Search This Blog

21.12.12

தாழ்த்தப்பட்டவர்களை விலக்கி பார்ப்பனர்களை அரவணைத்துக் கொள்வதுதான் தமிழ்த் தேசியமா?


திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் மானமிகு க. அன்பழகன் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா வடசென்னையில் நேற்று மாலை கொண்டாடப்பட்டது.

திராவிடர் இயக்கத்தில் நீண்ட காலம் பொது வாழ்வுக்குச் சொந்தக்காரரான அவருக்கு இத்தகு விழா எடுத்தது சாலப் பொருத்தமே!

இந்த விழாவில் பேசிய தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களும் சரி, பொதுச் செயலாளர் பேராசிரியர் மானமிகு க. அன்பழகன் அவர்களும் சரி, திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களும் சரி பேசிய உரையின் மய்ய நீரோட்டம் திராவிடர் இயக்கத்தைப் பற்றியதேயாகும்.
ஏதோ வெறும் பாராட்டு விழா என்றளவில் அமைந்திடாமல், திராவிடர் இயக்கத்தில் மூத்த தலைவராக இருக்கக் கூடிய ஒருவருக்கு எடுக்கப்பட்ட விழா - கொள்கையை மய்யப் புள்ளியாக வைத்து கருத்துக்கள் பரிமாறப் பட்டது வரவேற்கத்தக்கதே! அதுவும் திராவிடர் இயக்கத்தைப் பற்றி பல விமர்சனங்கள் கிளப்பப்பட்டு இருக்கும் ஒரு கால கட்டத்தில், மூத்த திராவிடர் இயக்கத் தலைவருக்காக நடத்தப்படும் விழாவில் அதுகுறித்த கருத்தினைப் பட்டாங்கமாகத் தெரிவிப்பதுதான் சரியானது. அந்தச் சரியான கடமையை நேற்றைய விழா ஆற்றியிருக்கிறது என்பதில் அய்யமில்லை.

திடீரென்று இந்தச் சர்ச்சையை ஏற்படுத்தி யவர்களுக்கு ஏதோ ஓர் உள் நோக்கம் இருக் கிறது. ஆரியர் - திராவிடர் என்பது எல்லாம் வெறும் கட்டுக் கதை, வெள்ளைக்காரன் ஏற்பாடு செய்த பிரித்தாளும் சூழ்ச்சி என்று பார்ப் பனர்கள்தான் கூறி வந்தனர்.

பார்ப்பனர்கள் கூறி வந்த இந்தக் கருத் தினைத்தான் தமிழ்த் தேசியவாதிகள் என்று தங்களுக்குத் தாங்களே அறிவித்துக் கொண் டவர்கள் கடன் வாங்கிக் கொண்டுள்ளனர்.

உண்மை என்னவென்றால் பார்ப்பன வரலாற்று ஆசிரியர்களே ஆரியர் - திராவிடர் பற்றி விரிவாக எழுதியுள்ளனர்.

திராவிடரா - தமிழரா என்ற வார்த்தை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் சொல்லும் தமிழ்த் தேசியத்தில் பார்ப்பனர்கள் பற்றிய அவர்களின் புரிதல் என்ன என்பது தான் முக்கியம்.
பார்ப்பனர்களைத் தமிழர்களின் பட்டியலில் சேர்ப்பதன் மூலம், இந்த இனத்துக்கு மாபெரும் துரோகத்தைச் செய்துவிட்டனர்.

இன்னும் சொல்லப் போனால் பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பார்ப்பன எதிர்ப்பு இயக்கமான திராவிட இயக்கத்தை எதிர்க்க ஆரம்பித்து விட்டனர்.

திராவிடர் இயக்கம் பார்ப்பன ஆதிக்கத்தை முன்வைத்து எதிர்த்துப் போராடியதன் விளைவாகத்தான் பார்ப்பனர் அல்லாதார்களுக்கு சிவில் உரிமை, கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட எல்லா உரிமைகளும், வாய்ப்புகளும் கிடைத்தன.

சமூக நீதி என்னும் அருட்கொடையைப் பார்ப்பனர் அல்லாதாருக்குக் கிடைக்கச் செய்தது திராவிடர் இயக்கமே.

இதனை மறந்து விட்டு, தமிழ்த்தேசியம் என்ற பெயரால் பார்ப்பனர்களை வாரி அணைத்துக் கொள்ளத் துடிப்பது சமூக நீதிக்கு வெட்டப்படும் ஆழமான குழியாகும்.

தமிழ்த் தேசியவாதிகளைப் பார்ப்பன ஊடகங்கள் தாங்கிப் பிடிப்பதற்கே காரணம் - இப்பொழுது புரிந்திருக்க வேண்டுமே!

தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்கி, தாழ்த்தப் பட்டோர் அல்லாதார் என்கிற அமைப்பை அரசியல் ரீதியாக உருவாக்கத் துடிப்பவரும் ஒரு தமிழ்த் தேசியவாதியே! தாழ்த்தப்பட்டவர்களை விலக்கி, பார்ப்பனர்களை அரவணைத்துக் கொள்வதுதான் தமிழ்த் தேசியமா? இந்த ஆபத்தைப் புரிந்து கொள்வீர்!  -------------20-12-2012


தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திராவிடர் இயக்கம் இல்லாமல் எந்தச் சாதனையும் இல்லை - எந்த வளர்ச்சியும் கிடையாது.

1) பார்ப்பனர் அல்லாதாருக்காக ஓர் அமைப்புத் தொடங்கப்பட்டதே - அது என்ன சாதாரணமா?

2) பார்ப்பனர்கள் உருவாக்கிய வருண சமூக அமைப்பில் பார்ப்பனர் அல்லாதாரின் சமூகத் தகுதி என்ன? சூத்திரர்கள்தானே?

3) சூத்திரர்கள் என்றால் யார்? பிறவி அடிமைகள் தானே? வேசி மகன் தானே?

