Search This Blog

27.11.10

1-ஜி, 2-ஜி, 3-ஜி என்றால் என்ன? -3

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல்!

ஓர் அபாரமான கற்பனையே! (3) -

நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி...

இதுதான் பத்திரிகை தர்மமா?


இந்திய வரலாற்றில் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு, இந்தப் பொய்க் குற்றச்சாற்றில் பார்ப்பன பத் திரிகைகளும், தொலைக்காட்சி ஊடகங் களும் ஈடுபாடு காட்டுவது பத்திரிகை தர்மமா? இந்த அளவிற்குத் தரம் தாழ்ந்து தங்கள் தலித் விரோத மனப் பான்மையைக் காட்டும் பத்திரிகைகளும், ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் நடுநிலை என்ற வார்த்தையை உச் சரிக்க யோக்கியதை உள்ளவர்கள் தானா?

Mother of Scandals என்று அமைச்சர் ஆ. இராசாவை விமர்சிக்கிற யோக்கிய தையும், பொறுப்பும், தார்மீகமும் ஊழல் ராணி என மக்களால் புறக் கணிக்கப் பட்டு, தெருவில் தூக்கி வீசி எறியப்பட்டு, நீதிமன்றப் படிக்கட்டுகளை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் எதிர்க் கட்சி அம்மை யாருக்கு உண்டா? என்பது கிண்டலாகக் கேட்கப்படும் கேள்வி!

இந்தக் கேள்விகள் அனைத்தும், தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களாலும், முத்தமிழ்க் காவலர் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களாலும், அமைச்சர் ஆ.இராசா அவர்களாலும் தன்னிலை விளக்கமாக வும் தொடுக்கப்பட்ட கேள்விகள்! பொது மக்கள் மத்தியிலும் நிறைய கேள்விகள் பரவலாகக் கேட்கப்படுகின்றன.

யார் இந்த ஜெயலலிதா?

ஸ்பெக்ட்ரம் ஊழலை பகடைக்காயாகப் பயன்படுத்தி காங்கிரசுக்கு நான் ஆதரவு தருகிறேன் என்று சொல் லும் தார்மீக யோக்கியதை (Moral High Ground) அம்மையார் ஜெயலலிதா அவர் களுக்கு இருக்கிறதா? என்ற கேள்வி!

ஜானகி அம்மையாரை விமர்சித்த அதே பாணியில்,

ஆளுநர் சென்னாரெட்டியை விமர் சித்த அதே பாணியில்,

எம்.ஜி.ஆர். என் புகழைக் கண்டு பொறாமைப்படுகிறார், என்னை அடக்கி வைக்க நினைக்கிறார் என்று குற்றம் சுமத்திய அதே பாணியில்,

கிழடு தட்டிப்போனாது என்று பி.ஜே.பி.யை விமர்சித்த அதே பாணியில்,

கொஞ்சும்கூட நாக்கும், வாயும் கூசா மல் கணவனுக்குத் துரோகம் இழைத்த சோனியா காந்தி! பதிபக்தி இல்லாத சோனியா காந்தி! என்று குற்றம் சுமத் திய அதே வாயால் எப்படி காங்கிரசுக்கு நான் ஆதரவு தருகிறேன்! என்று சொல்லத் துணிந்தார்? என்பது மக்கள் மன்றத்தில் எழுந்துள்ள கேள்வி!

மூச்சுக்கு முந்நூறு முறை அன்னை! அன்னை! என்று அழைக்கும் தலைவியை கேவலமாக விமர்சித்த ஜெயலலிதா அம்மையார் எப்படி எங்கள் கட்சிக்கு ஆதரவு தருகிறேன் என்று சொல்லலாம்? என்று கோபமும், ஆத்திரமும் ஏன் யாருக்கும் பொங்க வில்லை?

அதேபோன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த யதார்த்த நிலை சிந்தனையாளர்கள் மத்தியிலும் ஒரு கேள்வி பிறந்துள்ளது! ஆ.இராசாவை நீக்கினால் ஆதரவு என்று சொன்னால், ஆ.இராசாவை நீக்குவது ஒன்றுதான் அ.தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கையா? அல்லது அடிப்படை லட்சியமா? அதற்கு வேறு கொள்கைகளே இல்லையா?

இதுபோன்று ஏன்? எப்படி? என்று கேட்கப்பட்டுள்ள அத்துணை கேள்விகளுக்கும் ஒரே, ஒரு விடைதான்.

ஆ.இராசா... ஆதிதிராவிட இராசா என்பதுதான்!

இந்தப் பிரச்சினையில் கைகொட்டிச் சிரித்த கருங்காலிகளும் உண்டு! கைகட்டி வேடிக்கை பார்த்த கோழைகளும் உண்டு! இந்தப் பிரச்சினையின் உள்ளடக்கமும், உண்மையும் தெரிந் திருந்துமே, வெளியில் சொல்லாமல், மாட்டியிருப்பது ஒரு தலித் சமூகத்துக்காரன்தானே! என்று மெத்தனமாக இருந்த மெத்தப் படித்த மேதாவிகள், அறிவு ஜீவிகள், பொருளாதார மேதைகள் என்று தங்களை சொல்லிக் கொண் டவர்களும் உண்டு!

ஒரு மிகப்பெரிய ஊதிய மாற்றத் துக்கு வித்திட்ட ஒரு மத்திய அமைச்சர் என்ற உணர்வு ஏதுமின்றி அமைச்சரைக் களங்கப்படுத்துபவர்களுடன் கைகோத்த தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்களும், அதனுடைய தலைவர்களும் உண்டு!

