் அதிலும் எங்களுக்கு நட்டம் இல்லை. 3% பார்ப்பனர் ஒட்டைவிட 97% மற்ற சாதியினர் முன்னேற்றமும் அவர்களின் வாக்குகளுமே எங்களுக்கு முக்கியம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு விட்டு தம் கட்சியின் கொள்கைகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

அதில் ஒன்று பார்ப்பனர்களை எக்காரணம் கொண்டும் உறுப்பினராகக் கட்சியில் சேர்ப்பதில்லை.

இன்னொன்று பிற்படுத்தப்பட்ட செட்யூல்டு இன மொழி வாரி, மதவாரிச் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம் என்று குறிப்பிட்டுள்ளாரே.

அந்த மருத்துவர் இராமதாசை சோ கூட்டத்துக்குப் பிடிக்கவே பிடிக்காது.
தாழ்த்தப்பட்டவர்களை விலக்கி, சிறுபான்மை மக்களையும் கை விட்டு, வெறும் ஜாதிக் கட்சியாகப் பலகீனப்பட்டு பா.ம.க. நிற்கும்போது சபாஷ் போடுவது - பார்ப்பனர்களுக்கே உரித்தான பிரித்தாளும் சூழ்ச்சியும் _- தந்திரமும் தவிர வேறு என்ன?

ஒரு ஜாதி மீதான விரோதத்தை அடிப்படையாகக் கொண்டு திராவிடர் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு தான் ஜாதி அமைப்புகள் பல தோன்ற ஆரம்பித்து விட்டன. ஒருஅமைப்புக்கு ஜாதி விரோதம் தான் அடிப்படை எனும்போது இன்னொரு அமைப்புக்கு ஜாதிப்பற்றுதான் அடிப்படை என்று அமைவதில் வியப்பில்லை அல்லவா! 

 என்று மருத்துவரின் ஜாதிக்கட்சிக்கு வக்காலத்துப் போட்டுப் பேசுகிறார் சோ.
எவ்வளவுப் பெரிய திரிபு வேலை! ஒரு ஜாதி மீதான விரோதத்தை அடிப்படையாகக் கொண்டு திராவிடர் கழகம் ஆரம்பிக்கப்பட்டதாம்!
பார்ப்பனர்கள் என்பவர்கள் ஒரு ஜாதியா? இனமா? வருணமா? முதலில் அதில் தெளிவு இருக்க வேண்டும்.

தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே வகுப்புத்துவேஷிகளாக இருந்து கொண்டு மற்றவர்களைப் பார்த்து வகுப்புத்துவேஷிகள் வகுப்புத்துவேஷிகள் என்று கூறுவார்கள் என்று லாலாலஜபதிராய் கூறுவதைத்தான் இந்த இடத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும்.

பார்ப்பனர்கள் தங்களைப் பிர்மாவின் நெற்றியிலே பிறந்தவர்கள் என்பார்கள் இந்த உலகத்தையே பிராமணர்களுக்காகப் பிர்மா படைத்தான் என்பார்கள்.
கடவுளுக்கு மேலே பிராமணன் என்று இவர்களின் சங்கராச்சாரியார்கள் கூறுவார்கள்.

பெரும்பான்மையான சமூக மக்களைப் பார்த்து சூத்திரர்கள் என்பார்கள். தங்களின் வேசி மக்கள் என்று எழுதி வைப்பார்கள்.

இதனைக் கேட்டுக் கொண்டு எருமை மாடு மாதிரி இருந்தால் துவேஷ மற்றவர்கள்; - எதிர்த்துக் கேட்டால் சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்று குரல் கொடுத்தால் ஒரு ஜாதி மீதான விரோதத்தை அடிப்படையாகக் கொண்டது திராவிடர் கழகம் -தலைவர் ஈ.வெ.ரா. என்று இந்த 2012லும் எழுதக் கூடிய துணிவு மருத்துவர் இராமதாசு போன்றவர்களால் வந்தது என்று கருதுவதற்கு இடம் உண்டு.

In Fact in one Occasion Rajaji proudly said he valued his Brahmin hood more than his Chief Ministership (Caravan Appril (1) 1978.

முதலமைச்சர் என்ற பதவியைவிட பிராமணன் என்ற தகுதியையே நான் அதிகமாக மதிக்கிறேன் என்று சொன்ன ராஜாஜி துவேஷியல்லவாம் ;- இப்படி சொல்லுகின்றவரை எதிர்த்தால் அது ஒரு ஜாதி மீதான விரோதமாம்.
இதே துக்ளக் சோ ராமசாமி, திராவிடர் கழகத் தலைவரிடம் பேட்டி கண்டபோது திராவிடர் கழகத் தலைவர் ஒரு கேள்வி கேட்டு மடக்கினாரே!
நீங்கள் உங்கள் சட்டையைக் கழற்றுங்கள்; நான் என் சட்டையைக் கழற்றுகிறேன் யார் முதுகில் ஜாதி சின்னம் இருக்கிறது என்று பார்க்கலாம் என்ற வினாவை எழுப்பியபோது விழி பிதுங்கி நின்றவர்தானே இந்த சோ ராமசாமி

எங்கள் வீட்டுப் பெரியவர்களை நான் அதிர்ச்சிக்கு ஆளாக்க விரும்பவில்லை என்று கூறித் தானே சமாளித்தார். இவர்கள் வீட்டுப் பெரியவர்கள் மகிழ வேண்டும் என்றால் நாம் எல்லோரும் வேசி மக்கள் ஆக வேண்டுமாம்.
இந்த லட்சணத்தில் பெரியார் ஒரு ஜாதிமீது வெறுப்புக் கொண்டார். என் றெல்லாம் எழுதுவது அசல் போக்கிரித் தனம் அல்லாமல் வேறு என்னவாம்?

ஒரு சமூக அமைப்பில், அந்தச் சூத்திர, பஞ்ச மக்களுக்காக கல்வி வேண்டும், வேலை வாய்ப்பு வேண்டும் மற்றவர் களுக்கு உள்ளது போன்ற அனைத்து உரிமைகளும் சட்டப்படி கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தால் போராடினால் அது எப்படி துவேஷமாகும்?
அது மனித உரிமையாகும்.

இதனை எதிர்ப்பவர்கள்தான் துவேஷத்தின் ஊற்றுக் கண்ணாவார்; இன்னும் அந்த  விடாப்பிடி வர்ண திமிரோடு இருக்கக் கூடியவர்கள் என்று பொருள்.
அதன் வடிவமாகத் தான் இன்று வரை சோ ராமசாமிகள் உருவங்களில் நடமாடிக் கொண்டும் இருக்கின்றனர்.
மற்ற சமூகங்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்து விட்டதாம். ஆனால் நிராதரவாக பிராமணப் பசங்கதான் இருக்கிறார்களாம். ரிட்டையரான பிராமண பென்ஷன்னர்கள் உதவ வேண்டும் என்று சொல்லும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரகேசரேந்திர சரஸ்வதி இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் கம் யூனல் பேஸிஸில் பேசியாக வேண்டி யிருக்கிறது என்று சொல்லுகிறாரே! 

                         ----------------------------(தெய்வத்தின் குரல் - 3ஆம் பகுதி)

எல்லாவற்றையும் துறந்த ஒரு லோகக் குரு கம்யூனலாகப் பேசுகின்றேன் என்று ஒப்புக் கொள்கிறாரே _ இதற்கு சோவின் பதில் என்ன?

எல்லாவற்றையும் கடந்தவர்தானாம் -_ தான் ஒரு பிராமணன்  என்பதைத்தவிர; இப்படிப்பட்ட யோக்கிதையில் உள்ளவர்கள்தான் பெரியாரைப் பார்த்துக் கம்யூனல் என்கிறார்கள்.

வாயால் சிரிக்க முடிகிறதா?

பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்டீன் என்ற பாடிய திருமூலர் இனத் துவேஷியா?

இந்தியாவின் சமூகப் புரட்சியாளர்கள் நாராயணகுரு, மகாத்மா பாபூலே, அண் ணல் அம்பேத்கர் உள்பட அனைவரும் பார்ப்பனர் எதிர்ப்பைத் தூக்கிப் பிடித்தனரே!

ஏன் - இவர்களின் விவேகானந்தர் பார்ப்பனர்கள்மீது வீசாத வெடி குண்டா?

சித்தர்கள் எப்படி?

சித்தர்கள் சுளுக்கு எடுக்கவில்லையா? மறைமலை அடிகள் கா.சு. பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்கள் பார்ப்பனர்களை வெளுத்து வாங்கவில்லையா? அவ்வையார் நூலெனிலோ கோல் சாயும் என்று கூற வில்லையா?
கல் மனப் பார்ப்பார் தங்களைப் படைத்துக் காகத்தை என் செயப் படைத்தாய்? என்று விவேக சிந்தாமணி (பாடல் எண் 82) பாடவில்லையா?
வேமன்னா தோலுரிக்கவில்லையா? புத்தர் புரட்டி எடுக்க வில்லையா?
இவர்களை எல்லாம் எந்தப் பட்டியலில் வைக்கப் போவதாக துக்ளக் கூட்டத்துக்கு உத்தேசம்?

நீங்கள் ஏன் ஆன்டிபிராமின் (Anti Brahmin) என்று திருவாளர் சோ கேட்ட கேள்விக்கு வீஆர் புரோ ஹீயுமன் (Pro Human) அதனால் ஆண்டி பிராமின் என்று பதில் சொன்னாரே தமிழர் தலைவர் கி.வீரமணி அதனை இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.

-----------------------------------------மின்சாரம் அவர்கள் 15-12-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

25 comments:

தமிழ் ஓவியா said...