4) அந்தச் சூத்திரனுக்கு, பஞ்சமர்கட்கு படிக்கும் உரிமை உண்டா? பொது வீதிகளில் நடக்கும் உரிமை உண்டா? அரசர்கள் காலத்திலும் அதே நிலைதானே?

5) இலண்டன் வரை சென்று பார்ப்பன அல்லாதாரின் இடஒதுக்கீட்டுக்காக பிரிட்டிஷ் பாராளுமன்றமும் சாட்சியம் அளித்தது திராவிடர் இயக்கம்தானே?

6) பொது வீதிகளில் நடக்கும் உரிமை, பொது நீர் நிலைகளைப் பயன்படுத்தும் உரிமை, பேருந்துகளில் தாழ்த்தப்பட்டோர் பயணம் செய்யும் உரிமை, கல்விக் கூடங்களில் தாழ்த்தப்பட்டோர் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்ற நிலை இவை எல்லாம் திராவிடர் இயக்க ஆட்சியின் சாதனை அல்லாமல் வேறு என்னவாம்?

7) கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கக் குழு அமைத்து, பார்ப்பனர் அல்லாதாரும் கல்லூரிக்குள் நுழைய கதவைத் திறந்து விட்டது யார்?
8) அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்ய தனி அமைப்பை (ளுவயகக ளுநடநஉவடி க்ஷடியசன)  உண்டாக்கியது எந்த ஆட்சி?

9) வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணையைக்   கொண்டு வந்து தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கல்வி, வேலை வாய்ப்பில் இடம் பெற்றதற்கு யார் காரணம்?

10) பெண்களுக்கு வாக்குரிமை இந்தியாவிலேயே முதன் முதலாக அளித்தது எந்த ஆட்சி?

11) பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக் கட்டி விட்டு, இழிவுபடுத்திய முறையை ஒழித்திட தேவதாசித் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது எந்த ஆட்சி?

12) பார்ப்பனர்களின் சுரண்டல் கேந்திரமாக இருந்த கோயில்களை இந்து அறநிலையத்துறையை உண்டாக்கிக் கொள்ளையைத் தடுத்தது எவர் ஆட்சியில்?

13) ஆங்கிலேயர் மயமாக இருந்த மருத்துவத் துறையை இந்திய மயமாக்கியது எந்த ஆட்சி?

14) சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு இடம் அளித்தது யார்?

15) இந்தியை எதிர்த்ததும்,  தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்று சட்டம் செய்ததும் யார் - எவர்?

16) சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று சட்ட ரீதியாகப் பெயர் சூட்டியது யார்?

17) பார்ப்பனீய முறையில் நடைபெற்று வந்த விவாஹ சுபமுகூர்த்த முறையைத் தூக்கி எறிந்து சுயமரியாதைத் திருமண முறையை அறிமுகப்படுத் தியது யார்? அதற்குச் சட்ட வடிவம் கொடுத்ததும் யார்?

18) தமிழுக்குச் செம்மொழித் தகுதியை ஏற்படுத்தியது யார்?

19) மாநில அரசு மட்டுமளவில் இருந்த இட ஒதுக்கீட்டை மய்ய அரசின் துறைகளிலும் (மண்டல் குழுப் பரிந்துரைகளை) பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்திய அளவில் கொண்டு வந்ததற்கு யார் காரணம்?

20) சுதந்திர தினக் கொடியை முதல் அமைச்சர் ஏற்றுவதற்கான உரிமையை அகில இந்திய அளவில் வாங்கிக் கொடுத்தவர் யார்?

இவை அனைத்திற்குமே முழு முதற் காரணம் திராவிடர் இயக்கமும், அதன் ஒப்பற்ற தலைவர்களும் அல்லவா?

இவற்றில் ஒன்று நீங்கினாலும் அது எவ்வளவுப் பெரிய இழப்பு என்பதை அறிவு நாணயத்தோடு எண்ணிப் பார்த்தால் திராவிடர் இயக்கத்தின் அருமை - பெருமை என்ன என்று எளிதில் விளங்குமே!

இனி மேலாவது திராவிடர் இயக்கத்தின்மீது சேற்றை வாரி இறைக்கும் துரோகத்தைக் கை விடுவார்களா - தமிழ்த் தேசியவாதிகள்?

                           --------------------------"விடுதலை” தலையங்கம் 20,21-12-2012

17 comments:

தமிழ் ஓவியா said...


அஞ்சாதே மனமே! பூமி சுற்றும்; உலகம் வாழும்!


மூட நம்பிக்கை முறியடிக்கப்பட்ட நாள் விழிப்புணர்வு கொண்டாட்டம்!

நாள்: 22.12.2012, சனிக்கிழமை

நேரம்: காலை 7 மணி முதல் 8 மணிவரை

இடம்: காந்தி சிலை - மெரினா கடற்கரை, சென்னை

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று இனிப்புகள், துண்டறிக்கைகள் வழங்கி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

பகுத்தறிவாளர் கழகம் - திராவிடர் மாணவர் கழகம் -திராவிடர் கழக இளைஞரணி

தமிழ் ஓவியா said...

குண்டாஸ்...

பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் ஒரு குற்றம் புரிந்தாலே அவர்மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக் கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவிப்பு! முதலில் இந்து முன்னணி அமைப்பாளர் இராம. கோபாலனைத் தான் இந்தச் சட்டப்படி உள்ளே போட வேண்டும்; ஒவ்வொரு முறையும் பிள்ளையார் ஊர்வலத்தின் போது முசுலிம் பகுதிக்குள் நுழைய முயற்சி செய்பவர் அவர்தானே!

(ஆளும் கட்சியாக இருக்கும் போது இதுபோன்ற சட்டங்கள் வசதியாக இருப்பதுபோல் தோன்றும் - சிறு குழந்தைகளிடத்தில் கூர்மை யான கருவிகளைக் கொடுத்து விளையாட அனுமதிக்கக் கூடாது என்பது இதற்கும் பொருந்துமே!)

