Search This Blog

5.11.10

ஆபாசத்தின், அக்கிரமத்தின் எவரெஸ்ட் தீபாவளி

தீபாவளி தேசியத் திருவிழா கிடையாது

முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

ஒரு விழா என்றால் அதில் பொருள் கருத்து இருக்கவேண்டும். ஆனால் தீபாவளியிலோ ஒரு பொருளும் இல்லை, ஒரு கருத்தும் இல்லை- ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. பொருள் காசு செலவானதுதான் மிச்சம். காசு கரியானதுதான்-பட்டாசு வெடித்துக் கரியானது, அதாவது வீணானது தான் மிச்சம்

தீபாவளி ஏன் கொண்டாடுகிறீர்கள் என்று கேட்டால், நரகாசுரன் கதை என்று ஒரு கதையைக் கூறுவார்கள். ஆனால் இந்தக் கதை, கற்பனை ஒன்று மட்டும்தானா? எத்தனை, எத்தனை கற்பனைகள் எத்தனை எத்தனை புராணக் கதைகள். சரி, கதைகள் தான் அப்படியென்றால் தீபாவளி கொண்டாடப்படுவதாவது ஒரே மாதிரியாக இருக்கிறதா என்றால் அதுதான் இல்லை.

புராணக் கதையாவது-புராணக் கதையில் எதிர்பார்க்கக் கூடாதுதான்-இருந்தாலும் மானக்கேட்டை, முட்டாள்தனமான காரியமாக இல்லாமல் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. அதனாலே அய்யா பெரியார் தம் விடுதலையில் கட்டம் கட்டி விழிப்-புணர்வு ஏற்படுத்தினார். அய்யாவின் அறிவுரை வாசகங்கள் இவை . (தனியே காண்க)

தீபாவளியைக் கொண்டாடப் போகிறீர்களா? அடிப்படைக் கதை தெரியுமா? ஆபாசத்தின், அக்கிரமத்தின் எவரெஸ்ட் தீபாவளி

1. இந்த உலகம் என்கின்ற பூமியை இரண்யாட்சதன் (தங்கக் கண்ணன்) பாயாகச் சுருட்டி தூக்கிக்கொண்டு சமுத்திரத்துக்குள் போய் ஒளிந்து-கொண்டான்.

2. மகாவிஷ்ணு (கடவுள் பன்றி உருவமெடுத்து) சமுத்திரத்துக்குள் சென்று இரண்யாட்சதனைக் கொன்று பூமியைக் கொண்டு வந்து விரித்துவிட்டான்.

3. பூமிக்குப் பன்றி மீது காதல் ஏற்பட்டு பன்றியுடன் காமலீலை செய்தது

4. அதன் பயனாக ஓர் ஆண் பிள்ளை பிறந்தது. அதன் பேர் நரகாசுரன். அவன் தேவர்களுக்கும், தேவேந்திரனுக்கும் துன்பம் விளைவித்தான்.

5. கடவுள் கிருஷ்ண உருவத்தில், அப்பிள்ளையான நரகாசுரனைக் கொல்ல அவனுடன் யுத்தம் செய்து அடிபட்டு மூர்ச்சித்தார்.

6. கடவுள் மனைவியாகிய சத்தியபாமை வந்து நரகாசுரனுடன் போர் செய்து அவனைக் கொன்றாள்.

7. கொன்ற அந்த நாளை நாம்திராவிடர்கள் கொண்டாட வேண்டுமாம்!

அதுதான் தீபாவளிப் பண்டிகையாம்?!

-தந்தை பெரியார்
(விடுதலை 24.10.1956)

அதுமட்டுமல்லாது ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி பண்டிகை வரும் சமயத்தில் இந்த எச்சரிக்கையையும் விடுத்து வரத் தவறவில்லை.

திராவிடனே! தீபாவளி வருகிறது!

ஏன் வருகிறது தெரியுமா?

உன்னை மடையனாக்க வருகிறது

உன்னை இனத்துரோகி ஆக்க வருகிறது

உன்னை ஆரியனின் தாசி மகனாக்க வருகிறது

உன்னை இனமறியாக் கீழ் மகனாக்கவே வருகிறது

பன்றிக்கும் பூமிக்கும் பிள்ளை பிறக்குமா? யோசித்துப்பார்!

ஆகவே, மானமுள்ள திராவிடன் தீபாவளி கொண்டாடலாமா?

இவ்வாறு கூறிய பெரியார். அவர்கள், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகிறேன்.

மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்

அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே

ஆவர் என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது என்று வலியுறுத்தவும் அய்யா தவறவில்லை.

