Search This Blog

9.11.10

இராமாயணத்தில் மதுக்குடி

மாமிச ராமன்பற்றி ஆச்சாரியார்!

இவ்விடத்திலும் இன்னும் பல இடங்களிலும் இராம லட்சு மணர்கள் வேட்டையாடி, பூஜைக்குத் தகுந்த அதாவது வழக்கப்படி சாப்பிடத் தகுந்த வேட்டையாகாரம் சம்பாதித்து உண்டார்கள் என்று வால்மீகி முனிவர் எழுதியிருக்கிறார். சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளக்கமாக எழுதியிருக்கிறார். இதைப் பற்றி நாம் குழப்பம் அடைய வேண்டியதில்லை.

க்ஷத்திரியர்களின் ஆசாரப்படி, மாமிச ஆகாரத்தில் குற்றமில்லை. காலத்துக்கும் குல வழக்கத்துக்கும் ஏற்றபடி உடலைப் பாதுகாப்பதற்காக எந்த உணவும் தக்க வழியில் சம்பாதித்து, பூஜையில் வைத்து, அளவுக்கு மிஞ்சாமல் உண்பதில் யாதொரு தவறுமில்லை என்பது பாரத தேசத்துக்கு பொது தருமம்.

- இராஜகோபாலாச்சாரியார் -
சக்கரவர்த்தி திருமகன் - பக்கம் 88


இராமனும் குடியும்

1. கிதை சுரா _ இது காய்ச்சி இறக்கப்படும் சாராயத்தின் பெயர்.

2. மைரேயா _ இது வாசனை யூட்டப் பட்ட பானம்; இதனை மது என்றும் கூறுவர்.

3. மத்யா...இது போதை தரும் பானம்.

4. மந்தா _ இது சாதாரண சாராயத்திலுள்ள அமித போதை தணிக்கப்பட்டது. இதற்குப் பிதா மந்தா என்றும் பெயர். போதை இருக்காது. எனவே, இதனை யாவரும் விரும்பிக் குடிப்பர்.

5. சுராபானம் _ கிதை சுராவுக்கு மாறானது; கிதை சுராபானம் செயற்கையில் செய்யப்படுவது; சுரா என்பது இயற்கைக் சாராயம். இயற்கை முறையில் வடித்தெடுக்கப்படுவது; சாதாரண மக்களின் பானம். இதைப்பற்றித்தான் புராணங்களில் அதிகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

6. சிந்து _ கழிவு வெல்லப் பாகிலிருந்து வடித்தெடுக்கப்படும் பானம்.

7. சவ்வீரகா _ மட்டரகப் பானம்.

8. வரருணி _ அக்காலத்தில் உபயோகிக்கப்பட்ட மதுவகைகளில் மிகவும் காட்டமானது. (போதை அதிகமானது) இந்தப் பானம். இதனைக் குடித்த அதே நொடியில் போதை உண்டாகித் தள்ளாடி விழச்செய்து விடுமாம்.

-------------------- டில்லியிருந்து வெளிவரும் ‘CARAVAN’ என்ற ஆங்கில ஏட்டின் 15.8.54 இதழில் இராமாயணத்தில் மதுக்குடி என்ற தலைப்பில் டாக்டர் எஸ்.என். வியாஸ் எழுதிய கட்டுரையில்

3 comments:

ஒசை said...

இதை பற்றிய ஒரு பதிவு.


http://oosssai.blogspot.com/2010/11/blog-post_09.html

Khaleel Rahman said...

Tamizh Oviya, yen sagothara..
Ungal vaarthaigal " jaathiyai olippavargal yengal uravinargal "
yennai ungaludan inaikka uthaviyathu. Naam anaivarum sagotharargal. நமக்குள் வேற்றுமை பாராட்டுவது அநியாயம். இதோ நம்மை படைத்த இறைவன் தன் இறுதி வேதம் குரானிலே கூறுகிறதை பாருங்கள். படிப்பினை பெற இறை வேதத்தை படியுங்கள்..

4 வது அத்தியாயம் 1 வது வசனம். மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்

Azeez N said...

75:1. கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்
75:3. (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
75:4. அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
75:5. எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்
75:6. “கியாம நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.
75:7. ஆகவே, பார்வையும் மழுங்கி-
75:8. சந்திரனும் ஒளியும் மங்கி-
75:9. சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.
75:10. அந்நாளில் “(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?” என்று மனிதன் கேட்பான்
75:11. “இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!” (என்று கூறப்படும்).
75:12. அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.