தமிழ் ஓவியா said...

திறந்தவெளி

திறந்தவெளிப் பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் வேலை வாய்ப்புப் பெறுவதில் பல இடர்ப்பாடுகள் இருந்து வருகின்றன. (அரசுதானே திறந்த வெளிப் பல்கலைக் கழகங் களை நடத்துகிறது; அப்படியிருக்கும் பொழுது அதில் படித்தவர்கள் எப்படி தகுதிக் குறைவானவர்கள்?)

இப்பொழுது தமிழ்நாடு அரசு புதிய ஆணை ஒன்றைப் பிறப்பித் துள்ளது. 10ஆம் வகுப்பு +2 படிக்கா மல் பட்டம் படித்தால் அது செல்லும் என்ற புது ஆணை வரவேற்கத் தக்கதே!

தமிழ் ஓவியா said...

சரியான கிண்டல்

கருநாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவைப்பற்றி ஒன்று மிக நன்றாகத் தெரியும். தன் காரிய வெற்றிக்காகக் கோயில் கோயி லாகச் சுற்றக் கூடியவர் அவர் (அப்படியும் பிள்ளை பிழைத்த பாடில்லையே!) பி.ஜே.பி.யை விட்டுப் பிரிந்து தனிக்கட்சி (கர்நாடகா ஜனதா கட்சி) ஏற்படுத்திய பின்பும் குடும்பத்தோடு கோயில் கோயி லாகச் சுற்றித் திரிந்து கொண்டு இருக்கிறார்.

இதுபற்றி பிஜேபி அனந்தகுமார் என்ன சொல்கிறாராம்? தேர்தல் வரை இப்படியே கோயில் கோயி லாகச் சுற்றிக் கொண்டு இருக்கக் சொல்லுங்கள்; கண்டிப்பாக முதல் அமைச்சர் நாற்காலியில் மீண்டும் உட்கார்ந்து விடலாம் என்று கிண்ட லடித்துள்ளார். (அதுசரி எடியூரப் பாவும் சரி, இன்றைய ஆளும் பி.ஜே.பி.யும் சரி, வரும் தேர்தலில் கருநாடகத்தில் மண்ணைக் கவ் வுவது என்பது எப்பொழுதோ உறுதியாகி விட்ட உண்மை).

தமிழ் ஓவியா said...

மீன் பிடித்தால்...

மீன் பிடித்தால் மழை வருமாம்! அது சரி குளத்தில், ஆற்றில் தண்ணீர் இருந்தால் தானே மீன் பிடிக்க முடியும்? அப்படி எல்லாம் சிந் தித்தால் அவர்கள் எப்படி பக்தர்கள் ஆவார்கள்?
மதுரை மேலூர் அருகே உள்ள ஊர் செம்மினிபட்டி; அங்கு ஒரு செவிட்டு அய்யனார் கோவில் (சூத் திரர்களின் கடவுள் பெயர்கள்தான் இப்படி! குருட்டு கும்பேஸ்வர் என்று உண்டா? காது செவிடு கபாலீஸ் வரன் உண்டா?)

இந்தக் கோயிலின் அருகில் கண்மாய் ஒன்று இருக்கிறது. அதில் பக்தர்கள் மீன் பிடித்தால் மழை பெய்யுமாம்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்தக் கண்மாயில் மீன் குஞ்சுகளை விடுவார்களாம். தண்டோரா போட்டு மீன் பிடிக்க அழைக்கப்படுவார் களாம் - அது சரி, மீன்பிடித்தாயிற்று - மழையைக் காணோமே!

ஹி.... ஹி.. முட்டாள்தனத்துக்கு ஓரளவே கிடையாதா?

தமிழ் ஓவியா said...

என்ன கலாச்சாரமோ!

நடிகை பூஜாவுக்கும் தொழி லதிபர் ஆனந்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது - முறிந்து விட்டதாம்.

பூஜா என்ன சொல்கிறார்? எங்கள் குடும்ப கலாச்சாரத்துக்கும் அவாள் கலாச்சாரத்துக்கும் ஒத்து வராது என்று தெரிந்து கொண் டோம் என்கிறார்.

தொழிலதிபர் ஆனந்த் என்ன சொல்லுகிறார்? பூஜாவின் தாயார் பண ஆசை பிடித்தவராக இருக் கிறார். அதனால் நாங்களே முறித்துக் கொண்டோம் என்கிறார்.

எவ்வளவு படித்திருந்தாலும், பணம் சம்பாதித்து இருந்தாலும், நவீன ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கி இருந்தாலும் (இவையெல்லாம் எந்த ஆச்சாரம் கலாச்சாரங்களைச் சேர்ந்ததோ!) அவாள் கலாச்சாரம் பற்றி பேசுறாளே!

நிச்சயதார்த்தத்திற்கு முன்பு அவாளின் கலாச்சாரம் தெரியாதோ!

தமிழ் ஓவியா said...


மோடி மஸ்தான்' மோசடி!

உலகம் அழியப் போகிறதா?
மோடி மஸ்தான்' மோசடி!

2000ஆம் ஆண்டு கடவுள் வருகிறார்; உலகம் அழியப் போகிறது என்று பித்தலாட்ட மதக் கும்பல் புரளி கிளப்பியது. (அழிப்பதற்கா கடவுள் வரணும்? என்று நம் மூளையிலும் உதிக்கவில்லை.) உடனே சிறப்புப் பிரார்த்தனை... வழிபாடு... பூஜை... புனஸ்காரம்...

12.12.12 அன்று உலகம் அழியப் போகுது என்று புரளி கிளப்பியது. அந்த நாளும் கடந்து போனது. பயந்துக் கிடந்த நாமும், சொன்னவனை முச்சந்தியில் நிறுத்தி முகமூடியைக் கிழிக்கவில்லை! இதோ அந்த பித்தலாட்டக் கும்பல் வருகிறது மீண்டும் நம்மை முட்டாளாக்க!

இன்று 20.12.2012; 21.12.12 உலகம் அழியப்போவதாக மிரட் டும் அந்த 'எத்துவாலிக் கும்பல்' கல்லா கட்டத் தயாராகி விட்டது... சிறப்பு பூஜை...வழிபாடு...பிரார்த்தனை.... என்று!

நம் கேள்வி: 1) உங்களால் ஏற்றிப் போற்றிப் புகழப்படும் அந்த 'கடவுள்' உலக மக்களை ஏன் அழிக்க வேண்டும்?

2) பிரார்த்தனை, பூஜை, வழிபாடுகளால் கடவுளின் திட்டத்தை மாற்ற முடியும் என்றால்.... அதை முதலிலேயே சொல்லிவிடலாமே? அச்சுறுத்தி... அச்சுறுத்தி... சாவு பயத்தை உண்டாக்கி, கடைசியில் அதற்குப் 'பரிகாரம்' என்று சொல்வது,

தெருவில் மண்டை ஓட்டினை வைத்து, ரத்தம் கக்கிச் சாவாய் என்று மிரட்டி, பின் பரிகாரம்' என்று, பணம் பறிக்கும் பாம்பாட்டியின் மோடி மஸ்தான்' மோசடிதானே?

சிந்திக்க வேண்டுகிறோம்....! மதவாதிகளின் இந்தப் பித்தலாட்டம் எதற்கு? ஒரே கல்லில் 2 மாங்காய்!

1) மக்களிடம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் அறிவு வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சியால் 'கடவுள்' என்பது கற்பனை என்ற உண்மை அம்பலமாகி வருகிறது!

மதங்கள் அழிந்து போகும்; ஏமாற்றுக்கும்பலின் சுகபோக வாழ்க்கை முடிந்து போகும்! எனவே, மக்களின் மூளையில் போடப்பட்டுள்ள பயம் என்னும் விலங்கினை (Braincuff like Handcuff) மென்மேலும் இறுக்கமாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். மக்களை ஒருபோதும் சிந்திக்க விடக் கூடாது!

2) புரளியால் மிரண்டு போன மக்களிடமிருந்து பரிகாரம்' பிரார்த்தனை, பூஜை, வழிபாடு என்ற பெயர்களில் வலுவாகக் கல்லா கட்ட வேண்டும்.

இதற்குத்தானே...? இதற்குத்தானே...?

பகுத்தறிவாளர் கழகம் சொக்கலிங்கம் நகர், மதுரை-16.

தமிழ் ஓவியா said...


மனிதன்


பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சிகளையும் பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைபிடிக்கக் கூடியவன் எவனோ, அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும். - (விடுதலை, 9.6.1962)

தமிழ் ஓவியா said...


தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல் குற்றவாளிகளை தண்டிக்க கோரிக்கை! தொல்.திருமாவளவன் அறிக்கை


சென்னை, டிச.21- தருமபுரி, கடலூர், விழுப் புரம் மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ள தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து தண்டிக்க வேண் டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமா வளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து, விடு தலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னையில் கடந்த 3 நாட்களாக நடை பெற்ற மாவட்ட ஆட் சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாட்டின் இறுதியில் முதல்அமைச்சர் 343 அறிவிப்புகளை வெளி யிட்டிருக்கிறார்.

சாதியில்லாத சமுதா யத்தை அமைப்பது குறித்து பாடத்திட்டத் தில் சேர்க்கப்படும் என் றும் கல்வித் துறையும், காவல்துறையும் இணைந்து நாடகங்கள் மூலம் சாதி ஒழிப்பு பரப் புரையை மேற்கொள் வார்கள் என்றும் முதல் அமைச்சர் அறிவித்துள் ளது வரவேற்கப்பட வேண்டியதுதான் என் றாலும், சாதிய வன் முறையில் ஈடுபடுவோர் மீதும் தலித் மக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுபவர்கள் மீதும் கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என்று கூறாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

முதல்அமைச்சர் தலைமையில் அதிகாரி கள் மாநாடு நடந்து கொண்டிருந்த நேரத் திலேயே கடலூர் மாவட்டம் சென்னி நத்தம் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ் ணன் என்ற தலித் இளை ஞர் படுகொலை செய் யப்பட்ட செய்தி வெளி யானது.

தலித் மக்களுக்கு எதிரான குற்றங்களில் விழுப்புரம் மாவட்ட மும், கடலூர் மாவட் டமும் முன்னிலையில் உள்ளன. அண்மைக் காலமாக பா.ம.க. நிறு வனர் டாக்டர் ராமதாஸ் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தமிழ கத்தில் அமைதியைக் கெடுக்கும் வகையில் இருப்பதோடு இத் தகைய படுகொலைக ளுக்கும் தூண்டுகோ லாக இருக்கின்றது. இதை அரசு கண்டும் காணாமல் இருப்பது ஏன் என புரியவில்லை.

ஏமாற்றம் அளிக்கிறது

குண்டர் தடுப்பு சட் டத்தை கடுமையாக்கு வோம் எனத்தெரிவித் துள்ள முதல்அமைச்சர் சாதிய வன்கொடுமை களை இரும்புக்கரம் கொண்டு தடுப்போம் என அறிவிக்காதது தலித் மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான சட்டங் கள் குறித்து அரசு அதி காரிகளுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப் பட்டது. அதை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

தருமபுரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங் களில் நடத்தப்பட்டுள்ள தலித் மக்களுக்கு எதி ரான தாக்குதல்கள் மற் றும் படுகொலைகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து தண்டிக்க வேண் டும் என விடுதலைச் சிறுத்தைகள்வலி யுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

-இவ்வாறு அறிக் கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


யாகம் செய்தால் மழை வருமா?


மழை வேண்டி நடத்தப்படும் யாகங்களுக்கு அறிவியல் பூர்வ அடிப்படை இருக்கிறதா என்று, ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுரா நகரைச் சேர்ந்த விர்ஸ்தி விஞ்ஞான் மண்டலைச் சேர்ந்த எச்.பி.சர்மா இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

யாகத்தில் சில வகையான மரச்சுள்ளிகளையும், பிற பொருள்களையும் ஹோமத்தில் சேர்த்து எரிப்பதால் வெளியாகும் வாயு மற்றும் சாம்பல் ஆகியவற்றின் காரணமாக ஈரத்தன்மையுடைய நீர்த் துகள்கள் விண்ணில் ஏற்படலாம் என்ற அனுமானத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மதுரா நகரில் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட பகுதியில் மேகங்கள் 48 மணி நேரத்திலிருந்து 72 மணி நேரத்திற்குள் சேர வேண்டும்.

மேகம் திரளத் தொடங்கியதிலிருந்து மூன்று நாட்களுள் சில சென்டிமீட்டர்களாவது மழை பெய்ய வேண்டும். யாகம் முடிந்த ஓரிரு நாள்களுக்குப் பின்னர் கூட மேகம் திரளலாம். இந்த ஆராய்ச்சிக்கான இலக்கு 10 மைல் சுற்றளவாய் இருந்தது.

பத்து மைல்களுக்கு அப்பாலும் மழையின் அளவைக் கணக்கிட்ட இந்திய வானியல் ஆராய்ச்சி நிலையத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சீதோஷ்ண நிலை, ஈரப்பதம், வானத்தின் நிலை போன்ற வானியல் அளவு கோல்கள் அவ்வப்போது அளவிடப்பட்டன.

ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட பகுதிக்கருகில் காலை ஆறு மணியிலிருந்து இரவு ஏழு மணி வரை, குழுமிய நீர்த்துகள்கள் போன்றவற்றின் விவரங்களும் சேகரிக்கப்பட்டன. எனினும் இந்த ஆராய்ச்சியின் போது அப்பகுதியில் எந்த வித மேகக் கூட்டமும் திரளவில்லை என்று செயற்கைக் கோள் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மழை பெய்வதற்கான சாதகமான ஈரப்பதத்தின் அளவு கூட அதிகரிக்கவில்லை.


தினமணி, 6.6.1988

தமிழ் ஓவியா said...


உலகப் படைப்புப் பற்றிய பழைமையான மூட நம்பிக்கை!


கிரேக்கப் புராணத்தின்படி குரோ ணோஸ் என்ற ஆகாய தேவனுக்கும் கே என்ற பூமி தேவிக்கும் இடையே நடை பெற்ற உடலுறவின் காரணமாகத்தான் உயிரினங்கள் உருவாயின. குரோ ணோசின் மகனான ஸ்யூஸ், தந்தையின் பிறப்புறுப்பை வெட்டித்தான் இரண்டையும் பிரித்தான்.

ரிக்வேதம் இதை மற்றொரு வடிவில் கூறுகின்றது:

வருணன் ஆகாயத்தை மேலே உயர்த்தினான். சூரியன் ஆகாயத்தில் ஒளி வீசுவது வருணனின் பெருமையினால்தான். சமுத்திரம் கரை கவிழாமல் இருப்பதும் அதனால்தான்.
பைபிளிலுள்ள ஆதியாகமும் இதையே கூறுகின்றது:

பின்பு தேவன்: நீரின் மத்தியில் ஆகாய விரிவு உண்டாகக் கடவது என்றும், அது நீரினின்று நீரைப் பிரிக்கக் கடவது என்றும் சொன்னார். தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி, ஆகாய விரிவுக்குக் கீழே இருக்கிற நீருக்கும் மேலே இருக்கிற நீருக்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் ஆகாய விரிவுக்கு வானம் பெயரிட்டார்.

குர்ஆன் அதையே மீண்டும் கூறு வதைப் பாருங்கள்:

ஆகாயமும் பூமியை (அவற்றைப் படைத்த ஆதிநாளில்) ஒன்றுக்கொன்று ஒட்டிச் சேர்ந்தே நின்றன. பிறகு நாம் அவற்றை ஒன்றுக்கொன்று பிரித்து வைக்கவும் எல்லாப் பொருள்களையும் தண்ணீரிலிருந்து படைக்கவும் செய்தோம்

பண்டைய பாபிலோனியாவின் நம்பிக்கையின் படி உலகம் மர்துக் தேவனின் கட்டளைப்படி தண்ணீரிலிருந்து தோன்றியது. அமைப்பு வழிபட்ட மதங்கள் உருவாவதற்கும் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூகத்தில் நல்ல செல்வாக்குடன் இருந்த நம்பிக்கைகளே இந்தக் குறிப்புகளில் அலையடிக்கின்றன. அவற்றை அமைப்பு வழிப்பட்ட மதங்கள் ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் அளித்தன.

இன்று செயற்கை உயிரையே அறிவியல் கண்டுபிடித்துவிட்டதே!

தமிழ் ஓவியா said...


செங்கற்பட்டில் (24.12.2012) வெளியிடப்படும் நூல்கள்


அய்ரோப்பாவில் பெரியார்!

அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் அவர்கள் தனது சிந்தனைகளை தான் பிறந்த மண்ணையும் தாண்டி உலகின் பல நாடுகளில் சென்று பரப்பி அந்நாடுகளின் சமுதாய அமைப்பையும் அவர்களின் முன்னேற்றத்தையும் கண்டு தம் மண்ணிற்கேற்ப அக்கருத்துகளைப் பரப்பினார். 1931ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து, எகிப்து ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து 1932ல் திரும்பினார்கள்.

அவற்றையும் அப்பயணத்தின் விளைவுகளையும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தொகுத்து ஓர் ஆராய்ச்சி முன்னுரையையும் எழுதி அய்ரோப்பாவில் பெரியார் என்னும் தலைப்பில் வழங்கியுள்ளார்.இதன் முதல் பகுதியில் தந்தை பெரியார் அவர்களின் அய்ரோப்பிய பயணம், அவர் எழுதிய கடிதங்கள், அந்நாடுகளில் அவரது உரைகள் போன்றவை தொகுக்கப் பட்டுள்ளன.

இரண்டாம் பகுதியில் தந்தை பெரியார் அவர்கள் திரும்பிய பின் அயல்நாடுகளைப் பற்றி, அவர்களின் முன்னேற்றம் பற்றி நம் மக்களுக்கு எடுத்து விளக்கிய 6 உரைகள் தொகுத்து தரப்பட்டுள்ளன. இவற்றில் சில இதுவரை நூல் வடிவில் வெளிவராத அரிய உரைகளாகும்.

பகுதி-3ல் தந்தை பெரியார் தாய்நாடு திரும்பிய பின் சோவியத் ரஷ்யா, ஜெர்மனி, எகிப்து, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளைப் பற்றி குடிஅரசில் பதிவான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

பகுதி-4ல் சோவியத் ரஷ்யாவில் இருந்து திரும்பிய பெரியார் அவர்கள் ஈரோட்டில் சுயமரியாதையாளர்கள் கூட்டத்தை கூட்டி சுயமரியாதை - சமதர்ம திட்டத்தை அறிவித்தார்கள். அவை தொடர்பான கட்டுரைகள், வழக்குகள், தீர்ப்புகள் ஆகியவைத் தொகுக்கப்பட்டுள்ளன. ஏராளமான படங்கள் இடம் பெற்றுள்ளன. தந்தை பெரியார் பற்றி ஆய்வாளர்களுக்கு சிறந்த நூலாகும். பக்கங்கள்: 384

நன்கொடை: 150/-

தமிழ் ஓவியா said...

உலக தத்துவச் சிந்தனையாளர்களும் - தந்தை பெரியாரும்!

தத்துவப் பேராசான் தந்தை பெரியார் அவர்கள் ஒரு சிந்தனையாளர் மட்டுமல்ல இம்மானுட மறுமலர்ச்சிக்கு தேவையான மாபெரும் தத்துவத்தை தந்த சிறந்த தத்துவ சிந்தனையாளராவர்.

தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்களை ஆய்ந்த பெருந்தகையான பேராசிரியர் ஆர்.பெருமாள் அவர்கள் தந்தை பெரியாருடன் மேல்நாட்டு தத்துவ ஞானிகளான சாக்ரட்டீஸ், பினோசா, காரல்மாக்ஸ், ரூசோ, வால்டேர், கான்ட் ஆகியோருடன் ஒப்பிட்டு தந்தை பெரியார் பற்றி இந்நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளதை பேராசிரியர் ப.காளிமுத்து அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்படுகிறது.

இறுதியாக பெரியாரும் சங்கரரும் என்னும் தலைப்பில் பெருமாள் அவர்கள் அவரது பார்வையில் ஆய்வு செய்து விளக்கியுள்ளார். வெவ்வேறு காலகட்டங் களால் வாழ்ந்த மேல்நாட்டு அறிஞர்களின் சிந்தனையுடன் தந்தை பெரியாரின் சிந்தனை களை ஒப்பிட்டு, அவர்களது சூழலுடன் தந்தை பெரியாரின் சூழலை ஒப்பிட்டு விளக்கி யுள்ளார். தமிழர் தலைவரின் சீரிய முயற்சியில் தந்தை பெரியார் அவர்கள் உலகமயம் ஆகியுள்ள சூழலில் இது அவசியமான நூலாகும்.

பக்கங்கள் 152, நன்கொடை ரூ.60/-

தமிழ் ஓவியா said...

மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம்

தந்தை பெரியாரின் கொள்கைகளை பரப்பிடும் பணியில் அமைக்கப்பட்ட அறக்கட்டளையான அருப்புக்கோட்டை கைலாசம் அறக்கட்டளைக்காக பெரியார் பேருரையாளர் கு.வெ.கி.ஆசான் அவர்கள் ஆற்றிய உரையின் விளக்கமான எழுத்துருவே இந்நூல்.

மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு புத்துலக முன்னோடி பெரியார் என்று தலைப்பிட்ட முதல் இயலில் மானுடம், அதன் இயக்கம், மனித இனத்தின் அடிப்படை வேட்கைகள், மூட நம்பிக்கை போன்றவை விளக்கப்பட்டு இந்த சூழலில் பெரியாரின் தோற்றம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

இரண்டாவது பகுதியான அடையாள சிக்கல் எனும் இயலில் 1770முதல் 1920 வரையிலான தற்கால இந்தியாவின் வரலாற்றுச் சுவடுகள் தொகுக்கப்பட்டு ஆய்வு கண்ணோட்டத்தோடு விளக்கப்பட்டுள்ளன. இதில் இளைய தலைமுறை அறிந்திடாத ஏராளமான தகவல்களை பேராசிரியர் ஆசான் அவர்களால் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இறுதி பகுதியான மானுடம் கண்ட அடையாளம் என்னும் இயல் தந்தை பெரியாரின் மனித உரிமைப்பணியில் அவர் காட்டிய அடையாளமும் அவற்றுக்கான காரணங்களும் வருண ஜாதி அடிப்படையின் சிக்கலும் விவரிக்கப்பட்டுள்ளன.

தமிழரா? திராவிடரா? என்று அடையாளம் காணுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ள இன்றைய சூழலில் இந்நூல் இளைய தலைமுறைக்கு மிக அவசியமானதாகும். மொத்தப் பக்கங்கள்: 152, நன்கொடை: ரூ.60/-

தமிழ் ஓவியா said...


உலகம் அழியப்போகிறதா? தேவை - விஞ்ஞான மனப்பான்மை தமிழர் தலைவர் விளக்கம்


எக்ஸ்னோரா நிர்மல் உருவாக்கியுள்ள மனிதனை மனிதநேயமாக்கும் மா என்ற புதிய அமைப்பினையும், மா என்ற நூலினையும், குறுந்தகட்டினையும், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார். அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், வி.ஜி.பி. சந்தோசம், ஏஅய்பிஇஏ பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம், சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன், எமரால்டு ஒளிவண்ணன், வி.ஜி.நரேந்திரபாபு, தூறல் நம்பி ஆகியோர் கருத்தினை பெற்றுக் கொண்டனர். (21.12.2012, சென்னை)

சென்னை, டிச.21- உலகம் அழியப் போகிறது என்பது வீண்பயம். விஞ்ஞான மனப்பான்மை வளர்ந்தால் இந்த அச்சங்களுக்கு இடம் இருக்காது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். எக்ஸ்னோரா அமைப்பு ஏற்பாடு செய்த விழாவில் இன்று காலை உரையாற்றுகையில், அவர் குறிப்பிட்டதாவது:

எக்ஸ்னோரா என்ற பெயரில் சென்னை நகரை குப்பைகள் அற்ற ஒரு எழில்பூத்துக் குலுங்கும் நகராக ஆக்கவேண்டும் என்பதை தன்னுடைய வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு, தனி ஒரு மனிதனால் சாதிக்க முடியுமா? என்றால், நிச்சயமாக முடியும் என்று சாதித்துக் காட்டிய ஒரு அருமை நண்பர், நல்ல பகுத்தறிவாளர் நிர்மல் அவர்கள் ஒரு சிறப்பான இந்த நிகழ்ச்சியை இன்றைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

உலகம் அழியப் போவதில்லை; உலகம் வளர வேண்டிய ஒன்று. அதுவும் பகுத்தறிவுத் துறையில், சுற்றுச்சூழலில், மாசுபடாத ஒரு சமுதாயத்தை, ஒருமைப்பட்ட மக்கள் வாழக்கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்த இயக்கத்தை, ஒத்தக் கருத்துள்ள தலைவர்களை, சிந்தனையாளர்களை, கவிஞர்களை அவர்கள் தேர்ந் தெடுத்து இன்றைக்கு அழைத்து ஒரு சந்திப்பை ஏற் பாடு செய்திருக்கிறார்.

உலகம் ஒருவேளை அழிந்துவிட்டால், இவர் களோடு சேர்ந்து அழியட்டும்; முட்டாள்களோடு அழியக்கூடாது; அறிவாளிகளோடு சேர்ந்து அழிந் தால், புதிதாக அறிவாளிகள், மீண்டும் இதைவிட சிறப்பாக பிறப்பார்கள் என்று ஒருவேளை நிர்மல் அவர்கள் தனித்து சிந்தனையாக சிந்தித்திருப்பாரோ என்று நான் வேடிக்கையாக சொல்கிறேன்.

அழியப் போகிறதா உலகம் !

உலகம் அழியப் போவதில்லை, உலகம் வளர்ந்து கொண்டிருக்கக் கூடிய உலகம். அதேநேரத்தில், அறிவு சார்ந்த உலகமாக, அறிவு சார்ந்த நெறியாக, வாழ்க் கை நெறி அமைய வேண்டும். இன்றைக்கு எங்கு பார்த்தாலும் போலிகள் இருக் கின்றன.

மருந்துகளில் ஆரம்பித்த போலி, எல்லா துறையிகளிலும் வளர்ந்து, போலி விமானிகள்வரையிலே வளர்ந்து, சாமியார்களே போலிகளாகி, கடவுள் களே போலிகளாகி, கா வல்துறை அதிகாரிகளே போலிகளாக வரக்கூடிய அளவிற்கு மலிவாகி இருக்கிற இந்த நேரத் தில், வதந்திகள் என்பது அதற்கு அப்பனான ஒன்றாகும்.

எனவே, யாரை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானா லும் திரித்துவிடக் கூடிய அளவிற்கு, ஒரு சாதாரண நீண்ட காலத்திற்கு முன்னால் உருவாக்கப்பட்ட ஒரு செய்தி. மயன் நாகரிகம் என்பது ஒரு காலத்தில் சிறப்பாகப் பேசப்பட்ட ஒரு நாகரிகம். அவர்கள் காலத்தில் ஒரு நாட்குறிப்பை தயாரித்திருக் கிறார்கள்.


தமிழ் ஓவியா said...

அதிலே ஒரு குறிப்பிட்ட நாளை வைத்து கணித்திருக் கிறார்கள். அவர்களுடைய அறிவு எந்த எல்லைக்குச் சென்றதோ அன்றைய காலகட்டத் தில் அதை வைத்து அந்த நாள்குறிப்பை தயாரித்திருக்கிறார்கள்.

தீவட்டி பிடித்துக் கொண்டிருந்த காலத் தில், மெழுகுவர்த்தி கண்டுபிடித்தவன்தான் தாமஸ் ஆல்வா எடிசன் போன்ற ஒரு விஞ்ஞானி; இருட்டாக இருந்த நேரத்தில், தீவட்டியைக் கண்டுபிடித்தவனும் ஒரு விஞ்ஞானிதான் அதிலொன்றும் சந்தேக மில்லை.

உலகம் அழியும் என்ற மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் எக்ஸ்னோரா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மறையும் பூமியல்ல, மலரும் பூமி என்ற நிகழ்ச்சியில் உலகம் வாழும்! வாழ வைப்போம்! என்ற கருத்துப் பலகையில் தமிழர் தலைவர் கி.வீரமணி, வி.ஜி.பி. சந்தோஷம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ஏஅய்பிஇஏ பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம், சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன், எமரால்டு ஒளிவண்ணன், வி.ஜி.நரேந்திரபாபு, தூறல் நம்பி, எக்ஸ்னோரா நிர்மல் ஆகியோர் கருத்தினை பதிவு செய்து கையொப்பமிட்டனர். (21.12.2012, சென்னை)

அப்படி ஒரு கால கட்டத்திலே, மிகச் சிறப் பாக இருக்கக் கூடிய ஒன்றிலே, அதோடு உலகம் அழிந்துவிடப் போகிறது என்கிற புரளியைக் கிளப்பி, தேவையில்லாமல் மக்களை ஏமாளியாக ஆக்க வேண்டும் என்ற ஒரு பாமரத் தனத்தை, ஒரு தற்குறித் தனத்தை படித்த வர்கள் மத்தியிலும் கூட இதைப் பரப்பிக் கொண்டிருக் கிறார்கள் என்று சொன்னால், இதற்கு ஊடகங்கள் சில (நான் எல்லா ஊடகங் களையும் சொல்லவில்லை) துணை போ கின்றன என்று சொன்னால், நாம் வருந்தவேண்டிய ஒரு செய்தியாகும்.