எனவே, அய்யாவின் அடிச்சுவட்டில் நம் சிந்தனையைத் தீட்டினால், வரலாற்றின் பக்கங்களில் தேடிப் பார்த்தால், புரட்டிப் பார்த்தால் அய்யா எவ்வளவு அருமையாகச் சிந்தித்து விளக்கம் அளிக்கிறார் என்பது வெளிப்படும்.

முதலில் தீபாவளி என்பதில் எது சரியான பதம் என்று அறிவதிலேயே குழப்பம், சந்தேகம்அய்யம் எல்லாம் ஏற்பட்டு விடுகிறது. தீவாலி, தீவாலி, தீபாவளி என்பதன் சுருக்கம்தான் தீபாவளி. நம் தமிழர் பண்டிகை அல்ல இது என்பதற்குத் தீபாவளி எனும் சொல்லே கட்டியம் கூறுகிறது. தீபாவளி என்பதே வடசொல் தீப், தீபம் எல்லாம் வடசொற்கள்-ஆரியச் சொற்கள்.

இராமாயணக் கதை

தீபாவளி ஒரு கற்பனைப் பண்டிகை என்பதற்கு எடுத்துக்காட்டு மேலே குறிப்பிட்ட நரகாசுரன் கதை இராமாயணக் கதையோகும். தீபாவளியை வடநாட்டில் தொடர்பு படுத்திக் கொண்டாடுகிறார்கள். இராவணணுடன் போர் புரிந்து வென்று அயோத்திக்குத் திரும்பும் நாள்தான் தீபாவளியாம்.

இந்துச் சமயத்தவர்தாம் இப்படிக் கொண்டாடுகின்றனர் என்றால் சமணர்களுக்கும் கொண்டாட்ட நாளாகிறது; எப்படியென்றால், கி.மு. 527இல் வர்த்தமான மகாவீரர்-24ஆவது தீர்த்தங்கரர் முக்தி அடைந்த நாளாம் அது. சீக்கியர்கள் பார்த்தார்கள் தீபாவளிக்கு ஏதாவது காரணம் வேண்டுமே? குவாலியர் கோட்டையில் 52 அரசர்களை அடைத்து வைத்திருந்த ஜஹாங் கீரிடமிருந்து சீக்கிய குரு அரி கோவிந்தை விடுவித்த நாள் அது என்று கொண்டாடிவிட்டனர். இதைப் பஞ்சாபி மொழியில் பண்டிசோர் திவஸ் அதாவது அடைபட்டவர் விடுபட்ட நாள் என்று மெழுகுவத்திகளை ஏற்றிக் கொண்டாடுவர்.

இப்படி இருக்கையில் தீபாவளி எப்படி தேசியத் திருவிழாவாக இருக்க முடியும்? தந்தை பெரியாரைப் போல் தத்துவ, மனிதநேயர்கள் ஒருவன் இறந்தநாளைக் கொண்டாடுவது என்று கூறிக்கொண்டாடுவது என்ன நாகரிகம், என்ன பண்பாடு? என்று வினா எழுப்பவே தீபங்கள் ஏற்றுவது ஒவ்வொரு மனிதனுள்ளும் இருக்கும் ஒளியை உணர்வது என்று புதிய விளக்கம் கூறினார்கள். ஆன்மா, கடவுள், மோட்சம் என்பதெல்லாமே புரட்டு என்று அய்யா கூறுகையில் பூத உடலுக்கு அப்பால் எல்லையில்லாப் பெருவெளியில் உள்ள மனத்தை அறிய ஏற்றப்படும் விளக்கு தீப ஒளி என்று கப்சாவைப் புதிதாகச் சேர்த்து ஆன்ம விளக்கங்கள் வேறு. வேடிக்கையாக இருக்கிறது.

நல்ல வாய்ப்பு தமிழ்நாட்டில் தீபாவளிக் கூத்து ஒரு நாளில் முடிந்துவிடுகிறது. வடநாட்டில் அய்ந்து நாள்கள் தீபாவளியாம். அங்கே செப்டம்பர், அக்டோபர் இடையே அதன் மாதத்தில் தொடங்கி கார்த்திகையில் அக்டோபர் - நவம்பரிடையே முடிவடைகிறது.

வடநாட்டில் லட்சுமி பூஜையாம்!

தீபாவளியோடு கிருஷ்ணன், இராமன், கற்பனையோடு நின்று விடுவதில்லை. வடநாட்டில் தீபாவளி என்றால் லட்சுமிபூஜை. எனவே விளக்கை ஏற்றி செல்வத்துக்கு அதிபதி என்று கருதும் லட்சுமியை வரவேற்கிறார்களாம்.