தருமபுரி


தருமபுரியில் கடந்த 9 ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஜாதி - தீண் டாமை ஒழிப்பு மாநாடு - பல தாக்கங்களை ஏற் படுத்தியுள்ளது. அதன் தீர்மானங்கள் தொலை நோக்குக் கொண்டவை - பொதுமக்கள் மத்தியில் மிகுந்த மதிப்பை ஈட்டித் தந்துள்ளன.

இதன் தாக்கம் மக் களிடத்தில் சென்று விடாதபடி சில செயல் களைத் திட்டமிட்டு அரங் கேற்றி வருவதாகத் தெரிகிறது.

அரூர் பழைய பேட் டையைச் சேர்ந்த சேட்டு கவுண்டர் மகள் ரம்யாவும், நம்பியம்பட்டி தாழ்த்தப் பட்டோர் குடியிருப்பைச் சேர்ந்த பட்டதாரி முரு கனும் சில ஆண்டுகளா கக் காதலித்து வந்தனர்.

இந்தக் காதலுக்கு இரு வீட்டிலும் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது.

பின் என்ன பிரச் சினை? திருமணத்தை ஜாம் ஜாமென்று நடத்திட வேண்டியதுதானே?

விட்டுவிடுவார்களா? எங்கே எங்கே காதல்? என்று தேடி அலைந்து கொண்டு இருக்கிறார் களே! கையில் கிடைத் தது பிரச்சினை என்றால், அதைக் கொம்பு சீவி விடவேண்டாமா?

அடுத்த திருப்பம் என்ன? மணமகன் முரு கனின் உறவினர்கள் சேட்டுக் கவுண்டரை மிரட்ட ஆரம்பித்தனர். விளைவு - ரம்யா வீட்டி லிருந்து மாயமானார்.

தன் மகளை முருகன் கடத்திச் சென்றதாக சேட்டுக் கவுண்டர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அரூர் நீதிமன்றம் ரம் யாவை சேலம் காப்பகத் திற்கு அனுப்பி வைத்தது.

காதலர்கள் பெற் றோர் விருப்பத்தோடு திருமணம் செய்து கொள்ள விருந்த நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடுவது எந்த வகையில் நியாயம்? இது சட்டப்படி சரியானதுதானா?

ஏற்கெனவே இசைவு தந்திருந்த மணமகளின் பெற்றோர்களை மிரட் டுவோர் யார்? அச்சுறுத் துவோர் யார்? அந்தப் பின்னணி என்ன? என் பதுதான் முக்கியம்.

ஜாதிக்கு அடையா ளம் கிடையாது தோழர் களே! பெரிய இடத்தில் காதல் திருமணம் நடந் தால் மவுனம் சாதிப்போம்; அடித்தட்டு மக்களி டையே காதல் மலர்ந்து திருமணம் நடந்தால் முண்டா தட்டுவது ஏன்?

மனித உரிமைகள் செழித்த 21 ஆம் நூற் றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை மறக்க வேண் டாம்!

- மயிலாடன் 15-10-2012

தமிழ் ஓவியா said...


பெரியார் பேசுகிறார்


(வடநாட்டில் பெரியார் ஒரு சுற்றுப்பயணத் தொகுப்பு நூலில், தொகுதி_2 333_ஆம் பக்கத்தில் இருப்பது)

சும்மா நினைத்தால் மட்டும் போதாது இன்னமும் சூத்திரன் என்றால் பார்ப்பனனின் வைப் பாட்டி மகன் தாசிபுத்திரன் என்று சாஸ்திரத்தில் இந்து மத சட்டத் தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது!

எத்தனை நாளாக இந்தக் கொடுமை இருக்கிறது. இதுபற்றி மான உணர்வோட எவனும் கவலைப்படுவது இல்லையே!

இதை சகித்துக் கொண்டுதானே நாம் இருக்கிறோம். நமக்கெல்லாம் மானம் முக்கியமல்லவா? இப்படி ஓர் உணர்ச்சி வந்து நாம் ஏன் கீழ்சாதி, பிறவி இழிவு எதற்கு நமக்கு என்றெல்லாம் கேட்டால் உடனே அடுத்த ஜென்மத்தில் ஆண் டவன் மாற்றுவார், போன ஜென் மத்தில் புண்ணியம் செய்தான். அவன் பிராமணனாய்ப் பிறந்தான்.

நீ போன ஜென்மத்தில் பாவம் செய்தாய். பறையனாய் சூத்திரனாய் பிறந்தாய் என்கிறான், இது என் செயல் அல்ல

கடவுள் செயல்

பகவான் செய்தது என்கின்றான் -ஆதாரத்திற்கு மதத்தை சாஸ்தி ரத்தைக் காட்டுகிறான் கடவுள்

மறுபிறப்பு

போன ஜென்மம்

பாவம் புண்ணியம்

இதை நம்புகிறவரை நமக்குள்ள இழிவு மாறுமோ? மாற வழி உண்டா?

இழிவு இருக்கிறது என்று சும்மா நினைத்தால் போதுமா; அதற்குள் பின் பரிகாரத்தை தேடினால்தானே அந்த இழிவைப் போக்க முடியும்? கடவுள், கடவுள் செயல் என்று நினைத்துக் கொண்டே மூளையெல் லாம் அது நிறைந்து போய் இருந்தால் நம் சாதி இழிவு பிறவி பேதம் ஒழிய முடியுமோ?

அதை ரத்தத்திலே கலந்து அல்லவா அவன் நம்மை கீழ்சாதி ஆக்கியிருக்கிறான்?

நான் தோன்றித்தானே கடவுளைப் பழிக்க மதத்தை ஒழிக்க சாஸ்திரம் புராணக் குப்பைகளையெல்லாம் புரட்டு என்று காட்டிய பிறகு அல்லவா இன்று பல பேர் இதனை ஒப்புக் கொள்ளும் நிலைக்கு வந்துள்ளனர்.

இவ்வளவு பெரிய கூட்டத்தில் நெற்றியில் சாம்பலும் நாமமும் அடித்த முட்டாள்கள் 10 பேர்கள் கூட உங்களில் இல்லையே.

இது எதைக் காட்டுகிறது.

தமிழ் ஓவியா said...


அடிமை வாழ்வு!


நம்முடைய நாட்டில் நம்முடைய காரியத்திற்கு ஆக, நம்முடைய திறமை தகுதியை ஒரு அன்னியன் அதுவும் நம்மை அடிமைப்படுத்திய எதிரியே பரிசோதிக்கிறான் என்றால் நாம் அடிமையாக சிறை வாழ்வு வாழ்கிறோம் என்பதற்கு இதை விட வேறு என்ன ருஜு வேண்டும்.
- - _ தந்தை பெரியார், விடுதலை 16.9.1950

தமிழ் ஓவியா said...


மோடி - ஊதிப் பெருக்கும் ஊடகங்கள்


நமது ஊடகங்களின் தலையாய பணி - தகுதி அற்றவரையும் மிகுதியாகக் காட்டுவதே எடுத்துக் காட்டு பிரதமர் கனவு காணும் மோடியை இந்தியா விலேயே மிக முன்னேற்றமடைந்த மாநிலமாக குஜராத்தை உயர்த்தியவர் போன்று ஒரு மாயையை தோற்றுவித்தது தான். நம் நாடு விடுதலை அடைந்த பின்பு வட மாநிலங்கள் வளர்ச்சி கண்டன. அவற் றில் குஜராத் மாநிலமும் ஒன்று. இதில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால் ஊடகங்கள் ஏதோ மோடி ஆட்சிக்கு வந்த பின்புதான் குஜராத் உலகம் வியக்கும் அளவில் அங்கு பாலும் தேனும் கரை புரண்டு ஓடுவது போல மிகைப்படுத்துகின்றன.

ஒரு மாநிலத்தின் கட்டமைப்புகள் முன்னேற்றத் துக்கு வழி வகுக்கும். போக்குவரத்துக்கேற்ற தெருக்கள், மின்சாரம், குடிநீர் கல்வி சுகாதாரம் போன்றவை அடிப்படைத் தேவைகள் . இவைகளில் வேறு மாநிலங்கள் சிறப்பாக செய்திருந்தாலும் குஜராத் மட்டுமே சாதனை புரிந்தது போல ஊடகங்கள் ஊதிப் பெருக்குகின்றன. அந்த மாநில மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கான அளவுகோலையும் நாம் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். சட்டம் ஒழுங்கு, அச்சமற்ற நிலை, சம நிலை, மாநில வருமானம் மற்றும் முன்னேற்றம் எல்லா தரப்பினரையும் சென்றடைகின்றனவா என்பதனையும் நாம் நோக்க வேண்டும். சில புள்ளி விவரங்களை சுருக்கமாகக் காண்போம்.

திரு. அதுல் சூட் நவம்பர் 30ஆம் நாள் இந்து நாளேட்டில் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். அவர் துவக்கத்திலேயே சொல்வது, குஜராத் முன்னேற்றம் கவலை அளிப்பதாக உள்ளது என்று. ஒன்றல்ல பல விடயங்களில் அதி வேக முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் என்ற திட்டத்தில் அந்த மாநிலம் மக்களின் கல்வி சமூக சம நிலை, சுகாதாரம், நிரந்தர வாழ்வாதாரம், நீதி அமைதி போன்றவை புறந்தள்ளப்பட்டுள்ளன என்று அவர் கூறுகிறார். பளபளக்கும் மேல் பூச்சுக்கு அடியில் புற்று நோய் உள்ளனவோ என்று தோன்றுகிறது. குஜராத் போன்றே நல்ல முன்னேற்றத்தை காண்பிக்கும் மாநிலங்கள் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் அரியானா. ஆனால் இந்த மாநிலங்களின் முன்னேற்றங்கள் ஊடகங்களுக்கு முன்னேற்றமாகத் தெரியவில்லை. ஊடகங்களின் ஒரே குறிக்கோள் மோடியை தூக்கிப் பிடிப்பதுதான். அதுல்சூட் கூறும் விளக்கங்கள்.