இவ்வளவு பெரிய போராட்டக் களத்திலே அமைச்சர் ஆ.இராசா தனித்து விடப்பட்டு விடுவாரோ, என்று இந்திய நாட்டின் ஒட்டுமொத்த தலித் சமூகம் கலங்கிக் கொண்டிருந்த வேளையில், இப்பிரச்சினையில் ஆரம்பம் முதல் இன்றுவரை தோன்றாத் துணை யாக, தொட்டு அணைத்துத் தூக்கி நிறுத்திய தாயாய், தந்தையாய் இருந் தவர்கள் இரண்டு தலைவர்கள் - தந்தை பெரியாரின் நீட்டிக்கப்பட்ட வரலாறுகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும், தமிழக முதல்வர் கலைஞர் அவர்களும், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களும்தான்.

விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர், அன்புச் சகோதரர் தொல். திருமாவளவன் அவர்கள், தலித் விரோத பார்ப்பனிய ஜாதிய வளையத்தின், சதிவலைதான் இந்தப் பொய்க் குற்றச்சாற்று என முழங்கியிருக்கிறார்.

மானமிகு மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் வழங்கிய புரட்சியாளர் என்ற பட்டம் ஆ.இராசாவுக்குப் பொருத்தமான பட்டம்! தந்தை பெரியார் மொழியில், சொல்வதென்றால், புரட்சி என்றால் புரட்டிப் போடுதல்!

ஒரு காலத்தில் செல் அழைப்புக் கட்டணம், தனியார் நிறுவனங்கள் மட்டும் இருந்த காலத்தில் ரூ.16. அதற்குப் பின் இருந்த அமைச்சர்கள் காலத்திலும் அழைப்புக் கட்டணம் ஒரு ரூபாய்க்குக் கீழே இறங்கவில்லை. இப்பொழுதோ வினாடிக்கு ஒரு பைசா, அம்மா, உங்களை பார்க்க நாளை வைகையில் வருகிறேன் என்று சென்னையில் இருக்கும் மகன், மதுரையில் இருக்கும் தன் அன்னைக்கு ஒரு விநாடியில் சொல்லும் இந்தச் செய்திக்கு கட்டணம் ஒரு பைசா மட்டுமே!

இந்தக் கட்டணம் வந்த காலகட்டம், யாருடைய காலகட்டம்?

அமைச்சர் ஆ.இராசா அவர்களின் காலகட்டம் அல்லவா!

சமூகப் புரட்சியல்லவா!

சமூகத்தின் உயர்மட்டத்திலிருந்து, அடித்தட்டு மக்கள் வரை செல்பேசி சேவையை அனுபவிப்பது ஒரு சமூகப் புரட்சி அல்லவா?

தொலைத்தொடர்புத் துறையின் தொழிற்சங்கத் தலைவர்களும், அதிகாரிகள், சங்கத் தலைவர்களும் வைத்த வேண்டுகோளை ஏற்று பி.எஸ்.என்.எல். பொதுத் துறையில் 74 சதவிகித பங்கு களை தனியாருக்கு விற்கும் முடிவை நிறுத்தி வைத்து, ஊழியர் நலத்துறையாக பொதுமக்கள் நலத்துறையை பி.எஸ். என்.எல். துறையை நிலை நிறுத்தியது ஒரு புரட்சி அல்லவா!

தந்தை பெரியார் அஞ்சல் உறை மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டதும், அமைச்சர் ஆ.இராசா அவர்களின் கால கட்டத்தில்தான். கலைஞர் அவர்கள் பொருத்தமாகத்தான் பாராட்டியிருக்கிறார் ஆ.இராசாவை - புரட்சியாளர் என்று!

மாண்புமிகுவைப் பறிக்கலாம்!

மானமிகுவைப் பறிக்க முடியுமா?

என்று தமிழர் தலைவர் அய்யா கி. வீரமணி அவர்களைத் தவிர, வேறு யாரால் இதுபோன்று கேட்க முடியும்!

இந்த ஸ்பெக்ட்ரம் பொய்க் குற்றச் சாற்றில், தலித் சமூகத்திற்கு ஆதரவாக நின்றவர்கள் யார்? எதிர்த்து நின்றவர்கள் யார்? என்பது தலித் சமூகத்துக்கும் தெரியும்!

அவர்கள் ஒன்றும் தெரியாத மூடர்கள் என்றோ, முட்டாள்கள் என்றோ யாராவது தப்புக்கணக்கு போடுவார்களேயானால், அவர்கள்தான் முட்டாள்கள்!

தலித் சமூகம் உறைந்துவிட்ட பனி மலை அல்ல! மாறாக, ஆறாத உள் நெருப்புடன் உறங்கும் எரிமலை!

அவர்களை எழுப்ப ஓர் அலாரம் அடிக்கும்! வெடித்துக் கிளம்பும் வெப்பத்துடன்! சரியான நேரத்துக்கு அவர்கள் விழிப்பார்கள்!

தேர்தல் என்னும் உணவுக் கூடத்தில், வெடித்து கிளம்பும் அந்த எரிமலையின் வெப்பத்தில், எரிக்க வேண்டியதை எரிப்பார்கள். சமைக்க வேண்டியதைச் சமைப்பார்கள்! படைக்க வேண்டிய வர்களுக்குப் படைப்பார்கள்!

கருஞ்சிறுத்தை கண் விழித்தால் தெரியும் சேதி! என்ற புரட்சிக்கவிஞரின் புரட்சி வரிகளின் வழியில் ஒரு சரித்திரம் நிகழும்!

------------------ஊமைக்குரல்(நிறைவு) -”விடுதலை” 26-11-2010

0 comments: