Search This Blog

3.4.11

ஒழுக்கச் சீலரான காஞ்சி ஜெயேந்திரரின் புதுக்கட்சி


தேர்தல் சந்தடியிலே இ.பி.கோ. 307 குற்றவாளியான காஞ்சி ஜெயேந்திரர் தன்னுடைய பார்ப்பனிய சுருக்குப்பையை அவிழ்க்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்.


சென்னை வாணிமகால் என்றால் அது அவாள் மகால் தானே. அங்கு ஒரு புதுக் கட்சி பிரசவமாகியிருக்கிறது. ஜெயேந்திர சரஸ்வதி, இல. கணேசன், இராம கோபாலன் இவர்கள் எல்லாம் ஒரு நிகழ்ச்சியிலே சங்கமிக்கிறார்கள் என்றால் அதன் பொருள் புரியாதா, என்ன?

கண்டிப்பாக அவாளுக்குச் சம்பந்தப்பட்ட - அவாளுக்குப் பிரயோசனப்பட்ட சமாச்சாரமாகத்தான் இருக்கும். அந்தப் புதுக்கட்சிக்கு என்ன பெயராம்? த.தே. ஆ.ம.க. என்பது சுருக்கம்; விரிவாக்கம் -தமிழ்ச் தேசிய ஆன்மிக மக்கள் கட்சியாம்; (தே.மு.தி.க.வையும் இதனையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். திருப்பதிக்குச் சென்று கட்சிக் கொடியை ஏழுமலையான் காலடியில் சமர்ப்பித்து வந்ததால் ஒரு வகையில் ஆன்மிகத் தொடர்பு அக்கட்சி யோடு இனி ஏற்படக் கூடும்).

இந்தக் கட்சி தொடக்க விழாவில் மேனகா காந்தி வந்து கலந்து கொண்டிருக் கிறார். அதற்கொரு காரணம் இருக்கிறது. மேனகா அம்மையாரின் மகன் வருண்காந்தியின் விவாஹ சுபமுகூர்த்தத்தை ஒழுக்கச் சீலரான காஞ்சி ஜெயேந்திரர் நடத்தி வைத்தார் அல்லவா? அந்த வகையில் அகில இந்திய விளம்பரத்துக்காக மேனகாவுக்கு அழைப்பு விடுத்திருக்கலாம் அல்லவா!

நம் நாட்டில் இந்துக் கலாச்சாரம் முடிவுக்கு வந்து விடவில்லை என்பதற்குக் கடந்த 6ஆம் தேதி காசியில் நடந்த வருண்காந்தியின் திருமணம் சான்றாக அமைந்தது என்று கூறி ஜெயேந்திரர் தன் முதுகைத் தானே ஒரு முறை தட்டிக் கொண் டிருக்கிறார்.

இவர் சொல்லியிருப்பதைப் பார்த்தால் இந்துக் கலாச்சாரம் முடிவுக்கு வரும் அளவுக்கு நிலைமை முற்றிப் போயிருந்த நிலையில், வருண்காந்தியின் திருமணம் வந்து சாகாமல் காப்பாற்றியிருக்கிறது என்று தெரிய வருகிறது.

நம் பாரத நாடு பல மன்னர்களால் ஆளப்பட்டது. பல மதத்தவர்கள் அவர்களது பாரம்பரியத்தை விட்டுச் சென்றார்கள். இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து இந்தியக் கலாச்சாரத்தைப் பேணிக் காக்கத்தான் இந்தப் புதிய கட்சி என்று ஜெயேந்திரர் அறிமுகப்படுத்தி உச்சி மோந்து வழியனுப்பி இருக்கிறார்.

ஆமாம், இதற்குமுன் இதே சங்கராச்சாரியார் ஜனக் கல்யாண், ஜனசாக்ரான் என்று நல்ல நாள் பார்த்து சுபமுகூர்த்தம் பார்த்து ஆரம்பித்தாரே, அதன் கதி என்னாயிற்றாம்? மறைந்த மூத்த சங்க ராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஆசீர்வதித்து, மணியனால் ஆரம்பிக்கப்பட்ட மயன் இதழுக்கு ஏற்பட்ட கதிதான் இவற்றுக்கும் ஏற்பட்ட விட்டன போலும்!

இடுக்கோடு இடுக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருவாளர் இராம. கோபாலவாள் தம் கைச் சரக்கை விற்றுத் தள்ளியிருக்கிறார்.

மனிதநேய மக்கள் கட்சி என்று ஒரு பயங்கரவாத கட்சியிருக்கிறது. அதற்கு ஸீட் ஒதுக்கி ஜெயிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அப்படி அவர்கள் ஜெயித்தால் சட்டமன்றத்தில் 30, 40 முஸ்லிம்கள் இருப்பார்கள் என்று வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு புலம்பியிருக்கிறார்.