1. வேலை வாய்ப்பு: மோடியின் சாதனையின் முதல் வீழ்ச்சி வேலை வாய்ப்பில் காணப்படும் தேக்க நிலை. புதிய வேலை வாய்ப்புகள் பெருக வில்லை. ஊதிய உயர்வும் நிகழவில்லை. தொழிலாளர்கள் நிலை பரிதாபமே.

2. கிராமங்களில் நிலவும் ஏழ்மை... பட்டணங்களில் காணப்படும் பளபளப்பு கிராமங்களில் காணும் அவலங்களை மறைக்கின்றன ஜீஷீஸ்மீக்ஷீஹ் ணீனீவீபீ ஜீக்ஷீஷீஜீமீக்ஷீவீஹ் என்கிறார்.

கிராமங்களில் நிலவும் ஏழ்மையைக் குறைப்பதில் குஜராத் மாநிலம் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களைவிட பின் தங்கியே உள்ளது. 2009-_10 இறுதியில் குஜராத் கிராமங்களில் நிலவும் ஏழ்மை அரியானா மற்றும் தமிழ்நாட்டைவிட அதிகம். தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களோடு ஒப்பிடுகையில் ஏழ்மையின் ஏற்றத் தாழ்வு குறைப்பு விகிதம் மிக மெத்தனமாக உள்ளது. இன்று குஜராத் கல்வியிலும், சுகாதாரத்திலும் பின் தங்கிய பணக்கார மாநிலம். கல்வி அறிவு பெற்றோரில் அது ஐந்தாவது இடத்திலிருந்து ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உயர் கல்வி பெறுவோரில் இருபத்தோராம் இடத்திலிருந்து இருபத்தாறாவது இடத்திற்கு தாவி உள்ளது.

சுகாதாரம் குழந்தை இறப்பு தடுப்பில் குஜராத் பத்தாவது இடத்தில் உள்ளது. ஊட்ட உணவு போதாமை 1998_-99இல் இருந்ததைவிட 2005-_2006 இல் அதிகரித்துள்ளது. நோயிலிருந்து தடைக் காப்பு அளிப்பதில் ஒன்பதாவது இடத்திலிருந்த குஜராத் பதினோராவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சமூக முன்னேற்றங்களுக்கான நிதி பகிர்வு குறைந்து கொண்டே வந்துள் ளது. வேறு துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதுதெளிவு.

பத்து ஆராய்ச்சியாளர்கள் இந்திய மாநிலங்களின் முன்னேற்றங்களைப் பற்றிய ஆய்வில் இது போன்ற குறியீடுகளை நாம் காண முடிகின்றது.

குஜராத்துடன் ஒப்பிடுகையில், மகாராஷ்டிரா அரியானா மற்றும் தமிழ்நாடு சிறந்த முன்னேற்றங்களை பல்துறைகளில் வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக தமிழ்நாடு இந்த மாநிலங்களின் முன்னேற்றங்களைக் கருத்தில் கொள்ளாமல் அகில இந்திய மட்டில் குஜராத் மட்டுமே தலை நிமிர்ந்து உள்ளது என்ற வறட்டு வாதத்தை நமது ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன. இவைகளின் உள்நோக்கமே வேறுதான்.

மேனியின் வெளி பளபளப்பு புற்று நோயை மறைக்கின்றதோ!

- சி. நடராசன்

தமிழ் ஓவியா said...


பார்ப்பனமயமாகிப் போனது கிரிக்கெட் வாரியம்!

இளவழகி, ரேவதி, பாபு இராதா கிருட்டிணன் இவர்கள் மூவரும் யார்? சென்னையில் குடிசைப் பகுதியில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த - சாதியால் ஒடுக்கப்பட்ட தமிழர்கள்; விளையாட்டு வீரர்கள்.

இவர்கள் தங்களது கடுமையான உழைப்பால் மூவரும் அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் 2010 செப்டம்பர் மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை கேரம் போட்டியில் பங்கேற்றனர்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இளவழகி முதலிடம் பெற்று இரண் டாவது முறையாக உலக வாகையர் (சாம்பியன்) பட்டம் வென்றார். ரேவதி என்ற வீராங்கனை மூன்றாவது இடத் தையும், ஆண்கள் பிரிவில் பாபு இராதா கிருட்டிணன் இரண்டாம் இடத்தையும் வென்றனர்.

இப்போட்டியில் கலந்து கொள் வதற்கான கட்டணங்கள், போக்கு வரத்து செலவுத் தொகைகளை மூவரும் தங்களுடைய சொந்த முயற்சியில் திரட்டி விளையாடப் போனார்கள். இதற்கு தமிழக அரசோ விளையாட்டு ஆணையங்களோ எந்த உதவியும் செய்யவில்லை. ஆனால் உலகக்கோப்பை கேரம் போட்டியில் மூவரும் மேற்கண்ட வெற்றியைப் பெற்றார்கள். என்றதுமே தமிழக அரசும் - விளையாட்டு ஆணை யமும் அவர்கள் வெற்றியில் உரிமை கொண்டாடி மகிழ்ந்தன. விளையாட் டில் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த மூன்று தமிழர்களுக்கும் இன்று வரை பரிசுத் தொகையைக் கொடுக்காமல் இழுத்தடிக்கிறது தமிழக அரசு. தமிழர்களை விளையாட்டுத் துறையில் ஓரங்கட்டி விட்டு - கிரிக்கெட் டென் னிஸ் விளையாட்டுப் பார்ப்பனர்களை மட்டும் உயர்த்திப் பிடித்து பெருமைப் படுத்துகின்றன மத்திய மாநில அரசுகள்.
வெளிநாட்டில் பகட்டாக வாழ்ந்து வரும் உலக சதுரங்க வாகையர் (சாம் பியன்) ஆன பார்ப்பன விசுவநாதன் ஆனந்துக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசு அரசாங்கத்தால் உடனடியாக அள்ளிக் கொடுக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

விளையாட்டுத் துறையில் ஏகலை வர்களாக தானே முயன்று யார் உதவியும் -_ வாய்ப்பும் _ வசதியும் இல் லாமல் தமிழன் வீட்டுப் பிள்ளைகள் ஏராளம் பேர் முயன்று உயர்ந்து வரு கிறார்கள். இவர்களை கைதூக்கிவிட மத்திய, மாநில அரசுகள் மௌனம் சாதிக்கின்றன.
ஆனால், இந்திய மட்டைப் பந்து அணி முழுவதும் பார்ப்பனமயமாகி வருகிறது! ஙி.சி.சி.மி என்பதன் விளக்கம் (ஙிஷீணீக்ஷீபீ ஷீயீ சிஷீஸீக்ஷீஷீறீ யீஷீக்ஷீ சிக்ஷீவீநீளீமீ வீஸீ மிஸீபீவீணீ) இதில் முதல் சொல்லான ஙிஷீணீக்ஷீபீ என்பதற்குப் பதிலாக (ஙிக்ஷீணீலீனீவீஸீ ஷீயீ சிஷீஸீக்ஷீஷீறீ யீஷீக்ஷீ சிக்ஷீவீநீளீமீ வீஸீ மிஸீபீவீணீ) என்பதன் சுருக்கம்தான் (ஙி.சி.சி.மி) என்று பொருள் விளங்கும் நிலைக்கு இந்திய மட்டைப் பந்தாட்ட வாரியம் ஙிக்ஷீணீலீனீவீஸீ மிஸீபீவீணீஸீ சிக்ஷீவீநீளீமீக்ஷீ இந்திய பார்ப்பன மட்டைப் பந்தாட்ட வாரியமாகிவருகிறது.

இந்திய மட்டைப் பந்தாட்ட வாரியத்தின் வாயிலாக களமிறங்கி விளையாடும் பார்ப்பன இளைஞர்கள் பட்டியல் இதோ!

1. சுனில் கவாஸ்கர், 2. ரவி சாஸ்திரி, 3. அனில் கும்ளே, 4. சச்சின் டெண்டுல்கர், 6. இராகுல் டிராவிட், 7. சவுரவ் கங்குலி, 8. வினுமங்காட், 9. அஜித் வடேகர், 10. ஜி.ஆர். விஸ்வநாத், 11. இ.ஏ.எஸ். பிரசன்னா, 12. இஷாந்த் சர்மா, 13. யாஷ்பால் சர்மா, 14. சேத்தன் சர்மா, 15. மனோஜ் பிரபாகர், 16, பி. சந்திரசேகர், 17. கே. ஸ்ரீகாந்த், 18. எம். சிவராமகிருஷ்ணன், 19. திலீப் டோஷி. 20. சுனில் ஜோஷி, 21. ரோகித் சர்மா, 22. வெங்கடேஷ் பிரசாத், 23. அசோக் மல்கோத்ரா, 24. வி.வி.எஸ். லக்ஷ்மன், 25. முரளி கார்த்திக், 26. ஸ்ரீ சாந்த், 27. திலீப் சர்தேசாய், 28. சஞ்சய் மஞ்சுரேக்கர், 29. எம்.எஸ். ஜெய்சிம்ஹா, 30. சுதாகர் ராவ், 31. டி.ஏ. ஷேகர், 32. அஸ்வின், 33. முரளி விஜய், 34. சட கோபன் ரமேஷ், 35. அனிருத்சாஸ்திரி, 36. சுப்ரமணியம் பதிரிநாத், 37. இரவிச்சந்திரன் அஸ்வின், 38. தினேஷ் கார்த்திக், 39. முரளிகார்த்திக், 40. லட்சுமி ஸ்ரீ பாலாஜி, 41. லக்ஷ்மண் சிவராம கிருஷ்ணன், ஹேமங்பதானி, அபினவ் முகுந்த், கிருஷ்ணமாச்சாரி +காந்த், டபிள்யு வி. ராமன், ஸ்ரீதரன் ஸ்ரீராம், ஸ்ரீநிவாச ராகவன், வி.பி. சந்திரசேகர், டி.இ. ஸ்ரீநிவாசன், டி.ஏ. சேகர், எம்.ஜே. கோபாலன்.

