பார்ப்பனர்கள் ஆரியர்களா? யூதர்களா? அவர்கள் யூதர்களே!
- ஒரு சந்தேகி
பார்ப்பனர்களிடம் ஆரியர்கள் என்பதற்கு என்ன குணம் இருக்கிறது?
எதைக்கொண்டு அவர்களை ஆரியர் என்பது?
யூதர்களது புராதன பாஷையாகி எபிரேய பாஷையில் " எல் " என்பது கடவுள் என்ற அருத்தம் கொண்டதல்லவா?
இயேசு (தெய்வ குமாரன்) மனுஷ குமாரனாக அவதரிப்பார் என்பது எபிரேய பாஷையில் எழுதப்பட்ட பழய ஏற்பாடு சொல்லுகிறதும் உலகம் அறிந்த விஷயமல்லவா? பழய ஏற்பாட்டின்படி " ஜெஹோவா" பிரதானமான ஒரே கடவுளல்லவா?
இந்து மதத்துக்கும் யூதர் நாகரீகத்துக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதிலிருந்து இந்து மதத்தின் ஆதீனக்காரர்களான பார்ப்பனர் யூதர்கள் தான் என்று யூகிக்க இடமில்லையா?
எருசலேம் தேவாலயமும் இந்து கோவில்களும் சுற்றுப்பிரகாரம், தெப்பக்குளம், கொடிமரம், மண்டபம் , மூலஸ்தானம், தூபம், பூசை முதலிய விஷயங்களில் ஒன்றுபட்டிருக்கிறது.
பாலஸ்தீன நாட்டில் பிரதான புருஷர்களை தெய்வமாக கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. இந்தியாவிலும் பிரதான புருஷர்களை தெய்வமாக கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. ஆகையால் இவ்வழக்கம் அங்கிருந்து தானே வந்திருக்கவேண்டும்?
யூதர்களின் ஜிஹோவா இந்துக்களின் சிவா என மறுவி இருக்கலாமல்லவா?
எல் என்ற எபிரேய பதம் வேல் என்று மறுவி இருக்காதா? யேசு பிறப்பார் என்ற யூத ஏற்பாடுப்படி பிறந்த பிள்ளையே தான் குமாரக்கடவுள் பிறப்பார் என்ற ஏற்பாட்டுப்பாகு ஏற்பட்டதாகாதா? பிள்ளையார் கோவிலுள்ள நாகம் அரசமரம் வேம்பு முதலியவற்றிற்கும் முறையே ஏதன் சர்ப்பத்திற்கும் தேவதாரு மரத்துக்கும் நன்மை தீமை அறியும் மரத்துக்கும் ஒற்றுமை இல்லையா?
இவ்வொற்றுமைகள் எப்படி ஏற்பட்டிருக்க முடியும்?
யூதர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதற்கும் பார்ப்பனர்கள் கடவுள் முகத்திலிருந்து சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்பதற்கும் என்ன வித்தியாசம். யூதர்கள் தீபதூபம் காட்டி மணியடிக்கின்றார்கள் என்பதற்கும் பார்ப்பனர்கள் அதே மாதிரி அர்ச்சகர் என்பதற்கும் ஒற்றுமை இல்லையா?
யூதர்கள் மற்ற ஜாதியாரோடு கலந்து கொள்ளாமல் ஒதுக்கி நிர்ப்பவர்கள் என்பதற்கும், பார்ப்பனர்கள் மற்ற ஜாதியாரோடு கலந்துகொள்ளாமல் ஒதுங்கி நிற்கிறதற்கும் ஒற்றுமை இல்லையா?
யூதர்களுக்கு குடியிருக்க குறிப்பிட்ட நாடு இல்லை நாட்டுப்பற்றும் இல்லை என்பதற்கும் பார்ப்பனர்களுக்கு குறிப்பிட்ட ஊர் இல்லை என்பதற்கும் நாட்டுப்பற்று இல்லை என்பதற்கும் ஒற்றுமை இருக்கிறதா? இல்லையா?
யூதர்கள் தங்கள் சுகந்தேடுவதும் எப்படியாவது சரீரப்பாடுபடாமல் பொருள் தேடியலைவதுமான குணம் கொண்டவர்கள் என்பதற்கும் பார்ப்பனர்கள் தங்கள் சுயநலமும் எப்படியாவது பாடுபடாமல் பொருள்தேடி அலைகிறவர்கள் என்பதற்கும் பொருத்தம் சரியாக இல்லையா?
யூதர்கள் சிறிதும் தங்களை தவிர வேறு எதிலும் பொறுப்பு இல்லாமல் எப்படியாவது ஆளுகிறவர்களை சுவாதீனம் செய்துக்கொண்டு ஆளுவதில் கலந்துக்கொண்டு தந்திரங்கள் செய்து மற்ற குடிகளை வாட்டி வதக்கி உயிர்வாங்க வாளுகிறவர்கள் என்பதற்கும் பார்ப்பனர்களும் சிறிதும் பொறுப்பு இல்லாமல் எப்படியாவது ஆளுகிறவர்களை சுவாதீனம் செய்து கொண்டு ஆசயில் புகுந்து ஆதிக்கம் செலுத்தப்பார்க்கிறவர்கள் என்பதற்கும் சரியான பொருத்தம் இல்லையா?
யூதர்கள் கதைகளும் சித்தாந்தங்களும் பகுத்தறிவுக்கு முரணான கற்பனைகள் என்பது போலவே பார்ப்பனர்களின் புறாணங்களும் அவர்களது சித்தாந்தங்களும் போதனைகளும் பகுத்தறிவுக்கு முரணானதாக இருக்கிறதும் மிக மிக பொருத்தமானதாக இருக்கிறதா இல்லையா?
யூதர்கள் வீரங்கொண்டு மக்களை ஆளாமல் வகுப்பு வாதத்தாலும் மற்றும் பிரிவினைகளாலும் பிரித்து வைப்பதில் கைதேரியவர்கள் போலவே பார்ப்பனர்களும் இருப்பதால் இருவரும் ஒரே வகுப்பினர் என்று சொல்ல இடமிருக்கிறதா இல்லையா?
வடிவத்திலும் நிரத்திலும் யூதர்களும் பார்ப்பனர்களும் ஒன்றுபோல் இல்லையா?
இந்த பார்ப்பனர்களை ஆரியர்கள் என்பதை விட யூதர்கள் என்பது பொருத்தமாக இல்லையா?
ஆகவே இப்பொருத்தங்களை சரியானபடி கவனித்து ஆறாய்ச்சி செய்து பார்த்து பார்ப்பனர்கள் யூதர்களா அல்லவா என்பதை தெரிவிக்கும்படி ஆராய்ச்சி ஆளர்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
------------------ பெரியார் அவர்கள் சந்தேகி என்ற பெயரில் எழுதிய கட்டுரை - ”குடி அரசு” - 20.03.1938
0 comments:
Post a Comment