இங்கும் ஏதாவது புராணம், கற்பனைச் செய்தி இணைக்காவிடில் சுவைக்காதே. லட்சுமிக்கும், கிருஷ்ணனுக்கும், நரகாசுரன்; இராமனுக்கு இராவணன் போல் லட்சுமிக்கும் ஓர் அசுரன் வேண்டுமே மகாவலி கதையை எடுத்துக்கொண்டார்கள். பாற்கடலைக் கடைந்த போது ஆலகால விஷம் மட்டும் கிடைக்கவில்லை, அத்தோடு லட்சுமியும் கிடைத்தாள். அந்த நாள்தான் தீபாவளி என்று ஒன்றைக் கூட்டி-னார்கள்.

வாமன அவதாரம்

திருமாலின் அவதாரங்களில் ஒன்றாக வாமன அவதாரம். அது பார்ப்பன அவதாரம்.மகாபலி என்ற மன்னரை சத்திரியனை பார்ப்பன வாமனன் மூன்றடி மண் கேட்டு எங்கே நின்று தலையில் கால்வைத்துக் கொன்றானோ அவ்வாறு கொன்று விட்டு வைகுந்தம் வரும்போது வாசலில் நின்று லட்சுமி திருமாலை வரவேற்றாளாம். அதனால் வடநாட்டில் அது லட்சுமி பூஜையாம்.

லட்சுமி என்பது சக்தி, விஷ்ணு என்பது மகிழ்ச்சி, என்றெல்லாம் என்னென்னவோ குளறுபடியைச் சேர்த்து லட்சுமி பஞ்சாயதன் என்று கூறினர். இதையெல்லாம் கேட்டு மூளை குழம்பாமலிருக்கவே இதை மேலும் விளக்காமல் விட்டுவிடுவோம்.

கிறித்துவர்களுக்கு ஏது பிறந்த நாளான கிறித்துமஸ் போல, பவுத்தர்களுக்குப் புத்தர் பிறந்த புத்த பூர்ணிமா போல, சமணர்களுக்குத் தீபாவளிவர்த்தமானர் நிர்வாணா எனப்படும்.

கற்பனை-மூடநம்பிக்கைகள்

மோட்சம் அடைந்த நாள் சமண நூல்களில் தீபாலிகா என்று அந்-நாளைக் குறிப்பிட்டனர். கி.மு.527இல் அக்டோபர் 15ஆம் நாள் வர்த்தமானர் பன்சரா என்னுமிடத்தில் மோட்சம் அடையும்போது எல்லாக் கடவுள்களும் வந்து கூடி ஒளியேற்றினார்களாம். அன்று அமாவாசை நாள் ஆதலால் இருளைப் போக்க ஒளியேற்றுவதாக நம்பிக்கை. பத்ரபாகு என்பவரின் கல்ப சூத்திரம் கூறும் கதை. ஆக, சமயம் என்றாலே அது இந்துவாக, இசுலாமாக, கிறித்துவமாக, சமணமாக, பவுத்தமாக எதுவாக இருந்தாலும் கற்பனை மூடநம்பிக்கைகளுக்குப் பஞ்சமில்லை. சமணர்களின் புத்தாண்டு அன்றுதான் தொடங்குகிறது. எனவே சமண வியாபாரிகள் அன்று தீபாவளியைப் புத்தாண்டு என்று புதுக் கணக்குத் தொடங்கி இனிப்பு வழங்கிக்-கொண்டாடுகின்றனர். 1974 அக்டோபர் 21இல் சமணர் மகாவீரரின் 2500 ஆம் நிர்வாண ஆண்டைக் கொண்டாடினர்.

சீக்கியர்கள் ஏன் விளக்கேற்றிக் கொண்டாடுகிறார்கள்? ஜஹாங்கீரிடமிருந்து விடுதலை பெற்று அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு குரு அரிகோவிந் திரும்பிய போது பொற்கோயிலில் விளக்கேற்றினார்களாம். இன்றும் தீபாவளி நாளில் அமிர்தசரஸ் பொற்கோயிலில் விளக்கேற்றுகிறார்கள்.

தேசிய திருவிழாவா?

தீபாவளி கொண்டாடுவது என்பது இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக இல்லாத போது ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரியாகக் கொண்டாடும் போது தீபாவளி தேசியத்திருவிழா என்று போலியாக கதைப்பதில் எவ்வித நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

தீபாவளி கொண்டாடும் விதமோ மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டுள்ளது. அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து முழுகுவது, ஒருவருக்கொருவர் கங்கா ஸ்நானம் ஆச்சா? என்பதெல்லாம் கூட நாட்டில் கிடையாது. தென்னாட்டில் வட அவாள் மத்தியிலேதான்.

பல அசைவ வீடுகளில் கோழிக்கறியும், இட்லி தோசையும்தான் சிறப்பு உணவு.

காகிதத்தில் நரகாசுரன்

கோவா, கொங்கன் பகுதியில் காகிதத்தில் நரகாசுரன் உருவம் செய்து உள்ளே வெடிகள் முதலியன போட்டுத் தீ வைக்கிறார்கள்.

வடநாட்டில் தீபாவளிச் சந்தை நடைபெறுகிறது. அதற்கு மேளா என்று பெயர். பெண்கள் தங்கள் கைகளில் வண்ண வண்ண மெகந்தி அதாவது மருதாணி இடுகிறார்கள். கொல்கத்தா, அசாமில் காளி பூஜைதான் நடக்கிறது.

தமிழ்நாட்டில் எப்பொழுது?

தமிழகத்தைப் பொருத்தமட்டில் தமிழர் அறியாமல் கொண்டாடாமல் இருந்த விழா தீபாவளி. விஜய நகரநாயக்க மன்னர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டதன் பயனாய் தீபாவளி இன்றைக்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முன் நுழைந்தது.

திருஞான சம்பந்தர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பாடிய பாடலில், அங்கம் பூம்பாவையை உயிர்ப்பிக்கப் பாடிய பாடலில் கார்த்திகை விளக்கீடு,தைப்பூசம், ஓணம் முதலிய சமய விழாக்களைக் குறிப்பிடுகையில் தீபாவளியைப் பற்றிக் கூறவில்லை.

பல்லவர், சோழர், பாண்டியர் எந்தக் கல்வெட்டிலும் தீபாவளியைக் குறிப்-பிடவில்லை.

ஊடகங்களின் வேலை

இந்த லட்சணத்தில் தீபாவளி வாழ்த்து, சங்கராச்சாரி, ஜீயர்கள் வாழ்த்து, மங்கல இசை, தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி என்று ஆனதோடு, கனமான தீபாவளி மலர்கள் என்று ஆரியப் பத்திரிகைகள் மலர்கள் வெளியிட்டுத் தீபாவளியைப் பரப்பிவிட்டார்கள். எனவே பகுத்தறிவாளர்கள் இதுபோன்ற போலித்தனங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டிய கடமையை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

எனவேதான் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தமிழன் தன்மானத்தையும் தன்மதிப்பையும் பெறவேண்டுமானால், இன உணர்வினைப் பெற்றுப் பண்பாட்டுப் படையெடுப்பைப் புரிந்து, கிரேக்கத்து சாக்ரடீசு சொன்னது போல் தன்னை உணர்ந்து தனது இழப்புகளை மீட்டெடுத்ததாக வேண்டும் என்று தந்தை பெரியார் வழியில் தீபாவளி குறித்துக் கூறுவதுடன் புலவர்கள், சான்றோர்கள், தீபாவளி, தமிழ்ச் சித்திரை வருஷப் பிறப்பு என்பதைப் புறக்கணிக்க முன்வருதல் மிகவும் தேவை என்று கூறி, முத்தாய்ப்பாக, இருட்டை வழிபட்டுக்கொண்டே வெளிச்சத்தைத் தேடலாமா? எனத் தீப ஒளிக்கு, அறிவார்ந்த சிந்தனை வினநாவை எழுப்புகிறார்.


---------------------”விடுதலை” அசுரன் மலர் 3-11-2010

1 comments:

siraj said...

«ö¡ Žì¸õ,

þó¾ ÀÂÖ¸ ¾¢Õó¾§Å Á¡¼¡Û¸,¿¡Ûõ ¦º¡øÄ¢ À¡÷òЧ¼ý,¬È¡ÅÐ «È£×ìÌ Å犫¼õ ÒÊìÌÈ¡Û¸.«ö¡ ÓŠÄ¢õ¦ÂýÛõ ºð¨¼ §À¡ðÎ þÕìÌõ ÁÉ¢¾ý.¿¡ý ¸¼×Ç
¿õÒÅÐ þø¨Ä.âÁ¢¨Â ÍÕðÊ ºÓò¾¢Ãò¾¢÷Ìø §À¡ÀÅÛìÌ «ó¾ ºÓò¾¢Ã§Á âÁ£ìÌø¾¡ý þÕìÌÛ ¦¾¡¢ÂÁ §À¡î§º!


º¢Ã¡ˆ