இத்தனை பேரும் அக்மார்க் பார்ப் பனர்களே! எங்கே பணம் கொழிக் குமோ அங்கே உள்ளே புகுந்திருக் கிறார்கள் பார்ப்பனர்கள்! இந்த மட்டைப் பந்து பார்ப்பனர்களைத் தான் தொழிலதிபர்கள் எல்லாம் போட்டிப் போட்டுக் கொண்டு அவர்களை கோடிக்கணக்கில் ஏலம் எடுத்து விளையாட வைக்கிறார்கள். தொலைக் காட்சி ஊடகங்களும் இவர்களுக்குப் பெரிய விளம்பரங் களைக் கொடுக்கிறது. இந்திய அரசும் - மாநில அரசுகளும் மட்டைப் பந்து பார்ப்பனர்களுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டு இருக்கின்றன. இந்திய ஒற்றுமையை வளர்க்கிறேன் என்ற போர்வையில் இந்த பெருச்சாளிகளை வளர்க்கிறார்கள்.

தமிழர்களின் வீரவிளையாட்டான சிலம்பம் - கபடி - உலக அரங்கில் வளர்த்து எடுக்க நாதியில்லாமல் தவிக்கின்றன.

4.11.2012 இல் திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி கலந்துரையாடல் கூட்டத்தில் திரா விடர் கழகத் தலைவர் கூறிய அற்புத மான நவமணியான கருத்துக்களுள் ஒன்று இளைஞர்களைப் பிடித்து ஆட்டும் கிரிக்கெட் (மட்டைப் பந்து) போதையை முதலாவதாகத் தெளிய வைக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரியதொரு பிரகடனத்தை செய்திருக்கிறார்கள்!

உண்மையிலேயே கிரிக்கெட் ஆட்டத்தில் பார்ப்பனப் பேய்கள் இளைஞர்கள் என்ற போர்வையில் உள்ளே புகுந்து நாட்டு முன்னேற்றத் தையே கெடுத்துக் கொண்டிருக் கிறார்கள். மாணவர்கள், இளைஞர்கள் படிப்புக் கெட்டு - வேலைக்குப் போக வேண்டியவர்கள் வேலைக்கும் போகாமல் கிரிக்கெட் போதையில் நாடு குட்டிச் சுவராகி வருகிறது. கழகத் தலைவர் சொன்னதை அருள்கூர்ந்து சிந்திப்போம். செயல்படுவோம்! 15-12-2012

தமிழ் ஓவியா said...


மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கடைஞாயிறாம்


விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கடைஞாயிறையொட்டி நேற்று நள்ளிரவு சிம்மகுளத்தில் பெண்கள் நீராடினர். (அடுத்தபடம்) குழந்தை வரம் வேண்டி ஈர உடையுடன் கோயில் வளாகத்தில் படுத்திருந்தனர்.

நள்ளிரவில் சிம்ம குளத்தில் பெண்கள் நீராடி ஈர உடையுடன் பிரார்த்தனையாம்!

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் மரகதாம் பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத கடைசி ஞாயிறு விழா ஆண்டு தோறும் கொண்டா டப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கடை ஞாயிறு விழாவை யொட்டி கோயில் வளாகத்தில் உள்ள சிம்மக்குளம் திறப்பு விழா 10.12.2012 நள் ளிரவு நடந்தது.

ஆதிசங்கரரால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீசக் கரம் ஸ்தாபிக்கப்பட் டுள்ள சிம்மகுளத்தில் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் நீராடி கோயில் வளா கத்தில் படுத்துறங்க வேண்டும். அப்போது, கனவில் வரும் மார்க்கபந்தீஸ்வரர் பூ, பழம், பாவாடை வழங்கி அருள் புரிந்து அடுத்த ஆண்டே குழந்தை வரம் கிட்டுமாம்.

வேண்டுதல் நிறைவேறிய பெண் கள் மரகதாம் பிகைதாயார் சன்ன திக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் தொட்டில் கட்டி வேண்டுதல் நிறைவேற்றினராம். அதன்படி நள்ளிரவு 12 மணியளவில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்தா சுவாமிகள் ஆகியோர் சிம்ம குளத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து திறந்து வைத்தன ராம். ஏராளமான பெண்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து சிம்ம குளத்தில் நீராடி கோயில் வளாகத்தில் படுத்துறங்கினர்.

சிம்மகுளம் திறப்பு விழா நிகழ்ச்சியில் அணைக்கட்டு எம்.எல்.ஏ. கலையரசு, ஒன்றியக் குழு தலைவர் சூரியகலா, துணை ஆணையர் வீரபத் திரன், மாவட்ட கவுன்சிலர் தமிழ் செல்வி, ஊராட்சி மன்றத் தலைவர் பலராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 11ஆம் தேதி காலை பிரம்மதீர்த்தத்தில் தீர்த்தவாரி, பால கனுக்கு உபநயன சிவதீட்சை வழங் குதல், சுவாமி வீதி யுலா ஆகியவை நடந்தன.

விழாவுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் அசோக் குமார், கோயில் செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் விரிஞ்சிபுரம் பொது மக்கள் செய் திருந்தனராம்.

2012ஆம் ஆண்டில்தான் வாழ் கிறாமோ? கற்காலத் தில் வாழ்கிறோமா? குழந்தை கருவுறுவது எப்படி என்று தெரியாத காலத்தில் எப்படியோ இருந்து தொலையட்டும் இப்பொழுது விஞ் ஞான காலத்தில் மருத்துவம் எவ் வளவு வளர்ந்துள்ளது! இதற்கு அரசு அதிகாரிகளின் துணை வேறு வெட்கக்கேடு!

மற்ற மற்றவிடயங்களில் எல்லாம் வெத்கப்படும் பெண்கள் பக்தி என்று வந்து விட்டால் மட்டும் வெட்கப்படுவதில்லையே பக்தி- _ புத்திக்கு மட்டுமல்ல -_ மானத்துக்கும், கூட கேடே!

தமிழ் ஓவியா said...


எங்கே இருக்கிறது சாதி?


எங்கே இருக்கிறது? சாதி - தோழா
என்னிடம் காட்டு அதில் பாதி.
சாதிகள் இல்லையடி பாப்பா - என்று
ஆதியில் பாரதியார் சொன்னார்
காதினில் வாங்காத மக்கள் - இன்று!
மேதினியில் மோதிடுதல் பாரீர்!
வேதியர் முகத்திலும் கண்கள் - இரண்டு
வேறு பிறப்பிலும் இரண்டே
தாயின் வயிற்றில் பத்து மாதம் - நாம்
தங்கிப் பிறப்பதும் ஒன்றே
பார்ப்பனர் என்றுஒரு சாதி - நாட்டில்
பறையர் என்று வேறு சாதி - என்று
ஏட்டினில் எழுதிஒரு கூட்டம் - நம்மை
ஏமாற்றி வாழ்கிறதே பாரீர்!
பாப்பாத்தி பறையரை மணந்து - வாழும்
பலநூறு குடும்பங்கள் நாட்டில்
நல்வாழ்வு வாழ்கின்றார் கேளீர்! - நீங்கள்
நாளும் அதை நாட்டில் பாரீர்!
பாதியில் வந்ததடா சாதி - உனது
பகுத்தறிவால் பாரினுக்கே போதி
வன்னியரும் புண்ணியரும் ஒன்றே - நாட்டில்
வாழும் தமிழரெல்லாம் ஒன்றே
செய்யும் தொழிலாலே சாதி - நாட்டில்
தோன்றியதே தோழாநீ போதி
மண்ணில்நெல் மணிகாணும் தமிழர் - நமக்கு
உண்ண உணவுதரும் உற்றார்.
இருட்டறையில் உள்ளதடா உலகம் - சாதி
இருக்கின்ற தென்பவனும் இருக்கின்றானே! என்ற
பகுத்தறிவு பாவேந்தர் பாட்டை - மக்கள்
தொகுத்துப் படித்திடவே வேண்டும்
கும்பிடும் கையில் படையென்ற - தமிழ்
குறளுக்கே கோட்சேதான் சாட்சி.
கொலை கொள்ளை சொத்துக் குவிக்கும் - கூட்டம்
கோட்சேயின் குலமென்ற குள்ளநரிக் கூட்டம்
விரட்டிடவே வேண்டாமா வீரத்தமிழா - நீ
வெவ்வேறு அணியில் விபீஷணன் தானா?
தமிழரெல்லாம் தலைநிமிர வேண்டி - மறைந்த
நாமக்கல் கவிஞர் தமிழர் நற்கவிதை கேளீர்!
ஈரோட்டுப் பாதையிலே சென்று - சான்றோர்
பாராட்டைப் பெற்றிடுவாய் தோழா!

- தமிழன் பெரியார் பிரியன்

தமிழ் ஓவியா said...


குடிஅரசு துணுக்கு


ஆத்மார்த்தம், விதி அல்லது கடவுள் செயல் என்று சொல்லப்படும் இம்மூன்றையும் அழிக்க தைரி யமும் சக்தியும் உடையவர்களே மனிதனுக்கு விடுதலை சம் பாதித்துக் கொடுக்க அருகரா வார்கள். ராஜவாழ்த்தும், கடவுள் வாழ்த்தும் மனிதனின் அடிமைத்தனத்திற்கு அஸ்திவாரக்கால் நடுவதாகும்.
- ஈ.வெ.ரா.

தொட்டதற்கெல்லாம் கடவுள் செயல் என்று சமாதா னம் சொல்லுகின்றவர்கள் தங்கள் தப்பிதத்தின் கார ணத்தை உணராதவர்கள் அல் லது தவறுதல்களை உணர்ந்து அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றவர்கள் ஆவார்கள்.
_ ஈ.வெ.ரா.

