tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7912475856911570563..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: ஒழுக்கச் சீலரான காஞ்சி ஜெயேந்திரரின் புதுக்கட்சிதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68932956817094823422011-04-03T05:45:23.615+05:302011-04-03T05:45:23.615+05:30கருத்துத் திணிப்பின் பித்தலாட்டம் பாரீர்!
தேர்தல...கருத்துத் திணிப்பின் பித்தலாட்டம் பாரீர்!

தேர்தல் கருத்துக் கணிப்பு என்ற பெயரால் மக்கள் மத்தியில் தங்கள் ஆசைத் திணிப்பை ஊடகங்கள் நடத்தி இருக்கின்றன.

உங்களுக்கு நினைவு இருக்கிறதா? 2009 மக்களவைத் தேர்தலில் இந்து ஏடு என்ன எழுதியது தெரியுமா?

வாக்குச் சாவடிக்குள் சென்று வாக்கைப் பதிவு செய்து விட்டு வெளியே வந்த இந்து என் ராம் - அதே நேரத்தில் வாக்கைப் பதிவு செய்துவிட்டு வந்த ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்னாரே - நினைவிருக்கிறதா? 30 இடங்கள் உங்களுக்குத்தான் என்று காதில் பூ வைத்தாரே - நினைவிருக்கிறதா?

வெறும் 9 இடங்களில்தானே அ.தி.மு.க. வெற்றி பெற்றது? தி.மு.க. 18 இடங்களில் அதாவது இரு மடங்கு வெற்றி பெறவில்லையா? தி.மு.க. கூட்டணி 29 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி வெறும் பத்து இடங்களிலும்தானே வெற்றி பெற்றது?

2006 சட்டப் பேரவைத் தேர்தலில் முதல் கட்டம், இரண்டாம் கட்டம் என்று கூறி அ.தி.மு.க. தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று குமுதம் வெளியிட்டதை எடுத்து அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான நமது எம்.ஜி.ஆர். (24-3-2006) வெற்றிக் களிப்பில் சொக்கிக் கிடந்ததே - மறந்து போயிற்றா?

இவ்வார துக்ளக் இதழில் சில மாவட்டங்களின் கருத்துக் கணிப்பு என்று கூறி, அதிமுகவுக்கு வெற்றி மாலை சூட்டுகிறதே - இதே துக்ளக் 2 ஆம் கட்ட 5 ஆம் கட்ட தேர்தல் கணிப்பு என்று சொல்லி புள்ளி விவரங்களை 2006இல்அள்ளி விட்டதே - அதனை அதிமுக வின் நமது எம்.ஜி.ஆர். ஏடு (14-4-2006 பக்கம் 2; 21-4-2006 பக்கம் 2)

அட்டகாசமாக வெளியிட்டு ஆனந்தராகம் பாடியதே - முடிவு என்ன வாயிற்று என்று நாட்டு மக்களுக்குத் தெரியாதா? இந்து சி.என்.என். கணிப்பு. புரட்சித் தலைவி முதல்வராக 42 விழுக்காடு ஆதரவு, 67 விழுக்காடு திருப்தி என்று செய்தி வெளியிட்டு அதிமுகவின் நமது எம்.ஜி.ஆர். ஏடு (15.4.2006 பக்கம் 8) வெளியிட்டு வெற்றிப் போதையில் மிதந்ததே - மீண்டும் அதனை நினைவூட்ட வேண்டுமா?

லயோலா கல்லூரியின் கணிப்பு மட்டும் என்ன வாழ்கிறதாம்?

அ.தி.மு.க. அணிக்கே வெற்றி என்று ஜெய பேரிகை முழக்கியதே. அதனையும் அதிமுகவின் - நமது எம்.ஜி.ஆர். வெளியிட்டு (15-4-2006 பக்கம் - 8) வெறிக் கூச்சல் போட்டதையும் நினைவு படுத்திக் கொள்க!

டெக்கான் கிரானிக்கல் ஏடு தன் பங்குக்கு ஜெ அம்மையாரின் கழுத்தில் மாலையைச் சூட்டியது. அதனையும் ஆகா, ஊகா என்று நமது எம்.ஜி.ஆர். ஏடு (1-5-2006) வெளியிட்டுக் குதியாட்டம் போட்டதே!

கருத்துக் கணிப்பு என்பது எத்தகைய பித்தலாட்டம் என்பதற்கு இவற்றைவிட இன்னும் ஆதாரம் வேண்டுமா?

மயக்க பிஸ்கட்டு கொடுக்கிறார்கள். வாக்காளர் களே, ஏமாறாதீர்கள்! வட்டியும் முதலுமாக வாக்குச் சீட்டால் திருப்பி, மரண அடி கொடுப்பீர்! கொடுப்பீர் !!

---”விடுதலை” 3-4-11தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com