பெரும்பாலான மக்கள், அறியாமையிலும், பேதத் திலும் ஒருவருக்கொருவர் சண்டை பிடித்துக் கொண்டு வாழ்வதைவிட, இந்த உலகம் இருப்பதைவிட, இல்லா திருப்பதே சிறப்பு என்று நினைப்பவர்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

என்றாலும், இது புதிதாகக் கிளம்பிய புரளி அல்ல. எட்டுக் கிரகங்களும் ஒன்றாகச் சேர்ந்தால், உலகம் அழிந்துவிடும் என்று சொன்னார்கள்; அதற்குப் பிறகும் நாங்கள் அதை வேடிக்கையாகப் பார்த்து இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஸ்கைலாப் பயம்

அதற்குப் பிறகு ஸ்கைலாப் உடைந்தபோது, உலகம் அழிந்துவிடப் போகிறது என்று சொல்லி, சாதாரண மக்களை, கிராமப்புற மக்களை எல்லாம் ஏமாற்றி னார்கள்; ஆனால், இன்றைக்கும் அதுவும் 21 ஆம் நூற்றாண்டிலும் அதுபோல ஒரு நிகழ்ச்சி உலகம் முழுவதும் தொடர்கின்ற ஒரு நிலை இருக்கின்றதே, அது வேதனையான ஒன்று.

ஒரே ஒரு நிகழ்ச்சி மட்டும் சொன்னால், இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பாக இருக்கும்.

ஆஸ்திரேலியாவிலே இப்படி சொல்கிறார்களே, நாசா விஞ்ஞானிகள் சொல்வதைப்பற்றி கவலை யில்லை. இன்னொரு நாட்டிலே இன்னொருவர் சொல்கிறாரே என்று ஒருவர் அண்மையில் கேட்டார்; அவர்களெல்லாம் அறிவாளிகள் இல்லையா, நீங்கள் மட்டும்தான் அறிவாளியா? என்று கேட்டார்.

முட்டாள்கள் இந்தியாவுக்கு மட்டும் சொந்தமா?

இதற்கு நான் ஒரே ஒரு பதிலைத்தான் சொன்னேன்; அமெரிக்காவிலே ஒரு மூடநம்பிக்கையான செய்தி வந்தபோது, தந்தை பெரியார் அவர்களிடத்தில் மிக வியப்பாகக் கொண்டு சென்று காட்டினேன். அமெரிக்காவிலே இப்படி இருக்கிறதே அய்யா என்று பதற்றத்தோடு சொன்னேன்.

தமிழ் ஓவியா said...

அவர் அமைதியாக, பதற்றப்படவோ, வேகப்பட வோ இல்லை; அப்படியா என்று ஆச்சரியப்படவோ இல்லை. அவர் சிரித்துக்கொண்டே சொன்னார், முட் டாள்தனம் என்ன உனக்கே சொந்தம் என்று நினைத்தாயா? அது உலகத்திற்கே சொந்தம். அமெரிக் காவில் முட்டாள் இருக்கமாட்டானா? அல்லது வேறு நாட்டில் இருக்கமாட்டானா? உலகம் முழுவதும் முட்டாள்கள் இருப்பார்கள் என்று சொன்னார்.

ஆகவே, முட்டாள்தனம் என்பது நம்முடைய ஏகபோக உரிமையல்ல; அது உலகம் முழுவதும் பரவியிருக்கிற ஒரு பொதுவுடைமைத் தத்துவம் அப்படியாவது பரவியிருக்கிறதே என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.

தேவை - விஞ்ஞான மனப்பான்மை

அந்த வகையிலே இப்பொழுது இந்தப் புரளிகள் தேவையில்லாத ஒன்று. விஞ்ஞானத்தை நாம் சொல்லிக் கொடுத்தால் மட்டும்போதாது; விஞ்ஞான மனப்பான்மை, அறிவியல் மனப்பான்மை உருவாக வேண்டும். அதற்கு உங்களைப் போன்ற ஊடகங்கள் துணை நிற்கவேண்டும். அதற்காகத்தான் நிர்மல் அவர்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்.

எதிலும் புதுமை முத்திரையைப் பதிப்பவர் அவர். இதிலும் புதுமை முத்திரையைப் பதித்திருக்கிறார். ஆகவே, இவ்வளவு பெரிய அலுவலகத்தில், அதுவும் ஒரு வங்கியினுடைய அலுவலகத்திலே அவர் அதைப் பயன்படுத்தி இருப்பது என்பது இன்னும் சிறப் பானதாகும்.

நான்கூட வேடிக்கையாகச் சொன்னேன், 20 ஆம் தேதியே எல்லோரும் கடன் வாங்கிவிட்டால், திருப்பிச் செலுத்தவேண்டிய அவசியம் இல்லை என்றேன். ஆனால், புதிதாக கூடுதலாக வட்டியைப் போட்டு விட்டால், என்ன செய்வது என்ற அச்சமும் தாராள மாக உண்டு. ஆகவேதான், வேடிக்கையாக, அவர்கள் வினயமாக செய்திருக்கிற ஒரு அற்புதமான நிகழ்ச்சி. இதுபோன்ற அறிவுத்துறை புரட்சிகள், அமைதிப் புரட்சிகள் வளரட்டும்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி செய்தியாளர்களிடையே உரை யாற்றினார்.