குடிஅரசு துணுக்கு 6.12.1947

தமிழ் ஓவியா said...


மழலையர் பள்ளி சேர்க்கைக்கு ரூ.17 இலட்சமா?சென்னை : பி. பலராம் என்பவர் அவர் மகள் சென்று படிக்கும் பள்ளி பற்றி குறிப்பிடும்போது, அப்பள்ளியில் சேர்க்கை பெற எந்த அளவிற்கும் செல்ல தான் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார். ஆகவே அப்பள்ளி நன் கொடை கேட்பதற்கு முன்ன தாகவே அவர் அப்பள்ளிக்கு ரூ. 7 லட்சத்திற்கு கணினி பரிசோதனைக் கூடம் ஒன் றினை அமைத்துத் தர முன்வந்தார். இதனை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அப்பள்ளியும் மறுக்கவில்லை. மற் றொரு பெற்றோர் மயிலாப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் சேர்க்கை பெறுவதற்கு ரூ. 17 லட்சம் மதிப் பிலான கூடைப் பந்து அரங்கினை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்து சேர்க்கை பெற்றுள்ளனர்.

இது மாதிரியான நடவடிக்கைகள் வினோதமாக தெரிந்தாலும், பெற் றோர்கள் தங்களுடைய குழந்தை களுக்கு சேர்க்கை பெற பள்ளிக்கு நன்கொடை அளிப்பதை ஒரு புதிய கண்டுபிடிப்பாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அவர்களில் சிலர் தலை சிறந்த பள்ளிகளுக்கு பல லட்சங்கள் நன்கொடையாக அளித்து சேர்க்கை பெறுவதற்கு பெரு விருப்பம் கொண்டுள்ளனர். இது நபர் விகி தாச்சாரக் கட்டணத்தை மறு வரையறை செய்துள்ளது. மேலும் தகவல் பங்களிப்புகள் மற்றும் திரும்பும் முதலீடுகளாக உருமாற்றம் ஆகியுள்ளது. கல்வி ஆலோசகர் கே.ஆர். மாலதி குறிப்பிடும்போது, பெற்றோர்கள் கூடுதல் சலுகைகளைப் பெற அதிக பணத்தை செலவழிக் கின்றனர். அவற்றில் விலையுயர்ந்த பரிசுகளும் ஆகும். இவ்வாறான செயல்பாடுகள் மாணவர்களுக்கும், நிருவாகத்திற்குமிடையே ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது என்று பெற்றோர்கள் தெரிவிப்பதாக அவர் மேலும் கூறுகிறார். ஒரு பள்ளியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் குறிப்பிடும்போது, மற்ற துறைகளைப் போல் அல்லாமல், கல்விப் பணியில் பரிந்துரைகளின் பேரில் அதிகமாக பணம் தர வேண்டுமே தவிர குறைவாக இல்லை என்று குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...


மனித வள மேம்பாட்டு அமைச் சகம் பள்ளிகளில் அதிக கட்டணம், நபர் விகிதாச்சாரக் கட்டணம் முதலியவற்றை குறைக்க ஒரு சட் டத்தை வரைமுறைப்படுத்தியபோது, பெற்றோர்கள் பள்ளி நிருவாகத்தோடு சேர்ந்து கொண்டு பணப் பரிமாற்றத்திற்காக புதிய வழிகளில் முயன்றனர். சில பள்ளிகள் விலை நிர்ணயம் செய்வதற்காக பெற்றோர் களை ஒரு நடுநிலையாளர்களாக நடத்தத் தொடங்கியது. இருப்பினும் வங்கிகளிலிலிருந்து கடன் பெற்றும், குறிப்பாக சென்னை புறநகரில் உள்ள ஒரு பள்ளி நிருவாகம் பெற்றோர் களை ரூ. 10,000த்தின் பன்மடங்காக பணத்தைத் தரும்படியும், அதற்காக கடனைத் தரும் வங்கி நிர்ணயிக்கும் வட்டியை பள்ளியே செலுத்தும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. சுனிதா கிரேஸ் (பெயர் மாற்றப்பட் டுள்ளது) அப்பள்ளியில் படிக்கும் இரண்டு குழந்தைகளின் தாயாகிய அவர் குறிப்பிடும்போது, பள்ளி நிருவாகம் தன்னிடம் அவர்களுடைய எதிர்கால திட்ட வளர்ச்சி நிதியாக ஒரு குழந்தைக்கு ரூ. 1 லட்சம் என்ற அளவில் ரூ. 2 லட்சம் கேட்டதாகவும், நான் அவர்களுடைய கல்விக்காக சேமிக்க வேண்டும். என்னிடம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்றும் தெரிவித்தார். அதிக அளவில் பணம் ஈட்டும் இடங்களை ஒதுக்கீடு செய்யும்போது உள் பள்ளி நிருவாகம் பெற்றோர்களுக்கு போலி பெயர்களில் சிறிதளவு இடங்களை ஒதுக்குகிறது. ஒரு பள்ளியில் 250 மழலையர் பிரிவிற்கான இடங்கள் இருந்தால், அவற்றில் 200 முதல் 225 வரை அதிகம் ஈட்டக்கூடிய பிரிவிற்கு ஒதுக்கப்படுவதாக வும், எஞ்சியவை சக்தி வாய்ந்த நபர்களுக்கு ஒதுக் கப்படுவதாகவும் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கிடையே பள்ளிகளில் நன்கொடை அதிகமாகிக் கொண்டே வருகிறது. சென்னையில் மழலையர் பள்ளிகளில் சேர்ப்பதற்கு உண்டான நன்கொடை கட்டணம் தற்சமயம் ரூ. 4 லட்சம் என்ற அளவில் அமைந் துள்ளது. நிபுணர்கள் இதனை ஆய்வு செய்தபோது, மதுரை, திருப்பூர் நகரங்களில் உள்ள பள்ளிகளில் தொண்டு நிறுவனத்திற்கான நன் கொடை, கட்டட மேம்பாடு நிதி என்ற பெயரில் கட்டணங்களைப் பெறுவதாக தெரிவிக்கின்றனர். தற்சமயம் இவை ரூ. 20,000 முதல் ரூ. 75,000 என்ற அளவில் உள்ளது. சில பள்ளிகள் பெற்றோர்களை வட்டியில்லாத வைப்புத் தொகையாக ரூ, 1 லட்சத்தை கேட்பதாகவும், அவை அக்குழந்தை அப்பள்ளியை விட்டு விலகும்போது திருப்பி அளிக்கப் படுவதாகவும் தெரிய வருகிறது. பல நேரங்களில் பள்ளிகள் சில இடங்களை பள்ளியின் நிருவாக உறுப்பினர்களுக்கும், அறங்காவ லர்களுக்கும் ஒதுக்கி வைக்கிறது. இவற்றில் அறங்காவல்கள் பண மேதும் பெறுவதில்லை. பெற் றோர்களை இவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் இடைத் தரகர்கள் பணத்தைப் பெறுகின்றனர். பாவை கல்வி நிறுவனக் குழுமத்தின் இயக்குநர் சி. சதிஷ் குறிப்பிடும்போது, நான் இடத்தைப் பெறுவதற்காக அதிகமான விண்ணப்பங்களை வழங்க விரும்பவில்லை. எதற்காக பெற்றோர்களை ஏமாற்றமடையச் செய்ய வேண்டும். அதன் மூலம் ஏன் அவர்களை வேறு வழிகளில் இடத்தைப் பெற முயல வைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


குறும்பா


கல்லு
சிலையாகும்...!
அந்த சிலை
கடவுளாகு மா(?)ம்...!
கடவுளை உடைத்தால்
மீண்டும் அது கல்லாகும்!
பக்தன் மனது
எப்படி புண்ணாகும்?

- கோ. கலியபெருமாள், மன்னார்குடி

தமிழ் ஓவியா said...


இந்தியாவில் பகுத்தறிவாளர்கள் பத்து விழுக்காடு

இந்திய பத்திரிகைத் துறை அமைப்பின் தலைவர் மார்கண்டேய கட்ஜு கூறியது - தொண்ணூறு விழுக்காடு இந்தியர்கள் முட்டாள்கள், மத அமைப்புகள் அவர்களை மிக எளிதாக மூளைச் சலவை செய்து முட்டாள்களாக்கி விடுகின்றன. மேலும் நேரடியாகவே கூறுகிறார் -உங்கள் தலையில் மூளை இல்லை, மடையர்கள் என்று.

"இன்று, இந்து மற்றும் இஸ்லாமியர்களில் 80 சதவிகிதம் மத வெறியர்கள் . இது ஒரு கசப்பான உண்மை. கடந்த 150 ஆண்டுகளில் முன்னேறுவதற்கு பதிலாக பின்னடைவைத் தான் இந்த மதங்களில் காண்கிறேன். நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டை ஆள வேண்டுமெனில் இந்த இரண்டு மதங்களிடேயே கலவரங்கள் நடைபெற்றால் ஆட்சி செய்வது எளிது என்று அறிந்து வைத்திருந்தனர்" என்று. அவர் டில்லியில் நடைபெற்ற தெற்கு ஆசிய ஊடகக் குழுவின் கூட்டத்தில் அவர் மேற்படி கருத்துக்களை மிகக் காட்டமாகத் தெரிவித்தார்..