என்ன செய்வது! ஒட்டு மொத்த 234 தொகுதிகளி லும் ஜெயலலிதா, குடுமி இராமநாதன் என்ற இருவரைத் தவிர அவாள் யாரும் இல்லையே! ஆத்திரம் வராதா?

----------------- மயிலாடன் அவர்கள் 2-3-2011 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

1 comments:

தமிழ் ஓவியா said...

கருத்துத் திணிப்பின் பித்தலாட்டம் பாரீர்!


தேர்தல் கருத்துக் கணிப்பு என்ற பெயரால் மக்கள் மத்தியில் தங்கள் ஆசைத் திணிப்பை ஊடகங்கள் நடத்தி இருக்கின்றன.

உங்களுக்கு நினைவு இருக்கிறதா? 2009 மக்களவைத் தேர்தலில் இந்து ஏடு என்ன எழுதியது தெரியுமா?

வாக்குச் சாவடிக்குள் சென்று வாக்கைப் பதிவு செய்து விட்டு வெளியே வந்த இந்து என் ராம் - அதே நேரத்தில் வாக்கைப் பதிவு செய்துவிட்டு வந்த ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்னாரே - நினைவிருக்கிறதா? 30 இடங்கள் உங்களுக்குத்தான் என்று காதில் பூ வைத்தாரே - நினைவிருக்கிறதா?

வெறும் 9 இடங்களில்தானே அ.தி.மு.க. வெற்றி பெற்றது? தி.மு.க. 18 இடங்களில் அதாவது இரு மடங்கு வெற்றி பெறவில்லையா? தி.மு.க. கூட்டணி 29 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி வெறும் பத்து இடங்களிலும்தானே வெற்றி பெற்றது?

2006 சட்டப் பேரவைத் தேர்தலில் முதல் கட்டம், இரண்டாம் கட்டம் என்று கூறி அ.தி.மு.க. தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று குமுதம் வெளியிட்டதை எடுத்து அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான நமது எம்.ஜி.ஆர். (24-3-2006) வெற்றிக் களிப்பில் சொக்கிக் கிடந்ததே - மறந்து போயிற்றா?

இவ்வார துக்ளக் இதழில் சில மாவட்டங்களின் கருத்துக் கணிப்பு என்று கூறி, அதிமுகவுக்கு வெற்றி மாலை சூட்டுகிறதே - இதே துக்ளக் 2 ஆம் கட்ட 5 ஆம் கட்ட தேர்தல் கணிப்பு என்று சொல்லி புள்ளி விவரங்களை 2006இல்அள்ளி விட்டதே - அதனை அதிமுக வின் நமது எம்.ஜி.ஆர். ஏடு (14-4-2006 பக்கம் 2; 21-4-2006 பக்கம் 2)

அட்டகாசமாக வெளியிட்டு ஆனந்தராகம் பாடியதே - முடிவு என்ன வாயிற்று என்று நாட்டு மக்களுக்குத் தெரியாதா? இந்து சி.என்.என். கணிப்பு. புரட்சித் தலைவி முதல்வராக 42 விழுக்காடு ஆதரவு, 67 விழுக்காடு திருப்தி என்று செய்தி வெளியிட்டு அதிமுகவின் நமது எம்.ஜி.ஆர். ஏடு (15.4.2006 பக்கம் 8) வெளியிட்டு வெற்றிப் போதையில் மிதந்ததே - மீண்டும் அதனை நினைவூட்ட வேண்டுமா?

லயோலா கல்லூரியின் கணிப்பு மட்டும் என்ன வாழ்கிறதாம்?

அ.தி.மு.க. அணிக்கே வெற்றி என்று ஜெய பேரிகை முழக்கியதே. அதனையும் அதிமுகவின் - நமது எம்.ஜி.ஆர். வெளியிட்டு (15-4-2006 பக்கம் - 8) வெறிக் கூச்சல் போட்டதையும் நினைவு படுத்திக் கொள்க!

டெக்கான் கிரானிக்கல் ஏடு தன் பங்குக்கு ஜெ அம்மையாரின் கழுத்தில் மாலையைச் சூட்டியது. அதனையும் ஆகா, ஊகா என்று நமது எம்.ஜி.ஆர். ஏடு (1-5-2006) வெளியிட்டுக் குதியாட்டம் போட்டதே!

கருத்துக் கணிப்பு என்பது எத்தகைய பித்தலாட்டம் என்பதற்கு இவற்றைவிட இன்னும் ஆதாரம் வேண்டுமா?

மயக்க பிஸ்கட்டு கொடுக்கிறார்கள். வாக்காளர் களே, ஏமாறாதீர்கள்! வட்டியும் முதலுமாக வாக்குச் சீட்டால் திருப்பி, மரண அடி கொடுப்பீர்! கொடுப்பீர் !!

---”விடுதலை” 3-4-11