டில்லி மாநிலத்தில் ஒரு பெரும் கலவரத்தை ஏற்படுத்த வெறும் இரண்டாயிரம் ரூபாய் போதும். மசூதிக்கோ கோவிலுக்கோ ஏதேனும் சிறு தீங்கு விளைவித்தால் போதும். இரு மதங்களில் உள்ளவர்கள் முட்டாளாகி விடுவார்கள் என்று அவர் கூறுகிறார். நான் இந்திய மக்களை நேசிக்கிறேன் இதுபோன்ற நிகழ்வுகளில் நீங்கள் முட்டாள்கள் தான் என்று தெளிவு படுத்தாதீர்கள். தெளிவு பெறுங்கள் என்று கூறுகிறார். கட்ஜு கூறியது - ரூபாய் இரண்டாயிரம் இருந்தால் மத நம்பிக்கையாளர்கள் முட்டாள்கள் என்பது தெளிவாகும் என்று. ஆனால் வெறும் இருபது ரூபாய்க்கு பால் வாங்கி பிள்ளையாரை பால் குடிக்க வைத்தும் முட்டாள்கள் என்று நிரூபிக்கலாமே.

- சி.நடராசன்

தமிழ் ஓவியா said...


கடவுள் செயலா? நீதிமன்றம் ஏற்க மறுப்பு


சென்னை, டிச.15- மின் கம்பி அறுந்து விழுந்த தில் சிறுவன் பலியான தற்கு கடவுள் செயல் என்று கூறி மின்சார வாரியம் தப்ப முடியாது, ரூ.3லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவண்ணாமலை பேசூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் உயர் நீதிமன் றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதா வது:

கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி எனது மகன் விமல் வயது 9, பள்ளியை விட்டு கிராமத்தில் உள்ள வயல் வழியாக வந்து கொண்டு இருந் தான். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பி மீது கால் வைத்ததில் அதே இடத்தில் மின்சாரம் தாக்கி பலியானான். இத னால் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரி மின்சார வாரியத் திற்கு விண்ணப்பித்தேன். இதுவரை நஷ்டஈடு தர மறுத்தது. எனவே உயர் நீதிமன்றம் உரிய உத் தரவு பிறப்பிக்க வேண் டும். மின்கம்பி அறுந்து விழுந்ததும் சம்பந்தப் பட்ட விவசாயி மின் வாரியத்திற்கு புகார் கொடுத்தார். ஆனால், மின்சார வாரியம் 2 நாள்களாக இதை சரி செய்யவில்லை. எனவே தவறுக்கு மின்சார வாரி யம் தான் காரணம். எனவே மின்சார வாரி யம் உரிய நஷ்டஈடு தர வேண்டும். - இவ்வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார்.

இந்த வழக்கை நீதி பதி சசிதரன் விசாரித் தார். அப்போது மின் சார வாரியம் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், சம்பவம் நடப்பதற்கு முன்பு புயல் ஏற்பட்டதால் மின்கம்பி அறுந்தது. இதற்கு இயற்கை தான் காரணம். அறுந்த மின்கம்பி மீது கால் வைத்து சிறுவன் பலியானான். இது கடவுள் செயல். இதற்கு நஷ்டஈடு தர முடியாது என்று கூறியிருந்தது.

இதைக் கேட்ட நீதி பதி, மின் வாரியம் கட மையை சரியாக செய்ய வில்லை. மின்கம்பி அறுந்தவுடன் அதை சரி செய்திருக்க வேண்டும்.

இதை மின்சார வாரியம் செய்ய வில்லை. கடவுள் செயல் என்று கூறி மின்சார வாரியம் தப்ப முடியாது.

இந்த வாதத்தை ஏற்க முடியாது. எனவே மனுதாரர் மகன் இறந்ததற்கு மின்சார வாரியம் தான் காரணம்.

எனவே மனு தாரருக்கு ரூ.3லட்சத்து 50 ஆயிரத்தை நஷ்டஈடாக தர வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தமிழ் ஓவியா said...


இலங்கையின் துணிகளைப் புறக்கணித்துப் போராட்டம்!


மக்களைக் கொன்று குவித்த இலங்கையின் துணிகளைப் புறக்கணித்துப் போராட்டம்!

கனடாவில் நடைபெற்றது எழுச்சி ஆர்ப்பாட்டம்

கனடா, டிச.15- தமிழர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கனடாவின் டுன்பிஸ் சதுக்கத்தில் டிசம்பர் 15 ஆம் நாளான இன்று நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை கனடியர்கள் சிறீலங்காவில் தயாரித்த துணிகளை விற்பதற்கு எதிராக விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜனவரி மற்றும் மே 2009 இல் சுமார் 75,000 தமிழர்களை, பெண்கள், குழந்தைகள் உள்பட சிறீலங்கா கட்டுப்பாட்டில் உள்ள ராணுவம் கொன்றழித்தது. அவர்களை சிறிய கடற்கரை பகுதியில் மந்தையாகக் குவித்து தரை, கடல் மற்றும் வான் வழியாக குண்டுகளைப் பொழிந்து கொன்று குவித்தது.

மேலும், 30,000 ஈழத் தமிழர்களை முகாம்களில் அடைத்து கொடுமைப்படுத்தியது. மேலும் பலர் காணாமல் போயினர். தற்போது வெளியான அய்.நா. அறிக்கையில் சிறீலங்காவில் நடந்த பெரும்பான்மை யான மனித குல அழிவானது 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய வன்கொடுமை என்றும், அது செர்பெர்னிசா, போஸ்னியா, தற்போது சிரியா ஆகியவை இணைந்து ஏற்படுத்திய மனிதகுல அழிவைவிட அதிகமானது என தெரிவித்துள்ளது.

ஈழத்தில் தற்போதும் இன அழிவு நடைபெற்றுக் கொண்டுள்ளது. வடகிழக்கு மாகாணங்களில் ராணு வத்தினர் முகாமிட்டு தமிழ் மக்களை கொடுமை செய்வது, பெண் பாலியல் வன்முறையும் நடந்தேறி வருகிறது. தமிழ் நிலத்தில் ராணுவத்தினரும், அரசு உதவியுடன் தமிழ் அல்லாதோரும் ஆக்கிரமித் துள்ளனர்.

உரிமைகள் மறுப்பு

மக்கள் கூடும் உரிமை மற்றும் இறந்தவர்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கும் உரிமைகூட தமிழர்களுக்கு மறுக்கப்படுகிறது. ஜாஃப்னா பல்கலைக் கழக மாணவர்கள்மீது நவம்பர் 27 ஆம் தேதி நடந்த வன்செயலை இதற்குச் சான்றாகும். இந்த வன்செயலை புரிந்தவர்கள் நீதிக்குக் கட்டுப்படாமல் ஆட்சி அதிகாரத்தில் இன்றும் இருக்கின்றனர்.

சிறீலங்காவில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் மேற்கு நாடுகளுக்கு நான்கு பில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் சிறீலங்கா ராணுவத்திற்கும், இனவெறி சிங்கள அரசுக்கும் பயன்படும். எனவே, இத்துணிகளை நிராகரிப்பதன்மூலம் மனித உரிமைகளை பாதுகாக்க உதவி புரியும். இதன்மூலம் ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரமும், நீதியும் கிடைக்க வழி ஏற்படும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியோர் கூறினர்.

தமிழ் ஓவியா said...


வெறும் ஜாதி அணி சமூகநீதிக்குக் கைகொடுக்குமா?


சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம் சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், படைப் பாளிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்பு கள், கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் பங்குகொண்டு கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள்.
முக்கியமாக அந்தக் கூட்டத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் சாரம் என்று எடுத்துக்கொண்டால்,

1. ஜாதி அடிப்படையில் அரசியல் நடத்துவது ஆபத்தானது; அதன் அடிப்படையில் தேர்தல் கூட்டணி அமைப்பது சமுதாயத்தை ஜாதி அடிப்படையில் கூறு போடுவதாகும் - பிளவு ஏற்படுத்துவதும் ஆகும்.

2. காதல் என்பது இயற்கையாக அமையக் கூடியதாகும். அதனை எதிர்ப்பது - மறுப்பது என்பது பிற்போக்குத்தனமாகும். இதன்மூலம் இளைஞர்களின் கடுமையான எதிர்ப்புக்கும், வெறுப்புக்கும்தான் ஆளாக நேரிடும்.

3. உலகம் அறிவியல் துறையில் எவ்வளவோ வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொருவர் கையிலும் அலைப்பேசி வந்தாகிவிட்டது. இணைய தளம், மடிக்கணினி என்று உலகம் வாயு வேகத்தில் முன்னேற்றத் திசையில் பயணித்துக் கொண்டு இருக்கிறது.

ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்துதான் காதல் புரியவேண்டும் என்ற நிலை இல்லை. அலைப்பேசி மூலமாகவும் நடந்துவிடுகிறது. அலைப்பேசியைத் தடை செய்யவேண்டும் என்று கூறப் போகிறார்களா?

4. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான் காதலர் தினத்தை எதிர்க்கிறார்கள். காரணம் ஜாதி கலப்பு ஏற்பட்டுவிடுமே என்ற அச்சம்; ஜாதி - வர்ணதர்மத்தைக் காப்பாற்றுவது என்பதுதான் சங் பரிவார்களின் அடிப்படைக் கொள்கை யாகும். அதே உணர்வோடு பா.ம.க. செயல்படுவது இந்துத்துவா மனப்பான்மை கொண்டதாகும்.

5. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மை மக்களை இணைத்து ஓர் அணியை உண்டாக்க இருப்பதாகக் கூறிக் கொண்டிருந்த பா.ம.க. தலைவர் இப்பொழுது அதிலிருந்து முரண்பட்டு, வெறும் ஜாதிய அமைப்புகளோடு அணி ஒன்றை வரவேற்பது கொள்கை ஏதும் அற்ற சிந்தனையைத்தான் வெளிப்படுத்தும்.

6. சமூகநீதி என்று வரும்பொழுதுகூட தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒன்றிணைந்து போராடும் பொழுதுதான் அதன் பலனை ஈட்ட முடியும். அதைவிட்டு ஜாதிக்கட்சிகளை இணைத்துக் கொண்டு எப்படி உரிய உரிமையினை அடைய முடியும்? தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் என்று சொன்னால், அது அகில இந்திய அளவில் அதன் பிரதி பலிப்பைக் காண முடியும். அதை விட்டுவிட்டு தமிழ்நாடு அளவில் ஜாதிகளை இணைத்து எதனைச் சாதிக்க முடியும்?

இதில் இன்னொரு உண்மையும் கவனிக்கத்தக்க தாகும். மாநில அளவைப் பொறுத்தவரையில் ஓரளவு இட ஒதுக்கீட்டின் சதவிகிதத்தை பெற்று இருக்கிறோம். 50 சதவிகிதத்துக்குமேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்று இருந்த சட்ட நிலையையும் கடந்து 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டப்படியே தமிழ்நாட்டில் உறுதி செய்யப் பட்டுள்ளது. அதற்காக திராவிடர் கழகம் அளித்த பங்களிப்பு உலகம் அறிந்ததே.

இப்பொழுது பிரச்சினையே மத்திய அரசுத் துறை களிலும், தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீட்டில் உரிய சதவிகிதத்தைப் பெறுவதுதான்; அகில இந்திய அளவில் அதன் தாக்கத்தை உருவாக்குவதற்கு ஜாதி அமைப்புகள் பயன்படுமா என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு என்ற பிரச்சினை முதற்கட்டமாக தாழ்த்தப்பட்டவர்கள் பெறுவதற்கே பெரும் பாடுபடவேண்டியுள்ளது. அடுத்து பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் இந்த வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தவேண்டுமானால் கண்டிப்பாக தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒன்றிணைந் தால்தான் வெற்றி கிட்டும்.

சமூகநீதிபற்றிப் பேசும் பா.ம.க. நிறுவனர் இது குறித்தும் சிந்திக்க வேண்டியவர் ஆவார்.

7. தமிழ்த் தேசியம்பற்றி ஒரு பக்கத்தில் பேசிக் கொண்டு அதில் தாழ்த்தப்பட்டவர்களை இணைக்கா விட்டால் அது என்ன தமிழ்த் தேசியம்? திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பேசும் தமிழ்த்தேசியவாதிகள் பா.ம.க. நிறுவனரின் இந்த நிலைப்பாட்டை எப்படி பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த வகையில் கருத்தும் போதுமான அளவில் தமிழ்த் தேசியவாதிகளால் தெரி விக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் இறுதியாக உரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்கள் பதற்றப்படாமல், உணர்ச்சி வயப்படாமல், சமூகநீதிக் களத்தில் கைகோர்க்க பா.ம.க.விற்கு அழைப்புக் கொடுத்தது அவரது முதிர்ச்சியைக் காட்டக்கூடியதாகும்.

தனிமைப்பட்டுப் போகாமல் பா.ம.க. நிறுவனர் சிந்திப்பாராக! 15-12-2012

தமிழ் ஓவியா said...


அவசியம்


கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறு பாடு இருந்தாலும் மனிதத் தன்மை யோடு நடந்துகொள்வதே முக்கியமும் அவசியமுமாகும்.
(விடுதலை, 17.6.1970)

தமிழ் ஓவியா said...

தருமபுரி ஜாதி வெறியர்களின் தாக்குதலைக் கண்டித்து தொடர் முழக்கப் போராட்டம்


ஜாதிய அரசியல் தமிழக வரலாற்றில் தோல்விதான் அடைந்திருக்கிறது!

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேச்சு

சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கத்தின் சார்பில், தருமபுரியில் நடைபெற்ற வன்முறையினைக் கண்டித்து, சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் நடைபெற்ற தொடர் முழக்கப் போராட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், தொல். திருமாவளவன், ஆர். நல்லகண்ணு, பேராசிரியர் தீரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ். பாலாஜி மற்றும் பல்வேறு இயக்கத்தைச் சார்ந்தோர் பங்கேற்றனர் (14.12.2012).


சென்னை, டிச.15-தருமபுரி அருகே உள்ள நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் ஆகிய கிராமங் களில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளும் உடை மைகளும் சில சுயநல சக்திகளால் திட்டமிட்டு கொளுத்தப்பட்டதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் உள்ளிட்ட முற் போக்கு அமைப்புகள் ஜாதியத்துக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக நேற்று (14.12.2012) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம் சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சமூக அக்கறையுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள், தமிழகத்தின் முன்னணி எழுத்தா ளர்கள், ஓவியர்கள், கவிஞர்கள், பத்திரிகையா ளர்கள், ஊடகவியலாளர்கள், திரையுலகக் கலைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திராவிடர் கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கலந்து கொண்டு தருமபுரியில் நடைபெற்ற வன்முறையை நேரடியாகச் சென்று திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்கள் பார்வையிட்ட அனுபவத்தை எடுத்துக்கூறியதுடன், இப்பிரச்சினையை அணுக வேண்டிய நோக்கத்தையும் விளக்கி உரை யாற்றினார். அவர் தமது உரையில் குறிப்பிட்ட தாவது:

தமிழ் ஓவியா said...

நாம் இங்கு கூடியிருப்பது மகிழ்ச்சியான தருணம் அல்ல. சமூக உணர்வோடு தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வுடன், நாடு வளர்ச்சி பெற வேண்டுமானால் அதற்குத் தடையாக உள்ள எது வாயினும் அது உடைத்து நொறுக்கப்பட வேண் டும். கடந்த நவம்பர் 7ஆம் தேதியன்று இரவு 7 மணி அளவில் தருமபுரியிலிருந்து வன்முறை தாண்டவ மாடும்நேரத்தில் எங்கள் தோழர்கள் தகவல் அளித்தனர். உடனடியாக நாங்கள் காவல்துறை, ஊடகங்ளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். திராவிடர் கழகத் தலைவருடன் நேரடியாகச் சென்று தாக்குதல் நடந்த இடத்தை பார்வையிட்டு திரும்பிய நேரத்தில் ரத்தக் கண்ணீர் சிந்தும் அளவுக்கு அதன் நிலை இருந்தது. செய்தியாளர்களை சந்தித்த தமிழர் தலைவர் டிசம்பர் 9அன்றுதருமபுரியில் மாபெரும் ஜாதி ஒழிப்பு மாநாடு நடைபெறும் என்று அறிவித்தார்.

அதனை அடுத்து திட்டமிட்டபடி மாநாடு நடைபெற்றது. எழுச்சித்தமிழர் தொல்.திருமாவள வன், பேராசிரியர் மார்க்ஸ் போன்றவர்கள் கலந்து கொண்டு சிறப்பான உரையாற்றினர். 12 முக்கிய தீர்மானங்களையும் வடித்து எடுத்திருக்கிறோம். ஜாதிக்கு ஆதரவாக மருத்துவர் ஒருவர் குரல் கொடுத்து வருகிறார். அவரின் கடந்த கால வரலாற்றை திரும்பப் படித்துப் பார்த்தால் பல முரண்பாடுகளை அறிய முடியும். கடந்த ஜனவரி 2012இல் கூட ஒடுக்கப்பட்ட மக்களான பிற்படுத்தப் பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களை, சிறுபான்மை யினரை ஒன்றிணைத்து ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவோம் என்றார்.

தமிழ் ஓவியா said...

அத்தோடு இல்லாமல் திருமாவையும் என்னை யும் பிரிக்க சதி நடக்கிறது என்றார். எப்படி இந்த 10 மாதத்தில் இப்படி மாறிப்போனார்? எந்த சதிக்கு பலியானார்? இவருக்கு பீஸ் இல்லாமல் ஒரு வழக்குரைஞர் வக்காலத்து வாங்க வந்திருக்கிறார். அவர்தான் சோ ராமசாமி, அவருடைய துக்ளக் இதழிலே எழுதியிருக்கிறார். பெரியார் கூட ஒரு ஜாதியை எதிர்த்துத்தான் கட்சி தொடங்கினார் என்று. பெரியார் ஒரு ஜாதியை அல்ல. ஒரு ஆதிக்கத்தை எதிர்த்தார். அதில் வெற்றியும் பெற்றார். திருமாவும் ராமதாசும் சேர்ந்து இருந்த போது சோ ராமசாமிக்கள் எங்கே போனார்கள்? அதனை வரவேற்று எழுதினார்களா? பிரிந்து நின்றதும் எருபோட்டு எரிகிற தீயிக்கு எண்ணெய் ஊற்றுகிறார்களே. இவர்களிடம் தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

திருமாவளவன் ராமதாசுவிடம் ஏமாந்து விட்டார் என்கிறார்கள். அப்படி ஒன்று நடந் திருந்தால் அது திருமாவளவனின் பெருந் தன்மையைக் காட்டும். தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்டோர் உரிமைக்காக பாடுபடுவதில் தோல்வி ஏற்பட்டால் அதில் சங்கடப்பட வேண்டியதில்லை. தமிழர்களை ஜாதியைச் சொல்லி யாரும் ஏமாற்ற முடியாது. வாக்கு பெறவும் முடியாது. 1952 களிலிருந்தே முயற்சி செய்து தோற்றுவிட்டார்கள். ராமதாஸ் வீழ்ச்சிக்கு வேறு யாரும் தேவையில்லை. அவரே போதும். தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் உழைக்கும் மக்கள். அவர்கள் சமூகநீதிக் களத்தில் சாதிக்க வேண்டியவை இன்னும் ஏராளம் இருக்கின்றன.

ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய காலம் இது. நம்முடைய திருமாவளவன் அவர்களின் தருமபுரி மாநாட்டு உரை அருமை யான உரையாகும். தமிழர் தலைவர் அவர்களே பாராட்டி சொல்லியிருக்கிறார். எல் லோரும் பாராட்டுகிறார்கள். ராமதாஸ் வயதுக்கு திருமாவளவன் பேசுகிறார். ஆனால் ராமதாஸ் திருமாவளவன் வயதுக்கு பேசுவதுபோல் இருக் கிறது. முதிர்ச்சி என்பது வயதினால் வருவதில்லை. அறி வினால், உணர்ச்சியால் வருவது. ஏற்றுக் கொண்ட கொள்கையினால் வருவது. ஜாதிய சிந்தனையாளர் களே திருந்துங்கள். திருந்தாவிட் டால் உங்களுக்கான முடிவை நீங்களே தேடிக் கொண்டதாகிவிடும்.

இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசினார்.

இந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் ஆர்.நல்லக் கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், பேராசிரியர் மார்க்ஸ், தமிழர் வாழ்வுரிமை கட்சி தீரன், கவிஞர்கள் சல்மா, அறிவுமதி, உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

சாலையில் செல்வோரும், வருவோரும் கண் ணுற்றனர். ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் எஸ்.எஸ்.பாலாசி, மற்றும் கவின்மலர், அரூர் ஷாநவாஸ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.இதில் திராவிடர் கழகத்தைச் சார்ந்த பொறுப்பாளர்கள்- சென்னை மண்டல செயலாளர் வெ.ஞானசேகரன், தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், தென் சென்னை தி.க. துணைத் தலைவர் சி.செங்குட்டுவன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் நம்பியூர் மு.சென்னியப்பன், கோ.வீ.ராகவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தங்க.ரமேஷ்குமார், மண்டல இளைஞரணி செயலாளர் சுரேசு, சண் முகப்பிரியன், பெரியார் திடல் சுரேசு, கலைமணி, தருமபுரி மாவட்ட ப.க. தலைவர் ஊமை ஜெயராமன் உள்ளிட்ட திராவிடர் கழக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட ஏராளமான முற்போக்கு சிந்தனையுடைய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ் ஓவியா said...


ராமராஜ்யம் சாம்பிள் நெ(?)


காங்கிரசார் கூறிவந்த ராமராஜ்ஜியம், இப்பொழுது நடைபெற்று வருகின்றது. என்றைக்கு ராமராஜ்யம் என்று காங்கிரசார் கூறினார்களோ, அன்றைக்கே திராவிடர்கள் ராமராஜ்யத்தை விரும்ப மாட்டார்கள் என்றும், ராமராஜ்யத்தை அழிப்பதே திராவிடனின் லட்சியம் என்றும் நாம் சொல்லி வந்திருக்கின்றோம்.

அக்கிரகாரக் குழந்தை 5 வயதில் இறந்தது, சூத்திரன் ஒருவன் செய்த தவமே ஆகும் என்று, துஷ்ட நிக்ரஹ சிஸ்ட பரிபாலனான இராமன் தவஞ் செய்த சூத்திரனை, தலை வேறு உடல் வேறாகத் துண்டித்து நீதி வழங்கினான் என்பது வான்மீகர் கூறும் இராம ராஜ்யம். குற்றம் ஒன்றிற்கே, குலவாரியாகத் தண்டனை வெவ்வேறு, என்பது இராம ராஜ்யத்திற்கு அடிப்படையான மனுதர்ம சாஸ்திரம் கூறும் நீதி. இராம ராஜ்யத்தை - மனுதர்ம சாஸ்திரத்தை, மனித குலம் ஏற்காது.

"வள்ளுவர் செய் திருக்குறளை
மறுவற நன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுஆதி ஒருகுலத்துக் கொரு நீதி"

என்று காலஞ்சென்ற சுந்தரனார், கவிதை மொழியிலே, திராவிடர்க்கு உணர்த்திச் சென்றார். நாமும் இம்முறை - இந்நீதி இருத்தல் கூடாது என்று எல்லா வகையாலும் எத்தனையோ ஆண்டுகளாக, எழுதியும் பேசியும் நடித்தும் திராவிடர்க்கு உணர்த்தி வருகின் றோம். ஆனால் திராவிடர்கள் உணர்ந்து விழிப்படைந் தார்களா?

இதோ ஒரு சாட்சி. காங்கிரஸ் ஆட்சி, மனுதரும ஆட்சியே என்று முழக்கமிடுகின்றது.
நாகப்பட்டினம் வழக்கு மன்றத்தில், காங்கிரஸ் ஆட்சியில் நீதிதேவன் வழங்கிய நீதி என்று, தோழர் ஒருவர் நமக்கு எழுதியிருக்கின்றார்.

பாதையில் தவறாக நடந்த குற்றத்திற்குப் பலர் ஆளானார்கள். அவருள் ஆரியர் திராவிடர் என்ற இருதிறத்தாருமுண்டு. ஆனால் இக்குற்றத்திற்கு ஆளான ஆரியர்களாகிய,
சுப்பிரமணிய அய்யர்
நடேச அய்யர்
சூர்யமூர்த்தி அய்யர்
குருமூர்த்தி அய்யர்
ஆகியோருக்கு அணா எட்டு வீதமும் மற்றையத் திராவிடர்களுக்கு ரூ.1, 2 வீதமும் அபராதம் விதிக்கப் பட்டிருக்கின்றது என்பது கடிதத்தின் சாரம்.

திராவிடர்களே! இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த மனுதர்ம ஆட்சியை ஏற்றுக் கொள்ளப் போ கின்றீர்கள்?

குடிஅரசு - கட்டுரை - 01.11.1947

தமிழ் ஓவியா said...


பச்சையப்பன் கல்லூரி: வேண்டுகோள்


சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு ஒரு பார்ப்பனரல்லாத, அதாவது திராவிட பிரின்ஸ்பாலை நியமிக்க வேண்டும் என்று மாணவர் கழகங்களும், திராவிடர் கழகங் களும், தமிழர் கழகங்களும் பொதுக் கூட்டங்கள் கூட்டி, தீர்மானங்கள் செய்து, பச்சையப்பன் டிரஸ்ட் போர்டுத் தலைவருக்கு (பச்சையப்பன் கல்லூரி, சேத்துப்பட்டு, சென்னை) அனுப்புமாறு கோரப்படுகின்றன.


மத்திய திராவிடர் கழகம்
குடிஅரசு - 08.11.1947

தமிழ் ஓவியா said...


பிர்லா ராஜ்யம்


சென்னை நகரில் சென்ற வாரம் சரத் சந்திரபோஸ் அவர்கள் பேசுகையில், இன்றைய ஆட்சியைச் சுதந்திர சர்க்கார் என்று கூறுவதில் அர்த்தமில்லை. இன்று நடப்பது இந்திய முதலாளித்துவத்தின் முதல்வரான பிர்லா ராஜ்யமே ஆகும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதோ பாருங்கள் தோழர்களே! அதை மெய்ப்பித்து விட்டனர் காங்கிரஸ் காரியக்கமிட்டியினர்.

இம்மாதம் 23ஆம் தேதியன்று அகில இந்திய காங்கிரஸ் காரியக்கமிட்டியினர் பிர்லா மாளிகையில் கூடினர்.

மற்றக் கட்சியினர் இவ்வாறு எங்கேயாவது சாதாரண மாளிகையில் கூடினால் அவர்களை முதலாளிகளின் அடிமைகள் என்று நையாண்டி செய்த காங்கிரசார், இன்று வடநாட்டுப் பாசிச ஆட்சியின் உயிர்நாடியான பிர்லா மாளிகைக்குச் செல்லுகின்றனர். முன்கூறியதை மறந்தல்ல, கொள்கையை விட்டுக் கொடுத்ததேயாகும்.

எனவே, இதைக்கண்டு மாளிகை நோக்கிகள் மக்களின் எதிரிகள் எனக் காங்கிரசாரை எள்ளி நகையாடுவது மட்டுமின்றி காங்கிரஸ் பாசிச வெறியரிடம் சிக்குண்டு விட்டதென்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு என்று கூறுவதும் மிகையாகாது.

குடிஅரசு - செய்தி விளக்கம் - 27.09.1947

தமிழ் ஓவியா said...


அறிஞர் வரதராசனார் மறைவு


சென்னை பச்சையப்பன் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் தோழர் எம்.வரதராசன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியைக் கேட்டு நாம் திடுக்கிட்டோம் என்பது மட்டுமின்றித் திராவிடர் அனைவருக்கும் குறிப்பாக மாணவர் உலகத்திற்கும் பெரும் நஷ்டமென்றே கூறலாம்.

நீதிக்கட்சியின் வளர்ச்சிக்காகத் தீவிரமாக உழைத்தவர்களில் ஒருவரான அவர், திராவிட நாடு பிரிவினையிலும் பெரும் பங்குகொள்ள ஆர்வமுடன் முனைந்து நிற்கும் சமயத்தில் மறைந்தார் என்பதைக் கேட்ட நமக்கு ஏற்கனவே இயக்கத் தோழர்களில் தீவிர உணர்ச்சியுள்ள சிலரை இழந்துள்ள நமக்கு மேலும் நஷ்டமென்றே கூறலாம்.

அறிஞர் வரதராசன் அவர்கள் பிரிவால் வாடும் அவரது உற்றார் உறவினருக்கு நமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் திராவிட மாணவர்கள் அவர்கள் நினைவாக ஆவனசெய்ய வேண்டியது கடமையாகும் என்றும் வேண்டிக் கொள்கிறோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 27.09.1947

தமிழ் ஓவியா said...


பிரகாசம் தலைமைக்குச் சாவுமணி


28.02.1947இல் சென்னை பாங்க்வெட்டில் ஹாலில் நடைபெற்ற காங்கிரஸ் சட்டசபைக் கட்சியினர் கூட்டத்தில் பிரகாசம் மந்திரிசபை மீது நம்பிக்கை இல்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. உடனே தோழர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சட்டசபைக் காங்கிரஸ் கமிட்டிக்குத் தலை வராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

குடிஅரசு - செய்திக்குறிப்பு - 01.08.1947